திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3465 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3465திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத் தெறிவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது.) 8
இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்! பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் ! உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான் அடையும் வைகுந்தமும் பாற் கடலும் அஞ்சன வெற்புமவை நணிய கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி அவனவை காண் கொடானே–8-2-8
பதவுரை Show / Hide
யான் வளர்த்த கிளிகாள்,Yaan valartha kilikaal - நான் வளர்த்து வந்த கிளிகளே!
பூவைகள் காள்,Poovaikal kaal - பூவைகளே!
குயில்காள்,Kuyilkaal - குயில்களே!
மயில்காள்,Mayilkaal - மயில்களே!
இடை இல்லை,Idai illai - (என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை,
நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது,Nam udaiya maamaiyum sangum nenjum onrum ozhiyattoṭṭaadhu - நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே
கொண்டான்,Kondaana - கொள்ளை கொண்டவன்
அடையும்,Adayum - இங்கிருந்து சென்று சேர்ந்த
வைகுந்தமும்,Vaikundhamum - திருநாடும்
பால் கடலும்,Paal kadalum - திருப்பாற்கடலும்
அஞ்சனம் வெற்பும் அவை,Anjanam verppum avai - திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள்
நணிய,Naniya - அருமையற்று எளியவையே (ஆனால்)
பாசங்கள்,Paasangal - புறம்புண்டானபற்றுக்கள்
கடை அற,Kadai ara - ஸவாஸநமாக
விட்ட பின்னை அன்றி,Vitta pinnai anri - விட்டொழிந்தால்லலது
அவன்,Avan - அப்பெருமான்
அவை காண் கொடான்,Avai kaan kodaan - அத்தலங்களைக் காணக் கொடான்