திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3441 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3441திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பக்கலில் சாபலமுடையாரை விளித்து உங்களுடைய ஸகல துக்கங்களும் தொலையும்படி திருவாறன் விளையை நெஞ்சாலே நினையுங்கோளென்கிறார்.) 6
ஒன்றும் நில்லா கெடும் முற்றவும் தீவினை உள்ளித் தொழுமின் தொண்டீர்! அன்றங்கு அமர்வென்று உருப்பிணி நங்கை அணி நெடுந் தோள் புணர்ந்தான் என்றும் எப்போதும் என்நெஞ்சம் துதிப்ப உள்ளே இருக் கின்ற பிரான் நின்ற அணி திரு வாறன்விளை என்னும் நீணக ரமதுவே.–7-10-6
பதவுரை Show / Hide
அன்று அங்கு,Andru anggu - முன்பொரு காலத்தில்
அமர் வென்று,Amar vendru - பூசலிலே வெற்றி பெற்று
உருப்பிணி நங்கை,Urupini nangai - ருக்மிணிப் பிராட்டியினுடைய
அணி நெடுதோள் புணர்ந்தான்,Ani neduthol punarndhaan - அலங்காரங்களால் பரம போக்யமான திருத்தோள்களையணைந்தவனும்
என்றும் எப்போதும் துதிப்ப என் நெஞ்சம் உள்ளே இருக்கின்ற பிரான்,Endrum eppozhudhum thudhippa en nenjam ullae irukkindra piraan - ஓய்வின்றி நான் துதிக்கும்படி எனது நெஞ்சினுள்ளேயிருப்பவனுமான பெருமான்
நின்ற,Nindra - நித்யவாஸம் பண்ணுகிற
அணி திருவாறன் விளை என்னும் நீள் நகரம் அது,Ani thiruvaaran vilai ennum neel nagaram adhu - அழகிய திருவாறன் விளையென்கிற அந்த மஹா நகரத்தை
தொண்டீர்,Thondir - தொண்டர்களே!
உள்ளிதொழுமின்,Ullithozhumin - சிந்தித்துத் தொழுங்கோள்;
தீவினை ஒன்றும் நில்லா முற்றவும் கொடும்,Theevinai ondrum nillaa mutravum kodum - கொடிய பாவங்களொன்றும் சேஷியாதபடி நிலை குலைந்து முழுதும் நசித்துப்போம்.