திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3380 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3380திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((குன்றமெடுத்த.) எம்பெருமானுடைய விஜய பரம்பரைகளைத் தொடுத்த இத்திருவாய்மொழியை ஒதவல்லவர்கள் எல்லா வகையான விஜயமும் பெறுவார்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது.) 11
குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சட கோபன் உரை செயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே–7-4-11
பதவுரை Show / Hide
kunram edutha piran,குன்றம் எடுத்த பிரான் - கோவர்த்தன மலையையெடுத்த கண்ணபிரானுடைய
adiyarodum,அடியாரொடும் - அடியார்களோடு கூட
ondri nindra,ஒன்றி நின்ற - ஒருமைப்பட்டிராநின்ற
sadagopan,சடகோபன் - நம்மாழ்வாருடைய
urai seyal,உரை செயல் - அருளிச்செயலாய்
or aayirathu nanri punaintha,ஓர் ஆயிரத்துள் நன்றி புனைந்த - ஆயிரத்தினுள்ளே நலம் மிக்கதான
ivai pathum,இவை பத்தும் - இத்திருவாய்மொழி
mevi karparkku,மேவி கற்பார்க்கு - தன்னை விரும்பிக் கற்குமவர்களுக்கு
venri tharum,வென்றி தரும் - பலவகையான விஜயத்தையுங் கொடுக்கும்