திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2948 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2948திருவாய்மொழி || (3-5– மொய்ம்மாம் பூம்) (திருமாலுக்கு அன்பு செய்பவரை ஆதரித்தலும் அன்பிலாரை நிந்தித்தலும்) (ஸம்ஸாரபூமியில் இருந்துவைத்து எப்போதும் திருவேங்கடமுடையானுடைய திருக்குணங்களிலீடுபடுமவர்கள் *அயர்வறுமமரர்களிலும் சீரிய ரென்கிறார். இங்கத் திருவேங்கடத்தை யெடுத்து திவ்யதேசங்களெல்லாவற்றுக்கும் உபலக்ஷணமாகம்.) 8
வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8
பதவுரை Show / Hide
வார் புனல் அம் தண் அருவி,Vaar punal am than aruvi - சிறந்த தீர்தங்களையுடையதும் அழகிய குளிர்ந்த அருவிகளையுடையதுமான
வட திருவேங்கடத்து,Vada thiruvengadaththu - வடக்குத் திருமலையில் நிற்கிற
எந்தை,Endhai - எம்பெருமானுடைய
பல பேர்,Pala per - பல திருநாமங்களையும்
சொல்லி பிதற்றி,Solli pidatri - வாய்வந்தபடி சொல்லி
பித்தர் என்றே பிறர் கூற,Pitthar endre pirar kooru - ‘அவர்கள் பைத்தியக்காரர்கள்’ என்றே பிறர் சொல்லுமாறு
ஊர் பல புக்கும்,Oor pala pukkum - பலவூர்களிலே புகுந்தும்
புகாதும்,Pugaadhum - அங்குப் புகாமலும் (பலபேர்களுடைய ஸன்னிதானத்திலும் அஸன்னிதானத்திலும் என்றபடி)
உலோகர் சிரிக்க,Ulogar sirikka - உலகர்கள் சிரிக்கும்படியாக
ஆடிநின்று,Aadininru - நர்த்தனஞ் செய்து கொண்டிருந்து
ஆர்வம் பெருகி,Aarvam perugi - ஆசை விஞ்சி
குனிப்பர்,Kunippar - கோலாஹலஞ் செய்பவர்கள்
அமரர்,Amarar - நித்யஸூரிகளாலே
தொழப்படுவார்,Thozhappaduvaar - வணங்கப்படுவர்கள்.