திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3633 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3633திருவாய்மொழி || (9-7–எங்கானலகங்கழிவாய்) (எம் பெருமானது வடிவழகே பற்றுக்கோடாக தலைவி திருமூழிக்களத்தே பறவைகளைத் தூதுவிடல் (திருமூழிக்களம்)) (இத்திருவாய்மொழியானது தன்னைப்பயிலுமவர்கட்கு பகவத்விச்லேஷ ஹேலுவான ஸம்ஸார வியாதியையறுக்கு மென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல் வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11
பதவுரை Show / Hide
ஒழிவு இன்றி,Ozhivu indri - நிரந்தரமாக
திருமூழிக்களத்து உறையும்,Thirumoozhikkalathu uraiyum - திருமூழிக்களத்திலே வாழ்கிற
ஒண் சுடரை,On sudarai - தேஜோமூர்த்தியான எம்பெருமானை
ஒழிவு இல்லா அணி மழலை கிளி மொழி யாள் அலற்றிய சொல்,Ozhivu illa ani mazhalai kili mozhi yaal alatriya sol - மபிரிந்து தரிக்கமாட்டாத வொரு மென்கிளிமொழித் தலைவி சொன்ன சொல்லாகவைத்து
வழு இல்லாவண் குருகூர் சடகோபன் உரைத்த,Vazhu illaavan kurukoor sadagopan uraitha - அன்பில் குறைவில்ல தவரான ஆழ்வார் ஆழ்ந்து அருளிர் செய்க
அழிவு இல்லா ஆயிரம்,Azhivu illa aayiram - நித்யவேதமான இவ்வாயிரத்தினுள்
இப்பத்தும்,Ippaththum - இப்பதிகம்
நோய் அதுக்கும்,Noi athukkum - ஸம்ஸார வியாதியைத் தீர்த்துக் கொடுக்கும்