திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3300 | திருவாய்மொழி || (6-7–உண்ணுஞ் சோறு) (தலைவனது நகர்நோக்கிச் சென்ற மகளைக் குறித்துத் தாய் இரங்குதல் (திருக்கோளூர்)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இவள் பிரகிருதி மார்த்வத்தையும் எம்பெருமானைப் பிரிந்து சிதிலை யாய் இருக்கிற படியையும் அனுசந்தித்து இவள் புக்கால் படும்படியை அனுசந்திக்க வேண்டுவது அவள் அவ்வளவும் சென்று புக வல்லாள் ஆகில் இ றே என்கிறாள் .) 8 | ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8 | பதவுரை Show / Hideஒசிந்த ஒண் மலராள் கொழுநான்,Osintha on malaraal kolunaan - துவண்ட திருமேனியையுடைய பெரிய பிராட்டியாருக்கு வல்லபனான எம்பெருமான் வர்த்திக்கிற திருக்கோளூர்க்கே,Thirukolurkkay - திருக்கோளூரையே நோக்கி எம்மை நீத்த,Emmai neetha - எங்களை விட்டுப் பிரிந்து சென்ற எம் காரிகை,Em karigai - அழகியாளான என் பெண் பிள்ளை, ஒசிந்த நுண் இடைமேல்,Osintha nun idaimael - ஏற்கனவே துவண்ட மெல்லிய இடுப்பின்மீது கையை வைத்து,Kaiyai vaiththu - (இளப்பினால்) கையை வைத்துக் கொண்டு நொந்த நொந்து,Nontha nonthu - மேன்மேலும் நோவு பெற்று கசிந்த நெஞ்சினள் ஆய்,Kasintha nenjinal aai - ஈரமான மனத்தையுடையவளாய் கண்ண நீர் துளும்ப,Kanna neer thulumba - கண்ணீர் பெருகும்படி செல்லும் கொல்,Sellum kol - (அவ்வூர்) சென்று சேர்ந்திருக்ககூடுமோ? |