திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3201 | திருவாய்மொழி || (5-8–ஆரா அமுதே) - (ப்ரபந்நர்கட்கு ஆகிஞ்சன்யம், அநந்ய கதித்வம் என்ற இரண்டும் குலையாதிருக்கவேணும்.) 8 | களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8 | பதவுரை Show / Hideவளைவாய் நேமிபடையாய்,valaivay nemipadaiyaay - வளைந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையவனே! குடந்தை கிடந்த,kudandai kitandha - திருக்குடந்தையிலே சயனித்தருள்கின்ற மா மாயா,ma maaya - மஹாச்சர்யரூபனே! துன்பம் களைவாய்,thunbam kalivaay - எனது துன்பங்களை நீ களைந்தாலும் சரி களைமா தொழிவாய்,kalaimaa thozhivaay - களையாவிட்டாலும் சரி களைகண் மற்று இலேன்,kalaikan matru ilen - வேறு சரணமுடையேனல்லேன்; உடலும் தளரா,udalum thalarā - உடல் தளர்ந்து எனது ஆவி,enathu aavi - என் உயிரானது சரிந்து பொம் போது,sarindhu pom podhu - நிலைகுலைந்து உத்க்ரமணமடையும்போது இளையாது,ilaiyathu - மெலியாமல் உன் தான்,un thaan - உன் திருவடிகளையே ஒருங்க பிடிந்து போது,orungga pitinthu pothu - ஒருமிக்கப் பிடித்துப் போகும்படி நீயே இசை,neeye isai - நீயே திருவுள்ளம்பற்ற வேணும். |