திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3195 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3195திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - ((எம்மானே!) கீழ்ப்பாட்டில் “கண்டேனெம்மானை!” என்ற ஆழ்வாருடைய கருத்து- பிரானே! உன்னை உலகத்தார் காண்கிற ரீதியிலே நானும் காணுமித்தனையேயோ? எனக்காக எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், குசலப்ரச்னம் பண்ணியருளுதல், அணைத்தல் தெய்தருள வேண்டாவோ? என்று கேட்பதாம்.) 2
எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே! செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக் குடந்தை அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2
பதவுரை Show / Hide
எம்மானே,emmane - எல்லாவிதத்திலும் மஹானானவனே!
என் வெள்ளை மூர்த்தி,en vellai moorthi - என்னை ஈடுபடுத்திக்கொண்ட பரிசுத்த ஸ்வரூபனே!
என்னை ஆள்வானே,ennai aalvane - என்னை அடிமை கொள்பவனே!
வேண்டும் ஆற்றால்,vendum aatral - திருவுள்ளமானபடியே
எம் மா உருவும் ஆவாய்,em ma uruvum aavay - எப்படிப்ப்ட அவதார விக்ரஹங்களையும் பரிக்ரஹிப்பவனே!
மா செம் கமலம்,ma sem kamalam - பெரிய செந்தாமரைகள்
செழுநீர் மிசை,cezhuneer misai - அழகிய நீரினிடத்து
கண்,kan - கண்டவிடமெங்கும்
மலரும்,malarum - மலரப்பெற்ற
திருகுடந்தை,thirukudandhai - திருக்குடந்தையிலே
அ மா மலர்,a ma malar - அப்படிப்பட்ட சிந்த மலர்போன்ற திருக்கண்கள் துயில்பவனே!
தான் என் செய்கேன்,than en seykayn - நான் என்ன பண்ணுலேன்! (இவ்வழகு கண்டு என்னால் தரிக்கப்போகிறதில்லையே’