திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3023 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3023திருவாய்மொழி || (4-2–பாலனாய் ஏழுலகுண்டு) (காதல் கைகூடாது வருந்தும் தலைமகள் நிலைகண்டு தாய் இரங்கல்) (ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.) 6
மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய், ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர் பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6
பதவுரை Show / Hide
மா மாதர்,maa maadhar - சிறந்த அழகுடைய
மண் மடந்தை பொருட்டு,man madandhai poruttu - பூமிப் பிராட்டிக்காக
ஆதி அம் காலத்து,aadhi am kaalathu - முன்னொரு காலத்தில்
எனம் ஆய்,enam aai - வராஹ மூர்த்தியாய்
அகல் இடம்,agal idam - விபுலமான பூமண்டலத்தை
கீண்டவர்,keendavar - பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய
பாதங்கள்மேல்,paadhangal mel - திருவடிகளின்மீது
அணி,ani - சாத்தின
பைம் பொன் துழாய் என்றே,paim pon thuzhai endre - மிகவழகிய திருத்துழாயென்றே
ஓதும் மால்,oodhum maal - ஓதும்படியான வியாமோஹத்தை
என் தன் மடந்தை,en than madandhai - எனது பெண் பிள்ளை
எய்தினள்,eythinaL - அடைந்தாள்.