திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2921 | திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (ஆழ்வீர்! திருமலையில் அடிமை செய்யவேணுமென்று நீர் பாரிக்கின்றீர்; இஃது உமக்கு வாய்க்குமோ வென்ன; எண்ணிறாத நித்ய ஸித்தபுருஷர்களெல்லார்க்கும் தன்னை அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறானோரு பரமோபகாரகனல்லானோ அவன்; அன்னவன் நமக்கும் தன்னைத் தந்தருளமென்கிறார். (எம்பெருமான் ஸ்வாநுபத்தை நமக்குத் தந்தருள்வன் என்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டிருக்கவில்லையே என்னவேண்டா; எண்ணில் தொல்புகழ்வானவ ரீசனே என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். நமக்குத் தந்தருளாதொழிந்தனாகில் தொன்புகழுடைமை தேறுமோ என்றவாறு.)) 3 | அண்ணல் மாயன் அணிகொள் செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க் கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த் திரு வேங்கடத்து
எண் இல் தொல் புகழ் வானவர் ஈசனே. –3-3-3 | பதவுரை Show / Hideஅணிக்கொள், Anikkol - அழகுபொருந்திய செம் தாமரை கண்ணன், Sem thamarai kannan - செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும் செம் கனிவாய், Sem kanivai - சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும் கருமாணிக்கம், Karumaanikkam - நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும் தென் நிறை சுனை நீர், Then nirai sunai neer - தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் எண் இல் தொல் புகழ், Enum il thol pugazh - எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும் வானவர் ஈசன், Vaanavar Eesan - நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான் அண்ணல், Annal - நமக்கு ஸ்வாமியும் மாயன், Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன் |