திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2730 | திருவாய்மொழி || 1-6–பரிவதி லீசனைப் பாடி (ஆராதனைக்கு எளியவன்) (எம்பெருமானை ஆராதிக்கு முபகரணங்களின் ஸௌகர்யம் இப் பாசுரத்தில் அருளிச் செய்யப்படுகிறது.) 1 | பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1 | பதவுரை Show / Hideபரிவது இல்,Parivathu ill - துன்பமற்ற ஈசனை,Eesanai - ஸர்வேச்வரனை பாடி,Paadi - துதி செய்து விரிவது,Virivadhu - ஸ்வரூபவ விகாஸத்தை மேவல் உறுவேல்,Meval uruvel - பெற வேணுமென்கிற உறுதி யுடையவர்களே! புரிவதுவும்,Purivadhum - (அதன் பிறகு) ஸமர்ப்பிப்பதும் பிரிவகை இன்றி,Pirivakai indri - பிரயோஜனத்தைக் கொண்டு விலகிப் போதலின்றியே நல் நீர்,Nal neer - நல்ல தீர்த்தத்தையே தூய்,Thooy - ஸமர்ப்பித்து புகை பூவே,Pugai poove - ஏதேனுமொரு தூபமும் ஏதேனுமொரு புஷ்பமுமேயாகும். |