திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3689 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3689திருவாய்மொழி || (10-3–வேய்மருதோளி) (ஆநிரை மேய்க்கச் சென்றால் பிரிவாற்றி இரோம் என்று போக்கைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டுதல்) (காலைப் பொழுதானவாறே கண்ணபிரானைப் பிரிய நேர்கின்றதேனென்கிற வருத்தம் செல்லா நிற்க அதற்கு மேலே குயில்மயில் முதலானவைகளின் பாடுதலும் ஆடுதலும் கேட்டும் கண்டும் இன்னமும் வருத்தம் வளர்ந்து செல்லுகிறபடியைச் சொல்லிப் புலம்புகிறாள்.) 1
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் காமரு குயில்களும் கூவும் ஆலோ கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1
பதவுரை Show / Hide
வேய் மருதோள் இணை,Vey maruthol inai - வேய் போன்ற தோள்களிரண்டும்
கணம் மயில் அவை கலந்து ஆலும் ஆலோ,Kanam mayil avai kalandhu aalum AalO - திரளான மயில்கள் கலந்து கேகாரவம் செய்யா நின்றன அந்தோ!
ஆல்ஓ,AalO - அந்தோ(அவ்வளவு மன்றிக்கே)
மெலியும் பிரிவாற்றாமையினால் தளர்ந்தன;,Meliyum pirivaatraamaiyinaal thalarndhana; - மருவு ஆ நிரை இனம் மேய்க்களுன்னோடு மருவுகின்ற பசுக்கூட்டங்களை மேய்க்கைக்காக
என் மெலிவும் என் தனிமையும்,En melivum en thanimaiyum - என்னுடல் மெலிவையும் பிரிவாற்றாத என் தனிமையையும்
நீ போக்கு ஒரு பகல்,Nee pookku oru pagal - நீ (காட்டுக்குப்) போகிற ஒரு பகலானது
யாதும் நோக்கா,Yaadhum nokkaa - சிறிதும் நோக்காமல்
ஆயிரம் ஊழி ஆலோ,Aayiram oozhi AalO - ஆயிரம் யுகமாகக் கழியா நின்றதந்
காமரு குயில்களும் கூவும்,Kaamaru kuyilgalum koovum - அழகிய குயில்களும் கூவுகின்றன; ;
தாமரை கண்கள் கொண்டு ஈர்தி,Thaamarai kangal kondu eerthi - தாமரை போன்ற திருக்கண்களாலே நோக்கி நோவுபடுத்துகின்றாய்
ஆலோ,AalO - அநதத் தொனியும் அஸஹ்யமாயிரா நின்ற தந்தேர்
கண்ணா நீ தகவு இலை தகவு இலை,Kannaa nee thakavu ilai thakavu ilai - கண்ணா! நீ கருணையுடையை யல்லை, திண்ணம்.