திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3034 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3034திருவாய்மொழி || (4-3–கோவை வாயாள்) (எம்பெருமானது சேர்க்கையால் பெற்ற இன்பம்) (கீழ்ப்பாசுரங்களில் எம்பெருமானுடைய ப்ரணயித்வம்; சொல்லிற்று; இப்பாசுரத்தில் தம்முடைய ப்ரணயித்வம் சொல்லுகிறது.) 6
கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்! ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்று என்று, ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும், கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6
பதவுரை Show / Hide
காலன் சக்கரத்தொடு,kaalan sakkaraththodu - (பகைவரையழிப்பதில்) யமன் போன்ற திருவாழியோடுகூட
வெண் சங்கு,ven changu - வெளுத்த சங்கத்தை
அம் கை,am kai - அழகிய திருக்கையிலே
ஏந்தினாய்,yenthinaai - தரித்திருப்பவனே!
ஞாலம் முற்றும்,gnaalam mutrum - உலகமுழுவதையும்
உண்டு உமிழ்ந்த,undu umizhntha - ஒருகால் விழுங்கி மற்றொரு கால் வெளிப்படுத்தின
நாராயணனே,narayananey - நாராயணா!
என்று என்று,endru endru - பலகால் சொல்லி
ஓலம் இட்டு,olam ittu - கூப்பிட்டு
நான் அழைத்தால்,naan azhaithaal - நான் அழைக்க
ஒன்றும் வாராய் ஆகிலும்,onrum vaaraai aagilum - நீ சிறிதும் வந்தருளாமற் போனாலும்
உன்,un - உன்னுடைய
கமலம் அன்ன,kamalam anna - தாமரை மலர்போன்ற
குரை கழல்,kurai kazhal - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகள்
என் சென்னிக்கு,en sennikku - எனது தலைக்கு
கோலும் ஆம்,kolum aam - அலங்காரமாகநின்றது.