திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3249 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3249திருவாய்மொழி || (6-3–நல்குரவும் செல்வும்) (தம்மை வசீகரித்தவன் ஸர்வேஸ்வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)) (ஒன்றோடொன்று சேராதவற்றை யெல்லாம் தன்பக்கலிலே சேர விட்டுக் கொண்டிருக்கிற பெருமானைத் திருவிண்ணகரிலே காண நின்றே னென்கிறார்.) 1
நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய் வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப் பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச் செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1
பதவுரை Show / Hide
நல்குரவும் செல்வும்,Nalguravum selvum - தாரித்ரியமும் ஐச்சரியமுமாய்
நரகும் சுவர்க்கமும் ஆய்,Naragum suvargamum aai - நரகமும் ஸ்வர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும்,Vel pagaiyum natpum - எதிரியைவெல்லுகின்ற பகையும் (அதற்கு எதிர்த்தடையான்) ஸ்நேஹமுமாய்
விடமும் அமுதமும் ஆய்,Vidamum amudamum aai - விஷமும் அமிருதமுமாய் (ஆக இப்படி)
பல்வகையும் பரந்த பெருமான்,Palvakaiyum parandha perumaan - பலவகையாக விரிந்த விபூதியையுடையனாய்
என்னை ஆள்வானை,Ennai aalvaanai - என்னை அடிமைகொண்ட ஸர்வேச்வரனை
செல்வம் மல்கு குடி,Selvam malku kudi - செல்வம் நிரம்பிய ஸந்நிதியான
திருவிண்ணகர்,Tiruvinnagar - திருவிண்ணகரிலே
கண்டேன்,Kanden - காணப்பெற்றேன்.