திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3267 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3267திருவாய்மொழி || (6-4–குரவை யாய்ச்சியரோடு) (கண்ணனது அவதாரச் செயல்களைப் பேசப் பெற்றமைக்குக் களித்தல்) (ஸ்ரீ ஆறாயிரப்படி –வாண விஷய பிரமுகமான ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் மற்றும் ஸ்ரீ வாமனனுடைய ஆச்சர்ய சேஷ்டிதங்களை அநுஸந்திக்கும் நெஞ்சுடையேனான எனக்கு இனி கலக்கமுண்டோ -என்கிறார்) 8
நீணிலத்தொடு வான் வியப்ப நிறை பெரும் போர்கள் செய்து வாண னாயிரம் தோள் துணித்ததும் உட்பட மற்றும் பல மாணியாய் நிலம் கொண்ட மாயன் என்னப்பன் தன் மாயங்களே காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8
பதவுரை Show / Hide
நீள் நிலத்தொடுவான் வியப்ப,Neel nilathoduvaan viyappa - மண்ணோரும் விண்ணோரும் ஆச்சரியப்படும் படியாக
நிறைபெறும் போர்கள் செய்து,Niraiperum porkal seithu - நிறைந்த மஹாயுத்தங்களைப்பண்ணி
வாணன் ஆயிரம் தோள் துணிந்ததும் உட்பட மற்றும் பல,Vaanan aayiram thol thunindhathum utpad matrum pala - பாணாசுரனுடைய ஆயிரந்தோள்களைத் துணிந்தது முதலாக மற்றும் பலவான
மாணி ஆய் நிலம் கொண்ட மாயன் என் அப்பன் தன் மாயங்களே,Maani aai nilam konda maayan en appan than maayangale - பிரமசாரியாய்ப் பூமியை நீரேற்றுப்பெற்ற மாயனான எம்பெருமானது அற்புதச் செயல்களையே
காணும் நெஞ்சு உடையேன் எனக்கு,Kaanum nenju udaiyen enakku - ஸாக்ஷாத்கரிக்கவல்ல நெஞ்சுபடைத்த வெனக்கு
இனி என்ன கலக்கம் உண்டே,Ini enna kalakkam unde - இனி ஒருவகையான கலக்கமுமில்லை.