திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3566 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3566திருவாய்மொழி || (9-1—கொண்ட பெண்டிர்) (கர்மவசத்தால் கிட்டிய பத்துக்களை விட்டு எல்லா வகையிலும் உறவினனான திருமாலைச் சேரும் எனல் (வடமதுரை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-1-10-தானே எல்லார்க்கும் சரண் என்னும் இவ்வர்த்தத்தை பிரதிஷ்டைக்காக வந்து திருவவதாரம் பண்ணி யருளின கிருஷ்ணன் திருவடிகளை ஆஸ்ரயிங்கோள் -என்கிறார்.) 10
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10
பதவுரை Show / Hide
கண்ணன் அல்லால் சரண் இல்லை அது நிற்க,Kannan allal saran illai adhu nirka - ஸ்ரீக்ருஷ்ணனல்லது வேறு சரணில்லை யென்னுமர்த்தம் நிலைநிற்கைக்காகவும்
மண்ணின்பாரம் நீக்குதற்கு,Manninpaaraam neekutharku - பூபாரத்தைப் போக்குகைக்காகவும்
வட மதுரை பிறந்தான்,Vada mathurai piranthaan - வட மதுரையில் வந்து அவதரித்தான் (ஆன பின்பு. ஸம்ஸாயிகளே)!
அம் உடைமை உண்டேல்,Am udaimai undel - உங்களதாக நினைத்திருக்கிற பொருளுண்டாகில் (அதை)
திண்ணமா அவன் அடி சேர்த்து உய்ம்மின்,Thinnamaa avan adi serthu uymin - திடமாக அவன் திருவடிகளினே ஸமர்பித்து உஜ்ஜீவியுங்கள்
எண்ண வேண்டா,Enna venda - ஆலோசிக்க வேண்டா
நும்மது ஆதும்,Nummathu aadhu - உங்களுடையதான எப்பொருளும்
அவன் அன்றி மற்று இல்லை,Avan anri matru illai - அவனதேயன்றி மற்றமடியாயில்லை.