திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2974 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2974திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (தம்முடைய திருவுள்ளம் எம்பெருமானைக்காண வேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே நிர்வேதம் கொண்டு கிடக்கிறபடியை அருளிச் செய்கிறார்.) 1
முடியானே! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானே! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர் கொடியானே! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானே! என்று கிடக்கும் என் நெஞ்சமே. –3-8-1
பதவுரை Show / Hide
என் நெஞ்சம்,En nenjam - எனது மனமானது
முடியானே,Mudiyanae - (உபய விபூதி நாயகத்வ லக்ஷணமான) திருவபிஷேகத்தை யுடையவனே!
மூ உலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே,Moo ulagum thozhudhu yaeththum seer adiyanae - மூவுலகத்தவர்களும் வணங்கித் துதிக்கப் பெற்ற சிறப்புள்ள திருவடிகளை யுடையவனே!
ஆழ் கடலை கடைந்தாய்,Aazh kadalai kadaindhaai - (தேவர்களுக்கு அமுதமளிப்பதற்காக) அழமான கடலைக் கடைந்தவனே!
புள் ஊர் கொடியானே,Pul oor kodiyanae - கருடப்பறவையை ஊர்தியாகவும், கொடியாகவுமுடையவனே!
கொண்டல் வண்ணா,Kondal vanna - நீலமேகம் போலும் நிறத்தையுடையவனே!
அண்டத்து உம்பரின் நெடியானே,Andhathu umbarin nediyanae - பரமபதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு மஹாபருஷனே!
என்று கிடக்கும்,Endru kidakkum - என்று அநுஸந்தித்து உருகிக் கிடக்கின்றது.