திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2780 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) ( “ந அச்லீலம் கீர்த்தயேத்” என்று வேத புருஷன் சொன்னான்; அச்லீலமான விஷயத்தை வாயினாற் சொல்லக்கூடாது என்றபடி, நைச்சியாநுஸந்தானம் பண்ணி அவனை விட்டுப்பிரிதல் என்கிற அச்லீலத்தை இவர் தாமே *ப்ரஸ்தாவித்தமையால் அப்படியே வந்து புகுந்தது. அயோக்யன் என்று அகலுகிறாரிப்பாட்டில் .) 7 | எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்து சொல்லும் செல்வனையே –1-10-7 | பதவுரை Show / Hideவானவர்,vaanavar - நித்ய ஸூரிகள் எந்தை எம் பெருமான் என்று,endhai em perumaan endru - ‘எந்தையே! எம்பெருமானே! என்று சிந்தையுள் வைத்து,sinthaiyul vaithu - மனத்தினால் சிந்தித்து சொல்லும்,sollum - வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற செல்வனை,selvanaai - ஸ்ரீமானாகிய எம்பெருமானை பாவியேன்,paaviyaen - பாவியாகிய நான் எந்தையே என்றும்,endhaiye endrum - எந்தையே! என்றும் எம்பெருமான் என்றும்,emperumaan endrum - எம்பெருமானே என்றும் சிந்தையுள் வைப்பன்,sinthaiyul vaippan - மனத்தில் வைப்பேன்; சொல்லுவன்,solluvan - வாயினாலுஞ் சொல்வேன் |