திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3477 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3477திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –ப்ரஹ்மாதிகள் தஷாதிகள் உண்டாய் இருக்க நீர் என் செய்ய அஞ்சுகிறீர் -என்று எம்பெருமான் அருளிச் செய்ய அவர்கள் உன்னுடைய ஸுகுமாரியாதிகளை அறியார்கள் -நான் என்னுடைய ஸ்நே ஹத்தாலே கலங்கி கதறா நின்றேன் என்கிறார்.) 9
திருமால் நான்முகன் செஞ்சடையான் என்று இவர்கள் எம் பெருமான் தன்மையை யார் அறிகிற்பார் பேசியென் ஒரு மா முதல்வா ஊழிப் பிரான் என்னை யாளுடை கருமா மேனியன் என்பன் காதல் கலக்கவே-8-3-9
பதவுரை Show / Hide
திருமால்,Thirumaal - திருமாலே!
நான் முகன் செஞ்சடையான் என்ற இவர்கள் யார்,Naan mugan senjadaiyaan endra ivargal yaar - பிரமனென்றும் ருத்திரனென்றும் சொல்லப் படுகிறவர்களில் யார்தான்
எம்பெருமான் தன்மையை,Emperumaan thanmaiyai - எம்பெருமானான வுன்னுடைய ஸௌகுமார்யாதி ஸ்வபாவத்தை
அறிகீற்பார்,Arigeerpaar - அறியவல்லார்?
பேசி என்,Paesi en - இது சொல்லி என்ன ப்ரயோஜனமுண்டு?
ஒரு மா முதல்வா,Oru maa mudhalvaa - விலகணான பரமகாரணமானவனே!
ஊழி பிரான்,Oozhi piraan - காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்வாமியானவனே!
என் காதல் கலக்க,En kaadhal kalakka - என்னுடைய ப்ரேமமானது நெஞ்சைக்கலக்க
என்னை ஆளுடை கரு மா மேனியன் என்பன்,Ennai aaludai karu maa meniyan enban - என்னையடிமை கொண்ட கரியகோலத் திருவுருவனே! என்று இவ்வளவே யன்றோ நானும் சொல்ல வல்லேன்.