திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2763 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2763திருவாய்மொழி || 1-9–இவையும் அவையும் (ஆழ்வாரோடு எம்பெருமான் கலந்த வகை) (ஜகத் காரண பூதனும் ஸர்வாந்தர்யாமியும் திருமகள் கொழுநனுமான கண்ணபிரான் என்னுடைய சூழலை விட்டுப் போக மாட்டாதபடியானா னென்கிறார்) 1
இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம் சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1
பதவுரை Show / Hide
இவையும்,ivaaiyum - ஸமீபத்திலுள்ள பொருள்களும்
உவையும்,uvaiyum - நடுத்தரமாகவுள்ள பொருள்களும்
இவரும்,ivarum - ஸமீபத்திலுள்ள சேதநர்களும்
அவரும்,avarum - தூரத்திலுள்ள சேதநர்களும்
உவரும்,uvarum - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும்
யவையும்,yavaiyum - ஸகல அசேதனங்களும்
யவரும்,yavarum - ஸகல சேதனர்களும் (பிரளய காலத்தில்)
தன்னுள்ளே,thannulle - தனக்குள்ளே
ஆகியும்,aagiyum - ஆகும்படி வைத்தும்
காக்கும்,kaakkum - ரக்ஷித்தும் போருகிறவனும்
அவையும்,avaiyum - தூரத்திலுள்ள பொருள்களும்
அவையுள்,avaiyul - அந்த சேதநா சேதநங்களுக்கு அந்தர்யாமியானவனும்
தனி முதல் எம்மான்,thani mudhal emmaan - ஒப்பற்ற காரண பூதனும் அஸ்மத் ஸ்வாமியும்
கண்ணபிரான்,Kannabiraan - கண்ணனாக அவதரித்து ஸௌலப்யத்தைக் காட்டினவனும்
என் அமுதம்,en amudham - எனக்கு அம்ருதம் போல் பரம போக்யனும்
சுவையன்,suvaiyan - ரஸிகனும்
திருவின் மணாளன்,Thiruvin maṇaaḻan - பெரிய பிராட்டியார்க்கு மணவாளனுமான பெருமாள்
என்னுடை சூழல்,ennudai suuḻal - என்னுடைய சுற்றுப் பக்கத்தில்
உளான்,ulaan - தங்கி யிரா நின்றான்.