Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 3691 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3691திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (பசு மேய்க்கப் போவது தவிர வேணுமெனறாள்; அதற்கு அவன் சொன்னதாவது… வர்ணாச்ரம தருமங்கள் தவிரப்போமோ? பசு மேய்ப்ப தென்பது எனக்கு ஜாதிக்கேற்ற தருமமான செயலன்றோ? இதை நான் தவிரத்தகுமோ? என்றான்; அதற்குச் சொல்லுகிறாள்; பிறர்க்கு ஹிம்ஸையாய் முடியுங் காரியம் தருமமாகுமோ? நீ பசு மேய்க்கப் போவது ஸ்த்ரீ வதமாயன்றோ முடிகிறது; * ஓர் பெண் கொடியை வதை செய்தானென்எஞ் சொல் வையகத்தார் மதியாரே* என்ற பாசுரம் கேட்டிலையோ; ஆண்கொலையிற் காட்டிலும் பெண் கொலை பெரும் பாதகமன்றோ. ராமாவதாரத்திலே தாடகாவதம் பண்ணியும் இவ்வவதாரத்திலே பூதநாவதம் பண்ணியும் சமைந்திருக்கிற நீ பெண் கொலைக்கு அஞ்சுதியோ வென்கிறாள்.) 3
வீவன் நின் பசு நிரை மேக்கப் போக்கு
வெவ் உயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து உன்
அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண்ணினை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்துக்கு ஆய்ச்சி யோமாய்
பிறந்த இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3
நின் பசு நிரை மேய்க்க போக்கு,Nin pasu nirai meykka pookku - நீ பசுக்களை மேய்க்கப் போகும் நிமித்தமாக;
வீவன்,Veivan - நான் முடிந்து போவேன்
ஒரு பகல் போவது அன்று,Oru pagal povadhu andru - அந்த ஒரு பகற்போது கழிவதன்று காண்,(ஒரு யுகமாகப் பெருகிச் செல்லா நின்றதென்க)
எனது ஆவி வெவ்வுயிர் கொண்டு வேம்,Enadhu aavi vevuyir kondu vem - எனது ஆத்மாவானது நெடு மூச்செறிந்து வெந்து போகின்றது;
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா,Poru kayal kann inai neerum nilla - சண்டையிடுமிரண்டு கெண்டைகள் போன்ற கண்களும் நீர் பெருக நின்றன;
துணை யாவரும் இல்லை,Thunai yaavarum illai - துணையாவார் ஒருவருமில்லை (அவ்வளவிலும் ஆசையின் கனத்தாலே)
இவ் ஆய்குலத்து ஆய்ச்சி யோம்,Ev aaykulathu aaychchi yom - இடைச்சிகளாய்ப் பிறந்த
ஆய் பிறந்த,Aay pirandha - நீ பிறந்த இடைக்குலத்திலே இடையராய்ப் பிறவாதே
யான் இருந்து,Yaan irundhu - யான் முடியாதிருந்து .
உன் அஞ்சனம் மேனியை,Un anjanam meniyai - அஞ்சனம் போன்றழகிய உன் திருமேனியினுடைய
ஆட்டம் காணேன் ஸஞ்சாரமும் காண்கின்றிலேன்;,Aattam kaanaen sanjaarumum kaankindrilaen; - தொழுத்தை யோம் நீசத்தன்மை வாய்ந்த எங்களுடைய
நீ அகன்றால்,Nee akanraal - நீ பிரிந்து போனால்
இதனிமை தானே சாவது,Edhanimai thaane saavathu - இப்பிரிவுத் துயரம் தொலைய வேணும்.