திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2792 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2792திருவாய்மொழி || (2-1–வாயுந் திரை யுகளும்) (இருளின் செறிவாலே நீருக்கும் தரைக்கும் வாசயிறயாதேஒரு கழியிலே சென்றிழிந்தாள்; கழிதான் இரைத்துக்கொண்டு ஓடாநிற்குமாகையாலே அது தன்னைப்போலவே பகவத் விஷயத்திலீடுபாட்டாலே உறக்கமற்றுக் கதறுகின்றதாகக் கொண்டு ஐயோ! சகடாஸூரபங்கம் பண்ணின பெருமானுi.டய செயலிலே நீயும் அகப்பட்டாயோ வென்கிறாள்.) 8
இருளின் திணி வண்ணம் மா நீர்க் கழியே போய் மருளுற்று இராப்பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால் உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8
பதவுரை Show / Hide
இருளின்,irulil - இருட்டினுடைய
திணி,thini - செறிந்த
வண்ணம்,vannam - நிறத்தை யுடைய
மா,maa - பெரிய
நீர்சுழியே,neerchuzhiyae - நீருள்ள சுழியே!
போய்,poi - மிகவும்
மருள் உற்று,marul utru - மருட்சி யடைந்து
இரா பகல்,ira pakal - இரவும் பகலும்
துஞ்சிலும்,thunjilum - முடிந்தாலும்
நீ துஞ்சாய்,nee thunjaay - நீ ஓய்கின்றாயில்லை;
ஆல்,aal - ஆதலால்
உருளும் சகடம்,urulum sakadam - உருளுகின்ற சகடத்தைத் திருவடிகளா லுதைத்தொழிந்த
பெருமானார்,perumanaar - எம்பெருமானுடைய
அருளின்,arulin - க்ருபாகுணத்திலுண்டான
பெரு நசையால்,peru nasaiyaal - பேராசையினால்
ஆழாந்து,aazhaanthu - ஆழ்ந்து
நொந்தாயே,nondhaayae - நோவுபட்டாயோ?