திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3593 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3593திருவாய்மொழி || (9-4–மையார் கருங்கண்ணி) (எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்ந்தமை கூறல்) (தமக்குண்டான வொரு கலக்கத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.) 4
உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு நின் கண் பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம் மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும் அறிவது அரிய அரியாய அம்மானே–9-4-4
பதவுரை Show / Hide
வானவர் தானவர்க்கு,Vaanavar thaanavarkku - அதுஉலர்க்கும் பிரதி கூலர்க்கும் வாசியற
என்றும் அறிவது அரிய,Endrum arivadhu ariya - எப்போதும் அறிய வொண்ணாத
அரிய ஆய அம்மானே,Ariya aaya ammaane - நரஸிம்ஹ மூர்த்தியே
இனி உறுவது என்று,Ini uruvadhu endru - ‘இதுதான் ஸ்வரூபா நுரூபம்’ என்றறுதி யிட்டு
உனக்கு ஆள்பட்டு,Unakku aalpattu - உனக்கு சேஷ பூதனாகி
நின் கண் பெறுவது எது கொல் என்று,Nin kan peruvathu edhu kol endru - உன் பக்கலில் நான் பெறக் கூடிய பேறு எதுவோவென்று [நித்ய கைங்கரியமோ அல்லது ஸம்ஸார்க்த்தானோ வென்று]
பேதையேன் நெஞ்சம்,Paethaiyen nenjam - அறிவிலியான என்னுடைய நெஞ்சானது
மறுகல் செய்யும்,Marugal seiyyum - கலங்கா நின்றது