திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3198 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3198திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((அழுவன் தொழுவன்.) பிராவே! உன் கண்ணழகிலே யீடுபட்டுப் பலவகை ப்ரவ்ருத்திகளும் பண்ணின விடத்திலும் பயன் பெற்றிலேன்; உன் திருவடிகளைச் சேரும்படி நீயே பார்த்தருள வேணுமென்கிறார்.) 5
அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன் தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் செழு வொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தாமரைக் கண்ணா! தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்.–5-8-5
பதவுரை Show / Hide
செழு ஒண் பழனம்,sezu on palanam - செழுமைதங்கிய நீர்நிலங்களையுடைய
குடந்தை கிடந்தாய்,kudandai kitandhay - திருக்குடந்தையிலே சயனித்தருள்பவனே!
செம் தாமரை கண்ணா,sem thaamarai kannaa - செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுடையவனே!
அழுவன் தொழுவன்,azhuvan thozhuvan - அழுவேன் தொழுவேன்;
ஆடி காண் பன்,aadi kaan pan - கடனம் செய்து பார்ப்பேன்;
பாடி அலற்றுவன்,Paadi alattruvan - வாயாரப்பாடிப் பிரலாபனம் செய்வேன்;
தழு வல்வினையால்,thazhu valvinaiyaal - என்னைத் தழுவிக்கொண்டிருக்கிற வலிய பாவத்தினாலே
பக்கம் நோக்கி,pakkam nokki - (எந்தப்பக்கமாக நீவருகிறாயோவென்று) பக்கந்தோறும் பார்த்து (எங்கும் வரக்காணாமையாலே)
காணி கவிழ்ந்து இருப்பன் தொழுவனேனை,kaani kavilnthu iruppan thozhuvane'nai - வெட்கப்பட்டுத் தலைகவிழ்ந்திருப்பேன்;
உன தாள் சேரும் வகையே,un thaal serum vakaiye - உன் திருவடியடையமாறு
சூழ் கண்டாய்,soozh kandai - உபாயசிந்தை பண்ணவேணும்.