திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2979 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2979திருவாய்மொழி || (3-8–முடியானே) (கரணங்களும் தாமும் பெருவிடாய்ப்பட்டுப் பேசுதல்) (என்னுடைய ஆவியானது உன்னுடைய கீர்த்தியைக் கேட்க வேணுமென்று விரும்புகிறதென்கிறார்.) 6
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப் பத்துற்றுப் புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6
பதவுரை Show / Hide
எனது ஆவி,Enadhu aavi - என் பிராணனானது.
நின்,Nin - உன்னுடைய
கீர்த்தி கனி என்னும் கவிகளே,Keerthi kani ennum kavigale - கீர்த்தியாகிய பழம் என்னலாம்படியான கவிகளையே
காலம்,Kaalam - காலத்திற்கு ஏற்ற
பண்,Pan - பண்களாகிற
தேன்,Then - தேனிலே
உறைப்ப,Uraippa - மிகவும் செறிய
துற்று,Thutru - கலந்து
செவிகளால் ஆர,Sevigalal aara - காதுகளால் பூர்ணாமக அநுபவிக்க
புவியின் மேல்,Puviyin mel - பூமியின் மீது
பொன் நெடு சக்கரத்து உன்னையே,Pon nedu sakkarathu unnaiyae - அழகிய பெரிய திருவாழியையுடைய தேவரீரையே
அவிவு இன்றி,Avivu indri - இடையறாமல்
ஆதரிக்கும்,Aadharikkum - விரும்பா நிற்கும்.