திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3107 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3107திருவாய்மொழி || (4-10–ஒன்றும் தேவும்) - (உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை; நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்; ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம். உங்களைக் காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவே யல்லது வேறொரு வாசி யில்லை கிடீர்; உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார்.) 2
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில், மாட மாளிகை சூழ்ந் தழகாய திருக் குருகூர தனைப் பாடி ஆடிப் பரவச் சென்மின்கள், பல்லுலகீர்!பரந்தே.–4-10-2
பதவுரை Show / Hide
பல் உலகீர், pal ulageer - பலவகைப்பட்ட உலகர்களே!
நீர், neer - நீங்கள்
நாடி, naadi - தேடி
வணங்கும், vanangum - வணங்கும்படியாகவுள்ள
உம்மையும், ummaiyum - உங்களையும்
முன் படைத்தான், mun padaithaan - முன்னம் படைத்தவனும்
வீடு இல் சீர், veedu il seer - நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான
புகழ், pugazh - புகழையுடையனுமான
ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில், aadhi piraan avan mevi uraikoyil - ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான
மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை, maadam maaligai soozhndhu azhagu aaya thiru kurukoor adhanai - மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை
பாடி ஆடி, paadi aadi - பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு
பரவி, paravi - துதித்து
பரந்து செல்மின்கள், parandhu selminkal - எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.