Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: திருவாய்மொழி, நம்மாழ்வார் (1108 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
0திருவாய்மொழி - தனியன் || (பக்தாம்ருதம்) 40
பக்தாம்ருதம் விச்வ ஜநாநு மோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்
ஸஹஸ்ர ஸாகோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேதஸாகரம்
Bhaktha amrutham, பக்த அம்ருதம் - தொண்டர்கட்கு அமுதமா யிருப்பதும்
Vishwa jana anumodhanam, விச்வ ஜந அநுமோதநம் - ஸகல ஜனங்களையும் ஆனந்திக்கச் செய்வதும்
Sarva arthatham, ஸர்வ அர்த்ததம் - ஸமஸ்த புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லதும்
Sahasra saaga Upanishad samagamam, ஸஹஸ்ர சாக உபநிஷத் ஸமாகமம் - ஆயிரக்கணக்கான சாகைகளையுடைய உபநிஷத்துக்களின் திரட்சியாயிருப்பதும்
Sri Sadagopa vaangmayam, ஸ்ரீ சடகோப வாங்மயம் - நம்மாழ்வாருடைய ஸ்ரீஸுக்தி மயமுமான
Draavida vedha saagaram, த்ராவிட வேத ஸாகரம் - தமிழ் வேதக் கடலை
Aham, அஹம் - அடியேன்
Namami, நமாமி - ஸேவிக்கிறேன்
0திருவாய்மொழி - தனியன் || (திருவழுதி நாடென்றும்) 41
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண் பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து
Nenje, நெஞ்சே - மனமே!
Thiru vazhuthi naadu endrum, திரு வழுதி நாடு என்றும் - திருவழுதி நாடென்கிற தேசத்தை அநுஸந்தித்தும்
Then kurugoor endrum, தென் குருகூர் என்றும் - அழகிய திருக்குருகூரென்கிற திவ்யதேசத்தை அநுஸந்தித்தும்
Maruva iniya van porunal endrum, மருவ இனிய வண் பொருநல் என்றும் - ஆசைப்படும்படி போக்யமாய் அழகியதான தாமிரபர்ணியாற்றை அநுஸந்தித்தும்
Aru maraigal, அரு மறைகள் - அருமையான வேதங்களை
Anthadhi seidhan, அந்தாதி செய்தான் - அந்தாதித் தொடையான திருவாய்மொழி முகத்தாலே பாடின ஆழ்வாருடைய
Adi inaiye, அடி இணையே - உபய பாதங்களையே
epozhudhum, எப்பொழுதும் - இடைவிடாமல்
Thelinthu, தெளிந்து - தெளிவுடனே
Sindhiyaai, சிந்தியாய் - சிந்தை செய்யக்கடவை
0திருவாய்மொழி - தனியன் || (மனத்தாலும் வாயாலும்) 42
மனத்தாலும் வாயாலும் வண் குருகூர் பேணும்
இனத்தாரையல்லா திறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்
பாதங்கள் யாமுடைய பற்று
Manathalum, மனத்தாலும் - நெஞ்சினாலும்
Vayalum, வாயாலும் - வாக்கினாலும்
Van kurugoor penum, வண் குருகூர் பேணும் - திருநகரியை ஆதரிக்கின்ற
Inathaarai allaadhu, இனத்தாரை அல்லாது - கோஷ்டியில் சேர்ந்தவர்களைத் தவிர (மற்றையோர்களை)
Irainjen, இறைஞ்சேன் - வணங்கமாட்டேன்
Dhanathalum, தனத்தாலும் - செல்வத்தினாலும்
Yedhum kuraivu ilen, ஏதும் குறைவு இலேன் - எவ்விதமான குறையுமுடையேனல்லேன் (எதனாலென்னில்)
Endhai Sadagopan, எந்தை சடகோபன் - அஸ்மத் ஸ்வாமியான நம்மாழ்வாருடைய
Paadhangal, பாதங்கள் - திருவடிகள்
Yaamudaiya, யாமுடைய - நம்முடைய
Patru, பற்று - ஆதாரமாயிராநின்றது
0திருவாய்மொழி - தனியன் || (ஏய்ந்த பெருங் கீர்த்தி) 43
ஏய்ந்த பெருங் கீர்த்தி யிராமானுச முனி தன்
வாய்ந்த மலர்ப் பாதம் வணங்குகின்றேன் - ஆய்ந்த
பெருஞ்ச் சீரார் சடகோபன் செந்தமிழ் வேதம் தரிக்கும்
பேராதவுள்ளம் பெற.
Aayndha, ஆய்ந்த - குற்றங் கலசாதம்
Peru seer, பெரு சீர் - சிறந்த திருக்குணங்களினால்
Aar, ஆர் - பரிபூர்ணரான
Sadagopan, சடகோபன் - நம்மாழ்வார் (அருளிச் செய்த)
Senthamizh vedham, செந்தமிழ் வேதம் - செவ்விய தமிழ் வேதத்தை
Tharikkum, தரிக்கும் - தாங்கிக்கொள்ளவல்லதாய்
Peradha, பேராத - வேறொன்றில் செல்லமாட்டாததான
Ullam, உள்ளம் - நெஞ்சை
Pera, பெற - பெறும் பொருட்டு
Eayndha peru keerthi Ramanusa muni than, ஏய்ந்த பெரு கீர்த்தி இராமாநுச முனி தன் - தகுதியான பெரும்புகழையுடைய எம்பெருமானது
Vaayndha padham malar, வாய்ந்த பாதம் மலர் - பொருத்தமான திருவடித் தாமரைகளை
Vanangugindren, வணங்குகின்றேன் - வணங்குகின்றேன்
0திருவாய்மொழி - தனியன் || (வான் திகழும்) 44
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வண் புகழ்மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமாநுசன்
Vaan thigazhum Solai, வான் திகழும் சோலை - ஆகாசத்தளவும் ஒங்கி விளங்குகின்ற சோலைகளையும்
Madil, மதிள் - ஸப்த ப்ராகாரங்களையும் உடைத்தான
Arangar, அரங்கர் - திருவரங்கத்தில் பள்ளி கொண்ட எம்பெருமானுடைய
Van pugazh mel aandra, வண் புகழ் மேல் ஆன்ற - திருக்கல்யாண குண விஷயமாக அமைந்த
Tamizh maraigal aayiramum, தமிழ் மறைகள் ஆயிரமும் - தமிழ் வேதமான ஆயிரம் பாசுரங்களையும்
Eendra mudhal thai, ஈன்ற முதல் தாய் - பெற்ற முக்கியமான மாதா
Sadagopan, சடகோபன் - நம்மாழ்வாராவர்
Moimpaal, மொய்ம்பால் - மிடுக்குடனே
Valartha, வளர்த்த - அதனை வளர்த்த
Idham thai, இதம் தாய் - ஹிதமான மாதா
Ramanusan, இராமாநுசன் - எம்பெருமானாராவர்
0திருவாய்மொழி - தனியன் || (மிக்க விறை) 45
மிக்க விறை நிலையும் மெய்யாமுயிர் நிலையும்
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
ஊழ் வினையும் வாழ் வினையும் ஓதும் குருகையர் கோன்
யாழினிசை வேதத் தியல்
Kurugaiyar kon, குருகையர் கோன் - திருநகரியிலுள்ளார்க்குத் தலைவரான ஆழ்வார் (அருளிச்செய்த)
Yaazhin isai vedhathu iyal, யாழின் இசை வேதத்து இயல் - வீணாகானம்போன்ற திருவாய்மொழிப் பாசுரங்கள்
Mikka irai nilaiyum, மிக்க இறை நிலையும் - ஸர்வோத்க்ருஷ்டனான எம்பெருமானுடைய ஸ்வரூபத்தையும்
Meyaam uyir nilaiyum, மெய்யாம் உயிர் நிலையும் - நித்யனான ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தையும்
Thakka neriyum, தக்க நெறியும் - ஸ்வரூபாநுரூபமான உபாயத்தின் ஸ்வரூபத்தையும்
Thadai aagi thokku iyalum oozh vinaiyum, தடை ஆகி தொக்கு இயலும் ஊழ் வினையும் - (பகவத்ப்ராப்திக்குப்) பிரதிபந்தகமாகிச் சேர்ந்து கிடக்கிற முன்னை வினைகளாகிற விரோதி ஸ்வரூபத்தையும்
Vaazh vinaiyum, வாழ்வினையும் - வாழ்வாகிற பரம புருஷார்த்த ஸ்வரூபத்தையும்
Oodhum, ஓதும் - கூறுவன
2675திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இதில், மஹோபகாரங்களைத் தமக்குச் செய்தருளின எம்பெருமானுடைய திருவடிகளைத் தொழுது மேன்மை பெறும்படியாக ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறார்.) 1
உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1
என் மனனே, En manane - எனது மனமே!
உயர்வு அற, Uyarvu ara - (தன்னைப் பார்க்கிலும்) உயர்த்தி இல்லதாபடி
உயர், Uyar - உயர்ந்த
நலம், Nalam - (ஆனந்தம் முதலிய) கல்யாண குணங்களை.
உடையவன், Udayavan - (சுயமாக) உடையனானவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ
மயர்வு அற, Mayarvu ara - அஜ்ஞானம் நசிக்கும்படி
மதி நலம், Mathi nalam - ஞானத்தையும் பக்தியையும்
அருளினன், Arulinan - (அடியேனுக்குக்) கிருபை பண்ணினவன்
யவனவன், Yavanavan - யாவனொருவனோ.
அயர்வு அறும், Ayarvu arum - மறப்பு இல்லாத
அமரர்கள், Amaragal - நித்ய ஸூரிகளுக்கு
அதிபதி யவன், Adhipathi yavan - ஸ்வாமி யாவனொருவனோ
அவன், Avan - அந்த எம்பெருமானது
துயர் அறு சுடர் அடி, Thuyar aru sudar adi - துயர் அறப் பெற்ற சோதி மயமான திருவடிகளை
தொழுது, Thozhudhu - வணங்கி
எழு, Ezhu - நீ கடைத்தேறக் கடவை.
2676திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (எம்பெருமான் இவ்வாழ்வாரை வசப்படுத்திக் கொண்டது தனது திருக் கல்யாண குணங்களைக் காட்டி யாதலால் அக் குணங்களிலே முற்படி இழிந்து பேசினார். அக்குணங்கள் ஸ்வரூபத்தைப் பற்றி நிற்குமே யொழிய நிராச்ரயமாய் நில்லாது; ஆகவே அக் குணங்களுக்கு ஆச்ரயமான ஸ்வரூபத்தை அவள் அவன் என்று கீழ்ப்பாட்டிலேயே ப்ரஸ்தாவித்தார். அந்த திவ்ய ஸ்வரூபமானது சித்து அசித்து என்கிற இரண்டு தத்துவங்களிற் காட்டிலும் விலக்ஷணமாயிருக்கிற படியை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.) 2
மனனக மலமற மலர் மிசை எழு தரும்
மனன் உணரளவிலன் பொறியுணர் யவையிலன்
இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும்
இனன் இலன் எனன் உயிர் மிகு நரையிலனே –1-1-2
மனனகம், Mananakam - மனத்திலே யிருக்கிற
மலம் அற, Malam ara - (காமம் கோபம் முதலிய) தீக்குணங்கள் கழியக் கழிய (அதனால்)
மலர், Malar - மலர்ந்ததாகி
மிசை எழ தரும், Misai ezha tharum - மேலே மேலே விருத்தி யடைகிற
மனன் உணர்வு, Manan unarvu - மாநஸ ஜ்ஞான மென்கிற யோக வுணர்ச்சியால்
அளவிலன், Alavilan - அளவிடப்படாதவனும்
பொறி உணர்வு, Pori unarvu - (மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும்) வெளியிந்திரியங்களின் ஞானத்தினால் அளவிடப்படாத’வனுமாய்
இனன், Inan - இப்படிப்பட்டவனும்
முழு உணர் நலம், Muzhu unar nalam - பரிபூர்ண ஞானானந்த ஸ்வரூபியும்
எதிர் நிகழ் கழிவினும், Edhir nigazh kazhivinum - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகாலம் என்ற மூன்று காலங்களிலும்
இனன் இலன், Inan ilan - ஒப்பு இல்லாதவனும்
மிகுநரை இலன், Migunarai ilan - மேற்பட்டவரில்லாதவனுமா யிருப்பவன்
என் நன் உயிர், En nan uyir - எனக்கு நல்ல ஆத்மா.
2677திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (கல்யாண குணமுடைமையையும் நித்ய விபூதி யாட்சியையும் திவ்ய மங்கள் விக்ரஹ முடைமையையும் முதற் பாட்டிலே அநுஸந்தித்து, அவற்றிக்கு ஆச்ரயமான திவ்யாத்ம ஸ்வரூபத்தின் வைலக்ஷண்யத்தை இரண்டாம் பாட்டிலே அருளிச் செய்து, அவற்றோடே சேர்த்து ஒரு கோர்வையாக அநுபவிக்கத் தக்கதான லீலா விபூதி யுடைமையை இப் பாட்டிலே அருளிச் செய்கிறார்.) 3
இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை யுருவினன் அருவினன்
புலனொடு புலன் அலன் ஒழிவிலன் பரந்த வந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே –1-1-3
அது இலன் (என), Adhu ilan (Ena) - அந்தப் பொருள் (தனக்கு) இல்லாதவனென்றும்
இது உடையன் என, Idhu udaiyan ena - இந்தப் பொருளை யுடையவன் என்றும்
நினைவு அரியவன், Ninaivu ariyavan - நினைப்பதற்கு அருமைப் பட்டவனாகியும்
நிலன் இடை, Nilan idai - பூமி முதலான (கீழ்) உலகங்களிலும்
விசும்பிடை, Visumbidai - ஆகாசம் முதலான (மேல்) உலகங்களிலும் (உள்ள)
உருவினன், Uruvinan - ரூபியான அசேநப் பொருள்களை யுடையவனாகியும்
அருவினன், Aruvinan - ரூபியல்லாத சேதனர்களை யுடையவனாகியும்
புலனொடு, Pulanodu - விஷயமாகிற பொருள்களோடு (கலந்து நின்றாலும்)
புலன் அலன், Pulan alan - (தான்) புலன்களுக்கு விஷயமாகாதவனாகியும்
ஒழிவு இலன் பரந்த, Ozhivu ilan parandha - எபபொழுதும் எங்கம் வியாபித்திருக்கிற
அ நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே, A nalan udai oruvanai nanuginam naame - முன் சொன்ன கல்யாண குணங்களை யுடைய ஒப்பற்ற எம்பெருமானை நாம் கிட்டப் பெற்றோம்.
2678திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி - அநந்தரம் மூன்று பாட்டுக்களாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப -ஸ்திதி -ப்ரவ்ருத்த்யாதிகள் பகவத் அதீனங்கள் என்கிறார் – அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களினுடைய ஸ்வரூபமும் தத் அதீனம் என்று சாமாநாதி கரண்யத்தால் அருளிச் செய்கிறார்.) 4
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள்
தாம் அவர் இவர் உவர் அது விது வுது வெது
வீமவை யிவை வுவை அவை நலம் தீங்கிவை
ஆமவை யாயவை ஆய நின்ற அவரே –1-1-4
நாம், Naam - நாம் முதலான தன்மைப் பொருள்களும்
அவன் இவன் உவன், Avan ivan uvan - அவன் இவன் உவன் என்கிற ஆண் பால் சுட்டுப் பொருள்களும்
அவள் இவள் உவள், Aval ival uval - அவள் இவள் உவள் என்னும் பெண் பால் சுட்டுப் பொருள்களும்
எவள், Eval - எவள் என்கிற பெண் பால் வினாப் பொருளும்
தாம், Thaam - தாம் என்னும் பன்மைப் பொதுப் பொருளும்
அவர் இவர் உவர், Avar Ivar Uvar - அவர் இவர் உவர் என்னும் பலர் பால் சுட்டுப் பொருள்களும்
அது இது உது, Athu idhu udhu - அது இது உது என்னும் ஒன்றன் பால் சுட்டுப் பொருள்களும்
எது, Edhu - எது என்னும் ஒன்றன் பால் வினாப் பொருளும்
வீம் அவை, Veem avai - நசிக்குந் தன்மையுள்ள பொருள்களும்
இவை உவை அவை, Ivai uvai avai - இவை உவை அவை என்னும் பலவின் பால் சுட்டுப் பொருள்களும்
நலம் அவை, Nalam avai - நல்ல வஸ்துக்களும்
தீங்கு அவை, Theenghu avai - கெட்ட வஸ்துக்களும்
ஆம் அவை, Aam avai - எதிர் காலப் பொருள்களும்
ஆய அவை, Aaya avai - இறந்த காலப் பொருள்களும்
ஆய் நின்ற, Aay nindra - ஆகி நின்ற எல்லாப் பொருள்களும்
அவரே, Avare - அந்த ஊர்வேச்வரனேயாம்
2679திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –கர்மங்களுக்கு ஆராத்ய ஸ்வரூபம் பகவத் அதீனம் என்று சொல்லுகிறது.) 5
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி யடைவார்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி யடைய நின்றனரே –1-1-5
அவர் அவர், Avar avar - அந்தந்த அதிகாரிகள்
தம தமது, Tham thamadhu - தங்கள் தங்களுடைய
அறிவு, Arivu - ஞானத்தாலே
அறி, Ari - அறியப் படுகிற
வகை வகை, Vagai vagai - பல பல படிகளாலே
அவரவர், Avar avar - அந்தந்த தெய்வங்களை
இறையவர் என, Iraiyavar ena - ஸ்வாமிகளென்றெண்ணி
அடி அடைவர் தன், Adi adaivar than - ஆச்ரயிப்பர்கள்;
அவரவர் இறையவர், Avar avar iraiyavar - அந்தந்த அதிகாரிகளால் தொழப்படுகிற தெய்வங்கள்
குறைவு இலர், Kuraivu ilar - அவரவர்கள் விரும்பின பலன்களைக் கொடுப்பதில் குறையற்றனவே; (எதனாலே என்னில்)
இறையவர், Iraiyavar - ஸர்வ ஸ்வாமியான ஸ்ரீமந் நாராயணன்
அவரவர், Avaravar - அந்தந்த அதிகாரிகள்
விதி வழி, Vidhi vazhi - தங்கள் தங்கள் அத்ருஷ்டாநுஸாரமாக
அடைய, Adaiya - பலன் பெறும்படியாக
நின்றனர், Nindranar - அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக எழுந்தருளி யுள்ளான். (அதனாலே காண்மின்.)
2680திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (லீலாவிபூதியின் ஸ்வரூபமும் ரக்ஷணமும் எம்பெருமானுடைய அதீநமென்பது கீழிரண்டு பாசுரங்களில் அருளிச்செய்யப்பட்டது; அதனுடைய ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் அவனுடைய அதீநமே யென்கிறது இப்பாட்டில். இதில் முதலடியில் ப்ரவ்ருத்திகளைச் சொல்லுகிறது; இரண்டாமடியில் நிவ்ருத்திகளைச் சொல்லுகிறது.) 6
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றும் ஓர் இயல்வினர் என நிலனைவரியவர்
என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே –1-1-6
நின்றனர், Nindranar - நிற்பவர்கள்
இருந்தனர், Irundhanar - இருப்பவர்கள்
கிடந்தனர், Kidandhanar - கிடப்பவர்கள்
திரிந்தனர், Thirindhanar - திரிபவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதலாகிற ப்ரவ்ருத்திகளெல்லாம் அப் பெருமானுடைய அதீநமே)
நின்றிலர், Nindrilnar - நில்லாதவர்கள்
இருந்திலர், Irundhilar - இராதவர்கள்
கிடந்திலர், Kidandhilar - கிடவாதவர்கள்
திரிந்திலர், Thirindilar - திரியாதவர்கள் (ஆக இப்படிப் பட்டவர்களினுடைய நில்லாமை இராமை கிடவாமை திரியாமை யாகிற நிவ்ருத்திகளெல்லாமும் அப் பெருமானுடைய அதீநமே.)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வினர் என் நினைவு அரியவர், Or iyalvinar en ninaivu ariyavar - ஒரே விதமான இயற்கையை யுடையவரென்று நினைக்க முடியாதவரும் (அவரே) (அவர் தாம் யாவரென்னில்;)
என்றும், Endrum - எப்போதும்
ஓர் இயல்வொடு நின்ற, Or iyalvodu nindra - ஒரே விதமான இயற்கையோடு கூடி யிருக்கின்றவராய்
எம் திடர், Em thidar - திடமான பிரமாணத்தினால் ஸித்தாமன நம்முடையவர்.
2681திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (பன்னீராயிரப்படி -அநந்தரம் இந்த சாமாநாதி கரண்யம் சரீராத்மா பாவ சம்பந்த நிபந்தநம்-என்கிறார்.) 7
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதும் யாயவை யவை தொறும்
உடன் மிசை யுயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை யுண்ட சுரனே –1-1-7
திடம், Thidam - உறுதியான
விசும்பு, Visumbu - ஆகாசமென்ன
எரி, Eri - அக்நியென்ன
வளி, Vali - வாயுவென்ன
நீர், Neer - ஜலமென்ன
நிலம், Nilam - பூமியென்ன
அவை அவை தொறும், Avai avai thorum - அந்தந்த பதார்த்தங்களெல்லாவற்றிலும்
உடல் மிசை உயிர் என், Udal misai uyir en - சரீரத்தில் ஆத்மா வியாபிப்பதுபோல
கரந்து, Karandhu - மறைந்து
எங்கும் பரந்து, Engum parandhu - உள்ளிலும் வெளியிலும் வியாபித்து
இவைமிசை, Ivai misai - ஆகிய இவற்றை ஆதாரமாகக் கொண்டு
படர் பொருள் முழுவதும் ஆய், Padar porul muzhuvadhum aay - படர்ந்த பதார்த்தங்கள் யாவும் தானம்படி அவற்றுக்கு உபாதாநமாய் (அவற்றை உண்டாக்கி)
சுடர்மிகு சுருதியுள் உளன், Sudarmigu suruthiyul ulan - தேசு பொலிந்த வேதத்தில் உள்ளவனான எம்பெருமான்
இவை உண்ட சுரன், Ivai unda suran - (ஸம் ஹார காலத்தில்) இவற்றையெல்லாம் தன் பக்கலிலே யாக்கிக் கொள்ளும் தேவனாவான்.
2682திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஒன்பதினாயிரப்படி -இப் பாட்டில் இப்படி ஸ்ருதி சித்தனான சர்வேஸ்வரன் ஆகிறான் சிருஷ்டி சம்ஹார கர்த்தாக்களாக பிரசித்தரான ப்ரஹ்ம ருத்ராதிகளிலே ஒருவன் ஆனாலோ என்று சொல்லுகிற குத்ருஷ்டிகள் நிரசிக்கப் படுகிறார்கள்.) 8
சுரர் அறி வரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து
அரன் அயன் என வுலகு அழித்து அமைத்து உளனே –1-1-8
சுரர் அறிவு அரு நிலை, Surar arivu aru nilai - (பிரமன் முதலிய) தேவர்களுக்கும் அறிவொண்ணாத நிலைமையை உடைத்தான்
விண் முதல் முழுவதும், Vin mudhal muzhuvadhum - மூல ப்ரக்ருதி முதலாகவுள்ள ஸகல வஸ்துக்களுக்கும்
வரன் முதல் ஆய், Varan mudhal aay - சிறநத் காரண பூதனாய் (அவற்றை யெல்லாம் படைத்தவனாயும்)
அவை முழுது உண்ட, Avai muzhudhu unda - அவற்றை யெல்லாம் (பிரளய காலத்தில்) திரு வயிற்றிலே வைத்து நோக்குபவனாயுமுள்ள
பரபரன், Paraparan - பரம் புருஷன்
அரன் என, Aran ena - ருத்ர மூர்த்தியின் உருவத்தைத் தரித்தவனாகி
ஒரு மூன்று புரம் எரித்து, Oru moondru puram erithu - இணை யில்லாத திரி புரங்களை எரித்தும்
உலகு அழித்து, Ulagu azhithu - உலகங்களை அழித்தல் செய்தும்
அயன் என, Ayan ena - நான் முகக் கடவுள் என்னும் படியாக நின்று
அமரர்க்கு, Amararku - தேவர்களுக்கு
அறிவு இயந்தும், Arivu iyandhum - ஞானத்தைக் கொடுத்தும்
அலகு அமைத்து, Alagu amaithu - உலகங்களைப் படைத்தல் செய்தும்
உளன், Ulan - அவர்களுக்குள்ளே ஆத்மா வாயிருக்குமவன்
2683திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் ஈஸ்வர தத்துவத்தை இசையாதே வேத பாஹ்யரில் பிரதம கண்யராய்-சர்வ ஸூந்யவாதிகளான மாத்யமிக புத்தரை நிராகரிக்கிறார் .) 9
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என விவை குணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஒழிவிலன் பரந்தே –1-1-9
உளன் எனில், Ulan enil - ஈச்வரனுண்டென்று (வைதிகர்கள் சொல்லுகிறாப் போலே) சொன்னாலும்
உளன் அலன் எனில், Ulan alan enil - ஈச்வரனில்லை யென்று (நாஸ்திகர்களின் படியே) சொன்னாலும்
உளன், Ulan - ஈச்வரனுண்டென்பதாகவே தேறும்;
அவன் உருவம் அவன் அருவம், Avan uruvam avan aruvam - அப் பெருமானுக்கு ஸ்தூல சரீரங்களும் ஸூக்ஷ்ம சரீரங்களுமாம்;
இரு தகைமையோடு, Iru thagaimaiyodu - இரண்டு தன்மையோடும் (அதாவது ரூபியும் அரூபியுமான ஸ்தூல ஸூக்ஷ்ம ப்ரபஞ்சங்களை வடிவாகக் கொண்டு)
உளன் என இலன் என், Ulan ena ilan en - உளனென்றும் இலனென்றுஞ் சொல்லப் படுகிற
இவை குணம் உடைமையின், Ivai gunam udaimaiyin - அஸ்தித்வ நாஸ்தித்வங்களை ப்ரகாரமாக வுடையனாகுந் தன்மையினாலே
இவ்வுருவுகள் இவ்வருவுகள், Ivvuruvugal ivvaruvugal - உருவமுடையனவாயும் உருவமில்லாதனவாயு மிருக்கின்ற உலகப் பொருள்கள் யாவும்
ஒழிவு இலன் பரந்து உளன், Ozhivu ilan parandhu ulan - எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலுமுள்ளவனாகவே ஸித்திப்பன்
2684திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) ((பரந்தண்பரவையுள்) பரத்துவத்தைப் பேசுவதான இப் பதிகத்தில் ஸ்ரீமந்நாராயணனுக்கே பரத்வமுள்ளதாக ஸ்தாபித்தல் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலுள்ளது. அந்த நாராயணத் திருநாமத்தை மேற்பதிகங்களிலே ஸ்பஷ்டமாகப் பேசியருளுகிற ஆழ்வார் இந்தப் பதிகத்திலே ஒருவாறு மறைத்தே காட்டினார்.) 10
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன்
பரந்த வண்டமிதென நில விசும்பு ஒழிவறக்
கரந்த சிலிடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே –1-1-10
பரந்த, Parandha - எங்கும் வியாபித்த
தண் பரவையுள், Than paravaiyul - குளிர்ந்த கடலினுள்
நீர் தொறும், Neer thorum - ஜல பரமாணு தோறும்
பரந்த அண்டம், Parandha andam - விஸ்தாரமான இவ் வண்டத்தி லிருக்குமா போலே
இது என பரத்து உளன், Idu ena parathu ulan - நெருக்குண்ணாமல் இருப்பவனாய் (இப்படி)
நிலம், Nilam - பூமியிலும்
விசும்பு, Visumbu - மேலுலகங்களிலும்
ஒழிவு அற, Ozhivu ara - ஒன்றொழியாமே
கரந்த சில் இடம் தொறும், Karandha sil idam thorum - அதி ஸூக்ஷ்மமாய் அற்பமான இடங்கள் தோறும்
இடம், Idam - அவ் வவ் விடஙக்ளிலே
திகழ், Thigazh - விளங்கா நின்ற
பொருள் தொறும், Porul thorum - ஆத்ம வஸ்துக்கள் தோறும்
கரந்து, Karandhu - (வ்யாப்ய வஸ்துக்களும் அறியாதபடி) மறைந்து
எங்கும் பரந்து உளன், Engum parandhu ulan - எல்லா விடங்களிலும் வியாபித்திரா நின்றான் (யாவரெனில்;)
இவை உண்ட கரன், Ivai unda karan - இவ் வஸ்துக்களை ஸம்ஹார தசையிலும் தனக்குள்ளே யடக்கி, தான் ஸ்திரமாயிருக்கு மெம் பெருமான்.
2685திருவாய்மொழி || 1-1 உயர்வற (ஆத்ம உபதேசம்) (இப் பதிகம் கற்பார்க்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுகிறது இது இவை பத்தும்வீடே யென்றது இப்பத்துப் பாசுரமும் வீடாகிய மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைத் தரவல்லது என்றபடி.) 11
கடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல் வலி யளி பொறையாய் நின்ற
பரனடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை யாயிரத்து இவை பத்தும் வீடே –1-1-11
கரம், Karam - திடமான
விசும்பு, Visumbu - ஆகாசமென்ன
எரி, Eri - அக்னியென்ன
வளி, Vali - வாயுவென்ன
நீர், Neer - ஜலமென்ன
நிலம், Nilam - பூமியென்ன (ஆகிய)
இவை மிசை, Ivai misai - இவற்றின் மீதுள்ள (இவற்றிற்கு ஸ்வபாவங்களாயுள்ள)
வரன், Varan - சிறந்த
நவில், Navil - சப்தமென்ன
திறல், Thiral - (கொளுத்தும்) சக்தி யென்ன
வலி, Vali - (எதையும் தூக்க வல்ல) பலமென்ன
அளி, Ali - குளிர்ச்சி யென்ன
பொறை, Porai - எதையும் பொறுத்துக் கொண்டிருப்பதாகிற க்ஷமையென்ன
ஆய் நின்ற, Aay ninra - ஆகிய இத் தருமங்களெல்லாம் தன் வசமாயிருக்கப் பெற்ற
பரன், Paran - ஸர்வேச்வரனுடைய
அடிமேல், Adimel - திருவடி விஷயமாக
குருகூர் சடகோபன் சொல், Kurukoor Sadagopan Sol - திருநகரியில் திருவவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
நிரல் நிறை, Niral nirai - சப்த பூர்த்தியும் அர்த்த பூர்த்தியுங்கொண்ட
ஆயிரத்து, Ayirathu - ஆயிரம் பாசுரங்களிலே
இவை பத்தும், Ivai pathum - இப் பத்துப் பாசுரமும்
வீடு, Veedu - மோஷ பிராபகம்.
2686திருவாய்மொழி || 1-2 வீடுமின் (எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார்.) 1
வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1
முற்றவும், mutravum - (பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்
விடுமின், vidumin - விட்டுவிடுங்கள்;
வீடு செய்து, veeduu seidu - அப்படிவிட்டு
உம் உயி, um uyi - உங்களுடை ஆத்ம ஸ்துவை
வீடு உடையான் இடை, Veedu, Vidu udayan idai - மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே
வீடு செய்ய மின், Veedu, Vidu seyya min - ஸமர்ப்பியுங்கள்.
2687திருவாய்மொழி || எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில். 2
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே –1-2-2
உயிர் மன்னு, uyir mannu - ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற
ஆக்கைகள், akkaigal - சரீரங்கள்
மின்னின், minnin - மின்னலைக் காட்டிலும்
நிலையில், nilayil - நிலையுடையன வல்ல;
என்னும் இடத்து, ennum itattu,idathu - என்று சொல்லுமளவில்
நீரே, neere - நீங்களே
இறை, irai - சிறிது
உன்னுமின், unnumin - ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.
2688திருவாய்மொழி || விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். 3
நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே –1-2-3
நீர் நுமது என்ற இவை, neer numathuendra ivai - அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை
வேர் முதல் மாய்த்து, veer mudhal maathu - (ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து
இறை, irai - ஸ்வாமியை
சேர்மின், sermin - அடையுங்கள்;
உயிர்க்கும், uyirkkum - ஆத்மாவுக்கு
அதன் நேர், adan ner - அதனோடு ஒத்து
நிறை இல், nirai il - பூர்த்தி இல்லை
2689திருவாய்மொழி || விட வேண்டிய விஷயத்தின் தோஷ மிகுதியை இரண்டாம் பாட்டிலருளிச் செய்தார்; பற்ற வேண்டிய பகவத் விஷயத்தின் நன்மை மிகுதியை இப் பாட்டிலருளிச் செய்கிறார் 4
இல்லதும் உள்ளதும் அல்லது அவனுரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்றற்றே –1-2-4
அவன் உரு, avan uru - அந்தப் பெருமானுடைய ஸ்வரூபமானது,
இல்லதும் அல்லது, illathum allathu - விகாராஸ்பதமாகையாலே அஸத்து என்னப்படுமதான அசேதநத்தின்படியை யுடையது மன்று
உள்ளதும் அல்லது, ullathum allathu - ஸத்து என்னப்படுபவனான ஜீவாத்மாவின் படியையுடையது மன்று;
எல்லை இல், ellai il - எல்லை யில்லாத
அ நலம், a nalam - அப்படிப்படட் ஆநந்த ஸ்வரூபியாயிருக்கும்; (ஆதலால்)
பற்று அற்று புல்கு, patru atru pulku - ஹேய விஷய ஸங்கத்தை விட்டு-(அப்பெருமானை) ஆச்ரயிக்க
2690திருவாய்மொழி || எம்பெருமானை பற்றுதற்கு இடையூறாகக் கைவல்ய மோக்ஷத்தில் நகையுண்டாகக் கூடியதாதலால் அந்த இடையூதன்னை விலக்கிக் கொள்ளுமாறு உபதேசித்தருளுகிறாரிப்பாட்டில். உலகத்தில் அவரவர்களது ருசியின்படி விருப்பங்கள் பலவகைப்படும். இஹ லோகத்திற்குப் பரிபூர்ண ஐச்வரியத்தையே சிலர் விரும்புவர்; தேவேந்திர பட்டத்தில் விருப்பமுள்ளவர்வகள் இவ்வுலகச் செல்வங்களிற் கண்வையார். நான்முகக் கடவுளது பதவியை விரும்புமவர் இந்திரபதவியிற் கண்வையார். ஆத்மாநுபவமாகிற கைவல்ய மோக்ஷத்தில் விருப்ப முடையார் கீழ்ச்சொன்னவற்றிற் கண்வையார் *உயர்வறவுயர்நலமுடையனாய் அயர்வறுமமரர்களதிபதியாய் *திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாக எம்பெருமானிடத்திலே பற்றுடையார் இவை யித்தனையிலும் கண் வையார். ஆகவே கைவல்ய மோக்ஷத்தில் கண்வைக்க வேண்டாமென்று நியமிக்கிறது இதில். 5
அற்றது பற்று எனில் உற்றது வீடுயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே –1-2-5
பற்று அற்றது எனில், patru atradhu enil - விஷயாந்தர ஸங்கம் அற்றொழிந்தது என்னுமளவிலேயே
உயிர், uyir - ஆத்துமா
வீடு உற்றது, veetu urratu - மோக்ஷத்தைப் பெற்றானாவன்; (கைவல்ய மோக்ஷமுண்டாகும்;)
அது, adu - அந்தக் கைவல்ய மோக்ஷத்தை
செற்று, setru - வெறுத்து
மன்ன உறில், manna uril - நிலை நிற்கும்படி பகவத் விஷயத்தைக் கிட்டப் பார்க்கில்
அற்று, atru - (ஆச்ரயிக்கும் போதே) எம்பெருமானுக்கென்றே அற்றுத் தீர்ந்து
இறை பற்று, irai patru - அந்த எம்பெருமானை பற்றுக
2691திருவாய்மொழி || ஆழ்வீர்! புறம்புள்ளவற்றைவிட்டுப் பரமபுருஷனைப் பற்றும்படி உபதேசிக்கிறீர்; அவன்தான் ஸர்வேச்வரனன்றோ? நமக்கு அவன் முகந்தருவானோவென்று ஸம்ஸாரிகள் சங்கிப்பதாகக் கொண்டு, எம்பெருமானை அப்படி நினைக்கலாமோ? ஈச்வரத்வம் வந்தேறி யென்னும்படி ஸௌசீல்யமே வடிவாயிருப்பவனன்றோ அவன் என்று ஸமாதாநம் பண்ணுகிறாரிதில். 6
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6
ஈசனும், eesanum - எம்பெருமானும்
பற்றிலன், patrilan - ஆச்ரிதர்களோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாக உடையனாய்
முற்றவும், mutravum - தாரகம் போஷகம் போக்யம் என்னும்படியான ஸகல ஸ்துவுமாகவும்
நின்றனன், nindranan - இரா நின்றான்: (ஒலோகமே!)
பற்றிலை ஆய், patrilai aai - எம்பெருமானோடு பொருந்தி யிருப்பதையே இயல்வாகவுடைத்தாய்
அவன், avan - அப் பெருமானுடைய
முற்றில், mutril - ஸகல கைங்கரியங்களிலும்
அடங்கு, adangu - அந்வயிப்பது.
2692திருவாய்மொழி || கீழ்ப்பாட்டில், எம்பெருமான் அடியார்களோடு புரையேறக் கலந்து பழகுவதையே இயல்வாகவுடையவனென்றார்; அவன் அப்படியிருந்தாலும், உண்மையில் அளவிடமுடியாத உபயவிபூதிச் செல்வத்தையுடையவனாயிருக்கையாலும் நாம் மிகப் புல்லியராயிருக்கையாலும் அவனோடு நமக்குச் சேர்த்தி எளிதாயிராதே; கடலிலே புகுந்த ஒரு துரும்பானது அலைமேல் அலையாகத் தள்ளுண்டுவந்து கரையில் சேருகிறார்போலே அப்பெருமானது ஐச்வரிய அலைகள் நம்மைத் தள்ளிவிடமாட்டாவோ? அம்மானாழிப்பிரானவனெவ்விடத்தான் யானார்” என்று பின்வாங்கப் பண்ணுமே! என்று ஒரு சங்கையுண்டானக, அதற்குப் பரிஹார மருளுகிறார்போலும் இப்பாசுரத்தினால்: 7
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃது கண்டு அடங்குக உள்ளே –1-2-7
அடங்கு எழில், adangu ezhil - முற்றிலும் அழகியதான
சம்பத்து அடங்க, sampathu adanga - (எம்பெருமானுடைய) விபூதியை எல்லாம்
கண்டு, kandu - பார்த்து
அடங்க, adanga - அதெல்லாம்
ஈசனஃது, eesanadhu,eesanakdhu - எம்பெருமானுடையதான
எழில் என்று, ezil endru - ஸம்பத்து என்று துணிந்து
உள்ளே, ulle - அந்தப் பகவத் விபூதிக்குள்ளேயே
அடங்கு, adangu - சொருகிப் போவது
2693திருவாய்மொழி || என்ன உபகரணங்களைக்கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்வது? என்ன. புதிதாக ஸம்பாதிக்கவேண்டாமல் ஏற்கனவே அமைந்திருந்துள்ள மனமொழி மெய்கள் மூன்றையும் ‘இவை எம்பெருமானுக்கு அடிமைசெய்வதற்குறுப்பாகவே கண்டவை’ என்று அனுஸந்தித்து, புறம்பண்டான விஷயங்ளில் நின்றும் மீட்டு எம்பெருமான் பக்கலிலே ஊன்றவைப்பதென்கிறாரிப்பாட்டில். 8
உள்ளம் உரை செயல் -உள்ள விம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளில் ஒடுங்கே –1-2-8
உள்ளம், ullam - நெஞ்சு என்றும்
உரை, urai - வாக்கு என்றும்
செயல், seyal - உடல் என்றம்
உள்ள, ulla - ஏற்கெனவே யுள்ள
இம் மூன்றையும், im moondruyum - இந்த மூன்று உறுப்புக்களையும்
உள்ளி, ulli - ஆராய்ந்து பார்த்து
கெடுத்து, keduthu - அவற்றிற்குள்ள விஷயாந்தரப் பற்றைத் தவிர்த்து
இறை உள்ளில், irai ullil - எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்கு, odungu - அந்வயிப்பது.
2694திருவாய்மொழி || ஸ்ரீ ஆறாயிரப்படி - இப்படி அவன் பக்கலிலே கரணங்களை ஒடுங்கப் பண்ணவே பகவத் கைங்கர்ய பிரதிபந்தகங்கள் எல்லாம் போம் – பின்னையும் இவ் வர்த்தமான சரீரம் போந்தனையும் பார்த்திரு அத்தனையே விளம்பம் உள்ளது -என்கிறார் 9
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னை யாக்கை விடும் பொழுது எண்ணே–1-2-9
அவன் கண், avan kan - அந்த எம்பெருமான் பக்கலிலே
ஒடுங்க, odunga - அந்வயிக்கவே
எல்லாம் ஒடுங்கலும், ellam odungalum - (ஆத்மாவை) ஒடுங்கப் பண்ணுவதான அவித்யை முதலானவை யெல்லாம்
விடும், vidum - விட்டு நீங்கும்:
பின்னும் , pinnum - அதற்குப் பிறகு
ஆக்கை விடும் பொழுது, akkai vidum pozhuthu - சரீரம் தொலையும் நாளை
எண், en - எதிர்பார்த்திருப்பது.
2695திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - சாரார்த்தமாக திருமந்த்ரத்தை அருளிச் செய்து -இத்தாலே யாவச் சரீர பாதம் எம்பெருமானை ஆஸ்ரயுங்கோள் -என்கிறார் 10
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10
எண் பெருக்கு, en perukku - எண்ணிக்கை பெருகிக் கொண்டே யிருக்கும்படி அளவிறந்த
அ நலத்து, a nalathu - அப்படிப்பட்ட ஞானம் முதலிய குணங்களை யுடைய
ஒண் பொருள், on porul - சிறந்த பொருளாகிய ஜீவாத்ம வர்க்கத்தையும்
ஈறு இல, iru il - முடிவில்லாத
வண் புகழ், van pukaḻ,pughal - திருக் கல்யாண குணங்களையும் உடையனான
நாரணன், naranaṉ - நாராயணனுடைய
திண் கழல், tin kaḻal - (அடியாரை ஒருநாளும்) கைவிட கில்லாத திருவடிகளை
சேர், cer, ser - ஆச்ரயிப்பது.
2696திருவாய்மொழி || ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார் 11
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11
சேர் தடம், ser tadam - செறிந்த தடாகங்களை யுடைய
தென் சுருகூர் சடகோபன் சொல், then kurugoor,kurugur sadagopan sol - திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த
சீர் தொடை, seer thodai - கவி யுறுப்புக்களெல்லாம் நன்கு அமையப் பெற்ற
ஆயிரத்து, ayirattu - ஆயிரத்தினுள்ளே
இ பத்து, i pattu - இப்பத்துப் பாசுரமும்
ஓர்த்த, orta,ortha - ஆராய்ந்து சொல்லப்பட்டது.
2697திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய ஸௌலப்யம் நன்கு விளங்கினது அவதாரங்களிலாதலால் அப்படிப்பட்ட அவதாரங்களுள்ளும் நீர்மைக்கு எல்லையான க்ருஷ்ணாவதாரத்திலே யிழிந்து, அதிலேயும் பரத்வத்தோடு ஸமமாகச் சொல்லக் வடிய நிலைகளிற் செல்லாதே, வெண்ணெய் களவுகண்டு கட்டுண்டு வருந்தியேங்கி நின்ற நிலையிலே யகப்பட்டு இப்படியும் ஒரு எளிமைக்குணமுண்டோவென்று ஈடுபடுகிறார்.) 1
பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-
பத்து உடை, Pattu udai - பக்தியை யுடைய
அடியவர்க்கு, Adiyavarkku - அடியார்களுக்கு
எளியவன், Eliyavan - ஸுலபனாயும்
பிறர்களுக்கு, Pirarkalukku - மற்றையோர்களுக்கு
அரிய, Ariya - துர்லபனாயுமிருக்கிற
வித்தகன், Vitthakan - ஆச்சரிய பூதனும்,
மலர் மகள் விரும்பும், Malar magal virumbum - பெரிய பிராட்டியார் விரும்புதற் கீடானவனும்
பெறல் அரு, Peral aru - பெறுதற்கு அரியனுமான
நம் அடிகள், Nam adigal - நமது ஸ்வாமி
மத்து உறு கடை வெண்ணெய் களவினில், Matthu uru kadai vennay kalavinil - (யசோதைப் பிராட்டி) மத்தை யுறுத்திக் கடைகின்ற வெண்ணெயினுடைய களவில்
உரம் இடை, Uram idai - மார்வினிடையிலே
ஆப்புண்டு, Appundu - கட்டுண்டு
உரலினோடு இணைந்திருந்து, Uralinodu inaindhirundhu - உரலோடு பொருந்தி இருந்து
ஏங்கிய, Aengiya - ஏங்கி யிருந்த
எளிவு, Elivu - எளிமைக் குணம்
எத்திறம், Etthiram - எப்படிப்பட்டது!
2698திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஸ்ரீமதுரகவிகள் முதலான ஸத்துக்களடங்கலும் மோஹிதரான ஆழ்வாரைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். திருவாய்மொழியை அநுபவிக்கப் பிறந்த மஹான்களின் பாக்கியத்தினால் மோஹங் கழிந்து தெளிவுபெற்ற ஆழ்வார் ப்ரஸ்துதமான ஸௌலப்ய குணத்தை விசேஷித்து அருளிச் செய்யத் தொடங்குகிறாரிதில்) 2
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பில பல பிறப்பாய்
ஒளி வரு முழு நலம் முதலில கேடில வீடாம்
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே –1-3-2-
நிலை வரம்பு இல பல பிறப்பு ஆய், Nilai varambu ila pala pirappu aay - ஒரு நிலையும் ஒரு நியதியும் இல்லாத பலவகைப் பிறப்பை யுடையனாய்
முதல் இல கேடு இல முழு நலம், Mudhal ila kedu ila muzhu nalam - முதலுமில்லாமல் முடிவுமில்லாமலிருக்கின்ற கல்யாண குணங்களெல்லாம்
ஒளி வரும், Oli varum - ஒளி மல்கும்படியான
எளி வரும் இயல்பினன், Eli varum iyalbinan - ஸௌலப்யத்தையே இயல்வாக வுடையனாய்
வீடு ஆம் தெளி தரு நிலைமை அது முழுவதும், Veedu aam theli tharu nilaimai adhu muzhu vadhum - மோக்ஷமாகிற தெளிவைத் தருதலாகிற அந்த நிலைமையை முழுவதும்
ஒழிவு இலன், Ozivu ilan - எப்போதும் உடையவனான
இறையோன், Iraiyon - ஸ்வாமியானவன்
அளிவரும் அருளினோடு அமைந்து, Alivarum arulinodu amainthu - அளித்த கிருபையோடே கூடி
அகத்தனன், Agaththanan - (அடியவர்க்கு) அந்தரங்கனாய்
புறந்தனன், Puranthanan - (மற்றையோர்க்கு) அணுகத் தகாதவனாயிருப்பன்.
2699திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய அவதாரஹஸ்யம் ஒருவர்க்கும் அறியவொண்ணாததென்கிறது இப்பாட்டில்) 3
அமைவுடை யறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து
அமைவுடை முதல் கெடல் ஓடிவிடை யறநில மதுவாம்
அமையுடைய யமரரும் யாவரும் யாவையும் தானாம்
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே–1-3-3-
அமைவு உடை, Amaivu udai - நல்ல பல பரிபாகத்தை யுடைத்தான
அறம் நெறி முழுவதும், Aram neri muzhu vadhum - தரும மார்க்கம் எல்லாவற்றாலும்
உயர்வு அற உயர்ந்து, Uyarvu ara uyarnthu - இதற்கு மேல் உயர்த்தி யில்லை என்னும் படியாக மிக வுமுயர்ந்தவர்களாகி
அற, Ara - மிகவும்
நிலம் அது ஆம், Nilam adhu aam - கை வந்திருக்கப் பெறுவதாகிற
அமைவு உடை, Amaivu udai - சதிரை யுடையரான
அமரரும், Amararum - பிரமன் முதலிய தேவர்களும்
யாவையும், Yaavaiyum - எல்லா அசேதனங்களும்
அமைவு உடை, Amaivu udai - (ஆச்சரியப் படத் தகுந்த அமைதியை யுடைய
கெடல், Kedal - முதல் ஸ்ருஷ்டியென்ன
ஸம்ஹாரமென்ன

யாவரும், Yaavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆம், Thaan aam - தானே யாம்படியான
அமைவு உடை, Amaivu udai - பொருத்தம் பொருந்திய
நாரணன், Naaranan - நாராயணனுடைய
மாயையை, Maayaiyai - அவதார ரஹஸ்யத்தை
யாரே அறிபவர், Yaare arivabar - ஆர் தாம் அறியவல்லார்? (ஆருமில்லை)
2700திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமானுடைய திவ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் அறியப் போகாதோவென்ன, அடியவர்க்கு எளிதில் அறியக் கூடியவையாய் மற்றையோர்க்குச் சிறிதும் அறியப்போகாதவனாயிருக்குமென்கிறாரிதில்.) 4
யாரும் ஓர் நிலைமையன் என அறிவரிய வெம்பெருமான்
யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய வெம்பெருமான்
பேருமோர் ஆயிரம் பிற பல வுடைய எம்பெருமான்
பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே –1-3-4-
பேரும், Perum - (விக்ரஹத்தைப் பற்றின) திருநாமங்களும்
பிற, Piru - (அந்தத் திருநாமங்களுக்கேற்ற) விக்ரஹங்களும்
பல ஆயிரம் உடைய, Pala aayiram udaiya - அனேகமாயிரம் உடையனாய்க் கொண்டு தோற்றி
எம்பெருமான், Emperumaan - எமக்கு நாதனானவனாய்,
யாரும், Yaarum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
ஓர் நிலைமையன் என அறிவு அரிய எம்பெருமான், Oru nilai maiyan ena arivu ariya emperumaan - ஒரு படியை யுடையவன் என்று அறுதியிட வொண்ணாத பெருமானாய்.
யாரும், Yaarum - (அன்பர்களாகில்) அறிவில்லாதவர்களானார்க்கும்.
ஓர் நிலைமையன் என் அறிவு எளிய எம்பெருமான், Oru nilai maiyan en arivu eliya emperumaan - ஒரு படிப்பட்டவனென்று அறியக்கூடிய பெருமானான பகவானுக்கு
ஓர் பேரும், Oru perum - ஒரு பேரும்
ஓர் உருவமும், Oru uruvamum - ஒரு ரூபமும்
உளது இல்லை, Uladhu illai - உண்டாயிருப்பதில்லையென்று (பிரதிகூலர்க்கும்)
இலது இல்லை, Iladhu illai - இல்லையாய் இருப்பதில்லையென்று (அநுகூலர்க்கும்)
பிணக்கே, Pinakke - நித்ய விவாதமாயேயிருக்கும்.
2701திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார். 5
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த
கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன்
வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு
உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
அறு வகை சமயமும் பிணக்கு அற, Aru vakai samayamum pinakku ara - ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிக மார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி.
நெறி, Neri - வேத மார்க்கத்தை
உள்ளி, Ulli - ஆராய்ந்து
உரைத்த, Uraitha - அருளிச் செய்த
கணக்கு அறு நலத்தனன், Kanakku aru nalaththan - எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையவனும்
அந்தமில் ஆகி, Andhamil aagi - முடிவில்லாத முதல்வனும்
அம் பகவன், Am bhagavan - அழகான குணங்களை யுடையவனுமான எம்பெருமானது
வணக்கு உடை, Vanakku udai - வணக்கத்தையுடைய
தவம் நெறி, Thavam neri - பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற
வழிநின்று, Valinndru - மார்க்கத்தில் நின்று
புறம்நெறிகளை, Puram nerigalai - வேறு மார்க்கங்களாகிற களையை
கட்டு, Kattu - பறித்து
அவனுடைய உணர்வு கொண்டு, Avanudaiya unarvu kondu - அவனளித்த கீதையைக் கொண்டு
உணர்ந்து, Unarndhu - உணர்ச்சி பெற்று
பசையற, Pasaiyara - வாஸநா ரூபமான பற்றும் அறும்படி
உணக்குமின், Unakkumin - உலர்த்தி விடுங்கள்.
2702திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (த்ரிமூர்த்திஸாம்ய ப்ரமத்தைப் பரிஹரிக்குமடைவிலே அருளிச் செய்கிற பாசுரம் இது) 6
உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை
உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வு வரிது உயிர்காள்
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து அரி அயன் அரன் என்னும் இவரை
உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே –1-3-6-
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - உணர்வையே இயற்கையாக வுடையானாகி
இழிந்து அகன்று உயர்ந்து, Izhindhu akanru uyarthu - (அந்த உணர்வு அகண்ட மாகையாலே) பத்துத் திக்கிலும் வியாபித்து
உரு வியந்த, Uru viyandha - ஜடப் பொருளில் நின்றும் வேறுபட்டிருக்கிற
இ நிலைமை, I nilai mai - இந்த ஆத்மாவின் ஸ்வரூபத்தை
உணர்ந்து, Unarndhu - கேள்வியாலே அறிந்து
உணர்ந்து, Unarndhu - மநநத்தினாலே அறிந்து
உணரிலும், Unarilum - யோகாத்தாலே ப்ரத்யக்ஷமாக அறிந்தாலும்
இறை நிலை உணர்வு, Irai nilai unarvu - ஸர்வேச்வரனுடைய நிலைமையை அறிவதாவது
அரிது, Aridhu - அருமையாயிருக்கின்றது; (ஆயினும்;)
உயிர்கான், Uyirkaan - சேதநர்களே!
அரி அயன் அரன் என்னும் இவரை, Ari ayan aran ennum ivarai - விஷ்ணு பிரமன் ருத்ரன் என்று சொல்லப்படுகிற இவர்களை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - (ஒவ்வொருவருடையவும்) குணம் முதலியவற்றைக் கொண்டு பலகாலும் ஆராய்ந்து.
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அதற்கு இணங்கப்) ப்ரமாணங்களை வ்யவஹரித்துப் பார்த்து
மனப்பட்டது ஒன்று, Manappattadhu onru - உங்கள் மனதில் ஈச்வரனாகத் தோன்றின ஒரு பொருளை
உணர்ந்து உணர்ந்து, Unarndhu unarndhu - பலகாலும் அநுஸந்தித்து
உரைத்து உரைத்து, Uraithu uraithu - (அப்பொருளின் மந்திரம் திருநாமம் முதலியவற்றைப்) பலகாலும் சொல்லி
இறைஞ்சுமின், Iraijumin - உபாஸியுங்கோள்
2703திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆராய வேண்டிய படியை விசதமாகவுபதேசித்து விரைவாக ஆச்ரயியுங்கோளென்கிறாரிப்பாட்டில்.) 7
ஓன்று என பலவென வறிவரும் வடிவினுள் நின்ற
நன்ற எழில் நாரணன் நான்முகன் அரன் என்னும் இவரை
ஒன்ற நும் மனத்து வைத்து உள்ளி நும் இரு பசை அறுத்து
நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடைய நாளே –-1-3-7-
ஒன்று என, Ondru ena - ஒன்றென்றும்
பல என, Pala ena - பலதென்றும் (அதாவது ஒருவர் பிரதானனென்றும் பலர் பிரதானனென்றும்)
அறிவு அரு, Arivu aru - அறிதற்கு அரிதான
வடிவினுள், Vadivinul - உருவுக்குள்ளே
நின்ற, Nindra - நிலைத்திருக்கிற
நன்று, Nandru - விலக்ஷணமான
எழில், Ezlil - கல்யாண குணங்களாலே பிரகாசிக்கிற
நாரணன், Naaranan - ஸ்ரீமந் நாராயணன்
நான்முகன், Naanmugan - பிரமன்
அரன், Aran - ருத்ரன்
என்னும் இவரை, Ennum ivarai - என்கிற இத் தெய்வங்களை
ஒன்ற, Ondru - மத்யஸ்த த்ருஷ்டியாக
நும் மனத்து வைத்து, Num manathu vaithu - உங்களது நெஞ்சில் வைத்து
உள்ளி, Ulli - (அவர்களை ஸ்வரூப ஸ்வ பாவங்களை ப்ராமணங் கொண்டு) ஆராய்ந்து
நும், Num - உங்களுக்குண்டான
இரு பசை அறுத்து, Iru pasai aruthu - இருவர் திறத்திலும் ஈச்வர புத்தியை யொழித்து
அவனிடை, Avanidai - அந்த நன்றெழில் நாராயணன் பக்கலிலே
நம்முடை, Nammudai - நம்முடைய
நாள், Naal - வாழ் நாளில்
நன்று என, Nandru en - நன்றாக
நலம் செய்வது, Nalam seyvadhu - பக்தி பண்ணுதற்கு உரியது.
2704திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன, அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது) 8
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-
மனனகம், Mananagam - மனத்திலுண்டான
மல் அற, Mal aru - (மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி
கழுவி, Kazhvi - விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி
நாளும், Naalum - நாள் தோறும்
நம், Nam - நமக்கென்றே உரிய
திரு உடை அடிகள் தம், Thiru udai adikal tham - திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய
நலம் கழல், Nalam kazhal - அழகிய திருவடிகளை
வணங்கி, Vanangi - ஆச்ரயிக்க
நாளும் நின்று, Naalum nindru - எப்போதும் விடாது நின்று
அடும் நம, Adum nama - வருந்துகின்ற நாமறிந்தே
பழமை அம் கொடு, Pazhamai am kodu - பழமையாகிய மிகவுங்
வினை உடனே மாளும், Vinai udane maalum - கொடிய பாபங்கள் ஆச்ரயித்தவுடனே தொலையும்;
ஓர் குறைவு இல்லை, Oru kuravu illai - ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்)
மாளும் ஓர் இடத்திலும், Maalum oru idathilum - சரீரத்தை விடுகிற காலத்திலும்
வணக்கொடு, Vanakkodu - வணக்கத்தோடு
மாள்வது, Maalvadhu - முடிவது
வலம், Valam - நன்று.
2705திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாசுரங்களில் பிரமன் முதலானருடைய அவரத் தன்மையையும் எம்பெருமானுடைய பரத்வத்தையும் குறிப்பட்டருளினார். இப்பாட்டில், அந்தப் பிரமனும் சிவனும் எம்பெருமானைப்பற்றியே தங்கள் ஸ்வரூபம் பெற்றிருக்கிறபடியையும், அந்த ஸாமாந்ய தெய்வங்களும் காலிடமாட்டாத இந்நிலவுலகத்திலே எம் பெருமான் ஆச்ரியதர்கட்காக வந்து திருவவதரிக்கிறபடியையும் அருளிச் செய்கிறார்) 9
வலத்தனன் திரிபுரம் எரித்தனன் இடம் பெறத்துந்தித்
தலத்தெழு திசைமுகன் படைத்த நல்லுலகம் தானும்
புலப்படப் பின்னும் தன்னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில் இவை பின்னும் வயிற்றுள விவையவன் துவக்கே–1-3-9-
எழு, Elu - பதினான்கு லோகங்களையும் நிர்வகித்தற்குரிய எழுச்சி யுடைய
திசை முகன், Disai mugan - நான்முகக் கடவுள்
திரிபுரம் எரித்தவன், Thiripuram erithavan - முப்புரங்களை எரித்தவனாகிய ருத்திரன்
வலத்தனன், Valathanan - வலதுபக்கத்திலிருப்பான்;
பின்னும், Pinnum - மேலும்
அவன் புலப்பட, Avan pulappada - அவன் கண்ணுக்கு இலக்காக
தானே, Thaane - தானே
படைத்த, Padaitha - ஸ்ருஷ்டி செய்த
நல் உலகமும் தானும், Nal ulagamum thaanum - நல்ல லோகங்களும் தானுமாக
துந்தித் தலத்து இடம்பெற, Thundhit hthalathu idampera - திருநாபியில் இடம் பெற்றிருக்க,
அகத்தனன், Agaththananan - அவதரித்து உள்ளேயிருப்பன்;
சொல புகில், Sola pugil - இப்படி சொல்லப் பார்த்தோமாகில்
இவை பின்னும், Ivai pinnum - இந்தக் குணங்கள் பிள்ளையும்
வயிற்றுள, Vayitrul - தொலையாமல் உள்ளே யிருக்கும்
இவை அவன் துயக்கு, Ivai avan thuyakku - இவைகளே அவன் மயங்கப் பண்ணும்படி
2706திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (எம்பெருமான் தன்னிடத்து அமர்ந்த காதல் அமையப்பெறாதவர்கள் திறத்தில் பண்ணும் மாயமயக்குக்களை முன்னடிகளில் அருளிச் செய்து, அது தான் எப்படியே யானாலும், அவன் காட்டிய வழியே காணவிருக்கின்ற நாம் மனமொழி மெய்களாலே நம் விடாய்கெட உலகளந்த திருவடிகளை அநுபவிப்போமென்று தாம்கொண்ட பாரிப்பைப் பின்னடிகளில் வெளியிடுகிறார்.) 10
துயக்கறு மதியில் நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்
புயற்கரு நிறத்தனன் பெரு நிலம் கடந்த நல்லடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே —1-3-10-
துயக்கு அறு மதியில், Thuyakku aru madhiyil - கலக்க மற்ற நெஞ்சில் பிறந்த
நல் ஞானத்துள், Nal gnanathul - நல்ல ஞானத்தையுடையரான
அமரரை, Amararai - தேவர்களையும்
துயர்க்கும், Thuyarkkum - கலங்கப் பண்ணுகிற
மயக்கு உடை, Mayakku udai - மயக்கும் வல்லமையை யுடைய
வானிலும் மாயைகள், Vaanilum maayai gal - அவதார ஆச்சரியங்கள் எல்லையற்ற ஆகாசத்திற் காட்டிலும்
பெரியன வல்லன், Periyana vallan - பெரியனவாகச் செய்ய வல்லவனாய்,
புயல், Puyal - நீலமேகம் போலே
கரு நிறந்தனன், Karu nirandhanan - கருநிறத்தை யுடையனான எம்பெருமானுடைய
பெரு நிலம் கடந்த, Peru nilam kadandha - பெரிய பூமிப் பரப்பை எளிதாக அளந்த
நல், Nal - விலக்ஷணமான
அடிபோது, adipodhu - திருவடித் தாமரைகளை
அமர்ந்து, Amarnthu - வேறு பிரயோஜனங்களில் பற்றற்று அமர்ந்து
அயர்ப்பு, Ayarppu - மறப்பில்லாதவனாய்
அவற்றுவன், Avaruvan - முறை மாறி அவன் குணங்களை வாயாலே சொல்லுவேன்;
தழுவுள்ள, Thazhuvullan - ஆலிங்கனம் பண்ணுவேன்;
வணங்குவன், Vananguvan - தலையாலே வணங்குவேன்
2707திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (இத்திருவாய்மொழி வல்லவர்கள் நித்யஸூரிகளோடொக்க உயர்த்தியைப் போய்ப்பெற்று ஸம்ஸார ஸம்பந்தமறப் பெறுவரென்று பலன் சொல்லிக்காட்டுகிற பாசுரம் இது) 11
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-

அமரர், Amarar - தேவர்கள்
தொழுது எழ, Tholuthu elu - ஸேவித்து விருத்தியை யடைய
அமரர், Amarar - பொருந்தின
பொழில் வளம், Pozhil valam - சோலை வளமுள்ள
குருகூர், Kurugoor - திருக் குருகூரில் அவதரித்த
சடகோபன், Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்கள், Kurraevalgal - (வாக்கினாலாகிய) கைங்கரியமான
அமரர் சுவை, Amarar suvai - சுவையமைந்த
ஆயிரத்து அவற்றினுள், Aayirathu avatrinul - ஆயிரம் பாடலுக்குள்
அலைகடல், Alaikadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலை
கடைந்தவன் தன்னை, Kadaindavan thanai - கடைந்தவனான ஸர்வேச்வரனைக் குறித்து
இவை பத்தும், Ivai pattum - இந்தப் பத்துப் பாசுரமும்
வல்லார், Vallar - கற்க வல்லவர்கள்
அமரரோடு, Amararodu - நித்யஸூரிகளோடு
உயர்வில், Uyarvil - பரமபதத்தில்
சென்று, sendru - சேர்ந்து
தம்பிறவி, Thambiravi - தம் பிறப்பாகிற
அம் சிறை, Am sirai - உறுதியான பந்தத்தில் நின்றும்
அறுவர், Aruvar - நீங்கப் பெறுவர்கள்.
2708திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) பிரிவாற்றாமையோடு கூடியிருக்கின்ற பராங்குசநாயகி “பிரிந்தாரிரங்குவது நெய்தல் நிலத்திலே” என்ற தமிழர்களது கொள்கையின்படி இப்போது நெய்தல் நிலத்திலே யிருக்கின்றாளென்று கொள்ள வேணும் 1
அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1
am siraiya,அம் சிறைய - அழகிய சிறகுகளை யுடைய
madam,மடம் - இளமை தங்கிய (அல்லது, விதேயமான)
naray,நாராய் - நாரைப் பறவையே!
aliyathai,அளியத்தாய் - தயை பண்ணுதற்கு உரியாய்!
niyum,நீயும் - நீயும்
nin,நின் - உன்னுடைய
am siraiya sevalum aai,அம் சிறைய சேவலும் ஆய் - அழகிய சிறகுகளை யுடைய ஆணுமாய் (இருவருங்கூடி)
avan,அவன் - அந்த எம்பெருமான்
van siraiyil vaikkil,வன் சிறையில் வைக்கில் - கடினமான சிறையிலே வைத்திட்டால்
aa endru enakku aruli,ஆஆ என்று எனக்கு அருளி - ஐயோவென்று என் விஷயத்தில் கருணை கூர்ந்து
vemsirai pul uyarntharku,வெம்சிறை புள் உயர்ந்தார்க்கு - விரோதி பயங்கரமான சிறகுகளை யுடைய பெரிய திருவடியைக் கொடியாக வெடுத்த பெருமானுக்கு
en vidu thootu aai,என் விடு தூது ஆய் - என்னால் விடப்பட்ட தூதாய்
sendrakal,சென்றக்கால் - போனால்,
vaippundal,வைப்புண்டால் - அதை நீ அநுபவித்திருப்பாயானால்
en seyyum,என் செய்யும் - என்ன கெடுதலுண்டாகும்?
2709திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாடடில் நாரையைத் தூது போகுமாறு இரத்த தலைவி, அங்குப் போனால் சொல்ல வேண்டிய செய்தியைச் சில குயில்களுக்குச் சொல்லுகின்றாள். ஒருவரை யழைத்து விட்டு மற்றொருவர்க்கும் ஸமாச்சாரஞ் சொல்லுகிற விதனால் மிக்க கலக்கம் விளங்கும். இத்தகைய கலக்கத்தை யுண்டு பண்ணுவதே யாயிற்று விஷயாந்தரங்களிக் காட்டில் பகவத் விஷயத்திற்குண்டான ஏற்றம். 2
என் செய்ய தாமரைக் கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே
முன் செய்த முழு வினையால் திருவடிக் கீழ் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே –1-4-2
inam kuyil kaal,இனம் குயில் காள் - கூட்டமான குயில்களே!
en,என் - என்னுடைய
seyya thaamarai kan,செய்ய தாமரை கண் - செந்தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய
perumaanukku,பெருமானுக்கு - எம்பெருமானுக்கு
en thootu aay,என் தூது ஆய் - நான் விட்ட தூதாகி
uraithakkaal,உரைத்தக்கால் - சென்று சமாசாரமறிவித்தால்
en seyyum,என் செய்யும் - (அந்தச் செயல் உங்களுக்கு என்ன தீமையை விளைவிக்கும்?
neer alire,நீர் அலிரே - (நெடு நாளாகப் பழகிப் போந்த) நீங்களல்லீர்களோ?
mun seytha,முன் செய்த - முற்பிறப்பில் பண்ணின
muzhuvinaiyaal,முழுவினையால் - பெரும் பாவத்தினால்
thiruaṭi keel,திருஅடி கீழ் - திருவடிகளிலே
kutreval seyya,குற்றேவல் செய்ய - கைங்கரியம் பண்ணுவதற்கு
mun muyaladhen,முன் முயலாதேன் - முன்னம் முயற்சி செய்யாத நான்
inam,இனம் - இன்னமும்
agalvadhuvo vidhi,அகல்வதுவோ விதி - விலகி யிருப்தேயோ முறைமை?
2710திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல், முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே” என்றதற்கு மேல் ‘ஆழ்வீர்! இங்ஙனஞ் சொல்வது தகாது, செய்த பாபம் அனுபவித்தே தீரவேண்டுங்காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாகக் கூடுமென்று கருதி, ‘நான் பன்ணின பாபமேயோ அனுபவித்தாலும் மாளாதது? என்று சொல்லுங்கோள்’ என்று சில அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிற பாசுரம் இது 3
விதியினால் பெடை மணக்கும் மென்னடைய அன்னங்காள்
மதியினால் குறள் மாணாய் வுலகிரந்த கள்வர்க்கு
மதியிலேன் வல்வினையே மாளாதோ வென்று ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் என்னீரே –1-4-3
vidhiyinaal,விதியினால் - பாக்ய வசத்தினால்
pedai manakkum,பெடை மணக்கும் - பேடையோடு கூடிக் களித்திருக்கின்ற
mel nadaiya,மெல் நடைய - மெல்லிய நடையை யுடைய
kalvarku,கள்வர்க்கு - கபடமுடைய பெருமானுக்கு,
madhiyilen,மதியிலேன் - புத்தியில்லாத என்னுடைய
val vinaiye maalaathu,வல் வினையே மாளாது - பெரிய பாவந்தானே முடியாதிருப்பது!
endru,என்று - என்று சொல்லி,
annangal,அன்னங்காள் - அன்னப் பறவைகளே!
madhiyinaal,மதியினால் - புத்தியினால்
kurai maan aay,குறள் மாண் ஆய் - வாமந ப்ரம்மசாரியாய்
ulaga irandha,உலக இரந்த - உலகங்களை யாசித்த
oruthi,ஒருத்தி - ஒரு பெண்ணாவள்
madhi ellaam ul kalangi,மதி எல்லாம் உள் கலங்கி - புத்தி முழுதும் அடி மண்டி யோடே கலங்கப் பெற்று
mayangum,மயங்கும் - அறிவழிந்து கிடக்கின்றாள்
aal,ஆல் - அந்தோ!
enneer,என்னீர் - என்று சொல்லுங்கோள்.
2711திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என்னீர்மைகண்டிரங்கி) பராங்குசநாயகி பல பறவைகளை விளித்துச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கண்ட சில மகன்றில் பறவைகள் ‘நமக்கும் கைங்கரியம் செய்யச் சிறித அவகாசம் நேர்ந்தது’ என்று மகிழ்ந்து அருகே வந்து எங்களுக்கு ஏதேனும் நியமனமுண்டோ?, என்று கேட்பனபோல நிற்க, அவற்றைக் கண்டு, ‘அந்தோ! எனது நிலைமையைப் பலகாலும் கண்டுவைத்தும் இரங்காதே போனவர்க்கு நான் என்ன ஸமாசாரம் சொல்லியனுப்புவது?’ என்று நசையற்றவளாய், பின்னையும் வெறுமனிருக்கமாட்டாமையினாலே, ‘மகன்றில்களே! என்னிலைமையை அவர்க்குச் சொல்லுவீர்களோ? மாட்டீர்களோ? என்கிறாள். 4
என்நீர்மை கண்டிரங்கி -இது தகாதென்னாத
என்நீல முகில் வண்ணர்க்கு என் சொல்லி யான் சொல்லுகேனோ
நன்னீர்மை இனியவர் கண் தங்காது என்று ஒரு வாய்ச் சொல்
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ –1-4-4
en neermai kandu,என் நீர்மை கண்டு - எனது ஸ்வபாவத்தை (நேரில்) பார்த்திருந்தும்
irangi,இரங்கி - (பிரிவு காலத்தில்) மனமிரங்கி
idhu thagadhu ennaadha,இது தகாது என்னாத - இப்படி நாம் பிரிந்திருப்பது தகுதியன்று என்றிராத
en neela mugil vannarkku,என் நீல முகில் வண்ணர்க்கு - நீல மேகத்தின் நிறம் போன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
en sollai,என் சொல்லி - என்ன வார்த்தையைச்
yaan sollu kaeno,யான் சொல்லு கேனோ - சொல்லி நான் சொல்லப்போகிறேன்!;
ini,இனி - இனிமேல்
avargal,அவர்கள் - (பராங்குச நாயகியாகிய) அவளிடத்தில்
nal neermai,நல் நீர்மை - நல்லுயிர்
thangaadhu,தங்காது - தங்கி யிருக்க மாட்டாது
endru oru vaay soll,என்று ஒரு வாய்ச் சொல் - என்றொரு வாய்ச் சொல்லை
nal neelam maganril kaal,நல் நீலம் மகன்றில் காள் - நல்ல நீலநிறமான மகன்றிற் பறவைகளே!
nalguthiroo nalgheero,நல்குதிரோ நல்கீரோ - (எம்பெருமானிடத்துச் சென்று) சொல்லுவீர்களோ மாட்டீர்களோ
2712திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) நான் எக்கேடாவது கெட்டுப்போகிறேன்; நாராயணனென்றும் ஸகல லோக ஸம்ரக்ஷகனென்றும் விருது சுமக்கின்ற அவர்க்கு ஒரு கெடுதல் இல்லாமலிருக்க வேண்டுமே; என்னொருத்தியை ரக்ஷியாமையினாலே, அவர் படைத்த பெயரெல்லாம் மழுங்கிப் போகுமன்றோ; அங்ஙனம் போகாமே நோக்கிக் கொள்ளும்படி சொல்ல வேணுமென்று ஒரு குருகை நோக்கி இரக்கின்றாள். ஒருவடைய அபேக்ஷையையும் எதிர்பாராமல் உலகங்களுக்கெல்லாம் அபீஷ்டங்களை அளிக்கின்றாரே; அப்படிப்பட்டவர் பாவியான எனக்குத் தானே உதவலாகாது. அவர் நாராயணரன்றோ. நார பதத்தின் அர்த்தத்தில் நான் சேர்ந்தவளல்லேனோ? என்னை விட்டால் அவர்க்கு நாராயணத்வம் எங்ஙனே நிரம்பும்? என்ற கருத்து உள்ளுறையும். 5
நல்கித்தான் காத்தளிக்கும் பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத்தான் ஆகாதோ நாரணனைக் கண்டக்கால்
மல்கு நீர்ப் புனல் படப்பை இரை தேர் வண் சிறு குருகே
மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே –1-4-5
malgu,மல்கு - நிறைந்த
neer,நீர் - குளிர்ச்சியாகிய ஸ்வபாவத்தையுடைய
punal,புனல் - நீர்வாய்ந்த
padappai,படப்பை - பூந்தோட்டங்களிலே
iraidther,இரைதேர் - இரை தேடுகின்ற
van siru kuruke,வண் சிறு குருகே - அழகிய சிறிய குருகே!.
thaann nalgi,தான் நல்கி - தானே அநுக்ரஹித்து
kaathu,காத்து - அநிஷ்டங்களையெல்லாம் போக்கி
pozhil ezum,பொழில் எழும் - ஏழுலகங்களையும்
alikkum,அளிக்கும் - ரக்ஷித்துக் கொண்டிருக்கின்றானெம்பெருமான்;
vinaiyeerkaeyo nalgathaanaa aagaaathu,வினையேற்கேயோ நல்கத்தான் ஆகாது - (அப்படிப்பட்ட அவன்) பாபியான எனக்கு மாத்திரமேயோ தான் கிருபை பண்ணலாகாது;
naarannanai kandakkaal,நாரணனை கண்டக்கால் - (அந்த) நாராயணனை கண்ட பொழுதில்,
malgum neer kannaeerku,மல்கும் நீர் கண்ணேற்கு - நீர் நிறைந்த கண்களை யுடைய (அழு கண்ணியான) எனக்கு
or vaasagam kondoo,ஓர் வாசகம் கொண்டு - (அப்பெருமாளிடத்தில் நின்று) ஒரு வார்த்தையைக் கொணர்ந்து
arulaay,அருளாய் - கிருபை பண்ண வேணும்
2713திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) என்னுடைய வருத்தத்தைப் பரிஹரியாதொழிந்தாலும், தம்முடைய நாராயணத்வத்தையாவது காப்பாற்றிக்கொள்ளச் சொல்ல வேணுமென்றாள் கீழ்ப்பாட்டில்; இதற்கு எம்பெருமான் ‘நம்முடைய நாராயணத்வம் தொலைந்தாலும் தொலையட்டும்; ஒருவிதத்திலும் நமக்கு ஈடல்லாத இந்தப் பராங்குசநாயகியோடு கலந்து அவத்யம் பொறுவதிற்காட்டிலும் நாராயணத்வம் அழிய நிற்பதே அமையும் என்று திருவுள்ளமாகக் கூடுமென்று கருதிய தலைவி, அவருக்கும் அவத்யம் வராமல் எனக்கும் ஸத்தை கிடக்கும்படியாக ஒரு வழியுண்டு; தாம் திருவீதி உலாவப்புறப்படுதல், ஆனைக்கு அருள் செய்ப்புறப்படுதல், என்றிப்படிப் சில யாத்திரைகள் செய்வதுண்டே; அப்படி ஏதேனுமொரு வியாஜங்கொண்டு எங்கள் தெருவே போனால் தமக்கும் அவத்யம் வாராது. நானும் சாலக வாசல் பற்றி நோக்கி ஜீவிப்பேன்; இதை அவர்க்குச் சொல்லாய் என்று ஒரு வண்டை இரக்கிறாள் 6
அருளாத நீர் அருளி யவராவி துவரா முன்
அருளாழிப் புட்கடவீர் யவர் வீதி ஒரு நாள் என்று
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
அருளாழி வரி வண்டே யாமும் என் பிழைத்தோமே–1-4-6
Aazhi vazhi vandae,ஆழி வழி வண்டே - வட்டமான ரேகைகளை யுடைய வண்டே!
Arul aazhi ammaanai,அருள் ஆழி அம்மானை - அருட்கடலான எம்பெருமானை
Kandakkaal,கண்டக்கால் - காணும் பொழுது (அவரை நோக்கி)
Arulaadha neer,அருளாத நீர் - (இவ்வளவில்) கிருபை பண்ணாத நீர்
Aruli,அருளி - கிருபை பண்ணி
Avar aavi thuvara mun,அவர் ஆவி துவரா முன் - அவருடைய (ஆழ்வாருடைய) உயிர் நீர்மை கெடுவதற்கு முன்னே
Arul aazhi pul,அருள் ஆழி புள் - கருணைக் கடலான பெரிய திருவடியை
Avar veedhi orunaal,அவர் வீதி - அவரிருக்கிற வீதியில்
Orunaal,ஒருநாள் - ஒரு நாளாயினும்
kadaveer endru,கடவீர் என்று - நடத்துவீராக என்று
Idhu solli,இது சொல்லி - இந்த வார்த்தையைச் சொல்லி
arul,அருள் - கிருபை பண்ண வேணும்;
Yaamum,யாமும் - நாமும்
En pilaitthoom,என் பிழைத்தோம் - என்ன குற்றம் செய்தோம்?
2714திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) (என் பிழை கோப்பதுபோல.) இத்திருவாய் மொழிக்கு இப்பாட்டு உயிர் நிலையாயிருக்கும். பிழைகளைப் பொறுத்தருளுந் தன்மையாகிற அபராத ஸஹத்வமென்னுங் குணம் பற்றாசாகத் தூது விடுகிறாளென்று அவதாரிகையிற் கூறினது இப் பாட்டைக் கணிசித்தேயாம். பிழைகளை அளவின்றிச் செய்துவைதபுது ‘அருளாழிப்புட்கடவீர் அவர்வீதி யொருநாள்’ என்றால் இது எப்படி ஸாத்யமாகும்? என்று எம்பெருமானுக்குக் கருத்தாகக் கூடுமென்று நினைத்த பராங்குசநாயகி, எங்கள் குற்றத்தை மாத்திரமேயோ பார்ப்பது. குற்றங்களைப் பொறுத்தருள்பவர் என்று அவர் தாம் விருது பெற்றிருக்கின்றாரே, அதனைச் சிறிது பார்க்க வேண்டவோவென்று சொல்” என்று தன்கிளியை இரக்கின்றாள். 7
என் பிழை கோப்பது போல் பனிவாடை ஈர்கின்றது
என் பிழையே நினைந்து அருளி யருளாத திருமாலார்க்கு
என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச் சொல்
என் பிழைக்கும் இளம் கிளியே யான் வளர்த்த நீ யலையே –1-4-7
Enbu,என்பு - எலும்பிலே
Izhai,இழை - நூலிழையை
Koappathu pol,கோப்பது போல் - நுழைத்தாற்போல
Pani vaadai,பனி வாடை - குளிச்சி பொருந்திய வாடைக் காற்று
Eerkinra,ஈர்க்கின்ற - வருத்துகின்றது;
En,என் - (இப்படி வருத்தப் படுகின்ற) என்னுடைய
Pizhaiye,பிழையே - குற்றங்களையே
Ninaintharuli,நினைந்தருளி - எண்ணி
Oruvaai,ஒருவாய் - ஒரு வார்த்தை
Sol,சொல் - சொல்ல வேணும்;
Enbu,என்பு - எலும்பை
Izaikkum,இழைக்கும் - செதுக்குகிற
Arulaadha,அருளாத - கிருபை பண்ணாமலிருக்கிற
Thiru maalaarkku,திரு மாலார்க்கு - லக்ஷ்மீ நாதனுக்கு (லக்ஷ்மீ நாதனிடம் சென்று)
Thiruvadiyin,திருவடியின் - ஸ்வாமியான தேவரீருடைய
Thakavinukku,தகவினுக்கு - கிருபைக்கு (பாங்காகும்படி)
En pizhaitthaal endru,என் பிழைத்தாள் என்று - (பராங்குச நாயகி) என்ன பிழை செய்து விட்டாள்? என்று
Ila kiliye,இள கிளியே - கிளிப்பிள்ளாய்!
Yaan valartha nee alaiye,யான் வளர்த்த நீ அலையே - நான் வளர்த்த நீ அல்லையோ? (வேறு பட்டாயோ)
2715திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) தன்னுடைய நிலைமையைப் பூவென்னும் ஒரு பக்ஷிக்குக் காட்டி ‘ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்டிருக்கும் எனக்காகத் தூது செல்லாதே உபேஷித்திருப்பாய்; நானோ இப்போது முடியப் புகா நின்றேன்; இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய் என்று சரம ஸமயத்தில் வார்த்தைபோல சொல்லுகின்றாள் 8
நீயலையே சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்து ஒழிந்தாய்
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே–1-4-8
Siru poovaai,சிறு பூவாய் - சிறிய பூவையே!
Nee alaiye,நீ அலையே - நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?)
Nedumaalaarkku,நெடுமாலார்க்கு - ‘புருஷோத்தமனுக்கு
En thoodu aay,என் தூது ஆய் - என் தூதாகிச் சென்று
Enathu noi,எனது நோய் - எனது பிரிவாற்றாமையை
Nuval enna,நுவல் என்ன - ‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும்
Nuvalaadhe,நுவலாதே - (போய்ச்) சொல்லாதே
Irundhozhindhaay,இருந்தொழிந்தாய் - வாளா இருந்திட்டாய்,
Naan,நான் - யான்
Saayalodu,சாயலொடு - ஒளியோடு கூடின
Mani maamai,மணி மாமை - அழகாகிய நிறத்தை
Thalarndhaen,தளர்ந்தேன் - இழந்தேன்;
Ini,இனி - இப்படியான பின்பு
Unadhu,உனது - உன்னுடைய
Vaai alagil,வாய் அலகில் - வாயலகுக்குள்ளே
In,இன் - மதுரமான
Adisil,அடிசில் - இரையை
Vaipparai,வைப்பாரை - ஊட்ட வல்லவர்களை
Naadaay,நாடாய் - தேடிக் கொள்
2716திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்” என்றாரே. அப்படி மேனி மெலிந்திருக்கிற ஸமயத்திலே ஒரு வாடைக் காற்று வந்து உடம்பிலே பட்டது; “என்றும் புன்வாடை: யிதுகண்டறிதுமிவ்வாறு வெம்மை, ஒன்று முருகவுஞ் சுவடுந் தெரியலம்” (திருவிருத்தம்) என்றாப்போலே அதனுடைய அபூர்வமான கொடுமையைக் கண்டு அரசர்கள் ராஜ த்ரோஹஞ் செய்தவர்களை ஹிம்ஸிக்க வேற்காரை அனுப்பி யிருக்க வேணும்’ என நினைத்து அந்த வாடையை நோக்கிச் சொல்லுகின்றாள்- ‘ வாடையே! நான் சொல்லுகிறவொரு வார்த்தையை நீ அங்கே சென்று அறிவித்து விட்டு, பின்னை அவசியம் வந்து என்னை முடித்திடாய்’ என்கிறாள். 9
நாடாத மலர் நாடி நாடோறும் நாரணன் தன்
வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ
ஊடாடு பனிவாடா யுரைத்தீராய் எனதுடலே –1-4-9
Oodu aadu,ஊடு ஆடு - அங்குமிங்கும் நடையாடுகிற
Pani vaadaay,பனி வாடாய் - குளிர் காற்றே!
Naadaatha malar naadi,நாடாத மலர் நாடி - தேட வொண்ணாத புஷ்பங்களைத் தேடி
Naal thoarum,நாள் தோறும் - தினந்தோறும்
Naaranan than,நாரணன் தன் - ஸ்ரீமந் நாராயணனுடைய
Vaadaadha malar adi keezh,வாடாத மலர் அடி கீழ் - வாடாத தாமரை மலர் போன்ற திருவடிகளில்
Vaikkave,வைக்கவே - ஸமர்ப்பிப்பதற்காகவே
Vagukkinra,வகுக்கின்ற - (அவயங்களை) ஏற்படுத்தி யிருக்க,
Veetu aadi veettrindhal,வீடு ஆடி வீற்றிருந்தல் - (இப்படி) பிரிவிலே மூழ்கி யிருப்பதாகிற
Vinai yatradhu,வினை யற்றது - தௌர்பாக்கியம்
En seyvadho,என் செய்வதோ - எதற்காக நேர்ந்ததோ!;
Vaadaay,வாடாய் - காற்றே!
Uraiththaeraay,உரைத்தீராய் - (அப் பெருமானுக்குத்) தூது சொல்லி (அனுகூலமான மறு மொழி பெறா விடின்)
Enathu udal,எனது உடல் - என் சரீரத்தை
Eeraay,ஈராய் - இரு பிளவாக்கி விடு
2717திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) கீழ்ப்பாட்டில் “நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கரிய ப்ரஸ்தாவம் வந்ததனால், தாய் முலையை நினைத்த கன்று போலே திருவுள்ளமானது பதறி உடலை விட்டுப் புறப்படத் தொடங்கிற்று; அதனை நோக்கி நெஞ்சே! நம் காரியம் ஒரு விதமாக சபலமாகுமளவும் நீ என்னை விடாதே யிருக்கவேணு’ மென்று கேட்டுக் கொள்ளுகிறாள். அன்றியே, தூதுவிடுகிற பிரகரணமாதலால் நெஞ்சைத் தூதுவிடுகிறாள் என்பாரு முளர். அப்போது, விடல் என்றது- அவனை விடவேண்டா என்றபடி 10
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்
கடலாழி நீர் தோற்றி அதனுள்ளே கண் வளரும்
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடலாழி மட நெஞ்சே வினையோம் என்றாம் அளவே –-1-4-10
Aazhi mada nenje,ஆழி மட நெஞ்சே - ஆழ்ந்த மடநெஞ்சே!
Udal,உடல் - சரீர ஸம்பந்தம் பெற்று
Aazhi,ஆழி - சக்ராகாரமாக
Pirappu,பிறப்பு - மாறி மாறிப் பிறக்கிற ஸம்ஸாரி நிலமும்
Veetu,வீடு - மோக்ஷமும்
Uyir,உயிர் - (இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும்
Mudhal aam mutrum aay,முதல் ஆம் முற்றும் ஆய் - ஆகிய இவை முதலான ஸகல பதார்த்தங்களும்
தானிட்ட வழக்காம்படி ஸர்வ நிர்வாஹகனாய்
ஆழ்ந்த நீரை யுடைய ஸமுத்திரத்திலே

Thootri,தோற்றி - ஆவிர்ப்பவித்து
Adhan ullam,அதன் உள்ளே - அக் கடலினுள்ளே
Kan valarum,கண் வளரும் - சயனித் தருள்கின்ற
Adal vizhi ammaanai,அடல் வழி அம்மானை - தீக்ஷ்ணமான சக்கரப் படையை யுடைய பெருமானை
Kantakkaal,கண்டக்கால் - கண்டால்
Idhu,இது - இந்த நிலைமையை
Solli,சொல்லி - அவனுக்குச் சொல்லி
Vinaiyom,வினையோம் - பாபிகளாக நாம்
Ondru aam alavu,ஒன்று ஆம் அளவு - அவனோடு ஒன்றுபடும் வரையில்
Vidal,விடல் - விடாதே.
2718திருவாய்மொழி || 1-4 அஞ்சிறைய (தலைமகள் தூதுவிடல் ) இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார். 11
அளவியின்ற வேழுலகத்தவர் பெருமான் கண்ணனை
வளவயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த
அளவியன்ற வந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெரு வளமே –1-4-11
Alavu iyanra,அளவு இயன்ற - எல்லையைக் கடந்த
Ezh ulagathavar perumaan,ஏழ் உலகத்தவர் பெருமான் - ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான
Kannanai,கண்ணனை - எம்பெருமானைக் குறித்து,
Valam vayal soo,வளம் வயல் சூழ் - வளர்ப்ப முள்ள கழனிகள் சூழ்ந்த
Van kurukoor,வண் குருகூர் - அழகிய திருநகரிக்குத் தலைவராகிய
Sadagopan,சடகோபன் - ஆழ்வார்
Vainthu uraitha,வாய்ந்து உரைத்த - அன்பு பூண்டு அருளிச் செய்த
Alavu iyanra,அளவு இயன்ற - கட்டளைப் பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான)
Andhaathi,அந்தாதி - அந்தாதித் தொடையான
Aayiraththul,ஆயிரத்துள் - ஆயிரத்துக்குள்ளே
Ippaththin,இப் பத்தின் - இப் பதிகத்தினுடைய
Valam uraiyaal,வளம்உரையால் - வளமாகிய சொல்லளவினாலே
Vaan oongu peruvalam,வான் ஓங்கு பெருவளம் - பரம பதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து
Peral aagum,பெறல் ஆகும் - அடையலாகும்
2719திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (அயர்வறுமமரர்களென்றிருக்கும் நித்யஸூரிகளாலே அநுபவிக்கத் தக்கவனான எம்பெருமானை அந்தோ! நான் மனமொழி மெய்களினால் தூஷித்து விட்டேனே யென்கிறார்) 1
வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1
வளம்,Valam - வளப்பம் பொருந்திய
ஏழ் உலகின்,Ezh ulagin - ஏழுலகத்திற்கும்
முதல் ஆய்,Mudhal aay - முதலாகிய
வானோர் இறையை,Vaanoor iraiyai - நித்ய ஸூரி நாதனான எம்பெருமானை
அரு வினையேன்,Aru vinaiyen - போக வொண்ணாத பாபத்தை யுடையோனாகிய நான்
நினைத்து,Ninaithu - மனத்தினால் தியானித்து
நைந்து,Nainthu - உடம்பும் கட்டுக் குலைந்து
களவு ஏழ் வெண்ணெய் தொடு உண்ட கள்வா என்பன்,Kalavu ezh vennay thodu unda kalvaa enpan - களவுத் தொழில் விளங்கும்படி வெண்ணெயை ஒளித்துண்ட கள்வனே!’ என்று சொல்லி யழைக்கின்றேன்;
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலும்
தளவு ஏழ் முறுவல்,Thalavu ezh muruval - முல்லை யரும்பு போலத் தோன்றுகிற புன்னகையை யுடைய
பின்னைக்கு ஆய்,Pinnai kku aay - நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் ஆனாயர் தலைவன் ஆய்,Val aanayar thalaivan aay - சிறந்த இடையர் தலைவனாய் வந்து
இள,Ila - இளமை தங்கிய
ஏறு ஏழும்,Eru ezhum - எருதுகளேழையும்
தழுவிய,Thazhuvia - அணைத்து முடித்த
எந்தாய்,Endhaay enpan - என் ஸ்வாமியே!
என்பன்,enban - என்றும் சொல்லுவேன்
2720திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைக் காட்டிலும் இப்பாட்டு பரம விலக்ஷணமானது. கீழ்த் திருவாய்மொழிகளில் தாம் சொன்ன சொற்களுக்கு அநுதாபம் காட்டினார், கீழ்ப்பாட்டில். எம்பெருமானைக் கெடுத்துவிட்டேனென்று சொல்வதற்கும் நான் அதிகாரியல்லேனே; என் அதிகாரத்திற்குட்படாத வார்த்தையை நான் சொல்லிவிட்டேனே யென்று தடுமாறுகிறார்) 2
நினைந்து நைந்து உள்கரைந்து உருகி இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த வெல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை மாசூணாதோ மாயோனே –1-5-2
மாயோனே!,Maayone! - ஆச்சரியனான எம்பெருமானே!
இமையோர்,Imaiyor - (பிரமன் முதலிய) தேவர்களும்
முனிவரும்,Munivarum - (ஸநகன் முதலிய) ரிஷிகளுமான
பலரும்,Palrum - பல பேர்களும்
நினைந்து,Ninaindhu - (உனது குணங்களைச்) சிந்தித்து
நைந்து,Naindhu - (அதனாலலே) சரீரமும் கட்டுக் குலைந்து
உள் கரைந்து,Ul karaindhu - மனம் கரைந்து
உருகி,Urugi - நெகிழ்ந்து
புனைந்த,Punaindha - தொடுக்கப் பட்ட மாலைகளையும்
நீர்,Neer - திருமஞ்சனத் தீர்த்தத்தையும்
சாந்தம்,Saantham - சாத்துப் படியையும்
புகையோடு,Pugaiyodu - தூபத்தையும்
ஏந்தி,Aendhi - கையிலேந்திக்கொண்டு வந்து
வணங்கினால்,Vananginaal - தொழுதால்,
நினைத்த எல்லாம் பெருள்கட்கும்,Ninaitha ellaam perul katkum - நினைக்கப்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும்
வித்து ஆய்,Vitthu aay - மூலமாகி
முதலில் சிதையாமே,Mudhalil sidhaiyame - ஸ்வரூப விகாரம் பிறவாதபடி
மனம் செய் ஞானத்து,Manam sei jnanathu - மனத்தினால் செய்யப்பட்ட ஸங்கல்ப ரூபமான ஞனாத்தை யுடைய
உன்,Un - உன்னுடைய
பெருமை,Perumai - பெருமையானது
மாசு உணாதோ,Maasu unaadho - அழுக்கடையாதோ?
2721திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ் இரண்டு பாட்டிலும் எல்லை கடந்த நைச்சியத்தை அநுஸந்தித்து அகலப் பார்த்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! நீர் இங்ஙனம் நம்முடைய மேன்மையைப் பார்த்து நெகிழ நினைத்தல் தகுமோ? நம்முடைய மேன்மையை மாத்திரமேயோ நீர் பார்ப்பது? நாம் எல்லாரோடும் கலந்தும் தாழ நின்றும் பொருந்தும் படியான சீலகுணத்தையும் பார்க்கவேண்டாவோ?’ என்று தனது சீலகுணத்தைக் காட்டும் முகமாக உலகளந்த வரலாற்றை நினைப்பூட்ட, அதனை அநுஸந்தித்து அகலவும் மாட்டாமல் அணுகவும் மாட்டாமல் நடுவே நின்று பேசிப் போது போக்குகிறபடியாய்ச் செல்லுகின்றது இப்பாசுரம். 3
மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3
மா யோனிகள் ஆய்,Maa yonigal aay - பெருமை யுள்ள பிறப்பை யுடையவர்களாய்க் கொண்டு
நடை,Nadai - ஸ்ருஷ்டி முதலான வியாபாரங்களை
கற்ற,Katra - அறிந்திருக்கிற
வானோர்,Vaanor - தேவர்களும்
முனிவரும்,Munivarum - ரிஷிகளும்
பலரும்,Palrum - மற்றும் பலருமாகிய
யோனிகளை,Yonikalai - காரண பூதர்களான பிராணிகளை
நீ படை என்று,Nee padai endru - நீ படைக்க கடவாயென்று
நிறை நான் முத்னை படைத்தவன்,Nirai naan mudhnai padaithavan - (ஞான சக்திகள்) நிறைந்த சதுர்முகனை ஸ்ருஷ்டித்தவன்
எல்லா அறிவுக்கும் சேயோன்,Ella arivukkum seyon - எல்லா ஞானத்துக்கும் எட்டாதவன்
திசைகள் எல்லாம்,Thisaigal ellaam - ஸகல லோகங்களையும்
திரு அடியால்,Thiru adiyaal - திருவடியினால்
தாயோன்,Thaayon - அளந்தவன்
எல்லாவெவ் வுயிர்க்கும்,Ellavev uyirkkum - எவ் வகைப் பட்ட ஸகலமான பிராணிகளுக்கும்
தாயோன்,Thaayon - தாயைப் போன்றவன்;
தான்,Thaan - இப்படிப் பட்ட எம்பெருமான்
ஓர் உருவனே,Oar uruvane - (ஸுசீல்ய மாகிற) ஒரு படியை யுடையவனா யிருக்கின்றானே!
2722திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (ஆழ்வார் நைச்சியாநுஸந்தானம் பண்ணி அகல நினைத்தது கீழ்ப்பாட்டில் சிறிது தணியத் தொடங்கிற்று; அதைக்கண்ட சிலர் ‘ஆழ்வீர் இனி நீர் என் செய்வதாக நினைக்கிறீர்; அணுகப் பார்க்கிறீரோ?’ அகலப் பார்க்கிறீரோ?” என்று கேட்க நான் அகல நினைத்தாலும் ஸ்வாமியான அவன் விடுவதாக இல்லையே; அவன் ஒன்றாலொன்று குறைவில்லாதவனாயிருந்து வைத்தும் ஸ்ருஷ்டி முதலான க்ருஷிகளைப் பண்ணி ஒரு பொருளாகக் கொண்ட பின் நான் அகல்வேனென்றாலும் தன் ஸௌசீல்ய குணத்தினால் என்னை விடமாட்டாதவனாயிரா நின்றானேயென்கிறார்) 4
தானோர் உருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்
தானேர் பெரு நீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும்
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமானே –1-5-4
தான்,Thaan - பிரம ருத்ராதிகளொருவருமின்றி ஒருவனேயாகி நின்ற தான்
ஓர் உருவே,Or uruve - ஓருருவமுடையனாய்க் கொண்டே
தன்னில்,Thannil - இப்படி மூவகைக் காரணமான தன் ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்திலே
மூவர் முதலாய வானோர்,Moovar mudhalaaya vaanor - பிரம்மன் சிவன் இந்திரனாகிய மூவர் முதலான தேவர்களும்
முனிவரும்,Munivarum - ரிஷிகளும்
பலரும்,Palrum - பல சேதனர்களும்
மற்றும்,Matrum - மற்ற மானிட சாதியும்
மற்றும்,Matrum - மற்ற மிருகம் பறவை முதலான
முற்றும் ஆய்,Mutrum aay - எல்லாமுமாகி
தான்,Thaan - இப்படி ஸங்கல்பத்தோடு கூடி யிருக்கிற தான்
தனி,Thani - நிமித்த காரணம் வேறு அல்லாமையால் தனியனான
வித்து ஆய்,Vitthu aay - உபாதான காரணமாய்க் கொண்டு
தன்னுள்ளே,Thannullee - தனக்குள்ளே
ஓர்,Or - ஒப்பற்ற
பெரு நீ,Peru nee - மஹத்தான அர்ணவத்தை
தோற்றி,Thootri - தோன்றுவித்து
அதனுள்,Adhanul - அதிலே
கண் வளரும்,Kan valarum - நித்திரை செய்கிற
வைகுந்தன்,Vaikundhan - பரமபத நாதன்
வானோர் பெருமான்,Vaanor perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவன்
மா மாயன்,Maa Maayan - மிகவும் ஆச்சரிய குண சேஷ்டிதங்களை வுடையவன்
எம் பெருமான்,Em perumaan - எனக்கு ஸ்வாமி.
2723திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாட்டுக்கு இரண்டுவகையான அவதாரிகை கூறுவர்; முதலிற் பண்ணின நைச்சியாநுஸந்தானம் தலை மடிந்து எம்பெருமான் விஷயத்திலே சிறிது ஆபிமுக்கியத்தைக் கீழ்ப் பாசுரத்திற்காட்டின ஆழ்வார் என்னை ஏவி அடிமை கொள்ளவேணுமென்று இப்பாட்டில் பிரார்த்திக்கின்றாரென்பது ஒரு அவதாரிகை ஆழ்வார்க்கு இப்போதுண்டான ஆபிமுக்கியம் நிலைத்திருக்கவேணுமென்றும். இவரைத் துடிக்கவிட்டே சேர்த்துக்கொள்ள வேணுமென்றுங் கருதிய எம்பெருமான் முகங்காட்டாதே மறைய நிற்க, அது தாளாமல் ‘அருவாய்’ என்று பிரார்த்திக்கிறாரென்பது மற்றொரவதாரிகை.) 5
மானேய் நோக்கி மடவாளை மார்பில் கொண்ட மாதவா
கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறிந்தாய் கோவிந்தா
வானார் சோதி மணி வண்ணா மதுசூதா நீ யருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு வினையேனே –1-5-5
மான் ஏய் நோக்கி மடவாளை,Maan Aye nokki madavaalai - மானை நிகர்த்த பார்வையை யுடையவளாகிய பெரிய பிராட்டியை;
மார்பில் கொண்டாய்,Maarbil kondai - திரு மார்பிலே உடையனாய் (அது காரணமாக)
மாதவா,Madhava - மாதவனென்ற திரு நாமம் பெற்றவனாய்
கோவிந்தா,Govindha - கோவிந்தனே!
வான் ஆர் சோதி,Vaan aar sodhi - வானுலகம் இடமடையும் படியான ஒளியை யுடைய
மணிவண்ணா,Manivanna - நீலமணி போன்ற நிறமுடையவனே!
மதுசூதா,Madhusoodha - மதுவென்னு மசுரனைக் கொன்றவனே
கூனே சிதையா,Koone sidhaiya - (கூனியின்) கூன் ஒன்றே நிமிரும்படி (மற்ற ஒரு அவயவத்திற்கும் வாட்ட முண்டாகாதபடி)
உண்டை வில் நிறத்தில்,Undai vil Nirathil - சுண்டு வில்லை நிமிர்க்கிற ரீதியிலே (சிறிதும் சிரமமின்றி)
தெறித்தாய்,Theirthai - நிமிர்த்தவனே!
நீ,Nee - நீ
உன்,Un - உன்னுடைய
தேனே மலரும் திரு பாதம்,Thene malarum thiru paadham - தேனோடு கூடி மலர்கின்ற திருவடித் தாமரைகளை
வினையேன்,Vinaiyaen - பாபியான நான்
சேரும் ஆறு,Seerum aaru - கிட்டுப் படியாக
அருளாய்,Arulaay - கிருபை பண்ண வேணும்
2724திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாசுரமும் கீழ்ப்பாசுரத்தோடு ஒக்கும். கீழ்ப்பாட்டிலுள்ள ‘நீயருளாய உன் தேனே மலருந் திருப்பாதஞ் சேருமமாறு வினையேனே’ என்பதை இப் பாட்டோடு கூட்டி உரைத்தருளினர். திருக்குருகைப் பிரான்பிள்ளான். ஆதலால் கீழ்ப்பாட்டில் அவதாரிகையே இதற்குமாகும்.) (நைச்சியாநுஸந்தானம்பண்ணி அகன்றது தவிர்ந்து அணுகி அபேக்ஷித்த போதே எம்பெருமான் முகங்காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் நினைவுக்கு வந்து நலிய, திருவுள்ள முடைந்து பேசுகிறார் என்னவுமாம்) 6
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6
வினையேன்,Vinaiyaen - பாபியான என்னுடைய
வினை தீர்,Vinai theer - பாபத்தை ஒழிப்பதற்குரிய
மருந்து ஆனாய்,Marundhu aanaay - ஔஷமாயிருப்பவனே!
விண்ணோர் தலைவா,Vinnor thalaiva - நித்யஸூரி நாதனே!
கேசவா,Kesava - கேசவனே!
மனைசேர் ஆயர் குலம் முதலே,Manaicher aayar kulam mudhale - குடிசைகளில் பொருந்திய இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே!
மாமாயனே,Maamaayanee - மிகுந்த ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே!
மாதவா,Madhava - மாதவனே!
சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்,Sinai aye thalaiya mara marangal eyzhum - கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஆச்சாமரங்களை÷ழையும் (ஸ்ரீராமாவதாரத்தில்)
எய்தாய்,Eydhaay - (ஓர் அம்பினால்) துளைபடுத்தினவனே!
கிரீதரா,giridhara - ஸ்ரீதரனே!
இனையாய்,Inaiyaay - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தை யுடைவனே!
இனைய பெயரினாய்,Inaiya peyarinaay - இப்படிப்பட்ட திருநாமங்களை யுடையவனே!
என்று,Endru - என்று சொல்லி
அடியேன் நைவன்,Adiyaen naivan - நான் அழியா நின்றேன்
2725திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் ‘நைவன்’ என்ற ஆழ்வாரை நோக்கின எம்பெருமான் ‘ இனி நாம் இவர்க்கு முகங்காட்டாதிருந்தால் இவர் முடிந்துவிடக்கூடும்’ என்றெண்ணி இவர்க்கு முகங் காட்டுவதாகத் திருவுள்ளம்பற்ற, அஃதறிந்த ஆழ்வார் பின்னையும் அவனது பெருமையையும் தமது சிறுமையையும் சிந்தித்துப் பின்வாங்குதலைத் தெரிவிக்கும் இந்தப் பாசுரம்.) 7
அடியேன் சிறிய ஞானத்தன் அறிதலார்க்கும் அரியானை
கடி சேர் தண்ணம் துழாய்க் கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை
செடியார் ராக்கை யடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன் இதனின் மிக்கதோர் அயர்வுண்டே –1-5-7
சிறிய ஞானத்தன்,Siriya gnanathan - அற்ப ஞானத்தை யுடையவனாகிய
அடியேன்,Adiyen - நான்
காண்பான்,Kaanbaan - காணும் பொருட்டு
அலற்றுவன்,Alaattruvan - கூவுகின்றேனே!
இதனில் மிக்கு,Idhanil mikku - இதனிலும் மேற்பட்டு
ஓர் அயர்வு உண்டே,Or aiarvu undae - ஒரு அவிவேகமுண்டோ?
2726திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப் பாட்டின் ஸந்நிவேசத்தை ஊன்றி நோக்குமிடத்து எம்பெருமானுக்கும் ஆழ்வார்க்கும் விநோதமான வொரு ஸம்வாதம் நிகழ்ந்தமை நன்கு புலப்படும். கீழ்ப்பாட்டில் எல்லைகடந்த நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கின ஆழ்வாரை எம்பெருமான் நல்லதொருபாயத்தினால் தன்னோடு பொருந்தவிட்டுக் கொள்ளவேணுமென்று பார்த்து அவரோடே பேசத் தொடங்கினான்.) 8
உண்டாய் உலகு ஏழ் முன்னமே யுமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர் உவலை யாக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும் மனிசர்க்காகும் பீர் சிறிதும்
அண்டா வண்ணம் மண் கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே –1-5-8
மாயோனே,Maayone! - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனே!
உலகு ஏழ்,Ulagu yezl - ஏழுலகங்களையும்
முன்னமே உண்டாய்,Munnamae undaay - முற்காலத்திலே திருவயிற்றிலே வைத்தாய்;
உமிழ்ந்து,Ummilntu - அவற்றை வெளிப்படுத்தி
சிறு மனிசர்,Siru manisar - அற்ப மனிதருடைய
உவலை,Uvalai - அருவருப்பான
யாக்கை நிலை,Yaakkai nilai - உடம்பினது நிலைமையை
எய்தி,Eythi - அடைந்து
மாயையால் புக்கு,Maayaiyaal pukku - மாயையினால் இவ்வுலகில் வந்து சேர்ந்து
வெண்ணெய்,Vennney - வெண்ணெயை
உண்டாய்,Undaay - அமுது செய்தாய்;
மண் தான் சோர்ந்தது உண்டேனும்,Mann thaann soarendhadhu undaenum - (திருவயிற்றிலே) மண் சட்டிகள் மிச்சப்பட்டிருந்தாலும்
மனிசர்க்கு,Manisarkku - மனிதர்கட்டு
ஆகும்,Aagum - உண்டாகக்கூடியதான
பீர்,Beer - வெள்ளை மாந்தம்
சிறிதும்,Sirithum - அற்பமும்
அண்டாவண்ணம்,Andhavaannam - சேராதிருக்கும்படி
மண் கரைய,Mann karaiya - அந்த மண்கட்டிகள் கரைவதற்கு
நெய் ஊண் மருந்தோ,Nei oon marundho - நெய் அமுது செய்தது மருந்தோ? (அல்ல.)
2727திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமான் வெண்ணெயின் ப்ரஸ்தாவமெடுத்து ஆழ்வார் வாயை மூடுவித்தானே; அதற்குமேல் ஆழ்வார்- ‘எம்பெருமானே! திருவாய்ப்பாடியில் வெண்ணெய் உனக்குப் பரமயோக்யமென்பது மெய்யே; ஒப்பற்ற பரிவுடைய யசோதைப்பிராட்டி முதலானாருடைய வெண்ணை யாகையாலே அஃது உனக்கு அமுதமாயிருக்கும்; பாபியான என்னுடைய ஸம்பந்தம் உனக்கு விஷயமாயிருக்குமே, என்றார்; அது கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! அப்படி விஷமானாலும் நமக்குக் குறையில்லை காணும்; பூதனையின் கதை உமக்குத் தெரியாமையில்லையே; அவளுடைய விஷமும் நமக்கு அமுதமாயிற்றன்றோ; அதுபோலவே உம்மால் விஷமென்று நினைக்கப்படுவதும் எனக்கு அமுதமேயாகத் தடையில்லை’ என்று சொல்லிக் கொண்டு ஆழ்வாரது திருமேனியை மேல் விழுந்து கைக்கொள்ள 9
மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய் வீய
தூய குழவியாய் விடப்பால் வமுதா வமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன் தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தியைச் சார்ந்தே –1-5-9
தீய,Theya - கொடிய நினைவை யுடையவளாய்
அலவலை,Alavalai - பஹு ஜல்பிதங்களை யுடையவளாய்
பெரு மா வஞ்சம்,Peru maa vanjam - மிகப் பெரிய வஞ்சகையான
பேய்,Pei - பூதனை யானவள்
வீய,Veya - முடியும்படி
தூய் குழவி ஆய,Thooy kulavi aaya - பசுங்குழந்தையாகி
விடம்பால் அமுது ஆ,Vidampal amuthu aa - (அந்தம் பூதனையின்) விஷங்கலந்த பால் அமிருதமாம்படி
அமுது செய்திட்ட,Amuthu seydhita - அமுது செய்த
மாயன்,Maayan - ஆச்சரிய ஸ்வபாவனுடன்
வானோர் தனி தலைவன்,Vaanor thani thalaivan - நித்ய ஸூரிகளுக்கு அத்விதீய நாதனும்
மலராள் மைந்தன்,Malaral maindhan - திருமகள் கொழுநனும்
எவ் உயிர்க்கும் தாயோன்,Ev uyirkkum thaayon - எல்லா வுயிர்களுக்கும் தாய் போன்றவனும்
தம்மான்,Thammaan - தனக்குந்தானே ஸ்வாமியும்
என் அம்மான்,En ammaan - எனக்கு ஸ்வாமியும்
அம்மா மூர்த்தியை,Amma moorthiyai - அப்படிப்பட்ட மேலான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான பெருமானை
சார்ந்து,Saarndhu - கிட்டி
மாயோம்,Maayom - இருவரும் மாயாது வாழக்கடவோம்.
2728திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (கீழ்ப்பாட்டைத் திருச்செல்வி சார்த்தின் எம்பெருமான் “அம் மாமூர்த்தியைச் சார்ந்து மாயோம்” என்ற வுறதியையறிந்து திருவுள்ளம் பூரித்து, எப்போதும் விட்டுப் பிரியகில்லாத திருநாட்டிலே இவ்வாழ்வாரைக் கொண்டுபோய் நித்யாநுபவம் பண்ணக்கருதி, ஒரு புதுமையுஞ் செய்ய வேண்டாதபடியான பரமபதத்தையும் தமக்காக அவன் கோடிக்கப்புக்கதைக் கண்டு ஈதென்ன வ்யாதோஹமோ! என்று ஈடுபடுகிறாரிதில்.) 10
சார்ந்த விரு வல்வினைகளும் சரிந்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடராகி யகலம் கீழ் மேல் அளவிறந்து
நேர்ந்த யுருவாய் யருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே –1-5-10
சார்ந்த,Saarndha - சேர்ந்திருக்கிற
இரு வல் வினைகளும்,Iru val vinai kalum - (புண்ய பாப ரூபங்களான இருவகைப் பட்ட வல் வினைகளையும்
சரிந்து,Sarindhu - தொலைந்து
மாயம் பற்று அறுத்து,Mayam patru aruthu - அஜ்ஞாந காரியமான விஷய ஸங்கத்தையும் தவிர்த்து
தன்பால் தீர்ந்து மனம் வைக்க திருத்தி,Thanpal theerndhu manam vaikka thiruthi - தன்னிடத்திலே உறுதி கொண்டு நெஞ்சைப் பொருந்த வைக்கும்படி என்னைத் திருத்தி
வீடு திருத்து வான்,Veetu thiruthu vaan - (எனக்குத் தருவதாக மோக்ஷ ஸ்தானத்திலும் சில : திருத்தங்களைச் செய்து ஒழுங்கு படுத்துவதாக ஆரம்பித்துவிட்டான்;
ஆர்ந்த,Aarndha - பரி பூர்ணமான
ஞானம் சுடர் ஆகி,Gnaanam sudar aagi - (ஸ்வயம் ப்ரகாச) ஞான வொளியை யுடையனாய்
அகலம் கீழ் மேல் அளவு இறந்து,Agalam keel mel alavu irandhu - சுற்றும் கீழும் மேலும் எல்லை யற்று எங்கம் வியாபதித்தவனாய்
நேர்ந்த,Neerndha - மிகவும் நுட்பமான
உருஆய் அரு ஆகும் இவற்றின்,Uraay aru aagum ivattrin - அசித்தும் சித்துமாகிற இந்தப் பொருள்களுக்கு
உயிர் ஆம்,Uyir aam - அந்தர்யாமியாகி நிற்கிற
நெடு மால்,Nedumal - வ்யாமோஹமே வடிவான எம்பெருமான்.
2729திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்பார்க்கு ஒருவகைத் துன்பமும் நேரிடாதென்று பயனுரைத்துத் தலைகட்டுகிறார். எம்பெருமான் ஸேவை ஸாதிக்கவர ‘நான் அயோக்யன்’ என்ற அகன்று தாம் பட்ட வருத்தங்கள் இத் திருவாய்மொழி கற்பார்க்கு உண்டாக்கமாட்டாவென்றவாறு.) 11
மாலே மாயப் பெருமானே மா மாயனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே –-1-5-11
மாலே,Maale - பெரியோனே!
மாயம் பெருமானே,Mayam perumane - ஆச்சரிய குண நிதியே!
மா மாயனே,Ma mayane - மஹத்தான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
என்று என்று,Endru endru - என்று இங்ஙனம் பல விதங்களான திருநாமங்களைச் சொல்லி
மாலே ஏறி,Maale yēri - பித்தம் பிடித்து
மால் அருளால் மன்னு குருகூர் சடகோபன்,Maal arulaal mannu kurukoor sadagopan - ஸர்வேச்வரனது க்ருபையினால் பொருந்தப் பெற்ற திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
பால் ஏய் தமிழர்,Paal aay thamizhar - (அருளிச் செய்ததான) பாலுக்குச் சமானமான இனிமை யுள்ள தமிழில் வல்லவர்களென்ன
இசைகாரர்,Isaikaarar - இசையறிந்து பாடவல்லவர்களென்ன
பத்தர்,Pathtar - பக்திமான்களென்ன ஆகிய இவர்களல்லாரும்
பரவும்,Paravum - கொண்டாடும்படியமைந்த
ஆயிரத்தின் பால்,Aayirathin paal - ஆயிரம் பாட்டினுள்
பட்ட,Patta - தோன்றின
இவை பத்தும்,Ivai pattum - இந்தப் பத்துப்பாட்டையும்
வல்லார்க்கு,Vallarkku - ஓத வல்லவர்களுக்கு
பரிவது இல்லை,Parivathu illai - யாதொரு துக்கமும் உண்டாக மாட்டாது.
2730திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானை ஆராதிக்கு முபகரணங்களின் ஸௌகர்யம் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்படுகிறது.) 1
பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1
பரிவது இல்,Parivathu ill - துன்பமற்ற
ஈசனை,Eesanai - ஸர்வேச்வரனை
பாடி,Paadi - துதி செய்து
விரிவது,Virivadhu - ஸ்வரூபவ விகாஸத்தை
மேவல் உறுவேல்,Meval uruvel - பெற வேணுமென்கிற உறுதி யுடையவர்களே!
புரிவதுவும்,Purivadhum - (அதன் பிறகு) ஸமர்ப்பிப்பதும்
பிரிவகை இன்றி,Pirivakai indri - பிரயோஜனத்தைக் கொண்டு விலகிப் போதலின்றியே
நல் நீர்,Nal neer - நல்ல தீர்த்தத்தையே
தூய்,Thooy - ஸமர்ப்பித்து
புகை பூவே,Pugai poove - ஏதேனுமொரு தூபமும் ஏதேனுமொரு புஷ்பமுமேயாகும்.
2731திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானுக்கு இடுவதற்கு இன்னபொருள்தானென்கிற நியதியில்லையென்றார் கீழ்ப்பாட்டில்; பொருள் நியதியில்லாததுபோலவே அதிகாரி நியதியுமில்லையென்பது இப்பாசுரம்.) 2
மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2
அம்,Am - அழகிய
மது வார்,Madhu vaar - தேன் ஒழுகுகின்ற
தண்,Than - குளிர்ந்த
துழாயான்,Thuzhaayan - திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனும்
முதுவேதம் முதல்வனுக்கு,Mudhuvedham mudhalvanukku - பழமையான வேதங்களால் முழுமுதற் கடவுளாகச் சொல்லப் பட்டவனுமான பெருமானுக்கு
எது பணி,Edu pani - (தகுதியாகச் செய்யக் கூடிய) கைங்கரியம் ஏது?
என் பணி ஏது,En pani yedhu - (அதிலும்) நான் செய்யக் கூடிய கைங்கரியம் ஏது?
என்னாததுவே,Ennaathadhuve - என்று சிந்தியாமலிருப்பதே
ஆன் செய்யும் ஈடு,Aan seyyum edu - அடிமை செய்தற்கொப்பாகும்.
2732திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் விஷயத்தில் அடிமை செய்கைக்கு அதிகாரி நியதியில்லை யென்று காட்டப்பட்டது கீழ்ப்பாட்டில்; அஃது எதனாலென்ன; அடிமை செய்கையில் விருப்பமுடையவர்களை ஜாதி குணம் தொழில் முதலியவற்றால் நிஹீநரென்று கைவிடும் ஸவபாவம் எம்பெருமானுக் கில்லாமையாலே என்கிறது இப்பாட்டில்) 3
ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3
என் மனன்,en manan - எனது மனமானது
ஈடும் எடுப்பும் இல்,eedum eduppum el - குற்றம் பார்த்துத் தள்ளி விடுதலும் குணம் பார்த்துக் கைக் கொள்ளுதலுமில்லாத
ஈசன்,esan - ஸர்வேச்வரனுடைய
மாடு,maadu - ஸமீபத்தை
விடாது,vidadhu - விடுகிறதில்லை
என் நா,en naa - எனது நாவானது
அவன்,avan - அந்த ஸர்வேச்வரன் விஷயமான
பாடல்,paadal - துதிகளை
பாடும்,paadum - பாடுகின்றது;
என் அங்கம்,en angam - எனது உடம்பு
அணங்கு ஆடும்,anangu aadum - தைவாவேசங்கொண்டது போல் ஆடுகின்றது.
2733திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.) 4
அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4
அணங்கு என ஆடும்,Anangu Ena Aadum - தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற
என் அங்கம்,En Angam - எனது சரீரம்
வணங்கி வழிபடும்,Vanangi Vazhipadum - சேவித்து ஆராதிக்கும்படி நின்ற
ஈசன்,Eesan - எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால்
அமரர்,Amarar - நித்திய ஸூரிகள்
பிணங்கி,Pinangi - பரஸ்பர விவாத் செய்து
பிதற்றும்,Pithatrum - பிதற்றும்படி யாயுள்ள
குணம் கெழு,Gunam Kelu - பல திருக்குணங்கள் பொருத்திய
கொள்கையினான்,Kolkaiyinaan - கோட்பாட்டை யுடையவன்.
2734திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிது போது உண்டாய் விடுகை யன்றியே நித்ய ஸூரிகளுக்குப் போலே நிரந்தர யாத்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.நமக்கு ‘அநந்ய போக்யத்வம்‘ என்பதாக ஒரு ஸ்வரூபமுண்டு, அதாவது எம்பெருமானைத் தவிர்த்து மற்ற அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுவதாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் விஷயத்திலே அவன் அமுதமாகவே யிருப்பான் என்கிறது) 5
கொள்கை கொளாமை இலாதான் எள்கல் இராகம் இலாதான் –
விள்கை விள்ளாமை விரும்பி –உள் கலந்தார்க்கு ஓர் அமுதே –1-6-5
கொள்கை,Kolgai - குணம் பார்த்துக் கொள்ளுதலும்
கொளாமை,Kolaamai - குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும்
இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய்
எள்கல்,Elgal - கைவிடுகைக்கு அடியான மனநெகிழ்ச்சியும்
இராகம்,Raagam - கைக் கொள்ளுதற்கு அடியான ஆசையும்
இலாதான்,Ilaadhaan - இல்லாதவனாய்
விள்கை,Vilgai - வேறு பிரயோஜனங்களைக் கொண்டு விலகிப் போவதையும்
விள்ளாமை,Villamai - தன்னையே விரும்பி விடாதிருப்பதையும்
விரும்பி,Virumbi - எதிர் பார்த்து
உள் கலந்தார்க்கு,Ul Kalantharkku - (விண்டு போகாமல்) தன்னில் கலந்தவர்கட்கு
ஓர் அமுது,Or Amuthu - ஒப்பற்ற அமுதமாயிருப்பன்
2735திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில்* விள்கை யிள்ளாமை விரும்பி* என்று சொன்ன சொற்போக்கிலே பிரயோஜநாந்தர பரர்கள் ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால், ஐயோ உள்கலந்தார்க்கு ஓரமுதாயிருந்து மெம்பெருமானை விட்டுப் பிரயோஜநாந்தர பரர்களாய் ஆபாஸமான அமுதத்தைப் பெற்றுக் கொண்டு விலகிப் போவாரும் சிலரே! என்று தேவர்களை நிந்திப்பதிலே நோக்காகச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6
அமுதம் அமரர்கட்கு ஈந்த -நிமிர் சுடராழி நெடுமால்
அமுதிலும் ஆற்ற இனியன் நிமிர் திரை நீள் கடலானே –1-6-6
அமரர்கட்கு,Amararkatku - தேவர்கட்கு
அமுதம் ஈந்த,Amutham eentha - அமிர்தத்தைக் கொடுத்தவனாய்
திமிர் சுடர் ஆழி,Thimir Sudar Aazhi, திருச் சக்கரம்m Thiru Chakkaram - வளர்கின்ற ஒளியை யுடைய திருச் சக்கரத்தை யுடையனாய்
நெடு மால்,Nedumaal - எல்லை கடந்த பெருமையை
நிமிர் திரை நீள் கடலான,Nimir Thirai Neel Kadalaa - அலை யெறிகின்ற விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளி
அமுதிலும்,Amuthilum - (அக்கடலிலுண்டான) அமிர்தத்தைவிட
ஆற்ற இனியன்,Aatra Iniyan - மிகவும் போக்யன்.
2736திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இங்ஙனம் பரம போக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக் கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்) 7
நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்-தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள் கடலைக் கழிமினே –1-6-7
நீள் கடல் சூழ்,Neel Kadal Soozh - நீண்ட கடலினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கா புரிக்கு
கோன்,kon - தலைவனாயிருந்த இராவணனுடைய
தோள்கள்,Tholgall - இருபது தோள்களுடையும்
தலை,Thalai - பத்துத் தலைகளையும்
துணி செய் தான்,Thuni Sey dhaan - அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய
தாள்கள்,Thaalkal - திருவடிகளை
தலையில் வணங்கி,Thalaiyil Vanangi - தலையாலே வணங்கி
நாள் கடலை,Naal Kadalai - காலாமகிய கடலை
கழியின்,Kazhiyin - தாண்டுங்கள்.
2737திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (ஸ்ரீராமபிரானுடைய வீரசரிதத்தை யநுஸந்தித்து இதர விஷயப் பற்றுகளைத் தவிரவே, அவன்றானே இடையூறுகளைப் போக்கி நித்ய கைங்கர்யத்தைத் தந்தருள்வனென்கிறார்.) 8
கழிமின் தொண்டீர்காள் கழித்துத் தொழுமின் அவனைத் தொழுதால்
வழி நின்ற வல்வினை மாள்வித்து அழிவின்றி யாக்கம் தருமே –1-6-8
தொண்டீர்கள்,Thondirkal - தொண்டர்களே!
கழிமின்,Kazhimin - விஷயாந்தர ஸங்கத்தைக் கழித்து விடுங்கள்
கழித்து,Kazhithu - அதனை கழித்து விட்டு
அவனை,Avanai - அப் பெருமானை
தொழுமின்,Thozhumin - தொழுங்கள்;
தொழுதால்,Thozhudhaal - தொழுத மாத்திரத்தினால் (அவன்)
வழி நின்றி,Vazhi Nindri - ஜன்ம பரம்பரையாய்த் தொடர்ந்து நின்ற
வல்வினை,Valvinai - வலிய பாவங்களை
மாள்வித்து,Maalvitthu - ஒழித்து
அழிவு இன்றி,Azhivu Indri - சாச்வதமான
ஆக்கம்,Aakkam - முக்கிய ஸம்பத்தை
தரும்,Tharum - தந்தருள்வன்
2738திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் தன்னைப் பற்றின மாத்திரத்திலே இப்படி இடையூறுகளை யெல்லாம் போக்கிப் பரம புருஷார்த்த்த்தையும் தந்தருளக் கூடுமோவென்ன பிராட்டி அருகேயிருக்கும்போது எதுதான் செய்யக்குறை? என்கிறார்.) 9
தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்
பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9
அ அரு பயன் ஆய,A Aru Payan Aaya - அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை
திருமகனார் தனிகேள்வன்,Thirumaganaar Thanikelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு
தரும்,Tharum - (பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்;
பெருமை உடைய பிரானார்,Perumai Udaya Piranar - லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன்
இருமை வினை,Irumai Vinai - இருவகைப் பட்ட (புண்ய பாப ரூபமான) கருமத்தை போக்குவான்.
2739திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமான் பிராட்டியோடுகூடி அடியார்க்குக் காரியஞ் செய்தருள்வது தாமதமாக நடைபெறுமோ என்ன; இல்லை ஒரு நொடிப்பொழுதிலே நடைபெறுமென்கிறது இப்பாட்டு.) 10
கடிவார் தீய வினைகள் -நொடியாரும் அளவைக் கண்
கொடியாவடு புள்ளுயர்த்த-வடிவார் மாதவனாரே –1-6-10
அடு,Adu - பகைவரை அழிக்கின்ற
புள்,Pul - கருடப் பறவையை
கொடி ஆ உயர்த்த,Kodi A Uyartha - த்வஜமாக எடுத்தவரும்
வடிவு ஆர்,Vadivu Aar - விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யடையவருமான
மாதவனார்,Madhavanaar - லக்ஷ்மீபதியானவர்
தீய வினைகள்,Theeya Vinaigal - கொடிய
நொடி ஆகும் அளவை கண்,Nodi Aagum Alavai Kan - ஒரு நொடிப் பொழுதிற்குள்ளே
கடிவார்,Kadivaar - போக்கி யருள்வார்.
2740திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் மீண்டும் இந்த ஸம்ஸாரநிலத்தில் வந்து பிறக்கப் பெறார்களென்று பயன்சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
மாதவன் பால் சடகோபன் தீதவம் இன்றி யுரைத்த
ஏதமில் ஆயிரத்து இப்பத்து ஓத வல்லார் பிறவாரே –1-6-11
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
மாதவன் பால்,Madhavan Paal - லக்ஷ்மீ நாதனான எம்பெருமான் பக்கலில் (பக்தி யுக்தராய்)
தீது அவம் இன்றி உரைத்த,Theethu Avam Indri Uraiththa - தனது மேன்மையைப் பார்த்து உதாஸீநனாயிருத்தல் அடியாருடைய குற்றங்களைப் பார்த்துக் கைவிட்டொழிதல் ஆகிய இருவகைக் குற்றமும் எம்பெருமானுக்கு இல்லை யென்பதை யெடுத்துரைத்த
ஏதம் இல் ஆயிரத்து,Yetham el Aayirathu - வழுவற்ற இத் திருவாய் மொழியாயிரத்தில்
இ பத்து,E Pattu - இப் பத்துப் பாசுரஙக்ளையும்
ஓத வல்லார்,Otha Vallar - (குருமுகமாக) அதிகரிக்க வல்லவர்கள்
பிறவார்,Piravaar - மீண்டும் பிறந்து வருந்த மாட்டார்கள்
2741திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமானுடைய போக்யதையை ஆழ்வார் தாம் தமது திருவுள்ளத்தினால் முந்துற அநுபவித்து அதனை வாய்விட்டுப் பாசுரமிட்டுப் பேசுவதற்கு முன்பே இங்ஙனம் பரம போக்யமானவனை ஆச்ரயித்து வைத்து அந்தோ! அற்ப பலனாகிய கைவல்யத்தை அபேக்ஷிப்பதே! என்று கேவலர்களை நிந்தித்து, அவர்களுடைய புன்மையைப் பாராதே அவர்கள் அபேக்ஷித்ததைக் கொடுப்பதே!” என்று எம்பெருமானது நீர்மையைக் கண்டு வியந்து கூறுவது இப்பாட்டு) 1
பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1
பிறவி துயர் அற,Piravi Thuyar Ara - ஜனன மரணங்களினால் வருந் துன்பம் மாத்திரம் நீங்குகைக்காக
ஞானத்துள் நின்று,Gnanathul Nindru - ஆத்மாவலோகந மாகிற கைவல்யோபா ஸநத்தில் ஊன்றி
துறவி சுடர் விளக்கம் தலைப் பெய்வார்,Thuravi Sudar Vilakkam Thalaipeyvaar - ஸலக பாதிகளையும் விட்டவனான ஸ்வயம் ப்ரகாசனான ஆத்மாவினுடைய
ஸாக்ஷாத்காரத்தைப் பெற விரும்புகின்ற கைவல்யார்த்திகள்.

அறவனை,Aravanai - பரம தர்மிஷ்டனாயும்
ஆழி படை,Aazhi Padai - திருவாழி யாழ்வானை ஆயுதமாக வுடையனாயும்
அந்தணனை,Anthananaai - பரம பரிசுத்தனாயுமிருக்கின்ற எம்பெருமானை
மறவியை இன்றி,Maraviyai Indri - (தாம் விரும்பிய பலனில்) மறப்பில்லாமல்.
மனத்து வைப்பார் ஏ,Manathu Vaippar ye - உபாஸிக்கின்றார்களே!
2742திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் ‘ஐயோ! கைவல்யார்த்திகள் எம்பெருமானைப் பணிந்து க்ஷûத்ரமான பலனைப் பெற்றுப்போவதே!’ என்று அவர்களை நிந்தித்தார்; அவன்றன்னையே ஆசைப்பட்டிருக்குமவர்கள் திறத்தில் அவன் இருக்கும்படியை அருளிச் செய்கிறாரிப் பாட்டில்) 2
வைப்பாம் மருந்தாம் அடியாரை வல்வினைத் துப்பாம் புலன் ஐந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கு நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப்பாலவன் எங்கள் ஆயர் கொழுந்தே –1-7-2
அடியரை,Adiyarai - தன்னடியாரை
வல்வினை,Valvinai - வலிய கருமங்களினுடைய
துப்பு ஆம்,Thuppum Aam - மிடுக்கின் வழியிலே ஸஞ்சரிக்கிற
புலன் ஐந்தும்,Pulan Aindhum - பஞ்சேந்திரியங்களிலும் அகப்பட்டு
துஞ்சக் கொடான்,Thunjak Kodaan - நசித்துப் போம்படி விட்டுக் கொடாதவன்
வைப்பு ஆம்,Vaippu Aam - (அவர்களுக்குப் புருஷர்த்தமான) நிதியுமாய்
மருந்து ஆம்,Marundhu Aam - (விரோதி நிரஸந முகத்தால்) மருந்துமாவன்;
அவன்,Avan - அந்த எம்பெருமான்
எப்பால்,Eppaal - எவ்விடத்துமுள்ள
யவர்க்கும்,Yavarkkum - யாவர்க்கும்
நலத்தால் உயர்ந்து உயர்ந்து,Nalathaal Uyarndhu Uyarndhu - ஆனந்த குணத்தினால் மிகவும் உயர்ந்து
அப்பாலவன்,Appaalavan - வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதபடி அப்புறப் பட்டவனாய்
எங்கள்,Engal - எங்களுக்கு உரியவனான
ஆயர் கொழுந்து,Ayar Kolunthu - ஆயர் தலைவன்
2743திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இரண்டாம் பாட்டில் அநந்யப்ரயோஜநாதிகாரிகள் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும்படியையருளிச்செய்தார்; ‘ ஆக இவ்விரண்டு வகுப்பிலே நீர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்?’ என்று ஆழ்வாரைச் சிலர் கேட்க; நான் அநந்ய ப்ரயோஜநனாய் அவனைப் பற்றினேன்’ என்று நேரே சொல்ல மாட்டாமல் ‘அவனை அநுபவித்துக் கொண்டே யிருக்கச் செய்தே விரோதிகள் தன்னடையே கழிந்து போகப்பெற்றவன் நான்’ என்றாரிதில்) 3
ஆயர் கொழுந்தாய் அவரால் படை யுண்ணும் மாயப்பிரானை என் மாணிக்கச் சோதியை
தூய வமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேனே–1-7-3
ஆயர் கொழுந்து ஆய்,Ayar Kolunthu Aai - இடையர் தலைவானான கோபால க்ருஷ்ணனாகிய
அவரால்,Avaraal - அவ் விடையர்களாலே
புடை உண்ணும்,Putai Unnum - வெண்ணெய்க் களவு முதலியவற்றிற்றாக அடி யுண்கிற
மாயம் பிரானை,Maayam Piraanai - மாயச் செயல் வல்லவனும்
என்,En - எனக்கு விதேயனும்
மாணிக்கம் சோதியை,Maanikkam Sodhiyai - மாணிக்கம் போல் ஒளி பெற்ற வடிவை யுடையவனும்
தூய அமுதை,Thooya Amudhai - பரிசுத்தமான அம்ருதம் போன்றவனுமான பெருமானை
பருகி பருகி,Parugi Parugi - இடையறாமல் அநுபவித்து
என்,En - என்னுடைய
மாயம்,Maayam - பிரகிருதியின் காரியமாய் வருகின்ற
பிறவி,Piravi - பிறவியினாலுண்டானதாகிய
மயர்வு,Mayarvu - அஜ்ஞானத்தை
அறுத்தேன்,Aruthen - போக்கிக் கொண்டேன்.
2744திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (கீழ்ப்பாட்டில் “என் மாயப்பிறவி மயர்வுறுத்தேன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரை நோக்கி ‘ஆழ்வீர்! மாயப்பிறவி மயர்வு அறவேணு மென்பதுதானே உமது உத்தேச்யம்; அது நிறைவேறிவிட்டதாக நீரே சொல்லி விட்டீரே; இனி நீர் ஓய்ந்திருக்கமன்றோ’ என்று சிலர் சொல்ல, எம்பெருமானை எங்ஙனம் நாம் விடுவேனென்கிறார்) 4
மயர்வற என் மனத்தே மன்னினான் தன்னை -உயர்வினையே தரும் ஒண் சுடர்க் கற்றையை
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தை என் இசைவினை என் சொல்லி யான் விடுவேனோ –1-7-4
மயர்வு அற,Mayarvu Ara - அஜ்ஞானம் தொலையும்படி
மன் மனத்தை,Man Manathai - எனது நெஞ்சிலே
தன்னினான் என்னை,Thanninaan Ennai - நித்ய வாஸஞ் செய்பவனாய்
உயர்வினையே தரும்,Uyarvinaiyae Tharum - (எனக்கு) ஞான பக்தி வளர்த்தியையே தந்தருள்கின்றவனாய்
ஒண் சுடர் கற்றையை,On Sudar Katraiyai - அழகிய தேஜோ ராசியாய்
அயர்வு இல் அமரர்கள்,Ayarvu Il Amarargal - மறப்பில்லாத நித்ய ஸூரிகளுக்கு
ஆதிகொழுந்தை,Aadhi Kolunthai - முதல் தலைவனாய்
என் இசைவினை,En Isaivinai - தன்னைக் கிட்டுமாறு எனக்கு இசைவை விளைவித்தவனான எம்பெருமானை
யான்,Yaan - அடியேன்
என் சொல்லி விடுவேனோ,En Solli vidueeno - என்ன குறையைச் சொல்லி விடக் கடவேனோ? விடமாட்டேன்.
2745திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இதுவும் கீழ்ப்பாட்டுக்கு சேஷ பூதம். திருவாய்ப்பாடியிலிடைப் பெண்கள் கண்ணபிரானை விட்டுப் பரமபதத்தை விரும்பினால் நானும் எம்பெருமானை விட்டுப் புறம்புபோவே னென்கிறார்) 5
விடுவேனோ என் விளக்கை என் ஆவியை -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்ளே விடவே செய்து விழிக்கும் பிரானையே –1-7-5
என் விளக்கை,En Vilakkai - எனக்கு எல்லாப் பொருள்களையும் விளக்கிக் காட்டுகிற விளக்குப் போன்றவனும்
என் ஆவியை,En Aaviyai - என் உயிரா யிருப்பவனும்
நடுவே வந்து,Naduve Vandhu - திடீரென்று ஒரு நாளிலே
உய்யக் கொள்கின்ற நாதனை,Uyyak Kolkindra Naadhanai - உஜ்ஜிவிப்பிக்னற ஸ்வாமியும்
தொடுவே செய்து,Toduve Seydhu - கபடச் செயல்களையே செய்து
இள ஆய்ச்சியர் கண்ணினுள்,Ila Aaychiyar KanniNul - இளமை தங்கிய இடப் பெண்களின் கண்களிலே
விடவே செய்து,Vidave Seydhu - விடத் தனமே செய்து
விழிக்கும் பிரானை,Vizhikkum Piranai - கண் கலப்புச் செய்கிற பிரபுவுமாகிய எம்பெருமானை
விடுவேனோ,Viduveno - விடவல்லேனோ? (விடமாட்டேன்)
2746திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (ஆழ்வீர்! நீர் அவனை விடமாட்டாதொழியினும் அவன்றான் உம்மை விடில் என்செய்வீரென்ன; அவன் விடும் படியாக நான் ஸம்மதிப்பேனோ வென்கிறார்.) 6
பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6
பிரான்,Piran - உபகாரகனும்
பெருநிலம்,Perunilam - (வராஹாவதாரத்தில்)
கீண்டவன்,Keendavan - பெரிய பூமியைப் பிளந்தெடுத்தவனம்
பின்னும்,Pinnum - பின்னப்பட்ட (தொடுக்கப்பட்ட)
வீராய்,Veeraay - பரிமளம் பொருந்திய
துழாய் மலர்,Thuzhaa Malar - திருத்துழாய் மாலையாலே
வேய்ந்த,Veyndha - சூழப்பட்ட
முடியன்,Mudiyan - திருமுடியை யுடையவனும்
மராமரம் எய்த,Maramaram Eydha - ஏழு மராமரங்களை (ஸூ க்ரீவனுடைய நம்புதலுக்காக ஓர் அம்பினால்) எய்தவனுமான
மாயவன்,Maayavan - ஆச்சரிய பூதன்
என் உள்,En Ull - எனது நெஞ்சினுள்ளே
இரான் எனில்,Iran Enil - எழுந்தருளியிரானாயின்
பின்னை,Pinnai - பின்பு
யான்,Yaan - நான்
ஒட்டுவேனோ,Ottuveno - தரித்திருப்பேனோ?
2747திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (எம்பெருமான் தம்மை ஒருநாளும் விடமாட்டானென்பதை வற்புறுத்தி யருளிச் செய்கிறாரிதில். அவன் தானாகவே வந்து கைக் கொண்டவனாயிருந்து வைத்து எங்ஙனே விட்டு நீங்க வல்லானென்கிறார்.) 7
யான் ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன் தான் ஒட்டி வந்து என் தனி நெஞ்சை வஞ்சித்து
ஊனொட்டி நின்று என்னுயிரில் கலந்து இயல் வானொட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே–1-7-7
யான்,Yaan - நான்
ஒட்டி,Otti - இசைந்து
என்னுள்,Ennul - என்னுள்ளே
இருத்துவம் என்றிலன்,Iruthuvam Endrilan - (எம்பெருமானை) இருத்துவதாக நினைத்திலேன்;
தான்,Thaan - தானே
ஒட்டிவந்து,Otti Vandhu - பிரதிக்ஞை பண்ணி வந்து
என் தனி நெஞ்சை,En Thani Nenjai - என்னுடைய ஸ்வதந்திரமான மனத்தை
வஞ்சித்து,Vanjithu - நானறியாதபடி வசீகரித்து
ஊன் ஒட்டி,Oon Otti - சரீரத்திலே பொருந்தி
நின்று,Nindru - புகுந்து நின்று
என் உயிரில் கலந்து,En Uyiril Kalanthu - எனது ஆத்மாவில் கூடி
இயல்வான்,Iyalvaan - இப்படி நடக்கிற ஸர்வேச்வான்
இனி என்னை நெகிழ்க்க,Ini Ennai Nekkilka - இனி என்னை விட்டு நீங்க
ஒட்டுமோ,Ottumo - ஸம்மதிப்பனோ?
2748திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (அகடிதகடநா ஸமர்த்தனான எம்பெருமான்றன்னாலும் இனியொரு நாளும் வேறுபடுத்த வொண்ணாதபடி எனது நெஞ்சே அங்கே ஆழங்காற்பட்டு விட்டதென்கிறார். இதற்கு முன்புள்ள காலமெல்லாம் நான் அவனை விட்டு நெகிழ்ந்தவனே யாகிலும் இனி அங்ஙனம் ஒரு நாளும் நெகிழ மாட்டேன்; எம்பெருமான் தனது ஸ்வாததந்திரியத்தினாலே ஒருகால் என்னை நெகிழ விட்டாலும் விடக் கூடும். தன் பக்கலிலேயே ஊன்றிக் கிடக்கின்ற எனது நெஞ்சை ஒருவகையாலும் அப்புறப்படுத்த அவன் றன்னாலுமாகாது.) 8
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8
பிள்ளை,Pillai - நப்பின்னைப் பிராட்டியினுடைய
நெடு,Nedu - பெரிய
பணை,Panai - சற்றுடைத்தான
தோள்,Thol - தோள்களோடே அணையப் பெற்றதனாலுண்டான
மகிழ பீடு உடை,Magizha Peedu Udai - ஆநந்தப் பெருமையை உடையவனும்
முன்னை அமரர்,Munnai Amarar - பூருவர்களான நித்ய ஸூரிகளுக்கு
முழுமுதலான்,Muzhumudhalaan - ஸகலமும் தானே யிருக்கப் பெற்றவனுமான எம்பெருமான்
என்னை,Ennai - (ஒருகால்) என்னைப் பிரிய
நெகிழ்க்கிலும்,Nekkilum - விட்டாலும்
என்னுடை,Ennudai - என்னுடைய
நல்நெஞ்சம் தன்னை,Nalnenjam Thannai - நல்ல நெஞ்சை
அகல்விக்க,Akal Vikka - (தன்னிடத்தினின்றும்) பிரிக்க
தானும்,Thaanum - ஸர்வ சக்தி யுக்தனான தானும்
இனி,Ini - இனி மேல்
கில்லான்,Killaan - ஸமர்த்தனாக மாட்டான்.
2749திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (“என்னுடைய நன்னெஞ்சந் தன்னை யகல்விக்கத் தானுங்கில்லான்” என்று சொல்ல வேண்டிய ப்ரஸக்தி தானுமில்லையே; எனது நெஞ்சும் அவனுஞ்சேர்ந்து ஒரு திரவியம் என்னலாம்படி ஒற்றுமை பெற்றுள்ள விதனைப் பிரிக்கும் வகை தான் உண்டோவென்கிறார்.) 9
அமரர் முழு முதல் ஆகிய வாதியை -அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை
அமர வழும்பத் துழாவி என்னாவி அமரத் தழுவிற்று இனி யகலுமோ –1-7-9
அமரர்,Amarar - நித்ய ஸூரிகளுடைய
முழு,Muzhu - ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி ஆகிய எல்லாவற்றிற்கும்
முதல் ஆகிய,Mudhal Aagiya - ஹேதுவாய்க் கொண்டு
ஈந்த,Eenth - (கடல் கடைந்து எடுத்துக்) கொடுத்தவனும்,
ஆயர் கொழுந்தை,Ayar Kolundhai - இடையர்களுக்குத் தலைவனுமான எம்பெருமானை
என் ஆவி,En Aavi - எனது ஆத்மாவானது
அமர அழும்ப துழவிய,Amara Azhumba Thuzhaviya - மிகவும் நெருக்கமாகக் கலசி
ஆதியை,Aadhiyai - பிதானானவனும்
அமரர்க்கு,Amaranukku - (இந்திராதி) தேவர்களுக்கு
அமுது,Amuthu - (அவர்கள் விரும்பிய) அம்ருதத்தை
அமர,Amara - இனி மேல் ஒருவராலும் பிரிக்க வொண்ணாதபடி
தழுவிற்று,Thazhuvirru - உகந்து கலந்தது;
இனி அகலுமோ,Ini Akalumo - இனி மேல் பிரிய வழியுண்டோ?
2750திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) ( என்னோடு கலந்த எம்பெருமானுடைய திருக் குணங்களை எத்தனை காலம் அனுபவித்தாலும் த்ருப்தி பிறப்பதில்லை யென்கிறார்) 10
அகலில் அகலும் அணுகில் அணுகும் புகலும் அரியன் பொருவல்லன் எம்மான்
நிகரில் அவன் புகழ் பாடி இளைப்பிலம் பகலும் இரவும் படிந்து குடைந்தே –1-7-10
அகலில்,Agalil - (தன் பக்கலில் அற்ப பலன்களைப் பெற்றுக் கொண்டு சிலர்) பிரிந்து போனால் (அவர்கள் விஷயத்தில்)
அகலும்,Agalum - வருத்தத்தோடே பிரிந்திருப்பவனும்
அணுகில்,Anukil - (சிலர் அநந்ய ப்ரயோஜநராய்) விட மாட்டாதே யிருந்தால்
அணுகும்,Anukum - (அவர்களோடு) ஒரு நீரா கலக்குமவனும்
புகலும் அரியன்,Pugalum Ariyan - (பிரதிகூலர்க்கு) அணுகவுமொண்ணாதவனும்
பொருவு அல்லன்,Poruvu Allan - (அநுகூலர்க்குத்) தடையற்றவனும்
எம்மான்,Emmaan - எனக்கு ஸ்வாமி யானவனும்
நிகரிலவன்,Nikarilavan - (ஆக இப்படிகளாலே) ஒப்பில்லாதவனுமான ஸர்வேச்வரனுடைய
புகழ்,Pugazh - திருப்புகழ்களை
பகலும் இரவும்,Pagalum Iravum - எப்போதும்
படிந்து,Padindhu - உட் புகுந்து
குடைந்து,Kudainthu - எங்கும் கலந்து
பாடி,Paadi - பாடி
இளைப்பிலம்,Ilai Pillam - ஓவுதல் உண்டாகிறிலோம்.
2751திருவாய்மொழி || 1-7–பிறவித் துயரற (ஆராதிப்பார்க்கு மிக இனியன்) (இத்திருவாய்மொழிதானே இது கற்றவர்களினுடைய ப்ராப்தி ப்ரதி பந்தகங்களை வேரறுக்குமென்று பலன்சொல்லித் தலைக்கட்டுகிறது.) 11
குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –1-7-11
வண்டு,Vandu - வண்டுகள்
குடைந்து,Kudainthu - உட்புகுந்து
உண்ணும் துழாய்,Unnum Thuzhaay - மதுவுண்ணப் பெற்ற திருத்துழாய் மாலையை
முடியானை,Mudiyaanai - திரு முடியிலணிந்த பெருமானை
அடைந்த,Adaintha - பணிந்த
தென் குருகூர் சடகோபன்,Then Kurugoor Sadagopan - திருநகரியிலவதரித்த ஆழ்வாருடைய
மிடைந்த சொல் தொடை ஆயிரத்து,Midaindha Sol Todai Aayirathu - நெஞ்கின சொல் மாலையாகிய ஆயிரத்தினுள்ளே
இ பத்து,E Pattu - இந்தத் திருவாய்மொழி
நோய்களை உடைத்து ஓடு விக்கும்,Noygalai Udaithu Odu Vikkum - ப்ராப்தி ப்ரதி ப்ந்தகங்களை உருக் குலைந்து ஓடும்படி செய்திடும்.
2752திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக் குணமுடையனாய்ப் பரிமாறும் வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது.) 1
ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1
Needu Nindra Avai - நித்ய ஸூரிகளா யிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு
Soodum - கூடிப் பரிமாறுகிற
Ammaan - ஸ்வாமி
Pul yeri - பெரிய திருவடி மேற் கொண்டு
Odum - (விரைந்து) ஓடுவன்;
Than Thuzhaay - குளிர்ந்த திருத் துழாய் மாலையை
Soodum - சாத்திக் கொள்வன்.
2753திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) ( கீழ்ப்பாட்டிற் கூறியபடி ஸ்ரீ வைகுண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமே யல்லாமல் அங்கு நின்றம் இந் நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது. 2
அம்மானாய்ப் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மா வாய் கீண்ட செம்மா கண்ணனே –1-8-2
Ammaan Aay - ஸ்வாமியாய் இருந்து
Vem - உக்கிரமான
Maa - குதிரையின் வடிவாக வந்த கேசி யென்னுமசுரனை
Vaai Keenda - வாய் கிழித்தவனும்
Sem Maa - சிவந்து பெரிய திருக்கண்களை யுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன்
Pinnum - பின்னையும்
Em Maanpum Aanaan - எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான்.
2754திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இரட்டைப் பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தை கட்கும் முலை கொடுக்கப் பாங்காக நடுவே கிடக்குமா போலே நித்ய ஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந் தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச் செய்கிறார்) 3
கண்ணாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே –1-8-3
Mannor - மண்ணுலகத்தார்க்கும்
Vinorukku - விண்ணுலகத்தார்க்கும்
Endrum - எப்போதும்
Kan Aavaan - கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)
Than Aar - குளிர்ச்சி நிறைந்த
Vengadam - திருவேங்கடமென்கிற பெயரையுடைய
Vinor Verrpan - நித்ய ஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன்.
2755திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்) 4
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4
Onru Verpai - (கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை
Eduthu Orkam Indriye - இளைப்பிலாமல்
Nirukum - நின்றருளின
Ammaan - எம்பெருமானுடைய
Seer - திருக் குணத்தை
Vaigal - நாள் தோறும்
Karpan - பேசக் கடவேன்.
2756திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நான் எம்பெருமானது திருக்குணத்தையே விரும்புவதுபோல அவனும் என்னுடைய சரீரத்தையே விரும்பாநின்றானென்கிறார். திருவாய்ப்பாடியில் வெண்ணெய் அவனுக்கு எவ்வளவு போக்யமாயிருக்கிறதோ அவ்வளவு போக்யாமயிருந்தது என்னுடைய சரீரமவனுக்கு என்றவாறு) 5
வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5
Vaigalum - எப்போதும்
Vennai - வெண்ணெயை
Kai Kalanthu - கை உள்ளளவும் நீட்டி
Undaan - (வாரி யெடுத்து) அமுது செய்தவன்
Poyinal Vaadhu - மெய்யாகவே
En Mei - எனது மேனியிலே
Kalanthaan - ஒன்று படக் கூடினான்
2757திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னைத் தனக்கே அடிமைப் படுத்திக் கொண்டானென்கிறார்.) 6
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —
புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6
Kalandhu - ஒரு நீராகக் கலந்து
En Aavi - எனது ஆத்மாவினுடைய
Nalam - அடிமைத் தனமாகிய நன்மையை
Kolnaadan - தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமி யானவன்
Pulan Kol Maan Aay - (கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோ ஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை யுடையவனாய்
Nilam Kondaan - (மூவடி) நிலத்தை பிக்ஷை யேற்றுக் கொண்டான்.
2758திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ச்லேஷிப்பதற்காக அதற்கிடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே என்னோடு கலவிசெய்ய விரும்பி என்னுடைய பாபம் முதலிய பிரதிபந்தமங்களைப் போக்கியருளினானென்பது கருத்து) 7
கொண்டான் ஏழ் விடை உண்டான் ஏழ் வையம்
தண் தாமம் செய்து என் எண் தானானானே –1-8-7
Ezhvidai - ஏழு விருதுகளையும்
Kondaan - (நப்பின்னைக்காக) வலி யடக்கினவனும்
Ezh Vaiyam - ஏழுலகங்களையும்
Undaan - (பிரளங் கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான்
Than Thaamam - குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி
En Endhaan Aanaan - நான் எண்ணின எண்ணத்திற்குப் பிரதியாகத்தான் சில எண்ணங்கள் கொண்டான்.
2759திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (என்னை யகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை யென்கிறார்) 8
ஆனான் ஆனாயன் மீனோடு ஏனமும்
தான் ஆனான் என்னில் தானாய சங்கே –1-8-8
Aan Aayan Aanaan - பசுமேற்கும் இடையனானான்
Meenodu Enamum Thaan Aanaan - மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான்.
Ennil - என்னுமிடத்து
Thaan Aaya - தானெடுத்த அவதாரங்கள்
Sange - சங்கமென்னும் கணக்கை யுடையனவே. (அபாரமென்றபடி)
2760திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவனென்கிறார்) 9
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்
எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9
Engum - எவ்விடத்தும்
Thaanaaya - (அவதார முகத்தால்) தானே வியாபித்த
Nangal Naadhan - எம்பெருமான்
Am Kaiyil - அழகிய திருக் கைகளில்
Sangu Chakkaram - திருவாழி திருச் சங்குகளை
Kondaan - தரித்துள்ளான்.
2761திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இப்படி எனக்காக எண்ணிறந்த திருவவதாரங்களைப் பண்ணியருளின இவருடைய ஆச்ரித வாத்ஸல்யத்தைப் பேசவேண்டில், நானோ பேசுவது? கடலோதங்ளர்த்தாப்போலே கிளர்ந்துள்ள வேதங்களே யன்றோ பேசவேண்டுமென்கிறார்.) 10
நாதன் ஞாலம் கொள் பாதன் என்னம்மான்
ஓதம் போல் கிளர் வேத நீரானே –1-8-10
Naadhan - ஸகல லோக நாதனும்
Gnalam Kolpaadan - உலகத்தை யெல்லாம் அளந்து கொண்ட திருவடிகளை யுடையனுமான
Em Ammaan - எம்பெருமான்
Otham Polkilar - கடல் போல முழங்குகின்ற
Vedam - வேதங்களால் அறியத் தக்க
Neeran - நீர்மையை யுடையான்.
2762திருவாய்மொழி || 1-8– ஓடும்புள்ளேறி (ஈஸ்வரன் ஆர்ஜவ குணமுடையவன்) (இந்தத் திருவாய்மொழி மற்ற திருவாய்மொழிகளினும் ஆராய்ந்து சொல்லப்பட்டதென்கிறார்) 11
நீர் புரை வண்ணன் சீர் சடகோபன்
நேர்தல் ஆயிரத்து ஓர்தல் இவையே –1-8-11
Neerpurai Vannan - நீரை யொத்த நிறத்தை யுடைவனான ஸர்வேச்வரனுடைய
Seer - ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து
Sadagopan - நம்மாழ்வார்
Neerthal - நேர்ந்து அருளிச் செய்த
Ivai - இப் பத்துப் பாட்டும்
Aayirathu - ஆயிரத்தினுள்
Orthal - ஆராய்ந்து அறியத் தக்கன.
2763திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஜகத் காரண பூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலை விட்டுப் போக மாட்டாதபடியானா னென்கிறார்) 1
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1
இவையும்,ivaaiyum - ஸமீபத்திலுள்ள பொருள்களும்
உவையும்,uvaiyum - நடுத்தரமாகவுள்ள பொருள்களும்
இவரும்,ivarum - ஸமீபத்திலுள்ள சேதநர்களும்
அவரும்,avarum - தூரத்திலுள்ள சேதநர்களும்
உவரும்,uvarum - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும்
யவையும்,yavaiyum - ஸகல அசேதனங்களும்
யவரும்,yavarum - ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்)
தன்னுள்ளே,thannulle - தனக்குள்ளே
ஆகியும்,aagiyum - ஆகும்படி வைத்தும்
காக்கும்,kaakkum - ரக்ஷித்தும் போருகிறவனும்
அவையும்,avaiyum - தூரத்திலுள்ள பொருள்களும்
அவையுள்,avaiyul - அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும்
தனி முதல் எம்மான்,thani mudhal emmaan - ஒப்பற்ற காரண பூதனும் அஸ்மத் ஸ்வாமியும்
கண்ணபிரான்,Kannabiraan - கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும்
என் அமுதம்,en amudham - எனக்கு அம்ருதம் போல் பரம போக்யனும்
சுவையன்,suvaiyan - ரஸிகனும்
திருவின் மணாளன்,Thiruvin maṇaaḻan - பெரிய பிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்
என்னுடை சூழல்,ennudai suuḻal - என்னுடைய சுற்றுப் பக்கத்தில்
உளான்,ulaan - தங்கி யிரா நின்றான்.
2764திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கீழ்ப்பாட்டிற் கூறியபடி பரிஸரத்திலே வந்து இருந்த நிலை ஸாத்மித்தவாறே என்னருகே வந்து நின்றானென்கிறார்) 2
சூழல் பல பல வல்லான் தொல்லை யம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடை யம்மான்
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2
பல பல சூழல் வல்லான்,pala pala suulal vallaan - மிகப் பல அவதாரங்கள் செய்ய வல்லவனும்
தொல்லை யம் காலத்து,thollai yam kaalathu - முன்பொரு காலத்திலே
கேசவன்,kaesavan - கேசவனென்னும் திருநாமமுடையவனும்
வேழம்,velam - (குவலாயபீட மென்னும்) யானையினுடைய
மருப்பை,maruppai - கொம்புகளை
ஒசித்தான்,ocitthaan,osithan - ஒடித்து அவ் யானையை முடித்தவனும்
விண்ணவர்க்கு,vinnavarkku - தேவர்களுக்கு
எண்ணல் அரியான்,eṇṇal ariyaan - நினைத்ததற்கும் அருமையானவனும்
உலகை,ulagai - பூமியை
கேழல் ஒன்று ஆகி,kaelal onru aagi - ஒப்பற்ற வராஹ ரூபியாகி,இடந்து குத்தி யெடுத்து வந்தவனும்
ஆழம்,aazham - ஆழமாகிய
நெடுகடல்,netukadal - நீண்ட ஸமுத்ரத்திலே
சேர்ந்தான்,serndhaan - திருக்கண் வளர்ந்தருள்பவனுமான
என்னுடை அம்மான் அவன்,ennudai ammaan avan - அவ் வெம்பெருமான்
என் அருகலிலான்,en arukalilaan - என்னருகிலுள்ளான்.
2765திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பெரியதிருவடி திருவன்நதாழ்வான் பிராட்டிமார் முதலானோர் ஓரொரு வகைகளாலே தன்னோடு ஸம்ச்லேஷ ரஸம் பெருமாபோலல்லாமல் எல்லா வகைகளிலுமுள்ள ஸம்ச்லேஷஸங்களையும் நான் பெறும்படி எனக்குத் தந்து என்னை ஒருகாலும் விடாதபடி யானான் எம்பெருமானென்கிறார்.) 3
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நன்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொருசிறைப் புள்ளுவந்தேறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3
அருகல் இல் ஆய,arukal il aay - ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத
பெரு சீர்,peru seer - சிறந்த திருக்குணங்களை யுடையவனும்
அமரர்கள்,amararkal - நித்ய ஸூரிகளுக்கு
ஆதி முதல்வன்,aadhi mudhalvan - தலைவனும்
கருகிய நீலம் நல்மேனிவண்ணன்,karugiya neelam nalmeenivanan - கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தை யுடையவனும்
செம் தாமரை கண்ணன்,sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும்
பொரு சிறை புள்,poru sirai pul - செறிந்த சிறகையுடைய பெரிய திருவடியை
உவத்து ஏறும்,uvathu aerum - விரும்பி வாஹனமாகக் கொள்பவனும்
பூமகளார் தனி கேள்வன்,pumagalar thani kelvan - பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்
என்னோடுடனே,ennodudane - என்னோடேகூடி நின்று
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்,oru kathiyin suvai thandittu ozhivillan - ஒரு வழியாலுள்ள இனிமையைத் தந்து தவிருகிறானில்லை (ஸகலவித அநுபவங்களையும் தருகின்றானென்றபடி).
2766திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஒன்றாலொன்று குறைவில்லாதவனாய் ஸர்வரக்ஷகனான எம்பெருமான் யசோதைப் பிராட்டியின் இடுப்பிலிருக்குமாபோலே என்னிடுப்பிலே வந்திருத்தல் தனக்குப் பெறாப்பேறு என நினைத்திராநின்றனென்கிறார்) 4
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி யாலிலைச் சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4
உடன் அமர் காதல்,udan amar kaadhal - கூடவே அமர்ந்திருக்கைக்கு விருப்பமுள்ள
மகளிர்,magalir - பிராட்டிமார் (யாவரென்னில்)
திருமகள்,thirumagal - ஸ்ரீமஹாலக்ஷ்மி
மண் மகள்,man magal - பூமிப்பிராட்டி
ஆயர் மடமகள்,aayar madamagal - இடைக்குலத்துப் பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டி
என்ற இவர் மூவர்,endra ivar muvar - என்று சொல்லப்பட்ட இம் மூவராவர்;
ஆளும் உலகமும் மூன்றே,aalum ulagamum moondre - தன்னலாளப்படுகின்ற உலகங்களும் மூன்றேயாயிருக்கும்; ஆக இங்ஙனம் வாய்த்தவனும்)
அவை,avai - அவ்வுலகங்களை
உடன்,udan - விடாமலே
ஒக்க விழுங்க,okka vizhunga - ஏக காலத்திலே உண்டு
ஆல் இலை,aal ilai - ஆலிலையில்
சேர்ந்தவன்,cērandhavan - கண் வளர்ந்தவனும்
எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியும்
கடல் மலி மாயம் பெருமான்,kadal mali maayam perumaan - கடலிற்காட்டிலும் மிகப் பெரிய மாயச் செயல்களால் பெருமை பெற்றவனுமான
கண்ணன்,kannan - கண்ணபிரான்
என் ஒக்கலையான்,en okkalaiyaan - என் இடுப்பிலே வந்தமர்ந்தான்.
2767திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்கும் ஜநகனான எம்பெருமான் என்று நெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 5
ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கி
செக்கஞ்ச்செக வென்று அவள் பாலுயிர் செகவுண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5
ஒக்கலை வைத்து,okkalai vaithu - இடுப்பிலெடுத்துக் கொண்டு
முலைப்பால் உண் என்று,mulaippaal un enru - ‘முலைப் பாலை யுண்பாய்’ என்று சொல்லி
தந்திட,thandita - முலை கொடுக்க
வாங்கி,vaangi - (அம் முலையைக்) கையாற்பிடித்து
செக்கம்,chekkam - (அந்தப் பூதனையின்) நினைவு
செக,sega - அவளோடே முடியும்படியாக
அன்று,andru - அந் நாளில்
அவள் பால்,aval paal - அவளது பாலையும்
உயிர்,uyir - பிராணனையும்
செக,sega - அழிய
உண்ட,undu - அமுது செய்த
பெருமான்,perumaan - ஸ்வாமியானதும்,
தக்கபிரானோடு,thakkabiraanoatu - நிகம்பரச் சாமியான ருத்ரனும்
அயனும்,ayanum - பிரமனும்
இந்திரனும்,indiranum - இந்திரனும்
முதலாக,mudhalaga - முதலாக வுள்ள
ஒக்கவும்,okkavum - எல்லாரையும்
தோற்றிய,toatritiya - படைத்த
ஈசன்,eesan - ஈசனானவனும்
மாயன்,maayan - ஆச்சரிய குண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம் பெருமான்
என் நெஞ்சில் உளான்,en nenjil ulaan - எனது இதயத்திலுள்ளானானான்
2768திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (அநுகூலர்க்கு எளியனாய், பிரதிகூலர்க்கு அரியவனான எம்பெருமான் எனது மார்பிலிருந்து தோளிணைக்கு ஏறிவிட்டானென்கிறார். கீழ்ப் பாட்டிற் சொன்னதையே மறுபடியும் “மாயனென்னெஞ்சினுள்ளான்” என்று அநுபாஷணஞ் செய்தது ஈடுபாட்டின் மிகுதியைக் காட்டும். இது என்ன பெறாப் பேறு! என்று தலை சீய்த்துச் சொல்லுகிறபடி.) 6
மாயன் என் நெஞ்சினுள்ளான் மற்றும் யவர்க்குமதுவே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6
மாயன்,maayan - ஆச்சரியனான எம்பெருமான்
என் நெஞ்சில் உள்ளான்,en nenjil ullaan - எனது நெஞ்சில் இருக்கின்றான்;
மற்றும் யவர்க்கும்,matrum yavarkkum - வேறு யாருக்கேனும்
அஃதே,akthe - அப்படி யிருப்பதுண்டோ? (இல்லை;)
காயமும்,kaayamum - உடம்பும்
சீவனும்,seevanum - உயிரும்
தானே,thaane - தானேயாய்
காலும்,kaalum - காற்றும்
எரியும்,eriyum - நெருப்பும்
அவனே,avane - அவன் தானேயாய்,
சேயன்,seyan - (சிலர்க்கு) தூரஸ்தனாய்
அணியன்,anian - (சிலர்க்கு) ஸமீபஸ்தனாய்
யவர்க்கும்,yavarkkum - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
சிந்தைக்கும் கோசரம் அல்லன்,sindhaikkum kosaram allan - மனத்திற்கும் எட்டாதவனாய்
தூயன்,thuyan - பரிசுத்தனாய்
துயக்கன் மயக்கன்,thuyakkan mayakkan - (அநுக்ரஹ பாத்திரமாகாதவர்களுக்கு) ஸந்தேஹரூபமாயும் விபரீத ரூபமாயுமிருக்கும் ஞானங்களைப் பிறப்பிப்பவனான எம்பெருமான்
என்னுடைய தோள் இணையான்,ennudaiya thol inaiyaan - எனது இரண்டு தோள்களிலுமுளனானான்.
2769திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (உலகில் நாயகியோடு கலவி செய்யவரும் நாயகன் அவள் உகக்குமாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு வருமாபோலே எம்பெருமானும் என்னோடு கலக்க விரும்பித் திருத்துழாய்; மாலையாலே மிகவும் அழகு பெறுவித்துக் கொண்டு வந்து எனது நாவிலே கலந்தானென்கிறார் இப்பாட்டில்) 7
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தண்ணம் துழாய் யுடை யம்மான்
கேளிணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7
தோள் இணை மேலும்,thol inai meelum - இரண்டு திருத் தோள்களிலும்
நல் மார்பின் மேலும்,nal maarbin meelum - விலக்ஷணமான திரு மார்பிலும்
சுடர் முடிமேலும்,sudar mudi meelum - ஒளி பொருந்திய திருமுடியிலும்
தாள் இணைமேலும்,thaal inai meelum - இரண்டு திருவடிகளிலும்
புனைந்த,punaintha - அணியப்பட்ட
தண் அம் துழாயுடை அம்மான்,than am thuzhaayudai ammaan - குளிர்ந்தழகிய திருத் துழாயையுடைய ஸ்வாமியாய்
கேள் இணை ஒன்றும் இலாதான்,kel inai ondrum ilaathaann - பொருத்தமான உபமானமொன்று மில்லாதவனாய்
கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,kilarum sudar oli moorthi - மென்மேலும் கிளர்கின்ற சிவந்த வொளியே வடிவெடுத்தவனான எம்பெருமான்
நாள்,naal - நாடோறும்
அணைந்து,anainthu - கிட்டி
ஒன்றும் அகலான்,ondrum agalaan - சிறிதும் விலகாதவானய்க்கொண்டு
என்னுடைய,ennudaiya - என்னுடைய
நாவின் உளான்,naavin ulaan - நாவிலுள்ளவனாக ஆனான்.
2770திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (கலைகளெல்லாவற்றாலும் காணவேண்டியவனான எம்பெருமான் ப்ரமாணங்களாலே காணக்கடவதான தன் வடிவை என் கட்புலனுக்கு இலக்காக்கினானென்கிறார்) 8
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியில் நால் தடம் தோளன் பொரு படை யாழி சங்கேந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8
நாவினுள் நின்று,naavinul ninru - நாவினிடத்தில் நின்றும்
மலரும்,malrum - பரவுகின்ற
ஞானம் கலைகளுக்கு எல்லாம்,gnanam kalaikaluku ellam - ஜ்ஞான ஸாதனமான எல்லாக் கலைகளினுடையவும்
ஆவியும் ஆக்கையும் தானே,aaviyum aakkaiyum thaane - உயிரான அர்த்தமும் உடம்பான சப்தமும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும்
அழிப்போடு அளிப்பவன் தானே,azhippoatu alippavan thaane - (அவற்றினுடைய) உத்பத்தி விநாசங்களும் தானிட்ட வழக்காம்படி யிருப்பவனும்
பூ இயல் நால்,poo iyal naal - பூ மாறாத நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனும்.
பொருபடை ஆழிசங்கு ஏந்தும்,porupadai aazhisangu aendhum - (அத்திருத்தோள்களில்) போர் செய்கின்ற ஆயுதங்களாகிய திருவாழி திருச்சங்குகளைத் தரித்திருப்பவனும்.
காவி நல்மேனி,kaavi nalmeeni - கருநெய்தல் போன்று அழகிய திருமேனியை யுடையவனும்
கமலம் கண்ணன்,kamalam kannan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனுமாகிய எம்பெருமான்
என் கண்ணின் உளான்,en kannin ulaan - (இவ்வழகோடே) எனது கண்ணுக்குள்ளே யானான்.
2771திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் முதலான பீபிலிகா பர்யந்தமாக ஸகல ஜகத்தையும் படைத்தருளின கமலக்கண்ணன் என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்) 9
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்தயன் நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9
கமலம் கண்ணன்,kamalam kannan - புண்டரீகாக்ஷன்
என் கண்ணிணுளளான்,en kannin ulanaan - எனது கண்களுக்கு இலக்கானான்;
காண்பன்,kaanban - (நானும் அவனைக்) காணா நின்றேன்; (இதுவரையில் அவனைக் காணப்பெறாத நான் இப்போது எங்ஙனே காணப் பெற்றேனென்னில்;)
அவன்,avan - அப்பெருமான்
கண்களாலே,kankalaale - (தனது) திருக்கண்களாலே
அமலங்கள் ஆக விழிக்கும்,amalangal aaka vizhikkum - அஜ்ஞானம் முதலியமலங்கள் தொலையும்படி கடாக்ஷித்தருளினான்; (அதனாலே காணப் பெற்றேனெக்க;)
ஐம்புலனும்,aimbulanum - மற்றுமுள்ள எல்லா இந்திரியங்களும்
அவன் மூர்த்தி,avan moorthi - அப்பெருமானுக்கே விதேயங்களாயின; (அவன் யாவனென்னில்)
கமலத்து நம்பி அயன் தன்னை,kamalathu nambi ayan thanai - தாமரையானாயும் ஜ்ஞாநாதி பரிபூர்ணனாயுமிருக்கிற பிரமனையும்
கண் நுகலானொடும்,kaṇ nukalaanodum - நெற்றிக் கண்ணனாகிய சிவபிரானையும்
தோற்றி,totri - தோற்றுவித்து (அவர்கள் முதலாக)
அமலம் தெய்வத்தோடு,amalam teivathoodu - ஸாத்விகர்களான தேவர்களோடு கூடின
உலகம்,ulagam - உலகங்களையும்;
ஆக்கி,aakki - படைக்குமவன்
என் நெற்றி உளான்,en netri ulan - (ஆக இப்படிப்பட்ட எம்பெருமான்) எனது நெற்றியிலே யானான்.
2772திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (பிரமன் சிவனிந்திரன் முதலான மஹான்களுங்கூடத் தன்னைப் பெறுதற்கு ஸமயம் எதிர்பார்த்திருப்பாராய்த் தடுமாறும்படி யிருக்கிறவன் தான் என்னைப் பெறுகைக்கு அவஸரம் பார்த்து வந்து என் தலைமீது ஏறிவிட்டானென்கிறார்.) 10
நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரை மலர்ப்பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை யணிந்தானும் நான்முகனும் இந்த்ரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10
ஒற்றை பிறை அணிந்தாலும்,otrai pirai aninthalum - சந்திரசேகரனாகிய சிவபெருமானும்
நான்முகனும்,naanmuganum - பிரம தேவனும்
இந்திரனும்,indiranum - தேவேந்திரனும்
மற்றை அமரரும் எல்லாம்,matrai amararum ellaam - மற்றுமுள்ள எல்லாத் தேவர்களும்
வந்து,vanthu - கிட்டி,
நெற்றியுள்,netriyul - நெற்றியில் படிந்திருந்து
நின்று என்னை ஆளும் நிரை மலர் பாதங்கள் சூடி,ninru ennai aalum nirai malar paadhangaal soodi - என்னை யாள்கின்ற மலரொழுங் கமைந்த திருவடிகளை (த்தங்கள் தலையிலே) சூடிக் கொண்டு
கற்றை துழாய் முடிகோலம் கண்ணபிரானை,katrai thuzhaay mudikolam kannabiraanai - செறிந்த திருத்துழாயாகிற வளைய மணிந்த எம்பெருமானை
தொழுவார்,thozhvaar - வணங்கா நிற்பர்கள்; (அத்தகைய பெருமை வாய்ந்த எம்பெருமான்)
எனது உச்சி உளான்,enathu ucchi ulan - என் தலையின் மேலே யானான்.
2773திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (இத் திருவாய் மொழியை எம்பெருமானுக்கு விண்ணப்பஞ் செய்வார் தலையிலே அப்பெருமானது திருவடிகள் நாடோறும் வந்து சேருமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்..) 11
உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11
உச்சி உள்ளே நிற்கும்,ucchi ulle nirgum - (கீழ்ப்பாட்டிற் கூறியபடி) என் தலை மீதிருப்பவனும்
தேவதேவற்கு,devadhevarukku - தேவாதி தேவனும்
கண்ணபிரார்க்கு,kannabirarkku - கண்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானுக்கு
இச்சை உள் செல்ல உணர்த்தி,ischai ul chella unaruthi - (தன் பக்கலிலே அவன் பண்ணின) ஆதரத்தைத் தாம் அறிந்த படியைத் திருவுள்ளத்திலே பட அறிவித்து
வண் குருகூர் சடகோபன் சொன்ன இ ஆயிரத்துள்,van kurukoor sadagopan sonna i aayiraththul - சடகோபன் சொன்ன இத்திவ்யப்ரபந்தத்தினுள்
இவையும் ஓர் பத்து,ivaaiyum oru paththu - இந்த அத்விதீயமான பத்துப் பாசுரங்களையும்
என் பிராற்கு,en pirarkku - எம்பெருமானுக்கு
விண்ணப்பம் செய்ய,vinnappam seyya - (ஒருகால்) விண்ணபஞ் செய்யுமளவில்
நீள் கழல்,neel kuzhal - (உலகமளக்க) நீண்ட (அவனது) திருவடிகளானவை
நிச்சலும்,niscalum - எப்போதும்
சென்னி,chenni - தலையில்
பொரும்,porum - வந்து சேரும்
2774திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத் திருவாய்மொழியிற் சொல்லுகிற அர்த்தத்திற்கு இப்பாசுரம் ஸங்க்ரஹ மென்னலாம். மஹாபலியானவன் எம்பெருமான் நம்மிடத்திற்கு அழகிய திருக் கோலங்கொண்டு எழுந்தருளப் போகிறான்’ என்று கனவிலும் கருதாதிருக்கையில், அவப் பக்கலில் தானே யாசகனாய்ச் சென்று நின்றாப் போலே எனக்கு நினைவின்றியே யிருக்கத் தானே வந்து தன் வடிவழகை என் கண்ணுக்கு இலக்காக்கினான்! என்று அவனது நிர்ஹேதுக விஷயீகாரத்தைச் சிந்தித்து உருகிப் பேசுகின்றார்.) 1
பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1
பொரு,poru - போர் செய்ய வல்ல
மா,maa - பெருமை தங்கிய
நீள் படை,neel padai - சிறந்த ஆயுதமாகிய
ஆழி சங்கத்தொடு,aali sangathodu - சங்கு சக்கரங்களோடு கூட
திரு மா நீள் கழல்,thiru maa neel kadal - தனது மிகச் சிறந்த திருவடிகளை
ஏழ் உலகும் தொழ,yel ulagum thozha - ஸகல லோகமும் தொழும்படியாக
ஒரு மாணி குறள் ஆகி நிமிர்ந்த,oru maani kural aagi nimirndha - ஒப்பற்ற பிரமசாரி வாமனனான் வளர்ந்தருளின
அ கரு மாணிக்கம்,a karu maanikkam - நீல மணி போன்ற அப் பெருமானை
என் கண்ணுளதாகுமே,en kannulathaagume - எனது கண்ணுக்கு இலக்காயினான்.
2775திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமான் அடியார்களுக்குக் காட்சி தருந்தன்மை எப்படிப்பட்ட தென்றால், பரமபக்தி யுக்தர்க்கு முகங்காட்டுவது போலவே எண்ணிக்கையினால் தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது) 2
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும்
விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்,mannum neerum eriyum nal vaayuvum vinnum aay - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாக வுடையனாய்க் கொண்டு
விரியும்,viriyum - ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
காதன்மையால் தொழில்,kaadhanmaiyaal thozhil - பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே,kannullae - (அவன்) நான் காணும்படி இருப்பன்;
எண்ணிலும் வரும்,ennillum varum - ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்;
என் இனி வேண்டுவம்,en ini venduvam - இனி மேல் என்னகுறை?
2776திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமானுக்கு அடியார் திறத்தில் அளவிறந்த நீர்மைக்குக் காரணம் பிராட்டி ஸம்பந்தமே யென்று அதனை யநுஸந்தித்து அந்தத் திருமாலைத் தொழாய் நெஞ்சே யென்று திருவுள்ளத்திற்கு உரைக்கிறார்) 3
எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3
மட நெஞ்சமே,mada nenjamae - விதேயமான மனமே!
எம் பிரானே,em pirane - எமக்கு உபகாரகனும்
எந்தை தந்தை தந்தைக்கும் தம் பிரானை,endhai thandhai thandhaikkum tham pirane - (நம்மளவில் நில்லாமல் நம் குலத்திற்கெல்லாம் நாதனாயிருப்பவனும்
தண் தாமரைக் கண்ணனை,than thaamarai kannaanai - குளிரக் கடாக்ஷிக்கின்ற தாமரை போன்ற திருக்கண்களை யுடையவனும்
கொம்பு,kombu - வஞ்சிக் கொடியினும்
அராவு,araavu - ஸர்ப்பத்தினும்
நுண்,nun - நுட்பமான
நேர்,ner - நேர்த்தி பொருந்திய
இடை,idai - இடையை யுடையவளான பிராட்டியை
மார்பனை,maarpanai - மார்பிலே உடையனுமான
எம்பிரானை,em pirane - எம்பெருமானை
தொழாய்,thozhai - வணங்குவாயாக.
2777திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“எம்பிரானைத் தொழாய் மடநெஞ்சமே!” என்று கீழே தாஞ்சென்னவாறே மேல்விழுந்து தொழுத நெஞ்சைக் கொண்டாடி, என்றைக்காவது நான் நைச்சியாநுஸந்தானம் பண்ணிப் பிரியப் பார்த்தவிடத்திலும் எம்பிரானை விடாமலே தொடர வேணுமென்று அந்த நெஞ்சையிரக்கிறார்.) 4
நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனைத்
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய் –1-10-4
நெஞ்சமே,nenjamae - மனமே!
நல்லை நல்லை,nallai nallai - நீ மிகவும் நன்மையை யுடையை;
உன்னைப் பெற்றால்,unnai petraal - உன்னை உதவியாகப் பெற்றால்
என் செய்யோம்,en seiyyom - எதைத் தான் செய்து முடிக்க மாட்டோம்; (எதையுஞ்செய்து முடிக்கலாம்)
இனி என்ன குறைவினம்,ini enna kurai vinam - இனி என்ன குறையை யுடையோம்?
மைந்தனை,maindhanai - நித்ய யௌவன முடையவனும்
மலராள் மணவாளனை,malaral manavaalanai - திருமகள் நாதனுமான எம்பெருமானை
துஞ்சும் போதும்,thunjum podhum - நான் அகன்று மறந்த போதும்
விடாது தொடர்,vidaadhu thodar - நீ விடாமல் தொடர்ந்து நில்;
கண்டாய்,kandai - முன்னிலையசை
2778திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (இத்திருவாய்மொழியை நிர்ஹேதுக விஷயீகார பரமாக பட்டர் நிர்வஹித்ததற்கு இப் பாசரமே நிதானமாயிருக்கும். கீழ் இரண்டாம் பாட்டில் “எண்ணிலும் வரும்” என்று ப்ரஸ்துதமான எண் தானுமில்லாமல் அவனே மேல் விழுந்து விஷயீகரித்தபடியை நெஞ்சுக்கு முதலிக்கிறார்.) 5
கண்டாய் நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்றோர்
எண் தானும் இன்றியே வந்தியலுமாறு
உண்டானை உலகேழுமோர் மூவடி
கொண்டானைக் கண்டு கொண்டனை நீயுமே –1-10-5
நெஞ்சே,nenje - மனமே!
கருமங்கள் வாய்க்கின்று,karumangal vaaykkinru - காரியங்கள் பலிக்குமிடத்தில்
ஓர் எண் தானும் இன்றியே,or en thaandum indriye - (நம்முடைய) நினைவு ஒன்றுமேயில்லாமல்
வந்து இயலும் ஆறு,vandhu ialum aaru - பலித்து வருகிறபடியை
கண்டாயே,kandaye - பார்த்தாயோ? (எங்ஙனே யெனில்)
உலகும் ஏழும்,ulagum ezhum - ஏழு லோகங்களையும்
உண்டானை,undaanai - (பிரளயத்தில்) விழுங்கினவனும்
ஓர் மூ அடி கொண்டானை,or moo adi kondaanai - (மற்றொருகால் அவ்வுலகங்களை) மூன்றடிகளாலே அளந்து கொண்டவனுமான பெருமானை
நீயும் : கண்டு கொண்டனை,neeyum: kandu kondanai - நீயும் காணப் பெற்றாயன்றோ?
2779திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (“விடாது தொடர் கண்டாய்” என்ற ஆழ்வாரை நோக்கி நெஞ்சானது, நான் விடாது தொடர்கிறேன். அவன் விட்டால் செய்வதென்? என்ன; நைச்சியாநுஸந்தானம் பண்ணி நாம் அகலாதொழியில் நம்மை யொரு நாளும் அவன் விடானென்கிறார்) 6
நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயுமீசன் மணி வண்ணன் எந்தையே –1-10-6
நெஞ்சமே,nenjamae - மனமே!
நீயும் நானும்,neeyum naanum - நீயும் நானுமாக
இ சேர் நிற்கின்,e ser nirkin - இந்த நிலையிலே நின்றால்
மேல்,mel - இனி மேல்;
இ உலகினில்,e ulaginil - இவ் வுலகத்தில்
தாயும் தந்தையும் ஆய்,thaayum thandhaiyum aay - மாதாவும் பிதாவுமாகி
வாயும்,vaayum - அவதரித்துள்ளவனும்
மணிவண்ணன்,manivannan - நீல மணி வண்ணனும்
எந்தை,endhai - எமக்கு ஸ்வாமி யுமாகிய
ஈசன்,eesan - ஸர்வேச்வரன்
ம ற்று ஓர் நோயும் சார் கொடான்,ma rr u oar noayum saar kodaan - வேறொரு துன்பமும் அணுகவொட்டான்;
சொன்னேன்,sonnaen - இது உண்மையாகச் சொன்னேன்.
2780திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( “ந அச்லீலம் கீர்த்தயேத்” என்று வேத புருஷன் சொன்னான்; அச்லீலமான விஷயத்தை வாயினாற் சொல்லக்கூடாது என்றபடி, நைச்சியாநுஸந்தானம் பண்ணி அவனை விட்டுப்பிரிதல் என்கிற அச்லீலத்தை இவர் தாமே *ப்ரஸ்தாவித்தமையால் அப்படியே வந்து புகுந்தது. அயோக்யன் என்று அகலுகிறாரிப்பாட்டில் .) 7
எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7
வானவர்,vaanavar - நித்ய ஸூரிகள்
எந்தை எம் பெருமான் என்று,endhai em perumaan endru - ‘எந்தையே! எம்பெருமானே! என்று
சிந்தையுள் வைத்து,sinthaiyul vaithu - மனத்தினால் சிந்தித்து
சொல்லும்,sollum - வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற
செல்வனை,selvanaai - ஸ்ரீமானாகிய எம்பெருமானை
பாவியேன்,paaviyaen - பாவியாகிய நான்
எந்தையே என்றும்,endhaiye endrum - எந்தையே! என்றும்
எம்பெருமான் என்றும்,emperumaan endrum - எம்பெருமானே என்றும்
சிந்தையுள் வைப்பன்,sinthaiyul vaippan - மனத்தில் வைப்பேன்;
சொல்லுவன்,solluvan - வாயினாலுஞ் சொல்வேன்
2781திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( விலக்ஷணர்கள் தாமே ஈடுபடுதற்கரித்தான பகவத் விஷயத்தில் தாம் ஈடுபடுவது தகாதென்று உறுதிகொண்ட ஆழ்வார், பகவத் விஷயம் நடையாடாத தோரிடத்திலே கிடக்கவேணுமென்று போய் ஒரு குட்டிச் சுவரிலே முட்டாக்கிட்டுக் கொண்டு கிடந்தாராம்; அங்கே பெருஞ்சுமை யெடுத்துபோகிற ஒரு வழிப்போக்கன் சுமைக்கனத்ததனால் அதனைக் கீழே தள்ளுவான் ‘ஸ்ரீமந்நாராயணா! என்று சொல்லிக்கொண்டே தள்ளினானாக, அச்சொல் செவிப்பட்ட மாத்திரத்திலே தம்முடைய கரணங்கள் மீண்டும் பகவத் விஷயத்தில் ப்ரவணமானபடியைக் கண்டு வியக்கிறார்) 8
செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண் பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே –1-10-8
செல்வம் நாராணன் என்ற,selvam naaranan endra - ஸ்ரீமந்நாராயணன் என்கிற வார்த்தையை
சொல் கேட்டலும்,sol kettalum - கேட்டவளவிலே
கண்,kan - கண்களானவை
பனி மல்கும்,pani malgum - நீர் ததும்புகின்றன
நாடுவன்,naaduvan - (எங்குற்றாய் எம்பெருமான்! என்று அவனைத்) தேடா நின்றேன்!
மாயமே,maayamae - இது ஆச்சரியமே;
நம்பி,nambi - எல்லாவற்றாலும் நிறைந்த அப்பெருமான்
நல் அல்லும் பகலும்,nal allum pagalum - நல்ல இரவும் பகலும்
இடை வீடு,idai veedu - இடைவிடாமல்
இன்றி நல்கி,indri nalki - கிருபை பண்ணி
நம்பி,nambi - என்மேல் விருப்பங்கொண்டு
என்னைவிடான்,ennaividaan - என்னை விடாதிருக்கிறான்.
2782திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (அவன் விடாதிருந்தாலிருக்கட்டும்; நீர் அவனை மறந்து ஸம்ஸாரிகளைப் போலே* உண்டியே உடையே உகந்தோடித் திரியமாட்டீரோ வென்ன, நான் எதையிட்டு அவனை மறப்பது? மறக்கும்வகை தெரியவில்லையே யென்கிறார்.) 9
நம்பியைத் தென் குறுங்குடி நின்ற அச்
செம்பொனே திகழும் திரு மூர்த்தியை
உம்பர் வானவர் ஆதி யஞ்சோதியை
எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –1-10-9
நம்பியை,nambiyai - கல்யாண குண பரிபூர்ணனும்
தென் குறுங்குடி நின்ற,then kurungudi nindra - திருக்குறுங்குடியிலே நிற்பவனும்
அ செம்போனே திகழும் திருமூர்த்தியை,a semponae thigazhum thirumoorthyai - அழகிய செம்பொன் போலவே பிரகாசிக்கின்ற திருமேனியை யுடையவனும்.
உம்பர் வானவர்,umbar vaanavar - மேலான நித்ய ஸூரிகளுக்கு
ஆதி,aadhi - காரண பூதனும்
அம் சோதியை,am sodhiyai - அழகிய ஒளி யுருவனுமாகிய
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
என் சொல்லி,en soll - என்னவென்று
மறப்பேன்,marappeen - மறப்பேன்
2783திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை மீட்டு அவனை மறந்திருத்தாலோ வென்ன, தன்னை நான் மறவாமைக்காகத் தன்னுடைய அழகிய திருக் கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து எனக்கு மிகவுமெளியனாய்க் கொண்டு ‘இனிப்பேரேன்’ என்றிருத்தருளினானாதலால் அவனை நான் மறக்க விரகில்லையே யென்கிறார்கிறார்.) 10
மறப்பும் ஞானமும் நான் ஒன்றும் உணர்ந்திலன்
மறக்கும் என்று செந்தாமரைக் கண்ணோடு
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை
மறப்பனோ இனி யான் என் மணியையே –1-10-10
மறப்பும் ஞானமும் ஒன்று,marappum gnaanamum onru - மறத்தலும் அறிதலுமாகிய ஒன்றையும்
நான் உணர்த்திலன்,naan unarthilan - நான் அறியேன்;
மறக்கும் என்று,marakkum endru - (இப்படி யிருக்க) இவன் நம்மை மறந்து விடுவன் என்று நினைத்து
செந்தாமரை கண்ணோடு,senthaamarai kannodu - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களோடு
மறப்பு அற,marappu ara - மறப்புக்கு அவகாசமில்லாதபடி
என் உள்ளே,en ullam - எனது நெஞ்சினுள்ளே
மண்ணினான் தன்னை,manninaan thannai - நிலை பெற்றிருந்தவனான
என் மணியை,en maniyai - எனது நீலரத்னமாகின எம் பெருமானை
இனி யான் மறப்பேனா,ini yaan marappeena - இனி நான் மறப்பேனோ? (ஒருநாளும் மறவேன்)
2784திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (ஸ்ரீ ஈடு - நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார். ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை) 11
மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11
மணியை,maniyai - நீல மணி போன்றவனும்
வானவர் கண்ணனை,vaanavar kannanai - நித்ய ஸூரிநாதனும்
தன்னது ஓர் அணியை ,thannathu or aniyaai - தனக்கு தானே ஓராபரணமாயிறு பவனுமான பெருமானைக் குறித்து
தென் குருகூர்ச் சடகோபன்,then kurukoor sadakoopan - தென் குருகூர்ச் சடகோபன்
சொல் பணி செய்,sol pani sey - வாசிக கைங்கர்யம் செய்த
ஆயிரத்துள்,aayiraththuḷ - ஆயிரத்தினுள்
இவை பத்து,ivai pathu - இப்பத்துப் பாட்டையும்
உடன் ,udan - கருத்துடன்
தணிவு இலர் ,thanivu ilar - த்ருப்தி பெறாதவர்களாய்
கற்பர் ஏல் ,karpar ael - கற்பாராயின் (அவர்களுக்கு)
கல்வி வாயும் ,kalvi vaayum - ஞானம் நிரம்பும்
2785திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலத்திலாதலால் ஆழ்வார்இப்போது கடற்கரைச் சோலையிலிருப்பதாகக் கொள்க. ஆங்கு உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் விவர்ணப் பட்டிருக்கின்றதாகக்கொண்டு நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ? -என்பதாகச் செல்லுகிறது இப்பாசுரம்) 1
வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1
வாயும் திரை உகளும் கானல்,vaayum thirai ugulum kaanal - மேன் மேலுங் கிட்டுகின்ற அலைகள் தாவு மிடமான - கடற் கரையிலுள்ள சோலையிலுள்ள
மடம் நாராய்,madam naaray - இளமை தங்கிய நாரையே!,
ஆயம் அமர் உலகும் துஞ்சிலும்,aayam amar ulagum thunjilum - (நமது) தாயும் தேவலோகமும் உறங்கினாலும்
நீ துஞ்சாய்,nee thunjaay - நீ உறங்குகிறாயில்லை;
ஆல்,aal - ஆதலால்
நோயும் பயலைமையும் மீதூர,noyum payalaimaiyum meedoor - மனவருத்தமும் (அதன் காரியமான) பசலை நிறமும் மேலிட்டுவர
எம்மேபோல்,emmae pol - எங்களைப்போல
நீயும்,neeyum - நீயும்
திருமாலால்,thirumaalaal - திருமகள் கொழுநனான எம்பெருமானாலே
நெஞ்சம் கோள் பட்டாயே,nenjam kol pattaaye - நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயோ?
2786திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (அன்றில் என்பது ஒரு பறவை; குர்ரீ என்று வடமொழியிற் கூறப்படும், க்ரௌஞ்சமென்னவும் படும். அது பெரும்பாலும் பனைமரத்தில் வாழும் அது எப்பொழுதும் ஆணும் பெண்ணும் இணைபிரியாது நிற்கும். கணப்பொழுது ஒன்றை ஒன்று விட்டுப் பிரிந்தாலும் அத்துயரத்தைப் பொறாமல் ஒன்றை ஒன்று இரண்டு மூன்றுதரம் கத்திக்கூவி அதன் பின்பும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்துபடும். ஆணும் பெண்ணுமான அந்த அன்றிற்பறவை இணைபிரியாமல் நெருங்கி ஒன்றொடொன்று வாயலகைக் கோத்துக்கொண்டு உறங்கும்பொழுது அவ்வுறக்கத்திலே வாயலகு தன்னில் நெகிழ்ந்தவளவிலே துயிலுணர்ந்து அப்பிரிவைப் பொறாமல் மெலிந்து பெருந்தொனியாகக் கத்துகிற மிக இரங்கத்தக்க சிறுகுரல் ஆழ்வாரது திருச்செவியிலே விழுந்ததாக, அதுவும் பகவத் விஷயத்திலீடுபட்டுப் பிரிவாற்றாமையினால் கத்துகின்றதெனக்கொண்டு, ஐயோ! நீயும் என்னைப்போலே ஆழியானென்னுமாழமோழையில் அகப்பட்டாயே; என்கிறது இப்பாசுரம்.) 2
கோட்பட்ட சிந்தையையாய்க் கூர்வாய வன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேராது இரங்குதியால்
ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2
கோள்பட்ட,kolpatta - அபஹரிக்கப்பட்ட
சிந்தையை ஆய்,sinthaiyai aay - நெஞ்சை யுடையையாகி
கூர்வாய,koorvaay - (அதனால்) தழதழத்த குரலையுடைய
அன்றிலே,anrilley - அன்றில் பறவையே!
சேண்பட்ட,senpatta - நெடிதான
யாமங்கள்,yaamangal seraadhu - சாமங்கள் தோறும்
சேராது,seraadhu - படுக்கையிற் சேராமல்
இரங்குதி,irangudhi - வருந்துகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
ஆள்பட்ட,aalpatta - அடிமைப்பட்ட
எம்மே போல்,emmae pol - எங்களைப் போலவே
நீயும்,neeyum - (பிரிவாற்றாமை தோற்றவிருக்கிற) நீயும்
அரவு அணையான்,aravu anaiyaan - சேஷசாயியான எம்பெருமானது
தாள்,thaal - திருவடிகளிலே
பட்ட,patta - ஸம்பத்தம்பெற்ற
தண்,than - குளிர்ந்த
துழாய் தாமம்,thuzhaay thaamam - திருத்துழாய்மாலையை
காமுற்றாயே,kaamurrthaaye - ஆசைப்பட்டாயோ?
2787திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கடல் பெருமுழக்கஞ் செய்வதும் அலையேறுவது வடிவதுமாயிருப்பதும் அதற்கு இயல்பாயிருக்க, அதனை யறியாதே அதுவும் தம்மைப்போலே எம்பெருமான் திருவடிகளில் நசைவைத்து விரும்பனபடியே லபிக்கப் பெறாமையினாலே தன் காம்பீரிய மெல்லாமிழந்து கரையிலே வருவது கரையேறமாட்டாதே உள்ளே விழுவதாய் எழுத்துஞ் சொல்லும் பொருளும் தெரியாதபடி சத்துகின்ற தாகக்கொண்டு, ஐயோ! நீயும் இராமபிரானது திருக்குணங்களில் அகப்பட்டு நான் படும்பாடு பட்டாயோ என்கிறதாய்ச் செல்லுகிறது இப்பாசுரம்.) 3
காமுற்ற கையறவோடு எல்லே யிராப்பகல்
நீ முற்றக் கண் துயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3
எல்லே !,Elle! - கனைகடலே!
காமுற்ற கை அறவோடு,kaamurrtha kai aravoodu - விரும்பின பொருள் கை கூடப்பெறாத இழவினால்
நீ,nee - நீ
இராபகல் முற்ற,iraabakal muttru - இரவும் பகலுமாகிய எப்போதும்
கண் துயிலாய்,kan thuyilaay - கண்ணுறங்காதாகி
நெஞ்சு,nenju - உள்ளிடமும்
உருகி,urugi - நீராகி
ஏங்குதி,aengudhi - ஏங்குகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
தென் இலங்கை,then ilankai - தென்னிலங்காபுரி முழுவதும்
தீ ஊட்டினான்,thee oottinaan - நெருப்புக்கு உணவாக்கின பெருமானுடைய
தாள்,thaal - திருவடிகளை
நயந்த,nayandha - ஆசைப்பட்ட
யாம்,yaam - நாங்கள்
உற்றது,uttrathu - அடைந்த வருத்தத்தை
உற்றாயோ,uttraayo - நீயும் அடைந்தாயோ?
வாழி,vaazhi - (நீ மனத்துன்பம் தீ;ர்ந்து) வாழ்வாயாக.
2788திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (காற்றானது எங்கும் பரவிய தத்துவம் அது ஒரு நொடிப் பொழுதும் ஓரிடத்தில் நிலை நின்றிராது; மாதாரிச்வா ஸதாகதி; என்ற நிகண்டின்படி ஸதாகதியென்று பெயர் பெற்றதாதலால் எப்போதும் உலாவிக் கொண்டேயிருக்கும் உடம்பிலே புழுதியை ஏறிட்டுக் கொண்டு வடிவதெரியாதபடியிருக்கும் குளிர்ச்சியுடைத் தாயுமிருக்கும் ஆக இத்தனை யும் அ;தற்கு இயல்வாயிருக்க, அதனை அறிய கில்லாதே அதுவும் தம்மைப்போலவே பகவத் விஷயத்தில் ஆசைவைத்து விருப்பம் நிறைவேறப் பெறாமையினாலே இருந்தவிடத்தில் இருக்க மாட்டாதே மடலூருவாரைப்போலே உடம்பிலே புழுதியை ஏறிட்டுக்கொண்டு வடிவு தெரியாத படியாய் ஸந்நிபாத ஜ்வரமுற்றுக் குளிர்ந்திருப்பதாகக்கொண்டு வாடையே! நீயும் நான் பட்டது பட்டாயன்றோ என்கிறாள்.) 4
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப்பகல் துஞ்சாயால் தண் வாடாய்
அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4
தண் வாடாய்,than vaadaay - குளிர்ந்த காற்றே!
கடலும்,kadalum - ஸமுத்திரத்தையும்
மலையும்,malaiyum - மலையையும்
விசும்பும்,visumbum - ஆகாசத்தையும்
துழாய்,thuzhaay - தடவிக்கொண்டு எம்மைப்போல.
சுடர் கொள் இராபகல்,sudar kol iraabakal - சந்திர ஸுரியர்களாகிற இரு சுடர்களையும் (தம்மிடத்து முறையே) கொண்ட இரவிலும் பகலிலும்
துஞ்சாய்,thunjaay - நீ கண்ணுறங்குகின்றிலை
ஆல்,aal - ஆதலால்
அடல்கொள்,adal kol - வலிமைகொண்ட
படைஆழி,padaiaali - திருவாழிப் படையுடைய
அம்மானை,ammaanai - எம்பெருமானை
காண்பான்,kaanpaan - காணுதற்பொருட்டு
நீ,nee - நீ
ஊழி ஊழிதோறு,oozhi oozhidhoru - நெடு நாளாக
உடலம் போய் உற்றாயோ,udalam poi uttraayo - உடம்பு நோவு கொண்டாயோ?
2789திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (நீராய் இற்று விழுகின்ற மேகத்தைக்கண்டு, நீயும் என்னைப்போலே எம்பெருமானுடைய குணசேஷ்டிதம் முதலியவற்றில் அகப்பட்டு நோவுபடுகிறாய் போலுமென்று சோகித்துச் சொல்லுகிற பாசுரம் இது. மேகம் நீர்சொரிவதைக் கண்ணீர் விட்டு அழுகிறபடியாக வெண்ணிச் சொல்லுகிறாள்.) 5
ஊழி தோர் ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5
உலகுக்கு நீர்கொண்டு,ulagukku neer kondu - உலகுக்கெல்லாம் ஆகும்படி நீரை முகந்து கொண்டு
ஊழி ஊழி தோறு,oozhi oozhi thooru - காலமுள்ளவளவும்
நீர்ஆய்,neer aay - நீர்வடிவமாய்
நெகிழ்கின்ற,nekizhkindra - விழுகின்ற
வானமே,vaaname - மேகமே !
நீயும்,neeyum - நீயும்
தோழியரும் யாமும் போல்,thozhiyarum yaamum pol - (எமது) தோழிமார்களும் நாங்களும்போல
மதுசூதன் பாழிமையில் பட்டு,madhusoodhan paalimaiyil pattu - எம்பெருமானது பெருமிடுக்கிலே அகப்பட்டு
அவன் கண் பாசத்தால்,avan kan paasathaal - அவனிடத்து விருப்பத்தினால்
நைவாயே,naivaayae - அழிகின்றனையோ?
வாழிய,vaazhiya - (இந்தத் துன்பம் தீர்த்து) வாழ்வாயாக.
2790திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (கலாமாத்ரமாய் தேய்ந்து தோன்றின இளம்பிறைச் சந்திரனைக்கண்டு அந்தோ!உன் வடிவில் எழிலெல்லாம் இழந்தாயே! நீயும் அப்பெருமானுடைய பொய்யுரையிலே நம்பிக்கை கொண்டு நான் பட்டபாடு படுகின்றாய்போலும் ! என்கிறாள்.) 6
நைவாய வெம்மே போல் நாண் மதியே நீ இந்நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து தேம்புதியால்
ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –2-1-6
நாள் மதியே,naal madhiye - நிரம்பின சந்திரனே !
நைவு ஆய,naivu aay - நைந்து போவதையே இயற்கையாகவுடைய
எம்மே போல்,emmae pol - எங்களைப்போல (ஒளி யுரவாகிய) நீயும்
இ நாள்,i naal - இக்காலத்திலே
மை வான்,mai vaan - காரிய ஆகாயத்திலுள்ள
இருள்,irul - இருளை
அகற்றாய்,akkaraay - நீக்குகின்றிலையாகி
மாழாத்து,maazhaathu - மயங்கி
தேம்புதி,thembuthi - குறைபடுகின்றாய்;
ஆல்,aal - ஆதலால்
ஐ வாய்,ai vaay - ஐந்து முகங்களுடைய
அரவு அணை மேல்,aravu anai mel - சேஷசயனத்தின் மீது உள்ள
ஆழி பெருமானார்,aazhi perumanaar - சக்கரபாணியான எம்பெருமானது
மெய் வாசகம் கேட்டு,mei vaasagam kettu - உண்மையான வார்த்தையைக் கேட்டு
உன் மெய் நீர்மை,un mei neermai - உனது வடிவின் குணமாகிய ஒளியை
தோற்றாயே,thoorraayae - இழந்தாய் போலும்!
2791திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஒருவரையொருவர் காணவொண்ணாதபடி மூடின இருளைக்குறித்து ‘இருளே. எம்பெருமானைப் பிரிந்து நோவுபட்டிருக்கிறவென்னை நீயும் இப்படி ஹிம்ஸிப்பாயோ? என்றுபொடிந்து பேசுகின்றாள்.) 7
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணற்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7
கனம் இருளே,kanam irulae - கனத்திருக்கின்ற இருளே !
எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியான
நாரணற்கு,naaranarkku - நாராயணனுக்கு
மடம் நெஞ்சம் தோற்றோம்,madam nenjama thortrom - விதேயமான நெஞ்சைப் பறிகொடுத்தோமாகி
எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை,em aatrraamai sollu aluvoamai - எங்கள் ஆற்றாமையை வாய்விட்டுச் சொல்லி அழுகின்ற எங்களை
நீ,nee - நீ
நடுவே,naduve - நடுவில்நுழைத்து
வேற்றோர்வகையின்,vertror vakaiyin - பவைகர்கள் நலிகிற வகையைக் காட்டிலும்
கொடிது ஆய்,kodithu aay - கொடுமையாகி
எனை ஊழி,enai oozhi - காலமுள்ளவளவும்
மாற்றாண்மை,maattraanmai - பகைவரது தன்மையை ஆளகையில்
நிற்றியோ,nirtriyo - நிற்கிறாயோ?
வாழி,vaazhi - இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக.
2792திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்.) 8
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய்
மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8
இருளின்,irulil - இருட்டினுடைய
திணி,thini - செறிந்த
வண்ணம்,vannam - நிறத்தை யுடைய
மா,maa - பெரிய
நீர்சுழியே,neerchuzhiyae - நீருள்ள சுழியே!
போய்,poi - மிகவும்
மருள் உற்று,marul utru - மருட்சி யடைந்து
இரா பகல்,ira pakal - இரவும் பகலும்
துஞ்சிலும்,thunjilum - முடிந்தாலும்
நீ துஞ்சாய்,nee thunjaay - நீ ஓய்கின்றாயில்லை;
ஆல்,aal - ஆதலால்
உருளும் சகடம்,urulum sakadam - உருளுகின்ற சகடத்தைத் திருவடிகளா லுதைத்தொழிந்த
பெருமானார்,perumanaar - எம்பெருமானுடைய
அருளின்,arulin - க்ருபாகுணத்திலுண்டான
பெரு நசையால்,peru nasaiyaal - பேராசையினால்
ஆழாந்து,aazhaanthu - ஆழ்ந்து
நொந்தாயே,nondhaayae - நோவுபட்டாயோ?
2793திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (ஆற்றாமையாலே தன் மாளிகையிலே புகுந்து அங்கு எரிகிற விளக்கைக் கண்டு அதன் வெப்பத்தைப் பார்த்து ‘உடம்பில் கைவைக்கவொண்ணாதபடி விரஹஜ்வரம் பற்றி யொரியா நின்றது’ என்று கொண்டு நீயும் என்னைப் போலே பகவத் விரஹத்தாலே வெதும்புகிறாயோ வென்கிறாள்.) 9
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி உள்ளளுலர்த்த
நந்தா விளக்கமே நீயும் அளியத்தாய்
செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9
நந்தா விளக்கமே,nandhaa vilakkamae - அழிவில்லாத விளக்கே !
அளியத்தாய்,aliyathaay - இரங்கத்தகுதியுடைய
நீயும்,neeyum - நீயும்
நொந்து ஆரா காதல் நோய்,nondhu aaraa kaadal noi - நோவுபட்டு மாளாத ஆசை நோயானது
மெல் ஆவி,mel aavi - மெல்லிய பிராணனையும்
உள் உலர்த்த,ul ularttha - உள்ளே உலர்த்த,
செம் தாமரை தடகண்,sem thaamarai thadakan - சிவந்த தாமரை மலர் போன்ற பெரிய கண்களையும்
செம் கனி வாய்,sem kani vaay - சிவந்த கோவைக்கனி போன்ற வாயையுமுடைய
எம்பெருமான்,emperumaan - எம்பெருமானது
அம் தண்துழாய் தாமம்,am thandhuzhaay thaamam - அழகிய குளிர்ந்ததிருத்துழாய் மாலையின் மீதுள்ள
ஆசையால்,aasaiyaal - விருப்பத்தினால்
வேவாயே,vevaayae - வேகின்றாயோ?
2794திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி அளவுகடந்த ஆர்த்தியோடே துடிக்கிற ஆழ்வாரைக் குளிர நோக்கி ஒருவாறு சுகப்படுத்த வந்து நெருங்கிய எம்பெருமானைக் குறித்து, பிரானே! சிலநாள் நலிந்து விடுவதன்றியே மேன்மேலும் மிகவும் நலிகின்ற விரஹவ்யஸநமானது ஏற்கனவே மெலிந்துபோன ஆத்மாவை மிகவுதட நோவு படுத்த இரவும்பகலும் இடைவிடாதே உன்னுடைய குணசேஷ்டிதங்களையே நினைந்து நிநைந்து உள்கரைந்து உருகும்படியாகச் செய்திட்டாய்; இவ்வளவு செய்த நீ இனி ஒருகாலமும் என்னைக் கைவிடாதே கொள்ளவேணும் என்று பிரார்த்திப்பதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.) 10
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி யுள்ளுலர்த்த
ஓவாது இராப்பகல் உன் பாலே வீழ்த்து ஒழிந்தாய்
மாவாய் பிளந்த மருதிடை போய் மண் அளந்த
மூவா முதல்வா இனி எம்மைச் சோரேலே –2-1-10

மா வாய் பிளந்து,maa vaay pilandhu - குதிரை வடிவாக வந்த கேசி யென்னு மசுரனுடைய வாயைப் பிளந்தவனும்
மருது இடை போய்,maruthu idai poi - இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று அவற்றை முறித்துத் தள்ளினவனும்
மண் அளந்த,man alandha - (த்ரிவிக்ரமனாய்ப்) பூமியை அளந்து கொண்டவனுமான
மூவா முதல்வா,moo va mutalva - அழியாமுதல்வனே!
வேவு ஆரா,vevu aaraa - எவ்வளவு வேவச் செய்தும் த்ருப்தியடையாத
வேட்கை நோய்,veṭkai noay - ஆசை நோயானது
மெல் ஆவி,mel aavi - மெல்லிய ஆம்மாவை
உள் உலர்த்த,ul ularttha - குரத்துவற்றாக வற்றுவிக்க
இராப் பகல்,iraab pagal - இரவும் பகலும்
ஓவாது,oavaadhu - இடைவிடாமல்
உன்பாலே,unpaale - உன்னிடத்திலேயே
வீழ்த்து,veelthu - ஈடுபடுத்தி
ஒழிந்தாய்,ozhindhaay - உபேக்ஷரித்துவிட்டாய்; (போனது போகட்டும்)
இனி,ini - இனிமேல்
எம்மை,emmai - எம்மை
சோரேல்,sorel - கைவிடவேண்டா.
2795திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இப்படி எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் முடியப்புகுகிற தம்மை உய்வித்தற் பொருட்டு ஸேவை ஸாதித்தருளின எம்பெருமானைக் கண்டு தாம் உஜ்ஜீவித்து, தம்முடைய உஜ்ஜீவனத்தாலே எம்பெருமானுடைய ஸர்வேச்வரத்வம் ஒளி பெற்ற படியைக்கண்டு சாலவுமுவந்து அவனுடைய ஸர்வேச்வரத்தை நெஞ்சார அநுபவித்து, இப்படி ஸர்வேச்வரனாயிருந்த எம்பெருமான் பக்கலுள்ள ஆசையாலே இத்திருவாய்மொழியை நியதமர்க அநுஸந்திக்குமவர்கள் ஒருநாளும் எம்பெருமானைப் பிரியார்கள்.இது திண்ணம் என்று இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.) 11
சேராத எப்பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்
ஓராயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண்ணனவே –2-1-11
சோராத,sooraada - ஒன்றுங்குறையாத
எப்பொருட்கும்,eporutkum - எல்லாப் பொருள்களுக்கும்
ஆதி ஆம்,aadhi aam - காரண பூதனாகப்பெற்ற
சோதிக்கே,sothikke, jyothike - ஒளியுருவனான எம்பெருமானுக்கே
ஆராத காதல்,aaraadha kaadal - அடங்காத ஆசையையுடையரான
குருகூர்சடகோபன்,kurukoor sadagopan - ஆழ்வார்
ஓர்ஆயிரம்,oar aayiram - ஓராயிரமாக
சொன்ன அவற்றுள்,sonna avartrul - அருளிச்செய்த பாசுரங்களுக்குள்ளே
இவை பத்தும்,ivai pattum - இ;ந்த பத்துப் பாசுரங்களையும்
சோரார்,sooraar - மறவாதவர்கள்
வைகுந்தம் –,vaigundham, vaikuntam - பரமபதத்தை
திண்ணெனவே,thinave - திடமாகவே
விடார் கண்டீர்,vidar kandeer - விடாமல் நித்யானுபவம் பண்ணப்பெறுவர்கள். (கண்டீர்—–முன்னிலையசை.)
2796திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (கண்ணபிரானே உலகுக்கெல்லாம் நிர்வாஹகனென்கிறார். மோக்ஷம் முதலிய ஸகல புருஷார்த்தங்களையும் அளித்தருள்பவனாய், எண்ணிறந்த திருக்குணங்களையுடையனாய் அக்குணங்களைக்காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனாய், பிரளயாபத்து வந்தபோது பூமி முதலான ஸகல லோகங்களையும் ஒருசேரத் திருவயிற்றிலே வைத்து நோக்குபவனான நமது கண்ணபிரானே உலகுக் கெல்லாம் கண்ணாயிருப்பவன்) 1
திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1
திண்,thin - திண்மையை யுடைய
நன்,nan - நல்ல
வீடு முதல்,veedu mudhal - மோக்ஷம் முதலாக
முழுதும் ஆய்,muzhudum aay - எல்லாவற்றையும் அளிப்பவனாய்
ஏண்ணின் மீதியன்,aennin meedhiyan - நினைவுக்கு அப்பாற்பட்டவனாய்
எம்பெருமான்,emperumaan - எமக்கு ஸ்வாமியாய்
மண்ணும் விண்ணும் எல்லாம்,mannum vinnnum ellaam - பூமியும் ஆகாசமுமாகிய முழுவதையும்
உடன் உண்ட,udan unta - ஒருங்கே அமுது செய்தவனான
நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானே
கண்,kan - (உலகுக்கு) இறைவன்
அல்லது,allathu - அல்லாமல்
ஓர்கண்,orkan - வேறொரு தலைவன்
இல்லை,illai - இல்லை
2797திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (“நங்கண்ணன் கண்ணல்லதில்லையோர்கண்ணே”— என்றருளிச் செய்த ஆழ்வாரை நோக்கிச்சிலர் ’இப்படிச் சொல்லலாமோ.? பிரமன் சிவன் முதலானாரும் ஈச்வரர்கள் என்று காட்டுகின்ற பிரமாணங்கள் இல்லையோ? என்ன; அவர்களது சரித்திரங்களை ஆராய்ந்துபார்த்தால் அவர்கள் ஈச்வரர்களாகத் தகுதியில்லை; ஆபத்து வந்த காலத்திலே அவர்களைக் காத்தருளினவனாக ப்ரஸித்தி பெற்ற எம்பெருமானே ஈச்வரன் என்று நிலைநாட்டுகிறாரிதில். *வேதாபஹார குருபாதக * இத்யாதி ஸ்தோத்ர ரத்த ஸ்ரீஸிக்திக்கு இப்பாசுரம் மூலம்.) 2
ஏ பாவம் பரமே யேழு லகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பாரார்
மா பாவம் விட அரற்குப் பிச்சை பெய்
கோபால கோளரி யேறன்றியே –2-2-2
மா பாவம் விட,maa paavam vida - மிகப் பெரிதான (பிரமஹந்தி) பாபமானது விட்டு நீங்கும்படி
அரற்கு,ararku - சிவபிரானுக்கு
பிச்சை பெய்,picchai pei - பிக்ஷையிட்ட
கோபாலன்,gopaalan - கோபாலனென்கிற
கோள் அரி ஏறு அன்றி,kol ari eru andri - வலிமை தாங்கிய ஆண்சிங்கமல்லது (வேறொருவர்)
ஏழ் உலகும்,ez ulakum - ஏழுலகங்களையும்
ஈ பாவம் செய்து,ee paavam seythu - பாவம் தொலைந்ததாகச் செய்து
அருளால்,arulaal - கிருபையினாலே
அளிப்பார்ஆர்,alippaarAar - காப்பவருண்டோ?
ஏ பாவம்,e paavam - ஐயோ?
பரமே,parame - எம்பெருமானது ஏற்றத்தைச் சொல்லிமுடித்தல் நம்மாலாகுமோ?
2798திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (அயர்வறுமமரர்கள் தன்னுடைய சீலகுணத்தைக் கண்டு தொழுகைக்காக ஸர்வேச்வாரியான பெரிய பிராட்டியாரோடொக்கப் பிரமன் முதலானார்க்கும் தன்னை ஆச்ரயமாகக் கொடுத்துக் கொண்டிருக்கையாலும், ஸகல லோகங்களும் திருவடிகளினுள்ளே யடங்கும்படி அளந்தருளுகையாலும் இவனே ஸர்வேச்வரன், வேறில்லை யென்கிறார்.) 3
ஏறனைப் பூவனைப் பூ மகள் தன்னை
வேறின்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேறன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மாறனில் மிக்குமோர் தேவுமுளதே–2-2-3
ஏறனை,aeraanai - ரிஷப வாஹனனான ருத்ரனையும்
பூவளை,poovaalai - தாமரைப் பூவைப் பிறப்பிடமாக வுடையனான பிரமனையும்
பூ மகள் தன்னை , poo magal thanai - அலர்மேல் மங்கையான ஸ்ரீமஹா லக்ஷ்மியையும்
வேறு அன்றி,veru andri - வேறாக அல்லாதபடி
தன் உள்,than ul - தனது திருமேனியில்
விண் தொழ,vin thozha - விண்ணுளார் தொழும்படி
வைத்து,vaithu - இடங்கொடுத்து வைத்தவனாயும்
மேல் தன்னை,mel thanai - மேலுலகத்தை
மீதிட,meedhida - மேலிடும்படி
நிமிர்ந்து,nimirndhu - வளர்ந்து
மண்,man - பூமியை
கொண்ட,konda - அளந்து கொண்டவனாயுமிரா நின்ற
மால் தனில் மிக்கும்,maal thanil mikkum - ஸர்வேச்வரனுக்கு மேற்படவும்
ஓர்தேவும் உளதே,oartevum uladhe - ஒரு தெய்வமும் உண்டோ?
2799திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (பூ அணிதற்கு ஈடான ஸௌந்தர்ய ஸௌகுமார்யங்களும், பூஜையீடு தற்கீடான முதன்மையும் எம்பெருமானுக்கன்றி வேறு சிலர்க்கு இல்லாமையாலே அவனே ஸர்வேச்வரனென்கிறார்.) 4
தேவும் எப்பொருளும் படைக்க
பூவில் நான்முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே –2–2-4
தேவும்,Thevum - தேவர்களையும்
எப்பொருளும்,epporulum - மற்றெல்லாப் பொருள்களையும்
படைக்க,padaikka - ஸ்ருஷ்டிக்க
பூவில்,poovil - (திருநாபிக்) கமலத்திலே
நான்முகனை,naanmuganai - பிரமனை
படைத்த,padaitha - உண்டாக்கின
தேவன்,thevan - பர தெய்வமாகிய
எம்பெருமானுக்கு அல்லால்,emperumaanukku allaal - எமது ஸ்வாமிக்கே யன்றி (வேறு சிலர்க்கு)
பூவும்,poovum - புஷ்பங்களும்
பூசனையும்,poosanaiyum - திருவாராதனமும்
தகுமே,thagume - தகுமோ ? (தகாது)
2800திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எம்பெருமானுக்குப் பரத்வ ஸ்தாபங்களானவற்றுக்குள்ளே புண்டாரிகாக்ஷத்வமும் ஒன்றாதலால் அதனை இங்கு அருளிச்செய்கிறார்.) 5
தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5
தகும்,Thagum - தகும் (ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குத்) தகுதியான
சீர்,Seer - (சிறந்த ஞானம் முதலிய ) குணங்களையுடையனான
தன்,Than - தன்னுடைய
தனி,Thani - ஒப்பற்ற
முதலினுள்ளே,Mudhalinule - உலக காரணமான ஸங்கல்பத்திற்குள்ளே
மிகும்,Migum - மிகுந்த
தேவும்,Thevum - (பிரமன் முதலிய) தேவர்களையும்
எப்பொருளும்,Epporulum - (மணிசர் முதலிய) மற்றெல்லாப் பொருள்களையும்
படைக்க,Padaikka - படைப்பதற்கு
தகும்,Thagum - தகுதி பொருந்தியவனும்
கோலம் தாமரை கண்ணன்,Kolam thamarai kannan - அழகிய புண்டாரிகாக்ஷனுமாகிய
எம்மான்,Emmaan - எம்பெருமானைவிட
மிகும்சோதி,Migumsothi - மிகுந்த ஒளி பொருந்திய
மேல்,Meel - மேலான பொருளை
அறிவார்யவர்,Arivaaryavar - அறிபவர் யாவர்?
2801திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திரு வயிற்றிலே வைத்து ரக்ஷக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார்.) 6
யவரும் யாவையும் எல்லாப் பொருளும்
கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற
பவர்கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழியம் பள்ளியாரே –2-2-6
யவரும்,Yavarum - சேதனர்கள் யாவரும்
யாவையும்,Yaavaiyum - அசேதனங்கள் யாவையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - ஆகிய எல்லாப் பொருள்களும்
கவர்வு இன்றி,Kavarvu indri - நெருக்கமின்றியே
தன்னுள்,Thannul - தனது திருவயிற்றினுள்ளே
ஒடுங்க நின்ற,Odungu ninra - அடங்கும்படி நின்றவனும்
பவர் கொள்,Pavar kol - பரப்பைப்கொண்ட
ஞானம் வெள்ளம்,Gnaanam vellam - ஞானமிகுதியை
சுடர்,Sudar - தனக்குக் காந்தியாகவுடைய
மூர்த்தி,Moorthi - ஸ்வாமியுமான
அவர்,Avar - அந்த ஸர்வேச்வரன்
எம்,Em - எமது அநுபவத்திற்குரிய
அம்,Am - அழகிய
ஆழி பள்ளியார்,Aazhi palliyar - ப்ரளயார்ணவ சயநராவர்
(ஆழியம்பள்ளியார் = திருப்பாற்கடலிற் கிடந்த கிடையைச் சொல்லவுமாம்
ப்ரளயார்ணவத்திலே ஆபத் ஸகனாய்க் கண் வளர்ந்தபடியைச் சொல்லவுமாம்)
2802திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸகல லோகங்களுக்கும் ஆபத்திலே இடங்கொடுக்கையாகிற சிறந்த ஔதார்யத்தையடையனாய், ஸகல லோகத்தையம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான ஸர்வேச்வரனுடைய திவ்ய சேஷ்டிதங்களை ஆர்அறிய வல்லார்? என்னும் முகத்தாலே, இப்படிப்பட்ட அகடிதகடநா ஸமர்த்தனுக்கே ஸர்வேச்வரத்வம் தகும் என்கிறாராயிற்று) 7
பள்ளி யாலிலை யேழுலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுள்ளார் அறிவார் அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –-2-2-7
பள்ளி,Palli - படுக்கை
ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிராக
ஏழ் உலகும்,Ezh ulagum - ஏழுலகங்களையும்
கொள்ளும்,Kollum - கொள்ளக் கடவதான
வல்,Val - உறுதியான
வயிறு,Vayiru - திருவயிற்றையுடையனான
பெருமான்,Perumaan - பெரியோனாகிய
அவன் தன்,Avan than - அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய
கள்ளம்,Kallam - ஒருவராலுமறியக்கூடாததான
மாயம்,Maayam - ஆச்சரீரயமான
மனம் கருத்து,Manam karuthu - திருவுள்ளக்கருத்தை
உள்ளுள்,Ullul - மனத்தினால்
அறிவார்ஆர்,Arivaarar - அறியவல்லவர் யாவர்?
2803திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாக வுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம் பொருந்துமென்கிறார்.) 8
ருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப்பிரானை யன்றி யாரே
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தன்னுள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8
கருத்தின்,Karuthin - தனது ஸங்கல்பத்தினாலே
தேவும்,Thevum - தேவர்களையும்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - மற்றெல்லாப் பொருள்களையும்
வருத்தித்த,Varutthitha - வ்ருத்தி செய்த (உண்டாக்கின)
மாயம்,Maayam - ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய
பிரானை அன்றி,Piraanai andri - எம்பிரானைத் தவிர்த்து
மூ உலகும்,Moo ulagum - மூவுலகங்களையும்
திண் நிலை,Thin nilai - உறுதியான நிலைமையை யுடையனவாக
திருத்தி,Thiruththi - அமைத்து
தம் உள்,Tam ul - தம் நினைவுக்குள்ளே
இருத்தி,Iruththi - வைத்து
காக்கும்,Kaakkum - காப்பாற்றுவதையே
இயல்வினர்,Iyalvinar - இயற்கையாகவுடையவர்
ஆர்,Aar - எவர் ?
2804திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்கள் மூன்றும் இவனிட்ட வழக்காகையாலும் இவனே யீச்வரனென்கிறார்.) 9
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன்னுந்தி யுள்ளே
வாய்த்த திசைமுகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9
காக்கும் இயல்வினன்,Kaakkum iyalvinan - ரக்ஷரிப்பதையே தொழிலாகவுடைய
கண்ண பெருமான்,Kann perumaan - ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா
சோக்கை செய்து,Sokkai seydhu - (ஸம்ஹார ஸமயத்துலெ எல்லாம் தன்னிடத்துச்) சேரும்படி செய்து
தன் உந்தி உள்ளே,Than undhi ulle - தனது திருநாபிக்குள்ளே
வாய்த்த,Vaaytha - ஸ்ருஷ்டி காரியத்திற்கு யோக்யனான
திசைமுகன்,Thisai mukan - நான்முகனையும்
இந்திரன்,Indiran - இந்திரனையும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களையும்
தெய்வ உலகுகள்,Theiva ulagukal - (அவர்கட்கு இருப்பிடமான) திவ்யலோகங்களையும்
ஆக்கினான்,Aakkinan - உண்டாக்கினான்.
2805திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (எவர்களை நீங்கள் தெய்வமாகக் கருதுகின்றீர்களோ அவர்களும் எம்பெருமானையே பணிந்து துதிக்கின்றார்களாதலால் அவர்களது இசைவினாலும் எம்பெருமானுக்கே பரத்வமுண்டென்று எளிதில் அறியலாமே என்கிறார்.) 10
கள்வா எம்மையும் ஏழுலகும் நின்
னுள்ளே தோற்றிய இறைவ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே–2-2-10
வெள் ஏறன்,Vel yeran - வெளுத்த எருதை வாஹனமாகவுடைய சிவபிரானும்
நான்முகன்,Naanmugan - பிரமனும்
இந்திரன்,Indiran - இந்திரனும்
வானவர்,Vaanavar - மற்றுமுள்ள தேவர்களும (ஒன்று கூடி)
கள்வா,Kalva - “கள்வனே!
எம்மையும்,Emmayum - எங்களையும்
ஏழ் உலகும்,Ezhu ulagum - ஏழுலகங்களையும்
நின் உள்ளே,Nin ulle - உனது ஸங்கல்பத்தினுள்ளே
தோற்றிய,Thotriya - தோன்றுவித்த
இறைவ,Iraiva - ஸ்வாமியே!”
என்று,Enru - என்று சொல்லி
புள் ஊர்தி,Pul oorthi - கருட வாஹனனாகிய ஸர்வேச்வரனுடைய
கழல்,Kalzal - திருவடிகளை
பணிந்து,Paninthu - வணங்கி
ஏத்தவர்,yetthavar - துதிப்பர்
2806திருவாய்மொழி || (2-2–திண்ணன் வீடு) (இத் திருவாய் மொழியைக் கருத்துடனே கற்று வல்லார்க்கு, எம்பெருமான் ஈச்வரனல்லன்’ என்று புத்தி பண்ணுதல். ‘இதர தேவதைகள் ஈச்வரர்கள்’ என்று புத்தி பண்ணதல் ஆகிற அவத்யமொன்றும் உண்டாகமாட்டாதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏத்த வேழுலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்ந்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லார்க்கு இல்லையோ ரூனமே –2-2-11
ஏத்த,yetha - (அனைவரும் துதிக்க
ஏழ் உலகும் கொண்ட,Ezhu ulagum konda - எல்லா வுலகங்களையு மளந்து கொண்ட
கோலம் கூத்தனை,Kolam kootthanai - அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து
குருகூர்சடகோபன் சொல்,kurukoor sadagopan sol - ஆழ்வார் அருளிச் செய்த
வாய்த்த,Vaaytha - உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில்
இவை பத்து,Ivai pattu - இப் பத்துப் பாசுரங்களையும்
உடன்,Udan - அர்தத்தோடு (கற்று)
ஏத்த வல்லவர்க்கு,yetha vallavarkku - ஸ்துதி சொல்ல வல்லவர்கட்கு
ஓர் ஊனம் இல்லை,or oonam illai - ஒரு குறையுமில்லையாகும்
2807திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஸர்வேச்வரனைக் கொண்டாடப் பிறந்த ஆழ்வார் தம் திருவுள்ளத்தைக் கொண்டாடடுகிறாரிப்பாட்டில். ஏனெனில் கைங்காரியச் செல்வத்திற்கு இட்டுப் பிறந்து வைத்து நெடுநாளாக இழந்து கிடந்த நமக்கு இந் நெஞ்சினாலன்றோ இன்று பேறுவாய்த்தது என்ற உவப்பினால். ராஜ்யத்தை இழந்து கிடந்த வொரு ராஜகுமாரனை ஒருவன் ராஜ்யத்திலே புகுவித்தால் ‘இவனாலேயன்றோ நாம் இப்பேறு பெற்றது’ என்று அவனைக் கொண்டாடுவர்களன்றோ, அதுபோல.) 1
ஊனில் வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே–2-3-1
ஊனில்,Oonil - மாம்ஸ ரூபமான சரீரரத்தில்
வாழ்,Vaazh - வாழ்கின்ற
உயிரே,Uyire - நெஞ்சமே!
நல்லை போ,Nallai po - நீ நல்லவன் காண்; (ஏனென்றால்)
உன்னை பெற்று,Unnai petru - உன்னை ஸ்வாதீனமாகப் பெற்றதனால்,
வான் உளார்பெருமான்,Vaan ulaarperumaan - நித்யஸூரிகட்குத் தலைவனும்
மதுசூதன்,Madhusoodhan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
என் அம்மான் தானும்,En ammaan thaanum - எம்பெருமானாகிய அவனும்
யானும்,Yaanum - (அவனுக்கு அடிமைப்பட்ட) நானும்
தன் உள்ளே,Than ullae - தனக்குள்ளே
எல்லாம்,Ellaam - எல்லா வகை யினிமையுமாம்படி
தேனும்,Thenum - தேனும் தேனும்
பாலும்,Paalum - பாலும் பாலும்
நெய்யும்,Neyyum - நெய்யும் நெய்யும்
கன்னலும்,Kannalum - அக்காரமும்
அமுதும்,Amudhum - அம்ருதமும் அம்ருதமும்
ஒத்து,Othu - ஒன்று சேர்ந்தாற் போன்று
கலந்தொழிந்தோம்,Kalanthozhindhom - கலந்து விட்டோம்
2808திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் நெஞ்சைக் கொண்டாடினார் சிறிது ஆராய்ந்து பார்த்தவாறே அந்த நெஞ்சை இசைவித்ததும் ஸர்வேச்வரனே யாதலால் அந்த எம்பெருமானையன்றோ கொண்டாடவேணுமென்று அது செய்கிறாரிப்பாட்டில்) 2
ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா!
ஒத்தாய் எம்பொருட்கும், உயிராய், என்னைப் பெற்ற
அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே–2-3-2
ஒத்தார் மிக்காரை,Othaar mikkarai - ஸமான மானவர்களையும் மேற்பட்டவர்களையும்
இலை ஆய,Ilai aaya - உடையனல்லாத
மா மாயா,Maa maaya - பெரிய ஆச்சர்ய குணங்களை யுடைவனே!
எப்பொருட்கும்,Epporutkum - எல்லாப் பொருள்களுக்கும்
ஒத்தாய்,Othaay - ஒப்பாக அவதரித்தவனே!
(எப்பொருட்கட்கும்) உயிர்ஆய்,(Epporudhukkum) uyir-aaya - எல்லார்க்கும் பிராண பூதனாய்
என்னைப் பெற்ற,Ennaip petra - என்னை யுண்டாக்கின
அ தாய் ஆய்,A thaai aay - அந்தத் தாயாகியும்
தந்தை ஆய்,Thandhai aay - பிதாவாகியும்
அறியாதன அறிவத்த அத்தா,Ariyadhan ariyatha athaa - ஆசார்யனாகியும் உபகார கனானவனே!
நீ செய்தன,Nee seidhana - நீ செய்த உபகாரங்களை
அடியேன் அறியேன்,Adiyaen ariyaen - அடியேன் அளவிட்டறியகில்லேன்
2809திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (தம் விஷயத்தில் எம்பெருமான் செய்தருளின நன்மைகளைப் பேசுகிறாரிதில்.) 3
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவி யுள் கலந்தே–2-3-3
அறியாமை,Ariyaamai - (தனது உண்மையை பிறர்) அறியாதபடி
குறள் ஆய்,Kurral aay - வாமன மூர்த்தியாகி
மாவலி,Maavali - ‘மகாபலியே!
மூ அடி நிலம் என்று,Moo adi nilam endru - மூன்றடி நிலம் (வேணும்) என்று சொல்லி
அறியாமை,Ariyaamai - (கபட குணத்தை பிறர்) என்று சொல்லி
வஞ்சித்தாய்,Vanjithaay - வஞ்சித்து நிலத்தைக் கவர்ந்தவனே!
எனது ஆவி உள் கலந்து,Enadhu aavi ull kalanthu - எனது நெஞ்சினுள்ளே சேர்ந்து
அறியா மா மாயத்து அடியேனை,Ariya maa maayathu adiyenai - அறியாமையை விளைவிப்பதான ஸம்ஸாரத்திலாழ்ந்து கிடந்த என்னை
அறியா காலத்துள்ளே,Ariya kaalathulle - தொண்டு படுதற்கு அறியா அந்தக் காலத்திலே
அடிமைக் கண்,Adimai kan - தொண்டு செய்யும் தொழிலிலே
அன்பு,Anbu - ஆவலை
செய்வித்து வைத்தாய்,Seyvithu vaithaay - உண்டாக்கி வைத்தாய்
ஆல்,Aal - ஆச்சர்யம்
2810திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (உலகத்தில் ஒருவர் ஒரு உபகாரஞ்செய்தால் உபகாரம் பெற்றவர் பிரதியுபகாரஞ் செய்வதென்று ஒரு முறைமை யுண்டாதலால் அதன் படியே ஆழ்வாரும் எம்பெருமானுக்குக் கைம்மாறு செய்யக் கருதி ஆத்ம ஸமாப்பணமாகிற கைம்மாறு செய்ததாக முந்துறக் கூறி, உடனே ஆராய்ந்து பார்த்து, ஆத்ம வஸ்து நம்முடைய தாகிலன்றோ நாம் கொடுத்ததாக ஆகும் நாமும் நம்முடைமையுமெல்லாம் அவலுடைய சரக்காகவே யிருக்கும் போது நாம் கொடுத்ததாகக் கூறுவது பிசகு என்று அநுதபித்து ‘உன் வஸ்துவை நீயே கைப் பற்றிக் கொண்டா யத்தனை யல்லது நான் ஸமர்ப்பித்ததாகச் சொல்லுவது உசிதமன்று’ என்று தலைக் கட்டுகிறார்.) 4
எனது ஆவியுள் புகுந்த பெரு நல் உதவிக் கைம்மாறு
என தாவி தந்தொழிந்தேன் இனி மீள்வது என்பது உண்டே?
என தாவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்!
எனது ஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டாக்கினையே–2-3-4
பொழில் ஏழும் உண்ட,Pozhil ezhum unda - (பிரளயத்தில்) ஏழுலகங்களையும் வயிற்றில் வைத்து நோக்கின
எந்தாய்,Endhaay - எம்பெருமானே!
எனது ஆவிஉள் கலந்த,Enadhu aavi ull kalandha - என் ஆத்மாவுக்குள்ளே நீ ஒரு தன்மையாய்க் கலக்கப் பெற்ற
பெரு நல் உதவி,Peru nal udhavi - நல்ல மஹோபகாரத்திற்கு
கைம்மாறு,Kaimmaaru - பிரதியுபகாரமாக
எனது ஆவி,Enadhu aavi - என் ஆத்மாவை
தந்தொழிந்தேன்,Thandhozhindhaen - உனக்கு அர்ப்பணஞ் செய்து விட்டேன்
இனி,Ini - இனி மேல்
மீள்வது என்பது உண்டே,Meelvadhu enbadhu unde - கொடுத்ததை மீட்டுப் பெற்றுக் கொள்வதென்பது உண்டோ? இல்லை;
எனது ஆவியும்,Enadhu aaviyum - எனது ஆத்மாவுக்கும்
ஆவி,Aavi - ஆத்மாவாயிருப்பவன்
நீ,Nee - நீ (ஆதலால்)
எனது ஆவி? யார்,Enadhu aavi? Yaar - என் ஆத்மா யார்?
யான் ஆர்,Yaan aar - யான் ஆர்
தந்த நீ,Thandha nee - படைத்துக் கொடுத்த நீ தானே
கொண்டாக்கினை,Kondakkinai - கவர்ந்து கொண்டவனானாய்.
2811திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பிரளய வெள்ளத்திலே மூழ்க நின்ற ஜகத்தை யெடுத்தருளினாப் போலே ஸம்ஸார ஸாகரத்திலே மூழ்கிக் கிடக்கிற என்னை உன் திருவடிகளில் உறவையறிவித்து எடுத்தருளுகையாலே இனி யுன் திருவடிகளைப் பெற்றேனென்று மகிழ்ச்சி தோற்றப் பேசுகிறார்.) 5
இனியார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்!
கனிவார் வீட்டின்பமே! என் கடற்படா அமுதே!
தனியேன் வாழ் முதலே!! பொழில் ஏழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய்! நுன பாதம் சேர்ந்தேனே–2-3-5
யார்,Yaar - எப்படிப் பட்டவர்களுடையவும்
ஞானங்களால்,Gnaanangalal - ஞான விசேஷங்களாலும்
எடுக்கல் எழாத,Edugal ezhadha - க்ரஹிக்கப் பார்த்தாலும் க்;ரஹிக்க முடியாத
எந்தாய்,Endhaay - எம்பெருமானே !
கனிவார்,Kanivaar - (உன் பக்கலில்) மனங்கனிந்தவர்களுக்கு
வீடு இன்பமே,Veedu inbamae - மோக்ஷ ஆனந்தமே வடிவெடுத்தது போலிருப்பவனே
கடல் படா,Kadal padaa - உப்புக் கடலிலுண்டாகாத
என் அமுதே,En amudhe - எனக்கு போக்கியமான அம்ருதமே!
தனியேன்,Thaniyaen - அத்விதீய பக்தனான என்னுடைய
வாழ்,Vaazh - வாழ்ச்சிக்கு
முதலே,Mudhale - முதற் காரணமே!
பொழில் ஏழும்,Pozhil ezhum - ஏழுலகங்களையும்
ஏனம் ஒன்று ஆய்,Enam ondru aay - ஒப்பற்ற வராஹ ரூபியாகி
நுனி ஆர்,Nuni aar - கூர்மை மிகுந்த
கோட்டில்,Kotil - கோரப்பல்லிலே
வைத்தாய்,Vaithaay - வைத்தெடுத்தவனே!
இனி,Ini - இது முதலாக
உன பாதம்,Un paadham - உனது திருவடிகளை
சேர்ந்தேனே,Saerndhaenae - அடியேன் பிரியா திருப்பவனே.
2812திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நான் எம்பெருமானைப் பெற்றது இன்றைக்கோ? இவ் வாத்மாவுள்ள போதே பிடித்து எம்பெருமானைப் பெற்றவனல்லேனோ என்கிறார். நெடுநாளாகப் பிரிந்திருந்த பிரிவின் வருத்தம் ஒன்றும் தெரியாதபடி எம்பெருமான் தன்னோடே கலந்ததனாலுண்டான களிப்பு இங்ஙனே பேசுவிக்கின்றது காண்மின்.) 6
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியைத்
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாது அவர் உயிரைச்
சோர்ந்தே புகல் கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதன் முன்னமே–2-3-6
சேர்ந்தார்,Serndhaar - பக்தர்களினுடைய
தீ வினைகட்கு,Thee vinaikatku - கொடிய பாவங்களுக்கு
அரு நஞ்சை,Aru nanjai - ஆற்ற வரிதான விஷமாயிருப்பவனும்
திண் மதியை,Thin madhiyai - திடமான அத்யவஸாயத்தை அளித்தருள்பவனும்
நீர்ந்தார் தம் மனத்து பிரியாது,Neerndhaar tham manathu piryaadhu - தனக்கே அற்றுத் தீர்ந்தவர்களான பரமை காந்திகளின் மனத்தை விட்டுப் பிரியாமல்
அவர் உயிரை,Avar uyirai - அவர்களுக்கு உயிராயிருப்பவனும்
சோர்ந்து போகல் கொடா,Soarndhu pogal koda - தன்னைப் பிரிந்து விஷயங்களில் போகக் கொடாத
சுடரை,Sudarai - ஒளி யுருவாக வுள்ளவனும்
அரக்கியை,Arakkiyai - ராக்ஷஸியான சூர்ப்பணகையினது
மூக்கு,Mookku - மூக்கை
ஈர்ந்தாயை,Eerndhaayai - அறுத்தவனுமாகிய வுன்னை
அடியேன்,Adiyaen - நான்
முதல் முன்னமே,Mudhal munname - அநாதி காலமாக
அடைந்தேன்,Adaindhaen - சேரப் பெற்றவன்
2813திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேனடைந்தேன் முதல் முன்னமே” என்றார் அதனால் தம்முடைய நித்ய ஸம்ச்லேஷத்தைத் தெரிவித்துக்கொண்ட ஆழ்வார் இக்கலவிக்கு விச்சேதம் பிறந்தால் என்செய்வது? என்று சங்கித்து, அப்படி ஒருகால் விச்லேஷம் பிறக்குமாகில் தாரிக்கமாட்டேனென்று திருவுள்ளத்திலே கொண்டருள வேணுமென்று இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 7
முன்னல் யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் கவையே!
பன்னலார் பயிலும் பரனே!பவித்திரனே!
கன்னலே!அமுதே!கார்முகிலே!என் கண்ணா!
நின்னலால் இலேன் காண்;என்னை நீ குறிக் கொள்ளே–2-3-7
முன்,Mun - அநாதியாய்
நல்,Nal - விலக்ஷணமாய்
யாழ் பயில்,Yaazh payil - வீணையைப் பற்றி
நூல்,Nool - ஸங்கீத சாஸ்த்ரத்தின் படியேயான
நரம்பில்,Narambil - தந்திக் கம்பியிலே வருடப்பட்டு
முதிர்,Mudhir - முதிர்ந்த
சுவையே,Suvaiye - சுவை போன்றவனே! (பரம போக்யனே)!)
பல் நல்லார்,Pal nallaar - பல விலக்ஷணர்கள்
பயிலும்,Payilum - நித்யானுபவம் பண்ணப் பெற்ற
பரமனே,Paramane - பரம புருஷனே!
பவித்திரனே,Pavithirane - பரிசுத்தனே!
கன்னலே,Kannale - கரும்பின் சாறு போன்றவனே!
அமுதே,Amudhe - அமிருதம் போன்றவளே!
கார்முகிலே,Kaarmugile - காளமேகத் திருவுருவளே!
என் கண்ணா,En kanna - எனக்கு நித்யானுபவத்திற்கு உரிய கண்ண பிரானே!
நின்னலால்,Ninnalaal - உன்னை யன்றி
இலேன் காண்,Ilaen kaan - (வேறொருவரைத் தஞ்சமாக) உடையனல்லேன் காண்
என்னை,Ennai - இப்படிப்பட்ட என்னை
நீ குறிக்கொள்,Nee kuri kol - நீயே திருவுள்ளத்தில் கொண்டருள வேணும்.
2814திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (நெடுங்காலம் வருந்தி ஸாதிக்க வேண்டிய புருஷர்ர்த்தத்தை இந்த ஜன்மந் தன்னிலே அற்பகாலத்தில் எளிதாகப் பெற்றேனென்று பகவத் கடாக்ஷத்தின் பெருமையைப் பேசுகிறார்.) 8
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித் துண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே–2-3-8
உறி கொண்ட,Uri konda - உறிகளிலே சேமித்து வைத்த
வெண்ணெய்,Vennai - வெண்ணெயையும்
பால்,Paal - பாலையும்
ஒளித்து உண்ணும்,Ozhithu unnum - மறைந்திருந்து அமுது செய்த
அம்மான் பின்,Ammaan pin - எம்பெருமான் பின்னே
நெறிக் கொண்ட,Nerik konda - அவன் போன வழியே போகிற
நெஞ்சன் ஆய்,Nenjan aay - மனத்தை யுடையேனாய்
பிறவி துயா,Piravi thuya - ஸம்ஸாரத் தொல்லைகளை
கடிந்து,Kadindhu - நிராகரித்து
குறிக்கொள் ஞானங்களால்,Kuri kol gnaanangalal - யம நியமாதிகளாலே கொள்ளப் படுவதான ஞானங்களால் -விசேஷங்களாலே (உபாஸநாதிகளாலே)
எனை ஊழி,Enai oozhi - அநேக கல்ப காலங்களில்
செய்,Sey - செய்யப்பட வேண்டியதான
தவமும்,Thavamum - பக்தி யோகமாகிற தவத்தின் பயனை
கிறிக் கொண்டு,Kirik kondru - (பகவத் க்ருபையாகிற) உபாயத்தைக் கொண்டு
இப் பிறப்பே,Ippirappe - இந்தப் பிறவியில் தானே
சில நாளில்,Sila naalil - சில நாட்களில்
யான்,Yaan - அகிஞ்சநனாகிய அடியேன்
எய்தினன்,Eydinan - அடைந்தேன்.
2815திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (பரம பதத்திலே ப்ராப்தமாகக் கூடிய பகவத் குணாநுபவத்தை நான் இந் நிலத்திலேயே பெற்றேனென்று களித்துப் பேசுகிறாரிதில்.) 9
கடிவார் தண்ணந்துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படி வானம் இறந்த பரமன் பவித்திரன் சீர்ச்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே–2-3-9
கடி வார்,Kadi vaar - பரிமளம் மிக்க
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய திருத் துழாய் மாலையை யுடையனான
கண்ணன்,Kannan - ஸ்ரீ க்ருஷ்ணனாய்
விண்ணவர் பெருமான்,Vinnavar perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனாய்
வானம்,Vaanam - பரம பதத்திலும்
படி இறந்த,Padi irandha - ஒத்தார் இல்லாதவனான
பரமன்,Paraman - பரம புருஷனாய்
பவித்திரன்,Pavithiran - பரிசுத்தனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக் குணங்களிலே
செடி ஆர்நோய்கள் கெட,Chedi aarnoygal keda - தூறு நெருங்கினாற்போலே நெருங்கி யிருக்கின்ற ஸம்ஸார வியாதிகள் தொலையும்படி
படிந்து,Padindhu - கிட்டி
குடைந்து ஆடி,Kudaindhu aadi - அவகாஹத்து
அடியேன்,Adiyaen - தாஸனாகிய நான்
வாய் மடுத்து பருகி,Vaai maduthu parugi - வாயாரப் பருகி
களித்தேன்,Kalithaen - களிக்கப் பெற்றேன்.
2816திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (கீழ்ப்பாட்டில் “அடியேன் வாய்மடுத்துப் பருகிக் களித்தேன்” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! பாரிபூர்ணமான பேறுபெற்று விட்டீரன்றோ? இனியொரு குறையில்லையே; இனியுமக்கு நான் செய்யவேண்டியது ஒன்றுமில்லையே’ என்ன அதற்கு ஆழ்வார், ‘பெருமானே! இவ்விபூதியில் தான் இப்போது ப்ரஹ்மானந்தம் அனுபவிக்கிறேனென்பதில் ஸந்தேஹமில்லை; ஆனாலும் வி‘யாந்தரங்களின் நடுவே என்னை வைத்திருக்கின்றாயாதலால் இவ்வானந்தம் இங்கே நித்தியமாய்ச் செல்லாதாகையாலே ஒரு அப்ராக்ருத தேச விசேஷத்திலே சென்று அங்கு அடியார்களின் கோஷ்டியிலே அந்வயிக்க வேண்டிய தொன்றுண்டு அது எப்போது ப்ராப்தமாகுமோ? என்கிறார்.) 10
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளி கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாங்களையே–2-3-10
களிப்பும்,Kalipum - அல்ப ஸந்தோஷமும்
கவர்வும்,Kavarvum - மனக் கவலையும்
அற்று,Attru - ஒழிந்து
பிறப்பு,Pirappu - ஜன்மமும்
பிணி,Pini - வியாதிகளும்
மூப்பு,Moopu - கிழத் தனமும்
இறப்பு,Irappu - மரணமும்
அற்று,Attru - ஒழிந்து
ஒளிக் கொண்ட சோதியம் ஆய்,Olik kondta sodiyam aay - ஞானம் முதலிய ஒளிகளுக்கு ஒளியைத் தருவதாய் தான ஒளி யுருவை யுடையோமாய்.
துளிக்கின்ற,Thulikkindra - மழை பொழிகின்ற
வான்,Vaan - ஆகாசத்தையும்
இ நிலம்,I nilam - இந்தப் பூமியையும்
சுடர்,Sudar - ஒளி மிக்க
ஆழி சங்கு,Aazhi sanggu - திருவாழி திருச்சங்குகளை
ஏந்தி,Yendhi - தாங்கி
அளிக்கின்ற,Alikkindra - ரஷித்தருள்கின்ற
மாயன் பிரான்,Maayan piran - ஆச்சர்ய சேஷ்டிதனான பரம புருஷனுடைய
அடியார்கள்,Adiyaargal - பக்தர்களினுடைய
குழாங்களை,Kulangalai - கூட்டங்களை
உடன் கூடுவது,Udan kooduvadhu - சேர்த்து அநுபவிக்கப் பெறுவது
என்று கொல்,Endru kol - என்றைக்கோ?
2817திருவாய்மொழி || (2-3–ஊனில் வாழுயிரே) (ஒவ்வொரு பதிகத்திலும் ஈற்றுப் பாசுரத்தில் பயனுரைத்து வருகின்ற ஆழ்வார் இப் பதிகத்திற்குப் பயன் கூறாது, இத்திருவாய்மொழி, பாகவதர் பெருந்திரளாக இருந்து அநுபவிக்கத்தக்கது என்று சொல்லித் தலைக்கட்டுகின்றார். இதற்கொரு பலன் எதிர்பார்க்கவேண்டா; பெரிய கோஷ்டியாக இருந்து இதனை அநுபவிப்பதுதானே ஸ்வயம் ப்ரோயஜனம் என்று தெரிவித்தவாறு. அன்றியே, இத்திருவாய்மொழியைக் கற்கப் பெறில் என்னைப் போல் தனியே யிருந்து துவளாமல் பாகவத கோஷ்டிகளுடன் கூடி அனுபவிக்கும்படியான பெரும்பேறு பெறுவீர்கள் என்று இதனை இத்திருவாய்மொழி கற்கையின் பயனாகவே அருளிச்செய்தாரென்றுங் கொள்ளலாம். ஆடுமின் என்றது ஆடப் பெறுவீர்களாக என்றபடி.) 11
குழாங்கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனைக்
குழாங்கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாங்கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடிக்
குழாங்களாய் அடியீர்! உடன் கூடி நின்று ஆடுமினே–2-3-11
அடியீர்,Adiyir - பக்தர்களே!
குழாம் கொள்,Kulam kol - கூட்டங்கூட்டமான சேனைகளைக் கொண்ட
பேர்,Per - மிக்க பெருமை பொருந்திய
அரக்கன்,Arakkan - ராக்ஷஸ ராஜனாகிய இராவணனுடைய
குலம்,Kulam - குடும்பம்
வீய,Veeya - தொலையும்படி
முனிந்தவனை,Munindhavanai - சீறி யருளின பெருமான் விஷயமாக
குழாம் கொள் தென்குருகூர்,Kulam kol thenkurukoor - (ஸ்ரீவைஷ்ணவ) கோஷ்டிகளை யுடைத்தான திரு நகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
தெரிந்து,Therindhu - ஆராய்ந்து
உரைத்த,Uraitha - அருளிச் செய்த
குழாம் கொள் ஆயிரத்துள்,Kulam kol aayiraththul - பாசுரங்களின் கூட்டம் நிரம்பிய இவ் வாயிரத்தினுள்
இவை பத்தும்,Ivai pattum - இப் பத்துப் பாட்டையும்
உடன்,Udan - பொருளுடனே
பாடி,Paadi - பாடி
குழாங்கள் ஆய்,Kulangaal aay - பெரிய கோஷ்டியாய்
உடன் கூடி நின்று,Udan koodi nindru - ஒரு மிக்கக் கலந்திருந்த
ஆடுமின்,Aadumin - கூத்தாடுங்கள்.
2818திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (ப்ரஹ்லாதாழ்வான் அபேக்ஷரித்த ஸமயத்திலே நரசிங்கமாய் வந்து தோன்றி உதவியருளின பெருமான் அந்தோ! எனக்கு உதவுகின்றிலனே யென்று பெண் பிள்ளை வருந்துவதாகத் திருத்தாய் சொல்லுகிறாள்.) 1
ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1
இ வாள் நுதல்,e vaal nuthal - ஒளி பொருந்திய நெற்றியை யுடையளான இப்பராங்குச நாயகி
ஆடி ஆடி,Aadi aadi - பலகாலும் ஆடி
அகம் கரைந்து,Agam karainthu - மனமுருகி
இசை பாடி பாடி,Isai paadi paadi - பகவத் கீர்த்தனங்களைப் பலகாலும்பாடி
கண் நீர்மல்கி,Kan neermalgi - கண்களில் நீர்நிரம்பப் பெற்று
எங்கும்,Engum - எவ்விடத்தலும
நாடி நாடி,Naadi naadi - அவன் வரவைப் பலகாலும் ஆராய்ந்து பார்த்து
நரசிங்கா என்று,Narasinga endru - நரசிங்கமூர்த்தியே! என்று கதறி
வாடி வாடும்,Vaadi vaadum - (அவன் வரக்காணமையாலே) மிகவும் வாடுகின்றாள்
2819திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (வாணனுடைய ஆயிரந்தோள்களையுந் துணித்து உகக்கும் அநிருத்தாழ்வானுக்கும் அத்தனைகாரியஞ் செய்தருளின நீர்இப்பெண்பிள்ளை திறத்தில் இரங்காதிருப்பது என்னோவென்கிறாள்.) 2
வாணுதல் இம்மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள் விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர் உம்மைக்
காண நீர் இரக்கமிலீரே–2-4-2
வாள் நுதல்,Vaal nuthal - ஒளிமிக்க நெற்றியையுடைய
இ மடவரல்,e madavaral - (பராங்குசநாயகி யென்னும்) இம்மடத்தை
உம்மை,Ummai - (அழகிற்சிறந்த) உம்மை
காணும் ஆசையுள்,Kaanum aasaiyul - காணவேணுமென்ற ஆசையிலகப்பட்டு
நைகின்றாள்,Naikindraal - சிதிலையாகின்றாள்;
விறல்,Viral - வலிமையையுடைய
வாணன்,Vaanan - பாணாஸசரனுடைய
ஆயிரம் தோள்,Aayiram thol - ஆயிரம் புஜங்களையும்
துணித்தீர்,Thuniththir - அறுத்தொழித்தவரே!
உம்மை காண,Ummai kaana - (இவன்) உம்மைக்காணுமாறு
நீர்இரக்கம் இலீர்,Neerirakkam ileer - நீர் தயை செய்யாமலிருக்கின்றீர்
2820திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பிரானே! நீர் ஜனகராஜன் திருமகள் திறத்திலே செய்த செயல்களை வால்மீகி போல்வார் ஸ்ரீராமாயணாதிகளாக எழுதி வைத்தமையாலன்றோ இப்பெண்பிள்ளை துடியாநின்றாள்; ஒரு பிராட்டிக்கு அத்தனை பாடுபட்டுக் காரியஞ் செய்தவர் நம்மை இப்படித் துடிக்க விட்டிருக்கிறாரே, இது நீதியோ என்று கதறாநின்றாள்- என்கிறாள் திருத்தாய். இன்று இவளை இப்படிக் கைவிட நினைத்த நீர் அன்று உண்ணாதுறங்காது ஒலிகடலை யூடறுத்து அத்தனை செயல்கள் செய்தது ஏதுக்கு என்கிறாள் என்னவுமாம்.) 3
இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3
இரக்கம் மனத்தோடு,Irakkam manathodu - நெகிழ்ச்சியை யுடைய நெஞ்சோடு (கூடிய)
இவள்,eval - இப்பெண்பிள்ளை
எரி அணை,Eri anai - நெருப்போடு ஸம்பந்தப்பட்ட
அரக்கும்,Arakkum - (வன்மையான) அரக்கையும்
மெழுகும்,Melugum - மெழுகையும்
ஒக்கும்,Okkum - ஒத்திருக்கின்றாள்;
இரக்கம் எழீர்,Irakkam ezeer - (இவள் திறத்து) இரக்கம் உண்டாகப் பெறுகின்றிலீர்;
அரக்கன்,Arakkan - இராவணனுடைய
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செற்றீருக்கு,Setreerukku - (ஒரு பிராட்டிக்காக) த்வம்ஸம் செய்தருளின உமக்கு
இதற்கு,Idharku - இவள் திறத்திலுண்டான உபேக்ஷைக்கு
என் செய்தேன்,En seydhen - என்ன பரிஹாரம் பண்ணுவேன்?
2821திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (மகளே! பதாறாதே எம்பெருமான்ப்ரணயிநிகளுக்குக் காரியம் செய்வது தவறமாட்டார்; ஜனகராஜன் திருமகளுக்காகத் காரியஞ் செய்தருளினாரென்பது வாஸ்தவமே. அப்பிராட்டி எத்தனை மாதம் தனிச் சிறையிலிருந்து துவண்டாள் தெரியுமோ? பத்துமாதம் பொறுத்தன்றோ அவளுக்கும் காட்சிதந்தது; ப்ராப்திகாலம் வர வேண்டாவோ? அ வளுக்குப் போலே உனக்கும் ஒருநாளிலே காட்சி தரத் தடையிராது; *சரைஸ் துஸங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந” மாம்நயேத் யதிகாகுத்ஸ்த; தத் தஸ்ய ஸத்ருசம் பவேத் என்று அப்பிராட்டி ஆறியிருந்தது போலவே நீயும் ஆறியிருப்பதே தகுதி; அவன் இலங்கை செற்றவன் என்பதையே நீ சொல்லிக்கொண்டிரு-என்று நான் (என் மகளைத்) தேற்றினேன்; அவளும் அப்படியே “இலங்கை செற்றவனே!” என்றே சொல்லிக் கொண்டு ஒருவாறு தரித்திருந்தவள் மீண்டும் கதறத் தொடங்கவிட்டாளென்கிறாள் திருத்தாய்.) 4
இலங்கை செற்றவனே யென்னும் பின்னும்
வலம் கொள் புள்ளுயர்த்தாய் என்னும் உள்ளம்
மலங்க வெவ்வுயிர்க்கும் கண்ணீர் மிகக்
கலங்கிக் கை தொழும் நின்றிவளே –2-4-4
இவள்,Ival - இப்பராங்குசநாயகி.
இலங்கை செற்றவனே என்னும்,Ilangai setravane ennum - (என்னோடொத்த ஒருத்திக்காக) லங்காபுரியை யழித்தவனே! என்கிறாள்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
வலம் கொள்புற் உயர்த்தாய் என்னும்,Valam kolpur uyarthai ennum - வலிமைமிக்க கருடனைக் கொடியாகக் கொண்டவனே! என்கிறாள்.
உள்ளம் மலங்க,Ullam malang - மனம் சுழலும்படி
வெவ்வுயிர்க்கும்,Vevviyirkkum - உஷ்ணமாக மூச்சுவிடுகின்றாள்;
கண் நீர்,Kan neer - கண்ணீரானது
மிக,Miga - அதிகமானவாறே
கலங்கி,Kalanggi - (அதனால்) அறிவுகலங்கப் பெற்று
நின்று,Nindru - ஸ்தம்பித்து நின்று
கைதொழும்,Kaidhozhum - அஞ்ஜலிபண்ணா நின்றாள்
2822திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (பெண்பிள்ளையின் தயநீயதசையைச் சொல்லி, இந்த நிலைமையிலும் நீர் இவள் திறத்து இரங்குகின்றீலீரே! உம்முடைய தயை எங்கே போயிற்று? என்கிறாள்.) 5
இவள் இராப் பகல் வாய் வெரீஇத் தன்
குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள் வண்டு
திவளும் தண்ணம் துழாய் கொண்டீர் என
தவள வண்ணர் தகவுகளே –2-4-5
இவள்,Ival - இப் பெண்பிள்ளை
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai vori e - வாய்பிதற்றி
தன்,Than - தன்னுடைய
குவலை ஒண் கண்,Kuvalai on kan - நெய்தல் மலர்போன்றழகிய கண்களில்
நீர்கொண்டாள்,Neer kondaal - நீரையுடையளானாள்;
வண்டு,Vantu - வண்டுகள்
திவளும்,Thivalum - படிகின்ற
தண் அம் துழாய்,Than am thuzhaay - குளிர்ந்தழகிய தருத் துழாய் மாலையை
கொடீர்,Kodeer - தருகின்றீரில்லை;
தவளம் வண்ணா,Thavalam vanna - பரிசுத்தாத்மாவான தேவரீருடைய
தகவுகள்,Thagavugal - கிருபைமுதலிய குணங்கள்
என,Ena - என்னே!
2823திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் “எனதவளவண்ணர் தகவுகளே” என்று எம்பெருமானுடைய தயவில் குறையிருப்பதாகத் தாய் சொன்ன வார்த்தையைக் கேட்ட மகள் அந்த வார்த்தையைப் பொறாமல் ‘என் கொழுநனுக்குத் தயவில்லையென்று சொல்லலாமோ? கடலில் நீர்வற்றிப் போயிற்று என்பாருமுண்டோ? நம்முடைய பாவமென்று நம்மை நொந்துகொள்ளலாமே யல்லது அவருக்குக் கருணையில்லை யென்று வாய்திறக்கலாமோ? என்று சொன்னாளாக, அதை அநுவதிக்கிறாள் திருத்தாய்.) 6
தகவுடையவனே யென்னும் பின்னும்
மிக விரும்பும் பிரான் என்னும் என
தகவுயிர்க்கு அமுதே என்னும் உள்ளம்
உகவுருகி நின்றுள்ளுளே–2-4-6
உள்ளம்,Ullam - தன் நெஞ்சு
உக,Uga - அழியுமாறு
உருகி,Urugi - நீர்ப்பண்டமாகி
உள்ளுள்ளே நின்று,Ullulle nindru - தன்னில் தான் நின்று
தகவு உடையவனே என்னும்,Thagavu udaiyavanee ennum - தயவு குறைவற்றவனே! என்கிறாள்.
பின்னும்,Pinnum - மேலும்
மிக விரும்பும்,Miga virumbum - மிகவும் குதூஹலங் கொள்ளா நின்றாள்;
பிரான் என்னும்,Piran ennum - உபகாரனே! என்று சொல்லுகின்றாள்;
எனது அகம் உயிர்க்கு அமுதே என்னும்,Enadhu agam uyirkku amudhe ennum - ‘எனது உள்ளுயிர்க்கு அம்ருதமே!’ என்கின்றாள்
2824திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள்.) 7
உள்ளுளாவி உலர்ந்து உலர்ந்து என்
வள்ளலே கண்ணனே என்னும் பின்னும்
வெள்ள நீர்க் கிடந்தாய் என்னும் என்
கள்வி தான் பட்ட வஞ்சனையே –2-4-7
என் கள்வி,En kalvi - என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த
தான்பட்ட,Thaanpatta - தான் அகப்படும்படி அவன் செய்த
வஞ்சனை,Vanjanaai - வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்)
உள்ளுள் ஆவி,Ullulle aavi - உள்ளுயிரானது
உலர்ந்து உலர்ந்து,Ularndhu ularndhu - மிகவுமுலர்ந்து
என வள்ளலே,En vallale - என்னுடைய பெருங்கொடையாளனே!
கண்ணனே,Kannane - க்ருஷ்ணனே!’
என்னும்,Ennum - என்கிறாள்;
பின்னும்,Pinnum - அதற்கு மேலே
வெள்ளம் நீர்,Vellam neer - (திருப்பாற்) கடலிலே
கிடந்தாய்,Kidandhaay - கண்வளர்ந்தருளினவனே!
என்னும்,ennum - என்கிறாள்.
2825திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மை ஆச்ரயமாகப் பற்றியிருக்கமிவள் பிரதிகூலர் பட்டபாட்டைப்படுவது தகுதியோ? என்கிறாள்.) 8
வஞ்சனே என்னும் கை தொழும் தன்
நெஞ்சம் வேவ நெடிதுயிர்க்கும் விறல்
கஞ்சனை வஞ்சனை செய்தீர் உம்மைத்
தஞ்சம் என்று இவள் பட்டனவே –2-4-8
வஞ்சனே என்னும்,Vanjane ennum - எனக்குத் தெரியாமலே என்னை அடிமைப்படுத்திக் கொண்டவனே ! என்கிறாள்;
கை தொழும்,Kai thozhum - (அந்த நன்றிக்குத் தோற்றுக்) கைகூப்புகின்றாள்
தன நெஞ்சம்,Thana nenjham - தனது நெஞ்சு
வேவ,Veva - வேகும்படியாக
நெடிது உயிர்க்கும்,Nedithu uyirkkum - பெருமூச்செறிகின்றாள்;
விறல் கஞ்சனை,Viral kanjane - மிடுக்கனான கம்ஸனை
வஞ்சனை செய்தீர்,Vanjane seydheer - கொன்றொழித்த பெருமானே!
உம்மை,Ummai - உம்மை
தஞ்சம் என்று,Thanjam endru - புகலாகப்பற்றி
இவள் பட்டன ஏ,Ival pattana ae - இவள் பட்டபாடு என்னே !
2826திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (உம்மைப் பிரிந்ததுமுதல் இடைவிடாது நோவுபடுகின்ற இவ்வேழையின் விஷயத்திலே நீர் செய்ய நினைத்திருப்பது என்ன? என்று எம்பெருமானைக் கேட்கிறாள்.) 9
பட்டபோது எழுபோது அறியாள் விரை
மட்டலர் தண் துழாய் என்னும் சுடர்
வட்ட வாய் நுதி நேமியீர் நும்
திட்டமென் கொல் இவ்வேழைக்கே–2-4-9
சுடர்,Sudar - ஒளி பொருந்திய
வட்டம் வாய்,Vatam vaai - வட்டமான வாயையும்
நுதி,Nuthi - கூர்மையையுமுடைய
நேமியீர்,Nemiyeer - திருவாழியையுடையவரே! (பெண்பிள்ளை)
பட்டபோது,Pattapothu - ஸூர்யாஸ்தமன காலத்தையும்
எழு போது,Ezu pothu - ஸூர்யோதய காலத்தையும்
அறியாள்,Ariyaal - அறிகின்றாளில்லை;
விரை மட்டு அலர் –,Virai mattu alar – - பரிமளமும் தேனும் பரவின
தண் துழாய் என்னும்,Than thuzhaay ennum - குளிர்ந்த திருத்துழாய் என்று வாய்வெருவுகின்றாள்;
இ ஏழைக்கு,I yezhaikku - இப்படிப்பட்ட ஏழையின் திறத்திலே
நுமது இட்டம் என் கொல்,Numadhu ittam en kol - உம்முடைய இஷ்டம் என்ன? (நீர்என்ன செய்ய நினைத்திருக்கிறீர்!)
2827திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இப்பெண்பிள்ளை திறத்திலே பெரும்பாலும் எல்லாம் ஒடுங்கிப் போயிற்று; இவளுடைய நோக்கு ஒன்றுதான் சேகூஷித்துக் கிடக்கிறது; அஃதொன்றுமாவது குலையாதபடி நீர் நோக்கிக் கொள்ள வேணுமென்று பிரார்த்திக்கின்றாள்.) 10
ஏழை பேதை இராப்பகல் தன்
கேழில் ஒண் கண் கண்ண நீர் கொண்டாள் கிளர்
வாழ்வை வேவ இலங்கை செற்றீர் இவள்
மாழை நோக்கு ஒன்றும் வாட்டேன்மினே –-2-4-10
கிளர்,Kilar - விஞ்சின
வாழ்வை,Vaazhvai - (இராவணனது) செல்வம்
வேவ,Veva - நீறாகும்படி
இலங்கை,Ilankai - லங்காபுரியை
செற்றீர்,Setreer - அழித்தவரே!
எழை பேதை,Ezhai paedhai - எழையும் பேதையுமான இவள்
இரா பகல்,Iraa pagal - இரவும் பகலும்
தன்,Than - தன்னுடைய
கேழ் இல்,Kael il - ஒப்பற்ற
ஒண் கொண்டாள்,On kondaal - நீரைக்கொண்டாள்;
இவள்,Ival - இவளுடைய
மாழை நோக்கு ஒன்றும்,Maalzai nokku ondrum - இளநோக்கு ஒன்றையுமாவது
வாட்டேன் மின்,Vaatten min - வாடச்செய்யாமல் தளிர்ப்பிக்க வேணும்.
2828திருவாய்மொழி || (2-4- ஆடி யாடி) (தலைவியின் ஆற்றாமை கண்ட தாய் தலைவனை நோக்கிக் கூறுதல்) (இத் திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது. ஆழ்வார் பட்ட கிலேசமொன்றும் படாதே எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கர்யம் பண்ணப் பெறலாமென்கிறது. --இங்கு வாமனன் என்றது தன்பொருளை விடமாட்டாதவன் என்பதைக் காட்டுதற்காக.) 11
வாட்டமில் புகழ் வாமனனை இசை
கூட்டி வண் சடகோபன் சொல் அமை
பாட்டோராயிரத்து இப்பத்தால் அடி
சூட்டலாகுமே அந்தாமமே –2-4-11
வாட்டம் இல் புகழ்,Vaattam il pugazh - வாட்டமற்ற புகழுடையனான
வாமனனை,Vaamananai - வாமனனைக்குறித்து
வண்சடகோபன்,Vancha sadagopan - உதாரரான ஆழ்வார்
இசை கூட்டி,Isai kooti - இசையோடே சேர்த்து
சொல்,Sol - அருளிச்செய்த
அமை,Amai - இலக்கணமமைந்த
பாட்டு ஓர் ஆயிரத்து,Paattu or aayiraththu - ஓராயிரம் பாசுரங்களுள்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
அடி,Adi - (அந்த வாமனமூர்த்தியின்) திருவடிகளில்
அம் தாமம்,Am thamam - அழகிய புஷ்பங்களை
சூட்டல் ஆகும்,Suttal aagum - ஸமாப்பிக்கும் படியான பேறு உண்டாகும்.
2829திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார்.) 1
அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிகள் செம் பொன் திருவுடம்பே –2-5-1
என் ஆவி,En aavi - என் ஆத்மாவிலே
அம் தாமத்து அன்பு செய்து,Am thamathu anbu seydhu - பரமபதத்ததிற் பண்ணும் விருப்பத்தைப்பண்ணி
சேர்,Ser - வந்து பொருந்தின
அம்தாமம்,Am thamam - அம்மானுக்கு அழகிய மாலையை யணிந்த
வாள்,Vaal - ஒறியுள்ள
முடி,Mudi - திருவபிஷேகமும்
சங்கு ஆழி,Sanggu aazhi - சங்கு சக்கரங்களும்
நூல்,Nool - பூணூலும்
ஆரம்,Aaram - ஹாரமும்
உள,Ull - உள்ளன;
கண்,Kan - திருக்கண்கள்
செம் தாமரை தடம்,Sem thaamarai thadam - செந்தாமரைத் தடதகமபோன்றுள்
செம் கனி வாய்,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவதரம்
செம் கமலம்,Sem kamalam - செந்தாமரையாகவே யிரா நின்றது;
அடிகள்,Adigal - திருவடிகளும்
செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலராகவே
திரு உடம்பு,Thiru utampu - திருமேனி
செம் பொன்,Sem pon - செம்பொன்னாயிராநின்றது.
2830திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி முதலானவர்களும் தன் பக்கலில் ஒரோ. இடங்களைப் பற்றி ஸத்தை பற்றாராம்படியிருக்கிற எம்பெருமான் ஸகல அவயவங்களாலும் என்னோடே ஸம்ச்லேஷித்து அத்தாலே ஒளி மல்கப் பெற்றனென்கிறார் இதில்.) 2
திருவுடம்பு வான் சுடர் செந்தாமரைக் கண் கை கமலம்
திருவிடமே மார்வம் அயனிடமே கொப்பூழ்
ஒருவிடமும் எந்தை பெருமாற்கு அரனேயோ
ஒருவிடம் ஓன்று இன்றி என்னுள் கலந்தானுக்கே –2-5-2
ஒருவு இடம் ஒன்று இன்றி,Oruvu idam onru indri - நீங்கின இடம் ஒன்றுமில் வாதபடி (ஸகல அவயவங்களிலும்)
என்னுள் கலந்தானுக்கு,Ennul kalanthanukku - என்னோடு சேர்ந்தவானன
எந்தை பெருமாற்கு,Endhai perumarku - என் சேர்ந்தவனான
திரு உடம்பு,Thiru utampu - திருமேனி திவ்யமான ஒளியை உடைத்தாயிராநின்றது.
கண்,Kan - திருக்கண்கள்
செம் தாமரை,Sem thaamarai - செந்தாமரை மலர்களாயிராநின்றன;
கை,Kai - திருக்ககைகள்.
கமலம்,Kamalam - தாமரைமலரே.
திரு இடமே,Thiru idame - பிராட்டிக்கு இருப்பிடயாயிற்று;
கொப்பூழ்,Koppoozh - திருநாபி
அயன் இடமே,Ayan idame - பிராமனுக்கு உறைவிடமாயிற்று;
ஒருவு இடமும்,Oruvu idamum - நீங்கின இடமும்
அரனே,Arane - ருத்ரனுடையதே;
ஓ,Oo - ஆச்சரீரயம்.
2831திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (பிராட்டி பிரமன்சிவன் முதலானார் மாத்திர மன்றியே ஸகலலோகங்களும் தன்னைப்பற்றி ஸத்தை பெறும்படி யிருக்கிற எம்பெருமான், இவ்வுலகங்களெல்லாம் தன்னை யொழிந்தால் படும்பாட்டைத் தான் என்னைப் பிரிந்து பட்டு என்னோட கலக்கையாலே மிகவும் புஷ்கலனானான் என்கிறாரிடத்தில்) 3
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர் மலைக்குக் கண் பாதம் கை கமலம்
மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள
தன்னுள் கலவாத தெப்பொருளும் தானில்லையே –2-5-3
என்னுள் கலந்தவன்,Ennul kalanthavan - என்னுள் கலந்த வனாகி
மின்னும்,Minnum - விளங்குகின்ற
சுடர்மலைக்கு,Sudar malai kku - ஒளிபொருந்திய மலை போன்ற பெருமானுக்கு
செம் கனி வாய,Sem kani vaai - சிவந்து கனிந்த திருவாய்
செம் கமலம்,Sem kamalam - செந்தாமரை மலர் போன்றது;
கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண்களும் திருவடிகளும் திருக்கைகளும்
கமலம்,Kamalam - செந்தாமரை மலரே;
மன்னு முழு ஏழ் உலகும்,Mannu muzhu ezhu ulagum - நிலைபெற்ற ஸகல லோகங்களும்
வயிற்றின் உள,Vayitrin ul - (அவனது) திருவயிற்றி லடங்கியுள்ளள
தன்னுள்,Thannul - அவன்றனக்குள்ளே
கலவாதது,Kalavaadhadhu - சேராதது
எப்பொருளும் தான் இல்லை,Epporulum thaann illai - யாதொரு பொருளுமேயில்லை
2832திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (என்னோடே கலந்த எம்பெருமான் யாவஜ்ஜீவம் அநுபவித்தாலும் கூஷணந்தோறும் புதியனாய்ப் பரம போக்யணாயிரா நின்றானே யென்று உள் குழைகின்றாரிதில்.) 4
எப்பொருளும் தானாய் மரகதக் குன்றம் ஒக்கும்
அப்பொழுதைத் தாமரைப் பூக் கண் பாதம் கை கமலம்
எப்பொழுதும் நாள் திங்கள் ஆண்டூழி ஊழி தொறும்
அப்பொழுதைக்கு அப்பொழுது என்னாரா வமுதமே –2-5-4
எப்பொழுதும்,Eppozhuthum - எல்லா கூஷணமும்
எந்நாள்,Ennal - எல்லா நாட்களும்
எத்திங்கள்,Ettingal - எல்லா மாதங்களும்
எவ்வாண்டு,Evvantu - எல்லா வருஷங்களும்
எவ்வூழி ஊழி தொறும்,Evvooli ooli thorum - கற்பங்கள் தோறும் (அது பவித்தாலும்)
தான் ஆய்,Thaan aay - தனக்குள்ளே அடங்கப் பெற்றவனாய்
மரகதம் குன்றம் ஒக்கும்,Maragatham kunram okkum - மரதகமலையை யொத்திருப்பன்;
கண்,Kan - (அவனது) திருக்கண்களும்
அப்பொழுதைக்கு அப்பொழுது,Appozhuthaikku appozhudhu - அந்தந்தக் காலங்களிலே
என் ஆரா அமுதம்,En aara amudham - எனக்குத் தெவிட்டாத அம்ருதமர்யிக்கு மெம் பெருமான்
எப்பொருளும்,Epporulum - எல்லாப் பொருள்களும்
அப்பொழுது தாமரை பூ,Appozhudhu thaamarai poo - அப்போதலர்ந்த தாமரை மலர் போன்றவை
பாதம் அப்பொழுது கமலம்,Paadham appozhudhu kamalam - அப்போதலர்ந்த தாமரையே;
கை,Kai - திருக்கைகளும் (அவ்வண்ணமே.)
2833திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் என்னோடு கலந்ததனால் பெற்ற அழகுக்கு உபமான மில்லை என்கிறார்.) 5
ஆராவமுதமாய் யல்லாவி யுள் கலந்த
காரார் கரு முகில் போல் என்னம்மான் கண்ணனுக்கு
நேராவாய் செம்பவளம் கண் பாதம் கை கமலம்
பேரார நீண் முடி நாண் பின்னும் இழை பலவே –2-5-5
ஆரா அமுதம் ஆய்,Aara amudham aay - தெவிட்டாத அமுதமர்கி
அல் ஆவி உள்,Al aavi ul - ஒரு பொருளல்லாத எனது நெஞ்சினுள்ளே
கலந்த,Kalandha - கூடி நின்றவனாயும்
கார்ஆர்கரு முகில் போல்,Kaarargaru mugil pol - கார்காலத்தில் பொருந்திய காளமேகம் போன்ற வனாயும்
என் அம்மான்,En ammaan - எனக்கு நாதனாயு மிருக்கிற
கண்ணனுக்கு,Kannanukku - ஸ்ரீக்ருஷ்ணுக்கு
செம் பவளம்,Sem pavalam - சிவந்த பவழங்கள்
வாய் நேரா,Vaai neraa - அதரத்திற்கு ஒப்பாக மாட்டா;
கமலம்,Kamalam - தாமரைப் பூ
கண் பாதம் கை,Kan paadham kai - திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு
நேரா,Naeraa - ஒப்பாக மாட்டாது;
பேர் ஆரம்,Per aram - பெரிய ஹாரங்களும்
நீள் முடி,Neel mudi - உயர்ந்த திருவபிஷேகமும்
நாண்,Naan - திரு அரைநாணும்
பின்னும் இழை,Pinnun izhai - மற்றுமுள்ள திருவாய ரணங்களும்
பல,Pala - அனேகங்கள்.
2834திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (ஆழ்வார் தம்மோடே எம்பெருமான் கலக்கும்போது ஒரு வடிவோடே கலந்து த்ருப்தி பெற மாட்டாதே பலவடிவுகள் கொண்டு கலந்து அநுபவிக்கும் படியை அருளிச்செய்கிறார்.) 6
பலபலவே யாபரணம் பேரும் பலபலவே
பலபலவே சோதி வடிவு பண்பு எண்ணில்
பலபல கண்டு உண்டு கேட்டு உற்று மோந்தின்பம்
பலபலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ–2-5-6
பாம்பு அணை மேலாற்கு,Paambu anai melaarku - ஆதிசேஷனைப் பள்ளியாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு
பண்பு எண்ணில்,Panbu ennil - (என்னோடு கலவியாலுண்டான அழகை) நிரூபித்துப் பார்க்குமிடத்து,
ஆபரணம்,Abaranam - திருவாபரணங்கள்
பலபல,Palapala - மிகப் பலவாயிருக்கும்
சோதி வடிவு,Sodi vadivu - ஒளியுருவான திருமேனி
பல பல,Pala pala - மிகப் பலவாயிருக்கும்
கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து இன்பம்,Kandu undu kettu urru mondhu inbam - பார்த்தும் உண்டும் கேட்டும் ஸ்பர்சித்தும் மோந்தும் (உண்டாகிற) சுகங்களும்
பல பல,Pala pala - மிகப்பலவாயிருக்கும்!
ஞானமும்,Gnaanamum - ஞானங்களும்
பல பல,Pala pala - மிக மிகவாம்.
2835திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் சில திவ்விய சேஷ்டிதங்களைத் தமக்குக் காட்டியருளக் கண்டு அநுபவித்துப் பேசுகிறார்.) 7
பாம்பணை மேல் பாற் கடலுள் பள்ளி அமர்ந்ததுவும்
காம்பணை தோள் பின்னைக்காய் ஏறுடன் ஏழ் செற்றதவும்
தேம்பணைய சோலை மராமரம் ஏழு எய்ததுவும்
பூம்பிணைய தண் துழாய் பொன் முடியம் போரேறே –2-5-7
பால் கடலுள்,Pal kadalul - திருப்பாற் கடலிலே
பாம்பு அணை மேல்,Paambu anai mel - சேஷசயனத்தின் மீது
பள்ளி அமர்ந்ததுவும்,Palli amarthaduvum - கண்வளர்தல் பொருந்தினதும்.
காம்பு அணை தோள் பின்னைக்கு ஆய்,Kaambu anai thol pinnai kku aay - மூங்கில் போன்ற தோள் களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏழ் ஏறு,Eezh er - ஏழு ரிஷபங்களை
உடன்,Udan - ஏக காலத்தில்
செற்றதுவும்,Settraduvum - தொலைத்ததும்.
தேன் பணைய சோலை,Then panaiya solai - தேனையும் கிளைகளையுமுடைய சோலையாகத் தழைத்த
ஏழ் மராமரம்,Eezh maramaram - ஸப்த ஸால வ்ருஸங்களையும்
எய்ததவும்,Eythadavum - துளை படுத்தினதும்
பூ பிணைய,Poo pinaiya - அழகிய தொடுத்தலையுடைத்தான
தண்,Than - குளிர்ந்த
துழாய்,Thuzhai - திருத்துழாய் மாலையணிந்த
பொன்,Pon - பொன் மயமான
முடி,Mudi - திரு வபிஷேகத்தையடையவனாயும்
அம் போர்ஏறு,Am pooreru - அழகியவனாயும்-போர்க்குரிய இடபம் போன்றவனுமான எம்பெருமான் (செய்த செயல்களாம்.)
2836திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (எம்பெருமான் பராத்பரனாயிருந்து வைத்து என்னுடைய தாழ்ச்சியைக் கணிசியாதே என்னோடே வந்து கலந்த பெருங்குணத்தை நான் பேசவல்லேனல்லேனென்கிறார்) 8
பொன் முடியம் போரேற்றை எம்மானை நால் தடம் தோள்
தன் முடிவொன்றில்லாத தண் துழாய் மாலையனை
என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே –2-5-8
பொன் முடி,Pon mudi - பொன் மயமான திருமுடியை யுடையனாய்
அம் போர்ஏற்றை,Am pooretray - அழகிய போரேறு போன்றவனாய்
எம்மானை,Emmaanai - எனக்கு நாதனாய்
நால் தட தோள்,Naal tada thol - நான்கு பெரிய திருத்தோள்களை யுடையவனாய்
தன் முடிவு ஒன்றும் இல்லாத,Than mudivu ondrum illaadha - தன் பெருமைக்கு முடிவு ஒன்றுமில்லாதவனாய்
தண் துழாய் மாலையனை,Than thuzhai maalaiyanai - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யுடையவனாய்
என் முடிவு காணாதே,En mudivu kaanaadhae - எனது தாழ்வைக் கணிசியாமல்
என் உள் கலந்தானை,En ul kalandhaanai - என்னோடு கலவி செய்தவனுமான பெருமானை
நான் சொல் முடிவு காணேன்,Naan sol mudivu kaanen - நான் சொல்லி முடிக்கும் வகையறிகின்றிலேன்!
என் சொல்வது,En solvadhu - என்னவென்று சொல்லலாம்!
சொல்லீர்,Solleer - நீங்களே சொல்லுங்கள்
2837திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “சொல்முடிவு காணேன் நான் சொல்லுவதென் சொல்லீரே” என்று தமக்கு எம்பெருமானைப் பேச முடியாமையாலே பேசவுந் தவிர்ந்த ஆழ்வார் பின்னையும் தம்முடைய நப்பாசையினால் ஸம்ஸாரிகளை யழைத்து என்னாயனான ஸர்வேச்வரனை எல்லாருங் கூடியாகிலும் ஒருவடிசொல்லுவோமே! என்கிறார்.) 9
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனை
எல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரை
நல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்
அல்லிமலர் விரையொத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9
என் அம்மானை,En ammaanai - எனக்கு ஸ்வாமியாய்
என் ஆவி ஆவி தனை,En aavi aavi thanai - என் ஆத்மாவுக்கும் ஆத்மாவாயிருப்பவனாய்
எல்லை இல் சீர்,Ellai il seer - எல்லையற்ற குணங்களையுடைய
என் கரு மாணிக்கம் சுடதை சொல்லீர்-,En karu manikam suthathai solleer - எனது நீலரத்னம் போன்ற வொளியுருவையுடையனான பெருமானை சொல்லுங்கள்.
நல்ல அமுதம்,Nalla amudham - நல்ல அம்ருதமாய்
பெறற்கு அரிய வீடும் ஆய்,Perarku ariya veedum aay - எளிதாகப் பெறுவதற்கு முடியாத மோக்ஷ நிலத்திற்கும் தலைவனாய்
அல்லி மலர் விரை ஒத்து,Alli malar virai otthu - தாமரைப் பூவிலுள்ள பரிமளம் போல் பரமபோக்யனாய்
ஆண் அல்லன் பெண் அல்லன்,Aan allan penn allan - ஆணுருவ மல்லாதவனாய்ப் பெண்ணுருவமு மல்லாதவனாயிருக்கின்றனவன்.
2838திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார்.) 10
ஆண் அல்லன் பெண் அல்லன் அல்லா வலியும் அல்லேன்
காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்
பேணும் கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே –2-5-10
எம்பெம்மானை கூறுதல்,Em pemmaanai koorudhal - எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது
கோணை பெரிது உடைத்து,Konai peridhu udhaithu - மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்)
ஆண் அல்லன்,Aan allan - ஆணுமல்லன்,
பெண் அல்லன்,Penn allan - பெண்ணுமல்லன்
அல்லா அலியும்,Alla aliyum - இவ்விரண்டுமல்லாத நபும்
அல்லன்,Allan - ஸயனுமல்லன்
காணாலும் ஆகான்,Kaanaalum aagaan - கண்ணாற் பார்க்கவும் முடியாதவன்
உளன் அல்லன்,Ulan allan - உள்ளவனல்லன்
இல்லை அல்லன்,Illai allan - இல்லாதவனுமல்லன்
பேணுங்கால்,Penungaal - (அடியார்) விரும்பின காலத்து
பேணும் உரு ஆகும்,Penum uru aagum - அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன்
அல்லனும் ஆம்,Allanum aam - அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க)
2839திருவாய்மொழி || (2-5-அந்தாமத் தன்பு) (இறைவன் ஆபரணாதிகளுடன் வந்து கலக்க ஆழ்வார் மகிழ்தல்) ((கூறுதல்) இத்திருவாய்மொழியைக் கற்பார் இதிற்சொன்னபடியே எம்பெருமானைப் பாரிபூர்ணமாகத் திருநாட்டிலே நித்யாநுபவம் பண்ணப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. 11
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானை
கூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்
கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்
கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11
ஒன்று கூறுதல் ஆரா,Ondru kurudhal aaraa - ஒரு குணத்தைச் சொல்லுதலும் முடியாத
குடக் கூத்த அம்மானை,Kudak kootha ammaanai - குடக் கூத்தாடின கண்ணபிரானைப்பற்றி
கூறுதல் மேவி,Koorudhal mevi - சொல்லுவதில் ஆசை கொண்டு
குருகூர்சடகோபன் கூறின,Kurugoor Sadagoban koorina - அந்தாதி அந்தாதித் தொடையான
ஓர்ஆயிரத்துள்,Oraayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளே
இப்பத்தும்,Ippaththum - இத்திருவாய்மொழியை
கூறுதல் வல்லார்,Koorudhal vallaar - ஓத வல்லவர்கள்
உளர் ஏல்,Ular yel - உண்டாகில்(அவர்)
வைகுந்தம் கூடுவர்,Vaigundam kooduvar - பரமபதம் சேரப்பெறுவர்
2840திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -2-6-1- இவர் நம்மை விடில் செய்வது என் -என்று அவன் அதி சங்கை பண்ண -அத்தை நிவர்த்திப்பிக்கிறார்.) 1
வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1
வைகுந்தா,Vaikundha - பரமபத நாதனே
மணி வண்ணனே,Mani Vannane - நீல மணி போன்ற வடிவை யுடையவனே
என் பொல்லாத் திருக் குறளா,En Pollath Thiruk Kurala - என்னுடைய அனுபவத்திற்கு உரிய அழகிய வாமன மூர்த்தியே
என் உள் ,En Ul - என் மனதில்
மன்னி வைகும்,Manni Vaigum - நிலை பெற்று தங்கி இருப்பவனும்
வைகல் தோறும்,Vaigal Thorum - ஒவ்வொரு க்ஷணத்திலும்
அமுது ஆய ,Amuthu Aaya - அம்ருதமாயிருபவனும் மான
வான் ஏறே ,Vaan yere - நித்யஸூரி நாதனே!
செய்,Sei - செய்யப்பட்டு
குந்தா,Gundha - குறைபடாத
அரு தீமை ,Aru Theemai - போக்குதற்கரிய பாவங்களை
உன் அடியார்க்குத் தீர்த்து,Un Adiyarkuth Theerthu - உன் தொண்டர்கட்கு போக்கி
அசுரர்க்கு,Asurarkku - அஸுரப்ரக்ருதிகளுக்கு
தீமைகள்,Theemaigal - அந்த தீமைகளை
செய்,Sei - உண்டாக்குகின்ற
குந்தா,Gundha - பரிசுத்தனே
உன்னை,Unnai - எப்படிப்பதை உன்னை
நான்,Naan - அடியேன்
சிக்கென,Sikken - உறுதியாக
பிடித்தேன்,Pidithen - பிடித்துக்கொண்டவன்(என்று)
கொள்,Kol - திருவுள்ளம் பற்ற வேணும்
2841திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (எம்பெருமான் ஆழ்வார்தம்மோடே கலந்து மிக்க ஒளிபெற்றானாய்க் கொண்டு வேறு போக்கிடமற்றுத் தம் பக்கலிலேயே படுகாடு கிடச்சிறபடியைப் பேசுகிறார்.) 2
சிக்கெனச் சிறிதோரிடமும் புறப்படாத் தன்னுள்ளே உலகுகள்
ஒக்கவே விழுங்கிப் புகுந்தான் புகுந்ததற் பின்
மிக்க ஞான வெள்ளச் சுடர் விளக்காய் துளக்கற்ற அமுதமாய் எங்கும்
பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணனே –2-6-2
சிறிது ஓர்இடமும்,Siridhu Ooridamum - மிக அற்பமான இடமும்
புறப்படா,Purappada - வெளிப்பட்டிராமல் (எல்லாம் உள்ளே யடங்கும்படி)
உலகுகள்,Ulakul - உலகங்களை
தன் உள்,Than Ul - தனக்குள்ளே
ஒக்க,Okka - சமமாக
விழுங்கி,Vilungi - அமுது செய்து (அந்தத் திருக்கோலத்துடனே)
சிக்கென,Sikkena - உறுதியாக
புகுந்தான்,Pugundhaan - என்னுள் பிரவேசித்தான்
புகுந்ததன்பின்,Pugundhadhanpin - பிரவேசித்தபின்
மிக்க,Mikka - மிகுந்த
ஞானம் வெள்ளம்,Gnaanam Vellam - ஞானப் பிரவாஹமாகிற
சுடர்,Sudar - ஒளியுள்ள
விளக்கு ஆய்,Vilakku Aay - தீபமாகி
துளக்கு அற்று,Thulakku Attru - (நான் ஒருகால் விட்டுவிடுவேனோ என்கிற) ஸந்தேஹம் தீர்ந்து
அமுதம் ஆய்,Amudham Aay - அம்ருதமாகி
என்,En - எனக்கு விதேயனான
பைந் தாமரை கண்ணன்,Pain Thaamarai Kannan - அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களை யுடைய பெருமான்
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
பக்கம் நோக்க அறியான்,Pakkam Nokka Ariyaan - திரும்பிப் பார்ப்பது மின்றியே யிராநின்றான்
2842திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (நித்ய ஸூரிகளுக்குப் போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல் தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார்.) 3
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நா மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3
தாமரை கண்ணனை,Thaamarai Kannai - தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும்
விண்ணோர்பரவும்,Vinnorparavum - நித்யஸுரிகள் புகழ்கின்ற
தலைமகனை,Thalaimaganai - ஸ்வாமியும்
விரை பூ மருவு,Virai Poo Maruvu - பரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய
துழாய் கண்ணி,Thuzhai Kanni - திருத்துழாய் மாலையை யணிந்த
எம்பிரானை,Empranai - எம்பெருமானும்
பொன் மலையை,Pon Malaiyai - பொன்மலை போன்று உயர்ந்து விளங்குபவனுமான திருமாலை யாம் அடைந்து
நன்கு ஏத்தி,Nanku yethi - நன்றாகத் துதித்து
உள்ளி,Ulli - சிந்தித்து
வணங்கி,Vanangi - நமஸ்கரித்து (இப்படி மூன்று கரணங்களாலுமுண்டான அநுபவத்தாலே)
நாம் மகிழ்ந்து ஆட,Naam Magizhndhu Aada - நாம் ஸந்தோஷத்தோடு நர்த்தனம் பண்ணும் படியாகவும்
நா அலர் பா மருவி நிற்க,Naa Alar Paa Maruvi Nirka - நாக்கில் அலர்கின்ற பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படியாகவும்
தந்த,Thandha - உபகாரம் செய்தருளின
வள்ளல் பான்மை ஏ,Vallal Paanmai ye - உதாரகுணம் என்னே!
2843திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( கீழ்ப்பாட்டில் நாம் நாம் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொன்னது ஆழ்வார் தம்முடைய நைச்சியத்தை யெடுத்துக் காட்டினபடியாதலால், நைச்சியாநுஸந்தானம் பண்ணப் புகுந்தவிவர், நம்மை யொருகால் விட்டுவிடுவாரோ? என்று எம்பெருமான் அதிசங்சை கொள்ள, உன் வடிவழகை நிர்ஹேதுகமாக நீயே யென்னை அநுபவிப்பிக்க அநுபவித்து அதனாலே சிதிலனாயிருக்கின்ற நான், உன்னை விட ப்ரஸக்தியுண்டோ வென்கிறார்.) 4
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே உனை நினைந்து
எள்கல் தந்த வெந்தாய் உன்னை எங்கனம் விடுகேன்
வெள்ளமே புரை நின் புகழ் குடைந்தாடிப் பாடிக் களித்து உகந்து உகந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து உய்ந்து போந்து இருந்தே –2-6-4
வள்ளலே,Vallale - உதாரனே!
மது சூதனா,Madhusudhana - மதுஸூதநனே!
என் மரதக மலையே,En Marathaga Malaiye - என்னுடைய அநுபவத்திற்குரிய மரதகமலை போன்றவனே!
உனை நினைந்து,Unai Ninaithu - உன்னை யநுஸந்தித்து
எள்கல்,Elgal - ஈடுபட்டிருக்கும்படியான தன்மையை
தந்த,Thandha - உண்டாக்கின
எந்தாய்,Endhaai - ஸ்வாமியே!
வெள்ளமேபுரை,Vellamepurai - கடல் போன்ற
நின் புகழ்,Nin Pugazh - உன்னுடைய திருக்குணங்களில்
குடைந்து,Kudainthu - மூழ்கி
ஆடி பாடி,Aadi Paadi - ஆடியும் பாடியும்
களித்து,Kalithu - செருக்குக் கொண்டு
உகந்து உகந்து,Ukanthu Ukanthu - மிகவும் மகிழ்ந்து
உள்ள நோய்கள் எல்லாம் துரந்து,Ulla Noygal Ellaam Thurandhu - உண்டான துன்பங்களெல்லாம் தொலையப்பெற்று.
உய்ந்து,Uyndhu - உஜ்ஜூவித்து
போந்து,Ponthu - (உன்னைக்) கிட்டினவனாயிருந்துவைந்து
உன்னை எங்ஙனம் விடுகேன,Unnai Enganam Vidugain - உன்னை எப்படி விட்டிடுவேன்?
2844திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( நித்ய கைங்கர்யத்திலே ஊன்றியிருக்குமடியேன் உன்னை விடுவதற்கு ப்ரஸக்தி லேசமு மில்லை யென்று மீளவும் வற்புறுத்திப்பேசுகிறார்.) 5
உய்ந்து போந்து என் உலப்பிலாத வெந்தீ வினைகளை நாசம் செய்து உனது
அந்தமில் அடிமை அடைந்தேன் விடுவேனோ
ஐந்து பைந்தலை யாடரவணை மேவிப் பாற் கடல் யோக நித்திரை
சிந்தை செய்த வெந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே –2-6-5
பால் கடல்,Paal Kadal - திருப்பாற்கடலிலே
ஐந்து,Aindhu - ஐந்தாகிய
பைந்தலை,Painthalai - படங்களோடு கூடிய சிரங்களையுடையவனாய்
ஆடு,Aadu - ஆடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனாகிற
அணை,Anai - சயனத்தின் மீது
யோக நித்திரை,Yoga Nithirai - யோகநித்ரையிலே
மேவி,Mevi - பொருந்தி
சிந்தை செய்த,Sinthai Seydha - லோக ரக்ஷண சிந்தனை பண்ணின
எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே!
உன்னை,Unnai - உன்னை
சித்தை செய்து செய்து,Sithai Seydhu Seydhu - நிரந்தரமாகச் சிந்தித்து
உய்ந்து,Uyndhu - உஜ்ஜீவனம் பெற்று
உலப்பு இலாத,Ulpup Illaadha - முடிவில்லாத
வெம்,Vem - கொடிய
என் தீவினைகளை,En Theevinai Kalai - எனது பாபங்களை
நாசம் செய்து,Naasam Seydhu - தொலைத்து
உனது,Unadhu - உன்னுடைய
அந்தம் இல்,Antham Il - முடிவில்லாத
அடிமை,Adimai - கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தை
அடைந்தேன்,Adaindhen - அடைந்தவனான நான்
விடுவேனோ,Viduvaeno - இனிவிட்டு நீங்குவேனோ?
2845திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) ( ஆழ்வாரே! உமக்கு நான் இனிச் செய்யவேண்டுவதென்ன?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாததுண்டோ? எல்லாம் பெற்றேனே; இனிச் செய்ய வேண்டுவதொன்றுமில்லை காண்’ என்கிறார். ஆச்ரிதன் ப்ரதிஜ்ஞை பண்ணின ஸமயத்திலே வந்து தோன்றுமியல்வினனாக நீ யிருக்கும்போது, எனக்கு என்ன குறையென்கிறார்.) 6
உன்னைச் சிந்தை செய்து செய்து உன் நெடுமா மொழியிசை பாடியாடி என்
முன்னைத் தீ வினைகள் முழு வேரரிந்தனன் யான்
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல் மார்வம் கீண்ட என்
முன்னைக் கோளரியே முடியாதது என் எனக்கே –2-6-6
உன்னை,Unnai - உன்னை
சிந்தையினால்,Sinthaiyinaal - நெஞ்சாலே
இகழ்ந்த,Igazhndha - அநாதரித்த
இரணியன்,Iraniyan - ஹிரண்யகசிபுவினுடைய
அகல் மார்வம் கீண்ட,Akal Maarvam Keenda - அகன்ற மார்வைக் கிழித்தவனும்
என்,En - எனக்கு அநுபவிக்க வுரியவனும்
முன்னை,Munnaai - அநாதி ஸித்தனுமான
கோள் அரியே,Kol Ariye - மிடுக்குடைய நரசிங்க மூர்த்தியே!
உன்னை சிந்தை செய்து செய்து,Unnai Sinthai Seydhu Seydhu - உன்னை இடையறாது சிந்தித்து
நெடு,Netu - உயர்ந்த
உன் மா மொழி,Un Ma Mozhi - உன்னைப்பற்றின திருவாய் மொழியை
இசை பாடி,Isai Paadi - இசையுடனே பாடி
ஆடி,Aadi - (ஆனந்தத்திற்குப் போக்கு வீடாக) ஆடி
என் முன்னை தீ வினைகள்,En Munnaai Thee Vinaigal - எனது தொல்லைப் பாபங்களை
யான்,Yaan - நான்
முழுவேர் அரிந்தனன்,Muzhuver Arinthaan - முழுதும் வேரோடு அறுத்தொழித்தேன்;
எனக்கு,Enakku - அடியேனுக்கு
முடியாதது என்,Mudiyadathu En - (இனி) அஸாத்தியமான துண்டோ?
2846திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (கீழ்ப்பாட்டில் “முடியாததென் எனக்கே” என்றார்; எல்லாம் பெற்றுவிட்டீரோ? என்று அன்பர் கேட்க, என்னிடத்து எம்பெருமான் பண்ணின விசேஷ கடாக்ஷத்தாலே, என்னோடு ஸம்பந்த ஸம்பந்திகளானவர்களுங்கூட உஜ்ஜ்விக்கப் பெற்றார்களே! இன்னமும் நான் பெறவேண்டியது என்ன இருக்கிறது என்கிறார்.) 7
முடியாதது என் எனக்கேல் இனி முழு ஏழ் உலகும் உண்டான் உகந்து வந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானும் அல்லன் இனி
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து எமர் கீழ் மேல் ஏழ் பிறப்பும்
விடியா வென்னரகத்து என்றும் சேர்த்தல் மாறினரே –2-6-7
முழு ஏழ் உலகும் உண்டான்,Muzhu Yezh Ulakum Undaan - ஏழுலகங்களையும் முற்ற அமுது செய்து (பிரளயங்கொள்ளாதபடி காத்தருளின பெருமான்
உகந்து,Ukanthu - விரும்பி
அடியேன் உள் வந்து புகுந்தான்,Adiyaen Ul Vandhu Pugundhaan - அடியேனுள்ளத்தில் வந்து புகுந்தான்;
இனி அகல்வானும் அல்லன்,Ini Akalvaanum Allan - இனிமேல் (அப்பெருமான் அகன்று போகவும் மாட்டான்;
கீழ் மேல் எழு பிறப்பும் எமர்,Keel Mel Yezhu Pirappum Yemar - கீழும் மேலும் ஏழ் பிறப்புக்களிலும் எம்மவர்கள்
செடி ஆர்நோய்கள் எல்லாம் துரந்து,Chedi Aar Noygal Ellaam Thurandhu - பெருங்காடாகப் பரம்பின நோய்களெல்லாம் தொலையப் பெற்று
என்றும்,Endrum - ஒரு நாளும்
விடியா,Vidiya - ஓய்வில்லாத
வெம் நரகத்து,Vem Naragathu - கொடிய ஸம்ஸார நரகத்தில்
சேர்தல் மாறினர்,Seertal Maarinar - சேராமலிருக்கும்படி பெற்றார்கள்;
இனி,Ini - இப்படியான பின்பு
எனக்கு,Enakku - எனக்கு
முடியாதது என்;,Mudiyadathu Yen; - அடையப்படாதது உண்டோ, எல்லாம் ஸித்தமே.
2847திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (பிரானே! உன்னுடைய நிரிஹேதுகமான அநுக்ரஹத்தாலே பெற்ற இந்த நன்மை, இனியொரு நாளும் இடையறாதொழிய வேணும் இதுலே யெனக்கு வேண்டுவது, என்று எம்பெருமானைப் பிரார்த்திக்கின்றார்.) 8
மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து அடியை யடைந்து உள்ளம் தேறி
ஈறிலின்பத்து இருவெள்ளம் யான் மூழ்கினன்
பாறிப்பாறி யசுரர் தம் பல் குழாங்கள் நீர் எழப் பாய் பறவை யொன்று
ஏறி வீற்று இருந்தாய் உன்னை என்னுள் நீக்கேல் எந்தாய் –2-6-8
பல பிறப்பும்,Pala Pirappum - பல பிறவிகளிலும்
மாறி மாறி பிறந்து,Maari Maari Pirandhu - பலகாலும் பிறந்து (இப்படி பிறப்பது இறப்பதாய் செல்லுகிற ஜன்ம பரம்பரைகளிலே வாரா நிற்க)
அடியை அடைந்து,Adiyai Adainthu - இன்று உன் திருவடிகளைக்கட்டி
உள்ளம் தேறி,Ullam Theri - மனம் தெளிந்து
ஈறு இல்,Eeru el - முடிவில்லாத
இன்பத்து இரு வெள்ளம்,Inpathu Iru Vellam - ஆனந்தப் பெருவெள்ளத்திலே
யான் மூழ்கினன்,Yaan Moozhkinan - நான் ஆழ்ந்துவிட்டேன்
அசுரர் தம்,Asurar Tham - அஸூரர்களினுடைய
பல் குழாங்கள்,Pal Kuzhangal - பல கூட்டங்கள்
பாறி பாறி,Paari Paari - அடியோடு அழிந்து
நீறு எழ,Neeru Ezu - நீறாகும் படி
பாய் பறவை ஒன்று ஏறி வீற்றிருந்தாய்,Pai Paravai Ondru Eri Veettrindhaai - பாய்கின்ற பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவனே!
எந்தாய்,Endhaai - என் தந்தையே!
உன்னை,Unnai - உன்னை
என்னுள்,Ennul - என்னிடத்தில் நின்றும்
நீக்கேல்,Neekkael - பிரியச் செய்யாதிருக்க வேணும்.
2848திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார்.) 9
எந்தாய் தண் திருவேங்கடத்துள் நின்றாய் இலங்கை செற்றாய் மராமரம்
பைந்தாள் ஏழுருவ ஒரு வாளி கோத்த வில்லா
கொந்தார் தண் அம் துழாயினாய் அமுதே உன்னை என்னுள்ளே குழைந்த வெம்
மைந்தா வானேறே இனி எங்குப் போகின்றதே –2-6-9
எந்தாய்,Endhaai - ஸ்வாமியே!
தண் திருவேங்கடத்துள் நின்றாய்,Than Thiruvengadaththul Nindraai - குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே!
இலங்கை செற்றாய்,Ilankai Setraai - லங்காபுரியை அழித்தவனே!
மராமரம்,Maramaram - மராமரங்களினுடைய
பை தாள் ஏழ்,Pai Thaal Yezh - பருத்த அடிகள் எழும்
உருவ,Uruva - உருவும்படி
ஒரு வாளி கோத்த வில்லா,Oru Vaali Kotha Villa - ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே!
கொந்து ஆர்தண் அம் துழாயினாய்,Kondhu Aardhan Am Thuzhaayinaai - கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
எம் அமுதே,Em Amudhe - எனக்கு அமுதமர்னவனே!
உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா,Unnai Ennulle Kuzhaittha Maindha - என்னோடு ஒரு நீராகக் கலந்த மைந்தளே!
வான் ஏறே,Vaan Erea - நித்யஸூரி நாதனே!
இனி எங்கு போகின்றது,Ini Engu Poagindradhu - இனி என்னைத் தவிர உனககு வேறு போக்கிட முண்டோ?
2849திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (ஆழ்வாரே! என்னை நீர்வளைத்துப் பேசுவது கிடக்கட்டும் நீர் அயோக்யதாநுஸந்தானம் பண்ணி என்னைவிட்டகன்று போய்விடுவீரோ என்று நான் கவலை கொண்டிராநிற்கையில், நீர்இங்ஙனே பேசக்கடவீரோ? நான் உம்மைவிட்டு எங்கும் போகப்போகிறதில்லை; நீர்என்னை விட்டுப் போகாதிருப்பீரா? சொல்லும், என்று எம்பெருமான் திருவுள்ளமாக, முக்காலத்திலும் எல்லாப்படியாலும் எனக்கு உபகாரம் செய்தருளின உன்னைப் பெற்றுவைத்து, இனிநான் அகன்று போவதற்கு என்ன ப்ரஸக்தி உண்டு, என்று உறுதியாகக் கூறி முடிக்கின்றார்.) 10
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள் தாய் தந்தை உயிரா
கின்றாய் உன்னை நான் அடைந்தேன் விடுவேனோ
பாகின்ற தொல் புகழ் மூ வுலகுக்கும் நாதனே பரமா தண் வேங்கட
மேகின்றாய் தண் துழாய் விரை நாறு கண்ணியனே –2-6-10
போகின்ற காலங்கள்,Pogindra Kaalangal - நிகழ் காலங்கள்
போய காலங்கள்,Poya Kaalangal - இறந்த காலங்கள்
போகு காலங்கள்,Pogu Kaalangal - எதிர்காலங்கள் (ஆகிய இவற்றில்)
தாய் தந்தை உயிர்ஆகின்றாய்,Thai Thandhai Uyir Aagindraai - தாயும் தந்தையும் உயிருமாயிருப்பவனே!
பாகின்ற,Paagindra - பாவுகின்ற
தொல் புகழ்,Thol Pugazh - நித்யமான கீர்த்தியையுடையனாய்
மூ உலகுக்கும் நாதனே!,Moo Ulakukkum Naadane! - மூன்று லோகங்களுக்கும் நாதனாயிருப்பவனே!
பரமா,Paramaa - ஸர்வோத்க்ருஷ்டனே!
தண் வேங்கடம் மேகின்றாய்,Than Thiruvengadam Megindrai - குளிர்ந்த திருவேய்கடமலையை விரும்பி இருப்பவனே!
தண் விரை நாறு,Than Virai Naaru - குளிர்ந்த பரிமளம் வீசப்பெற்ற
துழாய் கண்னியனே,Thuzhai Kanniyanne - திருத்துழாய் மாலையை யுடையவனே!
உன்னை நான்,Unnai Naan - அடைந்தேன் விடுவேனோ?
2850திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (இப்பதிகத்தை இனிதாக அநுஸந்திக்குமவர்கள், பாகவதர் என்ற போக்கு உரியவராவர் என்று, இது கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
கண்ணித் தண்ணம் துழாய் முடிக் கமலத் தடம் பெரும் கண்ணனைப் புகழ்
நண்ணித் தென் குருகூர்ச் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வில் அந்தாதி ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து இசையோடும்
பண்ணில் பாட வல்லார் அவர் கேசவன் தமரே –2-6-11
தண் அம்துழாய் கண்ணிமுடி,Than Am Thuzhai Kanni Mudhi - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையணிந்த முடியையும்
கமலம் தடம் பெரு கண்ணனை,Kamalam Thadam Peru Kannanai - தாமரை போன்று விசாலமான நீண்ட திருக்கண்களையுடைய பெருமானுடைய
புகழ் நண்ணி,Pugazh Nanni - திருக்குணங்களை அநுபவித்து
தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன,Then Kurukoor Sadagoan Maran Sonna - தென் குருகூர் சடகோபன் மாறன் சொன்ன
எண்ணில் சோர்வு இல்,Ennil Sorvu Il - அநுஸந்தானத்தில் சோர்வு இல்லாத
அந்தாதி,Andhaadhi - அந்தாதித்தொடையான
ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து,Aayiraththul Ivaiyum Orpaththu - ஆயிரத்தினுள்ளே இப்பத்துப் பாட்டையும்
இசையொடும்,Isaiyodum - இசையோடுகூட
பண்ணில் பாட வல்லார்அவர்,Pannil Paada Vallaravaru - பண்ணில் அமைத்துப் பாட வல்லவர்கள்
கேசவன் தமர்,Kaesavan Thamar - எம்பெருமானடியாராகப் பெறுவர்ர்கள்.
2851திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (பின்னடிகளை முத்துற அந்வயித்துக்கொண்டு முன்னடிகளைப் பிறகு அந்வயித்துக் கொள்க. ஸர்வேச்வரனாய், அழகு நிறைந்த திவ்யமங்கள விக்ரஹ விசிஷ்டனாய், நித்யஸூரி நாதனாய் எனக்கு ஸ்வாமியாயிருக்கின்ற நாராயணனாலே, என்னோடு ஏதேனுமொருபடி ஸம்பந்தமுடையாரெல்லாரும், கேசவன்தமர் என்னும் படியான சிறப்புப் பெற்றார்கள்; அதனாலே நம்முடைய ஸ்ரீவைஷ்ணவஸ்ரீவிலக்ஷணமாகவுள்ளது என்கிறார்.) 1
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1
ஈசன்,Eesan - எல்லார்க்கும் ஸ்வாமியாய்
என்,En - என்னுடைய அனுபவத்திற்கு உரிய
கரு செம்கோலம் கண்ணன்,Karu Sem Kolam Kannan - சிவந்து அழகிய திருக்கண்களை நான் அநுபவிக்கும்படி செய்தவனாய்
விண்ணோர்நாயகன்,Vinnor Nayagan - நித்யஸூரிநாதனாய்
எம்பிரான்,Empiran - எனக்கு உபகாரகனாய்
எம்மான்,Emman - எனது ஸ்வாமியாய்
நாராயணனாலே,Naaraayananaale - நாராயணனாலே
எமர்,Emar - என்னைச் சேர்ந்தவர்கள்
கீழ் மேல் ஏழ் ஏழு பிறப்பும்,Keel Mel Yezh Yezhu Pirappum - கீழும் மேலுமுள்ள ஏழேழ் பிறப்புக்களிலும்
கேசவன் தமர்,Kesavan Thamar - பகவத் பக்தராகப் பெற்றார்கள்
இது,Idu - இப்படிப்பட்ட
மா சதிர்,Ma Sadir - பெரிய சிறப்பை
பெற்று,Petru - அடைந்து
நம்முடை வாழ்வு வாய்க்கின்ற ஆ,Nammudai Vaazhvu Vaaykinraa Aa - நமது வாழ்ச்சி வளருகிறபடி என்னே!;
2852திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ்ப்பாட்டில், நாராயணன் என்கிற திருநாமம் ப்ரஸ்துதாமகவே அதனுடைய அர்த்தாநுபவம் பண்ணுவதாக இப்பாசுரம் அமைகின்றது.) 2
நாரணன் முழு வேழ் உலகுக்கும் நாதன் வேதமயன்
காரணம் கிரிசை கருமமிவை முதல்வன் எந்தை
சீரணங்கு அமரர் பிறர் பலரும் தொழுது ஏத்த நின்று
வாரணத்தை மருப்பொசித்த பிரான் என் மாதவனே –2-7-2
நாரணன்,Naaranan - நாராயணனும்
முழு எழ் உலகுக்கும்நாதன்,Muzhu Yezh Ulakukkum Naadhan - எல்லா உலகங்களுக்கும் ஸ்வாமியும்
காரணம் கிரிசை கரமம் இவை முதல்வன்,Kaaranam Kirisai Karamam Ivai Mudhalvan - காரணப் பொருள்கள் காரியப் பொருள்கள் பிரயோஜனங்கள் ஆகிய இவற்றுக்கு நிர்வாஹகனும்
சீர்அணங்கு அமரர்,Seer Anangu Amarar - சீர்மை பொருந்திய திவ்யர்களான ந்த்யஸூரிகளாலும்
பிறர் பலரும்,Pirar Palarum - மற்றும் பலபேர்களாலும்
தொழுது ஏத்த நின்று,Thozhudhu Aeththa Nindru - வணங்கித் துதிக்கப்பட்டு
வாரணத்தை,Vaaranathai - (கம்ஸனது)யானையினுடைய
மருப்பு,Maruppu - கொம்பை
ஒசித்த,Ositha - முறித்த
பிரான்,Piran - உபகாரகனும்
என் மாதவன்,En Madhavan - எனக்கு உரியவனுமான திருமால்
எந்தை,Endhai - என்னை யடிமை கொண்டவன்
2853திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் என்னிடத்தில் இவ்வளவு கனத்த விஷயீகாரஞ் செய்வதற்கு அடியாக நான் செய்த ஸாதாநுஷ்டாநம் பெரிதாக வொன்றுமில்லை; மாதவன் என்று வெறுமனே வாயாற் சொன்னவளவையே கொண்டு என்னுடைய தீமைகளெல்லாவற்றையும் போக்கி ஆட்கொண்டானென்கிறார்.) 3
மாதவன் என்றதே கொண்டு என்னை இனி இப்பால் பட்டது
யா தவங்களும் சேர்கொடேன் என்று என்னுள் புகுந்திருந்து
தீதவம் கெடுக்கும் அமுதம் செந்தாமரை கட்குன்றம்
கோதவமிலன் கன்னல்கட்டி எம்மான் என் கோவிந்தனே –2-7-3
எம்மான் என் கோவிந்தன்,Emman En Govindhan - எனக்காகக் கண்ணனாயவதரித்த எம்பெருமான்
மாதவன் என்றதே கொண்டு,Madhavan Endrathe Kondhu - ‘மாதவன்’ என்று நான் வாயினாற் சொன்ன வளவையே கொண்டு
என்னை,Ennai - என் விஷயத்தில்
இனி இப்பால் பட்டது,Ini Ippaal Pattadhu - இனிமேலுள்ள காலமெல்லாம்
அவங்கள் யாதும்,Avangal Yaadhum - ஒருவிதமான குறையும்
சேர்கொடேன் என்று,Serkoden Endru - சேரவொட்டேள் என்று ஸங்கல்பித்துக்கொண்டு
என் உள் புகுந்து இருந்து,En Ul Pugundhu Irundhu - என்னுள்ளே பிரவேசித்திருந்து
தீது அவம் கெடுக்கும்,Theedhu Avam Kedukkum - பலவகைப் பாவங்களையும் போக்கி யருள்கினாய்
செம் தாமரை கண்,Sem Thaamarai Kan - செந்தாமரை போன்ற திருக் கண்களையுடையனாய்
குன்றம்,Kunram - குன்றம் போல் நிலைபெயராமலிருந்து
கோது அவம் இல் என் கன்னல் கட்டி,Godhu Avam Il En Kannal Katti - கோதும் அவமுமில்லாத கன்னல் கட்டிபோலே எனக்கு இனியனாயிருக்கின்றான்.
2854திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (என்னை மாத்திரமன்றியே என்னோடு ஸம்பந்த ஸம்பந்த முடையாரையுங்கூட என்னைப்போலே யாக்கின எம்பெருமானுடைய ஸாமாத்தியம் என்னே! என்று வியந்து பேசும் பாசுரமிது.) 4
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து
தேவும் தன்னையும் பாடியாடத் திருத்தி என்னைக் கொண்டு என்
பாவம் தன்னையும் பாறக் கைத்து எமர் ஏழேழு பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே –2-7-4
வல்லன்,Vallan - ஸர்வகக்தனும்
எம்பிரான்,Empiran - எமக்கு உபகாரங்கள் செய்பவனுமான
விட்டு,Vittu - விஷ்ணுபகவான் (எமக்குச் செய்ததுயாதெனில்)
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் என்று என்றே குனித்து,Govindhan Kudakoothan Kovalan Endru Endrae Kunithu - கோவிந்தன் என்றும் குடக் கூத்தாடுபவன்; என்றும் கோவலன் என்றும் இத்தகைய திருநாமங்களையே சொல்லிக் கூத்தாடி
தேவும்,Thevum - பரத்வத்தையும்
தன்னையும்,Thannaiyum - தானான தன்மையாகிய ஸௌலப்யத்தையும்
பாடி,Paadi - புகழ்ந்துபாடி
ஆட,Aada - திரியும்படி
திருத்தி,Thiruththi - கடாக்ஷத்து
கொண்டு,Kondu - அடியேனை
என் பாவம் தன்னையும்,En Paavam Thannaiyum - எனது பாவங்களையும்
பாற கைத்து,Paara Kaithu - ஓடவடித்து
எமர் ஏழ் எழு பிறப்பும்,Emar Yezh Yezhu Pirappum - எம்மைச் சேர்ந்தவர்கள் ஏழேழ் பிறப்பும்
மேவும் தன்மையம் ஆக்கினான்,Mevum Thanmaiyam Aakinaan - (தன்னை) அடையும்படியான தன்மையை யுடையோமாம்படி செய்தான்.
2855திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம்மையும் தம்முடைய ஸம்பந்த ஸம்பந்திகளையும் எம்பெருமான் வைஷ்ணவராக்கினது, வடிவத்தைக் காட்டி யென்கிறார்.) 5
விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்
விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு
விட்டிலங்கு மதியம் சீர் சங்கு சக்கரம் பரிதி
விட்டிலங்கு முடி யம்மான் மது சூதனன் தனக்கே –2-7-5
விட்டு இலங்கு முடி அம்மான்,Vittu Ilanku Mudi Ammaan - நன்றாக விளங்குகின்ற திரு வபிஷேகத்தை யுடைய ஸ்வாமியான
மதுசூதனன் தனக்கு,Madhusudhanan Thanukku - மதுவைக் கொன்ற பெருமானுக்கு
பாதம் கைகள் கண்கள்,Padham Kaigal Kangal - திருவடிகளும் திருக்கைகளும் திருக்கண்களும்
விட்டு இலங்கு செம் சோதி தாமரை,Vittu Ilanku Sem Sodhi Thaamarai - விரிந்து விளங்குகின்ற சிவந்த சுடரை யுடைய தாமரைப் பூக்களேயாம்
திருஉடம்பு,Thiru Uthampu - திரு மேனியோ வென்றால்.
விட்டு இலங்கு கரும் சுடர் மலையே,Vittu Ilanku Karum Sudar Malaiye - நன்கு விளங்குகின்ற நீலவர்ணப்ரபையை யுடைய மலைபோன்றது;
சீர்சங்கு,Seer Sangku - சிறந்த சங்கானது
விட்டு இலங்கு மதியம்,Vittu Ilanku Mathiyam - மிக விளங்குகின்ற சந்திரனைப் போன்றது;
சக்கரம்,Chakkaram - திருவாழி
பரிதி,Parithi - ஸூர்யனைப்போன்றது;
2856திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமான் பக்கலிலே நான் ஊன்றுகைக்காக அவன்றான் நெடுங்காலம் க்ருஷி பண்ணினதுண்டு அதுவும் பரமக்கிருபையாலே யென்கிறார்.) 6
மது சூதனை யன்றி மற்றிலேன் எத்தாலும் கருமமின்றி
துதி சூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழி தொறும்
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே யருள்கள் செய்ய
விதி சூழ்ந்ததால் எனக்கேல் யம்மான் திரிவிக்ரமனையே –2-7-6
மது சூதனை அன்றி,Madhusudhananai Andri - மதுவை முடித்த எம்பெருமானைத்தவிர
மற்று இலேன் என்று,Matru Ilaindru Endru - வேறொரு பற்றுடையேனல்லேன் என்று அநுஸந்தித்து
எத்தாலும்,Ethaalum - எந்தவஸ்துவினாலும்
கருமம் இன்றி,Karumam Indri - ஒரு காரியமில்லாமல் (அநந்யப்ரயோஜநமாக)
சூழ்ந்த,Soozhnda - அவனது திருக்குணங்களை வளைந்த
பாடல்கள்,Padalgal - பாசுரங்களை
நின்று பாடி ஆட,Nindru Paadi Aada - நிலை நின்று பாடியாடும்படி
ஊழி ஊழி தொறும்,Oozhi Oozhi Thorum - ஸதாகாலமும்
எனைத்து ஓர்பிறப்பும்,Enaithu Orpirappum - (நான் பிறந்த) எல்லாப் பிறவிகள் தோறும்
எதிர்,Edhir - எனக்கெதிரே
சூழல் புக்கு எனக்கே,Soozhal Pukku Enakke - சூழ்ச்சியோடே அவதாரித்து என்பொருட்டே
அருள்கள் செய்ய,Arulkal Seyya - க்ருபை பண்ணுதற்கு
எனக்கு ஏல்,Enakku Ael - எனக்கென்னலே
அம்மான் திரி விக்கிரமனை விதி சூழ்ந்துத,Ammaan Thiri Vikkiramanaai Vithi Soozhnthudh - ஸ்வாமியான த்ரிவிக்ரமனை விதி சூழ்ந்து கொண்டது
2857திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (எம்பெருமானே! உன்னுடைய குணாநுஸந்தாந பூர்வகமாக உன்னைத் துதித்துவணங்கி யநுபவிக்கு மிவிவளவையே பிரயோஜனமாகக் கொண்டிருக்கும் படியான மனத்தை எனக்குத் தந்தருளினாய்; உன்னுடைய ஸாமாத்தியமே ஸாமாத்தியம்! என்று கொண்டாடுகிறார்.) 7
திரிவிக்ரமன் செந்தாமரைக் கண் எம்மான் என் செங்கனி வாய்
உருவில் பொலிந்த வெள்ளிப் பளிங்கு நிறத்தனன் என்று என்று உள்ளி
பரவிப் பணிந்து பல்லூழி யூழி நின் பாத பங்கயமே
மருவித் தொழும் மனமே தந்தாய் வல்லை காண் என் வாமனனே –2-7-7
என் வாமனனே,En Vaamanane - எனக்காக வாமனாவதாரமெடுத்த பகவானே!
திரிவிக்கிரமன் என்று,Thiruvikraman Endru - மூவடியாலே உலகங்களையெல்லாமளந்தவன் என்றும்
செம் தாமரை கண் எம்மான் என்று,Sem Thaamarai Kan Emman Endru - செந்தாமரை போன்ற கண்களையுடைய ஸ்வாமியென்றும்
என் செம் கனிவாய உருவில் பொலிந்த வெள்ளை பளிங்கு நிறத்தனன் என்று,En Sem Kanivaai Uruvil Polindha Vellai Palingu Nira Thanan Endru - எனக்கு போக்யமாய்ச் சிவந்து கனிந்த அதரத்தினுடைய அழகுபொலிந்த சுத்த ஸ்படிக வர்ணமான திரு முத்துக்களையுடையவன் என்றும்.
உள்ளி,Ulli - அநுஸந்திந்து
பரவி,Paravi - துதித்து
பணிந்து,Panindhu - வணங்கி
பல் ஊழி ஊழி,Pal Oozhi Oozhi - நெடுங்காலம்
நின் பாத பங்கயமே,Nin Paadha Pangayame - உனது பாதாரவிந்தங்களிலேயே
மருவி தொழும் மனம்,Maruvi Thozhum Manam - பொருந்தி அடிமை செய்தற்குறுப்பான மனத்தை
தந்தாய்,Thandhaai - கொடுத்தருளினாய்
வல்லை காண்,Vallai Kaan - நீ ஸமர்த்தனன்றே?
2858திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் எம்பெருமான் பண்ணிந மஹோபகாரத்திற்கு இன்னது கைம்மாறு செய்வதென்று தெரியாமல் தடுமாறுகின்றமையைத் தெரிவிக்கும் பாசுரமிது, அவன் செய்த உபகாரம் யாதெனில், தன்னை யநுபவிப்பதற்கு உறுப்பாகாமலிருந்த நெஞ்சை மாற்றிப் பதஞ்செய்வித்த விதுவே மஹோபகார மென்கிறார்.) 8
வாமனன் என் மரகத வண்ணன் தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் என்று என்று உன் கழல் பாடியே பணிந்து
தூ மனத்தனனாய் பிறவித் துழதி நீங்க என்னைத்
தீ மனம் கெடுத்தாய் உனக்கு என் செய்கேன் என் சிரீதரனே –2-7-8
என் சிரீதரனே,En Sreedharane - எனது திருமாலே!
வாமனன் என்று,Vaamanan Endru - வாமன மூர்த்தியே யென்று சொல்லியும்
என் மரதகம் வண்ணன் என்று,En Maradhagam Vannan Endru - மரதகம் போன்ற வொளியையுடைய எம்பெருமானேயென்று சொல்லியும்
தாமரைக் கண்ணினன் என்று,Thaamarai Kanninan Endru - புண்டாரிகாக்ஷனே யென்று சொல்லியும்
காமனை பயந்தாய் என்று,Kaamanai Payanthai Endru - மன்மதனை மகனாகப் பெற்றவனே யென்று சொல்லியும்.
உன் கழல்,Un Kazhal - உன் திருவடிகளில்
பாடி பணிந்து,Paadi Panindhu - பாடிவணங்கி
தூ மனத்தனன் ஆய்,Thoo Manathanaan Aay - பரிசுத்தமான மனத்தையுடையேனாய்
பிறவி துழதி நீங்க,Piravi Thuzhadi Neenga - பிறவித் துயரம் தீரும் படியாக
என்னை தீ மனம் கெடுத்தாய்,Ennai Thee Manam Keduthaai - என்னைத் தீய மனம் அற்றவனாக ஆக்கினாய்;
உனக்கு,Unakku - இப்பெரு நன்றி செய்தவுனக்கு
என் செய்கேன்,En Seykaen - என்ன கைம்மாறு செய்வேன்?
2859திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (கீழ் ஆடியாடி யென்கிற நான்காந் திருவாய்மொழியில் நான்பட்ட துயரமெல்லாம் தொலைந்து மகிழ்ந்தேனாம்படி என்னுள்ளே வந்து பேராதபடி புகுந்தருளி என்னுடைய இந்திரியங்களை அடக்கி ஆண்டனையே! என்று உகக்கிறார்.) 9
சிரீ இதரன் செய்ய தாமரைக் கண்ணன் என்று என்று இராப்பகல் வாய்
வெரீ இ அலமந்து கண்கள் நீர் மல்கி வெவ்வுயிர்த்து உயிர்த்து
மரீ இய தீ வினை மாள இன்பம் வளர வைகல் வைகல்
இரீஇ உன்னை என்னுள் வைத்தனை யென்னிருடீ கேசனே –2-7-9
என் இருடீகேசனே,En IrudiKesane - அம்பெருமானான ஹ் ரு ஷீ கேசனே!
சிரீ இதரன் என்று,Sreedharan Endru - ஸ்ரீதரனே! என்றும்
செய்ய தாமரை கண்ணன் என்று,Seyya Thaamarai Kanni Nan Endru - செந்தாமரைக் கண்ணனே! என்றும்
இரா பகல்,Ira pagal - இரவும் பகலும்
வாய் வொரி இ,Vaai Vori e - வாய் பிதற்றி
அலமந்து,Alamandhu - சுழன்று
கண்கள் நீர்மல்கி,Kangal Neermalgi - கண்களில் நீர்ததும்பப் பெற்று
வெம் உயிர்த்து உயிர்த்து,Vem Uyiruthu Uyiruthu - வெப்பமாக நெடுமூச் செறிந்து
மாரி இய தீவினை மாள,Maari Iya Theevinai Maala - சேர்ந்திருக்கின்ற பாவங்கள் தொலையும்படியாகவும்
இன்பம் வளர,Inbam Valara - ஆனந்தம் பெருகும்படியாகவும்
வைகல் வைகல்,Vaigal Vaigal - ஷணந்தோறும்
உன்னை,Unnai - உன்னை
என் உள்,En Ul - என் நெஞ்கினுள்ளே
இரி இவைத் தனை,Iri Ivaith Thanai - இருத்தி வைத்தாய்; (இப்படியும் ஒரு உபகாரமுண்டோ!)
2860திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இங்ஙனம் மஹோபகாரகனான எம்பெருமானை ஒருநாளும் விடலாகாதென்று நெஞ்சுக்கு உரைக்கும் முகத்தால். தம்முடைய அத்யவஸாயத்தை வெளியிடுகிறார்) 10
இருடீகேசன் எம்பிரான் இலங்கை அரக்கர் குலம்
முருடு தீர்த்த பிரான் எம்மான் அமரர் பெம்மான் என்று என்று
தெருடியாகில் நெஞ்சே வணங்கு திண்ணம் அறி அறிந்து
மருடி யேலும் விடேல் கண்டாய் நம்பி பற்ப நாபனையே –2-7-10
நெஞ்சே,Nenje - மனமே!
தெருடி ஆகில்,Therudi Aagil - நீ அறிவுடையை யாகில்
இருடீகேசன் என்று,IrudiKesane Endru - ஹ்ருஷீகேசனே யென்றும்
எம்பிரான் என்று,Empiran Endru - எம்பிரானே யென்றும்
இலங்கை அரக்கர் குலம் முருடு தீர்த்த,Ilankai Arakkar Kulam Murudu Theertha - இலங்கையிலிருந்த ராக்ஷ குலத்திற்கு முருடான ராவணனைத்
பிரான் என்று,Piran Endru - தொலைத்த பிரானே யென்றும்
எம்மான் என்று,Emman Endru - எம்பெருமானே யென்றும்
அமரர் பெம்மான் என்று,Amarar Pemman Endru - நித்யஸூரிநாதனே யென்றும் சொல்லி
வணங்கு,Vanangu - அவனை வணங்கு;
திண்ணம் அறி,Thinnam Ari - இதைத் திடமாக அறிவாயாக;
அறிந்து,Arindhu - அறிந்தபின்
மருடி ஏலும்,Marudi Yelum - (மீண்டும்) சுலங்குவாயாகிலும்
நம்பி பற்பநாபனை,Nambi Parpanabanai - குணபரிபூர்ணனான பத்மநாபனை
விடேல் கண்டாய்,Videl Kandaai - விடாதே கொள்.
2861திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னை யடிமை கொண்ட எம்பெருமான், என்னைத் தவிர வேறொன்றையும் அறியாத படியானான், என்கிறார்) 11
பற்பநாபன் உயர்வற உயரும் பெரும் திறலோன்
எற்பரன் என்னை யாக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் என்னமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்
வெற்பன் விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே –2-7-11
பற்பநாபன்,Parpanaban - (உலகமெல்லாம் தோன்றுவதற்குக் காரணமான) தாமரையைத் திருநூபியிருடையவனும்
உயர்வு அற உயரும் பெருதிறலோன்,Uyarvu Ara Uyarum Peruthiralon - வேறு எங்கும் உயர்த்தியில்லை யென்னும்படி அபாரசக்தியையுடையவனும்
என்பான்,Enpaan - என்னிடத்து ஊற்றமுடையவனும்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம்,Ennai Aakkikondhu Enakke Thannai Thandha Karppagam - என்னை யுண்டாக்கி அங்கீகாரித்து எனக்கே அஸாதாரணமாம்படி தன்னைத் தந்த கல்ப வ்ருக்ஷராயனும்
என் அமுதம்,En Amudham - எனக்குப் பரம போக்யனும்
கார்முகில் போலும்,Kaarmugil Polum - காளமேகம் போன்றவனும்
வேங்கடம் நல்வெற்பன்,Vengadam Nalveppan - திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும்
விசும்போர்பிரான்,Visumbor Piran - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
தாமோதரன்,Thaamodharan - ஆச்ரித விதேயனுமான எம்பெருமான்
எந்தை,Endhai - எனக்கு ஸ்வாமி.
2862திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (தம் விஷயத்தில் அம்பெருமான் பண்ணின உபகாரம் மாஞானிகளாலும் அளவிட வொண்ணாதது என்கிறார். அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரத்திற்கு இலக்காயிருக்கின்ற தம்மைப்போன்றவர்கள் அவனைக் காணக்கூடுமேயல்லது, ‘நம்முயற்சியாலே யறிவோம்’ என்றிருப்பார்க்கு அறியலாகாது என்கிறாராகவுமாம்.) 12
தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை,
ஆமோதரமறிய வொருவ ர்க்கென்றெதொழுமவர்கள்,
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும்,
ஆமோதரமறிய எம்மானையென்னாழிவண்ணனையே.–2-7-12
தாமோதரனை,Dhamodharanai - தாமோதரனென்கிற திரு நாமமுடையனும்
தனி முதல்வனை,Thani Mudhalvanai - ஒப்பற்ற ஸகல ஜகத்காரண பூதனும்
ஞாலம் உண்டவனை,Gnalam Undavanai - (பிரளயகாலத்தில்) உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனுமான எம்பெருமானை
தரம் அறிய,Tharam Ariya - பகுத்து அறிவதற்கு
ஒருவர்க்கு ஆமோ என்று,Oruvarukku Aamo Endru - ஒருவராலும் ஸாத்யமாகாதென்று துணிந்து
தொழுமவர்கள் தாமோதரன்,Thozhumavaragal Dhamodharan - வணங்குகின்றவர்களான
உரு ஆகிய சிவற்கும் திசை முகற்கும்,Uru Aakiya Sivargum Thisai Mukargum - எம்பெருமானுக்கு அவயவபூதர்களான சிவனுக்கும் பிரமனுக்கும்
என் ஆழி வண்ணனை எம்மானை,En Aazhi Vannanai Emmanai - கடல் வண்ணனான எம்பெருமானை
தரம் அறிய ஆமோ,Tharam Ariya Aamo - அளவிட்டு அறிதல் கூடுமோ?
2863திருவாய்மொழி || (2-7–கேசவன் தமர்) (பன்னிரு நாமப் பாட்டு) (இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 13
வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,
பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,
பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.–2-7-13
வண்ணம் மாமணி சோதியை,Vannam Maamani Sodhiyai - நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய்
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய்
நெடு மாலை,Nedu Maalai - (ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர்சடகோபன்,Then Kurugoor Sadagopan - ஆழ்வார்
அமரர் தலை மகனை,Amarar Thalai Maganai - நித்யஸூரி நிர்வாஹகனாய்
பண்ணிய,Panniya - அருளிச்செய்த
தமிழ்மாலை ஆயிரத்துள்,Thamizh Maalai Aayirathul - தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும்
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்,Pannil Panniru Naamap Pattu Ivai Pannirandu - பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும்
அண்ணல்,Annal - ஸர்வேச்வரனுடைய
தாள்,Thaal - திருவடிகளை
அணைவிக்கும்,Anaivikum - சேர்ப்பிக்கும்
2864திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்க வருளிச் செய்யப்படுகிறது.) 1
அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1
அரவு அணை மேல்,Aravu Anai Mel - ஆதிசேஷ சயனத்தின் மீது
அணைவது,Anaivadhu - சேர்வது
பூ பாவை ஆகம் புணர்வது,Poo Paavai Aagam Punarvadhu - பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்)
அவர் இருவர்,Avar Iruvar - ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும்
முதலும் தானே,Mudhalum Thaane - முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே)
எப்பொருட்கும்,Epporudkum - எல்லாப் பொருளுக்கும்
இணைவன் ஆம்,Inaivan Aam - ஸஜாதீயனாயிருப்பன்;
வீடு முதல் ஆம்,Veedu Mudhal Aam - மோக்ஷத்தை யளிப்பவனுமவனே;
பிறவி கடல்,Piravi Kadal - ஸம்ஸார ஸமுத்ரத்தை
நீந்துவார்க்கு,Neenthuvaarku - நீந்திக் கரையேற விரும்புமவர்கட்கு
புணைவன்,Punai Van - தெப்பமாயிருப்பவனுமவனே.
2865திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார்.) 2
நீந்தும் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
நீந்தும் துயரில்லா வீடு முதலாம்
பூந்தண் புனல் பொய்கை யானை யிடர் கடிந்த
பூந்தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பே –2-8-2
பூ தண் புனல் பொய்கை,Poo Than Punal Poikai - அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில்
யானை,Yanai - கஜேந்திராழ்வானுடைய
இடர்,Idar - ஆர்த்தியை
கடிந்த,Kadindha - தொலைத்தருளினவனும்
பூ தண் துழாய்,Poo Than Thuzhai - துழாய் மாலையை யுடைவனுமான
என் தனி நாயகன்,En Thani Naayagan - எம்பெருமானுடைய
புணர்ப்பு,Punarppu - ஸம்பந்தமர்னது
நீந்தும்,Neenthum - கடத்தற்கு அரிதான
துயர்,Thuyar - துன்பத்திற்கு ஹேதுவான
பிறவி உட்பட மற்று,Piravi Utpada Matru - பிறப்பு முதலாக மேலுமுள்ள
எவ்வெவையும் நீந்தும்,Evvevaiyum Neenthum - எப்படிப்பட்ட துன்பங்களையும் கடத்தும் (அன்றியும்)
துயர் இல்லா வீடு முதல் ஆம்,Thuyar Illa Veetu Mudhal Aam - துயர் சிறிதுமில்லாத மோக்ஷத்திற்கும் ஹேதுவாகும்.
2866திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) ( முதற்பாட்டில் “இருவரவர் முதலுந்தானே” என்றதை விவரித்துக் கொண்டு, அப்பெருமானுடைய ஐச்வர்ய ஸூசகமான சேஷ்டிதங்கள் எங்கும் ப்ரஸித்தமாகவே யுள்ளன வென்கிறார்.) 3
புணர்க்கும் அயனாம் அழிக்கும் அரனாம்
புணர்ந்த தன்னுந்தியோடே ஆகத்து மன்னி
புணர்ந்த திருவாகித் தன் மார்வில் தான் சேர்
புணர்ப்பன் பெரும் புணர்ப்பு எங்கும் புலனே –2-8-3
தன் புணர்த்த,Than Punarthu - தன்னைப் படைத்த
உந்தியோடு,Undhiyodu - திருநாபியோடேகூட
ஆகத்து,Aagathu - திருமேனியிலொரு பக்கத்திலும்
மன்னி,Manni - பொருந்தியிருந்து
புணாக்கும்,Punaakkum - லோக ஸ்ருஷ்டியைப் பண்ணுகிற
அயன் ஆம்,Ayan Aam - பிரமனும் தானேயாயிருப்பன்;
அழிக்கும் அரன் ஆம்,Azhikkum Aran Aam - ஸம்ஹாரிக்கிற ருத்ரனும் தானேயாயிருப்பன்.
தன் மார்வில்,Than Maarvil - தனது திருமார்பிலே
புணர்த்த,Punartha - சேர்த்துக்கொள்ளப்பட்ட
திரு ஆகி,Thiru Aagi - பிராட்டியை யுடையனாய்
தான் சேர்,Thaan Ser - தானே தனக்குத் தகுதியான
புணர்ப்பன்,Punarppan - செயலை யுடையனான அப்பெருமானது
பெரு புணர்ப்பு,Peru Punarppu - பெரிய வியாபாரம்
எங்கும்,Engum - எவ்விடத்தும்
புலன்,Pulan - பரத்யக்ஷயோக்யமே.
2867திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார்) 4
புலன் ஐந்து மேயும் பொறி ஐந்து நீங்கி
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலமுந்து சீரில் படிமின் ஓவாதே –2-8-4
புலன் ஐந்து,Pulan Aindhu - சப்தாதி விஷயங்கள் ஐந்திலும்
மேயும்,Meyum - மேய்கின்ற
பொறி ஐந்தும்,Pori aindhum - பஞ்சேந்திரியங்களின் வசத்தில் நின்றும்
நீங்கி,Neengi - விலகி
நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர்,Nalam andham illar oornadu puguveer - ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே!
அசுரரை,Asurarai - அசுரர்களை
அலமந்து வீய செற்றான்,Alamandhu veeya setraan - குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய
பலம் முந்து சீரில்,Palam mundhu seeril - பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில்
ஓவாதே,Ovaadhe - அநவரதம்
படிமின்,Padimin - அவகாஹியுங்கள்.
2868திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (முதற்பாட்டில் “இணைவனா மெப்பொருட்கும்” என்றது. இப்பாசுரத்தினால் விவரிக்கப்படுகிறது. ஹயக்ரீவ மத்ஸ்ய கூர்ம ராம க்ருஷ்ணாதி ரூபத்தாலே திருவவதாரங்கள் பண்ணி மூவுலங்களையுங் காத்தருள்பவனென்கிறது.) 5
ஓவாத் துயர்ப் பிறவி யுட்பட மற்று எவ்வெவையும்
மூவாத் தனி முதலாய் மூவுலகும் காவலோன்
மாவாகி யாமையாய் மீனாகி மானிடமாம்
தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தனே –2-8-5
ஓவா துயர்,Ova thuyar - இடைவிடாத துக்கத்தை விளைக்கிற
பிறவி உள்பட,Piravi ulpada - ஜன்மம் முதலாக
மற்று எவ்வெவையும்,Matru evvevaiyum - மற்றுமுள்ளவை யெல்லாவற்றுக்கும் (அதாவது ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாராதிகளுக்கென்றபடி)
மூவா,Moova - ஒரு நாளும் கை வாங்காத
தனி முதல் ஆய்,Thani mudhal aay - அஸஹாய காரண பூதனாய்க் கொண்டு.
மூ உலகும் காவலோன்,Moo ulagum kaavalon - மூன்று லோகங்களையும் ரக்ஷிக்க வல்லவனாய்
தேவ ஆதி தேவர் பெருமான்,Theva adhi devar perumaan - தேவர்களுக்கும் ஆதி தேவர்களான நித்ய ஸூரிகளுக்கும் அதிபதியாய்
என் தீர்த்தன்,En theerdhan - என்னைப் பரிசுத்தனாக்க வல்லனான பெருமான்
மா ஆகி,Maa aagi - ஹயக்ரிவனாக அவதரித்தும்
ஆமை ஆய்,Aamai aay - கூர்மமாக அவதரித்தும்
மீன் ஆகி,Meen aagi - மத்ஸ்யமாக அவதரித்தும்
மானிடம் ஆம்,Maanitam aam - (ராம க்ருஷ்ணாதி ரூபேண) மநுஷ்யனாகவும் அவதரிக்குமவன்
2869திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (“தேவாதி தேவபெருமான்” என்று கீழ்ப்பாட்டில் ப்ரஸ்தாவிக்கப்பட்ட பெரு மேன்மை, பண்டே அர்ஜூனன் நிரூபித்து நிர்ணயித்த விஷயமாதலால், மிக ப்ரஸித்தமானவதில் மற்றை யோருடைய ஆராய்ச்சி வேணுமோ வென்கிறார்.) 6
தீர்த்தன் உலகளந்த சேவடி மேல் பூந்தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைந்துழாயன் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேசக் கிடந்ததே –2-8-6
தீர்த்தன்,Theerthan - பரம பவித்திரனான கண்ணபிரானுடைய
உலகு அளந்த சே அடி மேல்,Ulagu alandha se adi mel - உலகமளந்த திருவடிகளிலே
பூ தாமம்,Poo thaamam - புஷ்பமாலையை
பார்த்தன்,Paarthan - அர்ஜூனன்
சேர்த்தி,Seerthi - ஸமாப்பித்து
அவையே,Avaiye - அப்பூமாலையையே
சிவன் முடிமேல்,Sivan mudimel - சிவபிரானுடைய தளைமேல்
தான் கண்டு,Thaan kandu - தானே பார்த்து
தெளிந்து ஒழிந்த,Thelinthu ozhindhu - நன்றாகத் தெளியப்பெற்ற
பைந்துழாயான் பெருமை,Painthuzhaayana perumai - பைந்துழாய் மாலையனான பெருமானுடைய பெருமை
பேர்த்தும் ஒருவரால்,Perthum oruvaraal - மற்ற பேர்களாலே
பேச கிடந்ததே,Pesa kidandhadhe - பேசவேண்டும்படி யிரா நின்றதோ?
2870திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (இவ்விபூதி எம்பெருமானுக்கே அஸாதாரண மென்னுமிடத்திற்குத் தனித்தனியே உபபத்திகள் பலபல வுளவென்கிறார்.) 7
கிடந்து இருந்து நின்று அளந்து கேழலாய்க் கீழ்ப் புக்கு
இடந்திடும் தன்னுள் கரக்கும் உமிழும்
தடம் பெரும் தோள் ஆரத் தழுவும் பார் என்னும்
மடந்தையை மால் செய்கின்ற மால் ஆர் காண்பரே –2-8-7
கிடந்து,Kidandhu - (கடற்கரையில் வழி வேண்டிக்) கிடந்து
இருந்து,Irundhu - (சித்திரக்கூட கிரியில் இருந்தும்
நின்று,Nindru - (ராவணனை முடித்தபிறகு இலங்கை வாசலில் வீர ஸ்ரீயோடே) நின்றும்.
அளந்து,Alandhu - த்ரிவிக்ரமாவதாரஞ் செய்தும்.
கேழல் ஆய்,Kezhal aay - வராஹ ரூபியாகி
கீழ் புக்கு,Keel pukku - பிரளய வெள்ளத்தின் கீழே புகுந்து
இடந்திடும்,Idandhidum - அண்ட கடாஹத்தினின்றும் பூமியை ஒட்டு விடுவித்தெடுத்தும் (ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்பவனாய்)
தன்னுள்,Thannul - தனக்குள்ளே கரக்கும் (மூவுலகையும்) மறைத்து வைப்பவனாய்
உமிழும்,Ummizhum - பிறகு வெளிப்படுத்துபவனாய்
தட பெரு தோள் ஆர தழுவும்,Thada peru thol aara thazhuvum - மிகப் பெரிய திருத்தோள்கள் நிரம்பும்படி தழுவிக் கொள்பவனாய் (ஆக இப்படிகளாலே
பார் என்னும் மடந்தையை,Paar ennum madandhaiyai - பூமிப்பிராட்டி திறத்திலே
மால்,Maal - ஸர்வேச்வரன்
செய்கின்ற,Seykinra - படுகிற
மால்,Maal - வ்யாமோஹத்தை
ஆர்காண்பார்,Aarkaanpaar - அறியவல்லாரார்?
2871திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (எம்பெருமானது அறிபுதத் தொழில்கள் எப்படிப்பட்டவர்கட்கும் எல்லை காணமுடியா வென்கிறார்.) 8
காண்பாரார் எம்மீசன் கண்ணனை என் காணுமாறு
ஊண் பேசில் எல்லா வுலகுமோர் துற்றாற்றா
சேண் பால் வீடோ வுயிரோ மற்று எப்பொருட்கும்
எண்பாலும் சோரான் பரந்துளான் எங்குமே –2-8-8
எம் ஈசன்,Em Isan - எமக்கு ஸ்வாமியான
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனை
காண்பார்ஆர்,Kaanpaar aar - அறியவல்லார்யார்?
காணும் ஆறு என்,Kaanum aaru en - அறியும் விதந்தான் யாது? (அவனுக்கு)
ஊண்பேசில்,Oonpaesil - உணவு இன்னதென்று சொல்லப் புகுந்தால்
எல்லா உலகும்,Ella ulagum - எல்லா வுலகங்களும்
ஓர் துற்று,Or thutru - ஒரு கபளத்திற்கும்
ஆற்றா,Aattra - போதாது;
வீடோ,Veetoo - (அவனுக்கு) வீடாயிருக்குமிடமோ
சேண்பால,Senpaal - எல்லா வுலகங்களுக்கும் மேற்பட்டு வெகு தூரத்திலுள்ளது;
மற்று எப்பொருட்கும்,Matru epporutkum - (அவனோ) (தன்னை யொழிந்த) எவ் வகைப் பொருட்கும்
உயிர்,Uyir - அந்தர்யாமி;
ஏண்பாலும்,Yenpaalum - எண்ணப்பட்ட ஓரிடமும்
சோரான்,Sooraan - விடாதவனாய்
எங்கும்,Engum - எல்லா விடங்களிலும்
பரந்து,Paranthu - வியாபித்து
உளன் ஆம்,Ulan aam - இருப்பவனாவன்
2872திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (கீழ்ப்பாட்டில் “ஏண்பாலுஞ் சோரான் பரந்துளனாமெங்குமே” என்றதில் சிலர் சங்கை கொண்டார்களாக, அவர்களை நோக்கிக் கூறுகின்றார்- எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே விப்ரதிபத்தியுடையார் இரணியன் பட்ட பாடுபடுவார்கள்; ஆகையாலே கெடுவிகாள்! அவன் பட்ட பாடு படாதே கிடிகோள்-என்கிறார்.) 9
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கில்லை யால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப்பிரான் பெருமை யாராயும் சீர்மைத்தே –2-8-9
கண்ணன் எங்கும் உள்ள என்ற,Kannan engum ulla enra - எம்பெருமான் எங்கு மிருக்கிறானென்று சொன்ன
மகனை,Maganai - புத்திரனை (ப்தஹ்லாதனை)
இரணியன்,Iranian - (பிதாவான) ஹிரண்யாசுரன்
காய்ந்து,Kaaynthu - கோபித்து
இங்கு இல்லை என்று,Ingu illai enru - இவ்விடத்தில் இல்லை கிடாய் என்று
தூண் புடைப்ப,Thoon putappu - தூணை அறைய,
அங்கு,Angu - அந்தத் தூணிலே
அப்பொழுதே,Appozhudhe - அந்த க்ஷணத்திலேயே
அவன் வீய,Avan veey - அவிவிரணியன்முடியும்படி
தோன்றிய,Thondriya - ஆவிர்ப்பவித்த
என் சிங்கப் பிரான்,En singapiran - நரஸிம்ஹ மூர்த்தியான எம்பிரானுடைய
பெருமை,Perumai - மேன்மை
ஆராயும் சீர்மைத்தே,Aaraayum seermaithae - ஆராய்தற்குரிய தன்மையதோ?
2873திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (ஸம்ஸாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும் அவர்களில் ஒருத்தனான நானும் அவர்களைப்போலே பாழ்பட்டொழியாமே ஒருவாறு உஜ்ஜீவிக்கப் பெற்றேனே! என்று தமக்கு நேர்ந்த லாபத்தைக் குறித்துக் களித்துப் பேசுகிறார்.) 10
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா
ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும்
வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற
கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10
சீர்மை கொள்,Seermai kol - மேன்மை பொருந்திய
வீடு,Veedu - மோக்ஷமும்
சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கமும்
நரகு,Narakku - நரகமும்
ஈரு ஆ,Eeru aa - மேலெல்லையாக
ஈர்மை கொள் தேவர் நடு ஆ,Eermai kol thaevar nandu aa - ஈர நெஞ்சுடையரான தேவர்கள் நடுவாக
மற்று எப்பொருட்கும்,Matru yepporutkum - மற்றெல்லாப் பொருள்களுக்கும்
வேர் ஆய் முதல் ஆய் வித்து ஆய்,Veer aa muthal aa vithu aai - மூவகைக் காரணமும் தானே யாய்
பரந்து,Paranthu - எங்கும் வியாபித்து
தனி நின்ற,Thani nindru - பரம விலக்ஷணனா யிருக்கின்ற
கார்முகில் போல் வண்ணன்,Kaarmukil pol vannan - காளமேக நிறத்தனான
என் கண்ணனை,En kannanai - எம்பெருமானை
நான் கண்டேன்,Naan kandeen - நான் அநுபவிக்கப் பெற்றேன்
2874திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும் அவற்றுக்குப் பரபாகமாகக் கறுத்த திருமேனியையுமுடைய எம்பெருமானைக் குறித்து, ஆழ்வார்பண்ணின் மேலே அருளிச்செய்தவாயிரத்துள் இப்பதிகத்தை ஓதவல்லவர்கள், திருநாட்டிலே வீற்றிருந்து நித்யானந்த மனுபவிக்கப் பெறுவார்களென்று, இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டிற்றாயிற்று.) 11
கண்டலங்கள் செய்ய கருமேனி யம்மானை
வண்டலம்பும் சோலை வழுதி வளநாடன்
பண்டலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
விண்டலையில் வீற்று இருந்து ஆள்வர் எம்மா வீடே –2-8-11
கண் தலங்கள் செய்ய,Kan thalangal seiya - திருக்கண்கள் சிவந்திருக்கப் பெற்றவனாய்
கரு மேனி,Karu meni - கரிய திருமேனியை யுடையனான
அம்மானை,Ammaanai - ஸ்வாமி விஷயமாக
வண்டு அலம்பும் சோலை வளம் வழுதி நாடன்,Vandu alampum solai valam vazhuthi naadan - வண்டுகள் ஒலிக்கின்ற சோலை வளம் பொருந்திய திருவழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வார்
பண் தலையில் சொன்ன,Pan thalaiyil sonna - தலைமையாகிய பண்களில் அமைத்துச் சொன்ன
தமிழ் ஆயிரத்து,Thamizh aayirathu - இப்பத்தும் வல்லார்
விண் தலையில்,Vin thalaiyil - பரமபதத்தில்
வீற்றிருந்து,Veettrindru - வஸிக்கப்பெற்று
எம்மா வீடு,Emma veedu - அறப்பெரிய ப்ரஹ்மானந்தத்தை
ஆள்வர்,Aalvar - அநுபவிக்கப் பெறுவர்
2875திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (பிரானே! உன்திருவடிகளை என் தலைமீது வைக்குமித்தனையே வேண்டுவது; எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷத்திலும் எனக்கு விருப்பமில்லை யென்கிறார்.) 1
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1
கைம்மா துன்பம் கடிந்த பிரானே,Kaiamma thunbam katintha pirane - கஜேந்திராழ்வானுடைய இடரைத் தீர்த்த பிரபுவே!
நின்,Nin - தேவரீருடைய
செம்,Sem - சிவந்த
மா,Maa - மேன்மை தங்கிய
பாதபற்பு,Paadhaparpu - பாதபத்மங்களை
தலை,Thalai - என் தலையிலே
ஒல்லை,Ollai - சீக்கிரமாக
சேர்ந்து,Seerndhu - சேர்க்கப்பெறறால்
எமர்வீடு திற,Emar veedu thira - மிகவும் விலக்ஷணமான மோக்ஷத்தைப் பற்றின பேச்சையும்
செப்பம்,Seppam - பிரஸ்தாவிக்கமாட்டோம்
அம்மா,Amma - ஸ்வாமியே!
அடியேன் வேண்டுவது,Adiyen venduvadhu - நான் பிரார்த்திப்பது
ஈதே,Eedhe - இதுதான். (நின் செம்மாபாதபற்புத்தலை சோக்க வேணுமென்பதே யென்றபடி)
2876திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமான் திருவடிகள் தம் தலைமேல்வந்து பொருந்த வேணுமென்று கீழ்ப்பாட்டில் வேண்டினார்; ஞானக் கை தந்தருள வேணுமென்று விரும்புகிறாரிப்பாட்டில்.) 2
ஈதே யானுன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
மைதோய் சோதி மணி வண்ண வெந்தாய்
எய்தா நின் கழல் யான் எய்த ஞானக்
கை தா காலக் கழிவு செய்யலே –2-9-2
என்,En - எனது அநுபவத்திற்கு உரிய
மை தோய் சோதி மணி வண்ணம் எந்தாய்,Mai thoy sodhi mani annam enthai - கருமை படிந்த ஒளியையுடைய மாணிக்கம் போன்ற வடிவழகுள்ள ஸ்வாமியே!
யான்,Yaan - நான்
எஞ்ஞான்றும்,Yengnanrum - என்றைக்கும்
உன்னை,Unnai - தேவரீரிடத்தில்
கொள்வது,Kolvadhu - பிரார்த்திப்பது
ஈதே,Eedhe - இஃதொன்றேயாகும் (அது யாதெனில்)
எய்தா,Eyda - பெறுதற்காரிதான
நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடிகளை
யான் எய்த,Yaan eydha - நான் அடையும்படியாக
ஞானம் கைதா,Gnaanam kaidha - ஞானமாகிய கையை
தா,Thaa - தந்தருளவேணும்
காலம் கழிவு செய்யேல்,Kaalam kazhivu seyyel - காலதாமதம் செய்ய வேண்டா.
2877திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (உத்க்ரமான தசையான துர்க் கதியிலும், நான் இளையாதே உன் திருவடிகளை ஏத்தும்படி பண்ணி யருள வேணுமென்கிறார்) 3
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் என்
கையார் சக்கரக் கண்ண பிரானே
ஐயார் கண்டம் அடைக்கிலும் நின் கழல்
எய்யாது ஏத்த அருளிச் செய் எனக்கே –2-9-3
தீ வினை செய்யேல் என்று,Thee vinai seyyel endru - கெட்ட காரியங்களைச் செய்யாதே என்று
அருள் செய்யும்,Arul seyyum - (என் திறத்தில்) கிருபை செய்தருளின
கை ஆர்சக்கரம்,Kai aarchakaram - திருக்கையில் பொருத்தின திருவாழியை உடைய என் கண்ணபிரானே!
ஐயார்கண்டம் அடைக்கிலும்,Aiyaar kandam adaikkilum - கோழை வந்து கழுத்தையடைக்கும்படியான துர்த்தசை நேர்ந்தாலும்
நின் கழல்,Nin kazhal - தேவரீருடைய திருவடியை
எய்யாதேத்த,Eyyaadhedha - துதிக்கும்படியாக
எனக்கு அருள்செய்,Enakku arulsei - என்னளவில் கிருயை பண்ணவேணும்
2878திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழிக்கு உயிரான பாசுரம் இது. எல்லாப்படியாலும் அத்தலைக்கே உரித்தாயிருக்கும்படியான அத்யந்த பாரதந்திரியத்தை ப்ரயோஜனமாக நிஷ்கர்ஷிக்கிறாரிதில்) 4
எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4
எக்காலத்தும்,Ekkalathum - எக்காலத்திலும்
எனக்கே ஆள் செய் என்று,Enakke aal sey endru - ‘எனக்கே அடிமை செய்யக் கடவாய்’ என்று சொல்லி
என் மனக்கே வந்து,En manakke vanthu - எனது மனத்திலேயே எழுந்தருளி
இடை வீடு இன்றி,Idai veedu indri - இடைவிடாமல்
மன்னி,Manni - நிலைபெற்றிருந்து
தனக்கே ஆக,Thanakke aaga - தனக்கே உரியேனாம் படி
எனை,Enai - என்னை
கொள்ளும் ஈதே,Kollum eethe - அங்கீகாரித்தருளுமிதுவே
எனக்கே,Enakke - என் ஸ்வரூபத்திற்குத் தகுதியாக
கண்ணனை,Kannanai - எம்பெருமானிடத்து
யான் கொள்,Yaan kol - நான் விரும்புகின்ற
சிறப்பு,Sirappu - சிறந்த பிரயோஜனம்
2879திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.) 5
சிறப்பில் வீடு ச்வர்க்க நரகம்
இறப்பில் எய்துக எய்தற்க யானும்
பிறப்பில் பல் பிறவிப் பெருமானை
மறப்பு ஓன்று இன்றி என்றும் மகிழ்வேனே –2-9-5
இறப்பில்,Irapil - மரணமான பிறகு
சிறப்பில் வீடு,Sirappil veedu - சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ
சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கத்தையோ
நரகம்,Naragam - நரகத்தையோ
எய்துக,Eydhuga - அடைவேனாக
எய்தற்க,Eydharka - அடையாதொழிவேனாக
பிறப்பு இல்,Pirappu il - (நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்)
பல் பிறவி,Pal piravi - அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை
மறப்பு ஒன்று இன்றி,Marappu onru indri - சிறிதும் மறவாமல்
என்றும்,Endrum - எக்காலத்திலும் (சிந்தித்து)
யானும் மகிழ்வேன்,Yaanum magizhven - (நீசனான) நானும் களிப்புறுவேன்.
2880திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இப்பாசுரத்திற்கு இரண்டுவகையாக அவதாரிகை கூறுவர்;- தேவர் மனிதர் முதலிய பதார்த்தங்களைப் படைத்ததுப்போலே, என்னையும் உன்னை யநுபவிப்பேனாம்படி பண்ணவேணு மென்கிறார்; அன்றியே, தேவாதி பதார்த்தங்களுக்கு ஒவ்வொரு ஸ்வபாவம் நியதமர்ம்படி பண்ணிணனாப்போலே, எனக்கு உன்னை யநுபவிக்குமது நியதஸ்வபாவமாமபடி பண்ணியருள வேணுமென்கிறார். -தாற்பாரியமாகத் தேறுவது ஒன்றே) 6
மகிழ் கொள் தெய்வம் உலோகம் அலோகம்
மகிழ் கொள் சோதி மலர்ந்த வம்மானே
மகிழ் கொள் சிந்தை சொல் செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே –2-9-6
மகிழ் கொள்,Magizh kol - மகிழ்ச்சியைக் கொண்ட
தெய்வம்,Theivam - தேவ வர்க்கமும்
உலோகம்,Ulogam - ஞான வொளியையுடைய மானிட வர்க்கமும்
அலோகம்,Alogam - ஞானவொளியில்லாத விலங்கு தாவரம் என்பவையும்
மகிழ்கொள் சோதி,Magizhkol jyothi - உலகுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற சோதிப்பொருள்களான சந்திர ஸூரியர்களும்
மலர்ந்த,Malarnthu - (நன்னிடத்தில் நின்றும் உண்டாகப்பெற்ற)
அம்மானே,Ammaane - ஸர்வேச்வரனே
மகிழ் கொள் சிந்தை,Magizh kol sindhai - அன்பு கொண்ட நினைவையும்
சொல்,Sol - சொல்லையும்
கொண்டு,Kondhu - ஏற்றுக்கொண்டு
என்றும்,Endrum - எக்காலத்திலும்
மகிழ்வுற்று,Magizhvutru - மகிழ்ச்சியுடன்
உன்னை வணங்க,Unnai vananga - உன்னை வணங்கும்படி
வாராய்,Vaara - (என்னெதிரே) எழுந்தருள வேணும்
2881திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (வாராய் என்றபோதே வரக்காணாமையாலே வருந்தி, பின்னையும் அபிநிவேசத்தின் மிகுதியாலே, நான் சடக்கென வுன்னைக் கிட்டும்படி வாராயென்கிறார்.) 7
வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7
உன்,Un - உன்னுடைய
திரு பாதம் மலர் கீழ்,Thiru padham malar keelz - திருவடித்தாமரைகளின் கீழ்
பேராதே,Peradhe - விலகாமல்
யான் வந்து அடையும்படி,Yaan vandhu adaiyumpadi - நான் வந்து சேரும்படியாக
தாராதாய்,Thaaradhaai - அருள் புரியாதவனே!
உன்னை என்னுள் என்றும் வைப்பில்,Unnai ennull endrum vaippil - உன்னை என்னுள்ளே எந்நாளும் வைத்து அநுபவித்தாலும்
ஆராதாய்;,Aaraadhaai; - தெவிட்டாதவனே!
எனக்கு,Enakku - என் கண்ணெதிரே
என்றும் எக்கால்,Endrum ekkaal - எப்போதும்
வாராய்,Vaarai - வந்தருள வேணும்
2882திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்.) 8
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னில் மற்று
எக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்
மிக்கார் வேத விமலர் விழுங்கும் என்
அக்காரக் கனியே உன்னை யானே –2-9-8
நிக்கார்,Nikkaar - சிறந்தவர்களான
வேதம் விமலர்,Vedham Vimalar - வேதம் வல்ல பரமைகாந்திகள்
வழுங்கும்,Vazhungum - (அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள
என் அக்காரக் கனியே,En akkaarak kaniye - அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே!
எக்காலத்து,Ekkalathu - எப்போதும்
எந்தை ஆய்,Endhai aay - எனக்கு ஸ்வாமியாகி
என் உள்,En ul - எனது நெஞ்சிலே
மண்ணில்,Mannil - பொருந்தி யெழுந்தருளியிருக்கப் பெறில்
மற்று யாது ஒன்றும்,Matru yaadhu ondrum - வேறொரு பிரயோஜனத்தையும்
உன்னை,Unnai - உன்னிடத்தில்
எக்காலத்திலும்,Ekkalathilum - ஒருநாளும்
யான் வேண்டேன்,Yaan venden - நான் விரும்பவே மாட்டேன்.
2883திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (தேவரீருக்கும் எனக்கும் ஸ்ம்பந்தம் அநாதிஸித்தமர்கவேயிருந்தும், அந்தோ! நெடுநாளாக அதனை மறந்து அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதபிக்கிறார்.) 9
யானே என்னை யறியகிலாதே
யானே என் தனதே என்று இருந்தேன்
யானே நீ என்னுடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே –2-9-9
வானே ஏத்தும்,Vaane etthum - விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள
எம் வானவர் ஏறே,Em vaanavar aere - நித்யஸூரிநாதனான எம் பெருமானே!
யானே,Yaane - நான் தானே
என்னை,Ennai - என்னை
அறிய கிலாதே,Ariya kilaadhe - அறியமாட்டாமல்
யானே நீ,Yaane nee - யான் நீயே யென்னலாம்படி வேற்றுமையற்றிருப்பேன்;
யானே என் தனதே என்று இருந்தேன்,Yaane en thanadhe endru irundhaen - அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.
என் உடைமையும் நீயே,En udaimaiyum neeye - (இப்போது அவை தவிர்ந்து நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில்) எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் (என்பதே)
2884திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்தாம் கீழ்நாட்களில் இருந்த இருப்பைக்கூறி இழவுக்கு மிகவும் அநுபவித்து, இப்போது நல்லபடியாக இருக்கிற இருப்பையும் பேசினார்; அதுகேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்! இழந்தநாளைக்கு அநுதபிக்கின்ற உமக்கு, இனி இழவு நேர ப்ரஸக்தி யில்லையே; ஆகவே வாழ்ந்துவிட்டீரன்றோ? இனி நான் செய்ய வேண்டுவது ஒன்றுமில்லையே’ என்றருளிச் செய்ய, பிரானே! அப்படி ஸாதிக்கலாமோ? என்னை வைத்திருக்குமிடம் எதுவென்று ஆராயவேண்டாவோ? இந்ரிநலத்திலே இருக்கின்ற என்னுடைய சித்தஸ்திதியை நம்பலாகுமோ? என்னைத் திருவடிவாரத்தில் சேர்த்துக் கொண்டாலொழிய நான் நிர்ப்பரனாயிரக்க முடியாது’ என்கிற கருத்தை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்,) 10
ஏறேல் ஏழும் வென்று ஏர் கொள் இலங்கையை
நீறே செய்த நெடுஞ்சுடர்ச் சோதி
தேறேல் என்னை உன் பொன்னடி சேர்த்து ஒல்லை
வேறே போக எஞ்ஞான்றும் விடலே –2-9-10
ஏழும்,Ezhum - ஏழு காளைகளையும்
வென்று,Vendru - வலியடக்கினவனாயும்
ஏர்கொள் இலங்கையை,Aerkol ilangaiyai - அடகு நிரம்பிய லங்காபுரியை
நீறு செய்த,Neeru seidha - நீறாக்கினவனாயுமுள்ள
நெடும் சுடர் சோதி,Netum sudar sothi - மஹா தேஜஸ்வியான பெருமானே!
என்னை தேறேல்,Ennai therael - என்னை நம்பவேண்டா!
உன் பொன் அடி,Un pon adi - உன்னுடைய திருவடிகளிலே
ஒல்லை,Ollai - விரைவாக
சேர்த்து,Serthu - (என்னைச்) சேர்த்துக் கொண்டு
வேறே போக,Verey poga - விஷயாந்தரங்களில் போகும்படி
எஞ்ஞான்றும;,Yennjaandrum; - ஒரு நாளும்
விடல்,Vidal - விடாதே.
2885திருவாய்மொழி || (2-9–எம்மா வீட்டுத் திறமும் செப்பம்) (புருஷார்த்த நிர்ணயம்) (இத்திருவாய்மொழியை ஓதவே, இதுதானே புருஷார்த்தத்தைப் பெறுவிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
விடலில் சக்கரத் தண்ணலை மேவல்
விடலில் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
கெடலில் யாயிரத்துள் இவை பத்தும்
கெடலில் வீடு செய்யும் கிளர்வார்க்கே –2-9-11
விடல் இல்,Vidal il - விடுதலில்லாத
சக்கரத்து,chakkarathu - திருவாழியையுடைய
அண்ணலை,Annalai - எம்பெருமானை
மேவல் விடல் இல்,Meval vidal il - பொருந்துவது ஒரு போதும் விடாமலிருக்கப் பெற்ற
வண்குருகூர்சொல்,Vangurukoor sol - சடகோபன் அருளிச் செய்த
கெடல் இல்,Kedal il - அழிவற்ற (நித்யமான)
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரம் பாடலுள்ளும்
இவை பத்தும்,Ivai paththum - இப்பதிகம்
கிளர்வார்க்கு,Kilarvaarkku - தன்னை ஓதுமவர்களுக்கு
கெடல் இல் வீடு செய்யும்,Kedal il veedu seyyum - கெடுதல் ஒன்றுமில்லாத மோஷானந்தத்தைப் பண்ணிக் கொடுக்கும்.
2886திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ பன்னீராயிரப்படி –திருமலையில் காட்டிலும் அத்தோடு சேர்ந்த திருப்பதியை அனுபவிக்கையே பரம பிரயோஜனம் -என்கிறார்) 1
கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –2-10-1
kilar oli,கிளர் ஒளி - மேன்மேலுங் கொழுந்து விட்டுக் கிளர்கின்ற ஞானவொளியையுடைய
ilamai,இளமை - இளம்பிராயம்
ketuvatan munnam,கெடுவதன் முன்னம் - அழிவதற்குள்ளே
valar oli,வளர் ஒளி - குன்றாத தேஜஸ்ஸையுடையனான
mayon,மாயோன் - எம்பெருமான்
maruviya,மருவிய - நித்யஸந்நதானம் பண்ணியிருக்கிற
kovil,கோவில் - ஆலயமாய்
valar ilapolil cul,வளர் இளபொழில் சூழ் - வளர்கின்ற இளஞ்சோலைகளால் சூழப்பட்டதான
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ்சோலை மலையை
talarvu ilar aki,தளர்வு இலர் ஆகி - தளர்ச்சி யில்லாதவராகி
carvate,சார்வதே - அடைவதுதான்
catir,சதிர் - ஸ்பரூபாநரூபம்
2887திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -திருமலை தான் வேணுமோ -அத்தோடு சேர்ந்த திருப்பதியை பரம பிரயோஜனம் என்கிறார்) 2
சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிரும் சோலை
பதியது வேத்தி எழுவது பயனே –2-10-2
catir,சதிர் - அழகு பொருந்திய
ila matavar,இள மடவார் - இளம் பருவத்துப்பெண்களிடத்து
talcciyai,தாழ்ச்சியை - ஆழய்காற்படுவதை
matiyatu,மதியாது - ஒரு பொருளாக நினையாமல்
atirkural cankattu,அதிர்குரல் சங்கத்து - முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற
alakar tam koyil,அழகர் தம் கோயில் - அழகருடைய ஆலயமாய்
mati taval kutumi,மதி தவழ் குடுமி - சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான
maliruncolai;,மாலிருஞ்சோலை; - மாலிருஞ் சோலையாகிற
pati atu,பதி அது - அந்தத் திருப்பதியை
etti,ஏத்தி - துதித்து
eluvate,எழுவதே - உய்வதே
payan,பயன் - புருஷார்த்தம்
2888திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று,திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.) 3
பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிரும் சோலை
அயன்மலை யடைவது அது கருமமே –2-10-3
nence,நெஞ்சே - மனமே!,
puyal malai vannar,புயல் மழை வண்ணர் - வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான்
purintu,புரிந்து - விரும்பி
urai,உறை - நித்யவாஸம் செய்கிற
koyil,கோயில் - ஸந்நிதியாய்,
mayalmiku polil cul,மயல்மிகு பொழில் சூழ் - (கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட
malirun colai,மாலிருஞ் சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
ayal,அயல் - அருகிலுள்ள
malai,மலை - மலையை
ataivatu atu,அடைவது அது - அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான்
payan alla ceytu,பயன் அல்ல செய்து - நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால்
payan illai,பயன் இல்லை - லாபமில்லை
2889திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி-கர்ம பந்தத்தைப் போக்கி ஆஸ்ரிதர் ஆனவர்கள் அடிமை செய்து வாழ்கைக்கு ஈடாம் படி சர்வேஸ்வரன் வர்த்தித்து அருளுகிற திரு மலையை ஆஸ்ரயிக்கையே சத்ருசமான படி என்கிறார்) 4
கரும வன்பாசம் கழித்து உழன்று உய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிரும் சோலை
திருமலை யதுவே யடைவது திறமே –2-10-4
karumam,கருமம்‌ - கருமங்களாகிற
van pacam,வன்‌ பாசம்‌ - வலிய பாசங்களை
kalittu,கழித்து - கழற்றி
ulaniru,உழனீறு - அடிமை செய்து திரிந்து
uyyave,உய்யவே - உஜ்ஜீவிக்கும்‌ பொருட்டே
peru malai etuttan,பெரு மலை எடுத்தான்‌ - கோவர்த்தன உத்தாரணம்‌ செய்தருளியவனான எம்பெருமான்‌
pitu urai,பீடு உறை - தனது பெருமையெல்லாம்விளங்க நித்யவாஸம்‌ பண்ணுமிடமான
koyil,கோயில்‌ - ஸந்நிதியாய்‌
varu malai tavalum,வரு மழை தவழும்‌ - மழை பெய்ய வருகிற மேகங்கள்‌ தவழ்கின்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை
tirumalai atuve,திருமலை அதுவே - எம்பெருமான்‌ ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை
ataivatu,அடைவது - சேர்வது
tiram,திறம்‌ - உசிதம்‌
2890திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5
tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட
valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு
tivinai,தீவினை - பாவங்களை
perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல்
aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.
maru il,மறு இல் - அழுக்கற்ற
van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை
cara,சார - கிட்டுமாறு
povatu,போவது - போவதானது
kiri,கிறி - நல்ல உபாயம்.
2891திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலைக்குப் போகிற மார்க்கமுண்டே, அதனைச் சிந்திப்பது தானும் போது மென்கிறார்.) 6
கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் கோயில்
மறியோடு பிணை சேர் மாலிரும் சோலை
நெறி படவதுவே நினைவது நலமே –2-10-6
kilmai ceyyate,கீழ்மை செய்யாதே - இழிவான செயல்களைச் செய்யாமல்
kiri ena,கிறி என - (இப்போது நான் சொல்லுகிறதை) நல்ல வுபாயமென்று நினையுங்கோள்
uri amar,உறி அமர் - உறிகளிலே அமைத்துவைத்த வெண்ணெயை
untavan,உண்டவன் - அமுது செய்த கண்ணபிரானுடைய
koyil,கோயில் - ஆலயமாய்
mariyotu pinaicer,மறியோடு பிணைசேர் - தம் குட்டிகளோடுகூட மான்பேடைகள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையினுடைய
neri,நெறி - வழியிலே
pata,பட - செல்லவேணுமென்கிற
atuve,அதுவே - அந்த நினைவு ஒன்றையே
ninaivatu,நினைவது - நினைப்பது
nalam,நலம் - நல்லது.
2892திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஆறாயிரப்படி- இதுவே ப்ராப்யம் என்று நினையுங்கள் -வேறு ஒன்றை ப்ராப்யமாக நினையாதே – நிலமுன மிடந்தான் என்றைக்கும் தனக்கு கோயிலாகக் கொண்ட பரம புருஷ நிர்மல ஞான ஜனகமான திருமலையை அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு வலம் செய்து மருவுங்கள்-இதுவே பரம ப்ராப்யம் -என்கிறார்) 7
நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுன மிடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதி சேர் மாலிரும் சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே –2-10-7
narakaluntate,நரகழுந்தாதே - நரகத்தில் அழுந்த நினையாமல்
nalam enaninaimin,நலம் எனநினைமின் - (இவ்வுபதேசத்தை) நன்மை யென்று நெஞ்சிற் கொள்ளுங்கள்; (அதாவது)
munam,முனம் - முற்காலத்தில்
nilam,நிலம் - பூமியை
itantan,இடந்தான் - வராஹ ரூபியாகி இடந்தெடுத்துவந்த பெருமான்
koyil,கோயில் - நித்யவாஸம் பண்ணுகிற
ஸந்நிதியாய்,

malam aru mati cer,மலம் அறு மதி சேர் - களங்கமற்ற சந்திரன்
சேருமிடமான

malirun colai,மாலிருஞ் சோலை - திருமலையை
valam murai
eyti, வலம் முறை எய்தி
- அநுகூலமானமுறையிலே கிட்டி
maruvutale,மருவுதலே - பொருந்துவதே
valam,வலம் - உறுதியானது
2893திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருமலையைச் சென்று நிரந்தரமாக வலம் செய்கையே வழக்கு என்கிறார்) 8
வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிரும் சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே –2-10-8
valam ceytu,வலம் செய்து - (சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும்
vaikal,வைகல் - எப்போதும்
valam kaliya,வலம் கழியா - அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல்
valam ceyyum,வலம் செய்யும் - (நமக்கு) நன்மையையே செய்தருளாநின்ற
ayan,ஆயன் - கோபால கிருஷ்ணனான
mayavan,மாயவன் - மாயவனுடைய
koyil,கோயில் - கோயிலாகி
vanor valam ceyyum,வானோர் வலம் செய்யும் - நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலை விஷயத்தில்
valam ceytu,வலம் செய்து - பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து
nalum,நாளும் - நாடோறும்
maruvutal,மருவுதல் - பொருந்தியிருப்பது
valakku,வழக்கு - யுக்தம்
2894திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார்.) 9
வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி யட்டான் அமர் பெரும் கோயில்
மழக் களிற்றினம் சேர் மாலிரும் சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே –2-10-9
val vinai,வல் வினை - கொடிய பாவங்களிலே
mulkatu,மூழ்காது - அழுந்தாமல்
valakkena ninaimin,வழக்கென நினைமின் - (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்;
alam koti,அழம் கொடி - பேய்ச்சியாகிற
pennai,பெண்ணை - பூதனையை
attan,அட்டான் - முடித்தருளின பெருமான்
amar,அமர் - எழுந்தருளியிருக்கிற
peru koyil,பெரு கோயில் - பெரிய ஸந்நிதியாய்
mala kaliru inam cer,மழ களிறு இனம் சேர் - இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமலையை
tola karutuvatu,தொழ கருதுவது - வணங்க வேணுமென்று எண்ணுவதில்
tunivate,துணிவதே - திடமான அத்யவஸாயங் கொள்வதே
cutu,சூது - சிறந்த வுபாயம்
2895திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –பல படிகளாலும் திருமலையே பரம ப்ராப்யம் என்று உபக்ரமித்த படியே உபசம்ஹரிக்கிறார்) 10
சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேத முன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிரும் சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே –2-10-10
cutu enru,சூது என்று - உபாயமென்றெண்ணி
kalavum,களவும் - களவையும்
cutum,சூதும் - சூதையும்
ceyyate,செய்யாதே - செய்ய நினைக்காமல்
mun,முன் - முற்காலத்தில்
vetam,வேதம் - வேதங்களை
virittan,விரித்தான் - (கீதை முதலியவற்றால்) விவரித்தருளின பெருமான்
virumpiyakovil,விரும்பியகோவில் - விரும்பி யெழுந்தருளி யிருக்குமிடமான கோயிலாய்
matu uru mayil cer,மாது உறு மயில் சேர் - பேடையோடு கூடின ஆண் மயில்கள் சேர்ந்து வாழப்பெற்ற
maliruncolai,மாலிருஞ்சோலை - மாலிருஞ்சோலை யென்கிற
potu avil malai,போது அவிழ் மலை - புஷ்பங்கள் விகஸிக்கிற திருமலையில்
pukuvate,புகுவதே - சென்று சேர்வதே
porul,பொருள் - புருஷார்த்தம்
2896திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - நிகமத்தில் இது திருவாய் மொழி கற்றாரை திரு வாய் மொழி தானே ஜென்மத்தை முடித்து அழகர் திருவடிகளில் சேர்க்கும் என்கிறார் ) 11
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்து
அருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11
porul enru,பொருள் என்று - (ஒருநாளாகிலும்) பிரயோஜனப்படுமென்று
i ulakam,இ உலகம் - இவ்வுலகங்களை
pataittavan,படைத்தவன் - ஸ்ருஷ்டித்த பெருமானுடைய
pukal mel,புகழ் மேல் - திருக்கல்யாண குணங்களில்
marul il,மருள் இல் - அஜ்ஞான மில்லாத
van kurukur van catakopan,வண் குருகூர் வண் சடகோபன் - வண் குருகூர் வண் சடகோபன்
terul kolla,தெருள் கொள்ள - (சேதநர்க்குத்) தெளிந்த ஞானமுண்டாகுமாறு
conna,சொன்ன - அருளிச் செய்த
or ayirattul,ஓர் ஆயிரத்துள் - ஆயிரம் பாசுரங்களுள்
ippattu,இப்பத்து - இப்பதிகம்
mutittu,முடித்து - ஸம்ஸார பந்தத்தைப் போக்கி
arul utaiyavan tal,அருள் உடையவன் தாள் - பரமதயாளுவான எம்பெருமானது திருவடிகளில்
anaivikkum,அணைவிக்கும் - சேர்விக்கும்
2897திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (திருமாலிருஞ்சோலையழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திவ்ய பூஷணங்களுக்குமுண்டான மிக்க பொருத்தத்தைக் கண்டு உள்குழைந்து பேசுகிறார். இவ்வடிவழகைக் கண்டவளவிலே தமக்கொரு ஸந்தேஹம் விளைந்தபடியை விண்ணப்பஞ் செய்து-, பிரானே! இந்த ஸந்தேஹந்தீர மறுமாற்றமருளிச் செய்யவேணுமென்கிறார்.) 1
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1
திருமாலே,Thirumale - ச்ரியாபதியான எம்பெருமானே!
உனது முகம் சோதி,Unadhu mugam sodhi - உன்னுடைய திருமுகமண்டலத்தின் ஜ்யோதிஸ்ஸானது (உயர்முகமாகவளர்ந்து)
முடிசோதி ஆய்,Mudisodhi aay - திருவபிஷேக ஜ்யோதிஸ்ஸாய்
மலர்ந்ததுவோ,Malarnthadhuvo - விகஸிதமாயிற்றோ?
அடிசோதி,Adisodhi - திருவடிகளின் காந்தியானது
நீ நின்ற தாமரை ஆய் அலர்ந்ததுவோ,Nee nindra thaamaraai aay alarnthadhuvo - நீ யெழுந்தருளியிருக்கும் ஆஸன பத்மமாய்ப் பரவியதோ?
நின் பைம்பொன் கடி சோதி,Ninn paimpon kadi sodhi - உனது விசாலமாயும் ஸ்ப்ருஹணீயமாயு மிருக்கின்ற திருவரையின் காந்தியானது
படி சோதி ஆடையொடும் பல் கலன் ஆய்,Padi sodhi aadaiyodum pal kalan aay - இயற்கையான சோதியையுடைய பீதாம்பரமென்ன, பலவகைப்பட்ட ஆபரணங்களென்ன ஆகிய இவையாய்
கலந்ததுவோ,Kalanthadhuvo - வியாபதித்ததோ?
கட்டுரை,Katturai - தெரியவருளிச் செய்ய வேணும்.
2898திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (அழகருடைய வடிவழக்குக்கு ஒப்பாகக் போருவன இல்லாமையாலே அவ்வழகைப் பற்றி உலகத்தார் சொல்லும் துதிமொழிகள் நிறக்கேடாகவே தலைகட்டுமென்கிறார்.) 2
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2
பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதி யுருவனே!,
கட்டுரைக்கில்,Katturaikil - சொல்லப் புகுந்தால்
நின்கண் பாதம் கை,Ninkan paatham kai - உனது திருக்கண் திருவடி திருக்கைகளுக்கு
தாமரை,Thaamarai - தாமரைப்பூ
ஒவ்வா,Ovvaa - உவமையாகப் போராது;
சுட்டு உரைத்த நன் பொன்,Suttu uraitha nan pon - நெருப்பிலிட்டச் சுட்டு உரை கல்லில் உரைக்கப்படும் மாற்றுயர்ந்த பொன்னானது
உன் திருமேனி ஒளி ஒவ்வாது,Un thirumeni oli ovvaadhu - உனது திவ்யமான விக்ரஹ காந்திக்கு ஒப்பாகமாட்டாது;
இ உலகு,I ulagu - இவ்வுலகிலுள்ளோர்
ஒட்டு உரைத்து,Ottu uraithu - த்ருஷ்டாந்தம் சொல்லி
உன்னை புகழ்வு எல்லாம்,Unnai pugazhvu ellaam - உன்னைத் துதிப்பதெல்லாம்
பெரும்பாலும்,Perumbaalum - மிகவும்
பட்டுரை ஆய்,Patturai aay - நிரர்த்தக சப்தமாகி
புற்கென்றே காட்டும்,Purkenrae kaattum - அவத்யாவஹமாகவே தலைக்கட்டும்
2899திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஆழ்வீர்! உலகர் ஒட்டுரைத்துக் பேசுவதெல்லாம் எனக்கு நிறக்கோடாக முடிகின்றதே யன்றிப் புகழ்ச்சியாக ஆகின்றதில்லை யென்கிறீர்; *மயர்வற மதிநலமருளப் பெற்ற நீர் அழகாகப் பேசலாமன்றோ; எனக்கு நிறக்கோடாகாதபடிக்கு நீர் பேசலாமே என்ன; என்னாலுமாகாதென்கிறார்.) 3
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3
பரம் சோதி,Param sodhi - பரஞ்சோதியான பெருமானே!
நீ பரம் ஆய்,Nee param aay - நீயே ஸர்வோத் க்ருஷ்டனாயிருக்க
நின் இகழ்ந்து பின்,Ninn igazhndhu pin - உன்னைத்தவிர
மற்று ஓர் பரம் சோதி இன்மையின்,Martru or param sodhi inmai-yin - வேறொரு பரஞ்சுடர் இல்லாமையாலே
படி ஓவி நிகழ்கின்ற,Padi ovi nizhalkinra - உபமான மில்லாதபடி யிருக்கின்ற
பரம் சோதி நின்னுள்ளே,Param sodhi ninnullee - ‘பரம் ஜ்யோதிஸ்’ என்று உபநிஷத்துக்களில் ஒதப்பட்டுள்ள உன்னுடைய ஸங்கல்பத்துக்குள்ளே
படர் உலகம் படைத்த,Patar ulagam padaita - விசாலமான உலகங்களைப் படைத்த
எம் பரம் சோதி,Em param sodhi - எம்பரஞ்சுடருடம்பனே!
கோவிந்தா,Govindha - நீர்மைக்கு எல்லை யில்லாதவனே!
பண்பு,Panbu - உனது ஸ்வரூப ஸ்வபாவங்களை
உரைக்க மாட்டேன்,Uraikka mattean - வருணிக்க சக்தனல்லேன்.
2900திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்றார் கீழ்ப்பாட்டில் அது, புத்திபூர்வமாகச் சொல்லமாட்டாமையைத் தெரிவித்தபடி. அழகருடைய அழகுதானே பேசுவிக்கப் பேசுகிறாரிதில்.) 4
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4
மலர்தலை,Malar thalai - திருநாபிக்கமலாத்தைத் தலையிடமாகக் கொண்டு தோன்றிய
இம் மா ஞாலம்,Im maa nyaalam - இப்பெரிய வுலகமானது
நின் மாடு ஆய,Ninn maadu aay - உன்னுடைய ஸ்வரூபத்தைப் பற்றியதான
மலர் புரையும் திரு உருவம்,Malar puraiyum thiru uruvam - பூப்போலழகிய திவ்யமான விக்ரஹத்திலே
மனம் வைக்க மாட்டாதே ஆகிலும்,Manam vaikka maattaadhe aagilum - ஈடுபட முடியாதபடி யிருக்கச் செய்தேயும்
மாட்டாத பல சமயம் மதி கொடுத்தாய்,Matadha pala samayam madhi koduthaai - (அதற்கு மேலே) தெளிவுக்குக் காரணமாகமாட்டாத பலவகைப்பட்ட பாஹ்யகுத்ருஷ்டிமத பிரசாரமும் பண்ணிவைத்து மோஹஜநகனுமானாய் (அவ்வளவுமல்லாமல்)
மலர் துழாய் மாட்டே நீ மனம்வைத்தாய்,Malar thuzhaai maatte nee manam vaithaai - (இவ்வுலகத்தைத் திருத்திப் பணிகொள்ளும் வழியில் நோக்கம் செலுத்தாமல் திருத்துழாய் மலர் முதலி யஸ்வகீய போக்ய வஸ்துக்களின் அநுபவத்திலே நீ ஊன்றி யிருக்கின்றாய்;
மா ஞாலம் வருந்தாதே,Maa gnalam varundhaadhe - (இப்படியாகில்) பெரிய இவ்வுலகம் இழந்தேபோகாதோ?
2901திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (“ நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப் பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்தி வைத்தா யில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார்.) 5
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5
வருந்தாத,Varundhaadhe - ப்ரயந்த ஸரத்யமல்லாத ஸ்வாபாவிகமான
அரும் தவத்த,Arum thavatha - அருமையான தலத்தின் பலனாக வந்ததோ என்னலாம்படியான
மலர் கதிரின்,Malar kathirin - பாம்பின் கிரணங்களையுடைய
சுடர் உடம்பு ஆய்,Sudar utambu aay - தேஜோமய திவ்யமங்கள விந்ரஹயுக்தனாய்
வருந்தாத ஞானம் ஆய்,Varundhaadha gyaanam aay - ஸ்வாபாவிக ஜ்ஞான யுக்தனாய்
வரம்பு இன்றி,Varambu indri - எல்லையில்லாதபடி
முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - எங்கும் வியாபித்திருப்பவனே!
வருங்காலம், நிகழ்காலம் கழிகாலம் ஆய்,Varungkaalam, nizhalkaalam kazhikaalam aay - எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகால மென்கிற மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகனாய்
உலகை,Ulagai - உலகங்களை
ஒருங்கு ஆக,Orungu aaga - ஒருபடிப்பட
அளிப்பாய்,Alippaay - ரக்ஷிக்குமவனே!
சீர்,Seer - (உன்னுடைய) திருக்குணங்களை
எங்கு,Engu - எங்கே
உலக்க,Ulakka - முடிய
ஓதுவன்,Oodhuvan - சொல்லுவோன்?
2902திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானைத் துதிக்க அவதரித்த வேதங்களும் பகவத் குண கீர்த்தனத்தில் அந்வயம் பெற்ற வத்தனையே யொழிய வேறில்லை; ஆக, வேதங்களின் கதியே அதுவாகும்போது; நான் பேசித் தலைக்கட்டுவதென்று ஒன்றுண்டோ என்கிறார்.) 6
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6
ஓதுவார் ஒத்து எல்லாம்,Oodhvaar otthu ellaam - அந்யயனம் செய்கிறவர்களை விட்டு நிரூபிக்கப்படுகின்ற ஸகல வேதங்களும்
எவ்வுலகத்து எவ் எவையும்,Evvulagathu evv evaiyum - மற்றும் பலவுலகங்களிலுமுண்டான பலவகைப்ப்ட சாஸ்திரங்களும்
சாது ஆய்,Saadhu aay - (பொய் கலவாமல்) உள்ளபடியே சொல்லுகின்றனவாகி
நின் புகழின் தகை அல்லால்,Ninn pugalil thakai allaal - உன்னுடைய குணநீர்த்தனத்தில் தத்பரங்கள் என்கிற இவ்வளவல்லாமல்
பிறிது இல்லை,Pirithu illai - வேறில்லை, ஒன்றையும் பூர்த்தியாகச்சொல்லனவல்ல என்றபடி
போது வாழ்புனம்,Podhu vaazhpunam - பூக்கள் விளங்கப்பெற்ற நல்ல நிலத்திலுண்டான
துழாய் முடியினாய்,Thuzhaay mudiyinaay - திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்துள்ளவனே!
பூவின் மேல் மாதுவாழ் மார்பினாய்,Poovin mel maadhuvazh maarbinay - தாமரைப்பூவில் தோன்றிய பெரிய பிராட்டியார் வாழுமிடமான திருமார்பையுடையவனே!
என் சொல்லி,En soll - எத்தைச்சொல்லி
யான் வாழ்த்துவன்,Yaan vaazhthuvan - நான் துதிப்பேன்!
2903திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (ஞானத்திற் சிறந்த பலபேர்கள் திரண்டு ஏத்தினாலும் அதுவும் பகவத் குணங்களுக்குத் திரஸ்காரமாகவே தலைக்கட்டு மென்கிறார்.) 7
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7
வாழ்த்துவார் பலர் ஆக,Vaazhthuvaar palar aaga - துதிப்பவர்கள் பலருண்டாவதற்காக,
மூழ்த்த நீர் உலகு எல்லாம் படை என்று,Mooththa neer ulagu ellaam padai endru - ‘காரண ஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே லோகங்களையெல்லாம் உண்டாக்குவாயாக’ என்று சொல்லி.
நின்னுள்ளே,Ninnullee - உன்னுடைய ஸங்கல்பத்திலே
நான்முகனை,Naanmuganai - பிரமனை
முதல் படைத்தாய்,Mudhal padaitthaay - முந்துற ஸ்ருஷ்டித்தவனே!
கேழ்ந்த சீர்,Kezhndha seer - சிறந்த (ஞானமுதலிய) குணங்களையுடைய
அரன் முதலா,Aran mudhala - சிவன் முலான
அமரர்,Amarar - தேவர்கள்
கிளர் தெய்வம் ஆய் கிளர்ந்து,Kilar theyvam aay kilarndhu - மிகுந்த சக்தியையுடைய தெய்வங்களாகத்தோன்றி
சூழ்ந்து,Soozhndhu - ஒவ்வொரு விஷயங்களைப் பற்றிக்கொண்டு
துதித்தால்,Thuthithaal - தோத்திரம் பண்ணினால்
உன்,Un - உன்னுடைய
தொல் புகழ்,Thol pugal - நித்ய ஸித்தமான கீர்த்தி
மாசூணாதே,Maasoonaadhae - அவத்யம் பெற்றதாகாதோ!.
2904திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (கீழ்ப்பாட்டில் சொல்லப்படாத அர்த்தம் இப்பாட்டில் என்ன சொல்லப்படுகிறதென்று விமர்சிக்கவேணும். அரன் முதலான அமரர்கள் ஏத்தினாலும் அவத்யம் என்றது கீழ்ப்பாட்டில்; அமரர்கோன் ஏத்துவம் அவத்யம் என்கிறது இப்பாட்டில்) 8
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8
மாசு! உணா,Maasu! Uuna - அவத்யம் சிறுதுமில்லாமல்
சுடர்,Sudar - சோதிமயமான
உடம்பு ஆய்,Utampu aay - திருமேனியை யுடையனாய்
மலராது குவியாது,Malaradhu kuviyaadhu - ஸங்கோச விகாஸங்களற்று
மாசு உணா,Maasu uuna - (ஸம்சயம் விபரீதம் முதலான) அவத்யமில்லாத
ஞானம் ஆய்,Gyaanam aay - ஞானத்தையுடையையாய்
முழுதும் ஆய்,Muzhudhum aay - ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனாய்
முழுது இயன்றாய்,Muzhudhu iyanraai - அவையெல்லாம் உன் பக்கலிலே வர்த்திருக்கும்படி அவற்றுக்கு ஆச்ரயமானவனே!
மாசு உணாவான் கோலத்து அமரர்கோன்,Maasu unavaan koalathu amararkon - குற்றமற்ற அம்ராக்ருதமான ஜ்ஞரகாதி பூஷணாங்களையுடையனாய் தேவர்களுக்குக் கோமானாகிய பிரமன்
வழிபட்டால்,Vazhipattaal - (உன்னைத்) தோத்திரம் பண்ணினால்
மாசு உணா உனபாதம் மலர் சோதி,Maasu uuna unapaadham malar sodhi - குற்றமற்ற உனது பாதாரவிந்தத்தின் தேஜஸ்ஸானது
மழுங்காதே,Mazhungaadhey - குறையுற்றதாகாதோ?
2905திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (எம்பெருமானது ஸௌலப்யாதிசயத்திலீடுபட்டுப் பேசுகிற பாசுரமிது.) 9
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9
தொழும் காதல்,Thozhum kaadhal - தொழவேணுமென்கிற காதலையுடைய
களிறு,Kilaru - கஜேந்திராழ்வானை
அளிப்பான்,Alippaan - காப்பதற்காக
மழுங்காத வைநுதிய சக்கரம் நல் வலத்தையாய்,Mazhungaadha vainudhiya sakaram nal valathaiyaay - மங்குதலில்லாத கூர்மை பொருந்திய வாயையுடைய சக்கரப்படையை அழகிய வலத்திருக்கையிலுடையையாய்
புள் ஊர்ந்து,Pul oornthu - பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு
தோன்றினை,Thoonrinai - (மடுவின் கரையிலே) வந்து தோன்றினாய்; (இஃது ஒக்கும் இப்படியல்லாமல்)
மழுங்காத ஞானமே படை ஆக,Mazhungaadha nyaaname padai aaga - அமோகமான ஸங்கல்ப ரூப ஜ்ஞானமே கருவியாக
மலர் உலகில்,Malar ulagil - விசாலமான உலகத்திலே
தொழும்பு ஆயார்க்கு,Thozhumbu aayaarkku - அடியவர்கட்கு
அளித்தால்,Alithaal - உதவினால்
உன்,Un - உன்னுடைய
சுடர்சோதி,Sudar sodhi - சிறந்த தேஜஸ்ஸு
மறையாதே,Maraiyaadhae - குன்றிவிடா
2906திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (பிரமன் முதலானாரும் உன் சேஷித்வத்தை யறிந்து ஆச்ரயிக்குமாறு நீ யிருக்கு மிருப்பு ஆச்சரியமோ வென்கிறார்.) 10
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10
மறை ஆய,Marai aay - மறை பொருள்களையுடையவையான
நால் வேதத்துள் நின்ற,Naal vaedhathul nindra - நான்கு வேதங்களுக்கும் உள்ளுறை பொருளாய் நின்ற
மலர் சுடரே,Malar sudare - விகாஸத்தையுடைய சோதி வடிவானவளே!
முறையால்,Muraiyaal - முறைப்படி
இ உலகு எல்லாம்,e ulagu ellaam - இவ்வுலகங்களை யெல்லாம்
படைத்து,Padaitthu - ஸ்ருஷ்டித்து
இடந்து,Idandhu - (பிரளயத்திலே புக்கு) இடந்தெடுத்து
உண்டு,Undu - (மஹாப்ரளயத்திலே) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Uzhindhthu - (பிறகு) வெளிப்படுத்தி
அளந்தாய்,Alanthaay - (வாமன மூர்த்தியாய்) அளந்துகொண்ட பெருமானே!
பிறை ஏறு சடையானும்,Pirai yeru sadaiyaanum - சந்திரகலை தங்கிய சடையையுடையனான சிவபிரானும்
நான்முகனும்,Naanmuganum - நான்முகக்கடவுளும்
இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும்
இறை ஆதல் அறிந்து ஏத்த,Irai aadhal arindhu yetha - நீயே ஸர்வஸ்வாமி யென்னுமிடத்தை யுணர்ந்து துதிக்குமாறு
வீற்றிருத்தல் இது,Veetiruthal idhu - எழுந்தருளியிருக்குமிருப்பு
வியப்பே,Viyappe - ஆச்சரியமோ?
2907திருவாய்மொழி || (3-1–முடிச் சோதியாய்) (திருமாலிருஞ்சோலை அழகரது வடிவழகில் ஈடுபடல்) (இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத் கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.) 11
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11
வியப்பு ஆய,Viyappu aay - (அந்யத்ர) ஆச்சர்யகரமானவை
வியப்பு இல்லா,Viyappu illa - (தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும்
மெய் ஞானம் வேதியனை,Mei gyaanam vaedhiyanai - (மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை,
சயம் புகழார் பலர் வாழும்,Sayam pugalaaar palar vaazhum - ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான
தடம் குருகூர்,Thadam kurukoor - பெரிய திருநகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
தொழுது,Thozhudhu - ஸேவித்து
துயக்கு இன்றி,Thuyakku indri - அவத்ய மொன்று மின்றியே
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,I pattum - இத்திருவாய்மொழி
ஒலி முந்நீர் ஞாலத்து,Oli munneer nyaalathu - ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில்
உய கொண்டு,Uya kondhu - (உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி
பிறப்பு அறுக்கும்,Pirappu arukkum - ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும்
2908திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.) 1
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1
முந்நீர் ஞாலம் படைத்த,Munneer gnaalam padaitha - கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும்
எம் முகில் வண்ணனே,Em mugil vannaney - மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே!
அ நாள்,A naal - அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில்
நீ தந்த,Nee thantha - நீ கொடுத்தருளின
ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய
வழி,Valzi - வழியிலேயே
உழல்வேன்,Uzhala ven - நடந்துகேட்டுத் திரிகின்றேன்
வெம்நாள்,Vemnaal - (உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே
நோய் வீய,Noi veeya - வியாதிகள் தீரும்படி
வினைகளை,Vinaiyai - கரும பந்தங்களை
வேர் அறுபாய்ந்து,Ver arupayinthu - வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று
யான்,Yaan - அடியேன்
உன்னை,Unnai - (மஹோபகாரனான) உன்னை
இனி எந்நாள் வந்து கூடுவன்,Ini ennaal vandhu kooduvan - அடையப் பெறுவது இனி என்றைக்கோ!
2909திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஜலஸ்தல விபாகமில்லாமல் எல்லார் தலைமேலும் நீ திருவடிகளை வைத்தருளின காலத்தையும் தப்பின நான் இனி உன் திருவடிகளில் வந்து சேர்வது என்றைக்கோ வென்கிறார்) 2
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2
வல்,Val - வலிமைதாங்கிய
மா,Maa - பெரிய
வையம்,Vaiyam - பூமியை
அளந்த,Alandha - (மஹாபலியிடத்தில் பிக்ஷை பெற்று) அளந்து கொண்ட
எம் வாமனா,Em Vaamana - எமது வாமனமூர்த்தியை
படி நின்ற,Padi ninra - பொருந்தி வாழ்கின்ற
யான்,Yaan - நான்
தொல்,Tol - பழமையான
மா,Maa - பெரிய
வல்,Val - உறுதியான
வினை,Vinai - பாவங்களினுடைய
தொடர்களை,Thodargalai - அநுபந்தங்களை
நின் பல் மா மாயம்,Nin pal maa maayam - உனது திருவிளையாடலுக்குக் கருவியான குணவேற்றுமையாலும் காரிய வேற்றுமையாலும் பலவகைப்பட்ட பெரிய மாயையாகிய பிரகிருதி மூலமான
பல் பிறவியில்,Pal piraviyil - தேவர் முதலிய பலவகைப்பிறப்பில்
முதல் அரிந்து,Mudhal arinthu - வேரோடே அறுத்து
நின்,Nin - (ப்ராப்யனான) உன்னுடைய
மா நாள்,Maa naal - சிறந்த திருவடிகளை
சேர்ந்து,Serndhu - அடைந்து
நிற்பது,Nirpathu - நிலைபெற்றிருப்பது
எஞ்ஞான்று கொல்,Yennjaandru kol - என்றைக்கோ?
2910திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீவாமன மூர்த்தியான காலத்தில் தப்பினவர்களையும் விஷயீகரீப்பதற்காக ஸ்ரீக்ருஷ்ணனாய் வந்து அவதரித்த காலத்திலும் தப்பினேனென்கிறார்) 3
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3
கொல்லா,Kolla - கொல்லுகைக்குக் கருவியல்லாமல்
பா,Pa - குதிரையை நடத்துவதான
கோல்,Kol - சாட்டையே கருவியாக
கொலை செய்து,Kolai seydhu - (எதிரிகளை) முடித்து
பாரதம் போர்,Bharatham Por - பாரத யுத்தத்தில்
எல்லார் சேனையும்,Ellaar senaiyum - (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும்
இரு நிலத்து,Iru nilathu - இப்பெரிய பூமியில்
அவித்த,Avitha - தொலைத்த
எந்தாய்,Endhai - ஸ்வாமியே!
பொல்லா,Polla - துன்பங்களுக்குக் காரணமான
ஆக்கையின்,Aakaiyin - சரீரத்தினுடைய
புணர்வினை,Punarvinai - சம்பந்தத்தை
அறுக்கல் அரு,Arukkal aru - அறுக்க எண்ணினாலும் அது அறுபடாது:
யான்,Yaan - (இதிலே அகப்பட்ட) நான்
உன்னை,Unnai - (ஸர்வசக்தனான) உன்னை
சார்வது,Saarvadhu - கிட்டுவதாகிய
ஓர் சூழ்ச்சி,Or Soozhchi - ஒரு பாயத்தை
சொல்லாய்,Sollai - சொல்லியருள்
2911திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பெருமானே! அவதாரங்களுக்குத் தப்பினேன் என்பது மாத்திரமேயோ? எல்லாரையும் ரக்ஷிக்கைக்காக நீ ஸர்வ வ்யாபியாயிருக்கிற இருப்பும் எனக்குக் கார்யயமாகவில்லையே, நான் உன்னைப் பெறும்வழி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்) 4
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4
சூழ்ச்சி,Soozhchi - (எல்லாவற்றையும்) சூழ்ந்து கொள்ளுகிற
சுடர் ஒளி,Sudar oli - மிகவும் விலக்ஷணமான
ஞானம் ஆகி,Gnaanam aagi - ஞானத்தையுடையாய்
என்றும்,Endrum - எக்காலத்திலும்
ஏழ்ச்சி கேடு இன்றி,Ezhchi kedu indri - விகாஸமும் ஸங்கோசமுமில்லாமல்
எங்ஙனும்,Enganum - எவ்விடத்திலும்
நிறைந்த,Niraindha - வியாபித்திருக்கின்ற
எந்தாய்,Endhai - எமது ஸ்வாமியே
மற்று எங்கும்,Matru engum - உன்னைத் தவிர எந்த விஷயத்திலும்
தாழ்ச்சி தவிர்ந்து,Thaalzchi thavirndhu - கால்தாழ்ந்திருப்பதை விட்டு
நின்தான் இணை கீழ்,Nin thaan inai keel - உனது உபய பாதங்களின் கீழே
வாழ்ச்சி,Vaalchi - வாழ்ந்திருக்குமிருப்பை
வந்து,Vandhu - (யான் சேரும்வகை யான் அடையும் விதத்தை) (என் கண் முன்னே) வந்து தோன்றி
அருளாய்,Arulaai - அருளிச் செய்யவேணும்.
2912திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) ((வந்தாய்போலே) கீழ்ப்பாட்டில் “நின்தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான். “ஆழ்வீர்! வந்தருளவேணும் வந்தருளவேணுமென்னா நின்றீர்; ஒரு கால் வந்து (இராமனாய்) பதினோராயிரமாண்டு இருந்தோம்; மற்றொருகால் வந்து (க்ருஷ்ணனாய்) நூற்றாண்டிருந்தோம். இன்னமும் வருவதென்றால் அது ப்ரயாஸமாயிருக்கிறது காணும் என்ன; அதுகேட்ட ஆழ்வார், ‘பிரானே! அவ்வவதாரங்கள் போலே எனக்காகவும் வந்து சில நாளிருந்து ஸேவை ஸாதிக்கத் திருவுள்ளமானால் அழகியது; அது செய்யத் திருவுள்ளமில்லையாகில் ஆனைக்குத் தொற்றினாப்போலேயும் ப்ரஹ்லாதனுக்குத் தோற்றினாப்போலேயும் எனக்குமொருகால் தோற்றியருளியாகிலும் உதவ வேணுமென்கிறார்.) 5
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5
வந்தாய் போலே வந்தும்,Vandhai poale vandhum - (ப்ரஹ்லாதன் கஜேந்திரன் முதலானார்க்கு) வந்து தோன்றினாய் போலே வந்தாகிலும்
என் மனத்தினை,En manaththinai - எனது நெஞ்சை
சிந்தாமல்,Sindhaamal - சிதிலமாகாதபடி
நீ செய்தாய்,Nee seydhai - நீ செய்வதில்லை
இதுவே,Ithuvae - உதவி செய்யாமையாகிற இதுவே
இது ஆகில்,Ithu aagil - இப்படியே நீடித்திருக்குமாகில்
கொந்து ஆர்காயாவின் கொழுமலர் திரு நிறைத்த எந்தாய்,Kondhu aarkaayavin kozhumalar thiru niraitha endhai - கொத்துக்கள் நிறைந்த காயாவினுடைய செழுமை தங்கிய பூவின் நிறம்போன்ற நிறத்தையுடைய ஸ்வாமியே!
உன்னை,Unnai - (இப்படிப்பட்ட அழகை அநுபவித்தே தரிக்கவல்ல) அடியேன்.உன்னை
எங்கு,Engu - எவ்விடத்து
வந்து அணுகிற்பன்,Vandhu anugirpan - வந்து கிட்டவல்லேன்.
2913திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (பிரானே! இதற்கு முன்புள்ள காலமெல்லாம் உன் திருவடிகளைச் சேருமைக்கு உறுப்பாயிருப்பதொரு ஸுக்ருதத்தைச் செய்ததுமில்லை, துஷ்க்குதல்கள் தவிர்ந்ததுமில்லை; எதையும் தோன்றினபடிச் செய்து திரிந்தேன்; இப்படிச் செய்து திரிந்து மிகவும் அற்பமான விஷயரஸங்களைப் புஜித்து உன் திருவடிகளுக்குப் புறம்பாகியே அகன்றொழிந்தேன். அனந்தகோடி ஜீவராசிகளுக்குக் கரண்களே பரப்ரதானம் பண்ணி கடத்திப் போருகின்றவுனக்கு என்னை யொருவனையும் உன் திருவடிகளுக்கு உரியேனாம்படி பண்ணியருளுகை அரிதான காரியமோ? அங்ஙனே திருவுள்ளம் பற்றியருளலாகாதோ? இந்த மஹாபாக்யம் என்றைக்கு நேருமோ என்கிறார்.) 6
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6
முனம் நாளால்,Munam naalaal - முற்காலமெல்லாம்
கிற்பன் என்றிலன்,Kirpan endrilan - நன்மைகளைச் செய்யவல்லேனென்கிற இசையும் கொத்ணண்ணிடிலேன்
கில்லேன் என்றிலன்,Killen endrilan - தீமைகளைச் செய்யமாட்டேனென்கிற தவிர்தலும் கொண்டிலேன்: (ஸுக்ருதங்களைச் செய்யாதவனாயும் துஷ்க்ருதங்களையே செய்யவனாயும்)
அற்பம் சாரங்கள் அவை,Arpam saarangal avai - க்ஷுத்ர விஷயங்களையே
சுவைத்து,Suvaitthu - அநுபவித்து
அகன்று ஒழித்தேன்,Aganru ozhithaen - உன்னைவிட்டு நீங்கிக் கிடந்தேன்.
பல்பல் ஆயிரம் உயிர்,Palpal aayiram uyir - எண்ணிறந்த ஜீவராசிகளை
செய்த,Seydha - நினைத்தபடி உண்டாக்கவல்ல
பரமா,Parama - ஸமர்த்தனே!
நின்,Nin - உன்னுடைய
நல் பொன்சோதி தாள்,Nal ponsodi thaal - விலக்ஷணமாய் அழகிய ஒளியுருவாய் திருவடிகளை
நணுகுவது,Nanuguvadhu - நான் கிட்டுவது
எஞ்ஞான்று,Yennjaandru - என்றைக்கு.
2914திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் “நின்நற்பொற் சோதித்தாள்” என்று திருவடியின் பரம போக்யதையின் ப்ரஸ்தாவம் வரவே அந்தத் திருவடி விஷயத்தில் நெஞ்சுக்கு ஒரு பதற்றம் உண்டாயிற்று; அது கண்ட ஆழ்வார் நெஞ்சை நோக்கி, ‘கெடுவாய்! உனது நிலைமையை ஆராயாது நல்லதை யாசைப்பட்டால் அது உனக்குக் கிடைக்குமோ?” என்கிறார்.) 7
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7
நெஞ்சே!,Nenjae! - மனமே
இருந்து இருந்து,Irundhu irundhu - நிரந்தரமாக
இரங்கி,Irangi - வருந்தி
மெய் ஞானம் இன்றி,Mei gnaanam indri - யதார்த்த ஞானமில்லாமையாலே
வினை இயல் பிறப்பு,Vinai iyal pirappu - பாபங்களின் பலனாக சேர்ந்த ஜன்மங்களிலே
அழுந்தி,Azhundhi - ஆழங்காற்பட்டு
நாம்,Naam - இதுவே யாத்திரையாக இருக்கிற நாம்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவு அற நிறைந்து நின்ற,Yennjaandrum engum ozhivu aṛa niraindhu ninra - எல்லாக் காலத்திலும் எல்லாப் பொருள்களிலும் ஒன்றும் விடாலே பரிபூர்ணமாக வியாபித்து நிலைபெற்றிருக்கின்றவனும்.
மெய்ஞானம் சோதி,Mei gnaanam sothi - விசதமான ஜ்ஞானப்ரபையை யுடையவனுமான
கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை
எஞ்ஞான்று மேவுவதும்,Yennjaandru mevvadhum - என்னைக்குக் கிட்டக் கடவோம்.
2915திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (எம்பெருமானே! உன்னைப் பெறுகைக்கு நான் ஏதேனும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணியிருந்தேனாகில் அந்தப் பற்றாசுதன்னை வைத்துக் கொண்டாவது ‘ஏன் நமக்கு இன்னமும் இரங்கி யருளவில்லை?’ என்று நான் கரைந்து கூப்பிடலாம்; நானோ ஒரு ஸாதாநாநுஷ்டாநமும் பண்ணாதவன்; அப்படியிருந்தும், ஸாதநங்களை நிறைய அநுஷ்டித்துப் பலன் கைபுகப் பெறாதவன் கிடந்து துடிக்குமாபோலே நானும் துடித்துக் கதறுகின்றேனே! இது என்ன! என்று தமக்குத்தாமே விஸ்மயப் பட்டுக் கொள்ளுகிறார்.) 8
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8
துன்பம் மேவு,Thunbam mevu - பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல
வினைகளை,Vinaikalai - பாவங்களை
ஓவுதல் இன்றி,Oavudhal indri - இடையறாமல்
உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை
வணங்கிற்றிலேன்,Vanangittrilaen - பணிவதும் செய்திலேன்
பாவு,Paavu - எங்கும் பரவிய
தொல்,Tol - இயற்கையான
சீர்,Seer - திருக்குணங்களையுடைய
விடுத்தும் இலேன்,Viduththum ilaen - (தவன் முதலியவற்றால்) போக்கடித்துக் காண்டேனுமில்லை
கண்ணா,Kanna - கண்ணபிரானே!
என்,En - எனது விருப்பத்திற்குரிய
பாஞ்சுடரே,Paanchudare - மேலான ஒளியுருவனே!
காண்பான்,Kaanbaan - (உன்னைக்) காணும்பொருட்டு
கூவுகின்றேன்,Koovugindraen - கூப்பிடுகின்றேன்.
எங்கு எய்த கூவுவன்,Engu eitha koovuvan - எங்கே கிட்டுவதாகக் கூப்பிடுவேன்
2916திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (ஸ்ரீகிருஷ்ணனாயும் ஸ்ரீவாமநனாயும் அவதரித்து உலகுக்குப் பண்ணின அநுக்ரஹத்திற்குத் தப்பின நான் இனி யுன்னைப் பெறுதற்கு வழியுண்டோவென்று க்லேசந்தோற்றப் பேசுகிறார்.) 9
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆநிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9

கொடு வினை,Kodu vinai - கொடிய பாவங்களுக்குப் பிறப்பிடமாகிய
தூற்றுள் நின்று,Thoottrul ninru - நுழைந்தால் வெளிப்பட முடி(யாத) புதர் போன்ற ஸம்ஸாரத்தில் அகப்பட்டு நின்று
பல காலம்,Pala kaalam - அநேக காலம்
வழி திகைத்து,Vali thigaiththu - வழி தெரியாமல் சுழன்று
அலமருகின்றேன்,Alamarugindren - வருந்திக் கிடக்கின்ற
பாவியேன்,Paaviyen - மஹாபாபியான நான்
அன்று,Andru - முன்பொருகால்
மேவி,Mevi - திருவள்ளமுவந்து
ஆநிரை,Aa nirai - பசுக்கூடட்ங்களை
காத்தவன்,Kaaththavan - ரக்ஷித்தவனும்
உலகம் எல்லாம் தாவிய,Ulagam ellaam thaaviya - (த்ரிவிக்ரமனாய்) உலகங்களையெல்லாம் அளந்தவனுமாகிய
அம்மானை,Ammaanai - ஸ்வாமியை
இனி,Ini - இனி
கூவி கூவி,Koovi koovi - பலகாலும் கூப்பிட்டு
எங்கு,Engu - எங்கே
தலைப்பெய்வன்,Thalaippeivan - கிட்டுவேன்?
2917திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (கீழ்ப்பாட்டில் ஆழ்வார்க்கு ஓடின நிலைமையைக்கண்ட எம்பெருமான் ‘இவரை நாம் ஒருவாறு ஸமாதானப்படுத்தாவிடில் இவர் முடிந்தேவிடுவர்போலும்’ என்றெண்ணித் தான் வடக்குத் திருமலையில் நிற்கும்படியைக் காட்டியருள, ஆழ்வாரும் கண்டு தரித்து, அந்தத் தரிப்பை இப்பாசுரத்தில் வெளியிடுகிறார்.) 10
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10
நமன் தமர்,Naman thamar - யமபடர்கள்
தலைப்பெய் காலம்,Thalaippei kaalam - வந்து கிட்டுங்காலம்
பாசம் விட்டால்,Paasam vittal - காலபாசத்தை வீசினால்
அலைப்பூண் உண்ணும்,Alaipoon unnum - (அப்போது) அலைச்சல் படுகையாகிற
அவ் அல்லல் எல்லாம் அகல,Av allal ellaam agala - அந்தத் துயரமெல்லாம் நீங்க,
பல் கலை ஞானத்து என் கண்ணனை,Pal kalai gnaanaththu en Kannanai - பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களாலே அறியத்தக்க எனது கண்ணபிரானை
கண்டுகொண்டு,Kandukondu - காணப்பெற்று
என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது
நிலை பெற்று,Nilai petru - நிலைநிற்கப்பெற்று
உயிர்,Uyir - ஆத்மாவும்
நீடு பெற்று,Needu petru - நித்யத்வத்தைப் பெற்றதாயிற்று.
2918திருவாய்மொழி || (3-2–முந்நீர் ஞாலம்) (அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்) (இத்திருவாய்மொழி கற்பார, தம்மைப்போலே நோவுபடாதே ஸம்ஸார விமோசனம் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின் மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11
எல்லா உயிர்கள்,Ellaa uyirgal - ஸகல ஜீவராசிகளையும்
எல்லா உலகமும்,Ellaa ulagamum - எல்லா உலகங்களையும்
உடையவனை,Udaiyavanai - உடைமையாகக் கொண்டுள்ள எம்பெருமானைக் குறித்து
குயில் கொள் சோலை தென் குருகூர் சடகோபன்,Kuyil kol solai then Kurugur Sadagopan - குயில்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாரருளிய
செயிர் இல்,Seyir il - குற்றமற்ற
சொல்,Sol - சொற்களையுடையத்தாய்
இசை,Isai - இசையோடுங்கூடின
மாலை,Maalai - தொடையையுடைய
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்திலும்
இ பத்தும்,e paththum - இப் பத்துப்பாட்டும்
உயிரின் மேல்,Uyirin mel - ஆத்மாவின்மேல் வந்தேறியான
ஊன் இடை,Oon idai - மாம்ஸமயமான
ஆக்கை,Aakai - சரீரத்தை
ஒழிவிக்கும்,Ozhivikkum - போக்குவிக்கும்
2919திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 1
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1
தெழி குரல் அருவி, Thezhi kural aruvi - கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருவேங்கடமலையில்
எழில் கொள், Ezhil kol - நிறம்பெற்ற
எந்தை தந்தை தந்தைக்கு, Endhai thandhai thandhaikku - எமது குலநாதனான பெருமானுக்கு,
நாம், Naam - அடியோம்
ஒழிவு இல், Ozhivu il - ஓய்வில்லாத
காலம் எல்லாம், Kaalam ellaam - காலம் முழுவதும்
உடன் ஆய், Udan aay - கூடவே யிருந்து
மன்னி, Manni - ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று
வழு இலா, Valu ila - குற்றமற்ற
அடிமை, Adimai - கைங்கரியங்களை
செய்ய வேண்டும், Seyya vendum - பண்ணக்கடவோம்.
2920திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 2
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2
வானவர், Vaanavar - நித்யஸூரிகள்
வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட
சிந்து, Sindhu - தூவின
பூ, Poo - புஷ்பங்கள்
மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும்
கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான
அண்ணல், Annal - எம்பெருமான்
எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன்
2921திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 3
அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3
அணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய
செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்
செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும்
கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும்
தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய
திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில்
எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும்
வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான்
அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும்
மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன்
2922திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4
வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு
ஈசன், Eesan - தலைவன்
என்பன், Enban - என்று சொல்லுவேன்
என்றால், Endraal - இப்படிச் சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்
பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற
பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான
திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு
அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ?
2923திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 5
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5
வேதியர் முழு வேதத்து அமுதத்தை , Vethiyar muzhu vedathu amudhathai - வைதிகர்களால் ஓதப்படுகிற ஸகல வேதங்களிலும் பரம போக்யனாக ப்ரதிபாதிக்கப்படுபவனும்
தீது இல் சீர் , Theethu il seer - தீது ஒன்றுமில்லாத திருக்குணங்களை யுடையனுமான
திருவேங்கடத்தானை , Thiruvengadathaannai - திருமலையப்பனைக் குறித்து
சோதி ஆகி , Sothi aagi - சோதிமயமான திருமேனியையுடையனாய்
ஆதி , Aadhi - ஸகலஜகத்காரணபூதனான (எல்லா உலகும் தொழும் உலகத்தவர்களெல்லாராலும் தொழப்படுபவனாய்)
மூர்த்தி , Moorthi - ஸர்வேச்வரன் (இவன்)
என்றால் , Endraal - என்று நான் சொன்னால் (அது)
அளவு ஆகுமோ , Alavu aagumo - ஒரு பெருமை யாகுமோ?
2924திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 6
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6
வேங்கடத்து , Vengadathu - திருமலையிலே
உறைவார்க்கு , Uraivaarkku - நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு
நம எனல் ஆம் கடமை அது , Nama enal aam kadamai adhu - நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை
சுமந்தார்கட்கு , Sumanthaarkku - வஹிக்கின்றவர்களுக்கு
கடங்கள் , Kadangal - அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும்
மேல்வினை , Melvinai - (ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய)
முற்றவும் , Mutravum - ஸகலபாபங்களும்
வேம் , Vem - வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே)
தங்கட்கு நல்லனாவே , Thangatku nallanaave - தாங்கள் அடியவர்களான தாங்கள் ; தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே)
செய்வார் , Seivaar - செய்யப் பெறுவர்கள்.
2925திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 7
சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும் திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே.–3-3-7
மா , Maa - சிறந்த
மலர் , Malar - புஷ்பங்களையும்
நீர் , Neer - தீர்த்தத்தையும்
சுடர் , Sudar - தீபத்தையும்
தூபம் , Thoobam - தூபத்தையும்
சுமந்துகொண்டு , Sumandhukondu - ஏந்திக்கொண்டு
வானவர் , Vaanavar - தேவர்கள்
வானவர் கோ னொடும் , Vaanavar konodum - தங்கள் தலைவனோடுகூட
அமர்ந்து நமன்று , Amarndu namandru - அநந்யப்ரயோஜநராய் வணங்கி
எழும் , Ezhum - உஜ்ஜீவிக்குமிடமான
திருவேங்கடம் , Thiruvengadam - திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே
நங்கட்கு , Nangatku - நமக்கு
சமன் கொள் வீடு , Saman kol veedu - பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை
தரும் , Tharum - அளிக்கும்.
2926திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 8
குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர் திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.–3-3-8
குன்றம் ஏந்தி , Kundram endhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகத் தாங்கிநின்று
குளிர் மழை , Kulir mazhai - குளிர்ந்தபெருமழையை
காத்தவன் , Kaathavan - தடுத்தவனும்
அன்று , Andru - முன்பொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் , Nyaalam alandha piran - உலகங்களையளந்த பிரபுவுமாகிய
பரன் , Paran - எம்பெருமான்
சென்று சேர் , Sendru ser - வந்து சேர்ந்தவிடமான
திருவேங்கட மாமலை ஒன்றமே , Thiruvengata maamalai ondrame - திருமலையொன்றை மாத்திரமே
தொழ , Thozha - தொழப்பெறில்
நம் வினை , Nam vinai - நமது வினைகள் யாவும்
ஓயும் , Ooyum - தொலைந்திடும்.
2927திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 9
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9
திருவேங்கடத்து ஆயன் தாமரை நாள் மலர் ஆம் , Thiruvengadathu Aayan Thamarai Naal Malar Aam - திருமலையில் வாழ்கிற ஸ்ரீ கிருஷ்ணன் அப்போதலர்ந்த செந்தாமரைப்பூப்போன்ற
ஓயும் மூப்பு , Ooyum Moopu - ஓய்வை விளைவிக்கின்ற கிழந்தனமென்ன
பிறப்பு , Pirappu - பிறவியென்ன
இறப்பு , Irappu - மரணமென்ன
அடி , Adi - திருவடிகளை
வாய் உள்ளும் , Vaai ullum - வாக்கினுள்ளும்
மனத்துள்ளும் , Manathullum - நெஞ்சினுள்ளும்
வைப்பார்கட்கு , Vaipparkatku - வைத்துக் கொள்பவர்களுக்கு
பிணி , Pini - வியாதியென்ன (ஆகிய இவை)
வீயும் ஆறு , Veeyum aaru - தொலையும் வகை
செய்வான் , Seyvaan - செய்தருள்வன்.
2928திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 10
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10
வைத்த, vaitha - (பாகவதர்களே!) (உங்களுக்குச்) சங்கற்பித்துவைத்த
நாள், naal - ஆயுட்காலத்தினுடைய
வரை, varai - அளவான
எல்லை, ellai - எல்லையானது
குறுகி, kurugi - அணுகி
எய்த்து இளைப்பதன் முன்னம், eithu ilaipathan munnam - (அதனால் நீங்கள்) மிகவும் தளர்ச்சியடைவதற்கு முன்னே
சென்று, sendru - (திருமலையை நோக்கிச் சென்று)
பைத்த பாம்பு அணையான், paitha paambu anaiyaan - படமெடுத்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்ட பெருமானது
திருவேங்கடம், thiruvengadam - (அத்) திருமலையில்
மொய்த்த சோலை , Moitha solai - நெருங்கின சோலைகளும்
மொய் பூ தடம் , Moi poo Thadam - நெருங்கின புஷ்கரிணிகளுமுள்ள
தாழ்வர் , Thaazhvar - திருத்தாழ்வரையை
அடைமின் , Adaimin - அடையுங்கள்
2929திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 11
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை,
நீள் பொழில் குரு கூர்ச் சட கோபன் சொல்,
கேழில் ஆயிரத்திப் பத்தும் வல்லவர்,
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே.–3-3-11
தாள் பரப்பி, thaal parappi - திருவடியை விரித்து
மண் தாவிய, man thaaviya - பூமியெல்லாம் அளந்து கொண்ட
ஈசனை, eesanai - எம்பெருமானைக் குறித்து
நீள் பொழில், neel pozhil - உயர்ந்த சோலைகளையுடைய
குருகூர் சடகோபன், kurugoor sadagopan - ஆழ்வார்
சொல், sol - அருளிச்செய்த
கேழ் இல், kezh il - ஒப்பற்றதான
ஆயிரத்து, aayirathu - ஆயிரத்தில்
இப் பத்தும், ip pathum - இத்திருவாய்மொழியை
வல்லவர், vallavar - ஓதவல்லவர்கள்
ஞாலம் புகழ, nyaalam pugazha - உலகம் யாவும் கொண்டாடும் படி
வாழ்வு எய்தி, vaazhvu eidhi - வாழ்ச்சிபெற்று
வாழ்வர், vaazhvar - (அந்த வாழ்ச்சி ஒருநாளும் குன்றாமே) விளங்குவர்.
2930திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்குக் காரணமான பஞ்சமஹாபூதங்களையும்-, அந்த பூதங்களினால் இயன்ற பொருள்களையும் தனக்குச் சரீரமாகக் கொண்டு விலக்ஷணமான குணங்களோடு ஆழ்வார்க்கு ஸேவை தந்தருளியதனால், அத்தகைய நிலைமையை ஸேவிக்கப்பெற்ற ஆழ்வார் அப்பெருமானை இப்படிப்பட்ட தன்மையுடையவனென்று கூறுதற்கு இயலாமல் திகைத்து நிற்கின்றார். “கண்ணனைக் கூவுமாறே” என்ற முடிக்குஞ்சொல் இன்றி விட்டிருக்கிறார்; அதனை வருவித்து உரைத்துக்கொள்க.) 1
புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே. -3-4-1
கண்ணனை,Kannanai - (உலகத்து எல்லாப் பொருள்களையும் தனக்குச் சரீரமாகவுடைய) எம்பெருமானை
புகழும்,Pugazhum - (வேதங்கள் இதிஹாஸ புராணங்கள் முதலியவற்றால்) புகழ்ந்து கூறப்பெற்ற
நல்,Nal - விலக்ஷணமான குணங்கள் முதலியவற்றையுடைய
ஒருவன்,Oruvan - ஒப்பற்றவன்
என்கோ,Enko - என்று சொல்வேனோ?
பொருவு இல் சீர்,Poruvu il seer - ஒப்பில்லாத சிறப்புக்களையுடைய
பூமி என்கோ,Bhoomi enko - பூமியென்று சொல்வேனோ?
திகழும்,Thigazhum - விளங்குகிற
பரவை என்கோ,Paravai enko - நீர்நிலையென்று சொல்வேனோ?
தீ என்கோ,Thee enko - அக்கினியென்பேனோ?
வாயு என்கோ,Vayu enko - காற்று என்பேனோ?
நிகழும் ஆகாசம் என்கோ,Nigazhum aagaasam enko - எங்குமுள்ளதான ஆகாசமென்பேனோ?
நீள்சுடர் இரண்டும் என்கோ,Neel sudar irandum enko - (ஸூர்யன் சந்திரன்) என்ற இரண்டு சுடர்களுமென்பேனோ?
இகழ்வு இல்,Igazvu il - இகழப்படுதலில்லாத (வேண்டும் பொருள்களாகக் கைக் கொள்ளுதற்கு உரிய)
இவ் இனைத்தும் என்கோ,Iv inaitthum enko - இவையெல்லாப் பொருள்களுமென்பேனோ?
கூவும் ஆறு ஏ,Koovum aaru ae - (எம்பெருமானைச்) சொல்லியழைக்கும் விதம் (என்னே) (யான் இன்னதென்று உணறேன் என்றபடி.)
2931திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (கீழ்ப் பாசுரத்திற் கூறிய பஞ்ச பூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார்.) 2
கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2
பாவுசீர் கண்ணன்,Paavuseer Kannan - பரம்பின திருக் கல்யாண குணங்களை யுடைய க்ருஷ்ணனென்ற திருநாமமுடையவனும்
பங்கயக் கண்ணன்,Pangaya Kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனும்
எம்மானை,Emmaanai - எமது தலைவனுமாகிய எம்பெருமானை
குன்றங்கள் அனைத்தும் என்கோ,Kunrangkal anaiththum enko - எல்லாமும் என்று சொல்வேனோ?
மெவு சீர் மாரி என்கோ,Mevu seer maari enko - (கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ?
விளங்கு தாரகைகள் என்கோ,Vilangum thaarakaigal enko - பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ?
நா இயல் கலைகள் என்கோ,Naa iyal kalaigal enko - நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ?
ஞானம் நல் ஆவி என்கோ,Gnaanam nal aavi enko - அர்த்த ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ?
கூவும் ஆறு,Koovum aaru - (எம்பெருமானைச்) சொல்லும் விதத்தை
அறியமாட்டேன்,Ariya maatten - அறிகின்றேனில்லை
2932திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) ( எம்பெருமான் ப்ரபஞ்ச சரீரகனாயிருக்கும்படியை முதலிரண்டு பாசுரங்களிற் கூறிய ஆழ்வார், இந்தப் பாசரத்தில் தனக்கு உரிய திருமேனியோடு ஸேவை ஸாதிக்கின்ற அப்பெருமானை அநுபவிக்கிறார். இவ்வாறு அநுபவித்துக் கூறியதற்குக் காரணம் – எம்பெருமான் ஜகத்தை சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையும் தனக்கு உரிய திருமேனியைக் கைக்கொண்டு நிற்கும் நிலையும், ஆக இவ் விரண்டும் ஆழ்வார்க்கு ஒத்திருக்கையாலென்க.) 3
பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3
சாதி மாணிக்கத்தை,Saadhi maanikaththai - நல்ல ஜாதியான (ஆகரத்தில் தோன்றிய) கருமாணிக்கம் போல விளங்குனின்ற திருமேனியையுடைய திருமாலை
பங்கயக் கண்ணன் என்கோ,Pangayak Kannan enko - செந்தாமரைக் கண்ணனென்பேனோ?
பவளச் செவ்வாயன் என் கோ,Pavala sevvayan enko - பவளம்போல சிவந்த வாயை யுடையவன் என்பேனோ?
அம் கதிர் அடியன் என்கோ,Am kathir adiyan enko - அழகையும் ஒளியையுமுடைய திருவடிகளை யுடையவனென்பேனோ?
அஞ்சனம் வண்ணன் என்கோ,Anjanam vannan enko - மைபோலுங் கருநிறத்தை யுடையவனெனபோனோ?
செம் கதிர் முடியன் என்கோ,Sem kathir mudiyan enko - சிவந்த ஒளியையுடைய கிரீடத்தையுடையவனென்பேனோ?
திரு மறு மார்வன் என்கோ,Thiru maru maarvan enko - பிராட்டியையும் ஸ்ரீவத்ஸமென்னும் மறுவையுமுடைய திருமார்பையுடைய
வனென்பேனோ?

சங்கு சக்கரத்தன் என்கோ,Sangu sakkarathan enko - சங்குசக்கரங்களை யுடையவனென்பேனோ?
2933திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (*யத் யத் விபூதி மத்..* (உலகத்திலே சிறந்து தோன்றும் பொருள்கள் யாவும் எனது தேஜஸ்ஸின் அம்சத்தினாலுண்டானவை) என்று கீதையில் கண்ணபிரான் பாராட்டிக் கூறியித்தலால் சிறந்த மாணிக்கம் முதலியவைகளில் அவ்வெம்பெருமானது அம்சம் மிக்கிருக்குமென்பது கருதி ஆழ்வார் இந்தப்பாசுரத்தில் எம்பெருமானை மாணிக்கம் முதலிய சிறந்த பொருள்களாகப் பாராட்டி யநுபவிக்கின்றனரென்க. ஆதியஞ்சோதி யென்பது முதல் எம்பெருமானை நேரே சொல்லுகின்றது.) 4
சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4
ஆதும் இல் காலத்து,Aadhum il kaalaththu - (என்னிடத்து) யாதொரு உபாயமுமில்லாத காலத்திலே
எந்தை,Endhai - என் தந்தையைப்போலப் பாதுகாக்க ஒருப்பட்டவனும்
அச்சுதன்,Achuthan - (பின்பு ஒருகாலும் என்னை அந்த நிலையினின்று) நழுவ விடாதவனும்
அமலனை,Amalanai - (அங்ஙனம் பாதகாத்தலைத்) தன் பேறாகக் கொள்பவனுமான எம்பெருமானை
சாதி மாணிக்கம் என்கோ,Saadhi maanikam enko - மாணிக்கம் – நவமணிகளுள் ஒன்று. (நவமணிகளாவன-கோமேதகம், நீலம், பவளம், புட்பராகம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம் என்பன.)
சாதி மாணிக்கம் என்றது சிறந்த ஆகரத்திற் பிறந்ததும் குற்றமற்றதும் இயற்கையழகையுடையதும் பெருவிலையதுமான மாணிக்கம் என்றபடி.

சவிகொள் பொன் என்கோ,Savikol pon enko - ஒளியையுடைய பொன் என்பேனோ?
சவிகொள் முத்தம் என்கோ,Savikol muththam enko - நீரோட்டமுள்ள முத்து என்பேனோ?
சாதிநல்வயிரம் என்கோ,Saadhi nal vayiram enko - சாதியில் தோன்றிய சிறந்த வஜ்ரரத்னமென்பேனோ?
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ,Thavivu il seer vilakkam enko - அழிதலில்லாத ஒளியையுடைய விளக்கு என்பேனோ?
ஆதி,Aadhi - எல்லாப் பொருள்கட்கும் முந்தியிருப்பதாய்
அம்,Am - அழகியதான
சோதி என்கோ,Sothi enko - தேஜோமயமான திருமேனியையுடையவனென்பேனோ?
ஆதி,Aadhi - தலைவனாகிய
அம்,Am - (ஆனந்தம் முதலிய குணங்களால்) இனியவனான
புருடன் என்கோ,Purudan enko - பரமபுருஷன் என்பேனோ?
2934திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ரஸம் நிறைந்த பண்டங்களாக இருக்குந்தன்மையை ஆழ்வார் இப்பாட்டில் பாராட்டிக் கூறுகின்றார். “ரஸோவை ஸ: ரஸம்ஹ்யேவாயம் லப்த்வாநந்தீபவதி” என்ற உபநிஷத்து இங்கு ஸ்மரிக்கத்தக்கது) 5
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5
அச்சுதன்,Achuthan - (எம்பெருமானை) அச்சுதன் என்பேனோ?
அமலன் என்கோ,Amalan enko - அகிலஹேய ப்ரத்யநீகன் என்பேனோ?
அடியவர்,Adiyavar - தன்னடியார்களது
வினை,Vinai - புண்ணியபாபமென்கிற இருவினைகளையும்
கெடுக்கும்,Kedukkum - போக்குவதும்
அ சுவை கட்டி என்கோ,A suvai katti enko - அந்த அமிருதத்தின் உருசியையுடைய கருப்புக் கட்டி யென்போனோ?
அறு சுவை அடிசில் என்கோ,Aru suvai adisil enko - அறுவகைச் சுவையும் நிரம்பிய உணவு என்பேனோ?
நச்சு,Nachchu - (இனிமைபற்றி) விரும்பப்படுவதுமான
மா மருந்தம் என்கோ,Maa marundham enko - சிறந்த ஔஷதமென்பேனோ
நலம் கடல் அமுதம் என்கோ,Nalam kadal amudham enko - நல்ல பாற்கடலில் தோன்றிய அம்ருதமென்பேனோ?
நெய் சுவை தேறல் என்கோ,Nei suvai therhal enko - நெய்போலுஞ் சுவையையுடைய தேன் என்பேனோ?
கனி என்கோ,Kani enko - பழமென்பேனோ?
பால் என்கோனோ,Paal enkonoo - பால் என்பேனோ?
2935திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (வேதம் முதலியனவான இயலும் இசையுமாயுள்ள சப்த ராசிகளை எம்பெருமான் தனக்கு விசேஷணமாகப் பெற்றிருக்கின்றபடியைக் கூறுகின்றாரிப்பாட்டில்) 6
பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6
வானவர் ஆதியை,Vaanavar aadhiyai - தேவாதி தேவனான எம்பெருமானை
பால் என்கோ,Paal enko - பால் என்பேனோ?
பயன் நான்கு வேதம் என்கோ,Payan naangu vedham enko - (பிரமாணங்களுக்குள்) சிறந்ததான நால்வேதங்களென்பேனோ?
சமயம்,Samayam - வைதிக மதத்தைத் தெரிவிக்கின்ற
நீதி,Needhi - முறைமையையுடைய
நூல் என்கோ,Nool enko - (இதிஹாஸ புராணங்களாகிற) சாஸ்திரங்கள் என்பேனோ?
நுடங்கு,Nudangu - (கேட்டவர்களை) ஈடுபடுத்துகின்ற
கேள்வி,Kelvi - (செவியிற்) கேட்டலையுடைய
இசை என்கோ,Isai enko - ஸங்கீதமென்பேனோ?
இவற்றுள்,Ivatrul - கீழ்ச்சொன்ன வேதம் முதலிய எல்லாவற்றினும்
நல்ல,Nalla - சிறந்த
மேல் என்கோ,Mel enko - மேன்மையுடையது என்பேனோ?
வினையின்,Vinaiyin - (செய்கின்ற) முயற்சியைக் காட்டிலும்
மிக்க,Mikka - மிகப்பலமடங்கு மேம்பட்டு விளைகின்ற
பயன் என்கோ,Payan enko - பலன் என்பேனோ?
கண்ணன் என்கோ,Kannan enko - (உனக்கு நான் இருக்கிறேன் நீ அஞ்சவேண்டா என்று சரமச்லோகத்தினால் அபயமளித்த) ஸ்ரீகிருஷ்ணன் என்பேனோ?
மால் என்கோ,Maal enko - அடியவர் திறந்து வியாமோஹமுடையவனென்பேனோ?
மாயன் என்கோ,Maayan enko - ஆச்சரியமான குணசேஷ்டிதங்களை யுடையவனென்பேனோ?
2936திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமான் ஐச்வரியம் முதலிய புருஷார்த்தங்களை யுடையவனென்பதை இப்பாட்டிலருளிச் செய்கிறார்) 7
வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7
ஒளி மணி வண்ணனை,Oli mani vannanai - பிரகாசமுள்ள மாணிக்கம் போன்ற வடிவையுடைய பெருமானை
வானவர் ஆதி என்கோ,Vaanavar aadhi enko - நித்யஸூரிகட்குத் தலைவன் என்பேனோ?
வானவர் தெய்வமென்கோ?,Vaanavar Deivam enko - அந்த நித்தியஸூரிகளால் கதியென்று பற்றப்படும் தெய்வமென்பேனோ?
வானவர் போகம் என்கோ,Vaanavar pogam enko - அந்த நித்யஸ்ரிகளால் அனுபவிக்கப்படுகின்ற பொருள் என்பேனோ?
வானவர்,Vaanavar - அந்த வானவர்கட்கு
முற்றும் என்கோ,Muttrum enko - (இதுவரையிற் கூறப் படாத) எல்லாமும் என்பேனோ?
ஊனம் இல்,Oonam il - என்றும் அழிதல் இல்லாத
செல்வம் என்கோ,Selvam enko - செல்வமென்பேனோ?
ஊனம் இல் ஸ்வர்க்கம் என்கோ?,Oonam il swarggam enko - ஒருநாளும் நசிக்காத ஸுவர்க்க போகமென்போனோ?
ஊனம் இல் மோக்கம் என்கோ?,Oonam il mokkam enko - விலஷணமான மோக்ஷம் என்பேனோ?
2937திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (இந்தவுலகில் பிரதானரான சிவனையும் பிரமனையும் எம்பெருமான் தான் உடைமையாகப் பற்றிருத்தலை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் அருளிச் செய்கிறார்.) 8
ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8
அளி மகிழ்ந்து,Ali magizhndhu - உயிர்களைப் பாதுகாத்தலை விரும்பி
உலகம் எல்லாம்,Ulagam ellaam - எல்லா உலகங்களையும்
படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து
அவை,Avai - அவ்வுலகங்களெல்லாம்
ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னைத்) துதிக்கும்படி நிற்கின்றவனும்
களி மலர் துன்வன்,Kaliyumalar thunvan - தேனையும் பூவையுமுடைய திருத்துழாய் மாலையை யணிந்தவனும்
எம்மான்,Emmaan - எமக்குத் தலைவனும்
மாயனை,Maayanai - மாயங்களையுடையவனுமாகிய
கண்ணனை,Kannanai - கண்ணபிரானை
ஒளி மணிவண்ணன் என்கோ,Oli mani vannan enko - ப்ரகாசமுள்ள மாணிக்கம்போன்ற வடிவையுடையவனென்பேனோ?
ஒருவன் என்று,Oruvan endru - ஒப்பற்ற கடவுள் என்று
ஏத்த நின்ற,Yetha ninra - (தன்னுடைய அடியவர் யாவரும்) துதிக்கும்படி நின்ற
நளிர்மதி சடையன் என்கோ,Nalirmathi sadaiyan enko - குளிர்ந்த பிறைச்சந்திரனைத் தனது சடைமுடியிலேயுடைய ருத்திரன் என்பேனோ?
நான்முகன் கடவுள் என்கோ,Naanmugan kadavul enko - பிரமதேவனெப்பேனோ?
2938திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (எம்பெருமானுடைய விபூதிகளைத் தனித்தனியே சொல்லிமுடித்தல் முடியாத காரியம்; சுருக்கமாகச் சொல்லில், சேதநப் பொருள்களும் அசேதநப் பொருள்களுமாகிய எல்லாமும் அவனுடைய விபூதிகளேயாம்- என்கிறது இப்பாசுரம்.) 9
கண்ணனை மாயன் தன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9
கண்ணனை,Kannanai - (அடியார்க்கு எளியனான) க்ருஷ்ணனாகத் திருவவதரித்தவனும்
மாயன் தன்னை,Maayan thannai - ஆச்சரியமான குணஞ்செயல்களையுடையவனும்
கடல் கடைந்து,Kadal kadainthu - பாற்கலைக் கடைந்து
அமுதம் கொண்ட,Amudham konda - அமிருதத்தையெடுத்து (தேவர்கட்குக்) கொடுத்த
அண்ணலை,Annalai - பெருமையையுடையவனும்
அச்சுதனை,Achuthanai - (தன்னையடைந்தவரை) ஒருபோதும் நழுவவிடாதவனும்
அனந்தனை,Anandhanai - அளவிடமுடியாத ஸ்வரூப ரூபகுண விபூதிகளையுடையவனும்
அனந்தன் தன் மேல்,Anandhan than mel - திருவனந்தாழ்வான் மீது
நண்ணி,Nanni - பொருந்தி
நன்கு உறைகின்றானை,Nangu uraiginraanai - நன்றாகந் வண்வளர்ந்தருள்யவனும்
ஞாலம்,Gnaalam - பிரபஞ்சத்வத
உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) வயிற்றில் வைத்துப் பாதுகாத்து
உமிழ்ந்த,Umizhndha - (அந்தப் பிரளயம் நீங்கியவுடனேயே) வெளிப்படுத்திய
மாலை,Maalai - வாத்ஸ்ல்ய முடையவனுமான திருமாலை
எண்ணும் ஆறு,Ennum aaru - (இத்தன்மைய னென்று) நினைத்துக் கூறும் வகையை
அறியமாட்டேன்,Ariyamaaten - அறிகின்றேனில்லை
யாவையும்,Yaavaiyum - எல்லாவகைப்பட்ட அசேதனப் பொருள்களும்
யவரும்,Yavarum - எல்லாவகைப்பட்ட சேதனப் பொருள்களும்
தானே,Thaane - அந்த எம்பெருமான் தானேயாவன்
2939திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (உடலுக்கு உள்ளேயிருக்கிற உயிர்கட்கு அந்த உடலைச்சார்ந்த இளமை நரை திரை முதலிய வேறுபாடுகள் தட்டுவதில்லையென்ற எண்ணம் மனதிற்படுமாயின், எம்பெருமான் சேதநா சேதனங்களோடு கலந்திருந்தாலும் அவற்றின் சுகம் துக்கம் முதலிய நிலைமைகள் அவ்வெம்பெருமானுக்குத் தட்டாவென்பதும் நன்கு விளங்குமென்பது இப்பாசுரத்தின் தாற்பரியமாகும்.) 10
யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10
உணர்வின் மூர்த்தி,Unarvin moorthi - ஞானஸ்வரூபமாக இருக்கின்ற எம்பெருமான்
பாவையும்,Paavaiyum - எல்லா அசேதனப்பொருள்களும்
யவரும்,Yavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆய்,Thaan aay - தாயேயாகியும் (சேதநாசேதநங்களில் அந்தராத்மாவாகத்தான் பிரவேசித்திருந்தும்)
அவர் அவர் சமயம் தோறும்,Avar avar samayam thorum - அந்தந்தச் சேதனர்கட்கு உரியனவான (சுகம் துக்கம் முதலிய நிலைமைகளில்)
தோய்வு இலன்,Thoivu ilan - (அவர்களைப் போலத் தனக்கு) யாதொரு கலப்பும் இல்லாதவன்
புலன் ஐந்துக்கும் சொலப்படான்,Pulan aindukkum solapadaan - பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும் விஷயமாகச் சொல்லப்படாதவன்! (ஐம்புலன்களாலறியப்படாதவனென்றபடி.) (ஆன்மாக்களுக்கு உள்ளேயிருந்தும் அவைகளுடைய சுகதுக்கங்கள் எம்பெருமானைச்சேர மாட்டா என்றது எவ்வாறு பொருந்துமெனின்.)
ஆவி சேர் உயிரின் உள்,Aavi ser uyirin ul - உடம்பைப் பொருந்திய ஆத்õமவினுடைய ஸ்வரூபத்தில்
ஆதும்,Aadhum - (சரீரத்தைச் சார்ந்த இளமை முதலிய தன்மைகள்) எதிலும்
ஓர் பற்று இலராத,Or patru ilaraadha - ஒரு ஸம்பந்தமும் இல்லையென்கிற
பாவனை,Paavanai - எண்ணமானது
அதனை கூடில்,Adhanai koodil - அந்த ஆத்மாவுக்குத் தகுமென்று தோன்றினால்
அவனையும்,Avanaiyum - அந்த எம்பெருமானுக்கும் (சேதநர்களின் சுக துக்கங்கள் சிறிதும் சேரா என்கிற இதுவும்)
கூடல் ஆம்,Koodal aam - தகும்.
2940திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (மஹாஜ்ஞாநவான்களான நித்யஸூரிகள் “இருள் தருமா ஞாலமான இந்தப் பிரபஞ்சத்திற பிறந்தும் நம்மைப்போன்ற நன் ஞானத்தைப் பெற்று எம்பெருமானை இவ்வாழ்வார் அநுபவிக்கினறரே!” என்று நம்மாழ்வாரிடத்துத் தாம் கொண்ட பேரன்பினால், ஆழ்வாரருளிச் செய்த இப்பத்துப் பாசுரங்களையும் ஓதினவர்களிடத்திலும் ப்ரீதி கொண்டு ஸர்வேச்வரனையும் விட்டு இவர்களை நெருங்கி ஆதரிப்பர்களென்க.) 11
கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11
வண்டு,Vandu - வண்டுகள்
கூடி,Koodi - மொய்த்து
அறையும்,Araiyum - (மதுபானத்தினாலுண்டான களிப்பினால்) ரீங்காரஞ் செய்கின்ற
தண் தார் கொண்டல் போல் வண்ணன் தன்னை,Than tar kondal pol vannan thannai - காளமேகச்யாமளனைக் குறித்து
மாடு,Madu - சுற்றுப்பக்கங்களில்
அலர்,Alar - மலர்ந்த
பொழில்,Pozhil - சோலைகளையுடைய
குருகூர்,kurukoor - திருக்குருகூரிலவதரித்த
வள்,Val - ஔதாரியத்தையுடைய
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார்
சொன்ன,Sonna - பாடியருளிய
பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayiratthul - ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஒருபத்தும்,Ivai orupathum - இந்தப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்,Vallar - அறியவல்லார்
வீடு இல போகம் எய்தி,Veedu ila pogam yeythi - இடைவிடுதலில்லாத (நிரந்தரமான) பகவதநுபவத்தைப் பெற்று
அமரர்,Amarar - நித்யஸூரிகளால்
மொய்த்து,Moythu - நெருங்கி
விரும்புவர்,Virumpuvar - விரும்பப்படுவர்.
2941திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸ்ரீகஜேந்திராழ்வானை ரக்ஷித்தருளின எம்பெருமானுடைய இந்த ஆச்ரித வாத்ஸல்யத்தை யநுஸந்தித்தும் விகாரமடையாதிருப்பாருடைய பிறப்பு வீண் என்கிறார்.) 1
மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1
தண் கடல் வட்டத்து உள்ளீர்,Tan kadal vattathu ullir - குளிர்ந்த கடல்சூழ்ந்த பூமண்டலத்திலுள்ளவர்களே!
மொய்,Moy - நெருங்கின
மா,Maa - பெரிய
பூ பொழில்,Poo polil - பூஞ்சோலைகளையுடைய
பொய்கை,Poigai - தடாகத்தில்
முதலை,Mudhalai - மதுலையினால்
சிறை பட்டு,Sirai pattu - கவ்வப்பட்டு
கண்ணன் எம்மானை,Kannan emmanai - ஸ்ரீக்ருஷ்ணபரமாத்மாவை
சொல்லி பாடி,Solli paadi - புகழ்ந்து பாடி
எழுந்தும்,Ezhundum - இருந்தவிடித்திலிராமல் எழுந்தும்
நின்ற,Nindra - கரையேறமாட்டாது வருந்தி நின்ற
கை மாவுக்கு,Kai maavukku - கஜேந்திராழ்வானுக்கு
அருள் செய்த,Arul seitha - க்ருபைபண்ணின
கார் முகில் போல் வண்ணன்,Kar mugil pol vannan - காளமேக சியாமளனான
பறந்தும்,Paranthum - பூமியில் கால் பாவாதபடி அலைந்தும்
துள்ளாதார் தம்மால்,Thullaadhaar thammaal - களித்துக் கூத்தாடாதவர்களால்
என் கருமம்,En karumam - என்ன பயன்?
சொல்லீர்,Sollir - சொல்லுங்கள்.
2942திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸகல ஜகத்தினுடையவும் துன்பங்களைப்போக்கிக் காத்தருளுமியல்வினனான திருமாலினது இந்நீர்மையில் ஈடுபடமாட்டாதவர்கள் ஸம்ஸார நிலத்தில் மேன்மேலும் பிறந்து படுவர்களென்கிறாரிப்பாட்டில்.) 2
தண் கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார் வல்வினை மோத மலைந்தே.–3-5-2
தண் கடல் வட்டத்து உள்ளாரை,Tan kadal vattathu ullaarai - குளிர்ந்த கடல் சூழ்ந்த பூமண்டலத்திலுள்ள ஜனங்களை
தடிந்து உண்ணும்,Thadinthu unnum - கொன்று தின்கிறவர்களும்
திண் கழல் கடால்,Thin kazhal kadal - திண்ணிய வீரக்கழல்களையணிந்த காலையுடையவருமான
அசுரர்க்கு,Asurarkku - ஆஸுரப்ரக்ருதிகளுக்கு
தீங்கு இழைக்கும் திருமாலை,Theengu izhaikkum thirumaalai - அநர்த்தங்களை விளைவிக்கின்ற திருமாலை
பண்கள் தலைக்கொள்ள பாடி,Pangal thalaikkolla paadi - இசை மிகும்படி பாடி
பறந்தும்,Paranthum - உயரக்கிளம்பியும்
குனித்து,Kuniththu - ஆடியும்
உழலாதார்,Uzhalaadhaar - எங்கம் திரியாதவர்கள்
மண்கொள் உலகில்,Mankol ulagil - மண்ணுலகத்தில்
வல் வினைமலைந்து மோத,Val vinaimalaindhu moda - கொடிய பாவங்கள் மேலிட்டு நலியும்படியாக
பிறப்பார்,Pirappaar - பிறப்பர்கள் (நித்திய ஸம்ஸாரிகளாய்க் கிடப்பர்களென்றபடி).
2943திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இடையர்கள் இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பலபல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜைப்பொருள்களையும் அமைப்பதைக்கண்ட கண்ணபிரான் அவற்றை இந்திரனுக்கு இடவொட்டாது தடுத்துக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லி, பிறகு தான் அம்மலையில் ஆவேசித்து அவற்றையெல்லாம் தானே யமுது செய்திட, பின்பு பூஜையிழந்த இந்திரன் சீற்றமுற்று ஏழுநாள் விடாமழ பெய்வித்தபோது அம்மலையையே பிடுங்கிக் குடையாகத்தூக்கித்தாங்கி, கோகுலத்தைச்சேர்ந்த ஸகலபிராணிகளையும் அதன்கீழ் அழைத்துக் கொண்டு சிறிதும் அபாயமின்றிக் காப்பாற்றியருளின பெருங்கணத்தில் ஈடுபட்டு விக்ருதராகாதவர்கள் நித்திய ஸம்ஸாரிகளா யொழிவர்களென்கிறார்.) 3
மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3
மலையை,Malaiyai - கோவர்த்தன மலையை
எடுத்து,Eduthu - குடையாகத் தூக்கி
கல் மாரி,Kal maari - கல் மழையை
காத்து,Kaathu - தடுத்து
பசு நிரை தன்னை,Pasu nirai thannai - பசுக்கூட்டத்தை
தொலைவு தவிர்த்த பிரானை,Tholaivu thavirtha piraanai - துன்பந்தவிர்த்த எம்பெருமானை
சொல்லி சொல்லி,Solli solli - பலகாலுஞ் சொல்லி
எப்போதும்,Eppothum - எப்பொழுதும்
நின்று,Nindru - நிலைநின்று
ஆதனன்தோடு தலை தட்ட,Aadhananthodu thalai tatta - தரையிலே தலை படும்படியாக
தடுகுட்டம் ஆய்,Thadukuttam aai - தலைகீழாக
பறவாதார்,Paravaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள்
அலைகொள் நரகத்து,Alaikol naragaththu - துக்கப்படுத்துவதையே இயல்வாகவுடைய நரகத்தில்
அழுந்தி கிடந்து,Azhunthi kidandhu - அழுந்தியிருந்து
உழைக்கின்ற,Uzhaikkindra - வருந்ததகின்ற
வம்பர்,Vambar - வீணராவர்.
2944திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கும்பனென்னும் இடையவர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்ததனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யாவர்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகையும் கண்ணபிரான் ஏழுதிருவுருககொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டனன் என்ற இவ்வரலாற்றை அழகாகப் பாடிக்கொண்டு தலைகீழாகக் கூத்தாடி அடைவுகெட ஆராவாரஞ்செய்து திரியாத பாவிகள் ஸாத்விக கோஷ்டிகளின் நடுவே தாங்களும் சிலராய்ப் பிறந்து திரிவது ஏனோ என்று வெறுத்துரைக்கின்றார்.) 4
வம்பு அவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு கட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே சாது சனங்க ளிடையே?–3-5-4
வம்பு அவிழ் கோதை பொருட்டா,Vambu avizh kodhai poruttaa - நறுமணம் மிக்க பூமாலையணிந்துள்ள நப்பின்னைக்காக
மால் விடை ஏழும் அடர்த்த,Maal vidai ezhum adartha - பெரிய ரிஷபங்களேழையும் வலியக்கினவனும்
செம் பவளம் திரள் வாயன்,Sem pavalam thiral vaayan - சிவந்த பவளம் போன்று திரண்ட அதரத்தையுடையவனுமான
சரீதரன்,Sreedharan - திருமாலினது
தொல் புகழ்,Tol pugazh - நிஜமான புகழை
பாடி,Paadi - வாயாரப்பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடி,Kumpidu nattam ittu aadi - தலைகீழாகக் கூத்தாடி
கோகு உகட்டுண்டு,Kogu ugattundu - அடிடவுகேடு தலையெடுத்து
உழலாதார்,Uzhalaadhaar - ஸம்ப்ரமியாதவர்கள்
சாது சனங்கள் இடையே,Saadhu sanangal idaiye - ஸாத்விக ஜனங்களின் நடுவிலே
தம் பிறப்பால்,Tham pirappaal - ஜனிப்பதனால்
என் பயன்,En payan - என்ன பயனோ!
2945திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகத் தன்னுடைய அஸாதாரண திவ்ய ரூபத்தோடு கூடவே வந்து திருவவதாரம் பண்ணின திருக்குணத்தை அநுஸந்தித்து ஈடுபடாதவர்கள் செய்கிற ஜபம் தபம் முதலியனவெல்லாம் உபயோகமற்றவையென்கிறார்.) 5
சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே?–3-5-5
சாது சனத்தை நலியும்,Saadhu sanaththai naliyum - ஸாத்விகர்களைத் துன்பப்படுத்தின
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
சாதிப்பதற்கு,Saadippadharku - தண்டிக்கும்பொருட்டு
ஆதி அம்சோதி உருவை,Aadhi amsoathi uruvai - நித்தியமாய் அப்ராக்ருததேஜோரூபமான திருவுருவை
அங்கு வைத்து இங்கு பிறந்த,Angu vaiththu ingu pirandha - பரமபதத்திலுள்ளபடியே ஸ்வீகரித்துக்கொண்டு இந்நிலத்தில் வந்து பிறந்தவனும்
வேதம் முதல்வனை,Vedam mudhalvanai - வேதங்களினால் மூலப்பொருளென்று ஓதப்படுபவனுமான எம்பெருமானை.
பாடி,Paadi - வாயாரப்பாடிக்கொண்டு
வீதிகள் தோறும்,Veedhigal thorum - எல்லா வீதிகளிலும்
துள்ளாதார்,Thullaadhaar - களித்துத்திரியாதவர்கள்
ஓதி உணர்ந்தவர் முன்னா,Oadhi unarnthavar munnaa - சாஸ்திரங்கள் ஓதி நன்கறிந்த மாஞானிகள் முதற்கொண்டு (எப்படிப்பட்ட வித்வான்களாயிருந்தாலும்)
என் சவிப்பார்,En savipaar - (அவர்கள்) ஜபம் செய்வது என்னோ?
மனிசரே,Manisare - (அவர்கள்) மநுஷ்ய கோடியிற் சேர்ந்தவர்களோ?
2946திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (மநுஷ்யாதி ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளின எம்பெருமானுடைய பரமபோக்யதையை அநுஸந்தித்துப் பரவசராயிருக்குமவர்கள் தாம் எல்லா அறிவின் பலனும் கைவந்திருக்குவமர்களென்கிறாரிப்பாட்டில்.) 6
மனிசரும் மற்றும் முற்றும் ஆய் மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத் தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்க ட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார் முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6
மனிசரும்,Manisarum - மநுஷ்ய யோநியாயும்
மற்றும்,Matrum - தேவயோநியாயும்
முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகல யோநியாயும்
மாயம் பிறவி பிறந்த,Maayam piravi pirandha - ஆச்சரியமான பிறவிகளில் பறிந்தருளின
தனியன்,Thaniyan - ஒப்பற்றவாய்
பிறப்பு இலிதன்னை,Pirappu ilithannai - கருமமடியான பிறப்பு இல்லாதவனாய்
தடம் கடல் சேர்ந்த பிரானை,Thadam kadal serndha praanai - விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளும் பெருமானாய்
கனியை,Kaniyai - கனிபோன்றவனாய்
இன் கரும்பின் சாற்றை,In karumbin saatrai - மதுரமான கருப்பஞ்சாறு போன்றவனாய்
கட்டியை,Kattiyai - கற்கண்டுபோன்றவனாய்
தேனை,Thenai - தேன்போன்றவனாய்
அமுதை,Amudhai - அமிருதம் போன்றவனான எம்பெருமானை
முனிவு இன்றி,Munivu indri - வெறுப்பு இல்லாமல் மிக்க உவப்புடனே
ஏத்தி,Yaethi - துதித்து
குனிப்பார்,Kunipaar - நர்த்தனம் செய்பவர்கள்
முழுது உணர் நீர்மையினால்,Muzhudhu unar neermaiyinaal - ஸர்வஜ்ஞர்களெனக் கொண்டாடத் தக்கவர்கள்
2947திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (அடியவர்களான பாண்டவர்களின் விரோதிகளைப் போக்கின எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுஸந்தித்து ஈடுபடமாட்டார்கள் *பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்யவே பிறந்தவர்களென்கிறாரிப்பாட்டில்.) 7
நீர்மை இல் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார் உத்தமர்கட்கு என் செய்வாரே!–3-5-7
நீர்மை இல்,Neermai il - ஈர நெஞ்சு இல்லாதவர்களான
நூற்றுவர்,Nootruvar - துரியோதனன் முதலிய நூறு பேரும்
வீய,Vee - மாளும்படியாக,
ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்“கு
அருள் செய்து நின்று,Arul seithu nindru - கிருபை பண்ணி
பார்மல்குசேனை அவிந்த,Paar malgusenai avindha - பூபாரமாயிருந்த சேனைகளைத் தொலைத்தருளின
பரம் சுடரை,Param sudarai - பரஞ்சோதியான பெருமானை
நினைந்து,Ninaindhu - தியானம் பண்ணி
ஆடி,Aadi - கூத்தாடி
நீல் மல்கு கண்ணினர் ஆகி,Neel malgu kanninar aagi - ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராகி
நெஞ்சம் குழைந்து நையாதே,Nenjam kuzhaindhu naiyaadhe - நெஞ்சுருகி நையாமல்
ஊன் மல்கி,Oon malgi - உடல் தடித்த
மோடு பருப்பார்,Modu paruppaar - வயிறு பருப்பவர்கள்
உத்தமர்கட்கு,Utthamar kadku - பாகவதோத்தமர்களுக்கு
என் செய்வார்,En seivaar - யாது செய்வார்.
2948திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம்.) 8
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8
வார் புனல் அம் தண் அருவி,Vaar punal am than aruvi - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான
வட திருவேங்கடத்து,Vada thiruvengadaththu - வடக்குத் திருமலையில் நிற்கிற
எந்தை,Endhai - எம்பெருமானுடைய
பல பேர்,Pala per - பல திருநாமங்களையும்
சொல்லி பிதற்றி,Solli pidatri - வாய்வந்தபடி சொல்லி
பித்தர் என்றே பிறர் கூற,Pitthar endre pirar kooru - ‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு
ஊர் பல புக்கும்,Oor pala pukkum - பலவூர்களிலே புகுந்தும்
புகாதும்,Pugaadhum - அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி)
உலோகர் சிரிக்க,Ulogar sirikka - உலகர்கள் சிரிக்கும்படியாக
ஆடிநின்று,Aadininru - நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து
ஆர்வம் பெருகி,Aarvam perugi - ஆசை விஞ்சி
குனிப்பர்,Kunippar - கோலாஹலஞ் செய்பவர்கள்
அமரர்,Amarar - நித்யஸூரிகளாலே
தொழப்படுவார்,Thozhappaduvaar - வணங்கப்படுவர்கள்.
2949திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (கைவல்ய புருஷார்த்தத்தில் ஊன்றியிருப்பவர்கள் தவிர மற்றையோரெல்லோரும் ப்ரேம பரவசராய் எம்பெருமானுடைய குணாநுபவம் பண்ணிக் களித்துக் கூத்தாடுவதே செய்யத்தக்கது என்கிறாரிப்பாட்டில்- என்கிறவிதுவே திருக்குருகைப்பிரான் பின்னான் முதலான ஆசிரியர்களின் திருவுள்ளம்.) 9
அமரர் தொழப் படுவானை அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள் ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி அலற்றுவதே கருமமே .–3-5-9
அமரர்,Amarar - நித்யஸூரிகளினால்
தொழப் படுவானை,Thozhap paduvaanai - ஸேவிக்கப்படுகிறவனும்
அனைத்து உலகுக்கும் பிரானை,Anaithu ulagukkum piraanai - ஸகல லோகங்களுக்கும் சேஷியுமான ஸர்வேச்வரனை
மனத்தினுள் அமர,Manathinul amar - நெஞ்சிலே ஊன்றி யிருக்கும்படி
யோக புணர்ந்து,Yoga punarndhu - யோகாப்யாஸத்தைப் பண்ணி
அவன் தன்னோடு ஒன்றாக அமர,Avan thannodu ondraaga amar - (முக்தி தசையில்) அவனோடு இம்வாத்ம வஸ்து ஸமானம் என்னும்படியாக
துணிய வல்லார்கள் ஒழிய,Thuniya vallaarkal ozhiya - கருதமவர்களான கைவல்ய நிஷ்டர்களைத் தவிர
அல்லாதவர் எல்லாம்,Allaadhavar ellaam - மற்ற பேர்களெல்லாரும்
அமர,Amarar - அநந்யப்ரயோஜனராய்க் கொண்டு
நினைந்து எழுந்து ஆடி,Ninaindhthu ezhundhu aadi - (அவனை) நெஞ்சிலே யநுஸந்தித்து எங்கும் பரந்து கூத்தாடி
அலற்றுவதே கருமம்,Alattruvadhe karumam - (துதிகளை) வாய் பிதற்றுவதே செய்ய வுரியது.
2950திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (பகவத்குணங்களைக் கேட்டால் விகாரப்படாமலிருக்கு மிருப்பாகிற அவிவேகத்தைத் தவிர்த்து எல்லீரும் அவனது திருக்குணங்களை யநுஸந்தித்துப் பரவசமாய் லஜ்ஜாபிமானங்களைவிட்டு அவனை ஏத்துங்கோ ளென்கிறாரிப்பாட்டில்) 10
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண் மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.–3-5-10
கருமமும்,Karumamum - ஸாதந ரூபமான கர்மங்களும்
கரும பலனும்,Karuma palanum - அக்கருமங்களால் ஸாதிக்கப்படும் பலன்களும்
ஆகிய,Aagiya - தானிட்ட வழக்காம்படியுள்ள
காரணன் தன்னை,Kaaranan thannai - ஜகத்காரண பூதனும்
திரு மணிவண்ணனை,Thiru manivanai - அழகிய மணிபோன்ற வடிவையுடையவனும்
செம் கண்,Sem kan - செந்தாமரøக் கண்களையுடையனும்
மாலினை,Maalinai - ஆச்ரித வாத்ஸல்யமே வடிவெடுத்தவனும்
தேவபிரானை,Devapiranai - தேவர்களுக்குப் பிரானுமான எம்பெருமானை
ஒருமை,Orumai - உபாய உபேயங்களில் பேதம் பிறவாதபடி ஒருமைப்பட
மனத்தினுள் வைத்து,Manathinulai vaithu - நெஞ்சிலே வைத்து
உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - மனமுருகி
பெருமையும் நாணும் தவிர்த்து,Perumaiyum naanum thavirthu - அஹங்காரமும் வெட்கமும் இன்றிக்கே
எழுந்து ஆடி,Ezhundhu aadi - கிளம்பிக் கூத்தாடி
பேதைமை தீர்ந்து,Pethaimai theerndhu - அவிவேகமுமொழிந்து
பிதற்றுமின்,Pithattrumin - (அவன் குணங்களை) வாய்வந்தபடி சொல்லுங்கள்.
2951திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு பகவத்குணாநுஸந்தானத்தினால் ஒரு விகாரம் பிறவாமையாகிற மஹா பாபத்தை இதுதானே போக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
தீர்ந்த அடியவர் தம்மைத் திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண் வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும் அருவினை நீறு செய்யுமே.–3-5-11
தீர்ந்த,Theerndha - தனக்கே அற்றுத் தீர்ந்த
அடியவர்,Adiyavar - விரோதிகள் அற ஸ்வீகரித்து
பணி கொள்ள வல்ல,Pani kolla vala - (அவர்கள் மூலமாக) நித்திய கைங்கரியத்தைக் கொள்ள வல்லவனும்
ஆர்ந்த புகழ்,Aarndha pugazh - நிறைந்த புகழுடையவனும்
அச்சுதனை,Acchudhanai - அச்யுத னென்னும் திருநாமமுடையவனும்
அமரர் பிரானை,Amarar piranaai - தேவர்களுக்கு ப்ரபுவுமான
எம்மானை,Emmaanai - எம்பெருமாளை
வாய்ந்த,Vaaindha - கிட்டின
வளம் வயல் சூழ் தண்வளம்,Valam vayal sooal thanvalam - வளம் வயல் சூழ் தண்வளம்
குருகூர் சடகோபன்,kurukoor Sadagopan - திருக்குருகூரிலவதரித்த நம்மாழ்வார்
நேர்ந்த,Neerndha - அருளிச் செய்த
ஓர் ஆயிரத்து,Oar aayiraththu - ஆயிரத்துள்
இ பத்து,I pattu - இத்திருவாய்மொழி
அரு வினை,Aru vinai - போக்கவரிய பாவங்களை
நீறு செய்யும்,Neeru seyyum - பஸ்மமாக்கிவிடும்.
2952திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (புண்டரீகாக்ஷத்வம் ஜகத் காரணத்வம் முதலிய குணங்களையுடைய எம்பெருமானே ஆச்ரயணீய னென்கிறார்.) 1
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1
செய்யதாமரை கண்ணன் ஆய் உலகு ஏழும்,Seyyaathamarai kannan aai ulagu ezhum - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - ஸகலலோகங்களையும்
உண்ட அவன்,Unda avan - (ஒரு சமயத்தில்) திருவயிற்றிலே வைத்து நோக்கினவனாய்
வையம்,Vaiyam - பூமியும்
வானம்,Vaanam - விண்ணுலகங்களும்
மனிசர் தெய்வம்,Manisar deivam - (முறையே அவற்றில் வாழ்கின்ற) மனிதரும் தேவதைகளும்
மற்றும்,Matrum - மற்ற விலங்குகளும்
மற்றும்,Matrum - மற்ற ஸ்தாவரங்களும்
மற்றும்,Matrum - மற்றுமுள்ள பஞ்ச பூதங்களும்
முற்றும் ஆய்,Mutrum aai - மற்றுமுள்ள ஸகலமும் (காரணதசையில்) தன்னுள்ளே அடங்கப்பெற்றவனாய்
செய்ய சூழ் சுடர் ஞான ஆய்,Seyya oozh sudar nyana aai - சிறந்ததும் வியாபகமும் ஒளிமயமுமான ஸங்கல்பஜஙஞானத்தை யுடையனாய்
வெளிப்பட்டு,Velippattu - ஸ்ருஷ்டியை உத்தேசித்துத் தோற்றி
இவை,Ivai - முன்சொன்ன இவை யெல்லாவற்றையும்
படைத்தான்,Padaitthaan - ஸ்ருஷ்டித்தவனாய்
பின்னும்,Pinnum - அதற்குமேலும்
மொய் கொள் சோதியோடு ஆயினாள்,Moy kol sothiyodua aainal - செறிந்த தேஜோமயமான பரமபதத்தை நிலயமாகவுடையனாயிருக்கின்ற எம்பெருமான்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தி கண்டீர்,Oru moovar aagiya moorthi kandir - ப்ரஹம் விஷ்ணு சிவரூபியாய் நின்ற ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களை நிர்வஹிப்பவன் காண்மின்
2953திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் நிரூபித்த பரத்வத்தைக் கேட்டவர்கள் ‘இப்படிப்பட்ட பராத்பரனானவனை நாங்கள் ஆச்ரயிக்க எங்ஙனே கூடும்? என்று சங்கிக்க, அப்படிப் பட்டவன் தானே உங்களோடு ஸஜாதீயனாய் சக்ரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்தான் என்ற அவதார வெளிமையை இப்பாட்டில் உணர்த்துகின்றார்.) 2
மூவர் ஆகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத் தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை எரி எழச்செற்ற வில்லியைப்
பாவநாசனைப் பங்கயத் தடங்கண்ணனைப் பரவுமினோ.–3-6-2
மூவர் ஆகிய மூர்த்தியை,Moovar aagiya moorthiyai - மூவரும் தானே என்னலாம் படி யுள்ளவனாய்
முதல் மூவர்க்கும்,Mudhal moovarkkum - முதல்வராகச் சொல்லப்படுகின்ற அந்த இந்திரன் பிரமனீசன் என்ற மூவர்க்கும்
முதல்வன் தன்னை,Mudhalvan thannai - காரண பூதனாய்
சாவம் உள்ளன நீக்குவாளை,Saavam ullana neekkuvaalai - (அவர்களுக்கு நேரும்) துன்பங்களை யெல்லாம் போக்குபவனாய்
தட கடல்,Thada kadal - விசாலமான திருப்பாற்கடலிலே
கிடந்தான் தன்னை,Kidanthaan thannai - கண்வளர்ந்தருள்பவனாய்
தேவதேவனை,Devadhevanai - தேவாதி தேவனாய்
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்கையில்
எரி எழ,Eri ezha - அக்னி தலையெடுக்கும்படி
செற்ற,Setra - பகைவரை அழித்த
வில்லியை,Villiyai - சார்ங்கத்தை யுடையவனாய்
பாவநாசனை,Paavanasanai - பரம பாவநனாய்
பங்கயம் தட கண்ணனை,Pangayam thada kannanai - தாமரை போன்ற பரந்த திருக்கண்களை யுடையவனான எம்பெருமானை
பரவுமின்,Paravumin - புகழ்ந்து பாடுங்கள்.
2954திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (கீழ்பாசுரத்தில் ப்ரஸ்தாவித்த இராமபிரானிற்காட்டிலும் எளியனாய் வந்து திருவவதாரம் பண்ணி யருளின கண்ண பிரானை ஆச்ரயிக்கப் பாருங்களென்கிறார்.) 3
பரவி வானவர் ஏத்த நின்ற பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணிவண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அமரும் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3
வானவர்,Vaanavar - தேவர்கள்
பரவி ஏத்த நின்ற,Paravi yetha nindra - வாயாரத் துதிக்கும்படி அமைந்த
பரனை,Paranaai - பராத்பரனாய்
பரம் சோதியை,Param sothiyai - மேலான ஒளியுருவனாய்
குரவை கோத்த,Kuravai kotha - (கோபிமார்களோடு) ராஸக்ரீடை செய்த
குழகனை,Kulzaganai - ரஸிகனாய்
மணிவண்ணனை,Manivannanai - நீலமணிவண்ணனை
குடக்கூத்தனை,Kudakkoothanai - குடக்வத்தாடினவனாய்
அரவம் ஏறி,Aravam aeri - சேஷசயனத்தின் மீதேறி
அலை கடல்,Alai kadal - அலையெறிகின்ற திருப்பாற்கடலில்
அமரும் துயில் கொண்ட,Amarum thuyil konda - பொருத்தமான நித்திரையைக் கொண்டவனான
அண்ணலை,Annalai - பெருமானை
நல் இரவும் பகலும்,Nal iravum pagalum - நல்ல இரவும் பகலும்
விடாது,Vidaathu - இடையறாமல்
என்றும் ஏத்துதல்,Endrum yaethudhal - எந்நாறம் தோத்திரம் பண்ணுதலில்
மனம் வைம்மின்,Manam vaimmin - சிந்தை செலுத்துங்கள்.
2955திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மிகவும் அபிமாந யுக்தர்களான பிரமன் சிவன் முதலானரும் தடையின்றியே வந்து பணியலாம்படி யிருக்கிற எம்பெருமானுடைய சீலாதிசயத்தைப் பேசுகிறார்) 4
வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க; நாடொறும்
வானவர் தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம் சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4
நும் மனத்து,Num manaththu - உங்கள் நெஞ்சிலே
வைம்மின் என்று,Vaimmin endru - வையுங்கள் என்று
யான் உரைக்கின்ற,Yaan uraikindra - என்னால் சொல்லப்படுகின்ற
மாயவன்,Maayavan - மாயோனுடைய
சீர்மையை,Seermaiyai - சீல குணத்தை
எம்மனோர்கள்,Emmanorkal - என்னைப் போன்றவர்கள்
உரைப்பது என்,Uraippadhu en - சொல்லுவது என்னோ?
அது நிற்க,Adhu nirka - அது கிடக்க:
வானவர் தம்மை ஆளுமவனும்,Vaanavar thamai aalumavanum - தேவர்களை ஆள்பவனான இந்திரனும்
நான்முகனும்,Naanmuganum - பிரமனும்
சடை முடி அண்ணலும்,Sadai mudi annalum - ஜடாதரக் கடவுளான சிவனும்
செம்மையால்,Semmaiyaal - முறைமை தவறாது
பாத பங்கயம்,Padha pankayam - திருவடித் தாமரைகளை
நாள்தொறும்,Naaldhorum - எப்போதும்
சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து
ஏத்தி,Yaethi - துதித்து
திரிவர்,Thirivar - இதுவே காரியமாக இருப்பர்.
2956திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய விபூதிவிஸ்தாரங்களை அநுபவித்துப்பேசுகிறார்.) 5
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5
கரிய மேனி,Kariya meni - சாமளமான வடிவை யுடையனாய்
செய்ய தாமரை கண்ணன்,Seyya thamarai kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை,Vinnor irai - நித்யஸூரி நாதனாய்
சுரியும் பல் கரு குஞ்சி,Suriyum pal karu kunji - சுருண்டு அலகலகாய்க் கருமையாகிறகுழற் கற்றையையுடையனாய்
சுடர் முடி,Sudar mudi - ஒளி பொருந்திய திருமுடியையுடையனாய்
எங்கள் அண்ணல்,Engal annal - எமக்கு ஸ்வாமியான
கண்ணன் தோற்றம் திரியும் காற்றோடு,Kannan thotram thiriyum kaatrodu - கண்ணபிரானடைய விளக்கமானது, இடையறாது உலாவுகின்ற வாயு வென்ன
அகல்,Agal - விசாலமான
விசும்பு,Visumbu - ஆகாசமென்ன
திணிந்த,Thinindha - கடினமான
மண்,Mann - பூமியென்ன
கிடந்த,Kidantha - கரைகடவாமல் கிடந்த
கடல்,Kadal - ஸமுத்ரமென்ன
எரியும்,Eriyum - ஜ்வலிக்கிற
தீயோடு,Theeyodu - அக்னி யென்ன
இரு சுடர்,Iru sudar - சந்திர ஸூரியர்களென்ன
தெய்வம்,Deivam - மற்றுள்ள தெய்வங்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள மானிடர்களென்ன
மற்றும்,Matrum - மற்றுள்ள திர்யக் ஸ்தாவரம் முதலியவைகளென்ன (ஆகிய)
முற்றும் ஆய்,Mutrum aai - ஸகலஸ்வரூப மாயிருக்கும்.
2957திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆச்ரித விஷயத்தில் எல்லை கடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார்) 6
தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6
தோற்றம் கேடு அவை,Thotram kedu avai - ஜனன மரணங்களாகிற அவைகள்
இல்லவன்,Illavan - இல்லாதவனும்
உடையான்,Udaiaan - அவற்றையுடையவனும்
அவன்,Avan - ப்ரமாண ப்ரஸித்தனும்,
ஒரு மூர்த்தி ஆய்,Oru moorthi aai - ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன்,Seetrathodu arul petravan - சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்லாதன்
அடி கீழ் புக நின்ற,Adi keezh puga nindra - தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும்,
செம் கண் மால்,Sem kan maal - சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற,Naatram thotram suvai oli ural aagi nindra - கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும்
எம் வானவர் ஏற்றையே அன்றி,Em vaanavar yetriyai andri - தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லாக் காலத்திலும்
மற்று ஒருவரை,Matru oruvarai - வேறொருவரை
யான் இலேன்,Yaan ilein - நான் புகலாகவுடையேனல் லேன்
2958திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுலபனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்து போம் என்கிறார்.) 7
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லா நிலைமைகளிலும்
எனது ஆவிக்கு,Enadhu aavikku - என் ஆத்மாவுக்கு
இன் அமுதத்தினை,In amudhathinai - இனிய அங்குதம் போன்வனும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - என்னுடைய அருமையான உயிரோடே
கெழுமிய,Kezhumiya - கலந்து நிற்கிற
கதிர் சோதியை,Kathir sothiyai - பரஞ்சோதியுருவனும்
மணி வண்ணனை,Mani vannanai - நீலமணி நிறத்தனும்
குடக் கூத்தனை,Kudak koothanai - குடக் கூத்தாடினவனும்
விழுமிய அமரர்,Vizhumiya amarar - சிறந்த தேவர்களாலும்
முனிவர்,Munivar - முனிவர்களாலும்
விழுங்கும்,Vizhungum - அநுபவிக்கப்படுகிற
கன்கல் கனியினை,Kankal kaniyinai - கன்னற்கனி போன்றவனுமான எம்பெருமானை
தூய மனத்தர் ஆய்,Thooaya manathar aai - அழுக்கற்ற மனமுடையீர்களாய்
தொழுமின்,Thozhumin - தொழுங்கள் (தொழுதால்)
துயரங்கள்,Thuyarangal - துன்பங்களானவை
இறையும்,Iraiyum - சிறிதேனும்
நில்லா,Nillaa - நிற்கமாட்டா.
2959திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (மற்றுள்ளாரும் தம்முடைய பக்ஷத்தை யறிந்து ருசி பண்ணுகைக்காக ‘நான் சக்ரவர்த்தி திருமகனை யல்லது மற்றொருவரை ஆபத் தனமாகப் பற்றி யிரேன்’ என்று தமது உறுதியை வெளியிடுகிறார்.) 8
துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தன்னை
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8
துயரமே தரு,Thuyarame tharu - பரிதாபத்தையே தாக்கடவதான
துன்பம் இன்பம் ஆய்,Thunbam inbam aai - புண்யாபாபரூப கருமங்களுக்கு நியாயமகான்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவற்றுக்குத்தான் வசப்படாதவனாய்
உயர நின்றது ஓர் சோதி ஆய்,Uyara nindradhu or sothi aai - உயர்ந்த நிலமாகிய பரமபதந்தனில் லெழுந்தருளி யிருக்கின்ற விலக்ஷண தேஜோமய விக்ரஹ யுக்தனாய்
உலகு ஏழும்,Ulagu ezhum - எல்லா உலகங்களையும்
உண்டு உமிழ்ந்தான் தன்னை,Undu umizhndhaan thannai - (பிரளயத்தில்) உண்டு (மீண்டும்) வெளிப்படுத்தி ரக்ஷிப்பவனாய்
அயர வாங்கும்,Ayara vaangum - மோஹிக்கும்படி உயிரை அபஹரிக்கின்ற
நமன் தமர்க்கு,Naman thamarkku - யமபடர்களுக்கு
அரு நஞ்சினை,Aru nanjinai - மீட்கமுடியாத விஷமாய்
அச்சுதன் தன்னை,Acchuthan thannai - (தன்னைப் பணிந்தாரை) நழுவ விடாதவனாய்
தயரதற்கு மகன் தன்னை அன்றி,Thayaratharku magan thannai andri - சக்ரவர்த்தி திருமகனான எம்பெருமானை வல்லது
மற்று,Matru - மற்றொரு தெய்வத்தை
தஞ்சம் ஆக இலேன்,Thanjam aaga ilein - சரணமாகவுடையேனல்லேன்.
2960திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் ஸ்ரீவைகுண்டத்தி லெழுந்தருளியிருக்குமிருப்பு எங்களுக்கு உபயோகப்படுவதன்று; ராம கிருஷ்ணாதி அவதாரங்கள் பண்ணின காலத்தில் நாங்கள் அணுகியிருந்து வாழப்பெற்றிலோம்; ஆனபின்பு எங்ஙனே அவனைக் கண்டு ஆச்ரயிக்கும்படி?’ என்று ஸம்ஸாரிகள் வினவுவதாகக் கொண்டு, அவர்களுக்கு உத்தரமுரைக்கிறார்; நீங்கள் ஏதேனுமொருபடி உகந்தருளப்பண்ணி ஆச்ரயிப்பது; அத்திருமேனியையே அப்ராக்ருத திவ்யஸம்ஸ்தானமாக விரும்பியருளக் குறையில்லை யென்கிறார். இப்பதிகத்திற்கு இப்பாசுரமே உயிராயிருக்கும். இப்பாட்டின் பிரமேயத்திற்கு அவதாரிகை போன்றனவே கீழ்ப்பாசுரங்கள்.) 9
தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9
உலகத்து உள்ளீர்கள்,Ulagathu ullirgal - உலகத்தவர்களே!
தஞ்சம் ஆகிய,Thanjam aagiya - ரக்ஷிக்குந் தன்மை பொருந்திய தந்தையும்
தந்தையொடு,Thandaiyodu - தந்தையும்
தாய்தானும் ஆய்,Thaithanum aai - தாயுமாய்
அவை அல்லன் ஆய்,Avai allan aai - அவ்வளவோடும் நில்லாத ஸகலவித பந்துவுமாய்
எஞ்சல் இல்,Enjal il - (பகவதநுபவத்தில்) குறைதல் இல்லாத
அமரர் குலம்,Amarar kulam - நித்யஸூரிகளின் திரளுக்கு
முதல்,Mudhal - தலைவனாய்
மூவர் தம் உள்ளும்,Moovar tham ullamum - மும்மூர்த்திகளுக்கும்
ஆதியை,Aadhiyai - முதல்வனான எம்பெருமானைக் குறித்து
நீர்,Neer - நீங்கள்
அஞ்சி,Anji - மேன்மை கண்டு கலங்கி
அவன் இவன் என்று,Avan ivan endru - எல்லை கடந்த மஹிமையையுடைய அந்த எம்பெருமான் வேறு, இந்த அர்ச்சாரூபாயான எம்பெருமான் வேறு என்று கொண்டு
கூழேல்மின்,Koolzelmin - கலங்கியிருக்க வேண்டா;
நெஞ்சினால்,Nenjinal - நெஞ்சாலே
நினைப்பான் யவன்,Ninaippan yavan - நினைந்து உகந்தருள்விக்கப்பட்டவன் யாவன்
அவன்,Avan - அவனே
நீள் கடல் வண்ணன் ஆகும்,Neel kadal vannan aagum - விசாலமான கடல்போன்ற நிறத்தையுடைய ஸர்வேச்வரனாவன்
2961திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (ஆழ்வார் தாம் உபதேசிக்கத் தொடங்கின ஸௌலப்ய காஷ்டையை அர்ச்சாவதார பர்யந்தமாக அருளிச் செய்து முடித்து, தாம் அகப்பட்ட துறையான க்ருஷ்ணாவதாரத்தை அநுபவிக்க ஆசைப்படுகிறாரிப்பாட்டில். இவ்வாழ்வார் அச்ச்சாவதார ஸௌலப்ய மறிந்திருக்கச் செய்தேயும் க்ருஷ்ணாவதாரத்திலே எத்திறம்! என்று மோஹிக்கு மியல்வினராதலால் அவ்வவதாரந்தன்னிலேயே இப்போதிவர் ஈடுபட்டுப் பேசுவதும் பொருந்தும்.) 10
கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10
கடல் வண்ணன்,Kadal vannan - கடல் போன்ற நிறத்தையுடையவனாயும்
கண்ணன்,Kannan - கண்ணபிரானாயும்
விண்ணவர்,Vinnavar - பரமபத்திலுள்ளவர்கட்கு
கரு மாணிக்கம்,Karu manikkam - நீலமணிபோலே போக்யனாயும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - எனது அருமையான உயிராயும்
படம் அரவு இன் அணை கிடந்த,Padam aravu in anai kidandha - படங்களையுடைய ஆதி சேஷனாகிற இனிய படுக்கையில் சயனித்த
பரம் சடர்,Param sudar - பரஞ்சோதியாயும்
பண்டு,Pandu - முன்பொருகால்
அட,Ada - கொல்வதற்காக
வரும்,Varum - திரண்டு வருகின்ற
நூற்றவர் படை,Nootruvar padai - துரியோதனாதிகளின் சேனை
மங்க,Manka - தொலையும்படியாக
ஐவர்கட்கு ஆகி,Aivarkadku aagi - பாண்டவ பக்ஷபாதியாகி
வெம் சமத்து,Vem samathu - கொடிய பாரத யுத்தத்தில்
அன்று,Andru - பகைவர் மேலிட்டு வந்த அந்நாளில்
தேர் கடவிய,Ther kadaviya - (அர்ஜுநனுக்குத்) தேர் செலுத்திய
பெருமான்,Perumaan - பெருமானாயுமிருக்கின்ற எம்பெருமானுடைய
கனை,Kanai - (வீரத்தண்டையினால்) ஒலிக்கின்ற
கழல்,Kazhal - திருவடிகளை
கண்கள் காண்பது,Kangal kaanbadhu - (என்) கண்கள் ஸேவிக்கப் பெறுவது
என்று கொல்,Endru kol - என்றைக்கோ!.
2962திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (இத்திருவாய்மொழியை ஓத, பழுதில்லாத பக்தியுடையராகை திண்ணம்; ஆனபின்பு இத்திருவாய்மொழியை ஓதுங்கள் என்கிறார்) 11
கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11
கண்கள் காண்டற்கு,Kangal kaandarku - கண்களால் பார்ப்பதற்கு
அரியன் ஆய்,Ariyan aai - அருமைப்பட்டவனாகி
கருத்துக்கு,Karuthukku - தியானத்திற்கு
நன்றும் எளியன் ஆய்,Nandrum eliyan aai - மிகவும் சுலபனாய்
மண் கொள் ஞாலத்து,Man kol gnaalathu - பூமண்டலத்திலுள்ள
உயிர்க்கு எல்லாம்,Uyirkku ellaam - பிராணிகளுக்கெல்லாம்
அருள் செய்யும்,Arul seyyum - (அர்ச்சாவதார முகத்தாலே) க்ருபைபண்ணுகிற
வானவர் ஈசனை,Vaanavar esanai - தேவாதிதேவனைக் குறித்து,
பண் கொள் சோலை,Pan kol solai - (வண்டு முதலியவற்றின்) இசைமிகுந்த சோலைகளையுடைய
வழுதி நாடன்,Vazhudi naadan - திருவழுதி நாட்டை யுடையராய்
குருகை கோன்,Kurugai kon - திருநகரிக்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
பண் கொள் ஆயிரத்து,Pan kol aayirathu - ராகப்ரதாநமான இவ்வாயிரத்தினுள்ளும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
பத்தார் ஆக கூடும்,Paththaar aaga koodum - பக்தியை யுடையவராகக் கூடும்:
பயிலுமின்,Payilumin - (ஆதலால் இப்பதிகத்தை) அப்யஸியுங்கோள்.
2963திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய வடிவழகிலும் திருக்கல்யாண குணங்களிலும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆரேனுமாகிலும் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்) 1
பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1
பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,Payilum sudar oli moorthiyai - செறிந்த சுடர்ச் சோதி யுருவனாய்
பங்கயம் கண்ணனை,Pangayam kannanai - தாமரை போன்ற திருக்கண்களையுடையனாய்
பயில இனிய,Payila iniya - பழகப் பழகப் பரம போக்யனாய்
நம் பால் கடல் சேர்ந்த பரமனை,Nam paal kadal serndha paramanai - நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருளும் பரம புருஷனான எம்பெருமானை
பயிலும் திரு உடையார்,Payilum thiru udaiyaar - நிரந்தராநுபவம் பண்ணுகையாகிற செல்வமுடையவர்கள்
யவர் ஏனும்,Yavar enum - எது பிறப்பு ஏதியல்வாக நின்றவரானாலும்
அவர்,Avar - அவர்களே
பயிலும் பிறப்பிடை தோறும்,Payilum pirappidai thorum - மேன்மேலும் நேர்கின்ற பிறவிகள் தோறும்
எம்மை,Emmai - நம்மை
ஆளும்,Aalum - அடிமைகொள்ளவில்லை
பரமர் கண்டீர்,Paramar kandir - மஹான்களாவர்.
2964திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய திவ்யாவயவ ஸௌந்தர்யத்தால் வசீகரிக்கப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் எனக்கு ஸ்வாமியான ஸ்வாமிகளென்கிறார்.) 2
ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2
ஆளும் பரமனை,Aalum paramanai - ஆள்கின்ற பரம புருஷனாயும்
கண்ணனை,Kannanai - ஸ்ரீக்ருஷ்ணனாயும்
ஆழி பிரான் தன்னை,Aazi praan thannai - திருவாழியாழ்வானை யுடைய உபகாரகனாயும்
ஓர் நான்கு தோளும் உடை,Or naangu tholum udai - ஒப்பற்ற நான்க புஜங்களையுடையவனாயும்
தூ மணி வண்ணன்,Thoomani vannan - பரிசுத்தமான நீலமணிபோன்ற நிறத்தை யுடையவனாயுமிருக்கின்ற
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
தாளும் தடக்கையும் கூப்பி,Thaalum thadakkaiyum koopi - கால்களையும் கைகளையும் கூப்பி
பணியும் அவர்,Paniyum avar - நமஸ்கரிப்பவர்கள்
பிறப்பிடை தோறு,Pirappidai thoaru - ஜன்மந்தோறும்
நாள் தோறும்,Naal thoarum - தினந்தோறும்
எம்மை,Emmai - எங்களை
ஆள் உடை நாதர் கண்டீர்,Aal udai naadhar kandir - ஆட்கொள்ளும் அடிகளாவர்.
2965திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (எம்பெருமானுடைய தோளும் தோள்மாலையுமான அழகிலே தோற்றவர்களான பாகவதர்களுக்கும் பக்தராயுள்ளவர்கள் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்.) 3
நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3
நாதனை,Naadhanai - ஸ்வாமியாய்
ஞாலமும் வானமும் ஏத்தும்,Gnaalamum vaanamum yaethum - உபய விபூதியிலுள்ளாரும் ஏத்துதற்குரியவனாய்
நறுந்துழாய்ப் போதனை,Narunthuzhaip podhanai - பரிமளமுள்ள திருத்துழாய் மலர்மாலையை யுடையனாய்
பொன் நெடு சக்கரத்து,Pon nedu sakkarathu - அழகினால் உயர்ந்த திருவாழியை யுடையனான
எந்தை பிரான் தன்னை,Endhai praan thannai - எம்பெருமானை
பாதம் பணிய வல்லாரை,Paadham paniya vallaaraai - திருவடிகளில் வணங்கவல்லவர்களை
பணியும் அவர்,Paniyum avar - வணங்குமவர்கள்,
ஓதம்,Oadham - பேசப்படுகிற
பிறப்பிடை தோறு,Pirappidai thoru - ஜன்மங்கள்தோறும்
எம்மை,Emmai - எங்களை
ஆள் உடையார்கள் கண்டீர்,Aal udaiyaarkal kandir - அடிமை கொள்பவர்களாவர்.
2966திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (திருவரை பூத்தாற்போலே யிருக்கிற திருப்பீதாம்பரத்தை யணிந்தவனாய், திருக்கழுத்திலே சாத்தும் திவ்யாபரணங்களையுடையனாய், அழகிய அரைநூல் மாலையை யணிந்தவனாய், ஒரு பக்கத்திற்கு வேறொரு ஆபரணம் வேண்டாதபடி தானே போருமாய், காளமேகத்திலே மின்னினாயப்போலே யிருக்கிற யஜ்ஞோப வீதத்தையுடையவனாய், ஆச்ரிதரக்ஷணத்திற்கு முடிகவித்திருப்பவனாய், மற்றம் எண்ணிறந்த திருவாபரணங்களை இயற்கையாகவே அணிந்துள்ளவனான ஸ்ரீமந்நாராயணனுக்கு தாஸாநுதாஸர்களாயிருக்குமவர்கள் பிறவிவேதாறும் எமக்கு அஸாதாரண சேஷிகளாவர்கள் என்றாராயிற்று.) 4
உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4
உடை ஆர்ந்த ஆடையன்,Udai aarndha aadaiyan - திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டத்தையுடையவனும்
கண்டிகையன்,Kandikaiyan - கண்ட பூஷணத்தையுடையவனும்
உடை நாணினன்,Udai naaninan - திருப்பரிவட்டத்தின் மேல் சாத்தின திருவரை நாணையுடையவனும்
புடை ஆர்,Pudai aar - ஸந்நிவேசமமைந்த
பொன் நூலினன்,Pon noolinan - பொற்பூணூலை யுடையவனும்
பொன் முடியன்,Pon mudiyaan - அழகிய திருமுடியையுடையவனும்
மற்றும் பல் கலன்,Matrum pal kalan - மற்றும் பலவகைப்பட்ட ஆபரணங்களையும்
நடையா உடை,Nadaiyaa udai - இயற்கையாக உடையவனுமான
திரு நாரணன்,Thiru naaranan - ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டர்,Thondar - அடியரானார்க்கம் அடியரானவர்
இடை ஆர்,Idai aar - நிரந்தரமான
பிற்ப்பிடை தோறு,Pirappidai thoru - பிறவிதோறும்
எமக்கு,Emakku - எங்களுக்கு
எம் பெரு மக்கள் கண்டீர்,Em peru makkal kandir - எவ்வளவோ சிறந்தவர்களாவர்.
2967திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தர பார்க்குங்கூட அபேக்ஷிதத்தைத் தலைக் கட்டிக் கொடுத்தருளு மெம்பெருமானுடைய ஔதார்யத்திலே தோற்றவர்களான பாகவதர்களுக்குத் தோற்று இருக்குமவர்கள் எனக்கு ஸ்வாமிகள் என்கிறார்.) 5
பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5
பெரு மக்கள் உள்ளவர் தம் பெருமானை,Peru makkal ullavar tham perumaanai - பெருமக்கள் என்னப்படுகின்ற நித்யஸூரிகட்குத் தலைவனும்
அமரர்கட்கு,Amararkatku - சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு
அருமை ஒழிய,Arumai ozhia - அருமைப்படாதபடி
அன்று,Andru - முன்பொருகாலத்தில்
ஆர் அமுது ஊட்டிய,Aar amudhu oottiya - பூர்ணமாக அம்ருதத்தைப் பூஜிப்பித்தவனுமான
அப்பனை,Appanai - எம்பெருமானை உத்தேசித்து
பெருமை,Perumai - (அவனது) பெருமைகளை
பிதற்ற வல்லாரை,Pithatra vallaaraai - அடைவின்றியே சொல்லுமவர்களான பாகவதர்களை
பிதற்றுமவர்,Pithatrumavar - அடைவின்றியே சொல்லித் துதிக்குமவர்கள்
வருமையும் இம்மையும்,Varumaiyum immayum - இஹலோக பரலோகங்களிரண்டிலும்
நம்மை அளிக்கும் பிராக்கள் கண்டீர்,Nammai alikkum praakkal kandir - நம்மை உஜ்ஜிவிப்பிக்கும் ஸ்வாமிகளாவர்.
2968திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (ப்ரயோஜநாந்தரங்களை விரும்பாமல் அநந்யப்ரயோஜநரா யிருப்பார்க்குத் தன் வடிவழகை அநுபவிக்கும் உஜ்வல ஸ்வபாவனான எம்பெருமானை அநுபவிப்பார் நமக்கு ரக்ஷகரென்கிறார்.) 6
அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6
அளிக்கும் பரமனை,Alikkum paramanai - உபகரிக்குமிடத்தில் தனக்கு மேலில்லாதபடி உபகரிக்குமவனும்
கண்ணனை,Kannanai - க்ருஷ்ணனாநவந்து அவதரித்தவனும்
ஆழி பிரான் தன்னை,Aazi piraan thannai - திருவாழியைக் கையிலேந்தி மஹோபகாரங்கள் செய்யவனும்.
துளிக்கும் நறுகண்ணி,Thulikkum narukanni - தேன் வெள்ளமிடா நின்று நறுமணம் மிக்க மாலையையணிந்துள்ளவனும்
தூமணி வண்ணன்,Thoomani vannan - அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையுடையவனும்
ஒளி கொண்ட சோதியை,Oli konda sothiyai - அளவற்ற தேஜோ ரூபமான விகரஹத்தை யுடையவனுமான
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
உள்ளத்து கொள்ளுமவர்,Ullathu kollumavar - நெஞ்சிலே தாங்குமவர்கள்
எம்மை,Emmai - எம்மை
சலிப்பு இன்றி ஆண்டு,Salippu indri aandu - ஒருகாலும் கைவிடாமே அடிமைகொண்டு
சன்மம் சன்மாந்தரம் காப்பர் கண்டீர்,Sanmam sanmaantharam kaappar kandir - எத்தனை ஜன்மமானாலும் ரக்ஷிக்குமவர்களாவர்.
2969திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அடியவர் திறந்து அவன் செய்தருளும் மஹோபகாரங்களை அநுஸந்தித்து அப்படிகளைப் பிதற்றல்லாரைப் பிதற்றுமவர்கள் திடீர் எனக்கு எற்றைக்கும் ஸ்வாமிகளென்கிறார்.) 7
சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7
சன்மம் சன்மாந்தாந்தரம் காத்து,Sanmam sanmaanthandharam kaathu - மாறி மாறிப்பல பிறப்பும் பிறவாதபடி காத்து
அடியார்களை,Adiyaargalai - அடியவர்களை
கொண்டுபோய்,Kondupoy - (நித்ய விபூதியிலே) கொண்டு போய்
தன்னைபெறுத்தி,Thannaiperuthi - ஸ்வஸ்ரூப ப்ராப்தியைப் பண்ணிக்கொடுத்து
தன் தாள் இணைகீழ்,Than thaal inaikeezh - தனது திருவடிகளின் கீழே
கொள்ளும்,Kollum - அடிமை கொண்டருள்கின்ற
அப்பனை,Appanai - ஸ்வாமியினுடைய
தொன்னை,Thonnai - இயற்கையான ஔதார்யகுணத்தை
பிதற்ற வல்லாரை,Pitharra vallaaraai - வாய்வந்தபடி சொல்லித் திரியும் பாகவதர்களை
பிதற்றுமவர்,Pitharrumavar - வாய்வந்தபடி புகழுமவர்கள்
எம்மை,Emmai - நம்மை
நன்மை பெறுத்து,Nanmai peruthu - நன்மை பெறும்படி பண்ணி
நாள்,Naal - ஆத்ம தத்துவமுள்ளவரையில்
உய்யக் கொள்கின்ற,Uyyak kolginra - உஜ்ஜீவிப்பிக்க வல்லவர்காளக
நம்பர் கண்டீர்,Nambar kandir - நம்பப்படுமவர்களாவர்.
2970திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ஸ்ரீயபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார்.) 8
நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8
நம்பனை,Nambanai - நம்பப்படுமவனும்
ஞானம் படைத்தவனை,Gnaanam padaithavanai - (தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும்
திருமார்பனை,Thirumaarbanai - பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும்
உம்பர் உலகினில்,Umbar ulaginil - மேலுலகங்களில்
யார்க்கும்,Yaarkkum - எப்படிப்பட்டவர்களுக்கும்
உணர்வு அரியான் தன்னை,Unarvu ariyaan thannai - அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை
ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும்,Yeththuvaar kumbinaragargal yaelum - துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும்
அவர் தாங்கள்,Avar thaangal - அவர்கள்
எம்,Em - எமது
பல்,Pal - பலவகைப்பட்ட
பிறப்பு இடைதோறு,Pirappu idai thoru - ஜன்மாவகாசந் தோறும்
எம் தொழுகுலம் கண்ணீர்,Em thozhukulam kannir - யாம் தொழும்படியான குலீகராவர்.
2971திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (கையுந்திருவாழியுமான அழகைக்கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகளென்கிறார்..) 9
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9
குலம் தாங்கு,Kulam thaangu - ஸகல குலங்களுக்கும் ஆதாரமான
சாதிகள் நாலிலும்,Saadhigal naalilum - பிராம்மணாதி ஜாதிகள் நான்கிலும்
கீழ் இழிந்து,Keezh izhindhu - கீழே போந்து
எத்தனை நலம் தான் இலாத,Eththanai nalam thaan ilaadha - மிகவும் தாழ்வின் எல்லையிலே நின்ற
சண்டாளர் சண்டாளர்கள் ஆயினும்,Sandalar sandalargal aayinum - சண்டாளரினும் கடை கெட்ட சண்டாளர்களேயானாலும்,
வலம் தாங்கு சக்கரத்து,Valam thaangu sakkarathu - வலத்திருக்கையில் ஏந்தப்பட்ட திருவாழியையுடைய
அண்ணல்,Annal - ஸ்வாமியால்
மணிவண்ணற்கு,Manivannarku - நீலமணி நிறத்தனான எம்பெருமானுக்கு
ஆள் என்று,Aal endru - சேஷப்பட்டிருக்கின்றோமென்று
உள் கலந்தார்,Ul kalanthaaar - உண்மையான ஸ்வரூபஜ் ஞான முடையவர்களுக்கு
அடியார் தம்,Adiyaar tham - அடிமைப்பட்டவர்களுக்கு
அடியார்,Adiyaar - அடிமைப்பட்டவர்கள்
எம் அடிகள்,Em adigal - நமக்குத் தலைவராவார்.
2972திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத் தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார்.) 10
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10
அடி ஆர்ந்த வையம்,Adi aarndha vaiyam - (த்ரிவிக்ரமாவதார காலத்தில்) தன் திருவடியோடு ஸம்பந்தம் பெற்றதான வுலகை
உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து
ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிரில்
அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - திருக்கண் வளர்ந்தருள்கின்ற
படி ஆதும்இல்,Padi aadhum il - சிறிதும் உபமானமில்லாத
குழவிப் படி,Kuzhavip padi - சிறு குழந்தைப் பருவமுடைய
எந்தை பிரான் தனக்கு,Endhai praan thanakku - எம்பெருமானுக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள்,Adiyaar adiyaar tham adiyaar adiyaar thamakku adiyaar adiyaar tham adiyaar adiyongal - ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்வர்களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள்.
2973திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் இனி ஒருநாளும் பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-7-11
அடி ஓங்கு,Adi oongu - தங்களுடைய ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான
நூற்றுவர்,Nootruvar - (துரியோதனன் முதலானோர்) நூறுபேர்களும்
வீய,Veeya - முடியும்படி
அன்று,Andru - முன்பொருகால்
ஐவர்க்கு,Aivarkku - பஞ்சபாண்டவர்களுக்கு
அருள்செய்த,Arulseydha - க்ருபை பண்ணின
நெடியோனை,Nediyonai - திருமாலை நோக்கி
தென்குருகூர் சடகோபன் குற்றேவல்கள்,Thenkurugoor Sadagopan kutraevalgal - அழகிய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய கைங்கரிய ரூபமாய்
அடி ஆர்ந்த,Adi aarndha - ஸகலலக்ஷண ஸம்பன்னமான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரத்தினுள்ளும்
அவன் தொண்டர் மேல் முடிவு,Avan thondar mel mudivu - பாகவத விஷயத்தில் முடிவான
இவை பத்து,Ivai paththu - இப்பதிகத்தை
ஆர,Aara - நெஞ்சிலே பொருந்த
கற்கிற்கில்,Karkirkil - கற்கவல்லாராகில்
சன்மம்,Sanmam - பிறப்பு
செய்யாமை,Seyyaamai - மறுபடியும் உண்டாகாதபடி
முடியும்,Mudiyum - முடிந்துபோம்
2974திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார்.) 1
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே!
ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடியானே!
கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே!
என்று கிடக்கும் என் நெஞ்சமே. –3-8-1
என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது
முடியானே,Mudiyanae - (உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே!
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே,Moo ulagum thozhudhu yaeththum seer adiyanae - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே!
ஆழ் கடலை கடைந்தாய்,Aazh kadalai kadaindhaai - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே!
புள் ஊர் கொடியானே,Pul oor kodiyanae - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே!
கொண்டல் வண்ணா,Kondal vanna - நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே!
அண்டத்து உம்பரின் நெடியானே,Andhathu umbarin nediyanae - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே!
என்று கிடக்கும்,Endru kidakkum - என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது.
2975திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (வாக்கானது எம்பெருமானை நோக்கி ‘ஸ்வாமி! நெஞ்சு தேவரீரை நினைக்க அதற்கு அருள் செய்தாப்போலே நானும் தேவரீரை நினைக்க அருள் செய் வேணும்’ என்று அலற்றாநின்றது என்கிறார்.) 2
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே!
தண் இலங்கைக்கு இறையைச்செற்ற நஞ்சனே!
ஞாலம் கொள்வான் குறளாகிய வஞ்சனே!
என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2
என் வாசகம்,En vaasagam - எனது வாக்கானது
நெஞ்சமே நீள் நகர் ஆக இருந்த என் தஞ்சனே,Nenjamae neel nagar aaga irundha en thanjanae - மனத்தையே பெரிய நகரமாகக் கொண்டு அதிலே தங்கியிருக்கின்ற எனது நற்றுணைவனே!
தண் இலங்கைக்கு இறையை செற்ற நஞ்சனே,Than ilangaiyku iraiai setra nanjanae - தண்ணிதான இலங்காபுரிக்குத் தலைவனாயிருந்த இராவணனைத் தொலைக்கும் விஷயத்தில் நஞ்சானவனே!
ஞானம் கொள்வான் குறள் ஆகிய,Gnanam kolvaan kural aagiya - (மாவலியிடமிருந்து) பூமியைக் கொள்ளும் பொருட்டு வர்மன் மூர்த்தியான
வஞ்சனே,Vanchanae - வஞ்சகனே!
என்னும் எப்போதும்,Ennum eppodhum - என்று எப்போதும் சொல்லா நின்றது
2976திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தமது கைளுக்கு வாக்கின் வ்ருத்தியிலும் தம் வ்ருத்தியிலுண்டான சாபலத்தை அருளிச் செய்கிறார்.) 3
வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே!
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே!
என்று தடவும் என் கைகளே.–3-8-3
என் கைகள்,En kaigal - எனது கைகளானவை.
வாசகமே ஏத்த அருள் செய்யும் வானவர் தம் நயாகனே,Vaasagame yaettha arul seyyum vaanavar tham nayaagane - வாக்கு மாத்திரமே துதிக்கும்படியாக அதற்கு அருள் செய்கின்ற தேவாதி தேவனே!
நான் இள திங்களை கோள்விடுத்து,Naan ila thingalai kolviduthu - புதிய இளை உதய சந்திரன் போலப் பற்களின் ஒளியைப் பரவிட்டு
வேய் அகம்பால் வெண்ணெய் தொடு உண்ட,Vey agampaal vennai thodu unda - மூங்கிலால் செய்த வீடுகளில் வெண்ணெயைக் களவு கெய்து அமுது செய்த
ஆன் ஆயர் தாயவனே,Aan aayar thaayavane - கோபால க்ருஷ்ணனே!
என்று தடவும்,Endru tadavum - என்று தடவுகின்றன
2977திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (கண்களானவை ‘கைகளுடைய பரிமாற்றமும் வேணும், தம் வ்ருத்தியான காட்சியும் வேணும்’ என்னாநின்றன வென்கிறார்.) 4
கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடின்றி
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே!
உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே,Paikol paambu aeri urai parane - படங்கொண்ட திருவனந்தாழ்வான் மீதேறி உறையும் பரமபுருஷனே!
என் கண்கள்,En kangal - எனது கண்களானவை
உன்னை,Unnai - தேவரீரை
கைகளால் ஆர தொழுது தொழுது,Kaigalal aara thozhudhu thozhudhu - கையாரப் பரிபூர்ண நமஸ்காரம் செய்து
மாத்திரை போதும் ஓர் வீடு இன்றி,Maathirai podhum orveedu indri - க்ஷணகாலமும் இடைவிடாமல்
வைகலும்,Vaigalum - நாள்தோறும்
உன்னை மெய் கொள்ள காண்,Unnai mei kolla kaan - உன்னை மெய்யாகவே காண்பதற்கு
விரும்பும்,Virumbum - விரும்புகின்றன.
2978திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (காணவும் வேணும், கேட்கவும் வேணுமென்று செவிகள் ஆசைப்படுகின்றன வென்கிறார்.) 5
கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால்
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத
திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5
என் செவிகள்,En sevigal - எனது காதுகளானவை
கண்களால் காண வரும் கொல் என்று ஆசையால்,Kangalal kaana varum kol endru aasaiyal - கண்களால் காணும்படி வருவனோ வென்று ஆசையினால்
மண் கொண்ட வாமனன் ஏற,Mann konda vaamanan aera - (மாவலியிடம்) பூமியைக் கவர்ந்த வாமனன் (தன் மீது) ஏறுதலால்.
மகிழ்ந்து செல்,Magizhndhu sel - மகிழ்ச்சியோடு செல்கின்ற
புள்ளின்,Pullin - கருத்மானுடைய
பண்கொண்ட,Pankonda - ஸாம்வேத ஸ்வரப்ரசுரமான
சிறகு ஒலி,Siragu oli - சிறகின் தொனியை
பாவித்து,Paavithu - நினைத்து
கிடந்து,Kidandhu - பரவசமாய் கிடந்து
திண்கொள்ள ஓர்க்கும்,Thingolla oarkkum - உறுதியாக நிரூபிக்கின்றன.
2979திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார்.) 6
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே
காலப் பண் தேன் உறைப் பத்துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே
அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6
எனது ஆவி,Enadhu aavi - என் பிராணனானது.
நின்,Nin - உன்னுடைய
கீர்த்தி கனி என்னும் கவிகளே,Keerthi kani ennum kavigale - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே
காலம்,Kaalam - காலத்திற்கு ஏற்ற
பண்,Pan - பண்களாகிற
தேன்,Then - தேனிலே
உறைப்ப,Uraippa - மிகவும் செறிய
துற்று,Thutru - கலந்து
செவிகளால் ஆர,Sevigalal aara - காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க
புவியின் மேல்,Puviyin mel - பூமியின் மீது
பொன் நெடு சக்கரத்து உன்னையே,Pon nedu sakkarathu unnaiyae - அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே
அவிவு இன்றி,Avivu indri - இடையறாமல்
ஆதரிக்கும்,Aadharikkum - விரும்பா நிற்கும்.
2980திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்ட விடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு) 7
ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத்
தூவி அம் புள்ளுடையாய்! சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7
ஆவியே,Aaviyae - என் உயிராயிருப்பவனே!
ஆர் அமுதே!,Aar amudhe - அருமையான அமுதம் போன்றவனே!
என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொண்ட
அம் தூவி புள் உடையாய்,Am thoovi pul udaiyaai - அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே!
சுடர் நேமியாய்,Sudar naemiyaai - ஒளிமிக்க திருவாழியையுடையவனே!
உனகோலம்,Unakolam - உனது வடிவழகை
பாவியேன்,Paaviyaan - பாவியாகிய நான்
நெஞ்சம் புலம்ப பலகாலும் கூவியும்,Nenjam pulamba palakaalum kooviyum - மனம் துடிக்கப் பலகால் கூப்பிட்டும்
காணப்பெறேன்,Kaanapperaen - கண்டு அநுபவிக்கப்பெற்றிலேன்
2981திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (“பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச் செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.) 8
கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே!
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே!
உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8
கோலமே,Kolamey - அழகு தானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே!
தாமரைக் கண்ணது,Thaamaraik kannathu - தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய
ஓர் அஞ்சனம் நீலமே,Or anjanam neelamae - ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே!
நின்று,Nindru - நிலை நின்று
எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை
ஈர்கின்ற,Eerkinra - ஈடுபடுத்துகின்ற
சீலமே,Seelamae - சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே!
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே,Senru sellaadhana mun nilaam kaalamae - இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே!
உன்னை,Unnai - உன்னை
எந்நாள்,Ennaal - என்றைக்கு
கண்டு கொள்வன்,Kandu kolvan - கண்டு அநுபவிப்பேன்.
2982திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (அடியவர்களைக் காத்தருளு முபாயத்தை நன்குணர்ந்தவனும் ப்ரதிகூல நிரஸகத்தில் வல்லவனுமான உன்னை நான் சேருவது என்றைக்கு? என்கிறார்.) 9
கொள்வன்நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே!
கஞ்சனை வஞ்சித்து வாணனை உள்வன்மை தீர,
ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்!
உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9
மாவலி,Maavali - ‘மஹாபலியே!
நான்,Naan - நான்
மூ அடி,Moo adi - மூன்றடி நிலத்தை
கொள்வன்,Kolvan - ஏற்றுக் கொள்வேன்,
தா,Thaa - கொடுப்பாயாக’
என்ற,Endra - என்ற சொன்ன
கள்வனே,Kalvane - வஞ்சகனே!
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
வஞ்சித்து,Vanjiththu - தொலைத்து
வாணனை,Vaananai - பாணாசுரனை
உள் வன்மைதீர,Ul vanmaitheera - மன உறுதியானது அழியும்படி
ஓர் ஆயிரம் தோள் துணித்த,Or aayiram thol thuniththa - ஆயிரம் புயங்களையும் அறுத்த
புள் வல்லாய்,Pul vallaai - கருடவாஹனனே!
உன்னை,Unnai - உன்னை
எஞ்ஞான்று,Ennyaanru - எக்காலம்
பொருந்துவன்,Porundhuvan - அடையப்பெறுவேன்?
2983திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (உன்னுடைய குணங்களுக்குத் தோற்று உன்னைக் காணப்பெறாத வ்யஸனத்தாலே துக்கப்படுகிற நான் இன்ன மெத்தன காலம் துக்கப்படக்கடவேனென்கிறார்.) 10
பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்!
உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு
உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10
பொருந்திய,Porundhiya - ஒன்றோடொன்று பொருந்தி நின்ற
மா மருதின் இடை,Maa marudhin idai - பெரிய மருத மரங்களின் நடுவே
போய,Poya - தவழ்ந்து சென்று அவற்றைத் தள்ளி முறித்த
எம் பெரும்தகாய்,Em perumthagaai - எம்பெருமானே!
நான்,Naan - அடியேன்
உன் கழல்,Un kazhal - உனது திருவடிகளை
நாணிய,Naaniya - காணும் பொருட்டு
பேதுஉற்று,Paethu utrru - ஈடுபாடுடையேனாய்
வருந்தி,Varundhi - துக்கித்து
வாசகம் மாலை கொண்டு,Vaasagam maalai kondu - சொல் மாலைகளைக்கொண்டு
உன்னையே,Unnaiyae - உன்னையே நோக்கி
இருந்து இருந்து,Irundhu irundhu - இடைவிடாது
எத்தனை காலம்,Eththanai kaalam - எவ்வளவு காலம்
புலம்புவன்,Pulambuvan - கதறுவேன்?
2984திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (இத்திருவாய்மொழியின் இயல்மாத்திரத்தைத் தரித்தவர்கள் ஆரேனுமாகிலும் இதில் ஆஸாஸித்தபடியே அநுபவிக்கையில் தட்டில்லாத பரம போக்யமான திருநாட்டிலே செல்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை
நலங்கொள்சீர் நன் குருகூர்ச் சடகோபன்
சொல் வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து
இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11
புலம்பு சீர்,Pulambu seer - (அனைவரும்) கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையுடையனாய்
பூமி அளந்த பெருமானை,Bhoomi alandha perumaanai - பூமியை அளந்தவனான எம் பெருமானைக் குறித்து
நலம் கொள் சீர்,Nalam kol seer - ஞானபக்தி முதலிய சிறப்பு வாய்ந்த
நன் குருகூர் சடகோபன்;,Nan kurugoor Sadagopan - நன் குருகூர் சடகோபன்;
சொல்,Sol - அருளிச்செய்த
வலம் கொண்ட,Valam konda - மிக்க ஆற்றலையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள்
இவை ஓர் பத்தும்,Ivai or paththum - இப்பத்துப் பாசுரத்தையும்
சொன்னால்,Sonnal - ஓதினால்
யாவரும்,Yaavarum - (இன்னார் இனையார் என்னும் வாசியற) எல்லாரும்
இலங்கு வான்,Ilangu vaan - சோதிமயமான பரமபதத்தை
ஏறுவர்,Yeruvar - ஏறப்பெறுவர்.
2985திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (வேறு சிலரைக் கவி பாடுகின்றவர்களுக்கு ஹிதமுரைக்க இழிந்த ஆழ்வார் அவர்களுக்கு ருசி பிறக்கைக்காகத் தம்முடைய மதத்தை முந்துறமுன்னம் அருளிச் செய்கிறார்.) 1
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1
இது,Idhu - இப்போது நான் சொல்லும் ஹிதவார்த்தையானது
சொன்னால்,Sonnal - சொல்லப்படுமாகில்
விரோதம்,Virodham - உங்களுக்கு அநிஷ்டமாக இருக்கும்
ஆகிலும்,Aagilum - ஆனாலும்
சொல்லுவன்,Solluvan - உங்கள் அநர்த்தத்தைப் பொறுத்திருக்கமாட்டாமையினால் சொல்லியே தீர்வேன்
கேண்மின்,Kenmin - காது கொடுத்துக்கேளுங்கள்
வண்டு,Vandu - வண்டுகளானவை
தென்னா தெனா என்று,Thennaa thenaa endru - தென்னா தென்னாவென்று ரீங்காரஞ் செய்யப்பெற்ற
திருவேங்கடத்து,Thiruvengadathu - திருமலையிலே
என் ஆனை,En aanai - என்னுடைய யானை போன்றவனும்
என் அப்பன்,En appan - எனக்கு மஹோபகாரகனுமான
எம்பெருமான்,Emperumaan - ஸ்வாமி
உளன் ஆக,Ulan aaga - என் கவிக்கு இலக்காயிருக்கும்போது
என் நாவில் இன் கவி,En naavil in kavi - எனது நாவினின்று உண்டான மதுரமான கவிகளை
யான்,Yaan - நான்
ஒருவர்க்கும்,Oruvarkkum - வேறொருவர்க்கும்
கொடுக்கிலேன்,Kodukkilaen - கொடுக்கமாட்டேன்
2986திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (உண்மையாயும் பர்பூர்ணமாயுமுள்ள கல்யாணகுண சும்பத்துக்களை யுடையனாயிருந்துள்ள எம்பெருமானை விட்டு அஸத் கல்பராய் அற்பு ஸம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவி பாடுவாரை நிந்திக்கிறார்.) 2
உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2
குளன் ஆர்,Kulan aar - குளங்கள் நிறைந்த
கழனி சூழ்,Kazhani soozh - கழனிகளால் சூடுப்பட்ட
கண்,Kann - இடமகன்ற
நன்,Nan - விலக்ஷணமான
குறுங்குடி,Kurungudi - திருக்குறுங்குடியிலே
மெய்ம்மை,Meimmai - ஸௌலப்யம் முதலிய குணங்களோடு கூடி உண்மையாக
உளன் ஆய,Ulan aay - உறைபவனான
எந்தையை எந்தை பெம்மானை ஒழிய,Endhaiyai endhai pemmaanai ozhiyya - என் குலநாதனைத் தவிர
தன்னை,Thannai - அஸத்கல்பனான தன்னை
உளன் ஆகவே,Ulan aagavae - ஸத்தானவனாகவே கொண்டு
ஒன்று ஆக எண்ணி,Ondru aaga enni - ஒரு பொருளாக நினைத்து
நன் செல்வத்தை,Nan selvaththai - தன்னதாக அபிமானித்த அற்ப செல்வத்தை
வள் ஆ,Val aa - மிகவும் மேம்பாடாக
மதிக்கும்,Mathikkum - எண்ணியிருக்கிற
இம் மானிடத்தை,Im maanidaththai - இந்த அற்ப மனிதர்களை
கவி போடி என்,Kavi podi en - கவி பாடுவதனால் என்ன பலன்?
2987திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரம விலக்ஷணனாய் மஹோபகாரகனான எம்பெருமானிருக்க அவனை விட்டு அற்ப மனிசரைக் கவி பாடி என்ன பலன்? என்கிறார்.) 3
ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3
ஒழிவு ஒன்று இல்லாத,Ozhivu ondru illaadha - ஒழிவு சிறிதுமில்லாத
பல ஊழி ஊழிதோறு,Pala oozhi oozhithooru - காலத்துவமுள்ளதனையும்
நிலாவ,Nilaava - நிலைநின்று அநுபவிக்கும்படி
போம்,Pom - செல்லக்கடவதான
வழியை,Vazhiyai - வழிபாடாகிய கைங்கரியத்தை
தரும்,Tharum - தந்தருள்கின்ற
நங்கள் வானவர் ஈசனை நிற்க போய்,Nangal vaanavar eesanai nirka poay - நமது தேவாதி தேவனான பெருமானிருக்க, அவனையுமேக்ஷித்து
கழிய மிக நல்ல,Kazhiya miga nalla - மிகவும் இனிய
வான் கவி கொண்டு,Vaan kavi kondu - திவ்யாமன கவிகளைக் கொண்டு
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
இழிய கருதி,Izhiya karuthi - அதோகதியையடைய நினைத்து
ஓர் மானிடம்,OrMaanidam - அற்ப மனிதர்களை
பாடல்,Paadal - பாடுதலால்
ஆவது என்,Aavadhu en - (உங்கட்கு) உண்டாகும் பயன் யாது?
2988திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கவிபாடினார்க்கு ஸகலவரிசைகளும் கொடுக்கவல்லவனான எம்பெருமானை விட்டு இன்றிருப்பார் நாளையிரார் என்னும்படியான அஸ்திரங்களைக் கவிபாடுவதில் என்ன பயனுண்டென்கிறார்.) 4
என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4
புலவீர்காள்,Pulaveerkaal - பண்டிதர்களே!
மன்னா,Manna - அல்பாயுஸ்ஸுக்களான
மனிசரை,Manisarai - மனிதர்களை
பாடி,Paadi - கவிபாடி
படைக்கும்,Padaikkum - (அதனால்) நீங்களடைகின்ற
பெரும்பொருள்,Perumporul - பெருஞ்செல்வம்
என் ஆவது,En aavadhu - யாதாவது?
எத்தனை நாளைக்கு போதும்,Eththanai naalaikku poadhum - (அது) எத்தனை நாளைக்குப் பற்றும்?
வின் ஆர்,Vin aar - ஒளிநிறைந்த
மணி முடி,Mani mudi - மணிமகுடத்தை யுடையவனான
விண்ணவர்தாதையை,Vinnavarthaathaiyai - தேவாதி தேவனை
பாடினால்,Paadinaal - கவிபாடினால் (அப்பெருமான் உங்களை)
தன் ஆகவே கொண்டு,Than aagavae kondu - தனக்கு அடிமையாகவே கொண்டு
சன்மம் செய்யாமையும் கொள்ளும்,Sanmam seiyyaamaiyum kollum - இனிப் பிறவிகள் உண்டாகாதபடியாகவும் அங்கீகரித்தருள்வன்.
2989திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஹேயகுணம் மலிந்த நீசரை விட்டு, ஸமஸ்தகல்யாண குணாத்மகனாய் நம் அபேக்ஷிதமெல்லாம் தரவல்லவனான எம்பெருமானைக் கவி பாட வாருங்கோளென்கிறார். பிறரைக் கவி பாடுவது ஒரு பிரயோஜனத்திற்காகவேயன்றி ஸ்வயம் ப்ரயோஜனமாகவன்றே; அப்படி நீங்கள் கருதுகிற பிரயோஜனம் பெறுவதில்லை என்று முந்துற முன்னம் அருளிச் செய்கிறார்-பாவிகள் உள்ளத்திற்பதிவதற்காக) 5
கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5
கொள்ளும் பயன் இல்லை,Kollum payan illai - நீங்கள் பெறும் பலன் சிறிது மில்லையாம்படி
குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,Kuppai kilarththanna selvaththai - குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய அற்பரைக் குறித்து
வள்ளல் புகழ்ந்து,Vallal pugazhndhu - உதாரனே! என்று கொண்டாடி
நும் வாய்மை இழக்கும்,Num vaaimai izhakkum - உங்களுடைய ஸத்யத்தையிழந்தொழிகிற
புலவீர்காள்,Pulaveerkaal - புலவர்களே!
கொள்ள,Kolla - நீங்கள் பாடுகிற துதி மொழிகளைப் பொருத்தமாகக் கொள்ளவல்ல பூர்த்திரயையுடையவனும்
வேண்டிற்று எல்லாம் தரும்,Vendrittu ellaam tharum - வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்
கோது இல்,Kodhu il - குற்ற மற்றவனும்
என் வள்ளல்,En vallal - என் விஷயத்தில் மஹோபகாரங்கள் செய்தவனும்
மணிவண்ணன் தன்னை,Manivannan thannai - நீலமணி வண்ணனுமான பெருமானை
கவி சொல்ல,Kavi solla - கவி பாட
வம்மின்,Vammin - வாருங்கள்.
2990திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (ஜீவனம் உஜ்ஜீவனம் என்று இரண்டுண்டு; எம்பெருமான் திறத்துக் கவிபாடினால் உஜ்ஜீவிக்க வழியுண்டெனினும், ஜீவிக்கவழி தேடுகிற நாங்கள் வரஸ்துதிகளிலே இழிகிறோம் என்று சிலர் சொல்லுவதாகக் கொண்டு நீசரைக் கவிபாடி ஜீவிப்பதிற் காட்டிலும் உடம்பு நோவத் தொழில் செய்து ஜீவித்தல் நன்று என்கிறார்.) 6
வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6
புலவீர்,Pulaveer - புலவர்களே!
வம்மின்,Vammin - (நரஸ்துதியை விட்டு) வாருங்கள்;
நும் மெய்,Num mei - உங்களது உடலை
வருத்தி,Varuththi - சிரமப்படுத்தி
கை செய்து,Kai seithu - தொழில் செய்து
உய்ம்மின்,Uymmmin - ஜீவியுங்கோள்:
மன்,Man - (ப்ரவாஹரூபேண) நித்யமாயிருக்கின்ற
இ உலகினில்,I ulagil - இந்த லோகத்தில்
செவ்வர்,Sevvar - (உங்களுக்குப் போதுமானவை கொடுக்கவல்ல) ஸ்ரீமான்கள் கிடையார்;
இப்போது நோக்கினோம்,Ippoathu nokkinom - (இதனை) இப்போது ஆராய்ந்து அறிந்தோம்;
நும்,Num - உங்களுடைய
இன் கவி கொண்டு,In kavi kondu - மதுரமான கவிகளைக் கொண்டு
நும் நும்,Num num - உங்களுங்களுடைய
இட்டா தெய்வம்,Ittaa deivam - இஷ்ட தெய்வத்தை
ஏத்தினால்,Yaeththinaal - துதி செய்தால் (அந்தத் துதிமொழிகளிற் கூறும் குணங்கள் அவர்களிடத்து இல்லாமையாலே அவை)
செம் மின் சுடர் முடி,Sem min sudar mudi - செவ்வனே மின்னுகின்ற வொளி பொருந்திய திருமுடியை யுடைய
என் திருமாலுக்கு,En thirumaalukku - எனக்கு ஸ்வாமியான லக்ஷ்மீநாதனுக்கு
சேரும்,Serum - அந்வயிக்கும்.
2991திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (கீழ் ஆறு பாசுரங்களினால் பரோபதேசம் செய்தருளின ஆழ்வார், தம் உபதேசம் கேட்டு ஒருவரும் திருந்தக காணாமையாலே வெறுத்து அவர்களைவிட்டு, எம்பெருமானை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகையாகிற பாவம் எனக்கு இல்லையாகப் பெற்றதே! என்று தம்மளவிலே தாம் உகந்து பேசுகிறார். “வழிபறிக்கும் நிலத்தில் தன்கைப் பொருள்கொண்டு தப்பினவன் உகக்குமாபோலே, இவர்களைப் போலன்றியே பகவத் விஷயத்தை யொழிய வேறு சிலரைக் கவிபாடுகைக்கு நான் க்ஷமனன்றிக்கே யொழியப்பெற்றேனென்று ப்ரீதராகிறார்” என்பது நம்பிள்ளை ஈடு.) 7
சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லாம்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7
சேரும்,Serum - தனக்குத் தகுதியான
கொடை புகழ்,Kodai pugazh - ஔதார்யத்தினாலாகிய புகழுக்கு
எல்லை இலானை,Yellai ilaanai - எல்லையில்லாதிருப்பவனும்
ஓர் ஆயிரம் பேரும் உடைய,OrAayiram perum udaiya - ஆயிரந் திருநாமங்களையுடைய உபகாரநனுமான
பிரானை அல்லால்,Piraanai allaal - எம்பெருமானை யன்றி
பாரில்,Paril - பூமியில்
மற்று ஓர் பற்றையை,Matru OrPatraiyai - வேறொரு அஸார பதார்த்தத்தைக் குறித்து
கை மாரி அனைய என்று,Kai maari anaiya endru - ‘கைகள் மேகம்போல் உதாரங்கள்’ என்றும்
திண் தோள்,Thin thol - உறுதியான புயங்கள்
மால் வரை ஒக்கும் என்று,Maal varai okkum endru - பெரிய மலைபோல்வன என்றும்
பச்சை பசும்பொய்கள் பேச யான் கில்லேன்,Pachchai pasumpoygal pesa yaan killeen - மெய் கலவாத புதுப் பொய்களைப் பேசுவதற்கு நான் சந்தனல்லேன்.
2992திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (நப்பின்னைப் பிராட்டியின் ஸம்ச்லேஷ விரோதிகளைத் தொலைத்து அவளை அடிமை கொண்டது போல என் விரோதிகளையும் தொலைத்து என்னை அடிமை கொள்பவனாக எம்பெருமானையொழிய வேறு சில நீசரைக் கவிபாட நான் நினைத்தாலும் என்வாய் அதுக்குப் பாங்காகாது என்கிறார்.) 8
வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8
வேயின் மலிபுரை தோளி,Veyin malipurai tholi - மூங்கிலைக் காட்டிலும் சிறந்து விளங்குகின்ற தோள்கையுடையவளான
பிள்ளைக்கு,Pillaiyukku - நப்பின்னைப் பிராட்டிக்கு
மணாளனை,Manaalanai - மணவாளனான கண்ணபிரானைக் குறித்து
எல்லை இலாதன,Yellai ilaadhana - நிரவதிகமாயும்
ஆய,Aaya - ஆராய்வதற்கு உரியனவுமான
பெரும்புகழ்,Perumpugazh - பெரிய கீர்த்திகளை
பாடி,Paadi - கவிபாடி
போய்,Poi - நெடுஞ்காலம் நடந்து
காயம் கழித்து,Kaayam kazhiththu - இவ்வுடலை யொழித்து
அவன் தான் இணை கீழ்,Avan than inai keezh - அவ்வெம்பெருமானது திருவடியிணையில்
புகும் காதலன்,Pugum kadhalan - அந்வயிக்க வேணுமென்கிற ஆசையையுடைய நான்
மாயம் மனிசரை,Maayam manisarai - பிராகிருதர்களான மனிசர்களை
என் வாய் கொண்டு,En vaai kondu - (எம்பெருமானையே துதிக்கக் கண்ட) எனது வாக்கைக் கொண்டு
என் சொல்ல வல்லேன்,En solla vallen - என்ன கவி பாடுவேன்? (யாதொன்றும் பாடமாட்டேன்.)
2993திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (பரமோதாரனான எம்பெருமானாலே தன்னைக் கவிபாடுகையே ஸ்வபாவமாகப் பண்ணப் பெற்ற வெனக்கு இதரஸ்துதிகளில் அதிகாரமில்லையென்கிறார்.) 9
வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9
வாய்கொண்டு,Vaikonddu - (அருமையான) வாக்கைக் கொண்டு
மானிடம்,Maanidam - அற்பமனிதர்களை
பாட வந்த,Paada vandha - பாடப்பிறந்த
கவியேன் அல்லேன்,Kaviyen allen - கவி நானல்லேன்
ஆய்,Aay - (வேதாந்தங்களினால்) ஆராயப்பட்ட
சீர் கொண்ட,Seer kondda - திருக்குணங்களையுடைய
வள்ளல்,Vallal - உதாரனாகிய
ஆழி பிரான்,Aazhi praan - சக்கரக்கையனான பெருமான்
எனக்கே உளன்,Enakke ulan - என் வாக்குக்கே இலக்காகவுள்ளான். (அப்பெருமான்)
சாய் கொண்ட,Saai konda - அழகிய
இம்மையும்,Immaiyum - இஹலோகத்து அர்ச்சாவதார அநுபவத்தையும்
சாதித்து,Saadiththu - உண்டாக்கித்தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டுகொள் என்று,Vaanavar naattaiyum nee kanddukol endru - பரமபதாநுபவத்தையும் நீ பெறுவாயாக என்று சொல்லி
வீடும்,Veedum - மோக்ஷ சுகத்தையும்
நின்று நின்று,Nindru nindru - அடைவு பட
தரும்,Tharum - கொடுத்தருள்வன்.
2994திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (தன்னைத் துதிப்பதற்கென்றே கரணகளேபரங்களைக் கொடுத்தருளினவனான எம்பெருமான் திறத்திலே கவிபாடப்பெற்ற வெனக்கு மற்றொருவரைக் கவிபாடுதல் ஏலாது என்கிறார்.) 10
நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10
பல நாள்,Palanaal - அநேக காலம்
நின்று நின்று,Nindru nindru - இருந்து
உய்க்கும்,Uykkum - சேதுநனைத் தன் வசத்திலே யாக்குகின்ற
இ உடல்,eUdal - இந்த சரீரத்தை
நீங்கி போய்,Neengi poi - விட்டொழிந்து போய்
சென்று சென்று ஆகிலும்,Sendru sendru aagilum - இப்படியே பல பல ஜனன மரணங்கள் நடந்தபின்பாகிலும் (ஏதேனுமொரு காலத்தில்)
கண்டு,Kandu - தன்னைக் கண்டு
சன்மம்,Sanmam - பிறவியை
கழிப்பான்,Kazhipaan - கழிக்கக்கூடுமென்று
எண்ணி,Enni - திருவுள்ளம் பற்றி
ஒன்றி ஒன்றி,Ondri ondri - (ஒருகாலும் சோம்பிக் கைவிடாமல்) மேன்மேலும் ஊக்கங்கொண்டு
உலகம் படைத்தான்,Ulagam padaithaan - உலகங்களைப் படைத்து வருகின்ற எம்பெருமானுடைய
கவி ஆயினேற்கு,Kavi aayineerku - கவியாக அமைந்த எனக்கு
இனி என்றும் என்றும்,eni endrum endrum - இனி எந்நாளும்
மற்று ஒருவர் கவி,Matru oruvar kavi - வேறொருவரைக் கவிபாடுதல்
ஏற்குமே,Earkume - தகுமோ? (தகாது)
2995திருவாய்மொழி || (3-9–சொன்னால் விரோதமிது) (மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்) (இத்திருவாய்மொழி கற்றார்க்கு, பிறரைக்கவிபாடுவதற்குரிய நீசப்பிறவி நேராதென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11
ஏற்கும் பெரும் புகழ்,Erkum perum pugazh - தனக்கு ஏற்றிருக்கின்ற மிக்க புகழுடையனாய்
வானவர் ஈசன் வண் குருகூர்ச் சடகோபன்,Vaanavar eesan van kurugoor Sadagopan - நித்யஸூரி நாதனான எம்பெருமான் ஏற்கும் பெரும்புகழ் குருகூர் சடகோபன்
சொல்,Sol - அருளிச்செய்த
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - ஏற்ற பெரும்புகழையுடைய
ஆயிரத்துள்,Aayiraththul - இவ்வாயிரத்தினுள்
கண்ணன் தனக்கு,Kannnan thanakku - கண்ணபிரான் விஷயமாக
ஏற்கும் பெரும் புகழ்,Yerkum perum pugazh - தகுதியான சிறந்த புகழையுடைத்தான
இவை ஓர் பத்தும்,Evai OrPaththum - இந்தத் திருவாய்மொழியை
சொல்ல வல்லார்க்கு,Solla vallaarkku - ஓதவல்லவர்க்கு
சன்மம் இல்லை,Sanmam ellai - மறுபிறப்பு இல்லை
2996திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (திவ்யாயுதங்களோடே எம்பெருமான் வந்து அவதரிக்கும்படியை அநுஸந்திக்கப் பெற்றவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 1
சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1
பலபல,Palapala - பலபல வகைப்பட்ட
சன்மம்,Sanmam - அவதாரங்களை
செய்து,Seidhu - பண்ணி
வெளிப்பட்டு,Velippattu - ஸம்ஸாரிகளின் கண்ணுக்கும் புலப்பட்டு
சங்கொடு சக்கரம்,Sangodu sakkaram - சங்கு சக்கரங்களையும்
வில்,Vil - சார்ங்கத்தையும்
ஒண்மை உடைய,Onmai udaiya - ஒளி பொருந்திய
உலக்கை,Ulakkai - முஸலத்தையும்
ஒள் வாள்,Ol vaal - அழகிய கந்தக வாளையும்
தண்டு,Thandu - கௌமோதகி யென்னும் கதையையும்
கொண்டு,Kondu - ஏந்திக்கொண்டு
புள் ஊர்ந்து,Pul oornthu - பக்ஷிராஜனை வாஹனமாகக்கொண்டு
உலகில்,Ulagil - உலகத்திலுள்ள
வன்மை உடைய,Vanmai udaiya - கடினமான மனமுடைய
அரக்கர்,Arakkar - அரக்கர்களும்
அசுரர்,Asurar - அசுரர்களம்
மாள,Maala - மாண்டொழியும்படி
படை பொருத,Padai porudha - ஆயுதப்பிரயோகம் பண்ணிப் போர் செய்து தொலைத்து
நன்மை உடையவன்,Nanmai udaiyavan - நன்மை மிக்கவனான எம்பெருமானுடைய
சீர்,Seer - திருக்குணங்களை
பரவ பெற்ற நான்,Parava petra naan - துதிக்கப்பெற்ற அடியேன்
ஓர் குறையு இலன்,Or kuraiyu ilan - ஒரு குறையுமுடையே னல்லேன்.
2997திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (இந்நிலத்தில் வந்து திருவவதாரம் பண்ணுதற்கு அடியாகத் திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளிப் பிறகு வஸுதேவர் திருமகனாய் வந்து பிறந்தருளி ஆச்ரித விரோதிகளைத் தொலைந்தருளின கண்ணபிரானுடைய கீர்த்தியைப் பலபடியும் அநுபவிக்கப்பெற்ற நான் மேன்மேலும் இங்ஙனம் அநுபவிப்பதில் யாதொருதடையுமுடையேனல்லேனென்கிறார்.) 2
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறித்தன் கோலச் செந்தாமரைக் கண்
உறைபவன் போல ஓர் யோகு புணர்ந்த ஒளி மணி வண்ணன் கண்ணன்
கறை அணி மூக்குடைப் புள்ளைக் கடாவி அசுரரைக் காய்ந்த அம்மான்
நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2
குறைவு இல் தட கடல்,Kuraivu il thada kadal - குறையற்ற (பரிபூர்ணமான) விசாலமான திருப்பாற் கடலிலே
கோள் அரவு ஏறி,Kol aravu eri - மிடுக்கனான திருவனந்தாழ்வான் மீது ஏறி
தன்,Than - தன்னுடைய
கோலம்,Kolam - அழகிய
செம் தாமரை கண்,Sem thaamarai kan - செந்தாமரை போன்ற திருக்கண்கள்
உறைபவன் போல,Uraipavan pola - துயிலப் பெற்றவன் போல
ஓர் யோகு புணர்ந்த,Or yogu punarntha - யோக நித்திரை செய்தருள்கின்ற
ஒளி மணிவண்ணன்,Oli manivannan - அழகிய நீலமணி போன்ற நிறத்தனும்
கண்ணன்,Kannan - கண்ணனாய்த் திருவவதரித்தவனும்
கறை அணி மூக்கு உடை,Karai ani mookku udai - கறையை அணிந்த மூக்குடையவனான
புள்ளை,Pullai - பக்ஷி ராஜனை
கடாவி,Kadaavi - நடத்தி
அசுரரை காய்ந்த,Asurarai kaaintha - அசுரர்களை முடித்தவனுமான
அம்மான்,Ammaan - எம்பெருமானுடைய
நிறை புகழ்,Nirai pugazh - நிறைந்த புகழை
யான்,Yaan - நான்
ஏத்தியும்,yethiyum - துதித்தும்
பாடியும்,Paadiyum - இசையில் அமைத்துப் பாடியும்
ஆடியும்,Aadiyum - கூத்தாடியும்
ஒரு முட்டு இலன்,Oru muttu ilan - (எம்பெருமானை யநுபவிப்பதில் ) ஒரு தடையுமுடையேனல்லேன்.
2998திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (எம்பெருமானுடைய போக்யதையை அநுஸந்தித்து அவனுக்கு அடிமை செய்வதிலேயே ஊன்றியிருக்குமெனக்கு ஒரு அச்சமுமில்லையென்கிறார்.) 3
முட்டு இல் பல் போகத்து ஒரு தனி நாயகன் மூவுலகுக்கு உரிய
கட்டியைத் தேனை அமுதை நன் பாலைக் கனியைக் கரும்பு தன்னை
மட்டு அவிழ் தண் அம் துழாய் முடி யானை வணங்கி அவன் திறத்துப்
பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3
முட்டு இல்,Muttu il - இடையூறொன்றுமில்லாத
பல் போகத்து,Pal pogaththu - பலவகையான போகங்களையுடையவனும்
ஒரு தனி நாயகன்,Oru thani nayakan - ஒப்பற்ற தலைவனும்
மூ உலகுக்கு உரிய,Moo ulakukku uriya - மூவுலகத்தவர்கட்கும் பொதுவிலே போக்யமான
கட்டியை,Kattiyai - கருப்பங்கட்டி போன்றவனும்
தேனை,Thenai - தேன் போன்றவனும்
அமுதை,Amuthai - அமிருதம் போன்றவனும்
நல் பாலை,Nal paalai - நல்ல பால்போன்றவனும்
கனியை,Kaniyai - கனி போன்றவனும்
கரும்பு தன்னை,Karumbu thannai - கரும்பு போன்றவனுமாய்
மட்டு அவிழ்,Mattu avizh - மது பெருகப்பெற்ற
தண் அம் துழாய் முடியானை,Than am thulazhai mudiyaanai - குளிந்தழகிய திருத்துழாய் மாலையைத் திருமுடியிலணிந்த வனுமான எம்பெருமானை
வணங்கி,Vanangi - நமஸ்கரித்து
அவன் திறத்து,Avan thirathu - அவன் விஷயத்திலே
பட்ட பின்னை,Patta pinnai - ஆட்பட்டோனாதாலால்
யான்,Yaan - இப்படிப்பட்ட அடியேன்
இறை ஆகிலும்,Irai akilum - சிறிதளவும்
என் மனத்து,En manathu - என் மனத்தில்
பரிவு இலன்,Parivu ilan - பீடையையுடையே னல்லேன்.
2999திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தேவதாந்தரங்களைப் பற்றினவர்களுக்கு அவர்கள் ரக்ஷகரல்லர் என்பதையும், தன்னைப் பற்றினவர்களைத் தான் கைவிடுவதில்லையென்பதையும் நன்கு காட்டிக்கொடுத்த எம்பெருமானைப் பற்றினவெனக்கு ஒரு குறையுமில்லையென்கிறார்.) 4
பரிவு இன்றி வாணனைக் காத்தும் என்று அன்று படையொடும் வந்து எதிர்ந்த
திரிபுரம் செற்றவனும் மகனும் பின்னும் அங்கியும் போர் தொலையப்
பொரு சிறைப் புள்ளைக் கடாவிய மாயனை ஆயனைப் பொன் சக்கரத்து
அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4
அன்று,Anru - முன்பொருகாலத்தில்
வாணனை,Vaananai - பாணாசுரனை
பரிவு இன்றி,Parivu indri - வருத்தமின்றியே
காத்தும் என்று,Kaaththum enru - ‘காக்கக்கடவோம்’ என்று அபிமானித்து
படையொடுங்,Padaiyodung - ஆயுதங்களோடு கூட
வந்து எதிர்ந்த,Vandhu ethirntha - வந்து எதிரிட்ட
திரிபுரம் பெற்றவனும்,Thiripuram petrravanum - த்ரிபுரதஹநம் செய்தவனான சிவபிரானும்
மகனும்,Makanum - அவன் மகனான ஆறுமுகனும்
பின்னும்,Pinnum - அதற்குமேலே
அங்கியும்,Angiyum - அக்நியும்
போர்,Por - போர்க்களத்திலே
தொலைய,Tholaiya - பங்கமடையும்படி,
பொரு சிறை புள்ளை கடாவிய மாயனை,Poru sirai pullai kadaviya maayanai - பொருநின்ற சிறகையுடைய பக்ஷிராஜனை கடத்திய ஆச்சர்ய சக்தியுக்தனும்
ஆயனை,Aayanai - கோபாலக்ருஷ்ணனாய் அவதரித்தவனும்
பொன்சக்கரத்து,Ponsakkarathu - அழகிய திருவாழியையுடையவனாய்க் கொண்டு
அரியினை,Ariyinai - விரோதிகளை அழியச் செய்பவனும்
அச்சுதனை,Achchuthanai - அடியார்களைக் கைவிடாதவனுமான எம்பெருமானை
பற்றி,Patri - அடைந்து
யான்,Yaan - அடியேன்
இறையேனும்,Iraiyenum - சிறிதளவும்
இடம் இவன்,Idam ivan - இடைஞ்சலுடையே னல்லேன்.
3000திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (வைதிகன் பிள்ளைகளைக் கொணர்ந்து கொடுத்த அதிமாநுஷ சேஷ்டிதத்தை அநுஸந்தித்து, இங்ஙனே அரியன செய்தும் அடியார்களைக் காத்தருளவல்ல பெருமானைப் பற்றின வெனக்கு யாதொரு துயருமில்லையென்கிறார்.) 5
இடர் இன்றியே ஒருநாள் ஒரு போழ்தில் எல்லா உலகும் கழியப்
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏறத் திண் தேர் கடவிச்
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5
ஒருநாள்,Orunaal - ஒரு நாளிலே
ஒரு போழ்தில்,Oru pozhdhil - ஒரு அவஸரத்திலே
எல்லா உலகும் கழிய,Ellaa ulagam kazhiya - எல்லா வுலகங்களுக்கும் அப்பால்போம்படியாக,
படர் புகழ் பார்த்தனும்,Padar pugazh paarthanum - பரம்பின புகழை யுடையனான அர்ஜுநனும்
வைதிகனும்,Vaidhikanum - வைதிகப்பிராமணனும்
உடன் ஏற,Udan era - கூடவே ஏறி வரும்படி
இடர் இன்றியே,Idar indriye - இடைஞ்சல் ஒன்றுமின்றி
திண் தேர் கடவி,Thin ther kadavi - திடமான திருத்தேரைச் செலுத்தி
சுடர் ஒளி ஆய்கின்ற,Sudar oli aayginra - மிகவும் சிறந்த தேஜோ மயமாயிராநின்ற
தன்னுடை சோதியில்,Thannudai sothiyil - தன்னுடையதாய் பரஞ்சோதியெனப்படுமதான திருநாட்டிலே
வைதிகன் பிள்ளகைளை,Vaidhikan pillakalai - அந்த வைதிகனுடைய பிள்ளைகள் நால்வரையும்
உடலொடும்,Udalodum - அவ்வுடம்போதே
கொண்டு கொடுத்தவனை,Kondu koduththavanai - மீட்டுக்கொணர்ந்து கொடுத்தருளின பெருமானை
பற்றி,Patri - அடைந்து (அதனால்)
ஒன்றும் துயர் இலன்,Ondrum thuyar ilan - சிறிதும் துயமுடையே னல்லேன்
3001திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (தன்னுடைய அப்ராக்ருதமான திவ்யமான விக்ரஹத்தை இதரஸஜாதீயமாக்கி ஸம்ஸாரிகளின் கட்புலனுக்கு இலக்காக்கி வைத்த கண்ணபிரானுடைய திருக்குணங்களை அனுபவிக்கப் பெற்றவெனக்கு ஒரு துன்பமுமில்லை யென்கிறார்.) 6
துயர் இல் சுடர் ஒளி தன்னுடைச் சோதி நின்ற வண்ணம் நிற்கவே
துயரின் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண் காண வந்து
துயரங்கள் செய்து தன் தெய்வ நிலை உலகில் புக உய்க்கும் அம்மான்
துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6
துயர் இல்,Thuyar il - துன்பமுற்றதும்
சுடர் ஒளி,Sudar oli - சிறந்த தேஜோரூபமுமான
தன்னுடைய சோதி,Thannudaiya sothi - தன்னுடைய விக்ரஹமானது
நின்ற வண்ணமே நிற்க,Nindra vannamae nirka - அங்கு இருக்கும்படியிலொன்றுங் குறையாமே நிற்கும்படியாக
துயரில் மலியும் மனிசப் பிறவியில் தோன்றி,Thuyaril maliya manisap piraviyil thonri - துக்கத்திலே யழுந்தின மனிதருடைய னோனிகளிலே பிறந்து.
கண் காண வந்து,Kan kaana vandhu - (அனைவரும்) கண்ணாற் காணும்டியாக வந்து
துயரங்கள் செய்து,Thuyarangal seithu - (அனைவரையும் ) ஈடுபடுத்தி
தன் தெய்வம் நிலை,Than deivam nilai - தன்னுடைய அப்ராக்ருத ஸ்வபாவத்தை
உலகில்,Ulagil - இவ்வுலகத்தின் கண்
புக உய்க்கும்,Puga uykkum - பிரசுரப்படுத்தின
அம்மான்,Ammaan - ஸ்வாமியாய்
துயரம் இல் சீர்,Thuyaram il seer - ஹேய குணங்கள் இன்றிக்கே கல்யாணகுண மயனாய்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனான
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
புகழ்,Pugazh - கீர்த்திகளை
துற்ற யான்,Thutra yaan - அநுபவிக்கப்பெற்றநான்
ஓர் துன்பம் இலன்,Or thunbam ilan - ஒரு துன்பமுமுடையே னல்லேன்
3002திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (புண்யபாய ரூபகருமங்களுக்கும், அவற்றைச் சம்பாதிப்பதற்குரிய இடமான லோகங்களுக்கும், அவற்றின் பலன்களை யனுபவிக்குமிடான லோகங்களுக்கும், அப்பலன்களை அனுபவிக்குமவர்களான ஆன்மாக்களுக்கும் நியாமகனாய் லீலாரஹமநுபவிக்கின்ற எம்பெருமானை யடையப் பெற்றதனால் ஒருவகையான அல்லலும் தமக்கில்லை யென்கிறார்.) 7
துன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் உலகங்களுமாய்
இன்பம் இல் வெந் நரகாகி இனிய நல்வான் சுவர்க்கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல மாய மயக்குகளால்
இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7
துன்பமும் இன்பமும் ஆகிய,Thunbamum inbamum aagiya - துக்கத்திற்கும் சுகத்திற்கும் காரணமாகக் கூடிய
செய் வினை ஆய்,Sei vinai aay - புண்ய பாபரூப கருமங்களுக்கு நிர்வாஹனாய்
இனிய நல்வான் சுவர்க்கங்களும் ஆய்,Iniya nalvaan suvarkkangallum aay - மிகவும் நன்றாய்ச் சிறந்த ஸ்வர்க்க ப்ரதேசங்களுக்கும் நிர்வாஹகனாய்
மன் பல் உயிர்களும் ஆகி,Man pal uyirkalum aagi - நித்யரான வல பிராணிகளுக்கும் நிர்வாஹகனாய்
பல பல மாயம் மயக்குக்களால்,Pala pala maayam mayakkukkalal - பலவகைப்பட்ட ப்ரக்ருதி விகாரரூபமான மோஹ விகாரங்களாலே
உலகங்களும் ஆய்,Ulagangalum aay - உலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
இன்பம் இல் வெம் நரக ஆகி,Inbam il vem naraga aagi - இன்பமற்றகொடிய நரகலோகத்திற்கும் நிர்வாஹகனாய்
இன்பு உறும் இ விளையாட்டு உடையானை,Inbu urum i vilaiyaattu udaiyanai - ரஸாவஹமான விளையாடல்களை யுடையவனான எம்பெருமானை
பெற்று,Petru - அநுபவிக்கப்பெற்றதனால்
ஏதும் அல்லல் இலன்,Edhum allal ilan - சிறிதும் துக்கமுடையே னல்லலேன்
3003திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (முன்னரண்டிகளால்-திருநாட்டில் எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிருப்பையும், பின்னடிகளால்-அவன் இந்நிலத்திற் செய்தருளுஞ் செயல்களையும் பேசி, இப்படிப்பட்ட எம்பெருமானையடையப் பெற்றதனால் தமக்கு யாதொரு துக்கமுமில்லையென்கிறார்.) 8
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து எங்கும் அழகு அமர்சூழ் ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்
எல்லை இல் ஞானத்தன் ஞானம் அஃ தேகொண்டு எல்லாக் கருமங்களும் செய்
எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8
அல்லல் இல் இன்பம்,Allal il inbam - வருத்தம் சிறிதுங்கலசாத ஆனந்தகுணம்
அளவு இறந்து,Alavu irandhu - அளவில்லாமல் இருக்கப்பெற்று
எங்கும் அமர்,Engum amar - எங்கும் பரம்பின
அழகு சூழ் ஒளியன்,Azhagu soozh oliyan - ஸௌந்தர்யத்தோடு சேர்ந்த லாவண்யமத்தையுடையவனாய்
அல்லி மலர் மகள்,Alli malar magal - தாமரை மலரில் தோன்றிய பெரிய பிராட்டியோடு
போகம்,Bogam - ஆனந்தானுபவத்தினாலுண்டாகிய
மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான்,Mayakkugal aagiyum nirkum ammaan - வியாமோஹமே வடிவெடுத்திருக்கின்ற பெருமானாய்
எல்லை இல் ஞானத்தன்,Ellai il gnanathan - எல்லையில்லாத ஞான விளக்கத்தையுடையனாய்
ஞானம் அஃதே கொண்டு,Gnanam akthey kondu - அந்த ஞானத்øதையே கருவியாகக் கொண்டு
கருமங்கல் எல்லாமும் செய்,Karumangal ellaamum sei - காரிவுலகங்களையெல்லாம் உண்டாக்குமவனாய்
எல்லை இல்மாயனை,Ellai ilmaayanai - எல்லையில்லத ஆச்சரியசேஷ்டிதங்களையுடையவனான
கண்ணனை,Kannanai - ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவை
தாள் பற்றி,Thaal patri - திருவடி தொழுது
யான் ஓர் துக்கம் இலன்,Yaan or thukkam ilan - நான் ஒரு துக்கமுமுடைய னல்லேன்
3004திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (சிவன் பிரமன் முதலாய எல்லாரையும் மற்று மெல்லாப் பொருள்களையும் பிரளயங் கொள்ளாமே திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்குமவனான எம்பெருமானை நான் அடையப் பெற்றதனால் ஒரு தளர்வுமுடையே னல்லேன் என்றாராயிற்று.) 9
துக்கம் இல் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி துழாய் அலங்கல் பெருமான்
மிக்க பன் மாயங்களால் விகிர்தம் செய்து வேண்டும் உருவுகொண்டு
நக்க பிரானோடு அயன் முதலாக எல்லாரும் எவையும் தன்னுள்
ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9
துக்கம் இல் ஞானம்,Thukkam il gnanam - அஜ்ஞானம் கலசாத ஞானத்தை யுடையனாய்
சுடர் ஒளி மூர்த்தி,Sudar oli moorthi - மிகுந்த தேஜோரூபமான விக்ரஹத்தையுடையனாய்
துழாய் அலங்கல் பெருமான்,Thulasi alangal perumaan - திருத்துழாய் மாலையையணிந்த பெருமானாய்,
மிக்க பல்மாயங்களால்,Mikka palmaayangalal - மிகப் பலவகைப்பட்ட ஆச்சரிய சக்திகளாலே
வேண்டும் உருவு கொண்டு,Vendum uruvu kondu - இஷ்டமான உருவங்களைப் பரிக்ரஹித்து
விகிருதம் செய்து,Vikrutham seithu - விலக்ஷணசேஷ்டிதங்களைச் செய்யுமவனாய்,
நக்கபிரானோடு,Nakkabiraanodu - திகம்பரச் சாமியான சிவபெருமானும்
அயன்,Ayan - பிரமனும்
முதல் ஆக,Mudhal aaga - முதலாக
எல்லாரும்,Ellarum - சேதநர்களெல்லாரையும்
எவையும்,Evaiyum - அசேதனங்களெல்லாவற்றையும்
ஒக்க,Okka - ஒரு சேர
தன்னுள் ஒடுங்க,Thannul odunga - தனக்குள்ளடங்குமாறு
விழுங்க வல்லானை பெற்று,Vizhunga vallaanaipetru - (பிரளகாலத்தில்) விழுங்கி ரக்ஷிக்கவல்லவனான எம்பெருமானை யடைந்ததனால்
ஒன்றும் தளர்வு இலன்,Ondrum thalarvu ilan - சிறிதும் தளர்ச்சியுடையே னல்லேன்
3005திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (அனைவர்க்கும் அந்தராத்ம பூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார்.) 10
தளர்வு இன்றியே என்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானம் ஒன்றாய்
அளவுடை ஐம்புலன்கள் அறியா வகையால் அருவாகி நிற்கும்
வளர் ஒளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரைக்
கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10
என்றும்,Endrum - எக்காலத்திலும்
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
தளர்வு இன்றியே,Thalarvu indriye - ஆயாஸமில்லாமல்
பரந்த,Parandha - வியாபித்திருக்குமவனாய்,
தனி முதல் ஞானம்,Thani mudhal gnanam - அத்விதீயமாய் ஸமஸ்த காரணமான ஞானமே வடிவெடுத்தவனாய்
அளவு உடை,Alavu udai - அளவுபட்ட
ஐம் புலன்கள்,Aimbulangal - இந்திரியங்கள் ஐந்தினாலும்
அறியாவகையால்,Ariyaavagaiyaal - அறியக்கூடாதபடி
அரு ஆகி நிற்கும்,Aru aagi nirkum - நிரவயவஸ்ரூபனாயிருக்குமவனாய்,
வளர் ஒளி ஈசனை,Valar oli eesanai - வளர்கின்ற வொளியையுடைய ஸ்வாமியாய்
மூர்த்தியை,Moorthiyai - விலக்ஷண விக்ரஹயுக்தனாய்
பூதங்கள் ஐந்தை,Boothangal aindhai - பஞ்சபூத நிர்வாஹகனாய்
கிளர் ஒளி மாயனை,Kilar oli maayanai - ஒளி பொருந்தி மேன்மேலுங் கிளர்கின்ற ஆச்சர்ய சேஷ்டைகளை யுடையனான
கண்ணனை,Kannanai - கண்ணபிரானை
தாள் பற்றி,Thaal patri - திருவடிதொழப்பெற்றதனால்
யான் என்றும் கேடு இலன்,Yaan endrum kedu ilan - யான் ஒருநாளும் கேடு உடையேனல்லேன்.
3006திருவாய்மொழி || (3-10–சன்மம் பலபல) (திருமால் சீர் பரவப்பெற்ற எனக்கு ஒரு குறையும் இல்லை எனல்.) (நித்யாஸித்த கல்யாண்குண பூஷிதனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கட்கு உபயவிபூதி ஸாம்ராஜ்யமும் குறையற உண்டாம்படி எம்பெருமான் அநுக்ரஹம் செய்தருள்வன் என்றாறாயிற்று.) 11
கேடு இல் விழுப் புகழ்க் கேசவனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் பயிற்ற வல்லார்க்கு அவன்
நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை ஊர்தி பண்ணி
வீடும் பெறுத்தித் தன் மூவுல குக்கும் தரும் ஒரு நாயகமே.–3-10-11
கேடு இல்,Kedu il - ஒருநாளுமழில்லாத
விழு புகழ்,Vizhu pugazh - சிறந்த புகழையுடையனான
கேசவனை,Kesavanai - எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன
பாடல் ஓர் ஆயிரத்துள்,Paadal or aayirathul - ஓராயிரம் பாசுரங்களினுள்ளே
இவையும் ஒரு பத்தும்,Ivaiyum oru paththum - இப்பதிகத்தை
பயிற்றவல்லார்கட்கு,Payittravallaarkadku - ஓதவல்லவர்களுக்கு
அவன்,Avan - அந்த எம்பெருமான்
நாடும் நகரமும்,Naadum nagaramum - சிறியார் பெரியாரென்கிறவாசியின்றிக்கே அனைவரும்
நன்குடன் காண,Nankudan kaana - நன்றாகக் காணும்படி
நலன் இடை ஊர்தி பண்ணி,Nalan idai oorthi panni - பகவத் பாகவத் விஷயத்தில் அடிமைச் செல்வத்தோடே நடக்கும்படி பண்ணி
வீடும் பெறுக்கி,Veedum perukki - மோக்ஷானந்தத்தையும் அடைவித்து
தன் மூவுலக்கும்,Than moovulakkum - தன்னுடையதான மூவுலகங்கட்கும்
ஒரு நாயகம்,Oru naayagam - ஏகாதிபதியாயிருக்கும் சிறப்பையும்
தரும்,Tharum - தந்தருள்வன்
3007திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்களுங்கூட நாளடைவிலே தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கட்கூடாகக் காணப்பெறலாயிருக்குமாகையாலே நித்ய ஸ்ரீமானான எம்பெருமானைப் பணிவதே பாங்கு என்கிறார்.) 1
ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1
ஒரு நாயகம் ஆய்,Oru nayagam aayi - பூமண்டலம் முழுமைக்கும் அத்விதீயப்ரபுவாய்
ஓட,Oda - வெகுகாலமளவும்
உலகுஉடன்,Ulaguudan - உலகங்களை யெல்லாம்
ஆண்டவர்,Aandavar - அரசாட்சி புரிந்தவர்கள்
கரு நாய் கவர்ந்த காலர்,Karu naai kavarntha kaalar - (ஒரு காலவிசேஷத்திலே தரித்ரர்களாகி) கரிய நாய்களால் கவ்வப்பட்ட கால்களையுடையவராயும்
சிதைகிய பானையர்,Sithaigiya paanaiyar - உடைந்த பிச்சைப் பாத்திரத்தையுடைவர்களாயும் ஆகி
பெரு நாடு காண,Peru naadu kaana - உலகமெல்லாம் திரண்டுவந்து (பலிபவத்தை) காணும்படியாக
இம்மையிலே,Immaiyile - இப்பிறவியிலேயே
தாம்,Thaam - தாங்களே
பிச்சை கொள்வர்,Pichchai kolvar - பிச்சை யெடுப்பர் (செல்வத்தின் தன்மை இத்தகையதாதலால்)
திரு நாரணன்,Thiru Naaranan - ஸ்ரீ மந்நாராயணனுடைய
தாள்,Thaal - திருவடிகளை
காலம்பெற,Kaalampera - விரைவாக
சிந்தித்து,Sindhiththu - தியானித்து
உய்ம்மின்,Uymmmin - உஜ்ஜூவியுங்கோள்.
3008திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மஹாப்ரபுக்களாயிருந்து நெடுங்காலம் தாங்கள் ஆண்ட ராஜ்யங்களை யிழப்பார் என்றது கீழ்ப்பாட்டில்; அரசாளுகிற நாளில் போக்யைகளாகக் கைக்கொண்ட மடவார்களையும் பகைவர்க்குப் பறிகொடுத்துப் பரிதாபப்படுவர்களென்கிறாரிதில்) 2
உய்ம்மின் திறை கொணர்ந்து’ என்று உலகு ஆண்டவர் இம்மையே
தம் மின்சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமைதின்பர்கள்;
செம்மின் முடித் திரு மாலை விரைந்து அடி சேர்மினோ. –4-1-2
திறை கொணர்ந்து,Thirai konarnthu - செலுத்தவேண்டிய கப்பத்தைக் கொண்டுவந்து கட்டி
உய்ம்மின் என்று,Uymmin endru - பிழைத்துப்போங்கள் என்று கட்டளையிட்டுக்கொண்டு
உலகு,Ulagu - இவ்வுலகத்தை
ஆண்டவர் தாம்,Aandavar thaam - அரசுபுரிந்த பிரபுக்கள் தாம்
இம்மையே,Immaiye - இப்பிறப்பிலேயே
தம்,Tham - தங்களுடைய
இன் சுவை மடவாரை,In suvai madavaarai - பரமபோக்யைகளான ஸ்திரீகளை
பிறர்கொள்ள,Pirarkolla - அயலார் கவாந்துகொள்ளும்படி
விட்டு,Vittu - கையிழந்து
வெம் மின் ஒளி வெயில்,Vem min oli veyil - கொடி தாய் மின்னொளி பரக்கின்ற வெயிலையுடைய
கானகம் போய்,Kaanagam poyi - காட்டிலே சென்று
குமை தின்பர்கள்,Kumai dinbargal - திண்டாடுவர்கள்; (ஆதலால்)
செம் மின் முடி,Sem min mudi - செவ்விய காந்திபெற்ற திருமுடியையுடைய
திரு மாலை,Thiru maalai - திருமகள் கொழுநனை
விரைந்து,Viraindhu - விரைவாக
அடி சேர்மின்,Adi saermin - அடி பணியுங்கோள்.
3009திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே வாழ்ந்தவர்கள் அந்தச் செல்வக் கிடப்பை யிழந்து ஒருவரும் மதியாதபடி யாவர்களென்கிறார்.) 3
அடி சேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ.–4-1-3
அடிசேர் முடியினர் ஆகி,Adiser mudiyinar aagi - தமது காலிலேபடிந்த கிரிடத்தையுடையவராகி
அரசர்கள் தாம்,Arasargal thaam - மஹாப்ரபுக்கள்
தொழ,Thozha - வணங்கும்படியாகவும்
இடி சேர் முரசங்கள்,Idi ser murasangal - இடியோடு ஒத்த பேரிகைகள்
முற்றத்து,Mutrathu - தம் தம் மாளிகைமுற்றத்திலே
இயம்ப,Iyamba - முழங்கும்படியாகவும்
இருந்தவர்,Irundhavar - வாழ்ந்தவர்கள்
பொடி சேர்துகள் ஆய் போவர்கள்,Podi serthugal aay povargal - பொடியோடு பொடியாய்த் தொலைந்து போவர்கள்;
ஆதலின்,Aadhalin - ஆதலால்
நொக்கென,Nokkena - விரைவாக
கடி சேர் துழாய் முடி,Kadi ser thulasi mudi - நறுமணம்மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடைய
கண்ணன்,Kannan - கண்ணபிரானுடைய
கழல்கள்,Kazhalgal - திருவடிகளை
நினைமின்,Ninaimin - சிந்தியுங்கள்.
3010திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (மதிப்பு கெடுவதுமாத்திரமன்றிக்கே ஆயுளும் நிலைநில்லாதாகையாலே எம்பெருமான் திருவடிகளை வணங்குகளென்கிறார்.) 4
நினைப்பான் புகில் கடல் எக்கலின் நுண்மணலின் பலர்
எனைத்தோர் யுகங்களும் இவ்வுலகு ஆண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ.–4-1-4
நினைப்பான் புகில்,Ninaippaan pugil - ஆலோசித்துப் பார்க்குமிடத்து
எனைத்தோர் உலகங்களும்,Enaiththoor ulagangalum - அநேகயுகங்கள்
இ உலகு ஆண்டு கழித்தவர்,I ulagu aandu kazhiththavar - இவ்வுலகத்தையாண்டு முடிந்து போனவர்கள்
கடல் எக்கலில் நுண் மணலில் பலர்,Kadal ekkalil nun manalil palar - கடலில் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை காட்டிலும் அதிகமான தொகையுள்ளவர்களாவர்;(எப்படிப்பட்ட பிரபுக்களும்)
மனைப்பால்,Manaippaal - தாங்களிருந்த வீட்டின் இடம்
மருங்கு அற,Marungu ara - சுற்றுப்பக்கங்களோடும்கூடத் தொலையும்படி
மாய்தல் அல்லால்,Maaythal allaal - அழிந்து போவது தவிர
மற்ற கண்டிலம்.,Matra kandilam - வேறொன்றும் பார்த்தோமில்லை; (ஆதலால்)
பனை தாள்,Panai thaal - பனைமரம் போன்ற அடியையுடைய
மத களிறு,Matha kaliru - (குவலயபீடமென்னும்) மதயானையை
அட்டவன்,Attavan - கொன்றொழிந்த கண்ணபிரானுடைய
பாதம்,Paadham - திருவடிகளை
பணிமின்,Panimin - வணங்குங்கள்.
3011திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (சிற்றின்பத்தின் நுகர்ச்சியும் அஸ்திரமாதலால் எம்பெருமானுடைய திருநாமத்தைச் சொல்லி வாழுங்களென்கிறார்.) 5
பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுது உண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாம் இழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ.–4-1-5
அம் சீதம் பை பூ பள்ளி,Am seetham pai poo palli - அழகும் குளிர்ச்சியும் விஸ்தாரமுமுள்ள பூம்படுக்கையிலே
திரு அருள் பணிமின் என்னும்,Thiru arul panimin ennum - (மாதர்காள்!) கிருபை பண்ணவேணும்’ என்று பிரார்த்திப்பவர்களாய்
அணி மென் குழலார் இன்பம் கலவி அமுது உண்டார்,Ani men kuzhalar inbam kalavi amudhu undaar - அழகிய மெல்லிய கூந்தலையுடைய மாதர்களின் சிற்றின் பக்கவலியமுதத்தை அனுபவித்தவர்களானவர்கள்
துணி முன்பு நால,Thuni munbu naala - அரைத்துணி (பின் பக்கத்திற்கு எட்டம் போராமல்) முன்புறத்தில்மாத்திரம் தொங்கும்படியான ஏழையையடைந்து
பல் ஏழையர் தாம் இழிப்ப,Pal yezhaiyar thaam izhippa - பல மாதர்கள் இழிவாகக் கூறி யேசும்படி
செல்வர்,Selvar - (பிச்சையெடுக்கப் போவர்கள்;) (ஆதலால்)
மணி மின்னு மேனி,Mani minnu meni - நீலமணிபோல் மின்னுகின்ற திருமேனியையுடைய
நம் மாயவன்,Nam maayavan - எம்பெருமானுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்லி,Solli - ஸங்கீர்த்தனம் பண்ணி
வாழ்மின்,Vazhmin - வாழுங்கள்.
3012திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (ஸ்ருஷ்டி காலந்தொடங்கி இன்றளவும் செல்வம் குன்றுமே ஜீவித்தார் ஒருவரையும் கண்டிலோமென்கிறார்.) 6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்
ஆழ்ந்தார் கடற்பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6
வாழ்ந்தார்கள் வாழ்ந்தது,Vaazhnthaarkal vaazhndhadhu - நன்றாக வாழ்ந்தவர்களென்று நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்த வாழ்வைப் பேசப்புகுந்தால்,
மாமழை மொக்குளின்,Maamalai mokkulilin - பெருமழையில் தோற்றும் நீர்க்குமிழிபோலே
மாய்ந்து மாய்ந்து,Maindhu maayndhu - அழிந்தழிந்து
ஆழ்ந்தார் என்று அல்லால்,Aazhnthar endru allaal - அதோகதியைபடைந்தனர் என்று சொல்லப்படுவது தவிர
அன்று முதல்,Andru mudhal - பரஹ்மஸ்டிருஷ்டி காலம் தொடங்கி
இன்று அறுதியா வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை,Indru arudhiya vaazhnthaarkal vaazhndhae nirpar enpathu illai - வாழ்ந்தவர்கள் ஒரு தன்மையாக வாழ்ந்தேயிருத்தல் கிடையாது;
நிற்குறில்,Nirguril - நிலைநின்ற வாழ்வடைய வேண்டில்
ஆழ்ந்து ஆர் கடல் பள்ளி,Aazhndhu aar kadal palli - ஆழமாகி நிறைந்த திருப்பாற்கடலில் துயில்கின்ற
அண்ணல்,Annal - ஸ்வாமிக்கு
அடியவர் ஆமின்,Adiyavar aamin - அடிமைப்பட்டிருங்கள்
3013திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (தேஹ போஷணத்திற்கு ஹேதுவான அன்னபானம் முதலிய போகமும் அநித்யமாகையாலே ஸகலகாரணபூதனான ஸர்வேச்வரனுடைய திருக்குணங்களை அநுஸந்தியுங்கோளென்கிறார்.) 7
ஆமின் சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்ந்த பின்
தூமென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்,
‘ஈமின் எமக்கு ஒரு துற்று’என்று இடறுவர் ; ஆதலின்,
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.–4-1-7
ஆம் இன்சுவை அவை அடிசில் ஆறோடு,Aam inchuvai avai adichil aarodu - பரமயோக்யமாய் ஷட்ரஸோபேதமான அன்னத்தை
உண்டு ஆர்ந்தபின்,Undu aarindhapin - வயிறாரவுண்டு தீர்ந்த பின்பும்
துர் மெல் மொழி மடவார் இரக்க,Thur mel mozhi madavaar irakka - வெகு அழகாகப் பேசவல்ல மாதர்கள் வேண்டிக்கொள்ள
பின்னும்,Pinnum - மேலும் (அந்த வேண்டுகோளை மீறமுடியாமல்)
துற்றுவார்,Thutruvaar - தின்றுகொண்டிருந்தவர்கள்
எமக்கு ஒரு துற்று ஈ மின் என்று,Emmakku oru thutru ee min endru - (அப்படி யிருப்பதற்கான செல்வம் அழந்தவளவிலே) ‘எமக்கு ஒரு கவளம் கொடுங்கள்’ என்று சொல்லிக்கொண்டு
இடறுவர்,Idaruvar - தடுமாறிச் செல்வர்கள்;
ஆதலின்,Aadalin - ஆதலால்
துழாய் முடி,Thuzhai mudi - திருத்துழாயையணிந்த திருமுடியையுடைய
ஆதி அம் சோதி,Aathi am sodhi - ஸர்வேச்வரனுடைய
குணங்கள்,Gunangal - திருக்குணங்களையே
கோமின்,Komin - சேர்த்து அனுபவியுங்கள்.
3014திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (அரசாட்சி புரிவதாகிய போகமும் எம்பெருமானருளாலன்றிக் கிடைக்கமாட்டாதென்றும், அங்ஙனமே கிடைக்கின்ற அதுதானும் நிலை நில்லாததென்றுமருளிச் செய்கிறார்.) 8
குணங்கொள் நிறை புகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும், ஆங்கு அவனை இல்லார்
மணங்கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
பணங்கொள் அரவணையான் திரு நாமம் படிமினோ.–4-1-8
குணம் கொள்,Gunam kol - குணசாலிகளும்
நிறை புகழ்,Nirai pugal - நிறைந்த கீர்த்தியை யுடையருமான
மன்னர்,Mannar - ராஜகுமாரர்களாய்
கொடை கடன் பூண்டு இருந்து,Kodai kadhan poontu irundhu - ஔதார்யத்தைக் கடமையாக ஏறிட்டுக் கொண்டிருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும்,Inanggi ulagu udan aakkilum - உலகங்களை ஸ்வாதீனப்படுத்தி ஆண்டாலும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த ஸர்வேசுரனை ஆச்ரயித்தவில்லாதவர்கள்
மணம் கொண்ட போகத்து,Manam konda bhogathu - மிகநல்ல போகங்களில்
மன்னியும்,Manniyum - பொருந்தியிருந்தாலும்.
மீனவர்கள்,Meenavargal - அதோகதியடைவர்கள்;
பணம் கொள்,Panam kol - படமெடுத்தாடுகின்ற
அரவு,Aravu - ஆதிசேஷனை
அணையான்,Anaiyaan - படுக்கையாகவுடைய ஸர்வேசுரனது
திரு நாமம்,Thiru naamam - திருநாமங்களை
படிமின்,Padimin - படியுங்கள்; (படித்தால்)
மீள்வு இல்லை,Meelvu illai - மீட்சியில்லாத பெருஞ்செல்வம் கிடைக்கும்.
3015திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாசுரங்களில் இஹலோகஸுகங்களின் ஹேயத்வத்தை அருளிச்செய்துவந்தார். இனி இரண்டு பாசுரங்களில், ஸ்வர்க்கலோக போகத்தினுடையவும் ஹேயத்வத்தையருளிச் செய்வாராய், இப்பாட்டில் ஸ்வர்க்க தவம்புரியுங்காலை நிலையை ஒன்றரையடியாலருளிச் செய்கிறார்.) 9
படிமன்னு பல்கலன் பற்றோடு அறுத்து,ஐம் புலன் வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடிமன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வு இல்லை;
கொடிமன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ. –4-1-9
படி மன்னு,Padi mannu - பரம்பரையாய் வருகின்ற
பல் கலன்,Pal kalan - பலபல ஆபரணங்களையும்
பற்றோடு அறுத்து,Patroodu aruthu - ஸவாஸநமாகவிட்டவர்களாய்
ஐம்புலன்,Aimbulan - பஞ்சேந்திரியங்களையும்
வென்று,Vendru - வசப்படுத்தினவர்களாய்
செடி மன்னு,Sedi mannu - தூறுமண்டிக்கிடக்கும்படியாக
காயம்,Kayam - சரீரத்தை
செற்றார்களும்,Settraarkalum - தவவிரதங்களால் வெறுக்கின்றவர்களும்
ஆங்கு,Aangu - அவ்விஷயத்தில்
அவனை இல்லார்,Avani illaar - அந்த எம்பெருமபானை ஆச்ரயித்தலில்லாதவர்கள்
குடி மன்னும்,Kudi mannum - வெகுகாலம் நிலைபெற்றிருக்கும்படியான
இன் சுவர்க்கம்,In suvargkam - இனிமையான சுவர்க்கத்தை
எய்தியும் மீன்வர்கள்,Eydhiyum meenvargal - அடைந்தும் திரும்புவர்கள்; (ஆதலால்)
கொடிமன்னு புள் உடை,Kodimannu pul udai - கருடத்வஜனான
அண்ணல்,Annal - ஸ்வாமியினுடைய
கழல்கள்,Kazhalkal - திருவடிகளை
குறுகுமின்,Kurugumin - கிட்டுங்கள்; (அப்படியாயின்)
மீள்வு இல்லை,Meelvu illai - என்று மீட்சியில்லாத பெருஞ் செல்வமுண்டாகும்.
3016திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (கீழ்ப்பாட்டிற்சொன்ன சுவர்க்கம்போலே அஸ்திரமல்லாமல் நிலை நின்ற மோக்ஷமான கைவல்யத்திலும் ஊற்றத்தைவிட்டு பகவத் கைங்கர்யத்தையே பரம ப்ராப்யமாகப் பற்றுங்களென்கிறார்.) 10
குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பெனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்,
சிறுக நினைவது ஓர் பாசம் உண்டாம்; பின்னும் வீடு இல்லை,
மறுகல் இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.–4-1-10
குறுக,Kuruga - பட்டிமேயாதபடி மனத்தைக் குறுக்கி
உணர்வத்தொடு,Unarvathodu - ஜ்ஞாநஸ்வரூபனான ஆத்மாவோடு
மிக நோக்கி,Miga nokki - நன்றாகச் சேர்த்து (ஆத்மஸாகூஷாத்காரித்தைப்பண்ணி)
எல்லாம் விட்ட,Ellaam vitta - (ஜச்வர்யம், பகவதநுபவம் முதலிய) எல்லாவற்றையும் வெறுத்தவனாய்
இறுகல் இறப்பு என்னும்,Irukal irapu ennum - ஸங்கோச மோக்ஷமாகிய கை வல்யமோக்ஷத்தில் விருப்பங்கொண்டவனான
ஞானிக்கும்,Gnaanikkum - ஜ்ஞாநயோக நிஷ்டனுக்கும்
அப்பயன் இல்லை ஏல்,Appayann illai ael - அந்த பகவதுபாஸநம் இல்லையாகில்
சிறுக,Siruga - அற்பமாக
நினைவது,Ninaivathu - நினைப்பதற்குறுப்பான
ஒர்பாசம் உண்டாம்,Orpasham undaam - ஒரு பந்தம் உண்டாகும்
பின்னும்,Pinnnum - அதற்குமேலே
வீடு இல்லை,Veedu illai - அந்தக் கைவல்ய மோக்ஷதட ஒரு நாளும் விட்டு நிங்குவதன்று;
மறுகல் இல்,Marugal ill - ஹேயப்ரதிபடனான
ஈசனை,Eesanai - எம்பெருமானை
பற்றி,Partri - ஆச்ரயித்து
விடாவிடில்,Vidaavidil - நீங்காவிடில்
அஃதே வீடு,Akdhe veedu - அதுவே பரமபுருஷார்த்தம்
3017திருவாய்மொழி || (4-1–ஒரு நாயகமாய்) (செல்வம் நிலையாமையும் திருமாலடிமையின் நிலைபேறும்) (துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
அஃதே உய்யப் புகும் ஆறு என்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய்கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற் பாலரே.–4-1-11
உய்யப் புகும் ஆறு,Uyyap pugum aaru - உஜ்ஜீவநோபாயம்
அஃதே என்று,Akdhe endru - திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
கழல்கள் மேல்,Kazhalkal mel - திருவடிகள் விஷயமாக
கொய் பூ,Koi poo - திருவடிகள் விஷயமாக
பொழில் சூழ்,Pozhil soozh - கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத் தவைரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வாருடைய
குற்றேவல்,Kutreval - வாசிக கைங்கர்ய ரூபமாயும்
செய் கோலத்து,Sei kolathu - ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற
ஆயிரம்,Aayiram - ஆயிரந்தொகையுள்ள
சீர் தொடை பாடல்,Seer thodai paadal - திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில்
இவை பத்தும்,Ivai pathum - இப்பத்துப் பாசுரங்களையும்
அஃகாமல்,Akhamal - குறைவின்றி
கற்பவர்,Karppavar - ஓதுமவர்கள்
ஆழ் துயர் போய்,Aazh thuyar poi - ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற
உய்யற்பாலர்,Uyyar paalar - உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர்.
3018திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (பண்டு ஆவிலையில் பள்ளிகொண்ட எம்பெருமானுடைய திருவடிகளிலே சாத்தின திருத்துழாயை இப்போது பெறவேணுமென்று என் மகள் (பாரங்குச நாயகி) ஆசைப்படுகின்றாளென்று திருத்தாயார் கூறுகின்றாள்.) 1
பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1
பாலன் ஆய்,Balan aay - சிறு குழவியாகி
பரிவு இன்றி,Parivu indri - அநாயாஸமாக
ஏழ் உலகு உண்டு,Ezhulagu undu - ஏழுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து
ஆல்இலை,Aalilai - ஆலந்தளிரிலே
அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - நித்திரை செய்தருளின
அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய
தாள் இணை மேல்,Thaal inai mel - உபய பாதங்களின் மீது
அணி,Ani - சாத்தப்பெற்ற
தண் அம்,Than am - குளிர்ந்தழகிய
துழாய் என்றே,Thuzai endre - திருத்துழாய்மாலை யென்றே வாய் வெருவிக்கொண்டு
வல் வினையேன் மட வல்லி,Val vinaiyen mada valli - வலிய பாபத்தைப் பண்ணின என்னுடைய இளங்கொடி போன்ற மகள்
மாலும்,Maalum - வ்யாமோஹிக்கின்றாள்;
ஆல்,Aal - அந்தோ!
3019திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள்.) 2
வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2
சூழ் வினையாட்டினேன்,Soozh vinaiyaattineen - மிகுந்த தீவினையை யுடையனோகிய என்னுடைய
பாவை,Paavai - பதுமை போன்ற பெண்ணானவள்
வல்லி சேர்,Valli ser - கொடி போன்று
நுண்,Nun - நுட்பமான
இடை,Idai - இடுப்பையுடைய
ஆய்ச்சியர்தம்மொடும்,Aaychiyarthammodum - கோபிமார்களோடுகூடி
கொல்லைமை செய்து,Kollaimai seydhu - வரம்புகடந்த செயல்களைச் செய்து
குரவை பிணைந்தவர்,Kuravai pinaindhavar - ராஸக்ரீடை செய்த கண்ணபிரானுடைய
நல் அடி மேல் அணி;,Nal adi mel ani; - அழகிய திருவடிகளின் மீது சாத்தின
நாறு துழாய் என்றே,Naru thuzhai endre - நறுமணம்மிக்க திருத்துழாயென்றே
சொல்லும்,Sollum - சொல்லுகின்றாள்;
ஆல்,Aal - அந்தோ!
3020திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (உலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள். மூலத்தில் “தேவர்கள் மாமுனிவரிறைஞ்சநின்ற சேவடி” என்றிவ்வளவேயுள்ளது: “உலகளந்த திருவடி” என்று வ்யக்தமாக இல்லை; “பாற்கடல் சோந்த பரமனுடைய அழகிய திருவடிகளிலே அணிந்த செம்பொற்றுழாயென்று இவள் கூப்பிடா நிற்குமென்கிறாள்” என்றருளிச்செய்தார் ஆறாயிரப்படியில் பிள்ளான். மற்ற வியாக்கியானங்களில்-“உலகளந்தருளனவன்; திருவடிகளிற் திருத்துழாயை ஆசைப்படாநின்றாளென்கிறாள்” என்றுள்ளது.) 3
பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3
பா இயல் வேதம்,Paa iyal vedham - சந்தஸ்ஸூக்கள் பொருந்திய வேதங்களாகிற
நல் பல மாலை கொண்டு,Nal pala maalai kondu - திவ்யமான பல மாலைகளைக் கொண்டு
தேவர்கள்,Devargal - தேவர்களும்
மா முனிவர்,Maa munivar - மஹா முனிகளும்
இறைஞ்ச நின்ற,Irainja ninra - ஆராதிக்கும்படி (உலகையளந்து) நின்ற
சே அடி மேல்,Se adi mel - திருவடிகளின் மேலே
அணி,Ani - அணிந்த
செம் பொன் துழாய் என்றே,Sem pon Thuzhai endre - செவ்விதமாய் விரும்பத்தக்கதான திருத்துழா யென்றே
கூவும்,Koovum - கூப்பிடா நின்றாள் (யாரென்னில்)
கோள் வினையாட்டியேன்,Kol vinaiyaattiyen - வலிய பாபத்தைப் பண்ணினவளான என்னுடைய
கோதை,Kodhai - சிறந்த கூந்தலையுடையளான பெண்பிள்ளை
3021திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (திருநாட்டி லெழுந்தருளி யிருக்கிற பராத்பரனுடைய திருவடிகளில் திருத்துழாயை என் மகள் ஆசைப்படாநின்றாளென்கிறாள்.) 4
கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4
ஊழ்வினையேன்,oozhvinaiyen - பெரும்பாவத்தை யுடையேனாகிற எனது
தட தோளி,thada tholi - பெருந் தோள்களை யுடையளான பெண் பிள்ளை
சமயிகள்,samayigal - சமயவாதிகள்
கோது இல்,kodhu il - குற்றமற்ற
வண் புகழ் கொண்டு,van pugazh kondu - விலக்ஷணமான குணங்களைக் கொண்டு
பேதங்கள் சொல்லி,pethangal solli - தாம்தாம் பற்றிய குணங்களின் ஏற்றங்களைச் சொல்லி
பிதற்றும் பிரான்,pitharum piraan - பிதற்றும்படியாகவுள்ள ஸ்வாமியான
பரன்,paran - பரம புருஷனுடைய
பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மேலே
அணி,ani - (நித்ய முக்தர்கள்) சாத்தின
பைம் பொன்,paim pon - பசும்பொன்போல் விரும்பத்தக்க
துழாய் என்றே ஓதும்,thuzhai endre odum - திருத்துழாயென்றே சொல்லுகின்றாள்.
ஆல்,aal - அந்தோ
3022திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (நப்பின்னைப் பிராட்டிக்காக எருதேழடர்த்த கண்ணபிரானுடைய திருவடிகளில் சாத்தின திருத்துழாய் விஷயமாகவே என் மகள் நைகின்றாளென்கிறாள்.) 5
தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5
என் தன் மாதர்,en than maadhar - எனது பெண்பிள்ளை
தோளி,tholi - அழகிய தோள்களையுடையவளும்
சேர்,ser - அநுரூபையுமான
பின்னை பொருட்டு,pinnai poruttu - நப்பின்னைப் பிராட்டிக்காக
எழ் எருது,ezh erudhu - ஏழு எருதுகளையும்
தழீ இக்கோளியார்,thazhee ikkoliyar - தழுவிக்கொண்டவரும் (அதாவது நிரஸித்தவரும்)
கோவலனார்,kovalanar - கோபால க்ருஷ்ணனாய் அவதரித்தவரும்
குடம் கூத்தனார்,kudam koothanar - குடக்கூத்தாடினவருமான கண்ணபிரானுடைய
தாள் இணைமேல்,thaal inai mel - உபய பாதங்களின்மேலே
அணி,ani - சாத்தின
தண் அம் துழாய் என்றே,than am thuzhai endre - குளிர்ந்தழகிய திருத்துழாயென்றே சொல்லி
நாளும் நாள்,naalum naal - நாள்தோறும்
நைகின்றது,naikinrathu - சிதிலையாகின்றாள்.
3023திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.) 6
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6
மா மாதர்,maa maadhar - சிறந்த அழகுடைய
மண் மடந்தை பொருட்டு,man madandhai poruttu - பூமிப் பிராட்டிக்காக
ஆதி அம் காலத்து,aadhi am kaalathu - முன்னொரு காலத்தில்
எனம் ஆய்,enam aai - வராஹ மூர்த்தியாய்
அகல் இடம்,agal idam - விபுலமான பூமண்டலத்தை
கீண்டவர்,keendavar - பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய
பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மீது
அணி,ani - சாத்தின
பைம் பொன் துழாய் என்றே,paim pon thuzhai endre - மிகவழகிய திருத்துழாயென்றே
ஓதும் மால்,oodhum maal - ஓதும்படியான வியாமோஹத்தை
என் தன் மடந்தை,en than madandhai - எனது பெண் பிள்ளை
எய்தினள்,eythinaL - அடைந்தாள்.
3024திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.) 7
மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்! என் மடக்கொம்பே.–4-2-7
வாள் நுதலீர்,vaal nudhaleer - ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்!
என் மட கொம்பு இவள்,en mada kombu ival - இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை
மடந்தையை,madandhaiyai - இளமைப் பருவமுள்ள
வண் கமலம் திரு மாதினை,van kamalam thiru maadhinai - அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை
தடம் கொள் தார் மார்பினில்,tadam kol thaar maarbinil - விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே
வைத்தவர்,vaithavar - (பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய
தாளின் மேல்,thaalin mel - திருவடிகளின்மீது (சாத்தின)
வடம் கொள்,vadam kol - செறியத் தொடுக்கப்பட்டதும்
பூ,poo - அழகியதும்
தண்ணம்,thannam - குளிர்ச்சி பொருந்தியதுமான
துழாய் மலர்க்கே,thuzhai malarkke - திருத்துழாயின் பொருட்டே
மடங்கும்,madangum - சுருண்டு விழுகின்றாள்
3025திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள்.) 8
கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8
நங்கைமீர்,nangaimir - பெண்காள்!
கொம்பு போல் சீதை பொருட்டு,kombu pol seethai poruttu - பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு
இலங்கை நகர்,ilangai nagar - இலங்காபுரியில்
அம்பு ஏரி,ambu eri - அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை
உய்த்தவர்,uyithavar - செலுத்தின இராமபிரானுடைய
தாள் இணைமேல்,thaal inaimel - உபயபாதங்களின் மீது
அணி,ani - சாத்தின
வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே,vambu avizh thann am thuzhai malarkke - பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே
இவள் நம்பும்,ival nambum - இவள் ஆசைப்படா நின்றாள்;
இதற்கு நான் என் செய்வேன்,itharku naan en seyven - இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது.
3026திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (என் மகள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைச் சொல்லுவதற்காகத் தொடங்கி முற்றமுடியச் சொல்லமாட்டாதே இடையிடையே தளர்ந்து நோவுபடுகின்றாளென்கிறாள்.) 9
நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9
நங்கைமீர்,nangaimir - மாதர்காள்!
நீரும்,neerum - நீங்களும்;
ஓர் பெண் பெற்று நல்கினீர்,or pen peruthu nalgineer - ஒவ்வொரு பெண்ணைப் பெற்று அன்போடு வளர்த்தருக்கின்றீர்கள்;
யான் பெற்ற,yaan pera - நான் பெற்றிருக்கின்ற
ஏழையை,ezhaiyai - இப்பேதையை
எங்ஙனே சொல்லுவேன்,enggane solluven - எப்படியென்று சொல்லுவேன் (ஆகிலும் கொல்லுகிறேன்;
சங்கு என்னும்,sanggu ennum - சங்கு என்கிறாள்;
சக்கரம் என்னும்,chakkaram ennum - சக்கரமென்கிறாள்;
துழாய் என்னும்,thuzhai ennum - திருத்துழாயென்கிறாள்;
இராப்பகல்,irappagal - இரவும் பகலும்
இங்ஙனே சொல்லும்,inggane sollum - இப்படியே சொல்லுகின்றாள்;
என் செய்கேன்,en seyken - யாது செய்வேன்?
3027திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (கீழ்ப்பாட்டில் ‘நங்கைமீர்!’ என்று விளிக்கப்பட்ட நங்கைகள் ப்ராங்குச நாயகியின் தாயை நோக்கி ‘அம்மா! உன்மகள் நீயிட்ட வழக்கன்றோ; அவளுக்கு ஹிதம் சொல்லாகாதோ?” என்ன, அவர்களுக்கு விடை கூறுகின்றாள்) 10
என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10
நங்கைமீர்,nangaimir - பெண்காள்!
என்னுடைபேதை என் கோமளம்,ennutaipeedhai en komalam - பேதைத்தனமும் ஸூகுமாரத் தன்மையும் பொருந்திய என்மகளானவள்
என் சொல்லும் என் வசமும் அல்லன்,en sollum en vasamum allan - என் சொல்லிலும் நிற்பதில்லை, என் வசத்திலும் நிற்பதில்லை;
மின் செய்,min sey - ஒளியைச் செய்கின்ற திருவாபரமணிந்த திருமார்பையுடையவனான
கண்ணன்,kannan - கண்ணபிரானுடைய
கழல்,kazhal - திருவடிகளைலுள்ள
துழாய்,thuzhai - திருத்துழாயை
பொன் செய்,pon sey - பசலை நிறம் பூத்ததும்
பூண்,poon - ஆபரணங்களிணிந்ததும்
மெல்,mel - பிரிவாற்றகில்லாததுமான
முலைக்கு என்று,mulaikku endru - முலையில் அணிந்துகொள்ள வேணுமென்று விரும்பி
மெலியும்,meliyum - (அது கிடையாமையாலே) உடம்பு இளைக்கப்பெறுகின்றாள்;
என் செய்கேன்,en seyken - இதற்கு யான் யாது செய்வேன்?
3028திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. ஆழ்வார் மெலியுமளவான வளவிலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆற்றாமையைப் போக்கி ஒருவாறு ஆச்வஸிப்பித்தம்மை முதலடியில் தொனிக்கும்.) 11
மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11
மெலியும் நோய் தீர்க்கும்,meliyum noy theerkkum - மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான
நம் கண்ணன்,nam kannan - நமது கண்ணபிரானுடைய
கழல்கள் மேல்,kazhalkal mel - திருவடி விஷயமாக
மலி புகழ்,mali pugal - வளர்ந்த புகழையுடைய
வண் குருகூர் சடகோபன்,van kurukoor sadagopan - திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல்,sol - அருளிச்செய்த
ஒலி புகழ்,oli pugal - கொண்டாடப்பட்ட குணபூர்த்தியையுடைய
ஆயிரத்து,aayiraththu - ஆயிரத்திலும்
இப்பத்தும்,ippattum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்,vallavar - ஓதவல்லவர்கள்
மலி புகழ்,mali pugal - மிக்கபுகழையுடைய
வானவர்க்கு,vaanavarkku - நிதய்சூரிகளுக்கு
நல் கோவை ஆவர்,nal kovai aavar - நல்ல சேர்த்தியாவர்.
3029திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக எருதுகளை அடர்க்கும்போதும், ஸீதாபிராட்டி நிமித்தமாக இராவணனை யழிக்கும் போதும் அந்தந்த ஸமங்களிலுண்டான சிரமம் தீரும்படி அடியேன் அவ்வப்போதுகளில் ஸந்நிஹிதனாயிருந்த உபசாரங்கள் செய்யப் பெற்றிலேன்! அப்படியிருந்தும் என்னுடைய ஹ்ருதயத்தையே உனக்குப் பரம போக்யமாகக் கொண்ட விதம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 1
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1
கோவை வாயாள் பொருட்டு,kovai vaayaal poruttu - கோவைக்கனிபோற் சிவந்த அதரத்தையுடையவளான நப்பின்னைப் பிராட்டி நிமித்தமாக
ஏற்றின்,etrin - எருதுகளினுடைய
எருத்தம்,eruththam - பிடரியை
இறுத்தாய்,iruththai - முறித்தவனே!
மதிள்,madhil - மதிள் சூழ்ந்த
இலங்கை,ilangai - லங்காபுரிக்கு
கோவை,kovai - அரசனான ராவணன்
லீய,leeya - முடியும்படியாக
குனித்தாய்,kuniththai - வளைத்தவனே!
குலம் நல் யானை,kulam nal yaanai - நல்ல ஜாதியிலே பிறந்து அழகியதான குலவயா பீடயானையினுடைய
மருப்பு,maruppu - கொம்பை
ஒசித்தாய்,osiththai - முறித்தொழிந்தவனே!
பூவை லீயா நீர்,poovai leeya neer - புஷ்பத்தை விட்டு நீங்காத தீர்த்தத்தை (புஷ்பத்தையும் தீர்த்தத்தையும் என்றபடி)
தூவி,thoovi - பணிமாறி
போதால்,pothaal - உரிய காலங்களில்
வணங்கேன் ஏலம்,vanangean elam - உன்னைப் பணிந்திலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூவை லீ ஆம் மேனிக்கு,poovai lee aam menikku - காயாம் பூப்போன்ற திருமேனிக்கு
பூகம் சாந்து,poogam saandhu - சாத்தத் தகுதியான சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - எனது நெஞ்சமேயாகும்.
3030திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தமது மனமொழி மெய்களாகிற முக்கரணங்களும் எம்பெருமானுக்குப் பரம யோக்யமாகின்றமையை வியந்து கூறுகின்றார். எம்பெருமானது திருமேனியின் வைலக்ஷண்யத்தையும், அவன்றனக்குத் தம்மிடத்து உண்டான விருப்பத்தையும் சிந்தனை செய்து, முன் சொன்னதையே மீண்டும் வாய்வெருவுகிறபடி.) 2
பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2
ஈசன்,eesan - ஸர்வேச்வரனாயும்
ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை,gnalam undu umizhndha endhai - (ஒரு காலத்தில்) உலகங்களையுண்டு (மற்றொரு காலத்திலே) வெளிப்படுத்தின ஸ்வாமியும்
ஏகமூர்த்திக்கு,ekamurththikku - ஒப்பற்ற திவ்யமங்கள் விக்ரஹத்தையுடையனாயுமிருக்கிற பெருமானுக்கு
பூசும் சாந்து,poosum saandhu - பூசுவதற்குரிய சந்தனம்
என் நெஞ்சமே,en nenjame - என் மனமேயாகும்;
புனையும் கண்ணி,punaiyum kanni - அணிந்து கொள்ளுதற்கு உரிய மாலை
எனதுடைய,enadudaiya - என்னுடைய
வாசகம் செய் மாலை,vaasagam sey maalai - வாக்கினால் தொடுக்கப்படுகிற் சொல்மாலையேயாம்;
வான் பட்டு ஆடையும்,vaan pattu aadaiyum - சிறந்த திருப்பரி வட்டமும்
அஃதே,akthe - அந்தர் சொல்மாலையேயாம்;
தேசம் ஆன,desam aana - தேஜஸ்கரமான
அணி கலனும்,ani kalanum - அணியப்படும் ஆபரணமும்
என் கை கூப்பு செய்கை ஏ,en kai koopu seygai ae - எனது அஞ்சலிபந்தமேயாம்;
3031திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்த் திருவாய் மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப் பெற்றமையை இங்கருளிச் செய்கிறார்.) 3
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3
ஏகமூர்த்தி,ekamurththi - காரணபூதமான ஒரு மூர்த்தியாய்
இரு மூர்த்தி,iru murththi - (ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய்
மூன்று மூர்த்தி,moonru murththi - ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய்
பல மூர்த்தி ஆகி,pala murththi aagi - மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய்
ஐந்து பூதம் ஆய்,aindhu bootham aay - பஞ்ச பூதங்களை வடிவாகவுடையனாய்
இருண்டு சுடர் ஆய்,irundu sudar aay - ஸூர்ய சந்திரர்களிருவரையும் வடிவாகவுடையனாய்
அரு ஆகி,aru aagi - ஸர்வாந்தர்யாமியாய்
நடு கடலுள்,nadu kadalul - திருப்பாற் கடல் நடுவே
நாகம் ஏறி,naagam aeri - திருவனந்தாழ்வான் மீது ஏறி
துயின்ற,thuyindra - திருக்கண்வளர்ந்தருளின
நாராயணனே,naarayananey - நாராயணனே!
உன்,un - உன்னுடைய
ஆகம்,aagam - திருமேனியையும்
முற்றம்,mutram - அதற்கு வேண்டிண மற்றெல்லாவற்றையும்
அகத்து,agathu - எனது நெஞ்சினுள்ளே
அடக்கி,adakki - அடங்கவைத்து
ஆவி,aavi - உன் திருவுள்ளம்
அல்லல் மாய்த்ததே,allal maayththadhey - இடர் நீங்கப்பெற்றதே!
3032திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப் பெற்றிலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார்) 4
மாய்த்தல் எண்ணி ‘வாய் முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4
மாய்த்தல் எண்ணி,maayththal enni - முடிப்பதாக நினைத்து
வாய்,vaai - வாயிலே
முலை தந்த,mulai thantha - நஞ்சு தீற்றிய முலையை வைத்த
மாயம் பேய்,maayam pey - பூதனையினுடைய
உயிர்,uyir - பிராணனை
மாய்த்த,maayththa - முடித்துவிட்ட
ஆய! மாயனே!,aaya! maayaney! - வாமனனே! மாதவா!
உன்னை,unnai - உன்னை
பூ தண் மாலை கொண்டு,poo than maalai kondu - பூக்கள் தொடுத்துக் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு
போது,podhu - அவ்வப்போதுகளில்
வணங்கேன் ஏலும்,vanangen elum - வழிபாடு செய்யப்பெற்றிலேனாகிலும்
நின்,nin - உன்னுடைய
பூ தண் மாலை நெடு முடிக்கு,poo than maalai nedu mudikku - புஷ்பமயமாய்ச் செவ்விய மாலையாலே அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு
புனையும் கண்ணி,punaiyum kanni - அலங்காரமாய்ச் சாத்துகின்ற மாலை
எனது உயிரே,enathu uyire - என் பிராணனாவதே!
3033திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (தம்முடைய உயிரையும் காதலையும் எம்பெருமான் போரப் பொலிய அபிமானித்த படியைப் பேசுகிறார்.) 5
கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல் கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5
காலம் சக்கரத்தான்,kaalam sakkaraththaan - காலத்தை நடத்துகிற திரு வாழியையுடையனாய்
எம்மான்,emmaan - எனக்கு ஸ்வாமியாய்
எம் பிரான்,em piraan - எனக்கு மஹோபநாரகனான
கண்ணனுக்கு,kannanukku - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுக்கு
எனது உயிர்,enathu uyir - என் ஆத்மவஸ்து
கண்ணி,kanni - மாலை போல் போக்யமாகா நின்றது;
காதல்,kaadhal - எனது ஆசையானது
கனகம் சோதி முடி முதல் ஆ,kanakam sothi mudi muthal aa - பொன்மயமாய் ஒளியையுடைத்தான திருவபிஷேகம் முதலாக
எண் இல் பல் கலன்களும்,en il pal kalan'galum - கணக்கற்ற பல திருவாபரணங்களாக ஆகா நின்றது;
எலும் ஆடையும்,elum aadayum - ஏற்றதான பீதாம்பரமும்
அஃதே,akthe - அந்தக் காதலேயாம்;
மூ உலகும்,moo ulakum - மூவுலகங்களும்
நண்ணி,nanni - கிட்டி
நவிற்றும்,navitrum - துதிக்கின்ற
கீர்த்தியும்,keerththiyum - புகழும்
அஃதே,akthe - அந்தக காதலேயாம்.
3034திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்ப்பாசுரங்களில் எம்பெருமானுடைய ப்ரணயித்வம்; சொல்லிற்று; இப்பாசுரத்தில் தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுகிறது.) 6
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6
காலன் சக்கரத்தொடு,kaalan sakkaraththodu - (பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட
வெண் சங்கு,ven changu - வெளுத்த சங்கத்தை
அம் கை,am kai - அழகிய திருக்கையிலே
ஏந்தினாய்,yenthinaai - தரித்திருப்பவனே!
ஞாலம் முற்றும்,gnaalam mutrum - உலகமுழுவதையும்
உண்டு உமிழ்ந்த,undu umizhntha - ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின
நாராயணனே,narayananey - நாராயணா!
என்று என்று,endru endru - பலகால் சொல்லி
ஓலம் இட்டு,olam ittu - கூப்பிட்டு
நான் அழைத்தால்,naan azhaithaal - நான் அழைக்க
ஒன்றும் வாராய் ஆகிலும்,onrum vaaraai aagilum - நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்
உன்,un - உன்னுடைய
கமலம் அன்ன,kamalam anna - தாமரை மலர்போன்ற
குரை கழல்,kurai kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள்
என் சென்னிக்கு,en sennikku - எனது தலைக்கு
கோலும் ஆம்,kolum aam - அலங்காரமாகநின்றது.
3035திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (நான் ஒருவிதமான கிஞ்சித்காரமும் செய்யப்பெற்றிலேனாகிலும், அநந்யார்ஹமாக்கி அடிமை கொள்ளுமியல்வினனான வுன்னுடைய வடிவு என் ஆத்மாவை விஷயீகரித்திராநின்றதென்கிறார்.) 7
குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7
குரை கழல்கள் நீட்டி,kurai kazhalgal neetti - (வீரக்கழல்) ஒலிக்கப்பெற்ற திருவடிகளைப் பரப்பி
மண் கொண்ட,maṇ koṇḍa - ஜகத்தை அளந்து கொண்ட
கோலம் வாமனா,kolam vaamana - வடிவழகிய வாமன மூர்த்தியே!
குரை கழல்,kurai kazhal - அத்திருவடிகளைக் குறித்து
கை கூப்புவார்கள்,kai kooppuvargal - ஓர் அஞ்ஜலிபண்ணுமவர்கள்
கூட நின்ற,kooda ninra - தன்னையே வந்து அடையும் படி நின்ற
மாயனே,maayaney - ஆச்சரிய பூதனே!
விரைகொள் பூவும்,viraikol poovum - பரிமளம் கொண்ட பூக்களையும்
நீரும்,neerum - (பாத்யம் முதலியவற்றுக்கான) தீர்த்தத்தையும்
கொண்டு,kondu - ஏந்திக்கொண்டு
ஏத்த மாட்டேன் ஏலும்,yetha maatteen yelum - உன்னைத் துதிக்கவல்லேனல்லெனினும்,
உரை கொள் சோதி,urai kol chothi - வாய்கொண்டு சொல்ல வொண்ணாதபடி வாக்கை மீறியிருக்கின்ற சோதியையுடைய
உன் திரு உருவம்,un thiru uruvam - உன்னுடைய திருமேனியானது
என்னது ஆவி மேலது ஏ,ennathu aavi melathu ye - என்னுடைய ஸத்தையைப் பற்றியிரா நின்றதே! இது என்ன அற்புதம்!.
3036திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.) 8
என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8
என்னது ஆவி மேலியாய்,ennathu aavi meliyai - என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு
ஏர்கொள் ஏழ் உலகமும்,erkoll ezh ulagamum - அழகிய கைல லோகங்களிலும்
முற்றும் ஆகி நின்ற,mutrum aagi ninra - ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற
சோதி ஞானம் மூர்த்தியாய்,chothi gnanam moorthiyai - சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே!
என்னது ஆவி,ennathu aavi - என் ஆத்மஸ்வரூபம்
உன்னதும்,unnathum - நீயிட்ட வழக்காகவும்
என்னதும்,ennathum - நானிட்ட வழக்காகவுமான
இன்ன வண்ணமே நின்றாய்,inna vanname ninraai - இப்படியிலே நின்றாய்
என் உரைக்க வல்லேன்,en uraikka valleyn - இதற்கு என்ன பாசுர மிட்டுச் சொல்லுவேன்?
3037திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (எம்பெருமானுடைய ப்ரணயித்வகுணம் தம்முடைய பேச்சுக்கு நிலமன்று என்பதை அழகுபட அருளிச்செய்கிறார்.) 9
உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9
புரைப்பு இலாத பரம்பரனே,puraippu ilaatha parambarane - புரையற்ற பரத்வம் பொருந்திய எம்பெருமானே!
பொய் இலாத,poy ilaatha - (என்னோடுண்டான கலவியில்) பொய்யில்லாத
பரம் சுடரே,param sudare - பரஞ்சோதிப் பெருமானே!
உரைக்க வல்லேன் அல்லேன்,uraikka valleyn alleyn - நான் ஒன்றும் சொல்ல சக்தியுடையேனல்லேன்;
உலப்பு இல்,ulappu il - முடிவில்லாத
உன் கீர்த்தி வெள்ளத்தின்,un keerthi vellaththin - உனது ப்ரணயித்வ குணக் கடலினுடைய
கரைக் கண்,karaik kan - கரையிடத்து
நான் என்று செல்வன்,naan enru selvan - நான் என்றைக்கு அடியிடுவேன்? (ஒரு நாளும் அடியிடமாட்டேன்;)
காதல்,kaadhal - பிரேமத்தினால்
மையல் ஏறிறனேன்,maiyal Eriranaen - பிச்சேறிக் கிடக்கிறேனத்தனை
நல்ல,nalla - விலக்ஷணர்களான
மேல் மக்கள்,mel makkal - நித்ய ஸூரிகள்
இரைத்து ஏத்த,iraitthu Ethan - பேராரவாரஞ்செய்து துதிக்க (அவ்வழியைப் பின்பற்றி)
யானும் ஏத்தினேன்,yaanum Ethanain - நானும் சிறிது துதித்தேனித்தனை.
3038திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (ஒருவராலும் எல்லைகாண வொண்ணாதபடி அளவிறந்த பெருமையையுடைய பெருமானை நான் ஸத்தை பெறுவதற்காக ஏத்தினேனத்தனை யென்கிறார்.) 10
யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10
யானும்,Yanum - எம்பெருமானருளால் அறிவுபெற்ற நானும் துதித்து,
ஏத்தி,Eththi - துதித்து,
முற்றும் ஏழ் உலகும் ஏத்தி,Mutrum ezhu ulakum eththi - எல்லாவுலகங்களும் ஒன்று கூடி யேத்தி,
பின்னையும்,Pinnaiyum - அதற்கு மேலே
தானும் ஏத்திலும்,Thanum eththilum - ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான தானுங்கூடி ஏத்தினாலும்
தன்னை ஏத்த ஏத்த,Thannai eththa eththa - தன்னைத்துதிக்கத்துதிக்க
எங்கு ஏய்தும்,Engu eythum - முடிவு பெறுவது எது? (ஆகிலும்)
யான் உய்வான்,Yan uyyvan - நான் தரித்திருப்பதற்காகவே,
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்திப்ப,Thenum palum kannalum amudhum aaki thiththippa - தேனும் பாலும் கன்னலும் அமுதும போலே ரஸிக்க,
யானும் எம்பிரானையே ஏத்தினேன்,Yanum empiranaie eththinen - நானும் எம்பெருமானையே ஏத்தினேன்.
3039திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (இத்திருவாய் மொழியை ஓதுமவர்கள் உபய விபூதியையும் தாம் இட்ட வழக்காக நிர்வஹிக்கப் பெறுவர்களென்கிறார்.) 11
உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11
மற்று,Matru - வேறு வழியினால்
உய்வு உபாயம் இன்மை,Uyvupayam inmai - தரிக்கவிரகில்லாமையை
தேறி,Theri - துணிந்து
கண்ணன்,Kannan - எம்பெருமானுடைய
ஓண் கழல்கள் மேல்,On kazhalgal mel - அழகிய திருவடிகள் விஷயமாக,
செய்ய தாமரை பழனம்,Seyya tamarai pazhanam - செந்தாமரைகள் நிறைந்த நீர்நிலங்களையுடைய
தென் நன் குருகூர்,Then nan kurugoor - தென் திசையிலுள்ள அழகிய திருக்குருகூர்க்குத் தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார் (அருளிச் செய்ததான)
பொய் இல் பாடல் ஆயிரத்துள்,Poi il paadal aayirathul - யதார்த்தம் பொருந்திய ஆயிரத்தினுள்ளும்
இவை பத்தும்,Ivai patthum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லார்கள்,Vallargal - ஓதவல்லவர்கள்
வையம்,Vaiyam - இப்பூமண்டலத்திலே
மன்னி வீற்றிருந்து,Manni veetrirundhu - நெடுங்காலம் பொருந்தியிருந்து
மண்ணூடே,Mannude - இந்நிலத்திலேயே
விண்ணும் ஆள்வர்,Vinnum aaluvar - பரம பதத்தையும் ஆளப் பெறுவர்கள்.
3040திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குச நாயகியின் திருத்தாயார் மகளுடைய செய்தியை வினவ வந்தவர்களுக்கு அறிவியா நின்று கொண்டு ‘இப்படி யிவளை எம்பெருமான் பிச்சேற்றினானே! இதற்கு நான் என் செய்வேனென்கிறாள்.) 1
மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1
பெய் வளையீர்,Pei valaiyeer - கையில் வளையணிந்த மாதர்காள்!
மண்ணை இருந்து துழாவி,Mannai irundhu thuzhaavi - (என் மகளானவள்) பூமியைத் துழாவி
இது வாமனன் மண் என்னும்,Ithu vaamanan man ennum - இது (எம்பெருமான்) வாமனனாய் அளந்து கொண்ட மண்’ என்று கூறுகின்றாள்:
விண்ணை தொழுது,Vinnai thozhudhu - ஆகாசத்தை (நோக்கி) அஞ்சலி பண்ணி
அவன் மேவு வைகுந்தம் என்று,Avan mevva vaikuntham endru - ‘அவ்வெம்பெருமான் நித்யவாஸம் பண்ணுகிற ஸ்ரீ வைகுண்டம்’ என்று சொல்லி
கை காட்டும்,Kai kaattum - தன் கைகளாலே (பிறர்க்கும்) காட்டா நின்றாள்;
உள் நீர்,Ul neer - அகவாயில் கண்ணீரானது
கண்ணை மல்க நின்று,Kannai malga nindru - கண்ணையும் விஞ்சிப் புறப்படும்படி நின்று
கடல் வண்ணன் என்னும்,Kadal vannan ennum - கடல்போலும் நிறத்தையுடையவன் என்று சொல்லுகின்றாள்;
அன்னே- என் பெண்ணை பெரு மயல் செய்தார்க்கு -என் செய்தேன்,Anne - en pennai peru mayal seidharkku - en seidhen - அம்மே!என்னுடைய மகளை இப்படி அதிசயமான பிச்சேறும்படி பண்ணினவருக்கு -யாது செய்வேன்?
3041திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவை யுடையளாய் மான்போல் இளைய பருவத்தை யுடையளான இவள் செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன்.) 2
பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2
பெய் வளை கைகளை,Pey valai kaigalai - (பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை
கூப்பி,Kooppi - குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து)
பிரான்,Piraan - உபகார சீலனான எம்பெருமான்
கிடக்கும்,Kidakkum - (எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற
கடல் என்னும்,Kadal ennum - கடல் (இது) என்று சொல்லுவது;
செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி,Seyyadhor nyaayitrrai kaatti - சிவந்த ஒளியில் ஒப்பற்றவனான சூரியனைச் சுட்டிக் காட்டி
சிரிதரன் மூர்த்தி ஈது என்னும்,Sreedharan moorthi idhu ennum - ‘பெரிய பிராட்டியாரோடே கூடியுள்ள எம்பெருமானது வடிவு இது’ என்று சொல்லுவாள்;
கையும்,Kaiyum - (தான் அவனைக்கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே) வாடுவாள்;
கண் நீர் மலக நின்று,Kann neer malaga nindru - (அந்த வாட்டத்தினாலே) கண்ணீர் பெருக நின்று
நாரணன் என்னும்,Naaranan ennum - ‘நாரணன்’ என்று வாய்வெருவுவாள்,
அன்னே,Anne - அம்சே!
3042திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (மகளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்லப் புகுந்து, இவற்றுக்குக் கணக்கில்லை யென்கிறாள்.) 3
அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3
வினையுடை யாட்டியேன் பெற்ற,Vinaiyudai yaattiyen petra - கொடுவினையேனாகிய நான் பெற்ற
செறி வளை முன் கை சிறு மான்,Seri valai mun kai siru maan - நெருங்கின வளையல்களயைணிந்த முன்கைகளையுடைய இவ்விளம் பெண்ணானவள்
அறியும்,Ariyum - சுடுமென்று எல்லாராலும் அறியப்பட்ட
செம் தீயை தழுவி,Sem theeyai thazhuvi - சிவந்த நெருப்பைத் தழுவி
அச்சுதன் என்னும்,Achuthan ennum - ‘எம்பெருமான்’ என்கிறாள்;
மெய் வேவாள்,Mei vevaal - உடம்பு வேகின்றிலள்;
எறியும்,Eriyum - வீசுகின்ற
தண் காற்றை தழுவி,Than kaatrai thazhuvi - குளிர்ந்த காற்றைத் தழுவி
என்னுடை கோவிந்தன் என்னும்,Ennudai Govindhan ennum - ‘என்னுடைய கண்ணன்’ என்கிறாள்;
வெறிகொள்,Verikol - பரிமளம்மிக்க
துழாய் மலர்,Thuzhai malar - திருத்துழாய் மலர்கள்
நாறும்,Naarum - மணக்கப் பெற்றிருக்கின்றாள்:
செய்கின்றது,Seygindrathu - (இங்ஙனே இவள்) செய்கின்ற தொழில்கள்
என் கண்ணுக்கு ஒன்றே,En kannukku ondre - என் கண்களுக்கு ஒன்றுதானா? பலபல.
3043திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (எல்லாக் கலைகளும் நிரம்பப்பெற்ற சந்திரனைச் சுட்டிக்காட்டி ‘நீலமணிவண்ணனே!’ என்று அழைக்கின்றாள். (உயரநின்ற வொரு மலையைப் பார்த்து, உலகங்களை அளந்தருள்வதற்காக நிமிர வளர்ந்து நிற்கிற ஸர்வேச்வர னென்றுகொண்டு ‘என் ஆர்த்தி தீரவாராய்’ என்றழைக்கின்றாள். நன்றாகப் பெய்யும் மேகத்தைக் கண்டால் ‘நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்’ என்று, மேகத்தைக் கண்டு மயில் கூத்தாடுமாபோலே கூத்தாடு பண்ணி விட்டாரே! என் செய்வேன்! என்கிறாள் திருத்தாய். ஒன்றிய என்றது ஸகல கலைகளும் பொருந்தப்பெற்ற என்றபடி) 4
ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4
ஒன்றிய,Ondriya - (எல்லாத்தலைகளும்) பொருந்திய
திங்களை காட்டி,Thingalai kaatti - பூர்ண சந்திரனை (அருகில் நினறார்க்குக்) காட்டி
ஒளி மணிவண்ணனே என்னும்,Oli manivannane ennum - ஒளியையுடைத்தான நீலமணிபோன்ற வடிவையுடையவனே! என்று கூப்பிடுகிறாள்;
நின்ற குன்றத்தினை நோக்கி,Nindra kundrathinai nokki - (அந்தச் சந்திரமண்டலத்தளவு உயர்ந்து) நிற்கிற மலையைப்பார்த்து
நெடுமாலே வா என்று கூவும்,Nedumaale vaa enru koovum - ‘நெடுமாலே! வாராய்’ என்று அழைக்கின்றாள்; (ஸகல உலகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமான் என்று நினைத்து)
நன்று பெய்யும் மழை காணில்,Nandru peyyum mazhai kaanil - நன்றாகப்பொழியும் மேகத்தைக்கண்டால்
நாரணன் வந்தான் என்று,Naaranan vanthaan enru - நாராயணன் வந்தான் என்று கூறி
ஆலும்,Aalum - மேகத்தை கண்ட மயில் போலே கூத்தாடுகின்றாள்;
என்னுடை கோமளத்தை,Ennudai komalaththai - மெல்லியலாளான எனது மகளுக்கு
என்று இன மையல்கள்,Endru ina maiyalgal - இப்படிப்பட்ட மயக்கங்களை
செய்தார்,Seidhaar - பண்ணினார்.
3044திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - கோமள வான் கன்றைப் புல்கி, -இவை ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்; போம் இள நாகத்தின் பின் போய்,-அத்தைப் புல்கி இவ்விளமையும் மார்த்தவமும் அழகும் எம்பெருமானோடே கலந்த திரு வனந்த வாழ்வானுக்கு அல்லது கூடாது ஆதலால் ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்; அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்து என்னாய் விளையும் என்று அறிகிறிலேன் -என்கிறாள்) 5
கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5
கோமளம் வான் கன்றை புல்கி,Komalam vaan kanrai pulgi - இனையபெரிய கன்றுகளைத் தழுவி(இவை)
கோவிந்தன் மேய்த்தன என்னும்,Govindan meyththana ennum - பசுமேய்க்க முடிசூடின கண்ணன் (இனிது உகந்து) மேய்த்தவை என்று கூறுவாள்;
போம் இளம் நாகத்தின் பின் போய்,Poam ilam naagaththin pin poay - இஷ்டப்படி ஓடுகின்ற இளைய நாகத்தின் பின்னே (இதுபோனவிடத்தில் அவனையும் காணலாம் என்று நினைத்துச்) சென்று
அவன் கிடக்கை,Avan kidakkai - அவன் பள்ளிகொள்ளும் படுக்கை
ஈது என்னும்,Eedhu ennum - இது என்று சொல்லுவாள்;
அரு வினையாட்டியேன் பெற்ற,Aru vinaiyaattiyen petra - (அநுபவித்து முடிக்க) அரிய பாபத்தை யுடையேனான நான்பெற்ற
கோமளம் வல்லியை,Komalam valliyai - ம்ருதுஸ்வபாவையாய், கொடிபோன்ற இவளை
மாயோன்,Maayon - எம்பெருமான்
மால் செய்து,Maal seiththu - மயக்கி
செய்கின்ற கூத்து,Seiginra kooththu - பண்ணுகிற இத்தகைய கூத்தாட்டு
ஆம் அளவு,Aam alavu - எவ்வளவில் ஆகும் என்று
ஒன்றும் அறியேன்,Ondrum ariyen - ஒன்றும் அறிகிலேன்.
3045திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (ஜீவனத்திற்காகக் குடக்கூத்தாடித் திரிகிறவர்களுண்டே; அவர்கள் வந்து குடங்களை வீசியெறிந்து ஆடுமதுகண்டால் குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல கோவாகிய கோவிந்தனே ஆடுவதாக ப்ரதிபத்திபண்ணி அதனை அருகேயிருந்து காண ஓடுகின்றாள். எப்படிப்பட்டவர்களையு மீடுபடுத்தவல்ல புல்லாஙகுழலின் இசைவந்து செவிப்பட்டால், கண்ணபிரானென்று சொல்லி வியாமோஹிக்கின்றாள். இடைச்சிகள் கொணர்ந்து விற்கும் வெண்ணையைக் கண்டால், அன்று அவன் திருவாய்ப்பாடியில் களவுகண்டு அமுதுசெய்த வெண்ணெயோடொத்த வெண்ணெய் இது என்று சொல்லா நின்றாள்; தாய் உதவாத தனிமையிலே பூதனையென்பவள் தாய்வடிவுகொண்டு வந்து நலியப்புக, அவளை முடித்துத் தன்னைச் சேமமாகத் தந்த உபகாரத்துக்குத் தோற்று இவள் பித்தேறினாளாயிற்று; இப்படியும் ஒரு விலக்ஷணமான பிச்சு உண்டோ வென்கிறாள்; திருத்தாய்.) 6
கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6
கூத்தர்,Kooththar - யானும் கூத்தாடுமவர்கள்
குடம் எடுத்து ஆடில்,Kudam eduththu aadil - (குடக்கூத்தாடுதலை ஸ்வபாவமாகவுடைய) க்ருஷ்ணன் ஆம் என்று கருதி (காண்கைக்கு) ஓடுவாள்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில்,Vaaiththa kuzhal osai kaetkil - இனிய குழலின் ஓசையைக் கேட்டாளகில்
மாயவன் என்று,Maayavan enru - க்ருஷ்ணன் என்று நினைத்து
மையாக்கும்,Maiyaakkum - மோஹியா நிற்பாள்;
ஆய்ச்சியர்,Aaychchiyar - இடைச்சிகள் கையிலே
வெண்ணெய்கள் காணில்,Vennaiygal kaanil - வெண்ணையைக் கண்டாளாகில்
அவன் உண்ட,Avan unda - அவன் அமுது செய்தருளின் வெண்ணெய் இது என்கிறாள்:
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு,Peychchi mulai suvaiththaarku - பூதனுடைய முலையை ப்ராணனேர்டே சுவைத்து முடித்த கண்ணபிரானுக்கு
கொடி என்பெண்,Kodi enpen - கொடிபோன்றவளான என்னுடைய மகள்
ஏறிய,Eeriya - தலைமண்டையிடும்படி கொண்ட
பித்து,Piththu - பிச்சு இருந்தபடி
ஏ,A - ஆச்சரியம்.
3046திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (“என்பெண்கொடி யேறியபித்தே” என்று கீழ்ப்பாட்டில் தலைக்கட்டிற்று. உலகில் பித்துக்கொள்ளிகளாயிருக்கு மவர்கள் வாயில் வந்தபடி எதையேனும் தப்புந்தவறுமாய்ப் பேசுவதுண்டே; அப்படி இவள் ஏதேனும் பேசுகின்றாளோ என்ன; பித்து ஏறின நிலைமையிலு;ம பகவத் விஷயத்தில் தெளிவு சிறிதும் மாறிற்றில்லை யென்கிறாள்.) 7
ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7
ஏறிய பித்தினொடு,Yeriya pitthinodu - மிகுந்த மயக்கத்ததோடே கூடியிருக்கச்செய்தே (வேதாந்த வித்துக்கள் சொல்லுமாபோலே)
எல்லா உலகு,Yella ulagu - ஸகலலோகங்களும்
கண்ணன் படைப்பு என்னும்,Kannan padaippu ennum - க்ருஷ்ணனுடைய ஸ்ருஷ்டி என்று கூறுகிறாள்;
நீறு செவ்வே இட காணில்,Neeru sevve ida kaanil - பஸ்மத்தை மேல்நோக்கி இடக்கண்டாளாகில்
நெடுமால் அடியார் என்று ஓடும்,Netumaal adiyaar endru odum - ஸர்வேச்வரனுடைய அடியார் என்று கொண்டு (அவர்களைத் தொடர்ந்து) ஓடுகிறாள்;
நாறு துழாய் மலர்காணில்,Naaru thuzhaai malarkaanil - பரிமளம் வீசும் திருத்துழாயின் பூந்தாரைக் கண்டாளாகில்
நாரணன் கண்ணி ஈது என்னும்,Naaranan kanni eethu enum - ஸர்வஸ்வாமியான நாராயணனுடைய மாலை இது என்கிறாள்;
தேறியும் தேறாதும்,Theriyum theradhum - தேறினவளவிலும் கலங்கினவளவிலும்
இத் திரு,Ith thiru - திருமகள் போல்வளவான இப்பெண்பிள்ளை
மாயோன் திறத்தனள்,Maayon thirathanaal - எம்பெருமான் விஷயமல்லது வேறொன்தறறியாள்.
3047திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.) 8
திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8
திரு உடை,Thiru udai - பூர்ணமான செல்வத்தையுடைய
மன்னரை காணில்,Mannarai kaanil - அரசர்களைக் கண்டால்
திருமாலை,Thirumaalai - திருமகள் கொழுநனான எம்பெருமானை
கண்டேனே என்னும்,Kandeney enum - கண்டேனே! என்று கூறுவாள்;
உரு உடை,Uru udai - விலக்ஷண வடிவங்களையுடைய
வண்ணங்கள் காணில்,Vannangal kaanil - (காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால்
உலகளந்தான் என்று துள்ளும்,Ulaga landhaan endru thullum - (இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்?
கரு உடை,Karu udai - விக்ரஹயுக்தமான
தேவு இல்கள் எல்லாம்,Thevu ilgal ellaam - தேவாலயங்கள் யாவும்
கடல்வண்ணன் கோயிலே என்னும்,Kadalvannan koyiley enum - எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள்
வெருவிலும் வீழ்விலும்,Veruvilum veezhvilum - அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும்
ஓவா,Ovaa - ஒழியாதவளாகி
கண்ணன் கழல்கள் விரும்பும்,Kannan kazhalgal virumbum - க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள்.
3048திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பகவர் என்றது பரமை காந்திகள் என்றபடி. ஜ்ஞானானுஷ்டநன பரிபூர்ணர்களான உத்தமாச்ரமிகள் என்று கொள்க. பகவானைச் சொல்லுகிற சொல்லையிட்டே அவர்களைக் கூறினது-அவர்கள் பகவானில் வேறுபடாதவர்கள் என்பதைக் காட்டுதற்கென்க. அப்படிப்பட்டவர்களைக் கண்டால், உலகங்களை யெல்லாம திருவயிற்றிலே வைத்து நோக்கின பெருமானாகவே பிரதிபத்தி பண்ணுவள். ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்கிற பகவத் கீதையிலே நோக்குப்போலும். கரும்பெரு மேகங்கள் காணில் = கறுத்துப் பெருத்து விடாய் தீர்க்குமதான மேகத்தைக் கண்டவாறே அப்படிப்பட்ட வடிவையுடையனான கண்ணபிரான் தானே வந்து தோன்றினனாகக்கொண்டு கோலாஹலங்கள் செய்யா நிற்பள்.) 9
விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9
பகவரை,Pagavarai - ஸந்நியாஸிகளை
காணில்,Kaanil - கண்டால்
விரும்பி,Virumbi - ஆதரவு கொண்டு பேணி
வியல் இடம் உண்டானே என்னும்,Viyal idam undaane enum - அகன்ற உலகத்தை ப்ரளயாபத்திலே உண்டு திருவயிற்றிலே வைத்து ரகூஷித்த ஸர்வரக்ஷகனே என்பாள்;
கரு பெரு மேகங்கள் காணில்,Karu peru megangal kaanil - கறுத்துப்பெருத்த மேகங்களைக் கண்டால்
கண்ணன் என்று,Kannan endru - கண்ணபிரான் என்று நினைத்து
ஏற பறக்கும்,Era parakkum - (அங்கே செல்ல) மேலேயெழுந்து பறப்பதற்கு அலமரா நிற்பாள்;
பெரு புலம் ஆநிரை காணில்,Peru pulam aanirai kaanil - பருத்து அழகிய பசுக்களைக் கண்டால்
பிரான்,Piraan - (அவற்றை மேய்த்து ரகூஷிப்பவனான) உபகாரகன்
உளன் என்று,Ulan endru - கூடவருகிறான் என்று நினைத்து
பின் செல்லும்,Pin sellum - அப்பசுக்களின் பின்னே போகிறாள்
பெறல் அரு பெண்ணினை,Peral aru penninai - பெறுதற்கு அரியளான இப் பெண்ணை
மாயோன்,Maayon - எம்பெருமான்
அலற்றி,Alatri - வாய்விட்டு அலறும்படி பண்ணி
அயர்ப்பிக்கின்றாள்,Ayarpikkindraal - (அதற்குமேலே) மோஹிக்கும்படி பண்ணுகிறான்.
3049திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய்.) 10
அயர்க்கும்;சுற்றும் பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10
அயர்க்கும்,Ayarkkum - மோஹியா நிற்பாள்
சுற்றும் பற்றி நோக்கும்,Sutrum patri nokkum - (கண்ணன் தன்னிடத்து வாராதொழியான்று நினைத்து அவன் வருகையை) சுற்றிலும் பலகாலும் பார்ப்பாள்.
அகல நீள் நோக்கு கொள்ளும்,Akala neel nokku kollum - (அவ்வளவிலும் காணாமையினாலே அவன் துர்ரத்திலே நிற்கிறகவெண்ணி) பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே)
வியர்க்கும்,Viyarkkum - வேர்த்து நீராக நிற்கும்
மழை கண் துளும்ப,Mazhai kann thulumba - மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி
வெம்,Vem - வெவ்விதாக
உயிர்க்கொள்ளும்,Uyirkollum - நெடுமூச்செறிகின்றள்
மெய் சோரும்,Mey sorum - (இத்தகைய பரிதாபத்தாலே) சரீரம் தரிக்க மாட்டாமல் வாடுவாள்
பெயர்த்தும்,Peyartthum - பின்னையும் (ஆசைமிகுதியினாலே)
கண்ணா என்று பேசும்,Kanna endru pesum - க்ருஷ்ணனே! என்று கூப்பிடுவாள் (அவ்வளவிலே வந்தானாகவெண்ணி)
வா என்று கூவும்,Vaa endru koovum - பெருமானே என்னுடைய ஸ்வாமியே வரலாகாதோ? என்று அழைப்பாள்
மயல்,Mayal - (இப்படிப்) பிச்சேறும்படி
பெரு காதல்,Peru kaadhal - பெரிய காதலையுடையளான
என் பேதைக்கு,En pethakku - என் சொற்கேளாப் பெண்ணுக்கு
வல்வினையேன்,Valvinaiyen - இவளை இப்படிக் கானும்படி ) கொடிய பாபத்தையுடைய நான்
என் செய்தேன்,En seydhen - என்ன செய்வேன்.?
3050திருவாய்மொழி || (4-4–மண்ணை இருந்து துழாவி ) (பிரிவு ஆற்றாது போலிப் பொருள்களைக் கண்டு வருந்தும் தலைவியின் நிலையைத் தாய் உரைத்தல்) (இத்திருவாய்மொழி கற்பவர்கள் எல்லாத்துன்பங்களும் தொலையப்பெற்றுத் திருநாட்டிலே நித்யஸூரிகள் ஆதரிக்கும்படியான பெருமைபெற்று மகிழ்வரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11
வல்வினை,Valvinai - ஸகல பாபங்களையும்
தீர்க்கும் கண்ணனை,Theerkkum Kannani - போக்குமியல்வினனான க்ருஷ்ணனை
வண் குருகூர் சடகோபன்,Van Kurugoor Sadagopan - வளப்பமுடைய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
சொல் வினையால்,Sol vinayal - சொல்லுந் தொழில் வன்மையால்
சொன்ன பாடல்,Sonna paadal - அருளிச் செய்த பாட்டுக்கள்
ஆயிரத்துள் இவை பத்தும்,Aayiraththul ivai patthum - ஆயிரத்துள் இவை பத்துப்பாட்டுக்களையும்
நல் வினை என்று கற்பார்கள்,Nal vinai endru karporgal - இது நல்ல செய்கை என்று கருதிக் கற்குமவர்கள்
நலன் உடை,Nalan udai - (பகவதநுபவமாகிற) ஆனந்தத்தை யுடைத்தான
வைகுந்தம் நண்ணி,Vaikuntham nanni - பரமபதத்தைக் கிட்டி
தொல்வினை தீர,Tolvinai theera - அநாதியான பாபங்கள் மறுவிலடாதபடி ஒழிய
எல்லாரும் தொழுது எழ,Ellarum thozhuthu ezha - பெரியகிளர்த்தியை யுடையராம்படியாக
வீற்றிருப்பார்,Veetriruppar - இருக்கப்பெறுவர்கள்.
3051திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.) 1
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1
வீற்றிருந்து,Veetrirundhu - (பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து
ஏழ் உலகும்,EzhUlagum - எவ்வுலகங்களிலும்
தனி கோல் செல்ல வீவு இல் சீர்,Thani kol chella veevu il seer - அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி
ஆற்றல் மிக்கு ஆளும்,Aatral mikku aalum - சாந்தியுடனே ஆள்கின்ற
அம்மானை,Ammaanai - ஸ்வாமியாய்
வெம் மா பிளந்தான் தன்னை,Vem maa pilandhaan thannai - கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை
போற்றி என்றே,Pottri endrae - போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே
கைகள் ஆர தொழுது,Kaigal aara thozhudhu - கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி
சொல் மாலைகள்,Sol maalaihal - சொற்களாகிற மாலைகளை
ஏற்ற,Aetra - (அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு
நோற்றேற்கு,Notraeku - புண்ணியஞ் செய்துள்ள எனக்கு
இனி,Ini - இனிமேல்
எழுமையும்,Ezhumaiyum - ஏழேபடியான ஜன்மங்களிலும்
என்ன குறை,Enna kurai - என்ன குறையுண்டாம்!
3052திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாசுரத்திற் சொன்ன மேன்மைக்கு அடியான பிராட்டி ஸம்பந்தத்தை யுடையவனை ஸகல பாதங்களும் தீரும்படி புகழப் பெற்றனென்கிறார்.) 2
மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2
மைய கண்ணான்,Maiya kannaan - மை யெழுதப்பட்ட கண்ணை யுடையனாய்
மலர்மேல் உறைவாள்,Malarmel uraivaal - தாமரைமலரிலே வஸிப்வபளான லக்ஷ்மி
உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பினன்,Maarbinan - மார்பையுடையனாய்
செய்ய கோலம் தட கண்ணன்,Seiyya kolam thada kannan - சிவந்து அழகையுடைத்தாய் விசாலமான திருக் கண்களையுடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரி நாதனை எம் பெருமானை
மொய்ய சொல்லால்,Moyya sollaal - செறிந்த சொற்களாலே சமைந்ததாய்
இசை,Isai - இசையை யுடைத்தான
மாலைகள்,Maalaigal - மாலைகளாலே
வியல் ஞாலத்து,Viyal gnaalathu - அகன்ற புவியிலேயிருக்கச்செய்தே
வெய்ய நோய்கள் முழுதும்,Veyya noigal muzhudhum - கொடிய க்லேசங்கள் அனைத்தும்
வீய,Veeya - நசிக்கும்படியாக
ஏத்தி,Yethi - துதித்து
உள்ள பெற்றேன்,Ulla petren - என்னெஞ்சாலே அநுபவிக்கப் பெற்றேன்.
3053திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.) 3
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3
வீவு இல் இன்பம்,Veeyu il inbam - அழிவில்லாத ஆனந்தமானது
மிக எல்லை நிகழ்ந்த,Miga ellai nigazhndha - மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே)
நம் அச்சுதன்,Nam achyudhan - அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய்
வீவு இல் சீரன்,Veeyu il seeran - முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய்
மலர்கண்ணன்,Malarkannan - தாமரை மலர்போன்ற கண்களையடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - விண்ணோர்க்குத் தலைவனானவனை
லீவு இல் காலம்,Leeyu il kaalam - ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை மாலைகள்,Isai maalaigal - இசைமிக்க சொல்மாலைகளாலே
ஏத்தி,Yethi - துதித்து
மேவ பெற்றேன்,Meva petren - கிட்டப்பெற்றேன்;
மேவி,Mevi - கிட்டி
வீவு இல்,Veeyu il - முடிவில்லாத
இன்பம்,Inbam - ஆனந்தத்தினுடைய
மிக எல்லை,Miga ellai - முடிவான எல்லையிலே
நிகழ்ந்தனன்,Nigazhndhanan - இராநின்றேன்.
3054திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (நித்ய ஸூரி நாதனாயிருந்து வைத்து நித்ய ஸம்ஸாரியான என் பக்கலில் பண்ணி யருளின மஹோபகாரம் என்னே! என்று ஈடுபடுகிறார்.) 4
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4
மேவி நின்று,Mevi ninru - நெஞ்சு பொருந்தியிருந்து
தொழுவார்,Thozhuvaar - அனுபவிப்பாருடைய
வினை போக,Vinai poga - பாபங்கள் யாவும் நசிக்கும்படி
மேவும்,Mevum - தான் அவர்களோடே கலக்கின்ற
பிரான்,Piraan - மஹோபகாரகனாய்
துர்வி அம் புள்,Thurvi am pull - சிறகுகளையுடைய அழகிய பெரிய திருவடியை
உடையான்,Udaiyaan - ஊர்தியாகவுடையனாய்
அடல் ஆழி,Adal aazhi - போர்வல்ல திருவாழியை யுடையனான
அம்மான் தன்னை,Ammaan thannai - ஸர்வேச்வரனை
நா இயலால்,Naa iyalaal - நாவினுடைய தொழிலாலே
இசை மாலைகள்,Isai maalaigal - இசைரூபமான் மாலைகளையிட்டு
ஏத்தி நண்ண பெற்றேன்,Yethi nanna petren - ஏத்துகையாகிய நண்ணுதலைப் பெற்றேன்;
ஆவி,Aavi - எனக்கு அந்தாராத்ம பூதனான எம்பெருமான்
என் ஆவியை,En aaviyai - என்னுடைய ஆத்மாவை
செய்த ஆற்றை,Seydha aatrai - இங்ஙனம் செய்த ப்ரகாரத்தை
யான் அறியேன்,Yaan ariyen - நான் அறியமாட்டேன்.
3055திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி -அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும் சகல வேதார்த்த ப்ரகாசகனாய் இருந்த தன்னை எனக்கு சாத்மிக்க சாத்மிக்கக் காட்டித் தந்து அருளினான் – நானும் அவனைக் கண்டு காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியும் படி திருவாய் மொழி பாடி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்கிறார்) 5
ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5
ஆற்ற,Aatra - பொறுக்கப்பொறுக்க
நல்ல வகை,Nalla vagai - விலக்ஷ்ணமாயுள்ள (ஜ்ஞாந பக்திகள் பரபக்தி பரஜ்ஞாந பரம பக்திகளாகிற) ப்ரகாரங்களை
காட்டும்,Kaattum - அடியார்களுக்குக் காட்டிக் கொடுக்கின்ற
அம்மானை,Ammaanai - சர்வேச்வரனாய்
அமரர் தம் ஏற்றை,Amarar tham etrai - நித்தியஸூரிநாதனாய்
எல்லாப் பொருளும்,Ellaap porulum - எல்லா அர்த்த விசேஷங்களையும் (கீதோபநிஷந் முகத்தாலே)
விரித்தானை,Viriththaanai - விரிவாக உபதேசித்தவனான
எம்மான் தன்னை,Emmaan thannai - எம்பெருமானை
வினை,Vinai - பாபங்களும்
நோய்கள்,Noykal - பெரிய வ்யாதிகளும்
காற்றின் முன்னம் கடுகி,Kaatrin munnam kadugi - காற்றிலும் வேகமாக ஓடிப்போய்
கரிய,Kariya - வெந்துபோம்படியாக
மாற்றம் மாலை புனைந்து,Maatram maalai punainthu - சொல்மாலையைத் தொடுத்து
ஏத்தி,Yethi - துதித்து
நாளும்,Naalum - ஸர்வகாலமும்
மகிழ்வு எய்திளேன்,Magizhvu eythilaen - மகிழ்ச்சியைப்பெற்றேன்
3056திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (‘ஆழ்வீர் ! உமக்கு வேண்டுவது என் ? என்று எம்பெருமான் கேட்க, இது வரையில் நான் பெறாதே இனி ஸாதித்துத் தரவேண்டுவதொரு பொருளுண்டோ வென்கிறார்.) 6
கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6
கரிய மேனி மிசை,Kariya meni misai - (திருக்கண்ணின்) கூரிய விழியின் மேலே
வெளிய நீறு,Veliya neeyru - அஞ்சன நீற்றினை
சிறிதே இடும்,Siridhey idum - அளவாக அணிகிற
பெரிய கோலம்,Periya kolam - அளவிறந்த அழகினையுடைய
தடம் கண்ணன்,Thadam kannan - விசாலமான திருக்கண்களையுடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை,Vinnor perumaan thannai - நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனை
உரிய சொல்லால்,Uriya sollaal - (இவ்வழகுக்குத்) தகுதியான சொற்களாலே
இசை மாலைகள்,Isai maalaihal - இசைவடிவான மாலைகளையிட்டு
ஏத்தி,Yethi - துதித்து
உள்ள,Ull - அநுபவிக்க
பெற்றேற்கு எனக்கு,Petrerku enakku - பெற்றவனான எனக்கு
இன்று தொட்டும்,Indru thottum - இன்று தொடங்கி
இனி என்றும்,Ini endrum - இனிமேலுள்ள காலம் எல்லாம்
அரியது உண்டோ,Ariyadhu undo - துர்லபமாயிருப்பதும் ஒன்றுண்டோ
3057திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.) 7
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7
என்றும்,Endrum - பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும்
ஒன்று ஆகி,Ondru aagi - ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு
ஒத்தாரும் மிக்கார்களும்,Ottaaru mikkarkalum - ஸமராயும் அதிகராயும் இருப்பார்
தன்தனக்கு,Tandanakku - தனக்கு
இன்றி நின்றானை,Indri nindraanai - இல்லாமலிருப்பவனாய்
எல்லா உலகும் உடையான் தன்னை,Ella ulagum udaiaan thannai - எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய்
மழை,Mazhai - மழையை
குன்றம் என்றால்,Kunram endraal - மலை ஒன்றினாலே
காத்த பிரானை,Kaatha piranai - தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து
சொல் மாலைகள்,Sol maaligal - சொல்மயமான மாலைகளை
நன்று சூட்டும் விதி,Nanru soottum vidhi - அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை
எய்தினம்,Yeidinam - கிட்டப்பெற்றோம்: (ஆதலால்)
நமக்கு என்னகுறை,Namakku ennagurai - நமக்கு ஒருகுறை யுண்டோ?
3058திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (ஆழ்வார் தம்பக்கலிலே எம்பெருமானுக்குண்டான அபிநிவேஸத்தைக் கண்டு, இப்படிப்பட்ட எம்பெருமானைக் கவி பாட வல்ல எனக்குப் பரமபதத்தில் ஸூரிகளும் நிகரல்லர் என்கிறார்.) 8
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8
நமக்கும்,Namakkum - நித்ய ஸம்ஸாரிகளான நமக்கும்
பூவின் மிசை நங்கைக்கும்,Poovin misai nangaikkum - தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும்
இன்பனை,Inbanai - இன்பமளிப்பவனும்
ஞாலத்தார் தமக்கும்,Jnaalathaar thamakkum - லீலாவிபூதியிலுள்ளார்க்கும்
வானத்தவர்க்கும்,Vaanathavarkkum - பரமபத வாசிகளுக்கும்
பெருமானை,Perumaanai - தலைவனும்
தண் தாமரை சுமக்கும்,Than thaamarai sumakkum - குளிர்ந்த தாமரை மலர்சுமக்கும்படியான
பாதம் பெருமானை,Paadham perumaanai - திருவடிகளை யுடையனுமான ஸர்வேச்வரன் விஷயத்தில்
சொல்மாலைகள்,Solmaaligal - திருவாய்மொழியை
சொல்லும் ஆறு,Sollum aaru - சொல்லும்படியாக
அமைக்க வல்லேற்கு,Amaikka valleerkku - அமைதியைப்பெற்ற எனக்கு
அகல்வானத்து,Akalvaanathu - அகன்ற நித்ய விபூதியிலும்
யாவர் இனிநிகர்,Yaavar iningar - யார்தான் இனி ஒப்பாவார்?
3059திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இப்பாட்டு ஆழ்வாருடைய ஸர்வ விலகஷ்ணமான பெருமையைக் காட்டுகின்றது. பரமபதத்திலுள்ள நித்யர்களென்ன. முக்தர்களென்ன, இவ்விபூதியிலுள்ள பராசர பாராசர்ய வால்மீகி ப்ரப்ருதிகளான மஹரிகளென்ன, ஆகிய இவர்களெல்லாரிற் காட்டிலும் ஆழ்வார்க்குண்டான வைலக்ஷ்ண்யம் இப்பாசுரத்தில் வெளியாகின்றது. எம்பெருமானுடைய பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற எல்லா நிலைமைகளிலும் புக்குக் கவி சொல்ல வல்ல வெனக்கு எதிருண்டோ வென்கிறார்.) 9
வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தன்னை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9
வானத்தும்,Vaanathum - ஸ்வர்க்கத்திலும்
உள்வானத்து உம்பரும்,Ulvaanathu umparum - அதுக்குள்ளாகப் பெரியதாயிருக்கிற மஹர்லோகாதிகளிலும்
மண்ணுள்ளும்,Mannullum - பூமிக்குள்ளும்
மண்ணின் கீழ் தானத்தும்,Mannin keezh thaandhum - பூமியின் கீழ் இருக்கிற பாதாள உலகத்திலும்
எண் திசையும்,Yen thisaiyum - இவற்றிலுண்டான எட்டுவிதமான பதார்த்தங்களிலும்
தவிராது,Thaviraadhu - ஒன்றிலும் வழுவாதபடி
நின்றான் தன்னை,Ninraan thannai - வ்யாபித்து நிற்பவனும்
கூன் நல் சங்கம்,Koon nal sangam - வளைந்தவடிவால் அழகிய ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை
தட கையவனை,Tada kaiyavane - பெரிய திருக்கையிலுடையவனும்
குடம் ஆடியை,Kudam aadiyai - குடக்கூத்தினாலே ஸகல ஜனங்களையும் வசீகரித்தவனும்
வானம் கோனை,Vaanam konai - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனுமான ஸர்வேச்வரன் வியத்திலே
கவி சொல்ல வல்லேற்கு,Kavi solla valleerku - கவி பாடவல்ல எனக்கு
இனி மாறு உண்டே,Ini maaru undae - இனி எதிர் உண்டோ?
3060திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.) 10
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10
உண்டும்,Undum - (ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும்
உமிழ்ந்தும்,Umizhndhum - பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும்
கடந்தும்,Kadandhum - (மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும்
இடந்தும்,Idandhum - (அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும்
கிடந்தும்;,Kidandhum; - (ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும்
நின்றும்,Ninrum - இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும்
கொண்ட கோலத்தொடு,Kondha kola thodu - மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே
வீற்றிருந்தும்,Veevirundhum - எழுந்தருளியிருந்தும்
மணம் கூடியும்,Manam koodiyum - பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி (விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும்)
கண்ட ஆற்றால்,Kanda aatral - இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால்
உலகு தனதே என,Ulagu thanadhe ena - உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி
நின்றான் தன்னை,Ninran thanai - நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில்
வண் தமிழ்,Van Tamil - அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை
நூற்க,Noorka - தொடுக்கைக்கு
நோற்றேன்,Noottren - புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது)
அடியார்க்கு,Adiyarku - எம்பெருமானடியார்கட்கு
ளஇன்பம் மாரி,Inbam maari - ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது.
3061திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.–4-5-11
மாரி மாறாத,Maari maaraadha - மழைதப்பாதபடியினாலே
தண்,Than - குளிர்ந்து
அம்,Am - அழகியதான
வேங்கடம் மலை,Vengadam malai - திருவேங்கடம்மலையிலேயுள்ள
அண்ணலை,Annalai - ஸ்வாமி விஷயமாக
வாரி மாறாத,Vaari maaraadha - ஜலஸம்ருத்தி குறையாத
பை பூ பொழில் சூழ்,Pai poo pozhl sooL - பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட
குருகூர் நகர்,Kurukoor nagar - திருநகரியில் (அவதரித்த)
காரி மாறன் சடகோபன்,Kaari maaran sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தில்
இப்பத்தால்,Ippathaal - இப்பத்துப் பாசுரங்களினால்,
வேரி மாறாத,Veeri maaraadha - பரிமளம் அறாத
பூ மேல் இருப்பாள்,Poo mel iruppaal - தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி
வினை தீர்க்கும்,Vinai theerkkum - எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன்
3062திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.) 1
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இனி,Ini - இப்படிப்பட்ட நிலைமையான பின்பு
தீர்ப்பாரை,Teerpaarai - இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை
யாம் எங்ஙனம் நாடுதலும்,Yaam engganam naaduthalum - நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)
ஓர்ப்பால்,Oarpaal - நன்கு நிரூபிக்குமளவில்
இ ஓள் நுதல்,Iol nuthal - அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை
உற்ற இது,Uttra idhu - அடைந்திருக்கின்ற இந்த நோயானது
நல் நோய்,Nal noy - விலக்ஷ்ணமான நோயாகும் ;
தேறினோம்,Therinom - திண்ணமாக அறிந்தோம் ;
அன்று,Andru - முன்பொருகாலத்திலே
போர்,Pour - பாரதப்போரிலே
பாகு,Paagu - பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை
தான் செய்து,Thaan seydhu - தானே முன்னின்று நடத்தி
ஐவரை,Aivarai - பஞ்சபாண்டவர்களை
வெல்வித்த,Velvitha - ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த
மாயம்,Mayam - ஆச்சரிய சத்தியுக்தரும்
போர் தேர் பாகனார்க்கு,Pour ther paaganaarkku - யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே
இவள்,Ival - இப்பராங்குச நாயகியினுடைய
சிந்தை,Sindhai - மனமானது
துழாய்,Thuzhaay - துழாவப்பெற்று
திசைக்கின்றதுஎ,Thisaikkindradhue - அறிவழயா நின்றதே!
3063திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (க்ஷுத்ர தெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்க வரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப் பெறலாமென்கிறாள்.) 2
திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2
(அன்னைமீர்),Annai meer - தாய்மார்களே!,
திசைக்கின்றதே,Thisaikkindradhe - நீங்கள் இப்படியும் அறிவு கெடலாகுமோ?
இவள் நோய் இது,Ival noy idhu - இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது
மிக்க பெரு தெய்வம்,Mikha peru dheivam - பராத்பரமான தெய்வமடியாக வந்தது;
இசைப்பு இன்றி,Isaippu indri - தகுதியில்லாதபடி
நீர்,Neer - நீங்கள்
அணங்கு ஆடும்,Anangu aadum - வெறியாடுவிக்கின்ற
இள தெய்வம் அன்று இது,Ila dheivam andru idhu - க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்)
திசைப்பு இன்றியே,Thisaippu indriye - மனக்குழப்பம் தவிர்ந்து
நீர்,Neer - நீங்கள்
இவள்கேட்க,Ival kaetka - இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக
சங்கு சக்கரம் என்று,Sanghu sakkaram endru - சங்கென்றும் சக்கரமென்றும்
இசைக்கிற்றிர் ஆகில்,Isaikkindrir aagil - சொல்ல வல்லீர்களானால்
தன்றே,Thandre - நலமாகவே
இல் பெறும்;,Elperum - (இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்:
இது காண்மின்,Idhu kaanmin - இங்ஙனே நடத்திப் பாருங்கள்.
3064திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹார முறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள்.) 3
இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இதுகாண்மின்,Idhu kaanmin - நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;
நீர்,Neer - நீங்கள்
இ கட்டுவிச்சி சொல்கொண்டு,I kattuvischi solkondru - இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு
எதுவானாலும் செய்து,Eduvaanalum seydhu - ஸ்வரூப விருத்தமானதைச் செய்து
அங்கு,Angu - அவ்விடத்திலே
ஓர் கள்ளும் இறைச்சியும்,OrKallum iraichiyum - ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும்
துர்வேல்மின்,Dhurveelmin - ஆராதனையாக வைக்கவேண்டர்
மது ஆர்,Madhu aar - தேன் பொருந்தின
துழாய்,Thuzhaai - திருத்துழாய் மாலையை
முடி,Mudi - திருமுடியிலணிந்துள்ள
மாயம் பிரான்,Maayam piraan - ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய
கழல்,Kazhal - திருவடிகளை நோக்கி
வாழ்த்தினால்,Vazhthinaal - மங்களாசாஸனம் பண்ணினால்
அதுவே,Adhuvae - அதுதானே
இவள் உற்ற நோய்க்கும்,Ival utra noykum - இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும்
அரு மருந்து ஆகும்,Aru marundhu aagum - அருமையான மருந்தாகும்.
3065திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.) 4
மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
மருந்து ஆகும் என்று,Marundhu aagum endru - நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி
ஓர் மாயம் அலவை சொல் கொண்டு,Or maayam alavai sol kondu - வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு
நீர்,Neer - நீங்கள்
கரு சோறும்,Karu sorum - கருஞ்சோற்றையும்
மற்றை செம்சோறும்,Matrai semsorum - மற்றுள்ள செஞ்சோற்றையும்
களன்,Kalan - நாற்சந்தியிலே
இழைத்து,Izhaitthu - இடுவதனால்
என் பயன்,En payan - என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;)
உலகு ஏழும்,Ulaku ezhum - ஸப்தலோகங்களையும்
ஒருங்கு ஆக எ,Orungu aaga e - ஒருகாலே
விழுங்கி,Vizhungi - (பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு
உமிழ்ந்திட்ட,Umiizhndittu - பிறகு வெளிப்படுத்தின
பெரு தேவன்,Peru devan - பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய
பேர்,Per - திருநாமங்களை
சொல்ல கிற்கில்,Solla kirl - (இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால்
இவளை பெறுதிர்,Ivalai peruthir - இவளை இழவாமே பெறுவீர்கள்.
3066திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (மகளுடைய நோய் தீரவேணு மென்று நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் நோயை இன்னமும் அதிகப்படுத்தா நின்றதே யன்றித் தீரச்செய்கின்றதில்லையே: ஆனபின்பு இந்த முறைமைகளைவிட்டு நோயின் ஸ்வரூபத்திற்கு யோக்யமான பரிஹார முறைமை அனுஷ்டிக்கப் பாருங்களென்கிறாள்.) 5
இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
இவளை,Ivalai - இப்பெண்பிள்ளையை
பெறும்பரிசு,Perumparisu - (நோய்தீர்ந்து) நாம் பெறுதற்குரிய மார்க்கம்
இ அணங்கு ஆடுதல் அன்று,I anangu aaduthal andru - வெறியாடுதலாகிற இக்காரியமன்று
அந்தோ,Andho - ஐயோ!இ (இப்பெண்பிள்ளை)
குவளை தட கண்ணும்,Kuvalai thada kannum - குவளை மலர்போன்றதாய் விசாலமான கண்களும்
கோவை செம் வாயும்,Kovai sem vaayum - கோவைக்கனிபோன்று சிவந்த அதரமும்
பயந்தனன்,Payandhanan - வைவர்ணியமடையப்பெற்றாள்:
கவளம்,Kavalam - (இதற்குத்தகுந்த பரிஹாரமென்னவென்றால்) மதகரமான மருந்துகளைக் கவளங்கொண்டதாய்
கடா,Kada - மதம் பெற்றதான
களிறு,Kaliru - (குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட,Atta - தொலைத்தருளின
பிரான்,Piraan - ஸ்வாமியினுடைய
திருநாமத்தால்,Thirunaamathaal - திருநாமோச்சாரண பூர்வகமாக
தவளம் பொடி கொண்டு,Thavalam podi kondu - பரிசுத்தமான (ஸ்ரீவைஷ்ணவ பாத) தூளியைக் கொண்டு வந்து
நீர் இட்டிடுமின்,Neer ittitumin - நீங்கள் (இவள்மேல்) துர்வுங்கோள்
தணியும்,Thaniyum - (இவளதுநோய்) தீரும்.
3067திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (கீழ்ப்பாட்டில் “தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமன்தணியுமே” என்று கூறின தோழியை நோக்கித் தாய்மார் “நீ சொல்லுகிறபொடி இன்னதென்று தெரியவில்லையே!; விளங்கச்சொன்னால் நலம்” என்ன் அதனை விளங்க வுரைக்கின்றாளிப்பாட்டில்.) 6
தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6
அன்னைமீர்,Annai meer - தாய்மார்களே!
தணியும்பொழுது இன்றி,Thaniyum pozhuthu indri - சிறிதும் ஓய்வு இல்லாமல்
நீர் அணங்கு ஆடுதிர்,Neer anangu aaduthir - நீங்கள் வெறியாடுதலைச் செய்வியாநின்றீர்கள்;
பிணியும் ஒழிகின்றது இல்லை,Piniyum ozhiginrathu illai - (இவ்வெறியாடலினால்) நோயோ தீர்கின்றதில்லை;
இது அல்லால்,Ithu allaal - நோய்தீராத மாத்திரமேயன்றிக்கே
பெருகும்,Perugum - மேன்மேலும் வருத்தியுமடைந்து வருகின்றது;
இஅணங்குக்கு,I anangukku - இப்பெண்பிள்ளைக்கு
மணியில் அணி நிறம்,Maniyil ani nirama - நீலமணியிற்காட்டிலும் அழகிய நிறம்படைத்த
மாயன்,Maayan - எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களினுடைய
அடி நீறு கொண்டு,Adi neeru kondu - பாததூளியைக் கொண்டு வந்து
அணிய முயலில்,Aniya muyalil - இடுவதற்கு முயற்சி செய்தால்
மற்று இல்லை கண்டீர்,Matru illai kandeer - (இதோடொத்த பரிஹாரம்) வேறெதுவுமில்லைகிடீர்.
3068திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடறுக்கவும் மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.) 7
அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள் குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7
அணங்குக்கு,Anangukku - இப்பெண்பிள்ளைக்கு
அரு மருந்து என்று,Aru marunthu endru - அருமையான மருந்தென்று சொல்லி
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய்,Angu or aadum kallum paraai - தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து
சுணங்கை எறிந்து,Sunangai erindhu - ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர்,Num thol kullaikka padum annai meer - தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே!
உணங்கல்கெட,Unangal kedu - (இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?) உலர்த்தின நெல் பாழாய்ப் போக
கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்,Kazhuthai uthadu aattam kandu en payan - (அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ?
மாயன் பிரான்,Maayan praan - ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய
தமர்,Thamar - பக்தர்களான
வேதம் வல்லாரை,Vedam vallaarai - வைதிகர்களை
வணங்கீர்கள்,Vanangeerkaal - வணங்குங்கள்.
3069திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (வேத வித்துக்களான ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாதே அற்ப தெய்வங்களைப் பணிதல் உங்களுக்குக் கீழ்மை யென்கிறாள்.) 8
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8
(அன்னைமீர்),(Annai meer) - தாய்மார்களே!
வேதம் வல்லார்களை கொண்டு,Vedam vallaarkalai kondu - வைதிகர்களான ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு
விண்னோர் பெருமான்,Vinnor perumaan - நித்ய ஸூரிநாதனான எம்பெருமானுடைய
திருபாதம்,Thirupaadham - திருவடிகளை
பணிந்து,Panindhu - அச்ரயித்து
இவள் நோய் இது,Ival noyi idhu - இவளுடைய இந்த நோயை
தீர்த்துக்கொள்ளாது போய்,Theerthuk kollaadhu poyi - போக்கிக்கொள்ளாமல்
ஏதம் பறைந்து,Edham paraindhu - இழிவான பேச்சுகளைப்பேசி
அல்ல செய்து,Alla seidhu - ஸ்வரூபத்திற்குத் தகாத காரியங்களைச் செய்து
ஊடு,Oodu - நடுநடுவே
கள் கலாய் துர்ய்,Kal kalaai durya - தன்னைக் கலந்து துர்வி
கீதம் முழவு இட்டு,Geetham muzhavu ittu - வாத்ய கோஷங்களைப் பண்ணி
நீர் அணங்கு ஆடுதல்,Neer anangu aaduthal - நீங்கள் வெறியாடுவிக்கின்றவிது
கீழ்மையே,Keelmaiye - (இக்குடிக்கு) அவத்யமேயாம்
3070திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (நீங்கள் அணங்காடுவதை நான் கண் கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் கண்ண பிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள் என்கிறாள்.) 9
கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9
(அன்னை மீர்),(Annai meer) - தாய்மார்களே!
கீழ்மையினால்,Keelmaiyinaal - உங்கள் நீசத்தனத்தினால்
அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்,Angu or keelmagan itta muzhavin keel - நீசனான சண்டாளனொருவன் நடத்திப்
போரும் வாத்யகோஷத்தின் சார்பாக-

பல நாழ்மை சொல்லி,Pala naazhmai solli - தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி
நீர் அணங்கு ஆடும் பொய்,Neer anangu aadum poy - நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை
காண்கிலேன்,Kaankilein - நான் கண்கொண்டு காணமாட்டேன்:
ஊழ்மையின்,Oozhmaiyin - (சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்) முறைப்படியே
கண்ணபிரான்,Kannapiraan - க்ருஷணபகவானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
உன்னித்து,Unnithu - சிந்தித்து
வாழ்த்துமின்,Vazhthumin - மங்களாசாஸநம் பண்ணுங்கள்:
ஈதே,Eedhe - இந்த மங்களாசாஸநமே
ஏழ்மை பிறப்புக்கும்,Ezmai pirappukkum - ஏழேழ் பிறவிக்கும்
சேமம்,Saemam - க்ஷேமகரம்:
இ நோய்க்கும்,I noikkum - இந்த நோய் தீருவதற்கும்
ஈதே மருந்து,Eedhe marunthu - இதுதான் மருந்து.
3071திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இப் பராங்குச நாயகிக்குக் கண்ணபிரான் பக்கலிலுள்ள அளவு கடந்த ப்ராவண்யத்தை யறிந்து நீங்கள் அதற்குத் தகுதியாக நடந்து கொள்வதே யுக்தமென்கிறாள் தோழி.) 10
உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10
அவனை அல்லால்,Avanai allaal - எம்பெருமானைத் தவிர்த்து
மற்று ஒரு தெய்வம்,Matru oru deivam - வேறொரு தெய்வத்தை
உன்னித்து,Unnithu - ஒரு வஸ்துவாக நினைத்து
தொழாள்,Thozhaal - (இப்பெண்பிள்ளை) தொழுவது கிடையாது:
நும்,Num - (இப்படியிருக்க) உங்களுடைய
இச்சை,Icchai - மனம் போனபடியே
சொல்லி,Solli - (நான் அநுவாதம் செய்யவும் தகாத சொற்களைச்) சொல்லி
நும்,Num - உங்களுடைய
தோள் குலைக்கப்படும் அன்னை மீர்,Thol kulaikkappadum annai meer - தோள் அசையநிற்கிற தாய்மார்களே!,
மன்னப்படும்,Mannappadum - நித்யமாக விளங்குகின்ற வேதங்களினால் பிரதி பாதிக்கப்படுகிறவனும்
வண் துவராபதி மன்னனை,Van Dhuvaraapathi mannanai - அழகிய துவாரகாபுரிக்கு அதிபதியுமான எம்பெருமானை
ஏத்துமின்,Yaathumin - துதியுங்கோள்:
ஏத்தலும்,Yaathalum - துதித்தவுடனே
கதொழுது,Kadozhuthu - (இப்பெண்பிள்ளை உணர்த்தி பெற்று, அவனைத்) தொழுது
ஆடும்,Aadum - களித்துக் கூத்தாடுவாள்.
3072திருவாய்மொழி || (4-6–தீர்ப்பாரை யாமினி) (வெறி விலக்கு) (இத்திருவாய்மொழியை அன்போடு அதிகரிக்குமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து படுகையாகிற துக்கமின்றிக்கே வாழப்பெறுவர்கள் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்க சீலம் இலர்களே.–4-6-11
தொழுது ஆடி,Tozhuthu aadi - வணங்குதலும் கூத்தாடுதலுஞ் செய்து
தூ மணிவண்ணனுக்கு,Thoo manivannanukku - அழகிய நீலமணிபோன்ற நிறமுடையனான எம்பெருமானுக்கு
ஆள் செய்து,Aal seydu - அடிமைத்தொழில் செய்து
நோய் தீர்ந்த,Noy tirnta - நோய் தீரப்பெற்றவரும்,
வழுவாத,Valuvad - அவத்யமடையாத
தொல் புகழ்,Tol pugal - இயற்கையான புகழையுடையவரும்
வண் குருகூர்,Van kurukoor - அழகிய திருநகரிக்குத் தலைவருமான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
வழுவாத,Valuvad - குறையற்றதான
ஆயிரத்துள்,Ayirattul - ஆயிரத்தினுள்ளே
வெறிகள்,Verikal - வெறிவிலக்கு விஷயமான
இவை பத்தும்,Ivai pattum - இப்பதிகத்தை
தொழுதும் ஆடி,Tozhutum aadi - தொழுவதும் ஆடவதுமாய்க் கொண்டு
பாட வல்லார்,Pada vallar - பாடவல்லார்கள்
துக்க சீலம் இலர்கள்,Tukka cilam ilarkal - துக்கப்படுந்தன்மையில்லாதவராவர்.
3073திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வார் சில ஞானிகளைச் சிறுமாமனிசர் என்று அருளிச்செய்வதுண்டு; வடிவு சிறுத்து ஞானம் பெருத்தவர்கள் என்கிற காரணத்தாலே அவர்களைச் சிறுமாமனிசரென்கிறது. இப்பாட்டின் முதலடியில் ஒரு விதத்திலே தம்மையும் சிறுமாமனிசராகச் சொல்லிக் கொள்கிறார் போலும். நற்குண மொன்றுமில்லாததனால் சிறியவன்; பண்ணின பாபங்களில் பெரியவன் என்கிறார்) 1
சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1
சீலம் இல்லா,Seelam illa - நன்மை யொன்று மில்லாத
சிறியன் ஏலும்,Siriyan eelum - சிறியவனா யிருந்தேனாகிலும்
செய் வினையோ,Sey vinaiyo - செய்த பாபமோ
பெரிது,Peridhu - பெரிதாயிருக்கின்றது;
ஆல்,Aal - அந்தோ!;
ஞாலம் உண்டாய்,Jalam undaay - (பிரளயத்தில்) உலகங்களை உண்டவனே!
நாராயணா,Naraayana - நாராயணனே!
என்று என்று,Endru endru - என்றிப்படிப் பலகாலும் சொல்லி
காலம் தோறும்,Kaalam thorum - எல்லாக்காலத்திலும்
யான் இருந்து,Yaan irundhu - நான் ஆசையோடிருந்து கொண்டு
கை தலை பூசல் இட்டால்,Kai thalai poosal ittaal - கையைத் தலையிலே வைத்துக் கூப்பிட்டால்,
கோலம் மேனி,Kolam meni - அழகிய திருமேனியை
காண,Kaan - நான் ஸேவிக்குமாறு
வாராய்,Vaaraay - வருகிறார்யில்லை;
கூவியும் கொள்ளாய்,Kooviyum kollaay - கூவிக் கொள்வதும் செய்கின்றில்லை.
3074திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஏற்கனவே தம் திறத்தில் எம்பெருமான் செய்தருளியிருக்கிற உபகாரங்கள் சிலவற்றைச் சொல்லி ‘இப்படி உபகாரம் செய்தருளின நீ இப்போது உபேக்ஷிப்பது தகுதியோ?’ என்கிறார்.) 2
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோது இல தந்திடும் என்
வள்ளலேயோ! வையம் கொண்ட வாமனாவோ!’ என்று என்று
நள் இராவும் நன்பகலும் நான் இருந்து,ஓலம் இட்டால்
கள்ள மாயா! உன்னை என் கண் காண வந்து ஈயாயே.–4-7-2
கொள்ள,Kolla - அநுபவிக்கவநுபவிக்க
மாளா,Maalaa - எல்லைகாணவொண்ணாத
இன்பம் வெள்ளம்,Inbam vellam - ஆனந்தப்பெருக்கை
கோது இல,Kodhu ila - குறையற
தந்திடும்,Thandhidum - உபகரிக்கின்ற
என் வள்ளலே,En vallalae - என் உதாரனே!
வையம் கொண்ட,Vaiyam konda - (மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்று) உலகங்களையெல்லாம் அளந்து கொண்ட
வாமனா,Vaamana - வாமன்மூர்த்தியே!
ஓ ஓ என்று,Oo oo endru - என்று ஆர்த்தியோடே சொல்லி
நள் இராவும் நன் பகலும்,Nal iraavum nan pagalum - இரவும் பகலும்
நான் இருந்து ஓலமிட்டால்,Naan irundhu oalamittaal - நான் ஆசையோடிருந்து கூப்பிட்டால்
கள்ளம் மாயா,Kallam maayaa - க்ருத்ரிமனான ஆச்சர்ய பூதனே!
உன்னை,Unnai - உன்னை
என் கண் காண,En kan kaana - என் கண்கள் காணுமாறு
வந்து ஈயாய் ஏ,Vandhu eeyaai ae - வந்து ஸேவை ஸாதிக்கின்றிலையே!,
3075திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நான் விரும்புகிறபடி என் கண்முன்னே வந்து காட்சி தந்தருளத் திருவுள்ளமில்லையாகிலும் ‘-நீ பாவி, உனக்கு நான் காட்சிதரமாட்டேன்” என்கிறவொரு வார்த்தையையாவது என் கண் வட்டத்திலே வந்து சொல்லி போனாலாகாதோவென்கிறார்.) 3
ஈவு இலாத தீ வினைகள் எத்தனை செய்தனன் கொல்?
தாவி வையம் கொண்ட எந்தாய்! தாமோதரா! என்று என்று,
கூவிக் கூவி நெஞ்சு உருகி, கண் பனி சோர நின்றால்,
பாவி நீ என்று ஒன்று சொல்லாய், பாவியேன் காணவந்தே.–4-7-3
தீ வினைகள்,Thee vinaigal - பாவங்களை
ஈவு இலாத,Eevu ilaadha - முடிவில்லாதபடி
எத்தனை செய்தனன் கொல்,Eththanai seydhanan kol - எவ்வளவு செய்தேனோ!
தாவி,Thaavi - திருவடிகளாலே வியாபித்து
வையம்,Vaiyam - உலகங்களை
கொண்ட,Konda - ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட
எந்தாய்,Endhaay - ஸ்வாமியே!
தாமோதரா,Dhamodharaa - தர்மபால் ஆப்புண்ட தழும்பை உதரத்திலுடையவனே!
என்று என்று கூவி கூவி,Endru endru koovi koovi - என்று பலகால்சொல்லி இடைவிடாதே கூப்பிட்டு
நெஞ்சு உருகி,Nenju urugi - நெஞ்சு நீராயுருகி
கண் பனி சோர நின்றால்,Kan pani soora ninraal - கண்ணீர் பெருக நின்றால்,
பாவியேன்,Paaviyaen - பாவியான நான்
காண,Kaana - கண்ணாலே ஸேவிக்ககும்படியாக
வந்து,Vandhu - எழுந்தருளி
நீ பாவி என்று,Nee paavi endru - ‘(ஆழ்வாரே!) நீர் பாபிகாணும்’ என்று
ஒன்று சொல்லாய்,Ondru sollaai - ஒரு வார்த்தையும் சொல்லுகின்றாயில்லை.
3076திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலிய தேவர்களுக்கும் காணக்கிடைக்காத பெருமானை வடிவழகு காண விரும்பி வெட்கமுற்று நான் கூப்பிடாநின்றேனே! இதற்கு என்ன பலனுண்டு! என்கிறார்.) 4
காண வந்து,என் கண் முகப்பே தாமரைக் கண் பிறழ,
ஆணிச் செம்பொன் மேனி எந்தாய்! நின்று அருளாய் என்று என்று,
நாணம் இல்லாச் சிறு தகையேன் நான் இங்கு அலற்றுவது என்
பேணி வானோர் காண மாட்டாப் பீடுடை அப்பனையே?–4-7-4
வானோர்,Vaanor - பிரமன் முதலிய தேவர்கள்
பேணி,Paeni - விரும்பியும்
காணமாட்டா,Kaanamaattaa - காணமுடியாதபடி
பீடு உடை,Peedu udai - பெருமை வாய்ந்த
அப்பனை,Appanai - ஸ்வாமியை நோக்கி,
ஆணி செம் பொன் மேனி எந்தாய்,Aani sem pon maeni endhaay - “மாற்றுயர்ந்த பொன் போல விரும்பத்தகுந்த திருமேனி படைத்தபிரானே!
தாமரை கண் பிறழ,Thamarai kan pirazha - தாமரைப்பூப்போன்ற திருக்கண்கள் விளங்கும்படி (என்னைப் பார்த்துக் கொண்டு)
காணவந்து,Kaanavandhu - நான் காணுமாறு வந்து
என் கண் முகப்பே,En kan mukappae - என் கண் முன்னே
நின்றருளாய்,Nindrarulaay - நின்றருளவேணும்
என்று என்று,Endru endru - என்று ஓயாதே சொல்லி
சிறு தகையேன் நான்,Siru thakaiyaen naan - நீசனாகிய நான்
நாணம் இல்லா,Naanam illaa - வெட்கம் கெட்டவனாய்க்கொண்டு
இங்கு அலற்றுவது என்,Ingu alatravathu en - இங்கே அலற்றுவதற்கு ஒரு பிரயோஜனமுமில்லையே!.
3077திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பிரமன் முதலானோர்க்கும் காணமுடியாதிருக்கிற உன்னுடைய அழகைக் காண வேணுமென்று ஆசைப்பட்டு ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து நாம் அபேக்ஷித்தபடியே வந்தருள்வன் என்று நம்பி வரும் போதை யழகைக் காணவேணுமென்று பாரித்திருக்கின்றேனே! என்னுடைய சாபல்யத்தை என் சொல்லுவேன்! என்கிறார்.) 5
அப்பனே!அடல் ஆழி யானே! ஆழ் கடலைக் கடைந்த
துப்பனே!‘உன் தோள்கள் நான்கும் கண்டிடக் கூடுங்கொல்?’என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து,
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.–4-7-5
அப்பனே,Appanae - உபகாரம் செய்யுமியல்வினனே!
அடல் ஆழியானே,Adal aazhiyanaan - வீரத்தன்மை வாய்ந்த திருவாழியையுடையவனே!
ஆழ் கடலை,Aazh kadalai - ஆழமான கடலை
கடைந்த,Kadaindha - கடைந்து அன்பர்கட்கு அமுதமளித்த
துப்பனே,Thuppanae - ஸமர்த்தனே!
உன் நான்கு தோள்களும்,Un naangu tholgallum - உனது திருத்தோள்கள் நான்கையும்
கண்டிட கூடும் கொல் என்று,Kandida koodum kol endru - ஸேவிக்க நேருமோ! என்று எண்ணி
எப்பொழுதும்,Eppozhudum - எப்போதும்
கண்ணநீர் கொண்டு,Kannaneer kondu - கண்ணீரோடிருந்து
ஆவி துவர்ந்து துவர்ந்து,Aavi thuvarndhu thuvarndhu - பிராணன் மிகவும் உலர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று,Ippozhudhae vandhidaai endru - உடனே எழுந்தருள வேணுமென்று அபேக்ஷித்து
ஏழையேன்,Ezaiyaen - சபலனான நான்
நோக்குவன்,Nokkuvan - சுற்றும் பாராநின்றேன்.
3078திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம் பெருமானே! என்னுள்ளே நீ நிறைந்திருந்தும் எனக்கு நீ உன்னைக் காட்டாமலிருப்பது திருவுள்ளமில்லாமையன்றோ என்று நான் அறிந்து வைத்தும் அவிவேகத்தாலே காணவாராய்! காணவாராய்! என்று கதறுகின்றேன் என்கிறார்.) 6
நோக்கி நோக்கி, உன்னைக் காண்பான், யான் எனது ஆவியுள்ளே
நாக்கு நீள்வன், ஞானம் இல்லை; நாள்தோறும் என்னுடைய
ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி, எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.–4-7-6
நாள் தோறும்,Naal thorum - ஸர்வகாலத்திலும்
என்னுடைய,Ennudiya - என்னுடைய
ஆக்கை உள்ளும்,Aakkai ullum - சரீரத்தினுள்ளும்
ஆவி உள்ளும்,Aavi ullum - ஆத்மாவினுள்ளும்
அல் புறத்தின் உள்ளும்,Al purathin ullum - மற்றுமுண்டான இந்த்ரியம் முதலானவற்றிலும்
நீக்கம் இன்றி,Neekkam indri - நீங்காமல் (ஒன்றையும் விடாமல்)
எங்கும் நின்றாய்,Engum nindraai - எங்கும் வியாபித்திருக்கின்ற பெருமானே!
நின்னை,Ninnai - உன்னை
அறிந்து அறிந்தே,Arindhu arindhae - (அருள் செய்யத் திருவுள்ளமில்லாதவன் என்று) நன்றாக நான் அறிந்துவைத்தும்
யான்,Yaan - நான்
உன்னை காண்பான்,Unnai kaanbaan - உனது திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கவேண்டி
நோக்கி நோக்கி,Nokki nokki - எல்லாத் திசைகளிலும் பார்த்து
எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - எனது நெஞ்சுக்குள்ளே
நாக்கு நீள்வன்,Naakku neelvan - நாக்கை நீட்டுகின்றேன் (ஆசைப்படுகிறேன்)
ஞானம் இல்லை,Gnanam illai - இப்படிப்பட்ட நான் விவேகமற்றவனத்தனை.
3079திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (ஆழ்வீர்! *நாக்கு நீள்வன் ஞானமில்லை* என்று உம்மை நீர் நிந்தித்துக் கொள்வதானது என்னுடைய நிந்தையிலன்றோ முடிந்து நிற்கிறது; உமக்கு நான் ஒரு உபகாரமும் செய்யவில்லைபோலே வருந்துகின்றீரே; நன்கு ஆராய்ந்து பாரும்; எத்தனை உபகாரங்கள் என்னால் பெற்றிருக்கிறீரென்பதை அறிந்து சொல்லும்’ என்று எம்பெருமான் அருளிச்செய்ய, ‘பிரானே! சில உதவிகளை நீ செய்ய நான் பெற்றதுண்டு; அடியோடு ஒன்றுமில்லையென்று சொல்லுகின்றிலேன்; பெற்றவளவு போராது என்கிறேத்தனை’ என்று சொல்லத் தொடங்கி, பெற்ற அளவு இன்னதென்கிறார் இப்பாட்டில்; -பெறவேண்டியதை மேற்பாட்டிலே சொல்ல விருக்கிறார்.) 7
அறிந்து அறிந்து, தேறித் தேறி,யான் எனது ஆவியுள்ளே
நிறைந்த ஞான மூர்த்தி யாயை நின்மலமாக வைத்து,
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்தொழிந்தேன் ;
நறுந் துழாயின் கண்ணி அம்மா! நான் உனைக் கண்டு கொண்டே.–4-7-7
நறுதுழாயின் கண்ணி அம்மா,Naruthuzhaayin kanni amma - பரிமளம்மிக்க திருத்துழாய் மாலையையுடைய பெருமானே!
நான் உன்னை கண்டுகொண்டு,Naan unnai kandukondu - நான் உன்னை (மாநஸஸாக்ஷ்ர்த்காரமாக) ஸேவிக்கப்பெற்று
அறிந்து அறிந்து,Arindhu arindhu - உன்னுடைய உபாயத்வத்தையும் உபேயத்வத்தையும் நன்றாக அறிந்து
தேறி தேறி,Thaeri thaeri - மிக்க தெளிவையுடையேனாகி
யான்,Yaan - இப்படித் தெளிவுபெற்ற நான்
எனது ஆவி உள்ளே,Enadu aavi ullae - என் நெஞ்சுக்குள்ளே
நிறைந்த ஞானம் மூர்த்தியாயை,Niraindha gnanam moorthiyaayai - பரிபூர்ண ஜ்ஞானஸ்வரூபனான உன்னை
நின்மலம் ஆக வைத்து,Ninmalam aaga vaithu - விசதமாக அநுபவித்து
பிறந்தும் செத்தும் நின்று இடறும் பேதைமை தீர்ந்து ஒழிந்தேன்,Piranthum setthum nindru idarum paedhaimai theerndhu ozhindhaen - பிறப்பதும் சாவதுமாயிருந்து படுகிற அஜ்ஞான ஸம்ஸாரத்தைத் தவிர்த்துக் கொள்ளப் பெற்றேன்.
3080திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (பெற்ற உபகாரங்களைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; இனிப் பெறவேண்டுமது தன்னைப் பேசுகிறார் இப்பாட்டில். இந்த ஸம்ஸார நிலந்தன்னிலேயே உன்னைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளுஞ் செய்து உஜ்ஜீவிக்கும்படி அருள் புரிய வேண்டு மத்தனையே அபேஷிதமென்கிறார்.) 8
கண்டு கொண்டு, என் கைகள் ஆர, நின் திருப்பாதங்கள் மேல்
எண் திசையும் உள்ள பூக் கொண்டு ஏத்தி, உகந்துகந்து,
தொண்டரோங்கள் பாடி ஆட, சூழ் கடல் ஞாலத்துள்ளே
வண் துழாயின் கண்ணி வேந்தே! வந்திட கில்லாயே.–4-7-8
வண் துழாயின் கண்ணிவேந்தே!,Van thuzhaayin kanniveendhe - அழகிய திருத்துழாய்மாலையையுடைய நாயனே!
கண்டுகொண்டு,Kandugondu - (நெஞ்சினால் காண்கையன்றிக்கே) கண்ணாரக் கண்டு
என் கைகள் ஆர,En kaigal aara - எனது கைகள் ஆவல் தீரும்படி
நின் திருபாதங்கள் மேல்,Nin thirupaathangal mel - உனது திருவடிகளின் மீது
எண் திசையும் உள்ள பூ கொண்டு,En dhisayum ulla poo kondu - எங்குமுள்ள புஷ்பங்களை சேகரித்துக்கொண்டு
ஏத்தி,Yaethi - தோத்திரஞ்செய்து பரிமாறி
உகந்து உகந்து,Ugandhu ugandhu - மிகவும் உகந்து
தொண்ட ரோங்கள்,Thondarongal - அடியோரமான நாங்கள்
பாடி ஆட,Paadi aada - பாடுவதாடுவதாம்படி
கடல் சூழ் ஞாலத்துள்ளே,Kadal soozh gnaalathullae - கடல் சூழ்ந்த இந்நிலவுலகுக்குள்ளே
வந்திடகில்லாயே,Vandhidakillaaye - (என் கண்முகப்பே) வந்து நிற்க மாட்டேனென்கிறாயே
3081திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும் அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது) 9
இடகிலேன் ஒன்று; அட்டகில்லேன்; ஐம்புலன் வெல்லகிலேன்;
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகிலேன்;
மடவல் நெஞ்சம் காதல் கூர, வல்வினையேன் அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்; எங்குக் காண்பன் சக்கரத்து அண்ணலையே?–4-7-9
ஒன்று இடகிலேன்,Ondru idakillaen - (இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்;
ஒன்று அட்டகில்லேன்,Ondru attakillaen - (தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்;
ஐம் புலன்,Aimpulan - இந்திரியங்களைந்தையும்
வெல்லகில்லேன்,Vellakillaen - பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்;
கடவன் ஆகி,Kadavan aagi - நியதியுடையவனாகி
காலம் தோறும்,Kaalam thorum - உரிய காலங்களிலே
பூ பறித்து ஏத்தகில்லேன்,Poo parithu yaethakillaen - புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்;
மடம் வல் நெஞ்சம்,Madam val nenjam - (இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்) மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது
காதல் கூர,Kaadhal koora - ஆசை விஞ்சிவரப்பெற்று
வல் வினை யேன்,Val vinai yaen - மஹாபாபியான நான்
அயர்ப்பு ஆய்,Ayarppu aai - அவிவேகியாய்
சக்கரத்து அண்ணலை,Sakkarathu annalai - சக்கரபாணியான எம்பெருமானை
தடவுகின்றேன்,Thadavugindren - காணத்தேடுகின்றேன்;
எங்கு காண்பன்,Engu kaanban - எங்கே காணக்கடவேண்?
3082திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) (நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யுக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸ ஜ்ஞானத்திற்கு விஷயமாகிக் கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.) 10
சக்கரத்து அண்ணலே! என்று தாழ்ந்து, கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்று, அலந்தேன்; பாவியேன் காண்கின்றிலேன்;
மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினை என்
தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே.–4-7-10
சக்கரத்து அண்ணலே என்று,Sakkarathu annale endru - கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி
தாழ்ந்து,Thaazhnthu - அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து
கண்நீர் ததும்ப,Kannir thadhumba - கண்ணீர்மல்க
பக்கம் நோக்கி நின்று,Pakkam noakki nindru - சுற்றும் பார்த்து நின்று
அலந்தேன்,Alandhen - தளர்ந்தவனான
பாவியேன்,Paavi yaen - பாவியானநான்
காண்கின்றிலேன்,Kaangindrilaen - காணப்பெறுகின்றிலேன்: (காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ)
மிக்க ஞானம் மூர்த்தி ஆய,Mikka gnanam moorthi aai - மிகுந்த ஞானஸ்வரூபனாய்
வேதம் விளக்கினை,Vedham vilakkina - வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை
என் தக்க,En thakka - எனக்கேற்ற
ஞானம் கண்களாலே,Gnanam kangalaale - ஞானமாகிற கண்ணாலே
கண்டு தழுவுவனே,Kandu thazhuvuvane - கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே! (எப்படி மறக்கமுடியும்?)
3083திருவாய்மொழி || (4-7–சீலமில்லாச்சிறி) (திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்) ((தழுவிநின்ற.) இத்திருவாய்மொழியைக்கற்று ப்ரேம பரவசராமவர்கள் திருநாட்டிலே சென்று நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்காட்டுகிறார்.) 11
தழுவி நின்ற காதல் தன்னால் தாமரைக் கண்ணன்றனைக்
குழுவு மாடம் தென் குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழு விலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆட வல்லார் வைகுந்தம் ஏறுவரே.–4-7-11
தழுவி நின்ற,Thazhuvi nindra - விட்டு நீங்காத
காதல் தன்னால்,Kaadhal thannal - (பகவதனுபவத்திலுள்ள) ஆசையினாலே
தாமரை கண்ணன் தன்னை,Thamarai kannan thannai - செந்தாமரைக்கண்ணனான எம்பெருமானைக்குறிந்து
குழுவு மாடம் தென்குருகூர்,Kuzhuvu madam thenkurugur - திரண்ட மாடங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான
மாறன் சடகோபன்,Maran sadagopan - ஆழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்த
வழு இலாத,Vazhu ilaadha - குறையற்ற
ஒண் தமிழ்கள்,On tamilkal - அழகிய தமிழ்ப்பாஷையினாலாகிய
ஆயிரத்துள்,Ayirathul - ஆயிரம் பாட்டினுள்
இ பத்தும்,I pathum - இத்திருவாய்மொழியை
தழுவ,Thazhuva - கருத்தோடுகூட
பாடி,Paadi - இசைபாடி
ஆட வல்லார்,Aada vallaar - களித்துக் கூத்தாடவல்லவர்கள்
கைகுந்தம் ஏறுவர்,Vaikundham yeruvar - திருநாட்டில் ஏறப்பெறுவர்கள்.
3084திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 1
ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1
ஏறு ஆளும் இறையோனும்,Eru aalum iraiyonum - விருஷபவாஹனனான சிவபிரானும்
திசைமுகனும்,Thisaimukanum - நான்முகனும்
திருமகளும்,Thirumagalum - பெரியபிராட்டியாரும்
கூறு ஆளும்,Kuru aalum - ‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற
தனி உடம்பன்,Thani udamban - விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,
அசுரர்களை,Asurargalai - அசுரர்களை
குலம் குலம் ஆ,Kulam kulam aa - கூட்டங் கூட்டமாக
நீறு ஆகும்படி ஆக,Neeru aagumbadi aaga - சுடநீறாகி யொழியும்படியாக
நிருமித்து,Nirumiththu - ஸங்கல்பித்து
படை தொட்ட,Padai thotta - (அவ்வளவேயன்றிக்கே) ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த
மாறு ஆளன்,Maaru aalan - எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மணி மாமை,Mani maamai - அழகிய நிறத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேஷையுடையோமல்லோம்.
3085திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (பிராட்டியோடே கூடியிருக்குமழகைக் காட்டி என்னை யடிமை கொண்டவன் விரும்பாத நெஞ்சால் ஒரு காரியமில்லையென்கிறாள். குற்றங்களையும் நற்றமாக உபபாதித்து அருள் புரிவிக்கின்ற பெரிய பிராட்டியாரும் கூடவிருக்கச்செய்தே என்னை உபேக்ஷித்திருக்குமாகில் என்னுடைமையால் எனக்குத் தான் ப்ரயோஜனம் என்? என்கிறாள்.) ((ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 2
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்
அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்
பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்ட
மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2
மணி மாமை குறைவு இல்லா,Mani maamai kuraivu illaa - அழகிய நிறம் நிரம்பி யிருக்கப் பெற்ற
மலர்மாதர்,Malarmadhaar - பூமகளான பெரியபிராட்டியார்
உறை,Urai - நித்யவாஸம் பண்ணப்பெற்ற
மார்பன்,Maarban - திருமார்பையுடையவனும்
அணிமானம் தட வரை தோள்,Animaanam thada varai thol - அழகியதாகப் பெருத்து திருத்தோள்களையுடையவனும்
அடல் ஆழி தடகையன்,Adal aazhi thadakaiyan - தீக்ஷ்ணமான திருவாழியைப் பெரிய திருக்கையிலேயுடையவனும்
பணி மானம் பிழையாமே,Pani maanam pizhaiyaame - கைங்கர்ய வ்ருத்திகள் தப்பாதபடி
அடியேனை,Adiyenai - அடியேனை
பணிகொண்ட,Panikonda - கிங்கரனாக ஆக்கிக்கொண்டவனும்
மணி மாயன்,Mani maayan - நீலமணிவண்ணனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மட நெஞ்சால் குறைவு இலம்,Mada nenjaal Kuraivu ilam - விதேயமான நெஞ்சில் அபேக்ஷையுடையோமல்லோல்.
3086திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((மடநெஞ்சால்) கண்ணபிரான் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டாமென்கிறாள்.) 3
மட நெஞ்சால் குறையில்லா மகள் தாய் செய்து ஒருபேய்ச்சி
விட நஞ்ச முலை சுவைத்த மிகு ஞானச் சிறு குழவி
பட நாகத்து அணைக் கிடந்த பருவரைத் தோட் பரம் புருடன்
நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3
மடநெஞ்சால் குறைவு இல்லா ,Mada nenjaal kuraivu illaa - நெஞ்சில் நெகிழ்ச்சியைப் பரிபூர்ணமாகக்கொண்ட
தாய் மகள் செய்த,Thaai magal seitha - யசோதையாகிய தாயாகத் தன்னையாக்கிக்கொண்ட
ஒரு பேய்ச்சி,Oru peychi - பூதனையென்கிறவொரு பேய்ச்சியினுடைய
விடம் நஞ்சம்,Vidam nanjam - கொடிய விஷம்பொருந்திய
முலை,Mulai - முலையை
சுவைத்த,Suvaitha - உறிஞ்சியுண்டவனும்
மிகு ஞானம் சிறு குழவி,Migu jnaanam siru kuzavi - மிக்க ஞானத்தையுடைய சிறு குழந்தையானவனும்
படம் நாகம்அணைகிடந்த,Padam naagam anaikidantha - படமெடுத்த நாகமாகிற படுக்கையிலே சயனிப்பவனும்
பரு வரை தோள்,Paru varai thol - பெரியமலைபோலே வளர்;த தோள்களையுடையவனும்
பரம்புருடன்,Paramburudan - புருஷோத்தமனாக ப்ரஸித்த பெற்றவனும்
நெடு மாயன்,Nedu maayan - எல்லைகடந்த ஆச்சர்யகுண சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
நிறைவினால் குறைவு இலம்,Niraivinaal kuraivu ilam - அடக்கத்தில் அபேக்ஷயுடையோமல்லோம்.
3087திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக எருதேழடர்த்த பெருமான் விரும்பாத செவ்விய நிறம் எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 4
நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4
நிறைவினால் குறைவு இல்லா,Niraivinaal kuraivu illaa - குறையற்ற ஸ்த்ரீத்வ பூர்த்தியையடையவளும்
நெடு பணை தோள்,Nedupanai thol - நீண்டு பணைத்ததோள்களையுடையவனும்
மடம்,Madam - அறிந்தும் அறியாமையாகிற மடப்பம் பொருந்தியவளுமான
பின்னை,Pinnai - நப்பின்னையினுடைய
முலை அணைவான்,Mulai anaivaan - திருமுலைத்தடத்தோடு சேருகைக்காக (மணப்பதற்காக)
பொறையினால்,Poraiyinaal - வருத்தங்களைப் பொறுத்திருந்து
பொரு விடை ஏழ் அடாத்து உகந்த,Poru vidai ezh adaatthu ugandha - கொடிய விருஷபங்களேழையும் நொரித்து மகிழ்ந்தவனும்
கறையின் ஆர் துவர் உடுக்கை,Karaiyin aar thuvar udukkai - (நாவல் முதலிய காட்டுப்பழங்களின்) கறைமிகுந்த துவர்நிறமான வஸ்த்ரத்தையும்
கடையா,Kadaiya - பால்கறக்கும் முங்கிற்குழாயையும்
கழிகோல்,Kazhikol - கையிலேஉடையவனும்
சறையினார்,Saraianaar - தன்உடம்பைப்பேணாதவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
தளிர்நிறத்தால் குறைவு இலம்,Thalirnirathaal kuraivu ilam - தளிர்போலே செவ்விதான நிறத்தில் விருப்பமுடையோமல்லோம்
3088திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) ((தளிர்நிறத்தால்) இராமபிரானுடைய சேஷத்வத்திற்கு உறுப்பல்லாத அறிவு எனக்கு வேண்டாவென்கிறாள்.) 5
தளிர் நிறத்தால் குறையில்லாத் தனிச் சிறையில் விளப்புற்ற
கிளி மொழியாள் காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த
களி மலர்த் துழாய் அலங்கல் கமழ் முடியன் கடல் ஞாலத்து
அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5
தளிர் நிறத்தால் குறைவு இல்லா,Thalir nirathaal kuraivu illaa - தளிர்போன்றழகிய நிறத்தால் பரிபூர்ணையாய்
தனி சிறையில் விளிப்புற்ற,Thani siraiyil vilipputra - தனிச்சிறையிருந்ததனால் ப்ரஸித்தி பெற்றவளாய்
கிளி மொழியாள் காரணம்; ஆ,Kili mozhiyal kaaranam; aa - கிளியினதுபோன்ற இனிய மொழியையுடையளான ஸீதா பிராட்டிநிமித்தமாக
கிளர் அரக்கன் நகர் எரித்த,Kilar arakkan nagar eritha - செருக்கனான இராவணனுடைய பட்டணத்தை நெருப்புக்கு இரையாக்கினவனும்
களி மலர்துழாய் அலங்கல் கமழ் முடியன்,Kali malarthuzhai alangai kamazh mudiyan - தேனையடைய மலரோடுகூடின திருத்துழாய் மாலையாலே பரிமளிக்கின்ற திருமுடியையுடையவனும்
கடல் ஞாலத்து,Kadal gnaalathu - கடல்சூழ்ந்த மண்ணுலகில்
அளிமிக்கான்,Alimikkaan - மிகுந்த அன்பையுடையவனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
அறிவினால் குறைவு இலம்,Arivinaal kuraivu ilam - அறிவில் அபேக்ஷை யுடையோமல்லோம்.
3089திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (தன்னைப் பெறுதற்கு உபாயமானவற்றை யெல்லாம் தானே அருளிச் செய்து, ஹிதோபதேசத்திற்குப் பாங்கல்லாதவர்களைத் தன் அழகாலே வசப்படுத்திக் கொள்பவனான பெருமான் விரும்பாத லாவண்யம் எனக்கு எதற்காக? என்கிறாள்.) 6
அறிவினால் குறையில்லா அகல் ஞாலத்தவர் அறிய,
நெறி எல்லாம் எடுத்து உரைத்த நிறை ஞானத்து ஒரு மூர்த்தி,
குறிய மாண் உருவாகி, கொடுங் கோளால் நிலங்கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6
அறிவினால் குறைவு இல்லா,Arivinaal kuraivu illaa - ‘நமக்கு அறிவு இல்லையே!’ என்ற குறைபடமாட்டாத
அகல் ஞாலத்தவர் அறிய,Akal gnaalaththavar ariya - விரிவான நிலவுலகிலுள்ளாரனைவரும் அறியும்படியாக
நெறி எல்லாம்,Neri ellaam - (கருமயோகம் முதலிய) ஸகலோபாயங்களையும்
எடுத்து உரைத்த,Eduthu uraitha - ஸாரமாகவெடுத்தருளிச்செய்த
நிறை ஞானம்,Nirai gnaanam - பரிபூர்ண ஞானத்தையுடைய
ஒரு மூர்த்தி,Oru moorthi - விலக்ஷணஸ்வாமியாய்,
குறிய மாண்உருஆகி,Kuriyaa maanuru aaki - வாமந ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனாய்
கொடு கோளால்,Kodu kolaal - (மாவலியை வஞ்சிக்கையாகிற) கொடியவழியினால்
நிலம் கொண்ட,Nilam konda - பூமியைத் தன்னதாக்கிக் கொண்ட
கிறி,Kiri - உபாஜ்ஞனான
அம்மான்,Ammaan - எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
கிளர் ஒளியால் குறைவு இலம்,Kilar oliyaal kuraivu ilam - மிகுந்த லாவண்யத்தில் விருப்பமுடையோமல்லோம்.
3090திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஆச்ரித விரோதியான இரணியனைப் பிளந்தொழிந்த நரஸிம்ஹன் விரும்பாத வளை எனக்கு வேண்டா வென்கிறாள்) 7
கிளர் ஒளியால் குறைவில்லா அரி உருவாய்க் கிளர்ந்து எழுந்து,
கிளர் ஒளிய இரணியனது அகல் மார்பம் கிழித்து உகந்த,
வளர் ஒளிய கனல் ஆழி வலம் புரியன், மணி நீல
வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7
கிளர்ஒளியால் குறைவு இல்லா,Kilar oliyaal kuraivu illaa - கிளர்கின்ற தேஜஸ்ஸூ நிரம்பப் பெற்ற
அரி உரு ஆய்,Ari uru aai - நரசிங்கமூர்த்தியாய்
கிளர்ந்து எழுந்து,Kilarndhu ezhundhu - சீறிக்கொண்டு தோன்றி,
கிளர் ஒளிய இரணியனது,Kilar oliya iranianathu - மிக்கதேக பொருந்திய இரணியனுடைய
அகல் மார்பம்,Akal maarbam - விசாலமான மார்பை
கிழித்து உகந்த,Kizhiththu ugandha - இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்தவனும்,
வளர் ஒளிய,Valar oliya - வளர்கின்ற ஜ்வாலையையுடைய
கனல்,Kanal - நெருப்புப் போலேயிருக்கிற
ஆழி,Aazhi - சக்கரத்தையும்
வலம்புரியன்,Valampuriyan - சங்கையுமுடையவனும்,
நீலம் மணி வளர் ஒளியான்,Neelam mani valar oliyaan - நீலரத்னம் போன்று விளங்குகின்ற திருமேனி விளக்கத்தை யுடையனுமான பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
வரி வளையால் குறைவு இலம்,Vari valaiyaal kuraivu ilam - அழகிய வளையில் அபேக்ஷ யுடையோமல்லோம்.
3091திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (மண்ணின்பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்து விரோதிகளைத் தொலைத்து அமரர்கள் துதிக்க நின்ற பெருமான் விருமாபாத மேகலை எனக்கு ஏதுக்கென்கிறாள்.) 8
வரி வளையால் குறை யில்லாப் பெரு முழக்கால் அடங்காரை
எரி அழலம் புக ஊதி இருநிலம் முன் துயர் தவிர்த்த
தெரி வரிய சிவன் பிரமன் அமரர் கோன் பணிந்து ஏத்தும்
விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8
முன்,Mun - முன்பொரு காலத்தில்
வாவளையல்,Vaavalaiyal - வரிகளையுடைய சங்கில் நின்று முண்டான
குறைவு இல்லா பெருமுழக்கால்,Kuraivu illaa perumuzhakkaal - மிக பெரிய கோஷத்தினலே
எரி அழலம்,Eri azhalam - கிளர்ந்தெரிகிற (பயமாகிற) அக்கியானது
அடங்காரை புக,Adangaarai puga - பகைவர்களிடத்துப் புகும்படியாக
ஊதி இரு நிலம்,Oothi iru nilam - (சங்கை) ஊதி விசாலமான பூமண்டலத்தினுடைய
துயர்,Thuyar - (பெரும்பாரத்தினுலுண்டான) கஷ்டத்தை
தவிர்த்த தெரிவு அரிய சிவன் பிரடன் அமரர் கோன்;,Thavirththa therivu ariya sivan piradan amarar kon; - (இவ்வுபகாரத்திற்காக) அறிய முடியாத சிவன் பிரமன் இந்திரன் ஆகிய இவர்கள்
பணிந்து,Panindhu - வணங்கி
ஏத்தும்,Yaeththum - துதிக்கப்பெற்ற
விரி புகழான்,Viri pugazhaan - பரந்த புகழையுடையனுமான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
மேகலையால்,Megalaiyaal - அரைவடத்தில்
குறைவு இலம்,Kuraivu ilam - அபேக்ஷையுடையோமல்லோம்.
3092திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (வாணனாயிரம் தோள் துணித்த பெருமாள் விரும்பாத உடம்பு எனக்கு ஏதுக்கு? என்கிறாள்.) 9
மேகலை யால் குறை யில்லா மெலி வுற்ற அகல் அல்குல
போக மகள் புகழ்த் தந்தை விறல் வாணன் புயம் துணித்து
நாக மிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9
தந்தை,Thandai - புகழையுடையனாய்
புகழ்,Pugazh - புகழையுடையனாய்
விறல்,Viral - பலிஷ்டனான
வாணன்,Vaanan - பாணாஸூரனுடைய
புயம்,Puyam - தோள்களை
துணித்து,Thuniththu - அறுத்தொழித்தவனாய்,
நாகம் மிசை,Naagam misai - ஆதிசேஷன்மீது
துயில்வான் போல்,Thuyilvaan pol - உறங்குவான் போலே
உலகு வல்லாம்,Ulagu vallaam - ஸகலலோகமும்
நன்கு ஒடுங்க,Nangu odunga - நன்மையிலே சேரும்படி
யோகு அணைவான்,Yogu anaivaan - உபாயசிந்தை பண்ணுமவான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உடம்பினால் குறைவு இலம்,Udambinaal kuraivu ilam - உடம்பில் அபேக்ஷயுடையோ மல்லோம்.
3093திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - பிரதி பக்ஷம் எத்தனையேனும் மிக்கதாகிலும் போக்கும் ஸ்வ பாவனாய் அத்யந்த சீலவானாய் உள்ள எம்பெருமான் கவராத உயிரினால் கார்யம் உடையோம் அல்லோம் என்கிறாள்.) 10
உடம்பினால் குறையில்லா உயிர் பிரிந்த மலைத் துண்டம்
கிடந்தன போல் துணி பலவா அசுரர் குழாம் துணித்து உகந்த
தடம் புனல சடை முடியன் தனி ஒரு கூற மர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10
உடம்பினால் குறைவு இல்லா,Udambinaal kuraivu ella - பெரிவுடம்பு படைத்த
அசுரர் குழாம்,Asurar kuzhaam - அசுரக்சுட்டங்களை
உயிர் பிரிந்த மலை துண்டம் கிடந்தனபோல்,Uyir pirindha malai thundam kidanthanapol - உயிரைவிட்டு நீங்கின பர்வதகண்டங்கள் கிடந்காற்போலே
பல துணி ஆ,Pala thuni aa - பலபல கண்டங்களாம்படி
துணித்து,Thuniththu - துண்டித்து
உகந்த,Ugandha - (ஆச்ரிதவிரோதிகள் தொலைந்தன வென்று) திருவுள்ள முவந்தவானாய், ஒரு பக்கத்திலே,
தடம் புனல் சடை முடியன் தனி அமர்ந்து உறையும்,Tadam punal sadai mudian thani amarndhu uraiyum - பரந்த கங்காதீர்த்தத்தைத்தரித்த ஜடாமகுடத்தையுடையனான சிவபிரான் பொருந்தி வாஸம் பண்ணப்பெற்ற
உடம்பு உடையான்,Udambu udaiyaan - திருமேனியை யுடைவனான எம்பெருமான்
கவராத,Kavaradha - விரும்பாத
உயிரினால் குறைவு இலம்,Uyirinaal kuraivu ilam - ஆத்மாவில் அபேக்ஷையுடையோ மல்லோம்.
3094திருவாய்மொழி || (4-8–ஏறாளும் இறையோனும்) (எம்பெருமான் விரும்பாதவைகளால் தமக்குப் பயன் இல்லை என்று தலைவி கூற்றாகப் பேசுதல்) (இருள் தருமாஞாலத்தில் பிறப்பையறுத்துப் பரமபதம் பெறுதற்கு இத்திருவாய்மொழி ஸாதனமாயிருக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர் வெண்ணெய் உண்டானைத் தடங் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசை மாலை ஆயிரத்துள் இப் பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.–4-8-11
உயிரினால் குறைவு இல்லா,Uyirinaal kuraivu ella - எண்ணிறந்த ஆத்மாக்களையுடைய
ஏழ் உலகு,Ezh ulagu - ஸமந்த லோகங்களையும்
தன்னுள்; ஒடுக்கி,Thannul; odugi - தன்னுடைய ஸங்கல்பத்திலே யடக்கிவைத்து
தயிர் வெண்ணெய் உண்டானை,Thayir vennai undaanai - தயிரும் வெண்ணெயும் அமுது செய்தவனான எம்பெருமான் விஷயமாக
தடம் குருகூர் சடகோபன்,Tadam kurugoor sadagopan; - தடம் குருகூர் சடகோபன்;
செயிர் இல்,Seir il - குற்றமற்ற
இசை,Isai - இசையோடு கூடின
சொல்மாலை,Solmaalai - சொல்மாலையாகிய
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாட்டினுள்ளே
இபத்தால்,Ipaththaal - இந்தப்பதிகத்தினால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து,Vairam saer pirappu aruthu - உரமேறின ஸம்ஸாரத்தை அடியறுத்து
வைகுந்தம்,Vaigundham - பரமபதத்தை
நண்ணுவர்,Nannuvar - கிட்டப்பெறுவர்.
3095திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (எம்பெருமானே! ஸர்வரக்ஷண ஸமர்த்தனாய் ஸர்வ நிர்வாஹகனாய் நீ யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அளவுகடந்த துயரங்களை யநுபவித்துத் கொண்டிருக்குமிருப்பு கண்டு என்னால் பொருத்திருக்க முடியவில்லை; இவர்களுடைய ஆர்த்தியைத் தீர்ப்பதோ, அன்றி இவர்களுடைய இழவை நான் சிந்திக்க வொண்ணாதபடி என்னை முடிப்பதோ செய்யவேணும் என்கிறார்.) 1
நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1
நண்ணாதார்,Nannaathaar - பகைவர்கள்
முறுவலிப்ப,Muruvalippa - மகிழ்ந்து சிரிக்கவும்
நல் உற்றார்,Nal uttraar - நல்ல உறவினர்கள்
தரைந்து ஏங்க,Taraithu aengka - மனமுருகிவருந்தவும்
எண்ஆரா துயர் விளைக்கும்,Enumaara thuyar vilaiyum - எண்ணமுடியாத துன்பங்களை விளைக்கின்ற வையான
இவை உலகு இயற்கை,Ivai ulagu iyarkai - இந்த லோகயாத்ரைகள்
என்ன,Enna - என்ன!;
கண் ஆளா,Kan aalaa - தாயாளுவே!
கடல் கநை;தாய்,Kadal kanaithaay - (தேவர்களுக்கு அமுத மளிக்கக்) கடலைக் கடைந்தவனே!
உன கழற்கே,Una kazharkae - உனது திருவடி வாரத்திலேயே
வரும் பரிசு,Varum parisu - நான் வந்து சேரும்படி
தண்ணாவாது,Thannaavaadhu - காலதாமதமின்றியில்
அடியேனே,Adiyene - அடியேனே
சாம்ஆறு,Saamaaru - மரணமடையும் படி
பணி,Pani - அருள் செய்யவேணும்; (கண்டாய் - முன்னிலையசை)
3096திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப்பாட்டில் “எண்ணுராத்துயர்” என்று ஸமுதாயமாகச் சொன்னதைச் சிறிது விவரித்து, இப்படி இவர்கள் படுகிற துக்கங்களைப் போக்கி யருள மாட்டாயாகில், என்னை யாவது உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறர்.) 2
சாமாறும் கெடுமாறும் தமர் உற்றார் தலைத் தலைப் பெய்து
ஏமாறிக் கிடந்து அலற்றும் இவை என்ன உலகியற்கை?
ஆமாறு ஒன்று அறியேன் நான், அரவணையாய்? அம்மானே!
கூமாறே விரை கண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே.–4-9-2
சாம் ஆறும்,Saam aarum - திடீரென்று மரண மடைவதும்
கெடும் ஆறும்,Kedum aarum - பலவகைக்கஷ்டங்களையடைவதும் (இதுகாரணமாக)
தமர்,Thamar - தாயாதிகளும்
உற்றார்,Urraar - உறவினர்களும்
தலைத்தலைப்பெய்து,Thalai thalaipeythu - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து
நான்காம்பத்து ஒன்பதாந்திருர்ய்மொழி,Naankaam pathu onpathaandhirury mozhii - நண்ணுதாத்முறுலலிப்ப
ஏமாறி கிடந்து அலற்றும் இவை உலகு இயற்கை என்ன,Emaari kidaanthu alatrum ivai ulagu iyarkai enna - ஏங்கிக்கிடந்து கதலும் படியான இந்த லோக யாத்ரைகள் என்னே!
அரவு அணையாய் அம்மானே!,Aravu anaiyaam ammaane! - சேஷசாயியான ஸ்வாமியே!
நான்,Naan - அடியேன்
ஆம் ஆறு ஒன்று அறியேன்,Aam aarum ondru ariyen - உய்யும்வகையைச் சிறிது மறிகின்றிலேன்;
அடியேனை குறிக்கொண்டு கூம் ஆறு,Adiyenai kuri kondhu koom aarum - இப்படிப்பட்ட அடியேனை திருவுள்ளம் பற்றி (திருவடிவாரத்திலே) அழைத்துக்கொள்ளும்படி
விரை,Virai - விலைந்தருயவேணும்.
3097திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –4-9-3- ஜந்துக்கள் ஆபிஜாத் யாதிகள் எல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்க மாட்டு கிறி லேன் -இத்துக்கங்களை அனுசந்திக்க வேண்டாதே உன் திருவடிகளில் அழைத்து அடிமை கொள்ள வேணும் என்கிறார்) (இப்பாசுரத்திற்கு ஈடு முப்பத்தயறயிரப்படி ஸ்ரீஸூக்திகள் இன்சுவையே வடிவெடுத்தவை.) 3
கொண்டாட்டும் குலம் புனைவும் தமர் உற்றார் விழு நிதியும்
வண்டு ஆர் பூங் குழலாளும் மனை ஒழிய, உயிர் மாய்தல்
கண்டு ஆற்றேன் உலகியற்கை! கடல் வண்ணா! அடியேனைப்
பண்டே போல் கருதாது,உன் அடிக்கே கூய்ப் பணி கொள்ளே.–4-9-3
கொண்டாட்டும்,Kondaatum - (புதிதாகச் சிலர்ஏறிட்டுச்செய்கிற) கொண்டாட்டமும்
குலம் புனைவும்,Kulam punaivum - இல்லாத குலத்தை ஏறிட்டுக்கொண்டு அஹங்கரிப்பதும்
தமர்,Thamar - தாயாதிகளும்
உற்றர்,Utrar - உறவினரும்
விழு நிதியும்,Vizhu nidhiyum - அளவற்ற செல்லமும்
வண்டு ஆர் பூ குழலாளும்,Vantu aar poo kuzhalalum - வண்டுகள் படிந்த பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய மனைவியும்
மனை,Manai - வீடும் (ஆகிய இவை)
ஒழிய,Ozhia - தன்னைவிட்டு நீங்க
உயிர் மாய்தல்,Uyir maaydhal - (தீடீரென்று) இறந்து போவதாகிற
உலகு இயற்கை கண்டு,Ulagu iyarkai kandu - இந்த லோகயாத்திரையைக்கண்டு
ஆற்றேன்,Aatren - ஸஹிக்கமாட்டேன்;
கடல் வண்ணு,Kadal vannu - கடல் வண்ணனான எம்பெருமானே!
அடியேனை,Adiyenai - அடியனான என்னை
பண்டே போல் கருதாது,Pande pol karuthaadhu - இத்தனை நாளும்போல் நினைத்திராமல்
உன் அடிக்கே கூய் பணி கொள்,Un adikke koo pani kol - உன் திருவடிவாரத்திலே அழைத்துக் கொண்டு அடிமை கொண்டருளவேணும்.
3098திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) ((கொள்ளென்று கிளர்ந்து.) ஐச்வர்யமானது அநர்த்த ஹேது என்பதைக் கட் கூடாகக் காணா நிற்கச்செய்தேயும், பின்னையும் மேல் விழுந்து அதிலே நசை பண்ணிப் போருகிற லோக யாத்ரையைக் காணப் போகிறதில்லையே! என்கிறார்.) 4
கொள் என்று கிளர்ந்து எழுந்து பெருஞ் செல்வம் நெருப்பாகக்
கொள் என்று தமம் மூடும்; இவை என்ன உலகியற்கை!
வள்ளலே! மணி வண்ணா! உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல் செய்து அடியேனை உனது அருளால் வாங்காயே.–4-9-4
கொள் என்று கிளர்ந்து எழுந்த,Kol endru kilarndhu ezundhu - ‘என்னைக்கொள் என்னைக்கொள்’ என்று மேன்மேலும் பெருகித்தோற்றுகிற
பெரு செல்வம்,Peru selvam - பெரிய செல்வமானது
நெருப்பு ஆக,Neruppu aga - நெருப்புப்போல் ஸமூல நாசம் பண்ணு நிற்கச் செய்தேயும்
கொள் என்று,Kol endru - (அதில் நசை யொழியாமல்) அந்தச்செல்வத்தையே மேன் மேலும் கொள்ளும்படியாக
தமம் மூடும் இவை உலகு இயற்கை என்ன,Tamam moodum Ivai ulagu iyarkai enna - தமோ குணம் மேலிட்டுச் செல்லுகின்ற இந்த லோகஸ்வபான மிருந்தபடி என்னே!
வள்ளலே,Vallale - மஹாதாரனே!
மணி வண்ணா,Mani vanna - நீலமணிவண்ணனே;
உன கழற்கே வரும் பரிசு,Un kazarke varum parisu - உன் திருவடிவாரத்திலேயே வந்து சேரும்படி
அடியேனே,Adiyene - அடியேன் விஷயத்தில்
வள்ளல் செய்து,Vallal seydhu - ஔதார்யத்தைக் காட்டி
உனது அருளால்,Unathu arulaal - உனது பரம க்ருபையாலே கைக்கொண்டருளவேணும்.
3099திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பிறப்பது மிறப்பதுமாய் நோவு பட்டுத் திரிகிற இந்த ஸம்ஸாரிக்ள நடுவில்நின்றும் இத் துன்பம் நடையாடாத தேச விசேஷத்திலே யென்னை யழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார்.) 5
வாங்கு நீர் மலர் உலகில் நிற்பனவும் திரிவனவும்
ஆங்கு உயிர்கள் பிறப்பிறப்புப் பிணி மூப்பால் தகர்ப் புண்ணும்;
ஈங்கு இதன் மேல் வெந் நரகம்; இவை என்ன உலகியற்கை!
வாங்கு எனை நீ, மணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.–4-9-5
வாங்கும்,Vaangum - உலகங்களை யெல்லாம் பிறகு தன் பக்கலிலே ஸம்ஹரித்துக் கொள்ள வல்லதான
நீர்,Neer - நீரிலே
மலர்,Malar - மலர்ந்த
நிற்பனவும்,Nirpanavum - ஸ்தாவரங்களும்
திரிவனவும்,Thirivanavum - ஜங்கமங்களுமான
ஆங்கு,Aangu - அவ்வவ்விடங்களிலுள்ள
உயிர்கள்,Uyirkal - பிராணிகள்
ஈங்கு,Eenggu - இப்புவியில்
பிறப்பு இறப்பு பிணி மூப்பால்,Pirappu irappu pinimubal - பிறப்பது இறப்பது வியாதி கொண்டிருப்பது கிழத்தன மடைவது ஆகிய இவற்றாலே
தகர்ப்புண்ணும்,Thakarppunnum - வருந்திக்கிடக்கும்;
இதன் மேல்,Idhan mel - இறந்தொழிந்தபின்போ வென்னில்
வெம் நரகம்,Vem naragam - கொடிய நரக வேதனையாம்; (இவை என்ன உலகு இயற்கை!;)
நீ,Nee - நீ
எனை,Enai - இத்துயரம் பொறுக்க மாட்டாத என்னை
வாங்கு,Vaanggu - அங்கீகரித்தருளவேணும்
அடியனே,Adiyanee - உன்னடியனான என்னை
மறுக்கேல்,Marukel - கலங்கப் பண்ண வேண்டா.
3100திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (பரமஹிம்ஸையே போதுபோக்கான இந்த லோக யாத்ரையை நான் காணாதபடி என்னை யழைத்துக் கொண்டருளவேணுமென்கிறார். ஆழ்வார் திருப்புளியாழ்வாரடியிலே திருக்கண்களை மூடிக்கொண்டு எழுந்தருளியிரா நிற்கச் செய்தேயும் லோக யாத்ரை யுள்ளது உள்ளபடி யுணர்ந்து பேசுகிறது என்னே! என்று வியக்க வேண்டும் படியிராநின்றது.) 6
மறுக்கி வல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்;
அறப் பொருளை அறிந்து ஓரார்; இவை என்ன உலகியற்கை!
வெறித் துளவ முடியானே! வினையேனே உனக்கு அடிமை
அறக் கொண்டாய் இனி என்னாரமுதே!கூய் அருளாயே.–4-9-6
மறுக்கி,Marukki - பயமூட்டி
வல் வலைபடுத்தி,Val valaipaduthi - தங்களது கொடிய வலையிலே சிக்கிக்கொள்ளும்படி செய்து
குமைத்திட்டு கொன்று,Kumaittu konru - சித்ரவதம் பண்ணி
உண்பர்,Unpar - தங்கள் வயிற்றை வளர்ப்பர்கள்;
அறம் பொருளை அறிந்து ஓரார்,Aram porulai arindhu orar - தருமதத்துவத்தை யறிந்து கவனிப்பாரில்லை; (இவை என்ன உலகு இயற்கை!)
வெறி துவளம் முடியானே,Veri thuvulam mudiyane - பரிமளம்மிக்க திருத்துழாயைத் திருமுடியிலணிந்துள்ளவனே ((இப்படிப்பட்ட ஒப்பனையழகைக்காட்டி)
வினையேனை,Vinaiyene - பாவியான என்னை
உனக்கு அற,Unakku ara - உன் விஷயத்திலேயே அற்றுத் தீரும்படி
அடிமை கொண்டாய்,Adimai kondai - ஏற்கனவே அடிமைகொண்டிருப்பவனே!
என் ஆர் அமுதே,En ar amudhe - எனக்கு பரிபூர்ணமான அமுதமே!
இனி,Ini - உடனே
கூய் அருளாய்,Kuy arulaye - அழைத்துக் கொண்டருள வேணும்.
3101திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வீர்! உம்மை நானழைத்துக்கொள்வதென்று ஒன்றுண்டோ? பேறு உம்மதான பின்பு நீர்தாமே முயற்சிசெய்து வந்து சேரக்கட வீரத்தனை” என்று எம்பெருமான் திருவுள்ளமானதாகக் கொண்டு, ஸகல பதார்த்தங்களும் நீயிட்ட வழக்கான பின்பு நீயே யுன்னைக் கிட்டும் வழி பார்த்தருள வேணமென்கிறார்.) 7
ஆயே இவ் உலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயே மற்று ஒரு பொருளும் இன்றி நீ நின்றமையால்
நோயே மூப்பு இறப்பிறப்புப் பிணியே என்றிவை ஒழியக்
கூயே கொள் அடியேனைக் கொடு உலகம் காட்டேலே.–4-9-7
இ உலகத்து,I ulagathu - இந்த லோகத்தில்
நிற்பனவும்,Nir panavum - ஸ்தாவரப் பொருள்களும்
திரிவனவும்,Thirivanavum - ஜங்கமப் பொருள்களும்
நீயே ஆய்,Neeye aay - நீயாகவே யிருந்து
மற்று ஒரு பொருளும் இன்றி,Matru oru porulum indri - நீயல்லாத பொருள் வேறொன்றுமில்லாதபடி
நீ நின்றமையால்,Ne ninradamaiyal - நீயிருப்பதனாலே
நோய் மூப்பு பிறப்பு இறப்பு பிணி என்ற இவை ஒழிய,Noy moopu pirappu irappu pini enra ivai ozhiya - மனோவியாதி, கிழத்தனம், ஜனனமரணங்கள், சரீரபீடைகள் எனப்படுகிற இவை தொலையும்படி
அடியேனை,Adiyenai - அடியனான வென்னை
கூயே கொள்,Kuye kol - அழைத்துக் கொண்டருள வேணும்;
கொடு உலகம்,Kodu ulagam - கொடிய இவ்வுலகத்தை
காட்டேல்,Kaattele - இனிமேலும் காட்டவேண்டா.
3102திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (‘ஆழ்வீர்! நீர் விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச் செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.) 8
காட்டி நீ கரந்து உமிழும் நிலம் நீர் தீ விசும்பு கால்
ஈட்டி நீ வைத்து அமைத்த இமையோர் வாழ் தனி முட்டைக்
கோட்டையினிற் கழித்து எனை உன் கொழுஞ்சோதி உயரத்துக்
கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே?–4-9-8
நீ,Nee - நீ (எம்பெருமானே)
காட்டி,Kaatti - படைக்கும்போது பிரகாசிப்பித்து
கரந்து,Karandhu - (பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து
உமிழுத்,Uzhuth - மறுபடியும் வெளிப்படுத்துகின்ற
நிலம் நீர் தீ விசும்பு கால்,Nilam neer thee visumbu kaal - பஞ்ச பூதங்களையும்
ஈட்டி வைத்து,Eetti vaithu - ஒன்றாகத் திரட்டி வைத்து
அமைத்த,Amaitha - ஒழுங்கு படுத்திய
இமையோர் வாழ தனி முட்டை,Imayor vaazha thani muttai - பிரமாண்டமாகிற
கோட்டையினில்,Kottaiyinil - கோட்டையில் நின்றும்
என்னை கழித்து,Ennai kuzhithu - என்னை அப்புறப்படுத்தி
உன்,Un - உன்னுடைய
கொடு சோதி உயரத்து,Kodu sothi uyarathu - மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே
கூட்டு அரிய,Kootu ariya - கூடுதற்கரியான
திருவடிக்கண்,Thiruvadikkan - திருவடிகளிலே
எஞ்ஞான்று,Yennyantru - என்றைக்கு
கூட்டுதி,Kootuthi - கூட்டிக்கொள்வாய்!
3103திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக் கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம்.) 9
கூட்டுதி நின் குரை கழல்கள்; இமையோரும் தொழா வகை செய்து,
ஆட்டுதி நீ; அரவணையாய்! அடியேனும் அஃது அறிவன்;
வேட்கை எலாம் விடுத்து எனை உன் திருவடியே சுமந்து உழலக்
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை நான் கண்டேனே.–4-9-9
அரவு அணையாய்,Aravu anaiyaay - சேஷசாயியான பெருமானே!,
நீ,Nee - நீ
நின் குரை கழல்கள்,Nin kurai kazhalkal - (அபிமதரான சிலரை) ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே
கூட்டுதி,Kootuthi - சேர்த்துக் கொள்ளுகிறாய்;
இமையோரும்,Imayorum - (திருவுள்ள மில்லையாகில்) (ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும்
தொழா வகை செய்து,Thoza vakai seydhu - கண்டு அநுபவியாதபடி பண்ணி
ஆட்டுதி,Aattuthi - அலைக்கின்றாய்;
அஃது,Ahdhu - இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை
அடியேனும்,Adiyenum - நானும்
அறிவன்,Arivan - அறிந்தேயிருக்கின்றேன்;
என்னை,Ennai - எனக்குண்டான
வேட்கை எல்லாம் விடுத்து,Vedkai ellaam viduthu - விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து
உன் திரு அடியே,Un thiru ade - உனது திருவடிகளையே
சுமந்து உழல,Sumanthu uzhal - நான் தலையால் சுமந்து திரியும்படி
கூட்ட அரிய திரு அடிக்கண்,Kootu ariya thiru adikkan - துர்லபமான திருவடிகளிலே
கூட்டினை,Koottinai - சேர்த்துக் கொண்டாய்;
நான் கண்டேன்,Naan kandeen - இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன்
3104திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப,
கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10
ஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும்
நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும்
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும்
ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்;
உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன்.
3105திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (இத்திருவாய்மொழியானது, தன்னைக் தற்பவர்களை அவன் திருவடிகளோடே சேர்விக்கும் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழுங் குருகூர்ச் சடகோபன்
திருவடி மேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடி சேர்ந்து ஒன்றுமினே.–4-9-11
திரு அடியை,Thiru adiyai - ஸர்வாமியாய்
காரணனை,Kaarananai - நாராயணானாய்
கேசவனை,Kaeshavanai - பரஞ்சோதியாயிருக்கிற எம்பெருமானை
திரு அடி சேர்வது கருதி,Thiru adi saervadhu karuthi - கிட்டியநுபவிக்க விரும்பி
செழு குருகூர் சடகோபன்;,Sezhu kurukoor sadagopan - செழு குருகூர் சடகோபன்;
திரு அடி மேல்,Thiru adi mel - அவனது திருவடிகளின் மீது
உரைத்த,Uraitha - அருளிச்செய்த
தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;,Thamil aayiraththul ippattum - தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்;
திரு அடியே,Thiru adiye - அந்தத் திருவடிகளையே
அடைவிக்கும்,Adaivikkum - அடையப்பண்ணும்;
திரு அடி சேர்ந்து,Thiru adi serndhu - (ஆதலால், நீங்கள்) அந்தத் திருவடிகளைக் கிட்டி
ஒன்றுமின்,Ondrumin - பொருந்தியிருக்கப் பாருங்கள்
3106திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 1
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1
தேவும், thevum - தேவர்களும்
உலகும், ulagum - அவர்களுக்கிருப்பிடமான உலகங்களும்
உயிரும், uyirum - மனிதர் முதலிய பிராணிகளும்
மற்றும் யாதும், matrum yaadhum - மற்றுமுள்ள எல்லாமும்
ஒன்றும் இல்லா அன்று, ondrum illa andru - சிறிதுமில்லாத அந்த ஊழிக்காலத்திலே
நான்முகன் தன்னொடு, naanmugan thannodu - பிரமனையும்
தேவர், thevar - தேவதைகளையும்
உலகு, ulagu - உலகங்களையும்
உயிர், uyir - பிராணிகளையும்
படைத்தான், padaithaan - படைத்தவனும்
நின்ற, nindra - சாஸ்த்ரங்களில் நிலைத்திருப்பவனுமான
ஆதி பிரான், aadhi piraan - ஆதிநாதனென்றும் எம்பெருமான்
குன்றம் போல் மணிமாடம் நீடு, kunram pol manimaadam needu - மலைபோன்ற திருமாளிகைகள் உயர்ந்திருக்கப்பெற்ற
திருகுருகூர் அதனுள், thirugurukoor adhanul - திருநகரியிலே
நிற்க, nirka - காட்சிதந்து கொண்டிருக்கும் போது
மற்றைதெய்வம், matraidheivam - வேறுதெய்வங்களை
நாடுதிர் ஏ, naaduthir ae - தேடியோடுகின்றீர்களே.
3107திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்,
மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப்
பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2
பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே!
நீர், neer - நீங்கள்
நாடி, naadi - தேடி
வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள
உம்மையும், ummaiyum - உங்களையும்
முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும்
வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான
புகழ், pugazh - புகழையுடையனுமான
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை
பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு
பரவி, paravi - துதித்து
பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.
3108திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 3
பரந்த தெய்வமும் பல் உலகும் படைத்து அன்று உடனே விழுங்கிக்
கரந்து உமிழ்ந்து கடந்து இடந்தது கண்டும் தெளிய கில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறமன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே.–4-10-3
பரந்த, parandha - விஸ்தீர்ணமான
தெய்வமும், dheivamum - தேவதாவர்க்கங்களையும்
பல் உலகம், pal ulagam - (அவர்களுக்குப்) பல உலகங்களையும்
படைத்து, padaithu - ஸ்ருஷ்டித்தும்
அன்று, andru - பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி
கரந்து, karandhu - உள்ளே யொளித்து வைத்தும்
உமிழ்ந்து, umizhndhu - பிறகு வெளிப்படுத்தியும்
கடந்து, kadanthu - (மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும்
இடந்தது, idandhadhu - (மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை
கண்டும், kandum - பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும்
தெளிய கில்லீர், theliya killeer - தெளியமாட்டாத
பல் உலகீர், pal ulageer - பலவகைபட்ட உலகத்தவர்களே!
அமரர், amarar - தேவர்கள்
சிரங்களால் வணங்கும், sirangalaal vanangum - தலையால் வணங்கப் பெற்ற
திருகுருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
பரன், paran - பரம புருஷனுக்கு
திறம் அன்றி, thiram andri - பிரகாரமாயல்லது
மற்று, matru - வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு
தெய்வம் இல்லை, dheivam illai - தேவதை கிடையாது
பேசுமின், pesumin - அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள்.
3109திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 4
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேச மாமதிள் சூழ்ந்து அழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே?–4-10-4
பேசநின்ற, pesanindra - உங்களால் பரதெய்வமாகப் பேசப்படுகின்ற
சிவனுக்கும், sivanukkum - ருத்ரனுக்கும்
பிரமன் தனக்கும், Biraman thanakkum - (அவனது தந்தையான) பிரமனுக்கும்
பிறர்க்கும், pirarkkum - மற்றுமுள்ள தேவதைகளுக்கும்
நாயகன் அவனே, naayagan avane - தலைவன் ஸ்ரீமந்நாராயணனே என்னுமிடத்தை
கபாலம் நல் மோக்கக்து, kabalam nal mokkakthu - கபாலமோக்ஷக்கதையினால்
கண்டுகொண்மின், kandu konmin - தெரிந்துகொள்ளுங்கள்
தேசம், dhesam - தேஜஸ்ஸுபொருந்திய
மா, maa - சிறந்த
மதிள் சூழ்ந்து, madhil soozhndhu - மதில்களால் சூழப்பட்டு
அழகு ஆய, azhagu aaya - அழகு பெற்றதான
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியில் எழுந்தருளியிருக்கிற
ஈசன் பால், eesan paal - ஸர்வேச்வரன் விஷயத்திலே
ஓர் அவம் பறைதல், or avam paraidhal - தப்பான பேச்சுக்களைப் பேசுவது
இலிங்கியர்க்கு, ilingiyarkku - லிங்கப்பிரமாண வாதிகளுக்கு
என் ஆவது, en aavathu - என்னபலனைத்தரும்!
3110திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 5
இலிங்கத் திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமுமாகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமினே.–4-10-5
இலிங்கத்து இட்ட புராணத்தீரும், ilingathu itta puranatheerum - லிங்கமாஹாத்மிய விஷயமாகக் கல்பிக்கப்பட்ட புராணத்தைப் பற்றினவர்களாயும்
சமணரும், samanarum - ஜைநர்களாயும்
சாக்கியரும், saakiyarum - பௌநர்களாயும்
வலிந்து வாது, valindhu vaadhu - விதண்டாவாதம் செய்பவர்களாயுமிருக்கிற நீங்களாகவும்
மற்றும் நும் தெய்வமும் ஆகிநின்றான், matrum num dheivamum aaginindraan - தேவதாந்தரங்களாகவும் (இப்படி ஸர்வசரீரகனான)
பொலிந்து நின்ற பிரான், polindhu nindra piran - பொலிந்து நின்ற பிரானென்கிற எம்பெருமானை,
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களானவை
மலிந்து, malindhu - ஸம்ருத்திபெற்று
கவிரி வீசும், kaviri veesum - சாமரை வீசப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே
கண்டீர், kandeer - ஸேவியுங்கோள்
ஒன்றும், ondrum - எள்ளளவும்
பொய் இல்லை, poi illai - அஸத்யமில்லை,
போற்றுமின், potrumin - துதியுங்கோள்
3111திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 6
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு, உம்மை இன்னே
தேற்றி வைத்தது, எல்லீரும் வீடு பெற்றால் உலகு இல்லை என்றே;
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அது அறிந்தறிந்து ஓடுமினே.–4-10-6
மற்று ஓர் தெய்வம், matru or dheivam - வேறோரு தேவதையை
போற்றி பேண, potri pena - துதிக்கு ஆதரிக்கும்படியாக
புறத்து இட்டு, purathu ittu - வேறுபடுத்தி
உம்மை, ummai - உங்களை
இன்னே, inne - இப்போதுநீங்களிருக்கிற விதமாக
தேற்றி வைத்தது, thettri vaithadhu - தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது
எல்லீரும், elleerum - எல்லாரும் (எதற்காகவென்றால்)
வீடு பெற்றால், veedu petraal - முக்தியுடைந்தால்
உலகு இல்லை என்றே, ulagu illai endrae - புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்;
சேற்றில், setril - சேற்றுநிலத்தில்
செந்நெல், sennel - செந்நெற்பயிர்களும்
கமலம், kamalam - தாமரையும்
ஓங்கி, oongi - ஓங்கி வளரப்பெற்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆற்றல் வல்லவன், aatral vallavan - பரமசக்தியுக்தனான பெருமானுடைய
மாயம் கண்டீர், maayam kandeer - மாயையேயாமத்தனை;
அது, Adhu - மாயையென்பதை
அறிந்து, arindhu - தெரிந்துகொண்டு
அறிந்து, arindhu - அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு
ஓடுமின, oodumin - திருவடியே சென்று சேரப் பாருங்கள்.
3112திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 7
ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே.–4-10-7
ஓடி ஓடி, oodi oodi - ஸம்ஸார சக்ரத்தில் ஓடியோடி
பலபிறப்பும் பிறந்து, palapirappum pirandhu - பலபல யோனிகளிலே பிறந்து
பல் படி கால், pal padi kaal - வம்ச பரம்பரையாக
மற்று ஓர் தெய்வம் வழி ஏறி, mattru or dheivam vazhi eri - தேவதாந்தரங்களை அந்தந்த நூல்களிலே சொல்லியிருக்கிறபடி
பாடி ஆடி பணிந்து, paadi aadi panindhu - பலபடியாக வழிபட்டு
கண்டீர், kandeer - பலன் கைபுகுந்தமை கண்டீர்களே;
வானவர், vaanavar - தேவர்கள்
கூடி, koodi - திரண்டு
ஏத்த நின்ற, eatha nindra - துதிக்கும்படி நின்ற
திரு குருகூர் அதனுள், thiru kurukoor adhanul - திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற
ஆடு புள்கொடி ஆதி மூர்த்திக்கு, aadu pulkodi aadhi moorthikku - ஆடுங்கருளக்கொடியுடைய ஆதிநாதப் பெருமாளுக்கு
அடிமை புகுவது, adimai puguvadhu - அடியராயிருந்த தகுதி
3113திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 8
புக்கு அடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்று உய்யக் கொண்டது நாராயணன் அருளே;
கொக்கு அலர்தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் விளம்புதிரே!–4-10-8
அடிமையினால், adimaiyinaal - அடிமைசெய்து
புக்கு, pukku - உள்புகுந்து
தன்னை கண்ட, thannai kanda - தன்னைக்காணப்பெற்ற
மார்க்கண்டேயனவனை, markkandeyanavannai - மார்க்கண்டேயனென்று ப்ரஸித்த னானவனை
அன்று, andru - அக்காலத்தில்
நக்கபிரான், nakkapiraan - திகம்பரச்சாமியான ருத்ரன்
உய்யக்கொண்டதும், uyyakkondadhum - ரகூஷித்ததும்
நாராயணன் அருளே, naarayanan arule - நாராயணனுடைய வெண்ணிறமாக அலர்கின்ற
தட தாழை, thada thaazhai - பெரியதாழைகளை
வேலி, veli - வேலியாகவுடைய
திருகுருகூர் அதனுள், thirukurukoor adhanul - திருநகரியிலே
மிக்க, mikka - மேம்பாடுடைய
ஆதி பிரான் நிற்க, aadhi piraan nirka - ஆதிநாதப்பெருமாளிருக்க
மற்ற எ தெய்வம், matra e dheivam - வேறு எந்த தேவதைகளை
விளம்புதிர், vilambuthir - பேசுகிறீர்கள்?
3114திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 9
விளம்பும் ஆறு சமயமும்,அவை ஆகியும் மற்றும் தன்பால்
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய ஆதிப்பிரான் அமரும்
வளங் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய திருக் குருகூரதனை
உளங்கொள் ஞானத்து வைம்மின் உம்மை உயக்கொண்டு போகுறிலே.–4-10-9
விளம்பும், vilambum - கண்டபடி சொல்லுவது தவிரப் பொருட்பொருத்தம் சிறிதுமில்லாதவைகளான
ஆறு சமயமும், aaru samayamum - ஆறுவகைப்பட்ட பாஹ்ய மதங்களும்
அவை ஆகிய, avai aagiya - அந்த பாஹ்யமதங்கட்குப் பரியாயமான
மற்றும், matrum - குத்ருஷ்டி மதங்களும்
தன் பால், than paal - தன் விஷயத்திலே
அளந்து காண்டற்கு அரியன் ஆகிய, alandhu kaandaṟku ariyan aagiya - எல்லை காணவொண்ணாதனாயிருக்கிற
ஆதி பிரான், aadhi piraan - ஸகலஜகத காரணபூதனான ஸர்வேச்வரன்
அழகும், azhagum - நித்யவாஸம் பண்ணுமிடமாய்
வளம் கொள் தண் பணை சூழ்ந்து அழகு ஆய, valam kol than panai soozhnthu azhagu aaya - வளம் மிக்க குளிர்ந்த நீர் நிலங்களாலே சூழப்பட்டு அழகியதான
திருகுருகூர் அதனை, thirukurukoor adhanai - திருநகரியை
உம்மை, ummai - உங்களை
உய்யக் கொண்டு போகுறில், uyya kondu pokuril - உஜ்ஜிவிப்பித்துக்கொண்டு நடக்க வேண்டியிருந்தீர்களாகில்
உளம் கொள் ஞானத்து, uḷam kol nyaanathu - அந்தரங்க ஞானத்துக்குள்ளே
வைம்மின், vaimmin - வைத்துச் சிந்தனை செய்யுங்கள்.
3115திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 10
உறுவது ஆவது எத்தேவும் எவ் வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக் குருகூரதனுள்
குறிய மாண் உருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே.–4-10-10
எத்தேவும், Ethevum - எல்லாத் தேவதைகளும்
எ உலகங்களும், E ulagangalum - எல்லாவுலகங்களும்
மற்றும், Matrum - மற்றுமுண்டான சேதநர தேசனங்களுமாகிய
இத்தனையும், Ithanaiyum - இவையடங்கலும்
தன் பால், Than paal - தன்னுடையதான
மறு இல் மூர்த்தியோடு ஒத்து, maru il Moorthiyodu othu - நிஷ்கலங்கமான அஸாதாரண விக்ரஹம்போன்று (ஸகல விதத்தாலும் விதேயங்களாகியென்றபடி)
நின்ற வண்ணம் நிற்க, Nindra vannam nirka - குறையற நிற்குமிருப்பிலே
செறுவில், Seruvil - விளை நிலங்களில்
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்களும்
கரும்பொடு, Karumpodu - கருப்பஞ்சோலைகளும்
ஓங்கு, Oongu - வளரும்படியான
திருகுருகூர் அதனுள், Thirukurukoor adhanul - திருநகரியிலே
குறிய மாண் உரு ஆகிய, Kuriya maan uru aagiya - வாமநப்ரஹ்மசாரி வேஷமெடுத்தவனும்
நீள் குடக் கூத்தனுக்கு, Neel kuda koothanukku - (க்ருஷடணனாய்ப்) பெரிய குடக் கூத்தாடினவனுமான பெருமானுக்கு
ஆள் செய்வதே உறுவதாவது, Aal seivadhe uruvathavadhu - அடிமை செய்வதே உற்றதாம்
3116திருவாய்மொழி || 4-10-ஒன்றும் தேவும் 11
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11
ஆள் செய்து, Aal seidhu - (உபதேச முகத்தாலே ஸம்ஸாரிகளைத் திருத்திப்பணிகொள்ளுகையாகிற) கைங்கரியத்தைப் பண்ணி
ஆழி பிரானை சேர்ந்தவன், Aazhi piraanai serndhavan - ஆழியங்கையனான பெருமானை அடைந்தவரும்
வண் குருகூர் நகரான், Van Kurukoor nagaraan - திருநகரிக்குத் தலைவரும்
நாள் கமழ் மகிழ் மாலை மார்பினன், Naal kamazh magizh maalai maarbinan - பரிமளம் மாறாதமாலையைத் திருமார்பிலே அணிந்தவருமான
மாறன் சடகோபன், Maaran Sadagopan - ஆழ்வார்
வேட்கையால், Vetkaiyaal - ஆதரத்தோடு
சொன்ன பாடல் ஆயிரத்துள், Sonna paadal aayirathul - ஆயிரம்பாட்டினுள்ளே
இ பத்தும், I pathum - இப்பதிகத்தை
வல்லார், Vallar - ஓதவல்லவர்களுக்கு
மீட்சி இன்றி, Meetchi indri - மீண்டும் திரும்பிதலில்லாத
வைகுந்தம் மாநகர் மற்றது, Vaigundham maanagar mattrathu - ஸ்ரீ வைகுண்டமஹாநகரமாகிய அவ்விடம்
கையது, Kaiyadhu - கரஸ்தம்.
3117திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (நான் இதரவிஷயங்களிலே மிகவும் ஈடுபட்டவனாயிருந்து வைத்து, பகவத்விஷயத்திலீடுபட்டவன் போல நடித்துச் சில க்ருத்ரிமச் சொற்களைச் சொல்ல, அவ்வளவிலே எம்பெருமான் என்னை விஷயீகரித்தருளினானென்கிறார்.) 1
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1
கைஆர் சக்கரத்து,Kaiar chakkarattu - திருக்கையில் பொருந்திய திருவாழியாழ் வானையுடையவனும்
என் கரு மாணிக்கமே,En karu maanikame - எனக்கு விதேயமான கருமாணிக்கம் போன்றவனுமான பெருமானே!
என்று என்று,Enru enru - என்று பலகாலும்
பொய்யே கைம்மை சொல்லி,Poyye kaimmai solli - பொய்யாகவே கபடவார்த்தையைச் சொல்லி (அந்த வார்த்தைக்குத் தகுதியில்லாதபடி)
புறமே புறமே ஆடி,Purame purame aadi - விஷயாந்தரங்களிலேயே அவகாஹிந்திருந்தும்
மெய்யே பெற்றறோழிந்தேன்,Meyye petraroazhinden - மெய்யன்பர் பெறும் பவனையே பெற்றுவிட்டேன்;
விதி வாய்க்கின்று,Vidhi vaaykinru - பகத்திருபை பலிக்குமிடத்தில்
காப்பர் ஆர்,Kaappar aar - அதைத் தடுக்கவல்லார் யார்?
கண்ணபிரான்,Kannapiraan - ஸ்ரீக்ருஷ்ணனே!
இனி,Ini - உன்கிருபை எனக்குப் பலிக்கப் பெற்றபின்பு
போனால்,Ponaal - என்னைவிட்டு நீ போக விரும்பினாயாகில்
அறையோ,Arayyo - தாராளமாகப்போகலாம்; (தடுப்பேனல்லேன்.)
ஐயோ,Aiyyo - சந்தோஷக்குறிப்பு (இனி உன்னால் பெயர்ந்துபோக முடியாதென்றபடி.)
3118திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தன் திறத்திலே ப்ரேம கந்த ரஹிதனாய் இருந்து வைத்து நிரதிசய ப்ரேம யுக்தர் சொல்லும் பாசுரங்களை நான் சொல்ல சர்வேஸ்வரனான தான் அத்யந்த நிஹீன தரனான என்னுள்ளே ச பரிகாரமாக வந்து புகுந்து அருளினான் என்கிறார்.) 2
போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2
மா மருதிந் நடுமே,Maa marudhin nadume - பெரிய மருதமரங்களினிடையே
போனாய்,Poonaai - தவழ்ந்து சென்றவனே!
என்,En - எனக்கு விதேயமான
பொல்லா மணியே,Polla maniye - துளைபடாத ரத்தினம் போன்றவனே!
தேனே,Thene - தேன்போன்றவனே!
இன் அமுதே,In amuthe - இனிமையான அம்ருதம் போன்றவனே!
என்று என்றே,Enru enre - என்று இவ்வண்ணமாகவே
சில கூத்து சொல்ல,Sila koothu solla - சில பொய்யுரைகளைச் சொல்ல
எம்பெருமான் அவன் தான்,Emperumaan avan thaan - அவ்வெம் பெருமானானவன்
என் ஆகி ஒழிந்தான்,En aaki ozhindhaan - எனக்கு விநேயனாய்விட்டான்;
வான் மா நிலம் மற்றும் முற்றும்,Vaan maa nilam matrum mutrum - (அன்றியும்) அவனடைய விபூதிகளெல்லாம்
என் உள்ளன,En ullana - என்னுள்ளே நடத்தும் படியாயின.
3119திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (முன்னிரண்டடிகளால், கீழுள்ள காலமெல்லாம் தாம் பொய்யே கைம்மை சொல்லிக் கொண்டிருந்த வாற்றைச்சொல்லி, பின்னடிகளால் – அந்தக் கைம்மை தவிர்ந்து கபடமற்ற பக்தியோடு கூடி பகவத் ப்ராவண்யம் மேலிடப் பெற்றேனென்கிறார்.) 3
உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3
வெள்ளத்து,Vellathu - திருப்பாற்கடலிலே
அணை,Anai - (திருவனந்தாழ்வானாகிற) படுக்கையின்மீது
கிடந்தாய்,Kidanthai - பள்ளிகொள்ளும் பெருமானே!
உள்ளன,Ullana - எனது நெஞ்சினுள்ளேயிருப்பவன்
மற்று உள் ஆ,Matru ul aa - உன்னைத் தவிர்ந்து விஷயாந்தரங்களாயிருக்கச் செய்தேயும்
புறமே,Purame - வெளிவேஷமாக,
வள்ளல் மணிவண்ணனே என்று என்றே,Vallal Mani annane Enru Enre - வள்ளலே! மணிவண்ணனே! என்று பலநாலும்
சில மாயம் சொல்லி,Sila Maayam Solli - சில பொய்யுரைகளைச் சொல்லி
உன்னையும் வஞ்சிக்கும்,Unnaiyum Vanchikkum - (ஸர்வஜ்ஞனான) உன்னையும் உஞ்சனை பண்ணும்படியான
கள்ளம் மனம் தவிர்த்து,Kallam Manam Thavirttu - கபடமான நெஞ்ச தவிரப்பெற்று
உன்னை கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்,Unnai Kandu Kondu Uynthu Ozhindhen - உன்னை அநுபவிக்கப் பெற்று உஜ்ஜீவித்தானயினேன்;
இனி,Ini - இனிமேல்
உன்னை விட்டு,Unnai Vittu - பரமயோக்யனான உன்னைவிட்டு
என் கொள்வன்,En Kolvan - வேறு எதைக் கைக் கொள்ளுவேன்?
3120திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இதற்கு முன்பெல்லாம் இப்படி உன் பக்கல் பொய்னாய்ப் போந்தது ப்ரக்ருதி ஸம்பந்தத்தாலேயாதலால் அந்த ப்ரக்ருதிஸபந்தததைப் போக்கித்தரவேணுமென்கிறார்.) (இப்பாட்டுக்கு மற்றொருவகையான அவதாரிகையும் உண்டு;) (கீழ்ப்பாட்டில் “உன்னைக் கண்டு கொண்டுய்ந்தொழிந்தேனே” என்றார்; அந்தக் காட்சி மாநஸமான காட்சியாயிருந்தது; காட்சிக்குப் பிறகு பாஹ்ய ஸம்ச்லேஷத்திலே ருசி பிறக்கமாகையாலே கையை நீட்டினார். கைக்கு அகப்படாமையாலே தளர்ந்து, இப்படி எம்பெருமான் நம்முடைய கைக்கு அகப்படாமைக்குக் காரணம் தேஹ ஸம்பந்தமா யிருந்ததென்று உணர்ந்து, இவ்விரோதியை நீயே போக்கி உன் திருவடிகளிலே அழைத்துக் கொண்டருள வேணுமென்கிறார் – என்று சில ஆசாரியர்கள் நிர்வஹிப்பர்கள்.) 4
என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4
கண்ணனே,Kannané - எம்பெருமானே!
வன் கள்வனேன்,Van Kalvanén - பஹாரக்கள்வனாகிய நான்
உன்னைவிட்டு என் கொள்வன் என்னும் வாசகங்கள் சொல்லியும்,Unnaivittu En Kolvan Ennum Vaasagangal Solliyum - உன்னைவிட்டு வேறு எதைக்கொள்வேன்! என்கிற கபடவார்த்தைகளைச்சொல்லியும்
மனத்தை வலிந்து,Manathai Valinthu - விஷயார்தரங்களில் ஊன்றின செஞ்சை பலாத்காரமாக மீட்டு
கண்ண நீர் சுரந்து,Kanna Neer Surandu - அவ்விஷயாந்தரங்களை அநுபவிக்கப் பெறாமையாலாகும் துக்கத்தையும் மாற்றி
நின் கண்,Nin Kan - உன்னிடத்திலே
நெருங்க வைத்து,Nerunga Vaithu - மனத்தை ஊன்றவைத்து
எனது ஆவியை,Enathu Aaviyai - என் ஆத்மாவை
நீக்க கில்லேன்,Neeka Killeen - ஸம்ஸாரத்தில் நின்றும் விடுவிக்க முடியாதவனானயிருக்கின்றேன்;
என் கண்,En Kan - என் பக்கலிலுள்ள
மலினம்,Malinam - அவித்யா தோஷத்தை
அறத்து,Arathu - போக்கி
என்னை கூசி அருளாய்,Ennai Koosi Arulaai - என்னை உன்பக்கலிலே அழைத்துக் கொண்டருள வேணும்.
3121திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) ((கண்ண பிரானை.) கீழ்ப்பாட்டில் மலினம் என்று பிரஸ்தாவிக்கப்பட்ட ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பார்க்க அருளிச் செய்கிறாரிதில்.) 5
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5
கண்ணபிரானை,Kannapiraanai - ஸ்ரீகிருஷ்ணனான் அவதரித்து மஹோபகாரங்கள் செய்தவனும்
விண்ணோர் கருமாணிக்கத்தை,Vinnor Karumanikkathai - நித்யஸூரிகளுக்கு ஸேஸ்யமான விலக்ஷண விக்ரஹத்தையுடையவனும்
அமுதை,Amudhai - அமிருதம்போன்றவனுமான உன்னை
எண்ணியும்,Enniyum - கிட்டியிருக்க செய்தேயும்
நன்னகில்லேன்,Nannagilleen - கிட்டப்பெறாதார் கணக்கிலேயிராநின்றேன்; (அதற்குக் காரணமேதென்னில்)
நடுவே,Naduvé - இடைச்சுவராக
ஓர் உடம்பில் இட்டு,Or Udambil Ittu - ஒரு சரீரத்திலே சேர்ப்பித்து
பல செய்வினைகள் கயிற்றால்,Pala Seivinaigal Kayirtraal - பலவகைப்பட்ட கருமங்களாகிய வலிய பாசங்களாலே
திண்ணம் விழுந்த கட்டி,Thinnam Vizhuntha Katti - மிகவும் திடமாகக்கட்டி
புண்ணை,Punnai - ஹேயதோஷங்களை
மறைய வரிந்து,Maraiya Varinthu - தெரியாதபடியாகப் பண்ணி
என்னை,Ennai - அசந்தனான என்னை
பதமே,Pathame - உனக்குப் புறம்பான விஷயங்களிலே
போர வைத்தாய்,Pora Vaithai - தள்ளிவைத்தாய்.
3122திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (கீழ்ப்பாட்டில் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நினைத்து வருத்தமுற்ற ஆழ்வாருடைய இழவு ஒருவாறு தீரும்படி எம்பெருமான் தன வடிவழகைக் காட்டியருள, அதை ஸேவித்தவாறே தம் உடம்பை மறந்து மகிழ்ந்து போகிறார். இவரை மெய்மறக்கப் பண்ணிற்று அவன் வடிவு.) 6
புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6
இரு,Iru - புண்யபாபங்களென்று இருவகைப்பட்ட
வல் விளையர்,Val Vilaiyar - பிரபல கருமங்கள்
புறம் அற,Puram Ara - புச்சம் தோன்றாதபடி
முறை முறை,Murai Murai - தோல் மாறுங் கணக்கிலே
புகல் ஒழிய,Pugal Ozhia - புகுவது தவிரும்படியாக
நிறம் உடை நால் தட தோள்,Niram Udai Naal Thada Thol - அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த திருப்பவளத்தையும்
செய்ய தாமரைகள்,Seyya Thaamaraigal - செய்தாமரைக் கண்களையும்
கட்டிக்கொண்டு,Kattikondhu - ஒன்றோடொன்று பிசிறிக்கொண்டு
குமைக்கும்,Kumaikkum - நலிவதற்கு இடமான
ஆக்கை,Aakkai - சரீரத்தில்
அறம் முயல் ஆழி அம் கை,Aram Muyal Aazhi Am Kai - ரக்ஷணமாகிற தருமத்திலே ஊக்கமுடைய திருவாழியினாலே அழகுபெற்ற திருக்கைகளையும் உடைய
கரு மேனி,Karu Meni - கரிய திருமேனியை யுடையவான
அம்மான் தன்னை,Ammaan Thannai - எம்பெருமானை
கண்டு கொண்டு ஒழிந்தேன்,Kandu Kondu Ozhindhen - ஸேவித்து அநுபவித்து விட்டேன்.
3123திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (தம்முடைய சிறுமையையும் அவனுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் நோக்குமிடத்து அவனுக்கும் நமக்கும் என்ன சேர்த்தி யுண்டு! என்று பிற்காலிக்க வேண்டி யிருக்கச் செய்தேயும் அவனுடைய க்ருபா ரஸம் கரை யழியப் பெருகின படியாலே ஒரு நீராய்க் கலக்க நேரிட்டது என்கிறார்.) 7
அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம் மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7
ஆழி பிரான் அம்மான் அவன்,Aazhi Piraan Ammaan Avan - திருவாழியாழ்வானையுடைய பிரபுவாகிய அவ்வெம்பெருமான்
எளவிடத்தான்,Ezhavidathaan - எவ்வளவு பெரியவன்!
யான் ஆர்,Yaan Aar - நான் எவ்வளவு சிறியவன்; (இப்படியிருக்க)
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று,Kaimmaa Thunbu Ozhiththai Endru - கஜேந்திராழ்வானது துன்பத்தைத் திரித்தவனே! என்று
கை தலை பூசல் இட்டே,Kai Thalai Poosal Ittae - சிரஸ்ஸிலே அஞ்ஜலியைப் பண்ணி
மெய் மால் ஆய் ஒழிந்தேன்,Mey Maal Aay Ozhindhen - ருஜுவான பிரேமமுடையவனாக ஆய்விட்டேன்!
எம் பிரானும்,Em Piraanum - ஸர்வேசுவரனும்
என் மேலான்,En Maelaan - என் மீது அன்பு பூண்டவனாயினான்; (ஆதலால்)
எம்மா பாவியர்க்கும்,Emma Paaviyarkkum - எவ்வளவோ மஹாபாபிகளானவர்களுக்கும்.
விதி வாய்க்கின்ற,Vidhi Vaaykkindra - தப்பவொண்ணாத அருளாகிற விதி வலிப்பதாமளவில்
வாய்க்கும் கண்டீல்,Vaaykkum Kandeel - பலித்தேவிடும்.
3124திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தனக்கு விலக்ஷண போக்தாக்கள் உண்டாய் இருக்கச் செய்தே என்னுள்ளே இப்போது புகுந்தான் -எனக்கு இனி சர்வவித போகமும் எம்பெருமானே என்கிறார்.) 8
மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8
மேல் ஆம் தேவர்களும்,Mael Aam Thevarkalum - மிகச்சிறந்தவர்களான நித்யஸூரிகளும்
நிலத் தேவர்களும்,Nilath Thevarkalum - இவ்வுலகத்திலுள்ள பக்தர்களும்
மேவி தொழும்,Mevi Thozhum - விரும்பி வணங்கிநின்ற
மானார்,Maanaar - எம்பெருமான்
நினநாள்,Ninanaal - இப்போதும்
வந்து,Vandhu - என்பக்கலிலே ஆமிழுக்கியம் பணிவந்து
அடியேன் மனத்தே,Adiyen Manathae - எனது நெஞ்சினுள்ளே
மன்னினார்,Manninaar - பெருந்தினார்;
இனி,Ini - இது முதலாக
சேல் எய் கண்ணியரும்,Sael Ey Kanniyarum - மீனோக்குடைய மாதர்களும்
பெரு செல்வமும்,Peru Selvamum - மஹத்தான ஜச்சரியமும்
நல் மக்களும்,Nal Makkalum - குணம்மிக்க பிள்ளைகளும்
மேல் ஆம் தாய் தந்தையும்,Mael Aam Thaai Thanthaiyum - மேம்பட்ட மாதாபிதாக்களும்
அவரே ஆவார்,Avarae Aavaar - (எனக்கு) அப்பெருமானேயாவர்.
3125திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இந்த ஸம்ஸார மண்டலத்திலே இதுகாறும் நான் பட்ட கிலேசங்களெல்லாம் தீர எம்பெருமான் தன்னுடைய பொருளாலே அபாராக்ருதமான வடிவோடே வந்து என்னோடே கலந்தானென்கிறார்.) 9
ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9
துணை ஆவார் ஆர் என்று,Thunai Aavaar Aar Endru - காப்பாரொருவருமில்லையேயென்று கதறிக் கொண்டு
அலை நீர் கடலுள் அழுந்தும்,Alai Neer Kadalul Azhundhum - அலையெறிகின்ற கடலினுள்ளே அமிழ்ந்துகிற
நாவாய் போல்,Naavaai Pol - படகுபொலே
நான்,Naan - அடியேன்
பிறவி கடலுள்,Piravi Kadalul - ஸம்ஸாரக்கடலினுள்ளே
நின்று துளங்க,Nindru Thulanga - நின்று சிரமப்படா நிற்கையில்
தேவு ஆர் கோலத்தோடும்,Thevu Aar Kola Thoodum - (எம்பெருமான்) திவ்யமான வடிவோடும்
திருசக்கரம் சங்கினோடும்,Thiruchakaram Sanginodum - திருவாழி திருசங்குகளோடும்கூடி
ஆ ஆ என்று,Aa Aa Endru - ஐயோ ஐயோ வென்று
அருள் செய்து,Arul Seydhu - க்ருபைபண்ணி
அடியேனோடும் ஆனான்,Adiyenoatum Aanaan - என்னோடும் கூடினான்
3126திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) (இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.) 10
ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள் செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார் வண்ணனே.–5-1-10
மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய்,Meen Aay Aamaiyam Aanar Singamum Aay Kurai Aay - மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும்
கான் ஆர் எனமும் ஆய் இன்னம்,Kaan Aar Enamum Aay Innam - வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி
கற்கி ஆம்,Karki Aam - கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும்
கார்வண்ணன்,Kaarvannan - காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான்
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு,Aal Udaiaan Aanaan Endra Ahadeh Kondum - என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு
உகந்து வந்து,Ugandhu Vandhu - உகப்போடோளந்து
தானே இன் அருள் செய்து,Thaane Inn Arul Seydhu - தானாகவே இனிய கிருபையைப் பண்ணி
என்னை முற்றவும் தான் ஆனான்,Ennai Muttavum Thaan Aanaan - எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான்.
3127திருவாய்மொழி || (5-1 -கையார் சக்கரத்து) (உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும் எம்பெருமானது கருணைத்திறம்.) இப்பத்தும் வல்லவர் ஸ்ரீவைஷ்ணன் ஸ்ரீ மிக்கவர்களாய்க் கொண்டு எம்பெருமான் திருவடிக் கீழே புகுவர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11
கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11
கார் வண்ணன்,Kaar Vannan - மேகவண்ணனும்
கண்ணபிரான்,Kannapiraan - ஸர்வஸுலபனும்
கமலம் தட கண்ணன் தன்னை,Kamalam Tada Kannan Thannai - தாமரைபோன்ற விசாலமான திருக்கண்களையுடையனுமான எம் பெருமானைக் குறித்து.
ஏர் வளம் ஒண் கழனி,Aer Valam On Kalani - எங்களின் மிகுதியையுடைத்தாய் அழகியவான கழனிகளையுடைய
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
சொன்ன,Sonna - அருளிச்செய்த
சீர் வண்ணம் ஒண் தமிழர்கள்,Seer Vannam On Tamilarkal - சீரும் வண்ணமும் குறையாத தமிழினாலான
இவை ஆயிரத்துள் இ பத்தும்-;,Ivai Aayiraththul I Patthum-; - இவை ஆயிரத்துள் இ பத்தும்-;
ஆர் வண்ணத்தால்,Aar Vannathaal - அமிருதபானம் பண்றுமாபோலே
உரைப்பர்,Uraippar - ஓதுமவர்கள்
பொலிந்து,Polindhu - ஸம்ருத்தியோடே யிருந்து
அடிகீழ்,Adikeezh - அவ்வெம்பெருமான் திருவடிகளின் கீழே
புகுலார்,Pugulaar - புகப்பெறுவர்கள்.
3128திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்திக்கு எப்போதும் ஒரு குறைவில்லாமலிருக்க வேனுமென்று காப்பிடுகிறார்.) 1
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1
பொலிக பொலிக பொலிக,Poliga Poliga Poliga - வாழ்க! வாழ்க! வாழ்க!
உயிர்,Uyir - ஜீவராசிகளுக்குண்டான
வல்,Val - வலிதான
நைந்த,Naindha - அழிந்துபோன
இங்கு,Ingu - இவ்விபூதியில்
நமனுக்கு,Namanukku - யமனுக்கு
யாது ஒன்றும் இல்லை,Yaathu Ondrum Illai - ஒரு காரியமுமில்லை.
கலியும்,Kaliyum - கலிபுருஷனும்
நெடும்,Netum - (விரைவில்) தொலையக்கூடும்.
கண்டு கொள்மின்,Kandu Kolmin - (அதை) ப்ரத்யக்ஷமாகக் காண்பீர்கள்;
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
சாபம்,Sabam - பாவமானது
போயிற்று,Poyitru - தொலைந்தது;
நலியும்,Naliyum - வருத்தத்தை விளைவிக்கக்கூடிய
நரகமம்,Naragamum - நகரலோகங்களும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்போன்ற நிறத்தையுடையவனான பகவானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்தில்
மலிய புகுந்து,Maliya Pugundhu - நிரம்பி
இசை பாடி,Isai Paadi - இனிய பாட்டுக்களைப் பாடிக்கொண்டு
ஆடி உழிதர கண்டோம்,Aadi Uzhidhara Kandom - இங்குமங்கும் நடமாடக் காண்கிறோம்
3129திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தியைக்கண்ட ஆழ்வார் இந்த ஸம்ருத்தியை யனுபவிப்பதற்கு மற்றும் பல அநுகூலர்களையும் ஆதரத்தோடு அழைக்கிறார்.) 2
கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2
வண்டு ஆர்,Vandu Ar - (மது பானத்திற்காக) வண்டுகள் பொருந்திய
தண் அம் துழாயான்,Than Am Thuzhaayan - குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையையணிந்தவனான
மாதவன்,Madhavan - திருமாலினது
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இந்நிலத்திலே
பண்,Pan - இராசங்களை
பாடி நின்ற ஆடி,Paadi Nindra Aadi - பாடிக்கொண்டு ஆடிக் கொண்டு
பரந்து,Parandhu - எங்கும் பரவி
திரிகின்றன,Thirigindran - எங்கும் பரவி உலாவுகின்றனர்;
கண்ணுக்கு இனியன,Kannukku Iniyan - (இப்படி) கண்ணுக்குப் பரமபோக்கயமான நிலைமைகளை
கண்டோம் கண்டோம் கண்டோம் ,Kandom Kandom Kandom - கண்டோம்-;
தொண்டீர் எல்லீரும்,Thondir Ellirum - பாகவதர்களான ஸகல பேர்களும்
வாரீர்,Vaareer - வாருங்கள்;
தொழுது தொழுது நின்று,Thozhudhu Thozhudhu Nindru - நன்றாகவணங்கி
ஆர்த்தும்,Aarthum - ஆரவாரிப்போம்.
3130திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ((திரியும் கலியுகம்) நித்ய ஸூரிகளும் இந்நிலத்திலே அடியிட்டு வந்து சேர்ந்து ஒன்று கூடிப் பரிமாறலாம்படி ஸம்ஸார மண்டலம் முழுவதும் ஸ்ரீவைஷ்ணவ மயமாயிற்றென்கிறார்.) 3
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3
திரியும்,Thiriyum - தருமங்கள் தலைகீழாக ஆகும்படியான
கலியுகம்,Kaliyugam - கலியுகமானது
நீங்கி,Neengi - தொலையப்பெற்று
பெரிய,Periya - தருமந் சிறந்த
கிதயுகம்,Kidayugam - கிருதயுகமானது
பற்றி,Pattiri - வந்து புகுந்து
தேவர்கள் தாமும் புகுந்து,Devargal Thamum Pugundhu - தேவப் பிரகிருதிகளும் தாமாகவே நெருங்கி
பேர் இன்பம் வெள்ளம் பெருக,Per Inbam Vellam Perukka - மஹத்தான ஆனந்த வெள்ளம் பெருகும்படியாக
கரிய முகில் வண்ணன்,Kariya Mugil Vannan - காளமேகவண்ணனாயும்
கடல் வண்ணன்,Kadal Vannan - கடல்வண்ணனாயுமுள்ள
எம்மான்,Emman - எம்பெருமானுடைய
பூதங்கள்,Poothangal - பக்தர்கள்
மண் மேல்,Mann Mel - இவ்விபூதியிலே
இரிய புகுந்து,Iriya Pugundhu - மிக்க கோலாஹலங்களுடன் வந்து
இசை பாடி,Isai Paadi - கீதங்களைப் பாடிக் கொண்டு
எக்கும்,Eggum - எல்லாவிடங்களிலும்
இடம் கொண்டன,Idam Kondan - வியாபித்துவிட்டார்கள்.
3131திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அயர்வறும் அமரர்களும் புகுந்து பரிமாறலாம் படி சம்சாரம் அடைய வைஷ்ணவர்கள் யாயிற்று -என்கிறார்.) 4
இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4
இடம் கொள்,Idam Kol - எங்கும் நிறைந்த
சமயத்தை எல்லாம்,Samayathai Yellam - துஷ்டமதங்களையெல்லாம்
எடுத்து களைவன போலே,Eduthu Kalaiyavan Pole - வேர்பறியகாகப் பறித்துத் தொலைப்பாரைப் போலே
தட கடல் பள்ளி பெருமான் தன்னுடைய பூதங்களே ஆய்,Thata Kadal Palli Peruman Thannudaiya Poothangaley Aay - ஸமுத்ரசாயியான பகவானுடைய பக்தரல்களே மலிந்து
கிடந்தும்,Kidandhum - படுத்துக்கொண்டும்
இருந்தும்,Irundhum - உட்கார்ந்துகொண்டும்
எழுந்தும்,Ezundhum - நின்று கொண்டும்
பல பல கீதம் பாடி நடந்தும்,Pala Pala Geetham Paadi Nadandhum - பலபல பாட்டுக்களைப் பாடிக்கொண்டே நடந்துகொண்டும்
பறந்தும்,Parandhum - தரையில் கால் பாவாதபடி
குனித்தும்,Kunithum - கூத்தாடிக்கொண்டு
நாடகம் செய்கின்றன,Nadagam Seyginran - களித்துத் திரியா நின்றார்கள்.
3132திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இவ்வுலகத்தில் பலபல காரியங்கள் நடைபெற்றுவந்தாலும் அவையொன்றும் ஆழ்வாருடைய திருக்கண்ணில் படாமே ஒரே ஒரு விஷயந்தான் தமது திருக்கண்களுக்குப் புலப்டுகின்றதாக இதில் அருளிச் செய்கிறார். எங்கு பார்த்தாலும் பாகவத கோஷ்டி யொன்றே ஸேவை ஸாதிக்கின்றதாம் தமக்கு.) 5
செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5
செய்கின்றது,Seyginradhu - இவர்கள் செய்கிற காரியம்
என் கண்ணுக்கு,Enn Kannuku - நான் பார்க்குமிடத்து
ஒன்றே ஒக்கின்றது,Ondre Okkinradhu - ஒன்றுபோலவே யிரா நின்றது;
இ உலகத்து,E Ulakathu - இவ்விபூதியிலே
வைகுந்தன் பூதங்களே,Vaikunthan Poothangaley - பகவத்பக்தர்களே
மயாத்தினால்,Mayathinal - யதேஷ்டமாக
எங்கும் மன்னி,Engum Manni - எல்லாவிடங்களிலும் நிறைந்து
ஆய்,Aay - இருக்கின்றார்கள்
அரக்கர்,Arakkar - ராக்ஷசர்களாவும்
அசுரர்,Asurar - அசுரர்களாகவும்
பிறந்தீர் உள்ளீர் ஏல்,Pirandheer Ullir El - பிறந்தவர்களாயிருப்பீர்களாகில்
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களிலலே சபவர்களாயிருப்பவர்களே!
கொன்று,Konru - உங்களைக் கொலைசெய்து
ஊழி பெயர்த்திடும்,Uuzhi Peyarthidum - யுகத்தையே மாற்றிவிடுவீர்கள்; (கலியுகத்ததைக் கிருதயகமாகவே ஆக்கிவீடவார்கள்)
உய்யும் வகை இல்லை,Uyyum Vagai Illai - (ஆதலால் உங்களுக்கு) பிழைக்கும் வழிஇல்லை;
ஐயம் ஒள்று இல்லை,Aiyam Olru Illai - (இதில்) சிறிதும் ஸந்தேஹமில்லை.
3133திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய ஸகல க்லேசங்களும் தீரும்படி பாகவதர்கள் ஜகத் எங்கும் பரந்தார்கள், அவர்களை ஆச்ரயித்து உஜ்ஜீவியுங்கோள்! என்று, கீழ்ச் சொன்னவர்களை நோக்கி யருளிச் செய்கிறார்.) 6
கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6
கொன்று,Konru - கொலைசெய்து
உயிர் உண்ணும்,Uyir Unnum - பிராணனைமுடிக்குமதான
விசாதி,Visaathi - வியாதியும்
பகை,Pagai - துவேஷமும்
பசி,Pasi - பசியும் (முதலான)
தீயன எல்லாம்,Theeyan Ellam - மற்றுமுள்ள கொடியவை எல்லாவற்றையும்
இ உலகில் நின்று கடிவான்,E Ulagil Nindru Kadivan - இவ்விபூதியலே தொலைப்பதற்காக
நேமி பிரான் தமர்,Nemi Piran Thamar - சக்ரபாணியான எம்பெருமானது பக்தர்கள்
போந்தார்,Pondhaar - வந்துள்ளார்கள்;
இசை,Isai - இசைகளை
நன்று பாடியும்,Nandru Paadiyum - நன்றாகப்பாடியும்
துள்ளி ஆடியும்,Thulli Aadiyum - துள்ளிக்குதித்தும்
ஞாலம்,Gnalam - இந்நிலத்திலே
தொண்டீர்,Tondheer - இதரவிஷயங்களில் சபலராயிருக்கிறவர்களே!
சிந்தையை,Sindhaiyai - உங்களது நெஞ்சை
செம் நிறத்தி,Sem Niratti - செவ்வையாக (நல் விஷயத்திலே) ஸ்தாபித்து
சென்று,Sendru - அப்படிப்பட்டட பக்தர்களிடத்தே போய்
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கோள்.
3134திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (எங்கும் பரம பாகவதர்களே மலிந்து விட்டார்களென்று பரம ஸந்தோஷம் பூரித்து நின்ற ஆழ்வார் காலதோஷத்தாலே சில அவைஷ்ணவர்களையும் கண்டார்; அவர்கள் பகவத் பாகவத ப்ரவணர்களாயன்றிக்கே தேவதாந்தர ஸமாரராதன பரர்களாய் இருக்கிறபடியையுங் கண்டார்; அன்னவர்களையும் உபதேசத்தாலே திருத்தப் பார்த்து இப்பாசுரமருளிச் செய்கிறார்.) 7
நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்ப தெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7
நும் உள்ளத்து,Num Ullathu - உங்கள் நெஞ்சுக்குள்ளே
நிறுத்தி,Niruthi - வலியப்பிடித்து உட்காரவைத்து
கொள்ளும்,Kollum - சிந்திக்கப்படுகின்ற
தெய்வங்கள்,Dheyvangal - தேவதைகள்
உய்யக்கோள்,Uyyakkol - உஜ்ஜீப்பித்துக்கொள்வதும்
அவனோடே,Avanode - அந்த எம்பெருமான் தன்னோடே
மறுத்தும் கண் கூர்,Maruthum Kann Koor - மீண்டு சென்று கிட்டிக்கிடீர்;
மார்க்கண்டேயனும்,Maarkandeyanum - (இவ்விஷயத்தில்) மார்க்கண்டேயனும்
கரி,Kari - ஸாக்ஷியாவன்;
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா,Karutha Manam Ondrum Vaenda - (உங்களுக்கு) மலினமான நெஞ்சு சிறிதும் வேண்டியதில்லை;
கண்ணன் அல்லால்,Kannan Allal - ஸ்ரீக்ருஷ்ணனான அவதரித்த ஸ்ரீமந் நாராயணனல்லது
தெய்வம் இல்லை,Dheyvam Illai - பரதெய்வம் வேறுகிடையாது;
இறுப்பது எல்லாம்,Iruppadhu Ellam - (ஆன பின்பு) நீங்கள் செலுத்தும் கடமைகளையெல்லாம்
அவன் மூர்த்தியாயவர்க்கே இறுமின்,Avan Murthiyavarkke Irumin - அப்பெருமானுடைய சரீரபூதர்களுக்குச் செலுத்துகின்றோமென்கிற பிரதிபத்தியுடனே செலுத்துங்கள்.
3135திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தேவதாந்த்ரங்களை ஆஸ்ரயித்து அபேக்ஷிதங்களை பெற்றார் இல்லையோ என்னில்- அந்த தேவதைகள் ஆஸ்ரித அபேக்ஷிதங்கள் கொடுக்க வல்லவாம் படி பண்ணினான் எம்பெருமானே - அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.) 8
இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8
இறுக்கும் இறை,Irukkum Ir - அவரவர்கள் செலுத்த வேண்டிய கடன்களை
இறந்து,Iranthu - செலுத்தி
உண்ண,Unna - அவரவர்கள் வாழும்படி
எவ்வுலகுக்கும்,Evvulagum - வேறுவேறு வகைப்பட்டருசியையுடைய ஸமஸ்தலோகத்துக்கும்
தன் மூர்த்தி,Than Murthi - தன்னுடைய சரீரங்களை
தெய்வங்கள் ஆக,Dheyvangal Aaga - அந்தந்த கருமங்களினால் ஆராதிக்கைக்கு உரிய தேவதைகளாக
நிறுத்தினான்,Niruthinaan - ஏற்பாடு பண்ணினவன்
அத்தெய்வநாயகன் தானே,Attheyvanaayan Kan Thaane - ஸர்வதேவதாநாயநனான அப்பெருமானே யவன் (ஆகையால்)
மறு திரு மார்வன அவன் தன் பூதங்கள்,Maru Thiru Maarvanavan Than Pudhangal - ஸ்ரீவத்ஸமென்னும் மறுவைத் திருமலிலே உடையனான அப்பெருமானுடைய அடியவர்களான பாகவதர்கள்
கீதங்கள் பாடி,Geedhangal Paadi - பலவகைப் பாட்டுக்களைப்பாடி
வெறுப்பு இன்றி,Veruppu Indri - (இருள் தருமா ஞாலத்தில் இருக்க வேண்டியதாகிறதே! என்கிற வெறுப்பு இல்லாமல்
ஞானத்து,Gnanathu - இந்நிலத்தில்
மிக்கார்,Mikkaar - சிறப்புற வாழ்கின்றார்கள்
நீர்,Neer - நீங்கள்
மேவி,Mevi - அவர்களைச்சிட்டி
தொழுது,Thozhudhu - வணங்கி
உய்மின்,Uymin - உஜ்ஜிவித்துப்போங்கள்
3136திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (பகவத் பக்தர்கள் இருவகைப் படுவார்கள். பலவகைக் கைங்கரியங்களைச் செய்து போது போக்குவாரும், குணாநுபவத்திலே ஊன்றிப்போருவாரும், அப்படிப்பட்ட பக்தர்கள் பூமியெங்கும் பரந்தார்கள்) 9
மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடியாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9
வேதம் புனிதம் இருக்கை,Vedham Punitam Irugai - வேதத்தினுள் பரமபவித்திரமான புருஸூக்தம் முதலியவற்றை
நாவில் கொண்டு,Naavil Kondhu - நாவினால் உச்சரித்துக்கொண்டு
ஞானம் விதி பிழையாமே,Gnanam Vidhi Pizhaiyaame - பக்திமார்க்கம் தவறாதபடி
பூவில்,Poovil - மலரோடு கூடின
புகையும்,Pugaiyum - தூபமும்
விளக்கும்,Vilakum - தீபமும்
சாந்தமும்,Saanthamum - சந்தனமும்
நீரும்,Neerum - திருமஞ்சனமும்
மலிந்து,Malindhu - பூர்ணமாகக்கொண்டு
அச்சுதன் தன்னை,Achchudhan Thannai - எம்பெருமானை
மேவி,Mevi - அடைந்து
தொழும்,Thozhum - ஸாங்கரியம் செய்கிற
அடியாரும்,Adiyarum - அடியார்களையும்
பகவரும்,Bhagavarum - குணாநுபவ ரிஷ்டர்களையும்
உலகு மிக்கது,Ulaku Mikkatu - இவ்வுலகமானது அதிகமாகக் கொண்டது (ஆன பின்பு)
நீங்கள்,Neengal - நீங்கள்
மேவிதொழுது.,Mevi Thozhudhu - (அவர்களை) விரும்பி வணங்கி
உய்ம்மின்,Uymin - உஜ்ஜீவியுங்கள்.
3137திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (நீங்கள் ஆராதிக்கிற தேவதைகளும் எம்பெருமானை ஆச்ரயித்தே தம் பதவிகளைப் பெற்றார்கள்; நீங்களும் அவர்களைப் போலே எம்பெருமானை ஆச்ரயித்துப் பிழையுங்கோளென்கிறார்.) 10
மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திரு மூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10
நக்கன் பிரானோடு,Nakkan Piranoatu - சிவபிரானும்
அயனும்,Ayanum - பிரமனும்
இந்திரனும்,Indiranum - தேவேந்திரனும்
முதல் ஆக,Mudhal Aaga - முதலாக
தொக்க,Thokka - திரண்ட
அமரர் குழாய்கள்,Amaraar Kuzhaigal - தேவவர்க்கங்கள்
கண்ணன் திருமூர்த்தி,Kannan Thirumoorthi - எம்பெருமானது திருவடிவத்தை
மேவி,Mevi - ஆசிரயித்து
மிக்க உலகுகள் தோறும்,Mikka Ulakugal Thorum - பரம்பின் லோகங்கள் தோறும்
எங்கும்,Engum - எவ்விடத்தில்
பரந்தன,Paranthen - நல்ல பதவிகளைப்பெற்று வாழ்ந்தான்;
தொண்டீர்,Thondir - தொண்டர்களே!
ஒக்க,Okka - (நீங்களும்) அவர்களோடொக்க
தொழ சிற்றிர் ஆகில்,Thoza Sitril Aakil - (எம்பெருமானைத்) தொழவல்லீர்களாகில்
கலியுகம்,Kaliyugam - கலியுகதோஷம்
ஒன்றும்,Ondrum - சிறிதும்
இல்லை,Illai - உங்களுக்கு இல்லாதபடியாரும்.
3138திருவாய்மொழி || (5-2 –பொலிக பொலிக பொலிக) (அடியார்திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்) (இத் திருவாய்மொழியான தன்னைக் கற்பவர்களது நெஞ்சிலுள்ள ஸகல விதமான அழுக்கையுமறுக்குமென்று பயலுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11
தன் அடியார்க்கு,Than adiyarkku - தன் அடியவர்களுக்கு
கலியுகம் ஒன்றும் இன்றிக்கே,Kaliyugam ondrum indrikke - கலியுகதோஷம் ஒன்றும் தட்டாதபடி
அருள் செய்யும்,Arul seyyum - கிருபை பண்ணுகின்ற
மலியும் சுடர் ஒளி மூர்த்தி,Maliyum sudar oli moorthi - மிகுந்த பிரகாசம் பொருந்திய தேஜோமயு திவ்யவிரஹதிதையுடையவனும்
மாயம் பிரான்.,Maayam pirano - வேஷ்டி தங்களையுடைய ப்ரபுவுமான
கண்ணன் தன்னை,Kannan thannai - எம்பெருமானைக் குறித்து
கலி வயல்,Kali vayal - நிறைந்த வயல்களையுடைய
தென் திசை,Then disai - தென் திசையிலுள்ள
குருகூர்,Kurugoor - திருநகரிக்குத்தலைவரான
காரி மாறன் சடகோபன்,Kaari maaran Sadagopan - ஆழ்வார்
புகழ்,Pugazh - கீர்த்திமிக்க
ஆயிரத்து பத்து,Aayirathu paththu - ஆயிரத்தினுள் இத்திருவாய்மொழி
உள்ளத்தை,Ullathai - (கற்பாருடைய) நெஞ்சை
மாசு அருக்கும்,Maasu arukkum - கல்மஷமற்றதாகச் செய்
3139திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.) 1
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1
மாறு அறுசோதி,Maaru aruchothi - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய்,Seiyya vaai - சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை,En mani kunraththai - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை,Aaga adhu seelanai - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை,Aadhi moorthiyai - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை
நாடி,Naadi - தேடி
பாக அறவு எய்தி,Paaga aravu eidhi - உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து
அறிவு இழந்து,Arivu izhanthu - அறிவும் இழக்கப்பெற்று
ஏனை நானையம்,Ena nanaiyam - எத்தனை காலமிருப்போம்?
தோழி,Thozi - தோழியே!
ஏசு அறும்,Aesu arum - ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழிமொழி
என் செய்யும்,En seyyum? - யாது செய்யும்?
3140திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (கீழ்ப்பாட்டில், ஊரார் சொல்லுபழி நமக்கென்ன செய்யப் போகிறதென்றால்; ‘இப்படியும் ஒரு வார்த்தையுண்டோ? பழிக்கு அஞ்சாதே யிருக்கவொண்ணுமோ? பழி பரிஹரிக்கவேண்டியது அவசியமாயிற்றே’ என்ன, நான் பழி பரிஹரிக்க வேண்டாவென்று சொல்லுகின்றேனல்லேன்; பழி பரிஹரிக்கும்படியான நிலைமையில் இல்லையே! என்கிறாளிப்பாட்டில்.) 2
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2
என் செய்ய தாமரை கண்ணன்,En seyya thaamarai kannan - சிவந்ததாமரை போன்ற திருக்கண்களையுடையனான என்னாதன்
என்னை,Ennai - என்னுடைய
நிறை,Nirai - அடக்கத்தை
கொண்டான்,kondaan - கொள்ளை கொண்டான்; (அதனாலே)
முன்,Mun - முதன் முதலாக
செய்ய மாமை இழந்து,Seyya maamai izhandhu - விலக்ஷணமான மேனி நிறம் அழியப்பெற்று
மேனி மெலிவு எய்தி,Meni melivu eidhi - சரீரமும் மெலிந்து
என் செய்ய வாயும்,En seyya vaayum - எனது சிவந்தவாயும்
கரு கண்ணும்,Karu kannum - கறுத்தகண்ணும்
பயப்பு ஊர்ந்து,Bayappu oornthu - பாலை நிறம் படரப் பெற்றன.
தோழீ,Thozhi - தோழியே!
இனி,Ini - இந்நிலைமையானபின்பு
நம்மை,Nammai - நம் விஷயத்திலே
ஊரவர் கவ்வை,Ooravar kavvai - ஊராருடைய பழிமொழி
என் செய்யும்,En seyyum - என்ன பண்ணும்?
3141திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமானுடைய அதிமாநுஷ சேஷ்டிதங்களிலே நெஞ்சைப் பறி கொடுத்த என்னை ஊராருடைய பழிமொழி என்ன செய்யுமென்கிறாள்.) 3
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ் வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3
ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன்,Oorntha sakadam uthaiththa paathaththan - (நலிவதற்காக) ஊர்ந்து வந்த சகடத்தைப் பொடிபடுத்தின திருவடிகளையுடையவனும்
பேய்முலை,Peymulai - பூதனையின் முலையை
சார்ந்து,Saarnthu - மனம் பொருந்தி
சுவைத்த,Suvaiththa - பசையறவுண்ட
செம் வாயன்,Sem vaayan - செவ்விய வாயையுடையவனுமான எம்பிரான் (அந்தச் செயல்களாலே)
என்னை நிறைகொண்டான்,Ennai niraikondaan - என்னுடைய ஸ்த்ரீத்வ பூர்த்தியை அபஹரித்தான்;
தீர்ந்த என் தோழீ,Theerndha en thozhi - எனக்கு நன்மை தேடுகையிலே) அற்றுத் தீர்ந்திருக்கின்ற என் தோழியே!
போர்ந்தும பெயர்ந்தும்,Poornthum peyarnthum - எந்தவிதத்திலும்
அவனோடு அன்றி ஓர் சொல் இலேன்,Avanoadu anri or sol ileen - அவ்வெம் பெருமான் விஷயமான பேச்சன்றி வேறொரு பேச்சு உடையேனல்லேன்;
ஊரவர் கவ்வை என்செய்யும்,Ooravar kavvai enseyyum - ஊரார் அலர் தூற்றுதல் என்னை என்ன பண்ணும்?
3142திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4
தோழீ,Thozhi - தோழியே!
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழமொழிகளை
எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த,Mulaittha - முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்)
3143திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நான் சொல்லுகிறபடியே குணவாளன் அன்றிக்கே நீ சொல்லுகிறபடியே குண ஹீனன் ஆனாலும் என் நெஞ்சம் அவனை அல்லது அறியாது -உனக்கு அதில் ஒரு பலம் இல்லை என்கிறாள்.) 5
கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத் தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5
கடியன்,Kadiyan - தன் காரியத்தில் விரைகின்ற கடுமையையுடையவன்
நெடியமால்,Nediya maal - போகத் தொடங்கினால் விலக்க அரிதாம்படி பெரிய மேன்மையையுடையவன்;
உலகம் கொண்ட அடியன்,Ulagam kondu adiyan - உலகம் முழுவதையும் தன்னதேயாம்படியளந்து கொண்ட திருவடியை யுடையவன்;
அறிவு அருமேனி மாயத்தான்,Arivu arumeni maayathaan - நல்லவனோ தீயவனோ என்று விவேகிக்க அரிதாம்படி அழகாலே மயக்கும் மாயத்தையுடையவன்;
கொடியன்,Kodiyaan - அக்காரியம் தலைக்கட்டினால் திரும்பிப் பாராமல்போகிற கொடியவன்;
ஆகிலும்,Aakilum - இங்ஙனே யானாலும்
கொடிய என் நெஞ்சம்,Kodiya en nenjam - கொடிதான என்னுடைய மனமானது
அவனே என்று கிடக்கும்,Avane endru kidakkum - அப்பெருமானே தஞ்சமென்று கிடக்கின்றது;
எல்லே,Elle - என்னே!
துடிகொள் இடை,Thudikol idai - உடுக்கை போன்ற இடையையும்
மடம்,Madham - மடப்பத்தையுமுடைய
தோழீ,Thozhi - தோழியே!
அன்னை,Annai - என் தாய்
என் செய்யும்,En seiyyum - என்ன செய்யக்கூடும்?
3144திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (நீ இங்ஙனே துணிவு கொண்டால் தாயார் ஜீவிக்கமாட்டாள்; அத்தாலே ஊராருடைய பழிப்பும் மிகும் என்று தோழி சொல்ல, கண்ணபிரானுடைய குண சேஷ்டிதங்களில் நான் அகப்பட்டேன். இனி யார் என் செய்தாலென்ன என்கிறாள்.) 6
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6
தோழிமீர்,Thozhimeer - தோழிமார்களே!
முன்னை அமரர் முதல்வர்,Munnai amarar mudhalvar - நித்ய ஸூரிநாதனும்
வண் துவராபதி மன்னன்,Van dhuvaraapathi mannan - அழகிய த்வாரகாபுரிக்கு அரசனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணிவண்ணனுமான
வாசுதேவன்,Vaasudevan - கண்ணபிரானாகிற
வலையுள்,Valaiyul - வலையினுள்ளே
அகப்பட்டேன்,Agappattaen - சிக்கிக் கொண்டேன்;
இனி,Ini - ஆன பின்பு
என்னை,Ennai - என் திறத்திலே
உமக்கு ஆசை இல்லை,Umakku aasai illai - நீங்கள் ஆசைவைக்க நியாயமில்லை;
அன்னை என் செய்யில்,Annai en seiyyil - தாய் எது செய்தால்தான் என்ன?
என் ஊர் என் சொல்லில்,En oor en sollil - என் ஊரார் எதுசொன்னால்தான் என்ன?
3145திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (எம்பெருமான் பக்கலில் குண ஹாநி சொன்னவர்களுடைய வாய் அடங்கும்படி நாம் அவனைக் காணப் பெற்றுத் தலையாலே வணங்கலாம்படியான காலம் வாய்க்குமோ தோழீ என்கிறாள்.) 7
வலையுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாங் கொலோ? தையலார் முன்பே.–5-3-7
கலைகொள்,Kalaikol - சேலை யணிந்ததும்
அகல்,Akal - அகன்றதுமான
அல்குல்,Alkull - நிதம்பத்தையுடைய
தோழீ,Thozhi - தோழியே,
என்னை,Ennai - என்னை
வலையுள்,Valaiyul - (தன்னுடைய குணசேஷ்டிதங்களாகிற) வலையிலே
அகப்படுத்து,Agappaduthu - சிக்கிக்கொள்ளும்படி செய்து
நல் நெஞ்சம்,Nal nenjam - (எனது) நல்ல நெஞ்சையும்
கூவிக்கொண்டு,Koovikkondu - அடியறுத்து அழைத்துக்கொண்டு
அலைகடல் பள்ளி அம்மானை,Alaikadal palli ammaanai - அலை யெறிகின் நாடலிலே (ஏகாந்தமாகப்) பள்ளிகொள்ளும் ஸ்வாமியாய்.
ஆழி பிரான் தன்னை,Aazhi praan thannai - திருவாழியாழ்வானை ஏந்தியுள்ள மஹோபகாரகனாக எம்பெருமானை
நம் கண்களால் கண்டு,Nam kangalal kandu - நமது கண்களாலே பார்த்து
தையலார் முன்பே,Thaiyalar munbae - (பழிசொல்லுகிற) மாதர்களின் நண்வட்டத்தில்
தலையில்,Thalaiyil - தலையாலே
வணங்கவும் ஆம் கொலோ,Vanangavum aam kolo - வணங்கவும் கூடுமோ?
3146திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) மஹோபகார சீலனான எம்பெருமானை குணஹீகன் என்று குறைகூறின தாய்மார் “அந்தோ! இப்பெருமானையோ நாம் குணஹீகனென்று சொன்னது!” என்று வெட்கப்பட்டுக் கவிழ் தலையிடும்படி நாம் அப்பெருமானைக் காண்பது என்றைக்கோ? என்கிறாள்.) 8
பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டை வாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8
தோழீ,Thozhi - தோழியே!
பேண் முலை உண்டு,Paen mulai undu - பூதனையின் முலையைப் புசித்து
சாடல் பாய்ந்து,Saadal paayndhu - சகடத்தை முறித்துத் தள்ளி
மருது இடைபோய்,Marudhu idaipoy - இரட்டை மருதமரங்களிளிடையே தவழ்ந்து சென்று
முதல் சாய்த்து,Mudhal saaythu - (அற்றை) வேரோடே தள்ளி
புள்வாய் பிளந்து,Pulvaay pilandhu - பகாசுரனுடைய வாயைக் கிழித்து
களிறு அட்ட,Kaliru atta - குவளையபீட யானையைக் கொன்று முடித்த
தூ முறுவல் தொண்டை வாய்பிரானை,Thoo muruval thondai vaaypiraanai - பரிசுத்தமான மந்தஹாஸத்தையும் கொங்கைக் களிபோனற் திருபப்பவளத்தையுமுடைய பெருமானை
அன்னையர் நாண,Annaiyar naana - தாய்மார் தலைதொங்கும்படியாக
உரம் உறுகின்றது,Uram urugindrathu - நாம் கிட்டுவது
ஏ நான் கொலோ,E naan kolo - என்றைக்கோ?
3147திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (என் பக்கல் ஸர்வஸ்வமும் கொள்ளை கொண்டு எட்டா நிலத்திலிருக்கிறவனை ஸகல லோகமும் பழிக்கும்படி மடலூரக் கடவேனென்று தோழிற்குத் தனது நெஞ்சை வெளியிடுகிறாள்.) 9
நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9
என் தோழி,En thozhi - எனது தோழியே!,
என்னை,Ennai - என்பக்கலில் நின்றும்
நாணும்,Naanum - நாணத்தையும்
நிறையும்,Niraiyum - அடக்கத்தையும்
கவர்ந்து,Kavarnthu - கொள்ளை கொண்டு
நல் நெஞ்சம் கூய்க்கொண்டு,Nal nenjam kooykondru - (எனது) நல்ல நெஞ்சையும் ஆகர்ஷித்துக்கொண்டு
சேண் உயர் நாளத்து இருக்கும்,Sen uyar naalathu irukkum - மிகவும் உயர்ந்த பரமபதத்திலெழுந்தருளியிருக்கிற
தேவபிரான் தன்னை,Devapiraan thannai - நிதய் ஸூரிநாதனை
உலகு தோறு,Ulaku thoaru - ஒவ்வொருவலகத்திலும்
அவர் தூற்றி,Avar thootri - பழிதூற்றி
ஆம் கோணைகள் செய்து,Aam konaigal seydhu - செய்யக்கூடிய மிறுக்குக் களைச்செய்து
கு திரி ஆய்,Ku thiri aay - அடங்காத பெண்ணாய்
மடல் ஊர்தும்,Madal oordhum - மடலூரக் கடவோம்;
ஆணை,Aanai - இது திண்ணம்
3148திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (மடலூர்வதில் தனக்குள்ள உறுதியை நன்கு வெளியிடுகிறாள். பாட்டினடியில் யாம் என்றது ஸ்வ ஸ்வரூபத்தை உறுத்திக் காட்டுகிறபடி.) 10
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நா மடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10
யா மடம் இன்றி,Yaa madam indri - ஏதேனும் ஒரு படியாலும் பெண்மைக்குரிய ஒடுக்கமில்லாமல்
தெருவு தோறு,Theruvu thooru - வீதிகள் தோறும் புகுந்து
அயல் தைய லார்,Ayal thaya laar - அயல் பெண்களும்
நாடும்,Naadum - ஸகல லோகமும்
நா மடங்கா பழி தூற்றி,Naa madangaa pazi thootri - நாக்கு இடைவிடாதே சொல்லுகிற பழிமொழிகளைத் தூற்றி
இரைக்க,Irakka - இரைச்சல் போடும்படி
யாம்,Yaam - நாம்
மடல் ஊர்ந்தும்,Madal oordhum - மடலூர்ந்தாகிலும்
ஆழி அம் கை நம்பிரானுடைய,Aazhi am kai nambiraanudaiya - திருவாழியைத் தரித்த அழகிய திருக்கையையுடைய எம்பெருமானுடைய
தூ மடல்,Thoo madal - பரிசுத்தமான இதழ்களையுடைய
தண் அம் துழாய் மலர்,Than am thuzhaay malar - குளிர்ந்தழகிய திருத்துழாய்மலர் மாலையை
கொண்டு,Kondu - அவன் தரப்பெற்று
சூடுவோம்,Sooduvom - தலையில் அணிவோம்.
3149திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இத்திருவாய் மொழி சொல்லும் தேசத்தில் எம்பெருமான் தானே வந்து நித்ய சம்ச்லேஷம் பண்ணும் -என்கிறார்) 11
இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் தன்னை
விரைக் கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக் கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11
இரைக்கும்,Iraikum - கோக்ஷிக்கின்ற
ஈறா கடல் கண்ணன்,Eeraa kadal kannan - கருங்கடல் போன்ற வடிவழகையுடையவன்
கண்ணபிரான் தன்னை,Kannapiraan thannai - கண்ணபிரானான எம்பெருமானைக் குறித்து
விரை கொள்பொழில்,Virai kolpozhil - பரிமனம்மிக்க சோலைகளையுடைய
குருகூர்,Gurukoor - திருநகரியில் அவதரித்த
சடகோபன்,Sadagopan - ஆழியார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
நிரைகொள்,Nirai kol - சாஸ்த்ரமரியாதைப்படியே ஒழுங்குகளைக்கொண்ட
அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையாமைந்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - ஆயிரம் பாசுரங்களிலுள்ளே
இயற்றும்,Iyarrum - இப்பதிகத்தை
உரைக்க வல்லார்க்கு,Urakk valarkkum - ஓதவல்லவர்களுக்கு
தம் ஊர் எல்லாம்,Tham oor ellaam - தம்தம் இருப்பிடமெல்லாம்
வைகுந்தம் ஆகும்,Vaikundham aagum - பரமபதம் போலே பேரின்பசீலமாக விளங்கும்
3150திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஜகத்தடங்கலும் இருள்மூடி நின்றது; ரக்ஷகனென்று பேர் பெற்றிருக்கும் ஸர்வேச்வரனோ வந்து ரக்ஷித்தருள்கின்றிலன்; இனியென்னை ரக்ஷிப்பார் ஆரென்கிறாள்.) 1
ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1
ஊர் எல்லாம் துஞ்சி,Oor ellam thunji - ஊர் முழுவதும் உறங்கிப்போய்
உலகு எல்லாம்,Ulagu ellam - உலகம் முழுவதும்
கள் இருளாய்,Kal irulaay - காடாந்தகராம்மிக்கு
நீண்டது,Neendathu - நெடுகிச் செல்கின்றது;
ஆல்,Aal - அந்தோ!, (இந்நிலைமையில்)
பார் எல்லாம் உண்ட,Paar ellam unda - பூமி முழுவதையும் (பிரளயகாலத்திலே) வயிற்றிலே வைத்து ரக்ஷித்த
நம் பாம்பு அணையான்,Nam paambu anaiyaan - சேஷசாயியான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலம்
நீர் எல்லாம் தேதி,Neer ellam thedi - நீர் நிலமெல்லாம் அலையடங்கித் தெளிந்து
ஓர் நின் இரவு ஆய்,Oor nin iravu aay - (பகல் கலசாத) ஒரே காளராத்ரியாய்
இனி,Ini - இப்படியான பின்பு
வல் வினை யேன்,Val vinai yaen - கொடும்பாவியான என்னுடைய
ஆவி,Aavi - உயிரை
காப்பார்,Kaappaar - ரக்ஷிப்பவர்
ஆர்,Aar - யாவர்?
எல்லே,Elle - என்னே!
3151திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இத்தசையிலே கிருஷ்ணனும் வந்திலன் –மஹா பாபியான என்னோட்டை சம்பந்தத்தால் நெஞ்சே நீயும் பாங்கு இன்றியே ஒழியா நின்றாய் – என்கிறாள்) 2
ஆவி காப்பார் இனியார்? ஆழ்கடல் மண் விண் மூடி
மா விகாரமாய் ஓர் வல்லிரவாய் நீண்டதால்
காவி சேர் வண்ணன் என் கண்ணனும் வாரானால்
பாவியேன் நெஞ்சமே! நீயும் பாங் கல்லையே.–5-4-2
ஆழ் கடல்,Aazh kadal - ஆழ்ந்த கடலையும்
மண்,Man - பூமியையும்
விண்,Vin - ஆகாசத்தையும்
மூடி,Moodi - மறைத்து (இவ்வளவோடும் நில்லாமல் ஸகலலோகங்களையும் கபளீகரிக்கும்படி)
மா வீசாரம் ஆய்,Maa veesaram aay - பெரிய விகாரத்தையுடைந்தாய்கொண்டு
வல்,Val - வலிதான
ஓர் இரவு ஆய்,Or iravu aay - ஒரே ராத்திரியாய்
நீண்டது,Neendadhu - நெடுகிச் செல்லா நின்றது;
ஆல்,Aal - அந்தோ!
காவி சேர் கண்ணன்,Kaavi seer kannan - நெய்தல் பூப்போன்ற நிறத்தையுடையனான
என் கண்ணனும்,En kannanum - எனக்குத் தஞ்சமான கண்ணபிரானும்
வாராவி,Vaaraavi - வந்து முகங்காட்டுகின்றிலன்
பாவியேன்,Paaviyin - பாவியான என்னுடைய
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - நீ தானும்
பாங்கு அல்லை,Paangu allai - அணுகூலமாக இருக்கிறாயில்லை.
இனி,Ini - இப்படியான பின்பு
ஆவி காப்பார்,Aavi kaappar - பிராணனை ரக்ஷித்துத் தருவார்
ஆர்,Aar - யாவர்? (ஒருவருமில்லை.)
3152திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (அநிஷ்டங்களைத் தொலைக்க வல்லனான இராமபிரானும் உதவ வருகின்றிலன்; முடியவும் வழி தெரியாமல் திகைக்கின்றேனென்கிறாள்.) 3
நீயும் பாங்கல்லை காண் நெஞ்சமே! நீளிரவும்
ஓயும் பொழுதின்றி ஊழியாய் நீண்டதால்
காயும் கடும் சிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே.–5-4-3
நெஞ்சமே,Nenjame - மனமே!
நீயும்,Neeyum - (எல்லாக் காரியங்களுக்கும் முதற்கருவியான நீயும்
பாங்கு அல்லை காண்,Paangu allai kaan - எனக்கு விதேயமாக இருக்கிறாயில்லை;
நின் இரவும்,Ninn iravum - ஏற்கனவே நீண்டு வருகின்ற ராத்திரியும்
ஓயும் பொழுது இன்றி,Oyum pozhudhu indri - ஓயுங்காலம் இல்லாமல்
ஊழி ஆய்,Uuzhi aay - ஒரு கல்பமாய் கொண்டு
நீண்டது,Neendadhu - வளர்ந்து விட்டது;
ஆல்,Aal - அந்தோ;
காயும்,Kaayum - (விரோதிகளைக்) காய்கின்ற
சுடு சிலை,Sudu silai - கடிய சார்ங்கவில்லையுடைய
என் காகுத்தன்,En Kaaguthan - இராமபிரான்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றவன்;
வல்வினையேன்,Valvinaiyene - வலிய பாபத்தையுடையேனான நான்
பெண் பிறந்து,Pen pirandhu - பெண்ணாய்ப்பிறந்து
மாயும் வகை அறியேன்?,Maayum vakai arien - முடியும் வழியை அறிகின்றிலேன்.
3153திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (சண்டார்க்குப் பொறுக்க வொண்ணாதபடி நான் துன்பப்பட்டாநிற்க, எல்லாருடைய ஆபத்துக்களையும் போக்குவானான திரிவிக்கிரமன் வருகின்றிலன்; என்னுடைய சிந்தை நோய் தீரும் வழி என்னோ! என்கிறாள்.) 4
பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று
ஒண் சுடரோன் வாரா தொளித்தான் இம் மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் நம் காரேறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?–5-4-4
பெண் பிறந்தார் எய்தும்,Pen piranthaar eydum - பெண்ணாய்ப் பிறந்தவர்கள் அடைகின்ற
பெரு துயர் காண்கிலேன் என்று,Peru thuyar kaangilaeen endru - பெருந்துக்கத்தை காணமாட்டேன்’ என்றெண்ணி
ஒண் சுடரோன்,On sudaron - ஸூரியன்
வாராது ஒளித்தான்,Vaaradhu o̱lithaan - வாராதே மறைந்து போனான் போலும்
இ மண் அளந்த,EmanAlandha - இப்பூமியை யளந்து கொண்டவனும்
பெரிய கண்,Periya kan - பரந்த திருக்கண்களையுடையவனும்
செம்வாய்,Semvai - சிவந்த அதரத்தையுடையவனும்
எம் கார் எறு,Em kaar eru - கறுத்த திருமேனியையுடையவனும் காளைபோன்றவனுமான எம்பெருமான்
வாரான்,Vaaraan - வந்து முகங்காட்டுகின்றிலன்;
ஆல்,Aal - அந்தோ!
எண்பெரிய,Enperiya - நினைக்கவும் முடியாத
சிந்தை நோய்,Sinthai noy - மனோவியாதியை
என்னை,Ennai - என்னிடத்தில் நின்றும்
தீட்பார்,Theebar - நீக்கவல்லவர்கள்
ஆர்,Aar - யார் சொல்?
3154திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆபத்தில் உதவும் அன்னையரும் தோழியரும் ஆராய்கிறிலர்-அவர்கள் உதவாத போது உதவும் கிருஷ்ணனும் வருகிறிலன் -நான் சப்தாவசேஷை யானேன் என்கிறாள்.) 5
ஆர் என்னை ஆராய்வார்? அன்னையரும் தோழியரும்
நீர் என்னே என்னாதே நீளிரவும் துஞ்சுவரால்
கார் அன்ன மேனி நம் கண்ணனும் வாரானால்
பேர் என்னை மாயாதால் வல் வினையேன் பின் நின்றே.–5-4-5
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரும்
தோழியரும்,Thozhiyarum - தோழிமாரும்
நீர் என்னே என்னாதே,Neer enne ennaadhe - ‘இப்படியும் ஒரு நீர்மையுண்டாவதே!’ என்று என் திறத்தில் இரங்காமல்
நீள் இரவும்,Neel iravum - நீண்ட இராமுழுவதும்
துஞ்சவர்,Thunjavar - உறங்காநிற்பர்கள்;
ஆல்,Aal - அந்தோ!;
கார் அன்ன,Kaar anna - மேகத்தையொத்த
மேனி,Meni - திருமேனியையுடைய
நம் கண்ணனும்,Nam kannanum - நமது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வந்து முகம்காட்டுகின்றிலன்;
வல்வினை யென் பின் நின்று,Valvinai yen pin nindru - பெரும்பாவியான நான் முடிந்த பின்பும் நின்று கொண்டு
பேர்,Per - என் பேர்
என்னை மாயாது,Ennai maayadhu - என்னை முடிய வொட்டுகிறதில்லை
என்னை ஆராய்வார் ஆர்,Ennai araayvaar aar - என்னைப் பற்றி சிந்திப்பார் ஆருமில்லையே!
3155திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –விரஹ வியசனம் செல்லா நிற்க ராத்திரியுமாய் ரக்ஷகனான எம்பெருமானும் வாராது ஒழிந்தால் முடிய பெறாது இருக்கிற என்னை ரஷிப்பார் ஆர் -என்கிறாள்) 6
பின் நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிதடுமால்
முன் நின்று இரா ஊழி கண் புதைய மூடிற்றால்
மன் நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இந் நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ் விடத்தே?–5-4-6
பின் நின்ற,Pin nindra - பிடரிபீடித்துள்ளுவதற்காகப் பின் தொடர்ந்து நின்ற
காதல் நோய்,Kaadhal noy - ப்ரேம விரோதியானது
நெஞ்சம்,Nenjam - (தன்குப்பிறப்பிடமான நெஞ்சை)
பெரிது,Peridhu - மிகவும்
அடும்,Adum - அழிக்கின்றது
ஆல்,Aal - அந்தோ
இரா ஊழி,Iraa uuzhi - இரவாகிய கல்பமானது
முன் நின்று,Mun nindru - முன்னேயிருந்து
கண் புதைய,Kan pudhaiya - கண்தெரியாதபடி
முடிந்து,Mudindhu - மறைந்தது
ஆல்,Aal - அந்தோ;
மண் நின்ற சக்கரத்து,Man nindra chakkarathu - எப்போதும் கை நழுவாது நின்ற திருவாழியாழ்வானையுடைய
எம் மாயவனும்,Em maayavanum - எம்பிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
ஆல்,Aal - ஆதலால்
நின்ற நீள் இ ஆவி,Nindra neel i aavi - முடியாதே நின்று நீள்கின்ற இவ்வுயிரை
இவ்விடத்து,Ivvidathu - இந்த நிலைமையிலே
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பார்யார்?
3156திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இப் பேரிருளிலே என்செய்வேனென்று. உறங்காத தெய்வங்களைக் குறித்து முறையிடுகின்றாள்.) 7
காப்பார் ஆர் இவ்விடத்து? கங்கிருளின் நுண் துளியாய்ச்
சேட்பால தூழியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்த்
தூப்பால வெண் சங்கு சக்கரத்தன் தோன்றானால்
தீப்பால வல்வினையேன் தெய்வங்காள்! என் செய்கேனோ?–5-4-7
இவ்விடத்து,Ivvidathu - இந்நிலையில்
காப்பார் ஆர்,Kaappar aar - ரக்ஷிப்பாரார்?
சுங்கு இருளின்,Sungu irulin - நன்றாக சொரிந்த இருளையுடையதாயும்
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிதான பணித்துளியையுடையதாயும்
சேண் பாலது,Sen paaladhu - மிக நீண்டிருப்பதான
ஊழி ஆய்,Uuzhi aay - சல்பமாய்க்கொண்டு
செல்கின்ற,Selginra - செல்லாநிற்கிற
கங்குல் வாய்,Kangul vaay - ராத்திரியிடத்து
தூ பால,Thoo paal - அழுக்கற்ற ஸ்வபாவத்தையுடையதாய்
வெண்,Ven - வெளுத்ததான
சங்கு,Sangu - சங்கையும்
சக்கரத்தன்,Chakkarathan - சக்கரத்தையுமுடையனானவன்
தோன்றான்,Thonaan - தோன்றிக்காட்சி தருகின்றவன்
தெய்வத்தாள்,Deyvathaal - தேவதைகளே!
நி பால கல் வினையேன்,Ni paal kal vinaiyene - மிகக் கொடியபாவங்களை யுடையேனான நான்
என் செய்வேன்?,En seyven - என்ன பண்ணுவேன்?
3157திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (தென்றலோ நலிகின்றது. கண்ணனோ வருகின்றிலன் , என் செய்வேனென்று மீண்டும் தெய்வங்களையே நோக்கி முறையிடுகின்றாள்.) 8
தெய்வங்காள் என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய் வந்து நின்று எனதாவி மெலிவிக்கும்
கை வந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தை வந்த தண் தென்றல் வெம் சுடரில் தான் அடுமே.–5-4-8
தெய்வங்காள்,Deyvangal - தெய்வங்களே!
ஓர் இரவு,Or iravu - ஒரு இராப்பொழுதானது
ஏழ் ஊழி ஆய்,Ezh uuzhi aay - ஏழு சல்பசாலமாய்க்கொண்டு
மெய்,Mei - மெய்யே
வந்து நின்று,Vandhu nindru - முன்னே வந்து நின்று
என்ற ஆவி,Endra aavi - என்னுடைய உயிரை
மெலிவிக்கும்,Melivikkum - இளைக்கப்பண்ணா நின்றது;
கை வந்த சக்கரத்து,Kai vandha chakkarathu - கையிலே ஸஜ்ஜனாயிருக்கிற் திருவாழி யாழ்களையுடைய
என் கண்ணனும்,En kannanum - எனது கண்ணபிரானும்
வாரான்,Vaaraan - வருகின்றிலன்
தைவந்த,Thaivandha - தடவினால் போலிருக்கின்ற
தண் தென்றல்,Than thendral - குளிர்ந்த தென்றலானது
வெஞ்சுடரில் அடும்,Vensudaril adum - வெள்ளிய நெருப்பிற் காட்டிலும் அதிகமாகச் சுடாநின்றது.
3158திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (இரவோ மிகவும் நலியா நின்றது; ஆதித்தியனும் ஆவிர்ப்பளிக்கின்றிலன்; எம்பெருமானும் வந்து தோன்றுகின்றிலன்; நான் நின்று நோவுபடுமித்தனை போக்கி என் பாதையைப் போக்குவார் ஆருமில்லையே யென்கிறாள்.) 9
வெஞ்சுடரில் தானடுமால் வீங்கிருளின் நுண் துளியாய்
அஞ்சுடர வெய்யோன் அணி நெடுந்தேர் தோன்றாதால்
செஞ்சுடர்த் தாமரைக் கண் செல்வனும் வாரானால்
நெஞ்சிடர் தீர்ப்பாரினி யார்? நின்று ருகுகின்றேனே.–5-4-9
வீங்கி இருளின்,Veengi irulin - மிகச் செறிந்த இருளையுடைத்தாய்
நுண் துளி அய்,Nunn thuli ay - நுண்ணிய பனித்துளியை யுடையதாய்க் கொண்டு
தான்,Thaan - இராப்பொழுதானது
வெம் சுடரில்,Vem sudaril - வெவ்விய நெருப்பிற் காட்டில்
சுடும்,Sudum - சுடர்கின்றது
ஆல்,Aal - அந்தோ! (இந்த நிலைமையில்)
அம் சுடா,Am sudaa - அழகிய ஒளியையுடையனான
வெய்யோன்,Veyyon - ஸூரியனுடைய
அணி நெடு தேர்,Ani netu ther - அழகிய பெரிய தேரும்
தோன்றாது,Thonaadhu - தென்படவில்லை
செம் சுடர் தாமரை கண் செல்லனும்,Sem sudar thaamarai kan chellanum - சிவந்த காந்தியையுடைய தாமரை போன்ற திருக்கண்களையும் ஸ்ரீமானும்
வாரான்,Vaaraan - வந்து தோன்றவில்லை
ஆல்,Aal - ஆதலால்
நின்று உருகுகின்றேன்,Nindru uruguginraen - நிரந்தரமாக உருகாநின்றேன்.
இனி,Ini - இந்நிலைமையில்
செஞ்சு இடர்,Senju idar - (எனது) மனத்துயரை
தீர்ப்பார் ஆர்,Theerpaar aar - போக்குவாரா?
3159திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இந்த ராத்திரியில் என்னுடைய வியசனத்தை கண்டு வைத்தும் அவன் திறமாக ஒரு வார்த்தை சொல்லாதே இந்த லோகம் உறங்குவதே -என்கிறாள்.) 10
நின்று ருகுகின்றேனே போல நெடு வானம்
சென்றுருகி நுண் துளியாய்ச் செல்கின்ற கங்குல் வாய்
அன்றொரு கால் வையம் அளந்த பிரான் வாரான் என்று
ஒன்றொரு காற் சொல்லாது உலகோ உறங்குமே.–5-4-10
நின்று உருகுகின்றேன் போல,Nindru uruguginraen pola - நிரந்தரமாக உருகிக் கிடக்கிற என்னைப்போல
நெடுவானம்,Netuvaanam - பரந்த ஆகாசமானது
உருகி சென்று,Urugi sendru - உருகிப்போய் (அதனால்)
நுண் துளி ஆய்,Nunn thuli aay - நுண்ணிய பனித்துளியாய்
செல்கின்ற,Selginra - நடந்து வருகின்ற
கல்குல் வாய்,Kalgul vaay - இராப்பொழுதிலே
அன்று ஒருகால்,Andru orukaal - முன்பொரு காலத்திலே
வையம்,Vaiyam - உலகத்தை
அளந்த,Alandhu - அளந்து ஆக்கிரமித்துக் கொண்ட
பிரான்,Piran - எம்பிரான்
வாரான் என்று,Vaaraan endru - வரமாட்டானென்றாகிலும்
ஒன்று,Ondru - ஒரு வார்த்தையை
ஒருநாள் சொல்லாது,Orunaal sollaadhu - ஒரு தரமேனும் சொல்லாமல்
உலகு,Ulaku - லோகமானது
உறங்கும் ஓ,UrangumO - உறங்குகின்றதே! ஐயோ!
3160திருவாய்மொழி || (5-4–ஊரெல்லாம் துஞ்சி) (தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நிகமத்தில் இப்பாசுரம் கேட்டார் இவர் தசையை அனுசந்தித்தார் பிழையார் என்கிறார் -பரமபத சித்தி சொல்லிற்று -முடிந்தால் புகுமிடம் அதுவாகையாலே சொன்னது அத்தனை.) 11
உறங்குவான் போல் யோகு செய்த பெருமானைச்
சிறந்த பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறங் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தால்
இறந்து போய் வைகுந்தம் சேராவாறு எங்ஙனேயோ?–5-4-11
உறங்குபவன்போல்,Urangubavan pol - நித்திரை செய்பவன்போல்
யோகு செய்து,Yogu seidhu - ரக்ஷனோபாய சிந்தை பண்ணிக் கொண்டிருக்கிற
பெருமானை,Perumanaai - எம்பெருமான் விஷயமாக
சிறந்த தொழில் சூழ் குருகூர் சடகோபன்,Sirandha thozhil sool kurugoor sadagopan - அழகிய சோலைகளாலே சூழப்பட்ட திருநகரிலிருக்குந் தலைவரான ஆழ்வார்
சொல்,Sol - அருளிச் செய்த
நிதம் கிளர்ந்த,Nitham kilarndha - பண் விஞ்சின
அந்தாதி,Anthaathi - அந்தாதிக் கொடையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களும்
இப்பத்தால்,Ippathaal - இப்பதிகத்தினால்
இறந்துபோய்,Iranthupoy - (அவரவர்கள்) சரீர வியோகம் பெற்றபின்பு
வைகுந்தம்,Vaikundham - பரமபதத்தில்
சேரா ஆறு,Seraa aaru - புகாதொழிவது
எங்களை,Engalai - எவ்வண்ணம்? (புகவே புகுவர்களென்கை.)
3161திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (தாய்மார்களே! என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயனென்? வேணுமாகில் திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்! ‘எதற்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்?” என்று நம்பியைச் சீறில் சிறுமந்தனையொழிய என்னைச் சீறுவது முறைமையன்று. நான் ஏதேனும் ஒரு கா புருஷனை கண்டு மோஹித்துப் படுகிறோனோ? அழகுதானே உருக்கொண்ட திருகுருங்குடி நம்பியையன்றோ நான் ஸேவிக்கப் பெற்றது. அப்படி ஸேவிக்கப்பெற்ற க்ஷணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றாநிற்க, நான் அவற்றை வாய் பெவருவாதே பின்னை எதை வாய்பெருவுவேன்? ஆதலால் என்னை நீங்கள் முனிவது முறைமையன்று என்றாளாயிற்று.) 1
எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1
அன்னைமீர்காள்,Annaimeerkaal - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை முனிவது,Ennai munivathu - என்னை சீறுவது
திருக்குறும் குடி நம்பியை,Thirukkurum kudi nambiyai - திருக்குறுங்குடிப் பெருமானை
நான் கண்ட பின்,Naan kanda pin - நான் ஸேவிக்கப் பெற்ற பின்பு
என் நெஞ்சம்,En nenjam - என் மனமானது
சங்கினோடும் நேமினோடும்,Sanginodum neminodum - சங்கு சங்கரங்களோடும்
எங்ஙனேயோ,Enganeyo - எப்படிப் பொருந்தும்?
எங்கள்,Engal - நாம் அநுபவிப்பதற்குரிய
கோலம்,Kolam - அழகிய
தாமரை கண்களோடும்,Thaamarai kangalodum - தாமரைபோன்ற திருக்கண்களோடும்
செம் கனி வாய் ஒன்றினோடும்,Sem kani vaai ondrinodum - சிவந்த கனிபோன்ற ஒப்பற்றதான அதரத்தோடும்
செல்கின்றது,Selginrathu - நடவாநின்றது. (என்னெஞ்சில் இவையே திகழ்கின்றனவென்றபடி.)
3162திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி – அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள்) 2
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2
அன்னையீர் கான்,Annaimeer kaan - தாய்மார்களே!
என்னை முனியாதே,Ennai muniyathe - என்னை வீணாகச் சீறாமல்
என் நெஞ்சினால்,En nenjinaal - எனது நெஞ்சைக் கொண்டு
நோக்கி காணீர்,Nokki kaaneer - அநுபவித்துப் பாருங்கோள்;
தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;,Then nel solai thirukkudungudi nambiyai naan kandapin; - தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;
மின்னும் நூலும்,Minnum noolum - பளபளவென்று ஜ்வலிக்கிற பூணூலும்.
குண்டலமும்,Kundalamum - மகர குண்டலமும்
மார்பில்,Maarbil - திருமார்பில் விளங்குகின்ற
திருமறுவும்,Thirumaruvum - ஸ்ரீவத்ஸமும்
மன்னு பூணும்,Mannu poonum - எப்போது கழற்றாத ஆபரணங்களும்
நான்கு தோளும்,Naangu tholum - சதுர்ப்புஜமும்
எங்கும்,Engum - நான் போயிடமெங்கும்
வந்து நின்றிடும்,Vandhu nindridum - வந்து நிற்கின்றன.
3163திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி - நம்பியுடைய திவ்யாயுத வர்க்கம் உள்ளும் புறமும் ஓக்கத் தோற்றா நின்றது என்கிறாள்.) 3
நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி)
நின்றிடும் என்று,Nindridum endru - இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும்
திசைக்கும் என்று,Thisaikkum endru - இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும்
நையும் என்று,Naiyum endru - இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும்
முனிதிர்,Munithir - வெறுத்துரைக்கின்றீர்கள்;
குன்றம் மாடம்,Kundram maadam - குன்றம்போன்ற மாடங்கணிந்த
திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Thirukkudungudi nambiyai naan kanda pin-; - திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
வென்றி வில்லும்,Vendri villum - ஜயசீலமான சார்ங்கமும்
தண்டும்,Thandum - லௌமோதகியென்கிற கதையும்
வாளும்,Vaalum - நந்தாவாளும்
சக்கரமும் சங்கும்,Chakkaramum sangum - திருவாழி திருச்சங்குகளும்
நின்று,Nindru - நிரந்தரமாக நின்று
கண்ணுள் தோன்றி,Kannul thondri - என் கண்ணுள்ளே காணப்பட்டு
நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை;
நெஞ்சுள்ளும்,Nenjullum - நெஞ்சினுள்ளும்
நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை.
3164திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி - திருத் தோள் மாலை திருப் பரி வட்டம் முதலானவை எல்லாம் என் பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன -என்கிறாள்) 4
நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4
கண்ண நீர்சன்,Kanna neersan - (இவனது) கண்ணீர்த் துளிகளானவை
நீங்க இல்லா என்று,Neenga illaa endru - துடைத்தாலும் நிற்கின்றனவில்லை என்று சொல்லி
தண்,Than - குளிர்ந்த
மாலை,Maalai - மாலைவடிவமான
தண் துழாயும்,Than thuzhaayum - திருத்துழாயும்
பொன் முடியும்,Pon mudiyum - திருவபிஷேகமும்
வடிவும்,Vadivum - திருமேனியும்
அன்னையரும் முனிதிர்,Annaiyarum munithir - தாய்மார்களான நீங்களும் சீறுகின்றீர்கள்.
பாங்கு தோன்றும்,Paangu thondrum - திருவரைக்குப் பொருத்தமாகக் காணப்படுகிறது
பட்டும்,Pattum - பட்டுபீதாம்பரமும்
நாணும்,Naanum - திரு நாணும்
தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;,Thenkol solai thirukkudungudi nambiyai naan kanda pin; - தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்;
பூ,Poo - அழகிய
3165திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருக்குறுங்குடி நம்பிக்கு கீர்த்தி தகுதியானால் போலே -ஒன்றுக்கு ஓன்று தகுதியாய் இருக்கிற திருப் பவளம் முதலான திரு முகத்தில் அழகுகள் ஆனவை என் உயிர் நிலையில் நலியா நின்றன -என்கிறாள்.) 5
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5
பக்கம் நோக்கி நிற்கும் என்ற,Pakkam nokki nirkum endra - ‘(இவள்) அவன் எந்த பக்கமாக வருகின்றானென்று எதிர்பார்த்திருக்கிறானென்றும்,
நையும் என்று,Naiyum endru - (வாக்காணாமையாலே) நைகின்றான் என்றும் சொல்லி
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும்
நீண்ட புருவங்களும்,Neenda puruvangalum - நீண்டிருக்கின்ற புருவங்களும்
தக்க,Thakka - தகுதியான
தாமரைக்கண்ணும்,Thaamaraikannum - தாமரை போன்ற திருக்கண்களும்
முனிதிர்,Munithir - முனிந்து பேசுகின்றீர்கள்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Thakka keerthith thirukkudungudi nambiyai naan kandapin-; - தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
தொக்க,Thokka - ஒன்றாகத்திரண்ட
சோதி,Sothi - சோதியையுடைய
தொண்டை வாயும்,Thondai vaayum - கொல்லைக்கனிபோன்ற அதரமும்
பாவியேன்,Paaviyaan - பாவியாகிய என்னுடைய
ஆவியின் மேலான,Aaviin melaana - உயிர்நிலையிலே நின்று கலியா நின்றன
3166திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திரு முக சோபையோடே கூடின ரூப தேஜஸ் வைலக்ஷண்யம் என் நெஞ்சிலே பூர்ணமாயிற்று என்கிறாள் .) 6
மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6
இவன்,Ivan - இப்பெண்பிள்ளை
நம் குலக்கு,Nam kulakku - நமது ப்ரபர்ரஸத்தானத்திற்கு
மேலும்,Melum - காலமுள்ளதனையும்
வன் பழி என்று,Van pazi endru - பெருத்த பழியாயிருப்பவன்’ என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காணகொடான்,Kaanakodaan - நான் நம்பியை ஸேவிக்கவொண்ணாதபடி நடை நின்றாள்.
சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Solai soozh than thirukkudungudi nambiyai naan kanda pin-; - சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
கோலம்,Kolam - அழகியதாய்
நின்,Nin - நீண்டதான
கொடி மூக்கும்,Kodi mookkum - கற்பகக் கொடிபோன்ற திருமூக்கும்
தாமரை கண்ணும்,Thaamaraikannum - தாமரைபோன்ற திருக்கண்களும்
கனி வரவும்,Kani varavum - பழுத்த பழம் போன்ற அதரமும்
நீலம் மேனியும்,Neelam maaniyum - நீல நிறத்ததான திருமேனியும்
நான்கு தோளும்,Naangu tholum - நான்கு திருத்தோள்களும்
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சிலே
நிறைந்தன,Nirainthana - நிரம்பியிருக்கின்றன.
3167திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நம்பியுடைய திருமேனி அழகு வெள்ளம் என்னுடைய நெஞ்சில் வேர் விழுந்தது என்கிறாள்.) 7
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7
இவள் என் குடிக்கு,Ival en kudikku - ‘இப்பெண்பிள்ளை நம்முடைய ப்ரபந்த ஸந்தானத்திற்கு
சிதைந்த நல்வழி என்று,Sithaintha nalvazhi endru - நிலைத்துநிற்கக் கூடிய கொடிய பழியாயிருப்பவள் என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Sirandha keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
நிறைந்த,Niraindha - பரிபூர்ணமான
சோதி வெள்ளம் சூழ்ந்த,Sothi vellam soozhndha - தேஜஸ்ஸமூஹத்தாலே சூழப்பட்டு
நீண்ட,Neenda - உத்துங்கமான
பொன்மேனியோடும்,Pon maaniyodum - திருமேணியோடுகூட
என் உள்ளே,En ullae - எனது நெஞ்சுக்குள்ளே
நிறைந்து நின்று ஒழிந்தான்,Niraindhu nindru ozhindhaan - வியாபித்து நின்று விட்டான்;
நேமி,Nemi - திருவாழியும்
அம் கை,Am kai - அழகிய திருக்கையிலே
உனது,Unadhu - உள்ளதாயிருக்கின்றது.
3168திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகிய குழல் தாழ்ந்த தோள்களோடே கூடின மற்றும் உண்டான திவ்ய அவயவங்களிலே அழகுகள் என் முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் ) 8
கை யுள் நன் முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8
நல் முகம் கையுள் வைக்கும் என்று,Nal mugam kaiyul vaikkum endru - (இப்பெண் பிள்ளையானவள்) அழகிய முகத்தைக் கையிலே இட்டு வைக்கின்றாள்’ என்றும்
நையும் என்று,Naiyum endru - நைகின்றாள் என்றும் சொல்லி.
அல்குலும்,Algulum - கடிப்ரதேசமும்
சிறு இடையும்,Siru idaiyum - சிறுசிறு இடையும்
வடிவும்,Vadivum - திருமேனியும்
மொய்ய நின் சூழல்தாழ்ந்த தோள்களும்,Moyya nin soozhal thaazhndha tholgulum - செறிந்து நீண்ட நேச பாசங்கள் தாழ்ந்துவரப்பெற்ற திருத்தோள்களும்
அன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும்
முனிதிர் கை கொள்,Munithir kai kol - சீறிப் பொடிகின்றீர்கள்;
மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mai kol maadat thirukkudungudi nambiyai naan kanda pin-; - மை கோள் மாடத் திருக்குறங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
செய்ய தாமரை கண்ணும்,Seyya thaamarai kannum - செந்தாமரை போன்ற திருக்கண்களும்
பாலியேன் முன் நிற்கும்,Paaliyaen mun nirkum - பாவியான என்னுடைய கண்முன்னே புலப்படா நின்றன.
3169திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகு எல்லாவற்றோடும் கூட நம்பி வந்து என் நெஞ்சிலே புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் நெஞ்சை விட்டு போகிறிலன் என்கிறாள்.) 9
முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9
முன் நின்றாய் என்று,Mun nindraai endru - (சிறுக்கியான நீ) பலர் காணவந்து நிற்கின்றாய்? என்று என்னை நோக்கிச் சொல்லி
தோழியர்களும் அன்னையரும்,Thoziyaragalum annaiyarum - தோழியர்களும் தாய்மார்களுமான நீங்கள்
முனிதிர்,Munithir - கண்டிக்கின்றீர்கள்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mannu maada thirukkudungudi nambiyai naan kanda pin-; - மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
சென்னி,Senni - திருமுடியிலே
நீள்,Neel - நீண்டு தோன்றுகிற
முடி ஆதி ஆய,Mudi aadhi aaya - திருவபிக்ஷேகம் முதலாகவுள்ள
உவம்பு இல்,Uvampu il - எண்ணிறந்த
அணி கலத்தன்,Ani kalathaan - சேர்த்தியழகு போருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான்
கன்னல்பால் அமுது ஆகி வந்து,Kannalpaal amuthu aagi vandhu - கண்ணனும் பாலும் அமுதமும் போலே பரம யோக்யனாய்வந்து
என் நெஞ்சம் சுழியான்,En nenjam suzhiyaan - எனது நெஞ்சை விட்டுப் பேர்கின்றிலன்
3170திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்.) 10
கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10
இவள்,Ival - இப்பெண்பிள்ளை
கழிய மிக்கது ஓர் காதலன் என்று,Kazhiya mikkaadhu or kaadhalan endru - மிகவும் அதிசயித்த விலஷணமான காதலையுடையவள் என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை
ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Ezh il keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
தேவர் குழாங்கள்,Devar kuzhaangal - நித்ய ஸூரிகளின் திரள்கள்
குழுவி,Kuzhuvu - நெருங்கி
கை தொழ,Kai thozha - ஸேவிக்கும்படி
சோதிவெள்ளத்தின் உள்ளே,Sothi vellathin ullae - தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே
எழுவது,Ezhuvadhu - எழுகின்ற
ஓர் உரு,Or uru - விலக்ஷணமான விக்ரஹமானது
என் நெஞ்சுள் எழும்,En nenjul ezhum - எனது நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கின்றது; (அது)
ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்டவர்கட்கும்
அறிவு அரிது,Arivu aridhu - அறியமுடியாததேயாகும்.
3171திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழியை அப்யசித்தவர்களுக்கு பகவச் சேஷத்வம் ஆகிற ஸ்வரூப லாபம் பலமாக அருளிச் செய்கிறார்.) 11
அறி வரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன் மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக் குறுங்குடி யதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே.–5-5-11
அறிவு துரிய பிரானை,Arivu thuriya piranai - ஒருவர்க்குமறிய வொண்ணாக ஸ்வாமியாயும்
ஆழி அம் கை யணையே,Aazhi am kai yanaiye - திருவாழியை அழகிய திருக்கையிலே உடையவனாயுமிருக்கிற எம்பெருமானையே
அலற்றி,Alattri - வாய்வெருவி
ஈறிய,Eeriya - பரிமளம் மிக்க
நல் மலர் நாடி,Nal malar naadi - நல்ல பூக்களை நாடுபவரான
நன் குருகூர் சடகோபன் சொன்ன-;,Nan kurukoor Sadagopan sonna-; - நன் குருகூர் சடகோபன் சொன்ன-;
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரம் பாசுரங்களுள்
திருக் குறுங்குடி அதன் மேல்,Thiru kudungudi adhan mel - திருக்குறுங்குடி விஷயமாகப்பேசினதாய்
குறி கொள்,Kuri kol - எம்பெருமானுடைய திவ்யாவயவ திவ்யாயுத திவ்யாபரணலாஞ்சனம்களை யுடையதான
இவைபத்தும்,Ivaipaththum - இத்திருவாய்மொழியை
அறிய,Ariya - பொருளும் தெரியும்படி
கற்று,Katru - ஓதி
வல்லார்,Vallar - தேறினவர்கள்
ஆழ் கடல்,Azh kadal - ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள்
வைட்டணவர்,Vaittanavar - சிறந்த ஸ்ரீஐவஷ்ணவர்களாகக் கொண்டாடப்படுவர்கள்.
3172திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என் மகள் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் எல்லாம் பண்ணினேன் என்னா நின்றாள்இது எம்பெருமான் தன் பக்கல் ஆவேசிக்க சொல்லுகிறாப் போலே இருந்தது என்கிறாள்.) 1
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1
கடல் ஞாலத்து என் மகள்,Kadal Gnalaathu en magal - கடல்சூழ்ந்த வுலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை.
கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,Kadal Gnalam seydaenum yaane ennum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்;
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னம்,Kadal Gnalam aavenum yaane ennam - (படைக்கப்பட்ட) கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும்! நானேயென்கிறாள்;
கடல் ஞானம் கொண்டேனும் யானே என்றும்,Kadal gnanam kondenum yaane endrum - (மஹாபலியிடத்தில்) கடல் ஞானத்தை இரந்து பெற்றுக் கொண்டவளும் நானே யென்கிறாள்.
கடல் ஞானம் கீண்டேனும் என்னும்,Kadal gnanam keendenum ennum - (மஹாவரஹமாகிக்) கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே யென்கிறாள்;
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,Kadal Gnalam undaenum yaane ennum - (பிரளயத்தில்) கடல் ஞானத்தை உள்ளே வைதபுது நோக்கினவரும் நானே யென்கிறாள்.
கற்கின்ற இவை,Karkindra ivai - (இப்பெண்பிள்ளை) இங்ஙனம் பேசுகிற இங்ஙனம் பேசுகிற இப்பேச்சுக்கள்
கடல் ஞாலத்து நான் வந்து ஏற கொலோ,Kadal Gnalaathu naan vandhu yeRa kolo - கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குத் தலைவனான பெருமான் வந்து ஆவேசித்ததனாலே!
கடல் ஞானத்தீர்க்கு,Kadal Gnanatheerkku - இவ்வுலகிலுள்ள உங்களுக்கு
என் சொல்லுகேன்,En sollugeen - என்னவென்று சொல்லுவேன்?
3173திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ வித்யா வேதனமும் வித்யா ப்ரவர்த்திகாதிகளும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 2
கற்குங் கல்விக்கும் எல்லை இலனே என்னும்
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வி யீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என் மகள் காண்கின்றவே.–5-6-2
கற்கும் கல்வி என் மகள்,Karkum kalvi en magal - இன்று வார்த்தை கற்கும் பருவமாயிருக்கின்ற எனது பெண்பிள்ளை;
சற்கும் கல்விக்கு எல்லை இவன் என்னும்,Sarkum kalvikku ellai ivan ennum - நான் எல்லை யில்லாதபடி கல்விகள் கற்றிருக்கின்றேனென்கிறாள்;
கற்கும் கல்வி ஆவேனும் யானே என்றும்,Karkum kalvi aavenum yaane endrum - கற்கப்படுகிற கல்விகளெல்லாம் நானேயென்கிறாள்;
கற்கும் கல்வி சாரமும் நானே என்னும்,Karkum kalvi saaramum naane ennum - கற்கும் கல்விகளின் ஸாரமாகிய திருமந்திரம் முதலியனவும் நானே யென்கிறாள்.
காண்கின்ற இவை,Kaanginra ivai - (இங்ஙனமாக இப்பெண் பிள்ளையிடத்துக்) காணப்படுகின்ற இந்த வாசகங்களானவை
கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்,Karkum kalvi seivenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை நானே உண்டாக்கினேனென்கிறாள்
கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும்,Karkum kalvi theerpenum yaane ennum - கற்கப்படுகிற கல்விகளை (ஸம்ஹார காலத்தில்) முடித்து நானே என்னெஞ்சிலிட்டு வைத்துக் கொண்டிருக்கிறனென்கிறாள்;
கற்கும் கல்வி நாதன் வந்து ஏறகொலோ,Karkum kalvi naadhan vandhu eerakolo - கற்கும் கல்விகளால் பிரதிபாதிக்கப்படுகிற எம்பெருமான் வந்து? ஆவேசித்ததனாலோ? (அறியேன்.
கற்கும் கல்வியிர்க்கு,Karkum kalvirkku - இனிக் கற்க வேண்டும் கல்விகளையுடையிரான உங்களுக்கு
என் சொல்கேன்,En solgean - என்னென்று சொல்லுவேன்?
3174திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அபரிச்சேதயமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 3
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்?
காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3
காண்கின்ற என் காரிகை,Kaanginra en kaarigai - பகவத் விஷயத்தை உள்ளபடி கண்டு பேசுகிற என் மகள்
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,Kaanginra nilam ellaam yaane ennum - காணப்படுகிற பூமியெல்லாம் நானேயென்கிறாள்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,Kaanginra visumbu ellaam yaane ennum - காணப்படுகிற ஆகாசமெல்லாம் யானே யென்கிறாள்;
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,Kaanginra vem thee ellaam yaane ennum - காணப்படுகின்ற தேஜ: புஞ்சமும் யானே யென்கிறாள்;
காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்,Kaanginra i kaatru ellaam yaane ennum - காணப்படுகின்ற வாயுக்களும் யானே யென்கிறாள்;
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,Kaanginra kadal ellaam yaane ennum - காணப்படுகின்ற ஜலதத்துவமெல்லாம் யானே யென்கிறாள்; (இப்படி இவள் சொல்லுவதானது)
காண்கின்ற கடல்வண்ணன் ஏறகொலோ,Kaanginra kadalvannan eerakolo - அழகிய கடல்போன்ற வடிவையுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
செய்கின்ற,Seikinra - (இப்பெண் பிள்ளை) செய்கிறவைகளை
காண்கின்ற உலகத்தீர்க்கு,Kaanginra ulagaththirkku - இவ்வுலகமல்லது மற்றொன்று காணதவுங்களுக்கு
என் சொல்லுகேன்,En sollugean - என்னவென்று எடுத்துக் கூறுவேன்?
3175திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –க்ரியாதிகள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் -என்கிறாள்.) 4
செய்கின்ற கிதி எல்லாம் யானே என்னும்
செய்வான் நின்றனகளும் யானே என்னும்
செய்து முன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக் கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
செய்ய கனி வாய் இள மான் திறத்தே.–5-6-4
செய்கின்ற திதி எல்லாம் யானே என்னும்,Seikinra thithi ellaam yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) நிகழ்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்வான் நின்றனகளும் யானே என்னும்,Seivaan nindranagalum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) எதிர்காலச் செய்கைகளெல்லாம் யானே யென்கிறாள்;
செய்து முன் இறந்தவும் வானே என்னும்,Seidhu mun iranthavum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) இறந்தகாலச் செய்கைகளெல்லாமும் யானே யென்கிறாள்;
செய்கை பயன் உண்பேனும் யானே என்னும்,Seikai payan unbenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளின் பலன் களையனுபவிப்பதும் யானே யென்கிறாள்;
செய்வார்களை செய்வேனும் யானே என்னும்,Seivarkalai seivenum yaane ennum - (இப்பெண்பிள்ளையானவள்) செய்கைகளைச் செய்கின்ற கர்த்தாக்களைப் படைப்பதும் யானே யெனன்கிறாள்; (இவள் இப்படி யெல்லாம் சொல்லுவது)
செய்ய கமலம் கண்ணன் ஏற கொலோ,Seiya kamalam kannan eerakolo - செந்தாமரைக் கண்ணனான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
செய்ய கனி வாய் இன மான் திறந்து,Seiya kani vaai in maan thirandhu - சிவந்தாணிபோன்ற அதரத்தையுடையவளாய் இளமான் போன்றவளான இவள் விஷயத்தில்
செய்ய உலகத்தீர்க்கு,Seiya ulagaththirkku - (இப்பெண்பிள்ளையானவள்) கபடமறியாத உங்களுக்கு இவை என் சொல்லுகேன்?
3176திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் ரக்ஷண பிரமுகரான -ஆதி -சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணுவேன் நான் என்னா நின்றாள் என்கிறாள்.) 5
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்
திறம்பாத கடல் வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
திறம்பாது என் திருமகள் எய்தினவே.–5-6-5
என் திருமகள்,En thirumagal - என் செல்வமகளான பராங்குசநாயகி.
திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்,Thirampaamal man kaakkinren yaane ennum - நீதி தவறாமல் இந்நிலவுலகத்தை நானே காக்கின்றேனென்கிறார்.
திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும்,Thirampaamal malai eduttenae ennum - சலியாதபடி கோவர்த்தன மலையை நானே யெடுத்தே னென்கிறாள்;
திறம்பாமல் அசுரரை கொன்றேனே என்னும்,Thirampaamal asurarai konrenae ennum - தப்பாதபடி (தேனுகன் முதலிய) அசுரர்களை நானே கொன்றிட்டேனென்கிறாள்;
அன்னு,Annu - அக்காலத்தில்
ஐவரை,Aivarai - பஞ்ச பாண்டவர்களை
திறம் காட்டி காத்தேனே என்னும்,Thiram kaatti kaattenae ennum - உபாயங்கள் காட்டி நானே ரக்ஷித்தேனென்கிறாள்;
திறம்பாமல்,Thirampaamal - அபயாமொன்று மின்றிக்கே
கடல் கடைந்தேனே என்னும்,Kadal kadaindenae ennum - நானே கடல் கடந்தேனெக்கிறாள்; (இப்படி இவள் வொல்வதானது)
திறம்பாத கடல் வண்ணன் எறகோலொ,Thirampaadha kadal vannan erakolo - அடியாரை நோக்குவதில் சலியாதவனும் கடல்கண்ணனுமான எம்பெருமான் ஆவேசித்ததனாலோ?
திறம்பாத உவகத்தீர்க்கு,Thirampaadha uvagaththirkku - இச்செய்தியை அவசியம் அறிந்தேதீர வேணுமென்று ஸ்திரமாயிருக்கிற உலகத்தீர்களான உங்களுக்கு (இப்பெண் பிள்ளை)
திறம்பாது எய்தின,Thirampaadhu eydhina - ஹிதஞ்சொல்லி மீட்கவொண்ணாதபடி அடைந்திருக்கிற தன்மைகளைப் பற்றி
என் சொல்லுவேன்,En solluven - என்ன கென்று சொல்லுவேன்?
3177திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கோவர்த்தன உத்தரணம் முதலான கிருஷ்ண சேஷ்டிதங்கள் எல்லாம் பண்ணினேன் நான் என்று இவள் சொல்லா நின்றாள் என்கிறாள்.) 6
இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இன ஆன் கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்
இன ஆயர் தலைவனும் யானே என்னும்
இனத் தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இன வேற் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன்?
இன வேற் கண்ணி என்மகள் உற்றனவே.–5-6-6
இனம் வேல் எண்ணி என் மகள்,Inam vel enni en magal - வேற்படையை யொத்திருக்கிற கண்ணழகையுடையவளான என் மகள்,
இனம் வேய் மலைஏந்தினேன் யானே என்றும்,Inam vey malai yentinen yaane ennum - திரள் திரளான மூங்கில்களையுடைய கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்தேன் யானே யென்கிறாள்;
இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும்,Inam erugal setrenum yaane ennum - கூட்டமாகவந்த எருதுகளைக் கொன்றேனும் யானே யென்கிறாள்;
இனம் ஆன் கன்று மேய்த்தேனும் யானே என்னும்,Inam aan kanru meithenum yaane ennum - கூட்டங் கூட்டமான கன்றுகளை மேய்த்ததும் நானே யென்கிறாள்;
இனம் ஆரிரை காத்தேனும் யானே என்னும்,Inam aarirai kaathenum yaane ennum - திரளான பசுங் கூட்டங்களை ரக்ஷித்தேனும்நானே யென்கிறாள்.
இனம் ஆயர் தலைவனும் நாயே என்னும்,Inam aayar thalaivanum naaye ennum - இடையர் கூட்டங்களுக்குத் தலைவனான கோபாலகிருஷ்ணனும் நானே யென்கிறான்; (இப்படி இவன் சொல்லுவதானது
இனம் தேவர் தலைவன் வந்து ஏற கொலோ,Inam thevar thalaivan vandhu erakolo - நித்யஸூரிகள் குழங்களுக்குத் தலைவனான ஸர்வேச்வரன் வந்து ஆவேசித்ததனாலோ?
உற்றன இவை,Utrana ivai - இவள் அடைந்த இத்தகையவிகாரங்களை
இனம் வேல் கண் நல்லீர்க்கு,Inam vel kan nallirkku - வேல் போன்ற கண்ணழகையுடையீரான உங்களுக்கு
என் சொல்லுகேள்,En sollugeal - ஏனென்று சொல்லுவேன்?
3178திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் ஆஸ்ரிதர் விஷயத்தில் இருக்கும் இருப்பை தன் படியாக பேசா நின்றாள் -என்கிறாள்.) 7
உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்கு இங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக் கொலோ?
உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.–5-6-7
என்னுடைய பேதை,Ennudaia pethai - என்னுடைய சிறு பெண்பிள்ளை
எனக்கு உற்றார்கள் ஆரும் இல்லை என்னும்,Enakku utrargal aarum illai ennum - எனக்கு உறவினர் ஒருவருமில்லையென்கிறாள்.
இங்கு எனக்கு உற்றார்கள் எல்லாரும் என்னும்,Ingu enakku utrargal ellaaarum ennum - இவ்வுலகில் எனக்கு யாவரும் உறவினர் என்கிறாள்;
உற்றார்களை செய்வேனும் யானே என்னும்,Utrargalai seivenum yaane ennum - (சிலரை) எனக்கு உற்றார்களாம்படி செய்வதும் நானே யென்கிறாள்.
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்,Utrargalai azhipenum yaane ennum - (அற்பபலன்களுக்காகக்) கிட்டுமவர்களை (அந்த அற்பபலன்களைக் கொடுத்து அகற்றுவதும் நானே யென்கிறாள்.
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்,Utrargalukku utrenum yaane ennum - அநந்யப்ரயோஜநர்களாய்க் கிட்டுமவர்களுக்கு எல்லாவுறவு முறையும் நானேயென்கிறாள்;
உற்றார் இலிமாயன் வந்து ஏறக் கொலோ,Utrar ilimaayan vandhu erakolo - (இவள் இப்படிச் சொல்லுவதானது) மதம் முயற்சியால் தன்னைக் கிட்டினாரில்லாத ஆச்சர்ய சக்தியுக்தனான எம்பெருமான் வந்து ஆவேசிதத்னாலோ?
உற்று உரைக்கின்ற,Utru uraikindra - உள்ளூறக் கண்டு சொல்லும் வார்த்தைகளை
உற்றீர்கட்கு,Utrirkadku - உறவினரானவுங்களுக்கு
யான் என் சொல்லி சொல்லுகேன்,Yaan en solli sollugean - நான் என்ன பாசுரத்தையிட்டுச் சொல்லுவேன்?
3179திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் பிரதானராக சாஸ்திரங்களில் சொல்லப் படுகிற சதுர்முகப் பிரமுகரும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 8
உரைக்கின்ற முக்கட் பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசை முகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர் கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறக் கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என் சொல் லுகேன்?
உரைக்கின்ற என் கோமள ஒண் கொடிக்கே.–5-6-8
முக் கண்பிரான் யானே என்னும்,Muk kanpiraan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ஈச்வரனாகச் சொல்லப்படுகிற சிவபிரான் நானே யென்கிறாள்.
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்,Uraikindra dhisaimugan yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான பிரமனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்,Uraikindra amararum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) பேசுகின்ற தேவர்களும் யானே யென்கிறாள்;
உரைக்கின்ற அமரர்கோன் யாயே என்னும்,Uraikindra amararkon yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தனான தேவேந்திரனும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்,Uraikindra munivarum yaane ennum - உரைக்கின்ற (இப்பெண்பிள்ளை) ப்ரஸித்தர்களான நாரதாதிமஹரிஷிகளும் நானே யென்கிறாள்;
உரைக்கின்ற முகில் வண்ணன் ஏறகொலோ,Uraikindra mugil vannan erakolo - (இப்படிச் சொல்லுவதானது) ப்ரஸித்தனான காளமேகவண்ணப் பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு,Uraikindra ulagaththirkku - சொல்லுகின்ற சொல்லென்று கேட்கிற நாட்டாரான உங்களுக்கு,
உரைக்கின்ற என் கோமளம் ஒண் நொடிக்கு,Uraikindra en komalam on nodikku - விலக்ஷணமாகப் பேசுகின்ற எனது அழகிய சிறு பெண்ணைப் பற்றி
உரைக்கின்ற இவை,Uraikindra ivai - இவள்தான் சொல்லுகின்ற இப்பேச்சுக்களை
என் சொல்லுகேண்,En sollugean - என்னவென்று கூறுவேன்?
3180திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி -அநந்தரம் குரூரமான கர்ம பிரகாரங்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னும் என்கிறாள்.) 9
கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன்?
கொடியேன் கொடி என் மகள் கோலங்களே.–5-6-9
கொடிய வினை யாதும் இலன் என்னும்,Kodiya vinai yaadhum ilan ennum - (இப்பெண்பிள்ளை) கொடிய கருமங்களின் பற்று சிறிது முடையேனல்லேன் நான் என்கிறாள்;
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்,Kodiya vinai aavenum yaane ennum - அக்கொடியகருமங்களும் எனது நிக்ரஹங்களும் என்கிறாள்;
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்,Kodiya vinai seivenum yaane ennum - ஆச்ரிதவிரோதிகளுக்குக் கொடியபாவங்களை விளைப்பதும் நானே என்கிறாள்;
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்,Kodiya vinai theerpenum yaane ennum - (அடியார்கட்குக்) கொடிய பாவங்களைத் தீர்த்துக் கொடுப்பதும் நானே யென்கிறாள்;
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்,Kodiyan ilangai settraenae ennum - கொடியவனான இராவணனுடைய இலங்காபுரியைத் தொலைத்த்தும் நானே யென்கிறாள்;
கொடிய புள் உடையவன் ஏற கொலோ,Kodiya pul udaiyavan eerakolo - (இவன் இப்படிச் சொல்லுவது) ஆச்ரித விரோதிகளுக்குக் கொடியவனான பெரிய திருவடியை த்வஜமாகவுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
கொடியேன் கொடி என் மகள் கோலங்கள் இவை,Kodiyaan kodi en magal kolangal ivai - கொடியேனான என்னுடைய கொடி போன்ற இம்மகளின் அழகிய சேஷ்டைகளான இவற்றைப் பற்றி
கொடிய உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்,Kodiya ulagaththirkku en sollugean - சொல்லு சொல்லென்று ஹிம்ஸிக்கிற உங்களுக்கு என்னவென்று சொல்லுவேன்?.
3181திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஸ்வர்க்க நரகாதிகளான சகல பலங்களும் நான் இட்ட வழக்கு என்னும் -என்கிறாள்.) 10
கோலங் கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோல மில் நரகமும் யானே என்னும்
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்
கோலம் கொள் தனி முதல் யானே என்னும்
கோலம் கொள் முகில் வண்ணன் ஏறக் கொலோ?
கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன்?
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கே.–5-6-10
கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும்,Kolam kol suvarkkamum yaane ennum - (என் மகளானவள்) அழகிய ஸ்வர்க்கலோகமும் நானிட்ட வழக்கென்கிறாள்
கோலம் இல் நரகமும்யானே என்னும்,Kolam il naragamum yaane ennum - துக்கமே வடிவெடுத்த நரகமும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் மோக்கமும் யானே என்னும்,Kolam thigazh mokkamum yaane ennum - இன்பமயமான மோஷமும் நானிட்டவழக்கென்கிறாள்;
கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்,Kolam kol uyirkalum yaane ennum - பலபல சரீரங்களைப் பரிக்ரஹிக்கிற ஆத்மாக்களும் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு,Kolam thigazh kodhai en koondhalukku - அழகிய மாலையையுடைய மயிர் முடியையுடைவளான என்மகள் விஷயமாக
கோலம் கொள்தனி முதல் யானே என்னும்,Kolam kol thani mudhal yaane ennum - விசித்திரகாரியங்களைச் செய்யவல்லதான மூலப்ரக்ருதியம் நானிட்ட வழக்கென்கிறாள்;
கோலம் கொள்முகில் வண்ணன் ஏறகொலோ,Kolam kol mugil vannan eerakolo - (இப்படிச் சொல்லுவதானது) அழகிய காள மேகவண்ணப்பெருமான் வந்து ஆவேசித்தனாலோ?
கோலம் கொள் உலகத்திர்க்கு என் சொல்லுகேன்,Kolam kol ulagaththirkku en sollugean - அழகாக வந்து உட்கார்ந்திருக்கின்ற உங்களுக்கு என்ன சொல்லுவேன்?
3182திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (இத் திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
கூந்தல் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
குல ஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ் செல்வத்தராய்த் திருமால்
அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே.–5-6-11
கூந்தல்,Koondhal - விலக்ஷணமான மயிர் முடியையுடையனான
மலர் மங்கைக்கும்,Malar manghaikum - பெரியபிராட்டிக்கும்
மண் மடந்தைக்கும்,Man madanthaikum - பூமிப்பிராட்டிக்கும்
குலம் ஆயர் கொழுந்துக்கும்,Kulam aayar kolundhukkum - நல்லகுடிப்பிறப்பையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கும்
ஆய்ந்த,Aayndha - ஆராய்ந்து அருளிச் செய்த
தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;,Thamizh maalai aayiraththul ivaiyum oru paththum vallaar-; - தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்-;
உலகில்,Ulagil - இவ்வுலகத்திலே
ஏந்து பெரு செல்வத்தர் ஆய்,Aendhu peru selvaththar aay - எல்லாரும்கொண்டாடும்படியான ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்மியையுடையராய்க் கொண்டு
கேள்வன் தன்னை,Kelvan thannai - நாயனான எம்பெருமான் விஷயமாக
வாய்ந்த வழுதி வனம் நாடன் மன்னுருருகூர் சடகோபன்,Vaayndha vazhuthi vanam naadan mannururukoor sadagopan - ஆழ்வார்
குற்றேவல் செய்த,Kuttreval seydh - அந்தரங்கரைங்கர்ய ரூபமாக
திரு மால் அடியார்களை,Thiru maal adiyaarkalai - பகவத்பக்தர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை
பூசிக்க,Poosikka - ஆராதிக்க
நோற்றார்கள்,Noatraargal - ஸுக்ருதம் பண்ணினவர்களாவர்.
3183திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி - எனக்கு இவை ஒன்றும் இல்லையே ஆகிலும் நிரதிசய போக்ய பூதனாய் இருந்த உன்னை விட்டு ஒரு படியாலும் நான் தரிக்க மாட்டாமையாலும் அடியேனை விஷயீ கரிக்கைக்காக நீ ஸ்ரீ வர மங்கல நகரிலே வந்து புகுந்து அருளுகையாலும் – உனக்கு அடிமையான இவ்வாத்மாவை நீ போகிடில் இழவு உன்னதாகையாலும் அடியேனைப் பொகட்டு அருள ஒண்ணாது – ஆதலால் அடியேனை விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்.) 1
நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே –5-7-1
சேறு,Seru - சேற்று நிலங்களிலே
செந்நெலூடு,Senneloodu - செந்நெற்பயிர்களிடையே
தாமரை மலர்,Thaamarai malar - தாமரைகள் மலரப்பெற்ற
சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - கிரிவரமங்கையென்னும் வானமாமலைப்பதியிலே
வீற்றிருந்த எந்தாய்,Veetrirundha endhaay - இருந்தருளும் எம்பெருமானே!
அரவின் அணை அம்மானே,Aravin anai ammaaney - சேஷசமயனனான தலைவனே!
நோற்ற,Notra - நானாக அனுட்டித்த
நோன்பு இலேன்,Nonbu ilean - கருமயோக முடையேனல்லேன்;
நுண் அறிவு இலேன்,Nun arivu ilean - நுட்பமான ஞானயோகமும் உடையேனல்லேன்;
ஆகினும்,Aakinum - இங்ஙனே நைம்முத வற்றவனேயானாலும்
இனி,Ini - இது முதலாக
உன்னைவிட்டு,Unnaivittu - உன்னை யொழிய
ஒன்றும்,Ondrum - சிறிதும்
ஆற்ற நிற்கின்றிலேன்,Aatra nirkindrilean - தரித்திருக்க மாட்டுகின்றிலேன்;
உனக்கு,Unakku - ஸர்வரஷகனென்று பேர்பெற்றிருக்கிற உனக்கு
அங்கே,Angae - அந்த வானமாமலைபதிதன்னிலே
மிகை அல்லேன்,Migai allean - (ரக்ஷ்யவர்க்கத்தில்) வெளிப்பட்டவனல்லேன் (என்னை ரக்ஷித்தே தீரவேணுமென்றபடி.
3184திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவடிகளை நான் பெறும் இடத்தில் பிரதிபந்தகம் உண்டு எனில் அத்தையும் நீயே போக்கி உன் கிருபையால் ரக்ஷித்து அருள வேணும் என்கிறார் .) 2
அங்குற்றேனலேன் இங்குற்றேனலேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனுமலேன் இலங்கை செற்ற அம்மானே!
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2
இலங்கை,Ilangai - லங்காபுரியை
செத்த,Seththa - தொலைத்த
அம்மானே,Ammaaney - ஸ்வாமியே!
திங்கள் சேர்,Thingal ser - சந்திரனையும் சேர்ந்திருக்கிற
மணிமாடம்,Manimaadam - மணி மயமான மாடங்களையுடைத்தாய்
நீடு,Needu - விசாலமான திருவீதிகளையுடைந்தாயிருக்கிற
கிரீவரமங்கலம் நகர் உறை,Sreevaramangalam nagar urai - கிரீவரமங்கையிலே நித்யவாஸம் செய்தருளுகிற
சங்கு சக்கரத்தாய்,Sangu sakkaraththaay - சங்கு சக்கரபாணியான ஸர்வேச்வரனே
நான்,Naan - அடியேன்
அங்குற்றேன் அல்லேன் ,Ankutren allean - நித்யஸேவை பண்ணுகிற நித்யஸூரிகளிலே சேர்ந்தவனல்லேன்.
இங்குற்றேன் அல்லேன்,Ingurtren allean - உன்னைக் கனவிலுமறியாத ஸம்ஸாரிகள் படியுமுடையேனல்லேன்
உன்னை காணும் அவாவில் வீழ்ந்து,Unnai kaanum avaavil veezhndhu - உன்னைக் காணவேணுமென்கிற ஆசையில் படிந்தவானி
எங்குற்றேனும் அல்லேன்,Enguttrenum allean - ஒருவர் படியிலும் சேராதவனாயிரா நின்றேன்;
தமியேனுனக்கு,Thamiyean unakku - இப்படித் தனிப்பட்டிருக்கிற என் விஷயத்திலே
அருளாய்,Arulaay - அருள்புரியவேணும்.
3185திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உம்மை விஷயீ கரித்தால் பிரயோஜனம் என் என்னில் - சர்வ பிரகார பரி பூர்ணனான நீ அத்யந்த நிஹீனனான என்னை விஷயீ கரித்துப் பெற்றது ஒரு பிரயோஜனம் கண்டிலேன் - வெறும் உன் க்ருபையாலே செய்து அருளினாய் அத்தனை -அப்படியே மேலும் என் அபேக்ஷிதங்கள் செய்து அருள வேணும் என்கிறார்.) 3
கருளப் புட்கொடி சக்கரப் படை வானநாட என் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான் மறை வல்லவர் பலர் வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கு இருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே –5-7-3
கருளன் புள்கொடி,Karulan pulkodi - கருடப்பறவையைக் கொடியாகவுடையனாய்
சக்கரம் படை,Sakkaram padai - திருவாழியை ஆயுதமாகவுடையனாய்
வானம் நாட,Vaanam nada - பரமபதத்தை நாடாகவுடையனான பெருமானே!
எம்கார் முகில் எள்ளு,Emkaar mugil ellu - எமக்குக் காளமேகம் போன்ற திருவுருவைக் காட்டி உபசரிக்குமவனே!
தெருள் கொள்,Therul kol - மிகுந்த ஞானத்தையுடையராய்
கால் மறை வல்லவர்,Kaal marai vallavar - நான்கு வேதங்களிலும் உள்ளவர்களான
பலர்,Palar - பல ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaal - வாழப்பெற்ற
கிரீவரமங்கலம் நகர்க்கு,Sreevaramangalam nagarkku - வானமாமலைப்பதிக்கு
அருள் செய்து,Arul seydhu - கிருபைபண்ணி
அங்கு இருந்தாய்?,Angu irundhaay? - அத்திருப்பதியிலே நித்யவாஸம் செய்யுமவனே!
பொருள் அல்லாத என்னை,Porul allaadha ennai - அபதார்த்தமாய் கிடந்தவென்னை
பொருள் ஆகி,Porul aagi - ஸ்வரூபம் பெற்றரளும்படி அங்கீகரித்து
அடிமை கொண்டாய்,Adimai kondaay - (திருவாய்மொழியாடுகையாகிற இக்) கைங்கரியத்தை என் பக்கலிலே திருவுள்ளம் பற்றினாய்; (இப்படியாகச்செய்த மஹோபகாரத்திற்கு)
ஒரு கைம்மாறு அறியேன்,Oru kaimmaaru ariyen - நானொரு கைம்முதலுடையேனாக அறிகின்றிலேன்.
3186திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 4
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காயன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய்! நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனை எங்கு எய்தக் கூவுவனே?–5-7-4
மாறு சேர் படை,Maaru ser padai - விரோதிகளாய்க்கொண்டு சேர்ந்த வேளையையுடைய
நூற்றுவர்,Nuurruvar - துரியோதநாதிகள் நூறு பேர்களும்
மல்க,Malka - தொலையும்படி
அன்று,Andru - அக்காலத்தில்
ஓர் ஐவர்க்கு ஆம்,Or aivarkku aam - பஞ்சபாண்டவர்களுக்குத் துணைவனாயிருந்து கொண்டு
மாயம் போர் பண்ணி,Maayam por panni - ஆச்சரியமான யுத்தத்தை நடத்தி
நீறு செய்த எந்தாய்,Neeru seydha endhaay - நீறுபடுத்தின ஸ்வாமியே!
நீலம் கீண்ட அம்மானே,Neelam keenda ammaaney - பூமியை ப்ரளயாபத்தில் நின்றும் இடர்ந்தெடுத்த பெருமானே!
தேறு ஞானத்தர்,Theru gnaanaththar - தெளிந்த ஞானத்தையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய
வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடைவிடாமல் நடக்குமிடமான
கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப் பதியிலே
ஏறி,Eri - குடியேறி
வீற்றிருந்தாய்,Veetrirundhaay - பெருமை தோற்ற எழுந்தருளியிருக்குமவனே
உன்னை,Unnai - உன்னை
எங்கு எய்த,Engu eydha - எங்கேவந்து கிட்டுவதாக
கூவுவன்,Koovuvan - நான் கூப்பிடுவேன்? (உன்னை நான் நிர்பந்திருப்பதென்றொரு! பொருளுண்டோ? என்றவாறு.)
3187திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (அடியார்களை ரக்ஷிப்பதையே தொழிலாகவுடையவனல்லையோ நீ; என்னை ரக்ஷிப்பது உனக்கு மிகையோவென்கிறார். பஞ்சபாண்டவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து பாரதயுத்தத்தை நடத்தித் துரியோதநாதியரைத் தொலைத்த செய்தியை ஒன்றரையடிகளாலே அநுஸந்திக்கிறார்.) 5
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
கை தவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அது நானும் கண்டேனே!–5-7-5
எய்தக் கூவுதல்,Eydha koovudhal - உன்னைப் பெறுவதற்காகக் கூப்பாடு போடுவதானது
எனக்கு ஆவதே,Enakku aavedhe - எனனக்குத் தகுமோ
எவ்வ தெய்வத் துளாயும் ஆய் நின்று,Evva dheivaththulaayum aay nindru - எப்படிப்பட்ட சத்ருணமூஹத்தினுள்ளும் ஊர் திருந்து
கைதவங்கள் செய்யும்,Kaidhavangal seyyum - க்ருத்ரிமங்களைச் செய்யுமவனான (அதாவது, அஸுரவர்க்கத்தினுள்ளே புத்த விக்ரஹபரிக்ரஹம் பண்ணிக் கலந்து நின்று வைதிகருசியைக் குலைத்து வியாமோஹிப்பித்தவனான)
கரு மேனி அம்மாளே,Karu meni ammaaley - கரிய திருமேனி கொண்ட ஸ்வாமியே!
செய்த வேள்வியர்,Seydha velviyar - க்ருதக்ருத்யர்களான
வையம் தேவர் அறா,Vaiyam dhevar araa - நிலத் தேவர்கள் இடைவிடாமல் வர்த்திக்கிற
சிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமலைப் பதியிலுள்ளாரெல்லாரும்
கை தொழ,Kai thoza - ஸேவிக்கும்படி
இருந்தாய்,Irundhaay - எழுந்தருளியிருப்ப வனே!
நானும்,Naanum - அடியேனும்
அதுகண்டேன்,Adhukandean - அவ்விருப்புக் காணப் பெற்றேன்.
3188திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (நான் ஆசைப்பட்டபடியே அடிமை செய்யலாம்படி வந்தருளவேணுமென்கிறார்.) 6
ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே! கண்ணா! என்றும் எனை ஆளுடை
வான நாயகனே! மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவர மங்கலத்தவர் கை தொழ உறை
வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6
ஏனம் ஆய்,Yenam aay - மஹாவராஹரூபியாய்
நீலம் கீண்ட,Neelam keenda - பூமியைக்குத்தியெடுத்து வந்து ஸ்வஸ்தானத்திலே சேர்த்த
என் அப்பனே,En appaney - எம்பெருமானே!
கண்ணா,Kanna - கண்ணபிரானே!
என்றும்,Endrum - எந்நாளும்
என்னை ஆள் உடை,Ennai aal udai - என்னை அடிமை கொள்ளுகிற
நானம் நாயகனே,Naanam naayakaney - நித்யஸூரிநாதனே!
மணி மாணிக்கம் சுடரே,Mani maanikam sudarey - மணி மாணிக்கம் போன்ற தேஜஸ்ஸையுடையவனே!
தேவை மா பொழில்,Thevai maa pozhil - தேனையுடைய மாந்தோப்பு சூழ்ந்த
தண்,Than - குளிர்ந்த
கிரீவரமங்கலத்தவர்,Sreevaramangalaththavar - கிரீவரமங்கயிலுள்ளவர்கள்
கை தொழ,Kai thoza - வணங்கும்படியாக
உறை,Urai - அங்கு நித்யவாஸம் பண்ணுகிற
வானமாமலையே,Vaanamaamalaiye - வானமாமலைப்பெருமானே!
அடியேன் தொழ,Adiyean thoza - அடியேன் தொழும்படியாக
வந்தருள்,Vandharul - இங்கே யெழுந்தருளாய்
3189திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அடியேன் தொழவந்தருளே” என்றாரே; அர்ச்சாவதார ஸாமதியைக் குலைத்துக் கொண்டு ஸ்ரீரீவரமங்கலநகரிலிருந்து திருக்குருகூரிலே திருப்புளியடியிலே வந்து காட்சி தர வேணுமென்றாயிற்று. ஆழ்வாருடைய கோரிக்கை; அங்ஙனே வரக்காணாமையாலே ‘உபேக்ஷித்தான் போலும்’ என்றஞ்சி “பிரானே! என்னை உபேக்ஷியாதொழியவேணும்” என்கிறார்.) 7
வந்தருளி என் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழுலகும் உண்டாய்!
செந் தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.–5-7-7
வந்தருளி,Vandharuli - (பரமபதம் முதலியவற்றை விட்டு) எழுந்தருளி
என்நெஞ்சு,En nenju - எனது நெஞ்சை
இடம் கொண்ட,Idam konda - இருப்பிடமாகக் கொண்ட
வானவர் கொழுந்தேத,Vaanavar kolundheyadha - நித்யஸூரிநாதனே!
உலகுக்கு,Ulagukku - இவ்வுலகத்துக்கு
ஓர் முந்தை தாய் தந்தையே,Or mundhai thaai thandaiyae - அநாதிஸித்த மாதாபிதா வானவனே!
முழு ஏழ் உலகும் உண்டாய்,Muzu ezhu ulagam undaay - ஸகல லோகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கினவனே!
செம் தொழிலவர்,Sem thozhilavar - சிறந்த அனுட்டானங்களையுடையவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களினுடைய
வேதம் வேள்வி அறா,Vedham velvi araa - வைதிகஸமாராதனம் இடையறாமல் நடக்கப் பெற்ற
கிரீவரமங்கலம் நகர்,Sreevaramangalam nagar - வானமாமலைப்பதியிலே
அந்தம் இல் புகழாய்,Antham il pugazhaay - முடிவில்லாத புகழையுடையவனாய் எழுந்தருளியிருப்பவனே!
அடியேனை அகற்றேல்,Adiyenai akatrel - என்னைப் புறம்புபடுத்தா தொழியவேணும்.
3190திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் * அடியேனைகற்றேலே என்று ஆழ்வார் பிரார்த்திக்கக்கேட்ட எம்பெருமான் ‘ஆழ்வீர்!’ உம்மை அகற்றுவதற்கு என்ன ப்ரளக்தியுண்டாயிற்று? ‘அப்ரஸந்தமாக ஏதுக்கு இரக்கிறீர்?’ என்றருளிச்செய்ய, பிரானே! அடிமைக்கு விரோதியான ஸம்ஸாரத்திலே என்னை வைத்திருப்பது அகற்றினபடியன்றோ; அப்ரஸக்தமாயோ என் பேச்சிருப்பது? என்கிறார்.) 8
அகற்ற நீ வைத்த மாய வல் லைம் புலன்களா மவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகர்க் கதிர் மணி மாட நீடு சிரீவர மங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின் வாய் பிளந்தானே!–5-7-8
பகர் கதிர்,Pagar kathir - விளங்காநின்ற ஒளியையுடைத்தான்
மணிமாடம் நீடு,Manimaadam needu - மணிமாடங்கள் ஓங்கியிருக்கப்பெற்ற
திரீவரமங்கை,Thireevaramangai - வானமாமலையிவ்பதியிலே
வாழ்நனே,Vaazhnane - வாழுமவனே!
என்றும்,Endrum - ஒருநாளும்
புகற்கு அரிய வந்தாய்,Pugarkku ariya vandhaay - (உதவாதவர்களுக்கு) ப்ராபிக்கவொண்ணாத ஸ்வாமியே!
புள்ளின் வாய் பிளந்தானே,Pullin vaai pilandhaane - பநாசுரனது வாயை இரு துண்டாக்கி அவனை முடித்தவனே
அதகற்ற நீ வைத்த,Athakatra nee vaitha - ஒதுக்குகைக்காக நீ உண்டாக்கி வைத்த
மாயம்,Maayam - ஆச்சரியமான செய்கைகளையுடைய
வல்,Val - பலிஷ்டங்களான
ஐம்புலன்கள் ஆம்அவை,Aimpulangal aamaavai - பஞ்சேந்திரியங்களை
நன்கு அறிந்தனன்,Nandru arindhanan - உள்ளபடியே அறியப்பெற்றேன்;
நீ,Nee - பரம காருணிகனான நீ
என்னையும் அகற்றி,Ennaiyum akatri - அடியேனையும் உன் பக்கலில் நின்றும் அகலச்செய்து
அரு சேற்றில்,Aru setril - கால்வாங்கிக் கரையேற முடியாத விஷயங்களாகிற சேற்றிலே
வீழ்த்தி கண்டாய்,Veezhthi kandaay - தள்ளிவைக்கின்றாயே!
3191திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (கீழ்ப்பாட்டில் “அகற்றி யென்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்” என்னக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர்! உம்முடைய வினைகளாகிற பிரபல விரோதிகள் காரணமாக நீர் அருஞ்சேற்றில் விழுந்து கிடந்திராகில் இதற்கு நான் என் செய்வது? என்ன; அதற்கு ஆழ்வார், ‘பிரானே! இதற்கு மேற்பட்ட பிரபல விரோதிகளையெல்லாம் அநாயாஸமாக அழிந்திருக்கிற வுனக்கு இது ஒரு வார்த்தையோ? இப்படியும் ஒரு கள்ளத்தனமான பேச்சுண்டோ?’ என்கிறார்.) 9
புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான் மறைகள் வல்லார் மலி தண் சிரீவர மங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.–5-7-9
புள்ளின் வாய் பிளந்தாய்,Pullin vaai pilandhaay - பகாஸுரனையழித்தவனே!
மருது இடைபோயினாய்,Marudhu idai poyinaay - இரட்டை மருதமரங்களினிடையே தவழ்ந்து சென்றவனே!
ஏழ் எருது அடர்ந்த,Ezhu erudhu adarntha - ஏழு ரிஷபங்களையும் கலிதொலைத்தன்னாயும்
என்,En - என் நிறத்திலே
கள்ளம் மாயவனே,Kallam maayavaney - கள்ள மாயங்களைச் செய்து போருமவனே!
கரு மாணிக்கம் சுடரே,Karu maanikam sudarey - கரியமாணிக்கத்தின் ஒளிபோன்ற வடிவையுடையவனே!
தெள்ளியார்,Thelliyaar - தெளிந்தவர்களாயும்
திரு நால்மறைசன் வல்லார்,Thiru naal maraichan vallaar - வீலக்ஷணமான நான்கு வேதங்களிலும் வல்லவர்களாயுமிருப்பார்
மலி,Mali - நிறைந்திருக்கப்பெற்ற
தண்,Than - குளிர்ந்த
கிரீவரமங்கை உன்,Sreevaramangai un - வானமாமலைப்பதியிலே
இருந்த எந்தாய்,Irundha endhaay - எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியே!
எனக்கு,Enakku - அடியேனுக்கு
உய்யும் ஆறு,Uyyum aaru - உஜ்ஜீவநோபாயத்தை
அருளாய்,Arulaay - அருளிச் செய்ய வேணும்.
3192திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஏதேனும் துர்த் தசையிலும் உன் திருவடிகளே சரணம் என்று இருக்கும் படி என்னைப் பண்ணி யருளின இம் மஹா யுபகாரத்துக்கு பிரதியுபகாரத்துக்கு இல்லை என்கிறார் .) 10
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10
சேறு கொள்,Seru kol - சேற்று நிலங்களிலே வளர்கின்ற
கரும்பும்,Karumpum - கரும்புகளும்
பெரு செந்நெலும்,Peru sennelum - பெரிய செந்நெற் பயிர்களும்
மலி,Mali - மலிந்திருக்கப்பெற்ற
தண்,Than - குளிர்ந்த
சிரீவரமங்கை,Sreevaramangai - வானமாமலைப்பதியிலே (எழுந்தருளியிருக்கிற)
நாறு பூ தண் துழய் முடியாய்,Naaru poo than thuzhai mudiyaay - பரிமளம் மிக்க திருத்துழாய் மாலையணிந்த திருமுடியையுடையவனே!
தெய்வநாயகனே,Dheivanayakaney - தெய்நாயகப் பெருமானே!
எனக்கு,Enakku - அடியேனுக்கு
ஆறு,Aaru - உபாயமோவென்றால்
நின் பாதமே சரண் ஆக,Nin paathame saran aaga - உன் திருவடிகளே உபாயமாக
தந்தொழிந்தாய்,Thandhozindhaay - அநுக்ரஹித்து விட்டாய் (இந்த மஹோபகாரத்திற்கு)
உனக்கு,Unakku - உன் விஷயத்திலே
ஓர் கைம்மாறு ஒன்று நான் இலேன்,Or kaimmaaru ondru naan ilean - ஒரு பிரதியபகாரமு முடையேனல்லேன்;
எனது ஆவியும்,Enadhu aaviyum - என்னுடைய ஆத்மாவும்
உனதே,Unadhey - ஏற்கனவே உன்னுடையதாயிரா நின்றது.
3193திருவாய்மொழி || (5-7-நோற்ற நோன்பிலேன்) (வானமாமலைப் பெருமானது அருளை வேண்டல் (சிரீவரமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய்மொழியைப் பாட வல்லவர்கள் நித்ய ஸூ ரிகளுக்கு நிரந்தர போக்யராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்.) 11
தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள்ளிவை தண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.–5-7-11
தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன்,Dheivanayakan Naranan Thirivikkiraman - எம்பெருமானுடைய
அடி இணை மிசை,Adi inai misai - உபய பாதங்களிலே,
கொய் கொள் பூ பொழில் சூழ் குருகூர் சடகோபன்,Koi kol poo pozhil soo zhul kuru kur sadagopan - ஆழ்வார்
செய்த,Seydha - அருளிச் செய்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவை,Ivai - இந்த
தண் சிரீவர மங்கை மேய பத்து,Than Sreevara Mangai meya paththu - வானமாமலைப்தி விஷயமான பதிகத்தை
உடன்,Udan - கருத்துடனே
வைகல்,Vaigal - எப்போதும்
பாட வல்லார்,Paada vallaar - பாட வல்லவர்கள்
வானோர்க்கு,Vaanorkku - நித்ய ஸூரிகளுக்கு
ஆரா அமுது,Aaraa amuthu - ஆராவமுதமாயிருப்பர்கள்.
3194திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 1
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1
ஆரா அமுதே,ara amuthe - எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தியிறவாத அமுதமாகிய
எம்மானே,emmane - எம்பெருமானே!
அடியேன் உடலம்,adiyen udalam - என்னுடைய சரீரமானது
நின்பால்,ninpaal - உன் திறத்தில்
அன்பு ஆய் ஏ,anbu aay e - அன்புதானே வடிவெடுத்ததாகி
நீர் ஆய் அலைந்து,neer aay alainthu - நீர்ப்பண்டமாக உருகி வியாகுலப்பட்டு
கரைய,karaiya - கரையும்படியாக
உருக்குகின்ற நெடுமாலே,urukkukindra netumale - உருகப்பண்ணாநிற்கிற ஸர்வேச்வரனே!
சீர் ஆர் செந்நெல்,seer ar sennel - சீர்மைமிக்க செந்நெற்பயிர்கள்
சவரி வீசும்,savari veesum - சாமரம்போல் வீசப்பெற்று
செழுநீர்,sezhuneer - செழுமைதங்கிய தீர்த்தங்களையுடைத்தான
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
ஏர் ஆர் கோலம் திகழ,er ar kolam thigazha - அழகு பொருந்திய திருமேனி விளங்க
கிடந்தாய்,kitandhai - சாய்ந்தருளினாய் (அவ்வழகை)
கண்டேன்,kanden - ஸேவிக்கப் பெற்றேன்
3195திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 2
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2
எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே!
என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே!
என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே!
வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே
எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே!
மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள்
செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து
கண்,kan - கண்டவிடமெங்கும்
மலரும்,malarum - மலரப்பெற்ற
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே!
தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’
3196திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 3
என்னான் செய்கேன் யாரே களை கண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அரு வாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3
நான் என் செய்கேன்,naan en seykayn - அடியேன் என்ன செய்வேன்!
களைகண் யாரே,kalai kan yaare - ரக்ஷகராவார் யாவர்!
என்னை என் செய்கின்றாய்,ennai en seykinraay - என்னை என்ன செய்வதாக இருக்கிறாய்?
உன்னால் அல்லால்,unnal allaal - உன்னைத் தவிர்த்து
யாவராலும்,yaavaraalum - வேறு ஒருவிதமான உபாயத்தாலும்
குறை ஒன்றும் வேண்டேன்,kurai onrum venden - சிறிதும் அபேக்ஷையடையேனல்லேன்
கன் ஆர் மதில் சூழ் குடந்தை கிடந்தாய்,kan ar madil soozh kudandhai kitandhay - வேலைப்பாடு பொருந்திய மதிள்சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
அடியேன்,adiyen - அடியேனுடைய
அரு,aru - ஆத்மாவானது
வாழ்நாள்,vaalnaal - வாழும் காலத்தில்
செல் நாள் எ நாள்,sel naal e naal - கழிகின்ற நாள்கள் எத்தனைநாளோ
அ நான்,a naan - அந்த நாள்களெல்லாம்
உன் தாய் பிடித்தே,un thay pitithey - உனது திருவடிகளைப் பற்றிக்கொண்டே
செல,cel - நடக்கும்படி
காண்,kaan - நடாக்ஷித்தருளவேணும்.
3197திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 4
செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4
செல காண்கிற்பார்,cel kaankirpar - மேலே மேலே காணவல்லவர்கள்
காணும் அளவும்,kaanum alavum - எவ்வளவு காண்பர்பளோ அவ்வளவும்
செல்லும் கீர்த்தியாய்,cellum keertiyay - வளர்ந்துசெல்கின்ற திருக்குணங்களையுடையவனே!
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
நான் உன்னை காண்பான் அலப்பு ஆய்,naan unnai kaanpaan alappu aay - என் உன்னைக்காண வேண்டி அமைந்து
உலப்பு இலானே,ulappu ilaane - அந்தத் திருக்குணங்கட்கு முடிவு இல்லாதவனே!
எல்லா உலகும் உடைய,ella ulagum udaiya - எல்லாவுலகங்களுக்கும் ஸ்வாமியான
ஒரு மூர்த்தி,oru moorthi - ஒப்பற்ற தலைவனே!
நலத்தால் மிக்கார் குடந்தை,nalathaal mikkar kudandai - பக்திமிகுந்தவர்கள் வாழ்கின்ற திருக்குடந்தையிலே
ஆகாசத்தை நோக்கி,aakaasathai nokki - (நீ வருதற்குரிய) வானத்தைப்பார்த்து
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவதும் தொழுவதும் செய்யாநின்றேன்.
3198திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 5
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா!
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5
செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய
குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்;
ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்;
பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்;
தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே
பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே)
காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்;
உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு
சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும்.
3199திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 6
சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்துன்னடி சேறும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாளகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்! வானோர் கோமானே!
யாழி னிசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே!–5-8-6
வாழ் தொல் புகழார் குடந்தை,vaal thol pugazhaar kudandhai - விளங்குகின்ற அகாதியான புகழையுடையார் வர்த்திக்கிற திருக்குடந்தையிலே
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
வானோர் கோமானே,vaanoor komaane - நித்யஸூரிகாதனே!
யாழின் இசையே,yaazhin isaiye - வீணாகானம்போலே பரம் போக்யனானவனே!
அமுதே,amuthe - அமிருதம் போன்றவனே!
அறிவின் பயனே,arivin payane - அறிவுக்கும் பலனானவனே!
அரி ஏறே,Ari ere - சிங்கமும் கஇடபமும் போன்று சிறந்தவனே!
உன் அடி சேரும் ஊழ் கண்டு இருந்தே,un adi serum ooz kandu irunthe - நான் உனது திருவடிகளையடையும்படியான முறைமையைக் கண்டிருந்தும்
தூரா குழி தூர்த்து,thura kuzhi thuruthu - ஒருநாளும் தூர்க்கவொண்ணாத இந்திரியக்குழிகளை நிறைத்துக்கொண்டு
எனை நாள்,enai naal - எத்தனை காலம்
அகன்று இருப்பன்,agandru iruppan - உன்னைவிட்டுப் பிரிந்திருப்பேன்!
எளன் தொல்லை வினையை அறுத்து,elan tollai vinaiyai aruthu - (இப்படி அகன்றிருக்கைக்குக்காரணமான) எனது அநாதி பாபங்களைத் தொலைத்து
சூழ் கண்டாய்,soozh kandai - என்னை ஸ்வீகரித்தருள வேணும்.
3200திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 7
அரியேறே! என்னம் பொற் சுடரே! செங்கட் கருமுகிலே!
எரியேய் பவளக்குன்றே! நால்தோள் எந்தாய்! உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய்! குடந்தைத் திருமாலே!
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.–5-8-7
அரி ஏறே,Ari ere - சிறந்த சிங்கமே!
ஏன்,en - நான் அனுபவித்தற்குரிய
அம் பொன் சுடரே,am pon sudare - அழகிய பொன்போன்ற ஒளியுருவனே!
செம் கண் கரு முகிலே,sem kan karu mugile - சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே!
எரி ஏய் பவளம் குன்றே,eri aye pavalam kunre - நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே!
நால் தோள் எந்தாய்,nal thol endhay - சதுர்ப்புஜ ஸ்வாமியே!
உனது அருகே,unathu aruke - உனது கிருபையினாலர்
என்னை பீரியா அடிமை கொண்டாய்,ennai peeriya adimai kondai - என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே!
குடந்தை திருமாலே,kudandai thirumale - திருக்குடந்தையில் வாழும் திருமாலே!
இனி தரியேன்,ini thariyane - இனிமேல் தரித்திருக்ககில்லேன்!
உன் சரணம் தந்து,un sarannam thandu - உனது திருவடிகளைக் கொடுத்தருளி
என் சன்மம் களையாய்,en sanmam kalaiyaay - எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும்.
3201திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 8
களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8
வளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே!
குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற
மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே!
துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி
களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி
களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்;
உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து
எனது ஆவி,enathu aavi - என் உயிரானது
சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது
இளையாது,ilaiyathu - மெலியாமல்
உன் தான்,un thaan - உன் திருவடிகளையே
ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி
நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும்.
3202திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 9
இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9
என்னை,ennai - நெடுநாள் விமுகனாயிருன்னத வென்னை
இசைவித்து,isaivithu - அடிமைக்கு இசையும்படி செய்து
உன் தாள் இணை கீழ்,un thaal inai keel - உனது உபயபாதங்களின் கீழே
இருந்தும் அம்மானே,irundhum ammaane - தங்கும்படி செய்தருளின ஸ்வாமியே!
அசைவு இல் அமரர் தலைவர்,asaivu il amarar thalaivar - நித்யஸூரிகளுக்குள் தலைவரான அநந்தகருடவிஷ்வக்ஸேனர்களுக்கும்
தலைவா,thalaiva - முதல்வனே!
ஆதி பெரு மூர்த்தி,aadhi peru moorthi - ஸகலஜகத்காரணபூசமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
திசை வில் வீசும் செழுமா மனிகள் சேரும்,disai vil veesum sezuma maniḵaḷ cerum - எங்கம் ஒளிவீசுகின்ற மிகச்சிறந்த ரத்னங்கள் சேருமிடமான
திரு குடந்தை,tiru kutantai - திக்குடந்தையிலே
அசைவு இல்,asaivu il - ஓய்வில்லாதபடி (அவதாரம்)
உலகம் பரவ,ulagam parava - உலகமெல்லாம் துதிக்கும் படி
கிடந்தாய்,kitandhay - சயனித்தருள்பவனே!
காண வாராய்,kaana vaaraay - நான்கண்டு அநுபவிக்கும்படி வரவேணும்
3203திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 10
வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!
ஆரா வமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்! உனக் காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?–5-8-10
வாரா,vaara - திருவுருவத்தோடு வாராமல்
அரு ஆய் வரும்,aru aay varum - அரூபியாய் உள்ளேவந்து தோன்றுகின்ற
என் மாயா,en maaya - என் மாயவனே!
மாயா மூர்த்தியார்,maaya moorthiyaar - ஒருநாளும் அழியாத திவ்ய மங்கள விக்ரஹத்தையுடையவனே!
ஆரா அமுது ஆய்,ara amuthu aay - எவ்வளவு அனுபவித்தாலும் திருப்திபிறவாத அமிருதமாய்க் கொண்டு
அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்,adiyen aavi agame tittipai - என் உள்ளுக்குள்ளே தித்தித்திருக்குமவனே!
தீரா வினைகள் தீர,teera vingal teera - தொலையாத பாவங்களும் தொலையும்படியாக
என்னை ஆண்டாய்,ennai aandaay - அடியேனை ஆண்டருளினவனே!
திரு குடந்தை ஊரா,tiru kutantai oora - திருக்குடந்தைப்பதியோளே!
அடியேன்,adiyen - அடியேன்
உனக்கு ஆள்பட்டும்,unakku aalpattum - உனக்கு அடிமைப்பட்டும்
இன்னம் உழல்வேனோ,innam uzhalveno - இன்னமும் கிலேப்படுவேனோ!
3204திருவாய்மொழி || 5-8 ஆரா அமுதே 11
உழலை என்பில் பேய்ச்சி முலை யூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே.–5-8-11
உழலை என் பின் பேய்ச்சி,uzhalai en pin peyschi - உழல்தடிபோன்ற எலும்புகளையுடைளான பூதனையினுடைய
முலை ஊடு,mulai oodu - முலை வழியாக
அவள் உயிரை உண்டான்,aval uyirai undaan - அவளது உயிரை முடித்த பெருமானுடைய
கழல்கள் அவையே,kazalkal avaiye - திருவடிகளையே
சரண் ஆக கொண்ட,saran aka konda - சரணமாகப்பற்றின
குகூர் சடகோபன்,kukoor sadagopan - ஆழ்வார்
குழலின் மலிய,kulalin maliya - குழலோசையித் காட்டிலும் இனிதாக
சொன்ன,sonna - அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,or aayirattu - ஒப்பற்ற ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,i pattum - இப்பதிகத்தை
மழலை தீர,malalai teera - தமது அறியாமை தொலையும்படி
வல்லார்,vallaar - அதிகரிக்கவல்லவர்கள்
மான் ஏய் நோக்கியர்க்கு,maan aay nokkiyarkku - மான்போன்ற நோக்கையுடைய திவ்யாப்ஸரன்ஸுக்களுக்கு
காமர்,kaamar - ஆதரிக்கத்தக்கவராவர்.
3205திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –முதல் பாட்டில் நிரதிசய போக்யமான சோலையையுடைய திரு வல்ல வாழிலே எழுந்து அருளி இருக்கிற நிருபாதிக ஸ்வாமி திருவடிகளைக் கிட்டுவது என்றோ என்று தோழிமாரைக குறித்துச் சொல்லுகிறாள்.) 1
மானேய் நோக்கு நல்லீர்! வைகலும் வினையேன் மெலிய
வானார் வண் கமுகும் மது மல்லிகை கமழும்
தேனார் சோலைகள் சூழ் திரு வல்லவாழ் உறையும்
கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?–5-9-1
மான் ஏய் நோக்கு நல்லீர்,Maan ey nokku nalleer - மான் போன்ற நோக்கையுடைய பெண்களே!
வினையேன்,Vinaiyen - பாவியான நான்
வைகலும் மெலிய,Vaigalum meliya - எப்போதும் இளைக்கும்படியாக,
வான் ஆர்வண் கமுகும்,Vaan aarvan Kamookum - ஆகாசத்தை யளாவிய அழகிய அழகிய பாக்மரங்களும்
மது மல்லிகை,Mathu malligai - மதுவொழுகுகின்ற மல்லிகை மலர்களும்.
கமழும்,Kamazhum - வாஸிக்கப்பெற்ற
தேன் ஆர் சோலைகள் சூழ்,Thenar solaigal soozh - தேன் நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட
திரு வல்ல வாழ்,Thiru valla vaazh - திருவல்லவாழிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுகிற
கோனாரை அடி,Konaarai adi - ஸ்வாமியின் திருவடிகளை
அடியேன் கூடுவது என்று சொல்,Adiyen kooduvadhu endru sol - அடியேன் கூடப்பெறுவது என்றைக்கோ?
3206திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னுடைய உத்தியோகத்தை இசையாதே இருக்கிற தோழி மாரை அ நு நயித்து நான் திரு வல்ல வாழிலே புக்கு அவன் பாத ரேணுவைச் சூடுவது என்று என்கிறாள்) 2
என்று கொல் தோழி மீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ!
பொன் திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித்
தென்றல் மணங் கமழும் திருவல்ல வாழ் நகருள்
நின்ற பிரான் அடி நீறு அடியோம் கொண்டு சூடுவதே.–5-9-2
தோழிமீர்காள்,Thozhimeerkaal - தோழிகளே!
நீர் எம்மை தலிந்து,Neer emmai thalindhu - நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி
என் செய்தீர்,En seydeer - என்ன காரியம் செய்தீர்கள்!
தென்றல்,Thendral - தென்றல் காற்றானது
பொன் திகழ் புள்ளை,Pon thigazh pullai - பொன்போல் விளங்குகிற தாதுகளையுடைய புன்னை மரங்களென்ன
மகிழ்,Magilz - மகிழமரங்களென்ன
புது மாதவி,Puthu maadhavi - புதிய குருக்கத்திகளென்ன
மீது அணவி,Meedhu anavi - ஆகிய இவற்றின் மேலே படிந்து
மணங்கமழும்,Manangamalzum - பரிமளத்தை வீசி உலாவிடமான
திருவல்லவாழ்நகரும்,Thiruvalaazhvaakarum - திருவல்லவாழ்ப்பதியிலே
நின்ற பிரான்,Nindra piran - நிலைபெற்றிருக்கிறஸ்வாமியினுடைய
அடி நீறு,Adi neeru - ஸ்ரீபாத ரேணுவை
அடியோம் கொண்டு சூடுவது,Adiyom kondhu sooduvadhu - அடியோம் ஸ்வீகரித்து அணிந்து கொள்வது
என்று கொல்,endru kol - என்றைக்கோ?
3207திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் வேத கோஷமும் வைதிக க்ரியா ஹோமமும் மாறாத திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிற நிரந்தர உபகாரத்தைப் பண்ணுமவன் திருவடிகளை நித்ய அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 3
சூடு மலர்க் குழலீர்! துயராட்டியேனை மெலியப்
பாடு நல் வேத ஒலி பரவைத் திரை போல் முழங்க
மாடுயர்ந் தோமப் புகை கமழும் தண் திரு வல்லவாழ்
நீடுறை கின்ற பிரான் கழல் காண்டுங் கொல் நிச்சலுமே.–5-9-3
மலர் சூடும் குழலீர்,Malar soodum kuzhaleer - பூக்களணிந்த கூந்தலையுடைய மாதர்களே!
துயராட்டியேன் மெலிய,Thuyaraattiyeen meliya - துக்கங்களை யனுபவிக்கின்ற நான் இளைக்கும்படியாக
பாடுநல்வேதம் ஒலி,Paadu nalvetham oli - பாடப்படுகின்ற ஸாமவேத கோஷமானது
பரவை திரைபோல் முழங்க,Paravai thiraipol muzhang - கடலின் அலைக்கிளர்ச்சி பொல் முழங்கா நிற்க.
மாடு உயர்ந்து,Maadu uyarnthu - பக்கங்களிலே ஓங்கி
ஓமம் புகை கமழும்,Oomam pugai kamazhum - ஹோமதுமங்கள் பரிமணிக்கப்பெற்ற
தண் திருவல்லவாழ்,Than thiruvallazh - குளிர்ந்த திருவல்லவாழிலே
நிடு உறைகின்ற பிரான்,Nidu uraigindra piran - நித்யவாஸம் பண்ணாநின்ற எம்பிரானுடைய
கழல்,Kazhal - திருவடிகளை
நிக்கலும்,Nigkalum - எப்போதும்
காண்டும் கொல்,Kaandum kol - காணப்பெறுவோமா?
3208திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சோலைகளோடே கூடின மாடங்களை யுடைய திரு வல்ல வாழிலே நித்ய ஆஸ்ரித ஸம்ஸ்லிஷ்டனாய் வர்த்திக்கிற உபகாரகன் பக்கலிலே என்னுடைய ஸ்நேஹமாய் இருக்க நீங்கள் நலிந்து என்ன பிரயோஜனம் உண்டு என்கிறாள்.) 4
நிச்சலும் தோழிமீர்காள்! எம்மை நீர் நலிந்தென் செய்தீரோ?
பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சணி மாடங்கள் மீதணவும் தண் திரு வல்ல வாழ்
நச்சரவின் அணை மேல் நம்பிரானது நன்னலமே.–5-9-4
தோழிமீர்காள்,Thozhimeerkal - தோழிகளே!
நீர் எம்மை நிச்சலும் நலிந்து என் செய்தீர்,Neer emmai nichchalum nalindhu en seydeer - நீங்கள் எம்மை எப்போதும் ஹிம்ஸித்து என்ன லாபமடைந்திகோள்!
பச்சிலை நின் கமுகும்,Pachilai nin kamugum - பசுத்த இலைகளையுடைய நீண்ட பாக்கு மரங்களும்
பலவும்,Palavum - பலாமரங்களும்
தேங்கும்,Thengum - தென்னை மரங்களும்
வாழைகளும்,Vaazhaigalum - வாழை மரங்களும்
மச்ச அணி மாடங்கள் மீது அணவும்,Mascha ani maadangal meedu anavum - மச்சுகளின் நிரையையுடைய மாடங்களின் மேலே தழைத்துப் பொருந்தும்படியான
தன் திருவல்ல வாழ்,Than thiruvalla vaazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே
நஞ்சு அரவு இன் அணைமேல்,Nanjhu aravu in anaimel - (ஆச்ரித விரோதிகளின் மேலே) நஞ்சை யுமிழ்கிற அரவாகிய இனிய படுக்கையின்மேலே யளித்திருக்கிற
எம் பிரானது,Em piranadhu - எம் பெருமானுடையதாக ஆய்விட்டது (எதுவென்னில்)
நல்நலம்,Nalnalam - (எனது) நற்சீவன்
3209திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் விலக்ஷணரான வைதிக அக்ரேஸருடைய அக்னி ஹோத்ர பூமமானது ஆகாசத்தை மறைக்கும் திரு வல்ல வாழில் நிரதிசய போக்ய பூதனானவனை நம் கண்கள் காண்பது என்றோ என்கிறாள்.) 5
நன்னலத் தோழிமீர்காள்! நல்ல அந்தணர் வேள்விப் புகை
மைந்நலங் கொண்டுயர் விண் மறைக்கும் தண் திருவல்ல வாழ்
கன்னலங் கட்டி தன்னைக் கனியை இன்னமுதந் தன்னை
என்னலங் கொள் சுடரை என்று கொல் கண்கள் காண்பதுவே.–5-9-5
நல் நலம் தோழியீர்காள்,Nal nalum thozhieerkal - சிறந்த நேசமுள்ள தோழிகளே!
நல்ல அந்தணர் வேள்ளி புகை,Nalla andhanar vellai pugai - வைதிக ப்ரஹ்மணர்கள் செய்யும் யாகங்களிலுண்டான புகை
மை நலம் கொண்டு,Mai nalam kondhu - ஸமயீனுடைய நல்ல நிறத்தைக்கொண்டு
உயர் விண் மறைக்கும்,Uyar vin maraikkum - உயர்ந்த ஆகாசத்தை மறைக்குமிடமான
தண் திருவல்லவாழ்,Than thiruvallavaazh - குளிர்ந்த திருவல்லவாழிலே எழுந்தருளியிருப்பவனும்
கன்னல் அம்கட்டி தன்னை,Kannal amkatti thannai - கோதற்ற கன்னற்கட்டி போன்றவனும்
கனியை,Kaniyai - பரிபக்குவமான பழம்போன்றவனும்
இன் அமுதம் தன்னை,In amudham thannai - இனிய அமுதமாயிருப்பவனும்
என் நலம் கோள்,En nalam kol - என்னுடைய ஸர்வல்லத்தையும் கொள்ளை கொண்டவனும்
சுடரை,Sudarai - (அத்தாலே) ஒளிபெற்று விளங்குபவனுமான எம்பெருமானை
கண்கள்காண்பது என்று சொல்,Kangal kaanpadhu endru sol - எனது கண்கள் காணப்பெறுவது எந்நாளோ?
3210திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -பாடுகிற வண்டும் புதுக் தென்றலுமான கடற்கரைச் சோலையையுடைய திரு வல்ல வாழிலே நிற்கிற ஆஸ்ரித அர்த்தமாக வர்த்தியான ஸ்ரீ வாமனனுடைய போக்யமான திருவடிகளைக் காண்பது என்றோ என்கிறாள்.) 6
காண்ப தெஞ்ஞான்று கொலோ? வினையேன் கனிவாய் மடவீர்!
பாண் குரல் வண்டினொடு பசுந் தென்றலுமாகி எங்கும்
சேண் சினை ஓங்கு மரச் செழுங்கானல் திரு வல்லவாழ்
மாண் குறள் கோலப் பிரான் மலர்த் தாமரைப் பாதங்களே.–5-9-6
கனி காய் மடவீர்,Kani kaay madaveer - கனிபோன்ற வாயையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எங்குப்பார்த்தாலும்
பாண் குரல் வண்டினோடு,Paan kural vandinodu - காளரூபமான மிடற்றோவரவையுடைய உண்டுகளும்
பசுதென்றலும் ஆகி,Pasuthendralum aagi - புதுத்தென்றதுமாய்
சேண் சினை ஓங்கு மரம்,Senn sinai oongu maram - உயர்ந்த பனைகளையுடைந்தாய்க்கொண்டு வளருகிற மாசுகளையுடைய
செழு கானல் திருவல்லவாழ்,Sezu kaanal thiruvallazh - அழகிய கடற்கரைச் சோலையையுடைத்தான திருவல்லவாழிலே நிற்கிற
மாண்குறள் கோலம் பிரான்,Maangkural kolam piran - சிறந்த ப்ரஹ்மசாரி வேஷத்தையுடையனான எம்பிரானுடைய
தாமரை மணபாதங்கள்,Thaamarai manapadhangal - தாமரைமலர்போன்ற திருவடிகளை
வினையேன்,Vinaiyen - பாவியாகிய நான்
காண்பது,Kaanpadhu - ஸேவிக்கப்பெறுவது
எஞ்ஞான்று கொலோ,Yennaanru kolo - என்றைக்கோ
3211திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு வல்ல வாழிலே நின்று அருளின எம்பெருமான் திருவடிகளில் நித்தியமாய் பூவை யணிந்து தொழ வல்லோமே என்கிறாள்.) 7
பாதங்கள் மேலணி பூந்தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர்!
ஓத நெடுந் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்
நாதன் இஞ்ஞால முண்ட நம்பிரான் தன்னை நாடொறுமே.–5-9-7
பாவை கல்லீல்,Paavai kalleel - பாவைபோலே அழகிய தோழிகளே!
ஓதம் நெடு நடத்துள்,Otham netu nadathul - கடல்போன்று பெரிய தடாகங்களுக்குள்ளே
உயர் தாமரை செங்கழுவீர்,Uyar thaamarai sengazhuveer - உயர்ந்த தாமரைப் பூக்களும் செங்குழுநீர்ப்பூக்களும்
மாதர்கள் வான் முகமும் கண்களும் ஏந்தும்,Maadhargal vaan mugamum kangalum aendum - ஸ்திரீகளின் ஒளிபொருந்திய முகத்தழகையும் கண்ணழகையும் தாக்கும்படியான
காதல்,Kaadhal - தலைவனும்
இ ஞாலம் உண்ட, E gnaalam unda - இவ்வுலகங்களை யெல்லாம் பிரளங்கொள்ளாதபடி காத்தவனான
நம் பிரான் தன்னை,Nam piran thanai - எம்பெருமானுடைய
பாதங்கள் மேல் அணி,Paadhangal mel ani - திருவடிகளின் மேலே சாத்தின
பூ,Poo - புஷ்பங்களையாவது
நாள் தோறும் தொழ கூடும் கொல்,Naal thorum thoza koodum kol - நாடோறும் தொழ நேருமோ?
3212திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -அழகிய விளை நிலங்களாலே சூழப்பட்ட திரு வல்ல வாழிலே நித்ய வாசம் பண்ணுகிறவனுடைய சகல சம்ச்லேஷ ஸ்வ பாவமான திருவடிகளை நிரந்தர அனுபவம் பண்ணக் கூடுமோ என்கிறாள்.) 8
நாடொறும் வீடின்றியே தொழக் கூடுங்கொல் நன்னுதலீர்!
ஆடுறு தீங் கரும்பும் விளை செந் நெலுமாகி எங்கும்
மாடுறு பூந்தடஞ் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ்
நீடுறைகின்ற பிரான் நிலம் தாவிய நீள்கழலே.–5-9-8
நல் நுதநீர்,Nal nuthaneer - அழகிய நெறியையுடைய தோழிகளே!
எங்கும்,Engum - எவ்விடத்திலும்
ஆடு உறு தீம் கரும்பும்,Aadu uru theem karumbum - ஆலையிலிட்டு ஆடுதற்குரிய இனிமையான கரும்புகளும்
வினை செந்நெலும் ஆகி,Vinai chennelum aagi - முதிர விளைந்த செந்நெறி பயிர்களுமாய்
மாடு உறு பூ தடம் சேர்,Maadu uru poo thadam ser - பக்கங்களில் நெருங்கிய பூத்த தடாகங்களையுடைத்தாய்
வயல் சூழ்,Vayal soozh - கழனிகளாலே சூழப்பட்ட
தண் திருவல்லவாழ்,Tham thiruvallazh - குளிர்ந்த திருவல்ல வாழிலே
நீடு உறைகின்ற பிரான்,Neetu uraikindra piran - நித்யவாஸம் செய்தருளா நின்ற எம்பெருமானுடைய
நிலம் தாவிய நீள் கழல்,Nilam thaaviya neel kazhal - பூமி முழுவதையு மொருகால் தளந்துகொண்ட நீண்ட திருவடிகளை
நாள்தோறும் வீடு இன்றியே,Naal thorum veedu indriye - நாடோறும் விச்சேதமில்லாமல்
தொழ கூடும் கொல்,Thoza koodum kol - தொழ நேருமோ?
3213திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்முடைய கழலுகிற வளைகள் பூர்ணமாம் படி-பூரிக்க – அவனைக் கண்டு தொழலாம் படி அவன் அருள் கூட வற்றே என்கிறாள் .) 9
கழல் வளை பூரிப்ப நாம் கண்டு கை தொழக் கூடுங் கொலோ?
குழல் என யாழும் என்னக் குளிர் சோலை யுள் தேனருந்தி
மழலை வரி வண்டுகள் இசை பாடும் திருவல்லவாழ்
சுழலின் மலி சக்கரப் பெருமானது தொல்லருளே.–5-9-9
குளிர் சோலையுள்,Kulir solaiyul - குளிர்ந்த சோலைகளிலே
தேன் அருந்தி,Then arunthi - மதுவைப் பருகி
மழலை வரி வண்டுகள்,Mazhalai vari vandugal - மழலைத் தொனியையுடைய அழகிய வண்டுகள்
குழல் என்ன யாழ் என்ன,Kuzhal enna yaazh enna - வேஸ கானமோ வீணா கானமோ என்னும்படியாக
இசை பாலும்,Isai paalum - இசைபாடப்பெற்ற
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிலே
சுழலின் மலி சக்கரம்,Suzhalin mali sakkarum - சுறுற்சி பொருந்திய திருவாழியையுடையனான
பெருமானது,Perumaanadhu - ஸர்வேச்வரனுடைய
தொல் அருளா,Tol arula - இயற்கையான திருவருளாலே
சுழல் வனை பூரிப்ப யாம் கண்டு கை தொழ கூடும் கொல்,Suzhal vanai poorippa yaam kandu kai thozh koodum kol - சுழல் வளைகள் பூரிக்கும்படியாக நாம் கண்டு தொழநேருமோ
3214திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானுடைய ஸ் வா பாவிகமான கிருபையால் -அவன் தன்னைக் காணப் பெற்று -ப்ரீதியாலே இனிதாய்க் கொண்டு திரு நாமங்களை சொல்லக் கூட வற்றோ -என்கிறாள் ) 10
தொல்லருள் நல் வினையால் சொலக் கூடுங்கொல்? தோழிமீர்காள்?
தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழ நின்ற திரு நகரம்
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்
நல்லருள் நம் பெருமான் நாராயணன் நாமங்களே.–5-9-10
தோழிமீர்களா,Thozhimeerkala - தோழிகளே
மண்ணும் விண்ணும்,Mannum vinnnum - உபயவிபூதியிலுள்ளாரும்
தொல் அருள்,Tol arul - தனது இயற்கைத் திருவருளை
தொழநின்றதிருநகரம்,Thozhannindha thirunagaram - கொண்டாடும்படி நிற்குமிடமாய்
நல் அருள் ஆயிரவர் நலன் ஏந்தும்,Nal arul aayiravar nalan endhum - மஹா தயாளுக்களான ஆயிரக்கணக்கான சிஷ்டர்கள் நன்மையோடு வர்த்திக்கு மிடமான
திருவல்லவாழ்,Thiruvallazh - திருவல்லவாழிஸேற்கிற
நல் அருள் நம் பெருமான் நாராயணன்,Nal arul nam perumaan narayanan - மஹாக்ருபாளுவாய் அஸ்மதீஸ்வாமியான நாராயணனுடைய
நாமங்கள்,Naamangal - திருநாமங்களை
தொல் அருள் நல் வினையால்,Tol arul nal vinaiyal - (அவனது) இற்றைக் திருவருளாகிற ஸுக்ருதலிரேஷத்தாலே
சொல் கூடும் கொல்,Sol koodum kol - நாம் சொல்லநேருமோ?
3215திருவாய்மொழி || 5-9–மானேய் நோக்கு) (திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பத்தும் வல்லார் சம்சாரத்திலே இருந்து வைத்தே எல்லாரிலும் சிறந்தவர் என்கிறார்.) 11
நாமங் களாயிர முடைய நம் பெருமானடி மேல்
சேமங் கொள் தென் குருகூர்ச் சடகோபன் தெரிந்துரைத்த
நாமங்களாயிரத்துள் இவை பத்தும் திருவல்லவாழ்
சேமங்கொள் தென்னகர் மேல் செப்புவார் சிறந்தார் பிறந்தே.–5-9-11
நாமங்கள் ஆயிரம் உடைய,Naamangal aayiram udaiya - ஸஹஸஸ்தரநாமங்களையுடையனான
நம் பெருமான்,Nam perumaan - எம்பெருமானுடைய
அடிமேல்,Adimel - திருவடிகளின்மேலே
சேமம் கொள்,Semam kol - திண்ணிய அத்யவஸாய முடையவரான
தென் குருகூர் சடகோபன்,Then kurugoor sadagopan - ஆழ்வார்
தெரிந்து உரைத்த,Therindhu uraitha - ஆராய்ந்து அருளிச் செய்த
நாமக்கள் ஆயிரத்துள்,Namakal aayirathul - அவனது திருநாமம் போன்றதான ஆயிரத்தினுள்ளே
திருவல்லவாழ் சேமம் கொள் தென் நகர் மேல் இவை பத்தும்,Thiruvallazh semam kol then nagar mel ivai pattum - திருவல்லுலாழாகிற அரணமைந்த அழகிய திருப்பதி விஷயமான இப்பத்தையும்
செப்புவார்,Seppuvaar - ஓதவல்லவர்கள்
பிறந்தே,Piranthe - இவ்விருள் தருமா ஞாலத்தில் பிறந்து வைத்தே
சிறந்தார்,Sirandaar - சிறந்தவராவர்
3216திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (கண்ணபிரானுடைய அவதாராதிகளைக் சுருங்கவருளிச் செய்து ‘அந்தோ’! இவை என்னை மருமத்திலே நலியாகின்றனவே; தரித்து உன்னையநுஸந்திக்க முடியவில்லையே! என்று தளர்கின்றார்.) 1
பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1
பிறந்த ஆறும்,Pirandha aarum - ஸம்ஸாரிகளைப்போலே தானும் வந்து பிறந்தபடியும்
வளர்ந்த ஆறும்,Valarndha aarum - தன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தபடியும்
பெரிய பாரதம்,Periya Baradham - மஹாபாரத யுத்தத்தில்
கை செய்து,Kai seythu - சேனைகளை அணிவகுத்து
ஐவர்க்கு,Aivarukku - பஞ்சபாண்டவர்களுக்கு
திறங்கள் காட்டி யிட்டு,Thirangal kaatti yittu - வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்து
செய்துபோன மாயங்களும்,Seithupona maayangalum - ஆக இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து முடித்துத் தன் நாமமே சென்று சேர்ந்த மாயங்களும்
நிறந்தன் நாடு புக்கு,Niranthan naadu pukku - மருமமான ஹ்ருதய ப்ரதேசத்தினுள்ளே புகுந்து
எனது ஆவியை,Enadhu aaviyai - என் ஆத்மாவை
நின்று நின்று,Nindru nindru - இடைவிடாதே நின்று
உருக்கி உண்கின்ற,Uruki unkindra - சிதிலமாக்கி நஸியா நின்றன;
இ சிறந்தவான் சுடரே,E sirandhavaan sudare - இப்படிப்பட்ட சிறப்புப் பொருந்திய அபரிச்சேத்யதேஜோரூபனே!
உன்னை சேர்வது என்று கொள்,Unnai saervadhu endru kol - உன்னை நான் கிட்டப் பெறுவது என்றைக்கோ?
3217திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அபிமத விஷயத்தில் உன்னுடைய வியாபாரங்கள் என்னை சிதிலனாக்கா நின்றது என்கிறார்.) 2
வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் மாய மாவினை வாய் பிளந்தும்
மதுவை வார் குழலார் குரவை பிணைந்த குழகும்
அது இது உது என்னலாவன அல்ல என்னை உன் செய்கை நைவிக்கும்
முதுவைய முதல்வா! உனை என்று தலைப் பெய்வனே?–5-10-2
வதுவை வார்த்தையுள்,Vadhu vai vaarthaiyul - விவாஹப்ரஸ்தாவத்திலே
ஏறு பாய்ந்தனும்,Eru paaindhanum - விருஷங்களை மேல்விழுந்து கொன்றதும்
மாயம் மாவினை,Maayam maavinai - கபடமாகக் ருதிரையுருக் கொண்டு வந்த அசுரனை
வாய் பிளந்தும்,Vaai pilandhum - வாய்க்கீண்டு ஒழித்ததும்
மதுவை வாதர் குழலார்,Madhuvai vaathar kuzhalaar - மதுவைப் பெருக்குகின்ற கூந்தலையுடைய இடைப் பெண்களோடு
குரவை பிணைத்த குழகும்,Kuravai pinaittha kuzhagum - ராஸக்ரீடை பண்ணி ஒரு நீராக வந்திருந்ததும்
அது இது உது என்னல் ஆவன அல்ல,Athu idhu udhu ennal aavan alla - ஒருபடியும் விசேஷித்துச் சொல்ல முடியாதவை.
வையம்,Vaiyam - உலகங்கெல்லாம்
முன் முதலில்,Mun mudhalil - மூலகாரணபூதனே!
என்னை நைவிக்கும்,Ennai naivikum - என்னைச் சிதிலனாக்குகின்றன
உன்னை என்று தலைப்பெய்வன்,Unnai endru thalaippeyvan - உன்னை என்னைக்குக் கிட்டுவேன்?
3218திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன்னுடைய பால சேஷ்டிதங்களானவை என் நெஞ்சை உருகப் பண்ணா நின்றன என்கிறார்.) 3
பெய்யும் பூங்குழல் பேய் முலை யுண்ட பிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின் சிறுச் சேவகமும்
நெய் யுண் வார்த்தையுள் அன்னை கோல் கொள நீ யுன் தாமரைக் கண்கள் நீர் மல்கப்
பையவே நிலையும் வந்து என் நெஞ்சை உருக்குங்களே.–5-10-3
பெய்யும் பூ குழல் பேய் முலை உண்ட,Peyyum poo kuzhal pey mulai unda - பூக்களையுடைய கூந்தலையுடையளான பூதனையின் முலையைச் சுவைத்துண்ட
பிள்ளை தேற்றமும்,Pillai thetrum - இளமைத் தெளிவும்
ஓர் சாடு போந்து இற,Or saadu poandhu ira - (அஸுரா வேகங்கொண்ட) ஒரு சாரும் பேர்ந்து முறிந்து போம்படி
செய்ய பாதம் ஒன்றால் செய்த,Seyya paadam ondraal seytha - சிவந்த திருவடியொன்றோடு செய்தருளின
நீன் இது சேவகமும்,Neen idhu sevakamum - உன்னுடைய இளவீரமும்
நெய் உண் வார்தையும்,Ney un vaarthaiyum - நெய்யை உண்ட விஷயம் ப்ரஸ்தாவத்திற்கு வந்த வளவிலே
அன்னை, கோல் கொள்ள,Annai, kol kolla - தாயானவள் கையிலே கோலை யெடுத்துக்கொள்ள
நீ,Nee - எல்லாரையும் நியமிக்கப்பிறந்த நீ
உன் தாமரை கண்கள் நீர் மல்க,Un thaamarai kangal neer malg - உனது தாமரைபோன்ற திருக்கண்கள் நீர் நிறம்பும்படி
பையவே நிலையும்,Paiyave nilaiyum - அஞ்சி நடுங்கிநிற்கும் நிலையும்
வந்து,Vandhu - இப்போதும் என்னெஞ்சிலே வந்து தோன்றி
என் நெஞ்சை உருக்குங்கள்,En nenjai urugungal - எனது உள்ளத்தை உருக்குகின்றன
3219திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (பௌத்தாவாதார கதையைப் பேசி இப்படியும் ஒரு கள்ளவேடம் கொள்வதுண்டோ வென்று உருகுகிறார்.) 4
கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப் புரம் புக்க வாறும் கலந்த சுரரை
உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்
வெள்ள நீர்ச் சடையானும் நின்னிடை வேறலாமை விளங்க நின்றதும்
உள்ளமுள் குடைந்து என் உயிரை உருக்கி உண்ணுமே.–5-10-4
கள்ளம் வேடத்தை கொண்டுபோய்,Kallam vaadathai kondupoi - வேதபாஹ்ய புத்தரூபவேஷத்தைப் பரிந்ரஹித்து
புரம் புக்க ஆறும்,Puram pukka aarum - திரிபுரத்திலே ப்ரவேசித்தபடியும்
அசுரரை கலந்து,Asurarai kalandhu - அசுரரோடே செறிந்து
உள்ளம் பேதம் செய்திட்டு,Ullam paedham seydittu - மன வேறுபாட்டையுண்டாக்கி
உயிர் உண்ட உபாயங்களும்,Uyir unda upaayangalum - அவர்களுடைய உயிரைக் கவர்ந்த விரகுகளும்
வெள்ளம் நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்,Vellam neer sadaiyaanum ninnidai veru alamai vilanga nindradhum - கங்கா ப்ரவாஹத்தைத்ச் சடையிலே தாங்கியுள்ள சிவனும் உன்பக்கல் வேறுபாடின்றி ஒற்றுமை பெற்று விளங்க நின்றதும் (ஆகிய இவை)
உள்ளும் உள் குடைந்து,Ullum ul kudainthu - என்னெஞ்சுக்குள்ளே அவகாஹித்து
என் உயிரை உருக்கி உண்ணும்,En uyirai urukki unnum - என் ஆத்மாவை நீராகவுருக்கியுண்கின்றன.
3220திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரித விஷயமாக செய்த சேஷ்டிதங்களும் அநுஸந்திக்கும் தோறும் என் மனஸ் ஸூ அற வழியா நின்றது என்கிறார்.) 5
உண்ண வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்
வண்ண மால் வரையை எடுத்து மழை காத்ததும்
மண்ணை முன் படைத் துண்டுமிழ்ந்து கடந்திடந்து மணந்த மாயங்கள்
எண்ணுந் தோறு மென்னெஞ்சு எரி வாய் மெழுகொக்கும் நின்றே.–5-10-5
வானவர் கோனுக்கு உண்ண,Vaanavar koonukku unna - தேவேந்திரனுடைய ஆராதனைக்காக
ஆயர் ஒருப்படுத்த,Aayar oruppadutha - இடையர்கள் ஸந்நாஹஞ் செய்த
அடிசில் உண்டதும்,Adisil undadhum - ப்ரஸாதங்களையெல்லாம் தானே அமுதுசெய்தலும்
வண்ணம் மால்வரையை எடுத்து மழை காத்தலும்,Vannam maalvaraiye eduthu mazhai kaathalum - அழகிய பெருமலையைக் குடையாக வெடுத்து மழையைத் தடுத்தும்
மண்ணை முன் படைத்து,Mannai mun padaittu - பூமியை ஆதிகாலத்திலே ஸ்ருஷ்டித்து
உண்டு உமிழ்ந்து கடந்து இடத்து மணந்த மாயங்கள்,Undu umizhndhu kadandhu idathu mantha maayangal - (ஸமய விசேஷங்களிலே) உண்டது உமிழ்ந்தது அளந்தது கிடந்தது மணந்தது ஆக இப்படியான மாயங்களுமாகிறவிவற்றை
எண்ணுந்தோறும்,Ennunthorum - சிந்திக்கிறபோதெல்லாம்
என் நெஞ்சு,En nenju - எம் மனமானது
நின்று,Nindru - எப்போதும்
எரி வாய் மெழுது ஓங்கும்,Eri vaai meluthu oongum - நெருப்பருகிலுள்ள மெழுகையொத்திரா நின்றது
3221திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (நின்றது மிருந்ததும் கிடந்ததும் இன்ன இன்ன விடங்களிலே யென்று வகுத்துக் கூறாமையாலே ஆசாரியர்கள் பலபடியும் ஈடுபட்டு நிர்வஹிப்பார்கள்.) 6
நின்றவாறு மிருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உனை எங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்று நன்குரையாய் உலகமுண்ட ஒண் சுடரே!–5-10-6
நின்ற ஆறும் இருந்த ஆறும் கிடந்த ஆறும்,Nindra aarum irundha aarum kidandha aarum - ஆங்காங்கு நிற்கிறபடிகளும் வீற்றிருக்கிற படிகளும் சயனித்திருக்கிறபடிகளும்
நினைப்பு அரியன,Ninaippu ariyan - நெஞ்சாலும் நினைக்க முடியாதவையாயிருக்கின்றன
ஒன்று அவர் உரு ஆய்,Ondru avar uru aay - (இங்ஙனே) பலபடியாய்
அரு ஆய்,Aru aay - எனக்கு அநுபவிக்கைக்கு உருத்தெரியாத
நின் மாயங்கள்,Nin maayangal - உனது அற்புதச் செயல்களை
நின்று நின்று நினைக்கின்றேன்,Nindru nindru ninaikkindrein - சிறிது சிறிதாக நினைக்கப் பார்க்கின்றேன்
உலகம் உண்ட ஒண் சுடரே,Ulagam unda on sudare - உலகங்களை அமுதுசெய்த ஒளியுவனே!
உன்னை எங்ஙனம் நினை நிற்பனந்,Unnai enganam ninaipanand - உன்னை எப்படி நினைக்கலாவேன்!
பாவியேற்கு ஒன்று உரையாய்,Paaviyera ondru uraiyaay - தரித்து நின்று நினைக்க முடியாத பாவத்தைப் பண்ணினவெனக்கு ஒரு நல்விரகு அருளிச் செய்ய வேணும்.
3222திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கண்ணாலே காணப் பெறாதே -ஆந்தர அனுசந்தானமேயாய் சிதிலனாய் போகாதே கண்ணாலே கண்டு தரித்து அனுபவிக்க வல்லேனாம் படி பண்ணி அருள வேணும் என்கிறார்.) 7
ஒண் சுடரோ டிருளுமாய் நின்றவாறும் உண்மை யோடின்மையாய் வந்து என்
கண் கொளா வகை நீ கரந்து எனைச் செய்கின்றன
எண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரிய மாணிக்கமே! என் கண் கட்குத்
திண் கொள ஒருநாள் அருளாய் உன் திருவுருவே.–5-10-7
உண்மையோடு இன்மை ஆய் வந்து,Unmaiyodu inmai ay vanthu - மெய்யனாய்த் தோற்றுகை பொய்யனாய்த் தோற்றுகை ஆகிற இரண்டுபடியோடுங்கூடி
ஒண் சுடரோடு இருளும் ஆய் நின்ற ஆறும்,On sudarodu irulum ay ninra arum - ஒண்சுடராயும் இருளாயம் நிற்கிறபடிகளும்
என் கண்கொளாவகை,En kangolavakai - என் கண் உன்னையநுபலியாதபடி
கரந்து,Karandu - உள்ளேமறைந்து நின்று
நீ என்னை செய்கின்றன,Ni ennai seykinran - நீ என்னைப் படுத்துகிறபாடுகளும் ஆகிறவிவற்றை
எண் கொள் சிந்தையும்,En kol cintaiyum - என்ன வேணாமென்கிற அபி நிவேசங்கொண்ட சிந்தையோடே
நைகின்றேன்,Naikindren - சிதிலனாநாநின்றேன்
என் கரிய மாணிக்கமே,En kariya manikkame - என்னை யீடுபடுத்தின நீலமணியருவனே!
உன் திரு உரு,Un thiru uru - உனது திவ்யரூபத்தை
என் கண்கட்கு திண்கொள்ள,En kangatkku thin kollo - என் கண்களாலே திண்ணமாகக் காணும்படி
ஒருநாள் அருளாய்,Oru nal arulay - ஒருநாளாகிலு“ கிருபை செய்தருளவேணும்
3223திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -உன்னுடைய சர்வாதிகத்வ ஸூசகமான ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்களைக் கேட்க்கும் தோறெல்லாம் என் நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் சோரா நின்றது -நான் என் செய்வேன் -என்கிறார்.) 8
திருவுருவு கிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன்
கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும்
பொருவிலுன் தனி நாயக மவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின்று நெக்கு
அருவி சோருங் கண்ணீர் என் செய்கேன் அடியேனே.–5-10-8
திரு உருவு கிடந்த ஆறும்,Thiru uruvu kidantha arum - அழகிய திருமேனிகள் வளர்த்தருளின படியும்
கொப்பூழ்செம் தாமரை மேல்,Koppuzh sem thamarai mel - திருநாபிக் கமலத்திலே
திசைமுகன் கரு உன்,Disaimugan karu un - நான்மகனாகிற கருவுக்குள்ளே
வீற்றிருந்து,Veerirundhu - அந்தராத்மாவாக எழுந்தருளியிருந்து
படைத்திட்ட கருமங்களும்,Padaittidu karumangalum - ஸ்ருஷ்டித்த வியாபாரங்களுமாகிற
பொரு இல்,Poru il - எதிரில்லாத
உன் தனி நாயகம் அவை,Un thani nayagam avai - உன்னுடைய பரத்வ ப்ரகாசமான அவற்றை
கேட்கும்தோறும்,Kekkum thorum - (வேதாந்திகன் சொல்லல்) கேட்கிறபோதெல்லாம்
என் நெஞ்சம்,En nenjam - என் நெஞ்சானது
நின்று நெக்கு,Nindru nekku - கட்டுக்குலைந்து நெகிழ்ந்து நின்று
கண் நீர் அருவி சோரும்,Kan neer aruvi sorum - கண்ணீர் அருவியாகப் பெருகாகின்றது;
அடியேன் என் செய்கேன்,Adiyen en seyken - தரித்திருக்க மாட்டாத அடியேன் என்ன பண்ணுவேன்?
3224திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (மாவலி பக்கலிலே மாணுருவாய்ச்சென்று மூவடிநிலம் இரந்தபடியும், அந்நிலையில்நின்றே இரண்டியாலே மூவுலகையும் அகப்படுத்திக் கொண்டு நீ நினைத்த காரியத்தை முடித்துக் கொண்ட அதிசயமும் ஆகியவிவற்றைச் சொல்லக் கேட்குந்தோறும் என்னுடைய நெஞ்சு கரைந்து உருகின்றதே!; உன்னையநுஸத்தித்தால் இங்ஙனே சிதிலனாகும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் தரித்து நின்று உன்னையறுபவிப்பது என்றைக்கோ? (நொடிதல் – சொல்லுதல்.)) 9
அடியை மூன்றை இரந்தவாறும் அங்கே நின்றாழ்கடலும் மண்ணும் விண்ணும்
முடிய ஈரடியால் முடித்துக் கொண்ட முக்கியமும்
நொடியு மாறவை கேட்குந்தோறும் என் நெஞ்சம் நின் தனக்கே கரைந்துகும்
கொடிய வல் வினையேன் உனை என்று கொல் கூடுவதே.–5-10-9
மூன்று அடியை இரந்த ஆறும்,Moonru adiyai irandha arum - (மாவலியிடத்தே) மூவடி நிலத்தை யாசித்தபடியும்
அங்கு நின்றே,Angu nindrae - யாசித்த அவ்விடத்தில் நின்று கொண்டே
ஆழ் கடலும் மண்ணும் விண்ணும் முடிய,Azh kadalum mannum vinnum mudiya - ஆழ்ந்தகடல்களையும் மண் விண்ணுலகங்களையுமெல்லாம்
ஈர் அடியால்,Eer adiyal - இரண்டடியாலே
முடித்துக் கொண்ட முக்கியமும் அவை,Mudithukkonda mukiyamum avai - ஆக்ரமித்துக்கொண்ட தனி வீரமுமாகிய அவற்றைக்குறித்து
நொடியும் ஆறு கேட்கும்தோறும்,Nodiyum aru kekkum thorum - (ஞானிகள்) சொல்லுகிறபடியைக் கேட்கும் போதெல்லாம்
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சு
நின் தனக்கே,Nin thanakke - உன்திறத்திலேயே
கரைந்து உகும்,Karainthu ugum - சிதிலமாகாநின்றது;
கொடிய வல்வினையேன்,Kodiya val vinaiyen - மிகக்கொடிய பாபத்தைப் பண்ணின நான்
உன்னை கூடுவது என்று கொல்,Unnai koodu vadhu endru kol - உன்னேடே கூடப்பெறுவது என்றைக்கோ?
3225திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய சமுத்திர மதன வைசித்யர்த்தை அனுசந்தித்து சிதிலன் ஆகா நின்றேன் -தரித்து நின்று உன்னை அனுபவிக்கும் விரகு சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறார்.) 10
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை
வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்
ஊடு புக்கென தாவியை உருக்கி உண்டிடுகின்ற நின் தனை
நாடும் வண்ணம் சொல்லாய் நச்சு நாகணையானே!–5-10-10
நஞ்சு நாகம் அணையானே,Nanju Naagam Anaiyaane - சேஷசயனனே
கூடி நீரை கடைந்த ஆறும்,Koodi Neerai Kadaintha Aarum - தேவாசுரர்களோடு கூடித் திருப்பாற் கடலைக் கடைந்தபவும்
அமுதம் தேவர் உண்ண,Amudham Devar Unn - அம்ருதத்தைத் தேவர்கள் பூஜிக்க
அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும்,Asurarai Veedum Vannangale Seydhu Pona Vitthagamum - அசுரர்கள் அந்த அம்ருதத்தை விடும்படியாக ஸ்த்ரீ வேஷபரிச்சலும் பண்ணிப்போன விஸ்மயரீயாகாரமும்
ஊடுபுக்கு,Oodupukku - உள்ளே புகுந்து
எனது ஆவியை,Enadhu Aaviyai - என் ஆத்மாவை
உருக்கி உண்டிடுகின்ற,Uruggi Undidugindru - நிர்பண்டமாக உருக்கிக் கபஸித்திக்கின்ற
நின் தன்னை,Nin Thannai - உன்னை
நாடும் வண்ணம் சொல்லாய்,Naadum Vannam Sollaay - நித்யாவாசம் பண்ணும் வழியை அருளிச் செய்யவேணும்
3226திருவாய்மொழி || (5-10–பிறந்தவாறும் வளர்ந்தவாறும்) (ஆழ்வார் தாம் சேர்ந்து அனுபவிக்கும் நிலையைச் செய் என எம்பெருமானை வேண்டுதல்.) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலனாகப் பரமபதத்தில் ப்ரஹ்மாநந்த ப்ராப்தியை அருளிச் செய்கிறார்.) 11
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு என்று நாடொறும்
ஏக சிந்தையனாய்க் குருகூர்ச் சடகோபன் மாறன்
ஆக நூற்ற அந்தாதி ஆயிரத்துள் இவையுமொர் பத்தும் வல்லார்
மாக வைகுந்தத்து மகிழ் வெய்துவர் வைகலுமே.–5-10-11
நாகணை மிசை நம் பிரான் சரணே நமக்கு சரண் என்று,Naaganaai Misai Nam Piran Sarane Namakku Saran Endru - சேஷசாயியான எம்பெருமானுடைய திருவடிகளே நமக்குத் தஞ்சமென்று
நாள் தொறும் ஏக சிந்தையன் ஆண்,Naal Thorum Eka Sinthaiyan Aan - ஸ்திரமான ஆத்யவஸாயத்தை யுடையராய்க் கொண்டு
குருகூர் சடகோபன் மாறன்,Kurugoor Sadagopan Maaran - ஆழ்வார்
ஆக,Aaga - தாம்ஸத்தைபெறுவதற்கு
நூற்ற,Noortra - அருளிச் செய்த
அந்தாதி,Andaadhi - அந்தாதித் தொடையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவையும் ஓர் பத்தும் வல்லார், Ivaiyum Or Paththum Vallar - இத் திருவாய்மொழியை ஓத வல்லவர்கள்
மாகம் வைகுந்தத்து,Maagam Vaikundaththu - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்திலே
வைகலும்,Vaigalum - ஆத்மாவுள்ளதனையும்
மகிழ்வு எய்துவர்,Magizhvu Eydhuvar - ஆனந்திகளாயிருப்பார்கள்.
3227திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள்) 1
வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1
வைகல்,Vaigal - எப்போதும்
பூ கழி வாய்,Poo Kazhi Vaai - அழகிய நீர்நிலத்திலே
வந்து மேயும்,Vandhu Meyum - வந்திருந்து இரையுண்கிற
குருகு இனங்காள்,Kurugu Inangkaal - கொக்கின் கூட்டங்களே!
செய் கொள் செந்நெல் உயர்,Sey Kol Sennel Uyar - கழனி நிரம்பிய செந்நெற்பயிர்கள் ஓங்கி வளர்ந்திருக்கப்பெற்ற
திரு வண் வண்டூர் உறையும்,Thiru Van Vandur Uraiyum - திருவண் வண்டூரிலே நித்யவாஸம் பண்ணா நிற்பவனும்
கை கொள் சக்கரத்து,Kai Kol Chakkarathu - திருக்கையிலே திருவாழியாழ்வானைக் கொண்டவனும்
கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற திருவந்ரத்தையுடையவனுமான
என் பெருமானை,En Perumaanai - எம்பெருமானை
கண்டு,Kandu - நேரில் பார்த்து
கைகள் கூப்பி,Kaigal Koopi - அஞ்ஜலி செய்து
வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்,Vinaiyaattiyen Kaadhanmmai Sollir - இங்ஙனே பிரிந்திருக்கும் பாவமுடையளான என்னுடைய ஆவலைச் சொல்லுங்கோள்
3228திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம் செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேத யொலியையும் வேள்வி யொலியையும் காதாரக் கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்த ரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக் கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞ்சலி பண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று நாரையை இரக்கிறார்.) 2
காதல் மென் பெடையோடு உடன் மேயுங் கரு நாராய்!
வேத வேள்வி ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்ட நம் பெருமானைக் கண்டு
பாதம் கை தொழுது பணியீர் அடியேன் திறமே.–6-1-2
காதல்மென் பெடையோடு,Kaathalmen Pedaiyodu - காதலையே நிரூபகமாகவுடைய அழகியபேடையோடு
உடன்,Udan - கூட
மேயும்,Meyum - இரை தேர்கின்ற
கரு நாராய்,Karu Naarai - நல்லவர்ணமுடைய நாரையே!
வேதம் வேள்வி ஒலி முழங்கும்,Vedham Velvi Oli Muzhangum - வேதகோஷமும் வைதிக்கரியைகளின் கோலாஹலமும் முழங்கப் பெற்ற
தண்,Than - குளிர்ச்சி பொருந்திய
திருவண்வண்டுர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே
நாதன்,Naadhan - ஸர்வேச்வரனும்
ஞாலம் எல்லாம் உண்ட,Gnaalam Ellaam Unda - (பிரளயகாலத்தில் ஸகல ஜகத்தையும் விழுங்கினவனுமான
நம் பெருமானை,Nam Perumaanai - எம்பெருமானை
கண்டு,Kandu - நேராகக் கண்டு
பாதம் கை தொழுது,Paadham Kai Thozhudhu - அவனது திருவடிகளை நோக்கி அஞ்ஜலி பண்ணி
அடியேன் திறம்,Adiyen Thiram - அடியேன் விஷயமாக
பணியீர்,Paniyeer - ஒருவார்த்தைசொல்ல வேணும்
3229திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள்.) 3
திறங்களாகி எங்கும் செய்களூ டுழல் புள்ளினங்காள்!
சிறந்த செல்வ மல்கு திரு வண் வண்டூருறையும்
கறங்கு சக்கரக் கைக் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
இறங்கி நீர் தொழுது பணியீர் அடியேன் இடரே.–6-1-3
திறங்கள் ஆகி,Thirangal Aagi - திரள்திரளாக
எங்கும்,Engum - பார்த்தவிடமெல்லாம்
செய்களூடு,Seygaloodu - விளைநிலங்களிலே
உழல்,Uzhal - உலாவுகின்ற
புள் இனங்காள்,Pul Inangkaal - பறவைக் கூட்டங்களே!
சிறந்த செல்வம் மல்கு,Sirandha Selvam Malku - உயர்ந்த ஐச்வரியம் விஞ்சியிருக்கிற
திருவண்வணடூர்,Thiruvanvandur - திருவண்வண்டூரிலே
உறையும்,Uraiyum - நித்யவாஸம் பண்ணுமவனும்
கறங்கு சக்கரம் கை,Karangu Chakkaram Kai - சுழன்று வருகிற திருவாழியைக் கையிலேயுடையவனும்
கனி வாய்,Kani Vaai - கனிபோன்ற அதரத்தையுடையவனுமான
பெருமானை கண்டு,Perumaanai Kandu - எம்பெருமானை ஸேவித்து
நீர்,Neer - நீங்கள்
இறங்கி தொழுது,Irangi Thozhudhu - தாழ்ந்து தொழுது
அடியேன் இடர்,Adiyen Idar - அடியேன் படுகிற கஷ்டத்தை
பணியீர்,Paniyeer - சொல்லுங்கள்.
3230திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஒரு நொடிப் பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப் பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சாத்திக்கொண்டு அ ங்கே கால் தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக் கொண்டு என் பேரைச் சொல்லாதே ஒருத்தி உடல் நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள்.) 4
இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மட அன்னங்காள்?
விடலில் வேத ஒலி முழங்கும் தண் திரு வண் வண்டூர்
கடலின் மேனிப் பிரான் கண்ணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே.–6-1-4
இடல் இல்,Idal Il - பிரிந்துபடும் துக்கமில்லாத
போகம் மூழ்கி,Pogam Moozhgi - இன்பத்தில் அவகாஹித்து
இணைந்து ஆடும்,Inaindhu Aadum - கலந்து வாழ்கின்ற
மடம் அன்னங்காள்,Madam Annangkaal - மடமைதங்கிய அன்னங்களே!
விடல் இல்,Vidal Il - இடைவீடில்லாத
வேதம் ஒலி முழங்கும்,Vedham Oli Muzhangum - வேதகோஷம் நிரம்பிய
தண் திருவண்வண்டூர்,Than Thiruvanvandur - வேதகோஷம் நிரம்பிய குளிர்ந்த திருவண்வண்டூரிலே
கடல் மேனி,Kadal Maeni - கடல்போன்ற திருமேனியையுடையவனும்
பிரான்,Piran - மஹோபகாரகனும்
கண்ணனை,Kannanai - ஆச்ரித ஸுலபனுமான
நெடு மாலை கண்டு,Nedu Maalai Kandu - ஸர்வேச்வரனைக் கண்டு
ஒருத்தி,Oruththi - ஒரு பெண்பிள்ளை
உடலம் நைந்து,Udalam Nainthu - சரீரம் தளர்ந்து
உருகும் என்று,Urugum Endru - உருகாநின்றாள் என்று
உணர்த்துமின்,Unarththumin - அறிவியுங்கள்!
3231திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில அன்னங்களை குறித்து அவ்விடம் புக்காரை எல்லாம் மறப்பிக்கும் விஷயமாய் இருக்கும் -நீங்கள் அங்கு புக்கால் என்னையும் நினையுங்கோள் என்கிறாள் .) 5
உணர்த்தல் ஊடல் உணர்ந்து உடன் மேயும் மடவன்னங்காள்!
திணர்த்த வண்டல்கள் மேல் சங்கு சேரும் திருவண் வண்டூர்
புணர்த்த பூந்தண் துழாய் முடி நம் பெருமானைக் கண்டு
புணர்த்த கையினராய் அடியேனுக்கும் போற்றுமினே.–6-1-5
ஊடல் உணர்த்தல் உணர்ந்து,Oodal Unarththal Unarnthu - (பிரிவு சிறிது உண்டா) ஊடலும் உணர்த்தலுமாகிற சிரமங்கள் நேருமென்ற்றிந்து
உடன் மேயும்,Udan Meyum - கணப்பொழுதும் விட்டுப்பிரியாமல் கூடவே திரிகின்ற
மடம் அன்னங்காள்,Madam Annangkaal - துவண்ட அன்னங்களே!
திணர்த்த வண்டல்கள் மேல்,Thinartha Vandhalgal Mel - கொழுத்த வண்டல் மணல்களின் மேலே
சங்கு சேரும்,Sangu Serum - சங்குகள் சேருமிடமான
திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே
புணர்த்த பூ தண் துழாய் முடி,Punartha Poo Than Thuzhai Mudi - தொடுக்கப்பட்ட அழகிய செவ்வித்துழா யணிந்த திருவபிஷேகத்தையுடையனான
நம் பெருமானை கண்டு,Nam Perumaanai Kandu - நமது ஸ்வாமியைக் கண்டு
புணர்த்த கையினர் ஆய்,Punartha Kaiyinar Aai - கை கூப்பினவர்களாய்க் கொண்டு
அடியேனுக்கும்,Adiyenukkum - அடியேனுக்காகவும்
போற்றுமின்,Potrumin - அத்தலைக்கு மங்களாசாஸனம் பண்ணுங்கோள்
3232திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சில குயில்களைக் குறித்து திரு வண் வண்டூரில் சென்று எம்பெருமானைக் கண்டு உள்ள தசையை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு மாற்றம் கொண்டு வந்து என் மையல் தீருவதொரு வண்ணம் அருளிச் செய்ய வேணும் என்கிறாள் .) 6
போற்றி யான் இரந்தேன் புன்னை மேலுறை பூங் குயில்காள்!
சேற்றில் வாளை துள்ளும் திரு வண் வண்டூ ருறையும்
ஆற்றல் ஆழி யங்கை அமரர் பெருமானைக் கண்டு
மாற்றம் கொண்டருளீர் மையல் தீர்வதொரு வண்ணமே.–6-1-6
புன்னை மேல் உறை,Punnai Mel Urai - புன்னை மரங்களின மேலே வாழ்கிற
பூ குயில்காள்,Poo Kuyilkaal - அழகிய குயில்களே!
யான்,Yaan - அடியேன்
போற்றி இரந்தேன்,Potri Iranthen - துதித்து வேண்டுகின்றேன்,
வாளை,Vaalai - வாளை மீன்களானவை சேற்றில் துள்ளும்
திரு வண்வண்டூர் உறையும்,Thiru Vanvandur Uraiyum - சேற்று நிலங்களிலே களித்து உகளப்பெற்ற திருவண்வண்டூரிலே வாழ்பவனும்
ஆற்றல் ஆழி அம் கை,Aatral Aazhi Am Kai - சக்திமிகுந்த திருவாழியை அழகிய கையிலே உடையவனுமான
அமரர் பெருமானை கண்டு,Amarar Perumaanai Kandu - தேவாதிதேவனைக் கண்டு
மையல் தீர்வது ஒரு வண்ணம்,Maiyal Theervathu Oru Vannam - என்னுடைய வியாமோஹம் தீரும்படியான
மாற்றம் கொண்டு அருளீர்,Maatram Kondu Aruleer - ஒரு நல்வார்த்தை கொண்டுவந்து உதவவேணும்.
3233திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் அவனை அறியும் படி எங்கனே என்று கேட்ட கிளிகளைக் குறித்து அவனுடைய அடையாளங்களை சொல்லி இவ்வடையாளங்களின் படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கு ஒரு வார்த்தை அருவியுங்கோள் என்கிறாள்.) 7
ஒரு வண்ணம் சென்று புக்கு எனக்கொன்றுரை; ஒண் கிளியே!
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண் வண்டூர்
கரு வண்ணம் செய்ய வாய் செய்ய கண் செய்ய கை செய்ய கால்
செரு ஒண் சக்கரம் சங்கு அடையாளம் திருந்தக் கண்டே.–6-1-7
ஒண் கிளியே,On Kiliye - அழகிய கிளியே!
செரு,Seru - ப்ரணயகலஹாஸ்
ஓண் பூ பொழில் சூழ்,On Poo Pozhil Soozh - அழகியபூஞ் சோலைகளாலே சூழப்பட்டதும்
செக்கர் வேலை,Sekkar Velai - செந்நிறமான பக்கப் பிரதேசங்களையுடையதுமான
திருவண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே
ஒரு வண்ணம் சென்று புக்கு,Oru Vannam Sendru Pukku - ஒரு விதமாகச் சென்று புகுந்து
கரு வண்ணம்,Karu Vannam - கரிய வடிவமும்
செய்ய வாய்,Seyya Vaai - சிவந்த அதரமும்
செய்ய கண்,Seyya Kan - சிவந்த திருக்கண்களும்
செய்ய கை,Seyya Kai - சிவந்த திருக்கைகளும்
செய்ய கால்,Seyya Kaal - சிவந்த திருவடிகளும்
செரு ஒண் சக்கரம் சங்கு,Seru On Chakkaram Sangu - போர்க்களத்திலே ஒண்மைபெற்று விளங்குகிற சக்கரமும் (கையை விட்டு அகலாத) சங்குமான
அடையாளம்,Adaiyaalam - லக்ஷணங்களை
திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாகப் பார்த்து
எனக்கு ஒன்று உரை,Enakku Ondru Urai - எனக்காக வொரு வார்த்தைசொல்லு.
3234திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்ய அவயவ ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டு வந்து எனக்கொன்று சொல்ல வேணு மென்று பூவைப் பறவையைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 8
திருந்தக் கண்டு எனக்கு ஒன்றுரையாய்; ஒண் சிறு பூவாய்!
செருத்தி ஞாழல் மகிழ் புன்னை சூழ் தண் திரு வண் வண்டூர்
பெருந் தண் தாமரைக் கண் பெரு நீண் முடி நாற்றடந்தோள்
கருந் திண் மா முகில் போல் திருமேனி அடிகளையே.–6-1-8
ஒண் சிறு பூவாய்,On Siru Poovai - அழகிய சிறிய வடிவையுடைய பூவையே!
செருந்தி நாழல் மகிழ் புன்னை சூழ்,Serundhi Naazhal Magizh Punnai Soozh - சுரபுன்னை, ஞாழல் மகிழமரம், புன்னை மரம் ஆகிய இவற்றால் சூழப்பட்ட
தண் திருவண்வண்டூர்,Than Thiru Vanvandur - குளிர்ந்த திருவண்வண்டூரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
பெரு தண் தாமரை கண்,Peru Than Thamarai Kan - பெரிய தண்டாமரை போன்ற திருக்கண்களையுடையவரும்
பெரு நீள் முடி,Peru Neel Mudi - மிகப்பெரிய திருவபிஷேகத்தையுடையவரும்
நால் தட தோள்,Naal Thada Thol - நான்கு தடத்தோள்களை யுடையவரும்
கரு திண் மா முகில் போல் திரு மேனி,Karu Thin Maa Mugil Pol Thiru Maeni - கறுத்துத் திண்ணிய மஹாமேகம் போன்ற திருமேனியை யுடையவருமான
அடிகளை,Adigalai - ஸ்வாமியை
திருந்த கண்டு,Thirundha Kandu - நன்றாக ஸேவித்து
எனக்கு ஒன்று உரையாய்,Enakku Ondru Uraiyaai - எனக்கொரு வார்த்தை சொல்லவேணும்
3235திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப் பிடித்துக் கொண்டு‘ என்று சொல்ல வேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கை தொழுது என்கிறாள்.) 9
அடிகள் கை தொழுது, அலர் மேல் அசையும் அன்னங்காள்!
விடிவை சங்கொலிக்கும் திருவண் வண்டூ ருறையும்
கடிய மாயன் தனைக் கண்ணனை நெடுமாலைக் கண்டு
கொடிய வல்வினையேன் திறம் கூறுமின்; வேறு கொண்டே.–6-1-9
அலர் மேல் அசையும் அன்னங்காள்,Alar Mel Asaiyum Annangkaal - பூவின் மேலேயிருந்து உலாவுகின்ற அன்னங்களே!
விடிவை,Vidivai - ஸுப்ரபாதகாலத்திலே
சங்கு ஒலிக்கும்,Sangu Olikkum - சங்கு முழங்கப்பெற்ற
திரு வண்வண்டூர்,Thiru Vanvandur - திருவண்வண்டூரிலே
உறையும்,Uraiyum - எப்போதும் வாழ்கின்ற
கடிய மாயன் தன்னை,Kadiya Maayan Thannai - கடுமையான மாயச் செயல்களையுடையனாய் அடியார்களுக்கு விதேயனாய்
நெடு மாலை,Nedu Maalai - அடியார்பக்கலிலே மிகவும் வியாமோஹ முடையவனாயிருக்கிற எம்பெருமானை
கண்டு,Kandu - சேவித்து
அடிகள் கை தொழுது,Adigal Kai Thozhudhu - திருவடிவாரத்திலே அஞ்ஜலிபண்ணி
கொடிய வல் வினையேன் திறம்,Kodiya Val Vinaiyen Thiram - மிகக்கொடிய பாபத்தையுடையேனான என் விஷயமாக
வேறு கொண்டு,Veru Kondu - ஏகாந்தமாக
கூறுமின்,Koorumin - புருஷகாரமான வார்த்தைகளைச் சொல்லுங்கள்
3236திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (சில வண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண் பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக் கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படி யன்றிக்கே, ரக்ஷ்ய வர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள்.) 10
வேறு கொண்டு உம்மை யான் இரந்தேன்; வெறி வண்டினங்காள்!
தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண் வண்டூர்
மாறில் போர் அரக்கன் மதிள் நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே.–6-1-10
வெறி வண்டு இனங்காள்,Veri Vandu Inangkaal - பரிமளம் மிக்க வண்டினங்களே!
உம்மை வேறு கொண்டு,Ummai Veru Kondu - உங்களிடத்திலே விலக்ஷணப்ரதிபத்தி பண்ணி
யான் இரந்தேன்,Yaan Iranthen - அடியேன் ஒன்று
தேறு நீர் பம்பை வடபால் திருவண்வண்டூர்,Theru Neer Pambai Vadapaal Thiru Vanvandur - தெளிந்தநீரையுடைய பம்பையாற்றின் வடபக்கத்திலுள்ள தான திருவண்வண்டுரிலே (எழுந்தருளியிருக்கின்ற)
மாறு இல் போர் அரக்கன்,Maaru Il Por Arakkan - நிகரற்ற யுத்தம் செய்வதில்வல்லவனான இராவணனுடைய
மதிள்,Mathil - மதிள்முதலிய யாவும்
நீறு எழ,Neeru Ezha - பொடிபொடியாம்படி
செற்று,Settru - இலங்கையையழித்து (அதனால்)
உகந்த,Ugandha - திருவுள்ளமுவந்த
எறு சேவகனார்க்கு,Eru Sevakanaarkku - மஹாவீரனான ஸ்ரீராமபிரானிடத்திலே
என்னையும் உள்ள் என்மின்கள்,Ennaiyum Ull Enminkal - ரக்ஷ்யவர்த்திலே நானுமொருத்தி இருப்பதாகச் சொல்லுங்கோள்.
3237திருவாய்மொழி || (6-1- வைகல் பூங்கழி) (திருவண்வண்டூர்ப் பெருமானிடம் தலைவி பறவைகளைத் தூதுவிடல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத் தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறது.) 11
மின் கொள் சேர் புரி நூல் குறளாய் அகல் ஞாலம் கொண்ட
வன் கள்வ னடி மேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திரு வண் வண்டூர்க்கு
இன் கொள் பாடல் வல்லார் மதனர்; மின்னிடை யவர்க்கே.–6-1-11
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்,Min Kol Ser Purinool Kural Aai - ஒளியையுடைத்தாய், திருமேனிக்குச் சேர்ந்த்தான் யஜ்ஞோபவீதமணிந்த வாமனமூர்த்தியாகி
அகல் ஞாலம் கொண்ட,Agal Gnalam Konda - விசாலமான பூமி முழுவதையும் அளந்து கொண்ட
வன் கள்வன்,Van Kalvan - மஹாவஞ்சகனான எம்பெருமானுடைய
அடிமேல்,Adimel - திருவடிகள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan Sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த
பண் கொள் ஆயிரத்துள்,Pan Kol Aayirathul - பண்மிகுந்த ஆயிரத்தினுள்ளே
திருவண்வண்டூர்க்கு,Thiru Vanvandurukku - திருவண்வண்டூர் விஷயமான
இன் கொள் பாடல்,In Kol Paadal - பரமபோக்யமான பாடலான
இவை பத்தும்,Ivai Pathum - இப்பத்துப்பாசுரங்களையும்
வல்லார்,Vallar - ஓதவல்லவர்கள்
மின் இடையவர்க்கு மதனர்,Min Idaiyavarkku Madhanar - காமினிகளுக்குக் காமுகர்போல் எம்பெருமானுக்கு ஸ்ப்ருஹணீயராவர்கள்
3238திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (இப் பாசுரத்தில் “என்னுடைய பந்துங்கழலும் தந்துபோகு நம்பீ!“ என்றிருக்கையாலே பந்தும் கழலுமாகிற சில லீலோபகரணங்கள் எம்பெருமான் கையில் இருப்பதாகவும் அவற்றைப் பராங்குச நாயகி அபேக்ஷிப்பதாகவும் தெரிகிறது.) 1
மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1
மன்னுடை இலங்கை,Manudai Ilankai - அரசனையுடைத்தா யிருந்த லங்காபுரியினுடைய
அரண்,Aran - கோட்டைகளையெல்லாம்
காய்ந்த,Kaintha - சீறியழித்த
மாயவனே,Maayavane - ஆச்சரியசேஷ்டிதங்களை யுடையவனே
நம்பி,Nambi - ஸகலருணபரிபூரணனே!
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது கிருபையை அநுபவிப்பவர்களான
மின் இடை மடவார்கள் முன்பு,Min Idai Madavaarkal Munbu - மின்னற்கொடிபோன்ற இடையை யுடையவர்களான மாதர்களின் முன்னிலையில்
நான் அது அஞ்சுவன்,Naan Adhu Anjuvan - நான அதைப்பற்றி அஞ்சாநின்றேன், (அவர்கள் உன்னை உபேக்ஷிக்க நேருமென்பதுபற்றி அஞ்சுகின்றே னென்கை)
உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன்,Unnudaiya Soondaayam Naan Arivan - உன்னுடைய க்ருத்ரிம்மெல்லாம் நானறிவேன்
இனி அது கொண்டு செய்வது என்,Ini Adhu Kondu Seyvadhu En - உனக்கும் எனக்கும் ஸம் பந்தமற்றவின்பு உன்னுடையக்ருத்ரிமத்தால் உனக்கு ஸாத்யமானது என்ன இருக்கிறது?
என்னுடைய பந்தும் கழலும் தந்து,Ennudaiya Bandhum Kazhalum Thandhu - எனது பந்தையும் அம்மானையையும் தீருப்பிக் கொடுத்துவிட்டு
போகு,Pogu - உனக்கு விருப்பமான விடத்தேபோய்ச்சேர்
3239திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இவள் போகச் சொன்ன இடத்திலும் போகாதே இவளைப் பார்த்து மந்த ஸ்மிதம் பண்ணின அதிலே சிதில சிந்தையாய் எங்களை நாழியாதே உன் அபி மேதைகள் இருந்த பரிசாரத்திலே போய் அவர்கள் வருகைக்கு ஈடாக இருந்து குழலை ஊது என்கிறாள்.) 2
போகு நம்பீ! உன் தாமரை புரை கண்ணிணையும் செவ்வாய் முறுவலும்
ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோமே யாம்;
தோகை மா மயிலார்கள் நின்னருள் சூடுவார் செவி ஓசை வைத்தெழ
ஆகள் போக விட்டுக் குழலூது போயிருந்தே.–6-2-2
போகு நம்பீ!,Pogu Nambi - பிரானே! அப்பால்போ
உன்,Un - உன்னுடைய
தாமரை புரை கண் இணையும்,Thamarai Purai Kan Inaiyum - தாமரைபோன்ற கண்களிரண்டும்
செம் வாய் முறுவலும்,Sem Vai Muruvalum - சிவந்த அதர்தில் நின்றும் தோன்றுகிற சிரிப்பும்
ஆகுலங்கள் செய்ய,Aagulangal Seyya - வீணாக எங்களை ஆகுலப்போவதற்கே
அழிதற்கே,Azhitharkae - அதனால் சிதிலப்பட்டுப் போவதற்கே
நோற்றோமே,Noatrome - இட்டுப் பிறந்தவர்களன்றோ நாங்கள்
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது அருளை அநுபவிக்கப் பிறந்த
தோகை மா மாயிலார்கள்,Thogai Maa Mayilargal - தோகைவிரித்த நல்ல மயில்போன்ற கூந்தலையுடைய மாதர்கள்
ஓசை செவி வைத்து எழ,Osai Sevi Vaithu Ezha - (வேணுகானத்தின்) ஓசையைக்கேட்டு எழுந்து வரும்படியாக
ஆகள் போக விட்டு,Aagal Poga Vittu - பசுக்களை மேய்க்கப் போகவிட்டு
போய் இருந்து,Poy Irundhu - அங்கேறப் போயிருந்து
குழல் ஊது,Kuzhal Oothu - புல்லாங்குழலை ஊதிக் கொண்டுகிட.
3240திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின். – “உன்னுடைய திருக் கண்களினுடையவும் திருப் பவளத்தினுடையவும் அழகு இருந்தபடி என்!, கண்டும் கேட்டுமறியாத்தொருபடியான இவ்வழகு திருப்பாற்கடலிலே அம்ருத மதந ஸமயத்திலே அவதிர்ணையான பெரிய பிராட்டியோடு அன்று கலந்த கல்வியாலும் பிறந்ததில்லை, இப்படி பெரிய பிராட்டியிற்காட்டிலும் உனக்கு அபிமதைகளாய் உன்னை புஜிக்கப் பிறந்தவர்கள் ஆரோ வென்கிறாள்“ என்று.) 3
போயிருந்து நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை, நம்பீ! நின் செய்ய
வாயிருங் கனியும் கண்களும் விபரீதம் இந் நாள்;
வேயிருந் தடந் தோளினார் இத் திருவருள் பெறுவார் எவர் கொல்,
மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே?–6-2-3
நம்பி,Nambi - பிரானே!
போய் இருந்து,Poy Irundhu - எங்களைவிட்டு அப்பால் போயிருந்து
நின் புள்ளுவம் அறியாதவர்க்கு உரை,Nin Pulluvam Ariyadhaarkku Urai - உனது வஞ்சகங்களை அறியாதவர்களான சிலர் பக்கலிலே உன் மெய்போலும் பொய்களைச் சொல்லிக்கொண்டிரு
நின் செய்ய வாய் இரு கனியும்,Nin Seyya Vai Iru Kaniyum - உனது சிவந்த அதரமாகிற சிறந்த கனிபும்
கண்களும்,Kangalum - திருக்கண்களும்
இந்நாள் விபரீதம்,Innal Vibareedham - இப்போது முன்போல் அல்லகிடாய் (இதற்குமேல் முகத்தை மாற வைத்துக்கொண்டு சொல்லுகிறார்கள்)
மா இரு கடலை கடைந்த பெருமானாலே,Maa Iru Kadalai Kadaintha Perumanaale - அகாதமாய் விசாலமான கடலைக் கடைந்தவனான இப்பெரியோன் பக்கலிலே
இத்திரு அருள் பெறுவார்,Ithiru Arul Peruvaar - இப்படிப்பட்ட திருவருளைப் பெறுமவர்களான
வேய் இரு தட தோளினார்,Vey Iru Tada Tholinaar - வேய்போன்று பருத்து நெடிய தோள்படைத்தவர்கள்
யவர் கொல்,Yavar Kol - யாவரோ
3241திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அரை க்ஷணம் தாழ்த்தோம் என்னா-அசங்கத பாஷணங்களை சொல்லுகிறது என் -நான் பரதந்த்ரன் அல்லனோ -மாதா பிதாக்கள் போய் பசுக்களை மேய் என்று நியமித்தால் உங்கள் பக்கல் வரப்போமோ -இது ஒழிய வேறு ஒரு விளம்ப ஹேது இல்லை என்ன -அக்கடிதங்களை கடிப்பிக்கை நீ வல்லது ஓன்று அன்றோ -என்கிறாள்.) 4
ஆலி னீளிலை ஏழுலகு முண்டு அன்று நீ கிடந்தாய்; உன் மாயங்கள்
மேலை வானவரும் அறியார்; இனி எம் பரமே?
வேலினேர் தடங்கண்ணினார் விளையாடு சூழலைச் சூழவே நின்று
காலி மேய்க்க வல்லாய்! எம்மை நீ கழறேலே.–6-2-4
ஏழ் உலகும் உண்டு,Ezh Ulagum Undu - ஸமஸ்த லோகங்களையும் பிரளயங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து
ஆலின் நீள் இலை,Aalin Neel ilai - ஆலமரத்தின் இளந்தளிரிலே
அன்று நீ கிடந்தாய்,Andru Nee Kidandhaay - முன்னொருகாலத்தில் கிடந்தவனல்லையோ நீ
உன் மாயங்கள்,Un Maayangal - உனது மாயச்செயல்களை
மேலே வானவரும் அறியார்,Mele Vaanavarum Ariyaar - மேற்பட்டவர்களான நித்யஸூரிகளும் அறியார்கள்,
இனி எம் பரமே,Ini Em Parame - அப்படியிருக்க எம்மால் அறியப்போமோ,
வேலின் நேர் தட கண்ணினார்,Velin Ner thada Kanninaar - வேல்போன்று பெரிய கண்களை யுடையவர்களான மாதர்கள்
விளையாடு,Vilaiyaadu - விளையாடுமிடமான
சூழலை,Soozhalai - விலாஸ ஸ்தானங்களை
சூழவே நின்று,Soozhave Nindru - பற்றிக்கொண்டிருந்து
காலி மேய்க்க வல்லாய்,Kaali Meikka Vallai - பசுக்களைமேய்க்கவல்ல பெருமானே!
எம்மை நீ சுழறேல்,Emmay Nee Suzharel - இந்தப் பொய்கள் எங்களுக்குச் சொல்லவேண்டா.
3242திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உன் பொய்க்குப் பெரு நிலை நிற்கும் பரிகரத்தை யுடைய நீ அஹ்ருதயமாக எங்கள் பேச்சைக் கொண்டாடுவது இனிய பேச்சையுடைய எங்கள் பூவையையும் கிளியையும் கொண்டாடுவது ஆகாதே கொள்-என்கிறாள்.) 5
கழறேல் நம்பி! உன் கை தவம் மண்ணும் விண்ணும் நன்கு அறியும் ; திண் சக்கர
நிழறு தொல் படையாய்! உனக்கு ஒன்று உணர்த்துவன் நான்
மழறு தேன் மொழியார்கள் நின்னருள் சூடுவார் மனம் வாடி நிற்க எம்
குழறு பூவையொடும் கிளியோடும் குழகேலே.–6-2-5
நம்பீ கழறேல்,Nambi Kazharel - பிரானே! மேலிட்டு வார்த்தைசொல்வதை எங்களிடம் வைத்துக்கொள் வேண்டா!
உன் கைதவம்,Un Kaidhavam - உனது கபடங்களை
மண்ணும் விண்ணும் நன்கு அறியும்,Mannum Vinnum Nangu Ariyum - உபய விபூதியும் நன்றாக அறியும்
நிழறு,Nizharu - இஷ்டப்படி நடத்தப்பெறுகிற
திண் சக்கரம் தொல்படையாய்,Thin Chakkaram Tolpadiyai - திண்ணிய சக்கரமாகிற அநாதியான ஆயுதத்தை யுடையவனே!
உனக்கு நான் ஒன்று உணர்த்துவன்,Unakku Naan Ondru Unarthuvan - உனக்கு நான் ஒருவிஷயம் அறிவிக்கக் கேளாய்,
நின் அருள் சூடுவார்,Nin Arul Sooduvaar - உனது க்ருபைக்குப்பாத்திர பூதைகளான
மழறு தேன்மொழியார்கள்,Mazharu Thenmozhiyaarkal - மழலைத் தேன்மொழியார்களான மாதர்கள்
மனம் வாடி நிற்க,Manam Vaadi Nirka - நெஞ்சுகொதித்து நிற்கும்படியாக
எம் குழறு பூவை யொடும்,Em Kuzhru Poovai Yodum - அநக்ஷர ரஸமாகப்போசுவின்ற எமது பூவைப் பறவையோடும்
கிளியோடும்,Kiliyodum - கிளியோடும்
குழகேல்,Kuzhagel - லீலாரஸம் கொண்டாட வேண்டா நீ.
3243திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -மேனாணித்துக் குழமணனை எடுத்த அவனைக் குறித்து உன்னுடைய ஈச்வரத்வம் எங்களோடு காட்டாதே அதுக்குத் தகுவாரோடே காட்டு -என்கிறாள் .) 6
குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை செய்து கன்மம் ஒன்றில்லை;
பழகி யாம் இருப்போம் பரமே இத் திருவருள்கள்?
அழகியார் இவ் வுலகு மூன்றுக்கும் தேவிமை தகுவார் பலருளர்;
கழகம் ஏறேல், நம்பி! உனக்கும் இளைதே கன்மமே.–6-2-6
நம்பீ,Nambi - பிரானே!
குழகி,Kuzhagi - லீலாரஸம் கொண்டாடி
எங்கள் குழமணன் கொண்டு,Engal Kuzhaman kondu - எங்களுடைய மரப்பாச்சியை யெடுத்துக் கொண்டு
கோயின்மை செய்து,Koyinmai Seydhu - கேட்பாரற்ற செயல்களைச் செய்வதனால்
கன்மம் ஒன்று இல்லை,Kanmam Ondru Illai - உனக்கு ஒரு காரியமும ஸித்தித்ததாகாது
யாம் பழகி இருப்போம்,Yaam Pazhagi Irupom - நாங்கள் வெகுநாளாகவே உம்மோடு பழகி உமது யோக்யதைகளைத் தெரிந்துகொண்டிருக்கின்றோம்.
இத் திரு அருள்கள் பரமே,Idhu Thiru Arulgal Paramae - உம்முடைய ஆசைப்பெருக்கான காரியங்களுக்கு. நாங்கள் இலக்காகப் போருமோ (இவை எங்களால் தாங்க முடியா)
இ உலகு மூன்றுக்கும் அழிகியார்,I Ulaku Moondrukkum Azhigiyar - இம்மூவுலகத்தினுள்ளும் அழகிற்சிறந்தவர்களாயும்
தேவிமை தருவார்,Thevimaai Tharuvaar - உமக்குத் தேவிகளாயிருக்கத் தகுந்தவர்களாயுமுள்ள மாதர்கள்
பலர் உளர்,Palar Ular - பலருண்டு,
கழகம் ஏறேல்,Kazhagam Erel - எங்கள் திரளிலே பலாத்காரமாகப் புகவேண்டா
கன்மம்,Kanmam - இப்படிப்பட்ட செய்கையனது
உனக்கும் இளைது,Unakkuum Ilaiuthu - உன்மனத்தால் பார்த்தாலும் பால்ய லௌல்யமாகத் தோற்றக்கூடியதே.
3244திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 7
கன்மமன்று எங்கள் கையில் பாவை பறிப்பது கடல் ஞாலம் உண்டிட்ட
நின்மலா! நெடியாய்! உனக்கேலும் பிழை பிழையே;
வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி; அது கேட்கில் என்னைமார்
தன்மம் பாவம் என்னார்; ஒரு நான்று தடி பிணக்கே.–6-2-7
கடல் ஞாலம் உண்டிட்ட,Kadal Gnalam Undittu - கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட
நின்மலா,Ninmala - விமலனே!
நெடியாய்,Nediyaai - பெரியோனே!
எங்கள் கையில் பாவை பறிப்பது,Engal Kaiyil Paavai Parippadhu - எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது
கன்மம் அன்று,Kanmam Andru - செய்யத்தகுந்த காரியமன்று
உனக்கேலும் பிழை பிழையே,Unakkellum Pizhai Pizhaiye - இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்)
எம்மை,Emmay - எங்களை நோக்கி
வன்ம்மே சொல்லி,Vanmme Solli - மருமமான வார்த்தைகளைச் சொல்லி
விளையாடுதி,Vilaiyaaduthi - விளையாடுகின்றாய்
என் ஐம்மார்,En Aimmaar - எங்களுடைய ஸஹோதரர்கள்
அது கேட்டில்,Adhu Keettil - இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில்
தன்மம் பாவம் என்னார்,Tanmam Paavam Ennar - நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள்
ஒரு நான்று தடி பிணக்கே,Oru Naandru Tadi Pinakke - ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும்.
3245திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ரயோஜன நிரபேஷமாக சர்வ லோகத்தையும் ரஷிக்கும் பெருமையை யுடைய உனக்கு எங்களை ஸ்பர்சித்துகே கையில் பாவையைப் பறிக்கிற இது கார்யம் அன்று என்கிறாள்.) 8
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதியாதது ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர் ஞான மூர்த்தினாய்!
இணக்கி எம்மை எம்தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை
உணக்கி, நீ வளைத்தால், என் சொல்லார் உகவாதவரே?–6-2-8
யாவையும் யாவரும்,Yaavaiyum Yaavarum - அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும்
பிணக்கி,Pinakki - ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே)
பிழையாமல்,Pizhaiyaamal - ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி
பேதித்தும்,Pedithum - தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும்
பேதி யாதது,Pethi Yaadhathu - அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான
ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம்,Oru Kanakku Ilkeerthi Vellam - அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும்
கதிர்ஞானம்,Kathirgnanam - ஸங்கல்பருபஜ்ஞானத்தையும்
மூர்த்தியையும்,Moorthiyaiyum - வடிவாகைவுடையவனே
எம் தோழிமார்,Emm Thozhimaar - எமது தோழிமார்கள்
எம்மை இணக்கி,Emmai Inakki - எங்களை இசைவித்து
விளையாட போதுமின் என்ன,Vilaiyada Podhumin Enna - விளையாட வாருங்கோள் என்றழைக்க
போந்தோமை,Poandomai - (நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை)
நீ உணக்கி வளைத்தால்,Nee Unakki Valaithaal - நீ நெருக்கித் தகைந்தால்
உகவாதவர் என் சொல்லார்,Ugavaadhavar En Chollaar - வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள்.
3246திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) ̐(ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இவன் தகைந்தவாறே கடக்கப் போய்ச் சிற்றில் இழைக்க -நம்மை அநு வர்த்தித்துப் போகாதே அநாதரித்தார்கள் என்கிற சீற்றத்தால் சிற்றிலை அழிக்க நாங்கள் உன் முக சோபையைப் பார்த்திருந்து சிற்றில் இழையாதபடி இத்தை அழித்தாயே என்று இன்னாதாகிறாள்.) 9
உகவையால் நெஞ்ச முள்ளுருகி உன் தாமரைத் தடம் கண் விழிகளின்
அகவலைப் படுப்பான் அழித்தாய் உன் திருவடியால்;
தகவு செய்திலை; எங்கள் சிற்றிலும் யாமடு சிறு சோறும் கண்டு,நின்
முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே.–6-2-9
உகவையால்,Uvavaiyal - அந்தரங்கப்ரீதியாலே
நெஞ்சம் உள் உருகி,Nenjam ul urugi - நெஞ்சு உள்ளேயுருகி
உன் தாமரை தடம் கண்விழிகளின் வலை அகப்படுப்பான்,Un tamarai tadam kanvizhikalin valai agapaduppan - உன்னுடைய தடந்தாமரைக் கண்ணோக்கமாகிற வலினுள்ளே நாங்கள் அகப்படும்படி பண்ணுவதற்காக
உன் திருஅடி யால்அழித்தாய்,Un tiruadi yalazhithai - உன் திருவடியாலுதைத்து நொறுக்கித் தள்ளினாய்
எங்கள் சிற்றிலும்,Engal siRrilum - நாங்கள் இழைக்கின்ற சிற்றிலையும்
யாம் அடு சிறு சோலும் கண்டு,Yam adu siRu solum kandu - நாங்கள் சமைக்கிற சிறு சோற்றையுங்கண்டு
நின் முகம் ஒளி திகழ,Nin mugam oli thigazha - உன்னுடைய திருமுகமண்டலம் நன்கு பிரகாசிக்கும்படியாக
முறுவல் செய்து நின்றிலே,MuRuval seythu nindrile - சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்த வேண்டியிருக்க, அப்படிச் செய்யாமல் திருவடியாலும் அழித்தாய்.
தகவு செய்திலே,Thagavu seythile - இரக்கமான காரியம் செய்தாயல்லை
3247திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ப்ரணயரோஷமென்பது நெடும்போது பெருகிச் செல்லமாட்டாது, அப்படி நெடுகிச் செல்லுவது ரஸிகர்களுடைய படியுமன்று. ஊடலானது கூடலிலே மூட்டியல்லது நிற்காதாகையினால் இனிக் கூடல் தலைக்காட்டத் தொடங்கிவிட்டது. பிரானே! நீதான் வெற்றிக்கொண்டாய், நாங்கள் தோற்றோம் என்று முடிக்கிறார்கள்.) 10
நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர் கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன் ஞாலம் முன் படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.–6-2-10
நின்று இலக்கு முடியினாய்,Nindru ilakku mudiyinai - நிலைநின்று விளங்குகிற திருவபிஷேகத்தை யுடையவனே!
இருபத்தோல் கால்,Irupatthol kal - இருபத்தொரு தலைமுறை
அரசுகைளை கட்ட,Arasukalai kattu - அரசர்களை வேர்ப்பறியாகப் பறித்த
வென்றி நீள் மழுவா,Venri neel mazhuva - ஜயசீலனான பெரிய மழுப்படையை யுடையவனே!
முன் வியல் ஞாலம் படைத்தாய்,Mun viyal gnalam padaithai - முன்பு விஸ்தீர்ணமான ஜகத்தைப் படைத்தவனே!
இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்ய தோன்றிய,Indru iv aayar kulaththai veedu uyyath thondriya - இப்போது இவ்விடைகுலத்தை உஜ்ஜீவிக்கச் செய்வதற்காக அவதரித்த
கரு மாணிக்கம் சுடர்,Karu maanikam sudar - கருமாணிக்கம் போன்ற திருநிறத்தை யுடையவனே!
ஆய்ச்சியாம்,Aaychiyam - இடைக்சிகளான நாங்கள்
என்றும்,Endrum - எந்நாளும்
நின் தன்னால் நலிவே படுவோம்,Nin thannal nalive paduvom - உன்னால் ஹிம்ஸைப்படுகிறவர்களே யன்றி ஸுகப்படுகிறவர்களல்லோம்.
3248திருவாய்மொழி || (6-2–மின்னிடை மடவார்கள்) (தலைவன் காலம் தாழ்த்து வரக்கண்ட தலைவி ஊடல்கொண்டு உரைத்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி - அதில் ஸ்நேஹினியான யசோதைபி பிராட்டி வெண்ணெய் களவு கண்டாய் என்று பொடித்த போது போலே ஆழ்வார் தாம் ப்ராணாய கோபத்தாலே எம்பெருமானோடு கலப்பேன் அல்லேன் என்று அகல அது பொறுக்க மாட்டாமே தளர்ந்த தளர்த்தியை அநு சந்தித்து இனியராய் அவ்வெம்பெருமானை எத்தின இத்திருவாய் மொழியை இப்பான வ்ருத்தி இன்றிக்கே சொன்னார்க்கும் எம்பெருமான் ஸந்நிஹிதனாய் இருக்கச் செய்தே -பிறங்கி-செறிந்து -தாம் பட்ட துக்கம் பட வேண்டா என்கிறார் .) 11
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டழு
கூத்த அப்பன் தன்னைக் குருகூர்ச் சடகோபன்
ஏந்திய தமிழ் மாலை ஆயிரத்துள் இவையும் ஒர்பத்து இசையொடும்
நாத்தன்னால் நவில உரைப்பார்க்கு இல்லை நல் குரவே.–6-2-11
அன்று,Andru - பண்டொருகாலத்தில்
வெண்ணெய் வார்த்தையுள்,Vennai varthaiyul - வெண்ணெய்களவு ஸம்பந்தமான ப்ரஸ்தாவம் வந்தவளவிலே
ஆய்ச்சி ஆகிய அன்னையால்,Aaychchi aagiya annaiyal - இடைக்குலத்துகித்த யசோதை யாகிய தாயாலே
அழு கூத்தன்,Azhukuuthan - அழுகையாகிற கூத்தைச் செய்தவனான
அப்பன் தன்னை,Appan thannai - ஸ்வாமியைக் குறித்து
குரு கூர் சடகோபன்,Kurukoor sadagopan - ஆழ்வார்
ஏத்திய,Eththiya - ஸ்தோத்ர்ரூபமாகச் செய்த
தமிழ் மாலை ஆயரத்துள்,Tamil maalai aayaraththul - தமிழ்த் தொடையான ஆயிரம் பாசுரங்களில்
இவையும் ஓர் பத்து,Ivaiyum or paththu - இப்பத்துப் பாசுரங்களை
இசையொடும்,Isaiyodum - இசையோடு கூட
நா தன்னால் நவில உரைப்பார்க்கு,Naa thannal naviLa uraipparkku - நாவினாலே செறியச்சொல்லுமவர்களுக்கு
நல்குரவு இல்லை,Nalguravu illai - பகவதநுபவம் கிடையாமையாகிற தாரித்ரியம் இல்லையாம்.
3249திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேர விட்டுக் கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காண நின்றே னென்கிறார்.) 1
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1
நல்குரவும் செல்வும்,Nalguravum selvum - தாரித்ரியமும் ஐச்சரியமுமாய்
நரகும் சுவர்க்கமும் ஆய்,Naragum suvargamum aai - நரகமும் ஸ்வர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும்,Vel pagaiyum natpum - எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய்
விடமும் அமுதமும் ஆய்,Vidamum amudamum aai - விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி)
பல்வகையும் பரந்த பெருமான்,Palvakaiyum parandha perumaan - பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய்
என்னை ஆள்வானை,Ennai aalvaanai - என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை
செல்வம் மல்கு குடி,Selvam malku kudi - செல்வம் நிரம்பிய ஸந்நிதியான
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரிலே
கண்டேன்,Kanden - காணப்பெற்றேன்.
3250திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஐங்கருவிகண்டவின்பம் * என்கிறபடியே செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஐந்து உறுப்புகளாலும் அநுபவிக்கப்படுகிற இன்பமும் அதற்கு எதிர்த்தட்டான துன்பமும் தானேயாயிருக்கை! வைஷயிக ஸுகாபாஸங்களையே சிலர் இன்பமாக நினைக்கும்படியும் அவற்றையே சிலர் துன்பமாக நினைக்கும்படியும் செய்யுமவ னென்கை.) 2
கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய்த்
தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்க்
கண்டு கோடற்கரிய பெருமான் என்னை ஆள்வானூர்
தெண் திரைப் புனல் சூழ் திருவிண்ணகர் நன்னகரே.–6-3-2
கண்ட இன்பம் துன்பம்,Kanda inbam tunbam - உலகங்கண்ட ஸுகதுக்கங்களாயும்
கலக்கங்களும் தேற்றமும் ஆய்,Kalakkangalum theRramum aai - கலக்கமும் தெளிவுமாய்
தண்டமும் தண்மையும்,Thandamum thaNmaiyum - நிக்ரஹமும் அநுக்ரஹமுமாய்
தழலும் நிழலும் ஆய்,Thazhalum nizhalum aai - வெப்பமும் தட்பமுமாய்
கண்கொள்தற்கு அரிய பெருமான்,Kankoldharku ariya perumaan - ஒருவரால் பரிச்சேதித்து அறியமுடியாத விபூதி விஸ்தாரத்தை யுடையனாய்
என்னை ஆள்வான்,Ennai aalvaan - என்னை அடிமைகொள்பவனான ஸர்வேச்வரனுடைய
ஊர்,Oor - திவ்யதேசம் எதுவென்றால்,
தெண் திரை புனல் சூழ்,Then tirai punal soozh - தெளிந்து அலையெறிகின்ற தீர்த்தம் சூழ்ந்த
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரென்கிற
நல் நகர்,Nal nagar - அழகிய நகரமாகும்.
3251திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -திரு விண்ணகர் சேர்ந்த பிரானுடைய கல்யாண குணங்களை ஒழிய ஒருவருக்கும் உத்தாரகம் இல்லை என்கிறார் -நகரமும் நாடுகளும்-சிறுமை பெருமையாலே விரோதம் சொல்லிற்று / நிலனாய் விசும்பாய்ச் -ரூபியான நிலனும் அரூபியான விசும்புமாய் / புகர்கொள் கீர்த்தி-என்றது திரு நாட்டில் காட்டில் திரு விண்ணகரிலே புகுந்த பின்பு அவனுடைய கல்யாண குணங்கள் நிறம் பெற்ற படி) 3
நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்
நிகரில் சூழ் சுடராய் இருளாய் நிலனாய் விசும்பாய்ச்
சிகர மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தபிரான்
புகர் கொள் கீர்த்தி அல்லால் இல்லை யாவர்க்கும் புண்ணியமே.-6-3-3
நகரமும்,Nagaramum - நகரத்தில் உள்ளவர்களும்
நாடுகளும்,Naadugalum - நாட்டிலுள்ளவர்களுமாய்
ஞானமும்,Gnanamum - அறிவும்
மூடமும் ஆய்,Moodamum aai - அறியாமையுமாய்
நிகர் இல் சூழ் சுடர் ஆய்,Nigar il soozh sudar aai - ஒப்பற்ற பரந்த ஒளியும்
இருளாய்,Irulaai - இருளுமாய்
நிலன் ஆய்,Nilanaai - நிலமும்
விசும்பு ஆய்,Visumbuaai - ஆகாசமுமாய்
சிகர,Sikara - சிகரங்களையுடைய
மாடங்கள் சூழ்,Maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரை
சேர்ந்த பிரான்,Serndha piraan - சேர்ந்த ஸ்வாமியின்
புகர் கொள்,Pugar kol - ஒளி பொருந்திய
கீர்த்தி அல்லால்,Keerthi allaal - குணகீர்த்தியைத் தவிர
யாவர்க்கும்,Yaavarkkum - எவருக்கும்
புண்ணியமே,Punniyame - உய்வதற்குரிய புண்ணியம்
இல்லை,Illai - வேறு இல்லை
3252திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் கீழ்ச் சொன்ன புகர் கொள் கீர்த்தியானது புண்ய பாப அநு பந்தி பதார்த்த விபூதிகனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நிர்ஹேதுக கிருபை என்கிறார்) 4
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டு கொண்மின்கள் கைதவமே.–6-3-4
புண்ணியம்,punniyam - புண்ணியமும்
பாவம்,paavam - பாபமுமாய்
புணர்ச்சி,punarcci - சேர்க்கையும்
பிரிவு என்று இவை ஆய்,pirivu enru ivai aai - பிரிவுமாய்
எண்ணம் ஆய்,ennam aai - நினைவும்
மறப்புஆய்,marappu aai - மறதியுமாய்
உண்மை ஆய்,unmai aai - உண்மைப் பொருளும்
இன்மைஆய்,inmai aai - பொருள் இல்லாமையுமாய்
அல்லன் ஆய்,allan aai - பாப புண்யங்களை நியமிப்பவனாய்
திண்ண,thinna - உறுதியான
மாடங்கள் சூழ்,maadangal soozh - மாடங்கள் சூழ்ந்த
திருவிண்ணகர்,tiruvinnagar - திருவிண்ணகரை
சேர்ந்த பிரான்,serndha piraan - சேர்ந்த ஸ்வாமியான
கண்ணன்,kannan - கண்ணனின்
இன் அருளே,in arule - இனிய அருளே
கைதவமே,kaithavame - உய்வதற்கு வழி என்று
கண்டு கொண்மின்கள்,kandu konminkal - கண்டு கொள்ளுங்கள்
3253திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (சிறியார் பெரியார் என்கிற வாசின்றிக்கே அனைவர்க்கும் காவலோன் திருவிண்ணகரப்ப னென்கிறார்) 5
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்ச்
செய்த திண் மதிள் சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெருந் தேவுடை மூவுலகே.–6-3-5
கைதவம் செம்மை,Kaithavam semmai - கோணலும் நேர்மையுமாய்
கருமை வெளுமையும் ஆய்,Karumai veLmaiyum aai - கறுப்பும் வெளுப்புமாய்
மெய் பொய்,Mey poi - மெய்யும் பொய்யுமாய்
இளமை முதுமை,iLamai mudhumai - யௌவனமும் கிழத்தனமுமாய்
புதுமை பழமையும் ஆய்,Puthumai pazhamaiyum aai - நவீநத்வமும் ஜீர்ணத்தவமுமாய்க்கொண்டு
செய்த திண் மதின் சூழ்,Seydha thiN madhin soozh - வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட திடமான மதிளாலே சூழப்பட்ட
திருவிண்ணகர்,TiruviNNagar - திருவிண்ணகரிலே
சேர்ந்த பிரான்,Serndha piraan - வர்த்திக்கிற ஸர்வேச்வரன்
பெய்த காவு கண்டீர்,Peydha kaavu kandeer - ஆக்கின சோலையன்றோ
பெரும் தேவு உடை மூ உலகு,Perum dhevu udai mu ulagu - பிரமன் முதலான உத்க்ருஷ்ட தேவதைகளை யுடைத்தான மூவுலகமும்.
3254திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வ ரஜஸ் தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது) 6
மூவுலகங்களுமாய் அல்லனாய் உகப்பாய் முனிவாய்
பூவில் வாழ் மகளாய்த் தவ்வையாய்ப் புகழாய்ப் பழியாய்த்
தேவர் மேவித் தொழும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
பாவியேன் மனத்தே உறைகின்ற பரஞ் சுடரே.–6-3-6
மூ உலகங்களும் ஆய்,Moo ulagangalum aai - (ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும்
அல்லன் ஆய்,Allan aai - (அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய்
உகப்பு ஆய் முனிவு ஆய,Ugappu aai munivu aai - ராகத்வேஷங்களாயும்
பூவில் வாழ் மகள் ஆய்,Poovil vaazhmahal aai - ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும்
தௌவை ஆய்,Thauvai aai - மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு
தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Thevar mevi thozhum tiru vinnagar serndha piraan - தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான்
பாவியேன் மனத்தே,Paaviyaan manathe - பாவியான என்னுடைய மனத்திலே
உறைகின்ற,Uraiginra - நித்யவாஸம்பண்ணுகின்ற
பரம் சுடர்,Param sudar - பரஞ்சோதியாவன்.
3255திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -எத்தனையேனும் அளவுடையார்க்கும் வலிய புகல் அவன் அல்லது இல்லை என்கிறார்) 7
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய்
கரந்தும் தோன்றியும் நின்றும் கைதவங்கள் செய்தும் விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
வரங் கொள் பாதமல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே.–6-3-7
பரம் சுடர் உடம்பு ஆய்,Param sudar udambu aai - அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும்
அழுக்கு பதித்த உடம்பு ஆய்,Azhukku pathitha udambu aai - ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும்
கரந்தும் தோன்றியும் நின்றும்,Karandhum thondriyum nindrum - மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும்
கைதவங்கள் செய்தும்,Kaithavangal seythum - வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ)
விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்,ViNNor sirangalal vaNangum tiru viNNagar serndha piraan - தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய
வரம் கொள் பாதம் அல்லால்,Varam koL paadham allaal - சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர
யாவர்க்கும் வன் சரண் இல்லை,Yaavarkkum van saran illai - யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை.
3256திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அநு கூல பிரதிகூல விஷயங்களான ஸ்வபாவங்களை யுடைய சர்வேஸ்வரனாய் – ஆஸ்ரித பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் எனக்கு அசாதாரணமான புகலிடம் என்கிறார்.) 8
வன் சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெங் கூற்றமுமாய்த்
தன் சரண் நிழற் கீழ் உலகம் வைத்தும் வையாதும்
தென் சரண் திசைக்குத் திரு விண்ணகர்ச் சேர்ந்த பிரான்
என் சரண் என் கண்ணன் என்னை ஆளுடை என்னப்பனே.–6-3-8
சுரர்க்கு வன் சரண் ஆய்,Surarkku van saran aai - தேவர்களுக்குச் சிறந்த புகலிடமாய்
அசுரர்க்கு வெம்கூற்றமும் ஆய்,Asurarkku vemkooRRamum aai - அஸுரர்களுக்கு வலிய மிருத்யுவாய்
உலகம் தன் சரண் நிழல் கீழ் வைத்தும்வையாதும்,Ulagam than saran nizhal keezh vaithumvaiyaadhum - உலகத்தைத் தன் திருவடிச் சரயையிலே ஒதுக்கியும் ஒதுக்காமலும் (இருந்துகொண்டு)
தென் திசைக்கு சரண் திரு விண்ணகர் சேர்ந்த பிரான்,Then dhisaiyukku saran tiru vinnagar serndha piraan - தென்திசைக்குள்ளே புகலிடமான திருவண்ணகரிலே தங்கியுள்ள பெருமான்
என்சரண்,En saran - எனக்கு சரண்யன்
என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயன்
என்னை ஆளுடை என் அப்பன்,Ennai aaludai en appan - என்னை அடிமைகொண்ட மஹோபகாரகன்.
3257திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்னுடைய சிரமம் எல்லாம் தீரும்படி-தன்னுடைய பாதச் சாயையை எனக்கு -நான் அல்லேன் -என்ன -வலியது தந்தான் என்கிறார்.) 9
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்ப்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
மின்னப் பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தன தாள் நிழலே.–6-3-9
எனக்கு என் அப்பன் ஆய் இகுள் ஆய் என்னை பெற்றவள் ஆய்,Enakku en appan aai igul aai ennai petRavaL aai - எனக்குத் தந்தையாயும் செவிலித்யாயும் பெற்றதாயாயும்
பொன் அப்பன் மணி அப்பன் முத்து அப்பன் என் அப்பனும் ஆய்,Pon appan maNi appan muthu appan en appanum aai - பொன் மணி முத்து இவற்றின் தன்மைபோன்ற தன்மையை யுடையனுயும்மஹோபகாரகனாயுமிருந்துகொண்டு
மின்ன பொன் மதின் சூழ் திரு விண்ணகர் சேர்ந்த அப்பன்,Minna pon madhin soozh tiru viNNagar serndha appan - ஒளிவிடும்படி பொன்மயமான மதிளாலே சூழப்பட்ட திருவண்ணகரிலே தங்கும் ஸ்வாமி யானவன்
தன் ஒப்பார் இல் அப்பன்,Than oppaar il appan - தன்னோடொத்தார் இல்லாத மஹான்!
தன தான் நிழல் தந்தனன்,Thana thaan nizhal thanthanan - (எனக்குத்) தனது திருவடிநிழலைக் கொடுத்தருளினன்.
3258திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -இப்படி பரஸ்பர விருத்த ஆகாரமான சகல சராசரங்களையும் விபூதியாகயுடைய சர்வேஸ்வரன் திருவடிகள் அல்லது வேறு ரக்ஷகமுடையோம் அல்லோம் -இத்தை நிரூபித்துக் கொள்ளுங்கோள் என்று உபதேசித்து முடிக்கிறார்.) 10
நிழல் வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச்
சுழல்வன நிற்பன மற்றுமாய் அவை அல்லனுமாய்
மழலை வாய் வண்டு வாழ் திரு விண்ணகர் மன்னு பிரான்
கழல்கள் அன்றி மற்றோர் களை கண் இலம்; காண்மின்களே.–6-3-10
நிழல் வெய்யில்,Nizhal veyyil - நிழலாயும் வெய்யிலாயும்
சிறுமை பெருமை,Sirumai perumai - அணுத்வமாயும் விபுத்வமாயும்
குறுமை நெடுமையும் ஆய்,Kurumai netumaiyum aai - ஹ்ரஸ்வத்வமாயும் தீர்க்கத்வமாயும்
சுழல்வன நிற்பன மற்றும் ஆய,Suzhalvan nirpanum aai - ஜங்கமங்களாயும் ஸ்தாவரங்களாயும் மற்றுமுள்ள பதார்த்தங்களாயும்
அவை அல்லனும் ஆய்,Avai allanum aai - அவற்றினுடைய ஸ்வபாவத்தையுடையனல் லாதவனாயும் இருந்து கொண்டு
மழலை வாய் வண்டு வாழ் திரு வண்ணகர் மன்னுபிரான்,Mazhalai vaay vandu vaazh tiru vannagar mannupiran - மழலைப்பேச்சை யுடையவண்டுகள் களித்துவர்த்திக்கிற திருவிண்ணகரிலே நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய
கழல்கள் அன்றி,Kazhalkal andri - திருவடிகள்தவிர
மற்று ஓர் களைகண் இலம்,Matru or kalaign ilam - வேறொரு ரக்ஷகவஸ்துவை யுடையோமல்லோம்
காண்மின்கள்,Kanminkal - இதை ஸத்யமென்று கொள்ளுங்கள்
3259திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (இத் திருவாய்மொழியை அதிகரிக்க வல்லவர்கள் நித்ய ஸூரிகளுக்கும் கௌரவிக்கத் தகுந்தவராவர் என்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறார்.) 11
காண்மின்கள் உலகீர்! என்று கண் முகப்பே நிமிர்ந்த
தாளிணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
ஆணை ஆயிரத்துத் திரு விண்ணகர்ப் பத்தும் வல்லார்
கோணை இன்றி விண்ணோர்க் கென்று மாவர் குரவர்களே.–6-3-11
உலகீர்,ulagir - உலகத்திலுள்வர்களே!
கரண்மின்கள் என்று,karanminkal enru - இந்த விநோதத்தைக் காணுங்கோள் என்று (சொல்பவன் போன்று)
கண் முகப்பே நிமிர்ந்த,kan mukappe nimirnda - கண்ணெதிரே ஓங்கி வளர்ந்த
தான் இணையன் தன்னை,thaan inaiyan thannai - உபயபாதங்களை யுடையவனான எம்பெருமான் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,kurukoor sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச் செய்த
ஆணை ஆயிரத்து,aanai aayirathu - பகவதாஜ்ஞா ரூபமான ஆயிரத்தினுள்ளும்
திருவிண்ணகர் பத்தும் வல்லார்,tiruvinnagar paththum vallaar - திருவிண்ணகர் விஷயமான இப்பதிகத்தை ஓத வல்லவர்கள்
விண்ணோர்க்கு,vinnorkku - நிர்யஸூரிகளுக்கு
கோணை இன்றி ,konai indri - மிறுக்கு இல்லாமல்
என்றும் குரவர்கள் ஆவர்,endrum kuravargal aavar - எப்போதும் கௌரவிக்கத்தகுந்தவராவர்கள்.
3260திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ராஸக்ரீடை, கோவர்த்தநோத்தரணம், காளியமர்த்தனம் என்கிற மூன்று அபதானங்களை இதிற்பேசி இனியராகிறார்.) 1
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1
ஆய்ச்சியரோடு,Aichchiyarodu - கோபிமார்களோடு
குரவை கோத்ததும்,Kuravai koththathum - ராஸக்ரீடை செய்த தென்ன
குன்றம் ஒன்று ஏந்தியதும்,Kunram ondru yenthiathum - கோவர்த்தன மென்கிற மலையொன்றைக் குடையாக வெடுத்ததென்ன,
உரவு நீர் பொய்கை,Uravu neer poigai - முதிர்ந்த ஜலத்தையுடைத்தான யமுனைப் பொய்கையில்
நாகம் காய்ந்ததும்,Naagam kaainthathum - காளியநாகத்தை முனிந்ததென்ன
உட்பட,Utpada - ஆகிய இவை முதலாக
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவகைப்பட்டவையான
அரவில் பள்ளி பிரான் தன் மாயம் வினைகளையே அலற்றி,Aravil palli piraan than maayam vinaigalaie alatri - நாகபர்யங்கசயனனான கண்ணபிரானது அற்புதசேஷ்டி தங்களையே வாயாரப்பேசி
நல் இரவ்வும் பகலும் தவர்கிலம்,Nal iravvum pagalum thavargilam - வாய்ந்த இரவிலும் பகலிலும் ஓய்கின்றிலோம்.
நமக்கு என்ன குறை,Namakku enna kurai - இங்ஙனே இடைவீடின்றி அநுபவிக்கப்பெற்ற நமக்கு என்ன குறையுண்டு.
3261திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆச்சர்யமான ஆகாரத்தை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய நினைத்தார் நெஞ்சை நெகிழப் பண்ணும் சேஷ்டிதங்களை ச ஸ்நேஹ அநு சந்தானம் பண்ணிக் காலம் எல்லாம் போகா நின்றது – நித்ய அனுபவம் பண்ணுகிற விலக்ஷண தேசம் எனக்கு சத்ருசமோ -என்கிறார்) 2
கேயத் தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண்
வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல
மாயக் கோலப் பிரான்தன் செய்கை நினைந்து மனம் குழைந்து
நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2
கேயம் தீம் குழல் ஊதிற்றும்,Keyam theem kuzhal oothiththum - சிறந்த கானமாக மதுரமான ய்ங்குழலை ஊதினதென்ன.
நிரை மேய்த்ததும்,Nirai meiththathum - பசுக்கூட்டங்க மேய்த்ததென்ன
கெண்டை ஒண்கண் வாசம் பூ குழல் பின்னை தோள்கள் மணந்ததும்,Kendaionkan vaasam poo kuzhal pinnai tholkaL mananthathum - கென்னட மின்போன்று அழகிய கண்களையும் நறுமணம்மிக்க பூக்களணிந்த கூந்தலையுமுடைய நப்பின்னையின் தோள்களோடே அணையப்பெற்றதென்ன இவையும்
மற்றும் பல,Matrum pala - மற்றும் பலவுமான
மாயம் கோலம் பிரான்தன் செய்கை,Maayam kolam piraanthan seikai - திவ்யமங்கள விக்ரஹசாலியான கண்ணபிரானுடைய சேஷ்டிதங்களை
நினைத்து,Ninaiththu - சிந்த்னைசெய்து
மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நீர்ப்பண்டமாக
கேயத்தோடு எனக்கு கழிந்த போது,Keyaththodu enakku kazhintha podhu - அன்போடு எனக்குக் கழிகின்ற காலத்தின்
எவ்வுலகம் நிகர்,Evvulagam nigar - உபயவிபூதியும் ஒவ்வாது.
3262திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ண சேஷ்டிதங்களை அனுபவித்துக் கொண்டு எனக்கு காலம் எல்லாம் போகப் பெற்றேன் -இன்னது பெற்றிலேன் என்று நோவ வேண்டுவது இல்லை என்கிறார் .) 3
நிகரில் மல்லரைச் செற்றதும் நிரை மேய்த்ததும் நீள் நெடுங்கைச்
சிகர மா களிறு அட்டதும் இவை போல்வனவும் பிறவும்
புகர்கொள் சோதிப் பிரான் தன் செய்கை நினைந்து புலம்பி என்றும்
நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3
நிகர் இல் மல்லரை செற்றதும்,Nigar il mallarai setrathum - (மிடுக்கில்) ஒப்பில்லாத மல்லர்களை முடிந்த்தென்ன
நிரை மேய்த்ததம்,Nirai meiththathum - ப்சுக்களை மேய்த்ததென்ன
நீள் நெடு கை,Neel nedu kai - உயர்ந்த நெடி துதிக்கையை யுடையதாய்
சிகரம் மா,Sikaram maa - மலைசிகரம்போன்று (பெரிதான
களிறு,Kaliru - (கஞ்சனது) யானையை
அட்டதும்,Attathum - கொன்றொழித்ததென்ன (இவை போல்வனவும் பிறவும்)
புகர் கொள் சோதி பிரான் தன் செய்கை,Pugar kol sothi piraan than seikai - மிகவும் ஜ்வலிக்கின்ற ஒளியுருவனான கண்ணபிரானுடைய செயல்களை
நினைந்து புலம்பி,Ninainthu pulambi - நினைத்தும் வாய்விட்டுக் கதறியும்
என்றும் நுகர,Endrum nugar - நித்தியமும் அநுபவிக்கும் படியாக
வைகல் வைக பெற்றேன்,Vaigal vaigapetren - காலம் மிகவும் நீளும்படிபெற்றேன்,
இனி,Ini - இப்படியானபின்பு
எனக்கு என் நோவது,Enakku en novathu - எனக்கு க்லேசப்படவேண்டுவதுண்டோ,
3263திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (இங்கே நம்பிள்ளை யீடு – “ஜீயர் இப்பாட்டை இயலருளிச்செய்யப் புக்கால் நோவ என்றருளிச் செய்யுமழகு காணும். நோவ வென்கிறார் காணும் ஆழ்வார் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே! யசோதைப்பிராட்டியானவள் கண்ணனை உரலோடே கட்டிவைக்க அப்போது ஏங்கி யிருந்தபடியைச் சொல்லுகிறது.) 4
நோவ ஆய்ச்சி உரலோ டார்க்க இரங்கிற்றும் வஞ்சப் பெண்ணைச்
சாவப் பாலுண்டதும் ஊர் சகட மிறச் சாடியதும்
தேவக் கோலப் பிரான் தன் செய்கை நினைந்து மனங்குழைந்து
மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4
ஆய்ச்சி நோவ,Aichchi nova - யசோதைப்பிராட்டியானவள் திருமேனியில் நோவுண்டாகும்படி (அல்லது, பக்தர்களின் மனம் துடிக்கும்படி)
உரலோடு ஆர்க்க,Uralodu aarka - உரலோடு சேர்த்துப் பிணைக்க
வஞ்சம் பெண்ணை சாவ,Vancham pennai sava - வஞ்சனைசெய்யவந்த பூதனை முடியும்படியென்ன
பால் உண்டதும்,Paal undathum - அவளது முலைப்பாலை உண்டதென்ன
ஊர் சகடம் இறசாடியதும்,Oor sakadam irasaadiyathum - (அஸுராவேசத்தாலே) ஊர்ந்துவந்த சகடம் பொடிபடும்படி தகர்த்ததென்ன (ஆக இப்படிப்பட்ட)
தேவக் கோலம் பிரான் தன் செய்கை,Devak kolam piraan than seikai - அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹனான கண்ணபிரானுடைய செயல்களை
நினைந்து,Ninainthu - அநுசந்தித்து
மனம் குழைந்து,Manam kuzhaindhu - நெஞ்சு நெகிழ்ந்து
மேவ,Meva - பொருந்தும்படி
காலங்கள் கூடினேன்,Kaalangal koodinean - காலங்கள் பலிக்கப்பெற்றேன்
எனக்கு என் இனி வேண்டுவதே?,Enakku en ini venduvathae? - இங்ஙகனே பாக்கியம் பெற்ற எனக்கு இனிவேண்டுவது என் (இனிப்பெறவேண்டுவதொன்றுண்டோ?)
3264திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவவதாரம் பண்ணி அருளினை பின்பு -கம்சன் அறியாத படி வளர்ந்து கம்சனை மாய்த்த படி -இன்று இருந்து அனுபவிக்கப் பெற்ற எனக்கு ஒரு மிடி இல்லை என்கிறார் -எதிர் உண்டோ என்றுமாம்) 5
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்ததும் வீங்கிருள்வாய்ப்
பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் அங்கோர் ஆய்க் குலம் புக்கதும்
காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத் துஞ்ச வஞ்சம் செய்ததும்
ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5
தேவர் இரக்க,Devar irakka - தேவதைகள் பிரார்த்திக்க
வேண்டி,Vendi - திருவுள்ளமுவந்து
வந்து பிறந்ததும்,Vanthu pirandathum - நிலவுலகத்தில் வந்து அவதரித்ததென்ன
அன்று,Andru - அப்போதே
அன்னை,Annai - பெற்றதாயான தேவகி
பூண்டு,Poondhu - (கஞ்சன்பக்கல் பயத்தினால்) எடுத்தணைத்துக் கொண்டு
புலம்ப,Pulamba - இங்கேயிருந்தால் என்ன அபாயம் விளையுமோவென்று கதறி யழுதவளவிலே
ஓர் ஆய் குலம் புக்கலும்,Or aai kulam pukalum - இடைச்சேரியிலே பிரவேசித்ததென்ன
காண்டல் இன்றி வளர்ந்து,Kaandal indri valarnthu - விரோதிகளுக்குக் காணுதலில்லாதபடி மறைவாக வளர்ந்து
கஞ்சனை துஞ்சவஞ்சம் செய்ததும்,Kanchanai thunja vanjam seidathum - கம்ஸன் முடியும்படியாக அவன் திறத்திலே வஞ்சனைசெய்த்தென்ன ஆகிய இச்செயல்களை
ஈண்டு,Indu - இப்போது (அல்லது) இவ்விடத்தே
நான் அலற்ற பெற்றேன்,Naan alatra petren - நான் வாய்விட்டு உத்கோஷிக்கப்பெற்றேன்,
எனக்கு என்ன இகல் உளது,Enakku enna ikal ulathu - இனி எனக்கு என்ன குறையுண்டு?
3265திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கிருஷ்ணனுடைய பிரதிகூல நிரசன பரம்பரையை அனுபவிக்கப் பெற்ற எனக்கு இனி ஒரு மநோதுக்கம் இல்லை என்கிறார்.) 6
இகல் கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்
உயர் கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும் பல
அகல் கொள் வைய மளந்த மாயன் என்னப்பன் தன் மாயங்களே
பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6
இகல் கொள் புள்ளை பிளந்ததும்,Igal kol pullai pilandathum - விரோதபுத்தியுடன் வந்த பகாசுரனை வாய்பிறந்து முடித்ததென்ன
இமில் ஏறுக்ள் செற்றதுவும்,Imil erukal setrathuvum - பிசலையுடைய எருதுகளை (நப்பின்னைக்காகக்) கொன்றதென்ன
உயர் கொள் சோலைகுருத்து ஒசித்ததும்,Uyar kol solaikuruthu osithathum - உயர்ச்சியைக் கொண்ட சோலையிலுள்ள குருந்த மரத்தை முறித்ததென்ன
உட்பட மற்றும்,Utpad matrum - இவை முதலாக மற்றும் பலவான
அகல் கொள் வையம் அளந்த மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Akal kol vaiyam alandha maayan en appan than maayangale - பூமிப்பரப்பை யெல்லாம் அளந்துகொண்ட மாயனான எம்பெருமானுடைய அற்புதச் செயல்களையே
பகல் இரா பரவ பெற்றேன்,Pagal ira parava petren - பகலும் இரவும் துதிக்கப்பெற்றேன்
எனக்கு என்ன மனம் பரிப்பு,Enakku enna manam parippu - இன எனக்கென்ன மனத்துயரமுளது
3266திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (அரக்கரசுரர் போல்வாரான விரோதிகள் பக்தவர்க்கங்களை நலியுமது பொறுக்கமாட்டாமே அழுக்கு மானிடசாதியில் வந்து பிறந்து அவர்களை அழியச் செய்யும் சேஷ்டிதங்களை நினைக்கும் நெஞ்சுடைய எனக்கு இந்நிலத்தில் நிகராவார் யாருமில்லை யென்கிறார்) 7
மனப் பரிப்போடு அழுக்கு மானிட சாதியில் தான் பிறந்து
தனக்கு வேண்டுருக் கொண்டு தான் தன சீற்றத்தினை முடிக்கும்
புனத் துழாய் முடி மாலை மார்பன் என்னப்பன் தன் மாயங்களே
நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7
தான்,Thaan - பரஞ்சோதியுருவனானதான்
அழுக்கு மானிடசாதியில்,Azhukku maanidasadhiyil - ஹேயமான மநுஷ்யஜாதியிலே
மனப் பரிப்போடு பிறந்து,Manap parippodu pirandhu - ஸம்ஸாரிகள் விஷயமாகத் திருவுள்ளத்தில் தளர்த்தியோடே வந்து பிறந்து
தனக்கு வேண்டு உரு கொண்டு,Thanakku vendu uru kondu - தனக்கு இஷ்டமான விக்ரஹங்களைப் பரிக்கரஹித்து
தான் தன சீற்றத்தினை முடிக்கும்,Thaan thana seetrathinai mudikkum - தன்னுடைய சீற்றத்தைத் தவிர்த்துக்கொள்ளுமவனான
புனம் சூழாய் மாலை முடி மார்பன் என் அப்பன் தன் மாயங்களே,Punam sool aai maalai mudi maarban en appan than maayangale - செவ்வித்துழாய் மாலையைத் திருமுடியிலும் திருமார்பிலுமுடையனான எம்பெருமானது ஆச்சரிய சேஷ்டிதங்களையே
நினைக்கும் நெஞ்சு உடையேன் எனக்கு,Ninaikkum nenju udaiyen enakku - அநுஸந்திக்கும் நெஞ்சு படைத்த வெனக்கு
இனி நின் நிலத்து நிகர் ஆர்,Ini nin nilathu nigar aar - இனி இப்பெருநிலத்தில் ஒப்பாவார் ஆர்? (ஆருமில்லை.)
3267திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –வாண விஷய பிரமுகமான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் மற்றும் ஸ்ரீ வாமனனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சுடையேனான எனக்கு இனி கலக்கமுண்டோ -என்கிறார்) 8
நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து
வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல
மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே
காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8
நீள் நிலத்தொடுவான் வியப்ப,Neel nilathoduvaan viyappa - மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக
நிறைபெறும் போர்கள் செய்து,Niraiperum porkal seithu - நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி
வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல,Vaanan aayiram thol thunindhathum utpad matrum pala - பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Maani aai nilam konda maayan en appan than maayangale - பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு,Kaanum nenju udaiyen enakku - ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு
இனி என்ன கலக்கம் உண்டே,Ini enna kalakkam unde - இனி ஒருவகையான கலக்கமுமில்லை.
3268திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (வைதிகன் பிள்ளைகள் மீட்டுக்கொடுத்த தென்பது கண்ணபிரானுடைய சரிதைகளில் ஒன்று அதனை இப்பாட்டில் அநுபவிக்கிறார்.) 9
கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9
ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகும் கலக்க,Ez kadhal ez malai ez ulagum kalakka - ஏழுகடல்களும் ஏழுமலைகளும் ஏழுலகங்களாமெல்லாம் கலங்கும் படியாக
கழய கடாய்,Kazhaya kadaay - அண்ட கடாஹத்துகு அப்பாலே போம்படி யாக நடத்தி
தேர் கொடு,Ther kodu - தேரைக்கொண்டு
உலக்க சென்ற மாயமும்,Ulakka sendra maayamum - முடியச்சென்ற ஆச்சரியமும்
உட்பட மற்றும் பல,Utpad matrum pala - இதுமுதலாக மற்றும் சேஷ்டிதங்களையும் (பேசி)
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை உடைமால் வண்ணனை,Valakkai aal idakai sangam ivai udaimaal vannanai - உபணஹஸ்தங்களிலும் திருவாழி திருச்சங்கையுடையனாய் நீலவண்ணனான எம்பெருமானை
மலக்கும் நா உடையேற்கு,Malakkum naa udaiyerkku - ஸ்வாதீனப் படுத்திக்கொள்ளும்படியான நாவிறுபடைத்த எனக்கு
இ மண்ணின் மிசைமாறு உளதோ,eMannin misaimaaru ulatho - இவ்வுலகின் எதிருண்டோ,
3269திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சம்சாரத்தின் உள்ளே வந்து திருவவதாரம் பண்ணி யருளி நிரபாயமான திரு நாட்டிலே போய்ப் புக்க படியை அனுபவிக்கப் பெற்ற வேறு சிலர் நிர்வாஹர் வேண்டும்படி குறையுடையேன் அல்லேன்-என்கிறார்) 10
மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10
மண் மிசை பெருபாரம் நீங்க,Mann misai perubaaram neenga - பூமியின்மேலிருந்த பெருஞ்சுமை தொலையும் படியாக
ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி ,OrBharatha maa perum por panni - மஹாபாரத யுத்தத்தை யுண்டாக்கி
மாயங்கள் செய்து,Maayangal seidhu - ஆச்சரியச் செயல்களைச் செய்து
சேனையை பாழ்பட நூற்றிட்டு,Senaiyai paalpada noottrittu - எல்லாச்சேனையும் பாழ்படும்படி ஸங்கல்பித்து முடித்து
போய்,Poi - இவ்விடம்பிட்டுப் புற பிட்டு
விண் மிசை தன தாமமே புக மேவிய,Vin misai than thaamame puga meviya - பரமாகரசத்திலே தன்னுடைய ஸ்தான விசேஷத்திலே சென்று பொருந்தின.
சோதி தன் தாள்,Sothi than thaal - பரஞ்சோதிப்பெருமானுடைய திருவடிகளை
நான் நண்ணி வணங்கப்பெற்றேன்,Naan nanni vanangappetren - நான் கிட்டி வணங்கப் பெற்றேன்.
எனக்கு பிறர் நாயகர் ஆர்,Enakku pirar naayakar aar - எனக்கு வேறு நியாமகர் ஆர் (ஆருமில்லை)
3270திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் கிருஷ்ண சேஷ்டிதங்களை பேசின இப்பத்தும் கற்றார் ஆழ்வார் தம்மைப் போலே கிருஷ்ணனுக்கே பக்தராவார் என்கிறார்.) 11
நாயகன் முழுவேழுலகுக்குமாய் முழுவேழுலகுந் தன்
வாயகம் புக வைத்துமிழ்ந்து அவையாய் அவை அல்லனுமாம்
கேசவன் அடியிணை மிசைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
தூய ஆயிரத்திப் பத்தால் பத்தராவர் துவளின்றியே.–6-4-11
முழு ஏழ் உலகுக்கும் நாயகன் அய்,Muzhu ez ulagukkum naayagan ai - எல்லா வுலகங்களுக்கும் நிர்வாஹகனாகி
முழு ஏழ் உலகும் தன் வாயகம் புகவைத்து உமிழ்ந்து,Muzhu ez ulagukkum than vaayagam pugavaithu umizhndhu - அந்த ஸகல்லோகங்களையும் (ப்ரளயம்கொள்ளாதபடி) தன் வாய்க்குள்ளே புகவிட்டுப் பிறகு வெளிப்படுத்தி.
அவை ஆய்,Avai ai - அவை தானேயாய்
அவை அல்லனும்,Avai allanum - அவற்றின் படியே யுடையனல்லாதவனுமான
கேசவன்,Kesavan - எம்பெருமானுடை
அடி இணை மிசை,Adi inai misai - உபயபாதங்கள் விஷயமாக
குருகூர் சடகோபன் சொன்ன,Kurugoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச்செய்த
தூய ஆயிரத்து,Thooya aayiraththu - பரிசுத்தமான ஆயிரத்துள்ளே
துவள் இன்றி பக்தர் ஆவர்,Thuval indri bakthar aavar - அநந்யப்ரயோஜந பக்தி மான்களாகப் பெறுவர்கள்.
3271திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –6-5-1- திருத் தாய்மாரைக் குறித்து இவளுடைய தோழியானவள் இவள் பிரகிருதி அறிந்து வைத்து இவளுக்கு திருத் தொலை வில்லி மங்கலத்தை காட்டின நீங்கள் ஹித உபதேசம் பண்ணினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனம் இல்லை என்கிறாள்.) 1
துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு,Thuval il maa mani maadam oongu - குற்றமற்றச் சிறந்த ரத்நங்களையுடைய மாடங்கள் விளங்கப்பெற்ற
தொலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லிமங்கல மென்கிற இரட்டைத்திரப்பதியை
தொழும் இவளை,Thozhum ivalai - தொழாநின்ற இப்பராங்குசநாயகியை
நீர் இனி விடுமின்,Neer ini vidumin - நீங்கள் இனி உபேக்ஷித்துவிடுங்கள்,
உமக்கு ஆசையில்லை,Umakku aasai illai - (இவள் திறந்து) நீங்கள் ஆசைவைக்க இடமில்லை, (இவனுடைய நிலைமையைச்சொல்லுகிறேன் கேளுங்கள்)
தவளம் ஒண் சங்கு சக்கரம் என்றும்,Thavalam on sangu sakkaram endrum - வெண்ணிறமாய் அழகியதான சங்கையும் சக்கரத்தையும் சொல்லுகின்றவளாயும்
தாமரை தடம் கண் என்றும்,Thamarai thadam kan endrum - தாமரைபோன்று விசாலமான திருக்கண்களைச் சொல்லுகின்றவளாயும் இருந்துகொண்டு
ஓண் குவளை மலர் கண்கள் நீர் மல்க,On kuvazhai malar kangaL neer malga - அழகிய குவளப் பூப்போன்ற கண்கள் நீர் பெருக
நின்று நின்று குமிறும்,Ninru ninru kumirum - ஒன்றும் வாய்விட்டுச் சொல்லமாட்டாமல்லன்று நின்று குமிறுகின்றாளிவன்.
3272திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் நித்ய ஸூரி களுக்கு அநு பாவ்யமான தேவ பிரான் எழுந்து அருளி இருக்கிற திருத் தொலை வில்லி மங்கலத்திலே மஹோத்சவத்திலே கொண்டு புக்கு இவளை அகலும்படி பண்ணி கோள்-என்கிறாள்.) 2
குமுறுமோசை விழவொலித் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
அமுத மென் மொழியாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திமிர் கொடாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவ பிரான் என்றே
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க நெக்கொசிந்து கரையுமே.–6-5-2
(அன்னைமீர்),(Annaimeer) - தாய்மார்களே!
குமிறும் ஓசை விழவு ஒலி,Kumirum osai vizhavu oli - ஆராவாரிக்கின்ற ஓசையையுடைய உத்ஸவ கோலாஹலங்களையுடைத்தான
துலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - இரட்டைத்திருப்பதியிலே
அமுதம் மெல்மொழியவளை,Amudham melmozhiyavalai - அமுதம்போன்று மதுரமானமெல்லிய வாய்மொழிகளை யுடையவளான இப்பெண் பிள்ளையை
நீர் கொண்டு புக்கு,Neer kondu pukku - நீங்கள் அழைத்துக்கொண்டுபோய்
உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவுபண்ணுகைக்கு ஆசையில்லாதபடி உறவறுத்துக்கொண்டீர்கள்.(அது எங்ஙனே தெரிகிறதென்றால்)
இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள்
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்,Thimir kondal oththu nirkum - திமில் கொண்டாற்போலே பேசாதே நிற்கின்றாள்,
மற்று,Matru - அதுவுமல்லாமல்
தேவதேவபிரான் என்றே,Devadevapiran endrae - எம்பெருமானது திருநாமத்தைச் சொன்னமாத்திரத்திலே
நிமியும் வாயொடு,Nimiyum vaayodu - நெறிந்தவாயோடுகூடி
கண்கள் நீர் மல்க,Kangal neer malga - கண்கள் நீர்பெருகப் பெற்று
நெக்கு ஒசித்து கரையும்,Nekku osithu karaikum - கட்டுக்குலைந்து தளர்ந்து உருகுநினறாள்.
3273திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இப் பெண் பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ?) 3
கரைகொள் பைம்பொழில் தண் பணைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
உரைகொள் இன்மொழி யாளை நீர் உமக் காசை யின்றி அகற்றினீர்
திரைகொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும்
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடுங்கண் நீர் மல்க நிற்குமே.–6-5-3
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
கரை கொள் பைம்பொழில் கண்பணை,Karai kol paimpozhiL kanpanai - தாமிரபரணிக்கரையைக் கபளீகரிக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைத்தான
துலை வில்லிமங்கலம்,Tholai villimangalam - இரட்டைத்திருப்பதியிலே
உரை கொள் இன்மொழியாளை நீர்கொண்டு புக்கு,Urai kol inmozhiyaalai neerkondu pukku - புகழ்மிக்க இன்சொல்லை யுடையளான இப்பெண்பிள்ளையை நீங்கள் அழைத்துக்கொண்டு சென்று
உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,Umakku aasai indri akatrineer - மறுபடியும் நீங்கள் இவளோடு உறவு பண்ணுகைக்கு ஆசையில்லாதபிடி உறவறுத்துக்கொண்டீர்கள்(அது எங்ஙனம் தெரிகிறதென்றால்)
(இவள்),(Ival) - இப்பெண்பிள்ளையானவள்
திரை கொள் பௌவத்து சேர்ந்ததும்,Thirai kol pouvathu serndhathum - அலைகளைக் கொண்ட திருப்பாற்கடலிலே (ஆச்ரித ரக்ஷணார்த்தமாக) வந்து சேர்ந்தபடியையும்
திசை ஞாலம் தாவி அளந்ததும்,Thisai gnaalam thaavi alandhathum - திசைகளோடு கூடின பூமியை முழுவதும் தாவி அடிக்கீழிட்டுக் கொண்டபடியையும்
நிரைகள் மேய்த்ததுமே,Niraigal meiththathume - பசுக்கூட்டங்களை மேய்த்தபடியையுமே
பிதற்றி,Pithatri - வாய்வெருவி
நெடு கண் நீர் மல்க நிற்கும்,Nedukann neer malga nirkum - தனது நெடிய கண்களில் நீர்பெருக நிற்கின்றாள்.
3274திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருத் தொலை வில்லி மங்கலத்தையும் -அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் சமஷ்டியையும் யாதொருநாள் கண்டாள்-அன்று தொடங்கி தடை நிற்கை தவிர்ந்தாள் என்கிறாள் .) 4
நிற்கும் நான் மறை வாணர் வாழ் தொலை வில்லி மங்கலம் கண்டபின்
அற்க மொன்றும் அறவுறாள் மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்!
கற்கும் கல்வி யெல்லாம் கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்துகந்து உண் மகிழ்ந்து குழையுமே.–6-5-4
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள்
நிற்கும் நால்மறை வாணர் வாழ்,Nirkum naalmarai vaanar vaazh - ஸ்திரமான நான்கு வேதங்களையும் அதிகரித்தவர்கள் வாழுமிடமான
துலைவில்லிமங்கலம் கண்ட பின்,Tholaivillimangalam kanda pin - துலைவில்லித்திருப்பதியை ஸேவிக்கப்பெற்ற பின்பு
அற்கம் ஒன்றும் அற உறாள்,Arkam ondrum ara ural - அடக்கம் சிறிதுமுடையளல்லளாய்
மலிந்தாள் கண்டீர்,Malindhaal kandeer - கைகழிந்துவிட்டாள் காண்மின் (அது எங்ஙனம் தெரிகிறதென்றால்)
கற்கும் கல்வி எல்லாம்,Karkum kalvi ellam - இவள் பழகுகிற பேச்சுக்களெல்லாம்
கரு கடல் வண்ணன் கண்ணபிரான் என்றே,Karu kadal vannan kannapiran endrae - நீலக்கடல்வண்ணானான கண்பிரானைப் பற்றியதேயாம்.
ஒற்கம் ஒன்றும் இலள்,Orkkam ondrum ilal - ஒடுக்கம் சிறிதுமில்லாதவளாய்
உகந்து உகந்து உள் மகிழ்ந்து,Ugandhu ugandhu ul magizhndhu - தன்னுடைய ஆனந்தமிகுதியை நன்றாகக் காட்டிக்கொண்டு
குழையும்,Kuzhaiyum - உள்குழையாநின்றாள்.
3275திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திருத் தொலை வில்லி மங்கலத்திலே இருக்கிற அரவிந்த லோசனனுடைய ஒப்பனை அழகைக் காட்டினீர் – அன்று தொடக்கமாக இவள் விக்ருதையாகா நின்றாள் என்கிறாள்.) 5
குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
குழையும்,Kuzhaiyum - பகவத்குணங்களிலே உருக்கமுடையவளாயும்
வாள் முகத்து,Vaal mugathu - ஒளிமிக்க முகத்தையுடையவளாயிருக்கிற
துலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு,Tholaivillimangalam kondu pukku - துலைவில்லித்திருப்பதிக்கு அழைத்துக் கொண்டு போய்
இழை கொள் சோதி,Izhaik kol sothi - திருவாபரணங்களினாலான சோதியை யுடையனும்
செம் தாமரை கண்ணபிரான்,Sem thamarai kannapiran - செந்தாமரைபோன்ற திருக்கண்களையுடைய எம்பெருமான்
இருந்தமை,Irundhamai - வீற்றிருக்கும்படியை
காட்டினீர்,kaattineer - நீங்களேகாட்டிக்கொடுத்தீர்கள்,
இவள்,Ival - அதுகாணப்பெற்றவிவள்
அன்று தொட்டும்,Andru thottum - அந்நாள் தொடங்கி
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு,Mazhai peithaal okkum kanna neerinodu - மழைபெய்தாற்போன்ற கண்ணீரோடேகூடி
மையாந்து,Maiyaanthu - வியாமோஹித்து
நுழையும் சிந்தையன்,Nuzhaiyum sinthaiyan - அவனழகிலேஉள்புகுழைந்தநெஞ்சையுடையளாய்
அத் திசை உற்று நோக்கி தொழும்,Ath thisai uttru nokki thozhum - அத்திருப்பதியுள்ள பக்கமே உற்றுநோக்கித் தொழுகின்றாள்.
3276திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் சம்ருத்தமான திருத் தொலை வில்லி மங்கலத்தைக் கண்டால் -வேறொன்றும் காண மாட்டாதே எப்போதும் இவள் வாய் விடும் சொல் எல்லாம் ஸூக்ரஹ ஸுந்தர்யனானவனுடைய திரு நாமங்களேயாய் இரா நின்றது என்கிறாள்.) 6
நோக்கும் பக்கமெல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை
வாய்க்கும் தண் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
நோக்கு மேல் அத் திசையல்லால் மறு நோக்கிலள் வைகல் நாடொறும்
வாய்க் கொள் வாசகமும் மணி வண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!–6-5-6
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
நோக்கும் பக்கம் எல்லாம்,Nokkum pakkam ellam - பார்த்த பார்த்த விடமெல்லாம்
ரும்பொடு செந்நெல் ஒங்கு,Rum podu sennel oongu - கரும்பும் செந்நெற்பயிர்களும் உயர்ந்து விளங்கப்பெற்றதும்
செம் தாமரை வாய்க்கும்,Sem thamarai vaaykkum - செந்தாமரைகள் நிரம்பப்பெற்றதும்
தண்,Than - குளிர்ந்ததுமான
பொருநல்,Porunal - தாமிரபரணிநதியினுடைய
வடகரை,Vadakarai - வடகரையிலேயுள்ளதாய்
வண்,Van - சகலவிதமான அழகும் பொருந்தியதான
துலைவில்லி மங்கலம்,Tholaivilli mangalam - துலைவில்லித் திருப்பதியை
நோக்கும் எல்,Nokkum el - (இப்பெண்பிள்ளை) பார்தாளாகில்
அத் திசை அல்லால் மறுநோக்கு இலள்,Ath thisai allal maru nokku ilal - அந்தத் திக்கு ஒன்று தவிற வேறெவ்விடத்தும் நோக்குடையவல்ளல்
வைகல் நாள் தொறும்,Vaigal naal thorum - ஒரு நொடிப்பொழுதும் விச்சேதமில்லாமல் ஸகலகாலமும்
இவள் வாய்கொள் வாசகமும்,Ival vaaykol vaasagamum - இவளது வாக்கில் வெளிவருகின்ற சொற்களும்
மணிவண்ணன் நாம்மே,Manivannan naamme - நீலமணிவண்ணனான எம்பெருமானுடைய திருநாமங்களேயாம்.
3277திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –6-5-7- அநந்தரம் -மஹா உபகாரனான சர்வேஸ்வரன் இவளுக்குப் பண்ணின அதிசயம் இருந்த படி -வேறொரு வார்த்தையும் கேளாதே – அவனுடைய திவ்ய சிஹ்னங்களும் திரு நாமங்களும் தாம் திருந்தும்படி இவள் வாக் விஷயமாயிற்று என்கிறாள்.) 7
அன்னைமீர்! அணி மா மயில் சிறு மானிவள் நம்மைக் கை வலிந்து
என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலை வில்லி மங்கலம் என்றலால்
முன்னம் நோற்ற விதி கொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ?
அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் திருந்தவே.–6-5-7
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
அணி மா மயில் சிறு மான் இவள்,Ani maa mayil siru maan ival - அழகிற் சிறந்த மயில்போன்றும் சிறிய மான்பேடை போன்றுமிராநின்ற இப்பெண்பிள்ளை
நம்மை கைவலிந்து,Nammai kaivalinthu - நம்மைக் கைவிட்டொழிந்து
துலைவில்லிமங்கலம் என்று அல்லால் என்ன வார்த்தையும் கேட்க உறாள்,Tholaivillimangalam endru allal enna vaarthaiyum ketka ural - துலைவில்லித் திருப்பதிப் பேச்சுதவிர வேறு எந்தப்பேச்சும் கேட்க விரும்புகின்றிலள் (இப்படியானவிது)
மூன்காம் நோற்ற விதி கொலோ,Moonkaam notra vidhi kolo - முன்பு செய்த ஸுக்ருத பலனோ!
முகில்வண்ணன் மாயம் கொலோ,Mugilvannan maayam kolo - மேகவண்ணனான எம்பெருமானுடைய ஸங்கல்பமோ!
அவன் சின்னமும் திரு நாமமும்,Avan sinnammum thiru naamamum - அப்பெருமானுடைய லக்ஷணங்களும் திருநாமங்களும்
திருத்த இவள் வாயனகள் ஏ,Thirutha ival vaayanakal e - மிகத் திருத்தமாக இவளுடைய வாகில் விளங்கும்படி என்னே!
3278திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -திருத் தொலை வில்லி மங்கலம் திருவடி தொழுத அன்று தொடங்கி என்றும் அரவிந்த லோசனன் என்கிற திரு நாமத்தையே சொல்லி சிதிலையாகா நின்றாள் -என்கிறாள்.) 8
திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
திருந்து வேதமும் வேள்வியும் திருமா மகளிரும்தாம்,Thirundhu vedhamum velviyum thirumaa makalirum thaam - பரிசுத்தமான வேதங்களும் வேதோக்த கருமங்களும் ஸம்பத் ஸம்ருத்யுமாகிறவிவை
மலிந்து இருந்து வாழ்,Malindhu irundhu vaazh - நிரம்பியிருந்து விளங்கப்பெற்றதாய்
பொருநல் வடகரை,Porunal vadakarai - தாமிரப்பரணியின் வடகரயிலுள்ளதாய்
வண்,Van - தர்சநீயமான
தொலைவில்லிமங்கலம்,Tholaivillimangalam - தொலைவில்லித் திருப்பதியை
கரு தட கண்ணி,Karu tada kanni - கறுத்துப்பெருத்த கண்களைடையளான இப்பெண்பிள்ளை
கை தொழுத அ நாள் தொடங்கி இ நாள் தோறும்,Kai thozhutha a naal thodangi i naal thorum - அஞ்ஜலிபண்ணினவன்று தொடங்கி இன்று வரையிலும்
இருந்து இருந்து,Irundhu irundhu - இடையிடையே ஏங்கியேங்கியிருந்து
அரவிந்த லோசன என்று என்றே,Aravinda lochana endru endrae - தாமரைக் கண்ணனை பலகாலு மழைத்து
நைந்து இரங்கும்,Naindhu irangum - பலபடியாலும் சிதிலையாக நின்றாள்.
3279திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்பெண் பிள்ளையுடைய மநோ வாக் காயங்கள் மூன்றும் எம்பெருமான் பக்கலிலே மிகவும் பிரவணம் ஆயிற்றன என்கிறாள்.) 9
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள் கண்ண நீர்கள் அலமர
மரங்களும் இரங்கும் வகை மணி வண்ணவோ என்று கூவுமால்
துரங்கம் வாய் பிளந்தானுறை தொலை வில்லு மங்கலம் என்று தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த் திருநாமம் கற்றதற் பின்னையே.–6-5-9
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
இவள்,Ival - இப்பெண் பிள்ளையானவள்
நான் தொறும் இரங்கி வாய் வெரீஇ,Naan thorum irangi vaai verii - நாடோறும் நெஞ்சழிந்து வாய்வெருவி
கண்ண நீர்கள் அலமர,Kanna neergal alamara - கண்ணீர் பெருக வியாகுலப்பட்டு நின்று
மரங்களும் இரங்கும் வகை,Marangalum irangum vakai - மரங்களுங்கூட இங்கும்படியாக
ஓ மணிவண்ண என்று கூவும்,O manivanna endru koovum - ஓ மணிவண்ணனே! எனறு கூப்பிடாநின்றாள், (அதுவுமல்லாமல்)
துரங்கம் வாய் பிளந்தான் உறை துலைவில்லிமங்கலம் என்று,Thurangam vaai pilandhaan urai tholaivillimangalam endru - குதிரைவடிவு கொண்டு வந்த அசுரனுடைய வாயைப்பிளந்த பெருமான் எழுந்தருளியிருக்கின்ற துலைவில்லித்திருப்பதியென்று
அவ் ஊர் திருநாமம் கற்றதன் பின்னை,Av oor thirunamam katrathan pinnai - அவ்வூர்த்திருநாமத்தைக் கற்ற பின்பு
தன் காங்கள் கூப்பி தொழும்,Than kaangal kooppi thozhum - தன் கைகளைக் கூப்பி (அவ்வூரை நோக்கி)த் தொழுகின்றாள்.
3280திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (பராங்குசநாயகியின் ப்ராவண்ய மிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கிக்கின்றமை கூறுகிறது) 10
பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,
என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,
முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்
சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.–6-5-10
அன்னைமீர்,Annaimeer - தாய்மார்களே!
இவள்,Ival - இப்பெண்பிள்ளையானவள்
பின்னைகொல்,Pinnai kol - நப்பின்னைப் பிராட்டியோ!
மா நிலம் மகள் கொல்,Maa nilam makal kol - பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ!
திருமகள் கொலபிறந்திட்டாள்,Thirumagal kola pirandhittaal - (அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ!
என்ன மாயம் கொலோ,Enna maayam kolo - இது என்ன அதிசயமோ!
நெடுமால் என்றே நின்று கூவும்,Nedumaal endrae ninru koovum - ஸர்வேச்வரா! என்று நிலை நின்று ழைக்கின்றாள்,
அவன் முன்னிவந்து நின்று இருந்து உறையும்,Avan munni vandhu ninru irundhu uraiyum - அப்பெருமான் முற்பட்டு வந்து நிற்பது இருபதாய் நித்யவாஸம் பண்ணுமிடமான
துலைவில்லிமங்கலம,Tholaivillimangalam - துலைவில்லி திருப்பதியை
சென்னியால் வணங்கும்,Senniyaal vanangum - தலையாலே வணங்குகின்றாள்
அவ் ஊர் திரு நாமம் கேட்பதே சிந்தை,Av oor thiru naamam ketpathe sinthai - அத்திருப்பதியின் திரு காமத்தை (தன்வாயால் தான் சொல்வதிற் காட்டிலும்) பிறர் சொல்லக் கேட்க வேணுமென்பதே இவளது சிந்தனை.
3281திருவாய்மொழி || (6-5– துவளில் மாமணி) (தோழி தாய்மாரை நோக்கிக் கூறுதல் (தொலைவில்லிமங்கலம்)) (இத்திருவாமொழி கற்பவர் கைங்கர்ய ஸாம்ராஜ்யமாகிற மஹாபலத்தைப் பெறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11
தேவபிரானையே தந்தை தாய் என்று,Thevapiraanaiye thandhai thay endru - தேவ பிரானையே ஸகலவித பந்துவுமாக அறுதியிட்டு
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் அடைந்த,Sinthaiyaalum sollaalum seykaiyinaalum adaintha - முக்யு காரணங்களாலும் ஆச்ரயித்த
வண் குருகூரவர் சடகோபன்,Van kuru Kooravar Sadagopan - ஆழ்வார்
முந்தை ஆயிரத்துள்,Mundhai aayiraththul - அனாதியான இவ்வாயிரத்திலுள்ளளே
துலைவல்லி மங்கலத்தை சொன்ன இவை செந்தமிழிபத்தும் வல்லார்,Thulaivalli Mangalaththai sonna ivai senthamizh paththum vallaar - துலைவில்லித் திருப்பதி விஷயமாக அருளிச்செய்த இப்பதிகத்தை ஓதவல்லவர்கள்
திருமாலுக்கு அடிமை செய்வார்,Thirumalukku adimai seyvaar - பரவாஸு தேவனுக்கு நித்யகைங்கர்யம் பண்ணப் பெறுவர்கள்.
3282திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவன் உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய குண சேஷ்டிதாதிகளிலே அகப்பட்டு வளை இழந்தாள் என்கிறாள்.) 1
மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1
மாலுக்கு,Maalukku - அடியார் பக்கலில் வியாமோஹமுள்ளவரும்
வையம் அளந்த மனாளற்கு,Vaiyam alanda manaalarukku - பூமி முழவத்தையும் (த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட மணவாளரும்
நீலம கருநிறம் முகம் நியாயற்கு,Neelama karuniram mugam niyaayarkku - நெய்த்துக் கறுத்த நிறத்தையுஐடய மேகத்தை யொத்தவரும்
கோலம் செம் தாமரை கண்ணற்கு,Kolam sem thaamarai kannarkku - அழகிய செந்தாமரை போன்ற திருக்கண் களையுடைவனாவருமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால்
என் கொங்கு அவர் ஏலம் குழலி இழந்து சங்கு,En kongu avar yaelam kuzali izhandhu sangu - தேனொழுகும் மலர்களணிந்து நறுமணம் மிக்க கூந்தலை யுடையனாள என்மைகள் இழந்த்து கைவளையாம்.
3283திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திரு உலகு அளந்து அருளின எம்பெருமானுடைய ஸ்ரீ பஞ்சாயுத தாரணத்தாலே வந்த அழகிலே அகப்பட்டு என் மகள் தன்னுடைய அழகிய நிறத்தை இழந்தாள் -என்கிறாள்.) 2
சங்கு வில் வாள் தண்டு சக்கரக் கையற்கு
செங்கனி வாய்ச் செய்ய தாமரைக் கண்ணற்கு
கொங்கலர் தண்ணந் துழாய் முடி யானுக்கு என்
மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு,Sangu vil vaal thandu chakkaram kaiyarkku - பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு,Sem kani vaai seyya thaamarai kannarkku - சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு,Kongu alar than am thuzhaai mudiyaanukku - தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து,El mangai izhandhu - என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம்,Maamai niram - அழகிய நிறமாம்.
3284திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (நிறங் கரியானுக்கு – நான் பிரிவாற்றாமையாலே உடம்பு வெளுத்துக் கிடக்க அவர் மேனி நிறம் குறியழியாமே பசுகுபசுகென்றிருக்கிற அழகு என்னே! என்று நைகின்றாளென்கை.) 3
நிறங்கரி யானுக்கு நீடுலகு உண்ட
திறங்கிளர் வாய்ச் சிறுக் கள்வ னவர்க்கு
கறங்கிய சக்கரக் கையவ னுக்கு என்
பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3
நிறம் கரியானுக்கு,Niram kariyaanukku - கருநிற முடையவரும்
நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய்,Needu ulagu unda thiram kilar vaai - (பிரளய காலத்தில்) ஸகல லோகங்களையும் அமுது செய்தபடி தோற்றுகிற திருப்ப வளத்தையுடையராய்க்கொண்டு
சிறு கள்வர் அவற்கு,Siru kalvar avarkku - சிறியவடிவிலே பெரியவுலகங்களை மறைத்துவைத்தவரும்
கறங்கிய சக்கரம் கையவனுக்கு,Karangiya chakkaram kaiyavanukku - சுழலும் திருவாழியைக் கையிலே உடையவருமான பெருமான் விளயத்தி லீடுபட்டதினால்
என் பிறங்கு இரு கூந்தல்,En pirangu iru koondhal - விளங்குகின்ற அடர்ந்த கூந்தலை யுடையளான என்மகள்
இழந்த்து பீடு,Izhandhu peedu - இழந்த்து பெருமையாம்.
3285திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகன் பண்பிழந்தாளாகக் கூறுகின்றாள் பண்பாவது இயற்கையான தன்மை எம்பெருமானது ஒரோ குணங்களை நினைத்து விகாரப்படுகின்றாளென்றவாறு.) 4
பீடுடை நான்முகனைப் படைத் தானுக்கு
மாடுடை வையம் அளந்த மணாளற்கு
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு என்
பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4
பீடு உடை நான்முகனை,Peedu udai naan muganai - பெருமைபொருந்திய பிரமனை
படைத்தானுக்கு,Padaiththaanukku - (தனது திருநாபிக்கமலத்தில்) படைத்தவனும்
மாடு உடை வையம்,Maadu udai vaiyam - வஸுமதியான பூமயை
அளந்த மணாளற்கு,Alanda manaalarukku - (திரிவிக்கிரமனாகி) அளந்துகொண்ட மணவாளனும்
நாடு உடை மன்னர்க்கு,Naadu udai mannarukku - நாட்டுக்கு கடவரான பாண்டவர்களுக்காக
தூது செல் நம்பிக்கு,Thoothu sel nambikku - தூது சென்றவனுமான பெருமான் விஷயத்தி லீடுபட்டதனால்
என் பாடு உடை அல்குல்,En paadu udai algul - பரந்தநிதம் பத்தையுடையளான என்மகள்
இழந்த்து பண்பு,Izhandhu panbu - இழந்த்து தன் இயற்கையை.
3286திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் தன்மகள் கற்பிழந்தாளாகக் கூறுகின்றாள். “கற்பு – கல்வி, அதாவது ஜ்ஞானம்“ என்பது ஈடு. தன்னறிவையிழந்தாளென்றபடி) 5
பண்புடை வேதம் பயந்த பரனுக்கு
மண்புரை வையம் இடந்த வராகற்கு
தெண்புனற் பள்ளி எம் தேவ பிரானுக்கு என்
கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5
பண்பு உடை வேதம் பயந்த பரனுக்கு,Panbu udai vedham payantha paranukku - சீர்மைமிக்க வேதங்களை (ப்பிரமனுக்கு) உபகரித்தருளின பரம புருஷனும்,
மண்புரை இடந்தவராகற்கு,Manpurai idanthavararkku - மண்மிக்க பூமியை யிடந்தெடுத்த வராஹமூர்த்தியும்,
தெண் புனல் பள்ளி எம் தேவ பிரானுக்கு,Then punal palli em deva praanukku - தெளிந்த நீரையுடைய ஏகார்ணவத்திலே பள்ளிக்கொண்ட தேவபிரானுமான எம்பெருமான் விஷயத்தில் (ஈடுபட்டு)
என் கண்புனை கோதை இழந்தது,En kanpunai kodhai izhandhadhu - கண்ணைக்கவர்கின்ற கூந்தலையுடையளான என் மகள் இழந்தது.
கற்பு,Karpu - அறிவுடைமை.
3287திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “தோற்றது மெய்யே“ என்று, தன்மகள் சரீரத்தை இழந்தாளாகச் சொல்லுகிறாள்) 6
கற்பகக் காவன நற்பல தேளாற்கு
பொற் சுடர்க் குன்றன்ன பூத்தண் முடியற்கு
நற் பல தாமரை நாண் மலர்க் கையற்கு என்
விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6
கற்பகம் கா அனநல் பல தோளற்கு,Karpagam kaa ananal pala tholarkku - கற்பகச்சோலைபோன்ற நல்ல பல திருத்தோள்களையுடையவனும்
சுடர் பொன் குன்று அன்ன பூ தண் முடியற்கு,Sudar pon kundru anna poo than mudiyarkku - சுடர்மிக்க பொற்குன்றம் போன்ற மிகவழகிய திருவபிஷேகத்தை யுடையவனும்
நல் பல தாமரை நான் மலர் கையற்கு,Nal pala thaamarai naan malar kaiyarkku - அப்போதலர்ந்த தாமரைப் பூப்போன்று விலக்ஷணமான பல திருக்கைகளையுடையவனுமான எம்பெருமான் திறத்திலீடுபட்டதனால்
என் வில் புருவம் கொடி,En vil puruvam kodi - வில்போன்ற புருவத்தை யுடையளான என் பெண்கொடி
தோற்றது,Thoatradhu - இழந்தது
மெய்,Mey - தன்னுடம்பையாம்.
3288திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் “என்தையலிழந்த்து தன்னுடைச் சாயே“ என்கிறாள். சாயா என்னும் வடசொல் எனத் திரிந்த்து. சாயை யாவது ஒளி. லாவண்ய மிழந்தாளென்கை. உரு வேறுபாடுற்ற ளென்றவாறு.) 7
மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு
பையர வின் அணைப் பள்ளியி னானுக்கு
கையொடு கால்செய்ய கண்ணபி ரானுக்குஎன்
தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7
மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு,Mei amar pal kalannku aninthaanukku - திருமேனிக்குபொருத்தமன பல திருவாபரணங்களை நன்றாக அணிந்து கொண்டிருப்பவனும்
பை அரவு இன் அணை பள்ளியினானுக்கு,Pai aravu in anai palliyinaanukku - படமெடுத்த ஆதிக்ஷேனாகி இனிய படுக்கையிலே துயிலமர்ந்தவனும்
கையொடு கால் செய்ய கண்ணபிரானுக்கு,Kaiyodu kaal seyya kannapiraanukku - திருக்கைகளும் திருவடிகளும் சிவந்திருக்கப்பெற்றவனுமான கண்ணபிரான விஷயத்திலீடுபட்டதனால்
என் தையல் இழந்த்து,En thaiyal izhandhu - என் மகள் இழந்தது
தன்னுடை சாயே,Thannudai saaye - தனது ஒளியாம்.
3289திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில், என்னுடைய பெண்பிள்ளை தன்னுடைய மாட்சியை யிழந்தா ளென்கிறாள். எவ்வளவோ பெருமையாக வாழ்ந்தவள் அப்பெருமையெல்லாம் போய் இங்ஙனே தரைப்பட்டுக்கிடக்கின்ற பரிதாபம் என்னே! என்கிறாள்.) 8
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு
மாயச் சகடம் உதைத்த மணாளற்கு
பேயைப் பிணம் படப் பாலுண் பிரானுக்கு என்
வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8
ருந்தம் சாய ஒசித்த தமிபற்கு,Rundham saaya ositha thamiparku - குருந்தமரம் வேரோடுபறியுண்டு சாயும்படி அதனை முறித்த அத்விதீயனும்
மாயம் சகடம் உதைத்த மணாளற்கு,Maayam sakatam udhaitha manaalarku - க்ருத்ரிம்மான (அஸுராவேசங்கொண்ட) சகடத்தைப் பொடிபடுத்தின மணவாளனும்
பேயை பிணம் படபால் உண்பிரானுக்கு,Peayai pinam padapaal unpiraanukku - பூதனையென்கிற பேய்ச்சி பிணமாகும்படி அவளது முலைப்பாலை யுண்டவனுமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் வாசம் குழலி,En vaasam kuzhali - வாசனைபொருந்திய கூந்தலையுடையளான என்மகள்
இழந்தது மாண்பு,Izhandhadhu maanpu - இழந்தது தன் மாட்சிமை யாம்.
3290திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.) 9
மாண்பமை கோலத்து எம் மாயக் குறளற்கு
சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு
காண்பெருந் தோற்றத்து எம் காகுத்த நம்பிக்கு என்
பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9
மாண்பு அமை கோலத்து,Maanpu amai kolaathu - அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு,Em maayam kuralarku - எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன,Senn sudar kunru anna - உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு,Sem sudar moorthikku - செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து,Kaan perudhoatrrathu - அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய
என் காகுத்தன் நம்பிக்கு,En kaakuthan nambikku - இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் பூண் புனைமென் முலை,En poon punaimen mulai - ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள்.
தோற்றது பொற்பு,Thoatrrathu porupu - இழந்தது அழகாம்
3291திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பாட்ல் “என் கற்புடையாட்டி யிழந்தது கட்டே“ என்கிறாள் திருத்தாய். கட்டு என்பதற்கு ஸ்த்ரீத்வமர்யாதை என்றும் பொருள், “எல்லாம்“ என்றும் பொருள். ஸ்த்ரீ த்வமர்யாதையையிழக்கையாவது – லஜ்ஜையோடும் அடக்கத் தோடும் கூடியிருக்கவேண்டிய தன்மையை இழத்தலாம். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தில் ஒவ்வொன்றை யிழந்தாளாகச் சொல்லிவந்தான். பலசொல்லியென்? இழவாதது ஒன்றுண்டோ? எல்லாமுமிழந்தாள் என்கிறாள்.) 10
பொற்பமை நீண்முடிப் பூந்தண் துழாயற்கு
மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு
நிற்பன பல்லுருவாய் நிற்கு மாயற்கு என்
கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10
பொற்பு அமை நீள் முடி,Porpu amai neel mudi - அழகமர்ந்து உயர்ந்த கிரீடத்திலே
பூ தண் துழாயற்கு,Poo than thulaayarukku - அழகியகுளிர்ந்த திருத்துழாயையுடையவனும்
மல் பொரு தோள் உடை,Mal poru thol udai - மல்லர்களோடு போர்செய்த திருத்தோள்களையுடையவனும்
மாயம் பிரானுக்கு,Maayam pirankku - அற்புதச் செயல்களைச் செய்யும் மஹோபகாரகனும்
நிற்பன பல் உரு ஆய் நிற்கும்,Nirpana pal uru aai nirukkum - ஸ்தாவர ஜங்கமங்களாய் நிற்கின்ற பலவகைப் பதார்த்தங்களுமாயுள்ளவனும்
மாயற்கு,Maayarkku - (அப்படியிருக்கச் செய்தேயும் அவற்றின் குற்றங்கள் தன்மீது ஏறப்பெறாமலிருக்கும்) மாயனுமான பெருமான் திற திலீடுபட்டதனால்
என் கற்புடையாட்டி,En karputaiyaatti - தக்க அறிவுடையளான என் மகள்
இழந்தது கட்டு,Ilandhadhu kattu - இழந்தது எல்லாமுமாம்.
3292திருவாய்மொழி || (6-6–மாலுக்கு) (தலைவனது பிரிவால் வருந்தும் தலைமகளைக் குறித்துத் தாய் இரங்குதல்.) (இப்பதிகம் கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது. முழுதுமும் மிக அழகாக விளங்குகின்ற சோலைகளையுடைத்தான திருவேங்கட மலையிலே நித்ய வாஸம் செய்தருளா நின்ற பெருமான் விஷயமாக ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்தினுள்ளும் இப்பதிகம் வல்லார் ஸ்வரூபாநுபமான திவ்ய போகத்தை அநுபவிக்கப்பெறுவர்களென்று பயனுரைத்ததாயிற்று. கீழ்ப் பத்துப் பாசுரங்களிலும் திருவேங்கட முடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லாமலிருக்க இப்போது நிகமத்தில் “நல் வேங்கடவாணனை“ என்று கூறினவிது என்னே? எனின், கிழே மூன்றாம் பத்தில் * சொன்னால் விரோதத்தில் * தென்னா தெனாவென்று வண்டு முரல் திருவேங்கடத்து என்னானையென்னப்ப னெம்பெருமானுளனாக – என்னாவிலின்கவி யானொரு வர்க்குங் கொடுக்கிலேன் * என்றருளிச் செய்தவராகையாலே இங்ஙனே கூறக்குறையில்லை யென்பர்) 11
கட்டெழில் சோலை நல் வேங்கட வாணனைக்
கட்டெழில் தென் குருகூர்ச் சட கோபன் சொல்
கட்டெழில் ஆயிரத்து இப் பத்தும் வல்லவர்
கட்டெழில் வானவர் போகம் உண்பாரே.–6-6-11
கட்டெழில் சாலை,Kattezhil saalai - நறுமணம் மிக்க சோலையையுடைத்தான
நல் வேங்கடம் வாணனை,Nal vengadam vaananaai - திருவேங்கட மலையிலே வாழ்பவனான எம்பெருமான் விஷயமாக
கட்டெழில் தென்குருகூர் சடகோபன்சொல்,Kattezhil thengurukoor sadagopan sol - அரணழகு பொருந்திய தென்குருகூரில் அவதரித்த ஆழ்வார் அருளிச்செய்த
கட்டெழில் ஆயிரத்து,Kattezhil aayiraththu - தொடையழகையுடைத்தான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும் வல்லவர்,ePathum vallavar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
கட்டெழில் வானவர் போகம்,Kattezhil vaanavar pogam - பரமவிலக்ஷணமான நித்யஸூரிபோகத்தை
உண்பார்,Unbaar - அனுபவிக்கப் பெறுவர்கள்.
3293திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (படுக்கைத்தலையிலே மகளைக் காணாத திருத்தாயார் ‘என்மகள் திருக்கோளூர்க்குத்தான் சென்றிருக்கவேணும்‘ என்று அறுதியிட்டுக் கூறுகின்றாள். ஆழ்வாருடைய உண்மையான தன்மை முன்னிரண்டடிகளிற் கூறப்படுகின்றது) 1
உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1
உண்ணும் சோறு,Unnum sooru - உண்டு பசீதீர்க்க வேண்டும் படியானசோறும்
பருகும் நீர்,Parukum neer - குடித்து விடாய் தீர்க்க வேண்டும் படியான நீரும்
தின்னும் வெற்றிலையும் எல்லாம்,Thinnum vettrilaiyum ellam - தின்று களிக்கவேண்டும்படியான வெற்றிலையுமாகிய எல்லாப்பொருள்களும்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே,Kannan emperumaan endru endrae - (எனக்கு) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே யென்றுபலகாலும் சொல்லி
கண்கள் நீர்கள் மல்கி,Kangal neergal malgi - கண்ணீர தாரைதாரையாகப் பெருகப்பெற்றிருந்த
என் இள மான்,En ila maan - இளமான் போன்ற என்மகள்
மண்ணினுள்,Manninul - பூமண்டலத்துள்ளே
சீர் வளம் மிக்கவன்,Seer valam mikkavan - சீரும் சிறப்பும் மிகுந்தவனான
அவன்,Avan - அப்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்யதேசத்தை
வினவி,Vinavi - விசாரித்துக்கொண்டு சென்று
புகும் ஊர்,Pukum oor - சேர்ந்தவிடம்
திருக்கோளூரே,Thirukkoloore - திருக்கோளூராகவே யிருக்க வேணும்
திண்ணம்,Thinnam - இதில் ஸந்தேஹமில்லை
3294திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (பாராங்குச நாயகியின் லீலோபகரணங்களுள் ஒன்றான பூவையென்னும் பறவைகளை நோக்கித் திருத்தாயார் கேட்கிறார் என் பக்கலில் நசையற்று ஒழிந்தாளாகிலும் உங்களை நினைத்தாவது என்மகள் இங்கு மீண்டு வரக்கூடுமோ? சொல்லுங்கள் என்கிறாள். பூவைப்பறவை விடையளிக்க மாட்டாத அஃறிணையென்ற்றிந்தும் மதிகலங்கிக்கேட்கிறபடி. ஆழ்வாருடைய நித்யக்ரமத்தைச் சொல்லுவன முன்னடிகள்.) 2
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2
பூவைகளே,Poovaikale - பூவைப் பறவைகளே!
ஊரும் நாடும் உலகமும்,Uurum naadum ulagum - தானிருந்த ஊரும் நாடும் உலகமுமெல்லாம்
தன்னைபோல்,Thannaipol - தன்னைப்போலவே
அவனுடைய,Avanudaiya - எம்பெருமானுடைய
பேரும் தார்களுமே பிதற்ற,Perum thaarkalume pithatra - திருநாமங்களையும் சின்னங்களையுமே பிதற்றும்படி (செய்யுமவளான)
கொடியேன் கொடி,Kodiyaan kodi - பாவியேனுடைய மகள்
வான் கற்பு இடறி,Vaan karppu idari - சிறந்த ஸ்த்ரீத்வமர்யாதையைக்கடந்து
நல் வளம் சேர் பழனம்,Nal valam ser pazhanam - விலக்ஷணமான வனம் பொருந்திய நீர்நிலைகளையுடைத்தான்
திருக்கோளூர்க்கே சேரும்,Thirukkoloorkae serum - திருக்கோளூரிலேயே சென்று சேர்ந்திருப்பன்,
போரும் கொல்,Porum kol - (உங்களைநினைத்தாகிலும்) திரும்பிவருவாளோ
உரையீர்,Uraiyeer - சொல்லுங்கள்.
3295திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஐயோ! என்மகள் திருக்கோளூரிலே எப்பாடு படுகிறாளோ வென்கிறாள் தாய்.) 3
பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண் பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக் கண்ணொடு என் செய்யுங்கொலோ?–6-7-3
பூவை,Poovai - பூவைகளென்ன
பை கிளிகள்,Pai kilikal - பசுமைதங்கிய கிளிகளென்ன
பந்து,Pandhu - பந்துகளென்ன
தூதை,Thoothai - சிறுசோறுசமைக்கும் பானைகளென்ன
பூ புட்டில்கள்,Poo puttilkal - பூவிடும் குடலைகளென்ன ஆகிய (லீலோபகரணங்களான)
யாவையும்,Yaavaiyum - இவையெல்லாவற்றாலும் உண்டாகக்கூடிய இன்பம்
திருமால் திரு நாமங்களே,Thirumaal thiru naamangale - பகவானுடைய திருநாமங்களினாலேயாம்படி
கூவி,Koovi - அத்திருநமங்களைச் சொல்லியழைத்து
எழும்,Ezhum - உஜ்ஜீவிப்பவளான
என் பாவை,En paavai - எனது பெண்பிள்ளை யானவள்
இனி,Ini - இங்கே ஒரு குறையற்றிருக்கச் செய்தேயும்.
தண் பழனம் திரு கோளுர்க்கே போய்,Than pazhanam thiru kolurkkay poi - குளிர்ந்த நீர் நிலயங்களையுடைய திருக்கோளூர்க்கே புறப்பட்டுப்போய்
கோவை வாய் துடிப்ப,Kovai vaay thudippa - கோவைப்பழம் போன்ற அதரம் துடிக்கும்படியாக
மழை கண்ணொடு,Mazhai kannodu - நீர்பெருகப்பெற்ற கண்களோடே நின்று
என் செய்யும் கொலோ,En seyyum kolo - என்னபாடுபடுவளோ! (அவ்விருப்பை நான் காணப்பெற்றிலேனே! என்று அலமருகின்றாளென்க)
3296திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (என் மகளுடைய நடவடிக்கையைக் கண்டு உலகத்தார் உகப்பர்களோ! அன்றி, வெறுப்பர்களோ வென்று சங்கிக்கிறாள் தாய்.) 4
கொல்லை என்பர் கொலோ? குணம் மிக்கனள் என்பர் கொலோ?
சில்லை வாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இள மான் செல்ல மேவினளே.–6-7-4
இள மான்,Ila maan - இளமான் போன்ற என்மகள்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருகோளூர்க்கே,Selvam malgi avan kidantha thirukolurkkay - செல்வம் நிரம்ப்ப்பெற்று அப்பெருமான் கண்வளர்ந்தருளப்பெற்ற திருக்கோளூரைக்குறித்தே
மெல் இடை நுடங்க,Mel idai nudanga - மெல்லிய (தனது) இடை நோகும்படி
செல்ல மேளினளே,Sella melinaLae - புறம்பட்டுச் செல்ல நெஞ்சு பொருந்திவிட்டாளே!, (இதைப்பற்றி)
சில்லை வாய் பெண்டுகள்,Sillai vaai pendaL - வம்புவாயான நஞ்சேரிப் பெண்களுக்கு
அயல் சேரி உள்ளாகும்,Ayal seri uLlaagum - அயல் சேரியிலுள்ள பெண்களும்
கொல்லை என்பர் கொலோ,Kollai enbar kolo - இவள் வரம்பு கடந்து நடந்தவள்“ என்று சொல்லிப் பழிப்பர்களோ அல்லது)
குணம் மிக்கனள் என்பர் கொலோ,Gunam mikkanal enbar kolo - விலக்ஷணகுண முடையவள்“ என்று சொல்லிக் கொண்டாடுவர்களோ!
எல்லை,Yellai - என்னாகுமோ!
3297திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூர்க்கு நடந்த என்மகள் அங்குச் சோலைகளையும் பொய்கைகளையும் அவன் கோயிலையுங்கொண்டு ஆச்சரியமான உகப்பை அடைவளே, அந்தோ! அவ்வுகப்பை நான் காணக் கொடுத்து வைக்கவில்லையே! என்று தளர்கின்றாள் தாய்.) 5
மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என் சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவி உள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5
ஏன் சிறு தேவி,Yen siru devi - வயதுமுதிராதவளும் திவ்யஸ்வபாவ முடையவளுமான என் மகள்
மேவி,Mevi - பகவந் குணங்களிலே யீடுபட்டு
நைந்து நைந்து,Naindhu naindhu - மிகவும் இளைத்து
விளையாடல் உறாள்,Vilayaadal ural - (தன் வயதுக்குரிய) விளையாட்டிலும பொருந்தாதவளாய்
போய்,Poi - இங்கு நின்றும் போய்
தன் திருமால் திருக்கோளூரில்,Than thirumaal thirukoluril - தனக்கு அஸாதாரணானான எம்பெருமானுடைய திருக்கோளூரில்
பூ இயல் பொழிலும் ஸ்ரீ,Poo iyal pozhilum sri - பூக்களை இயல்பாகவுடைய சோலைகளையும்
தடமும்,Thadamum - தடாகங்களை
அவன் கோயிலும்,Avan koyilum - அவனது திவ்ய ஸந்நிதியையும்
கண்டு,Kandu - பார்த்து
ஆவி உள் குளிர,Aavi ul kulira - நெஞ்சு குளிரும்படியாக
இன்று எங்ஙனே உகக்கும் கொல்,Indru engane ukakkum kol - இன்று எவ்வண்ணம் களித்திருப்பளோ! (அந்நிலைமையை நான் காணப்பெற்றிலேனே!)
3298திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (கீழ்ப்பாட்டில் “எங்ஙனே யுகக்குங்கொல்!“ என்றாள், அவள் உகக்கும்படியைப் பாசுரமிட்டுச் சொல்லுகிறது இப்பாட்டு.) 6
இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப் போய்த்
தென் திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே
சென்று தன் திருமால் திருக் கண்ணும் செவ் வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனி மல்கவே.–6-7-6
எனக்கு,Enakku - தன்னைப்பிரிந்து நோவுபட்டுக் நடக்கிற எனக்கு
இன்று,Indru - இப்போது
உதவாது அகன்ற,Udhavathu akanra - உசாத்துணையாக இராதே கைகழித்துபோன
இள மான்,Ila maan - இளமான்போன்ற என்மகள்
போய்,Poi - வருந்தி வழிநடந்து போய்
தென்திசை திலதம் அனையை,Thenthisai thilatham anaiyai - தெற்குத் திசைக்கு அலங்காரமான
திருக்கோளூர்க்கே சென்று,Thirukolurkkay sendru - திருக்கோளூரிலே பிரவேசித்து
இனி,Ini - அங்ஙனம் புகுந்த பின்பு தன்னை வசீகரிக்க அத்திருமாலினுடைய
திருக்கண்ணும் செம்வாயும் கண்டு,Thirukkanum semvayum kandu - திருக்கண்களையும் செவ்விய அதரத்தையும் கண்டு
நெடு கண்கள் பனிமல்க,Nedhu kangal panimalga - தனது விசாலமான கண்களில் ஆனந்த பாஷ்பம் நிரம்பப்பெற்று (ஹர்ஷப்ரகர்ஷத்தாலே)
நின்று நின்று நையும்,Ninru ninru nayum - ஒன்றுஞ் செய்யமாட்டாதே சிதிலையாகி நிற்பள்
3299திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (தன்மகள் திருக்கோளூரெம்பெருமானுடைய திருக்கண்ணும் செவ்வாயுங்கண்டு கண்ணீர் பெருகநிற்பவள் என்று கீழ்ப்பாட்டில் ஊஹித்துப்பேசின திருத்தாயார், அவள் திருக்கோளூரளவும் சென்று சேர்ந்தாளாகிலன்றோ அங்ஙனே யிருப்பது, இவள்தான் அத்தனை தூரம் வழிநடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு நடக்கக்கூடியதை இப்போது சிந்திக்க இடமேது? என்கிறாள்.) 7
மல்கு நீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும் நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப் போய்ச்
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7
மல்கு நீர் கண்ணொடு,Malku neer kannodu - (என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும்
மையல் உற்ற மனத்தனள் ஆய்,Maiyal utra manathanal aai - வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும்
நல் அல்லும் பகலும்,Nal allum pagalum - நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது)
நெடு மால் என்று அழைத்து,Nedu maal endru azhaiththu - ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து,
இனி,Ini - இப்போது
ஒல்கி ஒல்கி நடந்து,Olgi olgi nadandhu - ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து
ஒசிந்து போய்,Osindhu poi - தளர்ந்து சென்று செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
எங்ஙனே புகும்கொல்,Engane pugum kol - எப்படி போய்ச் சேர்ந்திருப்பளோ?
3300திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவள் பிரகிருதி மார்த்வத்தையும் எம்பெருமானைப் பிரிந்து சிதிலை யாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து இவள் புக்கால் படும்படியை அனுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்று புக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் .) 8
ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8
ஒசிந்த ஒண் மலராள் கொழுநான்,Osintha on malaraal kolunaan - துவண்ட திருமேனியையுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் வர்த்திக்கிற
திருக்கோளூர்க்கே,Thirukolurkkay - திருக்கோளூரையே நோக்கி
எம்மை நீத்த,Emmai neetha - எங்களை விட்டுப் பிரிந்து சென்ற
எம் காரிகை,Em karigai - அழகியாளான என் பெண் பிள்ளை,
ஒசிந்த நுண் இடைமேல்,Osintha nun idaimael - ஏற்கனவே துவண்ட மெல்லிய இடுப்பின்மீது
கையை வைத்து,Kaiyai vaiththu - (இளப்பினால்) கையை வைத்துக் கொண்டு
நொந்த நொந்து,Nontha nonthu - மேன்மேலும் நோவு பெற்று
கசிந்த நெஞ்சினள் ஆய்,Kasintha nenjinal aai - ஈரமான மனத்தையுடையவளாய்
கண்ண நீர் துளும்ப,Kanna neer thulumba - கண்ணீர் பெருகும்படி
செல்லும் கொல்,Sellum kol - (அவ்வூர்) சென்று சேர்ந்திருக்ககூடுமோ?
3301திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (திருக்கோளூரெம்பெருமான் பக்கலிலே ப்ராவண்யமே வடிவெடுத்த இப்பெண்பிள்ளை ஊராருடைய பழிமொழிகளுக்கும் அஞ்சாதே எங்களையும் ஒருபொருளாக மதியாதே நடந்து சென்றாளே யென்கிறாள் திருத்தாய்.) 9
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப் போய்ச்
சேரி பல் பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9
நேர் இழை,Ner izhai - நேர்த்தியான ஆபரணங்களை யணிந்துள்ள என் மகள்,
காரியம் நல்லனகள் அவை காணில்,Kaariyam nallanakal avai kaanil - பதார்த்தங்களில் நல்லதானவற்றைக்கண்டால்
என் கண்ணனுக்கு என்று,En kannanukku endru - “இவை எம்பெருமானுக்கு ஆம்“ என்று அநுஸந்தித்து
ஈரியாய் இருப்பாள்,Eeriyaai iruppaal - ஈரநெஞ்சையுடையளாக இருப்பவள்
இது எல்லாம் கிடக்க,Idhu ellam kidakka - இங்கே அளவற்ற ஐச்வரியங்கள் கிடக்கவும்
இனி,Ini - இப்போது
போய்,Poi - வெளியேறிச் சென்று
சேரி பல் பழி தூய் இரைப்ப,Seri pal pazi thooyiraippa - சேரியிலுள்ளார் பல பழமொழிகளைத் தூற்றி கோஷிக்கும்படியாக
திருக்கோளூர்க்கே நடந்தாள்,Thirukolurkkay nadandhaal - திருக்கோளூரை நோக்கியே நடந்து சென்றாள்,
எம்மை ஒன்றும் நினைத்திலன்,Emmai ondrum ninaithilan - எங்களை ஒரு பொருளாக மதித்திலன்
3302திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமான் பக்கல் அத்யந்தம் பிரவணை யாய் இருக்கிற இவள் சேரியில் உள்ளார் சொல்லும் பழியே பாதேயமாகக் கொண்டு திருக் கோளூருக்கே போனாள் என்கிறாள்.) 10
நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங் கண் இள மான் இனிப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத் தனையும் விடாள் அவன் சேர் திருக் கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10
தெய்வங்கள்,Dheivangal - தெய்வங்களே!
நினைக்கிலேன்,Ninaikkilen - எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான்,Nedu kann ilamaan - பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய்,Ini poi - இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய,Anaiththu ulagam udaiya - ஸர்வலோக ஸ்வாமியான
அரவிந்த லோசனனை,Aravinda losananai - செந்தாமரைக் கண்ணனை
தினை தனையும் விடாள்,Thinai thanaiyum vidaal - சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு
அவன் சேர் திருக்கோளூர்க்கே,Avan ser thirukolurkkay - அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே
செல்ல வைத்தனள்,Sella vaiththanal - சடக்கெனச் சென்றாள்,
மனைக்கு வான் பழியும் நினையான்,Manaikku vaan pazhiyum ninaiyaan - தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள்.
3303திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (நிகமத்தில் இப்பத்தும் வல்லார் இட்ட வழக்காய் இருக்கும் திருநாடு என்கிறார்) 11
வைத்த மா நிதியாம் மது சூதனையே அலற்றிக்
கொத்தலர் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப் பத்து அவன் சேர் திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப்பார் திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11
வைத்த மா நிதி ஆம்,Vaitha maa nidhi aam - சேமித்து வைத்த மஹா நிதிபோன்ற
மது சூதனையே அலற்றி,Madhu soodanaie alatri - எம்பெருமானையே வாய்வெருவி கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன
கொத்து அலர்பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன,Kothu alar pozhil soozh kurugur sadagopan sonna - பூங்கொத்து அலருகிற சோலைகளால் சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்க்குத் அருளிச்செய்த
பத்து நூற்றுள்,Pathu nootrul - ஆயிரத்தினுள்ளே
இப் பத்து,ep pathu - இத்திருவாய்மொழியை
அவன் சேர் திருக்கோளூர்க்கே சித்தம் வைத்து,Avan ser thirukolurkkay siththam vaiththu - அவன் வர்த்திக்கிற திருக்கோளூரிலேயே மனம் பதிந்து
உரைப்பார்,Uraippar - உரைக்க வல்லவர்கள்
திகழ்,Thigazh - நித்யமாக விளங்குகின்ற
பொன் உலகு ஆள்வார்,Pon ulagu aalvaar - பரமபதத்தை ஆளப் பெறுவர்கள்.
3304திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது.) 1
பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1
நல் நலன் புள் இனங்காள்,Nal nalan pul inangkaal - சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே!
விளையாட்டியேன் நான் இரந்தேன்,Vilayaattiyen naan irantheen - பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்)
முன் உலகங்கள் எல்லாம் படைத்த,Mun ulagangal ellam padaitha - முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின
முகில் வண்ணன்,Mugil vannan - காளமேக நிறத்தனாயும்
கண்ணன்,Kannan - அடியார்க்கு எளியனாயும்
என் நலம் கொண்ட,En nalam konda - எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற
பிரான் தனக்கு,Piraan thanakku - எம்பெருமானுக்கு
என் நிலைமை உரைத்து,En nilamai uraiththu - எனது அவஸ்தையைச் சொல்லி
பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர்,Pon ulagu aaleer bhuvani muzhuvadhum aaleer - உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்)
3305திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்து வந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள்.) 2
மையமர் வாள் நெடுங்கண் மங்கைமார் முன்பு என் கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2
கிளிகாள்,Kilikal - கிளிகளே!
கை அமர் சக்கரம்,Kai amar sakkaram - திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும்
கனி வாய்,Kani vaai - கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான
என் பெருமானைகண்டு,En perumanaikandu - எம்பெருமானைச் சேவித்து
மெய் அமர் காதல் சொல்லி,Mei amar kaadhal solli - உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து
விரைந்து ஓடி வந்து,Virainthu odi vandhu - உடனே இவ்விடம் வந்து சேர்ந்து
மை அமர் வாள் நெடு கண்,Mai amar vaal nedu kann - மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய
மங்கைமார் முன்பு,Mangaimaar munbu - தோழிமார் முன்னிலையிலே
என் கை இருந்து,En kai irundhu - என் கையிலே வீற்றிருந்து
நெய் அமர் இன் அடிசில்,Nei amar in adisil - நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை
பாலோடு,Paalodu - பாலோடுங்கூட
நிச்சல் மேலீர்,Nichal meleer - நித்யமாக ஸ்லீகரிக்க வேணும்.
3306திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (இனமாய் இருக்கிற வண்டுகளைக் குறித்து எம்பெருமானுக்கு தன் தசையை அறிவித்து வந்து என் தலை மேலே வர்த்தியுங்கோள் என்கிறாள்.) 3
ஓடி வந்து என் குழல் மேல் ஒளி மா மலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குரு நாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மா நெடுந் தேர்ப் படை நீறு எழச் செற்ற பிரான்
சூடிய தண் துளபம் உண்ட தூ மது வாய்கள் கொண்டே.–6-8-3
கூடிய வண்டு இனங்காள்,Koodiya vandu inangal - கூடிக் களித்திருக்கின்ற வண்டுத்திரள்களே!
குருநாடு உடைய ஜவர்கட்கு ஆய்,Kurunadu udaiya javargadku aay - குருக்ஷேத்திரத் தலைவர்களான பஞ்சபாண்டவர்களுக்காக
ஆடிய மா நெடு தேர்படை,Aadiya maa nedu terpaday - ஆடலில் சிறந்த குதிரைகளையும்பெரிய தேர்களையும் மற்றுமுள்ள சேனைகளையும்
நீறு எழ சென்ற,Neeru ezha sendra - பொடியாம்படி முடித்த
பிரான்,Piraan - எம்பெருமான்
சூடிய,Soodiya - திருக்குழலில் அணிந்துகொண்டிருக்கிற
தண் துளபம் உண்ட,Than thulabam unda - குளிர்ந்த திருத்துழாயிலேயிருந்து மதுபானம் பண்ணின
தூ மது வாய்கள் கொண்டு,Thoo madhu vaaygal kondu - தெளிந்த மதுவையுடைத்தான வாயையுடையீர்களாய்க் கொண்டு
ஓடி வந்து,Odi vandhu - விரைந்து வந்துசேர்ந்து
என் குழல் மேல்,En kuzhal mel - என் கூந்தலிலுள்ள
ஒளி மர் மலர்,Oli mar malar - ஒளி பொருந்திய சிறந்த பூவிலே
ஊதீர்,Oodeer - உங்களுடைய உத்ஸாஹச் செயல்களைச் செய்யுங்கள்.
3307திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (என்னை நோவுபடுத்திப்போய் எட்டா நிலத்திலே ஒலக்கமிரூக்கை தான் ஒரு ஸ்ரீமத் காம்பீர்யமோவேன்று கேளுங்கோளென்று திருநாட்டிலே சில தும்பிகளைத் தூது விடுகிறாள்.) 4
தூ மது வாய்கள் கொண்டு வந்து, என் முல்லைகள் மேல் தும்பிகாள்!
பூ மது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய் செய்தகன்ற
மா மது வார் தண் துழாய் முடி வானவர் கோனைக் கண்டு
யாம் இதுவோ தக்கவாறு என்ன வேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4
முல்லைகள் மேல்,Mullaigal mel - முல்லைப்பூக்களிலே வாழ்கிற
என் தும்பிகாள்,En thumpigal - எனக்கு இனிய தும்பிகளே!
தூ மது வாய்கள்,Thoo madhu vaaygal - தூய மதுவிலே படியவேண்டிய வாயைக்கொண்டுவந்து
பூ மது உண்ண செல்லில்,Poo madhu unnam sellil - அந்த முல்லைப்பூக்களில் மதுவை யுண்ணச் செல்ல நினைத்திர்களாகில் (அதற்காக நீங்கள் செய்யவேண்டியதொன்றுண்டு அது என்னென்னில்)
வினையெனை,Vinaiyenai - பிரிந்து வருந்தவேண்டிய பாவத்தைப் பண்ணின என்னோடே
பொய் செய்து,Poi seydhu - க்ருத்ரிமமான கலவியைப்பண்ணி
அகன்ற,Agandra - பிரிந்துபோன
மா மது வார் தண் துழாய் முடி,Maa madhu vaar than thuzhai mudi - பெருவெள்ளமான மது ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய் மாலையை முடியிலணிந்துள்ள
வானவர்கொனை,Vaanavarkonai - நித்யஸூரிநாதனை
கண்டு,Kandu - நேரில் ஸேவித்து
யாம் இதுவோ தக்க ஆறு என்ன வேண்டும் நுங்கட்கு,Yaam idhuvo thakka aaru enna vendum nungadku - “நாம் இப்படி மேன்மை கொண்டாடியிருப்பதோ தகுதி?“ என்று நீங்கள் சொல்லவேண்டும்.
3308திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மீண்டும் கிளிகளை விளித்துச் சொல்லுகிறாள். எங்கேனும் போயாகிலும் அவனைக் கண்டு “உம்முடைய தக்கவாறு இதுவோ“ வென்னுங் கோளென்கிறாள்.) 5
நுங்கட்கு யான் உரைக்கேன் வம்மின் யான் வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம் கவர்ந்த
செங்கட் கரு முகிலைச் செய்ய வாய்ச் செழுங் கற்பகத்தை
எங்குச் சென்றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5
யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kiligal - நான் வளர்க்க வளர்ந்த கிளிகளே!
வம்மின்,Vammin - இப்படி வாருங்கள்
நுங்கட்கு யான் உரைக்கேன்,Nungadku yaan uraikkean - உங்களுக்கு நான் ஒன்றுசொல்லுகிறேன்.
வெம் கண் புள்,Vem kann pul - வெவ்விய கண்ணையுடைய பெரிய திருவடியை
ஊர்ந்து வந்து,Oorndhu vandhu - நடத்திக்கொண்டு என் பக்கலிலே வந்து
வினையேனை நெஞ்சம் கவர்ந்த,Vinaiyenai nenjam kavarntha - பரவியான என்னுடைய உள்ளத்தைக கொள்ளைகொண்ட
செம் கண்,Sem kann - புண்டரீகாஷனும்
கரு முகிலை,Karu mugilai - காளமேகச்யாமனும்
செய்யவாய்,Seyya vaai - சிவந்த அதரத்தை வுடையவனும்
செழு கற்பகத்தை,Sezhu karpagaththai - விலக்ஷண கல்பவ்க்ஷம்போன்ற வனுமான எம்பிரானை
எங்கு ஆகிலும் சென்று கண்டு,Engu aagilum sendru kandu - எவ்விடத்திலாவது சென்று சேவித்து
இதுவோ தக்க ஆறு என்மின்,Idhuvo thakka aaru enmin - இதுதானோதகுதியென்று சொல்லுங்கோள்.
3309திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ஆஸ்ரிதரோடு ஏக ரசனாகையாலே நமக்கு அபேக்ஷிதங்கள் செய்யுமவன் பாடே சென்று இதுவோ தக்கவாறு என்று சில பூவைகளைக் குறித்து சொல்லுகிறாள்.) 6
என் மின்னு நூல் மார்வன் என் கரும் பெருமான் என் கண்ணன்
தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம் சொல்லிச்
சென்மின்கள் தீ வினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6
தீ வினையேன் வளர்த்த,Thee vinaiyen valartha - கொடிய பாவியான நான் வளர்க்க வளர்ந்த
சிறு பூவைகளே,Siru poovaikale - சிறு பூவைப்பறவைகளே!
என் மின்னு நூல் மார்வன்,En minnu nool maarvan - மின்போலே விளங்குகின்ற யஜ்ஞோபவீ தமணிந்த்திருமார்பை எனக்கு அநுபவிப்பித்தவனும்
என் கரும் பெருமான்,En karum perumaan - தன் திருமேனி நிறத்தை எனக்கு அநுபவித்த பெருமானும்.
என் கண்ணன்,En kannan - எனக்கு ஸர்வாத்மநா விதேயனுமான எம்பெருமான்
தன் நீற் கழல் மேல் மன்னு தண் துழாய்,Than neer kazhal mel mannu than thuzhai - தனது நெடிய திருவடிகளின்மீது பொருந்தியுள்ள திருத்துழாயை
நமக்கு அன்றி நல்கான்,Namakku anri nalkaan - நமக்குத் தவிர வேறொருவர்க்கும் கொடுக்ககில்லான்,
கன்மின்கள் என்று,Kanminkal endru - “நான் சொல்லிக்கொடுப்பதை அப்யஸியுங்கோள்“ என்று சொல்லி
யான் உம்மை கற்பியா வைத்த,Yaan ummai karpiya vaitha - நான் உங்களுக்குக் கற்பித்து வைத்த
மாற்றம் சொல்லி,Maatram solli - பாசுரங்களைச் சொல்லிக்கொண்டு
சென்மின்கள்,Senminkal - அப்பெருமானிடம செல்லுங்கோள்
3310திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -பரம சேதனன் பொகட்டுப் போனான் -சைதன்யம் லேசம் உடைய பக்ஷிகள் பறந்து போயினவும் அந்நிய பரமாயினவும் ஆயிற்றன -இதுக்கு ஹேது சேதனங்களையோ -என்று பார்த்து -அசேதனமான பாவையை இரக்கிறாள்) 7
பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன் என்னாழிப் பிரான்
மாவை வல்வாய பிளந்த மதுசூதற்கு என் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7
பாவைகள்,Paavaigal - எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே!
பூவைகள் போல நிறத்தன்,Poovaigal pola nirathan - பூவைப்பூவண்ணனும்
புண்டரீகங்கள் போலும் கண்ணன்,Pundareekangal polum kannan - புண்டரீகாக்ஷனும்
யாவையும் யாவரம ஆய்நின்ற,Yaavaiyum yaavarama aay nindra - ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும்
மாயன்,Maayan - ஆச்சர்ய சக்தியுக்தனும்
என் ஆழி பிரான்,En aazhi piraan - கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும்
மாவை வல் வாய் பிளந்த,Maavai val vaai pilantha - குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான
மதுசூதற்கு,Madhusoodharku - மதுஸூதநனுக்கு
வினையாட்டியேன் பாசறவு,Vinaiyaattiyen paasaaravu - பாலியான என்னுடைய நிறக்கேட்டை
தீர்க்கிற்றிரே,Theerkitrire - தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி)
3311திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –முன்னே நின்ற குருகை குறித்து -அயர்வறும் அமரர்களைப் போலே உம்மால் அல்லது செல்லாதாள் ஒருத்தி உம்மைப் பெறாதே நோவு படா நின்றாள் என்று சொல் என்று அருளிச் செய்கிறாள்) 8
பாசற வெய்தி இன்னே வினையேன் எனை ஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக் குருகே! அருள் செய்தொரு நாள்
மாசறு நீலச் சுடர் முடி வானவர் கோனைக் கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறு நோக்கிலள் பேர்த்து மற்றே.–6-8-8
ஆக அறு தூவி,Aaga aru thoovi - பழிப்பற்ற சிறகையுடைய
வெள்ளை குருகே,Vellai kuruge - பரிசுத்தமான குருகே!
வினையேன்,Vinaiyen - பாலியான நான்
பாசறவு எய்தி,Paasaravu eidhi - நிறமழிந்து
இன்னே,Inne - இவ்வண்ணமாகவே
எனை ஊழி,Enai oozi - எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்!
ஒரு நாள் அருள் செய்து,Oru naal arul seydhu - ஒருநாள் க்ருபை பண்ணி,
மாசு அறு நீலம் சுடர் முடி,Maasu aru neelam sudar mudi - மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான
வானவர் கோனை கண்டு,Vaanavar konai kandu - தேவாதிதேவனைக் கண்டு
ஏக அறும் தும்மை அல்லால்,Eka arum thummai allaal - “பழிப்பற்ற உம்மை யொழிய
பேர்த்து மற்று மறுநோக்கு இவள்,Perththu matru marunookku ival - பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.)
3312திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (புதா வென்பது நாரையிலேயே அவந்தரஜாதிபேதம், பெருநாரை யென்பர். அப்பறவைகளைப் பிரார்த்திக்கிறாள்.) 9
பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த் திரை மேல் உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த் திரள் மா முகில் போல் கண்ணன் விண்ணவர் கோனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9
நீர் திரை மேல் உலவி,Neer thirai mel ulavi - நீரலைகளின் மேலே உலாவி
இரை தேரும்,Irai therum - உணவுப்பொருள்களை ஆராய்கின்ற
புதா இனங்காள்,Pudhaa inangal - பெருநாரைக்கூட்டங்களே!
வினையாட்டியேன் நான்,Vinaiyaattiyen naan - பாவியான நான்
பேர்த்து மற்று ஓர்களை கண் ஒன்று இலேன்,Perththu matru orugalai kann onru ilean - (உங்களையொழிய) வேறொரு தஞ்சமுடையனல்லேன் (எனக்காக நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால்)
கார் திரள் மா முகில் போல்,Kaar thiral maa mugil pol - கார்காலத்தில் திரண்ட மஹா மேகங்கள் போன்றவனான
கண்ணன் விண்ணவர் கோனை கண்டு,Kannan vinnavar konai kandu - கண்ணபிரானான தேவாதி தேவனைக் கண்டு
வார்த்தைகள் கொண்டு,Vaarththaigal kondu - அவன் கூறும் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு
அருளிவந்து இருந்து,Arulivandhu irundhu - என் பக்கலில் வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு
அருளி வந்து இருந்து,Aruli vandhu irundhu - என் பக்கலில் க்ருபைபண்ணி வந்திருந்து
வைகல் உரையீர்,Vaikal uraiyeer - (இதுவே போதுபோக்காம்படி) நெடும்போது சொல்லிக் கொண்டிருங்கள்
3313திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (மஹாகோஷ்டியிலே எழுந்தருளியிருக்கும் ஸமயத்தில் திருவுள்ளம் அந்யபரமாயிருக்குமாதலால் அப்போது சொல்லாதே, திருவோலக்கத்தில் நின்று மெழுந்து திவ்யாந்தபுரத்திலே யெழுந்தருளினால் அங்கே பிராட்டியுடைய திவ்யஸந்நிதானத்திலே திருவுள்ளத்திற்படும்படி என் திறம் விண்ணப்பஞ்செய்து அவனுரைக்கும் மறுமாற்றாங்கொண்டு என்னருகே வந்திருந்து சொல்லவேணுமென்று அன்னங்களைக்குறித்து வேண்டுகிறாள்.) 10
வந்திருந்து உம்முடைய மணிச் சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர் மேல் அசையும் அன்னங்காள்!
என் திரு மார்வற்கு என்னை இன்னவாறிவள் காண்மின் என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர் மறு மாற்றங்களே.–6-8-10
வந்து இருந்து,Vandhu irundhu - (ஏற்கனவே என் கண்னெதிரில் வந்திருந்து)
உம்முடைய மணி சேவலும் நீரும் எல்லாம்,Ummudaiya mani sevalum neerum ellaam - உங்களுடைய அழகிய சேவல்களும் (அவற்றுக்கு இனிய) நீங்களும் ஆக எல்லாம்
அந்தரம் ஒன்றும் இன்றி,Antharam onrum inri - இடையீறு ஒன்றுமில்லாமல்
அலர்மேல் அசையும்,Alarmael asaiyum - பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற
அன்னங்காள்,Annangaal - அன்னப்பறவைகளே!
என் திருமார்வற்கு,En thirumaarvarku - லஷ்மீபதியான எமபெருமானுக்கு
என்னை,Ennai - என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து
இவள் இன்ன ஆறு காண்மின் என்று,Ival inna aaru kaanmin endru - “இப்பராங்குசநாயகி இவ்வண்ணமானாள் காணும்“ என்று
மந்திரத்து,Mandhiraththu - அவளும் அவனுமான தனி யிடத்திலே
ஒன்று உணர்த்தி,Onru unarththi - ஒரு பேச்சு அறிவித்து
மறு மாற்றங்கள் உரையீர்,Maru maatramgal uraiyeer - அதற்கு அவன் சொல்லும் மறு மொழிகளை என்னிடத்தே வந்து சொல்லுங்கோள்.
3314திருவாய்மொழி || (6-8–பொன்னுல காளீரோ) (திருநாடு முதலியவற்றில் தலைமகள் பறவைகளைத் தூதுவிடல்) (ரீ ஒன்பதினாயிரப்படி –6-8-11- நிகமத்தில் -இப்பத்தில் ஆழ்வாருடைய ஆர்த்தியை அனுசந்தித்தார் ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராய் என்கிறார்) 11
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூத பிரான் அடி மேல்
நாற்றங்கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சட கோபன் சொன்ன
தோற்றங்களாயிரத்துள் இவையும் ஒரு பத்தும் வல்லார்
ஊற்றின் கண் நுண் மணல் போல் உருகா நிற்பர் நீராயே.–6-8-11
நாற்றம் கொள் பூ பொழில்சூழ் குரு கூர் சடகோபன்,Maatram kol poo pozhi soozh kuru koor Sadagopan - பரிமளப்ரசுரமான பூஞ்சோலைகள் சூழ்ந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு,Maatramgal aynthu kondu - சொற்களை ஆராய்ந்தெடுத்து
மது சூதபிரான் அடி மேல்,Madhu soodhapiraan adi mel - எம்பெருமான் திருவடி விஷயமாக
சொன்ன,Sonna - அருளிச்செய்த
தோற்றங்கள் ஆயிரத்துள்,Thotramgal aayirathul - ஆவிர்ப்பாவரூபமான இந்த ஆயிரத்தினுள்
ஊற்றின கண் நுண் மணல்போல்,Ootrin kan nun manal pol - ஊற்றினிடத்தேயுள்ள நுண்ணிய மணல்போல்
நீர் ஆய் உருகா நிற்பர்,Neer aay urugaa nirpar - நீர்ப்பண்டமாக உருகப்பெறுவர்கள்
3315திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகதாகாரனாய் இருக்கிற படியை காட்டித் தந்தோம் இறே-என்ன அது போராது -அசாதாரணமாய் இருக்கிற வடிவைக் காண வேணும் என்கிறார்.) 1
நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1
நீர் ஆய் நிலன் ஆய் தீ ஆய் கால் ஆய் கெடு வான் ஆய்,Neer aay nilan aay thee aay kaal aay kedu vaan aay - பஞ்ச பூதஸ்வரூபியும்
சீர் ஆர் சுடர்கள் இரண்டு ஆய்,Seer aar sudhargal irandu aay - சந்திரஸூர்யர்களாகிற சிறந்த தேஜ பதார்த்தஸ்வரூபியும்
சிவன் ஆய்,Sivan aay - சிவனுக்கு அந்தர்யாமியும்
அயன் ஆனாய்,Ayan aanaay - பிரமனுக்கு அந்தர்யாமியுமாயிருக்கும் எம்பெருமான்!
கூர் ஆர் ஆழி வெண் சங்கு ஏந்தி,Koor aar aazhi ven sangae aendhi - கூர்மைபொருந்திய திருவாழியையும் வெள்ளிய திருச்சங்கையும் திருக்கையில் தரித்துக்கொண்டு
மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் களிக்கும்படி
ஒருநாள்,Oru naal - ஒருநாளாகிலும்
வாராய்,Vaarai - வந்தருளவேணும்.
3316திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் மஹா பலிக்கு உன் அழகைக் காட்டி அகில லோகத்தையும் அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட ஆச்சர்ய சக்தியை யுடைய நீ -நான் கண்டு உகக்கும்படி இந்த இடத்திலே வர வேணும் என்கிறார்.) 2
மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே
நண்ணி உனை நான் கண்டு உகந்து கூத்தாட
நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே.–6-9-2
மண்ணும் விண்ணும் மகிழ,Mannum vinnum magizha - உபய விபூதியும் (அழகு கண்டு) உகக்கும்படி
குறள் ஆய்,Kural aay - வாமனமூர்த்தியாய் (மாவலியிடம் சென்று)
வலம் பாட்டி,Valam paatti - தன்னுடைய சக்தியக்காட்டி
மண்ணும் விண்ணும் கொண்ட,Mannum vinnum konda - மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் அளந்துகொண்ட
மாயம் அம்மானே,Maayam ammaane - அற்புதனான ஸ்வாமியே!
உனை நான் நண்ணி,Unai naan nanni - உன்னை நான் கிட்டி
கண்டு உகந்து கூத்துஆட,Kandu ugandhu koothu aada - கண்ணாரக்கண்டு மகிழ்ந்து பரவசனாய் நர்த்தனம் பண்ணும்படியாக
நண்ணி,Nanni - இங்கே வந்து கிட்டி
ஒரு நாள்,Oru naal - ஒருநாளாகிலும்
ஞாலத்தூடே நடவாய்,Nyaalaththooda nadavay - இந்நிலத்திலே நடையழகு காட்டியருளாய்.
3317திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (கீதையில் * பரித்ராணாய ஸாதூநாம் … ஸம்பவாமி யுகேயுகே * என்றதை நினைப்பூட்டி “ஸமய விசேஷங்களலே எத்தனையோ விதமாக அவதாரங்கள் செய்வென்கிறார்.) 3
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்
சாலப் பல நாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே!
கோலத் திரு மா மகளோடு உன்னைக் கூடாதே
சாலப் பல நாள் அடியேன் இன்னும் தளர்வேனோ?–6-9-3
உகம் தோறு,Ugam thooru - ஒவ்வொரு யுகத்திலும்
ஞாலத்தூடே,Nyaalaththooda - பூமியிலே அவதரித்து
நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும்,Nadaththum ninrum kidandhu irundhum - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து
சால பல நாள்,Saala pala naal - பல்லாயிரமாண்டளவும்
உயிர்கள் காப்பானே,Uyirkal kaappaanai - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே!
கோலம் திரு மா மகளோடு,Kolam thiru maa makhalodu - உன்னழகுக்கு ஏற்ற அழகுடையளான திருமாமகளுடனே (கூடியிருக்கிற)
உன்னை கூடாதே,Unnai koodaadhe - உன்னைக்கிட்டி யநுபவிக்கப்பெறாமல்
சால பல நாள்,Saala pala naal - (மேலுள்ள) மிகப்பலகாலமெல்லாம்
இன்னும் அடியேன் தளர்வேனோ,Innum adiyaen thalarveeno - உன்னுறவு பெற்று வைத்தும் அடியேன் இழந்து துடிப்பது தானே?
3318திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரபலமான சகடாஸூரனை நிரசித்த நீ வருகைக்கு விரோதி யுண்டாகிலும் அத்தைப் போக்கி நான் காணும்படி வர வேணும் என்கிறார்) 4
தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாப்
பிளந்து வீயத் திருக் காலாண்ட பெருமானே!
கிளர்ந்து பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர் சூழ
விளங்க ஒரு நாள் காண வாராய் விண் மீதே.–6-9-4
சகடம் அசுரர் உடல்,Sakadam asurar udal - சகடாசுரனுடைய உடலானது
தளர்ந்தும் முறிந்தும்,Thalarndhu murindhu - சின்ன பின்னமாகி
வேறு ஆ பிளந்து வீய,Veru aa pilandhu veeya - இருபிளவாகி உருமாய்ந்தொழியும்படியாக
திரு கால் ஆண்ட பெருமானே,Thiru kaal aanda perumaanai - திருவடிகளைக் கொண்டு காரியங் கொண்ட ஸ்வாமியே!
பிரமன் சிவன் இந்திரன் விண்ணவர்,Brahman Sivan Indiran vinnavar - பிரமன் முதலான தேவர்களெல்லாம்
கிளர்ந்து சூழ,Kilarndhu soozh - உத்ஸாஹத்தோடே வந்து சூழ்ந்துஸேவிக்க
விளங்க,Vilanga - அதனாலே ஒரு விளக்கம் உண்டாகும்படியாக
ஒரு நாள்,Oru naal - ஒரு நாளாகிலும்
வீண் மீது காணவாராய்,Veen meedhu kaanavaaraai - ஆகாசத்தின்மேலே கண்ணுக்குத் தோற்ற எழுந்தருளாய்.
3319திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பர வ்யூஹ விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரமென்கிற ஐந்து ப்ரகாரங்களைக் கொண்டு அடியார்களை உகப்பித்தருளாநின்ற நீ எனது நெஞ்சிலும் எழுந்தருளியிருந்து வைத்து என் கண்ணுக்குத் தோற்றாதேயிருந்தால் தளரமாட்டேனோ வென்கிறார்) 5
விண் மீதிருப்பாய்! மலை மேல் நிற்பாய்! கடற் சேர்ப்பாய்!
மண் மீதுழல்வாய்! இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய்!
எண் மீதியன்ற புற அண்டத்தாய்! என தாவி
உண் மீதாடி உருக் காட்டாதே ஒளிப்பாயோ!–6-9-5
விண் மீது இருப்பாய்,Vinn meedhu iruppaay - பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
மலை மேல் நிற்பாய்,Malai meel nirppaa - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே!
கடல் சேர்ப்பாய்,Kadal seerppaa - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மண் மீது உழல்வாய்,Mann meedhu uzhalvaay - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே!
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,Ivattrul engum maraindhu uraivaay - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே!
எண் மீது இயன்ற புறம் அண்டத்தாய்,Enn meedhu iyandra puram andaththaa - எண்ணிக்கைக்கு மேலே போகக் கடவதான (எண்ணிறந்த) பஹிரண்டங்களிலு முளனானவனே! (நீ)
எனது ஆவியுள்,Enadhu aaviyul - என்னுடைய நெஞ்சுக்குள்ளே
மீதாடி,Meedhaadi - மிகவும் நடையாடி விட்டு
உரு காட்டாதே,Uru kaattaadhe - வடிவைக் கண்ணுக்காட்டாமல்
ஒளிப்பாயோ,Oli paayo - ஒளிக்கின்றாயே! இது தகுதியோ?
3320திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –காண்கைக்கு இவர் தாம் அயோக்யர் என்று உபேக்ஷித்து அருளினானாகக் கொண்டு -யோக்யதை அயோக்யதை பாராதே லோகத்தை எல்லாம் அளந்து கொண்ட உன்னால் இழக்கப் படுவார் உண்டோ என்கிறார்.) 6
பாயோர் அடி வைத்து அதன் கீழ்ப் பரவை நிலமெல்லாம்
தாயோர் அடியால் எல்லா உலகும் தடவந்த
மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும்
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ?–6-9-6
ஓர் அடி,Oru adi - ஒரு திருவடியை
பாய் வைத்து,Paay vaiththu - பரப்பிவைத்து
பாவை நிலம் எல்லாம்,Paavai nilam ellam - கடல் சூழ்ந்த ஸகல பூமியும்
அதன் கீழ்,Adhan keezh - அந்தத் திருவடியின்கீழே யாம்படி
தாய்,Thaai - தாவியளந்து,
ஓர் அடியால,Oru adiyaal - மற்றொரு திருவடியாலே
உலகு எல்லாம,Ulagu ellam - மேலுலக மெல்லாவற்றையும்
தடவந்த,Thadavanda - ஆக்ரமித்த
மாயோன்,Maayon - ஆச்சரியசேஷ்டிதவே!
உன்னை காண்பான்,Unnai kaanbaan - உன்னைக் காணவேண்டி
வருந்தி,Varundhi - பிரயாஸ்ப்பட்டு
தீயோடு உடன் சேர் மெழுகு ஆய்,Theeyodu udan seer mezhuvu aay - நெருப்போடு சேர்ந்த மெழுகின் தன்மையை யுடையேனாய்
உலகில,Ulakil - இவ்வுலகத்தில்
எனை நாளும் திரிவேனோ,Enai naalum thirivaayno - எத்தனைநாளும் தட்டித்திரிவதேயோ என்கதி?
3321திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (பிரானே! எல்லாம் உன்னுடைய ஸங்கல்பாயத்தமாயிருக்க, எனக்கு அருள் செய்வதுதானோ மிகை என்கிறார்.) 7
உலகில் திரியும் கரும கதியாய் உலகமாய்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்! புற அண்டத்து
அலகில் பொலிந்த திசை பத்தாய அருவேயோ!
அலகில் பொலிந்த அறிவிலேனுக்கு அருளாயே.–6-9-7
உலகில் திரியும் கருமம் கதி ஆய்,Ulagil thiriyum karumam kathi aay - லோகத்தில் வியாபரிக்கிற ஸாதன கர்மஸ்வரூபியாயும்
உலகம் ஆய்,Ulagam aay - அந்தக கருமங்களை யனுஷ்டிப்பவர்கள் ஸ்வரூபியாயும்
உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய்,Ulakukke oru uyirum aanaay - ஸர்வலோகங்களுக்கும் எகாத்மாவாயும் நிற்பவனே!
புறம் அண்டத்து,Puram andaththu - அண்டங்களுக்கு வெளிப்பட்டிருப்பவர்களாய்
அலகு இல் பொலிந்த,Alaku il polinda - எண்ணிக்கையில்லாதபடி விளங்குபவர்களாய்
திசை பத்து ஆய,Disai paththu aay - பத்துத்திசைகளிலும் ஞானத்தாலே வ்யாப்தாயிருக்கின்ற முக்தாத்மாக்களை வடிவாகவுடையவனே!
அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு,Alaku il polinda arivilenukku - எண்ணிக்கையில்லாதபடி விளங்குகின்ற அஜ்ஞானத்தையுடையேனான என் விஷயத்தில்
அருளாய்,Arulai - க்ருபைபண்ணவேணும்.
3322திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் -தேஜோ மாயா விக்ரஹத்தையுடைய நீ அவ்வடிவை எனக்கு அனுபவிப்பியாதே சாம்சாரிக விஷயங்களில் தள்ளி இன்னம் கெடுக்கத் தேடுகிறாயோ என்கிறார்.) 8
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிரானாய்!
வெறி கொள் சோதி மூர்த்தி! அடியேன் நெடுமாலே!
கிறி செய்து என்னைப் புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ?
பிறிதொன்று அறியா அடியேன் ஆவி திகைக்கவே.–6-9-8
அறிவார் உயிர் ஆனாய்,Arivaar uyir aanaay - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே!
வெறி கொள் சோதி மூர்த்தி,Veri kol sodi moorthi - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே!
அடியேன் நெடுமாலே,Adiyaen nedumaale - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே!
அறிவு இலேனுக்கு அருளாய்,Arivu ilenukku arulai - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும்.
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க,Piridhu onru ariya adiyaen aavi thigaiyka - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக
கிறி செய்து,Kiri seydhu - ஏதோ சூதுபண்ணி
என்னை புறத்து இட்டு,Ennai purathu ittu - என்னைப் புறம்புண்டான பற்றுக்களிலே அகப்படுத்தி
இன்னம் கெடுப்பாயோ,Innam kettuppaayoo - இன்னமும் கெடுக்க நினைக்கிறாயோ?
3323திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் உனக்கு விதேயமான விஷய இந்திரியங்கள் நடையாடுகிற தேசத்திலே வைத்து என்னை முடிக்கத் தேடுகிறாயோ உன் திருவடிகளில் அழைத்துக் கொள்ளும் காலம் அணித்தது ஆகாதோ என்கிறார்.) 9
ஆவி திகைக்க ஐவர் குமைக்கும் சிற்றின்பம்
பாவி யேனைப் பல நீ காட்டிப் படுப்பாயோ?
தாவி வையம் கொண்ட தடந்தா மரைகட்கே
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ.–6-9-9
ஆவி திகைக்க,Aavi thigaiyka - நெஞ்சு கலங்கும்படியாந
ஐவர் குமைக்கும்,Aivar kumaikkum - பஞ்சேந்திரியங்களும் பீடிக்கும் படியான
சிற்றின்பம்பல,Sitrinbampala - அற்பாஸரங்களான விஷயங்கள் பலவற்றை
பாவியேனை நீ காட்டி,Paaviyeanai nee kaatti - பாவியேன் கண்ணிலே நீ காண்பித்து
படுப்பாயோ,Paduppaayoo - முடிக்க நினைக்கிறாயோ?
வையம் தாவி,Vaiyam thaavi - பூமி முழுவதையும் அளந்து கொண்ட ஸ்வாதீனமாக்கிக் கொண்ட
தட தாமரை கட்கே,Thada thamarai kattke - பெரிய திருவடித் தாமரைகளிலே நான் அந்வயிக்கும்படி
கூவிக்கொள்ளும் காலம்,Koovikkollum kaalam - என்னை யழைத்துக் கொள்ளுங்காலம்
இன்னம் குறுகாதோ,Innam kurukaadho - இன்னமும் ஸமீபித்ததாக ஆகக்கூடாதோ?
3324திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வைஷயிக ஸூகத்தை அல்பம் அஸ்திரம் என்று இருந்தீர் ஆகில் -அநந்தமாய் ஸ்திரமான கைவல்ய புருஷார்த்தை பற்றினாலோ என்னில் -அத்தை உன் திருவடிகளில் கைங்கர்யம் அல்லாமையாலே வேண்டா என்றேன் அத்தனை -அப்படியே கைவல்யமும் வேண்டேன் -என்கிறார்.) 10
குறுகா நீளா இறுதி கூடா எனை ஊழி
சிறுகா பெருகா அளவில் இன்பம் சேர்ந்தாலும்
மறுகால் இன்றி மாயோன்! உனக்கே ஆளாகும்
சிறு காலத்தை உறுமோ அந்தோ! தெரியிலே.–6-9-10
மாயோன்,Maayon - ஆச்சரியமானவனே!
குறுகா நீளா,Kurugaa neelaa - ஸ்வருபத்தில் ஸங்கோச விகாஸ மில்லாமலும்
இறுதி கூடா,Irudi kooda - முடிவுமில்லாமலும்
எனை ஊழி,Enai oozhi - எக்காலத்திலும்
சிறுகா பெருகா,Sirukaa perugaa - க்ஷய வ்ருத்திகளில்லாமலும்
அளவு இல்,Alavu il - பரிச்சேதமற்றதாயு மிருக்கிற
இன்பம்,Inbam - கைவல்யா நுபவஸுகமானது
சேர்ந்தாலும்,Serndhaalum - வந்து கூடினாலும்
தெரியில்,Theriyil - நிரூபித்துப்பார்க்கில்
மறுகால் இன்றி,Marukaal inri - பின்னையொருகாலும் இல்லாதபடியாக (மிகவும் அற்பகாலமாக)
உனக்கே ஆன் ஆகும் சிறு காலத்தை,Unakke aan aakum siru kaalatthai - உனக்கே அடிமைப்படும்படியான ஸ்வல்பகாலத்தை
உறுமோ,Urumoo - ஒத்திருக்குமோ?
அந்தோ,Andhoo - ஐயோ?
3325திருவாய்மொழி || (6-9—நீராய் நிலனாய்) (கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும்வண்ணம் ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்) (இத் திருவாய்மொழியானது தன்னோடு அந்வயமுடையாரை ஸர்வரக்ஷகனான எம்பெருமானுக்கு அநந்யார்ஹ சேஷ பூதராக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11
தெரித்தல் நினைதல் எண்ணல் ஆகா,Teriththal ninaiththal ennall aakaa - சாஸ்த்ரஜ்ஞானத்தாலும் மனனத்தாலும் த்யானத்தாலும் பரிச்சேகதிக்க முடியாத
திரு மாலுக்கு,Thiru Maalukku - ஸ்ரீமந்நாராயணனுக்கு
தொண்டர் தொண்டர்,Thondar thondar - உரிய அநந்யார்ஹ சேஷ பூதர்களான பக்த பக்தர்களுக்கு
தொண்டன்,Thondan - பக்தரான
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வார்
தெரிய சொன்ன,Theriyat sonna - விசதமாக அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள்,Oor aayiraththul - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,ePaththum - இந்தத் திருவாமொழி (தன்னைக் கற்குமவர்களை)
உலகம் உண்டாதற்கு,Ulagam undaatharku - உலக முண்டவனான எம்பெருமான் விஷயத்திலே
உரிய தொண்டர் ஆக்கும்,Uriya thondar aakum - அநந்யார்ஹ சேஷ பூதாரக்கும்.
3326திருவாய்மொழி || 6-10–உலகம் 1
உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1
ulagam unda peru vaaya,உலகம் உண்ட பெரு வாயா - (பிரளய காலத்தில்) உலகங்களையெல்லாம் அமுது செய்த பெருவாயையுடையவனே!
ulappu il keerthi ammaane,உலப்பு இல் கீர்த்தி அம்மானே - முடிவில்லாத புகழுடைய பெருமானே
nilavum sudar soozi oli moorthi,நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி - அப்ராக்ருத தேஜோமயமான திவ்ய விக்ரஹத்தையுடையவனே!
nediaay,நெடியாய் - மிகப்பெரியோனே!
adiyen aar uyire,அடியேன் ஆர் உயிரே - அடியேனுக்குப் பரிபூர்ண ப்ராணபூதனே!
ulagukku thilatham aay nindra,உலகுக்கு திலதம் ஆய் நின்ற - உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற
emperumane,எம்பெருமானே - அஸ்மத்ஸ்வாமியே!
kulam tol adiyen,குலம் தொல் அடியேன் - குலபரம்பரையாக உனக்கு அடிமைப் பட்டிருப்பவனான அடியேன்
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
koodum aaru,கூடும் ஆறு - வந்து சேறும்படியை
kooraay,கூறாய் - அருளிச் செய்யவேணும்.
3327திருவாய்மொழி || 6-10–உலகம் 2
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல்லசுரர் குலமெல்லாம்
சீறா எரியும் திரு நேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந் தீ மலரும் திருவேங் கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன்னடி சேர் வண்ணம் அருளாயே.–6-10-2-
kodu valla asurar kulam ellaam,கொடு வல்ல அசுரர் குலம் எல்லாம் - மிகக் கொடிய அசுரர்களின் கூட்டமெல்லாம்
kooru aay,கூறு ஆய் - பலபல கண்டங்களாகி
neeru aay,நீறு ஆய் - சாம்பலாகி
nilan aagi,நிலன் ஆகி - தரைப்பட்டிருக்கச் செய்தேயும்
seeraa,சீறா - பின்னையும் சீறி
eriyum,எறியும் - ஜ்வலியா நிற்கிற
thiru nemi valavaa,திரு நேமி வலவா - திருவாழியாழ்வானை வலவருகிலே ஏந்தியிருப்பவனே!
theyvam komaane,தெய்வம் கோமானே - நித்ய ஸூரிநாதனே!
seeru aar sunai,சேறு ஆர் சுனை - சேறு நிரம்பிய கனைகளிலே
thaamarai,தாமரை - செந்தாமரை மலர்கள்
sem thee malarum,செம் தீ மலரும் - சிவந்த தீப்போன்ற நிறத்தையுடைத்தாய்க் கொண்டு மலரும்படியுள்ள
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - அளவுபடாத அன்பையுடையேனான நான்
un adi ser vannam,உன் அடி சேர் வண்ணம் - உன் திருவடிகளைச் சேறும்படி
arulaay,அருளாய் - அருள்புரிய வேணும்.
3328திருவாய்மொழி || 6-10–உலகம் 3
வண்ண மருள் கொள் அணி மேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன்னடி சேர அடியேற்கு ஆ ஆ என்னாயே.–6-10-3
vannam arul kol,வண்ணம் அருள் கொள் - அருளே வடிவெடுத்த வண்ணமாய்
ani paegam vannaa,அணி பேகம் வண்ணா - அழகிய மேகம்போன்ற நிறத்தை யுடையவனே!
maayam ammaane,மாயம் அம்மானே - ஆச்சரிய குணங்களையுடைய ஸ்வாமியே!
ennam pugundhu thithikkum amudhae,எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - நெஞ்சுக்குள்ளே புகுந்து ரஸிக்கும் அமிருதமானவனே!
imaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதிதேவனே!
thel nal aruvi,தெள் நல் அருவி - தெளிந்தழகிய அருவிகள்
mani pon muthu,மணி பொன் முத்து - மணிகளையும் பொன்களையும் முத்துக்களையும்
alaikkum,அலைக்கும் - கொழிக்குமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையிலே விளங்குபவனே!
annale,அண்ணலே - ஸ்வாமியே!
un adi so,உன் அடி சோ - உன் திருவடிகளில் வந்து சேரும்படி
adiyerkku,அடியேற்கு - அடியேன் விஷயத்திலே
aa aa ennaay,ஆ ஆ என்னாய் - ஐயோ வென்றிரங்கியருள வேணும்.
3329திருவாய்மொழி || 6-10–உலகம் 4
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திரு மா மகள் கேள்வா!
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அரு வினையேன் பொருந்துமாறு புணராயே.–6-10-4
aa aa ennaadhu,ஆ ஆ என்னாது - இரக்கமில்லாமல்
ulagathai alaikkum asurar,உலகத்தை அலைக்கும் - உலகத்தவர்களை ஹிம்ஸிப்பவர்களான
asurar,அசுரர் - ஆஸுரப்ரக்ருதிகளினுடைய
vaazhnal mel,வாழ்நாள் மேல் - ஆயுளை முடிப்பதற்காக
thee vai vaali,தீ வாய் வாளி - நெருப்பை உமிழ்கிற அம்புகளை
mazhai pozhindha silaiyaa,மழை பொழிந்த சிலையா - மழைபோலே வர்ஷித்த சார்ங்க வில்லையுடையவனே!
thiru maa magal kaelva,திரு மா மகள் கேள்வா - திருமகள் கொழுநனே!
theva,தேவா - தேவனே!
surargal munikanangal virumbum,சுரர்கள் முனிகணங்கள் விரும்பும் - தேவர்களும் முனிவர்களும் திரள் திரளாக ஆதரிக்கும் படியான
thiru vengadathaaney,திரு வேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
poo aar kazhalgal,பூ ஆர் கழல்கள் - (உனது) புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை
aru vinaiyen,அரு வினையேன் - மஹாபாபியான நான்
porundhum aaru,பொருந்தும் ஆறு - கிட்டும்படி
punaraay,புணராய் - கற்பித்தருளவேணும்
3330திருவாய்மொழி || 6-10–உலகம் 5
புணரா நின்ற மரமேழ் அன் றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரமிரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேக மெனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத் துன பாதம் சேர்வ தடியேன் எந்நாளே.–6-10-5
anru,அன்று - ராமாவதாரத்திலே
punaraa nindra maram ezh,புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை
eydha,எய்த - துளைபடுத்தின
oru vil valavaa o,ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே!
punar ey nindra maram irandin naduve,புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே
pon,போன் - தவழ்ந்து சென்ற
mudhalvaa o,முதல்வா ஓ - ஓ மூலபுருஷனே!
thinar aar megham ena,திணர் ஆர் மேகம் என - தின்மை மிக்க மேகங்களென்னும்படி
kaliru serum,களிறு சேரும் - யானைகள் சேருமிடமான
thiruvengadath thaane,திருவேங்கடத் தானே - திருமலையிலெழுந்தருளி யிருப்பவனே
thinar aar saangathu,திணர் ஆர் சார்ங்கத்து - திண்மைமிக்க ஸ்ரீசார்ங்க வில்லையுடைய
una paadham,உன பாதம் - உனது திருவடிகளை
adiyen saervadhu ennaal,அடியேன் சேர்வது எந்நாள் - அடியேன் அணுகப் பெறுவது என்றைக்கோ?
3331திருவாய்மொழி || 6-10–உலகம் 6
எந்நாளே நாம் மண்ணளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின் றிமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனமினமாய்
மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திரு வேங்கடத்தானே!
மெய்ந் நான் எய்தி எந்நாள் உன்னடிகள் அடியேன் மேவுவதே?–6-10-6
man alandha thaamaraigal inai,மண் அளந்த தாமரைகள் இணை - உலகமளந்த உபயபாதங்களை
naam kaanpadharku ennaal endru,நாம் காண்பதற்கு எந்நாள் என்று - நான் காண்பதற்குரிய நாள் எந்த நாளென்று
imaiyor gal,இமையோர்கள் - நித்யஸூரிகள்
ennaalum nindru etti,எந்நாளும் நின்று ஏத்தி - நிரந்தரமாக நின்று துதித்து
eirainji,இறைஞ்சி - வணங்கி
enam enam aay,இனம் இனம் ஆய் - திரள் திரளாக
mei naa manathaal,மெய் நா மனத்தால் - த்ரிகரணங்களாலும்
vazhipaadu seyyum,வழிபாடு செய்யும் - ஆராதனை செய்யுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் எழுந்தருளியிருப்பவனே!
adiyen naan,அடியேன் நான் - அடியேனாகிய நான்
mei eydhi,மெய் எய்தி - (கனவுபோலன்றிக்கே) மெய்யாகவே யடைந்து
un adikkaL mevuvadhu,உன் அடிக்கள் மேவுவது - உன் திருவடிகளிலே பொருந்துவது
ennaal,எந்நாள் - என்றைக்கோ?
3332திருவாய்மொழி || 6-10–உலகம் 7
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் ளுடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியார் வினைகள் தீர் மருந்தே! திரு வேங்கடத் தெம் பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலா தாற்றேனே.–6-10-7
adiyen mevi amarkindra amudhae,அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே!
emaiyor adhipathiye,இமையோர் அதிபதியே - தேவாதி தேவனே!
adu pul kodi aa udaiyaane,அடு புள் கொடி ஆ உடையானே - (பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே!
kolam kanivai perumaane,கோலம் கனிவாய் பெருமானே - அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே!
chedi aar vinaigal theer marundhae,செடி ஆர் வினைகள் தீர் மருந்தே - செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!
un paadham kaana,உன பாதம் காண - உனது திருவடிகளைக் காண்கைக்கு
noolaadhu,நோலாது - நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே)
nodi aar pozhudhum,நொடி ஆர் பொழுதும் - ஒரு க்ஷண மாத்திரமும்
aatren,ஆற்றேன் - தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன்
3333திருவாய்மொழி || 6-10–உலகம் 8
நோலா தாற்றேன் உன பாதம் காண என்று நுண்ணுர்வின்
நீலார் கண்டத் தம்மானும் நிறை நான் முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திரு வேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன் பால் வந்தாய் போலே வாராயே–6-10-8
nun unarvin,நுண் உணர்வின் - (ஸர்வஜ்ஞனாகையாலே) நுட்பமான உணர்வையுடையனான
neelaar kandathu ammaanum,நீலார் கண்டத்து அம்மானும் - சிவபிரானும்
nirai naanmuganum,நிறை நான்முகனும் - (ஞானசக்திகளால்) நிறைந்த பிரமனும்
indiranum,இந்திரனும் - தேவேந்திரனும்
un paadham kaana voodhu aatrennudru,உன பாதம் காண வோது ஆற்றேன் என்று - “உன் திருவடிகளைக் காண்கைக்கு ஸாதாரநானுஷ்டானம் பண்ணாதேயிருந்து ஆற்ற மாட்டுகின்றிலேன்“ என்று சொல்லிக் கொண்டு
sael ey kannar palar soozhu,சேல் எய் கண்ணார் பலர் சூழ - கய் கண்ணிகளான தங்கள் மனைவிமார்கள் பலரோடுங் கூடிவந்து
virumbum,விரும்பும் - விரும்பிப்பணியுமிடமான
maal aay mayakki vandhaay poalae,மால் ஆய் மயக்கி வந்தாய் போலே - மயக்கிக்கொண்டு வந்தாப்போலே
adiyen pal varai,அடியேன் பால் வராய் - அடியேன் திறந்தும் வந்து தோற்றவேணும்.
3334திருவாய்மொழி || 6-10–உலகம் 9
வந்தாய் போலே வாராதாய்! வாராதாய் போல் வருவானே!
செந்தாமரைக்கட் செங்கனி வாய் நாற்றோ ளமுதே! என துயிரே!
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல் செய் திரு வேங்கடத்தானே!
அந்தோ அடியேன் உன பாதம் அகல கில்லேன் இறையுமே.–6-10-9
vandhai poalae vaaraadhai,வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!
vaaraadhai pol varuvaane,வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!
sen thamarai kan,செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்
sem kani vaay,செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும்
naal thol,நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய
amudhae,அமுதே - பரமபோக்யனே!
enadhu uyire,எனது உயிரே - எனக்கு உயிரானவனே!
sindhaamanigal pagar,சிந்தாமணிகள் பகர் - சிறந்த ரத்னங்களின் ஒளியான
allai pagal sei,அல்லை பகல் செய் - இரவையும் பகலாக்குமிடமானது
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
antho,அந்தோ - ஐயோ!
una paadham,உன பாதம் - உனது திருவடிகளே
adiyen,அடியேன் - அடிமைச்சுவடறிந்த நான்
iraiyum akala killeen,இறையும் அகல கில்லேன் - ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்
3335திருவாய்மொழி || 6-10–உலகம் 10
அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10
alar mel mangai,அலர் மேல் மங்கை - பூவில் வாழ்மகளான பெரிய பிராட்டியார்
iraiyum akala killeen endru,இறையும் அகல கில்லேன் என்று - ஒருக்ஷணமும் பிரிந்திருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டு
urai maarpa,உறை மார்பா - நித்யவாஸம் பண்ணப்பெற்ற திருமார்வையுடையவனே!
nigar il pugazhai,நிகர் இல் புகழாய் - ஒப்பற்றதான புகழை யுடைய வனே!
ulagam moonru udaiyaa,உலகம் மூன்று உடையாய் - சேதநாசேதங்களுக்கும் ஸ்வாமியே!
ennai aal,என்னை ஆள் - நீசனே என்னையுமடிமை கொள்பவனே!
vaane,வானே - பவனே!
amarar,அமரர் - தேவர்களும்
muni kanangal,முனி கணங்கள் - மஹர்ஷி ஸமூஹங்களும்
virumbum,விரும்பும் - விரும்பிவந்து பணியுமிடமான
thiruvengadathaaney,திருவேங்கடத்தானே - திருமலையில் வாழ்பவனே!
pugal ondru illa adiyen,புகல் ஒன்று இல்லா அடியேன் - அநந்யகதியான நான்
un adi keel,உன் அடி கீழ் - உனது திருவடி வாரத்திலே
amarndhu pugundhaen,அமர்ந்து புகுந்தேன் - மிகப் பொருத்தமாக அந்வயித்துவிட்டேன்
3336திருவாய்மொழி || 6-10–உலகம் 11
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக் கேழில்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங் கடத்துக் கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.–6-10-11
adiyeeir,அடியீர் - அடியவர்களே!
adi keel amarndhu pugundhu vaazhmin endru endru,அடி கீழ் அமர்ந்து புகுந்து வாழ்மின் என்று என்று - நம்முடைய திருவடிகளின் கீழே புகுந்திருந்து உஜ்ஜீவித்துப் போருங்கள்“ என்று அநவாதமும் காட்டிக்கொடுத்து,
arul kodukkum,அருள் கொடுக்கும் - க்ருபை பண்ணுகிறவனும்
padi kel ella perumaanai,படி கேழ் இல்லா பெருமானை - சீர் நிலங்களை பெருமை வாய்ந்தவனுமான ஸர்வேச்வரனைக்குறித்து
mudipaan sonna,முடிப்பான் சொன்ன - ஸம்ஸாரத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
aayirathu,ஆயிரத்து - ஆயிரத்தினுள்ளும்
thiruvengadathukku ivaipaththum,திருவேங்கடத்துக்கு இவைபத்தும் - திருவேங்கடமலை விஷயமான இத்திருவாய்மொழியை
pidithaar pidithaar,பிடித்தார்பிடித்தார் - ஸாக்ஷாத்தாகவும் பரம்பரையாகவும் அவலம்பித்தவர்கள்
periya vaanul,பெரிய வானுள் - பாமாகாசமென்கிற பரமபதத்திலே
veettrindhu nilaavular,வீற்றிருந்து நிலாவுலர் - நிலை நின்று வீற்றிருப்பர்கள்.
3337திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளையே சரணமாகப்பற்றின வென்னை இந்திரியங்களை யிட்டு நலியப் பார்க்கிறாயே! இது தகுதியோ? என்கிறார்.) 1
உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1
எண்இலாபெரு மாயனே,Ennilaaperu Maayane - அளவிடமுடியாத ப்ரக்ருதி தத்வத்தை உபகரணமாக வுடையவனே!
இமையோர்கள் ஏத்தும்,Imayorkal eththum - தேவர்களாலே துதிக்கப்படுபவனும்
உலகம் மூன்று உடை,Ulagam moonru udai - மூவுலகங்களையும் சேஷமாசவுடையனுமான
அண்ணலே,Annale - ஸ்வாமியே!
அமுதே,Amuthe - பரம போக்யனே
அப்பனே,Appane - மஹோபகாரங்கள் செய்பவனே!
என்னை ஆள் வானே,Ennai aal vaane - என்னை நிர்வஹித்துக் கொண்டு போருமவனே!,
என்னை,Ennai - அடியனே
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி,Ul nilaaviya aivaraal kumaithiitri - உள்ளே நிரந்தரவ லீஸம் பண்ணுகின்றபஞ்சேந்திரியங்களாலும் நலிவுறும்படி பண்ணி
உன் பாதபங்கயம்,Un paathapankajam - உனது திருவடித்தாமரைகளை
நண்ணிலா வகையே,Nannilaa vagaiye - கிட்டாதபடியாகவே
இன்னும் நலிவான்,Innum nalivaan - இன்னமும் ஹிம்ஸிப்பதாக
எண்ணுகின்றாய்,Ennungindraal - எண்ணியிருக்கிறாய் போலும்
3338திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எலியெலும்பனான வென்னை இந்திரியங்களாலே நோவுபடுத்தி அந்த நோவை அறிவிக்க முடியாதபடி கடக்க நிற்கிறாயே! என்கிறார்.) 2
என்னை ஆளும் வன்கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோது வித்திட்
டுன்னை நான் அணு காவகை செய்து போதி கண்டாய்
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!கடல்ஞாலம் காக்கின்ற
மின்னு நேமியினாய்!வினையேனுடை வேதியனே!–7-1-2
கன்னலேஅமுதே,Kannale Amuthe - பரமபோக்யனே!
கார் முகில் வண்ணனே,Kaar mugil vannaane - காளமேக நிறத்தனே!
கடல் ஞாலம் காக்கின்ற,Kadal gnaalam kaakkindra - கடல் சூழந்த வுலகங்களை ரக்ஷித்தருள்கின்ற
மின்னு நேமியினாய்,Minnu nemiyinaai - உஜ்ஜ்வலமான திருவாழியை யுடையவனே!
வினையேனுடைய வேதியனே,Vinaiyenudaiya vedhiyane - பாவியேனான என்திறத்தாலே எட்டாத படி வேத வேத்யனாயிருக்குமவனே!
என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து,Ennai aalum van ko ooRainthu ivai peithu - என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து
இராப் பகல்,Iraap pagal - இரவும் பகலும்
மோது வித்திட்டு,Modu vithittu - பிடிக்கச் செய்து
நான்உன்னை அணுகாவகை,Naan unnai anugaavakai - நான் உன்னைக் கிட்டாதபடி
செய்து போதி கணிடாய்,Seithu podhi kanidaai - பண்ணிப்போருகிறாய்.
3339திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (ஆழ்வீர்! உம்மை நான் இந்த ப்ரக்ருதியிலே வைத்தது ஒரு ப்ரயோஜனத்துக்காகக் காணும்’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, பிரானே! என்னை இப்படி நலிவித்து என்ன ப்ரயோஜனம் கொள்ளப் பார்க்கிறாய்? என்கிறார்.) 3
வேதியா நிற்கும் ஐவரால் வினையேனை மோதுவித்து உன திருவடிச்
சாதியா வகை நீ தடுத்து என் பெறுதி அந்தோ
ஆதி ஆகி அகல் இடம் படைத்து உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட
சோதி நீள் முடியாய் தொண்டனேன் மது சூதனனே –7-1-3
ஆகி ஆகி,Aagi aagi - காரணபூதனாய்க் கொண்டு
அகல் இடம் படைத்து,Akal idam padaiththu - விஸ்தாரமான ஜகத்தை ஸ்ருஷ்டித்து
உண்டு,Undu - (பிரளயத்திலே) வயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்து (ஒரு கால்) அளந்து
இடந்திட்ட,Idandhitta - (வரஹரூபியாய்) இடந்தவனே!
சோதி நீள் முடியாய்,Sothi neel mudiyai - உஜ்ஜ்வலமாய் நீண்ட திருவபிஷேகத்தை யுடையவனே!
தொண்டனேன் மது சூதன்னே!,Thondan en madhu soodhanne! - என்னை யீடுபடுத்திக் கொண்ட மதுசூதனனே
விணையேனே,Vinaiyene - பாவியான வென்னை
வேதியான நீற்கும் ஐவரால்,Vedhiyanaa neerkum aivaraal - இடைவிடாதே நலியும் பஞ்சேந் திரியங்களாலே
மோதுவித்து உன் திருவடி சாதியாவகை,Modhuviththu un thiruvadi saadhiyaavakai - உன் திருவடிகளைக் கிட்டாதபடி
நீ தடுத்து என் பெறுதி,Nee thaduththu en perudhi - நீ தடை செய்து என்ன பயன் பெற்றாயாகிறாய்;
அந்தோ,Andho - ஐயோ!
3340திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக் கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார்.) 4
சூது நான் அறியா வகைச் சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி உன்னடிப்
போது நான் அணுகா வகை செய்து போதி கண்டாய்
யாதும் யாவரும் இன்று நின்னகம் பால் ஒடுக்கி ஓர் ஆலினீளிலை
மீது சேர் குழவி! வினையேன் வினை தீர் மருந்தே!–7-1-4
யாதும் யாவரும் இன்றி,Yaadhum yaavarum indri - சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல்
நின் அகம் பால் ஒடுக்கி,Nin agam paal oduki - உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி
ஓர் ஆலின் நீள் இலை மீது,Or aalin neel ilai meedhu - ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது
சேர்குழவி,Ser kuzavi - குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே!
வினையேன் வினை தீர் மருந்தே,Vinaiyen vinai theer marundhe - பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!
ஒர் ஐவரை காட்டி,Or aivarai kaatti - பஞ்சேந்திலீயங்களைக் காட்டி
நான் சூது அறியாவகை,Naan soodhu ariyaavakai - தான் உறுவது அறியாதபடி
சுழற்றி,Suzhatri - என்னை மருளப்பண்ணி
உன் அடி போது நான் அணுகா வகை செய்து,Un adi poadhu naan anugaa vakai seidhu - உன் திருவடி மலர்களை நான் கிட்டாதபடி பண்ணி
போதி கண்டாய்,Pothi kandai - கண்காணாதபடி கடக்க நிற்கின்றாயே!
3341திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நான் ஒரு ஸமாதானம் செய்து கொள்ள முடியாதபடி விஷயங்களாலும் இந்திரியங்களாலும் என்னை ஹிம்ஸிப்பவர்களும் ஐவர்; ஹிம்ஸைக்குப் பரிகரமான வஸ்துக்களும் ஐந்து என்கிறார்._ 5
தீர் மருந்தின்றி ஐவர் நோயடும் செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
ஆர் மருந்தினி யாகுவார்! அடலாழிஏந்தி அசுரர் வன்குலம்
வேர் மருங் கறுத்தாய்! விண்ணுளார் பெருமானேயோ!–7-1-5
அடல் ஆழி ஏந்தி,Adal aazhi endhi - சேசு பொருந்திய திருவாழியைக் கையிலேதாங்கி
அசுரர் வன்குலம்,Asurar van kulam - அசுரர்களின் பிரபலமான கூட்டங்களை
மருங்கு வேர் அறுத்தாய்,Marungu ver aruththai - பக்கவேரோடே அறுத்தவனே!
ஓ விண்ணுளார் பெருமானே,O vinnular perumane - ஓ நித்யஸூரிதாதனே!
தீர் மருந்து இன்றி,Theer marundhu indri - மாற்று மருந்தில்லாதபடி (அபரிஹார்யமாக)
ஐந்து நோய் அடும்,Aindhu noi adum - ஐந்து வகைப்பட்ட சப்தாதி விஷயங்களாகிற நோய்களாலே முடிக்கக்கடவதான
செக்கில் இட்டு,Sekkil ittu - (சரீரமாகிற) செக்கிலே தள்ளி
திரிக்கும் ஐவரை,Thirikkum aivarai - நெருக்கிற பஞ்சேந்திரியங்களை
நேர் மருங்கு உடைத்தா அடைத்து,Ner marungu udaiththa adaitthu - நேரிலும் பக்கங்களிலுமாக நிறுத்தி
நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,Negizhppan okkinraai - நெகிழ விடுவான் போலேயிரா நின்றாய்;
இனி மருந்து ஆகுவார்யார்,Ini marundhu aaguvaar yaar - இனி மரந்தாகக் கூடியவர் யார்?
3342திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்தி பெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார்.) 6
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை
மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்?
பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென்
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6
விண் உளார்,Vin ulaar - விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே
பெருமாற்கு,Perumaarku - பராத்பரனான உனக்கு
அடிமை செய்வாரையும்,Adimai seyvaaraiyum - அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும்
மண்ணுள்,Mannul - இந்நிலத்திலே
செறும்,Serum - மேலிட்டு நலியக்கூடிய
ஐம்புலன் இவை,Aimpulan ivai - இந்த பஞ்சேந்திரியங்கள்
என்னைப் பெற்றால் என் செய்யா,Ennaip peral en seyya - (இவற்றை வெல்லுதற்குரிய வலிமையற்ற) என்னிடம் வந்து சேர்ந்தால் இவை என்னதான் செய்ய மாட்டா?
மற்று,Matru - அதற்கு மேலே
நீயும் விட்டால்,Neeyum vittaal - சக்தனான நீயும் கை விட்டால்
(என்செய்யா),(En seyya) - என்ன செய்யமாட்டா? (எதுவும் செய்யக்கூடுமன்றோ.)
பண் உளாய்,Pan ulaay - ஸ்வரத்தை அறியுமவனே!
கவிதன் உளாய்,Kavithan ulaay - (என்னுடைய ஆர்த்தியே வடிவெடுத்த சொற்களே யறியுமவனே!
பத்தியின் உள்ளாய்,Pattiyin ullaay - என்னுடைய ஆற்றாமையை அறியுமவனே!
பரம் ஈசனே,Param eesanee - பராத்பரனே!
என் கண் உளாய் நெஞ்சு உளாய் சொல் உளாய்,En kan ulaay nenju ulaay sol ulaay - என்னுடைய கண்ணோடும் நெஞ்சோடும் வாகிந்திரியத்தோடும் வாசியற உள்ளே ஸந்நிதி பண்ணியிரப்பவனே!
வந்து,Vandu - என்னளவில் வந்து
ஒன்று சொல்லாய்,Ondru sollaay - (அபயமாக) ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும்.
3343திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார்.) 7
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஓர் ஐவர் வன் கயவரை
என்று யான் வெல்கிற்பன் உன் திருவருள் இல்லையேல்?
அன்று தேவர் அசுரர் வாங்க அலை கடல் அரவம் அளாவி ஓர்
குன்றம் வைத்த எந்தாய்! கொடியேன் பருகு இன்னமுதோ!–7-1-7
அன்று,Andru - பண்டொரு காலத்திலே
தேவர் அசுரர்,Devar Asurar - தேவர்களும் அசுரர்களும்
வாங்க,Vaang - வலிக்கும்படியாக
அலைகடல்,Alaikadal - அலையெறிகிற கடலிலே
அரவம் அளாவி,Aravam Alaavi - வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி
ஓர் குன்றம்,Or Kunram - மந்தர மலையை
வைத்த எந்தாய்,Vaittha Endhaay - நாட்டின் பெருமானே!
கொடியேன் பருகு இன் அமுதே,Kodiyen Parugu Inn Amudhe - பாவியேனான நானும் பருகும் படியான இன்னமுதமே!
உன்திரு அருள் இல்லை ஏல்,Unthiru Arul Illai Ael - உன்னுடைய கருபை இல்லை யாகில்,
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத ஒர் ஐவர்வன் கயவரை,Ondru Solli Oruthinil Nirgiladha Or Aivarvan Kayavarai - ஆறியிருக்கமாட்டாத பஞ்சேந் திரியங்களாகிற பிரபலக் கொடியவர்களை
யான் என்று வெல் கிற்பன்,Yaan Endru Vel Kirpan - அடியேன் என்றைக்கு வெல்ல வல்லவனாவேன்?
3344திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (எனக்குண்டான ப்ரக்ருதி ஸம்பந்தத்தை யறுத்து, மனமொழி மெய்களாலே உன்னையே நான் நிரந்தரமாக அநுபவிக்கும்படி பண்ணி யருளவேணுமென்கிறார்.) 8
இன்னமு தெனத் தோன்றி ஓர் ஐவர் யாவரையும் மயக்க நீ வைத்த
முன்னம் மாயமெல்லாம் முழு வேர் அரிந்து என்னை யுன்
சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்தேத்திக் கை தொழவே அருள் எனக்கு
என்னம்மா! என்கண்ணா!இமையோர் தம் குலமுதலே!–7-1-8
என் அம்மா,En Amma - என் ஸ்வாமியே!
என் கண்ணா,En Kanna - எனக்கு எளியவனானவனே!
இமையோர் தம் குலம்; முதலே,Imayor Tam Kulam; Mudhale - நிக்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனே!
ஒர் ஐவர்,Or Aivar - சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
இன் அமுது என தோன்றி,Inn Amudhu En Thondri - இனிய அமிருதம் போல் போக்யமாய்த் தோன்றி
யாவரையும் மயக்க,Yaavaraiyum Mayakka - எப்படிப்பட்டவர்களையும் மயக்கும் படியாக
நீ வைத்த முன்னம் மாயம் எல்லாம்,Nee Vaittha Munnam Maayam Ellam - நீ உண்டாகி வைத்த அநாதியான ஸம்ஸாரத்தை யெல்லாம்
முழுவேர் அரிந்து,Muzhuver Arindhu - வாஸநையோடே போக்கி
என்னை,Ennai - அடியனே
உன் சின்னமும் திரு மூர்த்தியும்,Un Chinnamum Thiru Moorthiyum - உனது அஸாதாரண லக்ஷ்ணங்களான சங்கசக்ராதிகளையும் திவ்யமங்கள் விக்ரஹத்தையும்
சிந்தித்து,Sindhitthu - நெஞ்சார நினைத்து
ஏத்தி,Etti - வாயாரத் துதித்து
கை தொழ,Kai Thoza - கையாரத் தொழும் படியாகப் பண்ணி
எனக்கே அருள்,Enakke Arul - எனக்கென்று விசேக்ஷித்த க்ருபையைப் பண்ண வேணும்.
3345திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார்.) 9
குல முதல் அடுந் தீவினைக் கொடு வான் குழியினில் வீழ்க்குமைவரை
வல முதல் கெடுக்கும் வரமே தந்தருள் கண்டாய்
நில முதல் இனி எவ்வுலகுக்கும் நிற்பன செல்வன எனப்பொருள்
பல முதல் படைத்தாய்! என்கண்ணா! என் பரஞ்சுடரே!–7-1-9
நிலம் முதல்,nilam mudhal - பூமி முதலாக
இனி எவ்வுலகுக்கும்,ini evvulakkum - மற்றும் ஸகல லோகங்களுக்கும்
நிற்பன செல்வன என,nirpana selvan ena - ஸ்தாவர ஜங்கம ரூபமான
பொருள் பல,porul pala - பொருள்கள் பல வற்றையும்
முதல் படைத்தாய்,mudhal padaitthaai - முன்னம் படைத்தவனே!
என் கண்ணா,en kanna - என் கண்ணனே!
என் பரம் சுடரே,en param sudare - என் பரஞ்சோதிவடிவனே!,
குலம்,kulam - குலத்தை
முதல் அடும்,mudhal adum - வேரோடே முடிக்கவல்ல
தீவிகளை,theevigalai - பாபங்களை விளைக்கவல்ல
கொடு வன்குழியினில்,kodu vankuzhiyinil - (சப்தாதி விஷயங்களாகிற) படுகுழியதிலே
வீழ்க்கும் ஐவரை,veezhkum aivarai - தள்ளக்கூடிய பஞ்சோத்திரியங்களை
வலம் முதல் கெடுக்கும் வலமே,valam mudhal kedukum valame - மூல பலத்தோடே முடிக்கும் படியான மிடுக்கை
தந்தருள் கண்டாய்,tandarul kandai - அநுக்ரஹித்தருள வேணும்.
3346திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெரு மிடறு செய்து கூப்பிடுகிறார்.) 10
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி உன் இணைத் தாமரைகட்கு
அன்புருகி நிற்குமது நிற்கச் சுமடு தந்தாய்
வன் பரங்கள் எடுத்து ஐவர் திசை திசை வலித்து எற்று கின்றனர்
முன் பரவை கடைந்த அமுதம் கொண்ட மூர்த்தியோ–7-1-10
முன்,mun - முன்பொரு காலத்திலே
பரவை அடைந்து,paravai adainthu - சுடலைக் கடைந்து
அமுதம் கொண்ட மூர்த்தி,amudham konda moorthi - அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே!
என் பரம் சுடரே,en param sudare - எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு
உன் இணைதாமரை கட்கு,un inaithamarai kadgu - உனது உபய பாதங்கள் விஷயத்திலே
அன்பு உருகிநிற்கு மது நிற்க,anbu uruginirku madhu nirka - அன்பினாலே உருகியிருக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க (அதற்கு விரோதமாக)
சுமடு தந்தாய்,sumadu thandhai - ((அதற்கு விரோதமாக) சரீரமாகிற) சும்மாட்டைத் தந்தாயே! (அதனால்)
வன் பரங்கள் எடுத்து,van parangal eduthu - பிரபலமான விஷயபாரங்களைச் சுமத்தி
ஐவர்,aivar - பஞ்சேந்திரியங்கள்
திசை திசை,disai disai - ஒவ்வொரு முலையாக
வலித்து,valithu - இழுத்து
எற்றுகின்றனர்,etrugindranar - பீடிக்கின்றனர்;
ஓ,o! - இது பொறுக்கமுடிய வில்லையே.
3347திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகின்றார்.) 11
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க் குணங்கள் படைத்து அளித்துக் கெடுக்குமப்
புண்டரிகக் கொப்பூழ்ப் புனற்பள்ளி அப்பனுக்கே
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்லா யிரத்துள் இப்பத்தும்
கண்டு பாட வல்லார் வினை போம் கங்குலும் பகலே.–7-1-11
குணங்கள் கொண்ட,gunangal kondha - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட.
மூர்த்தி ஓர் மூவர் ஆய்,moorthi or moovar aay - மும்மூர்த்திகளுமாய்
படைத்து அளித்து கெடுக்கும்,padaitthu alithu kettum - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய்
அப்புண்டரீகம் கொப்பூழ்,appundariyam koppuul - அப்படிப்பட்ட பத்மநாபனாய்
புனல் பள்ளி அப்பனுக்கே,punal palli appanuke - காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு
தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,thondar thondar thondan sadagopan - தாஸாது தாஸராண ஆழ்வார்
சொல் ஆயிரத்துள்,sol aayiraththul - அருளிச் செய்த ஆயிரத்தினுள்
இப் பத்தும்,ip pattum - இப் பத்துப் பாசுரங்களையும்
கங்குலும் பகலும்,Kangulum pagalum - ஸதாகாலமும்
கண்டு பாட வல்லார்,kandu paada vallaar - பொருள் கண்டு பாடவல்லாருடைய
வினை போம்,vinai poam - பாவங்கா தொலைந்துபோம்.
3348திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 1
கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1
செம் கயல் பாய் நீர் திரு அரங்கத்தாய், Sem kayal paay neer thiru arangaththai - அழகிய மீன்கள் துள்ளி திருக்காவேரி சயனித்த தருள்பவனே!
கங்குலும் பகலும், Kangulum pagalum - இரவும் பகலும்
கண் துயில் அறியாள், Kan thuyil ariyaal - கண்ணுறங்கப் பெறுகின்றிலள்;
கண்ண நீர் கைகளால் இறைக்கும், Kanna neer kaigalaal iraikkum - கண்ணீரைக் கைகளாலே இறைக்க வேண்டும்படி தாரை தாரையாய்ப் பெருகவிடாநின்றாள்;
சங்கு சக்கரங்கள், Sangu chakkarangal - திருவாழி திருச்சங்குகள் இதோ ஸேவை ஸாதிக்கின்றன
என்று கை கூப்பும், Endru kai kooppum - என்று சொல்லி அஞ்ஜலி பண்ணி நின்றாள்;
தாமரை கண் என்றே தளரும், Thaamarai kan endrae thalarum - (என்னைக் காடக்ஷித்த) தாமரைக் கண்களன்றோ இவை! என்று சொல்லித் தளர்கன்றாள்;
உன்னைவிட்டு எங்ஙனே தரிக்கேன் என்னும், Unnaivittu engganae tharikken endrum - (பிரானே) உன்னைவிட்டுப் பிரிந்து தரிக்கவும் முடியுமோ? என்கின்றாள்;
இரு நிலம், Iru nilam - விஸ்தீர்ணமான பூதலத்தை
கை துழவிருக்கும், Kai thuzhavirukkum - கைகளாலே துழாவாநின்றாள் (ஸ்ரீ ரங்காநாதனே!)
இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயத்தில்
என் செய்கின்றாய், En seikindraai - ஏது செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறாய்?
3349திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 2
என் செய்கின் றாய்? என் தாமரைக் கண்ணா!
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய்!
என்னும் வெவ் வுயிர்த் துயிர்த் துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா! தகுவதோ என்னும்
முன் செய்திவ் வுலகம் உண்டு மிழ்ந் தளந்தாய்!
என் கொலோ முடிகின்றது இவட்கே?–7-2-2
என் தாமரை கண்ணா, En thamarai kanna - என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே!
என் செய்கின்றாய் என்னும், En seikindraai ennnum - என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்;
கண் நீர் மல்க இருக்கும், Kan neer malga irukkum - கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்;
எறி நீர் திரு அரங்கத்தாய், Eri neer thiru arangaththaai - அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே!
என் செய்கேன் என்னும், En seiken ennum - (உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்;
வெவ்வு யிர்த்து உயிர்த்து, Vevvu yirthu uyirthu - வெப்பமாகப் பலகாலும் பெரு மூச்சு விட்டு
உருகும், Urugum - கரைகின்றாள்;
முன் செய்த வினையே, Mun seitha vinaiye - முற்பிறவிகளிலே நான் பண்ணி வைத்த கருமமே!
முகப்படாய் என்னும், Mugappadaai ennum - என் கண்முன்னே வந்து நில் பார்ப்போம் என்கிறாள்;
முகில் வண்ணா, Mugil vanna - காளமேகவண்ணனான எம்பெருமானே!
இது தகவோ என்னும், Idhu thagavo ennum - இதுதானோ உன்னுடைய க்ருபைக்கு லக்ஷ்ணம்! என்கிறாள்;
இவ்உலகம், Ivulagam - இந்த ப்ரபஞ்சங்களை யெல்லாம்
முன் செய்து , Mun seithu - முற்காலத்தில் ஸ்ருஷ்டித்து
உண்டு உமிழ்ந்து ,undu umizhndhu - (காலவிசேஷங்களிலே) உண்பதும் உமிழ்வதும் செய்து
அளந்தாய், Alaandhaai - அளப்பதும் செய்து பல முகமாக ரக்ஷித்தருளும் பெருமானே!
இவட்கு, Ivatku - இங்ஙனே துடிக்கிற எபெண் பிள்ளைக்கு
முடிகின்றது என் கொலோ, mudikindradhu en kolo - இந்தப் பரிதாபமெல்லாம்) என்னாய் முடியப்போகிறதோ?
3350திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 3
வட்கிலள் இறையும் ‘மணிவண்ணா!’ என்னும்;
வானமே நோக்குமை யாக்கும்
‘உட்குடை அசுரர் உயிரெலாம் உண்ட
ஒருவனே!’ என்னும் உள் ளுருகும்;
‘கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்
காகுத்தா! கண்ணனே!’ என்னும்;
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்’
இவள் திறத் தென் செய்திட்டாயே–7-2-3
இறையும் வட்கு இலள், Iraiyum vatku ilal - சிறிதும் வெட்கமில்லா தவளாகி
மணிவண்ணா என்னும், Manivanna ennum - நீல மணிவண்ணனே! என்று கூப்பிடா நின்றாள்!
வானமே நோக்கும், Vaaname nokkum - (யானைக்கு உதவவந்தாப்போல நமக்கும் உதவ வரக்கூடு மென்று வானத்தையே நோக்குகின்றாள்;
மையாக்கும், Maiyaakkum - (எதிர்பார்த்தபடி வந்து தோன்றக் காணாமையினால்) மோஹமடைகின்றாள்;
உட்கு உடை அசுரர், Utku udai asurar - வலிமையுடையவர் களான அசுரர்களினுடைய
உயிர் எல்லாம் உண்ட, Uyir ellaam undu - பிராணன்களை யெல்லாம் கவர்ந்த
ஒருவனே என்னும், Oruvane ennum - அத்விதீயனே! என்கின்றாள்;
உள் உருகும், Ul urugum - உள்ளம் நீர்ப்பண்டமாய் உருகப் பெறுகின்றாள்;
கட்கு இலீ, Katku ilee - கண்களுக்கு விஷயமாக மாட்டாதவனே!
காகுத்தா கண்ணனே, Kaakutha kannane - ஸ்ரீ ராம க்ருஷ்ணாவதாரங்கள் செய்து எல்லார் கண்ணுக்கும் விஷயங்மானவனே!
உன்னை காணும் ஆறு அருளாய் என்னும், Unnai kaanum aaru arulaai ennum - உன்னை நான் கண்ணா ரக்காணும் விதம் அருளவேணுமென்கின்றாள்;
திண்கொடி மதிள்சூழ் திரு அரங்கக் தாய், Thin kodi madhil soozh thiru arangaththaai - திடமான கொடிகள் விளங்கும் மதிள்களாலே சூழப்பட்ட திருவரங்கத்தில் துயிலும் பெருமானே!
இவள் திறந்து, Ival thirandhu - இப் பெண்பிள்ளை விஷயமாக
என்செய்திட்டாய், En seithitaai - நீ செய்தது என்னே!
3351திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 4
இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;
எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்;
‘கட்டமே காதல்’ என்று மூர்ச்சிக்கும்;
‘கடல்வண்ணா! கடியை காண்’ என்னும்;
‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
சிட்டனே! செழுநீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத் தென் சிந்தித்தாயே ?–7-2-4
இடக்கால் இட்டகையள் ஆய் இருக்கும், Idakkal ittakaiyal aai irukkum - (சில சமயங்களிலே) கையும் காலும் இட்டது இட்டபடியேயிராநின்றாள்;
எழுந்து உலாம், Ezhundhu ulam - எழுந்து உலாவுகின்றாள்;
மயங்கும், Mayangum - மயங்கா நின்றாள்;
கை கூப்பும், Kai kooppum - (அப்படி மயங்கின தசையிலும்) கைகூப்புதல் தவிர் கின்றிலள்;
காதல் கட்டமே என்றுடமே என்று மூர்ச்சிக்கும், Kaadal kattame endrudame endru moorchikkum - (பகவத் விஷயத்திலே) காதலைத் தாங்குவது வெகு கஷ்டமென்று சொல்லி மூர்ச்சை யடைகின்றாள்;
கடல்வண்ணா கடியை காண் என்னும், Kadal vanna kadiyai kaan ennnum - கடல் வண்ணனே! என் விஷயத்தில் நீ கடுமை கொண்டிருக்கின்றாயே! என்கிறாள்;
வட்டம் வாய் நேமி வலம் கையா என்னும், Vattam vaai nemi valam kaiya ennnum - வட்டமான விளிம்பையுடைய திருவாழியை வலத்திரக்கையிலுடையவனெ! என்கிறாள்;
வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidai endru endre mayangum - வாராய் வாராய் என்று பலகாலுமழைத்தும் வரக்காணாது மயங்கு கின்றாள்;
சிட்டனே!, Sittane! - பரமபவித்திரனே!
செழு நீர் திரு அரங்கத்தாய், Sezhuneer thiru arangkaththaai - நீர்வளம் பொருந்திய கோயிலிலே கண்வளர்ந்திரளுமவனே!
இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக
என்சிந்தித் தாய், Ensindhithaai - நீ சிந்தித்திருப்பது என்ன?
3352திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 5
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்
‘திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
வந்திக்கும் ஆங்கே மழைக் கண்ணீர் மல்க
‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;
‘அந்திப்போ தவுணன் உடலி டந்தானே!
அலைகடல் கடைந்த ஆர் அமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய் தானே!–7-2-5
அந்தி போது, Andhi podhu - மாலைபொழுதிலே
அவுணன் உடல் இடந்தானே, Avunan udal idandhaane - (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி) இரணியனது உடலைப் பிளந்தவனே!
அலை கடல் கடைந்த ஆர் அமுதே, Alai kadal kadaindha aar amudhe - அலையெறிகின்றகடலை (த்தேவர்களுக்காக)க் கடைந்தா ஆராவமுதமே!
சந்தித்து உன் சரணமே சாலீவது வலித்த தையலே மையல் செய்தானே, Sandhithu un saraname saaleevadhu valitha thaiyale maiyal seithaane - உன்னோடே கலந்து உன் திருவடிகளிலேயே லயிக்கவேணுமென்கிற திடமானஅத்யவ ஸாயங்கொண்ட இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே!
சிந்திக்கும், Sindhikkum - (ஏற்கனவே விதிவசமாக நேர்ந்திருந்த கலவியைப் பற்றிச்) சிந்தனை செய்கின்றாள்;
திசைக்கும், Thisaikkum - அறிவு அழியா நின்றாள்;
தேறும், Therum - (திடீரென்று) தெளிவு பெறுகின்றாள்
கைகூப்பும், Kaikooppum - அஞ்சலி பண்ணாநின்றாள்;
திரு அரங்கத்து உள்ளாய் என்னும், Thiru arangathu ullaai ennum - கோயிலிலே கண்வளர்ந்;தருளுமவனே! என்கிறாள்;
வந்திக்கும், Vandhikkum - தலைவணங்கா நின்றாள்;
ஆங்கே, Aange - அவ்வளவிலே
மழை கண் நீர் மல்க, Mazhai kan neer malga - கண்ணீர் தாரை தாரையாகப் பெருகநின்று
வந்திடாய் என்று என்றே மயங்கும், Vandhidaai endru endre mayangum - (எம்பெருமானே!) வாராய் வாராய் என்று பலகாலுஞ் சொல்லி (வரக்காணாது) மோஹிக்கின்றாள்.
3353திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 6
‘மையல் செய்து என்னை மனங் கவர்ந்தானே ! என்னம்’மா மாயனே!’ என்னும்;
‘செய்யவாய் மணியே!’ என்னும்’தண் புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய்!’ என்னும்;
‘வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்!’ என்னும்;
பைகொள் பாம் பணையாய்!இவள் திறத் தருளாய் பாவியேன் செயற் பாலதுவே.–7-2-6
என்னை மையல் செய்து, Ennai maiyal seidhu - என்னை வியாமோஹப்படுத்தி
மனம் கவர்ந்தானே யென்னும், Manam kavarndhaane ennum - மனதைக் கொள்ளை கொண்டவனே! என்கிறோள்;
மா மாயனே என்னும், Maa maayane ennum - மிகப் பெரிய மாயங்களை யுடையவனே! என்கிறாள்;
செய்யவாய் மணியே என்னும், Seyyaavaai maniye ennum - சிவந்த அதரசோபையை உடையயையாக் கொண்டு நீலமணி போன்றவனே; என்கிறாள்;
தண் புனல் சூழ் திருஅரங்கத் துள்ளாய் என்னும், Than punal soozh thiru arangath thullaai ennum - குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்த கோயிலில் கண்வளர்ந்தருள் பவனே! என்கிறாள்;
வெய்யவான் தண்டு சங்கு சக்கரம்வில் ஏந்தும், Veyyaavaan thandu sangu sakkaram vil endhum - (ஆச்ரித விரோதி விஷயத்தில்) வெப்பமே வடிவெடுத்த பஞ்சாயுதங்களைத் தரித்துக் கொண்டிருக்கிற
விண்ணோர் முதல் என்னும், Vinnor mudhal ennum - நிதயஸூரிநாதனே! என்கிறாள்;
பை கொள் பாம்பு அணையாய், Pai kol paambu anaiyaai - படமெடுத்த ஆதிசேஷன் மீது சயனித்தருள்பவனே!
இவள் திறத்து, Ival thiraththu - இப்பெண்பிள்ளை விஷயமாக
பாவியேன் செயல் பாலது , Paaviyen seyal paaladhu - பாவியேனான நான்செய்யக் கூடியது இருந்தால் அதை
அருளாய், Arulaai - அருளிச்செய்யவேணும்
3354திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 7
‘பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!
பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக் கரத்தாய்! கடலிடங் கொண்ட
கடல்வண்ணா! கண்ணனே!’ என்னும்;
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்!’
என்னும்’என் தீர்த்தனே!’ என்னும்;
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடையக் கோமளக் கொழுந்தே.–7-2-7
என்னுடை கோமளம் கொழுந்து, Ennudaiya komalam kolundhu - மிக மெல்லியலாளான என்மகள்
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய் என்னும், Paala thunbangal inbangal padaitthaai ennum - அவ்வவ்விடங்களுக்குத் தகுதியாக இன்பங்களையும் துன்பங்களையும் படைத்கவனே! என்கிறாள்:
பற்று இலார் பற்ற நின்றானே என்னும், Patru ilaar patra nindraane ennum - அசரண்ய சரண்யனே! என்கிறாள்;
கால சக்கரத்தாய் என்னும், Kaala sakkaraththaai ennum - காலசக்ரத்திற்கு நிர்வாஹகனானவனே! என்கிறாள்;
கடல் இடம் கொண்ட கடல் வண்ணா என்னும், Kadal idam konda kadal vanna ennum - திருப்பாற் கடலை இடமாகக் கொண்ட கடல்; வண்ணனே! என்கிறாள்;
கண்ணனே என்னும், Kannane ennum - ஸ்ரீகிருஷ்ணா என்கிறாள்;
சேல் கொள்தண் புனல் சூழ் திருஅரங்கத் தாய் என்னும், Sel kolthan punal soozh thiru arangath thaai ennum - மீன்கள் நிரம்பிய குளிர்ந்த தீர்த்தம் சூழ்ந்தா கோயிலில் வாற்பவனே! என்கிறாள்;
என்தர்த்தானே என்னும், Entharthaane ennum - என்னைப் பவித்திரனாக ஆக்குமவனே! என்கிறாள்;
கோலம் மாமழை கண்பனி மல்க் இருக்கும், Kolam maamazhai kanpani malga irukkum - அழகு பொருந்திப் பெருத்துக குளிர்ந்த கண்கள் நீர்பெருகநிற்கின்றாள்.
3355திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 8
கொழுந்து வானவர்கட்கு!’ என்னும்’குன்றேந்திக்
கோ நிரை காத்தவன்!’ என்னும்;
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்;
‘அஞ்சன வண்ணனே!’ என்னும்;
எழுந்து நின்று மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்;
செழுந்தடம் புனல் சூழ் திருவரங் கத்தாய்!
என் செய்கேன் என் திரு மகட்கே?–7-2-8
வானவர்கட்கு கொழுந்து என்னும், Vaanavargatku kozhundhu ennum - நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்;
குன்று ஏந்தி, Kunru endhi - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று
கோ நிரை காத்தவன் என்னும், Ko nirai kaathavan ennum - பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்;
ஆழும், Aazhum - கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்;
தொழும், Thozhum - அஞ்ஜலி பண்ணா நின்றான்;
ஆவி அனல் வெவ்வுயிர்க்கும், Aavi anal vevvuyirkkum - ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்;
அஞ்சனம் வண்ணனே என்னும், Anjanam vannane ennum - அஞ்சனனேமனியனே! என்கிறாள்!
மேல் எழுந்து நோக்கி, Mel ezundhu nokki - (இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) மேலே தலையெடுத்துப் பார்த்து
இமைப்பு இலள் இருக்கும், Imaippu illal irukkum - இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்;
எங்ஙனே நோக்கு கேன் என்னும், Engane nokku ken ennum - எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்;
செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய், Sezhu thadam punal soozh thiru arangath thaai - மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே!
என் திருமகட்கு, En thiru magatku - பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே
என் செய்கேன், En seiken - எதைச் செய்வனே?
3356திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 9
என் திரு மகள் சேர் மார்பனே!’ என்னும்;
‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
‘நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே!’ என்னும்;
‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
தென் திரு அரங்கம் கோயில் கொண் டானே!
தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே–7-2-9
என் திருமகள் சேர்மார்பனே என்னும், En thirumagal sermaarbane ennum - எனக்குப் புருஷகார பூதையான பிராட்டி சோந்த திருமார்பை யுடையவனே! என்கிறாள்;
என்னுடை ஆவியே என்னும், Ennudai aaviyae ennum - எனக்கு உயிராயிருப்ப வனே! என்கிறாள்;
நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட , Nin thiru eyirraal idandhu nee konda - உனது கோரப் பற்களாலே இடந்து ஏற்றுக்கொண்ட
நிலம் மகள் கேள்வனே என்னும், Nilam Magal kelvanae ennum - பூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்கிறாள்;
அன்று , Andru - முன் பொருகால்
உரு ஏழும் , uru ezhum - இடிபோன்ற குரலையுடையரிஷபங்களேழையும்
தழுவி, thazhuvi - மதமொழித்து
நீ கொண்ட, nee konda - மணந்து கொண்ட
ஆய் மகள், aai magal - நப்பின்னைப் பிராட்டிக்கு ப்ரியனே! என்கிறாள்;
தென் திருஅரங்கம் கோயில் கொண்டானே, Then thiru arangam koyil kondane - ஸ்ரீ ரங்கநாதனே!
இவள் தனக்கு, Ival thanakku - இவளுக்கு
முடிவு தெளிகிலேன், mudivu thelikilen - ஆர்த்தி முடியுமாறு அறிகின்றிலேன்.
3357திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 10
‘முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன்’ என்னும்;
‘மூவுல காளியே!’ என்னும்;
‘கடி கமழ் கொன்றைச் சடையனே!’ என்னும்;
‘நான்முகக் கடவுளே!’ என்னும்;
‘வடிவுடை வானோர் தலைவனே!’ என்னும்;
‘வண் திரு வரங்கனே!’ என்னும்;
அடி யடையா தாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில்வண்ணன் அடியே.–7-2-10
இவள் , Ival - இப்பெண்பிள்ளையானவள்,
தனக்கு முடிவு ஒன்று அறிகிலேன் என்னும், thanakku mudivu ondru arikilen ennum - தனது ஆர்த்திக்கு முடிவு ஒன்றும் தெரியவில்லையே! என்கிறாள்;
கடி கமழ் கொன்றை சடையனே என்னும், Kadi kamazh kondrai sadaiyane ennum - பரிமளம் மிக்க கொன்றைமாலையைச் சடையிலணித்த சிவனுக்கு அந்தர்யாமியே என்கிறாள்;
நான்முகக்கடவுளே என்னும், Naanmuga kadavulae ennum - தன்னோடொத்த வடிவுடையரான நித்ய ஸூரிகளுக்கு நாதனே! என்கிறாள்;
வண் திருஅரங்கனே என்னும், Van thiru arangane ennum - ஸ்ரீ ரங்கநாதனே! என்கிறாள்:
அடி அடையாதாள் போல் இவள், Adi adaiyaadhal pol ival - திருவடிகளைக் கிட்டமாட்டாள் போலும் என்னும்படி யிருந்த விவள்
முகில் வண்ணன் அடி், Mugil vannan adi - மேகவண்ணனான அவனது திருவடிகளை
அணுகி அடைந்தனள், anugi adaindhanal - கிட்டியடையப்பெற்றாள்.
3358திருவாய்மொழி || 7-2 - கங்குலும் பகலும் 11
முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில் வண்ணத் தூ நீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண் குரு கூர்ச் சட கோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே.–7-2-11
முகில் வண்ணன் அடியை அடைந்து, Mugil vannan adiyai adaindhu - மேகவண்ணனான் எம்பெருமானுடைய திருவடிகளை யடைந்து
அருள் சூடி உயந்தவன், Arul soodi uyandhavan - அவனுடைய திருவருளைத் தலைக்கொண்டு உஜ்ஜீவிததவரும்,
மொய் புனல் பொருநல், Moi punal porunal - உத்தமதீர்த்தனான தாமிரப்ரணியினுடைய
துகில் வண்ணம் தூ நீர் சேர்ப்பன், Thugil vannam thoo neer serppan - துகிலின் நிறம்போலே பரிசுத்தமான ஜலத்தின் கரையிலே சேர்ந்திருப்பவரும்
வண் பொழில் சூழ் வண் குருகூர், Van pozhil soozh van kurukoor - வளம்மிக்க சோலைகள் சூழந்த திருநகரிக்குத் தலைவருமான்
முகில் வண்ணன் அடிமேல் சொன்ன, Mukil vannan adimel sonna - மேகவணணனான எம்பெருமானது திருவடிகளை நோக்தியருளிச் செய்த
சொல் மாலை ஆயிரத்து இப்பத்தும் வல்லார், Sol maalai aayirathu ippathum vallaar - சொல் தொடையான ஆயிரத்தினுள் இப்பதிகத்தை ஒதவல்லவர்கள்
முகில் வண்ணம் வானத்து, Mukil vannam vaanathu - முகில் வண்ணனுடைய நிழலீட்டாலே முகில் வண்ணமாயிருக்கின்ற பரமபதத்திலே
இமையவர் சூழ, imaiyavar soozha - நித்தியசூரிகள் புடைசூழ
பேர் இன்பம் வெள்ளத்தே, Per inbam vellathe - ப்ரஹமானந்த ப்ரவாஹித்தில்
இருப்பர், iruppar - மூழ்கியிருக்கப்பெறுவர்கள்.
3359திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்பபேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றாள்.) 1
வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்!
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும்
அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே. -7-3-1
அன்னை மீர்காள்!,Annai meerkal! - தாய்மார்களே
வெள்ளை சுரி சங்கொடு ஆழி ஏந்தி,Vellai suri sangodu azhi endhi - வெண்ணிறத்தையும் சுரியையு முடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் ஸூதர்சநத்தையும் ஸூதர்நசத்தையும் ஏந்திக்கொண்டு
தாமரைக் கண்ணன்,Thaamarai kannaan - செந்தாமரைக் கண்ணனான பெருமான்
என் நெஞ்சின் ஊடே,En nenjin oode - எனது நெஞ்சினுள்ளே
புள்ளே கடாகின்ற ஆற்றை,Pulle kadaagindra aatrai - நடத்துகிறபடியை
காணீர்,Kaaneer - நீங்கள் அறிகினறீர்களில்லையே!
என்சொல்லி சொல்லு கேன்,En solli sollu kaen - இவ்வநுபவத்துக்கு என்ன பாசுரமிட்டு நான் சொல்லுவேன்;(இனி நான் செய்ய நினைத்ததாவது)
வெள்ளம் சுகம் அவன் வீற்றிருத்த,Vellam sugam avan veettrithu - ஆனந்த வெள்ளமே வடிவெடுத்தவானான பெருமான் வீற்றிருக்கு மிடமாயும்
வேதம் ஒலியும் விழா ஒலியும் பிள்ளை குழாம் விளையாட்டு ஒலியும் அறா,Vedam oliyum vizha oliyum pillai kulaam vilaiyaattu oliyum araa - வேதகோஷமும் உத்ஸவகோஷமும் சிறுபிள்ளைகளின் விஹார கோலாஹலமும் இடையறாமலிருக்கப் பெற்ற தாயுமுள்ள
திருப்பேரெயில்,Thirupereayil - திருப்பேரெயில் என்னுந் திருப்பதியிலே
நான் சேர்வன்,Naan servan - நான் சென்று சேரக்கடவேன்.
3360திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தாய்மார் முகம் பார்த்துச் சொன்னாள் கீழ்ப்பாட்டில் அவ்வளவிலே இத்தலைமகளுக்கு ஹிதஞ் சொல்லுகைக்காகத் தாய்மாரும் தோழிமாரும் அயற் சேரியுள்ளாருமாகத் திரண்டு வந்து சேர்ந்து நிற்க, உங்களுடைய ஹிதவார்த்தைகளைக் கேட்க அவகாசமில்லாதபடி. மகரநெடுங்குழைக்காதன் பக்கலிலே அவகாஹித்த என்னெஞ்சை மீட்கமாட்டுகின்றிலேன் காண்மின் என்கிறாள்.) 2
நானக் கருங்குழல் தோழிமீர் காள்!
அன்னையர் காள்! அயற் சேரியீர் காள்!
நான் இத் தனி நெஞ்சம் காக்க மாட்டேன்
என் வசம் அன்று இது இராப்பகல் போய்த்
தேன் மொய்த்த பூம்பொழில் தண் பணை சூழ்
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
வானப் பிரான் மணி வண்ணன் கண்ணன்
செங்கனி வாயின் திறத்ததுவே.–7-3-2
நானம் கருகுழல் தோழி மீர்காள்,Naanam karukuzhal thozhi meerkal - ஸூகந்தமணிந்த கருங்குழலையுடைய தோழிகளே!
அன்னையர் காள்,Annaiyar kaal - தாய்மார்களே!
அயல் சேரியீர் காள்,Ayal seriyir kaal - (செய்தி வினவ வந்த) அக்கம் பக்கத்தவர்களே!
இத்தினி நெஞ்சும நான் காக்க மாட்டேன்,Itthinin nenjum naan kaakka maattean - ஸவாந்திரமான இந்த நெஞ்சை நான் அடக்கியாள மாட்டுகின்றிலேன்;
இது என்வசம் அன்று,Idhu envasam anru - இந்த நெஞ்சு எனக்கு விதேயமன்று;
இரா பகலும்,Ira bagalum - இரவும் பகலும்
போய்;,Poi; - என்னை விட்டுப்போய்
தேன் மொய்ந்த பூ பொழில்,Then moyndha poo pozhil - வண்டுகள் மொய்த்த பூஞ்சோலைகளை யுடைத்தாய்
தண் பணை சூழ்,Than panai sooel - குளிர்ந்த நீர் நிலங்கள் சூழ்ந்திருக்கிற
வானம் பிரான்,Vaanam piran - தென் திருப்பேரெயில் வீற்றிருந்த; பரமபத நிலயனும்
மணிவண்ணன்,Manivannan - நீலமணி வண்ணனுமான
கண்ணன்,Kannan - கண்ணபிரமானுடைய
செம் கனி வாயின் திறத்தது,Sem kani vaayin thirathadhu - சிவந்த கனிபோன்ற அதரத்திலே படிந்திட்டது.
3361திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! இப்படியும் நானமற்றுச் சொல்லுவது தகுதியேவென்று தோழி கேட்க: தோழீ! நான் என்செய்வேன்? எனது நெஞ்சானது தென் திருப்பேரை யெம்பெருமானுடைய திருப்பவளத்தழகிலே போய்ப்படிந்தும் திருவபிஷேகத்தினழலே தாழ்ந்தும், திருவாழி திருச்சங்குகளே யேந்தியிருக்குமழகுகண்டு உகந்தும், மற்றோரழகுக்கு உரித்தரல்லாதபடி தாமரைக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும் நங்கள் பிரானுக்கு நாணும் நிறைவுமிழந்தது; இனி யெனக்கு நாணும் நிறைவுமுண்டாவதற்கு வழியேது? என்கிறாள் தலைவி.) 3
செங்கனி வாயின் திறத்ததாயும்
செஞ்சுடர் நீள் முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்
தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா வறாத
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் தோழீ!
நாணும் நிறையும் இழந்ததுவே.–7-3-3
தோழீ,Thozhi - வாராய் தோழியே!
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
செம் கனி வாயின் திறத்தது ஆயும்,Sem kani vaayin thirathadhu aayum - செவ்விய கனி போன்ற திருப்பவளத்திலே அபிநிவேசம் கொண்டதாயும்
செம் சுடர் நீள்முடிவு தாழ்ந்தது ஆயும்,Sem sudar neelamudivu thaazhndhadhu aayum - செவ்விய சுடரையுடைய நீண்ட கிரீடத்திலே ஈடுபட்டதாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும்,Sangodu chakkaram kandu ukanthum - திருவாழி திருச்சங்குளைக் கண்டு உவந்ததாயும்
தாமரை கண்களுக்கு அற்று தீர்ந்தும்,Thaamarai kangalukku atru theerndhum - தாமரை போன்ற திருக்கண்களுக்கு அநந்யார் ஹமாகியும்
திங்களும் நாளும் விழா அறாத,Thingalum naalum vizha araadhu - மாஸோத்ஸவர்களும நித்யோத்ஸவங்களும் இடையறாத
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppereyil veettrirundha - தென் திருப்பேரைப் பதியிலே யெழுந்தருளியிருக்கின்ற
நங்கள் பிரானுக்கு,Nangal piranuku - எம்பெருமான் விஷயத்திலே
நாணும் நிறையும் இழந்தது,Naanum niraiyum izhandhadhu - வெட்கமும் அடக்கமும் தொலையப் பெற்றது.
3362திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம்-அவனுடைய குண சேஷ்டிதங்களிலே அகப்பட்ட என் நெஞ்சம் அங்கே போயிற்று – இனி யாரைக் கொண்டு போது போக்குவது என்று நியமிக்கிற தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 4
இழந்த எம்மாமைத் திறத்துப் போன
என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ!
ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன்
அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4
அன்னையர்காள்,Annaiyarkaal - தாய்மார்களே!
இழந்த எம்மாமை திறத்து போன,Izhandha emmaamai thirattu poana - ஏற்கனவே யிழந்த எனது மேனி நிறத்தைக் திருப்பிக் கொணர்வதாகப் புறப்பட்டுச் சென்ற
என் நெஞ்சி னாரும்,En nenjin aarum - எனது நெஞ்சென்கிற பெரியாரும்
அங்கே ஒழிந்தார்,Angae ozhindhaar - அத்தலைக்கே அற்றுத் தீர்ந்தார்;
இனி,Ini - அந்தரங்கமான நெஞ்சையுமிழக்கப் பெற்ற பின்பு
உழந்து,Uzhandhu - வருத்தி
ஆரை கொண்டு,Arai kondu - யாரைத் துணையாகக் கொண்டு
என் உசாகோ,En usaago - எந்த வார்த்தையைச் சொல்லித்தரிப் பேன்!;
ஓதம் கடல் ஒலி பால,Odham kadal oli paal - அலைபெறியும் கடலின் ஒலிபோல
எங்கும் எழுந்த,Engum elundhu - எல்லாவிடத்திலுங்கிளர்ந்த
நல் வேதத்து ஒலி,Nal vedathu oli - ஸாமவேத கோஷமானது
நின்று ஓங்கு,Nindru oongu - நிரந்தரமாகக் கிளர்ந்து
தென் திருப்பேரெயில்விற்றிருந்த;,Then thiruppereilvitrirundha; - தென் திருப்பேரெயில்விற்றிருந்த;
முழங்கு சங்கம் கையன் மாயத்து,Muzhangu sangam kaiyan maayathu - முழங்குகின்ற சங்கத்தைத் திருக்கையிலே யுடையனான பெருமானது மாய்ச் செயல்களிலே
ஆழ்ந்தேன்,Aazhndhaen - அவகாஹித்தேன்;
என்னை முனிந்து என,Ennai munindhu en - (இனி) என்னைச் சீறு வதனால் என்ன பலனுண்டாம்?
3363திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (தென்திருப்பேரெயிலிலே என்னைக் கடுகக் கொண்டு சென்று சேர்ப்பதே தாய்மார்களான் வுங்களுக்கு உற்றது என்கிறாள்.) 5
முனிந்து சகடம் உதைத்து மாயப்
பேய் முலை உண்டு மருதிடை போய்க்
கனிந்த விளவுக்குக் கன்று எறிந்த
கண்ண பிரானுக்கு என் பெண்மை தோற்றேன்
முனிந்து இனி என் செய்தீர் அன்னைமீர்காள்!
முன்னி அவன் வந்து வீற்றிருந்த
கனிந்த பொழில் திருப் பேரெயிற்கே
காலம் பெற என்னைக் காட்டுமினே.–7-3-5
அன்னைமீர்கள்,Annaimirkal - தாய்மார்களே!
முனிந்து சகடம் உடைத்து,Munindhu sakadam udaittu - கோபத்தினால் சகடா சுரைனை யுதைத் தொழித்தவனும்
மாயம் பேய்முலை உண்டு,Maayam peymulai undu - வஞ்சகப்போய் வடிவாக வந்து பூதனையின் முலையை யுண்டு அவளை முடித்தவனும்
மருதிடை போய்,Maruthidai poi - இரட்டை மருதமரங்களிடையே தவழ்ந்து செறைவனும்
கனிந்த விளவுக்கு கனறு எறிந்த –,Kanindha vilavukku kanru erindha - - விளங்கனியின் மீது வத்ஸாஸூரனை வீசியெறிந்தவனுமான
கண்ணபிரானுக்கு,Kannapiranuku - கண்ணபிரான் விஷயத்திலே
என் பெண்மை தோற்றேன்,En penmai thoraen - என்து பெண்மைக்குரிய அடக்கம் முதலானவற்றை பெற்றேன்;
இனி,Ini - இப்படியான பின்பு
முனிந்து என் செய்தீர்,Munindhu en seytheer - என்னைச் சீறுவதனால் என்ன லாபம் பெறப்பார்க்கிறீர்கள்;
அவன் முன்னி வந்து வீற்றிருந்த,Avan munni vandhu veettrirundhu - அப்பெருமான் முற்கோலி வந்து எழுந்தருளியிருக்குமிடமான
கனிந்த பொழில் திருபேரெயிற்கே,Kanindha pozhil thirupereikke - பரிபக்குவமான சோலைகளையுடைய திருப்பேரெயில் தலத்திற்கே
என்னை,Ennai - என்னை
காலம்பெற காட்டுமின்,Kaalamperra kaattumin - காலதாமதமில்லாமல் கொண்டு போய்க் காணச் செய்மின்.
3364திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நீங்கள் ஆறி இருக்கும் அளவில்லாத படி எனக்கு அபி நிவேசம் மிகா நின்றது -சடக்கென அங்கே கொண்டு போய் விடுங்கோள்-என்கிறாள்.) 6
காலம் பெற என்னைக் காட்டுமின்கள்
காதல் கடலின் மிகப் பெரிதால்
நீல முகில் வண்ணத்து எம்பெருமான்
நிற்கு முன்னே வந்தென் கைக்கும் எய்தான்
ஞாலத்தவன் வந்து வீற்றிருந்த
நான் மறை யாளரும் வேள்வி ஓவாக்
கோலச் செந்நெற்கள் கவரி வீசும்
கூடு புனல் திருப் பேரெயிற்கே.–7-3-6
(அன்னைமீர் காள),(Annaimirkal) - தாய்மார்களே!,
நீலம் முகில் வண்ணத்து எம்பெருமான்,Neelam mugil vannathu emberumaan - நீலமேக நிறத்தனான எம்பெருமான்
முன்னே வந்து நிற்கும்,Munne vandhu nirgum - என் கண்முன்னே வந்து நிற்பதாகக் காண்மின்றான்; (ஆனால்)
என் கைக்கும் எய்தான்,En kaikkum eydhaan - என் கைக்கு எட்டாதபடி தூரஸ்தானாகவே யிராநின்றாள்;
காதல் கடலின்மிக பெரியது,Kaadhal kadal inmiga periyadhu - எனது காதலோ வென்னில் கடலிற் காடடிலும்மிகவும் பெரியதாக வுள்ளது;
ஆல்,Aal - அந்தோ!;
அவன்,Avan - அப்பெருமான்
ஞாலத்து வந்து வீற்றிருந்த,Nyaalathu vandhu veettrirundha - இந்நிலவுலகத்தில் வந்து எழுந்தருளியிருக்கு மிடமாய்
நால் மறையாளரும் வேள்வி ஓவா,Naal maraiyaalarum velvi ova - நான்கு வேதங்களையும் கரை கண்டவர்கள் வைதிகாநுஷ்டானங்களை நிரந்தரமாக நிகழ்த்துமிடமாய்
கோலம் செந்நெற்கள் கவரி வீசும்,Koolam chennetrukkaal kavari veesum - அழகிய செந்நெற்பயிர்கள் கவரிபோலே அசையப் பெற்றதாய்
கூடு புனல்,Koodu punal - தீர்த்த ஸம்ருத்தயையு டையதான்
திருப்பேரெயிற்கே –,Thiruppereikke – - திருப்பேரெயில் தலத்திற்கே
காலம் பெற என்னை காட்டுமின்கள்,Kaalam pera ennai kaattumingal - சீக்கிமாக என்னைக் கொண்டு போய்க் காட்டுங்கள்.
3365திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (நங்காய்! உனக்கு அவன் பக்கலுள்ள ஆசாபாசம் அளவுகடந்திருந்தாலும் அவனே யெழுந்தருளுமளவும் இங்கேயிருக்க ப்ராப்தமேயல்லது அங்குச் செல்லுகை யுக்தமனறென்று தோழி சொல்ல, அதற்கு விடையிறுக்கிறது இப்பாசுரம்.) 7
பேரெயில் சூழ் கடல் தென்னிலங்கை
செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடிப்
பேர்த்து வர எங்கும் காண மாட்டேன்;
ஆரை இனி இங்குடையம் தோழீ!
என் நெஞ்சம் கூவ வல்லாரு மில்லை;
ஆரை இனிக் கொண்டென் சாதிக்கின்றது?
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே.–7-3-7
பேர் எயில் சூழ்,Per eyil sooel - பெரிய மதில்களாலே சூழப்பட்டு
கடல்,Kadal - கடலிடத்தே யுள்ளதான
தென் இலங்கை,Then ilankai - தென்னிலங்காபுரியை
செற்ற,Sera - நீறாக்கி யொழித்த
பிரான்,Piran - எம்பெருமான்
வந்து வீற்றிருந்த,Vandhu veettrirundha - வந்து எழுந்தருளியிருக்குமிடமான
பேர் எயிற்கே,Per eyirke - திருப்பெரெயில் தலத்திற்கே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
புக்கு,Pukku - புகுந்து
நாடி,Naadi - அவனைத் தேடி
பேர்த்து எங்கும் வரகாண மாட்டேன்,Perthu engum varakaana maattean - மீண்டு ஒரிடத்திற்கும் வரக்காணேன்:
தோழி –!.,Thozhi –!. - வாராய் தோழியே
இனி இங்கு யாரை உடையம்,Ini ingu yaarai udaiyam - இனி இந்நிலைமையில் யாரைக் துணையாக வுடையோம்?
என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை,En nenjam koova vallaarum illai - (என்னை விட்டுப்போன) எனது நெஞ்சை அழைத்துத் தரவல்லாருமில்லை;
இனி,Ini - நெஞ்சம் உதவாதே நீயும் தளர்ந்தபின்பு
ஆரை கொண்டு என்சாதிக் கின்றது,Arai kondu enchaadikindradhu - யாரைத் துணைகொண்டு என்ன பிரயோஜனம் ஸாதிக்கத் தக்கதாயிருக்கின்றது? (ஒன்று மில்லையே.)
என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்,En nenjam kandadhuvae kandeen - (ஆகையாலே) எனது நெஞ்சு கண்ட விஷயத்தையே நானும் கடைப்படித்தேன்.
3366திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள்.) 8
கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டலர் தூற்றிற்றது முதலாக்
கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ!
மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
நீள் வீசும்புங் கழியப் பெரிதால்;
தெண் திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென் திருப் பேரெயில் சேர்வன் சென்றே.–7-3-8
கண்டதுவே கொண்டு,Kandadhuvae kondu - வெளியில் காணக்கூடிய எனது மேனி நிறமாறுதல் முதலிய வற்றையே கொண்டு
எல்லாரும்,Ellaarum - தாய்மார் ஊரர் ஆகிய எல்லாரும்
கூடி,Koodi - ஒன்றுசேர்ந்து
கார் கடல் வண்ணனோடு என் திறத்து கொண்டு,Kaar kadal vannanodu en thirathu kondu - கருங்கடல் வண்ணனான எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்க்கை யுண்டாதாகக் கொண்டு
அலர் தூற்றிற்றது முதல் ஆ கொண்ட,Alar thoottrittadhu mudhal aa kondu - பழி தூற்றினதுவே முதலாக இடங்கொண்ட
என் காதல் உரைக்கில்,En kaadhal uraikgil - எனது காதலைப பாசுரமிட்டுச் சொல்லிப் பார்க்கில்
தோழீ,Thozhi - தோழீயே!,
மண் திணி ஞாலமும்,Man thini nyaalamum - (என்காதல் எப்படிப் பட்டதென்னில்) மண் செறிந்த பூமியும்
ஏழ் கடலும்,Ezhu kadalum - (அதைச் சூழ்ந்த) ஸப்த ஸகாரங்களும்
நீள் விசும்பும்,Neel visumbum - இதெல்லாவற்றுக்கும் இடங்கொடுக்கும் மஹாவகாசமான ஆகாதமும் ஆகிய இத்தனைக்கும்
கழிய,Kazhiya - அவ்வருகுபட்டதாய்
பெரியது ஆல்,Periyadhu aal - பெருந்திராநின்றது; (ஆனபின்பு)
தெண் திரை சூழ்ந்து,Then thirai sooelndhu - தெளிந்த அலைகளாலே சூழப்பட்டு
அவன்வீற்றிருந்த,Avan veettrindha - அப்பெருமான்வீற்றி ருக்குமிடமான
தென் திருபேர் எயில்,Then thiruper eayil - தென் திருப்பேரைப் பதியை
சென்று சேர்வன்,Sendru servan - எனது தாபம் தீரும்படி சென்று சேரக்கடவேன்
3367திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் பிரளய ஆபத் சகனானவன் வர்த்திக்கிற தேசத்திலே சென்று புகத் தவிரேன் – நீங்கள் என்னைத் தேற்றி யுரைக்கிற இதுக்கு பிரயோஜனம் இல்லை என்று தோழிமாரையும் தாய்மாரையும் பார்த்துச் சொல்லுகிறாள்.) 9
சேர்வன் சென்று என்னுடைத் தோழிமீர்காள்!
அன்னையர்காள்!என்னைத் தேற்ற வேண்டா;
நீர்கள் உரைக்கின்றது என்னிதற்கு?
நெஞ்சும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை;
கார் வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட
கண்ண பிரான் வந்து வீற்றிருந்த
ஏர்வள ஒண் கழனிப் பழனத்
தென் திருப் பேரெயில் மாநகரே.–7-3-9
என்னுடைய தோழிமீர்காள்,Ennudaiya thozhimeerkal - எனக்கு ஹிதஞ் சொல்லுகின்ற தோழிமார்களே!
அன்னையர்காள்,Annaiyarkal - (அப்படிப்பட்ட) தாய்மார்களே!
என்னை தேற்றவேண்டா,Ennai thettravenda - (எல்லை கடந்த) என்னைத் தேற்றுவதில் நீங்கள் முயல வேண்டா
இதற்கு,Idharku - எனது இந்த நிலைமைக்கு
நீர்கள் உரைக்கின்றது என்,Neerkal uraikkindradhu en - நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்ன இருக்கிறது?
எனக்கு நெஞ்சும் நிறைவும் இங்குஇல்லை,Enakku nenjum niraiyum inguillai - எனது நெஞ்சும் அடக்கம் முதலிய குணங்களும்; இங்கில்லை யன்றோ; (ஆதலால்)
கார் வண்ணன்,Kaar vannan - நீல வண்ணனும்
கார் கடல் ஞாலம்; உண்ட,Kaar kadal nyaalam; unda - கருங்கடல் சூழ்ந்த ஜகத்தை (ப்ரளயங்கொள்ளாதபடி) அமுது செய்தவனுமான
கண்ண பிரான்,Kann piran - ஸ்ரீக்ருஷ்ணபகவான்
வலது வீற்றிருந்த,Valathu veettrirundha - நித்ய ஸந்நிதி பண்ணியிருக்குமிடமாய்
ஏர் வளம்,Aer valam - ஏரினுடைய மிகுதியை யுடைத்தாய்
ஒண் கழனி பழனம்,On kalanipazhanam - அழகிய கழனிகளையும் நீர்நிலங்களையுமுடைத்தான
தென் திரு பேர் எயில்மா நகர்,Then thiru peer eyilma nagar - தென்திருப்பேரெயிலென்கிற திருப்பதியை
சென்று சேர்வேன்,Sendru saerven - சென்று சேரக்கடவேன்.
3368திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -இருந்ததே குடியாக உன்னைப் பழி சொல்லாரோ -என்று தோழிமார் சொல்ல அவர்களை யன்றோ நான் தேடித் திரிகிறது என்கிறாள்.) 10
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்
நாண் எனக்கு இல்லை என் தோழிமீர் காள்!
சிகர மணி நெடு மாட நீடு
தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
மகர நெடுங்குழைக் காதன் மாயன்
நூற்று வரை யன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான் என்
நெஞ்சங் கவர்ந்து எனை ஊழியானே–7-3-10
என் தோழி மீர்காள்,En thozhi meerkal - எனது தோழிகளே!
சிகரம் மணி நெழுமாடம்,Sikaram mani nezhumadam - மணிரசளையுடைத்தாய் மணிமயமாய் ஒங்கின மாடங்களையுடைத்தாய்
நீடு,Needu - நெடுங்காலம் விளங்கு மதான
தென் திருப்பேரெயில் வீற்றிருந்த,Then thiruppeer eyil veettrindha - தென் திருப்பேரைப்பதியிலே எழுந்தருளியிருக்கின்ற
மாயன்,Maayan - ஆச்சர்யகுண சேஷ்டி தங்களையுடையனாய்
அன்று,Andru - பாரதயுத்தம் நடந்தவக் காலத்தில்
நூற்றுவரை,Noorruvarai - துரியோதநன் முதலிய நூறுபோர்களை
மங்க நூற்ற,Manga nootru - தொலையும்படி ஸங்கல் தவனும்
நிகர் இல் முகில் வண்ணன்,Nikar il mugil vannan - ஒப்பற்ற காளமேக வண்ணனும்
நேமியான்,Nemiyaan - திருவாழியை யுடையனுமான
மகரநெடுங்குழைக்காதன்,Makara nedungkuzhaikaadhan - மகரபூஷணப் பெருமான்
என்நெஞ்சம் கவர்ந்து,En nenjam kavarnthu - எனது நெஞ்சை அபஹரித்துக் கொண்டு
எனை ஊழியான்,Enai oozhiyaan - எத்தனை காலத்தான்! (அவன் என் னெஞ்சைக் கவர்ந்தது இன்று நேற்றோ?)
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்,Nagaramum naadum piravum thaerven - (ஆனபின்பு) நகரங்களிலும் நாடுகளிலும் மற்றுமுள்ள விடங்களிலும் (நானே சென்று ஆராயக்கடவேன்;)
எனக்கு நாண் இல்லை,Enakku naan illai - அதுபற்றி எனக்கு லஜ்ஜையில்லே
3369திருவாய்மொழி || (7-3–வெள்ளைச் சுரிசங்கொடு) (தாய்மாரும் தோழிமாரும் உற்றாரும் தடுக்கவும் தலைவி திருப்பேரேயில் சேரத் துணிதல் (திருப்பேரெயில்)) (இத் திருவாய்மொழி கற்பார்க்கு பகவத் கைங்கர்யத்திலே அவகாஹனம் பலிக்குமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஊழிதோறு ஊழி உருவும் பேரும்
செய்கையும் வேறவன் வையம் காக்கும்
ஆழி நீர் வண்ணனை அச்சுதனை
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன
கேழில் அந் தாதி ஓர் ஆயிரத்துள்
இவை திருப் பேரெயில் மேய பத்தும்
ஆழி அம் கையனை ஏத்த வல்லார்
அவர் அடிமைத் திறத்து ஆழியாரே.–7-3-11
ஊழி ஊழி தோறு,Oozhi oozhi thoru - கல்பங்கள் தோறும்
பேரும் உருவும் செய்கையும்,Perum uruvum seykaiyum - நாமம் ரூபம் வியாபாரம் ஆகிய இவற்றை
வேறவன்,Veraavan - வேறாகவுடையனாய்க் கொண்டு
வையம் காக்கும்,Vaiyam kaakkum - உலகங்களைக் காத்தருள் பவனாய்
ஆழி நீர் வண்ணனை,Aazhi neer vannanai - கடல் வண்ணனாய்
அச்சுதனை,Achchudhanai - அடியார்களை ஒருகாலும் நழுவ விடாதவனான பெருமானைக் குறித்து
அணி குருகூர்சடகோபன் சொன்ன,Ani KuruKoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த
கேழ் இல்,Kael il - ஒப்பில்லாத
அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Anthaadi or aayiraththul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்ளும்
திருப்பே ரெயில் மேய இவை பத்தும்,Thiruppeer eyil meya ivai pattum - தென் திருப்பேரைப்பதி விஷயமான இப்பதிகத்தைக் கொண்டு
ஆழி அம்கையனை ஏத்த வல்லார் அவர்,Aazhi amkaiyanai etta vallaar avar - கையுந் திருவாழியுமான எம்பெருமானைத்துதிக்கவல்லவர்கள்
அடிமை திறத்து,Adimai thirattu - நித்ய கைங்கர்யத்திலே
ஆழியார்,Aazhiyaar - ஆழ்ந்தவராவர்.
3370திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 1
ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1
aazhi ezha,ஆழி எழ - திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும்
sangum villum ezha,சங்கும் வில்லும் எழ - பாஞ்சஜந்யமும் சார்ங்கமும் தோன்றவும்
thandum vaalum ezha,தண்டும் வாளும் எழ - கதையும் நந்தகமும் தோன்றவும்
thisai vaazhi ezha,திசை வாழி எழ - திசைகள் தோறும் மங்களாசாஸன கோஷம் கிளம்புவும்
andam mozhai ezha,அண்டம் மோழைஎழ - (உயரவளர்ந்தபடியாலே) அண்டகபாலம் பிளந்து ஆவரணஜலம் குமிழி கிளம்பும் படியாகவும்
mudi paadham ezha,முடி பாதம் எழ - (வளர்ந்த விரைவாலே) திருமுடியும் திருவடியும் ஒக்கக்கிளம்பும் படியாகவும்
oozhi ezha,ஊழி எழ - மாவலியால் துன்பப் பட்டகாலம் போய்) நல்லகாலம் வந்து தோற்றும்படியாகவும்
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
ulagam kondaa aaru eyy,உலகம் கொண்ட ஆறு ஏ - (திரிவிக்கிரமனாய்) உலகங்களையளந்து கொண்டபடி என்னே!.
3371திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 2
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
saaru pada,சாறு பட - (தேவர்களுக்கு) மஹோத்ஸவமுண்டாம்படியாக
amudham konda nanru,அமுதம் கொண்ட நான்று - (கடல் கடைந்து) அமுதங்கொண்ட காலத்திலே.
aaru,ஆறு - கடலிலே சென்று சேர்வதற்காக வந்து கொண்டிருந்த) ஆறுகளானவை
malaikku edhiruthu oadum oli,மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி - தங்கள் பிறப்பிடமான மலைகளையே நோக்கித் திரும்பியோடுகிறஓலியும்.
aravu ooru sulaay,அரவு ஊறு சுலாய் - வாஸீகியென்கிற பாம்பினுடம்பைச் சுற்றி
malai theykkum oli,மலை தேய்க்கும் ஓலி - மந்தர மலையிலே தேய்க்கிற (ஓலியும்
kadal maaru sulandru,கடல் மாறு சுழன்று - கடலானது இடம் வலமாக மாறிச் சுழன்று
alaikkindra oli,அழைக்கின்ற ஒலி - கோஷிக்கிற கோஷமும் உண்டாயின.
3372திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 3
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
oondri idandhu eittril kondan naal,ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள் - (பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில்
ezhu mannum,ஏழ் மண்ணும் - ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை
naantril,நான்றில - நழுவாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu malai,ஏழ் மலை - ஸப்த குலாசங்களும்)
naantril,நான்றில - சலியாதவையாகி
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;
pinnum,பின்னும் - மேலும்
ezhu kadal,ஏழ் கடல் - ஸப்த ஸாகரங்களும்
naanaril,நானறில - உடைந்தொழுகாதவையாய்
thaanthath,தானத்த - தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன.
eyy,ஏ - ஆச்சரியம்
3373திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 4
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே.–7-4-4
naal ezvum,நாள் எழவும் - காலவ்யவஸ்தைபேரும் படியாகவும்
nilam neer ezvum,நிலம் நீர் எழவும் - நிலமும் நீரும் நிலை குலைந்து போகவும்
vinnum koalum ezhu,விண்ணும் கோளும் எழ - ஆகாசமும் க்ரஹங்களும் நிலை குலைத்து போகவும்
eri kaalum ezhu,எரி காலும் எழ - நெருப்பும் காற்றும் நிலைகுலைந்து போகவும்
malai thaal ezvum,மலை தாள் எழவும் - மலைகள் அடிபெயர்ந்து போகவும்
sudarthaanum ezhu,சுடர்தானும் எழ - நக்ஷ்த்திரம் முதலிய சுடர்ப்பொருள்கள் நிலை குலையவும்
appan,அப்பன் - ஸர்வேச்வரன்
ooli ezhu ulagam unda oon,ஊளி எழ உலகம் உண்ட ஊண் - ஆரவரமுண்டாம்படி உலகங்களை உண்டருளின உணவு என்ன ஆச்சரியம்!
3374திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 5
ஊணுடை மல்லர் தகர்த்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே.–7-4-5
appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான கண்ணபிரான்
kaanudai bharatham kai arai pothu,காணுடை பாரதம் கை அறை போழ்து - ஆச்சரியமான பாரதயுத்தத்தை அணிவகுத்த போது,
oon udai mallar thadarndha oli,ஊண் உடை மல்லர் ததர்ந்த ஒலி - வலியை யூட்டும் உணவுகளைக்கொண்ட பெருமிடுக்கரான மல்லர்கள் (த்வந்த்வயுத்தம் பண்ணி, நேரிந்து விழுகிற ஒசையும்
mannar,மன்னர் - அரசர்களினுடைய
aan udai senai,ஆண் உடை சேனை - வீர புருஷர்களை யுடைத்தான சேனைகளானவை
nadungum oli vinnull,நடுங்கும் ஒலி விண்ணுள் - நடுங்குகிற சத்தமும் விண்ணுலகத்திலே
aen udai devar,ஏண் உடை தேவர் - மதிப்பராக எண்ணப்பட்ட தேவர்கள்
velippatta oli,வெளிப்பட்ட ஒலி - (யுத்த விநோதம் காண்கைக்காக) வெளிப் பட்ட ஓசையும் ஆயின
3375திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 6
போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஓத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே.–7-4-6
pozhndhu melindha,போழ்ந்து மெலிந்த - போதுபோனவாறே
pun chekkaril,புன் செக்கரில் - செக்கர் வானமிடுகிற வளவிலே
vaan thisai,வான் திசை - ஆகாசமும் திக்குக்களும்
soolum ezundhu,சூழும் எழுந்து - சூழக்கிளம்பி
udhiram punal aa,உதிரம் புனல் ஆ - ரத்த வெள்ளமாம்படி
appan,அப்பன் - ஆச்ரிதபக்ஷ்பாதியான நரஸிம்ஹமூர்த்தி
aazh thuyar seydhu,ஆழ் துயர் செய்து - அளவிறந்த துன்பத்தை விளைந்து
asurai kollum aaru,அசுரை கொல்லும் ஆறு - இரணியாசுரனைக் கொன்ற விதமானது
malai keelthu pilandha singam otthadhu,மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்தது - ஒரு மலையைக் கீழேயிட்டு அதன் மேலேயிருந்து அம்மலையைக்கீண்ட சிங்கம் போன்றிருந்தது.
aal,ஆல் - ஆச்சரியம்.
3376திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 7
மாறு நிரைத் திரைக் குஞ்ச ரங்களின்
நூறு பிணம் மலை போற் புரளக் கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே.–7-4-7
appan,அப்பன் - ஸ்வாமியான ஸ்ரீராமபிரான்
ilangai neeru pada setra ner,இலங்கை நீறு பட செற்ற நேர் - லங்காபுரி பஸ்மமாம்படி த்வம்ஸம் பண்ணின நேர்த்தி (எங்ஙனேயிருந்ததென்றால்)
maruniraittu iraikkum sarangaL,மாறுநிரைத்துஇரைக்கும் சரங்கள் - எதிரெதி;ராக நிரைக்கப்பட்டு சப்திக்கிற சரங்களாலே
inam nooru pinam,இனம் நூறு பிணம் - இனமினமாய் நூறு நூறான ராக்ஷ்ஸப்பிணங்களானவை
malai pol purala,மலை போல் புரள - மலை மலையாகப் புரண்டு விழவும்
kadal,கடல் - கடலானது
udhiram punal aa aaru maṭuthu,உதிரம் புனல் ஆ ஆறு மடுத்து - ரக்த வெள்ளத்தாலே நிரம்பி ஆறுகளிலே எதிர்த்தோடும்படியாகவுமிருந்தது
3377திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 8
நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே–7-4-8
appan,அப்பன் - ஸ்வாமியான கண்ண பிரான்
ner sari vaanan,நேர் சரி வாணன் - முதுகுகாட்டியொடின பாணாஸுரனுடைய
thinthol konda anru,திண்தோள் கொண்ட அன்று - திண்ணிய தோள்களைத்துணித்து வென்றி கொண்ட அக்காலத்திலே
kozhi kodi kondaan,கோழி கொடி கொண்டான் - மயிலைக் கொடியாகக் கொண்ட ஸீப்ரமணியன்
ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர்நில்லாமல் சாய்ந்துபோனான்;
pinnum,பின்னும் - அதற்குமேலே
eriyum analon,எரியும் அனலோன் - ஜ்வலித்துக்கொண்டிருந்த அக்நியும்
ner sarindhaan,நேர் சரிந்தான் - எதிர் நில்லாமல் சரிந்தான்;
pinnum,பின்னும் - அதற்குமேலும்
mukkan mooruthi,முக்கண் மூர்த்தி - முக்கண்ணனான சிவ பிரானும்
ner sarindhaan kandeer,நேர் சரிந்தான் கண்டீர் - அப்படியே முதுகிட்டுப்போனான கிடீர்.
3378திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 9
அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.–7-4-9
appan,அப்பன் - ஸ்வாமியான ஸாவேச்வரன் முந்துற் முன்னம்
anru,அன்று - அந்தவொரு க்ஷ்ணத்திலேயாம்;
man neer eri kaal vin,மண் நீர் எரி கால் விண் - பஞ்ச பூதங்ககளையும்
malai mudhal,மலை முதல் - மலைகள் முதலானவற்றையும்
seydhadhum,செய்ததும் - படைத்ததும்
anru,அன்று - அந்த க்ஷ்ணத்திலேயாம்;
sudar irandu,சுடர் இரண்டு - சந்திரன் ஸுர்யன் ஆகிய இரண்டு சுடர்ப்பொருள்களையும்
piravum,பிறவும் - மற்றுமுள்ள நக்ஷ்த்ராதிதேஜஸ் பதார்த்தங்களையும்
ulagam seydhadhum,உலகம் செய்ததும் - உலகங்களைப்படைத்ததும்,
seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும்
anru,அன்று - அந்த க்ஷணத்திலேயாம்
pinnum,பின்னும் - அதுக்குமேலே
mazhai,மழை - மேகங்களையும்
uyir,உயிர் - மழையினால்பிழைக்கும் உயிர்களையும்
thevum,தேவும் - மழைக்குக் கடவர்களான தேவர்களையும்
matrum,மற்றும் - மற்றுமுள்ள திர்யக் ஸ்தாவரங்களையும்
seydhadhum,செய்ததும் - உண்டாக்கினதும்
3379திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 10
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10
meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை
keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும்
maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும்
sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது
pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும்
inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும்
appan,அப்பன் - கண்ணபிரான்
thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க
kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான்
3380திருவாய்மொழி || 7-4 ஆழி எழ 11
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11
kunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய
adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட
ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற
sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய
urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய்
or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான
ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி
mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு
venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும்
3381திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இராம பிரானுடைய ஒரு விலக்ஷ்ணமான தன்மையை யருளிச் செய்கிறாரிதில்.) 1
கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1
புல் பா முதல் ஆ,Pul paa mudhal aa - புல்லாகிற பதார்த்தம் முதலாகவும்
புல் எறும்பு ஆதி,Pul erumbu aadhi - மிக அற்பமான எறும்பு முதலாகவும்
நல் பால் அயோத்தியில் வாழும்,Nal paal ayothiyil vaazhum - (ராமகுணங்கள் நடையாடுகிற) நல்ல தேசமான அயோத்யாபுரியில் வாழ்கிற
சராசரம முற்றவும்,Saraasaram mutravum - ஸ்தாவர ஜங்கமங்களானவை யெல்லாவற்றையும்.
ஒன்று இன்றியே,Ondru indriye - ஒருவிதமான ஸாதநாநுஷ்டானமுமில்லாமலிருக்கச் செய்தேயும்
நான் முகனார் பெற்ற நாட்டுளே,Naan muganaar petra naattule - பிரமன் படைத்த இவ்வுலகுக் குள்ளே
நல பாலுக்கு உய்த்தனன்,Nal paalukku uyiththanan - நல்ல ஸ்வபாவத்தையுடைத்தாம் படி பண்ணினான்;
கற்பார்,Karpaar - (ஆதலால்) (உலகில்) கற்க விரும்பு மவர்கள்
இராமபிரானை அல்லாமல் மற்றும் கற்பரோ,iraamapiraanai allaamal matrum karparo - (குணக்கடலாகிய) ஸ்ரீராமனைத் தவிர மற்றொரு வ்யக்தியைக் கற்க நினைப்பர்களோ?
3382திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அங்கு உண்டான சகல சேதனரையும் தன்னை அல்லது அறியாத படி தன் குணத்தால் பந்தித்து அகப்படுத்தி வைத்து -அவர்களை இட்டு வைத்து தானே எழுந்து அருளாதே அவர்களையும் கூடக் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளினான் என்று கீழ் சொன்னதில் காட்டிலும் அதிக குணத்தை அருளிச் செய்கிறார்.) 2
நாட்டிற் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ?
நாட்டிற் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா
நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு
நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே.–7-5-2
நாட்டில் பிறந்தது,Naattil pirandathu - (தன்வாசியறியாத) இக்கொடிய வுலகத்திலே வந்து பிறந்தது
படாதனபட்டு,Padaadhanapattu - ஸம்ஸாரிகளும் அநுபவியாத கிலேசங்களையநுபவித்து
மனிசர்க்கு ஆ,Manisarkku aa - செய்தநன்றியறியாத மனிசர்களுக்காக
நாட்டை நலியும் அரக்கரை நாடி தடிந்திட்டு,Naattai naliyum arakkarai naadi thandhittu - உலகத்தை ஹிம்ஸிக்கின்ற ராவணாதி ராக்ஷ்ஸர்களை ஆராய்ந்து சென்று கொன்று
நாட்டை அளித்து,Naattai aliththu - (இப்படியாக) நாட்டைரக்ஷித்து
உய்ய செய்து,Uyya seyythu - உஜ்ஜீவனப்படுத்தி
நடந்தமை கேட்டும்,Nadandamai kaettum - பின்பு திருநாட்டுக்கு நடந்த படியைக் கேட்டிருந்தும்
நாட்டில் பிறந்தவர்,Naattil pirandhavar - (அப்பெருமானுடைய திருக்குணங்கள் நடையாடுகிற) நாட்டிலே பிறந்தவர்கள்
நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ,Naaranarkku aal anri aavaro - நாராயணனான அந்த ஸ்ரீராமனுக்கல்லது மற்றொருவர்க்கு ஆட்படுவர்களோ?
3383திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நிச்சலும் சிந்திப்பது தவிர வேறொன்றுமறியாத சிசுபாலனையுமுட்படத் தன் திருவடிகளிலே சேர்த்துக் கொண்ட மஹாகுணத்தை யறிந்தவர்கள் அப்படிப் பட்ட குணவானுடைய திருக்குணங்களையன்றோ காதாரக் கேட்கவேணுமென்கிறார்.) 3
கேட்பார்கள் கேசவன் கீர்த்தி யல்லால் மற்றுங் கேட்பரோ?
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளே வையும்
சேட்பாற் பழம் பகைவன் சிசு பாலன் திருவடி
தாட்பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்துமே .–7-5-3
கேட்பார்,Ketpar - எம்பெருமானுடைய நிந்தைகளையேகா தாரக்கேட்கவேணுமென்கிற விருப்பமுடையவர்களுக்குங் கூட
செவி சுடு,Sevi sudu - கர்ணகடோரமான
கீழ்மை வசவுகளேவையும்,Keezmai vasavugalayevaiyum - மிகத் தண்ணிய தூஷணைகளையிட்டு தூஷிக்குமவனாய்
சேண் பால் பழம் பகைவன் சிசுபாலன்,Sen paal pazham pakaivan sishupalan - நெடுங்காலத்துப் பகைவனான சிசுபாலனுங்கூட
திரு அடி,Thiru adi - ஸ்லாமியான கண்ண பிரானுடைய
தாள் பால் அடைந்த தன்மை அறிவாரை அறிந்தும்,Thaal paal adaindha thanmai arivaarai arindhum - திருவடிகளிலே ஸாயுஜ்யம்பெற்றபடியை யறிவாரை அறிந்து வைத்தும்,
கேட்பார்கள்,Kedpaarhal - நல்லது கேட்க வேணுமென்றிருக்குமவர்கள்
கேசவன் கீர்த்தி அல்லால் மற்றும் கேட்பரோ,Keshavan keerthi allaal matrum kedparoh - எம்பெருமானுடைய கீர்த்திகளை யொழிய வேறொன்று கேட்பாரோ?
3384திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ப்ரளயத்திலே மங்கிக் கிடந்த ஜகத்தை மீளவு முண்டாக்கின மஹா குணத்தை யறிந்து வைத்தால் இப்படிப்பட்ட குணசாலிக்கே யன்றோ ஆளாகப் பெற வேணுமென்கிறார்.) 4
தன்மை அறிபவர் தாம் அவற்கு ஆளன்றி ஆவரோ?
பன்மைப் படர் பொருள் ஆதுமில் பாழ் நெடுங் காலத்து
நன்மைப் புனல் பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே.–7-5-4
பன்மை படர் பொருள் ஆதும் இல்பாழ் நெடுங்காலத்து,Panmai padar porul aadum ilpaazh nedungkaalathu - பலவகைப்பட்ட விரிவான பதார்த்தங்கள் ஒன்றுமில்லாதபடி வெகுகாலம் சூந்யமாயிருந்தபோது
நன்மை புனல் பண்ணி,Nanmai punal panni - நன்மை மிகுந்த காரணஜலத்தை முந்துற முன்னம் ஸ்ருஷ்டித்து
நான்முகனை பண்ணி,Nanmukanai panni - (பிறகு) பிரமனைப் படைத்து
தன் உள்ளே,Than ullae - தன்னுடைய ஸ்வருபத்தின் ஏகதேசத்திலே
தொன்மை மயக்கிய,Thonmai mayakkiya - பண்டு தான் ஸம்ஹரித்த பதார்த்களை
தோற்றிய,Thotriya - பழையபடி உண்டாக்கின
சூழல்கள்,Soozhhalgal - இப்படிப்பட்ட மஹா குணங்களை
சிந்தித்து,Sindhiththu - சிந்தனை செய்து
தன்மை அறிபவர் தாம்,Thanmai aripavar tham - அவனுடைய அஸாதாரண லக்ஷ்ணத்தை அறியவல்லவர்கள்
அவற்கு அன்றி ஆள் ஆவரோ,Avarku anri aal aavaro - அப்பெருமானுக் கொழிய வேறொருவனுக்கு அடிமைப்படலாகுமோ?
3385திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (அழிந்த ஜகத்தை யுண்டாக்கினவளவே யல்லாமல், அந்தஜகத்தை ப்ரளயங்கொள்ள மஹாவராஹமா யெடுத்து ரக்ஷித்த மஹாகுணத்தை யநுஸந்தித்தால் அவன்திருவடிகளே தஞ்ச மென்றிருக்க வேண்டாவோவென்கிறார்.) 5
சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ?
ஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்
தாழப் படாமல் தன் பால் ஓரு கோட்டிடைத் தான் கொண்ட
கேழல் திருவுரு வாயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே.–7-5-5
பெரு புனல் தன்னுள் ஆழ அழுந்திய ஞாலத்தை,Peru punal thannul aazhal azhundhiya nyaalaththai - எல்லையற்ற பிரளய ஜலத்திலே மிக ஆழமாக அழுந்திக்கிடந்த பூமியை
தாழப்படாமல்,Thaalappadamaal - அநர்த்தப்படாதபடிக்கு
தன் பால் ஒரு கோடு இடை தான் கொண்ட,Than paal oru koodu idai thaan konda - தன் திருமேனியில் ஏக தேசமாயிருப்பதொரு கோட்டினிடத்திலே தானாகவே இடந்தெடுத்துக் கொண்ட
கேழல் திரு உரு ஆயிற்று,Kezhla thiru uru aayitru - ஸ்ரீ வராஹரூப மெடுத்த படியை
கேட்டும் உணர்ந்தும்,Kettum unarnthum - இதிஹாஸ புராணமுகங்களாலே கேட்டும் மனனம் பண்ணியும் வைத்து
சூழல்கள் சிந்திக்கில்,Soozhhalgal sindhikkil - தம்தமமுடைய அபி மதங்கள் ஸித்திப்பதற்கு விரகு பார்க்குமளவில்
மாயன் கழல் அன்றி சூழ்வரோ,Maayan kazhal anri soozhvaro - ஆச்சரிய சேஷ்டிதனான அப்பெருமானுடைய திருவடிகளையொழிய வேறொன்றை ஆச்ரயிப்பரோ?
3386திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தன் மேன்மை பாராமல் தான் இரப்பாளனாய் வாமநப்ரஹ்மசாரியாய் மஹாபலியின் செருக்கை யடக்கித் தேவர்களைக் காத்தருளின மஹாகுணத்தையறிந்து வைத்து மற்றொருவர்க்கு ஆளாகவொண்ணுமோ வென்கிறார்.) 6
கேட்டும் உணரந்தவர் கேசவற்கு ஆளன்றி ஆவரோ?
வாட்டமிலா வண்கை மாவலி வாதிக்க வாதிப்புண்டு
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந் தார்க் கிடர் நீக்கிய
கோட்டங்கை வாமனனாய்ச் செய்த கூத்துகள் கண்டுமே.–7-5-6
வாட்டம் இலா வண்கை மாவலிவாதிக்க,Vaatam ilaa vankai maavalivaadhikka - ஒருகாலும் குறையாத ஔதார்யத்தையுடைய மஹாபலியானவன் (தன் செருக்காலே) நலிய
வாதிப்புஉண்டு,Vaadippundhu - ஹிம்ஸைபட்டு
ஈட்டம் கொள் தேவர்கள் சென்று இரந்தார்க்கு,Eettam kol theevargal sendru irandhaarkku - திரண்டு சென்று ப்ரார்த்தித்த தேவர்களுடைய
இடர் நீக்கிய,Idar neekkiya - இடரை நீக்குவதற்காக
கோடு அம் கை வாமனன் ஆய் செய்த கூத்துக்கள் கண்டும்,Koodu am kai vaamanan aay seitha kooththukkal kandum - ஏற்றகையையுடைய ஸ்ரீவாமன மூர்த்தியாய்ச் செய்தருளின மநோஹர சேஷ்டிதங்களை யநுஸந்தித்து வைத்தும்
கேட்டும் உணர்ந்தவர்,Kettum unarnthavar - புராண முகத்தாலே கேட்டும் அறிவுடையராயிருந்தவர்கள்
கேசவற்கு அன்றி ஆள் ஆவரோ,Keshavarku anri aal aavaro - அந்தப்பெருமானுக்கல்லது மற்றொருவதற்கு அடிமையாவரோ?
3387திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (தேவதாந்தர பஜநம் பண்ணிக் கிடந்த மார்க்கண்டேயனை விஷயீதரித்தலாகிற மஹா குணத்தை யநுஸந்தித்தால் அப்பெருமானுக்கன்றி யாளாவரோ வென்கிறார்.) 7
கண்டு தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆளன்றி ஆவரோ?
வண்டுண் மலர்த் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு வாழு நாள்
இண்டைச் சடை முடி ஈசன் உடன்கொண்டு உசாச் செல்லக்
கொண்டங்குத் தன்னொடுங் கொண்டு உடன் சென்றது உணர்ந்துமே.–7-5-7
வண்டு உண் மலர் தொங்கல் மார்க்கண்டேயனுக்கு,Vandu un malar thongal maarkkandeyanukku - வண்டுகள் மதுபானம் பண்ணுகிற பூமாலையையுடைய (பாலகனான) மார்க்கண்டேயனுக்கு
வாழும் நாள்,Vaalum naal - ஆயளுக்காக
இண்டை சடை முடி ஈசன்,Indai sadai mudi eesaan - நிபிடமான ஜடாமண்டலத்தையுடையவரான சிவபிரான்
உடன் கொண்டு உசா செல்ல அங்கு,Udan konda ushaa sellu anggu - தன்னோடுகூட அவனை யழைத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்ல அந்நிலையிலே
கொண்டு,Konda - அவனை விஷயீகரித்து
தன்னோடும் கொண்டு,Thannodum konda - தன்னோடே கூட்டிக் கொண்டு
உடன் சென்றது,Udan sendradhathu - பிரியாதே யிருந்த படியை
உணர்ந்தும்,Unarnthum - புராணாதி முகத்தாலேயறிந்தும்
கண்டும் தெளிந்தும் கற்றார்,Kandum thulindhum katraar - கண்ணாரக் கண்டும் நெஞ்சாரத்தெளிந்தும் கற்றவர்கள்
கண்ணற்கு அன்றி ஆள் ஆவரோ?,Kannarkku anri aal aavaro? - கண்ணபிரானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரோ
3388திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில்.) 8
செல்ல உணர்ந்தவர் செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெருந் தவத்தால் பல செய்மிறை
அல்லல் அமரரைச் செய்யும் அரணியன் ஆகத்தை
மல்லல் அரி யுரு வாய்ச் செய்த மாயம் அறிந்துமே.-7-5-8
எல்லை இலாத பெரு தவத்தால்,Ellai ilaadha peru thavaththaal - அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே
பல செய் மிறை,Pala sei mirai - பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய்
அமரரை அல்லல் செய்யும்,Amarai allaal seyyum - (விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான
இரணியன் ஆகத்தை,Iraniyan aakaththai - ஹிரண்யாஸீரனுடைய உடலை,
மல்லல் அரி உரு ஆய் செய்த,Mallal ari uru aay seitha - பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த
மாயம் அறிந்தும்,Maayam arindhum - ஆச்சரியத்தை யறிந்து வைத்தும்
செல்ல உணர்ந்துவர்,Sella unarnththuvaar - பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள்
செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ,Selvam than seer anri karparoa - லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ?
3389திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத்தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.) 9
மாயம் அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
தாயம் செறும் ஓரு நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய்த்
தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று சேனையை
நாசம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை அறிந்துமே –7-5-9
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க,Thaayam serum oru noorruvar mang - தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய
ஓர் ஐவர்க்கு ஆய்,Oru aivarukku aay - விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி
தேசம் அறிய,Desam ariya - ஸகலலோக ப்ரஸித்த மாம்படி
ஓர் சாரதி ஆய் சென்று,Oru sarathi aay sendru - ஒப்பற்ற ஸாரதியாகப் போய்
சேனையை நாசம் செய்திட்டு,Senaiyai naasam seiththittu - எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து
நடந்தநல்வார்த்தை அறிந்தும்,Nadandhanalvaarthai arindhum - தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும்
மாயம் அறிபவர்,Maayam aripavar - மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள்
மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ?
3390திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (ஸர்வதர்மாந் பரித்யஜ்ய இத்யாதி சரமச்லோக மருளிச்செய்த மஹாதுணத்திலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 10
வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10
வார்த்தை அறிபவர்,Vaarthai aripavar - சரமச்லோகமாகிற நல்வார்த்தையை யறியும்வர்கள்.
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பு இவை பேர்த்து,Poortha pirappodu noyodu muppodu irappu ivai perthu - ஸ்வருபவிளக்கத்தை மறைக்கின்ற பிறப்பு வியாதி கிழத்தனம் மரணம் முதலான வற்றை விட்டுக் கழியும்படி பண்ணி
பெரு துன்பம் வேர் அற நீக்கி,Peru thunbam veer ariya neekki - கைவல்யாநுபவமாகிற மஹாநர்த்தத்திலும் புகாமே காத்து
தன் தாளின் கீழ் சேர்த்து,Than thaalin keezh seyththu - தன்னுடைய திருவடிகளின் கீழே சேர்த்துக்கொண்டு
அவன் செய்யும் சேமத்தை எண்ணி,Avan seyyum semaththai enni - இப்படியாக அவன் செய்தருளும் ஸீக்ஷ்மங்களை யநுஸந்தித்து
தெளிவு கூற்று,Thulivu koottru - தெளிவு பெற்று வைத்து
மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ,Maayavarku anri aal aavaro - அப்பெருமானுக்கல்லது வேறொருவர்க்கு அடிமை யாவரொ?
3391திருவாய்மொழி || (7-5—கற்பார் இராம பிரானை) (எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்) (இத்திருவாய்மொழியைக் கற்பவர்கள் இவ்விருள்தரு மாஞாலத்தில் இருக்கச் செய்தேயும் தெளிந்த சிந்தையராயிருப்பர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும்
தெளிவுற்ற கண்ணனைத் தென் குரு கூர்ச்சட கோபன் சொல்
தெளிவுற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுல கத்துள்ளே.–7-5-11
தெளிவு உற்று,Thelivu uttru - ஸ்வரூபத்தில் தெளிவு பெற்று
வீவு இன்றி நின்றவர்க்கு,Veivu indri nindruvargu - அந்தத் தெளிவுக்கு ஒரு நாளும் விச்சேதமில்லாமலிருப்பவர்களுக்கு
இன்பம் கதி செய்யம்,Inbam kathi seyyam - இன்பமே வடிவெடுத்ததான கதியைச் செய்விப்பவனாய்
தெளிவு உற்ற கண்ணனை,Thelivu uttru kannanai - தெளிவு தானே வடிவெடுத்திருப்பவனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர் சடகோபன் சொல்,Then Kurukoor Sadagopan sol - ஆழ்வார் அருளிச்செய்ததான
தெளிவு உற்ற ஆயிரத்துள்,Thelivu uttru ayiraththul - தெளிந்த ஆயிரத்தினுள்ளை
இவை பத்தும் வல்லார் அவர்,Ivai pattum vallar avar - இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள்
பா மரு மூஉலகத்துள்ளே,Pa maru mooulagaththule - பாபபூயிஷ்டமான உலகத்திலிருந்துவைத்தே
தெளிவு உற்ற சிந்தையர்,Thelivu uttru chintaiyar - தெளிவு பெற்ற மனமுடையராவர்.
3392திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஒவ்வோரவயத்தாலும் ஒவ்வோர் அதிமாநுஷ சேஷ்டிதத்தைச் செய்தருளின் பரம போக்யனான வுன்னை நான் என்றைக்குக் கிட்டுவதென்கிறார்.) 1
பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1
பாமரு மூவுலகும் படைத்த பற்பநாபா ஓ,Pamaru mooulagum padaitta parpanaba o - பலவகைப் பொருள்களும் நிரம்பியுள்ள மூவுலங்களையுமுண்டாக்கின ஓ பத்ம நாபனே!
பாமரு மூ உலகும் அளந்த பற்பம் பாதா ஓ,Pa maru moo ulagum alandha param pada o - பரம்பின மூவுலங்களையு மளந்து கொண்ட திருவடித்தாமரைகளை யுடையவனே!
தாமரை கண்ணா ஓ,Thamarai kannaa o - செந்தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனே!
தனியேன் தனி ஆளா ஓ,Thaniyena tani aala o - துணையற்றவனான என்னை அஸாதாரணமாக ஆள்பவனே!
தாமரை கையா ஓ,Thamarai kaiyaa o - செந்தாமரைக் கையனே!
உன்னை சேர்வது என்று கொல்,Unnai sera vadhu endru kol - உன்னை நான் சேரப் பெறுவது எந்நாளோ?
3393திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மீண்டும் அதுவே வாய் வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார்.) 2
என்று கொல் சேர்வது அந்தோ!அரன் நான்முகன் ஏத்தும் செய்ய
நின் திருப் பாதத்தை யான்? நிலம் நீர் எரி கால் விண்ணுயிர்
என்ற இவை தாம் முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ!
குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2
நிலம் நீர் எரி கால் விண்,Nilam neer eri kaal vin - பஞ்ச பூதங்களும்
உயிர்,Uyir - பிராணிவர்க்கமும்
என்ற இவை தாம் முதல் ஆ,Endra ivai thaam mudhal aa - ஆகிய இவை முதலாக
முற்றும்,Mutrum - ஸகல பதார்த்தங்களும்
ஆய் நின்ற எந்தாய் ஒ,Aay nindra endhaay o - தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே!
ஆ நிரை மேய்தது,Aa nirai meydhadhu - பசுக்களின் கூட்டங்களை மேய்த்து
குன்று எடுத்து அவை காத்த,Kunru eduthu avai kaatha - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின
எம் கூத்தா ஓ,Em koothaa o - குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே!
அரண் நான் முகன் ஏத்தும்,Aran naan mukan etthum - சிவனும் பிரமனும் துதிக்கும்படியான
நின் செய்ய திரு பாதத்தை,Ninn seiya thiru paadhattai - உனது சேவடியை
யான் சேர்வது என்று கொல்,Yaan sera vadhu endru kol - யான் சேரப் பெறுவது எந்நாளோ?
அந்தோ,Antho - ஜயோ!
3394திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (குண்டுறடுத்தாநிரை மேய்த்து அவை காத்த வெங்கூத்தாவோ” என்று கோவர்த்தந உத்தரண வ்ருத்தாந்தத்தைக் கூறிக் கூவின ஆழ்வார் மீண்டுமிப்பாட்டிலும் “காத்தவெங்கூத்தாவோ மலையேந்திக் கன்மாரி தன்னை: என்று அது தன்னையே கூறிக் கூவுவது அந்தாதித்தொடை யமைதிக்காகவன்று; ஈடுபாட்டின் மிகுதியாலாம்.) 3
காத்த எங் கூத்தாவோ! மலை ஏந்திக் கன் மாரி தன்னைப்
பூத் தண் துழாய் முடியாய்! புனை கொன்றை யஞ் செஞ்சடையாய்
வாய்த்த என் நான்முகனே! வந்து என் ஆருயிர் நீ ஆனால்
ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3
மலை ஏந்தி கல்மாரி தன்னை காத்த எம்கூத்தா ஓ,Malai endhi kalmaari thannai kaatha emkoothaa o - கோவர்த்தனமலையைத் தாங்கிநின்று கல் மழையைத் தடுத்தவனும் கூத்தில் வல்லவனுமான என்பெருமானே!
பூ தண் துழாய் முடியாய்,Poo than thuzhai mudiyaa - அழகிய குளிர்ந்த திருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவனே!
புனை கொன்றை அம் செம்சடையாய்,Punai konrai am sem sadaiyaa - சிவந்த ஜடையிலே கொன்றைமாலையைப் புனைந்துள்ள சிவனுக்கு அந்தர்யாமியே!
வாய்த்த என் நான்முகனே,Vaaytha en naanmukane - பிரமனுக்கு அந்தர் யாமியே!
ஏத்த அருகீர்த்தியினாய்,Eththa arugeerthiyinaay - துதித்துத் தலைக்கட்ட முடியாத புகழையுடையவனை!
நீ வந்து என் ஆர் உயிர் ஆனால்,Nee vandhu en aar uyir aanal - நீயாகவே பரகதஸ்வீகாரமாக வந்து எனக்குத் தாரகனாக ஆனாயான பின்பு
உன்னை எங்கு தலைப்பெய்வன்,Unnai engu thalaippeivan - உன்னை எங்கே கிட்டியநுபவிப்பேன்?
3395திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸர்வ ஸ்மாத் பரனாய் ஆஸ்ரித பவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனான வுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார்.) 4
எங்குத் தலைப் பெய்வன் நான்! எழில் மூவுலகும் நீயே
அங்கு உயர் முக்கண் பிரான் பிரம பெருமான் அவன் நீ
வெங்கதிர் வச்சிரக்கை இந்திரன் முதலாத் தெய்வம் நீ
கொங்கலர் தண் அந் துழாய் முடி என்னுடைக் கோவலனே!–7-6-4
கொங்கு அலர் தண் அம் துழாய் முடி என்னுடைகோவலனே,Kongu alar than am thuzhai mudhi ennutai kovalane - மதுவோடு கூடி மலர்ந்த செவ்வித் துழாயையணிந்த மயிர்முடியையுடையனாய் எனக்குப் பரம போக்யனான கோபாலக்ருஷ்ணனே!,
எழில் மூ உலகும் நீயே,Ezil moo ulagum neeye - விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும்,
அங்கு உயர் முக்கண் பிரான்,Angu uyarr mukkan piran - அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும்
பிரமன் பெருமான் அவன்,Braman peruman avan - அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும்
நீ,Nee - நீயிட்ட வழக்காயிருப்பர்கள்.
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ,Vem kadhir vachchiram kai indhiran muthala deivam nee - வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே;
நான் எங்கு தலைப்பெய்வன்,Naan engu thalaippeivan - (ஆனபின்பு) நான் என் முயற்சியினாலேயே உன்னை வந்து கிட்டுவேனோ?
3396திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) ( லௌகிக விஷயங்களிலே கைகழிந்திருக்கிற என் ஆக்மா உன்னை எங்ஙனே கிட்டக்கடவதென்கிறார். ஈடு;- “பலன் உம்மதான பின்பு நீரும் சிறிது யத்நம் பண்ணவேணுங்காணுமென்ன: நீ ஸ்ருஷ்டித்த லோகங்களில் விஷயங்கள் தோறும் அகப்பட்டுக்கிடக்கிற நான் உன்னைப் பெறுகைக்கு ஒருஸாதனத்தை யநுஷ்டித்துவந்து பெறுகையென்று ஒன்றுண்டோ வென்கிறார்.) 5
என்னுடைக் கோவலனே! என் பொல்லாக் கரு மாணிக்கமே!
உன்னுடைய உந்தி மலர் உலகமவை மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால் உன்னைக் கண்டு கொண்டிட்டு
என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5
என்னுடை கோவலனே!,Ennutai kovalane! - என்னுடையவனென்று அபிமானிக்கலாம் படியான கோபாலனே!,
என் பொல்லா கரு மாணிக்கமே,En polla karu maanikkame - துளையாத மாணிக்கம் போன்று எனக்கு இனியனாவனே!
என்னுடை ஆருயிரார்,Ennutai aaruyiraar - என் ஆத்மாவானவர்,
உன்னுடை உந்தி மலர் உலகம் அவை மூன்றும்,Unnutai undhi malar ulagam avai moondrum - உனது திருநாபியிலே மலர்ந்த மூவுலகங்களிலுமுள்ள விஷயங்களெல்லாவற்றலும்
பரந்து,Parandhu - சாபல்யப்பட்டிருந்து.
உன்னுடை சோதி வெள்ளத்து அகம்போல் உன்னை,Unnutai sothi vellathu agampol unnaik kandu kondu - உனக்கே யஸாதாரணமாய் விலக்ஷ்ண தேஜோராசி ரூபமாயிருக்கிற ஸ்ரீவைகுண்டலோகத்திலே யிருக்கிறவுன்னை
கண்டு கொண்டிட்டு,kandu kondittu - காணப்பெறுமாறு
எங்ஙனே கொல் வந்து எய்துவர்,Enggane kol vandhu edhvar - எப்படி வந்து சேருவர்?
3397திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (உன்னைப் பெறுகைக்கு என்பக்கல் ஒர் உபாயமில்லை; நீயே வந்து விஷயீகரிக்கவேணுமென்கிறார்.0 6
வந்து எய்துமாறு அறியேன் மல்கு நீலச் சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம் சேர்வது போல்
அந்தர மேற் செம்பட்டோடு அடி உந்தி கை மார்பு கண் வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திரு மார்பனையே.–7-6-6
மல்கு நீலம் சுடர் தழைப்ப,Malgu neelam sudar thalaippa - குறைவற்ற நீலமான புகரானது மேன் மேலும் வளர,
செம் சுடர் சோதிகள் பூத்த ஒரு மாணிக்கம் சேர்வது போல்,Sem sudar sodhigal pootha oru maanikkam sera vadhu pol - சிவந்த வொளியை யுடைத்தான சில கிரணங்களைப் பரப்பினவொரு மாணிக்கம், சாய்ந்து கிடக்குமாபோலே,
அந்தரம் மேல்,Antharam mel - திருவரை மேல்சாத்தின
செம் படடோடு,Sem padatodu - பீதாம்பரத்தோடு
அடி உந்தி கை மார்பு கணவாய்,Adi undhi kai maarpu kanavaay - திருவடிகளும் திருவுந்தியும் திருக்கைகளும் திருமார்பும் திருக்கண்களும் திருப்பவளமுமாகிய வொளி
செம் சுடர் சோதிவிட,Sem sudar sodhividu - சிவந்தழகிய வொளியைப் பரப்ப
உறை என் திருமார்,Urai en thirumaar - எனது திருமாலை
வந்து எய்தும் ஆறு அறியேன்,Vandhu eydhum aaru ariyen - வந்து கிட்டும் வகையறிகின்றிலேன்.
3398திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -ப்ரஹ்மாதிகள் உடைய போக்ய ஜாதமும் அவர்களுடைய அதி மானுஷ வ்ருத்திகளும் ஸ்வ அதீனமான இருக்கிறவனை நான் காணப் பெறேனோ -என்கிறார்.) 7
என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை
என்றும் என் நா மகளை அகம்பாற் கொண்ட நான் முகனை
நின்ற சசி பதியை நிலங்கீண்டு எயில் மூன்று எரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ?–7-6-7
என் திரு மார்பன் தன்னை,En thiru maarban thannai - திருமாலாயிருக்கிற தன்மையை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என் மலை மகள் கூறன் தன்னை,En malai magal kooran thannai - பார்வதீபதியை ப்ரகாரமாகவுடையனாயிருக்கிறபடியை யெனக்கு ப்ரகாசிப்பித்தவனும்
என்றும் நாமகளை அகம்யால் கொண்ட என் நான் முகனை,Endrum naamagalai agamyaa'l kondha en naan mukanai - எப்போதும் ஸரஸ்வநியை அந்தரங்க மஹிஷியாகக் கொண்ட நான்முகனை ப்ரகாரமாவுடை யனாயிருக்கிறபடியை எனக்கு ப்ரகாசிப்பித்தவனும்.
நின்ற சசீ பதியை,Nindra Sasi padhiyai - இவர்களோடு எண்ணப்பட்டு நிற்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியானவனும்
நிலம் கீண்ட,Nilam keennda - (மஹாவராஹமாகி) பூமியை யுத்தரித்தவனும்
மூன்று எயில் எரித்த,Moontru eyil eritha - த்ரிபுரதஹனம பண்ணினவனும்
புலன் வென்று துரந்த,Pulan vendru thurandha - இந்திரியங்களை ஜயித்து ஓட்டினவனும்
விசும்பு ஆளியை,Visumpu aaliyai - சுவர்க்கத்தை ஆள்கின்ற இந்திரனுக்கு அந்தர்யாமியுமான எம்பெருமானை
காணனோ –,Kaanaano - காணமாட்டேனோ?
3399திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (மாலி மூதலான ப்ரதிகூலவர்க்கத்தை நிரஸித்தருளின ஸர்வேச்வரானைக் காணப்பெறுவோமோ! என்கிறார்.) 8
ஆளியைக் காண் பரியாய் அரி காண் நரியாய் அரக்கர்
ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப
மீளியம் புள்ளைக் கடாய் விறன் மாலியைக் கொன்று பின்னும்
ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8
ஆளியை காண்பரி ஆய்,Aaliyai kaanpari aay - யாளியைக் கண்ட குதிரை போலவும்
அரி காண் நாஜீ ஆய்,Ari kaan Naajee aay - சிங்கத்தைக் கண்ட நாஜீ போலவும்
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்கன்
அன்று ஊளையிட்டு,Andru oolaiyittu - அக்காலத்தில் அச்சத்தினாலே கதறிக்கொண்டு
இலங்கை கடந்து,Ilankai kandhu - லங்காபுரியை விட்டு
பிலம் புக்கு ஒளிப்ப,Pilam pukku olibpa - பாதாளத்திலே புகுந்து ஒளிக்கும் படியாக
மீளி அம் புள்ளை கடாய்,Meeli am pullai kadaay - பெருமிடுக்கனாய் அழகியவனான கருடனை நடத்தி
விறல் மாலியை கொன்று,Viral maaliyai kondru - பிரபலனான மாலியைக் கொன்று
பின்னும்,Pinnu - அவ்வளவிலும் விடாதே
ஆள்,Aal - மிகவும் சூரர்களான ஆண் புலிகளை (க்கொன்று)
உயர் குன்றங்கள் செய்து,Uyar kunrangal seydhu - பருப்பருந்த மலைகளாகக் குவித்து
அடர்த்தானையும்,Adarthaanaiyum - அவர்களை யழித்த பெருமானையும்
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ?
3400திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (விபீஷண பக்ஷ்பாதத்தாலே ராவண குலத்தை நிச்சேஷமாக முடித்து அவனுக்கு லங்காராஜ்யத்தையுங் கொடுத்துத் தானும் அபிஷிக்தனாய் ராஜ்யம் பண்ணித் தன்னடிச்சோதியேற் வெடுந்தருளின் ஸ்ரீராமபிரானை, அந்த மேன்மையோடே யிருக்கச் செய்தே நாம் காணவல்லோமோ நெஞ்சமே! என்று தமது திருவுள்ளத்தை நோக்கியருளிச் செய்கிறார்.) 9
காண்டுங் கொலோ நெஞ்சமே!கடிய வினையே முயலும்
ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்து
மீண்டு மவன் தம்பிக்கே விரி நீர் இலங்கை அருளி
ஆண்டு தன் சோதி புக்க அமரர் அரி ஏற்றினையே?–7-6-9
நெஞ்சமே,Nenjame - மனமே!
கடிய வினையே முயலும்,Kadiya vinaiye muyalum - மிகக் கொடிய பரஹிம்ஸா ரூபமான தீவினைகளிலேயே முயற்சி செய்பவனாய்
ஆண்,Aan - பௌருஷம் மிக்கவனாய்
திறல்,Thiral - வீர சூர பராக்ரமசாலியாய்
மீளி,Meeli - சிங்கம் போன்றவனாய்
மொய்ம்பின்,Moimpin - பெருமிடுக்கையுடையனான
அரக்கன்,Arakkan - இராவணனென்னும் ராக்ஷ்ஸனுடைய
குலத்தை,Kulaththai - குடும்பத்தை
தடிந்து,Tadindhu - தொலைத்திட்டு
மீண்டும்,Meendum - பின்னையும்
அவன் தம் பிக்கே,Avan tham pikke - அவனுடன் பிறந்தவனான விபீஷணழ்வானுக்கே
விங் நீர் இலங்கை அருளி,Ving neer ilankai aruli - கடலிடத்துள்ள லங்காராஜ்யத்தை யருள் செய்து
ஆண்டு,Aandu - அயோதயையி லெழுந்தருளி நெடுங்காலம் அரசு புரிந்து
தன் சோதி புக்க,Than sodhi pukka - தன்னடிச் சோதியான பரமபதத்திலே சென்று சேர்ந்த
அமரர் அரி ஏற்றினை,Amarar ari yattrinai - நித்யஸீரிநாதனான பெருமானை
காண்டும் கொல் ஒ,Kaandum kol o - காணப்பெறுவோமோ
3401திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (ஸ்ரீ ஆறாயிரப்படி -ஸ்ரீ நந்த கோப குமாரனாய் வந்து பிறந்து அருளி திண் கொள் அசுரரைத் தேய வளர்ந்து அருளி பந்தய ரூபேண போய்ப் புக்கு பிரதிகூலனான கம்சனை வஞ்சித்துக் கொன்று அருளி பின்னை பாண்டவர்களுக்காக தத் பிரதிகூலனான துரியோதனனையும்-குரூரமான அவனுடைய சேனையையும் நிஸ் சேஷமாக நசிப்பித்துப் பாண்டவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுத்து பின்னையும் அவர்களுக்கு ஒன்றும் செய்யாதானாய்த் திரு நாட்டிலே புக்கு அருளின பரம புருஷனே அந்த துஷ் ப்ராபமான திரு நாட்டை நமக்கும் தந்து அருளும் என்று தம் திரு உள்ளத்தை ஆஸ்வசிப்பிக்கிறார்.) 10
ஏற்றரு வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர்குலத்து
ஈற்றிளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு மாயங்களே இயற்றிக்
கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய்க் கொடுஞ்சேனை தடிந்து
ஆற்றல் மிக்கான் பெரிய பரஞ்சோதி புக்க அரியே.-7-6-10
ஈன்று இளபிள்ளை ஒன்று ஆய்,Eentru ilapillai ondru aay - அப்போது பிறந்து விலக்ஷ்ணமான பச்சைப் பசுங் குழந்தையாய்க்கொண்டு
ஆயர் குலத்து புக்கு,Aayar kulathu pukku - திருவாய்ப்பாடியிலே சென்று சேர்ந்து
மாயங்களே இயற்றி,Maayangalae iyarri - பல பல அற்புதச்செயல்களையே செய்து
கூற்று இயல் கஞ்சனை கொன்று,Kootru iyam kanjanai kondru - யமன் போன்ற கம்ஸனையும்; முடித்து (பிறகு)
ஐவர்க்கு ஆய்,Aivarukku aay - பஞ்ச பாலீண்டவர்களுக்குப் பகூபாதியாயிருந்குஷது
கொடு சேனை தடிந்து,Kodu senai tadindhu - கொடிய ப்ரதிபக்ஷ்ஸேனைகளை யழியச் செய்து
ஆற்றல் மிக்கான்,Aatral mikkaan - (இவ்வளவு செய்தும்) மிகுந்த நெஞ்சாறல் கொண்டவனாப
பெரிய பரம் சோதி புக்க அரி,Periya param sodhi pukka ari - பரமபதஞ் சென்று சேர்ந்த ஹரியான எம்பெருமான்
ஏற அருவைகுந்தத்தை,Aaru aruvai kundhaththai - எப்படிப்பட்டவர்களுக்குங் கிடைக்க வரிதான பரமபதத்தை
நமக்கு அருளும்,Namakku arulum - நமக்குத் தந்தருள்வன்.
3402திருவாய்மொழி || (7-6–பாமரு மூவுலகும்) (எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்.) (இத்திருவாய்மொழி கற்றார் மதிமுகமடந்தையர் லிரும்பிப் பல்லாண்டு பாடி ஸத்கரிக்கும்படியான பெருமையைப் பெறுவர்களென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிற பாசுரமிது.) 11
புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன் தன்னைக் குருகூர்ச் சட கோபன் சொன்ன
மிக்க ஒர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்வர் ஏழையரே.–7-6-11
அ அரி உரு ஆய புக்கு,A ari uru aaya pukku - அப்படிப்பட்ட சிங்க வடிவையுடையனாய்த் தோன்றி
அவுணன் உடல் கீண்டு உகந்த,Avunan udal keenndu ugandha - இரணியாசுரனுடைய உடலே இருபிளவாக்கித் திருவுள்ளமுகந்த
சக்கரம் செல்வன்,Chakkaram selvan - திருவாழியையுடைய திருமாலைக் குறித்து
குருகூர் சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வார் அருளிச் செய்த
மிக்க ஓர் ஆயிரத்துள்,Mikka or aayiraththul - மிகச் சிறந்த ஆயிரத்தினுள்ளே
இவை பத்தும் வல்லாரவரை,Ivai pattum vallaaravari - இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்களை
ஏழையா,Ezhaiya - திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்கள்
தொக்கு,Tokku - திரள் திரளாக விருந்து
பல்லாண்டு இசைத்து,Pallaandu isaithu - மங்களாசாஸனம் பண்ணி
கவரி செய்வர்,Kavari seyvar - சாமரை வீசுதல் முதலிய கிஞ்சி காரங்களைச் செய்பவர்கள்.
3403திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய திருக்கண்களிலிருந்து வந்து தன்னை நலிகின்றபடியைப் பேசுகிறாள்.) 1
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1
தோழியர்காள்,Thozhiyar kaal - தோழிமார்களே!
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
ஏழையர் ஆவி உண்ணும் இணை கூற்றம் கொலோ,Yezhaiyar aavi unnum inai kootram kolo - பெண் பிறந்தாருடைய உயிரை முடிக்கவல்ல இரண்டு ம்ருத்யுக்களோ இவை!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்; (அன்றியே)
ஆழி அம் கண்ணபிரான்,Aali am kannapiraan - கடல் வண்ணனான கண்ண பிரானுடைய
திரு கண்கள் கொலோ,Thiru kangal kolo - திருக்கண்கள்தானோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
தாமரை நாள் மலர் போல்,Thaamarai naal malar pol - அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலே
வந்து தோன்றும் கண்டீர்,Vandhu thondrum kandir - வந்து தோன்றா நின்றன காண்மின்;
துயராட்டியேன் என் செய்கேன்,Thuyar aatiyen en seyken - துயருறுகின்ற நான் (துயர் தீர்வதற்கு) என்ன செய்வேன்?
3404திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கண்ணழகு நலிந்தது போராமே மூக்கழகுன் நலியும்படியைச் சொல்லியழுகிறாள்.) 2
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர்! என்னை நீர் நலிந்து என்?
மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ அறியேன்
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு எனதாவி யுள்ளே
மாட்டிய வல் விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.–7-7-2
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை ஆட்டியும் தூற்றியும் நின்று,Ennai aattiyum thootriyum nindru - என்னை யலைத்தும் அலர் தூற்றியும் நின்று
நலிந்து என்,Nalinthu en - நலிகிறவிதனால் என்ன பலனுண்டு?
மாடு உயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ,Maadu uyar karbakathin vallio kolundho - (அக்கண்களின்) அருகே ஓங்கியிருப்பதொரு கற்பகத்தினுடைய கொடியோ கொழுந்தோ!
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு,Ettiya vennney undaan thirumukku - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது
எனது ஆவி உள்ளே,Enadhu aavi ullae - எனது நெஞ்சினுள்ளே
மாட்டிய,Maattiya - ஏற்றிய
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும்,Vaaliyadhu val vilakkin sudar aay nirkum - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது.
3405திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்) 3
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்?
கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன்
நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய்
ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3
வாலியது ஒர் கனி கொல்,Vaaliyadhu or kani kol - விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ?
வினையாட்டியேன் வல்வினை கொல்,Vinaiyaatien valvinai kol - இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ?
கோலம் திரள்,Kolam thirul - ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட
பவளம் கொழு துண்டம் கொலோ,Pavalam koludu thundam kolo - பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ?
அறியேன்,Ariyen - அறிகின்றேனில்லை;
நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான்,Neelam netu mugil pol thirumeni ammaan - சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது
தொண்டை வாய்,Thondai vaai - தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது
3406திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்.) 4
இன்னுயிர்க்கு ஏழையர் மேல் வளையும் இணை நீல விற்கொல்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலை கொல்?மதனன்
தன்னுயிர்த் தாதை கண்ணப் பெருமான் புருவம் மவையே
என்னுயிர் மேலனவாய் அடுகின்றன என்றும் நின்றே.–7-7-4
இன் உயிர்க்கு,In uyirkku - இனிமையான உயிரைக் கவர்வதற்காக
ஏழையர் மேல் வளையும்,Ezhaiyar mel valaiyum - பெண்பிறந்தார் மேலேதானே வளைந்து நலிவதான
நீலம் இணைவில் கொல்,Neelam inaivil kol - நீல நிறத்தையுடைய இரண்டு விற்களோ?
மன்னிய சீர் மதனன்,Manniya seer madanan - அழியாவழகடையனான மன்மதனுடைய
கரும்பு சிலை கொல்,Karumbu silai kol - கரும்பமயமான வில்தானோ?
ம நனன் தன் உயிர் தாதை கண்ணன் பெருமான்,Ma nanan than uyir thaathai kannan perumaan - மன்மதனுக்கு அபிமதனான் பிதாவாகிய கண்ணபிரானுடைய
புருவம் அவையே,Puruvam avaiye - அந்தத் திருப்புருவங்களே
என் உயிர் மேலன ஆய்,En uyir melana aay - எனது உயிரையே கணிசித்து
என்றும் நின்றே அடுகின்றன்,Endrum nindrae adukindran - என்றும் ஒருபடிப்பட நின்று நலியாநின்றன.
3407திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (எம்பெருமானுடைய புன்முறுவலின் அழகு வந்து நலிகிற படியைக் கூறுகின்றாள்.) 5
என்று நின்றே திகழும் செய்ய ஈன்சுடர் வெண் மின்னுக்கொல்?
அன்றிஎன் ஆவி அடும் அணி முத்தங்கொலோ? அறியேன்
குன்றம் எடுத்த பிரான் முறுவல் எனது ஆவி அடும்
ஒன்றும் அறிகின்றிலேன் அன்னைமீர்!எனக்கு உய்விடமே.–7-7-5
என்றும் நின்றே திகழும்,Endrum nindrae thigazhum - எப்போதும் ஒருபடிப்பட நின்று விளங்கும் தாய்
செய்ய சுடர் ஈன்,Seyya sudar een - சிவந்த சுடரை வெளிப்படுத்து மதான
வெண் மின் கொல்,Ven min kol - வெண்ணிறமான மின்னலோ!
அன்றி,Andri - அல்லது
என் ஆவி அடும் அணி முத்தம் கொலோ,En aavi adum ani muththam kolo - என்னுயிரை மாய்க்கின்ற அழகிய முத்துநிரையோ!;
அறியேன்,Ariyen - அறிகின்றிலேன்;
குன்றம் எடுத்த பிரான் முறுவல்,Kunram edutha piran muruval - கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்த பெருமானுடைய மந்த ஹாஸமானது
எனது ஆவி அடும்,Enadhu aavi adum - என் ஆத்மாவைத் தபியாநின்றது;
அன்னைமீர்,Annai meeer - தாய்மார்களே!
எனக்கு உய்வு இடம்,Enakku uyvu idam - நான் பிழைக்கு முபாயம்
ஒன்றும் அறிகின்றிலேன்,Ondrum arikindrilen - சிறிதும் அறிகிறேனில்லை.
3408திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள்.) 6
உய்விடம் ஏழையர்க்கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங்கி மகரம் தழைக்கும் தளிர் கொல்?
பைவிடப் பாம்பணையான் திருக் குண்டலக் காதுகளே
கைவிடல் ஒன்றும் இன்றி அடுகின்றன காண்மின்களே.–7-7-6
ஏழையாக்கும்,Ezhaiyaakkum - பெண்டுகளுக்கும்
அசுரர்க்கும் அரக்கர் கட்கும்,Asurarkkum arakkar kadkum - அஸூர ராக்ஷஸர்களுக்கும்
உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி,Uyvu idam evvidam endru ilangi - பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு
மகரம் தழைக்கும் தளிர்கொல்,Makaram thalaikkum thalir kol - மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ?
பை விடம் பாம்பு அணையான்,Pai vidam paampu anaiyaan - படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய
திரு குண்டலம்,Thiru kundalam - திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே
கைவிடல் ஒன்றும் இன்றி,Kaividal ondrum indri - ஒய்வில்லாமல் நிரந்தரமாக
அடுகின்றன,Adukindran - நலியாநின்றன;
காண்மின்கள்,Kaanmingal - காணுகோள்.
3409திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருநெற்றியினழகுவந்து நலிகிறபடியைச் சொல்லுகிறாள். அவ்வழகை எல்லார்க்கும் காட்டவேணுமென்றும், அதைக்கண்டு தான் படுகிற பாட்டை எல்லாரும் படவேணுமென்றும் இவளுக்கு ஆசையுள்ளது.) 7
காண்மின்கள் அன்னையார்காள்! என்று காட்டும் வகை அறியேன்!
நாண் மன்னு வெண் திங்கள் கொல்,நயந்தார்கட்கு நச்சிலை கொல்
சேண் மன்னு நால் தடந் தோள் பெருமான் தன் திரு நுதலே?
கோண் மன்னி ஆவி அடும் கொடியேன் உயிர் கோளிழைத்தே.–7-7-7
அன்னையர் காள காண்மின்கள் என்று,Annaiyar kaala kaanmingal endru - தாய்மார்களே! காணுங்கோள் என்று சொல்லி
காட்டும் வகை அறியேன்,Kaattum vakai arien - (உங்களுக்குக்) காட்டும் வித மறிகின்றிலேன்;
நாள் மன்னு வெண் திங்கள் கொல்,Naal mannu ven thingal kol - பூர்வ பக்ஷ்த்து அஷ்டமீசந்திரனோ!
நயந்தார் கட்கு நஞ்சு இலை கொல்,Nayanthar kadku nanju ilai kol - ஆசைப்பட்டவர்களுக்கு நஞ்சாயிருப்பதொரு இல்லையோ!
சண் மன்னுநால் தட தோள் பெருமான் தன்,Shan mannunaal thada thol perumaan than - உயர்த்தி பொருந்திய நான்கு பருத்த திருத்தோள்களையுடைய எம்பெருமானது
திரு நுதலே,Thiru nuthale - திரு நெற்றியே
கோள் மன்னி,Kol manni - மிடுக்குப் பொருத்தி
கொடியேன் உயிர் கோள் இழைத்து,Kodiyaen uyir kol izhaithu - பாவியான வென்னுடைய பிராணனே முடிக்கையிலே துணிந்து
ஆவி அடும்,Aavi adum - என் ஆத்மாவை நலியாநின்றது.
3410திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (கீழே ஏழு பாட்டுக்கள் கடந்தன. அவ்வேழு பாட்டுக்களிலும் ஏழு அவயவங்கள் நலிந்தன்மை சொல்லிற்று. அவையெல்லாம் திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் சேர்ந்து திருமுகமண்டலமென்று பேர் பெற்று நலிகிறபடியைச் சொல்லுகிறாளிப் பாட்டில்.) 8
கோளிழைத் தாமரையும் கொடியும் பவளமும் வில்லும்
கோளிழைத் தண் முத்தமும் தளிரும் குளிர் வான் பிறையும்
கோளிழை யாவுடைய கொழுஞ்சோதி வட்டங்கொல்? கண்ணன்
கோளிழை வாண் முகமாய்க் கொடியேன் உயிர் கொள்கின்றதே.–7-7-8
கோள் இழை தாமரையும்,Kol izhai thaamaraiyum - தன்னுடைய வொளியே தனக்கு ஆபரணமானகப் போரும்படியான தாமரையும் (திருக்கண்களும்)
கொடியும்,Kodiyum - கற்பகக் கொடியும் (திருமூக்கும்)
பவளமும்,Pavalamum - பவளமும் (திருவதரமும்)
வில்லும்,Villum - வில்லும் (திருப்புருவங்களும்)
கோள் இழைதண்முத்தமும்,Kol izhaidhan muththamum - தன்னுடைய தேஜஸஸையே தனக்கு ஆபரணமாகவுடைத்தும் (தந்தபங்க்தியும்)
தளிரும்,Thalirum - தளிரும் (திருக்காதும்)
குளிர் வான் பிறையும்,Kulir vaan piraiyum - குளிர்ந்து பெருத்த பிறையும் (நெற்றியும்) ஆகிய இவற்றோடே கூடி
கோள் இழையா உடைய,Kol izhaiya udaiya - தன்னழகே தனக்கு ஆபரணமாயிருக்கிற
கொழு சோதி வட்டம் கொல்,Kol sothi vattam kol - பூர்ணமான ஜ்யோதிர் மண்டலஸீஉலீ!
கண்ணன்,Kannan - கண்ணபிரானது
கோள் இழை வாள் முகம் ஆய்,Kol izhai vaal mukam aay - தன்னொளிதானே தனக்காபரணமான அழகிய முகமென்றொரு வியாஜத்தையிட்டு
கொடியேன் உயிர் கொள் கின்றது,Kodiyaen uyir kol kindradhu - கொடியேனான வென்னுடைய உயிரைக் கொள்ளை கொள்ளாநின்றது
3411திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருக்கழல் வந்து நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 9
கொள்கின்ற கோள் இருளைச் சுகிர்ந்திட்ட கொழுஞ் சுருளின்
உள் கொண்ட நீல நன்னூல் தழைகொல்?அன்று மாயன் குழல்
விள்கின்ற பூந் தண் துழாய் விரை நாற வந்து என்னுயிரைக்
கள்கின்றவாறு அறியீர் அன்னைமீர்!கழறா நிற்றிரே.–7-7-9
கொள்கின்ற கோள் இருளை,Kolkindra kol irulai - உலகத்தை யெல்லாம் வியாபிக்கின்ற மிடுக்கையுடைய இருளை
சுகிர்ந்திட்ட கொழு சுருளின்,Sukirnditta kolu surulin - பன்னிப் பன்னிச் சுருட்டப்பெற்ற சிறந்தவொரு சுருளினுடைய
உள் கொண்ட நீலம் நல்நூல் தழை கொல்,Ul konda neelam nalnul thazhai kol - (கையழுக்குப்படாமல்) உள்ளே நூற்கப்பட்ட நீல நிறத்தையுடைய அழகிய நூல்திரளோ!
அன்று,Andru - அதுவென்று, அதுவன்று; திருக்குழல் கற்றை என்றிவ்வளவே சொல்லத்தகுமத்தனை; (அத்திருக்குழலானது)
விள்கின்ற பூ தண்துழாய் விரை நாறவந்து,Vilkindra poo thandhulai virai naaravandhu - அலர்ந்தழகிய குளிர்ந்த திருத்துழாயின் பரிமளம் வீசும்படிவந்து
என்; உயிரை,En uyirai - என் ஆத்மாவை
கள்கின்ற ஆறு,Kalkindra aaru - கொள்ளை கொள்ளும் விதந்தை
அன்னைமீர் அறியீர்,Annaimeer ariyeer - தாய்மார்களே! நீங்கள் அறிகிறீர்களில்லை;
கழறா நிற்றிர்,Kalaraa nittrir - வீணாக் ஏதேனுமொன்றைச் சொல்லிப் பொடிகின்றீர்களே!
3412திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது. இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள். இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.) 10
நிற்றி முற்றத்துள் என்று நெரித் தகையராய் என்னை நீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர் சுடர்ச்சோதி மணி நிறமாய்
முற்ற இம் மூவுலகும் விரிகின்ற சுடர்முடிக்கே
ஒற்றுமை கொண்டது உள்ளம் அன்னைமீர்!நசை என் நுங்கட்கே?–7-7-10
அன்னை மீர்,Annaimeer - தாய்மார்களே!
நீர்,Neer - நீங்கள்
என்னை,Ennai - என்னைக் குறித்து
முற்றத்துள்,Mutrathul - (பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி
நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும்,Neritha kaiyar aai suttriyum soozhandhum - கையை நேரித்துக் கொண்டு
வைதிர்,Vaidhir - நிந்திக்கின்றீர்கள்;
சுடர் சோதி மணி நிறம் ஆய்,Sudar sothi mani niram aai - சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு
இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற,Im moovulagu mutravum virikindra - உலகமடங்கலும் வியாபிக்கிற
சுடர்,Sudar - தேஜஸ்ஸையுடைத்தான
முடிக்கே,Mudikke - திருவபிஷேகத்தின் பக்கலிலேயே
உள்ளம் ஒற்றுமை கொண்டது,Ullam otrimai kondadhu - எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது;
நுங்கட்கு நசை என்,Nungatku nasai en - இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான்.
3413திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11
கட்கு அரிய,Katku ariya - மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத
பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு,Piraman sivan indiran endra ivarkku - பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய
கட்கும் அரிய,Katkum ariya - கண்ணுக்கும் காணவர்யனான
கண்ணனை,Kannanai - எம்பெருமானைக் குறித்து
குருகூர்சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த
உட்கு உடை ஆயிரத்துள்,Udkku udai aayirathul - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே
இவையும் ஒரு பத்தும் வல்லார்,Ivaiyum oru pathum vallaar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும்,Udkku udai vaanavarodu utan aai endrum - ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய்
மாயார்,Maayaar - ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள்
3414திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1
மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1
மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே!
வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே!
மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே!
நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்;
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய்
தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய்
மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய்
மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய்
முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய்
நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள்
என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ!
3415திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்) 2
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2
அம் கள் மலர் தண்துழாய் முடி,Am kal malar thandhulai mudi - அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய
அச்சுதனே,Achuthaney - எம்பெருமானே!
அருளாய் நீ,Arulaai nee - அருளிச்செய்யவேணும்;
திங்களும் ஞாயிறும ஆய்,Thingalum nyaayirum aai - சந்திரனும் ஸூர்யனுமாயும்
செழு பல் சுடர் ஆய்,Sezhu pal sudar aai - லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும்
இருள் ஆய்,Irul aai - இருளாயும்
பொங்கு பொழி மழை ஆய்,Pongu pozhi mazhai aai - பொங்கிப் பொழியும் மழையாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்
பின்னும்,Pinnum - இன்னமும்
வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை,Vem kan vem kutramum aai ivai - க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள்
என்ன விசித்திரம்,Enna visithiram - என்ன வேடிக்கை களோ!
3416திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே; மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார்.) 3
சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய்
எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும்
ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய்
வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3
சித்திரம்,Siththiram - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே!
தேர் வலவா திரு சக்கரத் தாய்,Ther valavaa thiru sakkarath thaai - திருவாழிப்படையை யடையவனே!
அருளாய்,Arulaai - நீயருளிச் செய்ய வேணும்;
எத்தனை ஓர் உகமும் அவை ஆய்,Eththanai or ugamum avai aai - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய்
அவற்றுள் இயலும்,Avatrul iyalum - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய்
ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய்,Oththa viya onpal ulappu illana porul aai - ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய்
வித்தகத்தால் நீ நிற்றி,Viththagathaal nee nittri - ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்;
இவை என்ன விடமங்கள்,Ivai enna vidamanghal - இவை யென்ன சேராச்சேர்த்திகளோ!
3417திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (முதன் முதலிலே தம்மை விசேஷ கடாக்ஷம் பண்ணி இவ்வளவு அதிகாரத்திலே கொண்டு நிறுத்தினவை திருக்கண்களேயன்றோ; “பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர்ப்ண்டரீகம் நம்மே லொருங்கே பிறழைவைத்தார் இவ்வகாலம்” (திருவிருத்தம்) என்று தாமே யருளிச்செய்து வைத்தாரே. அப்படிப்பட்ட திருக்கண்ணழகிலே யீடுபட்டுப் பேசுகிறார்.) 4
கள்ளவிழ் தாமரைக் கண் கண்ணனே!எனக்கு ஒன்று அருளாய்
உள்ளதும் இல்லதுமாய் உலப்பில்லனவாய் வியவாய்
வெள்ளத் தடங்கடலுள் விட நாகணை மேன் மருவி
உள்ளப் பல்யோகு செய்தி இவை என்ன உபாயங்களே!–7-8-4
கள் அவிழ் தாமரை கண் கண்ணனே,Kal avizh thaamarai kan kannaney - மதுவொழுகுகின்ற கண்களையுடைய கண்ணபிரானே!
எனக்கு ஒன்று அருளாய்,Enakku ondru arulaai - அடியேனுக்கு இவ்விஷயமொன்று அருளிச்செய்ய வேணும்;
உள்ளதும் இல்லதும் ஆய் உலப்பு இல்லன ஆய் விய ஆய்,Ulladhum illadhum aai ulappu illana aai viya aai - நித்யமாகையாலே உள்ளதுமாய் வேறு அவஸ்தையையடைகையாலே இல்லாததுமான எண்ணிறந்தவையுமான வேறு வேறு வகைப்பட்ட சேதநாசேதநப் பொருள்களுக்கு நிர்வாஹகனாய்
வெள்ளம் தட கடலுள்,Vellam tada kadalul - விசாலமான திருப்பாற்கடல் வெள்ளத்திலே
விடம் நாகணை மேல் மருவி,Vidam naaganai mel maruvi - (விரோதிகள்) அணுக வொண்ணுமைக்காக, விஷத்தை உமிழ்கிற திருவனந்தாழ்வானாகிறபடுக்கையிலே பொருந்தி
உள்ளம்,Ullam - திருவுள்ளத்திலே
பல் யோரு செய்தி,Pal yoru seidhi - பலவகைப்பட்ட ரக்ஷிணோபாயங்களைச் சிந்தியாநின்றாய்;
இவை என்ன உபாயங்களே,Ivai enna upayanghale - இவையென்ன விரகுகள்!
3418திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி வைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.) 5
பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ
வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய்
காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ
மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5
வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே,Vaasam malar thandhulai mudi maayavaney - நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!,
நீ,Nee - இப்படிப்பட்ட நீ,
என்னை பாசங்கள் நீக்கி,Ennai paasangal neekki - எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து
உனக்கே அற கொண்டிட்டு,Unakke arak kondittu - உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து
காயமும் சீவனும்,Kaayamum seevanum - பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்
கழிவு பிறப்பு ஆய்,Kazhivu pirappu aai - இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,
பின்னும்,Pinnum - பின்னையும்
நீ மாயங்கள் செய்து வைத்தி,Nee maayanghal seydhu vaiththi - அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்;
இவை என்ன மயக்குக்கள்,Ivai enna mayakkukal - இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன!
அருளாய்,Arulaai - அருளிச்செய்ய வேணும்.
3419திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ராமக சேஷ்டிதங்களை யுடைய வாமனனான நீ விஸ்ம்ருதியாதி விசித்ரனாய்க் கொண்டு பண்ணுகிற கிலேசங்கள் என்னாய் இருக்கின்றன -என்கிறார்.) 6
மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய்
அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய்
வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ
துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6
மயக்கா,Mayakkaa - எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே!
வாமனனே,Vaamananey - (அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே!
மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,Madhi aam vannam ondru arulaai - எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்;
துயர்ப்பு தேற்றமும் ஆய்,Thuyarppu thetramum aai - மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய்
அழல் குளிர் ஆய்,Azhal kulir aai - தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய்
வியவு வியப்பு ஆய்,Viyavu viyappu aai - விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய்
வென்றிகள் ஆய்,Vendrigal aai - (உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய்
வினை பயன் ஆய்,Vinai payan aai - புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய்
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
துயக்கு நீ ஆய,Thuyakku nee aai - இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய்
நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள்
என்ன துயரங்கள்,Enna thuyaranghal - என்ன கஷ்டங்களாயிருக்கின்றன!
3420திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணா! என்று எம்பெருமானை விளிக்கின்றார்) 7
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய்
துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த்
துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த்
துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7
துயரங்கள் செய்யும் கண்ணா!,Thuyaranghal seyyum kanna! - துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே!
சுடர் நீள் முடியாய்,Sudar neel mudiyai - ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே!
துயரம் செய்,Thuyaram sei - துக்கத்தை விளைக்கிற
மானங்கள் ஆய்,Maanangal aai - பலவகைப்பட்ட துரபிமானங்களாய்
மதன் ஆகி,Madan aagi - செருக்குமாய்
உகவைகள் ஆய்,Ugavaigal aai - ப்ரீதிகளுமாய்
துயரம் செய் காமங்கள் ஆய்,Thuyaram sei kaamangal aai - துக்கங்களை விளைக்கிற காமங்களாய்
துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,Thulai aai nilai aai nadai aai - பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய்
துயரங்கள் செய்து வைத்தி,Thuyaranghal seydhu vaiththi - (இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்;
இவை என்ன சுண்டாயங்கள்,Ivai enna sundhaayangal - இவை என்ன விளையாட்டுக்களோ!
அருளாய்,Arulaai - அருளிச்செய்யவேணும்.
3421திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென் ” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் ” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.)(என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார்.) 8
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8
ன்னை ஆளும் கண்ணா,,Nnai aalum kanna, - என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே!
என்ன சுண்டாயங்களால்,Enna sundhaayangalal - என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்!
நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று,Ninriṭṭaai innadhu or thanmaiyai endru - இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ
உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை,Unnai yaavarkkum thetra ariyai - ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்;
முன்னைய மூவுலகும் அவை ஆய்,Munnaiya moovulagamum avai aai - நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
அவற்றை படைத்து,Avatrai padaiththu - அவற்றை ஸ்ருஷ்டித்து
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
உள் ஆய் புறத்தாய்,Ul aai puraththaa - உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே!
இவை என்ன இயற்கைகள்,Ivai enna iyarkaihal - இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!,
3422திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஞான இந்திரியங்களும் கர்ம இந்திரியங்களும் சப்தாதி விஷயங்களும் அவனுக்கு விபூதியாய் இருக்கும் இருப்பை அனுசந்திக்கிறார்.) 9
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9
என் கண்ணா,En kannaa - எனது கண்ண பிரானே!
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய்,Enna iyarkaihalal enggane ninriṭṭaai - என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்;
துன்னு கரம் சரணம் முதல் ஆக,Thunnu karam saranam mudhal aaka - நெருங்கிய கரசரணாதிகளான
எல்லா உறுப்பும்,Ellaa uruppum - எல்லாக்கரணங்களும்
உன்னு,Unnu - விரும்பத்தக்க
சுவை ஒளி ஊறு நாற்றம் முற்றும் நீயே,Suvai oli ooru naatram muttrum neeye - ரஸம் ரூபம் ஸ்பர்சம் சப்தம் கந்தம் இவையாகிற ஸகல விஷயங்களும் நீயே;
உன்னை உணர உறில்,Unnai unara uril - இப்படிப்பட்ட வுன்னை நிரூபிக்க நினைக்கில்
நுணுக்கங்கள் உலப்பு இல்லை,Nunukkangal ulappu illai - உன்னுடைய நுட்பத்திற்கு முடிவில்லை.
3423திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -வேதைக சமைதி கம்யனாய்-காரணமாய் -அதி ஸூஷ்மமாய் இருந்துள்ள சேதன அசேதனங்களை விபூதியாக உடையவனுடைய இருப்பை அனுசந்திக்கிறார்.) 10
இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம்
தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே
அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே!
வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10
இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம்,Idanil piridhu nunukkangal illai ennum vannam - இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி
தொல்லை நல்நூலில் சொன்ன,Tollai nalnulil sonna - அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட
உருவும் அருவும் நீயே,Uruvum aruvum neeye - அசித்தும் சித்தும் நீயே;
அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே,Alli thulai alangkal ani maarba en achuthaney - பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே!
வல்லது ஒர் வண்ணம் சொன்னால்,Valladhu or vannam sonnaal - கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும்
உனக்கு அதுவே வண்ணம் ஆம்,Unakku adhuve vannam aam - சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம்
3424திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் ஒருவராலும் ஒரு வகையும் அறிய ஒண்ணாத சர்வேஸ்வரனை உள்ளபடியே அறிந்து அங்குத்தைக்கு சத்ருசமாக ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரம் திருவாய் மொழியிலும் இத் திருவாய் மொழியை யதா சக்தி சொல்லுமவர்கள் என்றைக்கும் க்ருதக்ருத்யர் என்கிறார். ஆம் வண்ண ஒண் தமிழ் ஆவது –நல்ல சந்தஸ் ஸை யுடைத்தான அழகிய தமிழ் என்றுமாம்.) 11
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம் வண்ண த்தால் குரு கூர்ச் சடகோபன் அறிந்து உரை த்த
ஆம் வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப் பத்தும்
ஆம் வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.–7-8-11
ஆம் வண்ணம் இன்னது ஒன்று என்று,Aam vannam innadhu ondru endru - இன்னபடிப் பட்டிருப்பதொரு ஸ்வபாவ மென்று
அறிவது அரிய அரியை,Arivathu ariya ariyai - (ஒருவராலும்) அறிய முடியாத ஸர்வேச்வரனை
குருகூர் சட கோபன்,Kurukoor Sadagopan - நம்மாழ்வார்
ஆம் வண்ணத்தால் அறிந்து உரைத்த,Aam vannathaal arinthu uraittha - உள்ளபடியறிந்து அருளிச் செய்த
ஆம் வண்ணம் ஒண்தமிழ்கள் இவை ஆயிரத்துள்,Aam vannam ondhthamizhal ivai aayirathul - தகுதியான சந்தஸ்ஸையுடைய அழகிய தமிழினாலான இவ்வாயிரத்துள்
பத்தும்,Pathum - இப்பதிகத்தை
ஆம் வண்ணத்தால் உரைப்பார்,Aam vannathaal uraippaar - இயன்றவளவு சொல்ல வல்லவர்கள்;.
என்றைக்கும்,Endraikkum - ஆத்மாவுள்ளவரைக்கும்
தமக்கு அமைந்தார்,Thamakku amaindhaar - க்ருதக்ருத்யர்கள்.
3425திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.) 1
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1
என்னை,Ennai - நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை
என்றைக்கும்,Endraikkum - முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே)
போகிய அன்றைக்கு அன்று,Pogiya andraikku andru - நிகழ்கின்ற நாள்தோறும்
உய்யக் கொண்டு,Uyyaik kondru - விசேஷ கடாஹஷம் பண்ணி
என்னை தன் ஆக்கி,Ennai than aakki - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி
என்னால்,Ennaal - என்னை உபகரணமாகக் கொண்டு
தன்னை,Thannai - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக
இன் தமிழ் பாடிய,In thamizh paadiya - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற
ஈசனே,Eesaney - ஸ்வாமியாய
ஆதி ஆய் நின்றஎன் சோதியை,Aadhi aai ninra en sothiyai - இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து
என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எத்தைச் சொல்லித் தரிப்பேன்!
3426திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார்.) 2
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2
என் இன் உயிர்,En in uyir - என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது
இன்று ஒன்று ஆய்,Indru ondru aai - இன்று தனக்கொரு வஸ்துவாத,
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து,En sollaal yaan sonna in kavi enpiththu - என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி
தன் சொல்லால்,Than sollaal - தன்னுடைய உக்திகளாலே
தான் தன்னை கீர்த்தித்த,Thaan thannai keerthitha - தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய்
என் முன் சொல்லும் மாயன்,En mun sollum maayan - எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய்
மூ உரு ஆம் முதல்வன்,Moo uru aam mudhalvan - த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக்
என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எதைச் சொல்லித் தரிப்பேன்?
3427திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அன்பர்களுக்காக என்னைக்கொண்டு தான் தன்னைக் கவிபாடின மஹோபகாரனை ஒரு நாளாவது மறக்கப்போமோ வென்கிறார்.) 3
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வத்து புகுந்து நல் இன்கவி
தூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3
இவன் முதல்வன் ஆம் என்று,Iwan mudhalvan aam endru - குருகூர்ச்சடகோபனாகிய இவன் ப்ரபந்த ஜநகூடஸ்தானகக் கடவன்’ என்று திருவுள்ளம் பற்றி
தன் தேற்றி,Than thetri - தன் விஷயமான தெளிவை எனக்குப் பிறப்பித்து
என் நா முதல் வந்து புகுந்து,En naa mudhal vandhu pugundhu - என்னுடைய நாவிலே தானே வந்து புகுந்து
நல் இன் கவி,Nal in kavi - பரம போக்யமான சொல் தொடைகளை
தூ முதல் பத்தர்க்கு,Thoo mudhal patharkku - முமுக்ஷூக்களுக்கு அநுபவிக்கலாம்படி
தான் தன்னை சொன்ன,Thaan thannai sonna - தானே தன்னைப் பாடின
என் வாய் முதல் அப்பனே,En vaai mudhal appanai - என் வாக்குக்கு முதல்வானான மஹோபகாரகனை
என்று மறப்பனோ,Endru marappano - என்றைக்காவது மறப்பேனா? (ஒரு நாளும் மறக்கமாட்டேன்.)
3428திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.) 4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4
என் ஆகியே,En aagiyae - எனனைக் கொண்டே
தப்புதல் இன்றி,Thapputhal indri - ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி
தனை தான் கவி சொல்லி,Thanai thaan kavi solli - ஒப்பற்ற பாபியான என்னை
உய்ய கொண்டு,Uyya kondu - உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
செப்பமே செய்து திரிகின்ற,Seppamae seydhu thirikingira - எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற
சீர்கண்டு,Seerkandu - சீலத்தைக் கண்டு வைத்து
அப்பனை என்று மறப்பன்,Appanai endru marappan - அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ?
3429திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தன்னைக் கவிபாடுகைக்குத் தக்க ஆற்றலும் ஆசையுமில்லாதிருந்த வென்னைக்கொண்டு, உலகமெல்லாங் கொண்டாடும்படியான பாசுரங்களைப் பாடுவித்துக் கொண்டானே! என்ன ஸர்வேச்வரனோ வென்கிறார்.) 5
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வுஇலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.–7-9-5
சீர் கண்டு கொண்டு,Seer kandu kondu - பகவத்குணங்களை அவகாஹித்து
திருந்து நல்இன் கவி,Thirundhu nalin kavi - திருத்தமுற்று விலக்ஷ்ணமாய் மதுரமான பாசுரங்களை
யான் நேர்படசொல்லும் நீர்மை இலாமையில்,Yaan naerpadachollum neermai ilaamaiyil - நேர்த்தியாகப் பாடுகைக்குரிய சக்தி எனக்கில்லாமையாலே
ஏர்வு இலா என்னை தன்னாக்கி,Aervu ilaa ennai thannaakki - தகுதியற்ற வென்னைத் தன்னோடொக்கக் கடாக்ஷித்து
என்னால்,Ennaal - அப்படி கடாக்ஷிக்கப் பெற்ற அடியேனைக் கொண்டு
தன்னை,Thannai - தன் விஷயமாக
பார் பரவு இன் கவிபாடும் பமர்,Paar paravu in kavi paadum pamara - நிலவுலகம் முழுதும் கொண்டாடும்படி யான இனிய பாசுரங்களைப்பாடும்; பரமபுருஷராயிரா நின்றார்!
3430திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே; வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும் முதலாழ்வார்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.) 6
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6
என் வைகுந்த நாதன்,En vaikuntha naadhan - பரமபதநாதனை எம்பெருமான்
இன் கவி பாடும் பரம கவிகளால்,In kavi paadum parama kavigalal - மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு
தன் கவி தான் தன்னை பாடுவியாது,Than kavi thaan thannai paaduviyadhu - தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல்
இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி,Indru nanku vandhu en udan aakki - இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு
என்னுல்,Ennul - என் வாயிலாக
தன்னை வன் கவிபாடும்,Thannai van kavi paadum - தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!.
3431திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.) 7
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7
வைகுந்தநாதன்,Vaikunthanadhan - பரமபதநாதனை எம்பெருமான்
என் வல்வினை மாய்ந்து அற,En valvinai maayndhu ara - என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய்
குந்தன்,Kunthan - (அதனால்) பரிசுத்தி பெற்றவனாய்
தன்னை என் ஆன்கி,Thannai en aanki - என்னேடு ஒரு நீராகக்கலந்து
என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ,Ennul thannai vaikunthan aaga pugazha - என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி
வண் தீம் கவி,Van deem kavi - உதாரமதுரங்களான பாசுரங்களை
செய் குந்தன் தன்னை,Sei kunthan thannai - செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை
சிந்தித்து எந்நாள் ஆர்வன்,Sindhiththu ennal aarvan - அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது?
3432திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு திருவாய்மொழி பாடுவித்துக்கொண்ட இந்த மஹா குணத்திற்கு உபயவிபூதியிலுமுள்ளாருடைய சக்தியையும் வாக்கு முதலிய உபகரணங்களையும் நானொருவனே பெற்று அநுபவித்தாலும் த்ருப்திபெறமாட்டேனென்கிறார்.) 8
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்
பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்
ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்
சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8
ஏர்வு இலா என்னை தன் ஆக்கி என்னுல்,Aervu ilaa ennai than aakki ennull - தகுதியற்ற வென்னைத் தன்னேடொக்கவருள் செய்து
தன்னை சீர்பெற இன் கவி சொன்ன திறத்துக்கு,Thannai seerperra in kavi sonna thiraththukku - என்னையிட்டுத் தன் விஷயத்தில் சிறப்புண்டாம்படி இனிய பாசுரங்களைச் சொன்னபடிக்கு
ஆழி அம் கை எம்பிரான் புகழ்,Aazhi am kai emperaan pugazh - சக்ரபாணியான அந்த எம்பெருமானுடைய திருப்புகழை
பார்விண் நீர் முற்றும் கலந்து பருகினும் ஆர்வனே,Paarvin neer muttrum kalandhu paruginum aarvaney - மண்ணிலுள்ளாரும் கூறிராப்தியிலுள்ளாரும் ஒன்று சேர்ந்து புகழ நேர்ந்தாலும் நான் திருப்தியடைவேனே?
3433திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.) 9
திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர்
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ?
மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை
உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9
மறப்பு இலா என்னை,Marappu ilaa ennai - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை
தன் ஆக்கி,Than aakki - தன்னோடொக்க வீஷயீகரித்து
என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு,Ennala thannai urpala inna sonna uthavikku - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு,
திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர்,Thiraththukku aai thupparavu aam thirumaalin seer - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை
இறப்பு எதிர் காலம்,Irappu edhir kaalham - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு
பருகிலும்,Paruginum - அநுபவித்தாலும்
ஆர்வனோ,Aarvano - பர்யாப்தி பெறுவேனோ?
3434திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.) 10
உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில்
அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப்
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு
எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10
உதவி கைம்மாறு,Uthavi kaimmaaru - திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம்
என்உயிர் என்னவுற்று எண்ணில்,En uyir ennavuṟṟu eṇṇil - என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால்
அதுவும் அவன் தன்னது,Adhuvum avan thannadhu - அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது;
என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,Ennala thannai padaviy in kavi paadiya appanukku - (ஆனபின்பு) என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு
இங்கும் அங்கும்,Ingum angum - உபயவிபூதியிலும்
செய்வது,Seyvathu - செய்யக்கூடிய கைம்மாறு
எதுவும் ஒன்றும் இல்லை,Edhuvum ondru illai - மிக அற்பமானதுமில்லை.
3435திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு
அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்
இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து
எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11
இங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும்
திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு
அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார்
இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த
ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம்
எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும்
இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும்.
3436திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார்.) 1
இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை
இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான்
அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை
அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1
எழில் மலர் மாதரும் தானும்,Ezhil malar maadharum thaanum - அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும்
இன்பம் பயக்க,Inbam payakka - பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக
இனிது உடன் வீற்றிருந்து,Inidhu udan veetrirundhu - இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து
இ ஏழ் உலகை,I ezh ulagai - இவ்வுலகங்களையெல்லாம்
இன்பம் பயக்க ஆள்கின்ற,Inbam payakka aalkindra - இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற
எங்கள் பிரான்,Engal piraan - எம்பெருமான்
அன்புற்று அமர்ந்து உறைகின்ற,Anputru amarnthu uraignra - மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற
அணி பொழில் சூழ்திருவாறன் விளை,Ani pozhil soozhthiruvaaran vilai - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை
அன்புற்று அமர்ந்து,Anputru amarnthu - அன்போடு பொருந்தி
வலஞ் செய்து,Valanj seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழும் நாள்களும் ஆகும் கொல்,Kai thozhum naalgalum aakum kol - கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ?
3437திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் விலக்ஷண நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார்.) 2
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2
ஜயம் ஒன்று இன்றி ஆகும் கொல்,Jayam ondrum indri aakum kol - (நமது மநோரதம்) நிஸ்ஸந்தேஹமாக ஸித்திக்குமோ?
அகல் இடம் முற்றவும்,Akal idam mutravum - விஸ்தீர்ணமான உலகங்களெல்லாம்
ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த,Eer adiye aakum parisum nimirndha - இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின
திரு குறள் அப்பன்,Thiru kural appan - ஸ்ரீவாமனமூர்த்தி
அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - விரும்பி வர்த்திக்குமிடமாய்,
மாகம் திகழ்,Maagam thigazh - பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற
கொடி மாடங்கள் நீடு மதிள்,Kodi maadangal needu madil - கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான
திருவாறன் விளை மா கந்தம் நீர் கொண்டு தூவி,Thiruvaaran vilai maa kandham neer kondu thoovi - சிறந்த பரிமளம் பொருந்திய தீர்த்தத்தைக்கொண்டு தூவி
வலம் செய்து,Valam seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழ கூடும் கொல்,Kai thozhu koodum kol - அஞ்ஜலிபண்ணி நேருமோ?
3438திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் எம்பெருமான் திருவடி மேலே நீ ஏறி அருளி இங்கே எழுந்து அருளக் கண்டாலும் அதனைத் தவிர்ந்து நாள் தோறும் திருவாறன் விளையை தொழக் கூட வற்றே என்கிறார்.) 3
கூடுங்கொல்? வைகலும் கோவிந்தனை மதுசூதனைக் கோளரியை
ஆடு பறவை மிசைக்கண்டு கைதொழுது அன்றி யவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை வேள்வி யைந்து ஆறங்கம் பன்னினர் வாழ்
நீடு பொழில்திரு வாறன் விளை தொழ வாய்க்குங்கொல் நிச்சலுமே?–7-10-3
வைகலும் கூடும் கொல்,Vaikalum koodum kol - (நமது மநொரதம்) எப்போதும் நிறைவேறப்பெறுமோ?
கோவிந்தனை,Govindhanai - ஆயர்தலைவனும்
மதுசூதனை,Madhusoothanai - மதுகைடபஹந்தாவும்
ஆடு பறவை மிசை கண்டு,Aadu paravai misai kandu - வெற்றியையுடைய கருடன் மேலே கண்டு
கைதொழுது,Kai thozhuthu - அஞ்ஜலிபண்ணி அவ்வளவேயல்லாமல்
அவன் உறையும்,Avan uraiyum - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமாய்,
பாடும் பெரு புகழ் நால் மறை ஜந்து வேள்வி ஆறு அங்கம் பன்னினர்வாழ்,Paadum peru pugazh naal mazhai jandhu vaelvi aaru angam panninarvaaz - உரக்கப்பாடப்படுகிற மிக்க புகழையுடைய நான்கு வேதங்களென்ன, பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன, சீவீக்ஷி முதலான ஆறங்கங்களென்ன இவற்றிலே மிக்க பரிசய முள்ளவர்கள் வாழுமிடமாய்
நீடு பொழில்,Needu pozhil - பெரிய சோலைகளையுடையதான
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியை
நிச்சலும் தொழ வாய்க்கும் கொல்,Nichchalam thozha vaaykkum kol - எப்போதும் தொழுது கொண்டேயிருக்கும் படியான பாக்கியம் வாய்க்குமோ?
3439திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக; அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார்.) 4
வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத் தீங்கு நினைக்கப் பெற
வாய்க்குங் கரும்பும் பெருஞ்செந்நெலும் வயல் சூழ் திரு வாறன்விளை
வாய்க்கும் பெரும்புகழ் மூவுலகீசன் வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான் தன் மலரடிப் போதுகளே?–7-10-4
வாய்க்கும் கரும்பும் பெரு செந்நெலும் வயல் சூழ்,Vaaykkum karumpum peru chennelum vayal soozh - செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறன் விளைப்பதியிலே,
வாய்க்கும் பெரு புகழ்,Vaaykkum peru pugazh - வாய்ந்த மிக்க கீர்த்தியையுடையவனும்
மூ உலகு ஈசன்,Moo ulagu eesan - மூவுலங்களுக்கும் ஸ்வாமியும்
வட மதுரை பிறந்த,Vada madurai pirandha - வடமதுரையில் அவதரித்தவனும்
வாய்க்கும் மணி நிறம்,Vaaykkum mani niram - அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தையுடையனுமான
கண்ண பிரான் தன்,Kanna piraan than - ஸ்ரீ க்ருஷ்ணபகவானுடைய
மலர் அடி போதுகள்,Malar adi pothugal - விதஸிதமான திருவடித்தாமரைகளை
எப்பொழுதும்,Eppozhudhum - இடை வீடின்றி
ஈங்கு மனத்து நினைக்க பெற,Eengu manaththu ninaikka perra - இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு
நிச்சலும் வாய்க்கும் கொல்,Nichchalam vaaykkum kol - எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ?
3440திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார்.) 5
மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப்
பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்
மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5
மலர் அடி போதுகள்,Malar adi pothugal - பரமபோக்யமான திருவடித்தாமரைகளை
என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி,En nenjaththu eppozhudhum iruththi - எனது நெஞ்சிலே அநவரதமும் இருக்கும்படி பண்ணி
வணங்க,Vananga - தன்னையே வணங்குமாறு;
பலர் அடியார் முன்பு அருளிய,Palar adiyaar munbu aruliya - மற்றும் பல பக்தர்கள் இருக்கச்செய்தேயும் அவர்களுக்கு முன்னே எனக்கு க்ருபை பண்ணின
பாம்பு அணை அப்பன்,Paambu anai appan - அனந்தசாயியான எம்பெருமான்
அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - உகந்து வர்த்திக்குமிடமாய்
மலாஜீல்,Malaajil - (தேவர்கள் வர்ஷித்த) புஷ்பங்களோடு கூடின
மணி நெடுமாடங்கள்,Mani nedumaadangal - மணிமயமான ஓங்கின மாடங்களையும்
நீடு மதிள்,Needu madil - நெடிய திருமதிள்களையுமுடைத்தான
திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறம்விளைப்ப தியினுடைய
உலகம் மலி புகழ்,Ulagam mali pugazh - உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை
பாட,Paada - பாடினவளவிலே
நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும்,Nam mel vinai ondrum nillaa kedum - நம்மிடத்துள்ள பாவங்கள் ஒன்றும் மிச்சப்படாதபடி எல்லாம் தொலைந்துபோம்.
3441திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும் தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார்.) 6
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்!
அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான்
என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான்
நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6
அன்று அங்கு,Andru anggu - முன்பொரு காலத்தில்
அமர் வென்று,Amar vendru - பூசலிலே வெற்றி பெற்று
உருப்பிணி நங்கை,Urupini nangai - ருக்மிணிப் பிராட்டியினுடைய
அணி நெடுதோள் புணர்ந்தான்,Ani neduthol punarndhaan - அலங்காரங்களால் பரம போக்யமான திருத்தோள்களையணைந்தவனும்
என்றும் எப்போதும் துதிப்ப என் நெஞ்சம் உள்ளே இருக்கின்ற பிரான்,Endrum eppozhudhum thudhippa en nenjam ullae irukkindra piraan - ஓய்வின்றி நான் துதிக்கும்படி எனது நெஞ்சினுள்ளேயிருப்பவனுமான பெருமான்
நின்ற,Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
அணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அது,Ani thiruvaaran vilai ennum neel nagaram adhu - அழகிய திருவாறன் விளையென்கிற அந்த மஹா நகரத்தை
தொண்டீர்,Thondir - தொண்டர்களே!
உள்ளிதொழுமின்,Ullithozhumin - சிந்தித்துத் தொழுங்கோள்;
தீவினை ஒன்றும் நில்லா முற்றவும் கொடும்,Theevinai ondrum nillaa mutravum kodum - கொடிய பாவங்களொன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து முழுதும் நசித்துப்போம்.
3442திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில்.) 7
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7
மலர் சோலைகள் சூழ்,Malar Solaigal soozh - பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருவாறன் விளை அதுவே நீள் நகரம்,Thiruvaaran vilai adhuve neel nagaram - திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்;
நாள் நகரத்து,Naal nagaraththu - (அந்த) மஹாநாகரத்தில்
உறைகின்ற பிரான்,Uraikindra piraan - நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய்
நெடுமால்,Nedumaal - வியாமோஹமுவீ;யனாய்
கண்ணன்,Kannnan - ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய்
விண்ணவர் கோன்,Vinnavar koon - நித்யஸீரிகளுக்குத் தலைவனாய்
வாணபுரம் புக்கு,Vaanapuram pukku - பாணாஸுரனுடைய நகரிலே சென்று
முக்கண் பிரான் தொலைய,Mukkan piraan tholaiya - சிலபிரான் பங்கமடையும்படி
வெம் போர்கள் செய்து,Vem poorhal seydhu - கொடிய யுத்தத்தை நடத்தி
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்,Vaananai aayiram thol thuniththaan - பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான்
சரண்,Saran - (அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்;
அன்றி மற்று ஒன்று இலம்,Andri matru ondrum ilam - கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம்
3443திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார்.) 8
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகலிரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்
சென்று அங்கு இனி துறைகின்ற செழும் பொழில் சூழ் திரு வாறன்விளை
ஒன்றி வலஞ்செய ஒன்றுமோ? தீவினை உள்ளத்தின் சார்வல்லவே.–7-10-8
அகல் இரு பொங்கையின் வாய் நின்று,Akal iru pongaiyin vaai ninru - மிகப் பெரிய பொய்கையிடத்திலே (முதலையின் வாயிலாகப்பட்டது) நின்று
நின் சரண் அன்றி மற்று ஒன்று இலன் என்று தன்; நீள் கழல் எத்திய ஆனையின்,Nin saran andri matru ondrum illan endru than; neel kazhal edhiya aanaiyin - ‘உன் திருவடிகளை யொழிய மற்றொரு புகலுடையே னல்லேன்’ என்று தன்னுடைய திருவடிகளைத் துதித்த கஜேந்திராழ்வானுடைய
நெஞ்சு இடர் தீர்த்த பிரான் சென்று,Nenju idar theertha piraan senru - செழும் நெஞ்சிலிருந்த இடரைப் போக்கின பெருமான் சென்று அங்கு இனிது உறைகின்ற பொழில் சூழ் திருவாறன் விளை (யை)
ஒன்றி ஸலம் செய்ய ஒன்றுமோ,Onri salam seyyum ondrumo - கிட்டி வலஞ் செய்யக் கூடுமோ?
தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவே,Thee vinai ullaththin saarvu allavae - (அப்படி கூடுமாலீகில்) பாவங்கள் நெஞ்சில் பொருத்த முடையன வல்லவாம்.
3444திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திரு வாறன் விளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார்.) 9
தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால்
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று
யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை
மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9
தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி,Thee vinai ullaththin saarvu alla aagi - பாவங்கள் நெஞ்சில் சேர்த்தியற்று ஜஹருதயம் நிர்த்தோஷமாகிஸ
தெளி விசும்பு ஏறல் உற்றல்,Thel viumbhu eeral utrthal - திருநாட்டிலே போக ப்ராப்தமானலும் (அங்குச் செல்ல விருப்பமற்று)
என் சிந்தனை,En sindhanai - எனது நெஞ்சானது.
நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும்,Naavinullum ullaththullum amaindha thozhilinullum navindru yaavarum vandhu vanangum - மநோ வாக்காயங்களினாலே பயின்று யாவரும் வந்து வணங்குமிடமான
பொழில் திருவாறன் விளையதனை,Pozhil thiruvaaran vilaiyadhanai - பொழில் திருவாறன் விளையதனை
மேலி வலம் செய்து கைதொழ கூடும் கொல் என்னும்,Maeli valam seydhu kaithozhu koodum kol ennum - பொருந்தி வலஞ்செய்து கைதொழ ப்ராப்த மாகுமோ! என்று இதனையே யெண்ணை நின்றது.
3445திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார்.) 10
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்,Sindhaiynaal sollinaal seykaiyaal - மனோவாக்காயங்களாலே
நிலத்தேவர் குழு வணங்கும்,Nilaththaevar kuzhu vanangum - பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற
சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை,Sindhai makizthiruvaaran vilai urai - மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை,Sindhai matru ondrin thiraththathu allaa thanmai - எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக நினைத்திராத படியை
தேவபிரான் அறியும்,Deva piraan ariyum - ஸர்வஜ்ஞனான எம்பெருமான தானே அறியக்கடவன்;
சிந்தையினால் செய்வ,Sindhaiynaal seiva - நெஞ்சால் செய்யப்படுமவற்றில்
தான் அறியா தன மாயங்கள் ஒன்றும் இல்லை,Thaan ariya thana maayanghal ondrum illai - அவன் தானறியாத வஞ்சனாங்களொன்றுமில்லையே.
3446திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்.) 11
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு
மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி,Matru or saran illai endru enni - வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி,TheerththanukkE theertha manadhthanan aagi - அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு
செழு குருகூர் சடகோபன் சொன்ன;,Sezhu kurukoor Sadagopan sonna; - செழு குருகூர் சடகோபன் சொன்ன;
தீர்த்தகங்கள் ஆயிரத்துள்,Theerththakangal aayiraththul - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே
இவை பத்தும் வல்லார்களை,Ivai pathum vallaargalai - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி
தேவர்,Devar - நித்யஸூரிகள்
வைகல்,Vaikal - எப்போதும்
தம் தேவியர்க்கு,Tham deviyarkku - தங்கள் மஹிஷிகளிடத்திலே
தீர்த்தங்களே,Theerththangalai - ‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள்.
3447திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரிவில் தரித்திருக்க வொண்ணாதபடி பரம போக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில்.) 1
தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1
தேவிமார் ஆவார்,Devimar avaar - (உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான) தேவிகளாயிருப்பவர்கள் (யாவரென்னில்)
திரு மான் பூமி மற்று,Tiru man bhoomi matru - ஸ்ரீதேவியும் பூதேவியுமாவர் அதற்கு மேலே
ஏவ ஆட்சிசெய்வார்,Eva atchiseivar - (நீ அந்த திவ்ய மஹிஷிதனோடுகூட) ஆஜ்ஞாபிக்க (அக்கட்டளையின்படி) அடிமைசெய்பவர்கள் யாரென்னில்)
அமரர்,Amarar - நித்யஸூரிகள்
ஆட்சி,Atchi - உனது ஆளுகைக்கு உட்பட்ட பொருளோவென்னில்
மேவிய ன்று உலகம் அவை,Meviya ntru ulagam avai - பொருந்திய மூவுலகங்களுமாம்
நின் உருவம்,Nin uruvam - உனக்கு அஸாதாரணரூபங்களோ வென்னில்,
வேண்டு வேண்டு உருவம்,Vendu vendu uruvam - இஷ்டப்படி பரிக்ரஹிக்கிற திவ்ய வுருவங்களாம் (இப்படிகளை அடியேனுக்குக் காட்டிக்கொடுத்த வளவேயன்றிக்கே)
பாவியேன்தன்னை அடுகின்ற,Paviyen thanai adugindra - பாவியான என்னை முடிக்க வந்தது போன்றிருக்கின்ற
கமலம் கண்ணது,Kamalam kannathu - செந்தாமரை கண்களும்
ஓர் பவளம் வாய்,OrPavalam vai - ஒப்பற்ற பவளம் போன்ற அதர சோபையுமுடைய
மணியே,Maniye - பரஞ்சோதியானவனே!
அமுதே,Amuthe - ஆராவமுதமே!
அலை கடல் கடைந்த அப்பனே,Alai kadal kadainda appane - அலையெறிகின்ற கடலைக் கடைந்த அமுதமளித்தபிரானே!
காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னை நான்) கண்ணாரக்காணும் வகை அருளவேணும்.
3448திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார்.) 2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2
காணும் ஆறு அருளாய் என்று என்றே,Kaanum aaru arulai endru endre - (உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே
கலங்கி,Kalangi - (ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு
கண்ண நீர் அலமா,Kanna neer alamaa - கண்ணீர் பரவாநிற்க,
வினையேன்,Vinaiyen - (காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான்
பேணும் ஆறு எல்லாம் பேணி,Penum aaru ellam peni - (தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே)
நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்,Nin peyare pitharrum aaru enakku arul - உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள்
அந்தோ,Antho - ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!)
காகுத்தர்,Kaaguthar - இராமனாய்த் தோன்றி எளியனானவனே!
தொண்டனேன் கற்பகம் கனியே,Thondanen karpagam kaniye - அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே!
பேணுவார் அமுதே,Penuvar amuthe - ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே!
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா,Periya than punal soozh peru nilam eduttha peralaa - விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே!
காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும்.
3449திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரித ரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறார். இப்பாசுரத்திற்கு உயிரானது.) 3
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே !
கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே !
அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3
எடுத்த பேராளன்,Edutha peralan - நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற
நந்தகோபன் தன்,Nandakopan than - நந்தகோபனுடைய
இன் உயிர் சிறுவனே,In uyir siruvane - இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே!
அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்,Asothaikku adutha per inbam - (தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி.
குலம் இளங் களிறே,Kulam ilang kalire - அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே!
அடியனேன் பெரிய அம்மானே,Adiyanen periya ammanae - அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே!
கடுத்த போர் அவுணன் உடல்,Kadutha por avunan udal - போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை
இரு பிளவு ஆ,Iru pilavu aa - இரு துண்டமாகும்படி
கை உகிர் ஆண்ட,Kai ukir aanda - திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த
எம் கடலே,Em kadalae - எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே!
இன்று,Inru - நான் விரும்புமிக்காலத்ல்
அடுத்தது ஓர் உரு ஆய்,Aduthathu or uru aai - தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி
நீ வாராய்,Nee varai - நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்)
உமர்,Umar - என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன்
எங்ஙனம் தேறுவர்,Engnanam theruvar - (உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்?
3450திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரானே! நீ உன்னை அடியார்களுக்கு விதேயனாக ஆக்கிவைத்திருக்குமிருப்பு ஒன்று உண்டன்றோ, அதையே நான் சிந்தித்து ஆறியிருப்பது. இப்போது அந்தக் குணத்திலும் அதிசங்கை செல்லாநின்றமையால் தரிக்க மாட்டுகின்றிலேனே! என்செய்வேனென்கிறார்.) 4
உமர் உகந்த உகந்த வுருவம் நின்னுருவமாகி உன் தனக்கு அன்பரான
இவர் உகந்து அமர்ந்த செய்கை யுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
அமரது பண்ணி யகலிடம் புடை சூழ் அடுபடை யவித்த அம்மானே
அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே ! என்னுடை யார் உயிரேயோ !–8-1-4
அமர் அது பண்ணி,Amar adhu panni - அப்படிப்பட்ட பாரதயுத்தத்தை நடத்தி,
அகல் இடம் புடை சூழ்,Agal idam pudai soozh - பூமிப்பரப்பெங்கும் நிறைந்திருந்த
அடு படை,Adu padai - தொலைத் தொழிலில் வல்ல சேனையை
அலித்த,Alitha - தொலைத்த
அம்மானே,Ammanae - பெருமானே!
அமரர் தம் அமுதே,Amarar tham amudhe - தேவர்களுக்கு அமுதம் போன்று உயிர்ப்பிச்சையளிக்குமவனே!
அசுரர்கள் நஞ்சை,Asurargal nanjai - அசுரர்கட்கு விஷம் போன்றவனே!
என்னுடை ஆர் உயிரே ஓ,Ennudai aar uyirae o - எனக்கு அருமையான உயிர் போன்றவனே!
உமர் உகந்து உகந்த உருவம்,Umar uganthu ugantha uruvam - உன்னடியார்கள் எப்போதும் விரும்பிய ரூபமே
நின் உருவம் ஆகி,Nin uruvam aaki - நீ கொண்டருளும் ரூபமாகி.
உன் தனக்கு அன்பர் ஆனார் அவர்,Un thanakku anbar aanar avar - உன்னுடைய அந்த பகதர்கள்
உகந்து அகர்ந்த செய்கை,Uganthu agarndha seygai - உகந்து ஈடு படுகைக்கு இடமாக நீ செய்த செயல்கள்
உன் மாயை,Un maayai - உனது ஆச்சர்ய சேஷ்டிதங்கள் (என்று கொண்டிருக்கையாகிற)
அறிவு ஒன்றும்,Arivu ondrum - இந்த வொரு அத்யவஸாயத்திலுங்கூட
வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் (இவை பொய்யோவென்று) கஙகைகொள்ள வேண்டியவனாகிறேன்.
3451திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ? அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில்.) 5
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5
ஆர் உயிரே ஓ,Aar uyirae oh - அருமையான உயிராயிருப்பவனே!
அகல் இடம் முழுதும் படைத்து,Agal idam muzhudhum padaiththu - விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து
இடந்து,Idandhu - (ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து
உண்டு,Undu - (ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்தி
அளந்த,Alandha - (ஒருகால்) மாவலிபக்கல் நீரேற்று அளந்துகொண்ட
பேர் உயிரே ஓ,Per uyirae oh - ஸர்வஸ்மாத் பரனே!
பெரிய நீர் படைத்து,Periya neer padaiththu - மஹாஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து
அங்கு உறைந்து,Angu uraindhu - அங்கே கண்வளர்ந்தருளி
அது கடைந்து,Adhu kadaindhu - அதுபோன்ற வொரு பாற்கடலைக் கடைந்து
(அது) அடைத்து உடைத்த,Adhu adaiththu udaiththa - அதுபோன்ற மற்றொரு கடலிலே ஸேதுபந்தம் பண்ணி தநுஷ்கோடியாலே அதனையுடைத்த
சீரியரே ஓ,Seeriyarae oh - பரபரனே!
மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவா ஓ,Manisarkku thevar pola thevarkkum thevaa o - மனிசர்கும் தேவர்க்கும் எவ்வளவவாசியோ அவ்வளவவாசி தேவர்க்கும் உனக்கும் போரும்படியாகவுள்ளவனே!
உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ,Ulagangattu ellam or uyirae oh - எல்லா வுலகங்களுக்கும் ஓர் உயிராயிருப்பவனே!
நான் உன்னை எங்க வந்து உறுகோ,Naan unnai engka vandhu urugoo - அடியேன் உன்னை எங்கு வந்து கிட்டப்பெறுவேன்?
3452திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (கீழில் பாட்டில் சொன்ன பொருளை விஸ்தரிக்கிறார்.) 6
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே–8-1-6
என்னை ஆள்வானே,Ennai aalvaane - (இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே!
எழ் உலகங்களும் நீயே,Ezh ulagangalum neeye - ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு,
அங்கு,Angu - அந்த லோகங்களில்
அவர்க்கு அமைந்த,Avarkku amaindha - (பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின
தெய்வமும்,Dheyvamum - தைவங்களும்
நீயே,Niyae - உன் அவயபூதங்கள்
அவற்றவை கரும்மும் நீயே,Avatravai karummum niyae - அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு.
பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்,Pongiya purambaal porul ula elum - இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும்
அவையும் நீ,Avaiyum ni - அவையும் நீயிட்டவழக்கு
மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே,Mangiya aru aam naerppamum niyae - காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு
வான் புலன் இறந்ததும் நீயே,Vaan pulan irandhadum niyae - அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு.
இன்னே ஆனால்,Innae anaala - இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)
3453திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார்.) 7
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7
கறந்த பால்,Karandha paal - அப்போது கறந்தபால் போல் இனியனானவனே!
நெய்யே,Neiyae - அதில் ஸாரமான நெய் போன்றவனே!
நெய்யின் இன் சுவையே,Neyin in suviyae - நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ!
கடலினுள் அமுதமே,Kadalinul amudhamae - கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!
அமுதில் பிறந்த இன் சுவையே,Amudhil pirandha in suviyae - அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே!
சுவை அது பயனே,Suvai adhu payanae - அவ்வினிமையினுலுண்டாகும் ஆனந்தமே!
பின்னை தோள் மணந்த பேர் ஆயா,Pinnai thol manandha per aayaa - நப்பின்னைப்பிராட்டியை மணம்புணர்ந்து கோபால க்ருஷ்ணனே!
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ,Irandhadum niyae edhindhadum niyae nigazhvadho ni - முக்காலங்களிலுமுள்ள பொருள்களும்ந யிட்ட வழக்கு
இன்னே ஆனால்,Innae anaal - இப்படியான பின்பு
அது இது உது,Adhu idhu udhu - தூரஸ்தமாயும் ஸமீபஸ்தமாயும் மத்யஸ தமாயுமுள்ள ஸகல பரார்த்தங்களும்
சிறந்த நின் தன்மை,Sirandha nin thanmai - பரபரனான உன்னுடைய ஸவபாவங்கள்
என்ற அறிவு ஒன்றும்,Enra arivu ondrum - என்கிற இவ்வறிவு தன்னிலும்
வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் அதிசங்கை கொள்பவனாயிரா நின்றேன்.
3454திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! உம்முடைய அபேக்ஷிதம் நாம் செய்ய வேணுமாகில் அதற்கு உறுப்பாக ஓர் அஞ்ஜலியாவது பண்ணமாட்டீரோவென்ன, பிரானே! நானாகச் செய்வதென்று ஒரு செயலுண்டோ? மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீயிட்டவழக்கான பின்பு என்னாலொரு செயலுண்டோ? நீ தானே என்னை வணங்குவித்துக்கொள்ளவேணுமே யல்லது நான் வணங்குவதாக ஒன்று அறியேன் என்றார்.) 8
மணந்த பேராயா !மாயத்தால் முழுதும் வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை யுடையாய் !அசுரர் வன்கையர் கூற்றமே ! கொடிய புள்ளுயர்த்தாய் !
பணங்கள் ஆயிரம் உடைய பைந்நாகப் பள்ளியாய் ! பாற் கடல் சேர்ப்பா !
வணங்குமாறு அறியேன் மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே–8-1-8
மாயத்தால் மணந்த பேர் ஆயா,Maayathaal manandha per aayaa - மிகுந்த ஆசையினால் நப்பின்னையே மணந்து கொண்ட பெருமை தங்கிய கோபாலனே!
முழுதும்,Muzhudhum - உன்னுடைய ஒரு குணமும் தப்பாதபடி
வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய்,Valvinaiyenai eirkindra gunangalai udaiyaai - பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே!
வன்கையர் அசுரர் கூற்றமே,Vankaiyar asurar kutrame - வன்மையை யுடையவர்களான அசுரர்களுக்கு யமன் போன்றவனே!
கொடிய புள் உயர்த்தாய்,Kodiya pul uyarththaai - அவ்வசுரர்களுக்குக் கொடுமைபுரியுமியல்லின்னான் பெரிய திருவடியை த்வஜமாகக் கொண்டவனே!
ஆயிரம் பணங்களும் உடைய பை நாகம் பள்ளியாய்,Aayiram panangalum udaiya pai naagam palliyaai - ஆயிரம் படங்களையுடைய பரந்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு
பால் கடல் சேர்ப்பா,Paal kadal saerppaa - திருப்பாற்படலில் கண் வளர்ந்தருளுகிறவனே!
மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே,Manamum vaasagamum seigaiyum yaanum ni thaanae - மநோவாக் காயங்களாகிற கரணங்களும் அவற்றை யுடைய நானும் நீயிட்ட வழக்காயிருக்க
வணங்கும் ஆறு அறியேன்,Vanangum aaru ariyaen - சுதந்திரமாக வணங்கும் வழயறிகின்றிலேன்.
3455திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சகல பதார்த்தங்களும் உனக்கு சேஷமான பின்பும் இந்த ஞானத்தோடு சம்சாரத்திலே இருந்ததோடு வாசி இல்லை யாகிலும் சேஷத்வ ஞான விரோதியான சம்சாரத்திலே இருக்க அஞ்சா நின்றேன் -இதுக்கு அனுகூலமான திரு நாட்டிலே என்னைக் கொடு போக வேணும் என்கிறார்.) 9
யானும் நீ தானே யாவதோ மெய்யே அரு நரகவையும் நீ யானால்
வானுயரின்பம் யெய்திலென் மற்றை நரகமே யெய்திலென் எனினும்
யானும் நீ தானாய்த் தெளி தோறும் நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்
வானுயரின்பம் மன்னி வீற்று இருந்தாய் அருளு நின் தாள்களை எனக்கே–8-1-9
யானும் நீ தானே ஆவது மெய்யே,Yaanum ni thaanae aavadhu meiyae - (எல்லாமும் நீயாகையாலே) யானும் நீதானே யென்கிறவிது உண்மையே, (இதில் ஒரு ஸந்தேஹமில்லை)
அரு நரகு அவையும் நீ,Aru naragu avaiyum ni - என்னால் பொறுக்கமுடியாத ஸம்ஸாரத்திலுள்ளவையெல்லாம் நீயிட்ட வழக்கே,
ஆனால்,Anaal - ஆனபின்பு
வான் உயர் இன்பம் எய்தில் என்,Vaan uyar inbam eidhil en - திருநாட்டிலே போய்ச் சிறந்த ஆனந்தத்தைப் பெற்றிருந்தாலென்ன?
மற்றை நரகமே எய்தில் என்,Matrai naragame eidhil en - அதற்கெதிர்த்தட்டான ஸம்ஸாரநரகத்தை யடைந்தால் தானென்ன?
எனிலும்,Enilum - என்று இப்பொருளுண்டேயாகிலும்,
யானும் நீ தான் ஆய் தெளிதொறும்,Yaanum ni thaan aai thelidhorum - நான் உனக்கடியேனென்பதை யுணரும்போதெல்லாம்
நரகம் நான் அடைதல் நன்றும் அஞ்சுவன்,Naragam naan adaithal nandrum anjuvan - ஸம்ஸார நரக வாழ்க்கைக்கு மிகவும் பயப்படா நின்றேன்,
நான் உயர் இன்பம்,Naan uyar inbam - பரமபதப் பேரின்பத்தை நிரந்தரமாகவுடையையாய்க்கொண்டு எழுந்தருளி யிருக்குமவனே!
நின் தாள்களை எனக்கு அருளு,Nin taalgalai enakku arulu - உன் திருவடிகளை எனக்குத் தந்தருளவேணும்.
3456திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.) 10
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10
தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த,Taalgalai enakke thalaiththalai sirappa thanda - (உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின
பேர் உதவி,Per uthavi - மஹோபகாரத்திற்கு
கைம்மாறு ஆ,Kaimmaru aa - பிரதியுபகாரமாக,
என் உயிரை,En uyirai - எனது ஆத்மவஸ்துவை
தோள்களை ஆர தழுவி,Tholgalai aara thazhuvi - தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து
அறவிலை செய்தனன்,Aravilai seithanan - பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன்
சோதீ!,Sothee! - நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே!
தோள்கள் ஆயிரத்தாய்,Tholgal aayiraththaai - (அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே!
முடியன் ஆயிரத்தாய்,Mudiyan aayiraththaai - பலபல திருமுடிகளையுடையவனே!
துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்,Thunai malar kangkal aayiraththaai - ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே!
தாள்கள் ஆயிரத்தாய்,Taalgal aayiraththaai - பலபல திருவடிகளையுடையவனே!
பேர்கள் ஆயிரத்தாய்,Pergal aayiraththaai - பலபல திருநாமங்களை யுடையவனே!
தமியனேன் பெரிய அப்பனே,Thamiyaen periya appane - அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே!
3457திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11
பெரிய அப்பனை,Periya appanai - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும்
பிரமன் அப்பனை,Brahman appanai - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும்
உருத்திரன் அப்பனை,Uruthiran appanai - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும்
முனிவர்க்கு உரிய அப்பனை,Munivarkku uriya appanai - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும்
அமரர் அப்பனை,Amarar appanai - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும்
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை,Ulakukku oru thani appan thani - ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து,
பெரியவண் குருகூர்ச் வண் சடகோபன்,Periyavan kurukoor van sadagopan - ஆழ்வார்
பேணின ஆயிரத்துள்ளும்,Penina aayiraththullum - ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும்
உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்,Uriya sol maalai ivai paththum ivatraal - தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால்
தொண்டீர்நங்கட்கு உய்யலாம்,Thondeernankadkku uyyaalaam - தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும்.
3458திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானை ஆசைப்பட்டு அவன் உகந்து அருளின இடங்களிலே சென்றும் அபேக்ஷிதம் பெறாமையாலே மிகவும் அவசன்னையாய் இருக்கிற இப்பிராட்டியை தோழிமாரானவர்கள்-யுகாவாதார் எதிர் அன்றோ லஜ்ஜிக்க வேண்டுவது -எங்களுக்கு லஜ்ஜிக்க வேணுமோ - உனக்கு ஓடுகிற தசையைச் சொல்லு -என்ன -அவர்கள் எதிர் லஜ்ஜித்து சொல்லாதே உங்களுக்கு சொல்லாமல் வார்த்தை பார்த்த இடத்திலும் ஒன்றும் காண்கிறிலேன்-என்கிறார் .) 1
நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1
வரி வளை நங்கன் ஆயங்காளோ,Vari valai nangan aayangkaalo - அழகியவனையணிந்த நம்முடைய தோழிகளே!
நம்முடை ஏதலர் முன்பு நாணி,Nammudai yethalar munbu naani - நம்மிடத்துப் பகைபாராட்டுகின்ற தாய்மாரின் முன்புசொல்ல வெட்கப்பட்டு
நுங்கட்கு யான் உரைக்கும் மாற்றம் ஒன்றுநோக்குகின்றேன்,Nungadkku yaan uraikkum maattram ondrunookkugiren - உயிர்த் தோழிகளான வுங்களுக்கு மாத்திரம் செவிப்படும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப்பார்க்கின்றேன்,
எனக்கும் காணமாட்டேன்,Enakkum kaanamaaten - ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் பாசுரமிட்டுச் சொல்லும் வழி அறிகின்றிலேன், (ஆகிலும் சொல்லுகேன் கேண்மின்)
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்,Vem kan paravayin paagan em koon - வெவ்வியபார்வையையுடைய பெரிய திருவடியை நடந்துமவனாய் அஸ்மத்ஸ்வாமியான
வேங்கடம் வாணனை வேண்டிசென்று,Vengadam vaananai vendi sendru - திருவேங்கடமுடையானைக் காணவாசைப்பட்டுப் புறப்பட நினைத்ததுவே காரணமாக
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்,Sangam sarindana saai izhandhen - கைவளைகள் கழன்றனவென்னும்படி இளைத்தேன், மேனியொளியை இழக்கப்பெற்றேன்
தடமுலை பொன்நிறம் ஆய் தளர்ந்தேன்,Thadamulai ponniram aay thalarnthen - தடமுலைகள் பசலைநிறம்பூச்சுப்பெற்று உடலும் தளர்ந்தவளாளேன்.
3459திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உனக்கு அத்யந்தம் அந்தரங்கைகளாய் இருக்கிற எங்களுக்கு உன்னுடைய நோவு சொல்லலாகாததும் உண்டோ -என்ன - என் துக்கத்தின் மிகுதியாலே உங்களுக்குச் சொல்லும் பாசுரம் அறிகிலேன் என்கிறாள்.) 2
வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2
ஒன்று வேண்டி சென்று,Onru vendi sendru - என்னிடத்தில் ஒன்றைய்யே க்ஷித்து வந்து
பெறுகின்றவரில்,Perugindravaril - பெறுகின்றவர்களுக்குள்ளே
என்னுடைய தோழியர்,Ennudaiya thozhiyar - தலைமைபெற்ற உயிர்த்தோழிகளான
நுங்கட்கேலும்,Nungatkkaelum - உங்களுக்குங்கூட
ஈண்டு இது உரைக்கும் படியை,Eendu idhu uraikkum padikai - இப்போது எனக்கு ஓடும் நிலைமையைப் பாசுரமிட்டுச் சொல்லக்கூடிய பிரகாரத்தை
இடராட்டியேன் கான் அந்தோ காண்கின்றிலேன்,Idaraattiyen kaan andho kaangindrilen - இடருற்றிருக்கிற நான் ஐயோ! அறிகின்றிலேன்,
காண்தகு தாமரை கண்ணன்,Kaandhaku thamarai kannan - காணவினிய தாமரைபோன்ற திருக்கண்களை யுடையவனாய்
கள்வன்,Kalvan - பார்த்த பார்வையிலே ஸர்வ ஸ்வாபஹாரம் பண்ண வல்ல வஞ்சகனாய்
விண்ணவர்கோன் எங்கள் கோனை,Vinnavarkon engal konai - நித்யஸூரிகளைப் போலே என்னை யடிமை கொண்வனான எம்பெருமானை
கண்டால்,Kandaal - காணப்பெற்றால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்,Eendiya sangum niraiyum kolvaan - அவன் பக்கலிலேதிரண்ட வளைகளையும் அடக்கத்தையும் மீட்டுக் கொள்ளலாமென்று
எத்தனைகாலம் இளைக்கின்றேனே,Ethanaikalam ilaikkindren - எத்தனையோகாலமாக ப்ரயாசைப்படுகின்றேனே.
3460திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் சொல்ல விட்டிலையே யாகிலும் நீயே இளைத்து விடுகிறாய் இ றே -என்ன நித்ய கால தத்வம் முடியிலும் நான் அவனைக் கண்டு அல்லது விடேன் -என்கிறாள்.) 3
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3
நீலம் மலர் நெடு சோதி சூழ்ந்த,Neelam malar nedu sothi soozhntha - நீலநிறத்தாய் எங்கும் வியாபித்ததாய் எல்லைகாண வொண்ணாத்தான தேஜஸ்ஸாலே சூழப்பட்ட
நீண்ட முகில்வண்ணன் கண்ணன்,Neenda mukilvannan kannan - மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான்
கொண்ட,Konda - அபஹரித்துக்கொண்ட
கோலம்வளையொ,Kolamvalaiyo - அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும்
எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான்,Eththanai kaalamum kooda sendru kolvaan - அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர்,Njaalam ariya pazhi sumandhen nal nudhalir - உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன்,
இனி நாணி தான் என்,Ini naani thaan en - விலக்ஷணமான நெற்றியை யுடைய தோழிகளே!
இனி நாணி தான் என்,Ini naani thaan en - இனி லஜ்ஜித்துத் தான் பயனுண்டோ?
காலம் இளைக்கில் அல்லால்,Kaalam ilaikkil allaal - காலம் முடிந்துபோமித்தனை யல்லது.
வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள் மின்,Vinaiyen naan ilaikkindrilan kandukolmin - விளையாட்டியேனான நான் இளைத்து மீளமாட்டேன் இதை அனுபவத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.
3461திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் நிருக்குளந்தை யென்பது ஒரு திருப்தி. இது பெருங்குளமென்று வழங்கப்படும். அத்தலத்திலுள்ள எம்பெருமான் மாயக்கூத்தன், அப்பெருமானிடத்து ஆழ்வார் தமக்குள்ள ஈடுபாட்டைச் சொல்வது இப்பாசுரம்.) 4
கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4
மாடம் கொடி மதிள் தென் குளந்தை,Maatam kodi madil then kulandhai - மாடங்கயும் கொடியணி மதிள்களையுடைய்ய பெருங்குளமென்னுந்திருப்பதியிலே
வண் குடபால் நின்ற மாயக்கூத்தன்,Van kudapaal ninra maayakkooththan - அழகிய மேற்பக்கத்திலே நின்ற மாயக்கூத்தப் பெருமானாய்
ஆடல் பறவை உயர்ந்த,Aadal paravai uyarntha - மகிழ்ச்சியினால் களித்தாடுகிற கருடனாலே வஹிக்கப்பட்டிருப்பவனாய்
வெல் போர் ஆழிவலவனை,Vel poar aazhi valavanai - போர்க்களத்தில் வெற்றிபெறுமியல்வின்னான திருவாழி யாழ்வானை வலத்திருக்கை யிலுடையனான பெருமானை
ஆதரித்து,Aadhariththu - ஆசைப்பட்டு
கூட சென்றேன்,Kooda sendren - அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன்,
கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம்,Kolvanai nenjam thodakkam ellam - அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம்
பாடு அற்று ஒழிய இழந்து,Paadu attru ozhiya izhandhen - என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து
பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன்,Pala valaiyaar mun vaikil pariga azhindhen - பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன்
இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - (எல்லாமிழந்த நான்) இனி என்ன இழக்கக் கடவேன்
3462திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அறியவும் எட்டவும் அரிதான நிலத்தை ஆசைப் பட்டு அதுக்கு துக்கப் படுகிறாய் என்று தோழிமார் சொல்ல -அவன் எத்தனையேனும் விசஜாதீயனாய் துர்ஜ்ஜேயனாய் இருந்தானே யாகிலும் -அவனை ஆஸ்ரயிக்கையும் அவனாலே விஷயீ கரிக்கப் படுகையும் இம்மரியாதை தான் தோற்றி யுண்டாயிற்றோ -இது அநாதி அன்றோ என்கிறாள்.) 5
ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5
தோழியர்காள்,Thozhiyarkal - தோழியர்களே!
நினைக்குங்கால,Ninaikkungal - ஆராய்ந்து பார்க்குமளவில்
நன்று உணர்வர்க்கும் ஒருவன் ஆக உழிதோறு ஊழி உணரல் ஆகா,Nandru unarvarkkum oruvan aaga uzhidhoru oozhi unaral aaga - நன்றாக உள்ளபடி அறியவல்லார்க்கும் காலமுள்ளதனையும் அறிய முயன்றாலும் இத்தகையனென்று அறிய வொண்ணாதபடி
சூழல் உடைய,Soozhal udaiya - அடியார்களை அகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சியாகிற சேஷ்டிதங்களையுடையனாய்
சுடர் கொள் ஆதி,Sudar kol aadhi - மிகுந்த தேஜஸ்ஸையுடைய காரணபூதனாய்
தொல்லை அம்சோதி,Thollai amsothi - நித்ய அஸாதாரண அப்ராக்ருத ஜ்யோதிர்மயரூபத்தை யுடையனாய்
ஆழி வலவனை,Aazhi valavanai - திருவாழிவலவனான ஸர்வேச்வரனை
ஆதரிப்பும்,Aadharippum - விரும்பி பணிகையும்
ஆங்கு,Aangu - அப்படிப்பணியுமிடத்து
அவன் நம்மில் வரவும் எல்லாம்,Avan nammil varavum ellam - அவன் நம்பக்கதில் வந்து சேருகையும் ஆகிய இவையெல்லாம்
நம்முடையமே தான்,Nammudaiyamae thaan - நம்மைத் தோற்றிப் புதிதான உண்டாகப் பெற்றிருக்கிறோமோ?
இங்கு சொல்லுவதோ! அரியதுதான்,Ingu solluvathO! Ariyathuthaan - அவன் விஷயத்தில் எதையாவது அவத்யமாகச் சொல்லிவிடுவது தகாது.
3463திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (மறுபடியும் தோழியானவள் “நங்காய்! நீ சொல்லுகிறபடியே அவன் எளியனல்லன், அருமைப்பட்டவனே“ என்று சொல்ல, தோழீ! அவன் அரியனானாலென்ன? எளியனானாலென்ன? எந்த நிலையில் அவன் தன்னையே வாய்வெருவும்படியன்றோ நம்மைப்பண்ணிவிட்டான், அப்படிப்பட்டவன் வாசலிலே கூப்பிடாதே ஸம்பந்தமில்லாதார் வாசலிலே கூப்பிட ப்ரஸக்தியுண்டோ? என்கிறாள் தலைவி.) 6
தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6
நினைக்குங்கால்,Ninaikkungal - ஆராயப்புகுமளவில்
தொல்லை அம்சோதி என்சொல் அளவு அன்று,Thollai amsothi en sol alavu anru - அஸாதாரணமாய் அழகியதான அவனுடைய தேஜஸ்ஸானது என்னுடைய சொல்லில் அடங்கும்மதன்று
இமையோர் தமக்கும்,Imayor thamakkum - தேவர்களுக்குங்கூட (நிஷ்கர்ஷிக்கவொண்ணாதபடி)
எல்லை இலாதன கூழ்ப்பு செய்யும் அதிறம் நிற்க,Ellai ilaadhana koozhppu seyyum athiram nirka - அளவிறந்த ஸம்சயங்களை விளைக்கும்படியான அப்பெருமேன்மை கிடக்க,
வல்லிவளம்வயல் சூழ குடந்தை மாமலர் கண் வளர்கின்ற மால் எம்மாமை கொண்டான்,Vallivalam vayal soozha kudandhai maamalai kannu valarkindra maal emmaamai kondaana - பூங்கொடியும் அழகிய வயல்களுஞ் சூழ்ந்த திருக்குடந்தையிலே சிறந்த தாமரை போன்ற திருகண்கள் வளரும்படி சாய்ந்தருளின பெருமான் எம்மேனி நிறத்தைக்கொள்ளை கொண்டான்,
அல்லி மலர் தண் துழாயும்,Alli malar than thuzhaayum - பூந்தாரினுடைய விகாஸத்தை யுடைத்தான திருத்துழாய் மாலையையும்
தாரான்,Thaaran - அருள் செய்கின்றினை,
இனி,Ini - இப்படியான பின்பு
ஆர்க்கு பூசல் இடுகோ,Aarkku poosal idukko - (இத்துயரத்தை) வேறு யார் பக்கலிலே சென்று முறை யிடக்கடவோம்?
சொல்லீர்,Solliir - நீங்களே சொல்லுங்கள்.
3464திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (அப்பெருமானைக் காண்பது அரிது, ஆகவே அவனை விட்டு விடுதலை நன்று என்று உறவு முறையார் அலைக்க, அவனுடைய திருக்குணங்களிலே அகப்பட்ட நான் எத்தனை காலமானாலும் அவனைக் கண்டல்லதுவிடேன், அதற்கு இடையூறான வுங்களோடு ஸம்பந்தம் எனக்கு வேண்டாவென்று உறவறுத்து உரைக்கின்றாளிப்பாட்டில்.) 7
மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7
ஏலம் மலர் சூழல் அன்னைமீர்காள்,Elam malar soozhal annai meerkaal - நறுமணம்மிக்க பூவையணிந்த குழலையுடைய தாய்மார்களே!
என்னுடை தோழியர்காள்,Ennudai thozhiyarkal - என்னுடைய தோழிமார்களே!
மால் அரி கேசவன் நாரணன் சீமாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று,Maal ari kesavan naaranan seemadhavan govindan vaikundan enru enru - மாலே! ஹரியே! கேசவனே! நாராயணனே! ஸ்ரீமாதவனே! கோவிந்தனே! வைகுண்டனே! என்றிப்படி பலகாலுஞ் சொல்லி
ஓலமிட என்னை பண்ணி விட்டு இட்டு,Olamida ennai pannni vittu ittu - கூப்பிடும்படியாக என்னைப்பண்ணி கைவிட்டு (எம்பெருமானானவன்)
ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்,Onrum uruvum suvadum kaattaaana - ஒருபடியாலும் தன் வடிவையும் தன்னைக் கிட்டுவ தோரடையாளத்தையும் காட்டுகின்றிலன்,
என் செய்கேன்,En seigai - இதற்கு நான் என்ன பண்ணுவேன்!
பல காலம் சென்றும் காண்பது ஆணை,Pala kaalam sendrum kaanbadhu aanai - காலமுள்ளதனையும் சென்றாகிலும் காணக்கடவே ளென்பது ஸத்யம்
உங்களோடு எங்கள் இடை இல்லை,Ungaloodu engal idai illai - (இந்த அத்யவஸாயத்தைக் குலைக்கப் பார்க்கிற) உங்களுக்கு மெனக்கும் ஒரு ஸம்பந்தமுமில்லை.
3465திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத் தெறிவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது.) 8
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–8-2-8
யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kilikaal - நான் வளர்த்து வந்த கிளிகளே!
பூவைகள் காள்,Poovaikal kaal - பூவைகளே!
குயில்காள்,Kuyilkaal - குயில்களே!
மயில்காள்,Mayilkaal - மயில்களே!
இடை இல்லை,Idai illai - (என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை,
நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது,Nam udaiya maamaiyum sangum nenjum onrum ozhiyattoṭṭaadhu - நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே
கொண்டான்,Kondaana - கொள்ளை கொண்டவன்
அடையும்,Adayum - இங்கிருந்து சென்று சேர்ந்த
வைகுந்தமும்,Vaikundhamum - திருநாடும்
பால் கடலும்,Paal kadalum - திருப்பாற்கடலும்
அஞ்சனம் வெற்பும் அவை,Anjanam verppum avai - திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள்
நணிய,Naniya - அருமையற்று எளியவையே (ஆனால்)
பாசங்கள்,Paasangal - புறம்புண்டானபற்றுக்கள்
கடை அற,Kadai ara - ஸவாஸநமாக
விட்ட பின்னை அன்றி,Vitta pinnai anri - விட்டொழிந்தால்லலது
அவன்,Avan - அப்பெருமான்
அவை காண் கொடான்,Avai kaan kodaan - அத்தலங்களைக் காணக் கொடான்
3466திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (கீழ்ப்பாட்டில் * கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியை நோக்கி நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல, எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள்.) 9
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9
ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும்
தன்னை காண் கொடுப்பான் அல்லன்,Thannai kaan koduppaan allan - தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து
மாயம் தன்னால்,Maayam thannal - தனது வஞ்சனத்தினாலே
கை செய் அப்பாலது ஓர்,Kai sei appaaladhu oor - அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான
கோலம் மாண் குறள் வடிவு,Kolam maan kural vadivu - ஸௌந்தரியத்தையுடைய யாசகவாமன வேஷத்தை
காட்டி,Kaatri - (மஹாபலிக்கு) வெளிக்காட்டி (உடனே)
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,Mannum vinnum niraiya malarntha - மண்ணுலகும் விண்ணுலகும் நிறையும்படியாக வியாபிதவனாய்
சேண் சுடர் பல தோள்கள் தழைத்த,Seen sudar pala tholgal thazhaiththa - ஓங்கி விளங்காநின்ற பல திருத்தோள்களும் தழைத்திருக்கிற
தேவபிராற்கு,Devapiraarku - தேவபிரானான எம்பெருமானுக்கு
என் நிறைவினோடு,En niraivinaalodu - என்னுடைய ஸ்த்ரீத்வபூர்த்தியோடே கூட
நாண் கொடுத்தேன்,Naan koduththen - லஜ்ஜையையும் இழந்தேன்,
நல் நுதல் என்னுடைய நங்கைமீர்காள்,Nal nudhal ennudaiya nangai meerkaal - விலக்ஷணமான திருமுக மண்டலத்தையுடையீர்களாயிருக்கிற என்னுடைய தோழிகளே!
இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - இன்னமும் என்ன இழக்கக்கடவேன்?
3467திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (“நங்காய்! எது எப்படியிருந்தாலும் உனக்கு ஹிதமே கோருமவர்களான நாங்கள் சொல்லுமதை நீ கேட்கவேணுமே“ என்று தாய்மார் சொல்ல “ஆமாம், கேட்க வேண்டியது அவசியந்தான், உங்கள் வார்த்தை கேட்கைக்கு நெஞ்சுவேணுமே, அது இங்கில்லையே, அவன் பக்கல் போயிற்றே, என் செய்வேன்? என்கிறாள் தலைவி.) 10
என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10
என்னுடைய நல்,Ennudaiya nal - நுதல் நங்கைமீர்காள்!
என் நெஞ்சு,En nenju - எனக்கு வீதேயமாயிருந்த நெஞ்சானது
நின் இடையேன் அல்லேன் என்று,Nin idaiyen allaan enru - உனக்கு நான் உறுப்பாலேனல்லேன்“ என்று சொல்லி
என்னை நீங்கி,Ennai neengi - என்னை விட்டகன்று,
கேமியும் சங்கும் இரு கை கொண்டு,Kaemiyum sangum iru kai kondu - திருவாழி திருச்சங்குகளை இரண்டு திருக்கையிலுமேந்திக் கொண்டு
ஓர் கோலம் நீலம் நல் நெடு குன்றம,Oru kolam neelam nal nedu kunRam - ஓர் அழகிய நீல மஹாபர்வதம்
நெடு சூழ் பல்சுடர் நாயிற்றோடு பால் மதி ஏந்திவருவது ஒப்பான்,Nedu soozh pal sudar naayittruodu paal madhi aendhivazhththu oppaan - பரந்து சூழ்ந்த பல சுடரையுடைத்தான் ஸூர்யனோடு கூடவெளுத்த சந்திரனையும் (தன் சிகரத்திலே) தாங்கிக் கொண்டு நடந்துவருவது போன்றுள்ளவனுடைய
நாள் மலர் பாதம் அடைந்தது,Naal malar paadam adainthathu - அப்போதலர்ந்த செந்தாமரை போன்ற திருவடிகளையடைந்திட்டது.
இனி யான் என் செய்வது,Ini yaan en seyvadhthu - இப்படி நான் நெஞ்சிழந்த பின்பு எதைச் செய்வது?
3468திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.) 11
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11
பாதம் அடைவதன் பாசத்தாலே,Paadam adainvadhane paasaththaale - திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால்
மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு,Matra val paasangal muttra vittu - புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு
கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்,Koothu il pugazh kannan than adimael - கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக.
வண் குருகூர் சடகோபன் சொன்ன,Van kurukoor sadagopan sonna - உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Theethu il andhaadhi oor aayiraththul - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து,Ivaiyum oor paththu - இவை பத்தையும்
இசையோடும் வல்லார் தாம்,Isaiyodum vallaar thaam - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி,Aadhum oor theethu ilar aagi - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி
இங்கும் அங்கும்,Ingum angum - உபய விபூதியிலும்
எல்லாம் அமைவார்கள்,Ellam amaivargal - எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர்
3469திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அவன் ஸுகுமார்யத்தை அனுசந்தித்து பரிகை இன்றிக்கே அவனை தங்களுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்று ஐஸ்வர் யாதிகளை ஷேபிக்கிறார்.) 1
அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே–8-3-1
அங்கும் இங்கும் எங்கும்,Angum ingum engum - மேலுலகங்களிலும் இவ்வுலகத்திலும் மற்றுமெவ்வுலகங்களிலுமுள்ள
வானவர் தானவர் யாவரும்,Vaanavar thaanavar yaavarum - தேவர்கள் அசுரர்கள் முதலான யாவரும்
உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி,Unnai inaiyai enru ariyagilaadhu alatri - உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு
பூமகள் மண்மகள் ஆய் மகள்,Poomagal manmagal aai magal - ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார்
அங்கம் சேரும்,Angam serum - திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும்.
சங்கு சக்கரம் கையவன்,Sangu sakkaram kaiyavan - திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்திய பெருமான்
சரணம் என்பர்,Saranam enbar - நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள்.
3470திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் ஐச்வர்யார்த்திகளை நித்தித்துப் பேசினார், இப்பாட்டில் கைகல்யார்த்திகளை க்ஷேபித்துப் பேசுகிறார்.) 2
சரணமாகிய நான்மறை நூல்களும் சாராதே
மரணம் தோற்றம் வான்பிணி மூப்பு என்றிவை மாய்த்தோம்
கரணப் பல்படை பற்றறவோடும் கனலாழி
அரணத்தின் படை ஏந்திய ஈசற்காளாயே–8-3-2
சரணம் ஆகிய நால்மறை நூல்களும் சாராதே,Saranam aagiya naalmarai noolgalum saaraadhe - ஐச்வர்யத்திற்குரிய உபாயங்களை விதிக்கின்ற நால்வேதங்களாகிற சாஸ்த்ரங்களை விட்டிட்டு
கரணம் பல் படை பற்று அறு ஓடும் கனம் ஆழி,Karanam pal padai patru aru oodum ganam aazhi - உபகரணங்களையுடைய், பல சத்ருஸேனைகள் நிச்சேஷமாக வோடும்படி ஜ்வலிக்கின்ற திருவாழியாகிற
அரணம் திண்படை ஏந்திய ஈசற்கு ஆள் ஆயே,Aranam thinpadai eendhiya eesarukku aal aaiye - க்ஷேமங்கரமான திவ்யாயுதத்தைத் தரித்துள்ள எம்பெருமானுக்கு சேஷபூதர்களாயிருந்து வைத்தே (முபுக்ஷுக்களாகியு மென்றபடி)
மரணம் தோற்றம்வான் பிணிமூப்பு என்ற இவைமாய்த்தோம்,Maranam thotram vaan pini mooppu enra ivaimaaithom - இறப்பும் பிறப்பும் மஹாவியாதிகளும் கீழ்த்தனமுமான விவற்றைப் போக்கிக்கொண்ட வித்தனையொழிய வேறில்லையே.
3471திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.) 3
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3
ஆளும் ஆளார்,Aalum aalaar - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்,Aaziyum sangum sumappar thaam - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே
வாளும் வில்லும் கொண்டு,Vaalum villum kondu - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு
பின் செல்வார் மற்று இல்லை,Pin selvaar matru illai - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,
தாளும் தோளும்,Thaalum tholum - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு
கைகளை ஆர தொழ காணேன்,Kaigalai aara thoza kaaneen - கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்)
ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்,Gnaalathu adiyen naalum naalum naaduvan - இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன்.
3472திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் * வாளும் வில்லுங்கொண்டு பின் செல்வார் மற்றில்லை * என்று அஞ்சினவாறே, எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! நம்மைப்பற்றி நீர் அஞ்சவேண்டுமோ! நம்முடைய ஸர்வரக்ஷகத்வம்பெருமையை நீ அறியீரோ? என்று அப்பெருமையைக் காட்டிக் கொடுத்தான், (அதாவது) வடதளசாயி விருத்தாந்தத்தை நினைப்பூட்டினான், அதை யநுஸந்தித்துத் தம்முடைய தவளர்ச்சியை விண்ணப்பஞ்செய்கிறார் இதில்.) 4
ஞாலம் போனகம் பற்றி ஓர் முற்றா வுருவாகி
ஆலம் பேரிலை அன்ன வசம் செய்யும் அம்மானே
காலம் பேர்வதோர் காரிருளூழியொத்துளதால் உன்
கோலம் காரெழில் காணலுற்றா ழும் கொடியேற்கே–8-3-4
ஓர் முற்றா உரு ஆகி,Or mutraa uru aagi - மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய்
ஞாலம் போனகம் பற்றி,Gnaalam ponaagam patri - ஜகத்தையெல்லாம் அமுது செய்து
ஆல் பேர் இலை,Aal per ilai - ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே
அன்னவசம் செய்யும் அம்மானே,Annavasam seyyum ammanae - கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே!
கார் எழில்,Kaar ezhil - காளமேகம் போன்றழகிய
உன் கோலம்,Un kolam - உனது வடிவழகை
காணல் உற்று,Kaanal utrru - காணவேணு மென்றாசைப்பட்டு
ஆழும்,Aazhum - அதிலே ஆழங்காற்பட்டிருக்கின்ற
கொடியேற்கு,Kodiyaerku - கொடியேனாகிற எனக்கு
பேர்வது ஓர் காலம்,Paervathu or kaalam - நிகழ்கிற ஒரு க்ஷணாவகாச மானது
கார் இருள் ஊழி ஒத்து உளது,Kaar irul oozhi oththu ulathu - காடாந்தகாரம்மிக்க கல்பம் போலே நீள்கின்றது.
3473திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டிலே * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார்.) 5
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5
கொடி ஆர் மாடம்,Kodi aar maadam - கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய
கோளுர் அகத்தும் புளிங்குடியும்,Kolur agatthum pulingudiyum - திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும்
மடியாது,Madiyaadhu - இடம் வலங்கொள்ளாமல்
இன்னே,Inne - இன்று காணும் விதமாகவே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்,Nee thuyil mevi magizhnthathu thaan - நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது
அடியார் அல்லம் தவிர்த்த அசவோ,Adiyaar allam thavirtttha asavo - (பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ?
அன்றேல்,Andrael - அல்லது
இப்படி,Eppadi - இப்பூமியை
நீண்டு தாவிய அசவு தானோ,Neendu thaaviya asavu thaano - ஓங்கியுளந்த சிரமத்தினாலோ?
பணியாய்,Paniyaai - கூறியருளவேணும்.
3474திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய சயனத்தை நினைத்து பரிந்து பேசின ஆழ்வாரை நோக்கி “நீர் இப்படி துடிக்கக் கடவீரோ? அவன் ஸர்வரக்ஷகனன்றோ, என்று சொல்ல, அதற்கு “நிர்யஸூரிகளின் பரிவுக்கு இலக்கானவ்வன் ஸம்ஸாரத்திலே அவ்வடிவோடே வந்து உலாவாநின்றால் நானிப்படி துடிக்காமலிருக்க முடியுமோ? வேறு எம்பெருமானைத் தவிர வேறுயாரையும் ஒருநாளும் பணிந்தறியாத அமரர்களன்றோ நித்யஸூரிகள். அவர்களுடைய பணிவுக்கும் ஞானம் முதலிய குணங்களுக்கும் தாமே இலக்காயிருக்குமவர் என்றபடி.) 6
பணியாவமரர் பணிவும் பண்பும் தாமேயாம்
அணியாராழியும் சங்கமுமேந்துமவர் காண்மின்
தணியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திரு நீல
மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே–8-3-6
பணியா அமரர்,Paniya amarar - எவரையும் பணிய வேண்டாத நித்ய ஸூரிகளினுடைய
பணிவும் பண்பும் தாமே ஆம்,Panivum panbum thaamae aam - பணிவுக்கும் ஞானும் முதலிய குணங்க்களுக்கும் தாமே இலக்காயிருபவரும்
அணி ஆர் ஆழியும் சங்கமும் ஏந்துமவர்,Ani aar aazhiyum sangamum aendhumavar - ஆபரணமாப் பொருந்திய திருவாழி திருச்சங்குகளைத் தாங்கி நிற்பவருமான அப்பரமபுருஷ
பணியா வெம் நோய் தவிர்ப்பான்,Paniya vem noyi thavirppaan - ஒருகாலும் தணியாத வெவ்விய நோய்களைத் தவிர்பதற்காக
திரு ஆர் நீலம் மணி மேனியோடு,Thiru aar neelam mani maeniyodu - அழகியதாய் நீலமணி போன்றதான வடிவோடுகூட
என் மனம் சூழ உலகில் வருவார்,En manam soozha ulagil varuvaar - என்மனம் பிரமிக்கும்படியாக இவ்வுலகில் வந்து உலாவுவார்
3475திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இங்கே வந்து திருவண்பரிசாரத்திலே யெழுந்தருளியிருக்க, அந்தோ! நான் உதவப்பெற்றிலேனே, இது கிடக்க, இங்ஙனே ஓரடியானுள னென்று அவனுக்கு அறவிப்பாருமில்லையேயென்று துடிக்கிறார்.) 7
வருவார் செல்வார் வண் பரிசாரத்து இருந்த என்
திரு வாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும்மோடு
ஒருபாடு உழல்வான் ஓரடியானும் உளன் என்றே-8-3-7
வருவார் செல்வார்,Varuvaar selvaar - அந்தப்பக்கத்தில் நின்றும் வருபவர்களும் இந்தப்பக்கத்தில் நின்றும் போமவர்களுமான மனிசர்கள்
வண் பரிபாசுரத்து இருந்த,Van paripaasuraththu iruntha - திருவண்பரிசாரத்திலெழுந்தருளிருக்கிற.
என் திருவாழ் மார்வர்க்கு,En thiruvaazh maarvarkku - என்னுடைய திருமாலுக்கு
உரு ஆர்சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்று,Uru aar chakaram sangu sumanthu ingu ummodu orupaadu uzhalvaan oru adiyaanum ulan endru - வடிவழகார்ந்த திருவாழி திருச்சங்குகளைச் சுமந்து கொண்டு இங்கு உம்மோடு ஒரு பக்கத்திலிருந்து கொண்டு திரியுமடியானொருவனிருக்கின்றானென்று.
என் திறம் சொல்லார்,En thiram sollaar - என்னைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுகின்றிலர்
செய்வது என்,Seivathu en - (இதற்கு) நான் செய்யக் கூடியது என்னோ?
3476திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார்.) 8
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8
ஏழ் குன்று,Ezhu kunru - குலபர்வதங்களேழையும்
எழ் பார்,Ezhu paar - தீவுகளேழையும்
சூழ்,Soozh - சூழ்ந்த
கடல்,Kadal - ஸமுத்ரங்களையும்
ஏழ் ஞாலமும்,Ezhu gnaalamum - ஏழுலகங்களையும்
முழு,Muzhu - முழுக்க
நின்றே தாவிய,Nindre thaaviya - நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட
நீள் கழல்,Neel kazhal - நெடிய திருவடிகளை யுடையையாய்
ஆழி,Aazhi - திருவாழியையுமுடையையான
திருமாலே,Thirumaale - திருமகள் கொழுநனே!
என்னை,Ennai - அடியேனை
கோலம் திருந்து அடி கீழ்,Kolam thirundhu adi keezh - தேவரீருடைய அழகு விஞ்சின திருவடிகளின் கீழே
நின்றே ஆள் செய்ய,Nindre aal seiyya - நிலைநின்று அடிமை செய்வேனாம்படி
நீ கொண்டருள நினைப்பது தான் என்றே,Nee kondarula ninaippathu thaan endre - தேவரீர் அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றுவது என்றைக்கோ?
3477திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ப்ரஹ்மாதிகள் தஷாதிகள் உண்டாய் இருக்க நீர் என் செய்ய அஞ்சுகிறீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அவர்கள் உன்னுடைய ஸுகுமாரியாதிகளை அறியார்கள் -நான் என்னுடைய ஸ்நே ஹத்தாலே கலங்கி கதறா நின்றேன் என்கிறார்.) 9
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம்
பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென்
ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை
கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9
திருமால்,Thirumaal - திருமாலே!
நான் முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் யார்,Naan mugan senjadaiyaan endra ivargal yaar - பிரமனென்றும் ருத்திரனென்றும் சொல்லப் படுகிறவர்களில் யார்தான்
எம்பெருமான் தன்மையை,Emperumaan thanmaiyai - எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யாதி ஸ்வபாவத்தை
அறிகீற்பார்,Arigeerpaar - அறியவல்லார்?
பேசி என்,Paesi en - இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு?
ஒரு மா முதல்வா,Oru maa mudhalvaa - விலகணான பரமகாரணமானவனே!
ஊழி பிரான்,Oozhi piraan - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே!
என் காதல் கலக்க,En kaadhal kalakka - என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க
என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன்,Ennai aaludai karu maa meniyan enban - என்னையடிமை கொண்ட கரியகோலத் திருவுருவனே! என்று இவ்வளவே யன்றோ நானும் சொல்ல வல்லேன்.
3478திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஆழ்வாருடைய அச்சத்தைப் பரிஹரிக்கைக்காக எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி “நமக்கு ஸநகாதிகள் முக்தர்கள் நித்யஸூரிகள் ஆகிய விவர்கள் கிட்டிநின்று பரிகிறார்கள், அதுதவிர, நாமும் அரிய செயல்களும் செய்யவல்லோமான பின்பு நீர் நமக்கு அஞ்சும் வேண்டா காணும்“ என்றருளிச் செய்ய, ஆழ்வார் அச்சந்தீர்ந்து அத்தை யநுஸந்தித்து இனியாராகிறார்.) 10
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வானவர் எல்லாம் தொழுவார்கள்
மலக்கமெய்த மா கடல் தன்னைக் கடைந்தானை
உலக்க நாம் புகழ் கிற்பது என் செய்வதுரையீரே–8-3-10
கலக்கம் இல்லா நல்தவம் முனிவர்,Kalakkam illaa nalthavam munivar - ஸம்ஸாரக் கலக்கமற்ற நல்ல தபஸ்விகளான ஸனகாதிமுனிவர்களென்ன,
கரை கண்டோர்,Karai kandoor - ஸம்ஸாரத்தைக் கடந்து அக்கரை சென்ற முக்தர்களென்ன,
துளக்கம் இல்லா வானவர்,Thulakkam illaa vaanavar - ஒருகாலும் ஸ்வரூப விபர்ய யமடையாதவர்களான நிர்யஸூரிகளென்ன,
எல்லாம்,Ellaam - ஆகய இவர்களெல்லாரும்
தொழுவார்கள்,Thozhuvargal - பரிவுபூண்டு மங்களாசாஸனம் பண்ணுமவர்களாயிராநின்றார்கள்,
மா கடல் தன்னை,Maa kadal thannai - பெருங்கடலை
மலக்கம் எய்த கடைந்தானை,Malakkam eitha kadaindhaanai - கலங்கும்படி கடைந்த பெருமானை
நாம் உலக்க புகழ் கிற்பது,Naam ulakka pugazh kirpathu - அற்பரான நாம் ஒரு முடிவுகண்டு புகழ்ந்தோமாவது
என் செய்வது,En seivathu - கைகூடுமதோ?
உரையீர்,Uraiyeer - சொல்லுங்கோள்.
3479திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும் நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
உரையா வெந்நோய் தவிர அருள் நீண் முடியானை
வரையார் மாட மன்னு குருகூர்ச் சடகோபன்
உரையேய் சொல் தொடை ஓராயிரத் துளிப்பத்தும்
நிரையே வல்லார் நீடுலகத்தப் பிறவாரே–8-3-11
உரையா வெம்நோய் தவிர,Urayaa vemnoy thavira - வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி
அருள்,Arul - க்ருபை செய்தருளின
நீள் முடியானை,Neel mudiyaanai - ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து,
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன்,Varai aar maadam mannai kurukoor sadagopan - மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய
உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும்,Urai ey solthodai or aayiraththul ippaththum - ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை
நிரையே வல்லார்,Niraiye vallaar - அடைவுபட ஓதவல்லவர்கள்
நீடு உலகத்து பிறவா,Needu ulagaththu piravaa - கடல் சூழ்ந்த மண்ணுலகில் இனியொருநாளும் பிறக்க மாட்டார்கள்.
3480திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (குவலயாபீட வதம் மல்ல நிரஸநம் முதலான வீரச் செயல்களைச் செய்த சீர் கொள்சிற்றாய னெழுந்தருளியிருக்குமிடமான திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றுப்பதி எமக்கு நிர்ப்பயமான புகலிடமென்கிறார்.) 1
வார்கடா வருவி யானை மா மலையின்
மருப்பிணைக் குவடிறுத்துருட்டி
ஊர் கொள் திண் பாகனுயிர் செகுத்து
அரங்கின் மல்லரைக் கொன்று சூழ் பரண் மேல்
போர் கடா வரசர் புறக்கிட
மாடமீ மிசைக் கஞ்சனைத் தகர்த்த
சீர்கொள் சிற்றாயன் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எங்கள் செல் சார்வே–8-4-1
வார் கடா அருவி,Vaar kada aruvi - பாய்கின்ற மதநீராகிற அருளிப் பெருக்கையடைய
யானை மா மலையின்,Yaanai maa malaiyin - குவலயாபீட யானையாகிற பெரிய மலையினுடைய
மருப்பு,Maruppu - இரண்டு தந்தங்களாகிற
இணை குவடு,Inai kuvadu - இரண்டு சிகரங்களை
இறுத்து,Iruthu - முறித்து
உருட்டி,Urutti - (யானையை) முடித்தொழித்து
ஊர் கொள் திண்பாகன் உயர் செகுத்து,Oor kol thinpaagan uyar seguthu - யானையை நடத்த வல்ல சதிருடையனான பாகனது உயிரையும் முடித்து
அரங்கில்,Arangil - அரண்மனை வாசலில்
மல்லரை கொன்று,Mallarai konru - (சாணூர முஷ்டிக) மல்லர்களையும் தொலைத்திட்டு
சூழ் பரண் மேல் போர் கடாவு அரசர் புறக்கிட,Sool paran mel poor kadavu arasar purakkida - சுற்றுமுண்டான மஞ்சத்தின் மேலே நின்ற ரணவீரர்களான அரசர்கள் முதுகு காட்டியோடும்படியாகப் பண்ணி
மாடம் மீமிசை,Maadam meemisai - மாடத்தின் மேல் நிலத்திலேயிருந்த
கஞ்சனை,Kanjanai - கம்ஸனை
தகர்த்த,Thakartha - தொலைத்திட்ட
சீர் கொள் சிறு ஆயன்,Seer kol siru aayan - வீர ஸ்ரீயையுடைய கோபாலகிருஷ்ணன் எழுந்தருளியிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்செங்குன்றூர்த்திருச் திருச்சிற்றாறென்கிற திருப்பதியானது
எங்கள் செல் சார்வு,Engal sel saarvu - எங்களுக்குச் சென்று சேரும் புகலிடமாகும்.
3481திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஜகத் ஸ்ருஷ்ட்யாதி சமர்த்தனாய் திருச் செங்குன்றூரிலே நின்று அருளின எம்பெருமான் அல்லது எனக்கு நல்ல துணை இல்லை என்கிறார்.) 2
எங்கள் செல் சார்வு யாமுடையமுதம்
இமையவரப்பன் என்னப்பன்
பொங்கு மூவுலகும் படைத்து அளித்து அழிக்கும்
பொருந்து மூவுருவன் எம்மருவன்
செங்கயல்களும் தேம் பணை புடை சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச் சிற்றாறு
அங்கு அமர்கின்ற ஆதியான் அல்லால்
யாவர் மற்றென்னமர் துணையே–8-4-2
உங்கள் செல் சார்வு,Ungal sel saarvu - யாம் சென்று சேரும் புகலிடமாயும்
யாமுடை அமுதம்,Yaamudai amudham - நமக்குப் பரமபோக்யனாயும்
இமையவர் அப்பன்,Imayavar appan - தேவாதி தேவனாயும்
என் அப்பன்,En appan - எனக்கு ஸ்வாமியாயும்
பொங்கு மூ உலகும்,Pongu moo ulagam - பரந்த மூவுலகத்தையும்
படைத்து அழித்து அளிக்கும்,Padaiththu azhiththu alikkum - ஸ்ருஷ்டித்து ரக்ஷித்து ஸம்ஹரிப்பானாயும்
பொருந்தும் மூ உருவன்,Porundhum moo uruvan - மேலே சொன்ன முச்செயல்களுக்கும் பொருத்தமாக மூர்த்தித்ரயஸ்வரூபியாயும்
எம் அருவன்,Em aruvan - எமக்கு உயிரானவனாயும்
செம் கல் உகளும் தேம் பனை புடை சூழ்,Sem kal ukalum them panai pudai sool - செவ்விய மீன்கள் துள்ளும்படி தேன்மிக்க நீர் நிலங்கள் சூழ்ந்த
திருச் செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு,Thiruchchengundroor thiruchchiraaru angu - திருச்சிற்றாரென்னும்பதியிலே
அமர்கின்ற,Amarginra - அமர்ந்திருப்பவனாயு மிருக்கின்ற
ஆதியான் அல்லால்,Aadhiyaan allaal - ஆதிப்பிரானல்லது
என் அமர் துணைமற்று யாவர்,En amar thunaimatru yaavar - எனக்குற்ற துணை வேறுயார்? (யாருமிலர்)
3482திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஸ்ரீ வராஹமாய் பிரளயம் கொண்ட ஜகத்தை எடுத்து அருளி திருச் செங்குன்றூரில் நின்று அருளின எம்பெருமானுடைய திருவடிகள் அல்லது வேறு சரணம் எனக்கு மநோ ரதத்திலும் இல்லை என்கிறார்.) 3
என்னமர் பெருமான் இமையவர் பெருமான்
இருநிலம் இடந்த வெம்பெருமான்
முன்னை வல்வினைகள் முழுதுடன் மாள
என்னை யாள்கின்ற வெம்பெருமான்
தென் திசைக்கணிகொள் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாங்கரைமீ பால்
நின்ற வெம்பெருமான் அடியல்லால் சரண் நினைப்பிலும்
பிறிதில்லை எனக்கே–8-4-3
மையவர் பெருமான் என் அமர் பெருமான்,Maiyavar perumaan en amar perumaan - நித்ய ஸூரிநாதனாப் போலே என்க்குற்ற நாதனாய்
இரு நிலம் இடந்த எம்பெருமான்,Iru nilam idandha emperumaan - மாநிலத்தைப் பிரளயாபத்திலிருந்து இடந்தெடுத்த எமது நாதனாய்
முன்னை வல் வினைகள் முழுது உடன்மாள,Munnai val vinaigal muzhudhu udanmaala - அநாதியான வலிய தீவினைகளெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மாளும்படியாக
என்னை ஆள்கின்ற எம்பெருமான்,Ennai aalkinra emperumaan - என்னை அடிமை கொண்டருளுகிற பெருமையை யுடையனாய்
தென் திசைக்கு அணி கொள்,Then dhisakku ani kol - தென் திசைக்கு அலங்காரமாகக் கொள்ளப்படுவதான
திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்ங்கரை மீபால் நின்ற,Thiruchchengundrooril thiruchchiraarangarai meepaal ninra - திருச்சிற்றாறென்னும் திருப்பதியின் மேலேப்பக்கதில்லெழுந்தருளி யிருப்பவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி அல்லால்,Adi allaal - திருவடிகளைத் தவிர்த்து
எனக்கு நினைப்பிலும் பிறிது சரண் இல்லை,Enakku ninaippilum piridhu saran illai - என்னுடைய மனோரது தசையிலும் வேறொரு புகல் இல்லை.
3483திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மஹாபலியின் வலியை யடக்கியும் கடல் கடைதலாகிற அரிய பெரிய காரியத்தைச் செய்தும் அடியார்களது துன்பங்களைத் தொலைத்துத் திருச்சிற்றாற்றுப் பதியிலே நின்றருளினவனது திருவடிகளல்லது வேறெனக்கு அரணில்லை யென்கிறார்.) 4
பிறிதில்லை எனக்குப் பெரிய மூவுலகும் நிறையப்
பேருருவமாய் நிமிர்ந்த
குறிய மாண் எம்மான் குரை கடல் கடைந்த
கோல மாணிக்கம் என்னம்மான்
செறி குலை வாழை கமுகு தெங்கணி சூழ்
திருச் செங்குன்றூர்த் திருச்சிற்றாறு
அறிய மெய்ம்மையே நின்ற வெம்பெருமான்
அடி இணைய யல்லதோர் அரணே-8-4-4
பெரிய மூ உலகும் நிறைய,Periya moo ulagamum niraiya - இடமுடைத்தான மூவுலகும் நிறையும்படியாக
பேர் உருவம் ஆய் நிமிர்ந்த,Per uruvam aai nimirndha - பெரிய வடிவையுடையனாய்க் கொண்டு வளர்ந்த
குறிய மாண் எம்மான்,Kuriya maan emmaan - வாமனப் பிரமசாரியான என் ஸ்வாமியாய்
குரை கடல் கடைந்த,Kurai kadal kadaintha - கோஷிக்கின்ற கடலைக் கடைந்தவனாய்
கோலம் மாணிக்கம் என் அம்மான்,Kolam maanikam en ammaan - அழகிய ரத்னம் போன்ற திருவடிவை எனக்குக் காட்டித்தந்தருளின உபகாரகனாய்.
செறி குலை வாழை கமுகு தெங்கு அணி,Seri kulai vaazhai kamugu thengu ani - செறிந்த குலைகளையுடைய வாழை கமுகு தெங்குகளின் திரள்கள் சூழ்ந்த
திருச் செங்குன்றூ திருச்சிற்றாறு,Thiruchchengundroo thiruchchiraaru - திருச்சிற்றாற்றுத் திருப்பதியிலுள்ளவர்கள்
அறிய,Ariya - தன்னை உள்ளபடியறியும்படி
மெய்ம்மையே நின்ற,Meimmaye ninra - உண்மைப் பெருமையோடே நின்றருளாமவனான
எம்பெருமான்,Emperumaan - அஸ்மத்ஸ்வாமியினுடைய
அடி இணை அல்லது,Adi inai alladhu - திருவடியிணைகளல்லது
எனக்கு ஓர் அரண்பிறிது இல்லை,Enakku or aranpiridhu illai - எனக்கு வேறொரு ரக்ஷகமுமில்லை.
3484திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (மற்றும்பல திருப்பதிகளா முண்டாயிருக்க, ஆழ்வீர்! நீர் சிற்றாற்றிலே இவ்வளவு நிர்ப்பந்தம் கொள்வதேன்? என்று சிலர் கேட்பதாகக் கொண்டு அதற்கு மறுமொழி கூறுகின்றாரிதில்.) 5
அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை
அது பொருளாகிலும் அவனை
யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது
ஆதலால் அவனுறைகின்ற
நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்த
நறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5
அல்லது ஓர் அரணும் அவனில் வேறு இல்லை,Alladhu or aranum avaniil veru illai - திருச்சிற்றாறு தவிர்ந்த மற்ற கோவில்களில் ரக்ஷகனாயிருக்கின்றவனும் அவனிற் காட்டில் வேறுபட்ட வனல்லன்,
அது பொருள் ஆகிலும்,Adhu porul aagilum - என்கிறவதுவே உண்மைப் பொருளானாலும்
என் ஆவி,En aavi - என் உயிரானது
அவனை அல்லது அமர்ந்து அணைகில்லாது,Avanai alladhu amarnthu anaikillaadhu - அத்திருச்சிற்றாறெம்பெருமானை யொழிய வேறொருவனைப் பொருந்தி விரும்பமாட்டாது,
ஆதலால்,Aadhalaal - ஆகையினாலே
அவன் உறைகின்ற,Avan uraikinra - அப்பெருமான் நித்யவாஸம் பண்ணுமிடமானதும்
நல்ல நான்மறையோர்,Nalla naanmairaiyor - வைதிகோத்தமர்கள்
வேள்வியுள் மடுத்த,Veliuyul madutha - யாகத்திலிட்ட ஹவிஸ்ஸுக்களிலுண்டான
நறு புகை,Naru pugai - பரிமளம் மிக்க புகையானது
விசும்பு ஒளி மறைக்கும்,Visumbu oli maraikkum - ஆகாசத்திலுள்ள (ஸூரியன் முதலிய) சுடர்ப்பொருள்களை மறைக்கும் படியாயுள்ளதும்
நல்ல நீள மாடம்,Nalla neela maadam - விலக்ஷணமாக வோங்கின மாடங்களையுடையதுமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு,Thiruchchengundrooril thiruchchiraaru - திருச்சிற்றாற்றுப் பதியானது
எனக்கு நல் அரண்,Enakku nal aran - எனக்கு நிர்ப்பயமான புகலிடம்
3485திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பரிவர்களின் மிகுதியைக் காட்டும் பாசுரமிது. இப்பாட்டுக்கு மூன்றாமடி உயிரானது, * மனக்கொள்சீர் மூவாயிரவர் வண் சிவனுமயனுந்தானு மொப்பார்வாழ் * என்பது. எம்பெருமானுடைய திருக்கலியாண குணங்களை மனத்திலே கொண்டு “இக்குணங்களை யுடையானுக்கு என்வருகிறதோ“ என்று அஸ்தாநே பயசங்கை பண்ணி வர்த்திப்பார் மூவாயிரவருளராம், அதைக்காட்டி எம்பெருமான் ஆழ்வாரைத் தேற்றுவித்தபடியாலே அதைப் பாசுரத்திலே கூட்டி அநுஸந்தித்தாராயிற்று.) 6
எனக்கு நல்லரணை எனதாருயிரை
இமையவர் தந்தை தாய் தன்னை
தனக்கும் தன் தன்மை யறிவரியானைத்
தடங்கடல் பள்ளியம்மானை
மனக்கொள் சீர் மூவாயிரவர்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார் வாழ்
கனக்கொள் திண் மாடத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அதனுள் கண்டேனே–8-4-6
எனக்கு நல் அரணை,Enakku nal aranai - எனக்கு நிர்ப்பயமான புகலிடமாயும்
எனது ஆர் உயிரை,Enadhu aar uyirai - என்னுடைய ஸத்தையை நிர்வஹித்துப் போருமவனாயும்
இமையவர்தந்தை தாய் தன்னை,Imayavarthanthai thaai thannai - நித்ய ஸூரிகளுக்கும் ஸகலவித பந்துவானவனாயும்
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை,Thanakkum than thanmai arivu ariyaanai - ஸர்வஜ்ஞனான தனக்கும் தனது தன்மை அறியக்கூடாமலிருப்பவனாயும்
தட கடல் பள்ளி அம்மானை,Thada kadal palli ammaanai - விசாலமான கடலிலே பள்ளி கொள்பவனாயுமுள்ள ஸர்வேச்வரனை
மனம் கொள் சீர்,Manam kol seer - மனத்திலே கொண்ட பகவத் குணங்களையுடையவர்காளன
மூவாயிரவர்,Moovaayiravar - மூவாயிர மந்தணர்கள்
வண் சிவனும் அயனும் தானும் ஒப்பார்,Van sivanum ayanum thaanum oppaar - சிவனையும் பிரமனையும் திருமாலையும் மொத்தவர்களாய்க் கொண்டு
வாழ்,Vaazh - வாழுமிடமாய்
கனம் கொள் திண்மாடம்,Kanam kol thinmaadam - செறிந்து திண்ணிதான மாடங்களையுடைத்தான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற தனுள்,Thiruchchengundrooril thiruchitraara thanul - திருச்சிற்றாற்றுப் பதியிலே
கண்டேன்,Kandaen - ஸேவிக்கப்பெற்றேன்
3486திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன் -ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி தன் திரு அழகோடு என் இருதயத்திலே வந்து புகுந்தான் -என்கிறார்.) 7
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட
அத்திருவடி என்றும்
திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும்
செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும்
செய்ய வுடையும்
திருச் செய்ய முடியும் ஆரமும் படையும்
திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7
திருச்செங்குன்றூரில திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடி,Thiruchchengundrooril thiruchchiraarathanul kanda aththiruvadi - திருச்சிற்றாற்றுப்பதியிலே நான் காணப்பெற்ற அந்த பொருமானானவன்,
செய்ய கமலம் திருக்கண்ணும்,Seyya kamalam thirukkanum - செந்தாமரை போன்ற திருக்கண்ணும்
செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும்
செம் அடியும்,Sem adiyum - சிவந்த திருவடிகளும்
செய்ய கைவும்,Seyya kaivum - சிவந்த திருக்கைகளும்
செய்ய கமலம் திரு உந்தியும்,Seyya kamalam thiru undiyum - சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும்
கமலை செய்ய மார்பும்,Kamalai seyya maarbum - பெரிய பிராட்டியாரை யுடைத்தாய்ச் சிவந்ததான திருமார்வும்
செய்ய உடையும்,Seyya udaiyum - திருப்பிதகவாடையும்
ஆரமும்,Aaramum - கோலமாமணியாரங்களும்
படையும்,Padaiyum - திவ்யாயுதங்களும்
திகழ,Thigazha - விளங்க
என்றும் என் சிந்தை உளான்,Endrum en sindhai ulaan - எந்நாளும் என்னெஞ்சினுள்ளே யுறைகின்றான்.
3487திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இப்படி யென்னெஞ்சிலே திகழாநிற்கிற திருச்சிற்றாற்றெம்பெருமானைப் புகழும்படியறிகின்றிலே னென்கிறார்.) 8
திகழ வென் சிந்தையுள் இருந்தானைச்
செழு நிலைத் தேவர் நான்மறையோர்
திசை கை கூப்பி ஏத்தும்
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாற்றங்கரை யானை
புகர்கொள் வானவர்கள் புகலிடம் தன்னை
அசுரர் வன்கையர் வெங்கூற்றை
புகழுமாறு அறியேன் பொருந்து மூ வுலகும்
படைப்பொடு கெடுப்புக் காப்பவனே–8-4-8
என் சிந்தையுள் திகழ இருந்தானை,En sindhaiyul thigazha irundhaanai - என்னெஞ்சினுள்ளே விளங்கிக் கொண்டிருப்பவனும்
நால் மறார் செழு நிலம் தேவர்,Naal maraar sezhunilam dhevar - நான்கு வேதங்களையு மோதின விலக்ஷண ப்ராஹமணர்கள்
திசை கை கூப்பி ஏத்தும் திருச் செங்குன்றூரில் திருச்சிற்றாற்றங்கரை யானை,Dhisai kai koopi aeththum thiruchchengundrooril thiruchchiraarangkai yaanai - திசைகள் தோறும் நின்று கைகூப்பித் துதிக்கும்படியான திருச்சிற்றாற்றுப் பதியிலுள்ளவனும்
புகர் கொள்வானவர்கள் புகல் இடம் தன்னை,Pugar kolvaanavargal pughal idam thannai - சிறந்த தேவர்களுக்கும் புகலிடமாயிருப்பவனும்
வன்கைய் அசுரர் வெம் கூற்றை,Vankaiy asurar vem kootrai - மிடுக்கரான அசுரர்களுக்கு வெவ்விய யமன் போன்றவனும்
பொருந்து மூ உலகும் படைப்போடு கெடுப்பு காப்பு அவன்,Porundhu moo ulagam padaipodu keduppu kaappu avan - தன்னோடு பொருந்திய மூவுலகத்தினுடையவும் ஸ்ருஷ்டி ப்ரளய ரக்ஷணங்களுக்குக் கடவனுமான பெருமானை
புகழும் ஆறு அறியேன்,Pugazhum aaru ariyaen - புகழும் விதம் இன்னதென்ற்று அறிகின்றிலேன்
3488திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (பிரமன் முதல் எறும்பளவாகவுள்ள ஸகல ஜந்துக்களினுடையவும் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைப் பண்ணுவான் திருச்சிற்றாற்றெம்பெருமானே யென்னுமிடம் அர்த்த வாதமன்று, மெய்யே யென்கிறார்.) 9
படைப்பொடு கெடுப்புக் காப்பவன்
பிரம பரம்பரன் சிவப் பிரானவனே
இடைப்பு கோருருவு மொழிவில்லை யவனே
புகழ்வில்லை யாவையும் தானே
கொடைப் பெரும் புகழார் இனையர் தன்னானார்
கூரிய விச்சை யோடு ஒழுக்கம்
நடைப்பலி இயற்கைத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றாறு அமர்ந்த நாதனே–8-4-9
கொடை பெரு புகழார்,Kodai peru pugazhaar - ஓளதாரியத்தால் மிக்க புகழையுடையராய்
இனையர்,Inaiyar - இன்னாரின்னா ரென்று ப்ரஸித்தி பெற்றவர்களாய்
தன்னானார்,Thannaanar - எம்பெருமான் றன்னோடொத்த ஜ்ஞாந சக்திகளை யுடையராயிருக்குமவர்கள்
கூரிய விச்சையோடு ஒழுக்கம் நடை பலி,Kooriya vichchaiyodu ozhukkam nadai bali - கூர்மையான ஞானமும் (அதற்கு தக்க) அனுட்டானமும் நித்ய்யாத்ரையான பகவதாராதனமும் இயல்வாகப் பெற்றிருக்குமிடமான
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அமர்ந்த நாதன்,Thiruchchengundrooril thiruchchiraaru amarnthu naadhan - திருச்சிற்றாற்றுப்பதியில்
படைப்பொடு கெடுப்பு காப்பு அவன்,Padaipodu keduppu kaappu avan - ஸ்ருஷ்டி ஸம்ஹார்ரக்ஷணங்களுக்கு நிர்வாஹகனாயிருக்குமவன்
பிரமன் பரம்பரன்,Brahman paramparan - ப்ரஹ்மஸ்வரூபியா யிருக்கிற பராத்பரன்
சிவபிரான் அவனே,Sivaabiraan avane - சிவஸ்வரூபியுமானவன்
இடை புக்கு,Idai pukku - மேற் சொன்ன இருவர்க்கு மிடையிலே ரக்ஷகனாய்ப் புகுந்து
ஓர் உருவும் ஒழிவு இல்லை அவனே,Or uruvum ozhivu illai avane - ஒரு பதார்த்தைத்தையும் விட்டு நீங்காமல் ஸர்வாந்தர்யாமி யாயிருக்குமவன்
யாவையும் தானே,Yaavayum thaane - சேதநாசேதந விபாகமின்றிக்கே எல்லாம் தன்னதீன மாயிருக்கப் பெற்றவன்
புகழ்வு இல்லை,Pugazhvu illai - இதில் அதிசயோக்தியானது ஒன்றுமில்லை.
3489திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார்.) 10
அமர்ந்த நாதனை யவரவராகி
அவரவர்கருளும் அம்மானை
அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில்
திருச் சிற்றறாங்கரையானை
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி
அவனிதேவர் வாழ்வு
அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை
நான்முகனை யமர்ந்தேனே–8-4-10
அமர்ந்த நாதனை,Amarnthu naadhanai - நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய்
அவர் அவர் ஆகி,Avar avar aagi - தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய்
அவர்க்கு அருள் அருளும் அம்மானை,Avarukku arul arulum ammaanai - அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய்
அமர்ந்த தண் பழனம்,Amarnthu than pazhanam - செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய
திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை,Thiruchchengundrooril thiruchchiraar thangaraiyaanai - திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய்
அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்,Amarnthu seer moovaayiravar vedhiyar - ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய்
அவனி தேவர் வாழ்வு,Avani dhevar vaazhvum - நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே
அமர்ந்த மானோனை,Amarnthu maanonai - பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய்
முக்கண் அம்மானை நான் முகனை,Mukkan ammaanai naan muganai - சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை
அமர்ந்தேன்,Amarnthen - கிட்டப் பெற்றேன்.
3490திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார்.) 11
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11
தேனை நன் பாலை கன்னலை அமுதே,Thenai nan paalai kannalai amudhe - தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலப் பரமபோக்யனாய்
இருந்து உலகு உண்ட அம்மானை வானம் நான்முகனை,Irundhu ulagu unda ammaanai vaanam naanmuganai - கட்டளைப்பட்ட ஜகத்தைக் காத்தருளின பெருமானாய் வானுலகத்தவனான சதுர் முகனை
மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை,Malarndha than koppool malar misai padaitha maayoonai - மலர்ந்து குளிர்ந்த திருநாபிக்கமலத்திலே யுண்டாக்கின் ஆச்சரிய பூதனுமான
கோனை,Koanai - ஸர்வேச்வரனைக்குறித்து
வண் குருகூர் வண் சடகோபன்,Van kurukoor van sadagopan - ஆழ்வார்
சொன்ன ஆயிரத்துள்,Sonna aayiraththul - அருளிச்செய்த ஆயிரத்து னுள்ளும்
இப் பத்தும்,Eppaththum - இத்திருவாய்மொழியானது
வானின் மீது ஏற்றி,Vaanin meedhu aetri - பரமபதத்திலே ஏறவிட்டு
அருள் செய்து,Arul seydhu - பகவத் கைங்கர்ய ப்ராப்து யாகிற அருளைச் செய்வித்து
பிறவி மா மாயம் கடத்தினை முடிக்கும்,Piravi maa maayam kadaththinai mudikkum - ஸம்ஸாரமாகிற ஆச்சர்ய நாடகத்தை முடித்துவிடும்.
3491திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.) 1
மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே–8-5-1
மாயக் கூத்தா,Maayak koothaa - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
வாமனா,Vaamana - வாமன லேஷங்கொண்டவனே!
வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே!
கண் கைகால் தூய செய்ய மலர்களா,Kan kaikaal thoooya seiya malargalaa - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும்
சோதி செம் வாய் முகிழதா,Sothi sem vaai mugizhathaa - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும்
சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா,Saamam saayal thirumeeni than paasam adaiyaa - சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று
நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே,Neel vaasam thamarai thadam pool varuvaane - பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே!
ஒருநாள் காணவாராய்,Orunaal kaanavaaraai - ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக.
3492திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார்.) 2
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2
கரு நாயிறு உதிக்கும்,Karu naayiru udhikkum - கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய்
மா கரு மாணிக்கம்,Maa karu maanikkam - மஹத்தான நீல ரத்னமாய்
நாள் நல் மலை போல்,Naal nal malai pool - அப்போதுண்டான அழகிய மலை போலே
சுடர் சோதி,Sudar sothi - பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய
முடி சேர்,Mudi seer - மயிர் முடியோடே சேர்ந்த
சென்னி அம்மானே,Chinni ammaane - திருமுடியையுடைய பெருமானே!
காணவாராய் என்று என்று,Kaanavaaraai endru endru - நான் காணும்படிவாராயென்று பலகலுஞ் சொல்லி
கண்ணும் வாயும் துவர்ந்து,Kannum vaayum thuvandu - பார்க்கிற கண்ணும் கூப்பிடுகிற வாயும் வசையறவுலர்ந்து
நாணி,Naani - வெட்கமுமடைந்து
நல் நாடு,Nal naadu - இந்த நல்ல நாட்டிலே
அடியேன் அலமந்தால்,Adiyaen alamandhaal - அடியேன் இப்படி தளர்ந்தால்
ஒரு நாள் இரங்கி நீ காண வாராய் அந்தோ,Oru naal irangi nee kaana vaarai andho - ஒரு நாளாகிலும் நீ க்ருபை பண்ணி நான் காண வருகிறிலையே, ஐயோ.
3493திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஆபர்ணசோபையும் அவயவசோபையுமுடையவொரு காளமேகம் நடந்து வருகிறதோ வென்னலாம்படி வந்து தோன்றவேணுமென்கிற ஆவலைக் காட்டுகிறாரிதில்.) 3
முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3
முடிசேர் சென்னி அம்மா,Mudi seer chenni amma - திருவபிஷேகத்தோடு செர்ந்த திருமுடியை யுடைய ஸ்வாமியே!
நின் மொய் பூ தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணி பெருமானே,Nin moy poo thamaan than thuzhaai kadi seer kanni perumaanai - உனக்கு அஸாதாரணமாய்ச் செறிந்து அழகிய ஒளியை யுடைய குளிர்ந்த திருத்துழாயாகிற ஸர்வாதிகனே!
என்று என்று,Endru endru - என்றிப்படி பலகாலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhakaal - பொருமிப் பொருமியழுதால்
படி சேர் மகரம் குழைகளும்,Padi seer makaram kuzhaigalum - வடிவுக்குச் சேர்ந்த மகரகுண்டலங்களும்
பவளம் வாயும்,Pavalam vaayum - பவளம் போன்ற திருவதரமும்
நால் தோளும்,Naal tholum - நான்கு திருத்தோள்களும்
துடி சேர் இடையும் அமைந்தது,Thudi ser idaiyum amaindhathu - துடிபோலே யிருக்கிற இடையுமாயமைந்த
தூ நீர் ஓர் முகில் போல் தோன்றாயே,Thoo neer or mugil pool thondraaye - தூய நீரையுடைய ஒரு காளமேகம் போலே வந்து தோன்றமாட்டேனென்கிறாயே.
3494திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இப்பாட்டும் மேற்பாட்டும் சந்தோஷமாகச் சொல்வனபோல் தோன்றும், கீழ் மேற்பாட்டுக்களில் நிர்வேதம் காணாநிற்க, இடையில் சந்தோஷம் வந்து புக ப்ரஸக்தியில்லை, இவ்விரண்டு பாசுரங்களுங்கூட நிர்வேதமாகவே சொல்லப்படுவன. உன்னுடைய வடிவழகுவந்து என்னெஞ்சிலே நிறைந்து நலிகிறவிதம் என்னால் சொல்லப்போகிறதில்லையென்று நொந்து சொல்லுகிறபடியே யிது.) 4
தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே–8-5-4
மா நீர் வெள்ளி மலை தன் மேல்,Maa neer vellli malai than meel - ஆழ்ந்த நீரினுள்ளே கிடப்பதொரு வெள்ளி மலையின் மேலே
வண் கார் நீலம் முகில் போல,Van kaar neelam mugil pool - அழகிய கார்காலத்துக் காளமேகம் போலே
தூ நீர் கடலுள்,Thoo neer kadalul - வெளுத்த நீரையுடைய பாற்கடலில்
துயில்வானே,Thuyilvaane - திருக்கண் வளர்ந்தருளுகிறவனே!
எந்தாய்,Endhaai - என் ஸ்வாமியே!
தூ நீர் முகில் போல் தோன்றும்,Thoo neer mugil pool thondraum - தெளிந்த நீர் நிறைந்த மேகம் போலே விளங்குகின்ற
நின் சுடர் கொள் வடிவும்,Nin sudar kol vadivum - உன்னுடைய ஒளி பொருந்திய வடிவும்
கனி வாயும்,Kani vaayum - கனிந்த திருவதரமும்
தேன் நீர் கமலம் கண்களும்,Then neer kamalam kankalum - மது ஜலத்தையுடைய கமலம் போன்ற திருக்கண்களும்
வந்து என் சிந்தை நிறைந்த ஆ,Vandhu en sindhai niraintha aa - இங்கே வந்து என்நெஞ்சு நிறைந்திருக்கிறபடியை
சொல்ல மாட்டேன்,Sollaa maatten - இன்னதென்று சொல்லகில்லேன்.
3495திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -உன்னுடைய அழகு என்னுடைய ஹிருதயத்திலே ஸ்ம்ருதி விஷயமாக நின்று நலியா நின்றது -இது மறக்க விரகு சொல்ல வேணும் என்கிறார்-மறக்கும் பரிகாரம் என்னுடைய அசந்நிதானம் அன்றோ -மறவீர் -என்ன -நீ மயர்வறுக்கை யாலே -துயரறு சுடர் அடி என் மனசிலே குடி புகுந்து நலியா நின்றது -மாமேகம் என்று நீயே சொல்ல வேணும்.) 5
சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5
ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுது உண்ட,Aazhi soozh mallai nyaalam muzhudhu unda - கடல் சூழ்ந்த பெரிய ஜகத்தையெல்லாம் பிரளயங்கொள்ளாமல் திருவயிற்றிலடக்கினவனாயும்
மா நீர் கொண்டல் வண்ணனே,Maa neer kondal vannaney - நிரம்பின நீரையுடைய காளமேகம் போன்ற வடிவையுடையனாயுமிருக்கின்ற பெருமானே!
அடியேன் சொல்ல மாட்டேன்,Adiyaen sollaa maatten - (என்னுள்ளத்திலுள்ள வெளிச்சத்தைப் பற்றி) அடியேன் ஒன்றும் சொல்ல தெரியாதவனாயிருக்கின்றேன். (ஆனாலும் சிறிது சொல்லுகின்றேன்)
உன் துளங்கு சோதி தரு பாதம்,Un thulangku sothi tharu paatham - உன்னுடைய விளங்கும் சோதியுடைய திருவடிகளானவை
எல்லை இல் சீர் இளஞாயிறு இரண்டு போல்,Ellai il seer ilanjaiyiru iraandu pool - அளவிறந்த அழகையுடைய இரண்டு பாலாத்தியர்களைப் போல
என் உள்ளே வா,En ullae vaa - என்னுளத்துள்ளே யிராநின்றன.
அல்லன என்னும், இருள் சேர்தற்கு, உபாயம் என்னே,Allana ennumn, irul serththarku, upaayam ennae - துக்கமென்று சொல்லப்பட்டுகற மறப்பென்கிற இருள் வந்து சேருவதற்கு எது வியோ அதை சொல்லுவேணும்.
3496திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! உன்னுடைய வடிவழகை நினைத்து காணவேணும் காணவேணுமென்று கூப்பிடுகிற நான் காணும்படி ஏதேனுமோரிடத்தில் நின்றும் சடக்கெனவோடிவந்து தோன்றக்கூடாதாவென்று மிகுந்த ஆர்த்திதோற்ற வருளிச் செய்கிறார்.) 6
கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே–8-5-6
கொண்டல் வண்ணாகுடக் கூத்தா,Kondal vannaakudak koothaa - காளமேக வண்ணனே! குடக்கூத்தாடினவனெ!
வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - அக்குடக் கூத்தைக் கண்டனபவிக்கப்பெறாத பாவியேனுக்குக் கண்ணானவனே!
கண்ணா,Kannaa - ஸ்ரீ க்ருஷ்ணனே!
என் அண்டவாணா,En andavaanaa - என்னையடிமைப் படுத்திக் கொள்ளுகைக்காகப் பரமபத நிலயனானவனே!
என்று,Endru - என்றிங்ஙனே உன்படிகளைச் சொல்லி
என்னை ஆள,Ennai aala - என்னை அடிமை கொள்ளுமாறு
கூப்பிட்டு அழைத்தக் கால்,Kooppittu azhaiththak kaal - கூவியழைத்தால்
விண் தன் மேல் தான்,Vin than meel thaan - பரமபதத்தில் நின்றோ
மண் மேல் தான்,Mann meel thaan - பூமியில் நின்றோ
விரி நீர் கடல் தான்,Viri neer kadal thaan - பரம்பின நீரையுடைய கடலில் நின்றோ
மற்று தான்,Mattru thaan - அந்தர்யாமியாயிருக்குமிடத்தில் நின்றோ,
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாயே,Thondanaen un kazhal kaana oru naal vandhu thondraaye - அடியேன் உன் திருவடிகளைக் காணும்படியாக ஒரு நாள் கூட வந்து தோன்ற மாட்டேனென்கிறாயே.
3497திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கீழ்ப்பாட்டில் * தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார், இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில்.) 7
வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7
செம் தண் கமலம்,Sem than kamalam - சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற
கண் கை கால் சிவந்த வாய்,Kan kai kaal sivandha vaay - கண்களையும் கைகளையும் கால்களையும் சிவந்த வாயையுமுயை
ஓர் கரு நாயிறு,OrKaru naayiru - ஒரு கரிய ஸூர்யன்
அந்தம் இல்லா கதர் பரப்பி,Andham illaa kathar parappi - முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி
அலர்ந்தது ஒக்கம் அம்மானே,Alarnthathu okkam ammaanai - பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே!
வந்து தோன்றாய் அன்றேல்,Vandhu thondraaye andrel - (கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும்
வையம் தாய உன் மலர் அடி கீழ்,Vaiyam thaaya un malar adi keezh - பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே
யான் முந்திவந்து நிற்ப,Yaan mundhivandu nirpa - நான் முற்பட்டு வந்து நிற்கும்படியாக
முகப்பே கூவி பணி கொள்ளாய்,Mukappe koovi pani kollai - திரு முன்பே யழைத்து அடிமை கொண்டருள வேணும்.
3498திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.) 8
ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே–8-5-8
தொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும்,Thokka meagam pal kuzhaangal kaanum thorum - திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம்
அம்மான் உருவம் ஒக்கும் என்று,Ammaan uruvam okkum endru - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று
உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - நெஞ்சுருகி
நாள் நாளும் நான் தொலைவன்,Naal naalum naan tholaiyan - நாடோறும் நான் கிலேசப்படுவேன்
அன்று,Andru - பாரதப்போர் நடந்த வக்காலத்தில்
தக்க ஐவர் தமக்கு ஆய்,Thakka aivar thamakku aay - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக
ஈர் ஐம்பதின்மர்,Eer aimpadinthmar - துரியோதனாதிகள் நூற்று வரும்
தாள் சாய,Thaal saaya - காலற்றுப் போம்படியாக
புக்க,Pukka - சேனையிடையே புகுந்த
நல் தேர் தனி பாகா,Nal ther thani paakaa - சிறந்த அத்விதீயனான ஸாரதியானவனே!
வாராய்,Vaarai - (அவ்வழகோடே) வருகின்றிலை,
பொருத்தம் இதுவோ,Poruththam idhuvo - அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ?
3499திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார்.) 9
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே–8-5-9
மின் ஆழி படை யாய்,Min aazhi padai yaai - ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே!
ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே,Eerum iru sirai pul adhudhe kodi aa uyarththaaney - வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே!
இதுவோ பொருத்தம் என்று என்று,Idhuvo poruththam endru endru - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhak kaalam - பொருமியழுதால்,
இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்,E maa nyaalam porai theerppaan - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக
மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்,Madhu vaar solai utthaa madurai pirandha maayan - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான்
எதுவே ஆக கருதும் கொல்,Ethuve aaga karudhum kol - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ?
3500திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (எம்பெருமானே! நீ அவதாரங்கள் பண்ணி ஸௌலப்யத்தைக் காட்டி நிற்கச் செய்தோம் அக்காலத்திற்குப் பிறபட்டேன், பொருள்தோறும் வியாபித்து நின்றாயாகிலும் அந்தர்யாமியைக் காண அசக்தனாயிராநின்றேன, பின்னை எங்கே காணக் கடவேனென்கிறார்.) 10
பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே–8-5-10
பிறந்த மாயா,Pirandha maayaa - அவதாரங்களைச் செய்தருளும் மாயனே!
பாரதம் பொருதமாயா,Bharatham poruthamaayaa - பாரதப்போர் புரிகையில் பல ஆச்சரியங்களைக் காட்டினவனே!
நீ இன்னே,Nee innai - நீ இப்படி எளியனாயிருக்கச் செய்தே
சிறந்த கால் தீ நீர் வான் மண் பிறவும் ஆய பெருமானே,Sirandha kaal thee neer vaan man piravum aaya perumaaney - சிறந்த பஞ்ச பூதங்களையும் அந்த பூதங்களில் நின்று முண்டான பதார்த்தங்களையும் சரீரமாகவுடைய ஸர்வாதிகனாய்
கறந்த பாலுள் நெய்யே போல்,Karandha paalul neyyai pool - கறந்த பாலினுள்ளே நெய் போலே
கண்டுகொள் இறந்து,Kandukol irandhu - கண்டுகொள்ளுதல் இல்லாதபடி.
இவற்றுள் எங்கும் நின்ற பெரு மாயா,Ivatrul engum ninra peru maayaa - மேலே சொன்ன வஸ்துக்க ளெல்லாவற்றிலும் உறைகின்ற ஆச்சர்ய பூதனே!
உன்னை எங்கே காண்கேன்,Unnai engge kaankaein - உன்னை எவ்விடத்திலே காணக்கடவேன்?
3501திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே–8-5-11
ஈன் துழாய் அம்மான் தன்னை,Een thuzhaai ammaan thannai - பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை
யான் எங்கே காண்கேன் என்று என்று,Yaan engge kaankaein endru endru - நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி
அங்கே தாழ்ந்த சொற்களால்,Angge thaalndha sorngalaal - அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே
அம் தண் குருகூர் சடகோபன்,Am than kurukoor sadagopan - ஆழ்வார்
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்,Sem kaezh sonna aayiraththul - மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே
இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இவை பத்தையும் ஓத வல்லவர்கள்
இங்கே காண,Ingae kaana - இந்நிலத்தே எல்லாரும் காணும்படி
இப்பிறப்பே, EpPirappe - இந்த ஜன்மத்திலேயே
எல்லியும் காலை மகிழ்வர்,Elliyum kaalai magizhvar - இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள்.
3502திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார்.) 1
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ,Elliyum kaalaiyum thannai ninaiththu ezha - இரவும் பகலும் உபசாரகனான தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படியாக
நல்ல அருள்கள்,Nalla arulgkal - பரம க்ருபைகளை
நமக்கே தந்து,Namakke thandhu - நமக்கே அஸாதாரணமாகச் செய்து
அருள் செய்வான்,Arul seivaan - அனுக்கிரஹம் செய்வானாய்
அல்லி அம் தண் அம் துழாய் முடி,Alli am than am thuzhaai mudi - பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான
அப்பன்,Appan - எம்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்ய தேசம் (எது வென்னில்)
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானம்,Selvargal vaazhum thirukkadiththaanam - பகவத் கைங்கர்ய ஸம்பந்தங்கள் வாழப்பெற்ற திருக்கடித்தானமாகும்.
3503திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார்.) 2
திருக் கடித்தானமும் என்னுடைச் சிந்தையும்
ஒருக்கடுத்துள்ளே உறையும் பிரான் கண்டீர்
செருக்கடுத்தன்று திகைத்த வரக்கரை
உருக்கெட வாளி பொழிந்த வொருவனே–8-6-2
அன்று,Andru - முன் பொருகாலத்தில்
செரு கடுத்து,Seru kaduthu - யுத்தத்திலே செருக்கு விஞ்சி
திகைத்த அரக்கரை,Thigaiya arakkarai - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள்
உரு கெட,Uru keda - உருவம் கெடும்படியாக
வாளி வொழிந்த ஒருவன் கண்டீர்,Vaalai vazhindha oruvan kandeer - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ
திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும்,Thirukkadiththaanamum ennudaiya singaiyum - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையும்
ஒருக்கத்து,Orukkaththu - ஒருசேரப்பிடித்து
உள்ளே உறையும் பிரான்,Ullae uraiyum piraan - இரண்டினுள்ளும் வர்த்திக்கிற பெருமான்.
3504திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பாட்டு தனிப்பட அந்வயிக்கமாட்டாது, கீழிரண்டாம் பாட்டுக்கு சேஷபூதமாகியே அந்வயிக்கும். அப்பாட்டின் பின்னடிகள் “செருக்கடுத்தன்று திகைத்தவர்க்கரை உருக்கெட வாளியொழிந்த வொருவனே” என்றுள்ளது. அப்படி வாளியொழிந்த காலத்தில் சக்ரவர்த்தி திருமகனார் இருந்தவிதம் இப்படிப்பட்ட தென்கிறது இப்பாட்டில். “வாளிபொழிந்தபடி எங்ஙனே யென்ன ஈங்ஙனே யென்கிறார்“ என்பது ஈட்டு அவதாரிகை.) 3
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று
உருவு கரந்து உள்ளும் தோறும் தித்திப்பான்
திருவமர் மார்பன் திருக் கடித் தானத்தை
மறவி யுறைகின்ற மாயப்பிரானே–8-6-3
ஒருவர் இருவர் ஓர் மூவர் என நின்று,Oruvar iruvar or moovaer ena ninru - (இலங்கையில் மூல பலத்தை முடிக்குமிடத்து) முதலில் ஒருவனாய், பின்பு இருவராய், பின்னையும் மூவராய்த் தோன்றி நின்று (பின்னையும்)
உருவு காத்து,Uruvu kaathu - ரூபம் இலக்குக் குறிக்க வொண்ணாதபடி இந்திரியத்திற்கு அவிஷயமாகி செருக்குத்தன்சு திகைத்த வரைக்கரை உருக்கெட வாளி யொழிந்த வொருவன்
திரு அமர் மார்வன்,Thiru amar maarvan - லக்ஷிமியைத் திருமார்பிலே யுடையனாய்க் கொண்டு
திருக்கடித்தானத்தை மருவி உறைகின்ற மாயப்பிரான்,Thirukkadiththaanathai maruvi uraiyinra maayappiraan - திருக்கடித்தானத்தே பொருந்தி நித்யவாஸம் பண்ணுகிற ஆச்சர்ய சீலனான எம்பெருமான்
உள்ளுந்தோறும் தித்திப்பான்,Ullundhoarum thiththippaan - நினைக்குந்தோறும் இனியனாகா நின்றான்.
3505திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தர வாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார்.) 4
மாயப்பிரான் என் வல்வினை மாய்ந்தற
நேசத்தினால் நெஞ்ச நாடு குடி கொண்டான்
தேசத்தமர் திருக் கடித் தானத்தை
வாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே–8-6-4
தேசம் அமரர்,Desam amarar - தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய்
வாசம் பொழில் மன்னு,Vaasam pozhil mann - பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான
திருக்கடித் தானத்தை,Thirukkadiththaanathai - திருக்கடித்தான மென்னும் தலத்தை
கோயில் கொண்டான் மாயப்பிரான்,Koil kondaan maayappiraan - கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான்
என வல் வினை மாய்ந்து அற,Ena val vinai maayndhu ara - என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக
நேசத்தினால்,Nesathinaal - அன்புடனே
நெஞ்சம் நாடு குடி கொண்டான்,Nenjam naadu kudi kondaan - என்னெஞ்சாகிற நாட்டைத் தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான்
3506திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார்.) 5
கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என்நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ,Koil kol deivam ellam thozha - தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக
வைகுந்தம் கோயில் கொண்ட,Vaikundham koil kondha - ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய்
குடக்கூத்த அம்மான்,Kudakkooththa ammaan - (அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன்
திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான்,Thirukkadiththaanathai than koil kondaan - திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய்
அதனோடும்,Adhanodum - அது தன்னோடே
என் நெஞ்சகம் கோயில் கொண்டான்,En nenjagam koil kondaan - என்னெஞ்சையும் தனக்குக் கோயிலாகக் கொண்டான்.
3507திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத் தோடும் எம்பெருமான் தம் திருவுள்ளத்திலே புகுந்தானென்றவாறே அத் திருப்பதியானது ஆழ்வார் திருவுள்ளத்திலே அந்தர்த்தானமாகிவிட்ட தென்றும் தனியே அதிருப்பதி கிடையாதென்றும் சிலர் நினைக்கக் கூடமாதலால் அந்த நினைவு நீங்குமாறு, திருக்கடித்தானத்தை எல்லாரும் ஆச்ரயியுங்கோளென்கிறார். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்கிற ஸ்ரீ வசநபூஷண திவ்ய ஸூக்தியின்படியே எம்பெருமானுக்கு திவ்ய தேசாபிமாநமும் குறையற்றதேயன்றோ) 6
கூத்த வம்மான் கொடியேன் இடர் முற்றவும்
மாய்த்த வம்மான் மது சூத வம்மான் உறை
பூத்த பொழில் தண் திருக் கடித் தானத்தை
ஏத்த நில்லா குறிக் கொண்மின் இடரே–8-6-6
கூத்த அம்மான்,Kootha ammaan - மநோஹரி சேஷ்டிதங்களையுடைய ஸர்வேச்வரனாய்
கொடியேன் இடர் முற்றவும் மாய்த்த அம்மான்,Kodiyaan idhar muttrum maayththa ammaan - பாவியேனுடைய துக்கங்களை யெல்லாம் போக்கின ஸ்வாமியாய்
மதுசூத அம்மான்,Madhu sooda ammaan - மதுஸூதனப் பெருமானானவன்
உறை,Urai - எழுந்தருளியிருக்குமிடமாய்
பூத்த பொழில்,Pooththa pozhil - பூத்த சோலைகளையுடைத்தான
தண் திருக்கடித்தானத்தை,Than thirukkadiththaanathai - குளிர்ந்த திருக்கடித்தானப்பதியை
ஏத்த,Aetha - துதித்த வளவிலே
இடர் நில்லா,Idhar nillaa - துக்கங்கள் நிலைகுலைந்துபோம்
குறிக்கொண்மின்,Kurikkonmin - இதைத்திண்ணமாக அறிமின்.
3508திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தானத்தை ஏத்துங்கோளென்றார் கீழ்ப்பாட்டில், ஏத்த வேண்டா, அத்தலத்தை நெஞ்சாலே நினைத்தாலும் போது மென்கிறார் இதில்.) 7
கொண்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரை
மண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக் கடித் தான நகரே–8-6-7
கோவிந்தன்,Govindan - கோவிந்தனான பெருமானுடைய
மண் விண் முழுதும் அளந்த ஒண்தாமரை,Mann vin muzuthum alandha ondhthamarai - மண்ணுலகையும் விண்ணுலகையும் ஒன்றொழியாமல் அளந்து கொண்ட அழகிய திருவடித்தாமரைகளை
மண்ணவர் தாம் தொழ,Mannavar thaam thozha - இந்நிலத்திலுள்ளார் தொழா நிற்க.
வானவர் தாம் வந்து நண்ணு,Vaanavar thaam vandhu nannu - ப்ரமபதத்திலுள்ளார் தாங்களும் (சீலகுணாநுபவம் பண்ண) வந்து சேருமிடமான
திருக்கடித்தானம் நகர்,Thirukkadiththaanam nagar - திருக்கடித்தானப்பதியை
இடர் கெட,Idhar keda - துக்கமெல்லாம் தொலைய
உள்ளத்து கொண்மின்,Ullathu konmin - நெஞ்சிலே கொண்டு சிந்தியுங்கோள்
3509திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (எம்பெருமானுக்கு ஸ்தானமான விலக்ஷண நகரங்கள் பல பல வுண்டா யிருக்கச் செய்தேயும் என்னுடைய நெஞ்சையும் திருக்கடித்தானத திருப்பதியையும் தனக்கு தாய ப்ராப்தமான ஸ்தானமாகக் கொண்டு விரும்பி யிருப்பதாக அருளிச் செய்கிறாரிதில்.) 8
தான நகர்கள் தலைச் சிறந்து எங்கும்
வானிந்நிலம் கடல் முற்றும் எம் மாயற்கே
ஆனவிடத்தும் என்நெஞ்சம் திருக் கடித்
தான நகரும் தனதாய்ப் பதியே–8-6-8
வான் இ நிலம் கடல் எங்கெங்கும்,Vaan e nilam kadal engengum - பரமபதம் இவ்வுலகம் திருப்பாற்படல் ஆகிய எல்லாவிடத்தும்
தானம் நகர்கள் முற்றும்,Thaanam nagarhal muzhudhum - வாஸஸ்தானமான நகரங்கள் முற்றவும்
தலை சிறந்து,Thalai sirandhu - மிக்க சிறப்பமைத்து
எம்மாயற்கே ஆன இடத்தும்,Emmaayarkae aan idaththum - எம்பெருமானுக்கே ஆயிருக்கைச் செய்தேயும்
என் நெஞ்சும்,En nenjum - எனது நெஞ்சமும்
திருக்கடித்தானம் நகரும்,Thirukkadiththaanam nagarum - திருக்கடித்தான மென்கிற திருப்பதியும்
தன தாயம் பதியே,Thana thaayam pathiye - தனக்கே அஸாதாரண ப்ராப்தமான தலமாயிரா நின்றது.
3510திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (திருக்கடித்தாமொன்றேயோ அவனுக்கு தாய்ப்ராப்தம்? எல்லாத் தலங்களுமே தாயப்ராப்தமன்றோவென்ன, அன்றென்று சொல்லமுடியாது, ஆனாலும் என்னோடே கிட்டுகைக்குறுப்பான தலமென்று திருக்கடித்தானத்திலே விசேஷாபிமானங் கொண்டிருக்கிறானென்கிறார்.) 9
தாயப்பதிகள் தலைச் சிறந்து எங்கும் எங்கும்
மாயத்தினால் மன்னி வீற்று இருந்தான் உறை
தேசத்தமரர் திருக்கடித் தானத்துள்
ஆயர்க்கதிபதி அற்புதன் தானே–8-6-9
தேசம் அமரர் திருக்கடித்தானத்துள் உறை,Desam amarar thirukkadiththaanaththul urai - தேசுபொலிந்த நித்யஸூரிகளுக்கும் பிராப்ய மான திருக்கடித்தானப் பதியிலே வாழ்பவனாய்
ஆயர்க்கு அதிபதி,Aayarkku athipathi - கோபாலர் தலைவனாய்
அற்புதன் தான்,Arputhan thaan - ஆச்சர்யபூதனான பெருமான் தான்
தாயப் பதிகள் எங்கெங்கும் தலை சிறந்து,Thaayap padikal engengum thalai sirandhu - தனக்கு அஸாதாரணமான திருப்பதிகள் எல்லாவிடத்திலும் சிறப்பமைந்து
மாயத்தினால்,Maayaththinaal - தன்னுடைய இச்சையினாலே
மன்னி வீற்றிருந்தான்,Manni veetrirundhaan - பொருந்தியெழுந்தருளி யிருப்பவன்
3511திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (ஆழ்வார் தம்மைப் பெறுமளவும் எம்பெருமான் திருக்கடித்தானத்திலே நின்றருளினான், இவர் தம்மைப் பெற்று ஸம்ச்லேஷித்த பிறகு நிற்பதுமிருப்பதும் இவர்தம் நெஞ்சிலேயாயிற்று என்கிறது இப்பாட்டு.) 10
அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே–8-6-10
அற்புதன்,Arputhan - அத்புத சேஷ்டிதனாய்
நாராயணன்,Naarayanan - நாராயணனாய்
அரி வாமனன்,Ari vaamanan - ஹரியாய் வாமனனான எம்பெருமான்
மேவி இருப்பது என் நெஞ்சகம்,Mevi iruppathu en nenjagam - பொருந்தியிருப்பது என்னெஞ்சினுள்ளே,
நிற்பது,Nirpathu - அதற்காகவந்து நிற்பது (எவ்விடத்திலென்னில்)
நல் புகழ் வேதியர்,Nal pugazh vedhiyar - புகழ்மிக்க வைதிகருடைய
நால் மறை,Naal marai - நான்கு வேதங்களும்
நின்று அதிர்,Nindra adhira - நிலைநின்று முழங்கும்படியாய்
கற்பகம் சோலை,Karppagam solai - கற்பகம் போன்ற மரங்கள் நிறைந்ததான
திருக்கடித்தானம்,Thirukkadiththaanam - திருக்கடித்தானத்திலே
3512திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (இப்பதிகமானது தன்னைக் கற்றவர்களைத் தானே திருநாட்டிலே கொண்டு போய்வைக்குமென்று பயனுரைத்துத் தலைகட்டுகின்றார்.) 11
சோலைத் திருக் கடித் தானத்துறை திரு
மாலை மதிட் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுதன்ன ஆயிரத்திப் பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே–8-6-11
சோலை திருக்கடித் தானத்து உறை திருமாலை,Solai thirukkadiththaanaththul urai thirumaalai - சோலைமிக்க திருக்கடித்தானப்பதியில் வாழும் திருமாலைக்குறித்து
மதிள் குருகூர் சட கோபன்,Madhil kurukoor sadagopan - நம்மாழ்வார்
சொல்,Sol - அருளிச்செய்ததாய்
பாலோடு அமுது அன்ன,Paalodu amudhu annam - பாலும் அமுதும் கலந்தாற்போல் பரம போக்யமான
ஆயிரத்து,Aayirathu - ஆயிரத்தினுள்ளே
இ பத்தும்,Ip paththum - இப்பதிகம்
மேலை வைகுந்தத்து,Melai vaikundhathu - ஸர்வோத்தமான ஸ்ரீ வைகுண்டத்திலே
வியந்து இருத்தும்,Viyandhu iruththum - உகந்து இருக்கச் செய்யும்.
3513திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (நான் அர்த்தியாய்க் கூப்பிட்டழைக்க விடாயெல்லாம் தீரும்படி. தான் அர்த்தியாய் என்னெஞ்சிலே பெறாப்பேறு பெற்றானாகப் புகுந்திராநின்றானென்கிறார்.) 1
இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே–8-7-1
என்னை,Ennai - அடியனை
வியந்து,Viyandhu - திருவுள்ளமுவந்து
தன் பொன் அடி கீழ் இருத்தும் என்று,Than pon adi keezh iruththum endru - தன் திருவடிகளின் கீழே இருத்தியருள்வானாக வென்று
அருத்தித்து எனைத்தோர் பல நாள்,Aruththiththu enai thoor pala naal - அனேக காலம் நாள்தோறும்
அழைத்தேற்கு,Azhaiththaeerku - அழைத்துக் கூப்பிட்ட வென் விஷயத்தில்
பொருத்தம் உடை வாமனன் தான் புகுந்து,Poruththam udai vaamanan thaan pugundhu - ப்ராவண்யமுடையனான எம்பெருமான் தானே வந்து புகுந்து
என் தன் கருத்தை உற,En than karuththai ura - என்னுடைய கருத்தைத் தானுடையனாய்க்கொண்டு
கண்டு கொண்டு,Kandu kondu - என்னையே பார்த்துக்கொண்டு
வீற்றிருந்தான்,Veetrirundhaan - எழுந்தருளியிரா நின்றான்
3514திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார்.) 2
இருந்தான் கண்டு கொண்டே எனதேழை நெஞ்சாளும்
திருந்தாத வோரைவரைத் தேய்ந்தற மன்னி
பெருந்தாட் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்
தருந்தானருள் தான் இனி யானறியேனே–8-7-2
எனது ஏழை நெஞ்சு ஆளும்,Enathu ezhai nenju aalum - என்னுடைய சபலமான நெஞ்சைத் தங்களிஷ்டப்படி நடத்திக் கொண்டு போகிற
திருந்தாக ஓர் ஐவரை,Thirundhaaka or aivarai - துஷ்டபஞ்சேந்திரியங்களும்
தேய்ந்து அறமன்னி,Theyndhu aramanni - க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து
கண்டு கொண்டு இருந்தான்,Kandu kondu irundhaan - (நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான்.
பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான்,Peru thaal kalitrrukku arul seydha perumaan thaan - பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன்
தரும் அருள் தான்,Tharum arul thaan - அந்த யானைக்கத் தந்த வருளை
இனி யான் அறியேன்,Ini yaan ariyaen - என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன்.
3515திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 3
அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3
அருள் தான் இனியான் அறியேன்,Arul thaan iniyaan ariyaen - இவ்வருளல்லது மற்றோரருளை நானோர்ருளாக மதியேன்
அவன் தான்,Avan thaan - அப்பெருமான்
என் உன் இருள் அற,En un irul ara - எனது உள்ளிருள் தொலையும்படி
வீற்றிருந்தான்,Veetrirundhaan - (எண்ணுள்ளே) எழுந்தருளியிராநின்றான்,
இது அல்லால்,Idhu allaal - இவ்விருப்புத்தவிர
பொருள் தான் எனில்,Porul thaan enil - (அவனுக்கு) வேறு புருஷார்த்த முண்டோவென்னில்
மூ உலகும் பொருள் அல்ல,Moo ulagum porul alla - த்ரிலோகாதிபதித்வமும் ஒரு பொருளாகவுள்ள தன்று
ஈது மருள் தானோ,Idhu marul thaano - இது தான் என்ன ப்ரம்மோ!
மாயம் மயக்கு மயக்கே,Maayam mayakku mayakkae - (அவன் தான்) ஆச்சரியமான ப்ர்ரமகசேஷ்டிதங்களாலே மயக்குகிற படியோ?
3516திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (ஸர்வேச்வரன் தம் பக்கலிலே இப்படி அளவு கடந்த வியாமோஹத்தைப் பண்ணுகையாகிறவிது. ஆலோசித்துப் பார்த்தால் அஸம்பாவிதம்போல் தோன்றுகையாலே இது மெய்யாயிருக்க வழியில்லை, மருளோ? மாயமயக்கோ? என்று அலைபாய்கிறார்.) 4
மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே–8-7-4
ஆயன்,Aayan - கோபலக்ருஷ்ணனாயும்
அமரர்க்கு,Amararukku - நித்யஸூரிகளுக்கு
அரி ஏறு,Ari yeru - அளவிடமுடியாத மேன்மையையுடையனாயு மிருக்கிற
எனது அம்மான்,Enathu ammaan - எம்பெருமான்
தேசம் திகழும் தன்திரு அருள் செய்து,Desam thigazhum than thiru arul seydhu - தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி
தனது தூய சுடர் சோதி,Thanathu thooya sudar sothi - தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை
என் உள் வைத்தான்,En ul vaiththaan - எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்)
என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான்,Ennai vanjiththu maaya mayakku mayakkaan - என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன்
3517திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (“தேசந் திகழுந்தன் திருவருள் செய்தே“ என்று கீழ்ப்பாட்டிலருளிச்செய்த்தை இதில் விவரித்தருளுகிறார்.) 5
திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே–8-7-5
திகழும் தன் திரு அருள் செய்து,Thigazhum than thiru arul seydhu - மிகப்பொலிகின்ற தன் திருவருளைப்பண்ணி
உலகத்தார் புகழும் புகழ் அது தான் காட்டி தந்து,Ulagaththar pugazhum pugazh adhu thaan kaatti thandhu - லோகத்தார் இதுகண்டு புகழுகிற அப்புகழையும் பிரபலப்படுத்தி
என்னுள் திகழும் மணி குன்றம்,Ennul thigazhum mani kundram - என்னுள்ளே, விளங்கரநின்றதொரு மாணிக்க மலைபோலே நின்றான்,
எனக்கு மற்று புகழும் புகழ் ஓர் பொருளே,Enakku matru pugazhum pugazh or porule - எனக்கு இந்நிலையொழிய வேறு விதமாக அவனைப் புகழ்வதும் ஒரு பொருளோ.
3518திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) ( உலகத்தார் எம்பெருமான் பக்கலில் அபேக்ஷிப்பது இரண்டு வகைப்பட்டது, ஐச்வர்ய கைவல்யாதிகளான இதர புருஷார்த்தங்களை யபேக்ஷிப்பதென்பதொன்று, அவையொன்றும் வேண்டாதே “எமக்கு நீயே வேணும்“ என்று அவன்றன்னையே அபேக்ஷிப்பது மற்றொன்று. இவ்விதமாகவே, எம்பெருமான் உபகரித்தருளுகிறவிதமும் இரண்டுவகைப்பட்டது, சிலர்க்கு இதர புருஷார்த்தங்களைக் கொடுத்துவிடுதல், சிலர்க்குத் தன்னையே கொடுத்துவிடுதல். ஆழ்வார்க்கு அவன் உபகரிப்பது இதர புருஷார்த்தங்களையன்றே, தன்னையே யன்றோ கொடுப்பது. அது கிடைத்ததாகவன்றோ ஆழ்வாரும் களிப்பது. இப்படி, தன்னையே தமக்குத் தந்தருளினதானது, தன்னை வேறு யாரும் கொள்வாரில்லையென்பதனாலன்று, என் பக்கலுள்ள அபிநிவேசத்தாலே தந்தானென்கிறாரிப்பாட்டில்.) 6
பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே–8-7-6
கரு மாணிக்கம் குன்றத்து,Karu maanikkam kundrathu - கருமாணிக்க மலையின் மேலே
தாமரை போல்,Thaamarai pool - தாமரைக்காடு அவர்ந்தாற்போன்ற
திரு மார்வு கால் கண் கை செம்வாய் உந்தியான்,Thiru maarvu kaal kann kai sem vaai undhiyaan - திருமார்பு முதலிய திவ்யாவயவங்களையுடையனான பெருமான்
மற்று பொருள் தன்னில்,Matru porul thannil - மற்றுள்ள புருஷார்த்தங்களிலே
எனக்கும் ஓர் பொருள் சீர்க்கதரும் எல்,Enakkum or porul seerkkadharum el - எனக்கும் ஒரு புருஷார்த்தத்தைத் தந்து விட்டானாகில்
பின்னை அவன்,Pinnai avan - பின்னே அவன் உயர்ந்த
தன்னை ஆர்க்கு கொடுக்கும்,Thannai aarkku kodukkum - புருஷார்த்தமான தன்னை ஆருக்குக் கொடுப்பான்.
3519திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத் திருப்பவளத்திலழகை யனுபவித்துப் பேசுகிறார்.) 7
செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7
செம் வாய் உந்தி வெண் பல் சுடர் குழை தன்னோடு,Sem vaai undhi ven pal sudar kuzai thannodu - சிவந்தவாய் திருநாபி வெளுத்த திருமுத்து அழகிய மகரக்குழை ஆகிய அவற்றோடே கூட
எவ்வாய் சுடரும்,Evvaai sudarum - மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும்
தம்மில் முன்வளாய்க் கொள்ள,Thammil munvalaik kollai - ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள
செம் வாய் முறுவரோடு,Sem vaai muruvarodu - சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட
எனது உள்ளத்து இருந்த,Enathu ullathu irundha - என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற
அவ்வாய் அன்றி,Avvaai anri - அவ்வித மொழுய
மற்று அருள் யான் அறியேன்,Matru arul yaan ariyaen - வேறொன்றையும் நான் நினைக்கின்றிலே.
3520திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி தம்மிடத்திலே எம்பெருமான் நிர்ஹேதுகமாகச் செய்தருளின அருளையிட்டு நிர்ஹேதுகமாக அருள் செய்கையே அவனுக்கு இயல்பு என்று அவன்றன்படியை நிஷ்கர்ஷிக்கிறாரிப்பாட்டில்.) 8
அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே–8-7-8
மற்று அருள் அறியேன்,Matru arul ariyaen - வேறொன்றையும் உபகாரமாக நினைத்தருக்கின்றிலேன்,
என்னை ஆளும் பிரானார்,Ennai aalum piraanaar - என்னை அடிமை கொண்ட ஸ்வாமியானவர்
செய்வார்கட்கு,Seivaarukku - தாம் அருள் செய்ய நினைத்தவர்கட்கு
வெறிதே,Verithae - நிர்ஹேதுகமாகவே
உகந்து அருள் செய்வர்,Ugandhu arul seivar - திருவுள்ளமுகந்து க்ருபை பண்ணுவர்
மூ உலகும் நெறி ஆ,Moo ulagum neri aa - மூவுலகங்களையும் முறைதப்பாதபடி.
தம் வயிற்றில் கொண்டு,Tham vayittril kondu - தமக்குள்ளே கூடக் கொண்டு
சிறியேனுடை சிந்தையுள் நின்றொழிந்தாரே,Siriyenudai sindhaiyul nindrozhandhaar - க்ஷுத்ரனான என்னெஞ்சிலே நின்று விட்டாரே.
3521திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகரித்தமையைக் கீழ்ப்பாட்டிலருளிச் செய்த ஆழ்வாரை நோக்கி ஆழ்வீர்! ஒரு வ்யாஜமாத்ரமுமில்லாமல் எம்பெருமான் விஷயீகரிப்பனோ? ஏதேனுமொரு வ்யாஜ மிருக்குமே, அதைச் சொல்லிக்காணீர், என்று சிலர் கேட்பதாகக் கொண்டு, அவனுடைய விஷயீகாரத்தை விலக்காமையாகிற அனுமதிமாத்திரமே நான் பண்ணினது. இவ்வளவேயென்கிறாரிப்பாட்டில். “மன்னவைத்தேன் மதியாலே“ என்ற ஈற்றடி இப்பாட்டுக்கு உயிரானது. ஆசார்ய ஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் (110) “மதியால் இசைந்தோமென்னும் அநுமதீச்சைகள் இருத்துவ மென்னாத வென்னை இசைவித்த என்னிசைவினது“ என்ற சூர்ணையின் பொருள் இங்கே அறியத்தக்கது.) 9
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே–8-7-9
வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும்,Vayittril kondu nindrozhandhaarum - தாயானவள் வயிற்றிலே வைத்து நோக்குமா போலே ரக்ஷகராகின்ற இந்நிலத்தரசர்களையும்
யவரும்,Yavarum - அவர்களுக்கும் மேலான பிரமன் முதலானாரையும்
வயிற்றில் கொண்டு நின்று,Vayittril kondu nindru - தம்முடைய ஸ்வரூபைக தேசத்திலே கொண்டு நின்று
ஒரு மூ உலகும்,Oru moo ulagum - மூவுலகங்களையும்
தன் வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை,Than vayittril kondu nindra vannam nindra maalai - தன்னுடைய வயிற்றிலே கொண்டு அநாயாஸமாக இருக்கின்ற திருமாலை
மதியாலே,Madhiyalae - அவர் தந்த அனுமதியாலே
வயிற்றில் கொண்டு,Vayittril kondu - என்னுள்ளே கொண்டு
மன்ன வைத்தேன்,Manna vaiththen - பேராதபடி வைத்தேன்.
3522திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இப்படி யென்னுள்ளே புகுந்தவனை நான் இனியொரு நாளும் விட்டு வருத்தகில்லேனென்கிறார்.) 10
வைத்தேன் மதியால் எனது உள்ளத்தக்கத்தே
எய்த்தே ஒழிவேன் அல்லேன் என்றும் எப்போதும்
மெய்த்தேய் திரை மோது தண் பாற் கடலுளால்
பைத்ததேய் சுடர்ப் பாம்பணை நம் பரனையே –8-7-10
மொய்த்து ஏய் திரை மோது,Moiththu ey thirai modhu - செறித்து ஏய்த்த அலைகள் மோதப்பெற்ற
தண் பாற்கடலுள்,Than paarkadalul - குளிர்ந்த திருப்பாற்கடலிலே
வைத்து ஏய் சுடர் பாம்பு அணை நம்பரனை,Vaiththu ey sudar paambu anai namparanai - படமெடுத்துத் தகுதியான தேஜஸ்ஸையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய எம்பெருமானை
மதியால்,Madhiyal - அனுமதியாலே
எனது உள்ளத்து அகத்தே,Enathu ullaththu agaththae - என்னெஞ்சிலுள்ளே
வைத்தேன்,Vaiththen - பொருந்த வைத்தேன்,
என்றும் எப்போதும் எய்த்தே ஒழிவேன் அல்லேன்,Endrum eppothum eyththae ozhivaen allaen - இனி யொருநாளும் இளைத்துத் தளரமாட்டேன்
3523திருவாய்மொழி || (8-7—இருந்தும் வியந்து) (தம் உள்ளத்தில் எம்பெருமான் வீற்றிருந்த படியை ஆழ்வார் கூறி மகிழ்தல்) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பயனாக ஜன்ம ஸம்பந்த நிவ்ருத்தியை யருளிச் செய்கிறார்.) 11
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11
சுடர் பாம்பு அணை நம் பரனை திருமாலை,Sudar paambu anai nam paranai thirumaalai - தேசுமிக்கசேஷயனனாய் அஸ்மத் ஸ்வாமியான திருமாலை
அடி சேர் வகைவண் குருகூர் சடகோபன்,Adi ser vagaivan kurukoor sadagopan - திருவடி பணிகையையே இயல்வாகவுடையரான ஆழ்வார்
முடிப்பான் சொன்ன,Mudippaan sonna - ஸம்ஸாரஸம்பந்தத்தை முடிப்பதற்காக அருளிச்செய்த
ஆயிரத்து,Aayiraththu - ஆயிரத்தினுள்
இ பத்தும்,I paththum - இப்பதிகம்
சன்மம் அற தேய்ந்து விட,Sanmam ara theyndhu vida - பிறப்பானது நன்றாகத் தொலைந்துபோம்படி
தன் கண்கள் சிவந்து நோக்கும்,Than kankal sivandhu nokkum - தன் கண்கள் சிவக்கப்பார்க்கும்
3524திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக் கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக் காட்டக் கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது.) 1
கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன்
நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன்
அடியேன் உள்ளானே–8-8-1
கண்கள் சிவந்து பெரிய ஆய்,Kangal sivandhu periya aay - திருக்கண்கள் சிவந்தும் பெருத்துமிருப்பனவாய்
வாயும் சிவந்து கனிந்து,Vaayum sivandhu kanindhu - திருவதரமும் சிவந்து பழுத்து
உள்ளே,Ullae - அகவாயிலே
வெண் பல் இலகு சுடர்,Ven pal ilaku sudar - வெளுத்த திருமுத்துக்களினுடைய விளங்குகிற சுடரையுடையனாய்
இலகு விலகு மகர குண்டலத்தன்,Ilaku vilaku makara kundaladhan - மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய்
கொண்டல் வண்ணன்,Kondal vannan - காள மேக நிறத்தனாய்
சுடர் முடியன்,Sudar mudhiyan - ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய்
நான்கு தோளன்,Naangu tholan - திருத்தோள்கள் நான்குமுடையனாய்
குனி சார்ங்கன்,Kuni saaringan - வளைந்த சார்ங்கவில்லையுடையனாய்
ஒண் சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன்,On shangu kathival aazhiyaan oruvan - அழகிய சங்கும் கதையும் வாளும் ஆழியுமுடையனான வொருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - அடியேனுடைய உள்ளே விளங்கா நின்றான்.
3525திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ விலஷணனாய் இருக்கிற எம்பெருமான் -என் உள்ளே புகுந்து அருளுகை அன்றிக்கே -என் சரீரத்தின் உள்ளே புகுந்து அருளினான் -என்கிறார் -என்னுள்ளான்-என்ன வேண்டும் இடத்தில் -அடியேன் உள்ளான் -என்கையாலே -அடியேன் என்றும் -நான் என்றும் பர்யாயம் ) 2
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்தகத்தான் புறத்துள்ளான்
படியேயிது வென்றுரைக்கலாம்
படியனல்லன் பரம் பரன்
கடி சேர் நாற்றத்துள்ளாலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஓடியா வின்பப் பெருமையோன்
உணர்விலும்பர் ஒருவனே–8-8-2
அண்டத்து அகத்தான்,Andathu akathaan - அண்டத்துக்குட்பட்ட ஸகல பதார்த்தங்களுக்கும் அந்த ராத்மாவாய்
புறத்து உள்ளான்,Purathu ullaan - அண்டத்துக்குப் புறம்புபட்ட பதார்த்தங்களுக்கும் அந்தராத்மாவாய்.
இதுவே படி என்று உரைக்கல் ஆம் படியன் அல்லன்,Idhuvae padhi endru uraikkal aam padiyan allan - இதுவே ப்ரகாரமென்று சொல்லலாவதொரு ப்ரகாரத்தையுடையனல்லாதனாய்
பரம்பரன்,Parambara - பராத்பரனாய்
கடி நாற்றம் சேர்,Kadi naatram ser - விலக்ஷணான பரிமளங்களெல்லாம் சேர்ந்த
ஆலையுள்,Aalaiyul - தேனிலுள்ள
இன்பம்,Inbam - சுவையினுடைய
துன்பம் கழி நேர்மை,Thunbam kazhi naermai - கோதுகழிந்த ஸாரமான பாகம் போலிருக்கிற
ஒடியா,Odiyaa - விச்சேத மற்று நித்யமான
இன்பம் பெருமையோன்,Inbam perumaiyon - ஆனந்தமயனாய்
உணர்வில் உம்பர் ஒருவன்,Unarvil umbar oruvan - அறிவு விஷயத்தில் மேற்பட்டிருப்பவனான ஒருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - பட்டிருப்பவனான ஒருவன் ஆத்மாவில் அந்தராத்மாவாயிரா நின்றான்
உடல் உள்ளான்,Udal ullaan - சரீரத்தினுள்ளாமிராநின்றான்.
3526திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே தன் விஷயத்தில் இசை வையுமுண்டாக்கி என்னோடே கலந்து அந்தக் கலவி நிலைத்து நிற்பதற்காக, விலக்ஷணமாய்த் தனக்கு அநந்யார்ஹமான ஆத்மஸ்ரூபத்தையுங் காட்டிக்கொடுத்தருளினா னென்கிறார்.) 3
உணர்விலும் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன்
அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்
மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3
உணர்வில் உம்பர் ஒருவனை,Unarvil umbar oruvanai - அயர்வறும்மரர்களதி பதியை
அவனது அருளால்,Avanathu arulaal - அவனுடைய க்ருபையாலே
உறல் பொருட்டு,Ural porutthu - கிட்டுகைக்காக
என் உணர்வின் உள்ளே,En unarvin ullae - என்னுடைய அபேக்ஷையாகிற ஞானத்துக்குள்ளே
இருத்தினேன்,Iruththinaen - இருக்கச் செய்தேன்
அதுவும்,Adhuvum - அந்த அபேக்ஷை நிர்ஹேதுக க்ருபையடியாக உண்டானதே
உணர்வும் உயிரும் உடம்பும்,Unarvum uyirum udambum - (இப்படி என்னை இசைவித்து என்னுள்ளே புகுந்தவன்) விஷயஙகளைப் பற்றுகிற ஞானமும் பிராணனும் சரீரமும்
மற்று உலப்பிலனவும்,Matru ulappilanavum - மற்று முண்டான அளவற்ற ப்ரக்ருதிவிகாரங்களும்
பழுதே ஆம் உணர்வை பெற ஊர்ந்து,Pazhudhe aam unarvai peraa oorndhu - ஹேய மென்கிற உணர்வைப் பெறும்படியாக நடத்தி
இறவு ஏறி,Iravu aeri - ஆத்மஸ்வரூபத்தைக் காட்டித்தருகையாகிற முடிவளவும் நடத்தி
யானும் தான் ஆய் ஒழிந்தான்,Yaanum thaan aay ozhinthaan - என்னைச் சொல்லும் சொல்லாலே தன்னைச் சொல்ல்லாம்படியான அளவும் காட்டித்தந்தான்.
3527திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இவ்வாத்மா தனக்குப் பரபோயமென்னுமிடத்தையும் காட்டித் தந்தருளின படியையருளிச் செய்கிறாரிதில்.) 4
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனுமாகிப்
பணைத்த தனி முதலை
தேனும் பாலும் கன்னலும்
அமுதுமாகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே–8-8-4
யாதும் யவர்க்கும் முன்னோனை,Yadhum yavarkkum munnonai - ஸகல சேதநாசேதநங்களுக்கும் காரண பூதனும்
தானும் சிவனும் பிரமனும் ஆகி பணைத்த தனி முதலை,Thaanum sivanum brahmanum aagi panaiyatha thani mudhalai - தானான தன்மையனாயும் சிவனாயும் பிரமனாயும் விஸத்ருதனானப்ரதான காரண பூதனும்.
தேனும் பாலும் கன்னலும் அமுதும் ஆகி தித்தித்து,Thenum paalum kannalum amudhum aagi thiththiththu - தனக்குப் பரமபோக்ய மாய்க் கொண்டு ரஸித்து
என் ஊனில் உயிரில் உணர்வினில் நின்ற ஒன்றை,En oonil uyiril unarvinil ninra onraai - என்னுடைய சரீரத்திலும் பிராணனிலும் ஞானத்திலும் வியாபித்துநின்ற ஆத்மாவை சரீரமாக யுடையனுமாய்
யானும் தானாய் ஒழிந்தானை,Yaanum thaan aay ozhindhaanai - நானும் தானாய்விட்டவனான எம்பெருமானை
உணர்ந்தேன்,Unarnthaan - அறிப் பெற்றேன்.
3528திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமானது திருவருளால் நானறிந்த ஆத்ம வஸ்து வேறொருவர்க்கு மறியக் கூடியதன்று, அறிந்தாலும் ஸாக்ஷாத் கரிக்கக் கூடியதென்று என்கிறதிப்பாட்டில்.) 5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரலாகாது
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது
சென்று சென்று பரம்பரம் ஆய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே–8-8-5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு,Ninra onraai unarnthaanukku - நித்யமாய் ஜ்ஞாநைதஸ்வரூபமான ஆத்ம வஸ்துவை எம்பெருமான் தனக்கு ப்ரகாரமாகக் காட்டிக்கொடுக்கக் கண்ட எனக்குப்போலே
அதன் நுண் நேர்மை,Adhan nun naermai - அவ்வாத்மஸ்வரூபத்தின் ஸூக்ஷ்ம்மான வைலக்ஷணயம்
அது இது என்று,Adhu idhu endru - அப்படிப்பட்டது இப்படிப்பட்டதென்று
ஒருவர்க்கு ஒனறும் உணரல் ஆகாது உணர்த்தும்,Oruvarrkkum onrum unaral aagathu unarththum - மாஞானியர்க்கும் சிறிதும் அறியப்போகாது, வருந்தி ஒருவாறு அறிந்தாலும்
மேலும் காண்பு அரிது,Melum kaanbu aridhu - ஸாக்ஷாத்கரிக்கப்போகாது,
சென்று சென்று பரம்பரம் ஆய்,Senru senru parambaraam aay - ஒன்றுக்கொன்று மேற்பட்ட தாகி
யாதும் இன்றி தேய்ந்து அற்று,Yaadum inri theendhu aatru - அவற்றின் ஸ்வபாவம் ஒன்றுமின்றிக்கே அவற்றோடு தொற்றற்று
நன்று தீது என்று அறிவு அரிது ஆய்,Nandru theethu endru arivu aridhu aay - ப்ராக்ருதங்களுக்குண்டான நன்மை தீமைகள் அறியவரிதாய்
நன்று ஆய்,Nandru aay - ஸர்வ விலக்ஷணமாய்
ஞானம் கடந்தது,Gyaanam kadandhadhu - அவற்றைப் பற்றின ஞானத்திற்கு விஷயமன்றியே யிருந்தது.
3529திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (யோகசாஸத்ரத்தில் ஆத்மஷ்வரூப ப்ராப்திக்கு உபாயமாகச் சொல்லப்படுகிற இந்திரிய ஜயம் முதலானவையாகிற யோகத்தாலே ப்ரக்ருதியில் நின்றும் விடுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை ஒருவாறு வருந்தி ஸாக்ஷாத்கரிக்கலா மென்கிறாரிதில்.) 6
நன்றாய் ஞானம் கடந்து போய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே–8-8-6
ஞானம் கடந்து போய்,Gyaanam kadandhu pooi - இந்திரிய கோசரமாஷயங்களை தப்பிபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து,Nal indriyam ellam eerththu - கொடுமை மிக்க இந்திரயங்கமுயும் கழித்து
ஒன்று ஆய் கிடந்த அரு பெரு அதனை உலப்பு இல் பாழ் அதனை உணர்ந்து உணர்ந்து,Onru aay kidandha aru peru adhanai ulappu il paazh adhanai unarnthu unarnthu - பிரிக்கமுடியாதபடி பொருந்தியிருக்கிற அரிய பெரிய அஸங்க்யாதமான ப்ரக்ருதித்தவத்தை ஆத்மாவிற் காட்டிலும் வேறு பட்டதாக வுணர்ந்து
நன்றாய் ஆங்கு சென்று,Nandru aay aanggu senru - ஆத்ம ஸ்வரூபத்தளவுஞ் சென்று
இன்பம் துன்பங்கள் செற்று களைந்து,Inbam thunbangal setru kalaindhu - ஸுகத்துக்கங்களுக்கு அடியான புண்ய பாபங்களையும் விட்டு
பசை அற்றால்,Pasai atral - அவற்றில் ருசி வாஸகைகளும் கழியுண்டால்
அன்றே,Andrae - அன்றைக்கே
அப்போதே,Appodhe - அந்த க்ஷணத்திலேயே
வீடு,Veedu - ப்ரக்ருதிப்ராக்ருதங்களினிற்று விடு படுகையாகும்,
அதுவே வீடு வீடு ஆம்,Adhuvae veedu veedu aay - அதுவே ஆத்மாநுபவமோக்ஷமாம்.
3530திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இங்குச் சொன்னபடியே ஆத்மஸாக்ஷாத்காரம் பண்ணப் பாராமல் வேறு சில வழிகளில் முயன்றால் அம்முயற்சி கைகூடாதென்கிறார்.) 7
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறி
எதுவே தானும் பற்று இன்றி
ஆதும் இலிகளா கிற்கில்
அதுவே வீடு வீடு பேற்று
இன்பம் தானும் அது தேறாது
எதுவே வீடு எது இன்பம் என்று
எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே–8-8-7
அதுவே,Adhuvae - எம்பெருமானுக்கு ப்ரகாரமாகக் கீழே ப்ரஸதாவிக்கப்பட்ட அவ்வாத்மாநுபவமே
வீடு,Veedu - போக்ஷமாவது
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷலாபத்தால் வரும் ஆனந்தமும் அது,
தேறி,Thaeri - இப்படியாக நிஷ்கர்ஷித்து
எதுவே தானும் பற்று இன்றி,Edhuvae thaanum pattru inri - ப்ரக்ருதிப்ராக்ருதங்களெல்லாவற்றிலும் ஸங்கமற்று
ஆதும் இலிகள் ஆகிற்கில்,Aadhum iligal aakirkkil - ருசி வாஸனைகளுமில்லாதவர்களாக ஆகப்பெற்றால்
அதுவே வீடு,Adhuvae veedu - அதுதான் மோக்ஷம்
வீடு பேறு இன்பம் தானும் அது,Veedu peru inbam thaanum adhu - மோக்ஷானந்தமும் அதுவே
தேறாது,Theradhu - இப்படி தெளியமாட்டாமல்
வீடு எதுஇன்பம் எது என்று எய்த்தார்,Veedu edhu inbam edhu endru eyththaar - மோக்ஷமாவது எது? ஆனந்தமாவது எது? என்று கலங்கியே நிற்பவர்கள்
எய்த்தார் எய்த்தாரே,Eyththaar eyththaar - என்றும் கலங்கியே கிடப்பர்களத்தனை.
3531திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (பெறுதற்கரிதான இந்த ஞானம் ஒருவாறு கைவந்தாலும் எம்பெருமானைப் பற்றின அந்திம ஸ்மிருதி யில்லையாகில் இந்த ஞானம் கைபுகுருகைக்குப்பட்ட க்லேசமெல்லாம் பழுதேயாகுமென்கிறார்.) 8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று
இல்லத்தாரும் புறத்தாரும்
மொய்த்து ஆங்கு அலறி முயங்கத்
தாம் போகும் போது உன்
மத்தர் போல் பித்தே ஏறி
அனுராகம் பொழியும் போது எம் பெம்மானோ
டொத்தே சென்று அங்கு உள்ளம்
கூடக் கூடிற்றாகில் நல்லுறைப்பே–8-8-8
எய்த்தார் எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து,Eyththaar eyththaar eyththaar endru illaththaarum puraththaarum moiydhu - முடிந்தார் முடிந்தார் முடிந்தாரென்று கூச்சலிட்டு வீட்டிலுள்ளவர்களும் மற்றுமுள்ளவர்களும் திரண்டு
ஆங்கு அலறி முயங்க,Aangu alari muyanga - அவ்வவஸ்தையிலே அலறிக் கட்டிக்கொள்ள
தாம் போகும்போது,Thaam pogumpoathu - உத்க்ரமணமாகிறவப்போது
உன்மத்தர் போல் பித்தே ஏறி,Unmaththar poal pitthae aeri - உன்மத்தர்கள் போல். நெஞ்சு கலங்கி
அனுராகம் பொழியும் போது,Anuraagam pozhiyum poathu - அனுராகம் மிகமிகப்பெருங்குங் காலத்தில்
எம்பெரும்மானோடு ஒத்தே சென்று,Emperummaanodu oththae senru - (கலக்கமற்றுத் தெளிவுபிறந்து) எம்பெருமானிடத்தில் பொருத்தமுண்டாகி
அங்கு உள்ளம் கூட கூடிற்றாகில்,Angu ullam kooda koodidraagil - அப்பெருமான் பக்கலிலே நெஞ்சு ப்ரவணமாகப் பெற்றால்
நல் உறைப்பு,Nal uraiyppu - நல்லவுறுதியாம். (அந்திம ஸ்மிருதி யுண்டானால் பலனாகும் என்கை.)
3532திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (கீழ்ப்பாட்டில் அந்திமஸ்மிருதிவேணுமென்று சொல்லிற்று, அந்த ப்ரஸ்தாவத்தில் ஜீவாதமா வேறு, பரமாத்மா வேறு என்கிற உண்மைப் பொருள் தேறுகையாலே இப்படியுள்ள ஜீவ பர பேதத்தை யதார்த்தமாகக் கொள்ளாதே, இந்த பேதம் அபரமார்த்தம், தத்வஜ்ஞானம் பிறந்த ஆத்மாவும் ப்ரஹ்ம்மும் ஏகதத்வமேயென்று கொண்டு, நித்யஸம்ஸாரியான சேதநனையே ப்ரஹ்ம்மாகச் சொல்லுகிற மாயாவாதிகள் நினைவுக்கு வர, அவர்களின் பக்ஷத்தை ப்ரதிக்ஷேபிக்கிறார் இப்பாட்டில்.) 9
கூடிற்றாகில் நல் உறைப்பு
கூடாமையைக் கூடினால்
ஆடல் பறவை யுயர் கொடி
எம்மாயனாவாத துவதுவே
வீடைப் பண்ணி யொரு பரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்
ஓடித் திரியும் யோகிகளும்
உளரும் இல்லை அல்லரே–8-8-9
கூடிற்று ஆகில் நல் உறைப்பு,Koodidru aagil nal uraiyppu - ஜீவாத்ம ஸ்வரூபமும் பரமாத்ம ஸ்வரூபமும் ஒன்றாகப் பெற்றால் நல்லவாய்ப்புத்தான்,
கூடாமையை கூடினால்,Koodamaai koodinaal - அஸம்பாவிதமானவை ஸம்பவிக்கப் பெற்றால்
அது,Adhu - அந்த ஜீவ்வஸ்துவானது
ஆடல் பறவை உயர்கொடி எம்மாயன் ஆவது,Aadal paravai uyarkkodi emmaayan aavadhu - ஆடுபுட் கொடியையுடைய எம்பெருமானாக்கூடும் (இதுதான் அஸம்பாவிதமென்கை) (ஆதலால்)
அதுவே,Adhuvae - ஜீவ்வஸ்து வாகவே நிற்குமத்தனை (ஜீவபரபேதம் ஒருகாலும் போகாதென்றவாறு)
ஒரு பரிசே விடை பண்ணி,Oru parisai vidai pannni - தங்கள் மனம்போனவொரு விதமாகவே மோக்ஷ வஸ்துவைக் கல்பிப்பார்
எதிர்வும் நிகழ்வும் கழிவும் ஆய்,Edhirvum nigazhvum kazhivum aay - முக்காலத்து முள்ளாராய்
ஒடி திரியும்,Odi thiriyum - ஸம்ஸார பதவியிலேயே உழன்று கொண்டிருப்பாராய்
யோகிகளும்,Yogigalum - (குத்ருஷ்டிகளான) சில மஹாநுபாவர்ளும்
உளர், இல்லை அல்லர்,Ular, illai allar - இருக்கிறார்களே யொழிய இல்லாமற் போகவில்லை. (எதிர்வும் நிகழ்வும் கழிவுமாயுளர், இல்லை யல்லர் என்று அந்வயிப்பது)
3533திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது.) 10
உளரும் இல்லை அல்லராய்
உளராய் யில்லை யாகியே
உளர் எம் ஒருவர் அவர் வந்து
என் உள்ளத்துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும் போலே
அசைவும் ஆக்கமும்
வளருஞ்சுடரும் இருளும் போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10
இல்லை அல்லர் ஆய் உளரும்,Illai allar aay ularum - (அடியார்களுக்கு)இல்லை யென்னாதபடி உளராயிருப்பவராய்)
இல்லை ஆகியே,Illai aagiye - (மற்றையோர்க்கு) இல்லையாகியே உளராயிருப்பவராய்
எம் ஒருவர் உளர்,Em oruvar ular - எம்பெருமானுளர்
அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்,Avar vandhu en ullaththullaai uraiykinraar - அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறைப் போலே ஆக்கமும்,Valarum pirai polaai aakkamum - வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும்
தேய் பிளை போல அசைவும்,Thei pilai pola asaiyum - க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி
வளரும் கடரும் இருளும் போல்,Valarum kadarum irulum pola - ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான
தெருளும் மருளும் மாய்த்தோம்,Therulum marulum maayththom - கழித்துக்கொள்ளப்பெற்றோம்.
3534திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இத்திருவாய்மொழி பகவத் ப்ராப்தியைப் பண்ணி தருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
தெருளும் மருளும் மாய்த்துத்
தன் திருந்து செம் பொற் கழல் அடிக் கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓராயிரத்துள் இப்பத்தால்
அருளி யடிக் கீழ் இருத்தும்
நம் அண்ணல் கரு மாணிக்கமே–8-8-11
தெருளும் மருளும் மாய்த்து,Therulum marulum maayththu - ஜ்ஞாரா ஜ்ஞானங்கள் கலசிவருகிற ரீதியை யொழித்து
தன்,Than - தன்னுடைய
திருந்து செம்பொன் கழல் அடி கீழ்,Thirundhu sempon kazhal adi keezh - அழகிய செம்பொன்னாலான வீரக்கழணிந்த திருவடிகளின் கீழே
அருளி இருத்தும்,Aruli iruththum - பரம கிருபைபண்ணி ஸ்தாபிக்கிற
அம்மான் ஆம்,Ammaan aam - ஸ்வாமியாய்
அயன் ஆம் சிவன் ஆம் திருமாலால்,Ayan aam sivan aam thirumaalal - பிரமனுக்கும் சிவனுக்கும் அந்தர்யாமியாயிருந்து ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை நிர்வஹிக்கிற எம்பெருமானாலே
அருளப்பட்ட,Arulappatta - மயர்வற மதிநலமருளப்பெற்ற
சடகோபன்,Sadagopan - நம்மாழ்வாருடைய
ஓர் ஆயிரத்துள் இ பத்தால்,Or aayiraththul i paththaal - ஆயிரத்துள் இப்பதிகம் நிமித்தமாக
நம் அண்ணல் கருமாணிக்கம்,Nam annal karumaanikkam - கரியமாணிக்கம் போன்ற நம் ஸ்வாமி
அருளி அடி கீழ் இருந்தும்,Aruli adi keezh irundhum - (இத்திருவாய்மொழியை ஓதுமவர்களை) கிருபை பண்ணித் தன் திருவடிகளின்கீழே இருத்துவன்
3535திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூர்ப் பெருமானுடைய திவ்யாவயவஸௌந்தரியத்தைக் கண்டு, அவ்வடிவழகல்லது மற்றொன்று அறியாதபடி யீடுபட்டாள் இத்தலைவி –என்று தோழியானவள் தாய்மார்க்கு உரைக்கின்றாள்.) 1
கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1
கரு மாணிக்கம் மலைமேல்,Karu manikkam malaimel - கரிய மாணிக்க மலையின் மேலில்
மணி தட தாமரை காடுகள் போல்,Mani thada thaamarai kaadugal pol - அழகியெ பெரிய தாமரைக்காடுகள் போலே
திருமார்பு வாய் கண் கை உந்தி கால் உடை ஆடைகள் செய்ய பிரான்,Thirumaarbu vaay kan kai undhi kaal udai aadaigal seiyya piraan - திருமார்பு திருப்பவளம் திருக்கண் திருக்கை திருவுந்தி திருவடி திருப்பீதாம்பரம் ஆகிய இவை சிவந்திருக்கப்பெற்ற ஸ்வாமியாய்
திருமால் எம்மான்,Thirumaal emmaan - திருமகள் கொழுநனான வழியாலே எனக்கு நாயகனாய்,
செழு நீர் வயல்,Sezhu neer vayal - செழிந்த நீர் நிறைந்த வயலையுடைய
குட்டநாடு திருபுலியூர்,Kuttanaadu thirupuliyoor - குட்டநாட்டுத் திருப்புலியில் எழுந்தருளியிருப்பவனான
அரு மாயன்,Aru maayan - பெறுதற்கரிய ஆச்சரிய பூதனுடைய
பேர் அன்றி பேச்சு இலள்,Per anri peechu illal - திருநாமப்பேச் சொழிய வேறொரு பேச்சு மறியாள் (இத்தலைவி)
அன்னை மீர்,Annai meer - தாய்மார்களே!
இதற்கு என் செய்கேனோ,Idharku en seigai - இதற்கு யாது செய்வேனோ?
3536திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (தலைவியின் இந்நிகழ்ச்சிக்குத் தோழியானதான் உடன்பட்டவளல்லள் என்பதைத் தாய்மார்க்கு மெய்ப்பிக்கவேண்டி அன்னைமீரிதற்கென் செய்கேனென்று அடிக்கடி சொல்லுகிறாள் (தோழி)) 2
அன்னைமீரிதற் கென் செய்கேன்
அணி மேருவின் மீதுலவும்
துன்னு சூழ் சுடர் நாயிறும்
அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீண் முடி யாரம்
பல்கலன் தானுடை யெம்பெருமான்
புன்னை பூம் பொழில் சூழ்
திருப் புலியூர் புகழும் இவளே–8-9-2
அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்-,Annayameer! Idharku en seykken - அன்னைமீர்! இதற்கு என் செய்கேன்-
அணி மேருவின் மீது உலவும்,Ani meruvin meethu ulavum - அழகிய மேருமலையின் மேலே யிருப்பதாய்,
துன்னு சூழ் சுடர்,Thunnu sooz sudar - செறித்து சூழ்ந்த சுடரை யுடைத்தான்
நாயிலும்,Naayilum - ஸூர்யனும்
அன்றியும்,Andriyum - அவ்வளவே யல்லாமல்
பல் சுடர்களும் போல்,Pal sudarkalum pol - பலவகைப்பட்ட க்ரஹநக்ஷத்ரங்களினுடைய தேஜஸ்ஸும்போலே யிருக்கிற
மின்னு நீள் முடி ஆரம் பல் கலன் தான் உடை எம்பெருமான்,Minnu neel mudi aaram pal kalan than udai emperumaan - ஒளி பொருந்தி ஓங்கின திருவபிஷேகம் ஹாரம் முதலான பல திருவாபரணங்களை யுடையனான எம்பெருமானுடைய
புன்னை அம்பொழில் சூழ் திருப்புலியூர்,Punnai ampozhil sooz thiruppuliyoor - அழகிய புன்னைச் சோலைகளாலே சூழப்பட்ட திருப்புலியூரை
இவள் புகழும்,Eval pugazhum - இத்தலைவி (நிரநதரமாகப்) புகழ்ந்து கொண்டிராநின்றாள்.
3537திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருப் புலியிரிலே எம்பெருமானுடைய ஆண் பிள்ளைத் தனத்திலே இவள் அகப்பட்டு அவனுடைய ஸுர்யாதி களுக்கு வாசகமான திரு நாமங்களை பெரும் கிளர்த்தியோடே பேசா நின்றாள் என்கிறாள்.) 3
புகழும் இவள் நின்று இராப்பகல் பொரு நீர்க்
கடல் தீப் பட்டு எங்கும்
திகழும் எரியோடு செல்வது ஒப்ப
செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்தி போர் புக்கு
அசுரரைப் பொன்றுவித்தான்
திகழும் மணி நெடு மாடம் நீடு
திருப் புலியூர் வளமே–8-9-3
பொரு நீர் கடல் தீப்பட்டு,Poru neer kadal theepattu - அலையெறிகின்ற கடலானது நெருப்புக் கொளுத்தி
எஙகும் திகழும் எரியோடு செல்வது ஒப்ப,Engum thigalum eriyodu selvathu oppa - எங்கும் விளங்குகின்ற ஜ்வாலைகளோடேகூடி நடந்து வருவதுபோலே
செழு கதிர் ஆழி முதல் புகழும் பொரு படை ஏந்தி,Sezhu kathir aazhi mudhal pugazhum poru padai endhi - மிக்க வொளியையுடைய திருவாழி முதலன புகழ்மிக்க திவ்யாயுதங்களை தரித்து
போர் புக்கு,Poor pooku - போர்க்களத்திலே புகுந்து
அசுரரை பொன்று வித்தான்,Asurarai ponru vittaan - அஸுரர்களை யழியச் செய்த பெருமானுடைய
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளம்,Thigalum mani nedu maadam needu thiruppuliyoor valam - விளங்குகின்ற ரத்னமயமான உயர்ந்த மாடங்களை வரிசையாக வுடையதிருப்புலியூரியழகை
இவள் இராப்பகல் நின்று புகழும்,Eval iraapagal ninru pugazhum - இத்தலைவி இரவும் பகலும் ஓவாது புகழா நின்றாள்.
3538திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -வெறும் ஆண் பிள்ளைத் தனமே அன்றிக்கே -குணவானாய் ஆபத்சகனாய் -இருக்கிறவனுடைய குணாதிக்யத்திலே இவள் ஈடுபட்டாள் என்கிறாள்.) 4
ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும்
பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தண் பணைக் குட்ட
நாட்டுத் திருப் புலியூர்
சீர் வளம் கிளர் மூவுலகு உண்டு உமிழ்
தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்ததன்றிப் பேச்சு இலள்
இன்று இப் புனை இழையே–8-9-4
ஊர் வளம் கிளர் சோலையும்,Oor valam kilar soalayum - ஊரின் வளத்தைத் தெரிவிக்கின்ற சோலைகளும்
கரும்பும் பெருசெந்நெலும் சூழ்ந்து,Karumbum perucennanellum soozhndhu - கரும்புகளும் பெரிய செந்நெற் பயிர்களும் சூழப்பெற்றிருப்பதாய்
ஏர் வளம் கிளர் தண் பணை,Yer valam kilar than panai - செல்லு மழகுமிக்க குளிர்ந்த நீர் நிலங்களை யுடைத்தான
குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரில்
சீர் வளம் கிளர்,Seer valam kilar - திருக்குணங்களின் சிறப்பு விளங்கப் பெற்ற
மூ உலகு உண்டு,Moo ulagu undu - த்ரிலோக ரக்ஷகனான எம்பெருமானுடைய
பேர் வளம்,Per valam - திருநாமங்களின் சிறப்பை
இன்று,Enru - ஆபரணமணிந்த இந்நாளில்
இப் புனையிழை,Ep punaiyizhai - இத்தலைமகள்
கிளர்ந்தன்றி பேச்சு இலள்,Kilarndhanri peechu illal - ஓவாது சொல்லா நின்றாள்.
3539திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (ஸ்ரீஆறாயிரப்படியருளிச் செயல்காண்மின், “அவன் ஸௌந்தர்ய சீலாதிகுணங்களை உடையனானாலென், வேறேயொருவனை அந்வேஷித்து அவனுக்கும் கொடுக்கக் கடவதாய்ச் சொல்லாநின்றபின்பு இனிச் செய்யலாவதில்லை யென்று தாயர் சொல்ல, தோழியானவள், இயற்கையிற்புணர்ச்சியைச் சொல்லுகை ஈடன்றியேயிருக்கச் செய்தே “இவளயிழக்கிறோம் என்னும் பயத்தாலே முன்னமே திருப்புலியூர் முனைவனான ஸர்வேச்வரனிவளோடே புணர்ந்தருளினானென்கிறாள்“ என்று.) 5
புனையிழைகள் அணிவும்
ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று
இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும்
தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி
அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5
புனை இழைகள் அணிவும்,Punai izhaigal anivum - ஆபரணங்கள் பூணும்மழகும்
ஆடை உடையும்,Aadai udaiyum - சேலையுடுக்குமழகும்
புதுக்கணிப்பும்,Puthukkanippum - வடிவில் பிறந்த புதுமையும்
இவட்கு நின்று நினைக்க புக்கால்,Ivatku ninru ninaikka pukkaal - இத்தலைவிக்கு இருக்கும்படியை ஆராய்ந்தால்
இது நினையும்,Ithu ninaiyum - இந்த வைலக்ஷண்யம் (லோகமர்யாதையில் நினைக்கக் கூடியதாக இல்லை, (ஆதலால்)
சுனையினுள் தட தாமரை மலரும்,Sunaiyinul thada thamarai malarum - சுனைகளுக்குள்ளே பெரிய தாமரைகள் மலரப்பெற்ற
தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூர்க்குத்
முனைவன்,Munaivan - தலைவனும்
மூ உலகு ஆளி அப்பன்,Moo ulagu aali appan - த்ரிலோகாதிபதியுமான எம்பெருமானுடைய
திரு அருள் மூழ்கினள்,Thiru arul moozhginanl - திருவருளிலே இவள் அவகாஹிக்கப் பெற்றிருக்கவேண்டும்.
3540திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பெண்பிள்ளையின் அதரம் இதற்கு முன்பிருந்தபடியும் இப்போதிருக்கிறபடியும் காணமாட்டீர்களோ? அதரத்தில் பழுப்புக்கு அடியறியீர்களோ? திருப்புலியூர்ச்சோலைகளில் வளரும் கமுகம்பழத்தின் பழுப்புப்போலே யிராநின்றபடி பாரீர், அவ்வூர்ப்பெருமான் தன்னுடைய ஸௌந்தர்ய ஸௌலப்யாதிகளைக் காட்டி இவளையீடுபடுத்திக் கொண்டானென்பதற்கும் இவளுக்கு அவனோடு கலவி ப்ராப்தமாயிற்றென்பதற்கும் அடையாளம் ஒன்றிரண்டல்லவே, நீங்களே நன்கு ஆராய்ந்து பார்க்கலாமே யென்கிறாள் தோழி.) 6
திருவருள் மூழ்கி வைகலும்
செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடை
யாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று
சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்
தது மெல்லியல் செவ்விதழே–8-9-6
செழுநீர் நிறம் கண்ணபிரான் திருஅருள்,Sezhu neer niram kannapiraan thiru arul - கடல் வண்ணனான கண்ணபிரானுடைய திருவருளிலே
வைகலும் மூழ்கி,Vaikalum moozhgi - நிரந்தரமாக அவகாஹித்து
திரு அருள்களும் சேர்ந்தமைக்கு,Thiru arulgalum serndamaiyku - (அவனது) ஸகலவித அநுக்ரஹங்களையும் பெற்றமைக்கு
அடையாளம் திருந்த உள,Adaayaalam thirundha ula - அடையாளங்கள் மறைக்க வொண்ணாதபடியுள்ளன.(அவற்றுள் முக்கியமான அடையாளம் மொன்று கேளீர்)
திரு அருள் அருளால்,Thiru arul arulal - தன்னுடைய திருவருளை அருளுகைக்காக
அவன் சென்று சேர் தண் திருப்புலியூர்,Avan sendru ser thaan thiruppuliyoor - அப்பெருமான் வந்துறையுமிடமான குளிர்ந்த திருப்புலியூரில்
திரு அருள் கழுகு ஒண் பழத்தது,Thiru arul kazhugu on pazhaththu - அவனதருளால் வளரும் கமுகினுடைய அழகிய பழம் போன்றுள்ளது.
மெல் இயல் செம் இதழ்,Mel iyal sem idhazh - இத்தலைவியின் சிவந்த அதரம்.
3541திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரிலுள்ள அஃறிணைப் பொருள்களுங்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழாநிற்கு மியல்வைக்கண்டு இத்தலைவியும் அத்திருப்பதி யெம்பெருமானோடே கலந்துவாழப்பெற்றாளென்கிறாள் தோழி.) 7
மெல்லிலைச் செல்வ வண் கொடிப் புல்க
வீங்கிளந்தான் கமுகின்
மல்லிலை மடல் வாழை
ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தெங்கினூடு
காலுலவும் தண் திருப் புலியூர்
மல்லலஞ் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள்
இம் மடவரலே–8-9-7
மெல் இலை செல்வம் வண் கொடி புல்க,Mel ilai selvam van kodi pulka - மெல்லிய இலைத்தழைப்பையும் அழகையுமுடைய வெற்றிலைக்கொடி சூழ்ந்தணைக்க
வீங்கு இள தாள் கமுகின்,Veengu ila thaal kamukin - அத்தாலே முதிர்ந்து இளகிப்பதித்த அடியுரத்தை யுடைய கமுகினருகேயுள்ள
மல் லை மடல் வாழை,Mal lai madal vazhai - செறிந்த இலைகளையும் மடல்களையுமுடைய வாழைகளினுடைய
ஈன் கனி சூழ்ந்து,Ean kani soozhndhu - பழக்குலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதனால்
மணம் கமழ்ந்து,Manam kamazhnthu - பரிமளம் விஞ்சி
புல் இலை தெங்கி னூடு,Pul ilai thengki noodu - செறிந்த ஓலைகளையுடைய தென்னை மரங்களின் நடுவே
கால் உலவும்,Kaal ulavum - தென்றற்காற்று உலாவும்படியான
தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரில்
மல்லல் அம் செல்வம் கண்ணன் தாள்,Mallal am selvam kannan thaal - ப்ரணயித்வமாகிற பெருஞ்செல்வத்தையுடையனான எம்பெருமானது திருவடிகளை
இ மடவரல் அடைந்தாள்,EMadavaral adaindhaal - இத்தலைவி அடைந்தாள் போலும்.
3542திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (திருப்புலியூரின் வைதிக ஸம்ருத்தியையுங்கண்டு இத்தலைவி அவ்வூர்த்தலைவன் பக்கலிலேயீடுபாடு கொண்டாளென்கிறான் தோழி.) 8
மடவரல் அன்னை மீர்கட்கு
என் சொல்லிச் சொல்லுகேன் மல்லைச் செல்வ
வடமொழி மறை வாணர்
வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்
தண் திருப் புலியூர்
படவர வணையான் தன் நாமம் அல்லால்
பரவாள் இவளே–8-9-8
அன்னைமீர்கட்கு மடவரல் என் சொல்லி சொல்லுகேன்,Annayameer kadku madavural en solli sollugeen - தாய்மாரான உங்களுக்கு இவளது நலத்தைப்பற்றி என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்,
மல்லை செல்வம் வடமொழி மறைவாணர்,Mallai selvam vadamozhi maraivaanar - மஹாஸம்பந்நர்களான ஸம்ஸ்க்ருத வேதாத்யயன பர்ர்களினுடைய
வேள்விபுள்,Velvipul - யாகங்களிலே
நெய் அழல் வான் புகை,Ney azhal vaan pugai - நெய்யிடப்பெற்ற அக்னியினுடைய பெரிய புகையானது
போய்,Poi - கிளம்பிச்சென்று
திடம் விகம்பில் அமர்ர் நாட்டை மறைக்கும்,Thidam vikambil amarr naattai maraikkum - திடமான ஆகாசத்தில் தேலோகத்தை மறைக்கும்படியான
தண் திருப்புலியூர்,Than thiruppuliyoor - குளிர்ந்த திருப்புலியூரிலே
படம் அரசு அணையான் தன் நாம்ம் அல்லால்,Padam arasu anaiyaan than naam allaal - படமொடுத்த அரவாகிற சயன்த்திலே சயனித்தவனுடைய திருநாம்மல்லது (வேறொன்றையும்)
இவள் பரவாள்,Ival paravaal - இத்தலைவி சொல்லுகின்றிலள்.
3543திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (பாட்டினடியிலுள்ள பரவாளிவள் என்பதற்கு, பாட்டின் முடிவிலுள்ள திருப்புலியூர்ப்புகழன்றிமற்றே என்பதோடு அந்வயங்காண்க. திருப்புலியூரின் புகழை வாய்விட்டுச் சொல்லுவதுதவிர வேறொன்றுமறியாளித்தலைவி –என்கிறாள் தோழி.) 9
பரவாள் இவள் நின்று இராப்பகல்
பனி நீர் நிறக் கண்ணபிரான்
விரவாரிசை மறை வேதியரொலி
வேலையின் நின்று ஒலிப்ப
கரவார் தடந்தொறும்தாமரைக்கயம்
தீவிகை நின்றலரும்
புரவார் கழனிகள் சூழ்
திருப் புலியூர்ப் புகழ் அன்றி மற்றே–8-9-9
பனி நீர் நிறம் கண்ணபிரான்,Pani neer niram kannapiraan - குளிர் நீர் நிறத்தனான கண்ணபிரானுடைய,
விரவு ஆர் இசை மறை வேதியர் ஒலி,Viravu aar isai marai vedhiyar oli - கலந்து நிரம்பின இசையையுடைய வேதங்களை வைதிகர் சொல்லுவதாலுண்டான ஒலியானது
வேலையின் நின்று,Velaaiyin ninru - கடல்போல் முழங்க
கரவு ஆர் தடம் தொறும்,Karavu aar thadam thorum - முதலைகள் மிக்கிருந்துள்ள பொய்கைக்ள் தோறும்
தாமரை கயம்,Thaamarai kayam - தாமரைத் திரள்கள்
தீவிகை நின்று அலரும்,Theevigai ninru alarum - நிலைவிளக்குப்போலே அலராநிற்குமிடமாய்
புரவு ஆர் கழனிகள் சூழ்,Puravu aar kazhaneegal soozh - ஸாரம் மிக்க கழனிகளாலே சூழப்பட்டதான
திருப்புலியூர்,Thiruppuliyoor - திருப்புலியூரினுடைய
புகழ் அன்றி,Pugazh andri - புகழொழிய
இவள் இராப்பகல் நின்று மற்று பரவாள்,Ival iraapagal ninru matru paravaal - இத்தலைவி இரவும் பகலும் வேறொன்றைச் சொல்லுகின்றாள்.
3544திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இத்தலைவி திருப்புலியூர்ப் பெருமானுடைய கலவியைப் பெற்றாளென்னுமிடத்திற்கு ஒருவிதமான அந்யதாஸித்தியும் சொல்லமுடியாத நல்லடையாளமுண்டென்று மூதலிக்கிறாள் தோழி.) 10
அன்றி மற்றோர் உபாயம் என்
இவள் அம்தண் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக்
கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
நின்ற மாயப் பிரான் திருவருளாம்
இவள் நேர் பட்டதே–8-9-10
இவள் அம் தண் துழாய் கமழ்தல்,eval am than thuzhaai kamazhdhal - இத்தலைவி அழகிய குளிர்ந்த திருத்துழாய்ப் பரிமளம் கமழப்பெற்றிருப்பதற்கு
அன்றி மற்று ஓர் உபாயம் என்,Andri matru or upaayam en - இப்போது நான் சொல்லப்போகிற காரணமொழிய வேறு என்ன காரணமிருக்க்க்கூடும்? (அஃது என்ன வென்றால்)
குன்றம் மா மணி மாடம் மாளிகை கோலம் குழாங்கள் மல்கி,Kunram maa mani maadam maaligai kolam kuzhaangal malki - குன்றம்போல் சிறந்த மணிமாட மாளிகைகளின் அழகிய திரள்கள் நெருங்கப்பெற்று
தென்திசை திலகம் புரை,Then thisai thilagam purai - தென் திசைக்குத் திலகம் போன்றுள்ளதான
குட்டநாடு திருப்புலியூர்,Kuttanaadu thiruppuliyoor - திருப்புலியூரிலே
நின்ற,Ninru - எழுந்தருளியுள்ள
மாயன் பிரான்,Maayan piraan - மாயப்பெருமானுடைய
திரு அருள் இவள் நேர்பட்டது ஆம்,Thiru arul ival nerpatthathu aam - திருவருளை இத்தலைவி பெற்றிருத்தல் வேண்டும்
3545திருவாய்மொழி || (8-9–கருமாணிக்க) (தலைவியின் உண்மைக் காதலைத் தாய்மாருக்குத் தோழி எடுத்துரைத்து அயல் மணம் விலக்கல் (திருப்புலியூர்)) (இப்பதிகம் கற்றவர்கள் இவ்வாத்மாவுக்குச் சிறந்த புருஷார்த்தமான பகவத்கைங்கரியத்தைப் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகின்றார்.) 11
நேர்பட்ட நிறை மூவுலகுக்கும்
நாயகன் தன்னடிமை
நேர்பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர்
தொண்டன் சடகோபன் சொல்
நேர்பட்ட தமிழ் மாலை
ஆயிரத்துள் இவை பத்தும்
நேர்பட்டார் அவர் நேர்பட்டார்
நெடுமாற்கு அடிமை செய்யவே–8-9-11
நின்ற மூ உலகுக்கும் நேர்பட்ட நாயகன் தன்,Ninra moo ulakukkum nerpatta naayagan than - உலகங்களெல்லாவற்றுக்கும் வாய்த்த ஸ்வாமியானவனுடைய
அடிமை,Adimai - கைங்கரியத்திற்கு
நேர்பட்ட,Nerpatta - தகுதியையுடைய
தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்,Thondar thondar thondar thondan sadagopan - தாஸ தாஸ தாஸாநு தாஸரான ஆழ்வாருடைய
சொல் நேர்பட்ட,Soll nerpatta - சொல்வாய்ப்பையுடைய
தமிழ் மாலை,Tamizh maalai - தமிழ் மாலையான
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்திலுள்ளே
இவை பத்தும் நேர்பட்டார் அவர்,Ivai pathum nerpattaar avar - இப்பதிகத்தைப் பயிலப்பெற்றவர்கள்
நெடுமாற்கு அடிமை செய்ய நேர்பட்டார்,Nedumarku adimai seiyya nerpattaar - ஸர்வேச்வரனுக்கு அடிமை செய்ய வாய்த்தவராவர்.
3546திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத கைங்கர்யமாகிற பெருஞ்செல்வம் கிடைக்கப் பெற்றால் மூவுலகாளுஞ் செல்வமும் இத்தோடொவ்வாதென்று இதன் பரம போக்யதையைப் பேசுகிறார்.) 1
நெடுமாற்கு அடிமை செய்வன் போல்
அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள்
முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே
கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ
வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1
nedu maarku,நெடு மாற்கு - ஸர்வேச்வரனுக்கு
adimai seyaveen pol,அடிமை செயவேன்போல் - அடிமை செய்பவன் போலவிருந்து
avanai karutha,அவனை கருத - அப்பெருமானை நினைத்தவளவிலே
thee kadhigal mutrum,தீ கதிகள் முற்றும் - (என்னிடத்திலிருந்த) தீவினைகளெல்லாம்
vanjithu,வஞ்சித்து - வஞ்சனை செய்து (என்னோடு சொல்லாமலே)
tadumaarru atra,தடுமாற்று அற்ற - நிச்சயமாக
tavirndha sadhir ninaitthaal,தவிர்ந்த சதிர் நினைத்தால் - என்னைவிட்டு நீங்கிப் போனபடியை ஆராயந்து பார்த்தால்
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விஷ்தாரமான மூவுலகையும் பேறாகப் பெற நேர்ந்தாலுங்கூட (அதை உபேக்ஷித்து
avan adiyaar adiye koodum idhu allaal,அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் - பாகவதர்களின் திருவடிகளையே அடைவது தவிர
kodu maavinyen,கொடு மாவினையென் - பெரும் அந்த பாவியாகிய நான்
veetum aaru enpathu en,வீடும் ஆறு என்பது என் - (அந்த பாகவத சேஷத்தவ்தை) விடுவதென்று ஒன்று உண்டோ?
antho,அந்தோ - இதை நான் சொல்லவும் வேணுமோ?
3547திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிரண்டுங் கூடினாலும் நான் பெற்ற பாகவத சேஷத்வமாகிற புருஷார்த்த்த்தோடு ஒவ்வாதென்கிறார்.) 2
வியன் மூ வுலகு பெறினும் போய்த்
தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி
அம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார்
திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது
உறுமோ பாவியேனுக்கே–8-10-2
viyal moo ulagu perinum,வியல் மூ உலகு பெறினும் - விபுலத்ரிலோக ஸாம்ராஜ்யத்தைப்பெற்றாலும்,
poi,போய் - அதற்கும் மேலான
thaane thaane aanalum,தானே தானே ஆனாலும் - தன்னைத் தானே யநுபவிக்கையாகிற கைவல்ய மோக்ஷம் பெற்றாலும்
puyal megham pol thirumeni ammaan,புயல் மேகம் போல் திருமேனி அம்மான் - மழைகாலத்து மேகம் போன்ற திருமேனி வாய்ந்த எம்பெருமானுடைய
punai poo kazhal adikeel,புனை பூ கழல் அடிகீழ் - சாத்தின புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைத்தான திருவடி வாரத்திலே
sayame,சயமே - ஸ்வயம் பிரயோஜநமாக
adimai thalai nindraar,அடிமை தலை நின்றார் - கைங்கர்யத்தின் மேலெல்லை யிலே நிலை நின்றவர்களுடைய
thiru thal vanangi,திரு தாள் வணங்கி - திருவடிகளைத் தொழுது
immaye,இம்மையே - இஹலோகத்திலேயே
yaan perthadhu,யான் பெற்றது - நான் அடைந்த்து
payane inbam,பயனே இன்பம் - புருஷார்த்தமான சுகமே
paaviyaenukku,பாவியேனுக்கு - பாவியான வெனக்கு
urumo,உறுமோ - (கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள்) இப்பேற்றுக்கு ஒக்குமோ?
3548திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஐச்வர்ய கைவல்யங்களிற் காட்டிலும் விலக்ஷணமான பகவல்லாபமுண்டானாலும் இங்கேயிருந்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்கையோடொவ்வாது என்கிறாப்பாட்டில்.) 3
உறுமோ பாவியேனுக்கு
இவ்வுலக மூன்றுமுடன் நிறைய
சிறுமா மேனி நிமிர்ந்த
எம் செந்தாமரைக் கண் திருக் குறளன்
நறு மா விரை நாள் மலரடிக் கீழ்
புகுதல் அன்றி அவன் அடியார்
சிறுமா மனிசராய் என்னை யாண்டார்
இங்கே திரியவே–8-10-3
Siru maa manisar aai,சிறு மா மனிசர் ஆய் - வடிவில் சிறுத்து அறிவில் பெருத்தவர்களாயிருந்து கொண்டு
Ennai aandaar,என்னை ஆண்டார் - என்னை யீடுபடுத்திக் கொண்டவர்களான
Avan adiyaar,அவன் அடியார் - பாகவதர்கள்
Inge thiriya,இங்கே திரிய - இந்நிலவுலகில் இருக்க
Andri,அன்றி - அன்னவர்களுக்கு அடிமை பூண்டிருப்பது தவிர
Iv vulagam moonrum udan niraiya siru maa meni nimirnth,இவ் வுலகம் மூன்றும் உடன் நிறைய சிறு மா மேனி நிமிர்ந்த - இம்மூவுலகங்களும் ஏக காலத்தில் இடமடையும் படி தனது சிறிய பெரிய திருமேனியை வளரச்செய்த
Sem thamarai kan enn thirukkuralan,செம்தாமரை கண் எண் திருகுறளன் - புண்டரீகாக்ஷனாய் எனக்கினியனான ஸ்ரீவாமநனுடைய
Naru maa virai naal malar adikeel puguthal paaviyaenukku urumo,நறு மா விரை நாள் மலர் அடிகீழ் புகுதல் பாவியேனுக்கு உறுமோ - மிக்க பரிமளம் வாய்ந்த திருவடித்தாமரைகளிலே சென்று சேர்தல் எனக்குத் தகுமோ?
3549திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவத சேஷத்வத்திலே யிடுபட்டவர்கள் பகவச் சேஷவத்திலே நிற்கலாகாதென்று சிலர் நினைப்பதுண்டு, அதுதவறு பகவானுடைய முகோல்லாஸத்திற்காக பாகவதர்களையுகப்பதுபோல அந்த பாகவதர்களின் முகோல்லாஸத்திற்காகப் பகவானை யுகப்பதும் ப்ராப்தமே) 4
இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என்
இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
செங்கோ லத்த பவள வாய்ச்
செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கு ஏழ் புகழ்கள் வாய ஆய்
புலன் கொள் வடிவு என் மனத்தது ஆய்
அங்கு ஏய் மலர்கள் கைய ஆய்
வழி பட்டு ஓட அருளிலே–8-10-4
Mun,முன் - முன்பொரு காலத்திலே
Iru maanilam undu umizhndha,இரு மாநிலம் உண்டு உமிழ்ந்த - மிகப்பெரிய பூமியை யெல்லாம் தனது திருவயிற்றிலே வைத்து நோக்கிப் பிறகு வெளிப்படுத்தின
Koalatha,கோலத்த - அழகு வாய்ந்த
Sem pavalam vaai,செம் பவளம்வாய் - சிவந்த பவழம் போன்ற அதரத்தையுடைய
Senthaamarai kan en ammaan,செம் தாமரை கண் என் அம்மான் - புண்டரீகாக்ஷனான எம்பெருமான்
Pongu ezh pugazhkal,பொங்கு ஏழ் புகழ்கள் - பொங்கிக் கிளர்கின்ற தனது திருக்குணங்களானவை
Vaaya aai,வாய ஆய் - என் வாக்குக்கு விஷயமாகவும்
Pulan kol vadivu,புலன் கொள் வடிவு - மநோஹமான தனது வடிவு
En manathu aai,என் மனத்த்து ஆய் - என் மனத்திலுள்ளதாகவும்
Angu aay malarkal,அங்கு ஏய் மலர்கள் - அத்தலைக்கு ஏற்ற புஷ்பங்கள்
Kaiya aai,கைய ஆய் - என் கையிலுள்ளனவாகவும் பெற்று
Vazhipattu oada arulil,வழிபட்டு ஓட அருளில் - பாகவதர்கள் செய்யும் கைங்கரிய மார்கத்திலே நானும் உடன்பட்டு நடக்கும்படியாக அருளாமாகில்
Inge thirindhaerku,இங்கே திரிந்தேற்கு - (திருநாடு செல்ல விரும்பாதே) இந்த விபூதியிலேயே இப்படி திரிவேனான எனக்கு
Izukkuthu en,இழுக்குற்று என் - என்னதாழ்வு?
3550திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுடைய திருநாட்டிலே பேரின்பம் நுகர்ந்திருக்கப் பெற்றாலும் அத்தோடே கீழ்ச்சிசொன்ன ஐச்வர்யாதிகளெல்லாம் சேரக்கூடினாலும் இங்கே பாகவதர்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழிபாடி ரஸிக்குமதோடொக்குமோ வென்கிறார்) 5
வழி பட்டு ஓட அருள் பெற்று
மாயன் கோல மலர் அடிக்கீழ்
சுழி பட்டு ஓடும் சுடர்ச் சோதி
வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டு ஓடும் உடலினில்
பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டு ஓடும் கவி அமுதம்
நுகர்ச்சி உறுமோ முழுதுமே–8-10-5
Vazhipattu oadu arul petru,வழிபட்டு ஓட அருள் பெற்று - நித்ய கைங்கரியம் பண்ணும்படியாக அவனது திருவருளைப் பெற்று
Maayan,மாயன் - ஆச்சர்ய விபூதி யுக்தனான அந்த ஸர்வேச்வரனுடைய
Koalam malar adi keezh,கோலம் மலர் அடி கீழ் - அழகிய திருவடித் தாமரைகளின் கீழே
Kazhipattu oadum sudar sothi vellathu,கழிபட்டு ஓடும் சுடர் சோதி வெள்ளத்து - சுழித்து ஓடுகிற சுடர்ச்சோதி வெள்ள மென்னும்படியான பரம பத்த்திலே
Inputru irundhaalum,இன்புற்று இருந்தாலும் - ஆனந்த வாழ்ச்சியாக இருக்கப்பெற்றாலும்
Muzhudhum,முழுதும் - கீழ்ச்சொன்ன ஐச்வர்ய கைவல்யாதிகள் எல்லாம் கூடினாலும்
Izhi pattu oadum udalil pirandhu,இழி பட்டு ஓடும் உடலினில் பிறந்து - தாழ்ச்சியின் மிக எல்லையில் நிற்பதான சரீரத்திலே பிறந்து
Katru,கற்று - தன்னுடைய குணங்களை நான் அப்யளித்து
Mozhipattu oadum kali amudham,மொழிபட்டு ஓடும் களி அமுதம் - அவ்வநுபவத்தா லுண்டான ப்ரீதிசொல்லாய் ப்ரவஹிக்கிற கவியாகிற அம்ருத்த்தை
Nukaruchchi urumo,நுகர்ச்சி உறுமோ - பாகவதர்களோடு கூடியநுபவித்து ரஸிக்கைக்கு ஒக்குமோ? (ஒவ்வாது)
3551திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதமாகவே இப்பாட்டுமருளிச் செய்யப்படுகிறது. எம்பெருமானுடைய ஒப்பில்லாத விலக்ஷணமான புகழைத் திருவாய்மொழியாலே நுகருமதுக்கு விபுவான அவன்றன்னுடைய ஆனந்தமும் ஒவ்வாதென்கிறார்) 6
நுகர்ச்சி உறுமோ மூ வுலகின்
வீடு பேறு தன் கேழ் இல்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட
பொன் ஆழிக்கை என் அம்மான்
நிகரச் செம் பங்கி எரி விழிகள்
நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உமிழும் புள் பாகன்
பெரிய தனி மாப் புகழே–8-10-6
than kel il,தன் கேழ் இல் - தனக்கு ஒப்பின்றியே யிருப்பதாய்
Pugar,புகர் - புகரை யுடைத்தாய்
Semmukatha,செம்முகத்த - சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைத்தான
Kiliru,களிறு - (குவலயாபீட மென்கிற) யானையை
Atta,அட்ட - கொன்று முடித்தவனும்
Pon azhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழி மோதிர மணிந்த திருக்கையை யுடையவனும்
En ammaal,என் அம்மாள் - எனக்கு ஸ்வாமியும்
Nikar sem pangi,நிகர் செம் பங்கி - தங்கள் ஜாதிக்குத் தகுதி யாகச் சிவந்த செம் பட்ட) மயிர்களையும்
Eri vizhikal,எரி விழிகள் - அக்நி சக்ரம் போன்ற கண்களையுமுடயராய்
Neenda,நீண்ட - பருத்த வடிவு படைத்தவர்களான
Asurar,அசுரர் - அசுரர்களினுடைய
Uyir ellam,உயிர் எல்லாம் - பிராணன்களை யெல்லாம்
Thakarthu undu,தகர்த்து உண்டு - பிடித்த வாங்கி
Uzalum,உழலும் - இதுவே தொழிலாக ஸஞ்சரிக்கிற
Pul,புள் - கருடனுக்கு
Pakan,பாகன் - நியாமகனுமான எம்பெருமானுடைய
Periya tani maa pugal nukaruchchi urumo moo ulagin veedu paeru,பெரிய தனி மா புகழ் நுகர்ச்சி உறுமோ மூ உலகின் வீடு பேறு - பெரிய ஒப்பற்ற கல்யாண குண ராசியை அநுபவிக்கையோடு ஒக்குமோ ஸர்வேச்ரத்வம்.
3552திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (ஸ்வயம்புருஷார்த்த மாக்க் கொள்ளும் பகவதநுபவம் வேண்டா, பாகவத ப்ரீதிரூபமான பகவதநுபவத்தைப் பண்ணிக்கொண்டு அந்த பகாவதர்களோடு கூடி வாழ்கையெ நமக்கு நாளும வாய்க்கவேணுமென்கிறார்.) 7
தனி மாப் புகழே எஞ்ஞான்றும்
நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய்
உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப்
புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே
நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7
Tani maa pugal e yennjanrum nirkumpadi ay,தனி மா புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படி ஆய் - ஒப்பில்லாத சிறந்த புகழே காலமுள்ளதனையும் வேதாந்த ப்ரஸித்தமாய் நிற்கும்படியாக
Taan tonri,தான் தோன்றி - தானோ (படைப்புக் கடவுளாக) ஆவிர்ப்பவித்து
Muni,முனி - (ஸ்ருஷ்டிக்காக) ஸங்கல்பிக்கிற
Maa piram,மா பிரம்ம் - பரப்ரஹ்ம்மாகிற
Mudhal vithu ay,முதல் வித்து ஆய் - பரமநாரணமாய்
Ulakam moonrum,உலகம் மூன்றும் - லோகங்களை யெல்லாம்
Mulaippitha,முளைப்பித்த - உண்டாக்கின
Tani maa teyvam,தனி மா தெய்வம் - ஒப்பற்ற பர தேவதையினுடைய
Thalira adi keizhl,தளிர அடி கீழ் - தளிர்போன்ற திருவடியின் கீழே
Puguthal anri,புகுதல் அன்றி - புகுகையைத் தவிர்த்து
Avan adiyar,அவன் அடியார் - ஸ்ரீவைஷ்யவர்களுடைய
Nani maa kalavi inbame,நனி மா கலவி இன்பமே - மிகச் சிறந்த்தான ஸம்ச்லேஷ ஸுகமே
Nankatkku nalum vayntha,நங்கட்கு நாளும் வாய்ந்த - நமக்கு எப்போதும் வாய்க்க வேணும்
3553திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (பாகவதர்களின் திரள்களைக் கண்டு கொண்டிருந்தாலே போதுமே யென்கிறாரிப்பாட்டில்.) 8
நாளும் வாய்க்க நங்கட்கு
நளிர் நீர்க் கடலைப் படைத்து தன்
தாளும் தோளும் முடிகளும்
சமன் இலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக்
காவும் நிறை பல் நாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல்
கிடந்தான் தமர்கள் கூட்டமே–8-10-8
Nalir neer kadalai padaittu,நளிர் நீர் கடலை படைத்து - குளிர்ந்த நீரையுடைய கடலை யுண்டாக்கி
Saman ilaadha,சமன் இலாத - ஒப்பில்லாத
Than pala thaalum tholum mudikulum,தன் பல தாளும் தோளும் முடிகளும் - தன்னுடைய பல திருவடிகளையும் திருத்தோகளையும் திருமுடிகளையும்
Parappi,பரப்பி - பரப்பிக்கொண்டு
Neelum padar poo,நீளும் படர் பூ - நீண்டு படர்ந்த புஷ்பங்களையும்
Karppagam kaavum,கற்பகம் காவும் - கற்பகச் சோலையையும்
Nirai pal naayitrin kolum udaiya,நிறை பல் நாயிற்றின் கோளும் உடைய - நிறைந்த பல ஆதித்ய தேஜஸ்ஸையு முடைத்தான
Mani malai pol,மணி மலை போல் - மாணிக்கமலை போலே
Kidanthaan,கிடந்தான் - கண்வளர்ந்தருளின பெருமானுடைய
Thamarkal,தமர்கள் - பக்தர்களோ டுண்டான
Kootam,கூட்டம் - சேர்த்தியானது
Nangadku naalum vaaykka,நங்கட்கு நாளும் வாய்க்க - எமக்கு எப்போதும் உண்டாகவேணும்.
3554திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (மணவாளமாமுனிகள் யதிராஜவிம்சதியில் ஈத்வத்தாஸதாஸகணநா சரமாவதௌ யஸ் த்த்தாஸதைகரஸதா அவிரதா ம்மாஸ்து * என்று பாகவத சேஷத்வ காஷ்டையிலே தாம் நிற்கவேணுமென்று பாரித்தாரே, அந்தப் பாரிப்புக்கு இந்தப் பாசுரம் நிதானமாயிருக்கும்.) 9
தமர்கள் கூட்ட வல்வினையை
நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள்
வில் தண்டாதி பல்படையன்
குமரன் கோல வைங்கணை வேள் தாதை
கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம்
சதிரே வாய்க்க தமியேற்கே–8-10-9
Tamarkal kootam,தமர்கள் கூட்டம் - பக்த வர்க்கங்களுக்கு வருகின்ற
Val vinaiyai,வல் வினையை - வலிய விரோதிகளை
Naasam seyyum sadhir,நாசம் செய்யும் சதிர் - போக்கும்படியான திறமையுடைய
Moorthi,மூர்த்தி - ஸ்வாமியாய்
Amar kol,அமர் கொள் - போர் செய்யக் கிளர்கின்ற
aazhi sangu vaalvil thandu aadhi,ஆழி சங்கு வாள்வில் தண்டு ஆதி - பஞ்சாயுதங்கள் முதலிய
Pal padaiyan,பல் படையன் - திவ்யாயுத வர்க்கத்டை யுடையனாய்
Kumaran,குமரன் - நித்ய்யுவாவாய்
Kolam ainganai vel thadai,கொலம் ஐங்கணை வேள் தாதை - அழகிற் சிறந்த பஞ்சபாணனான மன்மதனுக்குத் தந்தையான் எம்பெருமானுடைய
Kodu il adiyar tam,கோது இல் அடியார் தம் - கோதற்ற அடியார்க்கு
Tamarkal tamarkal tamarkal aam sadhir,தமர்கள் தமர்கள் தமர்கள் ஆம் சதிர் - அடிமையில் முடிந்த நிலமான வாய்ப்பே
Tamiyerkku vaaykka,தமியேற்கு வாய்க்க - துணையற்றி அடியேனுக்கு வாய்க்கவேணும்
3555திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (எம்பெருமானுக்கு அடியரானாருடைய ஸம்பந்தி ஸம்பந்திகளென்று போருகிற பரம்பரையின் எல்லையில் அடிமைசெய்து நடக்கையாகிற கோட்பாடு என்னளவிலே நிற்காமல் என்னுடைய பரம்பரையிலும் வாய்க்கவேணு மென்கிறார்) 10
வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழி ஊழி மாகாயாம்-
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே–8-10-10
Maa kaayaa poo kol meni,மா காயா பூகொள் மேனி - அழகிய காயாம்பூநிறத்தைக் கொண்ட திருமேனியையும்
Naanku thol,நான்கு தோள் - நான்கு தோள்களையும்
Pon aazhi kai,பொன் ஆழி கை - அழகிய திருவாழியேந்திய கையையும் உடைய
Em ammaan,எம் அம்மான் - எம்பெருமானுடைய
Neekkam illaa,நீக்கம் இல்லா - பிரிவு இல்லாத
Adiyar tam,அடியார் தம் - அடியார்களுக்கு
Adiyar adiyar adiyar,அடியார் அடியார் அடியார் - சரமாவதிதாஸ பூதர்கள்
Em kookal,எம் கோக்ள் - எமக்கு ஸ்வாமிகள்
Avargge,அவர்க்கே - அன்னவர்களுக்கே
Kudikal aay chellum,குடிகள் ஆய் செல்லும் - சேஷவ்ருத்தி பண்ணுங்குலமாயச் செல்லும்படியான
Nalla kodpaadu,நல்ல கோட்பாடு - திடமான அத்யவஸாயமானது
Oozi oozii oozii thooru,ஊழி ஊழி ஊழி தோறு - எஞ்ஞான்றும்
Tamiyerkku,தமியேற்கு - அடியேனுக்கு உண்டாக வேணும்
3556திருவாய்மொழி || 8-10—நெடுமாற் கடிமை (இத்திருவாய்மொழியை ஓத வல்லவர்கள் இதிற்சொன்ன பாகவத சேஷத்வத்தைப் பெற்று ஸகுடும்பமாக வாழப் பெறுவரென்று பயனுரைத்த தலைக் கட்டுகிறார்.) 11
நல்ல கோட்பாட்டுலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர் மக்களே–8-10-11
Nalla kootpaadu,நல்ல கோட்பாடு - நல்ல கட்டளைப்பாடுடைய
Ulagangal moonru in ulloam,உலகங்கள் மூன்றின் உள்ளும் - மூவுலகங்களினுள்ளும்
Thaan niraintha,தான் நிறைந்த - வியாபீத்த
Alli kamalam kannanai,அல்லி கமலம் கண்ணனை - விகஸித்த தாமரைப் பூப்போன்ற கண்களையுடைய பெருமான் விஷயமாக
Am than kurukoor sadagopan sollappatta aayirathul,அம் தண் குருகூர் சடகோபன் சொல்லப்பட்ட ஆயிரத்துள் - ஆழ்வாரா வருளிச் செய்யப்பட்ட ஆயிரத்தினுள்
Ivaaiyum pattum vallaarkal,இவையும் பத்தும் வல்லார்கள் - இவை பத்தையும் ஓதவல்லவர்கள்
Konda pentir makkale,கொண்ட பெண்டிர் மக்களே - ஸ குடும்பமாக
Nalla pathal,நல்ல பத்த்தால் - பாகவத சேஷ்த்வ பர்யந்தமான சிறப்புடனே
Manai vaazhvaar,மனை வாழ்வார் - க்ருஹஸ்தர்களாக வாழப்பெறுவர்கள்.
3557திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஔபாதிக பந்துக்களான களத்ர புத்திராதிகளால் ஒருபயனுமில்லை. அவர்கள் ஆபத்துக்கு உதவார்கள். கிருபாதிகபந்துவான ஸர்வேச்வானே ஆபத்பந்து. அவனையேபற்றி யுஜ்ஜீவிக்கப் பாருங்கோளென்கிறார்.) 1
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1
கொண்ட பெண்டிர்,Kondapendir - நம் உறவினர் என்று நாம் நினைக்கும்
மக்கள் உற்றார்,Makkal utrar - மனைவிமக்கள் உற்றார்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர் மற்றுமுள்ளோர்
கண்டதோடு,Kandodu - நம் கையில் பொருள் இருக்கும் வரை
பட்டது அல்லால்,Pattathu allal - உறவாடுவார்களே அன்றி
காதல் மற்று,Kadhal matru - உண்மையான உள் அன்பு ஒன்றும்
யாதும் இல்லை,Yadum illai - யாரிடமும் இல்லை
எண் திசையும்,En thisaiyum - ஆதலால் எட்டுத் திக்கிலும்
கீழும் மேலும்,Keelum melum - பாதாளத்திலும் மேல் உலகிலும்
முற்றவும்,Mutravum - உள்ள அனைத்தையும்
உண்ட,Unda - பிரளயத்தில் உண்டு வயிற்றில் வைத்து
பிரான்,Piran - காத்த எம்பெருமானுக்கு
தொண்டரோம் ஆய்,Thondarom aai - தொண்டராய்
உய்யல் அல்லால்,Uyyal allal - இருந்து கைங்கர்யம் செய்வது தவிர
இல்லை துணையே கண்டீர்,Illai thunaiye kandir - வேறு உபாயம் இல்லை
3558திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஆபாஸபந்துக்கள் உபகாரம் செய்வாரைப்போலேயிருந்து தங்களுக்கு வேண்டிய ப்ரயோஜனங்களைத் தலைக்கட்டிக் கொள்வர்கள்; அவர்கள் நம்பத்தகுந்தவர்கவல்லர்; நம்பாதவர்களுக்கும் நம்பிக்கை யுண்டாக்கி ஆபத்ஸகனாரும் ஸர்வேச்வரனைப் பற்றுமதே ப்ரயோ ஜனமென்கிறது இப்பாட்டு.) 2
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையவந்த வாக்கம் உண்டேல் அட்டைகள் போல் சுவைப்பர்
கணை யொன்றாலே யேழ் மராமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல் அல்லால் இல்லை கண்டீர் பொருளே–9-1-2
துணையும்,Thunaiyum - ஆபத்துக் காலத்தில் துணை போலவும்
சார்வும்,Sarvum - சார்வு போலவும்
ஆகுவார் போல்,Aakuvaar pol - உதவுவது போல்
சுற்றத்தவர் பிறரும்,Sutrathavar pirarum - உறவினர்களும் மற்றவர்களும்
ஆக்கம் உண்டேல்,Aakkam undel - செல்வம் உள்ள வரை
அட்டைகள் போல்,Attaikal pol - அட்டைகள் போல்
அணைய வந்த,Anaiya vantha - உடன் வந்து
சுவைப்பர்,Suvaippar - ஒட்டி உறவாடுவார்கள்
கணை ஒன்றாலே,Kanai ondrale - ஓர் அம்பாலே
ஏழ் மரமும் எய்த,Ezhu maramum eitha - ஏழு மராமரங்களையும் எய்த
எம் கார் முகிலை,Em kar mugilai - எம் காளமேகப் பெருமானை
புணை என்று உய்ய,Punai endru uyya - தஞ்சம் என்று உய்ய
போகல் அல்லால்,Pogal allal - ஒரே வழி என்பதைத் தவிர
பொருளே இல்லை,Porule illai - வேறு வழி இல்லை என்பதை
கண்டீர்,Kandir - அறிவீர்களாக
3559திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸம்ஸாரிகள் ஸ்வப்ரயோஜனமே கண்ணுயிருப்பவர்களாதலால் அந்த ஸ்வப்ர யோஜனத்திற்காக நேசத்தை அபிநயிப்பவர்களே யல்லது அதற்கு வழியில்லை யென்றால் ஆணுகவும்மாட்டார்கள்; ஆகவே அன்னவர்களிடத்துப் பற்று விடத்தக்க தென்கிறாரிப்பாட்டில்) 3
பொருள் கையுண்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்
இருள் கொள் துன்பத்தின்மை காணில் என்னே என்பாருமில்லை
மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே–9-1-3
பொருள் கை,Porul kai - செல்வம் கையில்
உண்டாய்,Undai - உள்ளதைக்
செல்ல காணில்,Sella kaanil - கண்டார்களாகில்
போற்றி என்று,Potri endru - அவனை வாழ்த்தி
ஏற்றி,Yetri - அவன் கொடுக்கும் பரிசுகளை ஏற்று
எழுவர்,Ezhuvar - விடை பெற்றுச் செல்வர்
இருள் கொள்,Irul kol - வருத்தம் விளைவிக்கும்
துன்பத்து இன்மை,Thunpathu inmai - துன்பம் ஏற்படுவதை
காணில் என்னே!,Kaanil enne! - கண்டவுடன் ஐயோ என்பாரும்
என்பாரும் இல்லை,Enbarum illai - இல்லை உதவுபவரும் இல்லை
மருள் கொள்,Marul kol - நெஞ்சு கலங்கும்படியான
செய்கை,Seigai - செய்கைகளை உடைய
அசுரர் மங்க,Asurar manga - அசுரர்கள் அழிய
வடமதுரை,Vadamathurai - வடமதுரையில்
பிறந்தாற்கு,Pirandarku - பிறந்த கண்ணனுக்கு
அருள் கொள்,Arul kol - ஆட்பட்டு அடிமை கொண்டு
ஆளாய்,Alaai - கைங்கர்யம் செய்து
உய்யல் அல்லால்,Uyyal allal - உய்வதைத் தவிர
கண்டீர்,Kandir - வேறு உபாயமோ
அரணே,Arane - புகலோ ஒன்றும் இல்லை
3560திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (சிலரை ஆபத்துக்கு உதவுமவர்களாகக் கொண்டு நெடுநாள் ஆராவதித்தால் அவர்கள் அவ்வாராதனைகளை யெல்லாம் பெற்றிருந்து ஆபத்துவந்தவாறே எண்ணற்று உபேக்ஷிப்பர்கள். அப்படியன்றிக்கே நிர்ஹேதுகமாகவந்து அவதரித்து ஆபத்ஸகனுனவனே ஆச்ரயிக்கத் தக்கவனென்கிறுரிப்பாட்டில்.) 4
அரணம் ஆவர் அற்ற காலைக்கு என்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்டு தெப்பர் ஆவர் இன்றி இட்டாலும் அக்தே
வருணித்து என்னேவடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சரண் என்று உய்யப் போகல் அல்லால்இல்லை கண்டீர் சதிரே–9-1-4
அற்ற காலைக்கு அரணம் ஆவயர் என்று என்று,Atra kaalaikku aranam aavayar endru endru - கைம்முதலற்ற காலத்திற்குப் புலாகங்சுடடுமென்று பலகாலும் சிந்தித்து
அமைக்கப்பட்டார்,Amaikkapattaar - வசப்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள்
இரணம் கொண்ட தெப்பம் ஆவர்,Iranam konda theppam aavar - கடனை இலுத்துக் கொண்டவர்கள் போல் தக்கராயொழிவர்கள்
இன்றி இட்டாலும்,Inri ittalm - பச்சை யிடாவிட்டாலும்
அஃதே,Ahde - அவர்களின் உதயாமை உன்னதே
வருணித்து எண்ணே,Varunithu enne - (இப்படி) இன்றி கெட்டவர்களைப் பற்றிச் சொல்லி என்ன பயன்?
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai piranthavan - வடமதுரையிலே வந்து பிறந்த எண்ணபிராணுடைய
வண் புகழே,Van pugale - சீனம்முதலிய குணங்களையே
சரண் என்று,Saran endru - தஞ்சமென்று கொண்டு
உய்யப் போகில் அல்லால்,Uyyap pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சதிர் இல்லை,Sathir illai - வேறு சதிர்பாடு இல்லை
3561திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (மாதர்களால் படும் அவமானங்களை யெடுத்துரைத்து எம்பெருமானுக்கு ஆட்பட்டு உய்வதே உய்வு என்கிறாரிப்பாட்டில்.) 5
சதிரமென்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்
மதுரபோகம் துற்றவரே வைகி மற்றொன்றுறுவர்
அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே–9-1-5
சதிரம் என்று,Sathiram endru - சதிரையுடையோ மென்று
நம்மை நாமே சம்மதித்து,Nammai name sammathithu - தம்மைத் தாங்களே பஹீமானித்துக் கொண்டு
இன்மொழியார்,Inmozhiyaar - வெறும் பேச்சினிமையையுடையரான மாதர்களினுடைய
மதுரபோகம்,Mathurapogam - இனிய போகங்களை
அற்றவரே,Atravare - அனுபவித்தவர்களே
லைகி,Laiki - மற்றொரு காலத்திலே
மற்று ஒன்று உறுவர்,Matru onru uravar - வாய்கொண்டு சொல்ல வொண்ணாத அவமானங்களை அடைவர்கள்
அதில் கொள் செய்கை அசுரர் மங்க,Adhil kol seigai asurar manga - (ஆனபின்பு) அஞ்சவேண்டுஞ் செய்கைகளையுடைய அசுரர்கள் தொலையும்படி
வடமதுரை பிறந்தாற்கு,Vadamathurai pirandarku - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணபிரானுக்கு
எதிர்கொள் ஆள் ஆய்,Ethirkol aal aai - ஆபிமுக்யம் பண்ணுமடியவர்களாகி
உய்ரல் அல்லால்,Uyiral allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
இன்பம் இல்லை,Inbam illai - (வேறு வழியில்) சுகமில்லை.
3562திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானே பரமபுருஷார்த்தம் என்பதுணராதே முன்னே கழிந்த பலர் பாழாய்ப் போயினர்; நீங்களும் அங்ஙனே நசித்துப் போகாமே வடமதுரைப்பிறந்த பெருமானுடைய திருக்குணங்களைச் சொல்லி உய்யப்பாருங்கள்; இது தவிர வேறு ஹிதமில்லை ஆத்மாவுக்கு என்கிறாரிப்பாட்டில்.) 6
இல்லை கண்டீர் இன்பம் அந்தோ உள்ளது நினையாதே
தொல்லையார்கள் எத்தனைவர் தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6
இன்பம் இல்லை! கண்டீர்,Inbam illai! Kandir - (இவ்வுலகில்) சுகமே யிருப்ப தொன்று இல்லைகிடீர்
அந்தோ,Antho - ஐயோ! இதை நாமெடுத்துச் சொல்ல வேணுமோ ?
உள்ளது நினையாதே,Ullathu ninayaathe - சாச்வதமான புருஷார்த்தத்தை நினையாதே
தொல்லையார்கள்,Thollaiyaarkal - பழைய காலத்திலிருந்தவர்கள்
எத்தனைவர்,Ethanaivar - எத்தனை பேர்
தோன்றிகழிந்து ஒழிந்தார்,Thonriginazinthu ozhinthar - ஜன்மமரணங்களே யாத்திரையாய்ப் போனார்கள் (அன்னவர்கள் கணக்கற்றவர்கள்)
மல்லை மூதூர் வடமதுரை,Mallai moothur vadamathurai - (ஆன பின்பு) செல்வம் மிகுந்த புராதனமான வடமதுரையிலே
பிறந்தவன்,Piranthavan - வந்து பிறந்து கண்ணபிரானுடைய
வண் புகழே சொல்லி,Van pugale solli - உதாரமான திருக்குணங்களையே கீர்த்தனம் பண்ணி
உய்ய போகில் அல்லால்,Uyya pogil allal - உஜ்ஜீவித்துப் போமதொழிய
சுருக்கு,Surukku - சுருங்கச் சொல்லும் வழி
மற்று ஒன்று இல்லை,Matru onru illai - வேறொன்றுமில்லை.
3563திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (கீழ்ப்பாட்டில் சுருக்கே யென்றதைச் சுருங்கவருளிச் செய்கிறார். எம்பெருமானைப் பற்றுவதினுடைய எளிமையையும் இனினையையும் எடுத்துரைக்கின்றார். 7
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7
மற்றொன்று இல்லை,Matronru illai - உபாயாந்தரமில்லை
மாநிலத்து, எவ் உயிர்க்கும்,Maanilathu, ev uyirkum - பரந்த நிலவுலகிலுள்ள யாவர்க்கும்
சுருங்க சொன்னோம்,Surunga sonnom - இது சுருக்கமாகச் சொல்லுகிறோம்
சிற்ற வேண்டா,Sitra venda - ஆயாஸகரமான ப்ரவருத்திகளிலேநின்று உழலவேண்டா
சிந்திப்பே அமையும்,Sindippe amaiyum - மாநஹிகமான அத்யவஸாயமே போதும்
கண்டீர்கள் அந்தோ,Kandirgal antho - கண்டீர் அந்தோ-;
கூட மதுரை பிறந்தான்,Kooda mathurai piranthaan - வடமதுரையிலே அவதரித்தவனான
எங்கள் பெற்றத்து ஆயன்,Engal petrathu aayan - எங்கள் கோபாலகிருஷ்ணணுடைய
குற்றம் இல்சீர்,Kutram ilseer - குற்றமற்ற திருக்குணங்களை
வைகல் கற்று வாழ்தல் இது,Vaigal katru vaalthal idhu - எப்போதும் கற்று வாழ்தாலகிறவிது
குணம்,Kunam - குணமாகுமே தவிர
குற்றம் அன்று,Kutram anru - குற்றமாகாது.
3564திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-8-எம்பெருமான் இங்கே வந்து திருவவதாரம் பண்ணி யருளுகைக்கு நிதானத்தைச் சொல்லி -அவனையே ரக்ஷகனாக பற்றும் அத்தனை போக்கி ஒருவருக்கும் வேறு ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் .) 8
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை யிலாதவர்க்கு
வாழ் துணையா வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
வீழ் துணையாப் போமிதனில் யாதுமில்லை மிக்கதே–9-1-8
வாழ்தல் இது குணம் கண்டீர்,Vaalthal idhu kunam kandir - வாழுகிறவி அவன்றோ எல்லார்க்கும் குணமாவது
அந்தோ,Antho - வாழும் வகையறியாதபடி எண்
மாயவன் அடி பாவி,Maayavan adi paavi - ஸர்வேச்வரனுடைய திருவடிகளை துதித்து (பகவத்குணு நுபவம் பண்ணி)
போழ்துபோ,Polthupo - காலசேஷபம்பண்ண வேறுமென்று
உள்ளகிற்கும்,Ullakirkkum - நினைக்கவல்லவர்களான
புன்மை இல்லாவர்கக்கு,Punmai illaavarkkakku - உத்தமாதிகாரிகளுக்கு
வாழ்துணை ஆ,Vaalthunai aa - வாழ்ச்சிக்த துணையாவதற்காக
வடமதுரை பிறந்தவன்,Vadamathurai pirandhavan - வடமதுரையிலே வந்து பிறந்த கண்ணனுடைய
வண் புகழே,Van pugale - திக்குணங்களையே
வீழ்துணை ஆ போம் இதனில்,Veerthunai aa pom idhanil - ஆசைப்படுந் துணையாகக் கொண்டு நடப்பதிற்காட்டிலும்
மிக்கது யாதும் இல்லை,Mikkathu yadhum illai - மேற்பட்ட வாழ்வு யாதொன்றுமில்லை.
3565திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (எம்பெருமானைத் தவிர்த்து வெறொன்றை ரக்ஷகமாகப் பற்றினவர்கள் பண்டு நின்ற நிலையுங்கெட்டு அனர்த்தப்பட்டுப் போவர்கள்; ஆனபின்பு அவனல்லது புகலில்லை யென்கினறார்.) 9
யாதும் இல்லை மிக்கதனில் என்று என்று அது கருதி
காது செய்வான் கூதை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வடமதுரைப் பிறந்த
தாதுசேர் தோள் கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணே–9-1-9
அதனில் மிக்குயாதும் இல்லை என்று என்று அது கருதி,Adhanil mikku yadhum illai endru endru adhu karuthi - (பகவத்விஷயம் தவிர வேறொன்றைப் பற்றி நின்று) அதிற்காட்டிலும் மேம்பட்ட தொன்றுமில்லை யென்று பலகாலும் அதையே சிந்தனை செய்யுமளவில்
காது செய்வான் கூதைசெய்து,Kaathu seivaan koodaiseithu - கனங்குழையிடக் காதுபெருக்கப் புகுந்து பண்டுள்ளதையும் போக்கிக் கூதை செய்யுமா போல
கடை முறை வாழ்க்கையும் போம்,Kadai murai vaalkaiyum pom - கடைகெட்ட ஸம்ஸார வாழ்க்கைக்கும் ஹானிவந்த தாமித்தனை (ஆன பின்பு)
மாதுகிலின் கொடிகாள் மாடம்,Mathukilin kodikal maadam - பெரிய த்வஜபடங்களைக் கொண்ட மாடங்களைக் புடைத்தான
வட மதுரை பிறந்த,Vada mathurai pirandha - வடமதுரையிலே வந்தவதரிந்த
தாது சேர்தோள் கண்ணன் அல்லால்,Thaathu serthol kannan allal - மாலையணிந்த தோள்களையுடைய கண்ணனைத் தவிர்த்து
சரண் இல்லை கண்டீர்,Saran illai kandir - வேறொரு புகலில்லை திடீர்
3566திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-10-தானே எல்லார்க்கும் சரண் என்னும் இவ்வர்த்தத்தை பிரதிஷ்டைக்காக வந்து திருவவதாரம் பண்ணி யருளின கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்.) 10
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10
கண்ணன் அல்லால் சரண் இல்லை அது நிற்க,Kannan allal saran illai adhu nirka - ஸ்ரீக்ருஷ்ணனல்லது வேறு சரணில்லை யென்னுமர்த்தம் நிலைநிற்கைக்காகவும்
மண்ணின்பாரம் நீக்குதற்கு,Manninpaaraam neekutharku - பூபாரத்தைப் போக்குகைக்காகவும்
வட மதுரை பிறந்தான்,Vada mathurai piranthaan - வட மதுரையில் வந்து அவதரித்தான் (ஆன பின்பு. ஸம்ஸாயிகளே)!
அம் உடைமை உண்டேல்,Am udaimai undel - உங்களதாக நினைத்திருக்கிற பொருளுண்டாகில் (அதை)
திண்ணமா அவன் அடி சேர்த்து உய்ம்மின்,Thinnamaa avan adi serthu uymin - திடமாக அவன் திருவடிகளினே ஸமர்பித்து உஜ்ஜீவியுங்கள்
எண்ண வேண்டா,Enna venda - ஆலோசிக்க வேண்டா
நும்மது ஆதும்,Nummathu aadhu - உங்களுடையதான எப்பொருளும்
அவன் அன்றி மற்று இல்லை,Avan anri matru illai - அவனதேயன்றி மற்றமடியாயில்லை.
3567திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பலனுரைக்கும் பாசுதமானவிது விலக்ஷணமாகத் தோன்றியுள்ளது. “இப்பத்து மோதவல்லபிராக்கள் பண்டே நம்மையாளுடையார்கள்” என்கிறார். இப்பதிகத்தை யோதவல்லவர்களுக்கு ஆழ்வார் தாம் அடிமைப்படுவதாக அருளிச்செய்கிறார்.) 11
ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச் சடகோபன் சொன்ன
தீதிலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள் பண்டே–9-1-11
தாது சேர்தோள் கண்ணனை,Thaathu serthol kannanai - மாலையணிந்த தோள்களையுடைய பெருமானைக் குறித்து
அவனில் மற்று ஆதல் என்றதுவே துணிந்து,Avanil matru aadhal endrathuvae thuninthu - அவனையொழிய வேறெதுவு மில்லை யென்னுமத்யவஸாயத்தையே கொண்டு
குருகூர் சடகோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - ஆழ்வாரருளிச் செய்
ஒனா தமிழ்கள்,Ona tamizhkal - அழகிய தமிழினாலான
தீது இல்லாத இவை,Theethu illatha ivai - தீதற்ற இவ்வாயிரத்தினுள்ளே ஆயிரத்துள்
இப்பத்தும் ஒதவல்ல,Ippathum othavalla - இப்பதிகத்தைக் கற்கவல்ல
பிராக்கள்,Pirakkal - உபகாரர்களான் ஸ்வாமிகள்
பண்டே நம்மை ஆளுடையார்கள்,Pande nammai aaludaiyaargal - ஏற்கெனவே நம்மை அடிமை கொண்டவராவர்
3568திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (வேறு புகலற்ற அடியேனைக் குறித்து ஒரு வார்த்தை யருளிச் செய்து பிறவி கெடக் குளிர நோக்கியருளவேணுமென்று வேண்டுகிறார்.) 1
பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1
தெண் திரை பொருநல்,Then thirai porunal - தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த
தண் பணை சூழ்ந்த,Than panai soozhndha - அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட
திருப்புளிங்குடி,Thiruppulingudi - திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே
கிடந்தானே,Kidandhaane - சயனித்தருள்பவனே!
நின் திரு அருளும்,Nin thiru arulum - உனது க்ருபையையும்
பங்கயத்தாள் திரு அருளும்,Pangayaththal thiru arulum - பெரிய பிராட்டியாருடைய க்ருபையையும்
பண்டை நாளாலே கொண்டு,Pandai naalaale kondu - நெடுநாளாகவே அடைந்து கொண்டு
நின்கோயில் சீய்த்து,Ninkoyil seeythu - உன்னுடைய திவ்யதேசத்திலே உரிய கைங்கரியத்தைப் பண்ணி
பல்படிகால் குடி குடி வழி வந்து,Palpadikal kudi kudi vazhi vandhu - அநாதிகாயமாய்ப் போருகிற வம்ச பரம்பரையாக
ஆள் செய்யும் தொண்ட ரோர்க்கு,Aaal seyyum thonda roorkku - அடிமைசெய்து யோருகிற அடியோங்கள் விஷயத்திலே
அருளி,Aruli - அருள் செய்து
சோதி யாய் திறந்து,Sodhi yaai thirandhu - அழகிய திருப்பவளத்தைத் திறந்து (நல்வார்த்தைகளைப் பேசி)
உன் தாமரை கண்களால் நோக்காய்,Un thaamarai kangalal nookkai - உனது தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கியருள வேணும்.
3569திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (உன் திருவடிகளை என் தலைமேல் வைத்தருளவேணு மென்று திருப்புளிங்குடிக் கிடந்தானைப் பிரார்த்திக்கிறார்.) 2
குடிக் கிடந்து ஆக்கம் செய்து
நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ யொருநாள்
படிக்களவாக நிமிர்த்த
நின் பாத பங்கயமே தலைக்கணியாய்
கொடிக்கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2
கொடி கொள் பொன் மதிள் சூழ்,Kodi kol pon madil soozh - கொடிகளாலே அலங்காரங்கொண்ட பொன்மயமான மதிகாளலே சூழப்பட்டு
குளிர் வயல் சோலை,Kulir vayal solai - குளிர்ந்த வயல்களையும் பொழில் களையுமுடைத்தான
திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே சயனித்தருளும் பெருமானே
குடி கிடந்து,Kudi kidanthu - ப்ரபந்நகுல மரியாதை வழுவாமலிருந்து
ஆக்கம் செய்து,Aakkam seithu - குடியில் பண்டில்லாத நன்மைகளை யுண்டாக்கி
தீர்த்த நின் அடிமை குற்றவேல் செய்து,Theertha nin adimai kuttraveel seithu - இதரவிஷயங்களில் ருசியைப் போக்கின வின் விஷயமானை அந்தரங்க கைங்கரியங்களை செய்து
உன்பொன் அடி கடவாதே,Unpon adi kadavaadhe - உனது அழகிய திருவடிகளை விட்டு நீங்காதே
வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி,Vazhi varugiira adiyarorkku aruli - பரம்பரையாய் வருகின்ற அடி யோமுக்கு அருள் செய்து
நீ ஒரு நாள்,Nee oru naal - நீ முன் பொருகாலத்தில்
படிக்கு அளவு ஆக நிமிர்த்த,Padikku alavu aaga nimirtha - பூமிக்குத் தகுதியாக நிமிர்க் தளந்து கொண்ட
தலைக்கு அணியாய்,Thalaikku aniyaai - என் தலைக்குத் தக்க அலங்காரமாம்படி பண்ணியருளவேணும்.
3570திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –இங்கனே ஒருபடியே கண் வளர்ந்து அருளுகிற பிரானே உன் திருவுடம்பு நோவாதோ – உன் திருவுடம்பு நோவாதே உன்னடியேனான எனக்காக நீ ஒரு நாள் தாமரைத் தடம் மலர்ந்தால் போலே திருக் கண்களை விழித்து எழுந்து இருந்து உன் தாமரை மங்கையும் நீயும் இந்த லோகம் எல்லாம் வாழும்படி இருந்து அருளாய் என்கிறார்.) 3
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3
திருப்புளிங்குடி கிடந்தானே,Thiruppulingudi kidandhaane - திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே
கிடந்த நான் கிடந்தாய்,Kidantha naan kidandhaai - இங்கு சயனிக்கத் தொடங்கினகாலம் முதலாக இப்படியே ஏகரீதியாகச் சயனித்துக் கொண்டிரா நின்றாய்
உன் திரு உடம்பு அசைய,Un thiru udambu asaiya - உன் திருமேனி நோவ
எத்தனை காலம் கிடத்தி,Eththanai kaalam kidandhi - இன்னு மெத்தனை காலம் சயனித்திருப்பாய்
தொடர்ந்து குற்றவேல் செய்து,Thodarnthu kuttraveel seithu - நிரந்தரமான நித்ய கைங்கரியஞ் செய்து
தொல் அடிமை வழிவரும் தொண்டரோர்க்கு அருளி,Thol adimai vazhivarum thondarorkku aruli - அநாதியான அடிமைவழியிலே அக்வயித் திருக்கின்ற அடி யோமுக்கு அருள் செய்து
தடம் கொள் தாமரை கண் விழித்து,Thadam kol thamarai kan vizhithu - (உனது) விசாலமான தாமரைக் கண்களைப் பார்க்க விழித்து
உன் தாமரை மங்கையும் நீயும்,Un thamarai mangaiyum neeyum - திருத்தேவியாருடனே
இடம் கொள் மூ உலகும் தொழ,Idam kol moo ulagam thozha - விசாலமான மூவுலகமு தொழும்படியாக
இருந்தருளாய்,Irundharulai - வீற்றிருந்து ஸேவை ஸாதிக்க வேணும்
3571திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ஆஸ்ரித அர்த்தமாகக் கிடந்தது இருந்து நின்று என்னை அடிமை கொண்ட தர்ச நீயமான வடிவோடே கூட நான் காணும்படி வர வேணும் -என்கிறார்.) 4
புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்
சிவப்ப நீ காண வாராயே–9-2-4
புளிங்குடி கிடந்து,Pulungudi kidanthu - திருப்புளிங்குடியிலே சயனித்தும்
வாருண மங்கை இருந்து,Vaaruna mangai irundhu - வாகுரை மங்கையிலே வீற்றிருந்தும்
வைகுந்தத்துள் நின்று,Vaikundaththul ninru - ஸ்ரீவைகுண்டத்திலே நின்றும்
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய்,Thulindha en sindhai aagam kazhiyaadhe ennai aalvaai - என் சிந்தையைத் தெளிவித்து அங்கே விட்டுக் பிரியாதேயிருந்து என்னை யாளுமவனே
எனக்கு அருளி,Enakku aruli - எண் திறத்திலே க்ருபை பண்ணி
நரிள்ந்த சீர்,Narilnda seer - (உனது) குளிர்ந்த திருக்குணத்தை பற்றி
உலகம் மூன்று உடன் வியப்ப,Ulagam moondru udan viyappa - மூவுங்கும் ஒருமித்து ஆச்சரியப் படும்படியாகவும்
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப,Naangal koothadi ninru aarp - நாங்களும் கூத்தாடிக் கோளாஹலம் செய்யும்படியாகவும்
பளிங்கு நீர்,Palingu neer - தெளிந்த நீரையுடைத்தான
மூகிலின்,Mookilin - காளமேகத்திலே
பவளம் போல்,Pavalam pol - பவளக்கொடி படர்ந்தாற்போலே
கனிவாய் சிவப்பு,Kanivai sivappu - கனிந்த திருவதரம் சிவந்து தோன்று மழகை
3572திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இப்பாட்டில் *கவளமாகளிற்றினிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவை மயூர்ந்தானே!* என்ற விளியினால் கஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாப் போலே தமக்கு வந்து தோற்றி யருளவேணுமென்று பிரார்த்திக்கின்றமை விளங்கும்.) 5
பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண
வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண்
தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல்
தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5
பளவம் நன்படர் கீழ்,Palavam nanpadar keezh - நல்ல பவளப் படரின் கீழே
சங்கு உளை,Sangu ulai - சங்குகள் உறையப் பெற்ற
பொருநல்,Porunal - தாமிர பர்ணியையுடைய
நண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Nan thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங் குடியிலே திருக்கண் வளர்ந்தருளுமவனே!
கவளம் மா களிற்றின்,Kaval ma kalittrin - பவளங்கொள்ளுமியல்லினான கஜேந்திராழ்வானுடைய
இடர் கெட,Idar keda - துயரம் தீரும்படி
தடத்து,Thadathu - பொய்கைக் கரைக்கு
காய் சினம் பறவை ஊர்ந்ததானே,Kai sinam paravai oornthathane - (விரோதிகள் திறந்து) வெல்லிய கினத்தை யுடைய பெரிய திருவடியை நடத்திக் கொண்டு வந்தவனே!
பவளம் போல கனிவாய் சிவப்ப,Pavalam pola kanivai sivappa - பவளம் போன்று கனிந்த அதரம் விந்து தோன்ற
நின் பல் நிலா முத்தம்,Nin pal nila mutham - உன்னுடைய பல்லாகிற நிலாவையுடைய அதரத்தினது
கதிர் தவழ் முறுவல் செய்து,Kathir thaval muruval seithu - கதிர் உள்ளடங்காதே புறம்பே தவழும்படி புன்முறுவல் செய்து
காண நி வந்து,Kana ni vandhu - நான் காணும்படி நீ வந்தருளி
நின் திரு கண் தாமரை தயங்க நின்றருளாய்,Nin thiru kan thamarai thayanga nindrarulai - உனது திருக்கண்களாகிற தாமரை விளங்கும்படி நின்றருளவேணும்.
3573திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன்னுடைய அபி லஷிதங்கள் செய்ய ஒண்ணாத படி பிரதிபந்தகங்கள் உண்டு என்னில் –ஆஸ்ரிதருடைய ஆபத்து போக்குகைக்காக திவ்ய ஆயுதங்கள் ஏந்தி இருக்கிற நீ மாலி ப்ரப்ருதிகளான ராக்ஷஸரை முடித்தது போலே என்னுடைய பிரதிபந்தகங்களை நீயே போக்கி அருள வேணும் -என்கிறார்.) 6
காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6
பொன்மலையின் மீ மிசை,Ponmalaiyin mee misai - பொன்மயமான மஹாமேருமலையின் மேலே படிந்த
கார்முகில் போல,Kaarmugil pola - காள மேகம் போலே
காய் சினம் பறவை ஊர்ந்து,Kai sinam paravai oornthu - வெல்லிய சினத்தையுடைய பக்ஷி ராஜனை நடத்தி
மா சினம் மாலி,Maa sinam maali - பெரிய சினத்தை யுடையனாய்க் கொண்டு வந்த மாலி யென்ன
மான் மாலி,Maan maali - சமாலி யென்ன
என்றவர் அங்கு பட,Enravar angu pada - இப்படிப்பட்டவர்கள் அங்கே முடியும் படியாக
கனன்று முன் நின்ற,Kanandru mun ninra - சீறி அவர்கள் முன்னே நின்ற
காய் சின யேந்தே!,Kai sina yenthe! - காய்சின வேந்தென்னுச் திரு நாமமுடைய பெருமானே!
கதிர் முடியானே,Kathir mudiyane - விளங்காநின்ற திருவபிஷேகத்தை புடையவனே!
கலி வயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயலையுடை திருப் புளிங்குடியில் வாழ்பவனே!
காய்சினம்,Kaisinam - வெவ்விய சினத்தை யுடைய
ஆழி சங்கு வாள்வில் தண்டு,Aazhi sangu vaalvil thandu - திருவாழி முதலான பஞ்சாயு தங்களையும்
வந்தி,Vandi - திருக்கைகளில் தரித்துக் கொண்டு
எம் இடர் கடிவானே,Em idar kadi vaane - எமது இடங்களைப் போக்குமவனே. (திருக்கண் தாமரை தயங்க நின்றருளாய் என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)
3574திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –துர்பலரோடு பிரபலரோடு வாசி இன்றிக்கே -ரக்ஷகனான நீ நாங்கள் வாழும் படி எங்கள் கண் எதிரே ஒரு நாள் இருந்திடாய் நின்றார்.) 7
எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே
இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து
நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7
எம் இடர் கடிந்து,Em idar kadinthu - எம்முடைய இடரைப் போக்கி
இங்கு என்னை ஆள்வானே,Ingu ennai aalvaane - இங்கு என்னை அடிமை கொண்டு போருமவனே
இமையவர் தமக்கும் ஆங்கு ஆணையாய்,Imayavar thamakkum angu aanaiyai - பிரமன் முதலிய தேவர்களுக்கும் அப்படியே ரக்ஷகனானவனே
செம்மடல் மலரும் தாமரை பழனம்,Semmadal malarum thamarai pazhanam - சிவந்த இதழ்கள் மலருகிற தாமரைகள் பொருந்திய நீர் நிலங்களை யுடைத்தான
தண் திருப்புளிங்குடி கிடந்தாய்,Than thiruppulingudi kidandhai - அழகிய திருப்புளிங்குடியிலே சயனித்தருள்பவனே
நாம்,Naam - அடியொம்
நம்முடைய அடியர் கவ்வை கண்டு உகந்து,Nammudaiya adiyar kavai kandu ugandhu - பாகவதர்களின் கோலாஹலங் கண்டு மகிழ்ந்து
களித்து உளம் நலம் கூர,Kalithu ullam nalam koora - உள்ளத்தினுள்ளே பரமானைத்தம் பொங்கும்படியாக
இம் மடவுலர்காண,Im madavularkana - அறிவிலிகளான இவ்வுலகத்தாருங் காண
நீ ஒருநாள் எங்கள் கண் முகப்பே இருந்திடாய்,Nee orunaal engal kan mugappe irundhidai - நீ ஒருநாள் எமது கண்ணெதிரே இருந்தருளவேணும்
3575திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் அந்த விபூதியில் அன்றியே சகல லோகங்களும் கண்டு உன் திருவடிகளில் விழுந்து தொழுது வாழும் படி இந்த விபூதியிலும் திருப்புளிங்குடியிலே உன் வாசி தோற்ற எழுந்து அருளி இருக்க வேணும் என்கிறார்.) 8
எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய்
திருவைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8
திங்கள் சேர்மாடம்,Thingal sermadam - சந்திர மண்டலத்தளவுமோல்கின மாடங்களையுடைய
திருப்புளிங்குடியாய்,Thiruppulingudiyai - திருப்புளிங் குடியில் வாழ்பவனே
திருவைகுந்தத்துள்ளாய் தேவா,Thiruvaikundathullai devaa - ஸ்ரீவைகுண்ட மென்னுந்திருப்பதியில் நிற்கும் தேவனே
எங்கள் எண் முகப்பே,Engal en mugappe - எங்கள் கண் முன்னே
உலகர்கள் எல்லாம்,Ulagar ellam - லோகத்திலுள்ளாரெல்லாரும்
அடி இணை,Adi inai - திருவடியினையை
தொழுதுஎழுது இறைஞ்சி,Thozhudhuzhuthu iraindhi - தொழுவது மெழுவதுமாயிருந்து வணங்கி
தங்கள் அன்பு ஆர,Thangal anbu aara - தங்களுடைய பக்தி வளர
நமது சொல்வலத்தால்,Namadhu solvalathaal - தாம்தாம் சொல்லக் கூடியவளவிலே
தலைத் தலை சிறந்து பூசிப்ப,Thalai thalai sirandhu poosippa - ஒருவர்க்கொருவர் மேல் விழுந்து ஸ்தோத்திரங்களைப் பண்ணும்படி
இ கண் மா ஞாலத்து இதனுளும்,E kan maa gnalathu idhanulum - இந்த மிக விசாலமான பூமியிலே இத்திருப்புளிங்குடியிலும்
வீற்றிடங் கொண்டு,Veetridam kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
ஒரு நாள் இருந்திடாய்,Oru naal irundhidai - ஒரு நாளாவது இருந்தருள வேணும்
3576திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (எம்பெருமானுடைய பரமஸுகுமாரமான திருமேனிக்கு இந்த முரட்டு நிலம் அடியோடு தகாது ; ஆயினும் இங்குள்ள பக்தர்கள் ஸேவிக்கும்படியாக இம்முரட்டு நிலத்திலும் எம்பெருமானெழுந் தருளியிருக்க ப்ராப்தமாகிறது என்கிற தத்துவத்தை வெளியிட்டுக் கொண்டு பிரார்த்தனை பண்ணுகிறாரிப் பாட்டில்.) 9
வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப்
புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9
சேறுஇளவாளை,Seru ilavaalai - தன்னிலமான சேற்றிலே வள வருகையாவே இளமை தங்கிய வாளைகள்
செந்நெலூடுஉகளும்,Senneloodu ugalum - செந்நெற்பயிர்களினிடையே களித்து வர்த்திப்பெற்ற
செழு பணை திரு புளிங்குடியாய்,Sezu panai thiru pulingudiyai - அழகிய நீர் நிலங்களையுடைய திருப்புளிங்குடியிலே வாழ்பவனே
அடியோம் போற்றி,Adiyom potri - அடியோங்கள் மங்களா சாஸனம் பண்ணி
ஓவாத,Ovadha - இடைவிடாதே
கண் இணை குளிர,Kan inai kulira - கண்கள் குளிருமாறு
புது மலர் ஆகத்தை பருக,Puthu malar agaththai paruga - புதிய மலர்போலே ஸுகுமார மாயிரக்கிற உன் திருமேனியை யநுபகிக்கும்படி
கூற்றம் ஆய்,Kootram aai - (எதிரிகளுக்கு) மிருத்யுவாய் கொண்டு
அசுரர் குலம்,Asurar kulam - அஸுரவர்க்கத்தை
முதல் அரிந்த,Mudhal arindha - வேரோடே களைந்ததொழித்த
கொடு வினை படைகள் வல்லவனே,Kodu vinai padaigal vallavane - கொடுந்தொழில் செய்யவல்ல ஆயுதங்களை விதேயமாக புடையவனே
மீற்றிடல் கொண்டு,Meetidal kondu - உனது மேன்மை இடங்கொண்டு தோன்றும்படி
வியன் கொள்மா ஞாலத்து இதனுளும்,Viyan kol maa gnalathu idhanulum - விஸ்தாரமான மஹா பூமண்ட லத்தினுள்ளேயும்
இருந்திடாய்,Irundhidai - இருந்தருளவேணும்
3577திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -மிகவும் நிரதிசய போக்யமான உன் திருவடிகளிலே நானும் வந்து அடிமை செய்யும் படி என்னை அங்கே அழைத்துக் கொள்ளுதல் -இங்கே வருதல் செய்து அருள வேணும் -என்கிறார் .) 10
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள்
மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள்
கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10
கொடுவினைபடைகள் வல்லையாய்,Koduvinai padaigal vallaiyai - (விரோதிகள் திறத்துக்) கொடுந் தொழில் புரியவல்ல ஆயுதங்களை கொண்டு காரியஞ்செய்ய வல்லவனே!
அமரர்க்கு இடர் கெட,Amararku idar keda - தேவர்களுக்கு இடர் கெடும்படியாக
அசுரர்கட்கு இடம் செய்,Asurargatku idam sei - அசுரர்களுக்கு துக்கத்தை வினைக்குமிடத்து
கடு வினை நஞ்சே,Kadu vinai nanje - விரைவில் முடிக்கவல்ல நஞ்சானவனே!
என்னுடைய அமுதே,Ennudaiya amudhe - எனக்குப் பரம போக்யமான அம்ருதமே!
கலிவயல் திரு புளிங்குடியாய்,Kali vayal thiru pulingudiyai - செழித்த வயல் சூழ்ந்த திருப் புளிங்குடியில் வாழ்பவனே!
வடிவு இணை இல்லா மலர் மகள்,Vadivu inai illaa malar magal - வடிவழகில் ஒப்பற்ற பெரிய பிராட்டியாரும்
மற்றை நிலமகள்,Matrai nila magal - அப்படிப்பட்ட பூமிப் பிராட்டியாரும்
பிடிக்கும் மெல் அடியை,Pidikkum mel adiyai - வருடுகின்ற ஸுகுமாரமான திருவடியை
கொடு வினையேணும் பிடிக்க ஒரு நாள்,Kodu vinai enum pidikka oru naal - தௌர்ப்பாக்ய சாலியான நானும் வருடுமாறு ஒரு நாளாகிலும்
கூவுதல் வருதல் நீ செய்யாய்,Koovudhal varudhal nee seiyai - என்னை யழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ செய்ய வேணும்
3578திருவாய்மொழி || (9-2—பண்டை நாளாலே) (எல்லா உறவின் காரியமும் தமக்குக் குறைவில்லாமல் அருளுமாறு ஆழ்வார் எம்பெருமானைப் பிரார்த்தித்தல் (திருப்புளிங்குடி)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் எம்பெருமானுடைய திருவடிகளை நிரந்தரம் சிந்திக்கப் பெறுதலேயாம் என்று தலைக்கட்டியருளுகிறார்.) 11
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான்
அடி இணை யுள்ளத்தோர் வாரே–9-2-11
குரைகடல் கடைந்தவன் தன்னை,Kuraikadal kadainthavan thannai - குமுறுகின்ற கடலைக் கடைந்தவனான எம்பெருமானைக் குறித்து
கூவுதல் வருதல் செய்திடாய் என்று,Koovudhal varudhal seidhidai endru - அழைத்துக் கொள்வதோ வந்தருள்வதோ இரண்டதொன்று செய்ய வேணுமென்று அபேக்ஷித்து
மேலி நன்கு அமர்ந்த,Meli nangu amarntha - (அப்படியே பெறுகையாலே) நன்கு தரிக்கப்பெற்ற
வியன்புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்,Viyan punal porunal vazhuthi naadan sadagopan - பரிபூர்ணமான தீர்த்ததையுடைய தாமிர பர்ணி சூழ்ந்த வழுதி நாட்டுக்குத் தலைவரான ஆழ்வாருடைய
நாஇயல் பாடல்,Naa iyal paadal - திருநாவின் தொழிலான லாகிய
ஆயிரத்துள்ளும்,Aayirathullum - ஆயிரம் பாசுரங்களினுள்ள
இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இப்பதிகத்தைக் கற்க வல்லவர்கள்
மூன்று உலகம் அளந்தான் அடி இணை,Moondru ulagam alandhaan adi inai - திரி விக்கிரமனுடைய பாதங்களை
ஓவுதல் இன்றி,Ovudhal inri - அநவரதமும்
உள்ளத்து ஓர்வார்,Ullathu oorvaar - நெஞ்சிலே அநுஸ்திக்கப் பெறுவர்கள்.
3579திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (அவன் நாராயணனாகையாலே நம் அபேக்ஷிதம் செய்து தலைக்கட்டுமை நிஸ்ஸந்தேஹமென்று தம்முள் தாமே அநுஸந்தித்துக் கொள்ளுகிறார்.) 1
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
கார் ஆயின காள நல் மேனியினன்
நாராயணன் நங்கள் பிரான் அவனே–9-3-1
ஓர் ஆயிரம் ஆய்,Or aayiram aai - ஒரு திருநாமமே ஆயிரம் திருநாமமாய்க் கொண்டு
உலகு எழ் அளிக்கும்,Ulaku ezh alikkum - ஏழுலகங்களையும் ரக்ஷிக்கும் படியான்
ஆயிரம் பேர் கொடது ஓர்பீடு உடையன்,Aayiram per kodadhu orpeedu udaiyan - ஆயிரந் திருநாமங்களை யுடையனாயிரு க்கையாகிற விலக்ஷணமான பெருமையை யுடையனும்
நாளம் கார் ஆயின,Naalam kaar aayin - காளமேகம்போலே சாமளமான
நல்மேனியினன்,Nal meniyinan - அழகிய திருமேனியையுடையனுமான
நாராயணன் அவனே நாங்கள் பிரான்,Naarayanan avane naangal praan - நாராயணனே நமக்கு உபகாரகண்
3580திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் நாராயண சப்தம் ப்ரஸ்துதமாகையாலே அதன் பொருளைப் பன்னி யுரைக்கிறாரிதில்.) 2
அவனே யகல் ஞாலம் படைத்திடந்தான்
அவனே அஃதுண்டு மிழ்ந்தான் அளந்தான்
அவனே யவனும் அவனுமவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே–9-3-2
அகல் ஞாலம் படைத்து இடந்தான் அவனே,gal gnalam padaiththu idanthaan avane - விபுலமான ஜகத்தைப் படைத்ததும் (வராஹ மூர்த்தியாகி) இடந்ததும் அப்பெருமானே
அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான் அவனே,Ahthu undu umizhndhaan alandhaan avane - அந்த ஜகத்தை உண்டதும் உமிழ்ந்ததும் அளந்ததும் அவனே
அவனும் அவனும் அவனும் அவனே,Avanum avanum avanum avane - பிரமனும் சிவனும இந்திரனும் அவனே
மற்று எல்லோமும் அவனே,Matru ellomum avane - மற்றுள்ள ஸகல சேதநாசேதங்களும் அவனே (என்னு மில்லிஷயத்தை)
அறிந்தனம்,Arindanam - (அவன் தந்த ஞானத்தாலே) அறிந்து கொண்டோம்
3581திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (வேதங்களாலும் வேத வித்துக்களாலும் அறியப்போகாத பெருமானை நான் அவனது நிர்ஹேதுக கடாக்ஷத்தாலே உள்ளபடி அறியப்பெற்றேனென்கிறார்.) 3
அறிந்தன வேத அரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே–9-3-3
அறிந்தன வேதம் அரு பொருள் நூல்கள்,Arinjana vedam aru porul noolgal - தத்துவத்தை யறிந்தலையாயிருக்கிற வேதங்களினுடைய அரிய பொருள்களை யுறுதியிட வல்ல இதிஹாஸ புராணாதி நூல்களானவை
அருபொருள் ஆதல் அறிந்தன கொள்க,Aruporul aadhai arinjana kolga - எம்பெருமான் அறிவதற்கரிய பொருள் என்றில்வளவே அறிந்ததாகக் கொள்ளத்தகும்
அறிந்தனர் எல்லாம்,Arinjanar ellam - ஞானிகளான யாவரும்
அரியை வணங்கி,Ariyai vanangi - ஸர்வேச்வரணை ஆச்ரயித்த
நோய்கள் அறுக்கும் மருந்து,Noigal arukkum marundhu - தங்களுடைய ஸம்ஸார வியாதிகளை போக்க வல்ல மருந்தாக
அறிந்தனர்,Arindanar - அவனைத் தெரிந்து கொண்டார்கள் (இவ்வளவேயல்லது அவனுடைய யீடுபட்டிலர் என்றவாறு)
3582திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (நித்ய ஸுரிகளுக்குப் பரம போக்யனாயிருந்து வைத்து அங்கு நின்றும் போந்து க்ருஷ்ணனாயவதரித்து நம்மையும் நித்யஸுரிகள் நடுவே கொண்டு வைக்குமவனாயிருக்கிற எம்பெருமானை ஒருவாறு கிட்டப்பெற்றோம், நெஞ்சே அவனை விடாதேகொள் என்று தம்திருவுள்ளத்தை நோக்கி யருளிச்செய்கிற பாசுரமிது.) 4
மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–9-3-4
நங்கள் போகம் மகிழ்ச்சிக்கு மருந்தே என்று,Nangal pogam magizhchikku marundhe endru - உன்னுடைய அநுபவத்தாலே எங்களுக்கு வரும் ஆனந்தத்தை ஸாத்மிப்பிக்கும் மருந்தானவனே என்று
பெருந்தேவர் குழாங்கள்,Perundhevar kuzhaangal - நித்பஸுரிகணங்கள்
பிதற்றும் பிரான்,Pithatrum piraan - வாய்வெருவும்படியான ஸ்வாமியாய்
கருதேவன்,Karudhevan - கரிய திருமேனியை யுடையனாய்
எல்லாம் கண்ணன்,Ellam Kannaan - எமக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனாய்
விண் உலகம் தருமதேவனை,Vin ulagam dharumadhevanai - பரமபத போகத்தைத் தரவானான பெருமானை
மனனே சோரேல் கண்டாய்,Manane sorel kandai - நெஞ்சே நழுவவிடாதே கொள்
3583திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் சொன்னதையே வற்புறுத்திச் சொல்லுகிறாரிதில், உலகில் ஒருவர் ஒரு விஷயஞ்சொன்னால் அதனை ஸாமான்யமென்று கருதி உபேக்ஷித்திருப்பாருமுண்டே. அப்படி உபேக்ஷிக்கத்தக்க வார்த்தையன்றிது. அவசியம் கைக்கொள்ளத் தக்கது என்று ருசிப்பிக்கிறபடி.) 5
மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5
மனமே,Maname - நெஞ்சே !
வல் வீனையேன்,Val veenaiyen - வல்லினையேனான நான்
உன்னை இரந்து,Unnai irandhu - உன்னை வேண்டிக் கொண்டு
கனமே சொல்லினேன்,Kaname sollinaen - திடமாகவொன்று சொல்லுகிறேன்.
இது சோரேல்கண்டாய்,edu sorel kandai - இதனை நழுவவிடாதே கொள்
புனம் மேலிய பூ பூதண் அழாய் அலங்கல்,Punaam meeliya poo poothan azhaai alangkal - (அதாவதென்னென்னில்) தன்னிலத்தில் வளர்ந்த செல்லித் திருத்துழாய் மாலையையுடையனாய்
எதும் இனம் இலானை,Edhum inam ilaanaai - (அவ்வழக்கு) ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவனான பெருமானை
அடைவதும்,Adaivadhum - கிட்டவேணு மென்கிறலிதான்
3584திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் தம் திருவுள்ளத்தை வேண்டினாரே; வேண்டுகோள் பலித்து அது நினைந்து நைந்து உள் கரைந்துருகுகிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம்போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் என் மனம்
உடைவதும் அவற்கே யொருங்காகவே–9-3-6
மலர் மங்கை அணி தோள்,Malar mangai ani thol - பெரிய பிராட்டியாருடைய ஆபரணங்கள் பொருந்திய திருத்தோள்களையே
அடைவதும்,Adaivadhum - ஸம்க்லேஷிப்பதும்
அசுரர்க்கு வெம்போர்களே,Asurarkku vemporkal - ஆஸுரப்ரக்ருதிகளோடு வெவ்விய போர்களை செய்வதே நெஞ்சினால் நினைப்பதும்
கடல் அமுதம்,Kadal amudham - கடலிலுள்ள அமுதத்தையே கடைந்து கொடுப்பதும்
அவற்கே,Avarkae - அப்பெருமானுக்கே
எம் மனம் ஒருங்காகவே உடைவதும்,Em manam orungakave udavadhum - என்னெஞ்ச ஒருபடிப்பட சிதிலமாவதும்.
3585திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (எம்பெருமான் இவ்விடத்தே செய்த சேஷ்டிதங்களை யநுஸந்தித்து உருகின நெஞ்சு அன்னவனுறையும் திருநாட்டைச் சென்று காணவிழைகின்ற தென்கிறாரிப்பாட்டில்.) 7
ஆகம் சேர் நரசிங்கமதாகி ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தான் உறை
மாகவைகுந்தம் காண்பதற்கு என் மனம்
ஏகம் எண்ணும் இராப்பகல் இன்றியே–9-3-7
ஆகம்சேர்,Aagamseer - ஒரு வடிவிலே பொருந்தின
நரசிங்கம் அது ஆகி,Narasingam adhu aagi - மதுஷ்யமூர்த்தியும், ஸிம்ஹ மூர்த்தி யுமுடையனாகி
ஓர் ஆகம்,Or aagam - (இரணியனது) ஓரு உவகை
பிளந்தான் உறை,Pilandhaan urai - பிளந்தவனான எம்பெருமான்
மாகம் வைகுந்தம்,Maagam vaikundham - பரமாகாசமான ஸ்ரீவைகுண்டத்தை
காண்பதற்கு,Kaanpatharku - காண்கைக்கு
இரா பகல் இன்றியே,Iraa paghal indriye - இரவென்றும் பகலென்றும் வாசியின்றிக்கே
என் மனம் ஏகம் எண்ணும்,En manam egam ennum - என்மனம் ஒரே விதமாக எண்ணுகின்றது
3586திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (மாசுவைகுந்தம் காண்பதற்கு மனோரதங்கொண்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர் ! சரீரஸம்பந்த மற்ற பின்பு போய் அநுபவிக்கும் பரமபதத்தையா விரும்புகிறீர்; இந்த சரீரத்தோடேயநுபவிக்கும் திருமாலை இந்நிலத்தேயுள்ளதன்றோ; இதை விட்டு மாகவைகுந்தங்காண வாசைப்படுவதில் என்ன விசேஷம்? என்ன; இது வாஸ்தவமே; திருவேங்கடமலை இந்நிலத்தேயுள்ளது தான். அதனாலெனக்கென்ன? காலாழும் நெஞ்சழியும் கண்சுழலுமென்றிருக்கிற நான் திருமலையில் சென்று அநுபவிக்க பாக்யஹீநனன்றோ தேவர்களேயன்றோ அங்குச் சென்று தொழுவார்; ஆகவே திருமலையோடு பரமபதத்தோடு வாசியில்லையே யெனக்கு என்கிறார்.) 8
இன்றிப் போக இருவினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளத்து
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8
இருவினையும்,Irvinaiyum - புண்ணியம் பாவம் என்கிற இரண்டு கருமங்களையும்
இன்றிபோக கெடுத்து,Indri pogak keduththu - ஸத்தையழிந்து போம்படி தொலைத்து
ஆக்கை ஒன்றி புகாமை,Aakkai onri pugamai - (ஆத்மா) சரீரத்தோடே சரீரமாகக் கலந்துபோகாதபடி
உய்யக் கொள்வான்,Uyyaik kolvaan - உஜ்ஜீவனப்படுத்து மெம்பெருமான்
நின்ற,Nindra - (அடியார்களை யெதிர்பார்த்து) நிற்கிற
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலை
நீள் நிலத்து உள்ளது,Neel nilathu ulladhu - பரந்த இவ்வுலகத்தே யுள்ள தொன்றாம்
சென்று,Sendru - (அங்கே) சென்று சிட்டி
கை தொழுவார்கள்,Kai thozhuvargal - கை தொழுமலர்கள்
தேவர்களே,Thevargale - (மநுஷ்யான்றிக்கே) தேவர்களேயாவர்.
3587திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (கீழ்ப்பாட்டில் திருவேங்கடம் சென்று தேவர்கள் கைதொழுவார்களே என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ஆழ்வீர்! திருவேங்கடன் சென்று கை தொழுவது அத்தனை யருமையன்று காணம் மதுஷயர்களெல்லாருஞ் சென்று கை தொழுமிடமேயது நீரும் வந்து கை தொழுது க்ருதாருத்யகலமே என்று கூற, அதற்கு விடையளிக்கிற தீப்பாசுரம்.) 9
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுது மென்னுமிது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்
தழுவுமாறு அறியேன் உன தாள்களே–9-3-9
மாமலர்,Maamalai - சிறந்த புஷ்பங்களையும்
நீர் சுடர் தூபம்,Neer sudar thoopam - தீர்த்தம் தீபம் தூபூம் இளைகளையும்
கொண்டு,Kondu - எந்திக் கொண்டு
சொழுது எழுதும் என்னுமிது,Sozhudhu ezhuthum ennum idhu - அடிமனை செய்து மென்றால் இது
பழுது இல்தொல் புகழ்,Pazhuthu ilthol pugazh - (ஆரா திக்கைக்கு அரியன்) என்கிற அலத்யமின்றிக்கே இயற்கையான புகழையுடைய
உன தாள்கள்,Un thaalgal - உனது திருவடிகளை
தழுவும் ஆறு அறியேன்,Thazhuvum aaru ariyaan - கிட்டும் விரகு அறிகின்றறேன்
3588திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (ப்ரயோஜநாந்தர பார்களாய் அடிமைச் சுவடு அறியாதவர்களான பிரமன் முதலிய தேவர்களுக்கும் முகங்கொடுக்குமவனான உன்னுடைய சீலகுணம் என் வாக்குக்கு நிலமன்றோ யென்கிறார்.) 10
தாள தாமரையான் உனதுந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆளராய்த் தொழுவாரும் அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உனசீலமே–9-3-10
தாள தாமரையான்,Thaal thamaraiyaan - காளையுடைய தாமரையிற் பிறந்த பிரான்
உனது உந்தியான்,Unadhu unthiyaan - உன்னுடைய உந்தையைப் பற்றினவன்
வாள் கொள் நின் மழு ஆளி,Vaal kol nin mazu aali - ஒளி பொருந்திய நீண்ட மழுப்படையை யுடைய ருத்தன்
உன் ஆகத்தான்,Un aakathaan - உனது திருமேனியில் ஒரு பந்தத்தைப் பற்றினவன்
ஆளர் ஆய் தொழுவாரும் அமரர்கள்,Aalar aai thozhuvaarum amararhal - அடியார்களாய்ப் பணிகின்றவர்களும் தேவர்கள்
உன் சீலம்,Un seelam - உன்னுடைய சீல குணத்தை
நாளும் என் புகழ்கோ,Naalum en pugazhko - காலமெல்லாம் புகழ்ந்தாலும் என்னவென்று புகழ்வேன்
3589திருவாய்மொழி || (9-3–ஓராயிரமாய்) (எம்பெருமானோடு உள்ள தொடர்பினைக் கண்ட ஆழ்வார் அவனது சீலத்தில் ஈடுபட்டுக் கூறுதல்) (இப்பதிகம் கற்பார் திருநாடு செல்லுகை ஆச்சரியமன்று, ப்ராப்தமே என்கிறார்.) 11
சீலம் எல்லை இலான் அடிமேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை ஆயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே–9-3-11
சீலம் எல்லை இலான் அடிமேல்,Seelam ellai ilaan adimael - எல்லையற்ற சீல குணத்தையுடைய பெருமான் திருவடிகளைப் பற்றி
அணி கோலம் நீள் கருகூர் சடகோபன்,Ani kolam neel karukoor sadagopan - மிகவழகிய திருக்குருசடரியைதரித்த ஆழ்வாருடைய
சொல் மாலை,Sol maalai - சொற்களினாலான மாலையநயிருக்கிற
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தினுள்ளே
இவை பத்தினின்,Ivai paththinin - இப்பதிகத்திலே அந்வயித்தவர்கள் பாலர்
வைகுந்தம் ஏறுதல் பான்மை,Vaikundham erudhal paanmai - பரமபதத்தில் ஏறப்பெறுவது இயல்லாம்
3590திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (பெரிய பிராட்டியாரோடும் திவ்யாயுதங்களோடுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காண்பதற்குத் தமது கண்கள் விடாய்த்திருக்கிறபடியைப் பேசுகிறாரிதில். *** வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதிய ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர்பாகவதைஸ் ஸஹ என்றோதப்பட்ட நிலைமையைக் கண்டு களிக்க வேணுமென்கிறாராயிற்று.) 1
மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1
மை ஆர் கருகண்ணி,Mai aar karukanni - மையணிக் கருங்கண்களையுடையவளும்
கமலம் மலர் மேல்,Kamalam malar meel - தாமரைப் பூவின் மேலிருப்பவளுமான
செய்யாள்,Seyyaal - சிவந்த நிறமுடைய பிராட்டி
திருமார்வினில் சேர்,Thirumaarvinil seer - திருமார்பிலே சேரப்பெற்ற
திருமாலே,Thirumaale - ச்ரிய பதியே
வெய்யார்,Veyyaar - ம்மை விஞ்சின
சுடர் ஆழி,Sudar aazhi - ஒளிமிக்க திருவாழியையும்
அரி சங்கம்,Ari sangam - அழகிய ஸ்ரீபாஞ்ச ஸந்யத்தையும்
பந்தும்கையா,Pandhum kaiyaa - ஏந்தின திருக்கைகளையுடையவனே
என் கண்,En kan - எனது கண்களானவை
உன்னை காண கருதும்,Unnai kaana karudhum - உன்னைக் காண விரும்பாநின்றன.
3591திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டில் தம்முடைய கண்களுக்குண்டான நசையைப் பேசினார். இப்பாட்டில் தமக்கும் தம்முடைய நெஞ்சுக்குமுண்டான சாபலத்தைச் சொல்லுகிறார்.0 2
கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2
கண்ணே,Kanne - எனக்குக் கண்ணாளவனே
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சானது
உன்னைகாண கருதி,Unnaik kaana karuthi - உன்னையே காண வாசைப்பட்டு
எண்ணே கொண்ட சிந்தையது ஆய் என்று,Ennae konda sinthaiyadhu aai endru - பல பல மநோரதங்களைப் பண்ணி நின்று
இயம்பும்,Iyambum - அலற்றா நிற்கும்
நான்,Naan - நானோ வென்னில்
விண்ணோர்,Vinnor - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
என்றும் காண்பு,Endrum kaanbu - என்றும் காணவரியளன உன்னை அரியாயை
கண்ணா தொழியேன் என்று அழைப்பன்,Kannaa thozhiyen endru azhaippan - கிட்டாமல் விடுவதில்லை யென்று உறுதி கொண்டு கூப்பிடா நின்றேன்.
3592திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ்ப்பாட்டிற்படியே கூப்பிடச் செய்தேயும் அவன் வந்தருளக் காணாமையாலே, ஆர்த்தியே செப்பேடாக வந்து ரக்ஷிக்குமவனான உன்னுடைய திருவருளுக்கு நான் புறம்பானேனோ? என்கிறார்.) 3
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக்கின்றது போல் என் உள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய்
பிழைக்கின்றது அருள் என்று பேதுறுவனே–9-4-3
அழைக்கின்ற அடி நாயேன் என் உள்ளம்,Azhaikkindra adi naayen en ullam - கூப்பிடா நின்றுள்ளவனாய்த் திருவடிவாரத்தில் விழுந்து கிடக்கும் நீசனாள என்னுடைய உள்ளமானது.
என் கூழை லாலால் குழைக்கின்றது போல குழையும்,En koozhai laalal kuzhaiykinradhupola kuzhaikkum - நாயானது குட்டை வாலையசைத்து தன்னினைவைக் காட்டுமாபோலே காட்டா நின்றது.
அன்று,Andru - முன்பொரு காலத்தில்
மழைக்கு குன்றம் எடுத்து,Mazhaikku kunram eduthu - பெருமழையைத் தடுக்கக் கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து
ஆ நிரை காலத்தாய்,Aa nirai kaalatthaa - பசுக் கூட்டங்களை ரக்ஷித்தவனே!
அருள் பிழைக்கின்றது என்று,Arul pizhaikkindradhu endru - உன்னருள் (என்பக்கலிலே) தடுமாறிப் போகின்றதேயென்று
பேது உறுவன்,Paedu uruvan - கலங்கா நின்றேன்.
3593திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.) 4
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4
வானவர் தானவர்க்கு,Vaanavar thaanavarkku - அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற
என்றும் அறிவது அரிய,Endrum arivadhu ariya - எப்போதும் அறிய வொண்ணாத
அரிய ஆய அம்மானே,Ariya aaya ammaane - நரஸிம்ஹ மூர்த்தியே
இனி உறுவது என்று,Ini uruvadhu endru - ‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு
உனக்கு ஆள்பட்டு,Unakku aalpattu - உனக்கு சேஷ பூதனாகி
நின் கண் பெறுவது எது கொல் என்று,Nin kan peruvathu edhu kol endru - உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று]
பேதையேன் நெஞ்சம்,Paethaiyen nenjam - அறிவிலியான என்னுடைய நெஞ்சானது
மறுகல் செய்யும்,Marugal seiyyum - கலங்கா நின்றது
3594திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஆழ்வார்தாம் தம்முடைய கலக்கத்தைக் கீழ்ப்பாட்டில் வெளியிட்டவாறே எம்பெருமான் ஆழ்வீர்! நாம் சிலர்க்கு அருமைப்பட்டிருக்கிறோமென்பது கிடக்கட்டும் ; பத்துடையடியவர்க்கு எளிவன் என்பதை நீர் ஆதியிலேயே அறிந்து பேசினவரல்லீரோ? நான் பிறர்க்கு அரியனாயிருப்பது கொண்டு உமக்கென்ன வருத்தம்? உமக்கு எளியனே காணும் உமக்கு வேண்டுவதென்ன? அதைச்சொல்லும் என்றருளிச்செய்ய காண்கைதான் வேணுமென்கிறார்.) 5
அரியாய அம்மானை அமரர் பிரானைப்
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே–9-4-5
அரி ஆய அம்மானை,Ari aaya ammaanaai - விரோதி நிஸந சீலனான ஸ்வாமியாய்
அமரர் பிரானை,Amarar piraanai - நித்ய ஸுரிகளுக்கு அநுபாவ்யனாய்
பெரியாணை,Periyaanai - அந்த நித்ய ஸுரிகளுக்கும் பரிச்சேதிக்க வொண்ணாதபெருமையை யுடையவனாய்
முன் பிரமனை படைத்தானை,Mun piramanai padaiththaanai - முன்னம் நான்முகளை (உந்திக்கமலத்தில்) தோற்றுவித்தவனாய்
வரிவாள் அரவு இன் அணை பள்ளி கொள்கின்ற,Varivaal aravu in anai palli kolkinra - அழகிய ஆதிசேக்ஷனாகிற பரமபோக்ய சயனத்திலே திருக்கண் வளர்ந்தருள்பவனான
கரியான்,Kariyaan - கரிய பிரானுடைய
சுழல் காண,Suzal kaana - திருவடிகளைக் காண்பதற்கு
கருத்து கருதும்,Karuthu karuthum - என்னுள்ளம் கருதா நின்றது.
3595திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழ் ஐந்து பாட்டுக்களாலும் ஆழ்வார் வெளியிட்ட ஆர்த்தியைக் கண்ட எம்பெருமான் ஒருவாறு இவருடைய ஆர்த்தியைத் தீர்ப்போமென்று திருவுள்ளம் பற்றி ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து புகுந்தான்; அவ்வளவிலே தம்முடைய நெஞ்சு உகந்து அநுபவிக்கிறபடியைப் பேசுகிறாரிதில்.) 6
கருத்தே உன்னைக் காண கருதி என் நெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா விளங்கும் சுடர் சோதி உயரத்து
ஒருத்தா உன்னை உள்ளும் என் உள்ளம் உகந்தே –9-4-6
கருத்தே,Karuththe - என் கருத்தாக வுள்ள பெருமானே!
உன்னை காணகருதி,Unnai kaana karuthi - உன்னைக் கண்டநுபவிக்க வேணுமென்று மநோரதங் கொண்டு
என் நெஞ்சத்து,En nenchaththu - எழுந்திராத ஸ்திரப்ரதிஷ்டையாக
இருத்தினேன்,Iruththinaen - இருத்திக் கொண்டேன்
தேவர்கட்கு எல்லாம் விருத்தா,Thevargatku ellam viruththaa - உயர்ந்தவர்களுக் கெல்லாம் உயர்ந்தவனே
விளங்கும் சுடர் சோதி உயரத்து,Vilangum sudar sothi uyarathu - அளவு கடந்த தேஜோமயமான உயர்ந்த நிலத்திலே(பரம பதத்திலே)
ஒருத்தா,Oruththaa - அத்விதீயனாய் எழுந்தருளியிருப்பவனே
என் உள்ளம்,En ullam - எனது நெஞ்சானது
உன்னை உகந்து உள்ளும்,Unnai ugandhu ullum - உன்னை ப்ரேமத்தோடு சிந்தனை செய்யா நின்றது.
3596திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (ஒரு கால் தூணிலே வந்து தோன்றி ப்ரஹலாதாழ்வானுடைய ஆர்த்தியைத் தீர்த்தாப்போலே தம்முடைய ஆர்த்தியைத் தீர்த்தருவினதாக நினைத்து ஏத்துகிறார். “என்னுள்ளம் உன்னை உகந்தேயுள்ளும்” என்று கீழ்ப்பாட்டிற் பேசினவதுவே இப்பாட்டிலும் முக்கியமாகப் பேசப்படுகிறது.) 7
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட வமலா
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் நரசிங்கமதாய வுருவே–9-4-7
அகம் நான் ஏமர்ந்து,Akam naan emarnthu - உள்ளே பொருந்தி
இடம் கொண்ட அமலா,Idam konda amala - இடங்கொண்டிருக்கின்ற அமலனே
மிரும் தானவன் மார்வு அகலம்,Mirum thaanavan maarvu akalam - மிடுக்குமிக்க இரணியாசுரனுடைய அகன்ற மார்வை
இருகூறு ஆ,Irukooru aa - இருபிளவாக்கவல்ல
நகந்தாய்,Nagandhai - நகத்தை யுடையவனே
நரசிங்கம் அது ஆய உருவே,Narasingam adhu aaya uruve - நரசிங்க மூர்த்தியானவனே
என் உள்ளத்து அகம்பால்,En ullaththu akambaale - எனது ஹருதயத்தின் மர்ம ஸ்தானமானது
உன்னை உகந்தே உள்ளும்,Unnai ugandhe ullum - உன்னைப் பரமப்ரீதியோடு அநுபவிக்கின்றது.
3597திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (கீழிரண்டு பாட்டுக்களிலுண்டான களிப்பே இப்பாட்டிலும் தொடர்ந்து செல்லுகின்றது. ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –எம்பெருமானைக்-கிருஷ்ணனைக் – காணப் பெற்றேன் என்று இனியராகிறார்.) 8
உருவாகிய ஆறு சமயங்கட்கு எல்லாம்
பொருவாகி நின்றான் அவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய வாதியைத் தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே–9-4-8
உரு ஆகிய,Uru aagiya - மேலெழுந்த பார்வையில் ஒன்று போலே தோற்றுகிற
ஆறு சமயங்கட்கு,Aaru samayangadku - புறமதங்களான அறு சமயங்களுக்கும் எல்லாம்
பொரு ஆகி நின்றான் அவன்,Poru aagi ninraan avaan - தடையாகி நிற்பவனும்
எல்லா பொருட்கும் அரு ஆகிய ஆகியை,Ellaa porutkum aru aagiya aakiyai - ஸகல பதார்த்தங்களுக்கும் உயிர் நிலையாய்க் கொண்டு முதல்வனும்
தேவர்கட்கு எல்லாம் கரு ஆகிய,Thevargatku ellam karu aagiya - எல்லாத் தேவர்களுக்கும் காரண பூதனாமான
கண்ணனை,Kannanaik - கண்ணபிரானை
கண்டு கொண்டேன்,Kandu kondaen - கண்டு அநுபவிக்கப் பெற்றேன்.
3598திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தரம் அநுபவித்து ஆனந்திப்பதிற்காட்டிலும் பிறரையும் அநுபவிப்பித்து ஆனந்திருப்பது ஒப்புயர்வற்ற ஆனந்தமாதலால் அவ்வானந்தமும் தமக்கு ப்ராப்தமானபடியை இப்பாட்டிலருளிச் செய்கிறார்.) 9
கண்டு கொண்டு என் கண்ணினை ஆரக் களித்து
பண்டை வினை ஆயின பற்றோடு அறுத்துத்
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9
எண்கண் இணை ஆர கண்டு கொண்டு,Enkan inai aara kandu konda - என் கண்களிரண்டும் வயிறு நிறையும் படி கண்டு கொண்டு
களித்து,Kaliththu - ஆனந்தித்து
பண்டை வினை ஆயின,Pandai vinai aayina - அநாதி விரோதிகளான எல்லாவற்றையும்
பற்றோடு அறுத்து,Patroadu aruththu - வாஸனையோடே போக்கி
அண்டத்து அமரர் பெருமான் அடியேன்,Andaththu amarar perumaan adiyaen - நித்யஸுரி நாதனுக்கு அடியேனான நான்
தொண்டர்க்கு அமுது உண்ண,Thondarkku amudhu unna - பக்தாம்ருதமாக
சொல் மாலைகள் சொன்னேன்,Sol maalaihal sonnaen - இத்திருவாய்மொழியை விண்ணப்பஞ் செய்யப்பெற்றேன்.
3599திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தாம் உஜ்ஜீவிக்கப்பெற்ற படியைப் பேரானந்தம் பொலியப் பேசுகிறார்.) 10
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறைப் புள்ளின்
கொடியானைக் குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே–9-4-10
இவன் அடியான் என்று,Evan adiyaan endru - இச்சடகோபன் நமக்கு அடிமைப்பட்டவன் என்று கொண்டு
எனக்கு ஆர் அருள் செய்யும் செடியானை,Enakku aar arul seyyum chediyanaai - என் விஷயத்தில் பேரருள் புரியும் ஸர்வேச்வரனாய்
நிறை புகழ் அம்சிறை புள்ளின் கொடியானை,Nirai pugazh amsirai pullin kodiyanaai - நிறைந்த புகழோடுகூடி அழகிய சிறகையுடைய கருடனைக் கொடியாகவுடையனாய்
குன்றாமல் உலகம் அளந்த அடியானை,Kunraamal ulagam alandha adiyaanai - ஒன்றுவிடாமல் உலகம் முழுவதையுமளந்து கொண்ட திருவடியையுடையனாயிருக்கு மெம்பெருமானை
அடியேன் அடைந்து உய்ந்த ஆறே,Adiyaen adaindhu uyndha aare - அடியேன் கிட்டி உஜ்ஜீவிக்கப் பெற்ற விதம் என்னே!
3600திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (இப்பதிகம் வானவர்தமின்னுயிர்க்கு ஏறேதருமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஆறா மதயானை அடர்த்தவன் தன்னைச்
சேறு ஆர் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன்னுயிர்க்கே–9-4-11
ஆறாமதம் யானை,Aaraamadam yaanai - ஒரு நாளும் மாறாத மதத்தையுடைய குவலயாபீட யானையை
அடர்த்தவன் தன்னை,Adarththavan thannai - பங்கப்படுத்தின பெருமானைக் குறித்து
சேறு ஆர் அயல் குருகூர் சடகோபன்,Seru aar ayal kurukoor sadagopan - சேறு மிக்க வயலை யுடைத்தான தென் குருகூர்க்குத் தலைவரான ஆழ்வார்
நூறே சொன்ன,Noorai sonna - நூறு நூறாக வருளிச் செய்த
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்,Or aayiraththul ippaththum - ஆயிரத்தினுள்ளே இப்பதிகமானது
வானவர் தம் இன் உயிர்க்கு ஏறு,Vaanavar tham in uyirkkum eeru - நித்ய ஸுரிகளின் இன்னுயிர்த் தலைவனான எம்பெருமானை
தரும்,Tharum - கொடுக்கும் (பகவத் ப்ராப்தியைப் பண்ணித்தருமென்றபடி)
3601திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) ( சில குயிற் பேடைகளை நோக்கி நீங்கள் என்னை முடிக்க வேண்டினால் அதற்கு இத்தனை பாரிப்பு வேணுமோ? கோழி வெண் முட்டைக்கு என் செய்வதெந்தாய் குறுந்தடி (கோழி முட்டையை யடிப்பதற்குச் சிறு தடிதான் வோணுமோ?) என்றாப்போலே, அபலையாய் அற்றுக்கிடக்கிற வென்னை முடிக்கைக்கு இவ்வளவு ஸம்பிரமங்கள் வேண்டியிருந்த தோவுங்களுக்கு? என்கிறாள்.) 1
இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு
இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின்
குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை
நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ–9-5-1
குயில் பேடைகாள்,Kuyil paedaikhaal - பெண் குயில்களே!
இன் உயிர் சேவலும் நீரும்,In uyir sevavalum neerum - உங்களுடைய உயிர் போன்ற சேவல்களும் நீங்களும்
கூவிக் கொண்டு,Koovik kondu - (கலவிக்காகப்)பரஸ்வரம் கூவிக்கொண்டு
இங்கு,Ingu - என் கண் வட்டத்திலே
எத்தனை,Eththanai - மிகவும்
என் உயிர் நோவ,En uyir nov - என் பிராணன் நோவுபடும்படி
மிழற்றேல்மின்,Mizhatrayelmin - தொனியைச் செய்யவேண்டா:
என் உயிர் கண்ண பிரானை வர,En uyir kanna praanai vara - எனக்கு உயிரான கண்ண பிரான் இங்கு வந்துசேரும்படி
நீர் கூவ கிலீர்,Neer koova kilir - நீங்கள் அழைக்க மாட்டீர்கள்
என் உயிர் கூலி கொடுப்பார்க்கு,En uyir kooli koduppaarkku - என்னுயிரை வாங்கி அவன் கையிலே கொடுக்க நினைத்திருக்கு முங்களுக்கு
இத்தனையும் வேண்டுமோ,Ethanaiyum vendumo - இவ்வளவு பாரிப்புக் தான் வேணுமோ?
3602திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சிலஅன்றிற் பேடைகளை நோக்கி நீங்கள் உங்களுடைய ஆண்களோடே கூடிக்கொண்டு இனிமையான கூஜிதங்களைச் செய்து அதனாலே என்னை நலிகின்றீர்களே இது நியாயமா? இப்படி நலிய வேண்டா–என்று இரக்கிறாள்.) 2
இத்தனை வேண்டுவது அன்று அந்தோ
அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் உன் சேவலும்
கரைந்து ஏங்குதீர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன்
அல்லன் ஒருவர்க்கும்
அத்தனை ஆம் இனி என் உயிர்
அவன் கையதே–9-5-2
அன்றில்பேடைகாள்,Andril paedaikhaal - பெண்ணன்றிற் பறவைகளே
நீரும் நும் சேவலும்,Neerum num sevavalum - நீங்களும் உங்கள் சேவல்களும்
எத்தனை கரைந்து ஏங்குதிர்,Eththanai karaindhu aenguthir - எவ்வளவோ கரைந்து உருந்துகிறீர்களே
இத்தனை வேண்டுவது அன்று,Ithanai venduvathu andru - என்னைக் கொலை செய்ய இத்தனைபாரிப்பு வேண்டியதில்லை!;
அந்தோ,Andho - ஐயோ, எதுக்கு இவ்வளவு பாரிப்பு?
வித்தகன் கோவிந்தன்,Viththagan Govndhan - மாயக் கோபாலன்
ஒருவர்க்கும் மெய்யன் அல்லன்,Oruvarkkum meyyan allan - நல்லார் தீயாரென்கிற வாசியின்றிக்கே அனைவர்க்கும் பொய்யனே
இனி,Ini - ஆன பின்பு
என் உயிர்,En uyir - என் பிராணன்
அவன் கையதே ஆம் அத்தனை,Avan kaiyadhai aam aththanai - அவன் கைப்பட்டதேயன்றோ.
3603திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அற நோவு பட்ட என்னை நலியாதே கொள்ளுங்கோள்என்று அன்றில் பேடைகளை திரியவும் மீளவும் இரக்கிறாள்.) 3
அவன் கையதே என் ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்து ஆடுதிர் புடை சூழவே
தவம் செய்தில்லா வினையாட்டியேன் உயிர் இங்கு உண்டோ
எவன் சொல்லி நிற்றும் நும் ஏங்கு கூக்குரல் கேட்டுமே–9-5-3
அன்றில் பேடைகாள்,Anril pedaikal - பெண்ணன்றில் பறவைகளே
எனது ஆர் உயிர் அவன் கையுதே,Enathu ar uyir avan kaiyuthe - எனது அருமையானவுயீர் அவன் கைப்பட்டதே
நீர் எவம் சொல்லி,Neer evam solli - நீங்கள் ஏதேதோ உக்திகளைப் பேசிக் கொண்டு
குடைந்து,Kudainthu - ஸம்ச்லேஷித்து
புடை சூழவே ஆடுதிர்,Pudai soolave aaduthir - என் கண் வட்டத்திலேயே திரிகின்றீர்கள்;
தவம் செய்தில்லா,Thavam seidhu illaa - அவனைப்போலே பிரிவுக்கு ஆறியிருக்கும்படியான பாக்கியம் பண்ணாத
இங்கு உண்டோ,Ingu undoo - (அங்கே போனபடியாலே) இங்கு இல்லையே
நும் எங்கு கூக்குரல் கேட்டும்,Num engu kookkural keettum - உங்களுடைய பரேம கனமான தொனியைக் கேட்டும்
எவம் சொல்லி,Evam solli - எத்தைச் சொல்லித் தரிப்பது? நிற்றும்
3604திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில மயில்களை குறித்து, நீங்கள் உயரக்கூவி என்னுயிரை முடிக்கப் பார்க்கிறீர்களே! இது நீதியோ வென்கிறாள்.) 4
கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன் மின் நீரும் சேவலும் கோழி காள்
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே–9-5-4
கோழிகாள்,Kozhikal - மயில்களே!
கூக்குரல் கேட்டும்,Kookkural keettum - நீங்கள் பாஸ்பரம் அழைத்துக் கொள்ளுகிற தொனியைக் கேட்டும்
நம் மாயன் கண்ணன்,Nam maayan kannan - நமது மாயக்கண்ணன்
வெளிப்படான்,Velippadaan - வந்து தோன்றுகின்றவன்
நீரும் சேவலும் மேல் கிளை கொள்ளேன் மின்,Neerum sevalum mel kilai kollen min - நீங்கள் ஆணும் பெண்ணுமாயிருந்து உயரக் கூவ வேண்டா
நமக்கு,Namakku - என்னுடைய
வாக்கும் மனமும் கருமமும்,Vaakkum manamum karumamum - காணத்ரய வ்ருத்தியும்
ஆங்கதே,Aangathe - அப்பெருமான் பக்கலிலே யாயிற்று
ஆக்கையும் ஆவியும்,Aakkaiyum aaviyum - உடலும் உயிரும்
அந்தரம் நின்று உழலும்,Antharam ninru uzhalum - நடுவே நின்று தத்தளிக்கின்றன
3605திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –தன்னினவாய் இருந்து நலிகிற பூவைகளைக் குறித்து -அவன் தான் என்னை முடிக்கைக்கு அழகிதான நல் விரகு பார்த்தான் -உங்களுக்கு இங்கே விஷயம் இல்லை -என்கிறாள்.) 5
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள்
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழ் உலகும் கொண்ட
நம் திரு மார்வன் நம் ஆவி உண்ண நன்கு எண்ணினான்–9-5-5
அந்தரம் நின்று,Antharam ninru - நடுவே வீணாகப் பரிச்சாப்படுகிற உழல்கின்ற
யானுடைய பூனவ காள்,Yaanudaiya poonava kaal - என்னுடைய பூவைகளே !
நும் திறந்து எதும் இடை இல்லை,Num thirandhu ethum idai illai - உங்கள் உத்யோகத்திற்குச் சிறிதும் அவகாசமில்லை
குழறேன்மின,Kuzhaarenmin - உங்கள் தொனியைக்காட்டி நலி வேண்டா
இந்திர ஞாலங்கள் காட்டி,Indhira gnaalangal kaatti - (பண்டுமாவலியிடத்து) மாயா விநோதங்கள் காட்டி
இவ் எழ் உலரும் கொண்ட,Iv el ularum konda - இவ்வேழுலகங்களையும் ஆக்ரமித்து கொண்டாடப் போலே என்னையும் கொள்ளை கொண்ட
நம் திருமார்பன்,Nam thirumaarban - நமது திருமால்
நம் ஆவி உண்ண,Nam aavi unna - நம்மூயிரையும் கொள்ளை கொள்ள
நன்கு எண்ணினான்,Nangu enninaan - நன்றாக ஸங்கல்பித்தான்
3606திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் பிரிந்த தசையில் அவன் திரு நாமங்களையும் சொல்லாமைக்கு அன்றோ உன்னை நான் வளர்த்தது – ஆனபின்பு அவன் திரு வடிவு போலே இருக்கும் உன் வடிவைக் காட்டி அதின் மேலே அவன் திரு நாமங்களையும் சொல்லி என்னை நோவு செய்யாதே கொள்ளாய் -என்று தன் கிளியைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 6
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசுஞ்சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான்–9-5-6
நன்கு எண்ணி,Nangu enni - எனக்கு ஆபத்திலே உதவுவாயென்று நன்மையை நினைத்து
நான் வளர்த்த,Naan valartha - நான் போஷித்து வந்த
சிறு கிளி பை தலே,Siru kili pai thale - சிறிய கிளிக் குட்டியே!
இன் குரல் நீ மிழற்றேல்,In kural nee mizhaarel - இனிய குரலைக் கொண்டு நீ தொனி செய்யாதே (ஏனென்னில்)
நின் செய்ய வாய் ஒக்கும் வாயுன்,Nin seiyya vaai okkum vaayun - உனது சிவந்த வாயையொத்த வாயையுடையவனும்
கண்ணன் கை காலினன்,Kannan kai kaalinan - (உனது கண் கை காலோடொத்த) திருக்கண் திருக்கை திருவடிகளையிடையவனும்
நின் பசும் சாமம் நிறத்தன்,Nin pasum saamam nirathan - உன்னுடைய பசுமை யழியாத சாமநிறம் போன்ற நிறத்தை யுடையனும்
என் ஆர் உயிர்,En ar uyir - என்னுடைய அருமையான உயிர் போன்றவனுமான
காகுத்தன்,Kaaguthan - இராமபிரான்
கூட்டுண்டு நீங்கினான்,Koottundu neenginaan - என்னோடே கலந்துப் பிரிந்தான்
3607திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (எம்பெருமானது வடிவுக்குப் போலியான மேக பங்க்திகளைக் கண்டு, உங்கள் வடிவைக் காட்டி என்னை முடியாதே கொள்ளுங்கோளென்கிறாள்.) 7
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7
கூட்டுண்டு நீங்கிய,Koottundu neengiya - என்னோடு கலந்து பிரிந்த
கோலம் தாமரை கண் செம்வாய்,Kolam thaamarai kan semvaai - அழகிய தாமரை போன்ற கண்களையும் சிவந்த அதாத்தையு முடையனாய்
வாட்டம் இல் என் கரு மாணிக்கம்,Vaattam il en karu maanikam - இடைவிடாமல் என்னினைவிலேயேயிருக்கிற நீலரத்னம் போன்றவடிவையுடையனான
மாயன் கண்ணன் போல்,Maayan kannan pol - மாயக் கண்ணனைப் போலயிருக்கிற
கோட்டிய வில்லோடு மின்னும் மேகம் குழாங்கள் காள்!,Kottiya villodu minnum megam kuzhaangal kaal - வளைக்கப்பட்ட வில்லோடு கூடி மின்னுகிற மேகதிரள்களே!
நும் உரு,Num uru - உங்கள் வடிவத்தை
காட்டேன்மின்,Kaateenmin - காட்டாதே மறைத்துக்கொள்ளுங்கோள்;
அது என் உயிர்க்கு காலன்,Adhu en uyirkku kaalan - அந்த உங்கள் வடிவம் என் பிராணனுக்கு மிருத்யு
3608திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி-ஸ்ரீ கண்ணனுடைய திரு நாமங்களை சொல்லில் நான் முடிவன்-அவற்றைச் சொல்லாது ஒழிய வேணும் என்று உங்களை நான் இரக்க பின்னையும் அவற்றையே சொல்லிக் கொன்றி கோள் – நான் உங்களை வளர்த்த பிரயோஜனம் அழகிதாகப் பெற்றேன் என்று தன் குயில்களே இன்னாதாகிறாள்.) 8
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தேற்கு நீர்
குயிற் பைதல் காள் கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டினீர் பண்பு உடையீரே –9-5-8
குயீல் பைதல்காள்,Kuyil paithalkaal - குயிற் குட்டிகளே
அது உயிர்க்கு காலன் என்று,Adhu uyirkku kaalan endru - (கண்ணனுடைய நாமமாகிற) அது என்னுயிர்க்கு மிருத்யுவென்று சொல்லி
உம்மை யான் இரந்தேற்கு,Unmai yaan iranthearku - (அந்த க்ருஷ்ண நாமத்தைச் சொல்ல வேண்டாவென்) உங்களை வேண்டிக்கொண்ட என்னை
கண்ணன் நாமமே குழறி கொன்றீர்,Kannan naamame kuzhaari kondreer - அந்தக் கண்ணன்நாமங்களையே அநக்ஷரமதுரமாகச் சொல்லிக் கொலை செய்கிறீர்கள்
தயிர் பழஞ்,Thayir pazhanj - தயிரையும் பழைய சோற்றையும் சோற்றோடு
பால் அடிசிலும் தந்து,Paal adisilum thanthu - பாலையும் செஞ்சோற்றையு மூட்டி
சொல் பயிற்றிய,Sol payitriya - அவனது திருநாமங்களாகிற சொற்களை கற்பித்தத்ற்குக் கைம்மாறாக
நல் வளம் ஊட்டீவீர்,Nal valam oottiveer - (இப்படி யென்னைக் கொலை செய்கையாகிற) நல்ல காரியம் செய்தீர்கள்
பண்பு உடையீரே,Panbu udaiyeere - நீங்கள் நல்ல தர்மிஷ்டர்களே
3609திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (மதுவைப் பருகிக் களித்துப் பாடுகிற சில வண்டுகளையும் தும்பிகளையுங் குறித்து உங்கள் தொனி என்னால் பொறுக்கப் போகிறதில்லையே; பாடாதே கொள்ளுங்கோள் என்கிறாள்.) 9
பண்புடை வண்டொடு தும்பிகாள் பண் மிழற்றேன்மின்
புண்புரை வேல்கொடு குத்தால் ஒக்கும் நும் இன்குரல்
தண் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி உண்டு எழ நண்ணினான்–9-5-9
பண்பு உடை வண்டொடு தும்பிகான்,Panbu udai vandodu thumbikaan - பாட்டின் நீர்மையை யுடைய வண்டுகளோடு கூடின தும்பிகளே
நும் இன் குரல்,Num in kural - உங்களுடைய இனிய குரலானது
புண் இரை வேல் கொடு குத்தால் ஒங்கும்,Pun irai vel kodu kutthal ongum - புண்ணின் புரையிலே வேலைக் கொண்டு குத்தினாற்போலேயிரா நின்றது
பண் மிழற்றேன்மின்,Pan mizhaarelmin - பண்பாடு தலைத்தவிருங்கள்
தண் பெரு நீர் தடம்,Than peru neer tadam - குளிர்ந்து நிரம்பின நீரையுடைய தடாகம்
தாமரை மலர்ந்தால் ஒக்கும்,Thaamarai malarndhaal okkum - தாமரை மலரப் பெற்றாற்போலேயாய்
பெரு கண் கண்ணன்,Peru kan kannan - மிகப் பெரிய கண்களை யுடையனான க்ருஷ்ணன்
நம் ஆவி உண்டு,Nam aavi undu - நமது உயிரைக் கவர்ந்து
எழ நண்ணினான்,Eza nanninaan - அகன்று போயினன்
3610திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (சில நாரைக் குழாங்கள் அருகே யிருந்து மந்த்ராலோசனை செய்யுமாபோலே தென்பட்டன; தன்னை முடிப்பதற்கு அவை ஆலோசிப்பதாகக் கொண்டு அந்தோ! நான் முடிந்தேன் ; இனி நீங்கள் திரண்டு பயனென்கொல்? என்கிறாள்.) 10
எழ நண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நல் நாரைக் குழாங்கள் காள் பயின்று என் இனி
இழை நல்ல ஆக்கையும் பையவே புயக்கு அற்றது
தழை நல்ல இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே–9-5-10
யழனம் முதல் தாரை குழாய்கள்தான்,Yazhanam mudhal thaarai kuzhaaykal thaan - நீர்நிலங்களிலே திரிகிற நல்ல நாரைத் திரள்களே!
தாமும் எழ நண்ணி,Thaamum eza nanni - நாம் இவ்விபூகியை விட்டெழுந்து
நம் வானநாடனோடு ஒன்றினோம்,Nam vaananaadano du ondrinom - நம்பரம பத நாதனோடே சேர்ந்து பொருந்தி விட்டோம்
இனி பயின்று என்,Ini painru en - (இனி நீங்கள் என்னை முடிக்கத் திரளவிருந்து) ஆலோசிப்பதில் என்ன லாபம்?
இழை நல்ல ஆக்கையும்,Izai nalla aakkaiyum - ஆபரணாபிராமநான சரீரமும்
பையவே,Paiyave - நாளடைவிலே
புயக்கற்றது,Puyakkatradhu - வசையற்றதாயிற்று
எங்கும்,Engum - உலகமெல்லாம்
தழை நல்ல இன்பம் தலைப்பெய்து,Thazhai nalla inbam thalaippeythu - விஸ்தீர்ணமாய் நன்றான ஸுகத்தைப் பெற்று
தழைக்க,Thazhaikka - வாழ்ந்திடுக
3611திருவாய்மொழி || (9-5–இன்னுயிர்ச் சேவலும்) (தலைவனைக் காண ஆசையுற்ற தலைவி அவனை நினைவூட்டும் பொருள்களால் தளர்ந்தமை கூறல்) (இப்பதிகத்திற்கு பாசுரம் நெஞ்சிலே பட்டால், ஆரேனுமாகிலும் உருகியே நிற்பர்கள் என்கிறார். பலனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரத்தில் ஒரு பலன் சொல்லதே இங்ஙனே சொல்லலாமோ வென்னில் இதுவும் பயனுரைத்த படியேயாம்; ஒன்றுக்கும் கரையாதே உருகாதே கல்லாயிருப்பவர்களையும் உருகச் செய்வது ஒரு பலனன்றோ.) 11
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல் ஊழிக்குத்
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனைத்
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூ வுலகும் உருகுமே–9-5-11
இன்பம் தலைப் பெய்து,Inbam thalaip peydhu - பேரின்பத்தை விளைவித்துக் கொண்டு
எங்கும் தழைத்த,Engum thazhaitha - எங்கும் மவியாபித் திருக்கின்ற
தன் புகழ்,Than pugazh - எம்பெருமான்றனது கீர்த்திகளை
பல் ஊழிக்கு ஏத்த,Pal oozhikku aetha - ஊழிதோறூழியோவாமல் அதிக்கும்படியாக
தனக்கு அருள் செய்த,Thanakku arul seitha - தமக்கு பரம கிருமை பண்ணின
மாயனை,Maayanai - ஆச்சரிய குணசீலனான எம்பெருமானைக் குறித்து
தென் குருகூர் சடகோபன் சொல்,Then kurukoor sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த
ஆயிரத்துள்,Aayirathul - ஆயிரத்தினுள்ளே
இவை ஒன்பதோடு ஒன்றுக்கு,Ivai onbadhodu onrukku - இப்பதிகத்திற்கு
மூ உலகும் உருகும்,Moo ulagam urugum - மூவுலகத்தவரும் உருகுவர்கள்
3612திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானுடைய ஆச்சரியமான பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார்.) 1
உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி
பெருகுமால் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன்
தெருவு எல்லாம் காவி கமழ் திருக் காட்கரை
மருவிய மாயன் தன் மாயம் நினைதொறே–9-6-1
தெரு எல்லாம் காலி கமழ்,Teru ellam kaali kamazh - தெருவுகள் தோறும் செங்கழு நீர்ப்பூ வாஸிக்கப்பெற்ற
திருக் காட்கரை,Thiruk kaatkarai - திருக்காட்கரையென்னுந் திருப்பதியிலே
மருவிய,Maruviya - பொருந்திவர்த்திக்கிற
மாயன் தன் மாயம்,Maayan than maayam - எம்பெருமானுடைய ஆச்சரியமான ஸெளந்தர்யசீலாதிகளை
நினைதொறு,Ninaithoru - நினைக்கிறபோதெல்லாம்
நெஞ்சம் உருகும்,Nenjam urugum - நெஞ்சு சுட்டுக்குலைந்து உருகாநின்றது
உயிரின் பரம் அன்றி,Uyirin param andri - ஆத்மாவுக்குத் தாங்கக்கூடிய அளவல்லாமல்
வேட்கை பெருகும்,Vetkai perugum - ஆசை கரைபுரண்டு செல்லா நின்றது
தொண்டனேன் என் செய்கேன்,Thondaneen en seigain - சபலனான நான் என்ன செய்யக் கடவேன்?
3613திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி ‘உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ‘ என்கிறார்.) 2
நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூஞ்சோலைத் தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆள் செய்யும் நீர்மையே –9-6-2
நினை தொள் பூ சோலை,Ninaithol poo solai - தடாகங்களையுடைய பூஞ்சோலை களையுடைந்தான
தென் காட்கரை,Then kaatkarai - திருக்காட்கரை யிவெழுந்தருளியிருக்கிற
என் அப்பா,En appa - எம்பெருமானே
வினை கொள் சீர்,Vinai kol seer - பாபங்களைக் கொள்ளை கொள்ளும்தான் (உனது) திருக்குணங்களை
நினைதொறும்,Ninaithorum - நினைக்கிற போதெல்லாம்
நெஞ்சு இடிந்து,Nenju idinthu - நெஞ்சானது சிதிலமாகி
சொல்லுந் தொறும்உகும்,Sollun thorumugum - (அக்குணங்களைச்) சொல்லாத தொடங்கின போதெல்லாம் (அந்த நெஞ்சானது) நீராயுருநா நின்றது
பாடிலும்,Paadiyum - (அக்குணங்களைப்) பாடத்தொடங்கினாலோ
எனது ஆர் உயிர் வேம்,Enathu ar uyir vem - என்னுடைய அருமையான ஆத்ம வஸ்துவானது வேலா நின்றது.
நான்,Naan - இப்படியாகப் பெற்ற நான்
உனக்கு ஆள் செய்யும் நீர்மை நினைகிலேன்,Unakku aaal seiyyum neermai ninaikilaan - உனக்குந் கைங்கரியம்பண்ணும் விதத்தை அறிகின்றிலேன்
3614திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார்.) 3
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3
நெஞ்சம் வஞ்சித்து புகுந்து,Nenjam vanjithu pukundhu - ஏதோ வஞ்சனையினால் என் நெஞ்சினுள்ளே புகுந்து
நீர்மையால் என்னை ஈர்மை செய்து,Neermaiyaal ennai eermai seydhu - முறைகெடப் பரிமாறும் சீல குணத்தினால் என்னை நலிந்து
என் உயிர் ஆய் என் உயிர் உண்டான்,En uyir aayi en uyir undaan - எனக்குத் தாரகனாயிருப்பன் போல என்னை யழித்தவனும்
சீர்மல்கு சோலை தென் காட்கரை என் அப்பன்,Seer malgu solai then kaatkarai en appan - அழகு நிரம்பிய சோலைகளால் சூழப்பட்ட திருக்காட்கரையியெழுந்தருளியிருக்கும் பெருமானும்
கார்முகில் வண்ணன் தன்,Kaarmukil vannan than - காளமேக வண்ணனுமானபரம புருஷனுடைய
கள்வம்,Kalvam - க்ருத்ரிமத்தை
அறிகிலேன்,Arikilaan - தெரிந்து கொள்ள மாட்டாதவனாயிருக்கிறேன்.
3615திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார்.) 4
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
சிறிய என் ஆர் உயிர் உண்ட திரு வருளே–9-6-4
தன் உள்,Than ul - தனது ஸங்கல்பத்திலே
அனைத்து உலகும் நிற்க,Anaiththu ulagam nirka - ஸமஸ்த லோ பதார்த்தங்களும் தரிப்புற்றிருக்க
தானும்,Thaanum - இப்படி அவற்றை யெல்லாம் தரித்திருக்கிற தானும்
நெறிமையால்,Nerimaiyaal - சரீராத்மபாவ ஸம்பந்த மடியான சேஷ சேஷி பாவமாகிற முறைமை தவறாமல்
அவற்றுள் நிற்கும் பிரான்,Avattrul nirkkum piraan - அவற்றுக்குள்ளே நிற்கும் உபகாரகனாய்
வெறி கமழ் சோலை,Veri kamazh solai - பரிமளம் மமிக்க சோலைகளையுடைய
சிறிய என்,Siriya en - மிகவும் ஷீத்ரனான என்னுடைய
ஆர் உயிர்,Ar uyir - ஆத்ம வஸ்துவை
உண்ட,Unda - மேல் விழுந்து அநுபவித்த
திரு அருள்,Thiru arul - வியோமோஹத்தை
அறிகிலேன்,Arikilaan - அறிகின்றிலேன்
3616திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று வியக்கிறார்.) 5
திருவருள் செய்பவன் போல என் உள் புகுந்து
உருவமும் ஓர் ஆர் உயிரும் உடனே உண்டான்
திருவளர் சோலைத் தென் காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி நம் கண்ணன் கள்வங்களே–9-6-5
திரு அருள் செய்பவன் போல,Thiru arul seipayavan pola - என்னிடமிருந்து அடிமை கொள்ளு கையாகிற திருவருளைச் செய்பவன் போல அவிநயம் காட்டி
என் உன் புகுந்து,En un pukundhu - என் நெஞ்சிலே புகுந்து
உருவமும் ஆர் உயிரும்,Uruvamum ar uyirum - உடலையு முயிரையும்
உடனே உண்டான்,Udane undaan - ஹேய உபாதேய விபாக மில்லாதபடி ஏகரீதியாக அனுபவித்தான்
திரு வளர் சோலை தென் காட்கரை என் அப்பன்,Thiru valar solai then kaatkarai en appan - அழகு மிகுந்த சோலைகளையுடைய தென் காட்கரை என் அப்பன்
கருவளர்மேனி,Karuvalar meeni - என் அப்பன் சாமநிறம் விஞ்சின திரு மேனியை யுடையவனாய்க் கொண்டு
என் கண்ணன்,En kannan - எனக்கு விதேயனாயிருந்த அப்பெருமானுடைய
கள்வங்களே,Kalvangale - வஞ்சனை யிருக்கிறபடி என்னே
3617திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார்.) 6
எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே–9-6-6
என் கண்ணன்,En kannan - என் பக்கல் பிச்சேறின கண்ணனுடைய
கள்வம்,Kalvam - வஞ்சனைகளானவை
செம் ஆய நிற்கும்,Sem aaya nirkum - செம்மையாகவே ஆர்ஜவமென்றே தோன்றா விந்கும்
அங்கண்ணன்,Angkannan - அவன் வியாமோஹத்தாலே மிகவும் சபலனாய்க் கொண்டு
உண்ட,Unda - பூஜிக்கப்பெற்ற
கோது,Kothu - (அதனாலே) நிஸ்ஸாரமான
என் ஆர் உயிர் இது,En ar uyir idhu - இந்த என்னாத்மாவானது
புன்கண்மை எய்தி,Pungamai eedhi - தைன்யத்தையடைந்ததாகி
என் கண்ணன் என்று இரா பகல் புலம்பி,En kannan endru ra pagal pulampi - எனக்கு விதேயனானவனே யென்று இரவும் பகலும் கதறியழுது
அவன் காட்கரை ஏத்தும்,Avan kaatkarai aethum - அவனுடைய திருக்காட்கரைப் பதியையே சொல்லா நின்றது.
3618திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார்.) 7
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7
ஆள் கொள்வான் ஒத்து,Aaal kolvaan oththu - அடிமை கொள்வரைப் போலே (புகுந்து)
என் உயிர் உண்ட மாயனால்,En uyir unda maayaanal - என்னாத்மாவைக் கொள்ளை கொண்ட மாயப்பெருமானாலே
கோள் உண்டே,Kowl undae - புஜித்துக் கொள்ளப்படச் செய் நேயும்
கோள் குறைபட்டது,Kowl kuraipattadhu - போகம் மிச்சப்பட்டிருக்கிற தென்னலாம்படியிருக்கிற
என் ஆருயிர்,En aar uyir - என்னாத்மாவானது
காட்கரை ஏத்தும்,Kaatkarai Yeththum - அவனுறையுமிடமான திருகட்கரையைப் புகழா நின்றது.
அதனுள் கண்ணா என்னும்,Adhanul kannaa ennum - அத்திருப்பதியிலே நிற்கிற கண்ணா வென்று அழையா நின்றது (அவ்வளவுமன்றிக்கே)
வேட்கை நோய் கூர,Vetkai noi koora - காதல் நோய் மிகப்பெற்று
நினைந்து கரைந்து உகும்,Ninaindhu karaindhu ugum - (அவனுடைய பரிமாற்றங்களை)நினைத்து உருகி சிதிலமாகா நின்றது.
3619திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (எம்பெருமானை யநுபவிக்குமாழ்வார்க்கு “எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே” என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில்.) 8
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளும் நாள் வந்து என்னை முற்றவும் தானுண்டான்
காள நீர் மேகம் தென் காட் கரை என் அப்பற்கு
ஆள் அன்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே–9-6-8
கோள் உண்டான் அன்றி வந்து,Kowl undaan andri vandhu - என்பக்கல் ஒருபகாரம் கொண்டல்லாமல் நிர்ஹேதுகமாக வந்து
என் உயிர் தான் உண்டான்,En uyir thaan undaan - என்னாத்மாவை யநுபவித்தான் (அவ்வளவேயன்றியே)
நாள் நாளும் வந்து,Naal naalum vandhu - நாள் தோறும் வந்து
என்னை முற்றவும் தான் உண்டான்,Ennai muttravu thaan undaan - என்னைச் சிறிதும் சேவயொதபடி பூர்த்தியாக புஜித்தான்
கர்ணம் நீர் மேகம்,Karnam neer megam - கறுத்து நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற வடிவையுடைய
தென்காட்கரை அப்பற்கு என்,Then kaatkarai appaarkku en - திருக்காட்கரை யெம்பெருமானுக்கு
ஆள் பட்டது அன்றே,Aaal pattadhu andri - நான் அடிமைப் பட்டவத்தனையேயன்றோ
என் ஆருயிர் பட்டதே,En aar uyir pattadhe - என்னை இங்ஙனே படுத்த வேணுமோ?
3620திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (கீழ்ப்பாட்டில் “ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது” என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில்.) 9
ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது
பேர் இதழ்த் தாமரைக் கண் கனிவாயது ஓர்
கார் எழில் மேகம் தென் காட் கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே–9-6-9
பேர் இதழ் தாமரை கண்,Peer ithazh thaamarai kan - பெரிய விதழை யுடைய தாமரை போன்ற திருக்கண்களையும்
கனி வாயது ஓர்,Kani vaayadhu or - கனிபோந் சிவந்த வாயையுமுடைத்தா யிருப்பதொரு
சார் எழில் மேகம்,Saar ezhil megam - கறுத்தழகிய மேகம் போன்ற வாயையுடையவனாய்க் கொண்டு
தென்காட்கரை கோயில்கொள்,Then kaatkarai koilkol - திருக்காட்கரையை உறைவிடமாகக் கொண்ட
சீர் எழில் நால் தட தோள்,Seer ezhil naal tada thol - அழகுமிக்க நான்கு திருத் தோள்களையுடையனாய்
தெயவம் வாரிக்கு,Theevam vaarikku - தெய்வங்களுக்குக் கடல் போன்வனான பெருமானுக்கு
எனது உயிர் பட்டது,Enathu uyir pattadhu - என்னாத்மா பட்டபாடு
ஆர் உயிர் பட்டது,Ar uyir pattadhu - வேறு யாருடைய ஆத்மா பட்டது? (நான் பகவத் விஷயத்தில் பட்டபாடு ஒருவரும் படவில்லை யென்கை)
3621திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -தம்மோடு கலந்த எம்பெருமானுக்கு தம்மிலும் அபி நிவேசம் மிக்கு இருந்த படியையும் அத்தாலே மிகவும் நோவு பட்ட படியையும் அருளிச் செய்கிறார். 10
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10
உன்னை நானில்,Unnai naanil - உன்னைக் காணப் பெறில்
வாரிக் கொண்டு விழுங்குவன் என்று,Vaarik kondu vizhunguvaan endru - கபளீகரிப்பேனென்ற
ஆர்வு உற்ற,Aarvu utra - ஆசைகொண்ட
என்னை ஒழிய,Ennai ozhiya - என்னளவன்றியே
என்னில் முன்னம் பாரித்து,Ennil munnam paarithu - (இப்படி செய்யவேணுமென்று) எனக்கு முன்னமே மனோரதித்து
தான் என்னைமுற்ற பருகினான்,Thaan ennai mutra paruginan - என்னை நிச்சேஷமாகக் கபளி கரித் தவனான
கார் ஒக்கும் காட்கரை அப்பன்,Kaar okugum kaatkarai appan - காளமேகம் போன்ற திருக்காட்கரையப்பன்
கடியன்,Kadian - ஸ்வகார்யத்தில் பதற்ற முன்னவன்
3622திருவாய்மொழி || (9-6–உருகுமால் நெஞ்சம்) (ஆழ்வார் எம்பெருமானது சீரைத் துயரத்துடன் கூறுதல் (திருக்காட்கரை)) (இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.) 11
கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னைக்
கொடி மதிள் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
வடிவு அமை ஆயிரத்து இப்பத்தினால் சன்மம்
முடிவு எய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே–9-6-11
கடியன் ஆய் கஞ்சனை பிரான் தன்னை,Kadian aayi kanjanai piraan thannai - விரைந்து கம்ஸனைக் கொன்ற கண்ணபிரான் விஷயமாக
கொடி மதில் தென் குரு கூர் சடகோபன் சொல்,Kodi madil then guru koor sadagopan sol - ஆழ்வாரளிச் செய்த
வடிவுஅமை ஆயிரத்து,Vadivu amai aayirathu - சொற்பொருளழகு பொலிந்த ஆயிரத்தினுள்ளும்
இ பத்தினால்,E paththinaal - இப்பதிகத்தினால்
எம் சன்மம் முடிவு எய்தி,Em sanmam mudivu eedhi - நம்முடைய ஜன்ம பரம்பரைகள் முடிவு பெற்று
கானல்,Kaanal - கானலென்னும்படியான ஸம்ஸாரம்
நாசம் கண்டீர்கள்,Naasam kandeergaal - நாசமடைந்தொழியு மென்பது திண்ணம்.
3623திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (பறவைகளைத் தூதுவிடுகிற பதிகமானாலும், ஆசாரியர்களே இங்குப் பறவைகளாகக் கருதப்படுகிறார் களென்பதை இம் முதற் பாட்டில் தெளிய வைத்தருளுகிறாராழ்வார்.) 1
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே–9-7-1
எம்கானல் அகம் கழிவாய்,Emkaanl akam kazhivai - எங்கள் உத்யானத்தில் உள்ளிருக்கிற கழியிலே
இரை தேர்ந்து,Irai therndhu - இறைதேடி
இங்கு இனிது அமரும்,Ingu inidhu amarum - இங்கே பொருந்தி வர்த்திக்கிற
செம் கால மட நாராய்,Sem kaala madha naaraai - சிவந்த காலையுடைய அழகிய நாரையே!
திருமூழிக் களத்து உறையும்,Thirumoozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுமவனாய்
கொங்கு ஆர் பூ துழாய் முடி,Kongu ar poo thuzhaay mudi - தேன் மிகுந்த திருத்துழாயை முடியிலே அணிந்தவனான
எம் குடக்கூத்தற்கு,Em kudakkooththarku - குடக்கூத்தாடும் எம்பெருமானுக்கு
என் தூது ஆய்,En thoodu aayi - என் தூதாய்ச்சென்று (திரும்பி வந்து)
அமரோடே,Amaroadae - உன்னைச் சேர்ந்தவர்களோடுஙகூட
நும் கால்கள்,Num kaalgkal - (எனக்காக வழிநடந்த) உங்களுடைய கால்களை
என் தலைமேல்,En thalai mel - எனது தலைமீது
கெழுமீரோ,Kazhumeero - சேர்க்கிறீர்களா? (சேர்க்க வேணும்)
3624திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருமூழிக்களத்திலே தாமும் தாமுகந்த அடியார்களுமாயெழுந்தருளியிருக்குமிருப்பிலே நானும் வந்து அடிமை செய்யப் பெறலாகாதோ? அந்த கோஷ்டியிலே அந்வயிக்கை நான் அயோக்யனோ வென்று கேளுங்கோளென்று சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்.) 2
நுமரோடும் பிரியாதே நீரும் நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினங்காள் அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப்புண்டு இங்கு என் தம்மா விழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்கு தக்கிலமே கேளீரே –9-7-2
மரோடும் பிரியாதே,Marodum piriyathae - உங்களினத்தார்களை வீட்டுப் பிரியாமல்
நீரும் நும் சேவலும்ஆய்,Neerum num sevalum aayi - தம்பதிகளாய்க் கொண்டு
அமர்காதல் குருகு இனங்காள்,Amar kaadhal kurugu inanghaal - கூடிக் களித்துவர்த்திக்கும்படியான ப்ரணயத்தையுடைய குருகினங்களே
அணி மூழிக்களத்து உறையும்,Ani moozhik kalaththil uraiyum - திருமூழிக்களத்திலே நித்யவாஸம் பண்ணுகிற
தம்மால் இழிப்புண்டு,Thammaal izhippundu - தம்மால் உபேக்ஷிக்கப்பட்டு (அது காரணமாக)
எமலாரும் பழிப்புண்டு,Emalaarum pazhippundu - எம்மைச் சேர்ந்தவர்களாலும் பழிக்கப்பட்டு
இங்கு என்,Ingu en - இருக்குமில்விருப்பில் என்ன ப்ரயோஜனம்? (இப்படியிருப்பதை விடமுடிந்துபோவதே நன்றல்லவா?
தமரோடு அங்கு உறைவார்க்கு,Thamarodu anggu urivaarkku - தம்முடைய அஸாதாரண பரிஜனத்தோடே அங்கே நித்யவாஸம் பண்ணுகிறவர்க்கு
தக்கிலம் ஏ,Thakkilam ee - நாம் தகுந்திருக்கமாட்டோமோ? (அவருடைய அநுபவம் நமக்குத்தகாதாவென்ற) கேளுங்கள்.
3625திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (திருவாய்மொழியாயிரத்தினுள் தூது விடுகிற பதிகங்கள் நான் கென்று சொன்னோமே; அவற்றும் ஒவ்வொரு பாட்டு உயிராக வைக்கப்படுகிறது, இப்பதிக்த்திற்கு உயிரான பாட்டு இது; ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சில கொக்கினங்களையும் குருகினங்களையும் நோக்கி தன் அழகைக் காண் கைக்கு நாங்கள் யோக்யதை யுடையோம் அல்லோமோ -என்று கேளீர் -என்கிறாள்) 3
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும்
கொக்கினங்காள் குருகினங்காள் குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர்போலும் கண் கை கால் செங்கனி வாய்
அக்கமலத்து இலைபோலும் திரு மேனி அடிகளுக்கே–9-7-3
தட புனல் வாய்,Thada punal vaay - பெரிய ஜலாசயத்திலே
இரைதேரும்,Iraiththarum - இரை தேடித்திரினிற் கொக்கு இனங்காள் குருகு இனங்காள்!
குளிர் மூழிக்களத்து உறையும்,Kulir moozhik kalaththil uraiyum - குளிர்ந்த திருமூழிக்களத்திலே நித்ய வாஸம் பண்ணுமவராய்
செம் கமலத்து அலர் போலும் கண் கைகால்,Sem kamalaththil alar poyum kan kaigal - செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண் திருக்கை திருவடிகளை யுடையராய்
செம் கனி வாய்,Sem kani vaay - சிவந்து களிர்ந்த திருப்பவளத்தை யுடையராய்
அக் கமலத்து இலை போலும் திருமேனி,Akk kamalaththil ilai poyum thirumeni - அந்தத் தாமரையின் இலையை யொத்த திருமேனியையுமுடையரான
அடிகளுக்கு,Adigalukku - ஸ்வாமிக்கு
தக்கிலமே கேளீர்கள்,Thakkilam keleerkal - நாங்கள் தகுந்ததிருக்கமாட்டோ மாவென்று கேளுங்கள்
3626திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில மேகங்களை நோக்கி ‘என் வார்த்தையை அவனுக்குச் சொன்னால் உங்களுக்கு ஏதேனும் தண்டனை நேருமோ?’ என்கிறாள்.) 4
திருமேனி அடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில்காள்
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன்
திருமேனி ஒளி அகற்றித் தெளி விசும்பு கடியுமே–9-7-4
அணிமுகில்காள்,Animukilkalkal - அழகிய மேகங்களே
திருமூழிக்களம் என்னும் செழு நகர் வாய்,Tirumoolikkalam ennum chelu nagar vay - திருமூழிக்கவாமென்கிற திவ்ய க்ஷேத்திரத்திலே வர்த்திப்பவராய்
திருமேனி அடிகளுக்கு,Tirumeni adigalukku - சிறந்த திருமேனியையுடையரான ஸ்வாமிக்கு
தீ வினையேன் விடு தூது ஆய்,Ti vinayen vidu tutu ay - பாபியான நான் விடுகிற தூதாய்ச் சென்று
அவட்கு திருமேனி அருளீர் என்றக்கால்,Avadku tirumeni arulir enrakkal - பராங்குச நாயகிக்கு உமது திரு மேனியைக் கொடுத்தருளீர் என்று ஒரு வார்த்தை சொன்னால்
உம்மை,Ummai - இவ்வுபகாரம் செய்கிற உங்களை
தம் திருமேனி ஒளி அகற்றி,Tam tirumeni oli akatri - உங்கள் வடிவிலுள்ள புகாரை மாற்றி
தெளி விசும்பு கடியுமே,Teli vicumpu kadiyume - நிர்மலமான ஆகாசத்தில் நீங்கள் வர்த்திக்கமுடியாதபடி தண்டிப்பரோ
3627திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவளுக்கு அருளீர் என்ன அமையுமோ -இன்னாருக்கு அருளீர் என்ன வேண்டாவோ என்னில் யாவள் ஒருத்தியுடைய நெஞ்சை யுமக்குத் திரு நாடாகக் கொண்டு நீர் உறைகிறீர்- அவளுக்கு அருளீர் என்று சொல்லி கோள் என்கிறாள்) 5
தெளி விசும்பு கடித்து ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளி முகில்காள் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்குத்
தெளிவிசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார்கள் குழலார்க்கு என் தூதுரைத்தல் செப்புமினே–9-7-5
தெளிவிசும்பு கடிது ஒடி,Telivicumpu kadidu odi - நிர்மலமான ஆகாசத்திலே விரைந்து பறந்து சென்று
தீ வளைத்துமின் இலகும்,Ti valaittumin ilakum - கொள்ளி வட்டம் போலே அழகிய மின் விளங்கப்பெற்ற
ஒளி முகில்காள்,Oli mukilkalkal - அழகிய மேகங்களே
திரு மூழிக்களத்து உறையும்,Tiru moolikkalattu uraiyum - திருமூழிக்களத்தில் நித்யவாஸஞ் செய்தருள்கின்ற
ஒண் சுடர்க்கு,On sudarkku - அழகிய தேஜோராசியாயும்
தீ வினை யேன் மனத்து,Theevinai yen manattu - பாபியான என்னுடைய மனத்திலே
தெளிவிசும்பு திருநாடு ஆ உறையும்,Telivicumpu tirunadu a uraiyum - தெளிவிசும்பான திருநாட்டிலே பண்ணும் வியாமோஹத்தைப்பண்ணி வாத்திப்பவராயும்
துளி வார்கள் குழலார்க்கு,Tuli varkal kuzhalarkku - துளித்து ஒழுகின்ற மதுவையுடைய மயிர் முடியையுடையார்யுமிருக்கிற பெரியவர்க்கு
என் தூதுஉரைத்தல் செய்யுமின்,En tuturaithal seyyumin - எனது தூதுமொழியைச் சொல்லுங்கள்
3628திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –தூ மொழி வாய் வண்டினங்காள்-என்னுடைய சுடர் வளையும் கலையும் இழந்தேன் என்று சொல்ல வேணும் – சொல்லும் இடத்தில் அவன் உங்கள் வார்த்தையை அநாதரியாமே பிராட்டி சந்நிதியில் வைத்துச் சொல்ல வேணும் -என்கிறாள்.) 6
தூதுரைத்தல் செப்புமின்கள்-தூ மொழி வாய் வண்டினங்காள்
போதிரைத்து மது நுகரும்-பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்பகத்தே-வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல்-சுடர் வளையும் கலையுமே–9-7-6
தூ மொழி வாய்வண்டு இனங்காள்,Tu mozhi vayvandu inankal - தூய மொழியை வாயிலேயுடைய வண்டினங்களே
போது இரைத்து மது நுகரும் பொழில்,Podu iraithu madu nukarum pozhil - பூக்களிலே இரைத்துக்கொண்டு மதுபானம் பண்ணும் பொழில்களையுடைய
மூழிக்களத்து உறையும்,Moolikkalattu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்பவராய்
தம்மார்வகத்தே மாதரை வைத்தார்க்கு,Tamarvakatthe matarai vaitharkku - தமது திருமார்பிலே பிராட்டியைத்தாக்கி நிற்பவராய் பெரியவர்க்கு
என்வாய் மாற்றம்,En vay maatram - என் வாய்ப்பாசுரமான
தூது உரைத்தல் செப்புதீர் எல்,Tutu uraithal sepputhir el - தூது வாக்யத்தைச் சொல்லப் பார்த்தீர்களாகில்
சுடர் வளையும் கனையும்,Sudar valaiyum kanaiyum - (எனது) அழகிய கைவனைகளையும் சேலையையும் பற்றி
தூது உரைத்தல் செப்பு மின்கள்,Tutu uraithal seppu mingal - தூதுக்குப் பாசுரமாகச் சொல்லுங்கோள்
3629திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (சில குருகினங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்–எம் பெருமானைக்கண்டு, நீர் சிலரோடே கலந்து அவர்களைத் துறந்து அதுவே புகழாக வீற்றிருக்குமிவ்விருப்பு தருமோமென்று சொல்லுங்கோள் என்கிறாள்.) 7
சுடர் வளையும் கலையும் கொண்டு-அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக்-களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு-ஒரு நாள் ஒரு தூய் மாற்றம்
படர் பொழில் வாய்க் குருகினங்காள்-எனக்கு ஓன்று பணியீரே–9-7-7
படர் பொழில்வாய் குருகு இனங்காள்,Padar pozhil vay kurugu inankal - பரந்து சோலையகத்தே வாழ்கிற குயிலினங்களே
சுடர் வளையும் கலையும் கொண்டு,Sudar valaiyum kalaiyum kondu - (எனது) அழகிய கைவளையையும் சேலையையும் கைக்கொண்டு
அருவினையேன் தோள் துறந்த,Aruvinaiyen thol thuranda - போக்கவரிய பாவஞ்செய்த என்னை விட்டுப்பிரிந்த
படர் புகழான்,Padar pugazhan - பரந்த புகழையுடையவனும்
பங்கயம் கண்,Pangayam kan - செந்தாமரைக்கண்ணனும்
சுடர்பவளம் வாயனை கண்டு,Sudar pavalam vayanai kandu - அழகிய பவழம்போன்ற வாயையுடையவனுமான எம்பெருமானைக் கண்டு
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு நாள்,Oru naal - ஒரு கால்
ஓர் தூய் மாற்றம் ஒன்று பணியீர்,Or thuya maatram onru paniyeer - ஒரு நல்வார்த்தை சொல்ல வேணும்.
3630திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (அவருடைய வடிவழகுக்கு என்ன அபாயம் நேருகிறதோவென்று அஞ்ச வேண்டாதபடி. ஸீரக்ஷிதாமாக வொரு திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருந்தார்; இனி நம்முடைய ஆர்த்தி தீர்க்குமத்தனையே வேண்டுவது; ஆன பின்பு என்னுடைய ஆர்த்தியை அறிவியுங்கோளென்று சில வண்டுகளையும் தும்பிகளையுங்குறித்துச் சொல்லுகிறான். ஆறாயிரப்படி காண்மின்; – “வண்டினங்காள் தும்பிகாள்! உன்னழகைக் காணப்பெறாதே அவளிழந்துபோமித்தனையோ வென்று சொல்லிகோளென்கிறான்” என்று.) 8
எனக்கு ஓன்று பணியீர்காள்-இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும்-வண்டினங்காள் தும்பிகாள்
கனக்கொள் திண் மதிள் புடை சூழ்-திரு மூழிக் களத்து உறையும்
புனக்கொள் காயாமேனிப்-பூந்துழாய் முடியார்க்கே–9-7-8
இரு பொழில் வாய்,Iru pozhil vay - பெரிய சோலையிலே
இரை தேர்ந்து,Irai therndhu - இரையான மதுவைத்தேடிக் கொண்டு
மனக்கு இன்பம் பட மேவும்,Manakku inbam pada mevum - மனதுக்கு இனிமையுண்டாம்படி கலந்துவர்த்திக்கிற
வண்டு இனங்கன காள் தும்பிகாள்,Vandu inankan kaal thumbikal - வண்டுகளே ! தும்பிகளே !
கனம் கொள் திண் மதின் புடை சூழ்,Kanam kol thin madhin pudai soozh - கனத்துத் திண்ணிய மதிவாலே சுற்றும் சூழப்பட்ட
திருமூழிக்களத்து,Thirumoozhikkalathu - திருமூழிக்களத்திலே வாழ்பவராய் உறையும்
புனம் கோள் கரியா மேனி,Punam kol kariya meni - தன்னிலத்தில் வளருகிற காயாம்பூப் போன்ற மேனி நிறத்தையுடையவராய்
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - பூந்துழாயை முடியிலே அணித் துள்ளவரான பெரியவர்க்கு
எனக்கு ஒன்று பணியீர்கள்,Enakku onru paniyeergaal - எனக்காக வொரு வார்த்தை சொல்லவேணும்.
3631திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (எம்பெருமானுடைய வடிவழகுதான் நினைக்க நினைக்க ஆழ்வாரை யுருக்குகின்றதென்னுமிடம் நன்கு தெரிவிக்கப்படுகிறது இப்பாட்டில்.) 9
பூந்துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையார்க்கு
ஏந்து நீர் இளங்குருகே திரு மூழிக் களத்தார்க்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மைக் தம்மைக் கொன்டு அகல்தல் தகவன்று என்று உரையீரே–9-7-9
நீர் ஏந்து இள குருகே,Neer endhu ila kuruke - நீராலே யேந்தப்படுகிற இளங்குருகே
பூ துழாய் முடியார்க்கு,Poo thulasi mudiyaarkku - திருத்துழாயைத் திருமுடியிலே அணிந்துள்ளவரும்
பொள் ஆழி கையாருக்கு,Pol azhi kaiyaarukku - அழகிய திருவாழியைக் கையிலேயுடையவரும்
திருமூழிக்களத் தாருக்கு,Thirumoozhikkalath thaarukku - திருமூழிக்களத்தில் வாழ்பவருமான பெரியவர்க்கு
பூண் ஏந்து முலை பயந்து,Poon endhu mulai payandhu - ஆபரணமணிந்த முலைகள் வைவர்ணிய மடைந்து
என் இணை மலர் நீர்ததும்ப,En inai malar neerdathumba - மலர்போன்ற எனது கண்ணைகள் நீர்மல்கும்படி
தாம் தம்மை கொண்டு அகல்தல்,Thaam thammai kondu agalthal - அவர்தாம் தம்முடைய திருமேனியையுங்கொண்டு அகன்று போவதானது
நகவு அன்று என்று உரையீர்,Nakavu anru endru uraiyeer - தருமமன்று என்று சொல்லுங்கோள்
3632திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (நான் முடிவதற்கு முன்னே என்னிலைமையைத் திருமூழிக்களத்தெம்பெருமானுக்கு உரையீரென்று சில அன்னங்களையிரக்கிறாள்.) 10
தகவன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே–9-7-10
தடபுனல் வாய்,Thadapunal vaai - விசாலமான நீர்நிலங்களிலே
இரை தேர்ந்து,Irai therendhu - இரை தேடிக்கொண்டு
மிக இன்பம் பட மெவும்,Miga inbam pada mevum - பேரானந்தமாகச் சேர்ந்து வாழ்கிற
மெல நடைய அன்னங்காள்,Mela nadaiya annangaal - மெல்லிய நடையையுடைய அன்னங்களே
மேனி மிக மெலிவு எய்தி,Meni miga melivu eydhi - சரீரம் மிகவும் மெலிவடைந்து
மேகலையும் ஈடு அழிந்து,Megalaiyum eedu azhindhu - மேகலையும் தங்காதபடியாகி (அதற்கு மேலே)
என் அகமேனி ஒழியாமே,En agameni ozhiyamae - என் அந்தரங்க ஸ்வரூபம் குலையாத பழிக்கு
திருமூழிக்களத் தார்க்கு,Thirumoozhikkalath thaarkku - திருமூழிக்களத்துறையும் பெருமாளுக்கு
தகவு அன்று என்று உரையீர்கள்,Thakavu anru endru uraiyeergal - இப்படியுபேக்ஷிப்பது நியயாமன்றென்று சொல்லும் கோள்
3633திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11
ஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக
திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற
ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க
அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள்
இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம்
நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும்
3634திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஸ்ரீ ஆறாயிரப்படி –பகவத் தர்சன அபேக்ஷராய் இருப்பாருடைய துக்கங்களை போக்கும் திரு நாவாயை நமக்கும் ஒரு நாள் குறுகுகைக்கு உபாயம் உண்டோ என்கிறார்) 1
அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1
அவனை,Avanai - பரமபோக்யனான ஸர்வேச்வானானவனை
ஆகத்து,Aagathu - தங்கள் உள்ளத்திலே
சிறுத்தும் மனத்து ஒன்றிய,Siruththum manaththu onriya - நிலைநிறுத்தி வைத்துக்கொள்ள வேணுமென்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய
சிந்தையினார்க்கு,Sinthaiyinaarkku - மநோரதத்தையுடைய பக்தர்களுக்கு
வினை ஆயின அறுக்கும்,Vinai aayina arukkum - அநுபவ விரோதிகளையெல்லாம் போக்கக் கடலதாய்
வெறி தண் மலர்,Veri than malar - ஈறு மணம்மிக்குக் குளிர்ந்த புஷ்பங்களை கொண்ட
சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்டதான
திருநாவாய்,Thirunaavaai - திருநாவாயென்னும் திருப்பதியானது
கொடியேற்கு,Kodiyerku - கொடியேனான வெனக்கு
குறுக்கும் வகை உண்டு கொல் ஓ,Kurukkum vagai undu kol o - கிட்டும் வகையுண்டோ?
3635திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.) 2
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்
வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்
அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2
கொடி ஏர் இடை,Kodi eer idai - கொடிபோலாகிய இடையையுடையனாய்
கோகனகத்தவன்,Koganakaththavan - தாமரையாளான பிராட்டிக்கு
கேள்வன்,Kelvan - வல்லபனாய்
வடிவேல் தட கண் மட பின்னை மணாளன்,Vadivel thada kan mada pinnai manaalan - உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய்
நெடியான்,Nediyan - மஹா புருஷனானவன்
உறை,Urai - நித்யவாஸம்பண்ணுகிற
சோலைகள் சூழ் திருநாவாய்,Solaigal soozh Thirunaavaai - சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை
அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல்,Adiyean anuga perum naal evai kol - அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ
3636திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார்.) 3
எவைகோல் அணுகப் பெரும் நாள் என்று எப்போதும்
கவை யில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்
நவை இல் திரு நாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே–9-8-3
அணுக பெறுநாள் எவை கொள்ல என்று,Anuga perunaal evai kol enru - கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று
எப்போதும்,Eppothum - எக்காலத்திலும்
சுவையில் மனம் இன்றி,Suvaiyil manam inri - இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு
கண் நீர்கள் கலுழ்வன்,Kan neergal kaluzhvan - கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன்
நவை இல் திரு நாரணன் சேர்,Navai il Thiru Naranan ser - ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற
திருநாவாய் அவையுள்,Thirunaavaai avaiyul - திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே
புகல் ஆவது ஓர் நாள் அறியேன்,Pugal aavathu or naal ariyen - சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன்.
3637திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார்.) 4
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய் தடம் கண் மடப்பின்னை மணாளா –9-8-4
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய்,Neel aar malar solaigal soozh Thirunaavaai - ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற)
வாள் ஏய் தட கண்,Vaal ey thada kan - வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய்
மட பின்னை மணாளா,Mada pinnai manaalan - நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே!
நானும்,Naanum - அடியேனும்
மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன்,Meelaa adimai pani seiya pugundhen - இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன்.
எனக்கு உள்ளன நான் அறியேன்,Enakku ullana naan ariyen - அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன்.
3638திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (என் கண்களின் விடாய்தீரத் திருநாவாயைக் கண்டு அநுபவிக்கப்பெறுவது என்றைக்கோ வென்கிறார்.) 5
மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உயிர் தேவர்கட்கு எல்லாம்
விண்ணாளன் விரும்பி உறையும் திருநாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே–9-8-5
மலர்மங்கைக்கும்,Malarmangaikkum - பெரிய பிராட்டியாருக்கும்
மண் மடந்தைக்கும்,Man madandaikkum - பூமிப் பிராட்டிக்கும்
மணாளன்,Manaalan - மணயாளனாய்
உலகத்து உயிர் தேவர் கட்கு எல்லாம் கண்ணாளன்,Ulakaththu uyir thevar kadku ellaam kannaalaan - மண்ணுலகத்ததவர்க்கும் விண்ணுலகத்தவர்க்கு மெல்லாம் நிர்வாஹகனாய்
வீண் ஆளன்,Veen aalan - பரமபதத்திலுள்ளாவைரயும் அடிமை கொள்ளுபவனான ஸர்வேச்வரன்
விரும்பி உறையும் திருநாமாய்,Virumbi uraiyum Thirunaamaai - ஆதாரத்தோடு வர்த்திக்கிற திரு நாவாயை
கண்ண ஆர கண்டு,Kanna aara kandu - கண்கள் வயிறு நிறையும்படி கண்டு
இங்கு களிக்கிறது என்று கொல்,Ingu kalikkirathu enru kol - இங்கே ஆனந்திப்பது என்றைக்கோ?
3639திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (எனக்காகத் திருநாவாயைக் கோயிலாகக் கொண்டு உறைகின்ற கோவலர்கோவே! உன்பக்கலிலே அநந்ய ப்ரயோஜனமான அன்மையுடையேனான வென்னுடைய கண்களின் விடாய் சொல்லத் தரமன்று; என்பசி தீராவிட்டாலும் என் கண்களின் பசி தீர்ந்தால் போதுமேயென்கிறார்.) 6
கண்டே களிக்கின்றது இங்கு என்று கொல் கண்கள்
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி
வண்டு ஆர் மலர்ச் சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே–9-8-6
வண்டு ஆர் சோலைகள் சூழ் மலர் திருநாவாய்,Vandu aar solaigal soozh malar Thirunaavaai - வண்டுகள் நிறைந்த மலரையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயை
கொண்டு உறைகின்ற,Kondu uraiginra - உகங்தவிடமாகத் திருவுள்ளம்பற்றி வர்த்திக்கிற
எம் கோவலர் கோவே,Em Kovalarkove - எம் கோபாலகிருஷ்ணனே!
துரிசு இன்றி உனக்கே தொண்டு ஆய் ஒழிந்தேன்,Thurisu inri unakke thondru aai ozhindhen - க்ருத்திமமில்லாமல் உனக்கே தொண்டனாய்விட்டேன்
கண்கள்,Kangal - எனது கண்களானவை
இங்கு கண்டே களிக்கின்றது என்று கொல்,Ingu kande kalikkinrathu enru kol - இத் திருப்பதியிலே கண்டு ஆனந்திக்கப் பெறுவது என்றைக்கோ?
3640திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (திருநாவாயிலே நித்யவாஸம் பண்ணியருளாநின்ற தேவரீர் அடியேனுடைய அநந்யகதித்வத்தைக் கண்டு அருள் செய்தருளவேணுமென்கிறார்.) 7
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய்
தேவா சுரம் செற்றவனே திருமாலே
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ
ஆவா அடியான் இவன் என்று அருளாயே–9-8-7
கே ஆகிய மா வலியை,Ke aagiya maa valiyai - பிரபுவாகத் தன்னை யயீமானித்திருந்த மஹாபலிடத்திளின்றும்
நிலம் கொண்டாய்,Nilam kondai - பூமியை இரந்து பெற்றவளே
தேவாசுரம் செற்றவனே,Devaasuram setravaney - தேவாஸீர யுத்த்தில் ஒரு தலைக்கு நிர்வாஹகனாயிருந்தவனே
திருமாலே,Thirumaaley - திருமகள் கொழுநனே
நாவாய் உறைகின்ற,Naavaai uraiginra - திருநாவாயிலே வர்த்திக்கிற
என் நாரணநம்பீ,En Narananambi - எனது நாராயணமூர்த்தியே
ஆஆ,Aa aa - ஐயோ
இவன் அடியான் என்று அருளாய்,Ivan adiyaan enru arulaai - இவன் நமக்கு அடியவனன்றோவென்று க்ருபை பண்ணி யருள வேணும்
3641திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (கீழ்ப்பாட்டில் “ஆவாவடியானிவனென்றருளாயே” என்றவர், இப்பாட்டில், அருளினாலுமருள்க ; அருளாதொழியினுமொழிக என்கிறார்.) 8
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே –9-8-8
அருளாது ஒழிவாய்,Arulaathu ozhivaai - என்பால் அருள் செய்யாதிருக்கிலுமிரு
அடியேனை,Adiyenai - அடியேன் பக்கலில்
அருள் செய்த,Arul seydha - க்ருபைபண்ணி
பொருள் ஆக்கி,Porul aakki - ஒரு உஸ்துவாக்கி
உன்பொன் அடி கீழ் புகவைப்பாள்,Unpon adi keezh pugavaippaalo - உன் திருவடிகளின் கிழே வைத்துக் கொண்டாலும் கொள்.
தென் திருநாவாய் என் தேவே,Then Thirunaavaai en devey - அழகிய திருநாவாயில் வர்த்திக்கிற எம்பெருமானே
மருளே இன்றி,Marule inri - ஒரு காலும் அஜ்ஞான கந்தமில்லாதபடி
உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளேதரு,Unnai en nenjaththu iruththum theruledharu - உன்னை என்னுடைய நெஞ்சிலேயிருத்தியநுபவிக்கும்படியான தெளிந்த அறிவைத் தந்தருள வேணும்
3642திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (தாம் இப்படிச் சொல்லச் செய்தேயும் ஒரு விசேஷ கடாக்ஷம் செய்தருளாமையாலே ‘நான் இவ்வாசையோடே முடியா நின்றென். என்னுடைய அபிமதத்தைப் பெற்றுக்களிக்கப் போகிற பாக்யவான்கள் யாரோ?’ என்கிறார்.) 9
தேவர் முனிவருக்கு என்றும் காண்டற்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ உலகு ஆளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் இனி அந்தோ –9-8-9
தேவர் முனிவர்க்கு,Devar munivarkku - தேவர்களுக்கும் முனிவர்களுக்கும்
என்றும் காண்டற்கு அரியன்,Endrum kaandarku ariyan - (ஸ்வப்ரயத்நத்தினால்) எப்போதும் காணமுடியாதவனாய்
மூவர் முதல்வன்,Moovar mudhalvan - பிரமன் சிவனிந்திரக்கும் ஸத்தோஹேது பூதனாய்
ஒரு மூவுலகு ஆளி,Oru moovulagu aali - மூவுலகங்களையும் நீர்யஹிக்கு மாவனான
தேவன்,Devan - எம்பெருமான்
விரும்பி உறையும்,Virumbi uraiyum - ஆதரத்தோடு வர்த்திக்குமிடமான
திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியை
இனி,Eni - நான் முடிந்தேனானா பின்பு
துர்தோ,Thurdho - ஐயோ!
3643திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (உன்னைக் காணப் பெறாமையாலே நெஞ்சழிந்து கூப்பிடா நின்றேன் காணென்கிறார்.) 10
அந்தோ அணுகப் பெரு நாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கி திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே உறைகின்ற எம்மா மணி வண்ணா–9-8-10
நொந்து ஆர்,Nondhu aar - கொத்தாக நிறைந்துள்ள
மலர் சோலைகள் சூழ்,Malar solaigal soozh - மலர்களையுடைய சோலைகளாலே சூழப்பட்ட
திருநாவாய்,Thirunaavaai - திருநாவாய்ப்பதியிலே
வந்தே உறைகின்ற,Vande uraiginra - (பரமபதம் முதலான விடங்களையும் விட்) வந்து நித்யவாஸம் பண்ணுகிற
எம் மா மணிவண்ணா,Em maa manivanna - எமக்குப் பரமபோக்யனான நீல மணிவண்ணனே!
அந்தோ அணுக பெறும் நாள்என்று,Andho anuga perum naal enru - ஐயோ! உன்னைக்கிட்டிவாழப் பெறுவதுண்டோ வென்று
எப்போதும்,Eppothum - ஸர்வகாலமும்
சிந்தை கலங்கி,Sinthai kalangi - நெஞ்ச தளும்பி
திருமால் என்று அழைப்பன்,Thirumaal enru azaippan - திருமாலே! யென்று கூப்பிடா நின்றேன்.
3644திருவாய்மொழி || (9-8—அறுக்கும் வினையாயின) (தூதர் மீளுமளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத்தல் (திருநாவாய்)) (இத்திருவாய்மொழி வல்லார் ஐஹிக ஆமுஷ்மிக ஸகலபோகங்களையும் புஜிக்கப் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
வண்ணம் மணிமாடம் நல் நாவாய் உள்ளானைத்
திண்ணம் மதிள் தென் குருகூர்ச் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மண் ஆண்டு மணம் கமழ்வர் மல்லிகையே–9-8-11
வண்ணம் மணி மாடம்,Vannam mani maadam - அழகிய மணி மாடங்களை யுடைத்தான
நல் நாவாய் உள்ளானை,Nal naavaai ullaanai - விலக்ஷணமான திருநாவாயிவெழுந் தருளியிருக்கும் பெருமானைக் குறித்து
திண் அம்மதின் தென் குருகூர் சடகோபன்,Thin ammadhin then kurukoor sadagopan - திடமாயழகிய மதிள்களையுடைத்தான திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடையதாய்
பண் ஆர் தமிழ்,Pan aar tamizh - பண்ணிறைந்த தமிழான ஆயிரத்தில் ஆயிரத்து
இப்பத்தும் வல்லார்,Ippaththum vallaar - இப்பத்தையும் ஒதவல்லவர்கள்
மண் ஆண்டு,Man aandu - இவ்விபூதியை நெடுங்காலம் ஆண்டு
மல்லிகை மணம் கமழ்வர்,Malligai manam kamalvar - “ஸர்வகந்த:” என்னப்படுகிற எம்பெரு மானோடே ஸாம்யாபத்தி பெறுவர்கள்
3645திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (மாலைப் பொழுதில் தென்றல் முதலான பதார்த்தங்கள் தனித்தனியே தனக்கு நலிவை விளைக்கும் படியைச் சொல்லிக் கதறுகிறாள் ஒரு ஆய்ச்சி. (அவளுடைய நிலைமைய யெய்திப் பேசுகிறார் ஆழ்வார்).) 1
மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1
மல்லிகை கமழ் தென்றல்,Malligai kamal thendral - மல்லிகையின் பரிமளத்தோடு கூடின தென்றலானது
ஈரும் ஆல் ஓ,Eerum aalO - (வாளாவறுக்குமாபோலே) சின்றது ஐயோ
வண் குறிஞ்சி இசை,Van kurinchi isai - செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணிகையானது
செல்கதிர் மாலையும்,Selkathir maalaikum - அஸ்தமிக்குமளவிலே யுள்ள ஸீர்யனையுடைய மாலைப் பொழுதும்
மயக்கும் ஆல் ஓ,Mayakkum aalO - மோஹிக்கச் செய்யா நின்றது ஐயோ
செக்கர் கல் மேகங்கள்,Chekkar kal megangal - செந்நிறங்கொண்டு அழகிய மேகங்களானவை
சிதைக்கும் ஆல் ஓ,Sithaikkum aalO - சரீரத்தைச் செதுக்கா நின்றது ஐயோ
அல்லி அம் தாமரை கண்ணன்,Alli am thamarai kannan - விகஸித்தழகிய தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்
எம்மான்,Emmaan - ஸர்வஸ்வாமியாய்
ஆயர்கள் ஏறு,Aayarkal aaru - இடையர்களுள் செருக்கை யுடையனாய்
அரி ஏறு,Ari aaru - ஹிம்ஹச்ரேஷ்டம் போன்றவனாய்
எம் மாயோன்,Em maayon - எம்மோடு நீர்மைக் குணத்தைக் காட்டி கலந்து பரிமாறினவனான கண்ணபிரான்
புல்லிய,Pulliya - முன்பு அணைத்த
முலைகளும் தோளும் கொண்டு,Mulaigalum tholum kondu - முலைகளையும் தோள்களையுங் கொண்டு
தமியம் புகல் இடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukal idam arigilam aalO - பிரிந்து வருந்திக்கிடக்கிற நாம் ஒதுங்கி உய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ
3646திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பல படிகளாலும் ரக்ஷிக்குமெம்பெருமான் வருகின்றிலன்; பாதக பதார்த்தங்கள் தனித்னியே யன்றியே திரள்திரளாகவும் தோன்றி நலிகின்றன; தப்பிப் பிழைக்கும் வழி தெரிய வில்லையே யென்கிறாள்.) 2
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2
தமியம் புகலிடம் அறிகிலம் ஆல் ஓ,Thamiyam pukalidam arigilam aalO - தனிப்பட்ட நாம் ஒதுங்கியுய்யுமிடம் அறிகின்றிலோம் ஐயோ
புலம்புறு மணி,Pulampuru mani - (சேக்களின் கழுத்தில்) ஒலிக்கின்ற மணியும்
தென்றல்,Thendral - தென்றற் காற்றும்
ஆம்பல்,Aambal - இலைக்குழலும்
ஆல் ஓ,AalO - ஈர்கின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே
பகல் அடு மாலை,Pakal adu maalai - பசுரபோதை முடித்து வந்து தோற்றுகின்ற மாலைப்போதும்
வண் சாந்தம்,Van santham - அழகிய சந்தனமும்
பஞ்சமம்,Panchamam - பஞ்சமராசமும்
முல்லை,Mullai - முல்லை மாலையும்
தண் வாடை,Than vaadai - குளிர்ந்த வாடைக்காற்றும்
ஆல் ஓ,AalO - நலிகின்றவிதம் சொல்லத் தெரியவில்லையே
அகல் இடம்,Akal idam - பரந்த பூமண்டலத்தை
படைத்து,Padaiththu - உண்டாக்கியும்
இடந்து உண்டு உமிழிந்து அளந்து,Idandhu undu umizhinthu alandhu - (ஸமய விசேஷங்களில்) இடத்தல் உண்ணுதல் உமிழ்தல் அளத்தல் ஆகிய காரியங்களைச் செய்தும்
எங்கும் அளிக்கின்ற,Engum alikkindra - எல்லாப் படிகளாலும் சக்ஷணத்தைச் செய்து போருகின்றவனாய்
இகல் இடத்து அசுரர்கள் கூற்றம்,Igal idathu asurarkaal koortram - யுத்த பூமியில் அசுரர்களுக்கு மிருத்யுவாய்
மாயோன் ஆயன்,Maayon aayan - ஆச்சர்யபூதனான கோபாலகிருஷ்ணன்
வாரான்,Vaaran - (இத்துன்பங்களைத் தொலைக்க) வருகின்றவன்
இனி,Eni - இப்படியான பின்பு
இருந்து,Irundhu - ஸத்தையோடேயிருந்து
என் உயிர் காக்கும் ஆறு என்,En uyir kaakkum aar en - என்னுயிரை ரக்ஷித்துக் கொள்ளும் விதம் என்னோ?
3647திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (தென்றல் வாடை முதலான வெளிப்பட்ட பொருள்கள் பாதகமாகை மாத்திர மன்றியே அவனுடைய திவ்யாவயங்களும் உள்ளே தோன்றி நலியாநின்றனவே யென்கிறாள்.) 3
இனி இருந்து என் உயிர் காக்குமாறு என்
இணை முலை நமுக நுண்ணிடை நுடங்க
துனியிரும் கலவி செய்து ஆகம் தோய்ந்து
துறந்து எம்மை விட்டு அகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம்மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பணி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ–9-9-3
இனி இருந்து என் உயிர் காக்கும் ஆறு என்,Ini irundhu en uyir kaakkum aar en - இனி என்னுயிரைக் காத்துக் கொள்ளும்வரை யில்லை
இணை முலை சமூக,Inai mulai samuga - முலைகள் குழையும்படியாகவும்
நுண் இடை அடங்க,Nun idai adanka - நுட்பமாக இடை தளரும்படியாகவும்
துளி இரு கலவி செய்து,Thuli iru kalavi seydhu - துக்கரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி
ஆகம் தோய்ந்து,Aagam thoyndhu - என் வடிவிலே கலந்து புஜித்து
எம்மை துறந்து இட்டு அகல்கள்வன்,Emmai thurandhu ittu akalgalvan - எம்மைக் கைவிட்டுப் பொகட்டுப் பிரிந்துபோன கள்வனாய்
தனி இளசிங்கம்,Thani ilasingam - ஒப்பற்ற சிங்கக்குட்டியாய்
எம்மாயன் கண்ணன்,Emmaayan kannan - விலஷணமான ஆச்சர்ய சேஷ்டிதங்களை யுடையனான கண்ணபிரான்
வாரான்,Vaaran - வந்து சேர்கின்றிலன்
தாமரை கண்ணும்,Thaamarai kannum - (அப்பெருமானது) தாமரை போன்ற திருக்கண்களும்
செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும்
நீலம் பனி இரு குழல்களும்,Neelam pani iru kuzhalgalum - கறுத்துக் குளிர்ந்து பரந்த திருக்குழல்களும்
நான்கு தோளும்,Naanngu tholum - நான்கு திருத்தோள்களும்
பாவியேன் மனத்தே நின்று நரும் ஆல் ஓ,Paaviyen manaththae ninru narum aalO - பாலியேனுடைய மனத்திலே ஒருபடிப்பட நின்று ஈலியா நின்றன ஐயோ
3648திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவனுக்கு ஸ்மாரகமாய் அவ் வழியாலே நலிகை யன்றிக்கே தானே தனித்தனியே அக்னிமயமாய் தஹியா நின்றன -என்கிறாள்) 4
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ
வாடை தண் வாடை வெவ்வாடை யாலோ
மேவு தண் மதியம் வெம் மதியமாலோ
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளி யாலோ
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டுதைத்த
எம் பெண்மை யம் பூவி தாலோ
ஆவியின் பரமல்ல வகைகளாலோ
யாமுடை நெஞ்சமும் துணை யன்றாலோ–9-9-4
பாவியேன் மனத்தே நின்று ஊரும் ஆல் ஓ,Paaviyen manatthae ninru oorum aalO - பாவியேனுடைய நெஞ்சிலேயே நின்று நலியா நின்றதந்தோ
தண் வாடை வாடை,Than vaadai vaadai - தண்வாடையென்றே பேர் பெற்றிருந்த வாடைக்காற்றானது
வெம் வாடை ஆல் ஓ,Vem vaadai aalO - நெருப்பை யுமிழும் வாடையாயிரா நின்ற தந்தோ
மேவு தண் மதியம்,Mevu than madhiyam - விரும்பிப் பார்க்கப்படுகிற குளிர்ந்த சந்திரனும்
வெம் மதியம் ஆல் ஓ,Vem madhiyam aalO - உஷ்ணகிரணனான சந்திரனானானந்தோ
மெல் மலர் பள்ளி,Mel malar palli - ம்ருதுவான புஷ்ப சயனமும்
வெம் பள்ளி ஆல் ஓ,Vem palli aalO - நெருப்புப்படுக்கை யாயிற்றந்தோ
தூவி அம் புன் உடை,Thuvi am pun udai - சிறகுடைய பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்ட
தெய்வம் வண்டு,Deivam vandu - பரம புருஷனாகிற வண்டு
துதைந்த,Thuthainthu - அநுபவித்து ஸாரம் கவரப்பெற்ற
எம் பெண்மை இது,Em penmai ithu - எனது பெண்மையானவிது
ஆம் பூ ஆல் ஓ,Aam poo aalO - அழகியப்போலே பரிதாப்பத்தை ஸஹிக்க மாட்டாத தாயிரநின்றதந்தோ
வகைகள்,Vagaigal - இவ்வகைகளெல்லாம்
அவியின் பரம் அல்ல அந்தோ,Aviyin param alla andho - இவ்வாத்மாவுக்குப் பொறுக்கலாவனவல்ல
3649திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (அடியார்க்கெளியனென்று பேர் பெற்றவனுடைய இரக்கம் பெறுகை அரிதான பின்பு நம்முயிரைக் காக்கும் விரகுண்டோ வென்கிறாள்.) 5
யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆல் ஓ,Yaamudai nenjamum thunai andru aalO - எம்முடைய நெஞ்சும் உசாத் துணைகாகின்றதில்லையந்தோ
ஆ புகும் மாலையும் ஆகின்று ஆல் ஓ,Aa pukum maalaiyum aakindru aalO - பசுக்கள் வந்து புகும் மாலைப் பொழுது மாகின்றதந்தோ
யாமுடை ஆயன்தல் மனம் கல் ஆல் ஓ,Yaamudai aayanthal manam kal aalO - எமது கோபாலக்ருஷ்ணனுடைய நெஞ்சு கல்லாய் விட்டதந்தோ
அவனுடை,Avanudai - அப்பெருமானுடைய
தீர் குழல் ஈரும் ஆல் ஓ,Theer kuzhal eerum aalO - இனிதான வேணுகானமும் நலியா நின்றதந்தோ
யாமுடை துணை என்னும் தோழிமாரும்,Yaamudai thunai ennum thozhimaarum - எமக்குத் துணைவரென்று பேர் பெற்றிருக்கின்ற தோழியரும்
எம்மில் முன்,Emmil mun - எனக்கு முன்னே
அவனுக்கு மாய் லர் ஆல் ஓ,Avanukku maai lar aalO - அவள் பொருட்டு நோவுபடா நின்றார்களந்தோ
அவனுடை அருள் பெறும் போது அரிது,Avanudai arul perum podhu aridhu - அவனது அருளைப் பெறுவது அரிதாயிரா நின்றது
யாமுடை ஆர் உயிர் எனக்கும் ஆறு என்,Yaamudai aar uyir enakkum aaru en - எனது அருமையான வுயிரைக் காக்கும் விதம் என்னோ
3650திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (பிராட்டியோடும், அஹங்காரிகளான பிரமன் சிவன் முதலானாரோடும் வாசியற உடம்பு கொடுக்குமவனுடைய சீலகுணம் என்னுயிரை ஈராநின்றதே யென்று குணவிசேஷத்திலீடு பட்டுச் சொல்லுகிறாள்.) 6
அவனுடை யருள் பெறும் போதரிதால்
அவ்வருள் அல்லன வருளும் அல்ல
அவன் அருள் பெருமள வாவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வண் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம்மாவி ஈரும்
எவன் இனிப் புகுமிடம் எவன் செய்கேனோ
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்–9-9-6
அவனுடைய அருள் பெறும்,Avanudai arul perum - அவனோடு ஸம்ச்லேஷிப்பதாகிற அருளைப் பெறுவது அரிதாயிருக்கின்றது.
அவ அருள் அல் லன அருளும் அல்ல,Ava arul allana arulum alla - அவனுடைய அருள் அருளே யல்லது மற்றவை அருளல்ல
அவன் அருள் பெறும் அளவு,Avan arul perum alavu - அவனது அருளைப்பெறும் வரையில்
ஆலி நில்லாது,Aali nillaadhu - என் பிராணன் தரித்திருக்கமாட்டாது
அடு பகல் மாலையும்,Adu pakal maalaikum - பகலை முடிக்கும் மாலைப்பொழுதும் வந்து தோன்றிற்று
நெஞ்சும் காணேன்,Nenjum kaanaen - (தவரிமைக்கு உதவும்தான்) நெஞ்சையும் கான்கின்றிலேன்
சிவனொடு பிரமன் வரை திருமடந்தை சேர் திரு ஆகம்,Sivanodu piraman varai thirumadandhai seer thiru aagam - சிவனும் பிரமனும் பிராட்டியும் ஒருங்கே சேர்ந்திருக்கப் பெற்ற திருமேனியானது.
எம் ஆவி ஈரும்,Em aavi eerum - என்னாத்மாலை நலிகின்றது
இனி புகும் இடம் எவம்,Ini pukum idam evam - இனி எனக்கொதுங்குமிடம் எதுவோ!
எவம் செய்கோனோ,Evam seykono - யாது செய்வேன்
அன்னை மிர்கான்,Annai mirkaan - தாய்மார்களே
ஆருக்கு என் சொல்லுகேன்,Aarukku en sollugeen - ஆருக்கு என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன்
3651திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -கீழ்ச் சொன்ன பதார்த்தங்கள் எல்லாம் திரள வந்து கண் பாராதே நலிகிற படியைச் சொல்லுகிறாள்.) 7
ஆருக்கு என் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆர் உயிரவள் அன்றிக் கூர் தண் வாடை
காரொக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்தவத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீருற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமா அம் தண் பசுஞ்சாந்து அணைந்து
போருற்ற வாடை தண் மல்லிகைப் பூப்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ–9-9-7
கார் ஓக்கும் மேனி,Kaar oakkum meeni - காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையனான
நம் கண்ணன்,Nam kannan - நமது கண்ணபிரான்
கள்வம்,Kalvam - தனது கள்ளக் செயல்களினால்
அவர்ந்த,Avandha - அபஹரித்துக் கொண்டு போன
அத் தனி நெஞ்சம்,Ath thani nenjam - நம்மை விட்டுத் தனியேயான நெஞ்சானது
அவன் கணஃது,Avan kanathu - அவன் பக்கலிலே யாயிற்று
சீ உற்ற அகில் புகை,See utrra akil pukai - பரிமளச் செல்வம்மிக்க அகிற்புகையையும்
யாழ் நரம்பு,Yaazh narambu - யாழின் நரம்பொலியையும்
பஞ்சமம்,Panchamam - பஞ்சமராகத்தையும்
தண் பகஞ்சார்ந்து,Than pakanchaarndhu - குளிர்ந்த சந்தனத்தையும்
அணைந்து,Anaindhu - கூட்டிக் கொண்டு
போர் உற்றவாடை,Poora utravaadai - போர் வுரியத் தலைப்பட்ட வாடையானது
தண் மல்லிகை பூ,Than mallikai poo - குளிர்நத மல்லிகைப்பூவினுடைய
புது மணம் முகந்து கொண்டு,Pudhu manam mugandhu kondu - செவ்விப் பரிமளத்தை முகந்து கொண்டு
எறியும் ஆல் ஓ,Eriyum aalO - வீசாநின்றதந்தோ
3652திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –கீழே தனித் தனியும் திரளவும் பாதகமானவை ஒன்றுக்கு ஓன்று முற்கோலி வந்து மேல் விழுந்து நலியா நின்றன -என்கிறாள்.) 8
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ
பொங்கிள வாடை புன் செக்கராலோ
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனில் கொடுத்தினியதனிலும்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வண் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணம் தின்ன அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்–9-9-8
பொங்கு இன வாடை,Pongu ina vaadai - என்னை நலிய நலியக் கிளர்ந்து இளகிப் பதிக்கிற வாடைக் காற்றானது
புது மணம் முகந்து கொண்டு ஏறியும் ஆல் ஓ,Pudhu manam mugandhu kondu eeriyum aalO - புதிய பரிமளத்தை முகந்துகொண்டு வீசாநின்றதந்தோ
புன் செக்கர் ஆல் ஓ,Pun sekkar aalO - புல்லிய செக்கர் வானமும் வந்து நலியா நின்றது
அது மணந்து அகன்ற,Adhu manandhu akandra - அப்படி கலந்து பிரிந்த
நம் கண்ணன்,Nam kannan - நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம்
கண்ணனில்,Kannanil - அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது
இனி அதனில்,Ini adhanil - இன்னமும் அதுக்குமேலே உம்பர்
மது மணம் மல்லிகை,Madhu manam mallikai - மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய
மந்தம் கோவை,Mandham kovai - மெல்லிய ஸரமென்ன
வண் பசும் சாந்தினில்,Van pasum shaanthinil - அழகிய குளிர்ந்த சந்த மென்ன இவற்றிலுங்காட்டில்
பஞ்சமம் வைத்து,Panchamam vaithu - விலஷணமான ராகத்தை யிட்டு
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே ஊதும்,Adhu manandhu in arul aaychiyarkke oodhum - வாசாமகோரமான ஸம்ச்லேஷத்தைப் பண்ணி நல்லருள் செய்யப்பெற்ற ஆய்ச்சிகளுக்கே யூதுகிற
அத்தீம்குழற்கே,Atthimkuzharkke - அல்லினிய குழலோசைக்கே
நான் உய்யேன்,Naan uyyeen - நான் உயிரைப் பறிகொடப்பவளாயிராநின்றேல்
3653திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (நலிவதில் மற்றவையெல்லாம் ஒருதட்டாயும் அவனுடைய வேணுகானம் மாத்திரம் ஒருதட்டாயுமிருத்தலால் “ஊதுமத்தீங்குழற்கே உய்யேன் நான்” என்று மீண்டுஞ் சொல்லுகிறது.) 9
ஊதும் அத் தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன் செய் கோலம்
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கிப்
பேதுறு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சு அறவு அறப் பாடும் பாட்டை
யாதும் ஒன்றும் அறிகிலம் அம்ம அம்ம
மாலையும் வந்தது மாயன் வாரான்–9-9-9
இடை இடை அது மொழிந்து,Edai edai adhu mozhinthu - இடையிடையே அபிப்ராய கர்பங்களான பாசுரங்களையிட்டு
ஊதும் அ தீம் குழற்கே உய்யேன் நான்,Oodhum a theem kuzhalke uyyeen naan - ஊதுகிற இனிய அக்குழலோசைக்கே நான் முடிந்து போகின்றேன்.
தன் செய் கோலம்,Than sei kolam - தனக்குத்தானே செய்யப்பட்ட கோலத்தையுடைத்தாய்
தூதுசெய் கண்கள் கொண்டு,Thoodhusei kanngal kondu - தூது போகின்ற கண்களைக் கொண்டு
ஒன்று பேசி,Onru paesi - தன் கருத்தை வெளியிட்டு
தூமொழி இசைகள் கொண்டு,Thoomozhi isaihal kondu - இனிய பாசுரங்களையுடைய இசைகளைக் கொண்டு
ஒன்று நோக்கி,Onru nokki - கடாக்ஷித்து
பேதுறு முகம் செய்து,Paethuru mugam seythu - தன்னீடுபாடு தன் முகத்திலே தோன்றும்படி காட்டி
நொந்து நொந்து,Nonthu nonthu - அபலைகள் என்படுகிறார்களோ வென்று மிகவும் நொந்து
பேதை நெஞ்சறவு அற,Paethai nenjaravu ara - பெண்களினுடைய ஊடல் அறும்படியாக
பாடும் பாட்டை,Paadum paattai - பாடுகிற பாட்டை
ஆதும் ஒன்று அறிகிலம்,Aadhum onru arigilam - சிறிதும் அறியகில்லோம்
அம்ம அம்ம,Amma amma - ஐயோ
மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது
மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன்
3654திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –வருவதாக சொன்ன காலமான ராத்திரியும் வந்து மஹா அவசாதம் வர்த்தியா நிற்க அவனைக் காண்கிறிலோம் -இனி பாதகங்களினுடைய சந்நிதியில் அவனை ஒழியத் தரிப்பது அரிது என்கிறாள்.) 10
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன் நாகுகள் உகளுமாலோ
கொடியன குழல்களும் குழறுமாலோ
வாலொளி வளர் முல்லை கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டாலுமாலோ
வேலையும் விசும்பில் விண்டு அலறுமாலோ
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே–9-9-10
மாலையும் வந்தது,Maalaiyum vandhadhu - மாலைப்பொழுதும் வந்திட்டது
மாயன் வாரான்,Maayan vaaran - கண்ணன் வந்திலன்
மா மணி புலம்ப,Maa mani pulamba - பெரிய மணிகள் ஒலிக்கும் படி
வல் ஏறு அணைந்த,Val eeru anaindha - வலிய ரிஷபங்களோடு சேர்ந்த
கோலம் நல் நாகுகள் உகளும் ஆல் ஓ,Kolam nal naagugal ukalum aalO - அழகிய பசுக்கள் களித்துத் திரிகின்றன வந்தோ!
குழல்களும்,Kuzhalgalum - புல்லாங்குழல்களும்
கொடியன,Kodiyaṉ - கொடுமை செய்வனவாகி
குழறும்,Kuzhalum - இனிய இசையைச் செய்கின்றன
கண்டு,Kandu - வண்டுகளானவை
வால் ஒளி,VaalOli - வெளுத்த வொளியை யுடைத்தான
வளர் முல்லை கரு முகைகள் மல்லிகை அலம்பி,Valar mullai karu mughaigal mallikai alampi - வளர் முல்லை, கருமுகைப்பூ மல்லிகைப்பூ ஆகிய இவற்றிலே படிந்து
ஆலும் ஆலோ,Aadhum aaloo - முரல்கின்றனவந்தோ
வேலையும்,Velaiyum - கடலோதமும்
விசும்பில்விண்டு,Visumbilvindhu - ஆகாசத்திலே அளாவி
அலறும்,Alarum - கோஷிக்கின்றது
இங்கு,Ingu - இந்நிலைமையில்
அவனை விட்டு,Avanai vittu - அப்பெருமானைப் பிரிந்து
என் சொல்லி உய்வன்,En solli uyvan - எங்ஙனம் பிழைப்பேன்
3655திருவாய்மொழி || (9-9–மல்லிகை கமழ்தென்ற) (தலைவி மாலைப்பொழுது கண்டு தனது ஆற்றாமையால் இரங்கிக் கூறல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் அவன் பக்கல் சாபலமுடையார் இத்திருவாய் மொழியைச் சொல்லி அவனைப் பெறுங்கோள் என்கிறாள்.) 11
அவனை விட்டு அகன்று உயிர் ஆற்ற கில்லா
அணி யிழையாய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டகல்வதற்கே யிரங்கி
அணி குருகூர்ச் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர்
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே–9-9-11
அவனை விட்டு அகன்று,Avanai vittu akandra - கண்ண பிரானை விட்டுப் பிரிந்து
உயிர் ஆற்றகில்லா,Uyir aatrakillaa - உயிர் தரிக்கமாட்டாத
அணி இழை ஆராய்ச்சியர்,Ani izhai aaraaychiyar - அழகிய ஆபரணங்களணிந்த கோபிமார்கள்
மாலை பூசல்,Maalai poosal - மாலைப் பொழுதிலே பட்ட பாட்டை
அவனை விட்டு அவல்வதற்கே இரங்கி,Avanai vittu avalvadharke irangi - அப்பெருமானை விட்டு பிரிந்திருக்கை காரணமாக நோவுபட்டு
அணி குருகூர் சடகோபன் மாறன்,Ani Kurukoor Sadagopan Maaraṉ - ஆழ்வார்
அவனி உண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த,Avani undu umizhndhavan meel uraintha - பூமிணை உண்டுமிழ்ந்த அப்பெருமான் விஷயமாக அருளிச் செய்த
ஆயிரத்ததுள் இவை பத்தும் கொண்டு,Aayirathathul ivai pathum kondu - ஆயிரத்தினுள் இப்பதிகங் கொண்டு
தொண்டீர்,Thondir - தொண்டர்களே
அவனியுள் அலற்றி நின்று,Avaniyul alattri ninru - பூமிக்குள்ளே உகந்து அநுஸந்தித்து
3656திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (வடதளசயனனான மஹோபகாரகன் திருவடிகளிலே ப்ரேமத்தோடு பணிந்து அநவாத கைங்கரியம் பண்ணுங்கோளென்று, இத்திருவாய்மொழியிற் சொல்லுகிற ஆச்ரயணத்தைச் சுருக்கமாகவருளிச் செய்கிறார்.) 1
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1
Velai modhum madhil sul,வேலை மோதும் மதில் சூழ் - கடலலை மோதப் பெற்ற மதிளாலே சூழப்பட்ட
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருப்பவனும்
Aalin mel,ஆலின் மேல் - ஜலத்தின் மீது
Aal amarnthaan,ஆல் அமர்ந்தான் - ஆலிலையில் கண் வள்ர்ந்தவமான
Maalai,மாலை - ஸர்வேச்வரனை
Kanni,கண்ணி - கிட்டி
Adi inaigal,அடி இணைகள் - அவனது உபயபாதங்களையும்
Kaalai maalai,காலை மாலை - இரவும் பகலும்
Kamalam malar ittu,கமலம் மலர் இட்டு - தாமரைப்பூக்களை ஸமர்ப்பித்து
Neer,நீர் - (அன்பர்களே!) நீங்கள்
Vinai keda,வினை கெட - (உங்களுடைய) பாவம் தொலையும்படி
Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள்
3657திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (“கள்ளவிழும் மலரிட்டு இறைஞ்சுமின் “என்று அருளிச் செய்கையாலே இன்ன மலரென்று ஒரு நிர்ப்பந்தமில்லை யென்பது காட்டப்படும். கீழ்ப்பாட்டில் “கமல மலரிட்டு ” என்றது– கமல மலரேயாக வேணுமென்றும் அதுபோன் சிறந்த மலரேயாக வேணுமென்றும் காட்டினபடியன்று என்பதை இப்பாட்டில் தெளியவைத்தாராயிற்று..) 2
கள் அவிழும் மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டீரே–9-10-2
Thondare,தொண்டரே - எம்பெருமானிடத்து ஆசையுள்ளவர்களே
Neer,நீர் - நீங்கள்
Kal avizhum malar,கள் அவிழும் மலர் - தேனொழுகுகின்ற புஷ்பங்களைப் பணிமாறி
Iraijin,இறைஞ்சுமின் - வணங்குங்கள்
Nalli serum,நள்ளி சேரும் - பெண் நண்டுகள் களித்த வாழப்பெற்ற கழனிகள் சூழ்ந்த
Vayal sul kidankin,வயல் சூழ் கிடங்கின் - அகழ்களைப் பக்கங்களிலே யுடையதும்புடை
Velli aaynth madhin soo zh,வெள்ளி ஏய்ந்த மதின் சூழ் - சுக்கிரனைத் தொட்டுக் கொண்டிருக்கிற மதிள்களாலே சூழப்பட்டதமான
Thiru Kannapuram,திரு கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை
Ullli,உள்ளி - சிந்தனை செய்து கொண்டு
Naalum,நாளும் - நாடோறும்
Thozhudhu ezumin,தொழுது எழுமின் - வணங்கி உஜ்ஜீவியுங்கள்
3658திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (திருக்கண்ணபுரத்திலே நின்றருளினவன் உபயவிபூதி நாதனாயிற்று; தொண்டர்களே உங்கள் துக்கங்கெட அநந்யப்ரயோஜநராய்க் கொண்டு ஆச்ரயியுங்கோளென்கிறார்) 3
தொண்டீர் நும் தம் துயர் போக நீர் ஏகமாய்
விண்டு வாடா மலரிட்டு நீர் இறைஞ்சுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திருக் கண்ணபுரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே–9-10-3
Thondar,தொண்டர் - தொண்டர்களே
Vantu paadum pozhi soo zh,வண்டு பாடும் பொழிழ் சூழ் - வண்டுகள் பாடுமிடமான் சோலைகளாலே சூழப்பட்ட
Thiru Kannapurathu,திரு கண்ணபுரத்து - திருக் கண்ணபுரத்தி வெழுந்தருளியிருக்கிற
Andam vaanan amarar perumaa nai,அண்டம் வாணன் அமரர் பெருமானை - அகிலாண்ட கோடி ப்ரஹ மாண்டநாயகனான எம்பெருமானை
Thum tham thuyar poka,தும் தம் துயர் போக - உங்களுடைய துக்கம் தொலையும்படி
Neer aegam aay,நீர் ஏகம் ஆய் - நீங்கள் அநந்ய ப்ரயோஜநர்களாய்
Vindu vaadaa malar ittu,விண்டு வாடா மலர் இட்டு - மலர்ந்து வாடாத (அப்போதலர்ந்த) பூக்களைப் பணிமாறி
Neer iraijumeen,நீர் இறைஞ்சுமீன் - நீங்களே தொழுங்கள்
3659திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (ஆச்ரயிக்குமளவில் நப்பின்னைப்பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயியுங்கொள்; அவளுடைய புருணகாரபலத்தாலே பேறு தப்பாதென்கிறார்.) 4
மானை நோக்கி மடப்பின்னை தன் கேள்வனைத்
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
வானை உந்தும் மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே–9-10-4
Maanai nokki mada pinai than kaelvanai,மானை நோக்கி மட பின்னை தன் கேள்வனை - மானை யொத்த கண்பார்வையை யுடையளான நப்பின்னைப்பிராட்டிக்கு நாதனும்
Kaenai,கேணை - தேன்போல் இனியனுமான எம்பெருமானை
Vaadaa malar ittu neer iraijchamin,வாடா மலர் இட்டு நீர் இறைஞ்சமின் - அப்போதலர்ந்த செவ்விப் பூக்களையிட்டு நீங்கள் தொழுங்கள்
Vaanai undhum madhil soo zh,வானை உந்தும் மதிள் சூழ் - ஆகாசத்தை யளாவியிருக்கின்ற மதிகளாலே சூழப்பட்ட
Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தை
Nayanda perumaan thaane,நயந்த பெருமான் தான் - விரும்பியிருக்கின்ற சௌரிப்பெருமானே
Saran aagum,சரண் ஆகும் - ரக்ஷகராவர்
3660திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (கீழ்ச்சொன்னபடி பக்தி யோகத்தால் அவனை யாம்யிக்க அதிகாரிகளல்லாமல் தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினவர்களுக்கு எ ம்பெருமான் எல்லாப்படியானும் தக்ஷகனாய் தேஹாவஸானத்திலே அவர்களை இந்த ப்ரக்ருதியில் நின்றும் விடுவித்துத் திருநாட்டிலே கொண்டுபோய் வைத்தருள்லனென்கிறார்.) 5
சரணமாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்
தரணி யாளன் தனது அன்பர்க்கு அன்பாகுமே–9-10-5
Thanathaal adai tharukku,தனதாள் அடை ந்தார்க்கு - தனது திருவடிகளை உடைந்தவர்களுக்கு
Charanam ellaam aagum,சரணம் எல்லாம் ஆகும் - ஸகலவித ரக்ஷசனுமாய்
Maranam aanal,மரணம் ஆனால் - இந்த தேஹம் விட்டு நீங்கினவுடனே
Vaikundam kodukkum,வைகுந்தம் கொடுக்கும் - பரமபதமளிக்கும் பெருமானுமாய்பிரான்
Thiru Kannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரமாகிற
Kaan,காண் - ஷேத்திரத்தை
Aalan,ஆளன் - ஆள்பவனுமான எம்பெருமான்
Anbu aagum,அன்பு ஆகும் - அன்புதானே வடிவெடுத்தவனாயிருப்பன்
3661திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( தன தாளடைந்தார்க்கெல்லாம் அன்பனாகும்= “அநாலோசித விசேஷாசேஷ லோகசரண்ய!” என்று எம்பெருமானாரருளிச் செய்வதை இங்கு அநுஸந்திப்பது. தனது திருவடிகளையுடைந்தாரில் இன்னாரினையாசென்று வாசி பாராதே வஸிஷ்ட சண்டாள விபாகமற எல்லார்க்குமொக்க ஸ்நேஹிக்குமவன் எம்பெருமான் என்று ஆழ்வானருளிச் செய்தது இங்கே அநுஸந்தேயம்.) 6
அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டான்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன் மெய்யர்க்கு மெய்யனே–9-10-6
Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தனது திருவடிகளைப்பற்றினாரெல்லார்க்கும்
Anban aagum,அன்பன் ஆகும் - அன்பு செய்பவனாய்
Sempon aagathu avunan udal keentavan,செம்பொன் ஆகத்து அவுணன் உடல் கிண்டவன் - சிவந்த பொன்போன்ற அடம்பையுடைய இரணியாசுரனது உடைலைக் கீண்டவனாய்
Naan pon eyndha madhil sooal,நான் பொன் எய்ந்த மதிள் சூழ் - நல்ல பொன்னாலே யமைத்த மதிளாலே சூழப்பட்ட
Thiru Kannapurathu Anban,திரு கண்ணபுரத்து அன்பன் - திருக்கண்ணபுரத்திலே விருப்பமுடையவனான எம்பெருமான்
Thana meyyarkku,தன மெய்யர்க்கு - தன் திறத்திலே உண்மையாக ஸ்நேஹிக்குமவர்களுக்கு
Naalum meyyan,நாளும் மெய்யன் - எப்போதும் உண்மையான ஸ்நேஹமுடையவன்
3662திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( இப்படி மெய்யர்க்கே மெய்யனாயும் பொய்யர்க்கே பொய்யனாயுமிருக்கு மிருப்பைத் திருக்கண்ணபுரத்திலே காட்டிக் கொண்டு வர்த்திக்கும் பெருமான் , ஆகத்து அணைப்பார்கட்கு அணியன் தன்னை ஹருதயத்திலே வைப்பார்க்குக் கையாளாயிருப்பன்.) 7
மெய்யனாகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
பொய்யானாகும் புறம்பே தொழுவார்க்கு எல்லாம்
செய்யல் வாளை உகளும் திருக் கண்ணபுரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார்கட்கு அணியனே –9-10-7
Virumbi thozhu vaarkku ellaam,விரும்பி தொழு வார்க்கு எல்லாம் - தன்னையே புருஷார்த்தமாக ஆசைப்பட்டு தொழுமவர்களெல்லார்க்கும்
Meyyan aagum,மெய்யன் ஆகும் - மெய்யன்பனாய்
Purame thozhuvaarkku ellaam,புறமே தொழுவார்க்கு எல்லாம் - பிரயோஜநாந்தாங்களுக்காக மேலெழுத் தொழுமவர்களுக்கெல்லாம்
Poyyan aagum,பொய்யன் ஆகும் - தன்னை உள்ளபடி காட்டமாட்டாதவனாய்
Seiyilvaalai ugalum Thiru Kannapurathu Aiyan,செய்யில்வாளை உகளும் திரு கண்ணபுரத்து ஐயன் - கழனிகளில் வாளை மீன்கள் துள்ளி விளையாடப் பெற்ற திருக்கண்ண புரத்திலே யெழுந்தருளி யிருப்பவனான எம்பெருமான்
Aagathu anaip paarkatku,ஆகத்து அணைப் பார்கட்கு - தங்கள் மனத்தில் ஊன்றவைத்துக் கொள்பவர்களுக்கு
3663திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( மணியும் பொன்னுமிழக்கப் பெற்ற மதிலாளே சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே, திருநாட்டிலிருக்கும் படியில் ஒன்றுங்குறையாதே யெழுந் தருளியிருக்கும் சௌரிப் பெருமாளுடைய திருவடிகளையே உபாயமும் உபேயமுமாகப் பற்றுங்கள் என்றாராயிற்று) 8
அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்கட்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே–9-10-8
Thana thaal adainthaarkku ellaam,தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் - தன் திருவடிகளைப் பணிந்தவர் களெல்லார்க்கும்
Aniyan aagum,அணியன் ஆகும் - அந்தரங்கனா யிருப்பன்
Piniyum saaraa,பிணியும் சாரா - வியாதி முதலானவைகளும் அணுகமாட்டா
Piravi keduthu aalum,பிறவி கெடுத்து ஆளும் - ஸம்ஸார ஸங்கத்தை யறுத்து அடிமை கொள்வன்
Mani pon aayndha madhil soo'l,மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் - ரத்னங்களும் பொன்களும் பொருந்தின மதிளாலே சூழப்பட்ட
Thirukkannapuram,திருக்கண்ணபுரம் - திருக்கண்ணபுரத்தி யெழுந்தருளிளிருக்கிற
Paramaetti than paatham,பரமேட்டி தன் பாதம் - பரம புருஷனுடைய திருவடிகளை
3664திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பிறர்க்கு உபதேசஞ்செய்வது கிடக்க, தாம் முன்னம் அவனையாச்ரயித்துக் குறை தீர்ந்தபடியைப் பேசிக்களிக்கிறார்) 9
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9
Vedham nvaar virumbum,வேதம் நாவர் விரும்பும் - வைதிகர்கள் விரும்பி வர்த்திக்குமிடமான
Thirukkannapurathu,திருக்கண்ணபுரத்து - திருக்கண்ணபுரத்தி லெழுந்ததருளியிருக்கிற
Aadiyaanai,ஆதியானை - முழுமுதற்கடவுளான எம்பெருமானை
Adainthaarkku,அடைந்தார்க்கு - ஆச்ரயித்தவர்களுக்கு
Allal illai,அல்லல் இல்லை - துக்கமொன்று மில்லையாகும்
Naalum paadham paniya,நாளும் பாதம் பணிய - (அப்பெருமானுடைய) திருவடிகளை எப்போதும் ஸேவிக்கு மளவில்
Pini thaniyum,பிணி தணியும் - நோய்கள் அறும்
Ekam saaraa,ஏகம்சாரா - பாவங்கள் சேரமாட்டா
Ini,இனி - இப்படியான பின்பு
En kurai,என் குறை - என்ன குறையுண்டு? (ஒரு குறையுமில்லை)

3665திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி (பத்தியையோ ப்ரபத்திலேயோ அனுஷ்டிக்க சக்தரல்லாதவர்கள் திருக்கண்ணபுரமென்று சொன்னவளவிலே ஸமஸ்ததுக்கங்களும் போமென்கிறார்) 10
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை
அல்லி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திருக் கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10
Allal illai,அல்லல் இல்லை - துக்கங்கள் தொலையும் எனக்கு இனி என் குறை
Alli maadhar amarum thirumaarpavan,அல்லி மாதர் அமரும் திருமார்ப்பவன் - தாரையாளான பெரிய பிராட்டியாரு ருதையும் திருமார்பையுடைய பெருமான்
Nallil aayndha madhil sul,நல்லில் ஏய்ந்த மதிள் சூழ் - கற்பணிமிக்க மதிளாலே சூழப்பட்ட
Thiru Kannapuram solla,திரு கண்ணபுரம் சொல்ல - திருக்கண்ணபுரம் என்று சொன்ன வளவில்
Naalum,நாளும் - ஒரு நாளும்
Thuyarpaadu saara,துயர்பாடு சாரா - துக்கம் அணுகாது
3666திருவாய்மொழி || 9-10 மாலை நண்ணி ( பலனுரைத்துத் தலைக்கட்டவேண்டிய இப்பாசுரத்தில் “இப்பத்தும் பாடி பணிமிளவன்தாள்களே” என்று உபநெசரூபமாகவே யருளிச்செய்தாரெனினும் இதுவும் பயனுரைப்பதாகவே தலைக்கட்டும்) 11
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர்
மாட நீடு குருகூர்ச் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே–9-10-11
Vinai patru,வினை பற்று - துக்க ஸம்பந்தம்
Paadu saara,பாடு சாரா - அருகில் கிட்டாதபடி
Ara venduveer,அற வேண்டுவீர் - அது கொலையவேணு மென்றிருப்பவர்களே
Maadam needu GuruKoor,மாடம் நீடு குருகூர் - மாடமாளிகைகள் உயர்ந்த திருநகரியிலே அவதிர்த்த
Sadagopan,சடகோபன் - ஆழ்வார்
Sol,சொல் - அருளிச்செய்த
thamizh aayiraththul ippattum,தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் - தமிழ் பாடல் ஆன ஆயிரத்துள் இப் பத்தும் –
Paadi,பாடி - வாயாரப்பாடி
Aadi,ஆடி - அதற்குச் சேர நர்த்தன்ம் பண்ணி
Avan thaalgalae panimin,அவன் தாள்களே பணிமின் - அப்பெருமானுடைய திருவடிகளையே தொழுங்கள்
3667திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (கொடிய தாபத்திலே அடிபட்டவன் குளிர்ந்த தடாகத்தையோ காளமேக வர்ஷத்தையோ எதிரிபாரிப்பது ஸஹஜந்தானே; அதுபோல ஆழ்வாரும் தம்முடைய ஸாம்ஸாரிக தாபங்களெல்லாம் தொலையப்பெறும் ஸமயமாகையாலே இப்போது காளமேகப் பெருமாளைப் பெற்று ஸூகிக்கிறபடியைத் தெரிவித்தருளுகிறார். இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்; இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..வேறுதுணையுடையோமல்லோ மென்று அப்பெருமாளைப் பற்றுகிறார்.) 1
தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காளமேகத்தை யன்றி மற்று ஓன்று இலம் கதியே–10-1-1
தாள தாமைரை தடம்அணி,Thaala thaamarai tadam ani - தாளுரத்தையுடைய தாமரைகள் நிறைந்த தடாகங்களை அலங்காரமாகக் கொண்ட
வயல் திருமோகூர் நாளும் மேவி,Vayal thirumogoor naalum mevi - வயல்களாலே சூழப்பட்ட திருமோகூரிப்பதியை நித்திய வாஸஸ்தலமாகக் கொண்டு
நன்கு அமர்ந்து நின்று,Nangu amarnthu ninru - மிகவும் உகப்போட அங்குப் பொருந்தி நிற்குமவனாய்
கமலம் கண்,Kamalam kan - செந்தாமரை போன்ற திருக்கண்களை யுடையனாய்
அசுரரை தகர்க்கும தோளும் நான்கு உடை,Asurarai thakarkkum tholum naangu udai - அசுரர்களை புடைக்க வல்ல நான்கு திருத்தோள்களையு முடையனாய்
கனி வாய்,Kani vaai - கனிந்த திருப்பவளத்தை யுடையனாய் ஸேவை ஸாதிக்கின்ற
சுரி குழல்,Suri kuzhal - சுருண்ட திருக்குழல் கற்றையை யுடையனாய்
காளமேகத்தை அன்றி,Kaalamegaththai anri - காளமேகப் பெருமாளைத் தவிர்த்து
மற்று ஒன்று கதி இலம்,Matru ondru gathi ilam - வேறொரு துணையுடையோ மல்லோம்
3668திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திருமோகூரெம்பெருமானுடைய திருவடிகளல்லது வேறுபுகலுடையோமல்லோம் எந்நாளும் என்கிறாரிப்பாட்டில்.) 2
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2
ஈன் தண் துழாயிள் அலங்கல் அம் கண்ணி,Een than thuzhaayil alangal am kanni - பரம யோக்யமான துழாய் மாலையை யுடையனாய்
ஆயிரம் பேர் உடையம்மாள்,Aayiram per udaiyammaal - ஆயிரந் திருநாமங்களையுடைய ஸ்வாமியாய்
அடி நிழல் தடம் அன்றி,Adi nizhal tadam anri - திருவடி நிழலாகிற பொய்கை தவிர
நலம் கொள் நால்மறை வாணர்கள் வாழ் திருமோகூர் நலம் கழலவன்,Nalam kol naalmurai vaanargal vaazh thirumogoor nalam kazhalavan - விலக்ஷணர்களான வைதிகர்கள் வாழுமிடமான திருமோகூர்லே திருவடிகள் பொருந்தியிருக்கப்பெற்றவனான எம்பெருமானுடைய
மற்று ஒன்று கதியை,Matru ondru kathiyai - வேறொரு கதியை
யாம் எம்மைக்கும் இலம்,Yaam emmaikkum ilam - யாம் ஒரு பிறப்யிலும் உடையோ மல்லோம்.
3669திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நம்முடைய எல்லாத் துயரங்களுங் கெடுமா திருமோகூரைச் சென்று கிட்டுவோ மென்கிறார்.) 3
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தண் துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேருடை யம்மான்
நலம் கொள் நான்மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவனடி நிழல் தடம் அன்றி யாமே–10-1-2
யாம்,Yaam - அடியோங்கள்
அன்றி ஒருபுகலிடம் இலம் என்று என்று அலற்றி,Andri orupugalidam ilam enru enru alatri - உன்னை யொழிய வேறொரு புகலிடமுடையோ மல்லோமென்று இதையே பலகால் சொல்லியலற்றி
நான்முகன் அரனோடு தேவர்கள் நின்று நாட,Naanmugan aranodu thevargal ninru naada - ப்ரஹ்மருத்ரர்களோடு தேவ ஜாதிகள் நிலை நின்று ஆச்ரயிச்சு
வென்று,Vendru - விரோதிகளைத் தொலைத்து
இம் மூவுலகு அளித்து உழல்வான்,Em moovulagu alitthu uzhalvaan - இம் மூவுலகங்களையும் ரக்ஷித்து இதுவே யாத்திரையாயிருககும் பெருமானுடைய
நாம் நமது இடர் கெட,Naam namadu idar keda - நாம் நம்முடைய இடர் தீரும்படி
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
இனி நன்று நணுகும்,Eni nandru nanugum - இப்போது நன்றாகக கிட்டக் கடவோம்.
3670திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (தேவரும் முனிவரும் ’இடர்கெட எம்மைப் போந்தளியாய்’ என்று பலகாலுஞ்சொல்லி யேத்தி தொடருகின்றார்களாம்.) 4
இடர் கெட வெம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட வடி பரவுதும் தொண்டீர் வம்மினே–10-1-4
இடர் கெட போந்து எம்மை அளியாய் என்று,Edar keda pondhu emmai aliyaai enru - எம்மிடர் தீரும்படியாக எழுந்தருளி எம்மை ரக்ஷித்தருள வேணுமென்று பலகாலுஞ் சொல்லி
படர் கொள் பாம்பு அணை,Padar kol paambu anai - விர்வான சேஷ சயனத்திலே
பள்ளி கொள்வான்,Palli kolvaan - பள்ளி கொள்பவனான பெருமானுடைய
சுடர் கொள் சோதியை,Sudar kol sothiyai - தேஜ புஞ்ஜயமான திருமேனியை
ஏத்தி,Aethi - தோத்திரம் செய்து
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியிலே
இடர் அடி பரவுதும்,Edar adi paravudhum - நம்மிடர் கெடுமாறு அவன் திருவடிகளைத் துதிப்போம்;
தேவரும் முனிவரும் தொடர,Thevarum munivarm tudara - தேவர்களும் முனிவர்களும் அநுவர்த்தித்து ஆச்ரயிக்கைக்காக .
தொண்டீர் வம்மின்,Thondeer vamin - பகதர்களே! நீங்களும் வாருங்கள்
3671திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அவன் எழுந்து அருளி நின்று அருளின திரு மோகூரை ஆஸ்ரயித்து அனுபவிக்க வாருங்கோள் -என்கிறார்.) 5
தொண்டீர் வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே–10-1-5
நம் சுடர் ஒளி,Nam sudar oli - நாம் அநபவித்தற்குரிய தேஜோமய திவ்யமங்கள விகரஹத்தையுடையனாய்
ஈன் கரும்பொடு,Een karumpodu - இனிய கரும்போடு கூட
பெரு செந்நெல் விளைய,Peru sennel vilaiya - பெரிய செந்நெற் பயிர்கள் விளையும்படியாக
ஒரு தனி முதல்வன்,Oru thani mudhalvan - உலகுககெல்லாம் அத்விதீய காரண பூதனாய்
கொண்ட,Konda - தான் பர்கரஹித்தருளின
கோயிலை,Koyilai - ஸன்னிதியை
வலம் செய்து,Valam seithu - பிரதக்ஷிணம் பண்ணி
அண்டம் உலகு அளந்தவன்,Andam ulagu alandhavan - அண்டங்களையுடைய மூவுலகங்களையும் அளந்து கொண்டவனான எம்பெருமான்
இங்கு கூத்து ஆடுதும்,Ingu koothu aadudhum - இங்கே கூத்தாடுவோம்;
அணி திருமோகூர்,Ani thirumogoor - அழகிய திருமோகூர்லே
எண் திசையும்,En thisaiyum - எட்டுத் திசைகளிலும்
தொண்டீர் வம்மின்,Thondeer vamin - தொண்டர்களே! நீங்களும் வாருங்கள்.
3672திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (திரு மோகூரிலே நின்று அருளின -பரம ஆப்தனானவனுடைய திருவடிகள் அல்லது வேறு நமக்கு அரண் இல்லை என்கிறார்.) 6
கூத்தன் கோவலன் குதற்று வல்லசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தண் பணை வளவயல் சூழ் திரு மோகூர் ஆத்தன்
தாமரை யடி யன்றி மற்று இலம் அரணே–10-1-6
கூத்தன்,Koothan - அழகிய நடையையுடையனாய்
வாய்த்த தண்பணை வளம் வயல் சூழ் திருமோகூர் ஆத்தன்,Vaaytha thanpanai valam vayal soozh thirumogoor aathan - நெருங்கிக் குளிர்ந்த நீர் நிலங்களாலும் செழித்த வயல்களாலும் சூழப்பட்ட திருமோகூரில் எழுந்தருளியருப்பவனான ஆப்தனுடைய
கோவலன்,Kovalann - பசுக்களின் பின்னே சென்று அவற்றை ரக்ஷிக்குமவனாய்
குதற்று வல் அசுரர்கள் கூற்றம்,Kuthatru val asurargal kootram - பீடையைப் பண்ணும் கொடிய அசுரர்களுக்கு மருத்யுவாய்
தாமரை அடி அன்றி,Thamarai adi anri - பாதாரவிந்தங்களைத் தவிர்த்து
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும் முனிவாக்கும் இன்பன்,Eththum nangatkumm amararkkum munivakkum inban - துதி செய்கின்ற நமக்கும் தேவர்களுக்கும் இருடிகளுக்கும் ஆனந்தகரனாய்
மறறு அரண் இலம்,Marru aran ilam - மற்றொரு ரக்ஷையுடையோ மல்லோம்.
3673திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –சர்வ காரணம் ஆகையால் நம்முடைய ரக்ஷணம் தனக்கு அவர்ஜ்ஜ நீயமாம் படியான-உத்பாதகனானவனுடைய திரு மோகூரை ஆஸ்ரயிக்கவே-நம்முடைய ஸமஸ்த துக்கங்களும் அப்போதே கெடும் -என்கிறார்.) 7
மற்று இலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே–10-1-7
வான் பெரு பாழ் தனி முதலா,Vaan peru paazh thani mudhalaa - வலிதாய் அபர்ச் சிந்தமாய் போக மோஷங்களை விளைப்பதாய் அத்விதீயமான மூலப்ரக்ருத தொடக்கமாக
அதன் வழி,Athan vazhi - அந்த வழியாலே
தொல் முனி முதலா,Thol muni mudhalaa - பழைய முனிவனான ப்ரஜாபதி முதலாக
சுற்று நீர் படைத்து,Sutru neer padaiththu - ஆவரண ஜலத்தை ஸ்ருஷ்டித்து
முற்றும் தேவரோடு உலகு செய்வான்,Muttrum thevarodu ulagu seivaan - எல்லாத் தேவ ஜாதியோடுங் கூட எல்லா உலகங்களையும் உண்டாக்குமவன் எழுந்தருளியிருக்கு இடமான
நாம சுற்றி வலம் செய்ய,Naam sutri valam seiyya - நாம் சுற்றி ப்ரதக்ஷிணம் பண்ண
நம் துயர் கடிது கெடும்,Nam thuyar kadithu kedum - நம் துக்கஙகள் விரைவில் தொலைந்து போம்
திருமோகூர்,Thirumogoor - திருமோகூரிப்பதியை
மற்று அரண் இலம்,Matru aran ilam - (ஆன பின்பு இத்திருப்பதி தவிர) மற்றொரு ரக்ஷகமுடையோ மல்லோம்.
3674திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது; அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.) 8
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8
உயர் கொள் சோலை,Uyar kol solai - உன்னதமான சோலைகளையும்
தயதரதன் பெற்ற மரகதம் மணி தடத்தினை,Dayadharan petra maragatham mani tadathinai - தசரத சக்ரவர்த்தி பெற்ற மரகத மணித் தடாகம் போன்றவனான எம்பெருமானை,
ஒண் தடம் அணி,On tadam ani - அழகிய தடாகங்களையும்
ஒளி திருமோகூர்,Oli thirumogoor - அலங்காரமாக உடைத்தான அழகிய திருமோகூர்லே,
அடியவர்,Adiyavar - அடியீர்கள்!
ஆயிரம் பெயர்கள் உடைய,Ayiram peyargal udaiya - ஸஹஸ்ர நாமப்ரதிபாத்யனாய் அடைந்து வந்து தொழுமின் வந்து கிட்டித் தொழுங்கோள்;
வல் அரக்கர்,Val arakkar - புக்கு அழுந்த கொடிய ராக்ஷசகர்கள் புகுந்து மடியும்படியாக
துயர் கடிது கெடும்,Thuyar kadidu kedum - கிலேசமெல்லாம் விரைவில் தொலைந்து போம் (அப்படித் தொழுதால்).
3675திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (நமக்கு அரணான திருமோகூரை நாம் கிட்டப் பெற்றோமென்று தம்முடைய லாபத்தைப் பேசி மகிழ்கிறார்.) 9
மணித் தடத்து அடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம்முடை நல்லரண் நாம் அடைந்தனமே–10-1-9
மணி தடத்து அடி,Mani tadathu adi - அழகிய தடாகம் போலே குளிர்ந்த திருவடிகளையும்
அசுரரை என்றும் துணிக்கும் வல் அரட்டன்,Asurarai endrum thunikum val arattan - அசுரர்களை எப்போதும் நிரஸிக்கின்ற பெருமிடுக்கனுமான எம் பெருமான
மலர் கண்கள்,Malar kankal - தாமரைப் பூப் போன்ற திருக்கண்களையும்
உறை,Urai - நித்தியவாம் பண்ணுமிடமான
பவளம் செவ்வாய்,Pavalam sevvai - பவளம் போன்ற சிவந்த அதரத்தையும்
பொழில் திருமோகூர் நம்முடைய நர் அரண்,Pozhil thirumogoor nammudaiya nar aran - சோலைவளம் மிக்க திருமோகூர்பதியாகிற நமக்கு நல்ல ரக்ஷகமான திவ்ய தேசம் அருகேயுள்ளது
அணிகொள் நால் தடம் தோள் தெய்வம்,Anikol nal tadam thol dheivam - அழகிய நான்கு திருத்தோள்களையும் உடைய தெய்வமாயிருப்பவனும்
நணித்து நாம் அடைந்தனம்,Nanithu naam adainthanam - இதனை நாம் பஜிக்கப் பெற்றோம்.
3676திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (அடியார்களின் விஷயத்தில் அபீஷ்டவிக்ரஹ பர்க்ரஹம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பெருமான் வர்த்திக்கிற திருமோகூர்த் திருப்பதியின் திருநாமத்தைச் சொல்லி ஏத்துங்கோ என்று, தம்மோடு அந்வயமுடையார்க்கு உரைத்தருளுகிறார்.) 10
நாமடைந்த நல்லரண் நமக்கென்று நல்லமரர்
தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச் சென்றடைந்தால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திருமோகூர்
நாமமே நவின்று எண்ணுமின் ஏத்துமின் நமர்காள்–10-1-10
நமக்கு நாம் அடைந்த நல் அரன் எனறு ஸாதுக்களான தேவர்கள்,Namakku naam adaintha nal aran enru sadukal ana dhevargal - நல் அமரர் நமக்குப் புகலாக நாம் அடைந்த நல்ல ரக்ஷகமான தலம் இதுவென்று
எழுந்து அளிப்பான்,Ezhundhu alippaan - கிளர்ந்து ரக்ஷிக்கும் பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சி சென்று அடைந்தால்,Theemai seyyum val asurari anji sendru adainthaal - தங்களுக்குப் பொல்லாங்கு அஞ்சி வந்தது பணிந்தால்
காமரூபம் கொண்டு,Kamarupam kondu - திருவுள்ளமான வடிவைக் கொண்டு
திருமோகூர் நாமமே,Thirumogoor naamame - திருமோகூரிப்பதியின் பெயரையே
நமர்காள நவின்று எண்ணுமின் ஏத்துமின் .,Namarkal navindru ennumin aeththumin - நம்முடையவர்களே! பயின்று நினையுங்கோள், வாய் விட்டுமேந்துங்கள்
3677திருவாய்மொழி || (10-1–தாளதாமரை) (திருமோகூர்ப் பெருமானைச் சரணம் அடைந்து தாம் பரமபதம் அடையக் கருதியதை ஆழ்வார் அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்கவல்லார்க்கு சரீராவஸானத்தில் வழித்துணையில்லையே என்று க்லேசப்பட வேண்டாதபடி காளமேகம் வழித்துணையாமென்று பலன் சொல்லித் தலைக்கட்டுகிறார்.) 11
ஏத்துமின் நமர்காள் என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த வாயிரத்துள் இவை வண் திரு மோகூர்க்கு
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே–10-1-11
நமர்காள் ஏத்துமின் என்று தான் குடம் ஆடு கூத்தனை,Namarkal aeththumin enru thaan kudam aadu kooththanai - எம்முடையவர்கள்! ஏத்துங்கேளென்று தானே சொல்லிக் குடக் கூத்தாடின பெருமாளைக் குறித்து
இவை வண் திருமோகூர்க்கு ஈத்த பத்து,Evai van thirumogoorukku eetha paththu - இப்பத்துப் பாசுரங்களும் திருமோகூர் விஷயமாக ஸமரிப்பித்தவை;
குருகூர் சடகோபன் குற்றேவல்கள் வாய்த்த ஆயிரத்துள்,Kurukoor sadagopan kutraevargal vaayththa ayiraththul - நம்மாழ்வாருடைய திருவாக்காலான கைங்கரியமாக வாய்த்த ஆயிரத்துக்குள்ளே.
இவை ஏத்த வல்லார்க்கு இடர்கெடும்,Evai aeththa vallarkku idarkedum - இவற்றைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்குத் துன்பங்கள் தொலைந்துபோம்.
3678திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ப்ராப்யமான திருவனந்தபுரத்திலே சென்று சேருகைக்கு இடையூறுகள் பல உண்டே; அவையெல்லாம் திருநாமஸங்கீர்த்தனம் பண்ணின வளவிலேயே தொலையும்; அங்கே புக வாருங்கோள் என்று அநுகூலரையழைக்கிறார்.) 1
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே–10-2-1
கேசவா என்ன இடர் ஆய எல்லாம் கெடும்,Kesavaa enna idar aaya ellam kedum - கேசவ நாமத்தைச் சொன்ன வளவில் துன்பமானவை எல்லாம் தொலைந்துபோம்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான்,Vidam udai aravil pallli virumbinaan - நச்சரவினனை மேல் விரும்பிப் பள்ளி கொள்ளுமவன் வர்த்திக்கிற
நாளும் கொடுவினை செய்யும்,Naalum koduvinai seyyum - நிரந்தரமாகக் கொடுமைகளைச் செய்ய நிற்கிற
சுரும்பு அலற்றும் தடம் உடை வயல்,Surumbu alatrum tadam udai vayal - வண்டுகள் ஆரவாரிக்கின்ற தடாகங்கள் நிறைந்த கழன்கிளையுடைய
கூற்றின் தமர்களும் குறுககில்லார்,Koottin thamargalum kurugakillaar - யமபடர்களும் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; (ஆன பின்பு)
அனந்தபுரம் நகர்,Ananthapuram nagar - திருவனந்தபுரமாகிற திவ்ய தேசத்தை
இன்றே புகுதும்,Endrae pukuthum - இன்றே போய்ப் புகுவோம்.
3679திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார்.) 2
இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2
குன்று நேர் மாடம்,Kunru neer maadam - மலை போன்ற மாடங்களினருகே
எழுமையும் ஏதம் சாரா,Ezhumaiyum aedham saara - ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது
குருந்து சேர் செருந்தி புன்னை,Kurundhu ser serundhi punai - குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும்
மாயன் நாமம்,Maayan naamam - அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில்
ஒன்றும்,Ondrum - ஏதேனும் ஒன்றாகிலும்
மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்,Manru alar pozhil ananthapuram nagar - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை
ஓர் ஆயிரம் ஆகும்,Or aayiram aakum - ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது;
இன்று போய் புகுதிரி ஆகில்,Endru pooi pukuthiri aagil - இன்றே சென்றடைவர்களாகில்
உள்உவர்க்கு,Ulluvarkku - இத்தையநுஸந்திப்பார்க்கு
ஒம்பர் ஊரே,Ombur oorae - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும்.
3680திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (பிரதிபந்தங்கள் தொலைவதற்கு இன்ன திருநாமமென்று ஒரு நிர்ப்பந்தமில்லை; ஆயிரந்திருநாமங்களுள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லவமையும் என்கிறார்.) 3
ஊரும் புள் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தண்ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்
பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே–10-2-3
புள் ஊரும்,Pul oorum - பெரிய திருவடியை ஊர்தியாகக் கொள்ளுமவனாய்
சிக்கென புகுதிரி ஆகில்,Sikkena pukuthiri aagil - திடமான அத்யவஸாயத்துடன் சென்று சேழ்வீர்களால்,
கொடியம் அஃதே,Kodiyam akhthae - அப்பெரிய திருவடியையே கொடியாகவுமுடையனாய்
நோய் வினைகள் எல்லாம் தீரும்,Noy vinaigal ellam theerum - நோயும் வினைகளுமானவையெல்லாம் தீரும்;
உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்,Ulagu ellam undu umizhndhaan - உலகங்களையெல்லாம் ஒரு கால் உண்பதும் மற்றொரு கால் உமிழ்வதுஞ் செய்தவான எம்பெருமான்
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இவ்விஷயததை உங்களுக்கு) நாம் திண்ணமாக அறியும்படி தெரிவித்தோம்;
சேரும் தண் அனந்தபுரம்,Serum than ananthapuram - நித்யவாஸஞ் செய்யுமிடான குளிர்ந்த திருவனந்தபுரத்தை
பேரும் ஒரு ஆயிரத்துள்,Perum oru aayiraththul - (அப்பெருமானுடைய) ஸஹஸ்ரநாமங்களுள்
நீர் ஒன்று பேசுமின்,Neer onru pesumin - நீங்கள் ஏதேனுமொரு திருநாமத்தைச் சொல்லுங்கள்.
3681திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம்.) 4
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4
பெரிய நீர் வேலை சூழ்ந்து,Periya neer velaai soozhndhu - பெரிய நீராகிய கடலாலே சூழப்பட்டு
மலர்கள் தூவி,Malarhal thoo vi - புஷ்பங்களை பணிமாறி ஆராதிக்குமவர்கள்
வாசமே கமழும் சோலை வயல் அணி,Vaasame kamazhum solai vayal ani - பரிமளமே நிறைந்த சோலைகளையும் வயல்களையும் அலங்காரமாகக் கொண்ட
அனந்தபுரம்,Ananthapuram - திருவனந்தபுரத்திலே பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்த ஆறு ஏ,Punnayam seitha aaru ae - புண்ணிய செயத விதம் எனனோ!
நேசம் செய்து உறைகின்றானை,Nesam seithu urai kindraanai - அன்பு பூண்டு நித்யவாஸம் பண்ணும் பெருமானை
கூசம் இன்றி பேசுமின்,Koosam indri pesumin - (அந்த பாக்ய விசேஷத்தை நீங்கள் (கூசாமல் எடுத்துச் செல்லுங்கள்
நெறிமையால்,Nerimaiyaal - முறை தவறாது
3682திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவனந்த புரத்தில் ஆஸ்ரயிக்கும் அவர்கள் அயர்வறும் அமரர்களோடு ஒப்பர் என்று கொண்டாடி -அப்படியே நீங்களும் ஆஸ்ரயிங்கோள் என்கிறார்.) 5
புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலகள் தூவி,Punnayam seithu nalla punalodu malargal thoo vi - பக்தி கொண்டு நல்ல தீர்த்தத்தையும் புஷ்பங்களையும் பணிமாறி
செறி பொழில்,Seri pozhil - செறிந்த சோலைகளையுடைய திருவனந்தபுரத்திலே அனந்தபுரத்து
அண்ணலார்,Annalaar - ஸ்வாமியினுடைய
எந்தை நாமம் எண்ணுமின்,Endhai naamam ennumin - எம்பெருமானது திருநாமங்களைச் சிந்தனை செய்யுங்கள். (அப்படிச் செய்யுமளவில்)
கமலம் பாதம்,Kamalam paadam - திருவடித் தாமரைகளை
அணுகுவார்,Anuguvaar - கிட்டுமவர்கள்
இப்பிறப்பு அறுக்கும் அப்பால்,Eppirappu arukkum appaal - இக் கொடிய ஸம்ஸாரத்தைத் தொலைத்தருள்வன்மேலும்,
அமரர் ஆவார்,Amarar aavaar - நித்யஸூரிகளோடொப்பர்;
நாம் திண்ணம் அறிய சொன்னோம்,Naam thinam ariya sonnom - (இதனை) நாம் திடமாகத் தெரிவித்தோம்.
3683திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (அயர்வறுமமரர்களும் வந்து அடிமை செய்கிறது திருவனந்தபுரத்திலே யாதலால் திருநாட்டிலுங்காட்டில் பரமப்ராப்யம் திருவனந்தபுரம்; நாமும் இங்கே சென்று அடிமை செய்யத்தகுமென்கிறார்.) 6
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனார்,Kumaranar dhaathai thunbam thudaitha kovindanaar - முருகனது தந்தையான சிவபிரானது துன்பத்தைப் போக்கியருளின பெருமானாய்
அகப்பணி செய்தவர் விண்ணோர்,Agappani seithavar vinnor - அந்தரங்கமான பணிவிடைகளைச் செய்யுமவர்கள் நித்ய முக்தர்களாயிருப்பார்;
அமரர் ஆய் திரிகின்றார்கட்கு ஆதி,Amarar aay thirigindraarkatku aadhi - அமரரென்று பேர் பெற்றுத் திரிகின்றவர்களுக்கும் தலைவனாயிருக்குமவன்
நமர்களோ,Namargaloo - தம்முடையவர்களே!
சேர் அனந்தபுரத்து,Ser ananthapurathu - நித்யவாஸஞ் செய்கிற திருவனந்தபுரத்திலே
சொல்ல கேண்மின்,Solla kearnmin - நாம் சொல்வதைக்கே உங்கோள்;
அமரா கோன் அர்ச்சிக்கின்று அங்கு,Amaraa kon archikkindraangu - ஸ்ரீ ஸேனாபதியாழ்வான் ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக
நாமும் போய் நணுக வேண்டும்,Naamum pooi nanuga vendum - அவர்களோடு நாமும் கூடிக் கைங்கரியம் பண்ண வேண்டும்.
3684திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸர்வேச்ரன் திருக்கண் வளர்ந்கருளுகிற திருவனந்தபுரத்தே சென்று அடிமை செய்யய்ப பெற்றால் எல்லாத் துக்கங்களும் தீருமென்கிறார்.) 7
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவு மற்றும்
படைத்த வெம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் யணி யனந்த புரம்
கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே–10-2-7
உலகு உயிர் தேவும் மற்றும் உலகங்களையும்,Ulagu uyir theevum matrum ulagangalaiyum - (மநுஷ்யாதி) ப்ராணிகளையும் தேவஜாதிகளையும் மற்றும் மஹதார் பதார்த்தங்களையும்
மடை தலை வளை பாயும் வயல் அணி அனந்தபுரம்,Madai thalai valai paayum vayal ani ananthapuram - நீர் நிலங்களிலே மீன்கள் களித்துப் பாயா நின்ற வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே
துடைத்த கோவிந்தனாரே,Thudaitha kovindanaarae - ஒன்றொழியாமல் ஸம்ஹர்த்த பெருமாள் தானே
பாம்பு அணை பள்ளி கொண்டான்,Paambu anai pallli kondaana - சேஷ சயனத்திலே பள்ளி கொண்டருளா நின்றான்; (அவ்விடத்தே சென்று)
படைத்த எமபரம மூர்த்தி,Padaitha emparam moorthi - (அவற்றையெல்லாம் மறுபடியும்) படைத்தருளின பரம புருஷன்; (அப்பெருமாள்) கடைத்தலை சீய்க்கப் பெற்றால
கடு வினை களையலாம்,Kadu vinai kalaiyaalaam - திருவாசல் விளக்குதல் முதலிய கைங்கரியங்களைப் பண்ணப் பெற்றால் கொடிய பாவங்களைப் போக்கப் பெறலாம்.
3685திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத்திலே திருக்கண் வளர்ந்தருளுகிற ஸர்வேச்வரனுடைய திருவடிகளைக் காண நடவுங்கோளென்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு நியமித்தருளுகிறார்.) 8
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட தென்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கு அறியச் சொன்னோம்–10-2-8
எழில் அணி அனந்தபுரம்,Ezhil ani ananthapuram - அழகணிந்த திருவனந்தபுரம் திருப்பதி
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண,Padam udai aravil pallli payindravan paadam kaana - படங்களையுடைய வனத்தாழ்வான் மீது பள்ளி கொண்டருளும் அனந்த பத்மநாபனுடைய திருவடிகளை ஸேவிக்க நடவுங்கள்
காமனை பயந்த காளை இடவகை கொண்டது என்பர்,Kaamanai payantha kaalai idavakai kondaathu enbar - மன்மதனுக்கும் உத்பாதகனான பெருமாள் தனக்கு இருப்பிடமாகக் கொண்ட தலமென்பார்கள்;
நடமின் நாம் உமக்கு அறிய சொன்னோம்,Nadamin naam umakku ariya sonnom - (இதனை) நாம் உமக்குத் தெரிவித்தோம்; (இங்ஙனே செய்தால்)
நமர்கள் உள்ளீர் நம்மோடொரு ஸம்பந்தம் பெற்றவர்களாயிருப்பவர்களே!கடு வினை களையல் ஆகும்,Namargal ullir nammodoru sambantham petraavargalaayiruppavargale! Kadu vinai kalaiyal aagum - கொடிய பாவங்களை எல்லாம் போக்கப் பெறலாம்.
3686திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி – திருவனந்த புரத்திலே கண் வளர்ந்து அருளுகிற சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் காணப் போருங்கோள் -என்று அனுகூலரை அழைக்கிறார்.) 9
நாமும் உமக்கு அறியச் சொன்னோம் நாள்களும் நணியவான
சேமம் நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற வாய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே–10-2-9
நாம உமக்கு அறிய சொன்ன நாள்களும் நணிய ஆன (முன்பு),Naam umakku ariya sonna naalgalum nania aan (mumbhu) - நாம் உங்களுக்குத் தெரிவித்த சரீராவஸான நாளும் ஸமீபித்தது;
தூமம் நல் விரை மலர்கள்,Thoomam nal virai malargal - (ஆன பின்பு அவ்விடத்திற்கு) தூபத்தியும் நறுமண மலர்களையும்
செறி பொழில் அனந்தபுரம் சேமம் நன்கு உடைத்து,Seri pozhil ananthapuram semam nallkku udaiythu - செறிந்த பொழில்களையுடைய திருவனந்தபுரமானது நமக்கு நன்றாக க்ஷேமம் செய்ய வல்லது;
துவள் அற ஆய்ந்து கொண்டு வாமனன் அடிக்கு என்று ஏத்த,Thuvaal araa aayndhu kondu vaamanan adikku enru aetha - பர்சுத்தமாக சேகரித்துக் கொண்டு எம்பெருமானுடைய திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்துத் துதிக்க,
கண்டீர்,Kandheer - இதை அனுபவித்திலே காணலாமன்றோ;
வினைகள் தானே பாய்ந்து அறும்,Vinaihal thaanae paayndhu arum - பாவங்களை தன்னடையே தொலைந்து போம்.
3687திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –அவன் திரு நாமங்களில் ஏதேனும் ஒரு திரு நாமத்தைச் சொல்ல அடிமை செய்கைக்கு பிரதிபந்தகங்கள் எல்லாம் தானே போம் என்று சொல்லி முடித்து திருவனந்த புரத்திலே போய் எம்பெருமானுக்கு அடிமை செய்யும் மஹாத்மாக்கள் ஆரோ தான் என்று கொண்டு அவர்களைக் கொண்டாடுகிறார்.) 10
மாய்ந்து அறும் வினைகள் தாமே மாவதா வென்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழினாரே–10-2-10
மாதவா என்ன,Madhava enna - திருமாலே என்று சொன்ன வளவிலே
நல்ல சாந்தொடு விளக்கம் தூபம்,Nalla santhodu vilakkam thoombam - நல்ல சந்தன தீப தூபங்களையும்
வினைகள் தானே மாய்ந்து அறும்,Vinaihal thaanae maayndhu arum - பாவங்கள் தானே தொலைந்தொழியும்;
தாமரை மலர்கள் ஆய்ந்து கொணடு நாளும் ஏந்த வல்லார்,Thamarai malargal aayndhu kondu naalum aentha vallaar - தாமரைப் பூக்களையும் சேகரித்துக் கொண்டு சென்று நாடோறும் துதி செய்ய வல்ல பக் தர்கள்
ஏய்ந்த பொன்மதின் அனந்தபுரம் நகர் எந்தைக்கு என்று,Ayndha ponmathin ananthapuram nagar endhaikku enru - பொருந்தின பொன்மதினையுடைத்தான திருவனந்தபுர நாதனுக்கென்று ஸங்கல்பித்து
என்றும் அந்தம் இல் புகழினார் எந்நாளும்,Enrum andham il pugazhinaar ennnaalum - அழிவில்லாத புகழை யுடையராவர்.
3688திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (இத்திருவாய் மொழி கற்கைக்குப் பலன் பரமபதத்தில் திவ்யாப்ஸரஸ்ஸுக்களாலே ப்ரஹ்மாலங்கார ப்ராப்தி பெறுவதென்கிறார்.) 11
அந்தமில் புகழ் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் லாயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே–10-2-11
அந்தம் இல் புகழ்,Andham el pugazh - அழிவில்லாத புகழை யுடையனான
போய்,Pooi - (சாராவஸரனத்தில் அர்ச்சிராதி மார்க்கத்தாலே) சென்று
அனந்தபுரம் நகர் ஆதி தன்னை,Ananthapuram nagar aadhi thannai - திருவனந்தபுர மென்னும் திவ்ய தேசத்திலே யெழுந்தருளியிருக்கிற ஆதி புருஷனைக் குறித்து,
அமர் உலகில்,Amar ulakil - நித்ய விபூதியில்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல்,Kondu alar pozhil kurukoor maaran sol - பூங்கொத்துக்கள் அலருகிற பொழில் சூந்த திருநகர்க்குத் தலைவரான ஆழ்வார் அருளிச் செய்த பை நொடி மடந்தையர் தம்
அழகிய ஹஸ்த பூஷணங்களணிந்த (பரமபதத்து) திவ்ய,Azhagiya hasta pooshanangal anindha (paramapadathu) divya - அப்ஸரஸ்ஸுக்கனுடைய
ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களையும்,Aayiraththul aayiram paasurangalaiyum - வேய் மரு தோள் இணை
வேய் போன்ற தோளினைகளால் நேரும் ஸத்காரங்களை,Vei poondra tholinigalal nerum sathkaarangkalai - ஐந்தினோடு ஐந்தும் வல்லார்
இப்பத்துப் பாசுரங்களையும் ஓத வல்லவர்கள,eppaththu paasurangalaiyum oadha vallavargal - அணைவர் அநுபவிக்கப் பெறுவர்கள்.
3689திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள்.) 1
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1
வேய் மருதோள் இணை,Vey maruthol inai - வேய் போன்ற தோள்களிரண்டும்
கணம் மயில் அவை கலந்து ஆலும் ஆலோ,Kanam mayil avai kalandhu aalum AalO - திரளான மயில்கள் கலந்து கேகாரவம் செய்யா நின்றன அந்தோ!
ஆல்ஓ,AalO - அந்தோ(அவ்வளவு மன்றிக்கே)
மெலியும் பிரிவாற்றாமையினால் தளர்ந்தன;,Meliyum pirivaatraamaiyinaal thalarndhana; - மருவு ஆ நிரை இனம் மேய்க்களுன்னோடு மருவுகின்ற பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக
என் மெலிவும் என் தனிமையும்,En melivum en thanimaiyum - என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும்
நீ போக்கு ஒரு பகல்,Nee pookku oru pagal - நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது
யாதும் நோக்கா,Yaadhum nokkaa - சிறிதும் நோக்காமல்
ஆயிரம் ஊழி ஆலோ,Aayiram oozhi AalO - ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந்
காமரு குயில்களும் கூவும்,Kaamaru kuyilgalum koovum - அழகிய குயில்களும் கூவுகின்றன; ;
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி,Thaamarai kangal kondu eerthi - தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கி நோவுபடுத்துகின்றாய்
ஆலோ,AalO - அநதத் தொனியும் அஸஹ்யமாயிரா நின்ற தந்தேர்
கண்ணா நீ தகவு இலை தகவு இலை,Kannaa nee thakavu ilai thakavu ilai - கண்ணா! நீ கருணையுடையை யல்லை, திண்ணம்.
3690திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பிரிவை நினைத்துப் புலம்புகிற படியைக் கண்டு ஒருவாறு வருத்தம் தீரும்படி அடுத்தடுத்து ஆரத் தழுவிக் கொண்டான் கண்ணபிரான்; இது தான் விச்லேஷப்ராகலாவ காலத்து ஸம்ச்லேஷமாகையாலே இது துக்கமாகத் தோற்றுமே யல்லது ஸுகமாகத் தோற்றாதாகையாலே கனாக்கண்டு விழித்தாற்போலே நோவுபட நின்றமையைச் சொல்லிக் கதறுகிறாள்.) 2
தகவிலை தகவிலை யே நீ கண்ணா
தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆராச்
சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவு என நீங்கி ஆங்கே
அக உயிர் அகம் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ
மிக மிக இனி உன்னை பிரிவை ஆமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே–10-3-2
தகவிலை தகவிலை யே நீ கண்ணா,Thagavilai thakavilai ye nee kannaa - (கண்ணா நீ தகவிலை தகவிலையே)
அகம் உயிர்,Agam uyir - உள்ளீடான பிராணனுடைய
தட முலை புணர் தொரும்,Thadamulai punar thoram - முலைத்தடங்களை நீ ஆலிங்கனம பண்ணுகிற க்ஷணந்தோறும்
அகம் அகம் தோறும்,Agam agam thorum - மர்ம ஸ்தானங்கள் தோறும்
புணர்ச்சிக்கு ஆரா,Punarccikku aaraa - அந்தப் புணர்ச்சியீனளவல்லாத
உள் புக்கு,Ul pukku - உள்ளே பிரவேசித்து
சுகம வெள்ளம்,Sugama vellam - ஆனந்த ஸாகரமானது
விசும்பு இறந்து,Visumbu irandhu - ஆகாசத்தையும் கடந்து
ஆவியின் பரம் அல்ல,Aaviyin param alla - ஆத்மாவுக்குப் பொறுக்கு வொண்ணாதபடியா யிரா நின்றது!
அறிவை மூழ்க்க சூழ்ந்து,Arivai mooza suzhnthu - அறிவு கெடும்படி போய் பெருகினதாகி
அந்தோ,Antho - ஐயோ!:
அது கனவு என நீங்கி,Adhu kanavu ena neengi - (அப்போதே) அது கனவு தானென்னும் படியாகக் கழிந்து
இனி மிக மிக உன்னை பிரிவை ஆம் ஆல்,Ini miga miga unnai pirivai aam aal - இனி மேன் மேலும் உன்னைப் பிரியும் படி யாகும் அந்தோ! (ஆதலால்)
ஆங்கே,Aangey - அந்த நிலைமையிலே
வேட்கை,Vedkai - ஆசையானது
நின் பசு நிரை மேய்க்க போக்கு வீவ,Nin pasu nirai meykka pookku veeva - பசுக்களை மேய்க்கைக்காக நீ போவது தவிர வேணும்.
3691திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பசு மேய்க்கப் போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது… வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ? பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ? இதை நான் தவிரத்தகுமோ? என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ? நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமாயன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. ராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள்.) 3
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3
நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக;
வீவன்,Veivan - நான் முடிந்து போவேன்
ஒரு பகல் போவது அன்று,Oru pagal povadhu andru - அந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க)
எனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம்,Enadhu aavi vevuyir kondu vem - எனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது;
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா,Poru kayal kann inai neerum nilla - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன;
துணை யாவரும் இல்லை,Thunai yaavarum illai - துணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே)
இவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம்,Ev aaykulathu aaychchi yom - இடைச்சிகளாய்ப் பிறந்த
ஆய் பிறந்த,Aay pirandha - நீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே
யான் இருந்து,Yaan irundhu - யான் முடியாதிருந்து .
உன் அஞ்சனம் மேனியை,Un anjanam meniyai - அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய
ஆட்டம் காணேன் ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்;,Aattam kaanaen sanjaarumum kaankindrilaen; - தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய
நீ அகன்றால்,Nee akanraal - நீ பிரிந்து போனால்
இதனிமை தானே சாவது,Edhanimai thaane saavathu - இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும்.
3692திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“ உங்களை நான விட்டுப் போவேனோ? பிரியேன், பிரியில் தரியேன், என்று நான் சொன்னதெல்லாம் மறந்தீர்களோ? என்னைப் பிரிந்து நீங்கள் படும் பாடெல்லாம் உங்களைப் பிரிந்து நான் படமாட்டேனோ? என் பிரிவை ஒருவாறு நீங்கள் பொறுத்திருந்தாலும் உங்கள் பிரிவு என்னால் பொறுக்குப போமோ!’’ என்றிப்படி சில வார்த்தைகளைக் கண்ணபிரான் ப்ரணயத்தின் மேலெல்லையில் நின்று சொல்ல; நாயனே! இந்தக் கள்ளப் பணிமொழிகள் தாம் எம்மை நீராயலைந்து கரைய வுருக்குகின்றன வென்கிறார்கள்.) 4
தொழுத்தையோம் தனிமையும் துணை புரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு
அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப்
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்–10-3-4
கோவிந்தா தொழுத்தையோம் தனிமையும்,Govindha thozhuthaiyom thanimaiyum - கண்ணா! அடிச்சிகளான எங்களுடைய தனிமையையும்
இன் சாறு வெள்ளம்,En saaru vellam - இனிதான ரஸப்ரவாஹமானது
துணை பிரிந்தார் துயரமும்,Thunai pirindhaar thuyarumum - துணையான வுன்னைப் பிரிந்தார் படுமலமாப்பையும்
நினைகிலை,Ninaikilay - நினைக்கின்றாயில்லை;
பாவியேன் மனம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த,Paaviyaan manam agam thorum ul pukku azhutha - பாவியேனுடைய நெஞ்சின் அவகாசந்தோறும் மறக்க வொண்ணாதபடி ஸ்திரமாக
நின் செம் கனிவாயின்,Nin sem kanivaayin - சிவந்த கனி போன்ற திருபபவளத்தினின்று வந்த
நின்தோழுதனில் பசுக்களையே விரும்பி உனது,Nin thozhuthanil pasukkalaiye virumbi unadhu - தொழுலிலுள்ளன பசுக்களையே ஆதரித்து
இம்மை துறந்து இட்டு,Emmai thurandhu ittu - எங்களை அநாதரித்து விட்டு
கள்வம் பணி மொழி,Kalvam pani mozhi - க்ருத்ரமமான தாழ்ந்த மொழிகளானவற்றை
அவை மேய்க்க போதி,Avai meykka podhi - அவற்றை மேய்க்கப் போகா நின்றாய்
நினைதொறும்,Ninaithorum - (அதற்கு மேல்) நினைககும் போதெல்லாம்
பழுத்த நல் அமுதின்,Pazhutha nal amudhin - பரிப’வமாய்த் தெளிந்த அம்ருதத்தினுடைய
ஆவி வேம் ஆல்,Aavi vem aal - எங்கள் பிராணன் பர்தபிக்கின்றது அந்தோ!
3693திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணபிரானுடைய கள்வப்பணிமொழிகள் அமன்மேலும் வளருகையாலே மீண்டும் “பணிமொழி நினைதொறமாவி வேமால்’’ என்கிறாள்.) 5
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா
பிணியவிழ்மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தன்றாலோ
மணி மிகு மார்வினின் முல்லைப் போது
என் வன முலை கமழ்வித் துன் வாயமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை யந்தோ
அடிச்சியோம் தலை மிசை யணியாய்–10-3-5
பணிமொழி நினைதொறும் ஆவி வேம் ஆல்,Panimozhi ninaithorum aavi vem aal - ஆச்வாஸகரமாகச் சொல்லுகிற வார்த்தைகளை நினைக்குந்தோறும் நெஞ்சு வேவா நின்றது;
மணிமிகு மார்பினில்,Manimigu maarbinil - கௌஸ்துப மணிபேரொணி விஞ்சுகிற திருமார்பில்
முல்லை போது,Mullai podhu - முல்லைப் பூவாலே
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா,Pagal nirai meykkiya poya kannaa - பகலெல்லாம் பசுமேய்க்கப் போன கண்ணனே!
என் வன முலை கமழ்வித்து,En vana mulai kamazhvidhu - அழகிய முலையைப் பரிமளிக்கச்
உன் வாய் அமுதம் தந்து,Un vaai amudham thandhu - உன்னுடைய செய்து
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவ,Pini avizh malligai vaadai thoova - தட்டவிழ்ந்து அலருகிற மல்லிகைப் பூக்களை வாடையானது தூவ,
அணி மிகு தாமரை கையை,Ani migu thaamarai kaiyai - அழகிய தாமரை போன்ற திருக்கையை
பெரு மதம் மாலையும் வந்தின்று,Peru madham maalaiyum vandhindru - பெரிய செருக்கோடே ( மத்த கஜம் போலே) மாலைப் பொழுதும் வந்தது;
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்,Adichiyom thalai misai nee aniyaai - அடிச்சியோம்£ன எங்களுடைய தலைமேலே நீ வைத்தருள வேணும்.
3694திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! நீ போமிடமெங்கும் உனக்கொரு குறையுல்லை கிடாய்; உனக்குக் காதலிமார்கள் எங்குமுளர்; எங்களையொழியவும் உனக்குச் செல்லுமாபோலே உன்னை யொழியவும் எங்களுக்குச் செல்லுமாகில் நாங்கள் வருந்த வேண்டாவே; நாங்கள் உன்னைப் பிரிந்து தாக்கமாட்டாமையன்றோ கதறுகிறோம்; உன் போக்கு எங்களுக்கு ஸஹ்யமன்று காண் என்கிறாள்.) 6
அடிச்சியோம் தலை மிசை நீ அணியாய்
ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம்
பிடித்து அது நடுவு உனக்கு அரியையரும்
பலர் அது நிற்க எம் பெண்மை ஆற்றோம்
வடித்தடம் கண் இணை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே–10-3-6
ஆழி அம் கணணா,Aazhi am kannanaa - அடல் போன்று விடாய் தீர்க்க வல்ல அழகிய திருக்கண்கடிளயுடிடயவனே!
எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - ( உன் பிரிவில்) எங்களுடைய பெண்மை கொண்டு ஆறியிருக்கமாட்டோம்;
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்,Adichiyom thalaimisai nee aniyaai - அடிச்சியோமான எங்கள் தலைமீது உன் அணி மிகு தாமரைக்கையை வைத்தருள வேணும்;
அடி தட கண் இணை நீரும் நில்லா,Adi thada kann inai neerum nilla - கூர்மையாய்ப் பெருத்திருத்துள்ள கண்களின் நீரானது தகைவு பட்டு நிற்கிறதில்லை;
நடுவு,Naduvu - நீ போகிற காரியத்தின் நடுவே
மனமும் நில்லா,Manamum nilla - நெஞ்சும் ஒரு நிலையில் நிற்கிறதில்லை;
அது தன்னாலே,Adhu thannaale - ஆகையினாலே
எமக்கு,Emakku - கணப்பொழுதும் பிரிவாற்றகிட்லலாத எங்களுக்கு,
உன் கோலம் பாதம் அது பிடித்து,Un kolam paatham adhu pidithu - உனது அழகிய திருவடிகளைப் பிடித்து
நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசு மேய்க்கப் போவதானது
வெடிப்பு,Vedippu - பரிதாபகரம்;
உனக்கு அரிவையரும் பலர் அது நிற்க,Unakku arivaiyarum palar adhu nirka - உனக்கு அப்மதைகளாயிருக்கும் பெண்களோ பல்லாயிரவர், அது எப்படியாவது கிடக்கட்டும்;
அழல் மெழுகில் ளுக்குவேம்,Azhal mezhugil lukkuvaem - நெருப்பில் மெழுகு போலே உருகி வேகின்றது
எமது உயிர்,Emadhu uyir - எங்கள் ஆத்மாவானது
3695திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கண்ணா! உன்னைப் பிரிந்து படுகிற துக்கம் மாத்திரமேயன்று காண்; தேனுகன் பிலம்பன் காளியனென்எந் தீப்பப்பூடுகள் நிறைந்த விடங்களிலன்றோ நீ திரியப் போவது; அங்கே கம்ஸனேவின ஆஸுரப்ர’ருதிகள் வந்து கூடினால் என்னாகுமோவென்று அதைப் பற்றின கிலேகமும் அளவற்றது காண் என்கிறாள்.) 7
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க்கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ஆங்கே–10-3-7
மா மணிவண்ணா,Maa manivanna - நீலமணி நிறத்தனான கண்ணபிரானே!
நீ போய்,Nee poy - நீ சென்று
என் வெள் வளைமேகலை கழன்று வீழ,En vel valai megala kazhandru veezha - எனது கைவளைகளும் அரையில் மேகலைகளும் பொருந்தாமல் கழன்று விழும்படியாகவும்,
ஆ மகிழ்ந்து உகந்து,Aa magizhndhu ugandhu - பசுக்களிடத்திலேயே பரம ப்ரிதியை வைத்து
தூ மலர் கண் இணை முத்தம் சோர,Thoo malar kann inai mutham soora - செவ்வித்தாமரை போன்ற கண்களினின்று முத்துப் போன்ற நீர்த்தாரை பெருகவும்,
அவைமேய்க்கின்று,Avaimeykkindru - அவற்றை நீ மேய்க்கிற காலத்தில்
உன்னோடு அசுரர்கள் தலைப் பெய்யில்,Unnodu asurargal thalaip peyil - உன்னோடு (கம்ஸனேவினை பல) அசுரர்கள் (போர் செய்யக்) கூடினால்
துணை முலை பயந்து,Thunai mulai bayandhu - முலைகளிரணடும் விவர்ணமாகி
ஆங்கு யவன் கொல் (என்று),Aangu yavan kol (endru) - அங்கு என்னாகுமோ வென்று (அதிசங்கை பண்ணி)
தோள்கள் வாட,Tholgal vaada - தோள்கள் வாடும்படியாகவும்
எமது உயிர்,Emadhu uyir - என் ஆத்மாவானது
உன் செங்கமல வண்ணம் மெல் மலர் அடி நோவ,Un sengamala vannam mel malar adi nova - உனது பரமஸுகமாரமான பாதாரவிந்தங்கள் நோகும் படியாக
அழல் மெழுகில் ளுக்குவோம்,Azhal mezhugil lukkuvom - நெருப்பில் மெழுகு போலே உருகி வேவாநின்றது.
3696திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் “அசுரர்கள் தலைப்பெய்யில்’’ என்று அஸுர ப்ரஸ்தாவம் வந்ததே; அதுவே மேலும் அநுவர்த்திக்கிறது; இப்பாட்டுத் தொடங்கிப் பதிகம் முடியுமளவும் அஸுர பயமே விஞ்சிச் செல்லுகிறதாயிற்று.) 8
அசுரர்கள் தலைப்பெய்யில் எவன் கொல் ஆங்கு என்று
ஆழும் என்னார் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கலவியும் நலியும் என் கை கழியேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண்ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே–10-3-8
ஆங் அசுரர்கள் தலைப்பெய்யில் யவன் கொல் என்று,Aang asurargal thalaippeyyil yavan kol endru - நீ பசு மேய்க்கப் போகிற காட்டிலே அசுரர்கள் வந்து கூடினாலும் என்ன அபாயமாகுமோ வென்று
கசிகையும் வேட்கையும் கலவியும் உள் கலந்து நலியும்,Kasikaiyum vedkaiyum kalaviyum ul kalandhu naliyum - நெஞ்சிலுள்ள ஈடுபாடும் மேன்மேலுமுண்டாகின்ற குதூஹலமும் கலவியும் இவை ஒன்று சேர்ந்து நலியா நிற்கும்; (ஆதலால்)
என் ஆருயிர் ஆழும்,En aaruyir aazhum - அருமையான எனது உயிர் வருந்தா நின்றது; (ஆதலால்) என் கை கழியேல் என்னைப் பிரிந்து போகாதே;
ஆன் பின் போகேல்,Aan pin pogel - சி பசுக்களின் பின்னே போகாதே;
வசி செய்,Vasi sey - கண்டவர்களை வசப்படுத்த வல்ல
உஉன் தாமரை கண்ணும் வாயும் கைகளும்,Un thaamarai kannum vaayum kaigalum - செந்தாமரை போன்ற உனது கண்களையும் வாயையும் கைகளையும்
ஒசி செய் நுண் இடை உகக்கும் நல்லவரொடும்,Osi sey nun idai ugakkum nallavarodum - ஒசிந்த நுண்ணிடையையுடைய உனது காதலிமார்களுடனே
பீதகம் உடையும் காட்டி,Peedhagam udaiyum kaatti - திருப்பீதாம்பர வடிய்ழகையுங் காட்டி,
உழிதராய்,Uzhitharaai - திரிந்து கொண்டு இவ்விடத்திலேயே இரு.
3697திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (கீழ்ப்பாட்டில் * நீயுக்க்கு நல்லவரோடு முழிதராயே* என்று சொன்னதைக் கேட்ட கண்ணபிரான் “இப்படி நீங்கள் சொல்லுகிறது உண்மையான வார்த்தையாகுமோ? ஏதோ நான் போகாமைக்காகச் சொல்லுகிற வார்த்தையே யொழிய, உங்களருகே நான் வேறு சில மாதரோடே கலந்து பரிமாறினால் அதை நீங்கள் பொறுத்திருப்பர்களோ? கண்ணாலேயே தஹித்து விடமாட்டீர்களோ?’’ என்று சொல்ல, அதற்கு மறுமாற்ற முரைப்பது இப்பாட்டு; உன்னோடு நாங்கள் கலவி செய்து அதனாலடையுமுகப்பிற்காட்டிலும், நீ உன் உகப்புக்கு இலக்கானாரோடு கூடி நெஞ்சிடர் தீர, அதனால் நாங்களடையுமுகப்பே எங்கட்கு உயர்ந்தது என்கிறது இப்பாட்டில்.) 9
உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9
எம்பெருமான் உமக்கும் நல்லவரொடும் வழி தந்து,Emperumaan umakkum nallavarodum vazhi thandhu - எமது தலைவனே! நீ உகக்கும்படியான நன்மைமிக்க ஆய்ச்சிகளோடே திரிந்து
பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு,Pala asurargal vendu uruvam kondu - பலவசுரர்கள் (மரூபிகளாகையாலே) வேண்டின வடிவுகளைக் கொண்டு
உன்தன் திருவுளம் இடர் கெடும் தோறும்,Unthan thiruvulam idar kedum thorum - உன் திருவுள்ளம் ஆனந்திக்குமளவில்
மிக நின்று உழிதருவர்,Miga nindru uzhitharuvar - மிகவும் திரிவர்கள்
நாங்கள் வியக்க இன்புறும்,Naangal viyakka inburum - அகப்பட்டால்
எம் பெண்மை ஆற்றோம்,Em penmai aatrom - பிறரைக் காதலிக்குமளவில் பொறாமைப்படும்படியான பெண்மையை யுடையோமலலோம்; (ஆகவே)
அவரொடும் நின்னொடு ஆங்கே,Avarodum ninnodu aangey - அவர்களும் நீயுமாகப் பிணக்கிடவே
அவத்தங்கள் விளையும்,Avathangal vilaiyum - ஏதேனும் பொல்லாங்கு விளையும்,
பசு மேய்க்கப் போகேல் ;,Pasu meykka pogel; - பசு மேய்க்கப் போகாதே கொள்
என் சொல் கொள்,En sol kol - என் சொல்லைப் பேணியருளாய்,
கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால்
அந்தோ!,Antho! - பிரிவாற்றகில்லேன்.
3698திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (“அவத்தங்கள் விளையும்’’ என்றதைக் கேட்ட கண்ணபிரான் * அதிஸ்நேஹ, பாபசங்கீ* என்கிறபடியே உங்களுடைய அளவுகடந்த அன்பினால் இப்படி அதிசங்கை யுண்டாகின்றதே யன்றி, உண்மையில் எனக்கு யாதோரவத்யமும் விளையாது; வணாக அஸ்தாநே அங்ஞச வேண்டர் வாளாவிருங்கள்’’ என்று சொல்ல, அப்படியன்று காண்; உள்ளபடி சொல்லுகிறோம் கேளாய் என்கிறார்கள்.) 10
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ
அசுரர்கள் வன்கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கிராமனையும்
உவத்திலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற வென்னுடை யாவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே–10-3-10
செம் கனி வாய் எங்கள் ஆயர் தேவே,Sem kani vaai engal aayar deve - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடைய எங்களாயர் குலக்கொழுந்தே!
உடன் திரிகிலையும் என்றெனறு,Udan thirikilaiyum endrenru - அவனோடுங் கூடித் திரியமாட்டாய் நீ யென்று இதைப் பலகாலும் நினைத்து
வகையர் அசுரர்கள்,Vagayar asurargal - வலிமை மிக்க அசுரர்கள்
கஞ்சன் ஏவ,Kanjan eva - கம்ஸனுடைய ஏவுதலால்
என்னுடை ஆவி ஊடுறவேம்,Ennudai aavi ooduraveem - என்னெஞ்சு உள்உற வேவா நின்றது;
தவத்தவர் மறுக நின்று –உழிதருவர்,Tavathavar maruga nindru –uzhitharuvar - முனிவர்கள் குடல் குழம்பும்படி திரிவர்கள்
அந்தோ என் சொல் கொள்,Antho en sol kol - நீயோ! என் சொல்லைக் கொள்ளாய்;
உனக்கு தனிமையும் பெரிது,Unakku thanimaiyum peridhu - நீயோ மிகவும் துணையற்றிரா நின்றாய்;
திவத்திலும்,Thivathilum - திருநாட்டிலிருப்பதிற் காட்டிலும்
இராமனையும் உவர்த்தலை,Iraamanaiyum uvarthalai - ( உனக்குத் துணைவனான) பலராமனையும் நீ உகவாதவனாய்
பசு நிரை மேய்ப்பு உவத்தி,Pasu nirai meippu uvathi - பகூட்டங்களை மேய்ப்பதையே நீ உகக்கின்றாயே.
3699திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (ஆழ்வார் தாமருளிச் செய்த பதிகங்களுள் எம்பெருமானைப் பசுநிரை மேய்க்கப் போக வேண்டாவென்று நிஷேதித்த பாசுரமான இப்பதிகமும் மற்றைப் பதிகங்ளோடொக்க ஒரு பதிகமே! என்று தாமே விஸ்மிதராகிறார்.) 11
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத் திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வண்தென் குருகூர்
வண் சடகோபன் சொல்லாயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியர் ஆராய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன
இவையும் பத்து அவற்றின் சார்வே–10-3-11
செம் கனி வாய்,Sem kani vaai - செங்கனி போன்ற அதரத்தையுடைய
மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை,Mangaiyar aaychiyar aayndha maalai - ஆயர் மங்கைகள் அநுஸந்தித்த சொல் மாலையாய்
எங்கள் ஆயர் தேவு,Engal aayar devu - எங்களாயர் கொழுந்தாகிய
அவனோடும் பிரிவதற்கு இரங்கி,Avanodum pirivadharku irangi - அவனை விட்டுப் பிரிவதற்கு வருந்தி
அத்திருவடி,Aththiruvadi - அந்த ஸ்வாமியினுடைய
அங்கு தையல்,Angu thaiyal - அததிருவாய்ப் பாடியிலுள்ள ஒரு ஆய்ச்சி
திரு அடி மேல்,Thiru adi mel - திருவடிகளிலே,
அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான் உரைத்தன,Avan pasu nirai meippu ozhippaan uraiththana - அவன் பசு மேய்க்கப் போவதைத் தவிரிப்பதற்காகச் சொன்ன
பொருநல் சங்கணி துறைவன் வண் தென் குரு கூர் வண் சடகோபன் சொல் ஆயிரத்துள்,Porunal sangani thuraivan van then kurukoor van sadagopan sol aayirathul - தமிரபர்ணியில் திருச்சங்கணி துறையை நிரூபகமாகவுடையரான திருக்குருகூராழ்வார் பணித்த ஆயிரம் பாடலினுள்ளும்
இவையும் பத்து,Ivaiyum paththu - இப்பதிகமும்
அவற்றின் சார்வே,Avatrin saarve - மற்றைப் பதிகங்களுக்குச் சொன்ன பலனைத் தரும்.
3700திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (உபய விபூதி நாதனாயிருந்துவைத்துப் பத்துடையடியவர்க் கெளிப்பனான எம்பெருமானுடைய திருவடிகள் பக்தியோக ஸுலபமென்கிறார்.) 1
சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1
கார்மேகம் வண்ணன்,Kaarmegam vannnan - காளமேக நிறத்தனாய்
கமலம் நயனத்தன்,Kamalam nayanathan - செந்தாமரைக் கண்ணாய்
தமோதரன்,Damodharan - தம்பாலே கட்டுண்டு அடியவர்க்கெளியனானவனுடைய
நீர்வானம் மண் எர் கால் ஆய் நின்ற,Neervaanam man er kaal aay nindra - பஞ்பூதஸவரூபியாய்
நேமியான்,Nemiyann - திருமொழியை யுடையனாய்
தாள்கள்,Thaalgal - திருவடிகளானவை
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையன்,Per vaanavargal pithattrum perumaiyan - பெரிய வானவர்களான நத்திய ஸூதிகள் வாய்வெருவும்படியான பெருமையை யுடையனாய் ( இப்படி உபய விபூ நாதனாய் வைத்து)
தவ நெறிக்கு,Thava nerikku - பக்தி மார்க்கத்திற்கு.
சார்வே,Saarve - எளியனவாம்
3701திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் தாள்கள் தவநெறிக்குச் சார்வே * என்று பொதுப்படையாக அருளிச் செய்தார்; அது தம்மளவில் பலித்தபடியை யருளிச்செய்கிறார் இப்பாட்டுத் தொடங்கி.) 2
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணை யாதார்க்கு என்றும்
திரு மெய்யுறைகின்ற செங்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே–10-4-2
வனத்து இமையோர்க்கும் பெருமையன்,Vanathu imaiyorkkum perumaiyan - மேலுலகங்களிலுள்ள பிரமன் முதலானாரினும் பெருமை பெற்றவனாய்
என்றும் திருமெய் உறைகின்ற,Endrum thirumey uraiginra - எப்போதும் பிராட்டியானவள் தன் திருமேனியிலேயே வாழப் பெற்ற புண்டழீகாக்ஷன்
ஆகத்து அணையாதார்க்கு,Aagathu anaiyaadhaarkku - அவன் திருவுள்ளத்திலே கொள்ளப் பெறாதவர்ககு
செம் கண் மால் இங்கு இருமைவினை கடிந்து,Sem kan maal ingu irumaivinai kadindhu - இவ்விபதியிலே புண்யபாப ரூப உபய கருமளையும் போக்கி
காண்டற்கு அருமையன்,Kaandarku arumaiyan - காண முடியாதிருப்பவனாய்
நாளும் என்னை ஆள்கின்றான்,Naalum ennai aalkinraan - நாடோறும் என்னை அடிமைகொள்ளா நின்றான்
3702திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (எம்பெருமானுடைய திருவடிகளைச் சென்னிக்கணியாகக் கொண்டு அநுபவிக்கப் பெறேன்; இன ஸம்ஸாரம் மறுவலிடாது; என்னகுறை யுண்டென்கிறார்.) 3
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3
ஆழியான் ஆழ்கின்றான்,Aazhiyaan aazhinraan - கையுந் திருவாழியுமான பெருமாள் காத்தருளா நின்றான்;
வாள் கெண்டை ஒண் கண்,Vaal kendai on kan - ஒளியையுடைய கெண்டை போன்றழகிய கணகளையுடையளாய்
பிறவி துயர் கடிந்தோம் (அதனாலே),Piravi thuyar kadindom (adhanaale) - பிறவித் துன்பங்கள் தொலையப் பெற்றோம்;
மடம் பின்னை தன் கேள்வன்,Madam pinnai than kelvan - குணவதியான நப்பின்னைக்கு நாயகனானவனுடைய
மீள்கின்றது இல்லை,Meelginrathu illai - இன ஸம்ஸார ஸம்பந்தம் மறுவலிடாது;
தாள் கண்டு கொண்டு,Thaal kandu kondu - திருவடிகளை ஸாக்ஷாத்கர்த்து
ஆரால் குறை உடையம்,Araal kurai udaiyam - இன ஆரைக் கொண்டு காரிய முடையோம்.
என் தலை மேல் பினைந்தேன்,En thalai mel pinaindean - ( அத் திருவடிகளை) என் தலை மீது அணியப் பெற்றேன்.
3703திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (அவன் திருவடிகளை நான் தலைமேல் பிணைந்தபடி கிடக்கட்டும்; அவன்றான் என் ஹ்ருதயத்திஎட்ளளே வந்து புகுகைக்கு க்ருஷி பண்ணின படியையும் அந்த’க்ருஷி பலித்தவாறே அவன் க்ருத’ருத்யனாயிருக்கிறபடியையும் கண்டு நான் களிக்கின்றே னென்கிறார்.) 4
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே–10-4-4
சரணங்கள் தலை மேல் புனைந்தேன்,Saranangal thalai mel punaindean - அவன் திருவடிகளை என் தலை மேலணிந்து கொண்டேன்;
என் மனத்துள் இருந்தானை,En manathul irundhaanai - என்னெஞ்சினுள்ளே புகுந்திருப்பவனுமான எம்பெருமானை
ஆலின் இலை மேல் துயின்றான்,Aalin ilai mel thuyindraan - ஆலிலையில் கண் வளர்ந்தவனும்,
நிலை பேர்க்கல் ஆகாமை,Nilai perkall aakamaai - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமையை
இமையோர் வணங்க மலை மேல் தான் நின்று,Imaiiyor vananga malai mel thaan nindru - நித்யஸூரிகள் வணங்கும்படி திருமலையிலெழுந்தருளி நின்று (ஸமயம் பார்த்து)
நிச்சித்திருந்தேன,Nischithirundhean - திணணமாக வெண்ணியிரா நின்றேன்.
3704திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இப்பாட்டில் “கள்வம் பெரிதுடையன்” என்பது உயிர்நிலையான வாசகமாயிருக்கும். அப்பெருமான் என்திறத்தில் செய்தருள நினைத்திருக்குமவை ஒரு வராலறியப்போமோ? என்கிறார்.) 5
நிச்சித்து இருந்தேன் என் நெஞ்சம் கழியாமை
கைச் சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையவன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5
என நெஞ்சம் கழியாமை,Ena nenjam kazhiyaamai - எனது நெஞ்சைவிட்டு அகலாதபடியான தன்மையை
பிறர்க்கு மெச்சப்படான்,Pirarkku mechappadaan - பிறர்க்குத் தனது குணங்களைக் காட்டிக் கொடாதவனாய்
நிச்சித்திருந்தேன்,Nischithirundhean - நிச்சயித்திருந்தேன்
கை சக்கரத்து அண்ணல,Kai sakkarathu annala - திருக்கையிலே திருவாழியைக் கொண்ட ஸ்வாமி
மெய் போலும் பொய் வல்லன்,Mey polum poy vallan - மெய் செய்வாரைப்போலே பொய் செய்ய வல்வலனாய்
கள்வம் பெரிது உடையன்,Kalvam peridhu udaiyan - நாமறியாதன பலவும் பாரியா நின்றான்
நாகத்து அணை யான் நமக்கு நச்சப்படும்,Naagathu anai yaan namakku nachchappadum - சேஷசாயியானவன் நமக்கு ப்ராப்யனாவன்.
3705திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இன்று வந்து அடிமைபுக்காரையும் “அல்வழக்கொன்று மில்லாவணி கோட்டியர் கோனபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானுமுனக்குப் பழவடியேன்” என்று சொல்லும்படி நித்யாச்ர்தரைப் போலே விஷயீகாரிக்குமவன் திருவடிகளிலே விழப்பெற்றே னென்கிறார். 6
நாகத்து அணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானைப்
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே–10-4-6
நாகம் அணையானை,Naagam anaiyaanai - சேஷசயன்னாய்
மாகத்து இளமதியம் சேரும் சடையானை,Maagathu ilamadhiyam serum sadaiyaanai - ஆகாசத்திலுள்ள இளம் பிறை தங்குகின்ற சடையையுடைய சிவனை
ஞானத்தால் ஆகத்து அணைப்பார்க்கு,Gnaanathaal aagathu anaipparkku - பக்தியாக வடிவெடுத்த ஞானத்தினால் நெஞ்சிலே வைத்து அநுபவிக்கும் முமுக்ஷீக்களுக்கு
பாகத்து வைத்தான் தன்,Paagathu vaiththaan than - தன் திருமேனியிலொரு பக்கத்திலே வைத்தவனான பகவானுடைய
நாள்தோறும்,Naalthorum - எப்போதும்
அருள் செய்யும்,Arul seyyum - அருள்செய்கின்ற ஸ்வாமியாய்
பாதம் பணிந்தேன்,Paadham panindean - திருவடிகளை வணங்கப் பெற்றேன்
3706திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (நம் விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுமவனான அப்பெருமானை இடைவீடின்றியநுவிக்குமாறு திருவுள்ளத்தை நோக்கி யருளிச் செய்கிறார்.) 7
பணி நெஞ்சே நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மது சூதன் என் அம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே–10-4-7
மணிநின்ற சோதி,Maninindra sothi - நீலரத்னத்தை யொத்த தேஜஸ்ஸை யுடையனாய்
பிறவி கெடுத்து ஆளும்,Piravi kedutthu aalum - நம்பிறவித் துன்பத்தைப் போக்கி அடிமை கொண்டருள்பவன்
மதுசூதன்,Madhusoodhan - விரோதி நிரஸந சீலனாய்
என் அம்மான்,En ammaan - அஸ்மத் ஸ்வாமியாய்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியான்,Ani nindra sempon adal aazhiyaan - தானே ஆபரணமாகப் போரும்படியாய்ச் சிவந்த பொன்போலே ஸ்ப்ருஹணீயனாய் மிடுக்கையுடையனான திருவாழியாழ்வானைக் கையிலேந்தினவனான பெருமான்
பிணி ஒன்றும் சாரா,Pini ondrum saaraa - ஸம்ஸாரக்லேசமொன்றும் தட்டாது
பரமபரம்பரணை நெஞ்சே நாளும் பணி,Paramaparamparanai nenje naalum pani - (ஆன பின்பு) அப்பரமபுருஷனை நெஞ்சமே! நித்யமும் வணங்கி யநுபவி
3707திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.) 8
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழியான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே மறவாது வாழ் கண்டாய்–10-4-8
ஆழியான்,Aazhiyaan - சக்ரபாணியாய்
ஆழி அமரர்க்கும் அப்பாலான்,Aazi amararkkum appaalaan - கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய்
பாழிஅம் தோளால் வரை எடுத்தான்,Paazhiam tholaal varai eduththaan - (அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய
ஊழியான்,Oozhiyaan - ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய்
பாதங்கள்,Paadhangal - திருவடிகளை
ஊழிபடைத்தான்,Oozhipadaiththaan - காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய்
என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய்,En nenje mara vaadhu vaazh kandaai - என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக.
நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய்,Niraimeiththaan pasukkalai rashiththavanaai - வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக
3708திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (“ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாநஸமாதிபி:, நாராணாம் ஷிணபாபாநாம் க்ருஷ்ணே பக்தி: ப்ரஜாயதே” என்றும், “ஒன்றியொன்ற நற்றவஞ்செய்து ஊழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி யுள்ளந் தூயராய், சென்று சென்று தேவதேவர் ளும்பரும்பரும்பராய், அன்றி யெங்கள் செங்கண் மாலை யாவர்காண வல்லரே” என்றும் சொல்லுகிறபடியே நெடுங்காலம் பாரிச்ரமப்பட்டுப் பெறவேண்டுமவனை அவருடைய நிர்ஹேதுக க்ருபையாலே காணப்பெற்றே னென்கிறார்.) 9
கண்டேன் கமல மலர்ப்பாதம் காண்டலுமே
விண்டே ஒழிந்த வினை யாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே–10-4-9
தொண்டே செய்து,Thonde seydhu - பரபக்தி முதலியவற்றைப் பண்ணி
கமலம்மலர்பாதம் கண்டேன்,Kamalammalarpaadham kandean - (அவனன்றனது) பாதாரவிந் தங்களைக்காணப்பெற்றேன்
என்று தொழுது வழியெழுக,Endru thozhudhu vazhiyezhuga - நித்ய கைங்காரியத்தைச் செய்து அதுவே யாத்திரையாய்ச் சொல்லும்படி
காண்டலுமே,Kaandalumae - கண்டபோதே
பண்டே,Pande - ஏற்கனவே (கீதாசாரியனானவப் போதே)
வினை ஆயின எல்லாம்,Vinai aayina ellaam - விரோதியேன்று பேர் பெற்றவை யெல்லாம்
பரமன் பணித்த பணி வகையே,Paraman panitha pani vagaiyae - ஸர்வேச்வரன் (ஸர்வஸாதாரணமாக) அருளிச் செய்த பாசுலரத்தின்படியே
விண்டே ஒழிந்த,Vindae ozhindhu - வாஸனையோடே விட்டுப் போயின
3709திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (ப்ரயோஜநாந்தரரர்களோ, உபாயாந்தர நிஷ்டர்களோ, ப்ரபந்தர்களோ யாராயினும் யாவாக்கும் எம்பெருமானே உபாயமென்று தலைக்கட்டுகிறார்.) 10
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கட்கு ஓர் பற்றே–10-4-10
வகையால் மனம் ஒன்றி,Vagaiyaal manam onri - சாஸ்திரங்களிற் சொல்லுகிறபடியே நெஞ்சையொருங்கப் பிடித்து
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்சநின்ற,Thisai thoaru amarargal sendru irainjanindra - நின்ற நின்ற திக்குக்கள் தோறும் பிரமன் முதலிய தேவர்கள் வந்து பணியும் படியான,
மாதவனை,Maadhavanai - திருமாலான தன்னை
நாளும்,Naalum - காலந்தோறும்
தகையான்,Thagaiyaan - ஸ்வபாவத்தையுடையனான எம்பெருமானுடைய
புது புகையால் விளக்கால் மலரால் நீரால்,Puthu pugaiyaal vilakkaal malaraal neeraal - விலக்ஷணமான தூப தீப புஷ்ப தீர்த்தங்களாலே
சரணம்தமர்கட்கு ஓர் பற்று,Saranamthamar kadku or patru - திருவடிகள் பக்தர்களுக்குச் சிறந்த புகலிடம்
3710திருவாய்மொழி || (10-4—சார்வேதவநெறி) (ஆழ்வார் தாம் பெறக் கருதிய பக்தி பலித்தமையை அருளிச்செய்தல்) (இத் திருவாய்மொழியைக் கற்றார்க்கு எம்பெருமான் திருவடிகள் ஸுலபமாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
பற்று என்று பற்றி பரம பரம்பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழலிணையே–10-4-11
பரம பரம்பரனை,Parama paramparanai - பராத்பரனையும்
தொடை அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Thodai anthaadhi or aayirathul - அந்தாதித் தொடையான ஆயிரத்தினுள்
மல் திண் தோள்,Mal thin thol - மிடுக்குப் பொருந்திய திருத்தோள்களை யுடையனாயிமிருக்கிற
இப் பத்தும் கற்றார்க்கு,Ip paththum katraarkku - இப்பதிகத்தைப் பயின்றவர்களுக்கு
மாலை,Maalai - ஸர்வேச்வரனை
பற்று என்று பற்றி,Patru endru patri - தமக்குப் புகலாக வுறுதி யிட்டு
கண்ணன் கழல் இணை ஓர் பற்று,Kannan kazhal inai or patru - கண்ணனது உபயபாதங்கள்
வழுதி வளநாடன் சொல்,Vazhudhi valanaadan sol - ஆழ்வார் அருளிச்செய்த
ஆகும்,Aagum - ஒப்பற்ற ப்ராப்யமாகும்.
3711திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (முதலிலே *வீடுமின் முற்றத்தில் “எண் பெருக்கந்நலத்தொண் பொருளீறில வண்புகழ் நாரணன்” என்று பஜனத்திற்கு ஆலம்பனமாகச் சொல்லப்பட்டதான மந்த்ரத்தை *எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே* என்று காட்டுகிறார்.) 1
கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1
கண்ணன் கழல் இணை,Kannan kazhal inai - அடியவர்க் கெளியனான பெருமானது திருவடியிணைகளை
எண்ணும் திருநாமம்,Ennum thirunaamam - (நீங்கள்) சிந்திக்க வேண்டிய திருநாமம்
நண்ணும் மனம் உடையீர்,Nannum manam udaiyeer - அடைய வேணுமென்கிற நெஞ்சையுடையவர்களே!
நாரணம் ஏ திண்ணம்,Naaranam e thinnam - நாராயணமே; மற்றொன்றில்லை யென்பது திடம்.
3712திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (“எண்பெருக்கி லெண்ணுந் திருநாமத்தின் சப்தார்த்தங்களைச் சுருக்கி” என்ற ஆசார்ய ஹ்ருதய சூர்ணையின்படி கீழ்ப்பாட்டில் நாரணமென்று சம்பம் சுருக்கப்பட்டது. இப்பாட்டிலும் மேற்பாட்டிலுமாக அர்த்தம் சுருக்கப்படுகிறது.) 2
நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2
நாரணன் எம் மான்,Naaranan em maan - நாராயணனாய் எமக்கு ஸ்வாமியானவன் (அன்றியும்)
பார் அணங்கு ஆளன்,Paar anangu aalan - பூமிப் பிராட்டிக்கு நாயகன்
வாரணம் தொலைத்த,Vaaranam tholaitha - கம்ஸனது மதயானையை முடித்தருளின
காரணன் தானே,Kaaranan thaane - ஜகத்காரணபூதனும் அவனே
3713திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண சப்தார்த்தமாகக் கீழப்பாட்டில் ப்ரஸ்துதமான ரஷகத்வம் விவாரிக்கப்படுகிறது இதில்.) 3
தானே உலகு எல்லாம் தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து தானே ஆள்வானே–10-5-3
தானே,Thaane - நாராயணனை தானே
படைத்து இடந்து,Padaiththu idandhu - ஸ்ருஷ்டித்து (பிரளயத்திலே) இடந்தெடுத்து
உலகு எல்லாம்,Ulagu ellaam - ஸகல ஜகத்துக்கும் சரீரியா யுள்ளவன்;
தானே உண்டு உமிழ்ந்து,Thaane undu umizhndhu - ஒருவருடைய அபேஷையு மில்லாதபடி தானே (ஸமயங்களில்) உண்பதும் உமிழ்வதுஞ் செய்து
தானே,Thaane - அப்பெருமான் தானே (வேறொரு துணை யின்றியே)
தானே ஆள்வான்,Thaane aalvaan - தானே நிர்வஹிக்குமவன்
3714திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (நாராயண மந்த்ரத்தில் சதுர்த்தியின் அர்த்தத்தை யநுஸந்திக்கு மாசாரியர்கள் “அஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலாஸு அவஸ்தாஸு ஆவிஸ்ஸ்யர் மம ஸஹஜகைங்கரிய விதய” (அஷ்டச்லோக-3.) என்று கைங்கரிய ப்ரார்த்தனையைப் பொருளாகக்காட்டுகையாலே, இங்கு ஸம்ஸாரிகளை நோக்கிக் கைங்காரியத்தை வித்தருளுகிறார். ஆள்வான் என்று, கீழே சொன்ன ரஷகத்வத்தை அநுபாஷித்தபடி.) 4
ஆள்வான் ஆழி நீர்க் கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு நாள்வாய் நாடீரே–10-5-4
ஆழிநீர்,Aazhineer - காரணபூதமான ஏகாரிண வத்தலே
ஆள்வான்,Aalvaan - ஆளுமவனான அப்பெருமானுடைய
கோள் வாய் அரவு அணையான,Kol vaai aravu anaiyaan - மிடுக்குப் பொருந்திய வாயை யுடையவனான ஆதிசேஷனைப் படுக்கை யாகவுடையனாய்க் கொண்டு தாள்வாய்
மலர் இட்டு,Malar ittu - புஷ்பங்களை ஸமரிப்பித்து நாள் வாய்
நாடீர்,Naadeer - ஆசரயியுங்கோள் திருவடிகளிலே நாடாறும்.
3715திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (ஸ்வரூபாநுரூபமான காரியத்தைச் செய்யவே ஸ்வரூபாநுரூபமான புருஷார்த்தத்தைப் பெறலாமென்கிறார்தில்.) 5
நாடீர் நாள் தோறும் வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம் வீடே பெறலாமே–10-5-5
நாள்தோறும்,Naalthorum - தினந்தோறும்
அவன் நாமம்,Avan naamam - அப்பெருமானது திருநாமங்களை
வாடா மலர்கொண்டு பாடீர் பாடுங்கள் (இங்ஙனே செய்தக்கால்),Vaadaa malarkondu paadeer paadungal (ingnae seidhakkaal) - செவ்வி மாறாத பூக்களைக் கொண்டு
நாடீர் பணியுங்கள்; வீடே பெறலாம்,Naadeer paniyungal; veede peralaam - மோஷமே பெறலாகும்
3716திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (கீழ்ப்பாட்டில் நாடீரென்றதற்கு இடம் காட்டுகிறாரிப்பாட்டில்.) 6
மேயான் வேங்கடம் காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட வாயான் மாதவனே–10-5-6
காயா மலர்வண்ணன்,Kaayaa malarvannnan - காயாம் பூப்போன்ற திருமேனி நிறத்தையுடையனாய்
திருமால்,Thirumaal - மாதவன்
பேயார் முலை உண்ட வாயன் வேங்கடம் மேயான்,Peyaar mulai unda vaayan vengadam meyaan - பூதனையின் முலையைச் சுவைத்துண்டு அவளை முடித்தவனான திருவேங்கட மலையிலுள்ளான்
3717திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (வாடாமலர்கொண்டு நாடோறும் நாடமுடியாமலும், வேங்கடம்மே யானை அடிபணிய முடியாமலுமிருப்பார்க்கும் ஒருவழியருளிச் செய்கிறாரிப்பாட்டில்.) 7
மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7
மாதவன் என்றென்று ஓத வல்லீரேல்,Maadhavan endrenru ootha vallireel - த்வயமென்கிற மந்த்ரரத்னத்தை அநுஸந்திக்க வல்லீர்களாகில்
தீதொன்று மடையா,Theedonru madayaa - ஏதம் சாராவே மாதவன் என்று என்று ஓத வல்லீர் ஏல்
தீது ஒன்றும் அடையா,Theethu ondrum adayaa - அதீத பாபங்களில் ஒன்றும் கிட்டாது
ஏதம் சாரா,Aedham saaraa - மேலுள்ள பாவங்களும் வந்து கூடாது
3718திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) ( “நாராயணத் திருநாமத்தையோ ஸ்ரீமத் பதத்தையோ அநுஸந்திக்க நாங்கள் அதிகாரிகளோ? மிகமிக நீசரான எங்களுக்கு அத்தனையதிகாரமுண்டோ?” என்று சங்கிப்பார்க்குச் சொல்லுகிறது இப்பாட்டு அதிகாரி நியதியில்லை; ஆரேனுமாகத் திருநாமத்தைச் சொல்லலாம். அப்படிச்சொல்லுவார் நித்ய ஸூரிகளோ டொப்பார்கள் என்கிறார்.) 8
சாரா ஏதங்கள் நீரார் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார் ஆரார் அமரரே–10-5-8
ஏதங்கள் சாரா,Aedhangal saaraa - ஒரு பொல்லாங்கும் வந்து கிட்டாது;
பேர் ஆர் ஓதுவார்,Per aar othuvar - திருநாமங்களை ஓதுமவர்கள் யாவ ரோ
நீர் ஆர் முகில் வண்ணன்,Neer aar mukil vannnan - நீர் நிரம்பிய மேகம் போன்றவனான எம்பெருமானுடையர்
ஆர் ஆ,Aar aa - அவர்கள் எது பிறப்பு ஏதியல்வாக நின்றவர்களாயினும்
அமரர்ஏ,Amarar - நித்ய ஸூரிகளோ டொப்பார்கள்
3719திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பாட்டில் “அமரத் தொழுவார்கட்கு” என்பது உயிரான சொல்; அமரத் தொழுகை யாவதென்னென்னில் ப்ரயோஜநாந்தர மொன்றையுங் கணிசியாமே தொழுகை.) 9
அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு அமரா வினைகளே–10-5-9
அமரர்க்கு,Amararkku - அரி யானை பிரமன் முதலானார்க்கும் அரியனாய்
அமர தொழுவார் கட்கு,Amara thozhuvaar kadku - பலனென்றும் விரும்பாதே தொழுமவர்களுக்கு
தமர்கட்கு எளியானை,Thamar kadku ezhiyanaai - அடியவர்க்கு எளியனாயுள்ள பெருமானை
வினைகள் அமரா,Vinaihal amaraa - விரோதிகள் வந்து கிட்டாது.
3720திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகத்தில், முதற்பாட்டில் திருமந்த்ரப்ரஸ்தாவம் செய்தருளினார் ; ஏழாம்பாட்டில் த்வயப்ரஸ்தாவம் செய்தருளினார். அதற்குமேலெல்லாம் பெரும்பாலும் சரமச்லோக ப்ரஸ்தாவமேயாயிருக்கிறது. *ஸர்வபாபேப்யோ மோஷயிஷ்யாமி* என்பதுதானே சரமச்லோகத்தின் ஸாரம். அது இப்பாட்டில் “வினை வல்லிருளென்னும் முனைகள் வெருவிப்போம்” என்று தலைக்கட்டப்படுகிறது.) 10
வினை வல் இருள் என்னும் முனைகள் வெருவிப் போம்
சுனை நல் மலர் இட்டு நினைமின் நெடியானே–10-5-10
வினை,Vinai - கருமங்களென்ன
வெருவிப்போம்,Veruvippom - தாமே அஞ்சி அகன்றொழியும்
வல் இருள்,Val irul - கொடிய அஞ்ஞானமென்ன
சுனை நம் மலர்இட்டு,Sunai nam malarittu - சுனைகளிலுண்டான நல்ல பூக்களையிட்டு
என்னும் முனைகள்,Ennum munaigal - ஆகவிப்படி சொல்லப்படுகிற இத்திரங்கள்
நெடியான் நினைமின்,Nedhiyaan ninaimin - ஸர்வேச்வரனைச் சிந்தியுங்கள்
3721திருவாய்மொழி || (10-5–கண்ணன்கழலி) (பக்தி பண்ணும் வகைகளைத் தொகுத்துக் கூறல்) (இப்பதிகம் வல்லார், தம்மைப்போலே நெடியானருள் சூடும்படியாவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
நெடியான் அருள் சூடும் படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து அடியார்க்கு அருள் பேறே–10-5-11
நெடியன் அருள்,Nedhiyan arul - ஸர்வேச்வரனுடைய க்ருபையை,
ஆயிரத்து இருபத்து,Aayirathu irupathu - ஆயிரத்தினுள் இப்பதிகமானது
சூடும் படியான்,Soodum padhiyaan - அநுபவிக்கு மியல்வினரான
சடகோபன்,Sadagopan - ஆழ்வார்
நொடி,Nodi - அருளிச் செய்ததான
அடியார்க்கு,Adiyaarkku - பக்தர்களுக்கு
அருள் பேறு,Arul paeru - ப்ரஸாத லாபமாயிருக்கும்
3722திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார்.) 1
அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1
அருள் பெறுவார் அடியார் தம்,Arul peruvaar adiyaar tham - எம்பெருமானருளைப் பெறுவதையே நிரூபமாகவுடைய பாகவதர்களுக்கு
நமது விதி வகையே,Namadu vidhi vagaiyae - நாம் வித்ததபடியே யாம்; (ஆன பின்பு)
இனி,Ini - இனியொருநாளும்
அடியனேற்கு,Adiyanekku - அடிமைப் பட்டிருக்கு மெனக்கு
இருள் தருமா ஞாலத்துள் பிறவி,Irul tharumaa nyaalaththul piravi - இவ்விருள்தருமா ஞாலத்திற் பிறப்பை யான் வேண்டேன் நான் இச்சிக்கமாட்டேன்
ஆழியான்,Aazhiyaan - திருவாழியை யுடையனான எம்பெருமான்
மட நெஞ்சே,Mada nenjae - சபலமான மனமே!
அருள் தருவான் அமைகின்றான்,Arul tharuvaan amaikindraan - க்ருபை பண்ணுவானாகப் பொருந்தியிரா நின்றான்;
நீ மருள் ஒழி,Nee marul ozhi - இங்கேயிருந்து அநுபவிக்க வேணுமென்கிற வொரு மருளைத் தவிரப்பார்
அது,Adhu - அப்படி க்ருபை பண்ணுவது
வாட்டாற்றான் அடி வணங்கு,Vaattattraan adi vanangu - திருவாட்டாற்றொம் பெருமானது திருவடிகளை வணங்கு.
3723திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே ஸம்வாதமாயிருக்கிறது.) 2
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2
மாஞாலம்பிறப்பு அறுப்பான்,Maanjaalampirappu aruppaan - இருள் தருமா ஞாலத்தில் ஜன்ம ஸம்பந்தத்தைத் தொலைப்பதற்காக
பழ வினைகள் பற்று அறுத்து,Pazha vinaihal patru aruththu - அவித்யை கருமம் முதலான அநாதியான தொல்லைகளை யறுத்து
வாட்டாற்றான் அடி வணங்கி,Vaattattraan adi vanangi - திருவாட்டாற் றெம்பெருமானுடைய திருவடிகளை வணங்கி
நாட்டாரோடு இயல்வுஒழிந்து,Naattaarodu iyalvuzhinthu - உலகத்தாரோடு ஸஹவாஸத்தையும் தவிர்த்து
நாரணனை,Naaranana - ஸ்ரீமந் நாராயணனை
நண்ணினம்,Nanninam - கிட்டப்பெற்றோம்
கேசவன் எம்பெருமானை,Kesavan emperumaanai - கேசவனான பெருமானை
பாட்டு ஆயபலபாடி,Paatu aayapadapaadi - பாட்டானவை பலவும்பாடி
மடநெஞ்சே கேட்டாயே,Mada nenjae kaettaiye - நெஞ்சே! பெற்ற பேற்றின் கனத்தைக் கண்டாயே.
3724திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இப்பாட்டும் நெஞ்சோடே கொண்டாடிச் சொல்லுகிறது. நம்முடைய பேற்றுக்கு அவன் விரையும்படியாயிற்றே! இப்படியாகுமென்று நாம் கனவிலாவது எண்ணினதுண்டோ? நாமெண்ணினதொன்று, நிகழ்ந்தது மற்றொன்றாயிற்றே! இதுவென்! என்று வியக்கிறார்.) 3
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3
என் நெஞ்சே,En nenjae - என்னுடைய அனுபவத்திற்கு வாய்த்தநெஞ்சே!
வளம் மிக்க வாட்டாற்றான் வந்து,Valam mikka vaattattraan vandhu - திருக்கல்யாண குணம் ருத்தி பொருந்திய திருவாட்டாற்றெம்பெருமான் தானே வந்து
பல நாமங்கள் சொல்லி,Pala naamangal solli - பல திருநாமங்களையுஞ் சொல்லி
இன்று விதிவகையே விண் உலகம் தருவான் ஆய்,Inru vidhi vagaiyae vin ulagam tharuvaan aay - இப்போது நமது நியமனப் படியே திருநாடு தருபவனாகி
நாராயணனை நண்ணினம்,Naarayananai nanninam - பரமபந்துவான ஸ்ரீமத் நாராயணனைக் கிட்டப்பெற்றோம்
விரைகின்றான்,Virainkinraan - துர்தனாயிரா நின்றான்
இக்கருமங்கள்,Ikkaarumangal - இக்காரியங்கள்
மண் உலகில்,Man ulakil innilaththil - இந்நிலத்திலே
எண்ணின ஆறு ஆகா,Ennin aaru aakaa - நாம் எண்ணினபடிக்கு மேற்பட்டு விட்டதே.
3725திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் முதற்பாட்டிலும் மூன்றாம் பாட்டிலும் “விதிவகையே” என்று, எம்பெருமான் நியாமகனாயிருக்கு மிருப்புத்தவிர்ந்து நியாமகனா யிருக்கும்படியை யருளிச்செய்தாரே, ஸர்வேச்வரனிடத்தில் இது ஸம்பவிக்குமோ வென்று சிலர்சங்கிப்பர்களென்று கருதி அந்த சங்கைக்குப் பாரிஹாரமாக இப்பாட்டு அருளிச் செய்கிறபடி.) 4
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே–10-6-4
நல் நெஞ்சே!,Nal nenjae! - நல்ல மனமே!
படைதொட்டான்,Padaiththottan - ஆயுதமெடுத்த பஷபாதியாய்
வல் நெஞ்சத்து இரணியனை,Val nenjaththu iraniyanai - வலிய நெஞ்சையுடையனான இரணியாசுரனது
நம்பெருமான்,Namberumaan - நமக்கு ஸ்வாமியானவன்
மார்பு இடந்த,Maarpu idandha - மார்பை இருபிளவாக்கி முடித்தவனாய்
என் நெஞ்சத்துள் இருந்து,En nenjaththul irundhu - என்னெஞ்சினுள்ளே பொருத்தியிருந்து
இங்கு,Ingu - இவ்விருப்பிலே
வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றிலே ஸன்னிதி பண்ணியிருப்பவனாய்
இரு தமிழ் நூல் இவை,Iru thamizh nool ivai - பெரிய தமிழ் நூலாகிய இத்திருவாய்மொழியை
மன் அஞ்ச,Man anja - அரசர்களெல்லாரும் அஞ்சும்படி மொழிந்து தானே யருளிச்செய்து
பாரதத்து,Bharathaththil - (அவ்வளவோடு நில்லாமல்) பாரதப் போரிலே
பாண்டவர்க்கு ஆய்,Pandavarkku aay - தன்னடியர்களான பாண்டவர்களுக்காக
நமக்கு அருள் தான் செய்வானே,Namakku arul thaan seivaane - நமக்கு மேன்மேலு முதவிகளைச் செய்வானாயிராநின்றான்.
3726திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார்.) 5
வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே–10-6-5
வான் ஏற வழி தந்த,Vaan era vazhi thantha - அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுப்பதாக விருக்கிற
பணி வகையே,Pani vakaiye - பண்டு பணித்திருந்தபடியே
வாட்டாற்றான்,Vaataatraan - திருவாட்டாற்றெம்பெருமான்
நான் ஏற பெறுகின்றேன்,Naan era perugindraen - நான் மேலே செல்லப் பெறாநின்றேன்.
நெஞ்சே நரகத்தை நகு,Nenjae naragaththai nagu - மனமே! ஸம்ஸார பூமியை நோக்கிச்
சிரித்திடுசெழு பறவை தான் ஏறி,Sirithiduselu paravai than eri - அழகிய கருடன் மீதேறித் திரியுமவனான பெருமானுடைய
தேன் ஏறு மலர்துளபம் திகழ் பாதன்,Then eru malarthulabam thigal paathan - தேன் மிகுந்த துளவமலர்விளங்கும் திருவடிகளை யுடையனாய்
திரிவான தாள் இணை என் தலை மேலே,Thirivaan thaal inai en thalai maelae - உபயபாதங்கள் என் தலை மேலாயின
3727திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம் பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கி யருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் – இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார்.) 6
தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6
தாள் இணைகள் தலை மேல,Thaal inaihal thalai mel - அவனது உபய பாதங்கள் எனது தலைமேலுள்ளன
மலை மாடத்து வாட்டாறு,Malai maadaththu vaattaaru - மலைபோன்ற மாடங்களையுடைய திருவாட்டாற்றிலே
தாமரை கண் என் அம்மான்,Thaamarai kan en ammaan - புண்டாரிகாஷனான அஸ்மத் ஸ்வாமியாய்
அரவு அணைமேலான்,Aravu anaimelaan - சேஷசயனத்தின் மீது கண் வளர்ந்தருள்பவனாய்
என் நெஞ்சத்து,En nenjaththu - எனது நெஞ்சிலே
எம்பொழுதும் நிலை பேரான்,Empozhuthum nilai peraan - ஒரு போதும் நிலைபெயராது நிரந்தரவாஸம் செய்பவனாய்
மதம்மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான்,Madammikha kolaiyaanai maruppu osiththaan - மதமிகுதியினால் கொலையிலே முயன்ற குவலயாபீட யானையின் கொம்பை முறித்தவானான பெருமானுடைய
எம்பெருமான்,Namberumaan - தன்னுடைய பெருமைய எமக்குக் காட்டிக் கொடுத்தவனாய்
குரை கழல்கள்,Kurai kazhalgal - வீரக்கழலினோசை பொருத்திய திருவடிகளை
குறுகினம்,Kuruginam - கிட்டப் பெற்றோம்.
3728திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (கீழ் எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில் *அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்; இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார்.) 7
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7
கோவிந்தன்,Govindan - கண்ணபிரான்
நம் குடி கொண்டான்,Nam kudi kondaan - (அப்படி குடி கொண்டதனால்) நம்மையே தனக்குக் குடியிருப்பாகக் கொண்டான் .
திரை குழுவு கடல் புடை சூழ்,Thirai kuzhuvu kadal pudai soozh - அலைத்திரட்சியை யுடைய கடலாலே புடை சூழப் பட்டு
தென் நாடு நிலதம் அன்ள,Then naadu nilatham anla - தென்னாட்டுக்குத் திலகம் போன்றிருப்பதாய்
மலர்அடி மேல்,Malar adi mel - திருவடித் தாமரைகளின் மீது சாத்தின
வரை குழுவு மணி மாடம்,Varai kuzhuvu mani maadam - மலைகள் திரளவிருந்தாற் போன்றுள்ள மாடங்களை யுடைத்தான
விரை குழுவு நறு துளபம்,Virai kuzhuvu naru thulabam - பரிமளம் திரண்டு கமழ்கிற திருத்துழாயானது
வாட்டாற்றான்,Vaattattraan - திருவாட்டாற்றி லெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய
மெய் நின்று கமழும்,Mey nindru kamazhum - என்னுடம்பிலே நிலைநின்று வாஸிக்கின்றது.
3729திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார்.) 8
மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8
மெய்நின்று கமழ்,Mey nindru kamazh - திருமேனியிலே நிலைநின்று கமழா நின்ற
புனல் மை நின்ற வரை போலும் திரு உருவன்,Punal mai nindra varai polum thiru uruvan - புனலையும் அஞ்சனத்தையும் நிலை நிற்கும் மலையையு மொத்திருக்கின்ற திருவுருவத்தை யுடையனான
துலபம்,Thulabam - திருத்துழாயினுடைய
வாட்டாற்றாற்கு,Vaattattraarkku - திருவாட்டாற்றெம்பெருமாளுக்கு
விரை ஏறு திரு முடியன்,Virai eru thiru mudiyan - பரிமளம் மிகப் பெற்ற திருமுடியை யுடையவனாய்,
கருதும் இடம் பொருது,Karuthum idam porudhu - திருவுள்ளம் நினைத்த விடத்தே சென்று போரை நடத்தி
எந்நன்றி செய் தேன் ஆ நான்,En nandri sei then aa naan - என்ன நன்மை செய்தேனாகக் கொண்டு
கை நின்ற,Kai nindra - உடனே திருக்கையிலே வந்து சேருகிற
சக்கரத்தன்,Sakkarathan - திருவாழிப்படையை யுடையனாய்
என் நெஞ்சில் திகழ்வது,En nenjil thigazhvadhu - அவன் எனது நெஞ்சில் விளங்குவது
3730திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார்.) 9
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9
திகழ்கின்ற திருமார்வில்,Thigazkindra thirumaarvil - விளங்குகின்ற திருமார்பிலே
புள் ஊர்தி,Pul oorthi - பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு
திருமங்கை தன் னோடும்,Thirumangai than nodum - பெரிய பிராட்டியாரோடுங்கூட
போர் அரக்கர் குலம் கெடுத்தான்,Por arakkar kulam keduththaan - போர்லேமுயன்ற ராக்ஷஸர்களின் கூட்டங்களைத் தொலைத்த அப்பெருமான்
திகழ்கின்ற திருமாலார்,Thigazkindra thirumaalar - விளங்குகின்ற லஷிமீநாதன்
சேர்வு இடம்,Saervu idam - நித்யவாஸம் பண்ணுமிடம் என் நெஞ்சத்து எனது நெஞ்சிலே
நண் வாட்டாறு,Nan vaattaaru - குளிர்ந்த திருவாட்டாற்றுப் பதியாம்
இகழ்வு இன்றி எப்பொழுதும் பிரியாள்,Ikazhvu inri eppozhuthum priyaal - வெறுப்பின்றியே ஓகு போதும் பிரியாதேயுளன்
நின்ற புகழ்,Nindra pugazh - நிலைநின்ற புகழையுடைய
3731திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார்.) 10
பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே–10-6-10
பிரியாது ஆள் செய் என்று,Priyaadhu aal sei endru - ஒருகணமும் பிரியாதிருந்து அடிமை செய்யக் கடவாயென்று அநுக்ரஹித்து
ஆகம் கீண்டான்,Aagam keendaan - உடலைப் பளிந்தவனாய் (அந்த சிரமம் தீர)
வாட்டாறு,Vaattaaru - திருவாட்டாற்றிலே
பிறப்பு அறுத்து அற ஆள் கொண்டான்,Pirappu aruththu arra aal kondaan - ஸம்ஸாரப் பற்றைப்போக்கி மிகவும் அடிமை கொண்டவனாய்
வாரி வாள் வாய் அரவு அணை மேலான்,Vaari vaal vaai aravu anai melaan - சேஷசாயியாயிருக்கு மெம் பெருமான்
அன்று,Andru - முன்பொரு காலத்தில்
அர் ஆகி,Ar aagi - நரசிங்க மூர்த்தியாகி
இரணியனை,Iraniyanai - இரணியாசுரனுடைய
பெரியார்க்கு ஆள்பட்டக்கால் பெறாத பயன் பெறும் ஆறு காட்டினள்,Periyaarkku aal pattakkaal peraadha payan perum aaru kaattinaal - பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்காரிய பயனையும் பெற லாகுமென்பதைக்காட்டி விட்டான்
3732திருவாய்மொழி || (10-6–அருள் பெறுவார்) (தமக்குப் பேறு அளிக்கச் சமயம் பார்த்திருந்த பேரருளைப் பாராட்டி ஆழ்வார் நெஞ்சுடன் கூறுதல் (திருவாட்டாறு) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று.) 11
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11
தள் கனைகழல்கள் காட்டி,Thal kanaikazhalgal kaatti - தன் திருவடிகளைக் காட்டியருளி
பாட்டு ஆய தமிழ் மாலை ஆயிரத்துள்,Paatu aaya thamizh maalai aayirathul - பாட்டாயிருக்கிற தமிழ்த் தொடையான அயிரத்துள்
கடு நரகம் புகல் ஒழித்த,Kadu naragam pugal ozhiththa - கடுமையான ஸம்ஸாரநரக ப்ரவேசத்தை யொழித்த
செவிக்கு இனிய செம் சொல் இப்பத்தும்,Sevikku iniya sem sol ippaththum - கர்ணம்ருதமான செவ்விய சொற்களினாலாகிய இப்பதிகத்தை
வாட்டாறு எம்பெருமானை,Vaattaaru emperumaanai - திருவாட்டாற் றெம்பெருமானைக் குறித்து
வளம் குருகூர் சடகோபன்,Valam kurukoor sadagopan - ஆழ்வார் (அருளிச்செய்த)
வானவர்கள் கேட்டு ஆரா,Vaanavargal kaettu aaraa - நித்ய ஸூரிகள் முக்தர்கள் வாயிலாகக் கேட்டு திருப்தி பெறமாட்டார்கள்.
3733திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமானுடைய எந்த சீல குணத்தில் தாம் ஆழங்காற்பட்டுக் களைத்தாரோ அக்குணத்தில் பிறரும் ஆழ்ந்து வருந்தாமைக்காக எச்சரிக்கை செய்கிறார் முதலடியால்.) 1
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–10-7-1
செம் சொல் கவி காள்,Sem sol kavi kaal - செவ்விய சொற்களை யுடைய கவிகளே
என்னெஞ்சுள்ளும் உயிருள்ளும் கலந்து,En nenjullum uyirullum kalandhu - என்னெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து
உயிர் காத்து ஆள் செய்மின்,Uyir kaaththu aal seimin - உங்களை ஜாக்ரத்தையுடன் நோக்கிக் கொண்டு கவி பாடுங்கள்
நின்றார் அறியா வண்ணம்,Nindraar ariyaa vannam - அருகே நின்ற பிராட்டியர் முதலானாருமறியாதபடி (ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்...)
திருமாலிருஞ் சோலை,Thirumaalirunj solai - (...ஏனிப்படி சொல்லுகிறேனென்னில்) திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்கின்ற
அவை என் நெஞ்சும் உயிரும் உண்டு,Avai en nenjum uyirum undu - அந்த என்னெஞ்சையுமுயிரையும் பஜித்து
வஞ்சம் கள்வன் மா மாயன்,Vanjam kalvan maa maayan - வஞ்சனையும் களவும் மாயமுமே வடிவெடுத்த பெருமான்
தானே ஆகி (என்னைக் காண இடமின்றிக்கே),Thaane aagi (ennaik kaana idam inrikkae) - தானேயாகி
மாயம் கவி ஆய் வந்து,Maayam kavi aay vandhu - “ஆழ்வாரே! ளும்மைக் கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப் பாரா நின்றேன்” என்றொரு மாயம் செய்து வந்து
நிறைந்தான்,Niraindhaan - அவாப்த ஸமஸ்த காமனாயினான் (ஆதலால் செஞ்சொற்கவிகாஉயிர் காத்தாட் செய்மின் என்ன வேண்டிற்று)
3734திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஆழ்வார் தம்மோடு கலந்தபின் எம்பெருமாளுக்கு உண்டான பௌஷ்கல்யத்தைக்கண்டு இனியராகிறார் இப்பாட்டில்.) 2
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என் பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–10-7-2
என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னை ஸர்வப்ரபாரத்தாலும் புஜித்து
தன்னை தானே துதித்து,Thannai thaane thuthiththu - தன்னை (நான் துதித்ததாக வைத்துத்) தானே துதி செய்து
தானே ஆகி நிறைந்து,Thaane aagi niraindhu - தானோருவனே நிறைவு பெற்றவனாய்
எல்லா உலகும் உயிரும் தானே ஆய்,Ellaa ulagamum uyirum thaane aay - ஸமஸ்த லோகங்களும் அவற்றிலுள்ள பிராணி வர்க்கங்களும் தானே யென்னலாம்படி அவற்றுக்கு அந்தராத்மாவாய்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே,Enakku thenae paalae kannalae amuthae - எனக்குத் தேனும் பாலும் கன்னலு மமுதுமான ஸகலவித போக்யமும்
யான் என்பான் தானே ஆகி,Yaan enbaan thaane aagi - நானென்கிற வஸ்துவும் தானேயாய்
திருமாலிருஞ் சோலை கோனே ஆகி நின்றொழிந்தான்,Thirumaalirunj solai konae aagi nindrozhindhaan - திருமாலிருஞ் சோலை யெம் பெருமான் தானேயாய் விட்டான்
3735திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்கு மேன்மேலும் தம்பக்கலுண்டான அபிநிவேசம் எல்லையற்றிருக்கும்படியை யருளிச் செய்கிறார்.) 3
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3
என் உயிரை முற்றும் உண்டு,En uyirai mutrum undu - என்னைப் பாரிபூர்ணாநுபவம் பண்ணி
தென்னன் திருமாலிருஞ்சோலை,Thennan thirumaalirunj solai - தென்னரசன் கொண்டாடும் திருமாலிருஞ்சோலை மலை நிற்கிற
திசை,Thisai - (அவ்வளவோடும் நில்லாதே) திக்கை நோக்கி
என் மாயம்,En maayam - ஆக்கை இதனுள் புக்கு என்னுடைய ப்ராக்ருத சாரிரத்தினுள்ளும் புகுந்து
கைகூப்பி சேர்ந்த யான்,Kaikooppi serndha yaan - அஞ்சலி பண்ணி அடிமைப் பட்ட நான்
என்னை முற்றும் தானே ஆய் நின்ற,Ennai mutrum thaane aay nindra - என்னுடைய தேஹாதியநு பந்திகளெல்லாம் தானே யென்னலாம்படி நின்ற
இன்னம் போவேனே கொலோ,Innam poveanae kolo - இனி இதுக்கவ்வருகு ஓர்டத்தேடிப் போக நினைப்பேனோ?
மாயம் அம்மான் சேர்,Maayam ammaan ser - மாயப்பிரான் பொருந்தி வாழ்கிற
அம்மான் திரு அருள் என் கொல்,Ammaan thiru arul en kol - எம்பெருமானுடைய பாரிப்பு என்னாயிருந்தது!
3736திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமாளுக்குத் தம்மிடத்திலுண்டான வியாமோஹாதிசயத்தைச் சொல்லி;க்கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் அப்பெருமாளுக்குத் திருமாலிருஞ் சோலைமலையிலுண்டானவொரு வியாமோஹத்தைப் பேசுகிறார்.) 4
என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4
உலகும் உயிரும் தானே ஆய்,Ulagum uyirum thaane aay - ஸகலலோகங்களும ஸகலப்ராணிகளும் தானேயென்னலாம்படி அந்தரியாமியாய்
நண்ணா அசுரர்நலிய,Nannaa asurarnaliya - (அவ்வளவோடும் நில்லாதே) விமுகர்களான ஆஸூரப்ரக்ருதிகள நசிக்கும்படியாக
ஞாலத்தூடே நடந்து உழக்கி,Gnaalaththoode nadandhu uzhakki - பூமியெங்கும் நடையாயடியுலாவி
தென்கொள்திசைக்கு நிலதம்ஆய் நின்ற திருமாலிருஞ்சோலை,Thenkolthisaikku nilatham aay nindra thirumaalirunj solai - தெற்குத் திக்குக்குத் திலகமாயிராநின்ற திருமாலிருஞ்டசோலையாகிற
நாங்கள் குன்றம் கைவிடான்,Naangal kunram kaividaan - நமது திருமலையைக் கைவிடாதவனா யிருக்கிறான்;
என் உடலம் நன்கு கைவிடான்,En udalum nangu kaividaan - என்னுடம்பிலே மிகவும் விருப்பம் பண்ணா நின்றான்;
அம்மான் திரு அருள் என்கொல்,Ammaan thiru arul enkol - எம்பெருமானுடைய வியாமோஹத்தின்படி என்னே!
3737திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (எம்பெருமான் தம்மோடே கலந்து தம்வாயாலே திருவாய்மொழி கேட்டருளிந ப்ரீதி உள்ளடங்காமே ஆனந்தத்ததிற்குப் போக்கு வீடாகத் தென்னாதென்னாவென்று ஆளத்திவைத்துப் பாடிக் களியாநின்றான்! இஃது என்னபடியை மூன்றடிகளினால் அற்புதமாகப் பேசுகிறார்.) 5
நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5
நண்ணா அசுரர்; நலிவு எய்த,Nannaa asurar; nalivu eydha - பிரதி கூலர்களான ஆஸூரப்ரக்தி;கள் அழியவும்
நல்ல அமரர்பொலிவு எய்த,Nalla amarar polivu eydha - அநுகூலர்களான தேவப்ரத்ருதிகள் மகிழவும்
எண்ணாதனகள் எண்ணும் நல்முனிவர் இன்பம் தலைசிறப்ப,Ennaadhanagal ennnum nalmunivar inbam thalai sirappa - எம்பெருமாளுக்கு இன்னமும் சில குண விபூதிகள் உண்டாகவேணுமென்று என்ணுமவர்களான முனிவர்கள் கேட்டு மிகவுமுகக்கும்படியாகவும்
பண் ஆர் பாடல் இன் கவிகள்,Pan aar paadal in kavikal - பண்ணிறைந்த பாடல்களான இனியகவிகளையிட்டு
யானாகி;த்தன்னைத் தானே பாடி,Yaan aagi; thannai thaane paadi - தானே யானாகி;த்தன்னைத் தானே பாடி
தென்னா என்னும் என் அம்மான்,Thenna ennum en ammaan - தென்னா தெனாவென்று ஆளத்திவைத்து ரஸியாநிற்கு மெம்பெருமான் (எங்குள்ளா னென்னில)
திருமாலிருஞ் சோலையான்,Thirumaalirunj solaiyaan - திருமாலிருஞ்சோலை மலையிலுள்ளான்.
3738திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருசோஞ்லைமலையப்பனுடைய வியாமோஹாதிசயத்தை யருளிச்செய்கிறார்.) 6
திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6
சிவனும் பிரமஎம் காணாது,Sivanum Brahma em kaanadhu - சிவனுக்கும் பிரமனுக்கு மெட்டாதேயிருந்து
அரும் மால் எய்தி அடி பரவ,Arum maal eydhi adi parava - (அவர்கள்) அருமையான பக்தியைச் செலுத்தித் திருவடிகளைத் துதிக்க
அருளை ஈந்த அம்மான்,Arulai eenda ammaan - அவாகளுக்குத் தன் திருவருளைத் தந்தருளின பெருமானாய்,
செழு மூ உலகும்,Sezhu moo ulagam - விலகூஷணமான மூவுலங்களையும்
தன் ஒருமா வயிற்றின் உள்ளே வைத்து,Than orumaa vayittrin ullae vaiththu - ஒப்பற்ற பெரிய தன் திருவயிற்றினுள்ளே வைத்து
ஊழி ஊழி தலை அளிக்கும்,Oozhi oozhi thalai alikkum - கற்பந்தோறும் நன்றாகக் காப்பாற்றுமாவனான
திருமால்,Thirumaal - திருமகள் கொழுநன்
திருமாலிருஞ் சோலையானே ஆகி என்னை ஆளும் மால்,Thirumaalirunj solaiyaanai aagi ennai aayum maal - திருமாலிருஞ் சோலையிலே நின்று கொண்டே என்னை யாட்கொள்வதில் பெரும்பித்தனாயிராநின்றான்.
3739திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்போது தம்முடைய ஸம்த்திக்கு அடி திருமலையாகையாலே இத்திருமலை தானே நமக்கு ப்ராப்யமென்று திருமலையைக் கொண்டாடுகிறார்.) 7
அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7
என் அம்மானே அருளை ஈ என்னும்,En ammaanai arulai e ennum - எம்பெருமானே! உன்னருளைத் தந்தருள்வேணும் என்று வேண்டுகிற
முக்கண் அம்மானும்,Mukkan ammaanum - எம் சிவபிரானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும்,Therul kol Brahman ammaanum - நல்லறிவு வாய்ந்த நான் முகக் கடவுளும்
தேவர் கோஎம் தேவரும்,Devar koem devarum - தேவேந்திரனும் முப்பத்து மூவரமரர்களும்
இருள்கள் கடியும் முனிவரும்,Irulgal kadidum munivarum - அஜ்ஞானங்களைப் போக்கவல்ல முனிவர்களும்
ஏத்தும்,Aethum - துதிக்கும் படியான
அம்மான்,Ammaan - எம்பெருமா னெழுந்தருளி யிருக்குமி;டமான
திருமலை,Thirumalai - திருமலை எதுவென்றால்;
மருள் கள் கடியும் மணிமலை,Marulgal kadidum manimalai - மருள்களை யெல்லாம் தவிக்கும் அழகியமலையான
திருமாலிருஞ் சோலைமலையே,Thirumaalirunj solai malaiyae - தெற்குத் திருலையேயாகும்.
3740திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (திருமாலிருஞ் சோலைமலை, திருப்பாற்கடல், திருநாடு, திருவேங்கடமலை முதலாகத் தானெழுந்துருளியிருக்கும் திவ்விய தேசங்களெல்லவறாறலும் தனக்குப் பிறக்கும் ப்ரீதியை என்னுடைய அவயங்களிலே ஸம்ச்லேஷத்தாலே பெற்றவனாய் ஒரு கூஷணமும் என்னைவிட்டுப் பிரிந்து தாரிக்கமாடடாதவனாயிரா நின்றான்; இவனுடைய அபிநிவேசமிருக்கும்படி என்னே! யென்று வியக்கிறாற்ப்பாட்டில்.) 8
திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8
திருமாலிருஞ் சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே,Thirumaalirunj solai malaiyae thiruparkadalai en thalaiyae - செற்குத் திருமலையேடும் திருப்பாற்கடலோடு மொக்க என் தலையையும்
திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனது உடலே,Thirumaal vaikundhame than thiruveengadame enathu udal - ஸ்ரீவைகுண்டத்தோடும் திருமலையோடு மொக்க என்னுடலையும்,
அருமா மாயத்து எனது உயிரே,Arumaa maayathu enathu uyirae - கடக்கவாரிதான ப்ரக்ருதியோடே கலசியிருக்கிற என்னாத்மாவையும்
மனமே வாக்கே கருமமே,Maname vaakke karumamae - மனஸ்ஸையும் வாக்கையும் க்ர்யையும்,
என் ஊழி முதல்வன் ஒருவன்,En oozhi mudhalvan oruvan - ஸகலகாரண பூதனான ஸர்வேச்வரன் ஒருவன்
ஒரு மா நொடியும் பிரியான்,Oru maa nodiyum priyaan - ஒரு கூக்ஷணத்தில் ஏகதேசமும் பிரிகிறலன்.
3741திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (இப்பாட்டில் பெரும்பாகம் ஆழ்வார் தம் திருவுள்ளத்தை நோக்கிச் சொல்லுவதாகவும் சிறுபாகம் எம்பெருமானை நோக்கிச் செல்லுவதாகவும் பன்னீராயிரப்பn தவிர்ந்த மற்ற வியாக்கியானங்களிலெல்லா முள்ளது. பன்னிராயிரப்படியில் மாத்திரம் பாட்டு முழுவதும் திருவுள்ளத்தையே நோக்கிச் சொல்லுவதாகவுள்ளது.) 9
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன்,Oozhi mudhalvan oruvanae ennum oruvan - ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஒருவனே காரணபூத னென்று சொல்லப்பட்ட அத்விதீயானய்
உலகு எல்லாம்,Ulaku ellam - ஸகல லோகங்களையும்
ஊழி தோறும்,Oozhi thorum - படைக்கவேண்டிய காலந்தோறும்
தன் உள்ளே,Than ullae - தன் ஸங்கல்பத்தின் ஏக தேசத்துக்குள்ளே
படைத்து காத்து கெடுத்து உழலும்,Padaiththu kaaththu keduththu uzhallum - ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரங்களைச் செய்து போரு மவனாய்
ஆழி வண்ணன் என் அம்மான,Aazhi vannan en ammaan - கன்பீரஸ்வபாவனாயிருக்கின்ற எம்பெருமானுடைய
அம் தண் திருமாலிருஞ்சோலை,Am than thirumaalirunj solai - அழகிய குளிர்ந்த திருமலையை
மனமே,Maname - நெஞ்சே!
கைவிடேல்,Kaividael - கைவிடாதே
வாழி,Vaazhi - இது கொண்டு வாழ்வாயாக, எம்பெருமானே!
உடலும் உயிரும் மங்க ஒட்டு,Udalum uyirum manga ottu - எனது சாரிரமும் பிராணனும் உனது வெறுப்புக்கு இலக்காம்படி இசையவேணும்.
3742திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (கீழ்ப்பாட்டில் “உடலுமுயிரும் மங்கவொட்டே” என்று பிரார்த்திக்கச் செய்தேயும் இவருடைய திருமேனியிலுள்ள விருப்பத்தினாலே எம்பெருமான் பின்னையும் மேல் விழுந்து ஆதாரிக்க, ஐயோ! ஸர்வஜ்ஞனான இவனுக்கு இவ்வுடலின் ஹேயத்வம் தெரியவில்லையே! ஹேயங்களா இருப்பத்துநான்கு த்ததுவங்களினால் புணர்க்கப்பட்டது இது என்று உண்மையை யெடுத்துக்காட்டினால் இந்த நப்பாசை தவிரக்கூடம் என்று நினைத்து அரை யெடுத்துரைக்கிறாரிப்பட்டில்.) 10
மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10
திருமாலிருஞ் சோலை மேய,Thirumaalirunj solai meya - தெற்குத் திருமலையில் வாழ்கின்ற
நங்கள் கோனே,Naangal koonae - எம்பெருமானே!
யானே நீ ஆகிஎன்னை அளித்தானே,Yaanae nee aagi ennai aliththaanae - நமக்குள் ஐக்கியமாம்படி என்னை ரகூஷித்தவனே!
பொங்கு ஐம்புலஎம்,Pongu aim pulam - கிளர்ந்து வருகின்ற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
பொறி ஐந்தும்,Pori aindhum - ஜ்ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கருமேந்திரிமம்,Karumeendhri mam - கருமேந்திரியங்கள் ஐந்தும்
ஐம்பூதம்,Aim boodham - பஞ்ச பூதங்களும்
இங்கு,Ingu - ஸம்ஸார நிலைமையில்
இவ் உயிர் ஏய் பிரகிருதி,Ivv uyir eyy pragiruthi - ஜீவனோடே கலசின மூலப்ரக்ருதியும்
மான ஆங்காரம் மனங்கள்,Maan aangaara manangal - மஹாஎம் அஹங்காரமும் மனஸ்ஸூமாகிற
உன் மா மாயை மங்க ஒட்டு,Un maa maayai manga ottu - உனது பெரிய மாயையைக் கழித்துத்தர ஸம்மதித்தருள வேணும்.
3743திருவாய்மொழி || (10-7–செங்சொற் கவி) (ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுதல் (திருமாலிருஞ்சோலை)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார்.) 11
மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11
மான் ஆங்காரம் மனம் கெட,Maan aangaara manam keda - மஹான் அஹங்காரம் மனம் என்னுமிவை கெடும்படியாகவும்
வன்கையர்; ஐவர் மங்க,Vankaiyar; aivar manga - கொடிய இந்திரியங்களைந்தும் தொலையும்படியாகவும்
தான் ஆங்காரம்,Thaan aangaaraam - தானே அபிமானியாய்ப் புகுந்து
தானே தானே ஆனானே,Thaane thaane aananae - ஆத்மாத்மீயர்கள் தானேயாயிருக்கிற பெருமானை,
தேன் ஆங்காரம் பொழில்,Then aangaara pozhil - வண்டுகனுடைய செருக்கையுடைத்தான சோலை சூழ்ந்த
குருகூர்,Kurukoor - திருநகாரிக்குத் தலைவரான
சடகோபன் சொல்,Sadagopan sol - ஆழ்வாரருளிச் செய்த
ஆயிரத்துள்,Aayiraththul - ஆயிரத்தில்
மான் ஆங்காரத்து இவை பத்;தும்,Maan aangaaraaththu ivai paththum - மஹதஹங்காரதி ரூபமான ப்ரக்ருதி தொலைவதற்காகச் சொன்ன இப்பதிகம்.
திருமாலிருஞ் சோலை மலைக்கே,Thirumaalirunj solai malaikke - திருமாலிருஞ்சோலை விஷயமாயி;ற்று.
3744திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் இத்தலையில் ஸ்வல்ப வ்யாஜமாத்ரமே கொண்டு விஷயீகாரிக்கும்னென்று அவருடைய நிர்ஹேது கவிஷயீகார வைபவத்தை யருளிச் செய்கிறார்.) 1
திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே–10-8-1
திருமாலிருஞ் சோலை மலை என்றேன் என்ன,Thirumaalirunch cholai malai endren enna - திருமாலிருஞ் சோலையென்று சொன்னே னென்பதையே நிமித்தமாகக் கொண்டு
திருமால்வந்து என் நெஞ்சு நிறைய புகுந்தான்,Thirumaalvandhu en nenju niraiya pugundhaan - எம்பெருமான் வந்து என்னெஞ்சினுள்ளே நிறையப் புகுத்தான்;
திருமால் சென்று சர்வு இடம்,Thirumaal sendru sarvu idam - இப்படிப்பட்ட எம்பெருமான் சென்று வாழுமிடம் (எது வென்றால்)
குரு மாமணி உந்து புனல்,Guru maamani undhu punal - மிகச்சிறந்த மாணிக்கங்களைக் கொழிக்கின்ற
பொன்னி,Ponni - காவிரி யாற்றினுடைய
தென்பால்,Thenpaal - தென்பக்கத்திலுள்ளதான்
தென் திருப்பேர்,Then thiruper - அழகிய திருப்பேர் நகராம்.
3745திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இதுக்கு முன்பு தான் ஸர்வேச்வரனாயிருந்தும் என்னோடு கலக்கப் பெறாமையினாலே குறைவாளானாயிருந்தவன் நிர்ஹேதுகமாக என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்து பூர்ணனானானனென்கிறார்.) 2
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2
பேரே உறைகின்ற பிரான்,Pere uraikindra piraan - திருப்பேர் நகாரில் நித்திய வாஸம் பண்ணு மெம்பெருமான்
இன்று வந்து பேரேன் என்று,Inru vandhu peren endru - இன்று தானே விரும்பி வந்து இனிப் பேரமாட்டேனென்று
என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னெஞ்சிலே தான் பாரிபூற்ணனாம்படி புகுந்தான்;
ஏழ்காரி ஏழ்கடல் ஏழ் மலை உலகு உண்டும்,Ezhkaari ezh kadal ezh malai ulagu undum - (ஆகவே) ஏழேழான மேகங்களும் கடல்களும் மலைகளுஞ் சூழ்ந்த உலகங்களை யெல்லாமமுது செய்தும்
ஆரா வயிற்றானை,Aaraa vayitranai - நிறையாத திருவயிற்றையுடைய அப்பெருமானை
அடங்க பிடித்தேன்,Adanga pidithen - பரிபூர்ண விஷயீகாரம செய்தானாகப் பண்ணிக் கொண்டேன்.
3746திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் நிர்வேஹதுகமாகத் தம்மோடே வந்து கலந்தபடியைச் சிந்தித்து இவன் திருவடி எனக்கு இப்படி எளிதானவாறு என்னே என்று வியக்கிறார்.) 3
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3
கொடி கோபுரம் மாடங்கள் சூழ் திரு பேரான்,Kodi kopuram maadangal soozh thiru peraan - கொடிகளையுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட திருப்பேர் நகரை உறைவிடமாகவுடைய பெருமானுடைய
அடி சேர்வது,Adi servadhu - திருவடிகளை சேருகையாயானது
எனக்கு எளிது ஆயின ஆறு,Enakku ezhidu aayina aaru - எனக்கு எளிதான விதம் என்னே!
பிடித்தேன்,Pidiththen - அவன் திருவடிகளைப் பிடிக்கப் பெற்றேன்;
பிறவி கெடுத்தேன்,Piravi keduththen - (அது அடியாக) ஸம்ஸாரம் தொலையப் பெற்றேன்;
பிணி சாரேன்,Pini saarein - பிணிகள் வந்து அணுகாவகை பெற்றேன்;
மனை வாழ்க்கையுள்,Manai vaazhkaiyul - ஸம்ஸாரத்தில்
நிற்பது ஒர் மாயையை,Nirpadhu or maayaiyai - நிற்கையாகிற அஜ்ஞானத்தை
மடித்தேன்,Madiththen - நிவ்ருத்தமாக்கிக் கொண்டேன்.
3747திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (தமக்குத் திருநாட்டைக் கொடுத்தருள்பவனாயிராநின்ற எம்பெருமானுடைய படியை யநுஸந்தித்துத் தாம் களிக்குமபடியைப் பேசுகிறார்.) 4
எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4
கிளி தாவிய,Kili thaaviya - கிளிகள் தாவம்படி செறிந்த
சோலைகள் சூழ்,Solaigal soozh - சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திருப் பேர்நகாரில் வாழுமெம்பெருமான்,
தெளிது ஆகிய,Thelidu aagiya - தெளிந்த நிலமான
சேண் விசும்பு,Sen visumbu - பரமாகாச மென்னும் திருநாட்டை
தருவான்,Tharuvaan - தருபவனாயிராநின்றான் (ஆனது பற்றி)
என் கண்கள்,En kangal - (விடாய்த்த) எனது கண்கள்
எளிது அயின ஆறு என்று களிப்ப,Ezhidu aayina aaru endru kalippa - இந்த எளிமைக்கு ஈடுபட்டுக் களித்ததாக
களிது ஆகிய சிந்தையன் ஆய்களிக்கின்றேன்,Kalidu aagiya sindhaiyan aaykalikkindren - பரமானந்த சாலியான நெஞ்சையுடையேனாயினேன்.
3748திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார்.) 5
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரான்,Then yey pozhi then thirupper nagaraan - வண்டுகள் செறிந்த சோலைகளையுடைய திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
எனக்கு வானே தருவான்,Enakku vaane tharuvaan - எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு
என்னோடு ஒட்டி,Ennodu otti - என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி
ஊன் ஏய் குரம்பை இதனாள்,Oon yey kurambai idhanaal - மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே
இன்று தானே புகுந்து,Indru thaane pugundhu - இன்று தானே வந்து புகுந்து
தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான்,Thadumaadram vinaigal thavirthaan - தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான்.
3749திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (எம்பெருமான் தமக்கு இருப்பிடமான கோயில்கள் பலவுண்டாயிருக்க ஒர்டமில்லாதாரைப் போலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்து க்ருத க்ருதயனானானென்கிறார்.) 6
திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6
திருப் பேர் நகரான்,Thirup per nagaraan - திருப்பேர் நகாரிலே வர்த்திப்பவானாய்
திருமாலிருஞ் சோலை பொருப்பே உறைகின்ற பிரான்,Thirumaalirun cholai poruppe uraiginra piraan - திருமாலிருஞ்சோலை மலையிலே நித்யவாஸம் பண்ணுமவனால் இப்பா பரமபோக்யமான பல தலங்களையுடையனான எம்பெருமான்
இன்று வந்து,Endru vandhu - இன்று என்பாலெழுந்தருளி
இருப்பேன் என்று,Eruppein endru - ளும்மிடத்திலேயே யிருக்கக் கடவேனேன்று சொல்லி
என் நெஞ்சு நிறைய புகுந்தான்,En nenju niraiya pugundhaan - என்னுள்ளம் பூர்ணமாகும் படி புகுந்தான்;
விருப்பே பெற்று,Viruppe petru - அவருடைய அபிமானத்தைப் பெற்று
அமுதம் உண்டுகளித்தேன்,Amudham undugaliththen - அம்ரதபானம் பண்ணிக் களித்வனாயினேன்.
3750திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் களித்தேனே யென்று களிப்பை ப்ரஸ்தாவித்தார்; அக்களிப்பை ஆர அமரப் பேசுகிறாரிப்பாட்டில்.) 7
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே–10-8-7
வண்டு களிக்கும் பொழில் சூழ்,Vandu kalikkum pozhi soozh - வண்டுகள் மதுவைப் பருகிக் களிக்கும்படியான சோலைகளாலே சூழப்பட்ட
திரு பேரான்,Thiru peraan - திரப்பேர் நகாரில் வாழுமெம்பெருமான்
கண்டு களிப்ப,Kandu kalippa - தன்னை நான் அநவரதம் கண்டு களிக்குமாறு
கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என்கண்ணுக்கு இலக்காகி விட்டுப்பிரியாதிரா நின்றான்
உண்டு களித்அதற்கு,Undu kalidhu atharkku - இப்படிப்பட்ட அநுபவம் பெற்றமகிழ்ந்த எனக்கு
உம்பர் என் குறை,Umbar en kurai - மேலுலகத்திலே சென்று அநுபவிக்கவேணுமென்கிற குறை யொன்று உண்டோ?
மேலைத் தொண்டு உகளித்து,Melai thondu ugaliththu - மேலான கைங்காரிய ரஸம்அதிசயித்து
அந்தி தொழும் சொல்லு பெற்றேன்,Andhi thozhum sollu petren - அதினுடைய சரமதசையிலே நம: என்று சொல்லுகிற சொல்லைச் சொல்லவும் பெற்றேன்.
3751திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (பரமபோக்யனான திருப்பேர் நகரான் என்பக்கலிலே வ்யாமோஹமே வடிவெடுத்தவனாய் ஒருநாளும் விட்டு நீங்கமாட்டாதரனாய் என்னெஞ்சிலே வந்து புகுந்தானென்கிறார்.) 8
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8
கண்ணுள் நின்று அகலான்,Kannul ninru agalaan - என் கண்ணைவிட்டு அதலாதிருக்கின்றான்;
கருத்தின் கண் பெரியன்,Karuththin kan periyan - என்னைத் திருநாட்டுக்குக் கொண்டு போவதில் விசேஷமான பாரிப்பு உடையனாயிராநின்றான்;
எண்ணில் நுண்பொருள் தானே,Ennil nunporul thaane - எண்ணப்புகுந்தால் எண்ணமுடியாத மிகவும் சூகூஷ்மமான ஸ்வாவமுடையவனே;
ஏழ் இசையின் சுவை,Ezhu isaiyin suvai - ஸப்தஸ்வரங்களின் ரஸமே வடிவெடுத்தவன்;
வண்ணம் நல்மணிமாடங்கள்,Vannam nalmanimadangal - பலவகைப்பட்ட சிறந்த ரத்னங்களழுத்தின மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
இன்று என் மனத்து செறிந்து புகுந்தான்,Indru en manaththu serindhu pugundhaan - இன்று என்னெஞ்சிலே திடமாகப் புகுந்தான்
திண்ணம்,Thinnam - இது ஸத்தியம்
3752திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இப்பதிகத்திற்கு இதுதான் உயிரான பாட்டு. அடியனை இன்று இவ்வளவாக விஷயீகாரிக்கைக்கும் முன்பு நெடுநாள் உபேகூஷித்திருந்ததற்கும் காரணமருளிச்செய்யவேணுமென்று தமக்குண்டான ஜிஜ்ஞாஸையை வெளியிடுகிறாராயிற்று.) 9
இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9
என்னை இன்று பொருள் ஆக்கி,Ennai inru porul aaki - அநாதிகாலம் உபேகூஷிக்கப்படி;டிந்தவென்னை இன்று ஒரு வஸ்துவாகக் கொண்டு
தன்னை என்னுள் வைத்தான்,Thannai ennul vaithaan - பரம போக்யனன தன்னைமஹேயமான என்னெஞ்சிலே தானே கொண்டு வைத்தான்;
அன்று என்னை புறம்போக புணர்த்தது,Andru ennai purampoga punarthathu - (இன்று இப்படிச் செய்தவனானவிவன்) அநாதிகாலம் நான்கை கழிந்துபோம்படி என்னை உபேகூஷித்திட்டுவைத்தது
என்செய்வான்,En seivaan - எதற்காக?
குன்று என்ன திகழ்மாகங்கள்,Kunru enna thigazhmaagangal - குன்றுகளிவை யென்னலாம்ப விளங்குகின்ற மாடங்களினால் சூழப்பட்ட
திருபேரான்,Thiruperaan - திருப்பேர் நகர்க்குத் தலைவனான எம்பெருமான்
ஒன்று,Ondru - இத்தனைநாள்கை விட்டிருந்ததற்குத் ஹேது சொல்லுவதோ, இன்று கைக்கொண்டவதற்கு ஹேது சொல்லுவNற் இரண்டி லொன்றை
எனக்கு அருள் செய்ய,Enakku arul seiya - எனக்கு அருளிச்செய்;ய வேணுமென்று
உண்ர்த்தல் உற்றேன்,Unarththal utren - விஞ்ஞாபிக்கின்றேன்.
3753திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (கீழ்பாட்டில் எம்பெருமானை மடிபித்துக் கேள்விகேட்டார் ஆழ்வார்; அதற்குத் தான் சொல்லலாவதொரு ஹேது காணாமையாலே கவிழ்தலை யிட்டு வாய் மூடியிருந்து ‘உமக்கு மேல்செய்ய வேண்டுவது என்? சொல்லிக்காணீர்’ என்ன; அதற்குச் சொல்லுகிறது இப்பாட்டு.) 10
உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10
எத்தாய்,Eththaai - எம்பெருமானே!
உற்றேன்,Uttren - (உனது திருவடிகளைக்) கிட்டப்பெற்றேன்;
உகந்து பணி செய்து,Ugandhu pani seidhu - திருவாய்மொழி பாடுகையாகிற கைங்காரியத்தை ப்ரீதியோடே செய்து
உன் பாதம் பெற்றேன்,Un paadham petren - உன்திருவடிகளை அணுகினவானனேன்;
ஈதே இன்னம் வேண்டுவது,Eedhe innam venduvadhu - இவ்வநுபவமே நித்யாபே கூஷதம்;
கற்றார்,Katrar - குரு முகமாகக் கற்றவர்களாயும்
மறைவாணர்கள்,Maraivaanargal - வேதங்களைக் கொண்டு வாழ்பவர்களாயுமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ்,Vaal - வாழுமிடமான திருப்பேர் நகாரிலே உறையும்
திருப்பொராற்கு அற்றார்,Thiruporaarku atrar - பெருமாளுக்கு அற்றுத் தீர்த்தவர்களான்
அடியார் தமக்கு,Adiyaar thamakku - பாகவதர்களுக்கு
அல்லல் நில்லா,Allal nillaa - அநுபவ விரோதிகள் நில்லாது போம்,
3754திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்குப் பரமபத ஸாம்ராஜ்யமே பலனென்றருளிச் செய்கிறார்.) 11
நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11
அல்லல் நில்லா,Allal nillaa - துக்கங்களானவை தானே விட்டுப் போகுமிடமாய்
நீள் வயல் சூழ்,Neel vayal soozh - பெருத்த வயல்களாலே சூழ்ப்பட்டதான
திருப்பேர் மேல்,Thirupper mel - திருப்பேர் நகர் விஷயமாக
நல்லார் பலர்வாழ் குருகூர்ச் சடகோபன்,Nallaar palarvaal kurukoorch sadagopan - நல்லார் நவில் குருகூர் நகரரான ஆழ்வாருடையதான
சொல் ஆர் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்,Sol aar tamizh aayiraththul ivai paththum vallaar - தமிழிச்சொல் நிரம்பிய ஆயிரத்தினுள் இப்பதிகத்தைக் கற்கவல்லவர்களான
தொண்டர் ஆள்வது,Thondar aalvadhu - பாகவதர் களானவர்கள் ஆளுமிடம்
சூழ்பொன் விசும்பு.,Soozh pon visumbu - பரமபதமாகும்
3755திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திருநாட்டுக்குப் புறப்படுகிற ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்ட உகப்பின் மிகுதியினால் ஸ்தாவரஜங்கமங்களுக்குண்டான வேறுபாட்டை யருளிச்செய்கிறார். தமக்கான பேறுதன்னை இங்ஙனே அசலிட்டுச் சொல்லுகிறபடி) 1
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1
En appan, என் அப்பன் - அஸ்மத் ஸ்வாமியாய்
Vaazhpuhal,வாழ்புகழ் - நித்ய கீர்த்தியுக்தனான
Naaranaan,நாரணன் - ஸ்ரீமந் நாராயணனுடைய
Thamarai,தமரை - அடியார்களை
Kandu ukanthu,கண்டு உகந்து - வரக்கண்டு களித்து
Soozh visumpu,சூழ் விசும்பு - எங்கும்பரந்த ஆகாசத்திலே
Animugil,அணிமுகில் - அழகிய மேகங்கள்
Thooriyam muzhakin,தூரியம் முழக்கின - வாத்ய கோஷம் செய்தன போன்றிருந்தன;
Aal kadal,ஆழ் கடல் - ஆழமான கடல்கள்
Alai thirai,அலை திரை - அலைந்து வருகிற திரைகளை
Kai eduthu,கை எடுத்து - கையாகக் கொண்டு
Aadina,ஆடின - கூத்தாடின;
Ezhu pozhilum,ஏழ் பொழிலும் - ஸப்த த்வீபங்களும்
Vazham aandhiya,வளம் ஏந்திய - உபஹாரங்களைக் கையேந்தின.
3756திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுண்டான லோகங்கள் பண்ணின ஸத்காரங்களை யருளிச்செய்கிறாரிதில்;) 2
நாரணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2
Naaranaan thamarai kandu,நாரணன் தமரை கண்டு - பாகவதர்களைக் கண்டு
Nal neer mugil,நல் நீர் முகில் - நல்ல தீர்த்தம் நிறைந்த மேகமானது
Ukanthu,உகந்து - மகிழ்ந்து
Uyar vinnil,உயர் விண்ணில் - உயர்ந்த ஆகாசத்திலே
Pooranam pon kudam poorthadhu,பூரணம் பொன் குடம் பூர்த்தது - பூர்ண கும்பம் நிறைத்து வைத்தாற்போன்;றிருந்தது;
Neer ani kadalgal,நீர் அணி கடல்கள் - நீரை வஹிக்கிற கடல்களானவை
Nindru aarthina,நின்று ஆர்த்தின - நிலைநின்று கோஷித்தன
Ulaku,உலகு - அந்தந்த லோகங்களிலுள்ளார்
Engum thozhudhunar,எங்கும் தொழுதுனர் - எங்கும் தொழுதுகொண்டிருந்தார்கள்
Netuvarai thoranam niraitthu,நெடுவரை தோரணம் நிரைத்து - பெரியமலைகளைத் தோரணங்களாக ஒழுங்குபடுத்தி.
3757திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ஆதிவாஹிக லோகங்களென்று சிலவுண்டு; வழிநடத்துகிறவர்களாமவர்கள்; அவர்கள் எதிரே வந்து பூமார் பொழிந்து கொண்டாடும்படியை யருளிச்செய்கிறார்) 3
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழி வனர் பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைந்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3
Andru,அன்று - முன்பொருகால்
Bhoomi alandhavan thamar munne,பூமி அளந்தவன் தமர் முன்னே - பூமியை அளந்துகொண்ட பகவானது அடியார்களின் ஸன்னிதியிலே
Doobam,தூபம் - தூபம் ஸமரிப்பிப்பதோடு
Nal malar mazhai,நல் மலர்மழை - நன்றான புஷ்பவர்ஷத்தைப் பொழிகின்றவர்களாய்க்கொண்டு
Ulakargal,உலகர்கள் - அந்தந்தலோகங்களிலுள்ளவர்கள்
Thozhudhanar,தொழுதனர் - தொழுதார்கள்;
Munivargal,முனிவர்கள் - ஆங்காங்குள்ளமுனிவர்கள் (தாங்கள் மௌனமாயிருக்கும் விரதத்தை தவிர்ந்து)
Vaikundharkku,வைகுந்தர்க்கு - ஸ்ரீ வைகுண்டத்தை நோக்கிப் போமவர்களுக்கு
Vazhi idhu endru,வழி இது என்று - இதுதான் வழி என்று சொல்லி
Edhire vandhu,எதிரே வந்து - அபிமுகர்களாக வந்து
Ezumin endru,எழுமின் என்று - எழுந்தருளவேணும் எழுந்தருளவேணுமென்று எச்சாரிக்கையிட்டு
irumarungu isaithanar,இருமருங்கு இசைத்தனர் - இருபக்கங்களிலும் சொன்னார்கள்
3758திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மேலுலகங்களில் தேவர்கள், இவர்கள் போகிற வழிகளிலே தங்குகைக்குத் தோப்புகள் சமைத்தும் வாத்யகோஷம் முதலானவற்றைப் பண்ணியும் கொண்டாடும்படியைக் கூறுகிறார்) 4
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4
Madhu vir thuzhai mudi,,மது விர் துழாய் முடி, - தேன் பெருகுகின்ற திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய
Madhavan,மாதவன் - திருமாலினது
Thamarkku,தமர்க்கு - அடியாரான பாகவதர்களுக்கு தேவர்கள்
Edhiri edhiri,எதிர் எதிர் - இவர்கள் போகிற வழிக்கு முன்னே
Irubu idam vaguthanar,இருப்பு இடம் வகுத்தனர் - தங்குமிடங்களைச் சமைத்தார்கள்
Kathiravar,கதிரவர் - த்வாதசாதித்யர்களும்
Avar avar,அவர் அவர் - மற்றுமுள்ளவர்களும் ஆதி வாஹிக கணங்களெல்லாம்
Kai nirai kaattinar,கை நிரை காட்டினர் - பார்த்தருளீர் பார்த்தருளீர்!! என்று கைகாட்டிக் கொண்டேசென்றார்கள்
Athir kural,அதிர் குரல் - அதிருகிற முழக்கத்தையுடைய
Murasangal,முரசங்கள் - போரிகளானவை
Alaikadal muzhakku otta,அலைகடல் முழக்கு ஒத்த - அலையெறிகின்ற ஸமுத்ரகாரிஜனை போன்றிருந்தனர்.
3759திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (வாசலில் வானவரென்ரது அர்ச்சிராதி மார்க்கத்திலே தலைநின்ற வருண இந்த்ர ப்ரஜாபதிகளை, அவர்கள் மதவன்தமரென்று கொண்டாடினார்களம். இவர்கள் பிராட்டி புருஷகாரமாக ஆச்ரயித்த அந்தப்புரபரிகர பூதர்களென்று சொல்லிக் கொண்டாடினார்களாம்) 5
மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5
Vaanavar,வானவர் - வருணன் இந்திரன் பிரஜாபதி ஆகிய தேவர்கள்
Vaasalil,வாசலில் - தம்தம் ஸ்தானங்களின் வாசல்களிலே வந்து
Maadhavan thamar endru,மாதவன் தமர் என்று - இவர்கள் பரமபாகவதர்கள்‘ என்று சொல்லி ஆதரித்து
Pothumin,போதுமின் - இங்ஙனே எழுந்தருளுங்கள்!
Emathu idam puguthuga,எமது இடம் புகுதுக - எங்களது அதிகார ஸ்தலங்களிலே பிரவேசியுங்கள்
Endralum,என்றலும் - என்று சொன்னவாறே
Vedam nal vaayavar,வேதம் நல் வாயவர் - (மேலுலகங்களிலே) வைதிகராயுள்ளவர்கள்
Velvi ulmaduthu,வேள்வி உள்மடுத்து - தாங்கள் செய்த தேவபூஜைகளின் பலன்களை ஸமர்பிக்க
Kinnarar gerudargal,கின்னரர் கெருடர்கள் - கின்னர்ர்களும், கருடர்களும்
Keedhangal paadinar,கீதங்கள் பாடினர் - கீதங்களைப் பாடினார்கள்
3760திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (திவ்யாப்ஸரஸ்ஸீக்கள் மகிழ்ந்து வாழ்த்தினபடியை யருளிச்செய்கிறார்.) 6
வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6
Velvi ul matuthalum,வேள்வி உள் மடுத்தலும் - வைதிகர்கள் தம்தம் தேவ பூஜா பலன்களை ஸமரிப்பித்தவளவிலே
Virai kamizh,விரை கமிழ - பரிமளம் மிக்க
Narupukai,நறுபுகை - ஸீகந்த தூபங்களானவை
Engum kalanthu,எங்கும் கலந்து - எங்கும் வியாபிக்க
Kaalangal valam puri,காளங்கள் வலம் புரி - திருச்சின்னங்களையும் சங்கு களையும்
Isaithanar,இசைத்தனர் - ஊதினார்கள்
Vaal on kan madanthaiyar,வாள் ஒண் கண் மடந்தையர் - ஒளிமிக்க கண்களையுடைய தேவஸ்த்ர்கள்
Aazhiyaan thamar,ஆழியான் தமர் - “திருவாழியை யேந்திய எம்பெருமாளுக்கு அடிமைப்பட்டவர்களே!
Vaanagam aan mingal endru,வானகம் ஆண் மின்கள் என்று - இந்த ஸ்வர்க்காதிபதங்களை ஆளுங்கோள்” என்று சொல்லி
Magizhnthu vaazhthinar,மகிழ்ந்து வாழ்த்தினர் - ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்
3761திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மருத் கணங்களும் வஸீகணங்களும் தங்களுடைய எல்லைக்கு அப்பாலும் தொடர்ந்துவந்து தோத்திரம் செய்யும்படி சொல்லுகிறது) 7
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7
Todukadal kidantha,தொடுகடல் கிடந்த - அகாதமான கடலிலே திருக்கண் வளர்ந்தருளின்
Em Keshavan,எம் கேசவன் - எம்பெருமானாய்
Kilar oli mani mudi,கிளர் ஒளி மணி முடி - கிளர்ந்தவொளியையுடைய ரத்னகிர்டத்தையணிந்த வனாய்க்கொண்டு
Kudanthai,குடந்தை - திருக்குடத்தையிலே கண் வளர்ந்தருளுகிற
Em Kovalan,எம் கோவலன் - எமது கோபாலனுக்கு
Kudi adiyarkku,குடி அடியார்க்கு - குலங்குலமாக அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே
Madanthaiyar vaazhththalum,மடந்தையர் வாழ்த்தலும் - அப்ஸலஸ்ஸீக்கள் பல்லாண்டு பாடினவளவிலே
Marutharum vasukkalum,மருதரும் வசுக்களும் - மருந்துக்களும் அஷ்டவசுக்களும்
Engum todarndhu,எங்கும் தொடர்ந்து - போமிடமெங்கும் தொடர்ந்துவந்து
Thothiram sollinar,தோத்திரம் சொல்லினர் - பல்லாண்டு பாடினார்கள்
3762திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்பால் பரமபதத்திற்குப் புறம்பாக நீத்ய ஸூரிகள் இவர்களை எதிரிகொள்ளும்படி சொல்லுகிறது இப்பாட்டில்) 8
குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8
Ivar govindan thanukku kudi adiyar endru,இவர் கோவிந்தன் தனக்கு குடி அடியார் என்று - இவர்கள் பகவார்க்குக் குலங்குலமாக அடியவர்கள் என்று சொல்லி
Mudi udai vaanavar,முடி உடை வானவர் - சேஷத்வத்துக்குச் சூடின முடியையுடைய நித்ய ஸூரிகள்
Murai murai,முறை முறை - சிரமம் தப்பாமல்
Edhirigolla,எதிரிகொள்ள - ‘ஸ்வாகதம்’ என்று சொல்லி யெதிரிகொண்டழைக்க
Vadivu udai Maadhavan Vaikundam puga,வடிவு உடை மாதவன் வைகுந்தம் புக - அழகிய வடிவு படைத்த எம்பெருமானுடைய ஸ்ரீ வைகுண்டத்திலே பிரவேசிக்கைக்குறுப்பான
Kodi ani netumadil,கொடி அணி நெடுமதிள் - அலங்ற்ரமாக வெடுத்துக் கட்டின கொடிகளையுடைய உயர்ந்த மதிளை யுடைத்தான
Gopuram kuruginar,கோபுரம்குறுகினர் - தலைவாசலில் புகுந்தார்கள்.
3763திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில்) 9
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9
Vaikundam pukudhalum,வைகுந்தம் புகுதலும் - ஸ்ரீ வைகுண்டத்திலே சென்று புகுந்தவளவிலே
Vaasalil vaanavar,வாசலில் வானவர் - திருவாசல்காக்கும் முதலிகளானவர்கள்
Vaikundan thamar emar,வைகுந்தன் தமர் எமர் - “ஸ்ரீவைகுண்ட நாதனுடையார்கள் எங்களுடைய ஸ்வாமிகள் (ஆகையாலே)
Emadhu idam pukuthu endru viyathanar,எமது இடம் புகுது என்று வியத்தனர் - எங்களதிகாரத்திலே புக வேணும்” என்றுசொல்லி உகந்தார்கள்;
Vaikundathu,வைகுந்தத்து - அவ்விடத்திலே
Amararum munivarum,அமரரும் முனிவரும் - கைங்கரிய நிஷ்டராயும் குணாநுபவ நிஷ்டராயுமுள்ளவர்கள்
Mannavar Vaikundam puguvadhu vidhiye (endru) viyandhanar,மண்ணவர் வைகுந்தம புகுவது விதியே (என்று) வியந்தனர் - “லீலாவிபூதியி லிருந்தவர்கள் நித்ய விபூதியேற வருவது மஹா பாக்யமே!” என்று சொல்லி உகந்தார்கள்.
3764திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (மண்ணவர் விண்ணவராகப் பெற்றது நம்முடைய பரமபாக்கியமன்றோவென்று மீண்டும் சிலர்சொல்லத் தொடங்கினர்) 10
விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10
Vidhi vakai puguṉnar endru,விதி வகை புகுந்னர் என்று - “நம்முடையபாக்யாநுகுணமாக இவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்தார்கள்” என்று சொல்லி
Nalvethiyar,நல்வேதியர் - நல்ல வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்ட நித்ய ஸூரிகள்
Pathiyinil,பதியினில் - தம்தம்திவ்யஸ்தானங்களிலே
Panginil,பாங்கினில் - உபசாரங்களுடனே
pathangal kazhuvinar,பாதங்கள் கழுவினர் - வந்தவர்களது திருவடிகளை விளக்கினார்கள்
Nidhiyum,நிதியும் - ஸ்ரீவைஷ்ணவர்க்குநிதியான திருவடி நிலைகளையும்
Nal sunnamum,நல் சுண்ணமும் - ஸ்ரீசூர்ணத்தையும்
Nirai kudam,நிறை குடம் - பூரண கும்பங்களையும்
Vilakkamum,விளக்கமும் - மங்கள தீபங்களையும்
Madhi mugam madandhaiyar,மதி முகம் மடந்தையர் - சந்திரன்போன்ற முகத்தை யுடையவர்களான பாரிசார்கைகள்
Vandhu yendhinar,வந்து ஏந்தினர் - ஏந்திக்கொண்டு எதிரே வந்தார்கள்
3765திருவாய்மொழி || 10-9 சூழ்விசும் (இப்பதிகம் வல்லார், நித்ய விபூதியிலே பகவத் குணாநுபவம் பண்ணி அதிலே யீடுபட்டு அதுக்கவ்வாருகு கால்வாங்க மாட்டாதே யிருப்பாரோ டொப்பர்களென்று பயனுரைத்துத் தலைக் கட்டுகிறாராயிற்று. கீழ்ப் பாசுரங்களில் சொல்லிற்றை யெல்லாம் ஸங்க்ரஹமாக அநுபாஷிக்கிறாராயிற்று) 11
வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11
Avar vandhu edhir kolla,அவர் வந்து எதிர் கொள்ள - அந்த பெருமாளும் பிராட்டியும் வந்து எதிரிகொள்ள
Mamani mandapathu,மாமணி மண்ட பத்து - திருமாமணி மண்டபத்திலே
Antham il perinpathu,அந்தம் இல் பேர் இன்பத்து - முடிவில்லாத மஹானந் தத்தை யுடைய
Adiyarodu,அடியரோடு - பரம்பாகவதர்களோடே கூடி
Kotthu alarpoliz kurukur sadagopan,கொத்து அலர்பொழில் குரு கூர் சடகோபன் - பூங்கொத்து அலருகிற சோர்லைகளை யுடைத்தான திருநகாரிக்குத் தலைவரான ஆழ்வார்
Sol,சொல் - அருளிச்செய்த
Sandhangalḷ ayirathu,சந்தங்;கள் ஆயிரத்து - வேதரூபமான ஆயிரம் பாசுரங்களில்
Ivai,இவை - இப்பத்துப் பாசுரங்களை
Vallar,வல்லார் - ஒதவல்லவர்கள்
Munivare,முனிவரே - பகவத்குணங்களை மனனம் பண்ணும் முனிவராவர்
3766திருவாய்மொழி || 10-10 முனியே (நிர்ஹேதுகமாக வடிவழகைக் காட்டி என்னை யீடுபடுத்திவைத்து உன்னையொழியச் செல்லாதபடி பண்ணிவைத்து இப்படி ஸம்ஸாரத்திலே இன்னமும் தள்ளி வைப்பது தகுதியன்று என்கிறார்.) 1
முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1
முனியே, Muniye - படைக்கும் வகையை மனனம் பண்ணுமவனே!
நான்முகனே, Naanmugane - நான்முகனுக்கு அந்தரியாமியாயிருக்குமவனே!
முக்கண் அப்பா, Mukkan appa - ஸம்ஹாரக் கடவுளான ருத்ரனுக்கு அந்தரியாமியானவனே!
கனிவாய் தாமரை கண், Kanivaai thaamarai kan - கனிந்த அநரத்தையும் தாமரைபோன்ற திருக்கண்களையுமுடைய
என் பொல்லா கருமாணிக்கமே, En polla karu maanikkame - துளையாத கருமாணிக்கம் போன்ற திருவுருவத்தை எனக்கு அநுபவிப்பித்தவனே!
என் கள்வா, En kalva - என்னை வஞ்சித்து ஈடுபடுத்திக் கொண்டவனே!
தனியேன் ஆர் உயிரே, Thaniyen aar uyire - என்னொருவனுக்குப் பாரி பூர்ண ப்ராணனானவனே
என் தலை மிசை ஆய் வந்திட்டு, En thalai misai aai vandhittu - என் தலைமேலே வந்து சேர்ந்தாயான பின்பு
இனி நான் போகல் ஒட்டேன், Ini naan pogal otten - இனி யொருநாளும் உன்னை அகன்றுபோக இசையமாட்டேன்:
என்னை , Ennai - ஆர்த்தி மிகுந்த என்னை
ஒன்றும் மாயம் செய்யேல், ondrum maayam seiyel - ஒரு படியாலும் வஞ்சிக்கலாகாது.
3767திருவாய்மொழி || 10-10 முனியே (தம் காரியம் செய்தல்லது நிற்க வொண்ணாதபடி ஆணையிடுகிறாரிப்பாட்டில். ஒன்றும் மாயம் செய்யேலென்னையே என்று கீழ்ப்பாட்டில் சொன்னவுடனே எம்பெருமான் வந்து அபயமளிக்க வேணுமே, அது செய்யக் காணாமையாலே மீண்டும் மாயஞ்செய்யேலென்னை யென்கிறார்) 2
மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2
என்னை மாயம் செய்யேல், ennai maayam seiyel - என் திறத்தில் வஞ்சனை பண்ணா தொழியவேணும்;
உன் திருமார் வத்து மாலை, Un thirumaar vathu maalai - உன்னுடையதிருமார் விலேசாத்திய மாலை போன்றவளாய்
நங்கை, Nangai - ஸகல குணபாரிபூர்ணையாய்
வாசம் செய்; பூ குழலாள், Vaasam sey; poo kuzhalaal - பரிமளம் மிக்க கூந்தலையுடையவளான
திரு ஆணை, Thiru aannai - பெரியபிராட்டியாணை:
நின் ஆணை, Nin aannai - உன் ஆணை
நேசம் செய்து, Nesam seydhu - தானாகவே ஸ்நேஹித்து
உன்னோடு, Unodu - உன்னோடே
என்னை, Ennai - நீசனான என்னை
உயிர் வேறு அன்றி, Uyir veru andri - ஆத்மபேத மில்லாமல்
ஒன்று ஆகவே, Ondru aagave - ஏக வஸ்துவாகவே
கூசம் செய்யாது, Koosam seiyaadhu - எனது தண்மையைப் பார்த்துக் கூசாமல்
கொண்டாய், Kondai - அடியேபிடித்து அங்கீகாரித்தருளினாய்;
என்னை வந்து கூவி கொள்ளாய் ennai vandhu koovi kollai - (ஆனபின்பு) இனி உபேகூஷியாதே என்னைத் திருவடி சேர்த்துக் கொள்ளவேணும்.
3768திருவாய்மொழி || 10-10 முனியே (தாஹித்தவன் தாஹ சாந்தி பிறக்கும் அளவும் தண்ணீர் தண்ணீர் -என்னுமா போலே மீண்டும்– கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ-என்கிறார்) 3
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3
மேவி தொழும், mevi thozhum - விரும்பித் தொழுகின்ற
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம், Biraman sivan indiran aadhiku ellaam - பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும்
முதல், mudhal - மூலநாரணமான
நாவி கமலம், naavi kamalam - திருநாபிக்கமலத்திற்கு
கிழங்கே, kizhange - இருப்பிடமானவனே!
ளும்பர்அந்ததுவே, lumbar andhadhuve - அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே!
ஆவிக்கு, aavikku - ஆத்மாவுக்கு
ஒர் பற்று கொம்பு, or patru kombu - ஓர் கொள்கொம்பு
நின் அலால், nin alaal - உன்னைத் தவிர
யான் அற்கின்றிலேன், yaan arkinrilen - நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய்.
3769திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார்.) 4
உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4
உம்பர்அம் தண் பாழேயோ, umparam than paazheyo - மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே!
அதனுள் மிசை நீயேயோ, adhanul misai neeyeyo - அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே!
அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ, ambaram nalsothi adhanul biraman aran nee - ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ;
உம்பரும் , umbarum - மேலான தேவர்களையும்
யாதவரும்,yaathavarum - மநுஷ்யாதி ஸகலசேதநரையும்
படைத்த முனிவன் அவன் நீ, padhaitha munivan avan nee - அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ;
எம் பரம் சாதிக்கல் உற்று, em param saadhikkal utru - (இப்படியாயிருக்க) என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு
என்னை போர விட்டிட்டாயே, enai pora vittitaaye - (இவ்வளவும் வர நிறுத்தி) என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே.
3770திருவாய்மொழி || 10-10 முனியே (ஸர்வரகூஷகனாள நீ உபேகூஷித்தால் என்காரியம் நான் செய்யவோ? பிறர் செய்யவோ? நாளும் செய்;ய முடியாமல் பிறரும் செய்ய முடியாதபடி. யன்றோவிருப்பது; இனி முடிந்தேனத்தனையன்றோவென்கிறார்.) 5
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5
இரும்பு, irumbu - காய்ச்சின இரும்பானது
தீர உண்ட, theera unda - தன் காய்ச்சல் தீரும்படி உண்ட
நீர் அது போல, neer athu pola - நீர் போல
என் ஆர் உயிரை ஆர பருக, en aar uyirai aara paruka - என் ஆத்மாவின் விடாயெல்லாம் தீரப் பருகுகைக்கு
எனக்கு ஆரா அமுது ஆனாயே, enakku ara amuthu anaaye - எனக்கு ஆராவமூதமா யிருக்கின்றாயே;
நீ என்னை போர விட்டிட்டு, nee ennai pora vittittu - (இப்படியிருக்க) நீ என்னை அநாதாரித்து
புறம் போக்கல் உற்றால், puram pokkal utraal - உபேகூஷித்துப் பொருட்டால்
பின்னை, pinai - ஸர்வ சக்தியான நீயுமிப்படி கைவிட்டபின்பு
யான், yaan - அசக்தனான நான்
ஆரை கொண்டு, aarai kondu - எந்த உபாயத்தைக் கொண்டு
எத்தை, yethai - எந்த புருஷார்த்தத்தை (ஸாதிப்பேன்!)
அந்தோ, andho - ஜயோ!
எனது என்பது என், enathu enbadhu en - என்னுடையதென்கைக்கு என்ன இருக்கிறது.
யான் என்பது னுள், yaan enbadhu nul - நான் என்கைக்கு ஒரு ஸ்வதந்த்ர கர்த்தாவுண்டோ?
3771திருவாய்மொழி || 10-10 முனியே (பெரிய பிராட்டியார்டத்திற்போலே என்னிடத்திலும் மிகுந்த அபிநிவேசம் கொண்டவனாய் எனது உடலிலுமுயிர்லும் அதிகமான விருப்பத்தைப் பண்ணி புஜித்த நீ இனி யென்னை யுபேஷியாதே விரைவில் விஷயீகரித்தருளாயென்கிறார்) 6
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6
புணம் க்ற்யா நிறத்த, punam kryaa niraththa - தன்னிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டாரிகம் கண் செம் கனி வாய், puntaarikam kan sem kani vaai - தாமரைபோன்ற திருக்கண்ணையும் சிவந்த திருப்பவளத்தையுமுடையையான
உனக்கு, unakku - உனக்கு
ஏற்கும், erkum - ஏற்றிருக்கின்ற
கோலம், kolam - வடிவு படைத்தவளான
மலர்பாவைக்கு, malar paavaikku - பெரிய பிராட்டிக்கு
அன்பா, anbaa - அன்பனே!
என் அன்பே, en anbe - என் விஷயத்தில் அன்பு தானே வடிவெடுத்தாற் போன்றிருப்பவனே!
எனக்கு ஆரா அமுது ஆய், enakku aara amudhu aay - எனக்குப் பரம போக்யனாய்
எனது ஆவியை இன் உயிரை, enadhu aaviyai in uyirai - என்னுடைய ஹேயமான ப்ரக்ருதியையும் விலகூஷணனான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய், manakku aaraamai manni undittai - இதயத்துக்கு த்ருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்:
இனி உண்டொழியாய், ini undozhiyaai - குறையும் புஜித்தேயாக வேணும்.
3772திருவாய்மொழி || 10-10 முனியே (பிரளயார்ணவத்திலே மூழ்கியிருந்த ஸ்ரீ பூமிப்பிராட்டியை யெடுத்து அவளோடே கலந்தாப்போலேயும், கடலைக்கடைந்து பிராட்டியோடே ஸம்ச்லேஷித்தாப்போலேயும் பிராட்டி பாரிக்ரஹமானவென்னை ஸம்ஸார ஸாகரத்தில் நின்று மெடுத்து என் பக்கலிலே மிகவும் வியாமோஹங் கொண்டிருக்கிறவுன்னைப் பெற்றுவைத்து இனித் தப்பவிடுவனோவென்கிறார்) 7
கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7
கோலம் மலர்பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ, kolam malarpaavaikku anbu aagiya en anbeyo - பெரிய பிராட்டியார்க்கு உகப்பானவத்தாலே அவள் பாரிக்ரஹமான என் பக்கலிலே அன்புசெய்யுமவனே!
நீலம் வரை, neelam varai - நீலமணி மலை யொன்று
இரண்டு பிறை கவ்வி, irandu pirai kavvi - இரண்டு பிறையைக் கவ்விக் கொண்டு
நிமிர்ந்தது ஒப்ப, nimirndhadhu oppa - எழுந்திருந்தாற் போலே
கோலம் வராகம் ஒன்று ஆய், kolam varaagam ondru aai - எழுந்திருந்தாற் போலே விலகூஷணமான அத்விதீய மஹா வராஹமாய்
நிலம், nilam - பூமியை
கோடு இடை கொண்ட, kodu idai konda - எயிற்றிலே கொண்டெடுத்த
எந்தாய், endhaai - எம்பெருமானே!
நீலம் கடல் உடைந்தாய், neelam kadal udaindhaai - உனது திருமேனி நிழலிட்டாலே நீலமான கடலைக் கடைந்து அமுத மளித்தவனே!
உன்னை பெற்று, unnaai petru - உன்னைப் புகலாகப் பெற்று வைத்து
இனி போக்குவனோ, ini pokkuvano - கைபுகுந்த பின்பு நழுவ விடுவேனோ!
3773திருவாய்மொழி || 10-10 முனியே (மிகவும் விஸஜாதீயனாயிருந்த எனக்கு மிகவும் தாரகனான வுன்னை பெற்று வைத்து இனி விடுவேனோ? உயிரைவிட்டு உடல் தாரிக்கவற்றோ வென்கிறார்.) 8
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8
உயிர் ஆய், uyir aay - கர்ம வச்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய்
பயன் அவை ஆய், payan avai aay - கருமபலனான ஸீக துக்கங்களைக் கொடுப்பவனாய்க் கொண்டு
இம் மூவுலகும் முற்ற பெருதூறு ஆய், im moovulagum mutra peruthooru aay - இந்த மூவுலக மெல்லாமாகிற பெரிய தூற்றை யுண்டாக்கினவனாய்
தூற்றில் புக்கு, thootril pukku - இந்தத் தூறு தன்னுள்ளே புகுந்து
முற்ற கரந்து ஒளித்தாய், mutra karandhu oliththai - ஒருபடியாலு மறிய வொண்ணாதபடி மறைந்து நிற்குமவனாய்
என் முதல் தனி வித்தே ஓ, en mudhal thani vithe o - எனக்கு உன்னைக் கிட்டுகைக்கு மூல ஸீக்ருதமாயிருப்பவனே!
என் தனிபேர் உயிரை உன்னை , en thaniper uyirai unnai - எனக்கு அஸாதாரண தாரகனான வுன்னை
பெற்று இனி போக்குவனோ , petru ini pokkuvano - பெற்று வைத்து இனி விடுவேனோ!
3774திருவாய்மொழி || 10-10 முனியே (நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில் எனக்கு அதுவே அமையாது – நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் ) 9
முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி எங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9
முழு மூ உலகு ஆதிக்கு எல்லாம், muzhu moo ulagu aadhikku ellaam - மூவுலகு தொடக்கமான எல்லாவற்றுக்கும்
முதல் தனி வித்தே ஓ, mudhal thani vithe o - முவகைக் காரணமுமானவனே!
அங்கும் இங்கும் முழு முற்று உறு, angum ingum muzhu mutru uru - எங்கும் ஸமஸ்த பதார்ததிருப்பதாய்
முதல் தனி, mudhal thani - அத்விதீய காரணமாய்
வாழ், vaazh - போதமோகூஷங்களாகிற வாழ்ச்சிக்கு
பாழ் ஆய், paazh aay - விளை நிலமான முல ப்ரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து ஒயர்ந்த முடிவு இலீ ஓ, mudhal thani soozhndhu agandru aazhndhu oyarndha mudivu ilee o - பு;ரக்ருதி ப்ராக்ருதங்களுக்கு நியாமகமாய் ஒப்பற்றதாய் தர்ம பூதஜ்ஞானத்தாலே எங்கும் வியாபித்ததாய் நித்யமான ஆத்மவர்க்கத்துக்கு நியாமகனானவனே!
முதல் தனி உன்னை, mudhal thani unnai - முதல்வனாயும் அத்விதீயனாயுமிருக்கிற உன்னை
உன்னை, unnai - அஸாதரணனானஷன வுன்ளை
நான் என்னை நாள் வந்து கூடுவன், naan ennai naal vandhu kooduvan - நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்!
3775திருவாய்மொழி || 10-10 முனியே (பெரியபிராட்டியா ராணையிட்டுத தடுத்தப் பெரிய ஆர்த்தியோடே கூப்பிட்ட ஆழ்வாருடைய காரியம் செய்தல்லது நிற்கவொண்ணாதபடி யாயிற்று எம்பெருமாளுக்கு; அதனால் இவர் பிரார்த்தித்தபடியே பாரிபூர்ணனாய்க் கொண்டு வந்து ஸமச்லேஷித்தருளினான்; அதுகண்டு என்னுடைய அபாரிமிதமான விடாயெல்லாம் தீரவந்து என்னோடே கலந்தாய்; என்னுடைய மநோரதமும் ஒருபடி நிறைவேறப்பெற்றேன்’ என்று போரின்பம் பொலிய விண்ணப்பஞ் செய்கிறார்.) 10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10
சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த, Soozhndhu Agandru Aazhndhu Uyarndha - பத்து திக்கிலும் வ்யாப்தமாய்
முடிவு இல், Mudivu il - நித்யமாயிருக்கிற
பெரு பாழே ஓ, Peru Paazhe O - ப்ரக்ருதி தத்வத்துக்கு நியாமகனாய் நிற்கிறவனே!
சூழ்ந்து, Soozhndhu - (தர்மபூத ஜ்ஞானத்தாலே, அதையும் வியாபித்து
அதனில் பெரிய, Adhanil Periya - அதற்காட்டிலும் பெரியதாய்
பரம், Param - மேற்பட்டதாய்
நல்மலர்சோதீ ஒ, Nal Malarsodhi O - வகஸ்வர தேஜோரூபமான ஆத்ம வஸ்துவுக்கும் ஆத்மாவானவனே!
சூழ்ந்து, Soozhndhu - கீழ்ச் சொன்ன இரண்டு தத்வங்களையும் வியாபித்து அகற்றுக்கும் நிர்வாஹகமாய்
சுடர் ஞானம் இன்பமே ஓ, Sudar Gnanam Inbame O - ஙை;கல்ப பமாய் ஸூகரூபமான ஞானத்தை யுடையவனே!
சூழ்ந்து, Soozhndhu - அந்த தத்வத்ரயத்தையும் வளைத்துக்கொண்டு
அதனில் பெரிய, Adhanil Periya - அதிலும் மிகப் பெரிதான
என் அவா, En Avaa - என் அபிநிலேசமானது
அற, Ara - தீரும்படியாக
சூழ்ந்தாயே, Soozhndhaye - வந்து ஸம்ச்லேஷித்தாயே!
3776திருவாய்மொழி || 10-10 முனியே (பரபக்தி பரஜ்ஞான பரமபக்தி தசைகளென்று மூன்றுண்டே; சூழ்விசும்பணி முகிலுக்கு முன்வரையில் பரபக்தி தசையாய்ச் சென்றது. சூழ்விசும்பணி முகில் திருவாய் மொழியானது பரஜ்ஞான தசையிற் சென்றது. முனியே நான்முகனே யென்கிற இத்திருவாய் மொழியானது பரமபக்தி தசையிற் சென்றது. பரமபக்திக்கே ‘முடிந்த அவா’ என்று பெயர். இப்படிப்பட்ட பரமபக்தி பேசுவித்த இப்பதிகம் வல்லவர்கள் இவ்விருள் தருமா ஞாலத்திற் பிறந்து வைத்தே ‘நித்ய ஸூரிகளேயிவர்கள் என்னும்படியான பெருமையோடே பொலிவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11
அவா அற, Ava Ara - அடியேனுடைய அபிநி வேசம் தீரும்படி
சூழ், Soozh - ஸம்ச்லேஷிப்பவனாய்
அர்யை, Aryai - இப்படி தாபத்தை ஹாரிப்பவனாகையாலே ஹாரியென்று திருநாமம் பெற்றவானாய்
அயனை, Ayanai - பிரமனுக்கு அந்தரியாமியாய்
அரணை, Aranai - ருத்ரனுக்கு அந்தரியாமியாய்யிருக்கிற எம்பெருமானை
அலற்றி, Alatri - கூப்பிட்டு
அவா அற்று வீடு பெற்ற, Ava Attru Veedu Petra - ஆசை தீர்ந்து வீடு பெற்ற வாரன
குருகூர் சடகோ பன், Kurukoor Sadagoban - நம்மாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச் செய்ததாய்
அவாவில், Avaavil - பக்தியினா லுண்டானதான
அந்தா திகளால், Antha thigalaal - அந்தாதித் தொடையான பாசுரங்களால் நிறைந்த
இவை ஆயிரமும், Ivai Aayiramum - இவ்வாயிரத்தினுள்ளே
முடிந்த அவாவில், Mudintha Avavil - பரம பக்தியாலே பிறந்ததான
அந்தாதி, Anthaathi - அந்தாதியான
இப்பத்து, Ippathu - இப்பதிகத்தை
அறிந்தார், Arindhaar - அறியக் கற்குமவர்கள்
பிறந்தே உயர்ந்தார், Pirandhe Uyarndhar - ஸம்ஸாரத்தில் பிறந்தருக்கச் செய்தேயும் உயர்ந்த வர்களாவர்