திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3681 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3681திருவாய்மொழி || (10-2–கெடுமிடராய) (திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ஆஸ்ரியிப்பார்க்கு ருசி பிறக்கைக்காக -திருவனந்த புரத்தில் எம்பெருமானுக்கு அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு அடிமை செய்கிறவர்கள் என்ன புண்ணியம் செய்தார்களோ -என்கிறார் -அவர்கள் பாக்யம் பண்ணின படியைப் பேசுங்கோள் என்றுமாம்.) 4
பேசுமின் கூசமின்றிப் பெரிய நீர் வேலை சூழ்ந்து வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம் நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே–10-2-4
பதவுரை Show / Hide
பெரிய நீர் வேலை சூழ்ந்து,Periya neer velaai soozhndhu - பெரிய நீராகிய கடலாலே சூழப்பட்டு
மலர்கள் தூவி,Malarhal thoo vi - புஷ்பங்களை பணிமாறி ஆராதிக்குமவர்கள்
வாசமே கமழும் சோலை வயல் அணி,Vaasame kamazhum solai vayal ani - பரிமளமே நிறைந்த சோலைகளையும் வயல்களையும் அலங்காரமாகக் கொண்ட
அனந்தபுரம்,Ananthapuram - திருவனந்தபுரத்திலே பூசனை செய்கின்றார்கள்
புண்ணியம் செய்த ஆறு ஏ,Punnayam seitha aaru ae - புண்ணிய செயத விதம் எனனோ!
நேசம் செய்து உறைகின்றானை,Nesam seithu urai kindraanai - அன்பு பூண்டு நித்யவாஸம் பண்ணும் பெருமானை
கூசம் இன்றி பேசுமின்,Koosam indri pesumin - (அந்த பாக்ய விசேஷத்தை நீங்கள் (கூசாமல் எடுத்துச் செல்லுங்கள்
நெறிமையால்,Nerimaiyaal - முறை தவறாது