திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3524 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3524திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக் கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக் காட்டக் கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது.) 1
கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1
பதவுரை Show / Hide
கண்கள் சிவந்து பெரிய ஆய்,Kangal sivandhu periya aay - திருக்கண்கள் சிவந்தும் பெருத்துமிருப்பனவாய்
வாயும் சிவந்து கனிந்து,Vaayum sivandhu kanindhu - திருவதரமும் சிவந்து பழுத்து
உள்ளே,Ullae - அகவாயிலே
வெண் பல் இலகு சுடர்,Ven pal ilaku sudar - வெளுத்த திருமுத்துக்களினுடைய விளங்குகிற சுடரையுடையனாய்
இலகு விலகு மகர குண்டலத்தன்,Ilaku vilaku makara kundaladhan - மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய்
கொண்டல் வண்ணன்,Kondal vannan - காள மேக நிறத்தனாய்
சுடர் முடியன்,Sudar mudhiyan - ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய்
நான்கு தோளன்,Naangu tholan - திருத்தோள்கள் நான்குமுடையனாய்
குனி சார்ங்கன்,Kuni saaringan - வளைந்த சார்ங்கவில்லையுடையனாய்
ஒண் சங்கு கதைவாள் ஆழியான் ஒருவன்,On shangu kathival aazhiyaan oruvan - அழகிய சங்கும் கதையும் வாளும் ஆழியுமுடையனான வொருவன்
அடியேன் உள்ளான்,Adiyaen ullaan - அடியேனுடைய உள்ளே விளங்கா நின்றான்.