திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3679 | திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (திருவனந்தபுரத் தெம்பெருமானுடைய திருநாமமொன்றே ஸஹஸ்ர முகமான ரக்ஷயைப் பண்ணுமென்றார்.) 2 | இன்று போய்ப் புகுதிராகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கும் உம்பரூரே–10-2-2 | பதவுரை Show / Hideகுன்று நேர் மாடம்,Kunru neer maadam - மலை போன்ற மாடங்களினருகே எழுமையும் ஏதம் சாரா,Ezhumaiyum aedham saara - ஏழேம் பிறப்பும் ஸம்ஸார தோஷம் எட்டாது குருந்து சேர் செருந்தி புன்னை,Kurundhu ser serundhi punai - குருந்த மரங்களோடு சேர்ந்த சுரபுன்னை மரங்களும் புன்னை மரங்களும் மாயன் நாமம்,Maayan naamam - அத்திருப்பதி எம்பெருமானுடைய திருநாமங்களில் ஒன்றும்,Ondrum - ஏதேனும் ஒன்றாகிலும் மன்று அலர் பொழில் அனந்தபுரம் நகர்,Manru alar pozhil ananthapuram nagar - மன்றிலே அலறும் படியான சோலைகளையுடைய திருவனந்தபுரத்தை ஓர் ஆயிரம் ஆகும்,Or aayiram aakum - ஒன்றே ஆயிரமாகிக் காரியஞ் செய்யும் பெருமையுடையது; இன்று போய் புகுதிரி ஆகில்,Endru pooi pukuthiri aagil - இன்றே சென்றடைவர்களாகில் உள்உவர்க்கு,Ulluvarkku - இத்தையநுஸந்திப்பார்க்கு ஒம்பர் ஊரே,Ombur oorae - அத்திருவனந்புரந்தானே பரமபதமாயிருக்கும். |