திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3379 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3379திருவாய்மொழி || (7-4–ஆழி எழ) - ((மேய்நிரை.) திருவாய்ப்பாடியில் ஆயர்கள் வழக்கப்படி இந்திரபூஜைக் கென்று சமைத்தசோறு முதலியவற்றையடங்கலும் கண்ணபிரான் அவ்விந்விந்திரனுக்கு இடவொட்டாமல் கோவர்த்தன மலைக்கு இடுவித்துப் பின்பு தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்துவிட, பிறகு இந்திரன் பசிக்கோபத்தினால்; மேகங்களை ஏவி ஏழுநாள் விடாமழை பெய்விக்க, கண்ணபிரான் அக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிக் கோக்களையும் கோவலரையும் காத்தருளின் னென்றவரலாறு ப்ரஸித்தம். அப்போதைய நிலைமையை இப்பாட்டில் அநுபவிக்கிறார். மேய்கின்ற பசுக்களானவை புல்லும் உமிழாதே அசையிட்டுக் கொண்டு கீழே புகவும், மலைமேலுள்ள மிருகங்களெல்லாம் மலைகுடையாகக் கவிழ்ந்தபடியடிலே கீழே புரண்டு விழவும், சுனைகள் வாயளவும் நிறைந்த நீரைப் பெரிய கோஷத்தோடு சொரியவும், திருவாய்ப்பாடியடங்களிலும் அங்கே யொடுங்கவும் அப்பன் தீமழை காத்துக் குன்றமெடுத்தா னென்றதாயிற்று.) 10
மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–7-4-10
பதவுரை Show / Hide
meynirai,மேய்நிரை - மேய்கிற பசுக்களானவை
keel puga,கீழ் புக - கீழே யொதுங்கும்படியாகவும்
maa purala,மா புரள - (கீழது மேலதாக மலையைப் பிடிக்கையாலே மலையிலுள்ள) மிருசங்கள் புரண்டுவிழும் படியாகவும்
sunaivaa nirai neer,சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது
pilirisoriya,பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும்
inam aanirai paadi ange oadungga,இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும்
appan,அப்பன் - கண்ணபிரான்
thee mazhai kaathu,தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க
kunṟam eduthaan,குன்றம் எடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கினான்