திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3748 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3748திருவாய்மொழி || (10-8–திருமாலிருஞ்சோலை) (காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசுதல்(திருப்பேர் நகர்)) (திருப்பேர் நகரான் எனக்குத் திருநாடு தருவதாகச் சபதம் செய்து விரோதிகளையும் போக்கியருளிச் னென்கிறார்.) 5
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான் தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5
பதவுரை Show / Hide
தேன் ஏய் பொழில் தென் திருப்பேர் நகரான்,Then yey pozhi then thirupper nagaraan - வண்டுகள் செறிந்த சோலைகளையுடைய திருப்பேர் நகாரிலுறையும் பெருமான்
எனக்கு வானே தருவான்,Enakku vaane tharuvaan - எனக்கு (இன்று) திருநாடு தந்தருள்பவனாய் ஸங்கல்பித்துக்கொண்டு
என்னோடு ஒட்டி,Ennodu otti - என்னோடே ப்ரததிஜ்ஞை பண்ணி
ஊன் ஏய் குரம்பை இதனாள்,Oon yey kurambai idhanaal - மாம்ஸளமான இந்த சாரிரத்தினுள்ளே
இன்று தானே புகுந்து,Indru thaane pugundhu - இன்று தானே வந்து புகுந்து
தடுமாற்றம் வினைகள் தவிர்த்தான்,Thadumaadram vinaigal thavirthaan - தன்னைத் பிரிந்து தடுமாறு கைக்கூடியான புண்யபாவங்களைப் போக்கி யருளினான்.