திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3342 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3342திருவாய்மொழி || (7-1–உண்ணிலாவிய) (இந்திரியங்களால் இன்னும் எத்தனை நாள் துன்புறுவேன் என்று ஆழ்வார் வருந்தல்.) (நம்மிற் காட்டில் எவ்வளவோ மேம்பட்டவர்கள் என்று ப்ரஹித்தி பெற்றவர்களையும் நலியக்கடவ இந்திரியஙகள் என்னை என்ன பாடுபடுத்தா? என்கிறார்.) 6
விண்ணுளார் பெருமாற் கடிமை செய்வாரையும் செறும் ஐம்புலனிவை மண்ணுள் என்னைப் பெற்றால் என் செய்யா மற்று நீயும் விட்டால்? பண்ணுளாய்!கவி தன்னுளாய்!பத்தி யினுள்ளாய்! பரமீசனே! வந்தென் கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்!ஒன்று சொல்லாயே.–7-1-6
பதவுரை Show / Hide
விண் உளார்,Vin ulaar - விண்ணுலகில் உள்ளவர் களாய்க்கொண்டே
பெருமாற்கு,Perumaarku - பராத்பரனான உனக்கு
அடிமை செய்வாரையும்,Adimai seyvaaraiyum - அடிமைசெய்பவர் காளன நித்யஸூரிகளையும்
மண்ணுள்,Mannul - இந்நிலத்திலே
செறும்,Serum - மேலிட்டு நலியக்கூடிய
ஐம்புலன் இவை,Aimpulan ivai - இந்த பஞ்சேந்திரியங்கள்
என்னைப் பெற்றால் என் செய்யா,Ennaip peral en seyya - (இவற்றை வெல்லுதற்குரிய வலிமையற்ற) என்னிடம் வந்து சேர்ந்தால் இவை என்னதான் செய்ய மாட்டா?
மற்று,Matru - அதற்கு மேலே
நீயும் விட்டால்,Neeyum vittaal - சக்தனான நீயும் கை விட்டால்
(என்செய்யா),(En seyya) - என்ன செய்யமாட்டா? (எதுவும் செய்யக்கூடுமன்றோ.)
பண் உளாய்,Pan ulaay - ஸ்வரத்தை அறியுமவனே!
கவிதன் உளாய்,Kavithan ulaay - (என்னுடைய ஆர்த்தியே வடிவெடுத்த சொற்களே யறியுமவனே!
பத்தியின் உள்ளாய்,Pattiyin ullaay - என்னுடைய ஆற்றாமையை அறியுமவனே!
பரம் ஈசனே,Param eesanee - பராத்பரனே!
என் கண் உளாய் நெஞ்சு உளாய் சொல் உளாய்,En kan ulaay nenju ulaay sol ulaay - என்னுடைய கண்ணோடும் நெஞ்சோடும் வாகிந்திரியத்தோடும் வாசியற உள்ளே ஸந்நிதி பண்ணியிரப்பவனே!
வந்து,Vandu - என்னளவில் வந்து
ஒன்று சொல்லாய்,Ondru sollaay - (அபயமாக) ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும்.