திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2958 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2958திருவாய்மொழி || 3-6–செய்ய தாமரை (அர்ச்சாவதாரமே எளிது என்று அருளிச்செய்தல்) (எம்பெருமான் இப்படி ஆச்ரித ஸுலபனாகையாலே அவன் பக்கலில் நீங்கள் பண்ணின துர்லபத்வ சங்கையைத் தவிர்த்து அவனை ஆச்ரயியுங்கள்; உங்கள் துயரங்கள் தொலைந்து போம் என்கிறார்.) 7
எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத் தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7
பதவுரை Show / Hide
எழுமைக்கும்,Ezhumaikkum - எல்லா நிலைமைகளிலும்
எனது ஆவிக்கு,Enadhu aavikku - என் ஆத்மாவுக்கு
இன் அமுதத்தினை,In amudhathinai - இனிய அங்குதம் போன்வனும்
எனது ஆர் உயிர்,Enadhu aar uyir - என்னுடைய அருமையான உயிரோடே
கெழுமிய,Kezhumiya - கலந்து நிற்கிற
கதிர் சோதியை,Kathir sothiyai - பரஞ்சோதியுருவனும்
மணி வண்ணனை,Mani vannanai - நீலமணி நிறத்தனும்
குடக் கூத்தனை,Kudak koothanai - குடக் கூத்தாடினவனும்
விழுமிய அமரர்,Vizhumiya amarar - சிறந்த தேவர்களாலும்
முனிவர்,Munivar - முனிவர்களாலும்
விழுங்கும்,Vizhungum - அநுபவிக்கப்படுகிற
கன்கல் கனியினை,Kankal kaniyinai - கன்னற்கனி போன்றவனுமான எம்பெருமானை
தூய மனத்தர் ஆய்,Thooaya manathar aai - அழுக்கற்ற மனமுடையீர்களாய்
தொழுமின்,Thozhumin - தொழுங்கள் (தொழுதால்)
துயரங்கள்,Thuyarangal - துன்பங்களானவை
இறையும்,Iraiyum - சிறிதேனும்
நில்லா,Nillaa - நிற்கமாட்டா.