திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2873 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2873திருவாய்மொழி || (2-8–அணைவது அரவணை மேல்) (எம்பெருமானது மோக்ஷம் அளிக்கும் தன்மை) (ஸம்ஸாரிகள் எம்பெருமானை மறந்து எப்படியாவது தொலையட்டும் அவர்களில் ஒருத்தனான நானும் அவர்களைப்போலே பாழ்பட்டொழியாமே ஒருவாறு உஜ்ஜீவிக்கப் பெற்றேனே! என்று தமக்கு நேர்ந்த லாபத்தைக் குறித்துக் களித்துப் பேசுகிறார்.) 10
சீர்மை கொள் வீடு ச்வர்க்க நரகு ஈறா ஈர்மை கொள் தேவர் நடுவா மற்று எப்பொருட்கும் வேர் முதலாய் வித்தாய் பரந்து தனி நின்ற கார் முகில் போல் வண்ணன் என் கண்ணனை நான் கண்டேனே –2-8-10
பதவுரை Show / Hide
சீர்மை கொள்,Seermai kol - மேன்மை பொருந்திய
வீடு,Veedu - மோக்ஷமும்
சுவர்க்கம்,Suvarkkam - ஸ்வர்க்கமும்
நரகு,Narakku - நரகமும்
ஈரு ஆ,Eeru aa - மேலெல்லையாக
ஈர்மை கொள் தேவர் நடு ஆ,Eermai kol thaevar nandu aa - ஈர நெஞ்சுடையரான தேவர்கள் நடுவாக
மற்று எப்பொருட்கும்,Matru yepporutkum - மற்றெல்லாப் பொருள்களுக்கும்
வேர் ஆய் முதல் ஆய் வித்து ஆய்,Veer aa muthal aa vithu aai - மூவகைக் காரணமும் தானே யாய்
பரந்து,Paranthu - எங்கும் வியாபித்து
தனி நின்ற,Thani nindru - பரம விலக்ஷணனா யிருக்கின்ற
கார்முகில் போல் வண்ணன்,Kaarmukil pol vannan - காளமேக நிறத்தனான
என் கண்ணனை,En kannanai - எம்பெருமானை
நான் கண்டேன்,Naan kandeen - நான் அநுபவிக்கப் பெற்றேன்