திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3405 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3405திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (திருப்பவளத்தில் அழகு தன்னை நலிகிற படியை சொல்கிறாள்) 3
வாலிய தோர் கனி கொல்?வினையாட்டியேன் வல் வினைகொல்? கோலம் திரள் பவளக் கொழுந்துண்டங் கொலோ அறியேன் நீல நெடு முகில் போல் திருமேனி யம்மான் தொண்டை வாய் ஏலும் திசையுள் எல்லாம் வந்து தோன்றும் என் இன் உயிர்க்கே.–7-7-3
பதவுரை Show / Hide
வாலியது ஒர் கனி கொல்,Vaaliyadhu or kani kol - விலக்ஷ்ணமாயிருப்ப தொரு பழமோ?
வினையாட்டியேன் வல்வினை கொல்,Vinaiyaatien valvinai kol - இப்பழத்தை இப்போதேய நுபவிக்கப் பெறாத பாவத்தையுடையேனான வென்னுடையவலிய பாவமே ஒரு வடிவு கொண்டதாயிருக்கிறதோ?
கோலம் திரள்,Kolam thirul - ஸௌந்தர்யம் ஸௌகுமார்யம் முதலான நலங்களெல்லான் ஒருசேரத்திரண்ட
பவளம் கொழு துண்டம் கொலோ,Pavalam koludu thundam kolo - பவளத்தினுடைய கொழுவிய தொரு முறியோ?
அறியேன்,Ariyen - அறிகின்றேனில்லை;
நீலம் நெடு முகில் போல் திருமேனி அம்மான்,Neelam netu mugil pol thirumeni ammaan - சுறுத்துப் பெருத்த மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமானது
தொண்டை வாய்,Thondai vaai - தொண்டைக் கனியின் நிறத்தையுடைத்தான அதரமானது