திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2724 | திருவாய்மொழி || 1-5–வளவேழுலகின் (மாறனை மாலை சீலகுணத்தால் சேர்தல்) (இப்பாசுரமும் கீழ்ப்பாசுரத்தோடு ஒக்கும். கீழ்ப்பாட்டிலுள்ள ‘நீயருளாய உன் தேனே மலருந் திருப்பாதஞ் சேருமமாறு வினையேனே’ என்பதை இப் பாட்டோடு கூட்டி உரைத்தருளினர். திருக்குருகைப் பிரான்பிள்ளான். ஆதலால் கீழ்ப்பாட்டில் அவதாரிகையே இதற்குமாகும்.) (நைச்சியாநுஸந்தானம்பண்ணி அகன்றது தவிர்ந்து அணுகி அபேக்ஷித்த போதே எம்பெருமான் முகங்காட்டாமையாலே அவனுடைய குண சேஷ்டிதங்கள் நினைவுக்கு வந்து நலிய, திருவுள்ள முடைந்து பேசுகிறார் என்னவுமாம்) 6 | வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே மா மாயனே மாதவா
சினை யேய் தழைய மரா மரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே –1-5-6 | பதவுரை Show / Hideவினையேன்,Vinaiyaen - பாபியான என்னுடைய வினை தீர்,Vinai theer - பாபத்தை ஒழிப்பதற்குரிய மருந்து ஆனாய்,Marundhu aanaay - ஔஷமாயிருப்பவனே! விண்ணோர் தலைவா,Vinnor thalaiva - நித்யஸூரி நாதனே! கேசவா,Kesava - கேசவனே! மனைசேர் ஆயர் குலம் முதலே,Manaicher aayar kulam mudhale - குடிசைகளில் பொருந்திய இடையருடைய குலத்திற்கு முதல்வனானவனே! மாமாயனே,Maamaayanee - மிகுந்த ஆச்சரிய குணசேஷ்டிதங்களையுடையவனே! மாதவா,Madhava - மாதவனே! சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும்,Sinai aye thalaiya mara marangal eyzhum - கிளைகளோடு சேர்ந்து தழைகள் பொருந்திய ஆச்சாமரங்களை÷ழையும் (ஸ்ரீராமாவதாரத்தில்) எய்தாய்,Eydhaay - (ஓர் அம்பினால்) துளைபடுத்தினவனே! கிரீதரா,giridhara - ஸ்ரீதரனே! இனையாய்,Inaiyaay - இப்படிப்பட்ட ஸ்வரூபத்தை யுடைவனே! இனைய பெயரினாய்,Inaiya peyarinaay - இப்படிப்பட்ட திருநாமங்களை யுடையவனே! என்று,Endru - என்று சொல்லி அடியேன் நைவன்,Adiyaen naivan - நான் அழியா நின்றேன் |