திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2775 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2775திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (எம்பெருமான் அடியார்களுக்குக் காட்சி தருந்தன்மை எப்படிப்பட்ட தென்றால், பரமபக்தி யுக்தர்க்கு முகங்காட்டுவது போலவே எண்ணிக்கையினால் தன்னைக் குறிப்பிடுமவர்களுக்கும் முகங்காட்டுந்தன்மை யுள்ளதென்று இப்பாட்டில் கூறப்படுகின்றது) 2
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம் மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம் பிரானையே –1-10-2
பதவுரை Show / Hide
மண்ணும் நீரும் எரியும் நல் வாயுவும் விண்ணும் ஆய்,mannum neerum eriyum nal vaayuvum vinnum aay - பூமி முதலிய பஞ்ச பூதங்களையும் சரீரமாக வுடையனாய்க் கொண்டு
விரியும்,viriyum - ஜகத்தாகப் பரம்புகின்ற
எம் பிரானை,em piranai - எம்பெருமானை
காதன்மையால் தொழில்,kaadhanmaiyaal thozhil - பக்தியோடு தொழுதால்
கண்ணுள்ளே,kannullae - (அவன்) நான் காணும்படி இருப்பன்;
எண்ணிலும் வரும்,ennillum varum - ஒன்று இரண்டு என்று எண்ணினாலும் வந்து நிற்பன்;
என் இனி வேண்டுவம்,en ini venduvam - இனி மேல் என்னகுறை?