Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 2704 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2704திருவாய்மொழி || 1-3-பத்துடை (அடியவர்க்கு எளியவன்) (கீழ்ப்பாட்டில் “நன்றென நலஞ்செய்வதனிடை” என்றருளிச் செய்ததைக் கேட்ட ஸம்ஸாரிகள், அநாதிகாலமாக நாங்கள் பண்ணிக் கூடு பூரித்துக் கிடக்கிற ப்ரபல கருமங்கள் பிரதிபந்தமாயிருக்க நாங்கள் எப்படி எம்பெருமானை ஆச்ரயிக்க முடியும்? அன்றியும் எங்களுடைய வாழ்நாள் வெகுவாய்க் கழிந்து ஒழிந்ததாகையாலே இனி ஆச்ரயிக்க நாள் தானுமில்லையே! என்ன, அவர்களுக்கு உத்தரம்போல் அருளிச் செய்யும் பாசுரம் இது) 8
நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடு வினையுடனே
மாளும் ஒரு குறைவில்லை மனனக மலமறக் கழுவி
நாளும் நம் திருவுடையடிகள் தம் நலம் கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே –1-3-8-
மனனகம், Mananagam - மனத்திலுண்டான
மல் அற, Mal aru - (மும்மூர்த்திகளும் ஸமமாவர் என்னும் விப்ரதி பத்தியாகிற) அழுக்கு ஒழியும்படி
கழுவி, Kazhvi - விவேகத்தாலே பரிசுத்தப்படுத்தி
நாளும், Naalum - நாள் தோறும்
நம், Nam - நமக்கென்றே உரிய
திரு உடை அடிகள் தம், Thiru udai adikal tham - திருமகள் கொழுநனான ஸ்வாமியினுடைய
நலம் கழல், Nalam kazhal - அழகிய திருவடிகளை
வணங்கி, Vanangi - ஆச்ரயிக்க
நாளும் நின்று, Naalum nindru - எப்போதும் விடாது நின்று
அடும் நம, Adum nama - வருந்துகின்ற நாமறிந்தே
பழமை அம் கொடு, Pazhamai am kodu - பழமையாகிய மிகவுங்
வினை உடனே மாளும், Vinai udane maalum - கொடிய பாபங்கள் ஆச்ரயித்தவுடனே தொலையும்;
ஓர் குறைவு இல்லை, Oru kuravu illai - ஒரு குறைவுமுண்டாகாது; (இப்படி ஆச்ரயிக்குமிடத்தில்)
மாளும் ஓர் இடத்திலும், Maalum oru idathilum - சரீரத்தை விடுகிற காலத்திலும்
வணக்கொடு, Vanakkodu - வணக்கத்தோடு
மாள்வது, Maalvadhu - முடிவது
வலம், Valam - நன்று.