திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3139 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3139திருவாய்மொழி || (5-3–மாசறு சோதி) (பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்) (பராங்குச நாயகி மடலூர்வதாக எண்ணினபடியை அறிந்ததோழி அதனை விலக்கப்புகுந்து ‘ஊரார் பழிசொல்வர்காண்’ என்ன; அவனுடைய அழகு முதலியவற்றிலே அகப்பட்டுக் கலங்கின நான் ஊரார் பழியை லக்ஷியம் பண்ணும் நிலைமையிலே இலேன் என்கிறாள் தலைவி.) 1
மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம் ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1
பதவுரை Show / Hide
மாறு அறுசோதி,Maaru aruchothi - அழுக்கற்ற தேஜஸ்ஸையுடைய
செய்ய வாய்,Seiyya vaai - சிவந்த திருப்பவளத்தையுடைய
என் மணி குன்றத்தை,En mani kunraththai - மாணிக்கமலைபோல் எனக்கு யோக்யனானவனும்,
ஆக அது சீலனை,Aaga adhu seelanai - குற்றமற்ற சீலகுணத்தையுடையவனும்
ஆதி மூர்த்தியை,Aadhi moorthiyai - முழுமுதற் கடவுளுமான எம்பெருமானை
நாடி,Naadi - தேடி
பாக அறவு எய்தி,Paaga aravu eidhi - உடம்பில் பசுமை நிறம் அழிவடைந்து
அறிவு இழந்து,Arivu izhanthu - அறிவும் இழக்கப்பெற்று
ஏனை நானையம்,Ena nanaiyam - எத்தனை காலமிருப்போம்?
தோழி,Thozi - தோழியே!
ஏசு அறும்,Aesu arum - ஏசுவதற்கென்றே அற்றுத்தீர்ந்த
ஊரவர்,Ooravar - ஊராருடைய
கவ்வை,Kavvai - பழிமொழி
என் செய்யும்,En seyyum? - யாது செய்யும்?