திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 2939 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2939திருவாய்மொழி || (3-4–புகழுநல்லொரு) (ஆத்மாக்கள் அனைத்தும் அவனே) (உடலுக்கு உள்ளேயிருக்கிற உயிர்கட்கு அந்த உடலைச்சார்ந்த இளமை நரை திரை முதலிய வேறுபாடுகள் தட்டுவதில்லையென்ற எண்ணம் மனதிற்படுமாயின், எம்பெருமான் சேதநா சேதனங்களோடு கலந்திருந்தாலும் அவற்றின் சுகம் துக்கம் முதலிய நிலைமைகள் அவ்வெம்பெருமானுக்குத் தட்டாவென்பதும் நன்கு விளங்குமென்பது இப்பாசுரத்தின் தாற்பரியமாகும்.) 10
யாவையும் எவரும் தானாய் அவர் அவர் சமயந் தோறும் தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும் சொலப்படான்; உணர்வின் மூர்த்தி; ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்று இலாத பாவனை அதனைக் கூடில், அவனையும் கூட லாமே.–3-4-10
பதவுரை Show / Hide
உணர்வின் மூர்த்தி,Unarvin moorthi - ஞானஸ்வரூபமாக இருக்கின்ற எம்பெருமான்
பாவையும்,Paavaiyum - எல்லா அசேதனப்பொருள்களும்
யவரும்,Yavarum - எல்லாச் சேதனர்களும்
தான் ஆய்,Thaan aay - தாயேயாகியும் (சேதநாசேதநங்களில் அந்தராத்மாவாகத்தான் பிரவேசித்திருந்தும்)
அவர் அவர் சமயம் தோறும்,Avar avar samayam thorum - அந்தந்தச் சேதனர்கட்கு உரியனவான (சுகம் துக்கம் முதலிய நிலைமைகளில்)
தோய்வு இலன்,Thoivu ilan - (அவர்களைப் போலத் தனக்கு) யாதொரு கலப்பும் இல்லாதவன்
புலன் ஐந்துக்கும் சொலப்படான்,Pulan aindukkum solapadaan - பஞ்சேந்திரியங்களின் அறிவுக்கும் விஷயமாகச் சொல்லப்படாதவன்! (ஐம்புலன்களாலறியப்படாதவனென்றபடி.) (ஆன்மாக்களுக்கு உள்ளேயிருந்தும் அவைகளுடைய சுகதுக்கங்கள் எம்பெருமானைச்சேர மாட்டா என்றது எவ்வாறு பொருந்துமெனின்.)
ஆவி சேர் உயிரின் உள்,Aavi ser uyirin ul - உடம்பைப் பொருந்திய ஆத்õமவினுடைய ஸ்வரூபத்தில்
ஆதும்,Aadhum - (சரீரத்தைச் சார்ந்த இளமை முதலிய தன்மைகள்) எதிலும்
ஓர் பற்று இலராத,Or patru ilaraadha - ஒரு ஸம்பந்தமும் இல்லையென்கிற
பாவனை,Paavanai - எண்ணமானது
அதனை கூடில்,Adhanai koodil - அந்த ஆத்மாவுக்குத் தகுமென்று தோன்றினால்
அவனையும்,Avanaiyum - அந்த எம்பெருமானுக்கும் (சேதநர்களின் சுக துக்கங்கள் சிறிதும் சேரா என்கிற இதுவும்)
கூடல் ஆம்,Koodal aam - தகும்.