திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2972 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2972திருவாய்மொழி || (3-7– பயிலும் சுடரொளி) (அடியார்களின் அடியார்களுக்குத் தாம் அடியவர் எனல்) (இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத் தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார்.) 10
அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும் படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-7-10
பதவுரை Show / Hide
அடி ஆர்ந்த வையம்,Adi aarndha vaiyam - (த்ரிவிக்ரமாவதார காலத்தில்) தன் திருவடியோடு ஸம்பந்தம் பெற்றதான வுலகை
உண்டு,Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து
ஆல் இலை,Aal ilai - ஆலந்தளிரில்
அன்னவசம் செய்யும்,Annavasam seyyum - திருக்கண் வளர்ந்தருள்கின்ற
படி ஆதும்இல்,Padi aadhum il - சிறிதும் உபமானமில்லாத
குழவிப் படி,Kuzhavip padi - சிறு குழந்தைப் பருவமுடைய
எந்தை பிரான் தனக்கு,Endhai praan thanakku - எம்பெருமானுக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள்,Adiyaar adiyaar tham adiyaar adiyaar thamakku adiyaar adiyaar tham adiyaar adiyongal - ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்வர்களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள்.