திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2920 | திருவாய்மொழி || (3-3–ஒழிவில்) - (திருநாட்டிலே சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்வதன்றோ எல்லார்க்கும் ஸ்வரூபம்; அப்படியிருக்க, நீர் இந்நிலத்தில் திருமலையிலே அடிமை செய்ய விரும்புவது ஏன்? என்ன; திருநாட்டிலுள்ள நித்ய முக்தர்களுங்கூட இத்திருமலையிலே வந்து அடிமை செய்யக் காண்கையாலே நானும் இங்கே அடிமைசெய்யக் குறையென்? என்கிறார்.) 2 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2 | பதவுரை Show / Hideவானவர், Vaanavar - நித்யஸூரிகள் வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட சிந்து, Sindhu - தூவின பூ, Poo - புஷ்பங்கள் மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும் கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான அண்ணல், Annal - எம்பெருமான் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன் |