திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3142 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3142திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இப்படி தன்னைப் பிரிந்து துக்கப்படா நிற்க வாராத நிர்க்ருணனை -நீ என் செய்ய ஆசைப்படுகிறாய் என்ன -தன் பக்கலிலே எனக்கு அதி மாத்ர ப்ரேமத்தை விளைப்பித்த பரம உபகாரகனையே நீ நிர்க்ருணன் என்று சொல்லுவது என்று தோழியை கர்ஹிக்கிறார்.) 4
ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னை சொல் நீர் படுத்து ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள் பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4
பதவுரை Show / Hide
தோழீ,Thozhi - தோழியே!
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழமொழிகளை
எரு இட்டு,Eru ittu - எரவாக இட்டு
அன்னை சொல் நீர் படுத்து,Annai sol neer padutthu - தாயின் ஹிதசைனமாகிற நீரைப்பாய்ச்சி
ஈரம் நெல் வித்தி,Eeram nel vithi - ஆசையாகிற நெல்லை விதைத்து
முளைத்த,Mulaittha - முளைப்பித்த
நெஞ்சம் பெரு செயுள்,Nenjam peru seiyul - நெஞ்சாகிற பெரிய வயலிலே
பேர் அமர் காதல்,Per amar kaadhal - பெரிய ஊர்ப்பூசலை விளைவிப்பதான காதலாகிற பயிரை
கடல் புரைய,Kadal puraiya - கடல்போலே அபரிச்சிந்நமாக
விளைவித்த,Vilaivittha - பலிக்கும்படிபண்ணின
கார் அமர் மேனி,Kaar amar meni - கார்கால மேகத்தின் நிறம் பொருந்திய திரு மேனியையுடைய
அடியனே,Adiyane - கடியனோ? (கடியனல்லன்)