திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2931 | திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (கீழ்ப் பாசுரத்திற் கூறிய பஞ்ச பூதங்களின் காரியப் பொருளாக எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் அநுபவிக்கிறார்.) 2 | கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2 | பதவுரை Show / Hideபாவுசீர் கண்ணன்,Paavuseer Kannan - பரம்பின திருக் கல்யாண குணங்களை யுடைய க்ருஷ்ணனென்ற திருநாமமுடையவனும் பங்கயக் கண்ணன்,Pangaya Kannan - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனும் எம்மானை,Emmaanai - எமது தலைவனுமாகிய எம்பெருமானை குன்றங்கள் அனைத்தும் என்கோ,Kunrangkal anaiththum enko - எல்லாமும் என்று சொல்வேனோ? மெவு சீர் மாரி என்கோ,Mevu seer maari enko - (கண்டார்) விரும்பும்படியான சிறப்பையுடைய மழையென்பேனோ? விளங்கு தாரகைகள் என்கோ,Vilangum thaarakaigal enko - பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களென்பேனோ? நா இயல் கலைகள் என்கோ,Naa iyal kalaigal enko - நாவினால் முயற்சியோடு உச்சரிக்கப்படுகின்ற கல்விகளென்பேனோ? ஞானம் நல் ஆவி என்கோ,Gnaanam nal aavi enko - அர்த்த ஞானத்திற்காரணமான நல்ல சப்தங்கள் என்பேனோ? கூவும் ஆறு,Koovum aaru - (எம்பெருமானைச்) சொல்லும் விதத்தை அறியமாட்டேன்,Ariya maatten - அறிகின்றேனில்லை |