திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3104 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3104திருவாய்மொழி || (4-9-நண்ணாதார் முறுவலிப்ப) (உலக இயற்கையில் வெறுப்புற்ற ஆழ்வார் திருவடி சேர்க்குமாறு எம்பெருமானைப் பிரார்த்தித்தல்) (கீழ்ப் பாசுரத்தில் ப்ரஸங்கித்த பேற்றை உகப்பின் மிகுதியாலே இன்னமும் பன்னி யுரைக்கின்றாரிதில்.) 10
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம், தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம், ஒண் தொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப, கண்ட சதிர் கண்டொழிந்தேன்; அடைந்தேன் உன் திருவடியே.–4-9-10
பதவுரை Show / Hide
ஒண் தொடியாள்,On thodiyal - அழகிய கைகளையுடையளாகிய
திரு மகளும்,Thiru magalum - பெரிய பிராட்டியாரும்
நீயுமே,Neeyume - அவளுடைய நாயகனான நீயுமே
நிலா நிற்ப கண்ட சதிர்,Nila nirpa kanda sadhir - களித்து வாழ்கிற அழகிய இருப்பை
கண்டு,Kandu - இப்போது காணப்பெற்று
கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம்,Kandu kettu urru mondu undu uzhalum aingaruvi kanda inbam - காண்பது கேட்பது தொடுவது மோருவது உட்கொள்ளுவதாகிற வேலைகளைச் செய்துகொண்டு அலைகின்ற பஞ்சேந்திரியங்களுக்கும் வாய்த்த விஷய சுகங்களையும்
தெரிவு அரிய அளவு இல்லா சிறு இன்பம்,Therivu ariya alavu illa siru inbam - கைவல்ய ஸூகத்தையும்
ஒழிந்தேன்,Ozhindhen - தவிர்க்கப் பெற்றேன்;
உன் திரு அடியே அடைந்தேன்,Un thiru ade adaindhen - உனது திருவடிகளை அடையவும் பெற்றேன்.