திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3533 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3533திருவாய்மொழி || (8-8—கண்கள் சிவந்து) (ஆருயிரின் ஏற்றத்தை எம்பெருமான் காட்டக் கண்டு ஆழ்வார் பேசுதல்) (இப்படிப்பட்ட ஆத்மஸ்வரூபத்தை எனக்குக் காட்டிக் கொடுத்து, பாஹ்ய குத்ருஷ்டிமதங்களில் நான் கைகழியப் போகாதபடி என்னெஞசிலே எம்பெருமான் புகுந்திருக்கையாலே என்னுடைய ஸாம்ஸாரிக க்லேசமெல்லாம் தீரப்பெற்றேனென்று களித்துப் பேசும் பாசுரமிது.) 10
உளரும் இல்லை அல்லராய் உளராய் யில்லை யாகியே உளர் எம் ஒருவர் அவர் வந்து என் உள்ளத்துள்ளே யுறைகின்றார் வளரும் பிறையும் தேய்பிறையும் போலே அசைவும் ஆக்கமும் வளருஞ்சுடரும் இருளும் போல் தெருளும் மருளும் மாய்த்தோமே–8-8-10
பதவுரை Show / Hide
இல்லை அல்லர் ஆய் உளரும்,Illai allar aay ularum - (அடியார்களுக்கு)இல்லை யென்னாதபடி உளராயிருப்பவராய்)
இல்லை ஆகியே,Illai aagiye - (மற்றையோர்க்கு) இல்லையாகியே உளராயிருப்பவராய்
எம் ஒருவர் உளர்,Em oruvar ular - எம்பெருமானுளர்
அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்,Avar vandhu en ullaththullaai uraiykinraar - அவர் வந்து என் உள்ளத்துள்ளே உறைகின்றார்
வளரும் பிறைப் போலே ஆக்கமும்,Valarum pirai polaai aakkamum - வளர் பிறைக்கு உள்ளது போலே வளர்ச்சியும்
தேய் பிளை போல அசைவும்,Thei pilai pola asaiyum - க்ருஷ்ணபக்ஷ சந்திரனுக்கு உள்ளதுபோலே தேய்வும் உடைத்தாகி
வளரும் கடரும் இருளும் போல்,Valarum kadarum irulum pola - ஸூரியனும் இருளும் போலே மாறி மாறி வரக்கூடியதான
தெருளும் மருளும் மாய்த்தோம்,Therulum marulum maayththom - கழித்துக்கொள்ளப்பெற்றோம்.