திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2784 | திருவாய்மொழி || (1-10–பொருமா நீள் படை) (ஸ்ரீ ஈடு - நிகமத்தில் , ‘இப்பத்தைக் கற்றவர்கள் -நிரதிசய – தன்னின் மேம் பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவத் கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார். ஸ்ரீ அடைய வளைந்தான் / ஸ்ரீ ஜீயர் அரும் பத உரை – கல்வி என்றதுக்கு கைங்கர்யத்தை விவஷித்து அவதாரிகை) 11 | மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர்
அணியை தென் குருகூர்ச் சடகோபன் சொல்
பணி செய் ஆயிரத்துள் இவை பத்துடன்
தணிவிலர் கற்பரேல் கல்வி வாயுமே –1-10-11 | பதவுரை Show / Hideமணியை,maniyai - நீல மணி போன்றவனும் வானவர் கண்ணனை,vaanavar kannanai - நித்ய ஸூரிநாதனும் தன்னது ஓர் அணியை ,thannathu or aniyaai - தனக்கு தானே ஓராபரணமாயிறு பவனுமான பெருமானைக் குறித்து தென் குருகூர்ச் சடகோபன்,then kurukoor sadakoopan - தென் குருகூர்ச் சடகோபன் சொல் பணி செய்,sol pani sey - வாசிக கைங்கர்யம் செய்த ஆயிரத்துள்,aayiraththuḷ - ஆயிரத்தினுள் இவை பத்து,ivai pathu - இப்பத்துப் பாட்டையும் உடன் ,udan - கருத்துடன் தணிவு இலர் ,thanivu ilar - த்ருப்தி பெறாதவர்களாய் கற்பர் ஏல் ,karpar ael - கற்பாராயின் (அவர்களுக்கு) கல்வி வாயும் ,kalvi vaayum - ஞானம் நிரம்பும் |