திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3486 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3486திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருச் செங்குன்றூரில் நின்று அருளின சீர் கொள் சிற்றாயன் -ஒரு நாளும் மறக்க ஒண்ணாத படி தன் திரு அழகோடு என் இருதயத்திலே வந்து புகுந்தான் -என்கிறார்.) 7
திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு அதனுள் கண்ட அத்திருவடி என்றும் திருச் செய்ய கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும் திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமலை மார்பும் செய்ய வுடையும் திருச் செய்ய முடியும் ஆரமும் படையும் திகழ வென்ன சிந்தை யுளானே–8-4-7
பதவுரை Show / Hide
திருச்செங்குன்றூரில திருச்சிற்றாறதனுள் கண்ட அத்திருவடி,Thiruchchengundrooril thiruchchiraarathanul kanda aththiruvadi - திருச்சிற்றாற்றுப்பதியிலே நான் காணப்பெற்ற அந்த பொருமானானவன்,
செய்ய கமலம் திருக்கண்ணும்,Seyya kamalam thirukkanum - செந்தாமரை போன்ற திருக்கண்ணும்
செம் வாயும்,Sem vaayum - சிவந்த திருப்பவளமும்
செம் அடியும்,Sem adiyum - சிவந்த திருவடிகளும்
செய்ய கைவும்,Seyya kaivum - சிவந்த திருக்கைகளும்
செய்ய கமலம் திரு உந்தியும்,Seyya kamalam thiru undiyum - சிவந்த கமலத்தையுடைத்தான திருநாபியும்
கமலை செய்ய மார்பும்,Kamalai seyya maarbum - பெரிய பிராட்டியாரை யுடைத்தாய்ச் சிவந்ததான திருமார்வும்
செய்ய உடையும்,Seyya udaiyum - திருப்பிதகவாடையும்
ஆரமும்,Aaramum - கோலமாமணியாரங்களும்
படையும்,Padaiyum - திவ்யாயுதங்களும்
திகழ,Thigazha - விளங்க
என்றும் என் சிந்தை உளான்,Endrum en sindhai ulaan - எந்நாளும் என்னெஞ்சினுள்ளே யுறைகின்றான்.