திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2701 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2701திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (ஆச்ரயிக்கத் தக்கவனான எம்பெருமான் எளியனென்பது அறிந்தோம்; அன்னவனை ஆச்ரயிக்கும் வழி என்ன?’ என்று ஸம்ஸாரிகள் கேட்பதாகக் கொண்டு, அவன் கீதையிலே அருளிச் செய்துவைத்த பக்திமார்க்கத்தாலே அவனை ஆச்ரயியுங்கோள் என்கிறார். 5
பிணக்கற வறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த கணக்கற நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன் வணக்குடைத் தவ நெறி வழி நின்று புறநெறி களை கட்டு உணக்குமின் பசையற வவனுடை உணர்வு கொண்டு உணர்ந்தே –1-3-5-
பதவுரை Show / Hide
அறு வகை சமயமும் பிணக்கு அற, Aru vakai samayamum pinakku ara - ஆறுவகைப்பட்ட மதங்களும் (வைதிக மார்க்கத்தோடு) பிணக்கம் ஒழியும்படி.
நெறி, Neri - வேத மார்க்கத்தை
உள்ளி, Ulli - ஆராய்ந்து
உரைத்த, Uraitha - அருளிச் செய்த
கணக்கு அறு நலத்தனன், Kanakku aru nalaththan - எண்ணிறந்த கல்யாண குணங்களை யுடையவனும்
அந்தமில் ஆகி, Andhamil aagi - முடிவில்லாத முதல்வனும்
அம் பகவன், Am bhagavan - அழகான குணங்களை யுடையவனுமான எம்பெருமானது
வணக்கு உடை, Vanakku udai - வணக்கத்தையுடைய
தவம் நெறி, Thavam neri - பக்தி (அல்லது) ப்ரபத்தி ஆகிற
வழிநின்று, Valinndru - மார்க்கத்தில் நின்று
புறம்நெறிகளை, Puram nerigalai - வேறு மார்க்கங்களாகிற களையை
கட்டு, Kattu - பறித்து
அவனுடைய உணர்வு கொண்டு, Avanudaiya unarvu kondu - அவனளித்த கீதையைக் கொண்டு
உணர்ந்து, Unarndhu - உணர்ச்சி பெற்று
பசையற, Pasaiyara - வாஸநா ரூபமான பற்றும் அறும்படி
உணக்குமின், Unakkumin - உலர்த்தி விடுங்கள்.